yarl-world-news

கேப்சி (KFC) உணவிலிருந்த அருவறுக்கதக்க பொருள்: அதிர்ச்சியில் உறைந்த காதலர்கள்

13151.jpg
 

பிரித்தானியாவில் கேப்சி உணவில் அருவறுக்கதக்க பொருள் இருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோர்டான் சிம்ப்சன் என்ற 22 வயது இளைஞன் தனது காதலி ஷெர்லியுடன் Suffolk, Ipswich பகுதியில் உள்ள கேப்சி உணவக கிளைக்கு சென்றுள்ளார்.

இருவரும் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது உணவில் அலகுடன் கோழி மண்டையோடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஜோர்டான் சிம்ப்சன், என் தாத்தா பறவை ஆர்வலர் அவரிடம் அந்த பாகத்தை கொடுத்து சோதனை செய்தோம். அதில், அது அலகுடனான கோழியின் மண்டையோடு என உறுதியானது.

இது மிகவும் அருவறுக்கதக்க விடயம். இதன் மூலம் உணவகத்தின் தரத்தை நான் உணர்ந்துள்ளேன். இனி குறித்த கிளை மட்டுமின்றி எந்தவொரு கேப்சி உணவகத்திலும் சாப்பிடமாட்டேன் என முடிவு செய்துள்ளளேன் என தெரிவித்துள்ளார்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=13151&ctype=news

Categories: merge-rss, yarl-world-news

பப்புவா நியூகினியில் 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம்

பப்புவா நியூகினியில் 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம்
 

அவுஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள, பசுபிக் சமுத்திர நாடான பப்புவா நியூகினியில் சற்றுமுன் பாரிய பூகமபம் ஏற்பட்டுள்ளது.

 

21930_Powerful-8.0-quake-hits-off-Papua-

 

8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம் இது என ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்துள்ளன. 

 

பப்புவா நியூகினியின் அரவா நகரிலிருந்து 47 கிலோமீற்றர் தூரத்தில் கடற்பகுதியில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=21930#sthash.YnWZYp5i.dpuf
Categories: merge-rss, yarl-world-news

புதிய அமெரிக்க அதிபருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்

Washington (CNN)It's Donald Trump's first full day as the 45th President of the United States, and people across the world are taking to the streets to protest against the incoming administration.

Thousands are expected to participate Saturday in the Women's March on Washington and more than 600 sister marches are planned, according to organizers, to send a message to Trump "that women's rights are human rights."
We'll be covering the protests here all day -- get the latest developments below, and our full report here.

வெளிநாடுகளிலும் குறிப்பாக சிட்னி பேர்லின் லண்டன் பாரிஸ் தென்ஆபிரிக்கா போன்ற இடங்களிலும் ரம்புக்கு எதிரான போராட்டம்

 (CNN)Protesters in the United States and around the world are joining marches Saturday to raise awareness of women's rights and other civil rights they fear could be under threat under Donald Trump's presidency.
The key focus of the day is the Women's March on Washington, which organizers say could attract a quarter of a million participants.

Women's March: Thousands to protest worldwide on Donald Trump's first day
Women's March live: Thousands worldwide protest Trump
But there are also hundreds of "sister marches" planned around the United States, with some of the biggest expected in Boston, New York, Chicago and Los Angeles.
And women and men in cities around the world -- including Sydney, Berlin, London, Paris and Cape Town, South Africa -- are also marching in solidarity and in opposition to the values they think Trump represents.
Women of color on what's at stake under Trump

http://www.cnn.com/2017/01/21/politics/trump-women-march-on-washington/index.html

 

Categories: merge-rss, yarl-world-news

பீஹாரில் மதுவிலக்கை ஆதரித்து 3,000 கிலோ மீற்றர் நீள மனிதச் சங்கிலிப் போராட்டம்

பீஹாரில் மதுவிலக்கை ஆதரித்து 3,000 கிலோ மீற்றர் நீள மனிதச் சங்கிலிப் போராட்டம்
 

பீஹாரில், முழுமையான மது விலக்கை வலியுறுத்தி சுமார் மூவாயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டம் முழுமையடையும் பட்சத்தில், இதுவே உலகின் மிக நீண்ட மனிதச் சங்கிலிப் போராட்டமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

9_Bihar_Human_Chain.jpg

பீஹார் தலைநகர் பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கோடிப் பேர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி என்ற சாதனையைப் படைக்கும் என்று நம்பப்படும் இந்தப் போராட்டம், பீஹாரில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவதில் அந்த மாநிலத்து மக்களின் ஆதரவைப் பிரதிபலிக்கிறது எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/15648

Categories: merge-rss, yarl-world-news

பனியில் மிதக்கும் சகாரா பாலைவனம்!

பனியில் மிதக்கும் சகாரா பாலைவனம்!

 

சகாரா பாலைவனத்தில் சுமார் 37 வருடங்களுக்கு பிறகு பனிமழை பெய்துள்ளது.  குறித்த பனியினால் சகாரா பாலைவனத்தின் தோற்றம் வெள்ளைநிற போர்வையாக  காட்சி தருகிறது. 

3C53E58700000578-4140326-image-a-3_14849

3C54128C00000578-4140326-image-a-9_14849

வட ஆபிரிக்க நாடான மேற்கு அல்ஜிரியாவிலுள்ள எய்ன் சேபிரா நகரப்பகுதியில் 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. இதனால் அந்நகரம் மற்றும் சகாரா பாலைவனத்தின் மேற்கு பகுதிகளில் பனி படர்ந்துள்ளது.  

3C53E41900000578-4140326-image-a-1_14849

3C53E70500000578-4140326-A_photograph_sh

3C52D42500000578-4140326-image-a-113_148

3C52D31A00000578-4140326-image-a-118_148

கடந்த டிசம்பர் மதம் பனிபொழிவிற்கான சிறு அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தற்போது பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. குறித்த நிகழ்வால்  எய்ன் சேபிரா நகர மக்கள் பனியுடன் விளையாடி மகிழ்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

3C5412D800000578-4140326-image-a-12_1484

3C51E2B300000578-4140326-Children_played

3C51E3C800000578-4140326-The_Sahara_Dese

3C51E1BD00000578-4140326-The_snow_comes_

சகாரா பாலைவனம் பசுமை அடைவதற்கு 15,000 வருடங்களாகும். என விஞ்ஞானிகள் கூறி வந்தநிலையில் தற்போது அதிசயமான முறையில் பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளமையானது, விஞ்ஞானிகளின் கருத்தையும் பொய்ப்பித்துள்ளது.

3C51E3DC00000578-4140326-The_town_is_sur

3C53E77500000578-4140326-image-a-7_14849

மேலும் உலகில் மிக பெரிய பாலைவனமான சகாரா மேற்கு ஆபிரிக்க முழுவதும் படர்ந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000  அடிக்கு மேல் இருக்கும் எய்ன் சேபிரா நகரத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவை புகைபடக்கலைஞ்சர் செக்கோரி காமெல் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

3C51E17300000578-4140326-The_snow_gives_

3C51E2D800000578-4140326-Ain_Sefra_pictu

 

3C51E3F000000578-4140326-The_Algerian_ca

http://www.virakesari.lk/article/15647

Categories: merge-rss, yarl-world-news

பொலித்தீன் உறையால் ஜோர்ச் புஷ் பட்ட அவஸ்தை!

பொலித்தீன் உறையால் ஜோர்ச் புஷ் பட்ட அவஸ்தை!

 

 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ச் டபிள்யு புஷ் பொலித்தின் உறையை அணிந்து, மழையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் அவஸ்தையுறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. george-w-bush.jpg
அமரிக்காவின் 45வது  ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப். அவரின் பதவியேற்பு விழாவில் மழை குறிக்கிட்டதால் பார்வையாளர்கள் முதல் விருந்தாளிகள் வரை மழையில் நனைய வேண்டியேற்பட்டது. JS118366429_AP-xlarge_trans_NvBQzQNjv4Bq
இந்நிலையில் பார்வையாளர்களுக்கு மழையிலிருந்து காக்கும் விசேட  பொலித்தின் உறை வழங்கப்பட்டிருந்தது.  குறித்த உறையை ஜோர்ச் டபிள்யு புஷ்,  தலையில் அணிவதற்கு தடுமாறியுள்ளார். C2qIckZWEAAcLa3__3_.jpg
மேலும் முகத்தை மூடிய உறையால் அசௌகரியம் அடைந்தநிலையில், குறித்த உறையை புன்னகையுடன் கழற்றி வீசியுள்ளார். C2opUPCVIAApQau.jpg
சீரற்ற காலநிலை, எதிர்ப்பாளர்களின் போராட்டங்களுக்கு மத்தியிலும், டிரம்பின் பதவியேற்பு விழா கோலாகலமாக இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15642

Categories: merge-rss, yarl-world-news

பாரிஸில் தொடர் கத்தி குத்து தாக்குதல்..! படுகாயமடைந்த நிலையில் பலர் வைத்தியசாலையில்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இடம்பெற்ற தொடர் கத்தி குத்து சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதே ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 09.15 மணியளவில் இடம்பெற்ற முதலாவது கத்தி குத்து சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டதாக கருதப்படும் சந்தேகநபர் தப்பிச்சென்ற நிலையில், இரவு 11 மணியளவில் Jacques Bonsergent மெட்ரோ ரயில் நிலையத்தில் மற்றும் ஒரு கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

எனினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து பயணிகள் தப்பித்துக்கொண்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர், இறுதியாக மற்றும் ஒரு கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இந்த தாக்குதல் இன்று அதிகாலை 12.50 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Gare de L’Est மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அனைத்து கத்தி குத்து தாக்குதல் சம்பவங்களையும் ஒரே நபரே மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை அந்நாட்டு பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் தொடர்ச்சியாக தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகி வந்துள்ளமையினால், இந்த தாக்குதல் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/france/01/132540?ref=home

Categories: merge-rss, yarl-world-news

அழிந்து வரும் பூச்சி இனத்துக்கு அமெரிக்கா ஜனாதிபதியின் பெயரை சூட்டிய விஞ்ஞானிகள்

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அழிந்து வரும் பூச்சி இனம் ஒன்றுக்கு அவரின் பெயரை விஞ்ஞானிகள் வைத்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் தலைமுடி போல அதற்கும் இருப்பதால் அதே பெயரை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த புதிய வகைப் பூச்சியின் தலையில் மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் செதில்கள் உள்ளன.

ஒட்டாவாவைச் சேர்ந்த பரிணாம உயிரியில் விஞ்ஞானி வாஸ்ரிக் நஸாரி இந்த செதில்களைப் பார்த்ததும் ட்ரம்பின் தலைமுடியைப் போல் இருப்பதை உணர்ந்து குறித்த பூச்சி இனத்துக்கு நியோபால்பா டொனால்ட்ரம்பி என பெயரை வைத்துள்ளார்.

"புதிய பெயரால் பூச்சிக்கு கிடைக்கும் வெளிச்சம், மேற்கொண்டு இந்த பூச்சி இருக்கும் இடங்களை பாதுகாக்க வழிவகுக்கும் என்றும், மேலும் இதுநாள் வரை கவனிக்கப்படாமல் இருந்த தென் அமெரிக்காவின் பல்லுயிர்கள் மீதும் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொஹார்ட் பூச்சியியல் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டேவிஸிடமிருந்து பெற்ற சில மாதிரிகளை வைத்து பார்க்கும்போது தான் இதுவரை பார்த்திராத, இதற்கு முன் கண்டிராத மாதிரிகள் அவை என்பதை நஸாரி உணர்ந்துள்ளார்.

இந்த பூச்சி வகைகளையும், மற்ற ஆராய்ச்சி கூடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட வகைகளையும் ஆராய்ந்த பின்னர், புதிய வகை பூச்சி இனைத்தை கண்டுபிடித்துள்ளதை விஞ்ஞானிகள் உறுதிசெய்தனர்.

இதேவேளை, சமீபத்தில் ஒரு புதிய வகை மீன் இனத்துக்கு பராக் ஒபாமாவின் பெயர் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/special/01/132433?ref=youmaylike2

Categories: merge-rss, yarl-world-news

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது

 

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

 
பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது
 
வாஷிங்டன்:

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின்மீது 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ந் தேதி அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்கள் நடத்தினர். அவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல்கள் உலக நாடுகளையெல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்தன. பதற்றத்தில் ஆழ்த்தின. இந்த தாக்குதல்களின்போது மூளையாக இருந்து செயல்பட்டவர், அந்த இயக்கத்தின் தலைவர் பின்லேடன் என அமெரிக்கா கண்டறிந்தது.

சரியாக 10 ஆண்டுகள் ஆன நிலையில், 2011-ம் ஆண்டு, மே மாதம் 2-ந் தேதி பின்லேடன், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க ராணுவத்தின் ‘நேவி சீல்ஸ்’ படைப்பிரிவினர் அதிரடி தாக்குதல்கள் நடத்தி பின்லேடனை கொன்றனர்.

அப்போது பின்லேடன் தொடர்பான முக்கிய ஆவணங்களை அங்கிருந்து ‘நேவி சீல்ஸ்’ படைப்பிரிவினர் கைப்பற்றினர். அந்த ஆவணங்கள் சி.ஐ.ஏ. என்று அழைக்கப்படுகிற மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஆவணங்களை பரிசீலித்து அவ்வப்போது சி.ஐ.ஏ. வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் நேற்று முன்தினமும் பின்லேடன் தொடர்பான முக்கிய ஆவணங்களை சி.ஐ.ஏ. வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆவணங்களில் அவர் ஐ.எஸ். இயக்கத்தின் பொறுமை இழப்பு, வன்முறை தந்திர உத்திகள், அல்கொய்தா இயக்கம் மறைந்து வரும் நிலை ஆகியவை பற்றி, பின்லேடன் கவலைப்பட்டிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அதில் ஒரு ஆவணம், பின்லேடன் தனது மகன்களை எச்சரிப்பதாக அமைந்துள்ளது. அதில் அவர், தன் மகன்களின் உடலில் எலெக்டிரானிக் சிப் பொருத்தப்பட்டு, அவர்களின் இருப்பிடம் கண்காணிக்கப்படும் ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டுகிறது.

அரேபிய தீபகற்ப பகுதியை சேர்ந்த அல்கொய்தா இயக்கத்தின் நிறுவனர் நாசர் அல் உஹாய்ஷிக்கு பின்லேடன் எழுதிய கடிதமும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் பின்லேடன், மத அடிப்படையிலான ஒரு ராஜ்யத்தை அமைப்பதற்கான சூழல்கள் சரிவர அமையவில்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக மிக வேகமாக செயல்படக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு ராஜ்யத்தை அமைப்பதில் வெற்றி கிடைக்கும் என்பது ஆதாரபூர்வமாக காட்டப்படுகிற வரையில், ஒன்றுக்கும் பலனற்ற விதத்தில் ரத்தம் சிந்தக் கூடாது எனவும் பின்லேடன் எச்சரித்துள்ளார்.

2010-ம் ஆண்டுக்கு முன் பின்லேடன் பல தரப்பினருக்கும் எழுதிய கடிதங்களில், தனது குழுவினர் அமெரிக்காவை தொடர்ந்து எதிரியாக கருதி வர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/21004213/1063311/releases-last-batch-of-bin-Laden-documents.vpf

Categories: merge-rss, yarl-world-news

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 20/01/17

 

இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

* தொலைக்காட்சி நட்சத்திரமான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபராக பதவியேற்கிறார்.

* அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிலையில், அவரது ஆட்சியில் ரஷ்யாவுடனான உறவு எப்படியிருக்கும்?

Categories: merge-rss, yarl-world-news

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப்

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப்
  • டிரம்ப்

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.

 
படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுள்ளார்.

தனது தொடக்க உரையில், பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா, ஆட்சி மாற்றத்தைக் கையாண்ட விதம் குறித்து பாராட்டினார். இந்த ஜனவரி 20ம் தேதி, மக்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக மீண்டும் மாறிய நாளாக நினைவு கூரப்படும் என்று அவர் கூறினார்.

தன்னை எதிர்நோக்கியுள்ள பணி சவால் நிறைந்தது என்று கூறிய ட்ரம்ப் , ஆனால் இந்த வேலையை செய்து முடிக்கப்போவதாக உறுதியளித்தார். இன்றிலிருந்து ஒவ்வொரு முடிவும் அமெரிக்காவுக்கு முதலில் லாபம் அளிக்கும் வகையிலேயே எடுக்கப்படும் என்றார் டிரம்ப்.

இஸ்லாமிய பயங்கரவாதத்தை உலகிலிருந்து அகற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

http://www.bbc.com/tamil/global-38697539

Categories: merge-rss, yarl-world-news

ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என்ற மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் ஆச்சரியமான வெற்றி உலகமெங்கிலுமுள்ள ஜனநாயகப் பற்றாளர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

அரசியல் அனுபவம் இல்லாத ஆனால், பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈராக், போன்ற பல நாடுகளுடன் அமெரிக்காவுக்குள்ள பதற்ற நிலையை தணிக்கும் வகையிலான அரசியல் செய்வாரா அல்லது நிலைமையை இன்னும் மோசமாக்குவாரா என்ற அங்கலாய்ப்பில் அமெரிக்க மக்களும் உலகமும் இருக்கின்ற ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது.

இவர் ஏற்கனவே ஊடகவியலாளர்கள்., விமர்சகர்கள் என பலரைக் கண்டித்துப் பேசியிருப்பதனால் தனது பதவிக் காலத்தின் போது ஜனநாயக விரோத போக்கையே கடைப்பிடிப்பார் என்ற பரவலான எண்ணமும் இருக்கிறது.

அமெரிக்காவிலுளள முஸ்லிம்களை வெளியேற்றப் போவதாக இவர் அதிரடியாக வெளியிட்ட கருத்து உலகமெங்கும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது.

அமெரிக்கா இஸ்லாமிய தேசம் என்ற பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள போதும் அவருடைய இந்த திடீர் அறிவிப்பால் அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளில் பெரும் விரிசல் தோன்றக் கூடிய சாத்தியம் இருக்கிறது.

எப்படியோ டிரம்ப் அறிவித்தபடி நடந்து கொள்வாரா அல்லது பதவியேற்ற பின்னர் மாறிவரும் உலக அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கேற்ப தனது அரசின் கொள்கைகளை சரிசெய்து கொள்வாரா என்பதைத்தான் ஜனநாயக உலகம் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறது.

http://www.tamilwin.com/politics/01/132428?ref=morenews

Categories: merge-rss, yarl-world-news

தமிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? - விவாத களம்

வணக்கம்,

மிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? எனும் கருத்துக்கணிப்பிற்கான விவாதத்திரி

உங்கள் அபிப்பிராயங்களையும் இப் போராட்டம் தொடர்பான உங்கள் பார்வையையும் பகிருங்கள்

நன்றி

Categories: merge-rss, yarl-world-news

அணுவாயுதம் இல்லாத உலகம் : சீனாவின் கோரிக்கை

அணுவாயுதம் இல்லாத உலகம் : சீனாவின் கோரிக்கை 

 

உலக நாடுகள் அணுவாயுத உற்பத்திகளை இல்லாது செய்வதற்காக அணிசேர வேண்டும். என சீன ஜனாதிபதி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Chinas-President-Xi-Jinpin-680x365.jpg

சுவிற்சர்லாந்திற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உரையாற்றியுள்ள போதே அணுவாயுத இல்லாத உலகை உருவாக்க சகல நாடுகளும் அணிதிரள வேண்டுமென அழைப்புவிடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது,  

அடுத்து வரும் சந்ததியினருக்கு  அணு ஆயுதங்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை நிராகரிப்பதோடு, உலகத்திலிருந்து அணு ஆயுதங்களை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும். 

மேலும் உலகில் பலம் பொருந்திய நாடுகள் ஒவ்வொன்றும், ஏனைய சிறிய நாடுகளின் விதிமுறைகளை மதிக்க வேண்டும். ஒவ்வொரு பெரிய நாடும் தமது கோட்பாடுகளை மீறாமலும், சிறிய நாடுகளை ஆக்கிரமித்து தமது கொள்கையை அவற்றின் மீது திணிக்காத நிலை உருவாக வேண்டும். என அவர் குறிப்பிட்டுள்ளார் .  

மேலும் குறித்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி, ஐ.நா.சபையின் புதிய பொதுச் செயலாளர் அண்டோனியா கட்டெரஸ்ஸை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://www.virakesari.lk/article/15585

Categories: merge-rss, yarl-world-news

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 19/01/17

 

இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,
* போரினால் சீரழிந்த கிழக்கு அலெப்போவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரும்புவதாக ஐ நா கூறும் நிலையில், அங்குள்ள சூழலை ஆராய்கிறது பிபிசி.
* தாய்லாந்தில் நாளொன்றுக்கு சாலை விபத்துகளில் குறைந்தது அறுபதுபேர் பலியாகும் நிலையில், அங்கு சாலை பாதுகாப்பு எப்படியுள்ளது?
* அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி விலகிச் செல்லவுள்ள நிலையில், அவரது வெளியுறவு கொள்கைகள் எப்படியிருந்தன என்பது பற்றிய ஒரு பார்வை.

Categories: merge-rss, yarl-world-news

பராக் ஒபாமா: காலம் கலைத்த கனவு


பராக் ஒபாமா: காலம் கலைத்த கனவு
 
 

article_1484827489-obama.jpg- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ  

காலங்கடந்து நிகாலங்கடந்து நிலைத்தல் எளிதல்ல. காலம் தன்னளவில் நிலைக்க வேண்டியவையையும் மறக்க வேண்டியவையையும் தீர்மானிக்கிறது. ஒரு நபரின் காலங்கடந்த இருப்பு அவர் எதைச் செய்தார் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு முடிவாவதில்லை. மாறாக, எதைச் செய்யாமல் விட்டார் என்பதையும் கருத்திலெடுக்கிறது.

காலங்கடந்து நிலைத்தலை விட, மக்கள் மனதில் நிலைத்தல் கடினமானது. காலம் மன்னிக்கத் தயாராகவுள்ள விடயங்கள் பலவற்றை, மக்கள் மன்னிக்கத் தயாராகவில்லை. மக்கள் மனங்களில் நிலைக்கின்றவர்கள் நல்ல மனிதர்கள், அவர்கள் வரலாற்றின் பக்கங்களால் மறைக்கப்பட்ட போதும், மக்கள் மனங்களில் வாழ்பவர்கள்.   

தனது எட்டு ஆண்டுகள் பதவிக்காலத்தையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் செய்தி, மிகுந்த துக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அவரது பிரியாவிடை உரை, மிகுந்த உணர்வுபூர்வமாக பேசப்பட்டது. இவை, ஒபாமா காலத்தால் எவ்வாறு கணிக்கப்படுவார் என்கிற கேள்வியை எழுப்புகின்றன.  
2008ஆம் ஆண்டு, “நம்பிக்கையான மாற்றம்” எனப்பட்ட கோஷத்துடன் பராக் ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அமெரிக்க வரலாற்றின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்ற பெருமையும் அமெரிக்க மக்களின் ஏகோபித்த ஆதரவும் மிகுந்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கியிருந்த நிலையில் 2009ஆம் ஆண்டு, ஒபாமா பதவியேற்றார். இன்று எட்டு ஆண்டுகள் கழித்துத் தெரிவான அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்புக்கு இடம் விட்டு, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்போது, ஒபாமாவின் சாதனை என்ன என்ற வினாவை எழுப்புவது தவிர்க்கவியலாதது.   

பதவியேற்ற 12 நாட்களுக்குள் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, அவ்வாண்டுக்கான பரிசும் வழங்கப்பட்ட நிலையில், சமாதானத்துக்கும் ஒபாமாவுக்கும் சம்மந்தமே இல்லையென்ற போதும், சமாதானப் புறா, சண்டைக்கோழியாகி கொன்று தீர்த்த கதையை இங்கு சொல்லியாக வேண்டும். அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட நாட்களாக நடைபெறும் ஒரு போரை, தனது காலத்திலும் ஒபாமா தொடர்ந்தார் என்பது பெருமைதான்.

கடந்த 16 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள், ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ளன. ஆப்கானிஸ்தான், மெதுமெதுவாக அரசற்ற ஒரு நாடாக மாறியுள்ளது. ஒபாமா, தனது ஆட்சிக்காலத்தில் தலிபான்களுடன் பேசினார்; கூட்டணி வைத்தார்.

அமைதி மாநாடுகளை நடாத்தினார். ஆனால், அமைதி மட்டும் இன்று வரை ஆப்கானிஸ்தானில் திரும்பவில்லை. தனது பதவிக்காலம் முழுவதும் ஒபாமா நிகழ்த்திய போர்களில், ஆப்கான் முதலாவது. ஈராக் மீதான யுத்தம், இரண்டாவது. தனது முன்னவர் தொடங்கியதை ஒபாமா தனது பின்னவருக்கும் அளித்துச் செல்கிறார். ஏன் தொடங்கப்பட்டது என்ற நினைவே அழிந்துபோகின்ற அளவுக்கு, சிக்கலான பல்பரிமாண நெருக்கடி, ஈராக்கில் இன்று அரங்கேறுகிறது.   

இதைவிட இரண்டு முக்கிய போர்களை, ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க தொடக்கியது. அவை இரண்டும் ஒபாமாவின் சாதனைகளைக் கூறும் கட்டியங்கள். முதலாவது, லிபியா மீதான யுத்தம். “ஆட்சி மாற்றம்” என்ற போர்வையில், முஹம்மர் கடாபியை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கான யுத்தம், இன்று அரசற்ற ஒரு தேசத்தை லிபியர்களுக்குப் பரிசளித்துள்ளது.

வட ஆபிரிக்காவில் ஓரளவு வளர்ச்சி அடைந்த சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய ஒரே நாட்டையும் சிதைத்த பெருமை, ஒபாமாவின் நிர்வாகத்துக்குரியது. பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவர்கள் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு புரட்சிப் படையினராக வீதிகளில் திரிவதையும் தங்கள் நாட்டுக் கட்டங்களின் மீது சரமாரியாகச் சுடுவதுதையும், வெளிநாட்டுக் கமெராக்காரர்களுக்கு முன் ஓடிவந்து குழந்தைத்தனம் மாறாது கையசைப்பதும், லிபிய விடுதலை என்று சுட்டப்படுவதன் ஓர் அடையாளம் என்றே புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

இந்தப் பிஞ்சுக் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்தது யார்? சர்வதேச சட்டங்களும் போராளிச் சிறார்கள் பற்றிய ஐ.நாவின் பட்டயங்களும் எங்கே போயின? விடுதலையின் பெயரால் எவருடைய நன்மைக்காகவோ இவர்கள் பலியிடப்படுகிறார்கள்? இவர்கள் இழந்த குழந்தைப் பருவத்தை இவர்களுக்கு மீட்டுத் தரப்போவது யார்? இக்கேள்விகள், பதிலை வேண்டியபடி, காலங்கடந்தும் நிலைக்கும்.   

இரண்டாவது, சிரியாவில் ஒரு முடிவற்ற போரைத் தொடக்கி, போராளிக்குழுக்களை ஆயுதபாணியாக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ் என்கிற பயங்கரவாதத்துக்கும் முகவரியை வழங்கியதும், ஒபாமா நிர்வாகமே. இன்று உலகளாவிய ரீதியில் பல வகைகளில் தாக்கங்களை ஏற்படுத்திய யுத்தமாக, சிரிய யுத்தம் திகழ்கிறது. ஒருபுறம் மத்திய கிழக்கின் மொத்த அமைதியும் செத்துவிட்டது. மறுபக்கம், தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்வதற்காக ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு, மத்தியதரைக் கடலைக் கடக்கும் அகதிகள் கடலில் மடிவதும் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோருவதும் என, மனிதாபிமான நெருக்கடியை சிரிய யுத்தம் பரிசளித்துள்ளது.

இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், இப்போது ஐரோப்பாவினுள் நுழைந்துள்ள, நுழைய முயல்கின்ற அகதிகளின் பிரச்சினை பற்றிய பார்வையும் பொதுப் புத்தி உருவாக்கமும், இதை வெறுமனே சிரியாவில் நிகழும் உள்நாட்டு யுத்தத்தால் ஐரோப்பாவுக்குள் வரும் சிரிய அகதிகளின் பிரச்சினையாகச் சுருக்குகியுள்ளது. இது வெறுமனே சிரிய அகதிகளின் பிரச்சினையல்ல. சிரியாவில் தஞ்சம் புகுந்து, அங்கு வாழ்ந்துவந்த பிற மத்திய கிழக்கு அகதிகளின் பிரச்சினையுமாகும். வட ஆபிரிக்காவின் யுத்தங்களாலும் வறுமையாலும் இடம்பெயரும் ஆபிரிக்கர்களின் பிரச்சினையுமாகும். ஈராக்கில் தொடங்கி, லிபியாவில் வளர்ந்து, சிரியாவில் வெடித்த மாபெரும் தொடர் அவலத்தின், இன்னோர் அத்தியாயமே இந்நெருக்கடியாகும்.   
தனது முன்னவர்கள் போலல்லாது, ஒபாமா, இன்னொரு வகையில் வித்தியாசமான யுத்தமொன்றைச் செய்தார்.

தாக்குதல்களை நடாத்துவதற்கு ட்ரோன்கள் (Drones) எனப்படும் ஆளில்லா பறக்கும் விமானங்களை ஒபாமா பயன்படுத்தினார். ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த மகத்தான செயல்களாக, அவை சிலாகிக்கப்படுகின்றன. இவை உலகளாவிய ரீதியில் “பயங்கரவாதத்தின் பெயரால்” இலட்சக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுள்ளன. குறிப்பாக பாகிஸ்தானிய பழங்குடிகள், இத்தாக்குதல்களால் தொடர்ந்தும் பலியாகினர். அதேபோல், நாடுகளின் இறைமையை மதிக்காமல் ட்ரோன்கள், பிற நாடுகளின் வான்பரப்பில் பறந்தன. ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் 4,000 பேர், ட்ரோன் தாக்குதல்களில் பலியாகியுள்ளனர். படைவீரர்களைக் காவு கொடுக்காமல், எதிரிகளைப் பலியெடுத்த தலைவன் என்ற பெருமையை ஒபாமா பெற்றார்.   


ஒபாமாவினுடைய காலத்திலேயே “அரேபிய வசந்தம்” அரங்கேறியது. மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் மக்களின் தன்னெழுச்சியால், அவர்களது உரிமைகளுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் நடந்த போராட்டங்கள் திசைதிருப்பலுக்கு உள்ளாகின. அமெரிக்கா, தன் நீண்டநாள் கூட்டாளிகளைக் கைவிட்டது. துனீஷியாவின் பென் அலி, எகிப்தில் முபாரக், யெமனில் சலே என, அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய ஆட்கள் பதவியிலிருந்து அகற்றப்பட்டனர்.

புதிய தலைமைகள், பழையதை புதிய உருவில் நடைமுறைப்படுத்தின. “அரேபிய வசந்தம்”, நல்ல பாடங்களை எமக்குச் சொல்லியது.   

சமூக வலைத்தளங்கள் கட்டமைப்பது போல, மக்கள் எழுச்சி ஒரு ஃபஷன் நிகழ்வல்ல. அது, தொடர்ச்சியாக பொறுப்புணர்வோடும் நம்பிக்கையோடும் முன்னெடுக்கப்படவேண்டியது. இன்று அரபு நாடுகளில் நடந்துள்ளது போல, வெறுமனே தேர்தல் ஜனநாயகத்தை உருவாக்குவது, பிரச்சினைகளின் தீர்வாகவோ போராட்டத்தின் குறிக்கோளாகவோ இருக்கமுடியாது. மேற்சொன்ன அத்தனை எழுச்சிகளிலும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபடாமலும் தொழிலாளர்கள் தலைமைப் பாத்திரம் ஏற்காத வண்ணமும் கவனமாகப் பார்த்துக் கொள்ளப்பட்டது.  

முன்னெப்போதும் இல்லாதளவுக்கு, இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துருவாக்கம் முனைப்படைந்துள்ளது. சவூதி அரேபியாவுக்கான ஒபாமாவின் ஆதரவு, இதற்கான தளத்தைத் தொடர்ந்து வழங்கியது. சவூதி அரேபியா, உலகெங்கும் வஹாபி, ஸலாஃபி முஸ்லிம் குழுக்களை அனுப்புகிறது. உலகெங்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்க்கிற அதேவேளை, முஸ்லிம் மக்களைப் பிளவுபடுத்துகின்ற காரியங்களையும் செய்கின்றன. இவை, அமெரிக்காவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும், முஸ்லிம் மக்களின் இருப்பை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன.   

ஒபாமாவுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தொட்டுத் தொடரும் பந்தமொன்று உண்டு. அதை இக்கணம் நினைவூட்டுவது தகும்.  இலங்கையின் உள்நாட்டு யுத்தம் நிறைவுறும் தறுவாயில் அரங்கேறிய மனிதப் பேரவலத்தை, அமைதி காத்து வேடிக்கை பார்த்த பெருமை, ஒபாமாவைச் சாரும். சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான உரிமைகள் என இருக்கின்ற இல்லாத என அனைத்து உரிமைகள் பற்றிப் பேசுகிற அமெரிக்கா, இலங்கையில் அமைதி காத்தது. ஒபாமாவை நம்பியிருந்தோரின் கதை, “இலவு காத்த கிளி”யின் கதையானது. தமிழர்கள், ஒபாமாவின் ஆட்சிக்காலத்தை நினைவு கொள்ளக் காரணங்கள் நிறையவே இருக்கின்றன.   

உலக அலுவல்களை விட்டுவிடுவோம். அமெரிக்காவின் உள்ளூர் விடயங்களுக்கு வருவோம். இப்போது அமெரிக்காவின் வேலையில்லா நெருக்கடி, 10 சதவீதத்தை எட்டியுள்ளது. வேலையின்மை, வறுமை என்பவற்றின் விளைவால் 30 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீதத்தினர், இன்னமும் பெற்றோருடன் வசிக்கின்றனர்.  

அமெரிக்காவின் செல்வந்த அடுக்களில் உயர்நிலையில் உள்ள 1 சதவீதத்தினர், ஒபாமா நிர்வாகத்தின் கீழ் மொத்த தேசிய வருமானத்தில் 97%க்கு உரித்துடையவராயுள்ளனர். இது ஜோர்ஜ் புஷ்ஷினுடைய நிர்வாகத்தில் 65%உம் அதற்கு முந்தைய பில் கிளின்டனின் நிர்வாகத்தில் 48%ஆகவும் இருந்தது. இது, தன்னை யாருடைய பிரதிநிதியாக ஒபாமா கொண்டார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.   

ஒபாமாவின் பிரியாவிடை உரையில் அவர் சிந்திய கண்ணீரை, எவ்வாறு விளங்குவது. கடந்த எட்டு ஆண்டுகாலத்தில் இலட்சோப இலட்சம் மக்களின் கண்ணீருக்குக் காரணமான ஒருவரின் கண்ணீரின் பெறுமதி என்ன? கறுப்பின அமெரிக்கர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக தோன்றி, கவனிப்பாரற்றுக் கரையும் ஒரு மனிதரை, எவ்வாறு மனதில் இருத்துவது. அவரது ஆட்சிக்காலத்திலேயே கறுப்பர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை அதிகரித்தது. நூற்றுக்கணக்கான கறுப்பர்கள், பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கறுப்பர்களின் அமெரிக்காவை, கறுப்புப் பக்கங்களால் நிறைத்த பெருமையை என்னவென்று சொல்வது.   

இன்னொரு வகையில் ட்ரம்ப், ஒபாமா உருவாக்கிச் செல்லும் வழித்தடத்தின் பிரதிநிதி அவ்வளவே.   
2010இல் புயலால் பாதிக்கப்பட்ட நியூ ஓர்லென்ஸ் மாநிலத்தை ஒபாமா பார்வையிடுகையில், அங்கு பொதுமக்களை சந்தித்துப் பேசியபோது டைரன் ஸ்காட் என்ற 9 வயதுச் சிறுவன், ஒபாவைப் பார்த்து “மக்கள் ஏன் உங்களை வெறுக்கிறார்கள்?” என்று கேட்டான். அவனது கேள்வியால் தடுமாற்றமடைந்த ஒபாமா, சமாளித்துக்கொண்டே “நான், ஜனாதிபதித் தேர்தலில் ஏராளமான வாக்குகளைப் பெற்றுள்ளேன். அதனால் என்னை எல்லோருமே வெறுக்கிறார்கள் எனக் கூறமுடியாது” எனப் பதில் அளித்தார். அந்தச் சிறுவனின் கேள்வி, என்றைக்கும் ஒபாமாவைத் துரத்திக் கொண்டேயிருக்கும்.   
மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவில் அவரது கனவின் நிலையென்ன. அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால், கறுப்பின ஜனாதிபதி உருவாக்கிவிட்ட அமெரிக்காவில், கறுப்பினத்தவர்கள் நிலைகண்டு என்ன எண்ணியிருப்பார்? இன்னமும் ஒவ்வோர் அமெரிக்கனின் உள்ளத்திலும் உன்னதமான அமெரிக்கர்களின் அலங்காரப்பீட அடுக்கில் தனக்கான அசைக்க முடியாத இடத்தில், ஆறுதலாக அமர்ந்திருக்க விரும்பியிருப்பாரா, அல்லது தனது பீடத்திலிருந்து கீழிறங்கி, வெற்றுப் புகழாரங்களை உதறித் தள்ளிவிட்டு, தன் மக்களை மீண்டும் பேரணியில் திரட்ட வீதிக்கு வந்திருப்பாரா?  

- See more at: http://www.tamilmirror.lk/190008/பர-க-ஒப-ம-க-லம-கல-த-த-கனவ-#sthash.lFhLLHAn.dpuf
Categories: merge-rss, yarl-world-news

இத்தாலியில் 3 தொடர்நிலநடுக்கங்களையடுத்து ஏற்பட்ட பனிச்சரிவு ஹோட்டல் ஒன்றை தாக்கியுள்ளது – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

இத்தாலியில் 3 தொடர்நிலநடுக்கங்களையடுத்து ஏற்பட்ட பனிச்சரிவு ஹோட்டல் ஒன்றை தாக்கியுள்ளது – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

italy33.jpg

நேற்று புதன்கிழமை ஒரு மணித்தியாலத்திற்குள் தொடர்ந்து 3 தடவைகள்  பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில்  இத்தாலியில்  பனிச்சரிவு    ஒரு ஹோட்டலை  தாக்கியுள்ளதாகவும் இதனால் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
italy22.jpg
நேற்று மாலை கடும் பனிப்பொழிவு  நிலவிய நிலையில்  மத்திய அப்ரசோவைப் பகுதியில் உள்ள கிரான் மலையில்  பரின்டோலா  (Farindola )நகரில்  உள்ள  Rigopiano    என்ற   மூன்று மாடி ஹோட்டலே  இவ்வாறு பனிச்சரிவால் தாக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில்  நடந்த  மீட்புக்களை மேற்கொண்ட போது  பலரது உடல்கள், கண்டெடுக்கப்பட்டதாகவும்  அங்கு மேலும் இறந்த பல உடல்கள் உள்ளன எனவும் இத்தாலிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

http://globaltamilnews.net/archives/14356

Categories: merge-rss, yarl-world-news

பதவி இல்லையென்றாலும் அமெரிக்காவுக்காக குரல் கொடுப்பேன் ; ஒபாமா ( காணொளி இணைப்பு )

பதவி இல்லையென்றாலும் அமெரிக்காவுக்காக குரல் கொடுப்பேன் ; ஒபாமா ( காணொளி இணைப்பு )

 

 

பதவிக் காலத்துக்குப் பிறகும் பதவியில்லையென்றாலும் நான் அமெரிக்காவுக்காக குரல் கொடுக்கத் தயங்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

obama.jpg

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நாளைய தினம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில், தனது பதவிக்காலத்தின் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பை தற்போதைய ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையில் நேற்று நடத்தினார்.

f_dc_obama_press_170118.nbcnews-ux-1080-

இதன் போது உரையாற்றுகையிலேயே ஒபாமா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

எனது பதவிக் காலத்துக்குப் பிறகும் பதவியில்லையென்றாலும் நான் அமெரிக்காவுக்காக குரல் கொடுக்கத் தயங்கப்போவதில்லை.

 

AP_17018733999309-1280x720.jpg

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தின்போது, அமெரிக்காவின் அடிப்படை நெறிமுறைகள் பாதிக்கப்படுவதாகத் தாம் உணர்ந்தால் அதற்காக எதிர்த்துக் குரல் கொடுக்க தயாராக இருப்பேன்.

 

 

170118142934-obama-press-1-exlarge-169.j

நாளைய பதவி மாற்றத்துக்குப் பின்னர் எனது நேரத்தைப் பிள்ளைகளுடன் செலவிட விரும்புகின்றேன். அத்துடன் எழுதுவதற்கும் நான் கவனம் செலுத்தவுள்ளேன்.

 இதேவேளை, எதிர்காலத்தில் அமைதியாக நேரத்தைச் செலவிட எதிர்பார்த்துள்ளேன்

 

 

இந்நிலையில் நாளைய தினம் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார். குறித்த பதிவி மாற்றம் மிகவும் சுமுகமாக இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/15544

Categories: merge-rss, yarl-world-news

டொனால்ட் ட்ரம்ப்பின் சிலையை அவமானப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்த பெண்

டொனால்ட் ட்ரம்ப்பின் சிலையை அவமானப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்த பெண்

 

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீதான தமது எதிர்ப்பை பெண்கள் அமைப்பு ஒன்று வித்தியாசமாகக் காட்டியுள்ளது.

4_Trump_Wax.jpg

ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் உள்ள நூதனசாலை ஒன்றில் நேற்று ட்ரம்ப்பின் முழு உருவ மெழுகுச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ‘ஃபிமென்’ (FEMEN) என்ற பெண் உரிமைகளுக்கான அமைப்பைச் சார்ந்த பெண்ணொருவர், திடீரென்று பாதுகாப்பு அதிகாரிகளை மீறிக்கொண்டு சிலைக்கருகில் சென்றார்.

சிலைக்கருகே சென்றதும் அவர் தனது மேலாடையைக் கழற்றியெறிந்ததுடன் ட்ரம்ப்பின் சிலையின் மறைவுப் பகுதியைக் கைகளால் பிடித்துக்கொண்டு கீழ்த்தரமான கோஷம் எழுப்பி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வளவோ கூறியும் கேட்காமல் எதிர்ப்பு கோஷம் எழுப்பிய அவரை, இறுதியில் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர்.

http://www.virakesari.lk/article/15531

Categories: merge-rss, yarl-world-news

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 18/01/17

 

இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

* டிரம்ப் பதவியேற்றால் மெக்ஸிகோவில் எப்படியான பாதிப்புக்கள் ஏற்படும் என்பது குறித்த ஒரு பார்வை.

* பிரிட்டனில், செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதக் கருவை பரிசோதனைக்காக வைத்திருக்கும் காலத்தை இருமடங்காக்க கோரிக்கை.

* பிரிட்டனில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்கள் ஏன் சிறப்பு கமெராக்களை பொருத்துகிறார்கள்? ஆராய்கிறது பிபிசி.

Categories: merge-rss, yarl-world-news