merge-rss

எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி

அரசியல்-அலசல் - Sun, 22/01/2017 - 16:26
எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி
P5-b479e18531b39bd766ca93daeeffdffe6dd3d4e1.jpg

 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ணய அறிக்கை மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விடம் எல்லை நிர்­ணயக் குழுவின் தலைவர் அசோக்க பீரி­ஸினால் கடந்த 17 ஆம் திகதி கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்தல் புதிய முறைப்­படி நடத்த இருப்­ப­தாக மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார்.

உள்­ளூராட்சி தேர்­தலில் புதிய முறை­மையில் உள்ள குறை­பா­டுகள் மற்றும் விமர்­ச­னங்­களை கவ­னத்தில் கொள்­ளா­மலும், எல்லை நிர்­ணய குழு­வி­னரின் அறிக்­கையில் தேவை­யான சட்­டத்­தி­ருத்­தங்­களை செய்­யா­மலும் அவ­ச­ர­மாக வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிப்­பது சிறு­பான்­மை­யி­ன­ருக்கும், சிறிய கட்­சி­க­ளுக்கும் செய்­கின்ற அநீ­தி­யாகும் என்று சிறு­பான்­மை­யினக் கட்­சி­களும், சிறிய கட்­சி­களும் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ளன.

உள்­ளூராட்சி மன்­றங்­களின் தேர்­தலை நடத்­து­வ­தற்கு மாகாண சபைகள், உள்ளூ­ராட்சி மன்­றங்­களின் அமைச்சர் பைஸர் முஸ்­தபா அடிக்­கடி திக­தி­களை குறிப்­பிட்டுக் கொண்டே வந்­தா­ரே­யன்றி தீர்க்­க­மான அறி­விப்பைச் செய்­ய­வில்லை. உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்­தலை வட்­டார அடிப்­ப­டையில் புதிய தேர்தல் முறை ஒன்றின் மூல­மாக நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுத்துக் கொண்டு வந்­த­மையே தேர்­தலை நடத்­து­வதில் இழு­பறி நிலை ஏற்­பட்­ட­தற்கு கார­ண­மென்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆயினும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் காணப்­படும் உள்­ளக முரண்­பா­டு­க­ளி­னா­லேயே உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்­து­வ­தற்கு கால­தா­ம­தங்கள் ஏற்­பட்­ட­மைக்கு பிர­தான கார­ண­மாகும்.

இதேவேளை, உள்­ளூ­ராட்சி தேர்­தலை புதிய முறைப்­படி நடத்­து­வ­தற்கு எல்லை நிர்­ண­யங்கள் செய்­யப்­பட்டு வட்­டா­ரங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த வட்­டார எல்லை பிரிப்பு கடந்த அர­சாங்­கத்தின் காலத்திற் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகும். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வெற்­றியை இலக்­காகக் கொண்டே வட்­டா­ரங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அதே வேளை, வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தில் பாரிய வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும் வகை­யில்தான் எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக சிறு­பான்மைக் கட்­சிகள் சுட்டிக் காட்­டி­யுள்­ளன. குறிப்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த பிரச்­சி­னையை அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றி­ருந்தார். ஆயினும், இவரின் இந்த கோரிக்­கையை அர­சாங்கம் கவ­னத்திற் கொள்­ள­வில்லை.

சிறு­பான்மைச் சமூ­கங்­களும், சிறிய கட்­சி­களும் பாதிக்­கப்­ப­டு­கின்ற வகையில் எல்லை நிர்­ண­யங்கள் அமைந்­துள்­ளன. இந்த சர்ச்­சை­க­ளுக்கு நிரந்­த­ர­மான தீர்வைக் கண்டு விட்­டுத்தான் வர்த்­த­மா­னியில் அது பிர­சு­ரிக்­கப்­பட வேண்டும். தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஏற்­க­னவே 56 இடங்­களில் திருத்­தங்கள் அவ­சி­ய­மென்று விதந்­து­ரை­களைச் செய்­தி­ருக்­கின்றார். மேலும், நாங்­களும் தெரிவு முறையில் காணப்­ப­டக்­கூ­டிய பாரிய பாதிப்­புகள் பற்றி ஏற்­க­னவே சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றோம். எனவே, சிறு­பான்­மை­யின கட்­சி­க­ளோடும், சிறிய கட்­சி­க­ளோடும், ஏனைய கட்சித் தலை­வர்­க­ளோடும் போதிய கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்டு ஒரு­மித்த நிலைப்­பாடு எட்­டப்­பட்­டதன் பின்னர் இது­பற்­றிய தீர்க்­க­மான முடிவை எடுப்­ப­துதான் சிறந்­த­தாகும் என்று ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்­தலை புதிய முறைப்­படி நடத்­து­வ­தற்கு ஏற்­க­னவே அமைச்­ச­ரவை அங்­கி­காரம் வழங்­கி­யி­ருந்­தது. அமைச்­ச­ர­வையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் றிசாட் பதி­யுதீன் உட்­பட தமிழ், முஸ்லிம் அமைச்­சர்கள் உள்­ளார்கள். புதிய முறைப்­படி தேர்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய அங்­கி­கா­ரத்தை வழங்­கு­வ­தற்கு முன்­ன­தாக அதி­லுள்ள குறை­பா­டு­களை இல்­லாமல் செய்­வ­தற்­கு­ரிய அழுத்­தங்­களை கொடுத்­தி­ருக்க வேண்டும். தாங்கள் எதிர்­பார்க்கும் மாற்­றங்கள் இடம்­பெற்­றி­ருந்தால் மாத்­தி­ரமே அமைச்­ச­ர­வையில் உள்ள தமிழ், முஸ்­லிம்கள், அமைச்­சர்கள் அதற்­கான அங்­கி­கா­ரத்தை வழங்­கி­யி­ருக்க வேண்டும். அத­னை­வி­டுத்து, அங்­கி­கா­ரத்­தினை வழங்­கி­விட்டு வர்த்­த­­மா­னியில் அவ­ச­ர­மாக பிர­சு­ரிப்­பது அநி­யாயம் என்று குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைப்­பது சிறு­பான்­மை­யி­னரை ஏமாற்றும் செய­லாகும்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ண­யத்தில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பாரிய அநீ­திகள் இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக ரவூப் ஹக்கீம் பல தட­வைகள் சுட்டிக் காட்­டி­யுள்ளார். அவற்­றினை தீர்க்­காது போனால் அதனை ஏற்றுக் கொள்­ள­மாட்டோம் என்றும் அவர் சூளு­ரைத்­தி­ருந்தார். ஆனால், தற்­போது எல்லை நிர்­ண­யத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்ட குறை­க­ளையும், பிரச்­சி­னை­க­ளையும் கருத்திற் கொள்­ளாது நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் இறங்­கி­யுள்­ளது. அர­சாங்­கத்தின் இந்­ந­ட­வ­டிக்­கையால் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே வாழ்­கின்ற முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் வெகு­வாகக் குறை­வ­டைந்­து­விடும். இதனால், முஸ்லிம் பிர­தே­சங்கள் மிகப் பெரிய பாதிப்­புக்­களை எதிர் கொள்ளும் என்­பதில் ஐய­மில்லை.

ஒரு பிர­தே­சத்தில் உள்ள இன­வி­கி­தா­சாரம், நிலத் தொடர்­புகள் போன்­ற­வை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­காது பெரும்­பான்­மை­யினம் அதிக உறுப்­பி­னர்­களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வட்­டா­ரங்­களின் எல்­லைகள் நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­களைப் பொறுத்த வரை திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் கந்­தளாய், மூதூர் ஆகிய உள்­ளூராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ண­யத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அப்­பி­ர­தேச முஸ்­லிம்கள் தெரி­விக்­கின்­றார்கள். இங்கு முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை குறைக்கும் வகையில் எல்­லைகள் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளன.

புத்­தளம் மாவட்­டத்தில் புத்­தளம் நகர சபை மற்றும் பிர­தேச சபை, கற்­பிட்டி பிர­தேச சபை, ஆராய்ச்­சிக்­கட்டு பிர­தேச சபை, வண்­ணாத்­தி­வில்லு பிர­தேச சபை, சிலாபம் நகர சபை மற்றும் பிர­தேச சபை, நாத்­தாண்­டியா பிர­தேச சபை ஆகி­ய­வற்­றிலும் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாமல் செய்ய வேண்­டு­மென்­ப­தற்­காக திட்­ட­மிட்ட வகையில் எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ளன.

கண்டி மாவட்­டத்தில் அக்­கு­றணை பிர­தேச சபை, பாத்­த­ஹே­வ­ஹட்டை பிர­தேச சபை, பாத்­த­தும்­பறை பிர­தேச சபை­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இது போன்று வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே உள்ள எல்லா மாவட்­டங்­க­ளிலும் உள்ள உள்­ளூராட்சி மன்­றங்­களில் முஸ்­லிம்­களின் மக்கள் பிர­தி­நி­தித்­து­வத்தை குறைப்­ப­தற்கு சதிகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இவற்­றிக்­கு­ரிய தீர்­வு­களை அர­சாங்கம் முன் வைக்­காத நிலையில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ண­யத்­தினை அமுல்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை எடுப்­பது முஸ்­லிம்­களின் மீது வேண்­டு­மென்று மேற்­கொள்­ளப்­படும் அர­சாங்­கத்தின் திட்­ட­மிட்ட நட­வ­டிக்­கை­யா­கவே இருக்­கின்­றது. இதனால், முஸ்லிம் கட்­சி­களும், அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இவற்றில் போதிய கவனம் செலுத்­துதல் வேண்டும். இன்று விடும் தவறு முஸ்­லிம்­களின் எதிர்காலத்தை அலங்­கோ­லப்­ப­டுத்­தி­விடும்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள முஸ்லிம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்­லை­களை நிர்­ணயம் செய்­வதில் அர­சியல் கட்­சி­க­ளி­னதும், கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளி­னதும் விருப்பு வெறுப்­புக்­க­ளுக்கு ஏற்­ற­வாறு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன.

 உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் தமது அர­சியல் எதிரி அல்­லது கட்­சியை தோற்­க­டிக்க வேண்­டு­மென்­ப­தற்­காக எல்­லைகள் நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

1981ஆம் ஆண்­டிற்கு முன்னர் உள்­ளு­ராட்சி சபை­க­ளுக்கு வட்­டார அடிப்­ப­டை­யி­லேயே உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டார்கள். ஒவ்­வொரு வட்­டா­ரத்­திற்கும் ஒருவர் தெரிவு செய்­யப்­பட்டு பின்னர் அவர்கள் ஒன்று கூடி தமது உள்­ளு­ராட்சி சபை­க­ளுக்­கான தலைவர், துணைத்­த­லை­வர்­களை தெரிவு செய்யும் முறை இருந்து வந்­துள்­ளது. இத்­தேர்தல் முறை 1989ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட உள்­ளு­ராட்சி தேர்தல் அதி­கார சபையின் சட்­டத்­தினால் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது. இதன் பின்னர் விகி­தா­சார அடிப்­ப­டை­யி­லேயே உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டார்கள். தற்­போது அர­சாங்­கத்­தினால் முன் வைக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளு­ராட்சி தேர்தல் முறை­யா­னது 1981ஆம் ஆண்­டிற்கு முன்னர் இருந்த வட்­டார முறை­யையும், 1989ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட விகி­தா­சார முறை­யையும் கலப்­பாகக் கொண்­ட­தொரு தேர்தல் முறையை அறி­முகம் செய்­ய­வுள்­ளது.

உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளி­னதும், பொதுத் தேர்தல் முறை­யிலும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் சட்ட மூலம் மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. உள்­ளு­ராட்சி மன்­றங்­களின் தேர்­தலை வட்­டார முறைப்­படி நடாத்­து­வ­தென்று முடிவு செய்­யப்­பட்­டது. இம்­மு­றையில் 70வீதம் வட்­டார அடிப்­ப­டை­யிலும் 30 வீதம் விகி­தா­சார அடிப்­ப­டை­யிலும் உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டுவர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இதன் போது சிறு­பான்மைக் கட்­சிகள் தங்­க­ளது இனங்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறை­வ­டையும் என்று சுட்டிக் காட்­டின. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் ஹஸன்­அலி 60 வீதம் வட்­டார அடிப்­ப­டை­யிலும், 40 வீதம் விகி­தா­சார அடிப்­ப­டை­யிலும் உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட வேண்­டு­மென்று கேட்டுக் கொண்டார். இதனை அன்­றைய அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டது. ஆனால், தற்­போ­தைய அர­சாங்கம் 70இற்கு 30 என்ற அடிப்­ப­டை­யில்தான் உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­ய­வுள்­ளது. இதனால், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே வாழும் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறை­வ­டைந்து போகும் வகையில் எல்­லைகள் நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் பிர­தே­சங்கள் பெரும்­பான்மை சிங்­கள பிர­தே­சங்­க­ளுடன் இணைக்­கப்­பட்­டுள்­ளன. இதனால், முஸ்­லிம்­க­ளினால் அந்­த­கைய வட்­டா­ரங்­களின் தமது பிர­தி­நி­தியைப் பெற்றுக் கொள்ள முடி­யாது போய்­விடும்.

மொத்த ஆசன ஒதுக்­கீட்டில் 25 வீதம் பெண்­க­ளுக்கும், இளை­ஞர்­க­ளுக்கும் ஒதுக்­கீடு செய்­யப்­பட வேண்டும். உள்ளுராட்சி மன்றமொன்றின் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி ஒன்று 5 ஆயிரம் ரூபாவும் , சுயேட்சைக் குழு 20ஆயிரம் ரூபாவும் செலுத்துதல் வேண்டும். 05வீத வெட்டுப் புள்ளியும் நடைமுறையில் இருக்குமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மிகவும் குறைவாகும். அரசாங்கம் உள்ளுராட்சி சபைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை கொண்டுள்ளன. இதனால், உள்ளுராட்சி சபைகள் பொது நலன்கள் சார்ந்த துறைகளில் குறிப்பாக பொதுச் சுகாதாரம், கழிவகற்றல் போன்ற கருமங்களை செய்து கொண்டு வந்தள்ளன. ஆனால், மேற்கத்தைய நாடுகளில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிறைவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கு நாடுகளில் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் முழுமையான சுயாட்சி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. அங்குள்ள உள்ளுராட்சி அமைப்புகள் தமது பிரதேசத்திற்குரிய கல்வி, காவல்துறை, சமூக சேவைகள் என்பவற்றில் அதிகாரங்களைக்; கொண்டுள்ளன. இதனால், அங்குள்ள உள்ளுராட்சி அமைப்புக்கள் மக்களுக்கு பல அபிவிருத்திகளைச் செய்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு இலங்கையிலும் உள்ளுராட்சி சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதனால், பொது மக்கள் தமது பல தேவைகளை உள்ளுராட்சி சபைகளின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடியதாக இருக்கும் 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-22#page-2

Categories: merge-rss

அழுத்தங்கள் வந்தாலும் அரசியலிலிருந்து ஒதுங்கமாட்டேன் -மகிந்த

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 16:06
அழுத்தங்கள் வந்தாலும் அரசியலிலிருந்து ஒதுங்கமாட்டேன் -மகிந்த
 
 
அழுத்தங்கள் வந்தாலும் அரசியலிலிருந்து ஒதுங்கமாட்டேன் -மகிந்த
எப்படியான பலமிக்க நாடுகள் எவ்வளவு அழுத்தங்களை கொடுத்தாலும் தான் அரசியலில் இருந்து விலகவோ, ஒதுங்கவோ போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
தனது அரசியலை நாட்டு மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதியை அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
எப்போதும் நாட்டு மக்களுடனேயே அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் வெளிநாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய தான் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தாலும் எந்த இலாப நோக்கமும் இன்றி தன்னுடன் இருக்கும் இலட்சக்கண க்கான மக்களின் கோரிக்கைகளை எந்த வகையிலும் புறந்தள்ளப் போவதில்லை எனவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்து ள்ளார்.
 
பலமிக்க வெளிநாடு ஒன்றின் தூதரகமும், அயல் நாடு ஒன்றின் புலனாய்வுப் பிரிவும், முன்னாள் ஜனாதிபதியை செயற்பா ட்டு ரீதியான அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியிருந்த மை குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/news/22999

Categories: merge-rss, yarl-category

கிளி .காந்தி சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுவர்கள் மாயம்

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 16:04
கிளி .காந்தி சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுவர்கள் மாயம்
 
 
கிளி .காந்தி சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுவர்கள் மாயம்
கிளிநொச்சி – உருத்திரபுரம்  காந்தி சிறுவர் இல்லத்தில்  தங்கியிருந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரி விக்கப்படுகிறது.
 
இவர்கள் கடந்த  17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக  காந்தி சிறுவர் இல்லத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி  பொலிஸ்நிலையத்தில்   முறைப்பாடு செய்துள்ளது.
 
இவ்வாறு காணாமல் போனவர்கள்  14 மற்றும்  13 வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த சிறுவர்கள் தமக்கு கல்வி  கற்க விருப்பம் இல்லை எனவும், கல்வி கற்குமாறு தம்மை கட்டாயப்படுத்த வேண்டாம் எனவும்  காந்தி சிறுவர் இல்லத்தினரிடம்  தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில், கல்வி கற்க விருப்பம் இன்றி சிறுவர் இல்லத்தில்   இருந்து வெளியேறியிருக்கலாம் என   பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.  
 
காணாமற் போன சிறுவர்களை தேடும் பணிகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.onlineuthayan.com/news/23001

Categories: merge-rss, yarl-category

கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் டெங்கு ஒழிப்பு திட்டம்

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 15:58
கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் டெங்கு ஒழிப்பு திட்டம்

 

கொட்டாஞ்சேனை புனித லுஸியஸ் தேவாலய வளாகத்தில் இன்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு திட்டத்தில் பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை பொது மக்களின் ஒத்துழைப்புடன் நடந்த திட்டத்தில் கலந்துக்கொண்டார்.

1016548926586459198-account_id_1.jpg

1525072205159648496-account_id_1.jpg

2416522562396355073-account_id_1.jpg

3092851816188362182-account_id_1.jpg

5167727947436256186-account_id_1.jpg

5167727947436256186-account_id_1.jpg

7314403762963397235-account_id_1.jpg

7738626603308874740-account_id_1.jpg

7863213021702682473-account_id_1.jpg

8467246830332508766-account_id_1.jpg

8751952760059987341-account_id_1.jpg

http://www.virakesari.lk/

Categories: merge-rss, yarl-category

இலங்கையில் அமெரிக்க இராணுவ பயிற்சி

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 15:57
இலங்கையில் அமெரிக்க இராணுவ பயிற்சி 

 

 

ஐக்கிய அமெரிக்கா கடற்படை கப்பல் 'ஹோப்பர்' இலங்கைக்கு நான்கு நாட்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கை இராணுவத்திற்கான விசேட பயிற்சிகளையும் வழங்கியுள்ளது.

C2s7NrSUcAADNUB.jpg

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றுள்ளனர்.

C2s7NrZVIAMRHRk.jpg

நான்கு நாட்கள் துறைமுகத்தில் தரித்திருக்கவுள்ள இக்கப்பலின் சிப்பந்திகள் மற்றும் இரு நாட்டு கடற்படையினருக்கும் மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றும் முகமாகவே குறித்த விஜயம் அமைந்துள்ளது.

C2s7NrSVQAABfwc.jpg

C2s7NrVUkAI8Fw0.jpg

மேலும் ஹோப்பர் கப்பல் இம்மாதம் 23ம் திகதிவரை இலங்கையில் இருக்குமென  கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.virakesari.lk/article/15682

Categories: merge-rss, yarl-category

தற்காப்பு கலையை வளர்ப்பதில் பிரபாகரன் ஆர்வம் காட்டியது ஏன்?

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 15:09
வடக்கு மாகாண 11 ஆவது குத்துச்சண்டை போட்டி முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது. இதில் முல்லைத்தீவு மாவட்டம் 27.5 புள்ளிகளின்படி முதலிடம் பெற்று 4 தங்கம், 3 வெண்கலம், 2 வெள்ளி பதக்கங்களுடன் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிகொண்டுள்ளது.

பிரபாகரனின் நிர்வாகத்தினால் தற்காப்பு கலை பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியரர் ஒருவர் தற்பொழுது தற்காப்பு கலை ஆர்வளர்களுக்கு பயிற்சியினை வழங்கி வருகின்றார்.

இந்நிலையில் இந்த குத்துச்சண்டை போட்டி நேற்று(20) முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த போட்டியில் வவுனியா மாவட்டம் 19.5 புள்ளிகளையும், யாழ் மாவட்டம் 25 புள்ளிகளையும், முல்லைத்தீவு மாவட்டம் 27.5 புள்ளிகளையும் பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி கொண்டுள்ளது.

இந்நிலையில் தனக்கு பயிற்றுவித்த (வல்வெட்டித்துறை) பிரதான குரு இரட்ணசோதிக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு தற்காப்பு கலை ஆசிரியர்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் காலத்தில் தலைவர் பிரபாகரன் சகபோராளிகளுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிப்பதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அவர் போராளிகள் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுமக்களுகக்கும் குறித்த கலைப்பயிற்சியை பயிற்றுவிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலைப்பயிற்சியை பாடசாலை மட்டங்களில் அறிமுகம் செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளதோடு நடைமுறைப்படுத்தியும் உள்ளார்.

தற்காப்பு கலையுடன், மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற கலை பயிற்சிகளை பயிற்றுவித்து போட்டிகள் நடத்தி சான்றிதல் மற்றும் பரிசில்கள் பதங்கங்கள் என்பன அவர் வழங்கி கௌரவப்படுத்தி ஊக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/132688?ref=youmaylike1

Categories: merge-rss, yarl-category

மஹிந்தவை எச்சரிக்கும் றோ புலனாய்வு அமைப்பு!

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 15:02
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய உளவு அமைப்பான றோவை சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்போது மஹிந்தவுக்கு அரசியல் ரீதியாக சில அழுத்தங்களை பிரயோகித்ததாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள் என றோ பிரதிநிதி கேட்டுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலிலிருந்து ஓய்வு பெற தயாராக இருப்பதாக மஹிந்த தெரிவித்துள்ளார். எனினும் தனது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதனால் இவ்வாறு அரசியலில் இருக்க நேரிட்டுள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் அழுத்தம் பிரயோகித்தால் தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இங்கு சில கோரிக்கைகள் இரண்டு பிரதான தரப்பினராலும் விடுக்கப்பட்டுள்ள போதிலும், அந்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

http://www.tamilwin.com/politics/01/132696?ref=home

Categories: merge-rss, yarl-category

வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன் நாளை கவனயீர்ப்பு போராட்டம்

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 14:55
கடந்த 10.01.2017 வெளிமாவட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய மூன்று ஆசிரியர்களுக்கு வடமாகாணக் கல்விப்பணிப்பாளரால் வழங்கப்பட்ட ஜனநாயக விரோத “பணித்தடை” உத்தரவை விலக்கி ஆசிரியர்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன்பாகக் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறும்.

அத்துடன் இந்தக் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை ஜனநாயக ரீதியான இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இப்போராட்டத்தில் பங்குகொண்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குத் தீர்வு கிடைப்பதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார்.

http://www.tamilwin.com/community/01/132705?ref=home

Categories: merge-rss, yarl-category

முதிரை மரக்கடத்தல் முறியடிப்பு கைதான இருவருக்கு விளக்கமறியல்

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 14:36

13147.jpg

 

வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட  ஓமந்தைப் பொலிஸ் பகுதியில்  உள்ள பெரியமடு அரச காட்டுப் பகுதியில் அனுமதியின்றி நுழைந்து  சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டி உழவு இயந்திரம் மூலம் கடத்திய  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்களை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக  ஒமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, 
 
ஓமந்தையில் உள்ள பெரியமடு காட்டுப்பகுதியில் இருந்து பெறுமதியான முதிரை மரங்களை வெட்டிக் கடத்தப்படுவதாக  கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து, ஓமந்தை வட்டார  வனவள பாதுகாப்பு பிரிவினரும்  மற்றும் விசேட அதிரடிப்படைப் பொலிஸாரும்  திடீரென சுற்றி வளைப்பை மேற்கொண்டபோதே  சுமார் 05, இலட்சம் ரூபா பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகளுடன்  அதனை வெட்டுவதற்குப் பயன்படுத்திய இயந்திர வாளுடன், புளியங்குளம், பனிக்க நீராவி மற்றும் ஓமந்தை, பெரிய மடுபகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். 
 
இச் சட்டவிரோத மரம் வெட்டும் நடவடிக்கையை ஓமந்தை, பெரியமடு பகுதி விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஐ.பி ரஞ்சன தலைமையிலான அதிரடிப் படைப் பொலிஸாரும் மற்றும் ஓமந்தை வட்டார  வனவளபாதுகாப்பு பிரிவினைச்சேர்ந்த ரி.வி.சமன் பிரியந்த, எல்.என்.ஏ.நுவன் சமீர, லைஜீரு உதார உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்  அணியினர்  முறியடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.    

http://www.valampurii.lk/valampurii/content.php?id=13147&ctype=news

Categories: merge-rss, yarl-category

பல்கலைக்கழகங்களுக்கு இருண்ட காலம் தொலைவில் இல்லை மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 14:30

13145.jpg

சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரியினால் பல்கலைக்கழகங்கள்  "இருண்ட காலம்” ஒன்றை அனுபவிக்கும் நாள் மிக தொலைவில் இல்லை என தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றினை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
நம் நாட்டில் மருத்துவர் ஒருவராக பணியாற்ற பதிவு செய்ய வேண்டிய இரண்டு அத்தியாவசிய தேவைக ளின் அடிப்படையில் முதலாவது இலங்கை மருத்துவ சபையின் ஒப்புதலின் படி  எந்த அரசாங்கத்திற்கும் மருத்துவதுறைப் பயிற்சி குறித்தும் அவர்களது சேவைகள் குறித்தும் நோயாளர்களின் உயிர்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையுள்ளது.
 
இதனை உறுதி செய்வதற்கு மருத்துவ சபைகள் எல்லா நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ளது. மருத்துவக் கல் லூரி ஒன்று மருத்துவ சபையின் ஒப்புதல் இன்றி இருக்க முடியாது, ஆனால் இந்த அடிப்படைக் கொள்கையை மீறியே சைற்றம் மாலபே நிறுவனம் தன்னை ஒரு மருத்துவ கல்லூரி என்று அழைத்துக் கொண்டு மாணவர்களை ஆட்சேர்த்து அம் மாணவர்களுக்கு பயிற்சியும் வழங்கி வருகின்றது.பட்டம் வழங்கும் அந்தஸ்தின் அடிப்படையில்  பல்கலைக்கழகங்களின் சட்டப் பிரகாரம் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனம் ஒன்றிற்கு பட்டம் வழங்கும் அந்த ஸ்து ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்கப் படும். குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்திற்கு எந்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலமும் பட்டம் வழங்கும் அந்தஸ்து வழங்கப்படவில்லை. 
 
மாலபே என்று அழைக்கப்படும் மருத்துவ கல்லூரியில் இருந்து வெளியேறிய மாணவியினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கில் மேற்கு றிப்பிட்ட  உண்மைகளை சரியாகவும் தெளிவாகவும் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது.  பல்கலைக்கழகங்கள் தனது \'இருண்ட காலம்” ஒன்றை அனுபவிக்கும் நாள் மிக தொலைவில் இல்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்பு கின்றோம்.  இந்த சூழலில் சைற்றம் மாலபே பிரச்சினை காரணமாக தற்போதுள்ள அமைதியின்மை பெரும் கவனத்தை ஈர்க்கும் விடய மாகும்.
 
இந்த துரதிர்ஷ்டவசமான நிலைமையிலிருந்து பல்க லைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற் றோர்களை பாதுகாக்கவும் நோயாளிகளின் உயிர்க ளைப் பாதுகாக்கவும் தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இந்த பிர ச்சினை பற்றி விரைவில் கலந்துரையாட ஒரு வாய்ப்பு தர வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை  குறித்த தனியார் மருத்துவக்கல்லூ ரியை தடை செய்யக்கோரி யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் 6 ஆவது நாளாக தமது பகிஷ் கரிப்பை இரவு முழுவதும் மேற்கொண்ட துடன் குறித்த  போராட்டத்துக்கு வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தமது ஆதரவினை தெரிவித் துள்ளனர்.  
 
Categories: merge-rss, yarl-category

களமிறக்கப்பட்ட முக்கிய ஆயுதம்..! ஆபத்தில் கோத்தா, மகிந்த!!

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 13:53

ராஜபக்சர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் துணிந்து அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை கூறும் முக்கிய நபரே சரத் பென்சேகா.அந்தவகையில் கடந்த ஆட்சியின் போது நாட்டுக்கு மிக முக்கிய புள்ளியாக இருந்த சரத் பொன்சேகா மகிந்தவினால் தண்டிக்கப்பட்டு அரசியலிலும், மக்களிடத்திலும் அநாதையாக்கி விடப்பட்டார்.

பின்னர் அவருக்கு ஆதரவும் பதவி கொடுத்து காத்து வருபவர் ரணில் விக்ரமசிங்கவே என்பது அனைவரும் அறிந்த விடயமே.

இப்போதைய நிலையில் நாட்டில் அரசின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் மகிந்த, கோத்தபாய போன்றோர் பொன்சேகாவினால் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்நோக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மகிந்தவை அடக்க ரணில் தரப்பிடம் இருக்கும் முக்கிய ஆயுதமே சரத் பொன்சேகா எனவும் அவருக்கு மகிந்த தரப்பின் முக்கிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தெரிந்த காரணமாகவே அவர் அரசுடன் இணைந்து வருகின்றார்.  இதேவேளை அரசு தரப்பில் இருக்கும் அமைச்சர்கள் கூட சரத்பொன்சேகாவுடன் முரண்பட்டவர்களே. அந்த வகையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் கூட பொன்சேகாவின் எதிரியே.

இவ்வாறான ஒரு நபர் அரசுடன் இணைந்து இருப்பது ராஜபக்சர்களை அடக்க இருக்கும் ஓர் ஆயுதம் தக்க சமயத்தில் அது பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினாலேயே என்றே கூறப்படுகின்றது. தற்போது ஆட்சிக் கவிழ்ப்பில் தீவிரமாக மகிந்த தரப்பு செயற்பட்டு கொண்டு வரும் வேளையில் அதற்கு முட்டுக் கட்டையாக பொன்சேகா களம் இறக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக ஊடகவியலாளர் லசந்தவின் கொலைக்கு முக்கிய காரணம் மகிந்தவும் பொன்சேகாவுமே என புலனாய்வு விசாரணையில் தெரிவித்தும் உள்ளார் பொன்சேகா. தொடர்ந்து இழுபறியாக இருக்கும் பொன்சேகா ஏற்கனவே விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் இப்போதே அவர் விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு அரசின் அமைச்சராக உள்ள நானே விசாரணைக்கு வந்துள்ளேன் எனும் போது மகிந்தவும், கோத்தபாயவும் கட்டாயம் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் நான் இவற்றிக்கு பொறுப்பு கூற வேண்டியது அவசியம் இல்லை. அப்போதைய பாதுகாப்பு செயலாளர், மகிந்த, பொலிஸ் மா அதிபர் மட்டுமே இவற்றிக்கு பொறுப்பு. நான் நாட்டில் தீவிரவாதத்தை மட்டுமே கட்டுப்படுத்த நியமிக்கப்பட்டவன், நாட்டில் கொலைகளை செய்தது வெள்ளை வேன் கடத்தலைச் செய்தது அனைத்துமே கோத்தபாய, மகிந்த தரப்பே.

லசந்த கொலைக்கும் அவர்களே காரணம். கோத்தபாயவிடம் இதற்காக பல இரகசியக் குழுக்கள் இருந்தன எனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இவரின் இந்தக் கருத்துகள் இரண்டு கேள்வியை எழுப்புகின்றது. அதாவது இது வரைக்காலமும் இவர் பொறுமைக்காத்தது ஏன்? அரசு தரப்பு இத்தகைய முனைப்பை காட்டாதது ஏன்?

அடுத்தது அப்போதைய இராணுவத்தளபதிக்கு தெரியாமல் குழுக்களாக இராணுவ தரப்பு செயற்பட்டது எவ்வாறு? பெயருக்கு மட்டும் இவர் இராணுவ தளபதியா? அப்படி என்றால் இவரை வழி நடத்தியது யார்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறும் போது போத்தபாய, மகிந்த, பொன்சேகா அனைவருமே லசந்தவின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களாகவே மாற்றம் அடைவார்கள் என்பது நிச்சயம்.

அந்த வகையில் இப்போது லசந்த கொலை வழக்கு சூடு பிடித்துள்ளதற்கும், பொன்சேகா களம் இறங்கி உள்ளதற்கும் அனைத்துமே மகிந்தவை திசை திருப்ப அல்லது சில்லலில் சிக்க வைக்க மட்டுமே.

அதற்கான ஓர் ஆயுதமாக ரணில் வைத்துள்ள ஆயுதமான பொன்சேகா களம் இறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் இவை அனைத்துமே அரசியல் நாடகமே. மகிந்த தரப்பை முடக்க உச்சகட்டமாக பொன்சேகா தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றார்.

அதன் படி லசந்தவின் கொலைக்கு அடுத்து இன்னும் பல குற்றச்சாட்டுகளை பொன்சேகா ஊடாக மகிந்த தரப்பு மீது சுமத்தப்படும் என்பது இப்போதைய எதிர்பார்ப்பு.

எப்படி இருந்தாலும் கடந்த காலத்தில் பொன்சேகாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசு தரப்பினரால் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது.

அதற்கான காரணம் மகிந்தவின் எழுச்சியை அடக்க பொன்சேகா மட்டுமே மிகப்பெரிய ஆயுதம் என்றும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/132736?ref=home

Categories: merge-rss, yarl-category

யாழில் வீடு புகுந்து மக்களை வெட்டித்தள்ளிய வாள்வெட்டு கும்பல்

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 13:39
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் நந்தினி பேக்கரி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வாள்வெட்டு கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டித்தள்ளியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மாலை 04.30 மணியளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியிலுள்ள 5 வீடுகளுக்குள் புகுந்த இந்த மர்ம கும்பல், வீடுகளில் இருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடாத்திவிட்டுச் சென்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.tamilwin.com/community/01/132733?ref=home

Categories: merge-rss, yarl-category

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபாகரனின் புகைப்படம்!

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 13:35

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் மேலோங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மெரினா கடற்கரையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பிரபல்யமாக பார்க்கப்படுகின்றது.

மெரினா கடற்கரையோரத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பெண்ணொருவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்துடன் போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் இவரின் உருவப்படத்துடன் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஏன் கலந்து கொள்கிறீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு குறித்தப் பெண் ”இவர் இல்லாமல் தமிழருக்கு உணர்வு எப்படி வரும்” என பதிலளித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண் பிரபாகரனின் உருவப்படத்தை தாங்கியவாறு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/132717?ref=editorpick

Categories: merge-rss, yarl-category

வடக்கு முதல்வர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் இல்லை – வட மாகாண சபை உறுப்பினர் றயிஸ்

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 11:47
வடக்கு முதல்வர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் இல்லை – வட மாகாண சபை உறுப்பினர் றயிஸ்


வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் வடபுல முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் முஸ்லிம்களை புறக்கணித்து வட மாகாணசபையின் அரசியலை அரங்கேற்றுவதாகவும் சிலர் சமூக வலைத்தளம் ஊடாகவும், பத்திரிகை அறிக்கைகள் மூலமாகவும், தனிப்பட்ட ஊடகங்கள் மூலகமாகவும்   விமர்சித்து  வருவதை வடக்கு மாகாண சபை உறுப்பினர் முகமது றயீஸ் மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது

வடக்கு முதல்வர் ஒருபோதும் வடக்கு முஸ்லிம்களின் எதிராளி அல்ல முஸ்லிம்கள் தொடர்பாக முதலமைச்சர் கரிசனையுடன் செயற்படுகின்றார் என்பதற்கு பல உதாரணங்களை என்னால் முன்வைக்க முடியும்.

வடமாகாண சபை அமைக்கப்பட்டதன் பின்பு அதிகளவான காணியுறுதிப்பத்திரங்களை  வடக்கு முஸ்லிம்களுக்கு குறிப்பாக வன்னி மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். அவ்வகையில் வவுனியா சாளம்பைக்குளம் கிராமத்தில் சுமார் 272 குடும்பத்திற்கும்  செட்டிகுளம், சூடுவெந்த புலவு, பாவற்குளம் போன்ற பிரதேசத்தில் 133 குடும்பத்திற்கும்  அதே போன்று மன்னார் மாவட்டத்தின் முசலி மருதமடுவில் 210 குடும்பத்திற்கும், வேப்பங்குளத்தில் 348 குடும்பத்திற்கும்,  கரடிக்குளியில் 424 குடும்பத்திற்கும், பாலைக்குளி கிராமத்தில் 238 குடும்பத்திற்கும்  ஏனைய பிரதேசங்களில் குறிப்பிட்ட தொகையினரும் உள்ளடங்களாக 3000 ற்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் தத்தம் காணியுறுதிகளை பெற்றுக்கொள்ள வடமாகாணசபை மேற்கொண்ட பிரயத்தனம் தொடர்பாக வடக்கு முஸ்லிம்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

அத்துடன்  அபிவிருத்தி செயற்பாடுகளிலும் வடமாகாண சபையோ வடக்கு முதல்வரோ முஸ்லிம்களை புறக்கணிக்கவில்லை என்பதற்கு சான்றாக சென்ற வருடம் முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியால உட்கட்டமைப்பு விருத்திக்கு ஒரு கோடி ரூபா ஒதுக்கி அதன் வேலைகள் முடியும் தறுவாய்க்கு வந்துள்ளது. மேலும்  முதலமைச்சரின் பணிப்பின்பேரில் வீதி அபிவிருத்திக்காக போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் 60 லட்சம் ரூபாவினை ஒதுக்கி அவ்வேளைகள் பூர்த்தியடைந்துள்ளது.இதற்காக முதலமைச்சருக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளை தொிவித்துக் கொள்கிறேன்.

மேலும்  முதலமைச்சர் அவர்கள் மீள் குடியேறும் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தில் பயனாளி தெரிவில் முஸ்லிம்களுக்கான பங்கு சமமானதாக இருக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் பணிப்பினை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.  உண்மையில் சிறுபான்மை சமூகத்திற்கான அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்ளும் போது அது முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துபவர் வட மாகாண முதலமைச்சர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற மாபெரும் மக்கள் இயக்கங்கள் இணைந்து உருவாக்கியிருக்கின்ற சகோதரத்துவ அரசியலை பொறுத்துக்கொள்ளமுடியாத, தமிழ் முஸ்லிம் உறவினை சீர்குலைப்பதன் மூலம் தனது அரசியலை நிலை நாட்ட துடிக்கின்ற ஒரு மத்திய அமைச்சரும் அவரது கட்சி உறுப்பினர்களுமே வடக்கு முதல்வருக்கெதிரான பிரச்சாரங்களை அவிழ்த்து விட்டிருக்கின்றார்கள்.

வடபுல முஸ்லிம்கள் இப் பொய்ப் பிரச்சாரங்கள் தொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. அத்துடன் எனது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் கௌரவ ரவூப் ஹகீம் அவர்களுக்கும் தமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான கௌரவ சம்பந்தன் ஐயா அவர்களுக்கும் இடையில்  ஒரு புரிந்துனர்வு மிக்க தூர நோக்குடைய அரசியல்தொடர்பும் இருந்து வரும் நிலையில் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாத விடயங்களில் தமிழ் கூட்டமைப்புடன் ஒரு நட்புறவு  அரசியலையே தலைவர் ரவூப் ஹகீம் அவர்களின் வழி காட்டலில் செய்து வருகிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்களான அய்யூப் அஸ்மீன்,ஜவாஹீர் ஜனூபர் ஆகியோர் முஸ்லீம் மக்களுக்கு எவ்வித சேவையும் முதலமைச்சர் செய்யவில்லை என பகிரங்கமாக தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://globaltamilnews.net/archives/14717

Categories: merge-rss, yarl-category

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டி கிராமத்திற்கு அங்கஜன் இராமநாதன் சென்றுள்ளார்

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 11:46
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டி கிராமத்திற்கு அங்கஜன் இராமநாதன் சென்றுள்ளார்

image-0-02-06-f409249e71a8756c37f9442415
தையிட்டி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று(21) மாலை பாராளுமன்ற உறுப்பினர்   அங்கஜன் இராமநாதன்  கிராமத்திற்கு  சென்று  நிலைமைகளை நேரடியாக அவதானித்தார்.
image-0-02-06-8947212220b677bb1c5db54bb3
குறிப்பாக கிராம மக்களின் குல தெய்வமான தையிட்டி பிள்ளையார் ஆலயத்தை பார்வை இட்டதுடன் மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.  மேலும் அப்பகுதியில் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களையும் சந்தித்து அவர்களுக்கான சந்தை வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

image-0-02-06-dcc9a3eb3fc5463f5b0dcd3659image-0-02-06-86be77f47d26e3ae99c3dda598image-0-02-06-925c5396871a2c6eb5e2cecbf3image-0-02-06-6058ae2795d542c53fc6df0173

0

http://globaltamilnews.net/archives/14709

Categories: merge-rss, yarl-category

பிரதமர் பதவி தேடி வந்தபோதிலும் அதனை மகிந்தவிற்கு விட்டுக்கொடுத்த மைத்திரி

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 11:35
பிரதமர் பதவி தேடி வந்தபோதிலும் அதனை மகிந்தவிற்கு விட்டுக்கொடுத்த மைத்திரி
 
 
பிரதமர் பதவி தேடி வந்தபோதிலும் அதனை மகிந்தவிற்கு விட்டுக்கொடுத்த மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பதவிக் காலத்தில் பிரதமர் பதவியை மைத்திரிபால சிறிசே னவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்ட போது, அந்த பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன கூறியதாக அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அவர் அதனை நினைவு கூர்ந்துள்ளார்.
 
பீ. திஸாநாயக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரது பிரத்தியேக செயலா ளராக பணிப்புரிந்தார்.
 
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக நியமக்க தீர்மா னித்திருந்தார்.மங்கள சமரவீர இதனை ஆதரித்ததுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்கள், சந்தி ரிக்காவின் முடிவை எதிர்த்தனர்.
 
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
 
நாடாளுமன்றத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இருந்த போது, ரில்வின் சில்வா, விமல் வீரவங்ச, அனுர பண்டாரநாயக்க, கதிர்காமர், மங்கள சமரவீர ஆகியோர் அலுவலகத்தில் கூடி கலந்துரையாடுவார்கள்.
 
2004 ஆம் ஆண்டு அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் மூன்று அமைச்சுக்களை அரசாங்கத்திடம் இருந்து பறிக்க முன்னாள் ஜனாதிபதியை இணங்க வைத்தனர்.
 
மறுநாள் ஏப்ரல் 4 ஆம் திகதி நான் அலுவலகத்திற்கு வரும் போது, அனைத்து தொலைபேசிகளும் அலறுகின்றன. தொலைநகல் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
 
அப்போது அங்கிருந்த பேர்டி பிரேமலால் திஸாநாயக்க சிங்களத்தில் உரையாற்ற கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனக் கூறினார்.
 
அப்போது மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்ட போது, விமல் வீரவங்ச, சபையில் கூற முடியாத ஆபாச வார்த்தைகளால் அவரை விமர்சித்தார்.
 
இதற்கு பதிலளித்த நான் அது பற்றி எனக்கு தெரியாது, ஆனால் அதுதான் நடக்கப் போகிறது என கூறினேன்.
 
அப்போது தொலைநகல் செய்தி ஒன்று ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிங்களத்தில் உரையாற்ற கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டுமாயின், அனுர பண்டாரநாயக்க அல்லது மைத்திரிபால சிறிசேன ஆகியோரில் ஒருவரை நியமிக்க வேண்டும் என அதில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
 
தொலைநகலை பார்த்த ஜனாதிபதி சந்திரிக்கா, அனுர பண்டாரநாயக்கவுக்கு எந்த வகையிலும் பிரதமர் பதவியை கொடுக்க முடி யாது, நான் ஜனாதிபதி, அனுர பிரதமர், எந்த வகையில் இதற்கு இணங்க முடியாது என்றார். இப்படியானவர்களதான் பண்டார நாய க்கவினர்.
 
உடனடியாக மைத்திரியை அழைத்து வாருங்கள். அவர் எங்கு இருக்கின்றார் எனக் தேடுங்கள் என சந்திரிக்கா கூறினார்.
 
அப்போது பொலன்நறுவை மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு நான் உலங்குவானூர்தியை அனுப்புகிறேன். உடனடியாக மைத்திரியை கொழும்புக்கு அனுப்புங்கள் என்று கூறினார்.
 
இரண்டு மணி நேரத்திற்கு பின்னர், மைத்திரி வந்தார். சார் இன்று நல்லது நடக்க போகிறது. அதனை கைவிட வேண்டாம் என நான் அவரிடம் கூறினேன்.
 
ஜனாதிபதி சந்திரிக்காவிடம் சென்றதும் ஜனாதிபதி நியமனக்கடித்தை பார்த்த மைத்திரி, மேடம், இதனை செய்ய வேண்டாம் பிரதமர் பதவியை மகிந்தவுக்கு கொடுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
 
எனது சிறந்த நண்பர் லக்ஷ்மன் கதிர்காமரை நான் இழந்து விடுவேன் என சந்திரிக்கா கண்ணீர் மல்க கூறினார்.
 
அப்போது அனுர பண்டாரநாயக்கவும் அங்கு வந்தார். சிறுப்பிள்ளை போல் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார்.
 
இந்த பிரச்சினை நான் தீர்க்கின்றேன் எனக் கூறி அனுர பண்டாரநாயக்க, லக்ஷ்மன் கதிர்காமரை சந்திக்க சென்றார்.
 
கதிர்காமரை அனுர சமாதானப்படுத்தினார். இதனையடுத்து பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதில் இருந்து கதிர்காமர் ஒது ங்கி கொண்டார்.இதனையடுத்து மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படுகிறது. அவர் பிரதமர் பதவியில் அமர்ந்தார். இப்படி மைத்திரிபால சிறிசேன , மகிந்த ராஜபக்சவுக்கு உதவினார்.
 
அது மாத்திரமல்ல எல்லோரும் மகிந்தவுக்கு ஆதரவு வழங்குவோம். மீண்டும் நாட்டை ரணிலிடம் வழங்க முடியாது என மைத்திரி கூறினார்.இந்த விடயங்களை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் நானும் விரைவில் புத்தகம் ஒன்றை எழுத உள்ளேன் என பீ. திஸா நாயக்க குறிப்பிட்டுள்ளார்

http://www.onlineuthayan.com/news/22995

Categories: merge-rss, yarl-category

மகிந்த-முதலமைச்சர்கள் சந்திப்பு நிறைவு

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 11:34
மகிந்த-முதலமைச்சர்கள் சந்திப்பு நிறைவு
 
 
மகிந்த-முதலமைச்சர்கள் சந்திப்பு நிறைவு
முன்னாள் ஜனாதிபதிக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் இன்று காலை ஆரம்பமான கலந்துரையாடல் நிறைவடை ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த கலந்துரையாடலில் ஆறு முதலமைச்சர்கள் கலந்துகொண்டதாக  தெரிிவக்கப்படுகிறது.வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன இந்த கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருக்கவில்லையென கூறப்படுகின்றது. அவசியமான தேவையொன்றின் நிமித்தம் தான் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லையென அவர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகி ன்றது.
 
இதேவேளை  தான் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு முன்னணியிலுள்ள எந்தவொரு நபருடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முதலமைச்சர்களுடனான சந்திப்பை அடுத்து ஊடக வியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 
 
இந்தக் கலந்துரையாடல் தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவில்லை என, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்துள்ளார். 
 
மேலும் இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லையாயினும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
எனினும், கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே,பாரா ளுமன்ற தேர்தலில் கிடைக்கப் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் வலுவுடன் முன்னோக்கி செல்லவுள்ளதாகவும் சுட்டிக்காட்டி யுள்ளார். 

http://www.onlineuthayan.com/news/22994

Categories: merge-rss, yarl-category

யாழில் 2.8 மி.மி மழைவீழ்ச்சி

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 11:33
யாழில் 2.8 மி.மி மழைவீழ்ச்சி
 

article_1485079839-weather-300.jpg-எஸ்.திருச்செந்தூரன்
நாட்டின் அனைத்து இடங்களிலும் வரட்சியைத் தொடர்ந்து, மழை பெய்வதுடன் யாழில் 2.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி, சனிக்கிழமை பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் யாழில் மழை பெய்து வரும் நிலையில் குடாநாட்டின் சில பகுதிகளில் சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் மாலை 5.30 வரையில்  2.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/190115/ய-ழ-ல-ம-ம-மழ-வ-ழ-ச-ச-#sthash.mtvWrzlu.dpuf
Categories: merge-rss, yarl-category

அரச வங்கியில் 57 இலட்சம் ரூபா கொள்ளை

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 11:30
அரச வங்கியில் 57 இலட்சம் ரூபா கொள்ளை

 

மொனராகலை மேதகமவில் அரச வங்கியில் ஒன்றில் 57 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வங்கியின் ஏ.டி.எம் இணை உடைத்து கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/15675

Categories: merge-rss, yarl-category

புளியங்குளம் வீதியில் பாரிய பஸ் விபத்து, நால்வர் படுகாயம்!

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 11:27
புளியங்குளம் வீதியில் பாரிய பஸ் விபத்து, நால்வர் படுகாயம்!
 

முல்லைத்தீவு புளியங்குளம் பிரதான வீதியில் கோடாலிக்கல்லு பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

unnamed__1_.jpg

இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ........

முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று நெடுங்கேணி பிரதேசத்துக்கு அண்மையாகவுள்ள கோடாலிக்கல்லு பிரதேசத்திலுள்ள வளைவு ஒன்றில் வைத்து வேககட்டுப்ப்பாட்டையிழந்து அருகிலிருந்த பனைமரம் ஒன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

unnamed__2_.jpg

இதில் பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் நால்வர் படுகாயமடைந்ததோடு பஸ்ஸின் ஒருபகுதி முற்றாக சிதைவடைந்துள்ளது.

unnamed__3_.jpg

விபத்துத்தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

unnamed__4_.jpg

unnamed__5_.jpg

unnamed__6_.jpg

unnamed__7_.jpg

unnamed__8_.jpg

unnamed__9_.jpg

unnamed__11_.jpg

unnamed.jpg

http://www.virakesari.lk/article/15672

Categories: merge-rss, yarl-category