merge-rss

தமிழன்டா! தமிழ் விவசாயிகள் தற்கொலைக்காக போராட வர மாட்டானா!!

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 09:09
அன்பான‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே! 
 
farmer-suicide.jpg
 
த‌ய‌வுசெய்து, இந்த‌ இட‌ம் எத்தியோப்பியாவில் இருக்கிற‌தா என்று கேட்டு விடாதீர்க‌ள். தஞ்சாவூரின் காவிரி நதியோர வயல்கள் காய்ந்து போய், அந்தப் பகுதிகள் வறண்ட பிரதேசமாக காணப் படுகின்றன. வரலாறு காணாத கடும் வரட்சி காரணமாக, த‌மிழ் நாட்டின் விவ‌சாய‌ நில‌ங்க‌ள் கடுமையாக பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அத‌னால், கடன்களை கட்ட முடியாமல் விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்வ‌தும் அதிக‌ரித்துள்ள‌து.
 
த‌மிழ் நாட்டில் க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்தில் ம‌ட்டும் 144 விவ‌சாயிக‌ள் அகால‌ ம‌ர‌ண‌ம் அடைந்துள்ள‌தாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. இந்தியா முழுவதும் பார்த்தால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டும். (Tamil Nadu Farmer Suicide http://www.ndtv.com/topic/tamil-nadu-farmer-suicide)
 
பெரும்பாலான தமிழ் விவசாயிகள், எதிர்காலம் சூனியமான அதிர்ச்சி காரணமாக, மார‌டைப்பு க‌ண்டு, அல்ல‌து நோய் வாய்ப்ப‌ட்டு இற‌ந்துள்ள‌ன‌ர். குறைந்த‌து 50 பேராவது த‌ற்கொலை செய்து கொண்டுள்ள‌ன‌ர்.
 
வ‌ர‌ட்சி, நில‌த்த‌டி ம‌ற்றும் ந‌தி நீர் குறைந்த‌மை போன்ற‌ இயற்கை பேரிட‌ர் இன்றும் தொட‌ர்கின்ற‌து. அதே நேர‌ம், க‌ட‌ந்த‌ வ‌ருட‌ இறுதியில், த‌மிழ் நாட்டில் இடம்பெற்ற இர‌ண்டு பெரிய அர‌சிய‌ல் மாற்ற‌ங்க‌ளும் விவசாயிகளின்  த‌ற்கொலை சாவுக‌ளுக்கு கார‌ண‌மாக‌ இருந்துள்ள‌ன‌.
 
முதலாவதாக, மோடி கொண்டு வந்த க‌றுப்புப் ப‌ண‌ ஒழிப்பு என்ற பெயரிலான பண முடக்கம், விவ‌சாயிக‌ளை பெரும‌ள‌வு பாதித்துள்ள‌து. வங்கியில் பணம் இருந்தாலும் அதை தேவைக்கு எடுக்க முடியாத நிலை இருந்தது. அதனால் முந்திய கடன்களை கட்டுவதற்கு, அல்லது அவசர செலவுகளுக்கு, விவ‌சாயிக‌ள் க‌ந்துவ‌ட்டிக்கார‌ரிட‌ம் க‌ட‌ன் வாங்கினார்க‌ள். இறுதியில், அதையும் க‌ட்ட‌ முடியாம‌ல் உயிரை மாய்த்துக் கொண்ட‌ன‌ர்.
 
இரண்டாவதாக, முன்னாள் முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதாவின் மரணமும் விவசாயிகளை கடுமையாகப் பாதித்தது. அவர் சுகயீனமுற்று மாத‌க் க‌ண‌க்கில் ம‌ருத்துவ‌ம‌னையில் கிட‌ந்த‌தால், அர‌ச‌ நிதி ஒதுக்கீடுக‌ளை யாரும் க‌வ‌னிக்க‌வில்லை. அந்த வருட ப‌ட்ஜெட் கூட‌ இய‌ந்திர‌த் த‌ன‌மாக‌ நிறைவேற்ற‌ப் ப‌ட்ட‌து. அதிகார‌ ம‌ட்ட‌த்தில் உள்ள‌ ம‌னித‌ர்க‌ள் இழைத்த‌ த‌வ‌றுக‌ளுட‌ன், இய‌ற்கையும் ஏமாற்றிய‌தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் விவ‌சாயிக‌ள் தான்.
 
ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு ஆத‌ர‌வாக‌ போராடும் த‌மிழ‌ர்க‌ளே! இந்த‌ உண்மைக‌ள் உங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌ விடாம‌ல் ம‌றைப்ப‌த‌ற்குத் தான், அர‌சே திட்டமிட்டு உங்க‌ளுக்கு த‌மிழ் இன‌ உண‌ர்வை ஊட்டி வ‌ருகின்ற‌து. "த‌மிழ‌ன்டா" என்று நீங்க‌ள் பொங்கியெழும் ஒவ்வொரு த‌ட‌வையும் அர‌சு வெற்றிப் பெருமித‌த்தால் பூரித்துப் போகின்ற‌து.
 
இத‌ற்குப் பிற‌கும், இத்த‌னை இல‌ட்ச‌ம் ச‌ன‌ம் எப்ப‌டி சேர்ந்தார்க‌ள் என்று கேட்கிறீர்க‌ள். இப்போது இது மாதிரி வேறு க‌தை பேசினால், எதிரிக்கு வாய்ப்பாகி விடும் என்று த‌டுக்கிறீர்க‌ள். த‌மிழ‌ர்க‌ளின் உண‌ர்வை திசை திருப்புவ‌தாக‌ கொதிக்கிறீர்க‌ள். உங்களை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் நக்க‌ல், நையாண்டி செய்வ‌தாக‌ குமுறுகிறீர்க‌ள்.இந்த‌க் குற்ற‌ச்சாட்டுக‌ள் உங்க‌ளுக்கு பொருந்தாதா? 
 
அர‌சின் த‌வ‌றுக‌ளால் விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்த‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியே வ‌ர‌ விடாம‌ல் த‌டுத்து, ம‌றைமுக‌மாக‌ அர‌சுக்கு உத‌வுகிறீர்க‌ள். "தமிழராக ஒன்று சேரும் உணர்வு பூர்வ அரசியல்", உண்மையில் இலங்கை, இந்திய அரசுக்களின் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடக்கின்றது என்ற உண்மையை தாங்கள் அறியவில்லையா?
 
த‌மிழ்நாடு ம‌ட்டும‌ல்ல‌, இல‌ங்கையும் வரலாறு காணாத வ‌ற‌ட்சியால் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்கும் மழை வீழ்ச்சி குறைவு காரணமாக, எரி, குளம் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி வருகின்றது. இதனால் இலட்சக் கணக்கான விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். (With drought looming, Sri Lanka tries something new: preparing)
 
ஜ‌ல்லிக்க‌ட்டு என்ற‌ ப‌ழ‌ந்த‌மிழ் பார‌ம்ப‌ரிய‌த்தையும், மாடுக‌ளையும் பாதுகாப்ப‌து ம‌ட்டுமே த‌மிழ‌ர்க‌ளின் க‌ட‌மையா? உங்க‌ளைப் போன்றே ஒரே மொழி பேசும், ஓரினத்தை சேர்ந்த, விவ‌சாயிக‌ளை ம‌ர‌ண‌த்தின் பிடியில் இருந்து பாதுகாப்ப‌து த‌மிழ‌ரின் க‌ட‌மை இல்லையா?
 
த‌மிழ் ம‌ர‌பை இழ‌ந்தால் த‌மிழ் இன‌மே அழிந்து விடும் என்று க‌வ‌லைப் ப‌டுகிறீர்க‌ள். த‌மிழ் விவ‌சாயிக‌ளை இழ‌ந்தால் ஒரு நேர‌ உண‌வு கூட‌க் கிடைக்காது என்று நீங்க‌ள் க‌வ‌லைப் பட்டதுண்டா? இப்போது உண‌வு வாங்க‌ எம்மிட‌ம் ப‌ண‌ம் இருக்கிற‌து தானே என்று மேட்டுக்குடித் திமிருட‌ன் பேச‌லாம்.  நாளைக்கு உண‌வுப் பொருட்க‌ளின் விலை உய‌ர்ந்தால், அது உங்க‌ள் மாத வ‌ருமான‌த்தை குறைக்கும். அதன் அர்த்தம், எதிர்காலத்தில் நீங்களும் ஏழைகளாகலாம் என்பதை எண்ணிப் பார்க்க‌வில்லையா?
 
பாலைவன‌மாகிப் போன‌ த‌ஞ்சாவூர் ம‌ண்ணில் செத்துக் கொண்டிருக்கும் விவ‌சாயிக‌ள் உங்க‌ளுக்கு உற‌வுக் கார‌ர்க‌ளாக‌ இல்லாம‌ல் இருக்க‌லாம். ஆனால் அவர்கள் த‌மிழ‌ர்கள் இல்லையா? இதை கேட்டால் திசை திருப்ப‌லாக‌ ப‌டுகின்ற‌தா? அப்ப‌டியானால், உங்க‌ளைப் பொருத்த‌வ‌ரையில் "யார் த‌மிழ‌ன்?" ஆங்கில‌ வ‌ழிக் க‌ல்வி க‌ற்று, அந்நிய‌ நாட்டு நிறுவ‌ன‌த்திற்கு சேவை செய்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌மிழ‌ர்க‌ளா?
 
உங்க‌ள் த‌மிழ் தேச‌ ம‌ண்ணில், உங்க‌ள் க‌ண் முன்னால் செத்துக் கொண்டிருக்கும் விவ‌சாயிக‌ளை க‌ண்டுகொள்ளாம‌ல், மாடு பிடிக்கும் விளையாட்டுக்கு அனும‌தி கேட்டு போராடுவ‌து எத்த‌னை பெரிய‌ மோச‌டி? இத‌ன் மூல‌ம் நீங்க‌ள் ம‌னித‌நேய‌த்தை நையாண்டி செய்கிறீர்க‌ள் என்ப‌தை உண‌ர‌வில்லையா?
 
இப்போதும் இந்த‌ உண்மைக‌ள் ம‌ண்டையில் ஏற‌வில்லை என்றால் எதிர்கால‌ம் சூனிய‌மாகும். ப‌ட்டினிச் சாவுக‌ள், எங்கேயோ இருக்கும் எத்தியோப்பாவின் அவ‌ல‌ம் அல்ல‌. அது நாளை த‌மிழ் நாட்டிலும், இல‌ங்கையிலும் ந‌ட‌க்க‌லாம். அப்போது இந்த‌ தமிழ் இன‌ உண‌ர்வுவாத‌ம் எத‌ற்குமே உத‌வ‌ப் போவ‌தில்லை.
 
kalaiy.blogspot
 
Categories: merge-rss, yarl-category

மற்றுமொரு முன்னாள் போராளி கைது

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 08:00
மற்றுமொரு முன்னாள் போராளி கைது
 
 
மற்றுமொரு முன்னாள் போராளி கைது
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் வசிக்கும் காராளசிங்கம் குலேந்திரன் என்னும் முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டு காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமை யாற்றி வருகின்றார்.
 
இவ்விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
 
குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி மாலை ஊற்றுப்புலத்தில் தனது சகோதரியுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட பின்னர் இரவாகியும் வீட்டிற்கு திரும்பாமையினால் வீட்டார் சந்தேகம் கொண்டுள்ளனர்.
 
மறு நாள் காலை குறித்த முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் வைத்திருப்ப தாக தகவல் கிடைத்துள்ளது.
 
சில நாட்களின் முன்னர் திருவையாறு பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளியான முருகையா தவவேந்தன் என்பவர் பயங்கர வாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

http://www.onlineuthayan.com/news/22988

Categories: merge-rss, yarl-category

ஜி.எஸ்.பி. பிளஸ் எட்டாக்கனி?

அரசியல்-அலசல் - Sun, 22/01/2017 - 07:55
ஜி.எஸ்.பி. பிளஸ் எட்டாக்கனி?
Page-01-image-e2731f02af4132d73bbbb45f8fde8ebee86ab27e.jpg

 

எதை­யெல்லாம் தற்­போ­தைய அர­சாங்கம் தனது வெற்­றி­யாகக் கொண்­டாட முனை­கி­றதோ, அவை­யெல்­லாமே சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­க­ளாக மாறி வரு­கின்­றன.

ஹம்­பாந்­தோட்டை துறை­முகம், ஹம்­பாந்­தோட்டை கைத்­தொழில் முத­லீட்டு வலயம், வொக்ஸ்­வெகன் கார் தொழிற்­சாலை ஆகி­யன அண்­மைக்­கால சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­களின் வரி­சையில் ஆகப் பிந்­தி­ய­தாக இடம் பிடித்­தி­ருப்­பது ஜி.எஸ்.பி பிளஸ்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இந்த வரிச்­ச­லு­கையை தமது அர­சாங்­கத்தின் வெற்­றி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், அமைச்­சர்­களும் பிர­சாரம் செய்யத் தொடங்­கிய போது தான் அதற்குப் பின்னால் உள்ள பூகம்பம் வெடிக்கத் தொடங்­கி­யது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலு­கையைப் பெற்றுக் கொள்­வது தற்­போ­தைய அர­சாங்­கத்தின் முக்­கி­ய­மான இலக்­கு­களில் ஒன்று. இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு அது அவ­சி­ய­மா­னது என்­பதே அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு.

தற்­போ­தைய அர­சாங்கம் இதனை ஒரு வாக்­கு­று­தி­யாக தேர்­தலின் போது கூட முன்­வைத்­தி­ருந்­தது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் மீன் ஏற்­று­மதித் தடையை நீக்­கு­வதும், ஜி.எஸ்.பி பிளஸ் சலு­கையை மீளப் பெறு­வதும் பெரும் போராட்­டத்­துக்­கு­ரிய விடயம் என்­பதை அர­சாங்கம் அறிந்­தே­யி­ருந்­தது.

ஏனென்றால் இவற்றைப் பெறு­வ­தற்கு முன்­னைய அர­சாங்கம் பெரும் பாடு­பட்டும் அது சாத்­தி­ய­மா­க­வில்லை.

காரணம் முன்­னைய அர­சாங்கம் மனித உரி­மைகள் தொடர்­பான, ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் எதிர்­பார்ப்­பு­களை பூர்த்தி செய்­ய­வில்லை.

சர்­வ­தேச சமூ­கத்­துடன் சுமு­க­மான உற­வு­களை பேண­வில்லை.

இந்த இரண்டு விட­யங்­க­ளிலும் மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் சரி­யாகச் செயற்­ப­டா­ததால், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திடம் இந்த இரண்டு சலு­கை­க­ளையும் பெற முடி­யாது போனது.

ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் மீன் ஏற்­று­மதித் தடையை நீக்­கு­வ­தற்கும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையைப் பெறு­வ­தற்கும் கடு­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்­டது.

அதன் விளை­வாக, சில மாதங்­க­ளுக்கு முன்னர் தான் மீன் ஏற்­று­மதி தடை நீக்­கப்­பட்­டது. ஆனாலும் ஜி.எஸ்.பி பிளஸ் இன்­னமும் கைகூ­ட­வே­யில்லை.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை தொடர்­பாக மீளாய்வு செய்­யப்­ப­டு­கின்ற கட்­டத்­துக்கு ஐரோப்­பிய ஒன்­றியம் வந்­தி­ருக்­கி­றது. அண்­மையில் ஐரோப்­பிய ஆணையம் வெளி­யிட்­டி­ருந்த ஓர் அறிக்­கையில், இலங்­கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையை வழங்­கலாம் என்று பரிந்­து­ரைத்­தி­ருந்­தது.

இதனை வைத்து தான், மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் கிடைத்து விட்­டது என்று பிர­தமர் மற்றும் அமைச்­சர்கள் அறிக்­கை­களை வெளி­யிட்­டனர். ஆனால் இது வெறும் பரிந்­துரை தான், ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றமும், ஐரோப்­பிய கவுன்­சிலும் இனிமேல் தான் முடி­வு­களை எடுக்க வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றியம் அறி­வித்­தி­ருக்­கின்­றது.

ஐரோப்­பிய ஆணை­யத்தின் பரிந்­து­ரையில் கூட, கடு­மை­யான கட்­டுப்­பா­டுகள் மற்றும் கண்­கா­ணிப்பின் பேரி­லேயே ஜி.எஸ்.பி பிளஸ் சலு­கையை வழங்க வேண்டும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது. ஆனால் இலங்கை அர­சாங்­கமோ எந்த நிபந்­த­னை­களும் இல்­லா­ம­லேயே ஜி.எஸ்.பி பிளஸ் கிடைத்­துள்­ளது என்று கூறி வரு­கி­றது.

ஜி.எஸ்.பி பிளஸ் சலு­கையைப் பெறு­வ­தற்கு 58 நிபந்­த­னை­க­ளுக்கு இலங்கை இணங்­கி­யுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கின. அதனைப் பற்றிப் பிடித்துக் கொண்டு கூட்டு எதி­ர­ணி­யினர் அர­சாங்­கத்தை தாக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர்.

அதே­வேளை, ஜி.எஸ்.பி பிளஸ் சலு­கை­யினால் நாட்­டுக்கு எந்த நன்­மையும் இல்லை என்றும் அதனால் தான் தாம் ஆட்­சியில் இருந்த போது அதனை பெறு­வ­தற்கு விரும்­ப­வில்லை என்றும் எட்­டாத பழம் புளிக்கும் என்­பது போல கதை விட்­டி­ருக்­கிறார் மஹிந்த ராஜ­பக் ஷ.

ஜி.எஸ்.பி பிளஸ் ஒன்றும் வேண்­டாத அல்­லது அவ­சி­ய­மில்­லாத சலு­கை­யல்ல.

ஜி.எஸ்.பி பிளஸ் உலகில் பெரு­ம­ளவு நாடு­க­ளுக்கு அளிக்­கப்­ப­டு­கின்ற ஒரு சலு­கையும் அல்ல. ஐரோப்­பிய ஒன்­றியம் விரல் விட்டு எண்ணக் கூடிய சில நாடு­க­ளுக்கு மாத்­திரம் அளிக்­கின்ற சலுகை தான் இது.

தற்­போது ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திடம் இருந்து இந்தச் சலு­கையைப் பெறு­கின்ற மொத்த நாடுகள், எட்டு மாத்­தி­ரமே. ஆர்­மே­னியா, பொலி­வியா, கேப் வேர்டே, கிர்­கிஸ்தான், மொங்­கோ­லியா, பாகிஸ்தான், பர­குவே, பிலிப்பைன்ஸ் ஆகி­ய­னவே அவை­யாகும்.

இந்தச் சலு­கையைப் பெறு­வதன் மூலம் ஐரோப்­பிய சந்­தைக்குள் வரிச்­ச­லு­கை­க­ளுடன் இலங்­கையின் உற்­பத்­தி­களை ஏற்­று­மதி செய்ய முடியும். 

இலங்­கையின் மொத்த ஏற்­று­ம­தியில் மூன்றில் ஒரு பங்கு ஐரோப்­பிய நாடு­க­ளுக்கே ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்ற நிலையில், இந்தச் சலுகை மிகப் பெரிய வாய்ப்பை கொடுக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இந்தச் சலு­கை­யினால் நாட்­டுக்கு ஒன்­றுமே கிடைக்­காது என்ற மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கருத்­துக்குப் பின்னால், அப்­பட்­ட­மான அர­சியல் ஒளிந்­தி­ருக்­கி­ றது.

2004ஆம் ஆண்டு சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட பின்னர் தான் இலங்­கைக்கு இந்தச் சலு­கையை ஐரோப்­பிய ஒன்­றியம் வழங்­கி­யது. ஆனால் அதனைத் தக்­க­வைத்துக் கொள்ளும் திறன் மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்­துக்கு இருக்­க­வில்லை.

மனித உரி­மைகள் தொடர்­பான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் நிபந்­த­னை­களை பூர்த்தி செய்யத் தவ­றி­யதால் 2010இல் இந்தச் சலு­கையைப் பறித்துக் கொண்­டது ஐரோப்­பிய ஒன்­றியம்.

அதனை மீளப் பெறு­வ­தற்கு மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் போராடிப் பார்த் துப் பய­னில்லை. மோச­மான மனித உரி­மைகள் நிலையும், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் முரண்டு பிடிக்கும் அதன் அணு­கு­மு­றை­களும் கடைசி வரையில் அந்த முயற்சி வெற்­றி­ய­ளிக்­கா­மைக்­கான கார­ணங்­க­ளாக இருந்­தன.

ஐரோப்­பிய சந்­தையில் இலங்­கையின் ஆடை உள்­ளிட்ட உற்­பத்­திகள் கடு­மை­யாகப் போட்­டி­யி­டு­வ­தற்கு, இந்த ஜி.எஸ்.பி பிளஸ் பெரும் வாய்ப்பை வழங்கும். இதனால் தான், தற்­போ­தைய அர­சாங்கம் பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு இந்தச் சலு­கையைப் பெறு­வ­தற்­காக போராடிக் கொண்­டி­ருக்­கி­றது.

தற்­போ­தைய அர­சாங்கம் இந்த சலு­கையைப் பெற்றுக் கொடுத்து பெயரைத் தட்டிக் கொண்டு போய் விடுமோ என்ற கலக்கம் மஹிந்த அணி­யி­ன­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அதனால் தான், அவர்கள் இந்தச் சலு­கையால் நாட்­டுக்கு எந்தப் பயனும் இல்லை, இதனைப் பெறு­வ­தற்­காக அர­சாங்கம் ஆபத்­தான நிபந்­த­னை­க­ளுக்கு இணங்­கு­கி­றது என்று பிர­சாரம் செய்யத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

ஜி.எஸ்.பி பிளஸ் விட­யத்தில் அர­சாங்கம் சொல்­வ­திலும் முழு உண்­மைகள் இல்லை, கூட்டு எதி­ர­ணி­யினர் சொல்­வ­திலும் முழு உண்­மை­யில்லை.

அர­சாங்கத் தரப்பு இது கையில் கிடைத்து விட்­டது போலவே பிர­சா­ரங்­களைச் செய்­கி­றது. கூட்டு எதி­ர­ணியோ, தாமா­கவே இதனை உதறித் தள்­ளி­யது போல பிர­சாரம் செய்­கி­றது. இந்த இரண்­டுமே உண்­மை­யில்லை.

மஹிந்த அர­சாங்கம் ஜி.எஸ்.பி பிளஸ் என்ற சோதனைக் களத்தில் தோல்­வி­ய­டைந்­தது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கமோ, இன்­னமும் இந்தச் சோதனைக் களத்தை வெற்­றி­க­ர­மாகத் தாண்­ட­வில்லை.

எந்த நிபந்­த­னை­க­ளுக்கும் இணங்கி இந்தச் சலு­கையைப் பெற­வில்லை என்று அர­சாங்கம் கூறி வரு­கி­றது. ஆனால் உண்மை அது­வல்ல. ஐரோப்­பிய ஒன்­றியம் தனது ஆவ­ணங்கள் அறிக்­கை­களில், சில அடிப்­படை நிபந்­த­னை­களை முன்­னி­றுத்தி வரு­கி­றது.

மனித உரி­மைகள், தொழி­லாளர் உரி­மைகள், அடிப்­படை உரி­மைகள் போன்ற இலங்கை அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டுள்ள 27 சர்­வ­தேச பிர­க­ட­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கி­றது.

அதற்­காகத் தான் தேசிய மனித உரி­மைகள் செயற்­றிட்­டத்தை வெளி­வி­வ­கார அமைச்சு தயா­ரித்து அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்­தி­ருந்­தது.

அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்ட இந்த ஆவ­ணத்தில், பல விட­யங்­க­ளுக்கு ஜனா­தி­பதி உடன்­ப­ட­வில்லை. அமைச்­சர்­களும் எதிர்ப்­பு­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

ஐரோப்­பிய ஒன்­றியம் எந்த நாட்­டுக்­குமே, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையை கண்ணை மூடிக்­கொண்டு நீட்­ட­வில்லை. அதற்­காக ஒரு நடை­மு­றையை விதி­மு­றை­களை வைத்­தி­ருக்­கி­றது. அந்த விதி­மு­றை­க­ளுக்கு இணங்­கினால் தான் இந்தச் சலுகை கிடைக்கும்.

இதனை தற்­போ­தைய அர­சாங்கம் வெளிப்­ப­டுத்­த­வில்லை. தமது முயற்சியால் எல்லாமே கிடைத்து விட்டது என்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகிறது.

ஐரோப்பிய ஆணையத்தின் அறிக்கையுடன் அரசாங்கம் அடங்கியிருந்திருந்தால் இந்த விவகாரம் இந்தளவுக்கு பூதாகாரமாக்கப்பட்டிருக்காது. அவசரப்பட்டு துள்ளிக் குதிக்கப் போய், ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இருக்கிறது அரசாங்கம்.

ஒரு பக்கத்தில் மஹிந்த அணி எப்போது அரசாங்கம் இந்த முயற்சியில் தோல்வியடையும் அல்லது, நிபந்தனைகளுக்கு இணங்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம், தனது நிபந்தனைகளை இலங்கை எப்போது ஏற்றுக் கொள்ளும் என்று காத்துக் கிடக்கிறது.

இந்த இரண்டு தரப்புகளையும் சமாளித்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை அரசாங்கம் பெற்று விட்டால் தான் அது வெற்றி. அது அவ்வளவு இலகுவான காரியமாகத் தென்படவில்லை.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-22#page-1

Categories: merge-rss

மக்கள் ஏற்கும் பட்சத்தில் மாகாண சபைகளை பிராந்திய அரசாக மாற்றத் தயார்

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 06:47
மக்கள் ஏற்கும் பட்சத்தில் மாகாண சபைகளை பிராந்திய அரசாக மாற்றத் தயார்

 

லக் ஷ்மன் யாப்பா

க.கம­ல­நாதன்

பிராந்­திய அர­சு­க­ளாக மாகாண சபை ­களை மாற்­று­வது மற்றும் 13 க்கு அப் பால் சென்­று­ அ­தி­காரப் பகிர்வை மேற் ­கொள்­வது உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்­பாக உத்­தே­சிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அவற்றில் மக்கள் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய திருத்­தங்கள் அனைத்தும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ளீர்க்­கப்­பட்டு அமுல்­ப­டுத்­தப்­படும் என நிதி இரா­ஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்தார்.

மாகாண சபைகள் பிராந்­திய அர­சு­க­ ளாக மாற்­றப்­பட வேண்டும் என்ற தமிழ் அர­சியல் தரப்­பு­களின் நிலைப்­பாடு குறித்து வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் தெரி­விக்­கையில்,
தற்­போ­துள்ள அர­சாங்கம் இரு கட்­சிகள் இணைந்து செயற்­படும் இணக்­கப்­பாட்டு அர­சாங்­க­மாக கரு­தப்­படும். எனவே இங்கு மக்கள் கருத்­துக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்டு அர­சியல் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தான் சக­லரும் செயற்­ப­டு­கின்­றனர். 

அதற்­க­மைய சகல மக்­களின் உரி­மை­க­ளையும் மதித்து அவர்­களின் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பு மற்றும் அதி­கார பகிர்வு உள்­ளிட்ட விட­யங்கள் தீர்க்­க­மாக ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன. உத்­த­தேச மட்­டத்தில் உள்ள இந்த விட­யங்­களை நிறை­வேற்­று­திலும் சிக்கல் இல்லை. காரணம் இது மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுள்ள அர­சாங்­க­மாகும்.

குறிப்­பாக 13 க்கு அப்­பா­லான அதி­காரப் பகிர்வு குறித்த விட­யங்­களை எமது நாட்டு மக்கள் ஆத­ரிக்கும் பட்­சத்தில் அதனை அமுல்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் பின்­நிற்­காது. மாறாக மக்கள் மறுக்கும் விட­யங்­களைக் கொண்­டு­வர முடி­யாது. அதனால் இன்று உத்­தசே மட்­டத்தில் உள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான சகல விட­யங்­களும் உள்­ளீர்க்­கப்­பட்ட ஒரு அர­சி­ய­ல­மைப்பின் இறுதி வடிவம் நாட்டு மக்­க­ளி­டத்தில் வாக்­கெ­டுப்­புக்­காக விடப்­படும். இறுதித் தீர்­மா­னங்­களை மக்கள் எடுப்பர் .

மேற்­படி அர­சி­ய­ல­மைப்பு மீள் திருத்த செயற்­பா­டு­களில் தற்­போ­துள்ள மாகாண சபை­களை வலுப்­ப­டுத்தி அவற்றை பிராந்­திய அர­சுகள் என்ற கட்­ட­மைப்­பிற்கு உள்­வாங்­கு­வ­தற்­கான உத்­தே­சிப்­புக்­களும் இடம்­பெற்­ற­வண்­ணமே உள்­ளன. மறு­பு­றத்தில் இன்று தமிழ் தரப்­புக்­களும் சுதந்­தி­ர­மாக தமது கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­ற­மை­யா­னது இன்று அர­சாங்கம் பெற்­றுக்­கொ­டுத்­துள்ள சுந்திரம் வலுவாக உள்ளமையினையே காட்டுகின்றது.

எவ்வாறாயினும் இவர்களது கருத்துக்களை மக்கள் ஏற்றுகொள்ளும் பட்சத்தில் அவற்றினை புதிய அரசியலமைப்பில் உள்ளீர்த்து புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-01-22#page-1

Categories: merge-rss, yarl-category

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விடுவிப்பதுபற்றி இவ்வாரம் பேச்சுவார்த்தை

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 06:45
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விடுவிப்பதுபற்றி இவ்வாரம் பேச்சுவார்த்தை

 

எஸ்.கணேசன்

மயி­லிட்டி மீன்­பி­டித்­து­றை­மு­கத்தை விடு­விப்­பது தொடர்­பாக இவ்­வாரம் கடற்­தொழில் நீரி­யல் வள அமைச்சர் மஹிந்த சம­ர­வீ ­ரவை பாரா­ளு­மன்­றத்தில் சந்­தித் துப் பேச்சுவார்த்தை நடத்­த­வுள்­ள­தாக யாழ்.மாவட்ட மீன்­பிடி சம்­மே­ள­னங்­களின் தலைவர் வேலுப்­பிள்ளை தவச்­செல்வம் நேற்று வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார்.   

மயி­லிட்டி மீன்­பி­டித்­து­றை­முகம் தொடர்­பாக பல­முறை அமைச்­சரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம்.

அப்­போ­தெல்லாம் மயி­லிட்டி மீன்­பி­டித்­து­றையை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென உறு­தி­ய­ளித்த போதும் இன்று வரை மயி­லிட்டித் துறை­முகம் விடு­விக்­கப்­ப­ட­வில்லை.

நல்­லாட்சி அர­சாங்கம் மயி­லிட்டி மீன்­பி­டித்­து­றை­மு­கத்தை மீன­வர்­க­ளுக்கு  விடு­விக்­கா­விட்டால் யாழ்.மாவட்ட மீன­வர்கள் போராட்­டத்தில் இறங்­கு­வதைத் தவிர வேறு வழி­யில்லை என்றும் வே.தவச்­செல்வம் தெரி­வித்தார்.   

இதே வேளை யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள மீன்­பிடி சம்­மே­ள­னத்தின் அலு­வ­லகம் இடிந்து விடும் நிலை­யி­லுள்­ளது. இதை மீளக்­கட்­டி­யெ­ழுப்ப நிதி­யு­தவி செய்­யும்­ப­டியும் கடற்­தொழில் நீரி­யல்­வள அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்தோம். அதற்கும் சாத­க­மான பதில் கிடைக்­க­வில்லை. நாட்டின் ஏனைய பகு­தி­க­ளி­லுள்ள மீனவர் சம்­மே­ளன அலு­வ­ல­கங்­க­ளுக்கு நிதி ஒதுக்­கப்­பட்ட போதும் இடிந்து விழும் நிலை­யி­லுள்ள எமது அலுவலக மீள் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கப்படாதது அரசு இன ரீதியாகச் செயற்படுகிறதா என எண்ணத் தோன்றுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-01-22#page-1

Categories: merge-rss, yarl-category

போஷாக்கின்மையிலிருந்து நுவரெலியா மக்கள் காப்பாற்றப்படுவர்

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 06:44
போஷாக்கின்மையிலிருந்து நுவரெலியா மக்கள் காப்பாற்றப்படுவர்
p4-4ab6b86bd1a2feb03c7fb2b9811ae34985ac1f6d.jpg

 

-தலவாக்கலையில் ஜனாதிபதி உரை
ஹட்டன், மஸ்­கெ­லியா நிரு­பர்கள்

போஷாக்­கின்­மையில் நுவ­ரெ­லியா மாவட்டம் முத­லி­டத்தில் இருக்­கின்­றது, இந்த நிலையை மாற்றி அமைத்து நுவ­ரெ­லியா மக்­களை போஷாக்­கு­மிக்­க­வர்­க­ளாக ஆக்­கு­வ­தற்கு உடன் நட­வ­டிக்கை எடுப்பேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

இலங்­கையின் தேயிலைக் கைத்­தொ­ழி­லுக்கு 150 ஆண்டுகள் நிறைவு மற்றும் தல­வாக்­கலை சென் கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிறு­வ­னத்தின் 92 ஆண்­டு­

கால சேவையைப் பாராட்­டும் ­மு­க­மாக நேற்று முற்­பகல் தல­வாக்­கலை தேயி லை ஆராய்ச்சி நிறு­வனத்தில் நடை­பெற்ற நிகழ்வில் உரை­யாற்­றும்­போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  

மேலும் தேயிலைக் கைத்­தொ­ழிலை மேம்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான வளங்­களை குறை­வின்றி வழங்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்த ஜனா­தி­பதி தேயிலை ஆராய்ச்சி நிறு­வ­னத்தின் ஊழி­யர்­களை நிரந்­த­ர­மாக்­குதல் தொடர்பில் எழுந்­துள்ள பிரச்­சினை தொடர்பில் கவனம் அமைச்­ச­ரவைப் பத்­திரம் தாக்கல் செய்து அவர்­களை நிரந்­த­ர­மாக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்தார்.

அத்­துடன் மலை­யக மக்­களின் வாழ்­வா­தார வழி­களை மேம்­ப­டுத்தி அவர்­க­ளது நல­னுக்­காக மேற்­கொள்­ளக்­கூ­டிய அனைத்து செயற்­பா­டு­க­ளையும் தற்­போ­தய அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­வ­தாக குறிப்­பிட்ட ஜனா­தி­பதி விசே­ட­மாக மலை­யக பிள்­ளை­களின் சுகா­தார மற்றும் கல்­வித்­துறை தொடர்பில் அர­சாங்கம் கூடுதல் கவ­ன­மெ­டுத்து செயற்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்கா அம்­மை­யாரின் பின்னர் தல­வாக்­கலை தேயிலை ஆராய்ச்சி நிறு­வ­னத்­துக்கு விஜ­யம்­செய்த முத­லா­வது அரச தலைவர் ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சேன ஆவார்

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் தேயிலை, மரக்­கறி, பழ­வ­கைகள் ஆகிய உற்­பத்­தி­க­ளினால் அதி­க­ளவு வரு­மானம் கிடைக்­கின்­றது. அதில் தேயிலை முத­லிடம் பெற்­றுள்­ளது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் போஷாக்­கின்­மையால் இங்­குள்ள மக்கள் பாரிய பாதிப்­பு­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­வ­தாக அறி­யப்­ப­டு­கின்­றது . எனவே இந்த மாவட்­டத்தில் மக்­களை காப்­பாற்றும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

அதே­வேளை, நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் கல்வி, சுகா­தாரம், அபி­வி­ருத்தி போன்ற நட­வ­டிக்­கை­க­ளிலும் விசேட கவனம் செலுத்­தப்­படும். இன்று தல­வாக்­க­லைக்கு ஹெலி­கொப்­டரில் பய­ணித்த நான் ,கால­நிலை சீர்­கேட்­டினால் கொட்­ட­கலை பிர­தே­சத்தில் இறங்க நேரிட்­டது. இதன் மூலம் அப்­ப­கு­தியில் உள்ள சிறு­வர்கள், மற்றும் பொது மக்­களை சந்­திக்­கவும் நேரிட்­டது. அப்­போது அவர்­க­ளிடம் அவர்­களின் குறை­பா­டுகள், எதிர்­பார்ப்­புகள் என்­ன­வென்­பதை அறிந்­துக்­கொள்­ளவும் எனக்குச் சந்­தர்ப்பம் கிடைத்­தது.

கொட்­ட­கலை பிர­தே­சத்தில் பாட­சாலை ஒன்றில் மாண­வர்­க­ளுக்கு மல­ச­ல­கூட வசதி இன்மை , தூய குடிநீர் பிரச்­சினை, வைத்­திய சாலைக்கு அம்­பு­யூலன்ஸ் வண்டி இன்மை என பல்­வேறு குறை­பா­டு­களை இப்­பி­ரே­தச மக்கள் என்­னிடம் தெரி­வித்­தனர் . இத­ன­டிப்­ப­டையில் மல­ச­ல­கூ­டங்­களை திருத்தம் செய்­வ­தற்கும் எதிர்­வரும் நாட்­களில் அம்­பி­யூலன்ஸ் வண்டி சேவையை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்

 மேலும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பல பிர­தே­சங்­களில் காணப்­படும் இவ்­வா­றான குறை­பா­டு­க­ளையும் கண்­ட­றிந்து அமைச்­சி­களின் ஊடாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும், இப்­பி­ர­தே­சத்தின் இளம் தலை­வ­ரான நவீன் திஸா­நா­யக்­க­வுக்கு பூரண ஆத­ரவு வழங்கி, இங்கு காணப்­படும் பிரச்­சி­னைகள் தொடர்­பிலும், அபி­வி­ருத்தி தொடர்­பிலும் ஆக்­க­பூர்­வ­மாக தீர்­வினை எட்­டு­வ­தற்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கப்­படும்.

தேயிலை ஆராய்ச்சி நிலையம் அதிக சக்தி உடன் அதன் சேவை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இங்கு பல ஊழி­யர்கள் நிரந்­தர ஊழி­யர்கள் அற்ற ரீதியில் இருப்­ப­தாக என்­னிடம் முறை­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்பில் இதற்கு பொறுப்­பான அமைச்­ச­ரா­கிய நவீன் திஸா­நா­யக்­க­வுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன். வெகு­வி­ரைவில் இங்­குள்ள ஊழி­யர்கள் பலர் நிரந்­தர ஊழி­யர்­க­ளாக்­கப்­ப­டுவர்.

நுவ­ரெ­லியா மாவட்ட மக்கள் ஜனா­தி­பதி தேர்­தலின் போது அதி­கூ­டிய வாக்­கு­களை அளித்து என்னை ஜனா­தி­பதி ஆக்­கி­னார்கள். அவர்­க­ளுக்கு நன்றி கூற நான் கட­மைப்­பட்­டுள்ளேன். அர­சியல் ரீதி­யா­கவும், பொரு­ளா­தார ரீதி­யா­கவும் இன்னும் பல வகை­களில் பாதிக்­கப்­பட்டு வரு­கின்ற இந்த மாவட்­டத்தின் தோட்ட தொழி­லா­ளர்கள் தொடர்பில் அவ­தா­னங்கள் செலுத்­தப்­பட்டு அவர்­களின் வாழ்க்­கையில் சுபீட்சம் ஏற்­படும் அள­விற்கு அபி­வி­ருத்தி பணி­களை செய்­யவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.

தேசிய வரு­மா­னத்தை ஈட்டி தரும் தேயிலை, இறப்பர் போன்ற பயிர்­க­ளுக்கு சக்தி அளிக்­கப்­ப­டு­வ­துடன், எதிர்­கா­லத்தில் இவை சிறந்த முறையில் அபி­வி­ருத்தி செய்­யப்­படும் என்றார் மேலும் தேயிலை ஆராய்ச்சி நிலை­யத்தின் சேவைகள் மென்­மேலும் உயர சேவை­யா­ளர்­க­ளையும் அதி­கா­ரி­க­ளையும் ஊக்­கு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் ஜனா­தி­பதி உறு­தி­ளித்தார்

இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறு­வனம் 1925ஆம் ஆண்டில் நுவ­ரெ­லியா லின்ட்பீல்ட் தோட்­டத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. நாட்டின் தேயிலை கைத்­தொ­ழிலின் அபி­வி­ருத்­திக்­காக முக்­கி­ய­மான ஒன்­பது துறை­களின் கீழ் ஆராய்ச்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறு­வ­னத்­தினால் நீண்­ட­கால ஆராய்ச்­சிகள் மூலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வறட்­சிக்கு தாக்­குப்­பி­டிக்கும் டீஆர்ஐ 5000 வகு­திக்­கு­ரிய நான்கு தேயிலை இனங்கள் முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இன தேயிலை செடியொன்று ஜனாதிபதியால் நிறுவன வளாகத்தில் நடுகை செய்யப்பட்டது.

நிறுவனத்தின் தகவல் மையம் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் புதிய தொழிநுட்ப குறுந்தகவல் சேவையையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார் .

அமைச்சர் பீ.திகாம்பரம் , ராஜாங்க அமைச்சர் பீ.இராதாகிருஷ்ணன், பிரதி அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேரா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி எம்.எம்.ஜே.ஜீ.கவரம்மான உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-01-22#page-1

Categories: merge-rss, yarl-category

முகாம்களில் வாழ்ந்த மக்களுக்கு படையினரால் வீடுகள் நிர்மாணம்!

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 06:43
முகாம்களில் வாழ்ந்த மக்களுக்கு படையினரால் வீடுகள் நிர்மாணம்!
IMG7345-copy-16e237c8ed9e5140c6aa0310c0a481f08fb356e4.jpg

 

100 பேருக்கு வீடுகள் கையளிப்பு; புதிதாக 224 வீடுகள் அமைப்பு
எஸ்.கணேசன், ரி.விருஷன்

இரா­ணுவ வீட்டுத் திட்­டத்தை கீரி­ மலை வடக்­கி­லி­ருந்து நாம் ஆரம்­பித்து நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கிறோம். இது நிறைவு பெற்ற பின்னர் மாவை கலட்­டி யில் 224வீடு­களை நிர்­மா­ணிக்கும் பணி­ களை நாம் ஆரம்­பிக்­க­வுள்ளோம்.  

ஏலவே, நாம் கீரி­மலை வடக்கில் நிர்­மா­ணித்த 100 வீடுகள் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும், 33 வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன என்று யாழ். மாவட்ட கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்க தெரி­வித்தார்.

நாம் நிர்­மா­ணித்த வீடுகள் யாழ். மக்­களின் கலா­சா­ரத்தை கருத்­தில்­கொண்டு கட்­டப்­பட்­ட­வை­யாகும். ஆகவே, குறித்த வீடு­களில் மக்கள் மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வரு­கின்­றனர் என்றும் அவர் கூறினார்.    

யாழ். கீரி­மலை வடக்கில் இரா­ணு­வத்­தி­னரால் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் வீடு­களை நேரில் சென்று பார்­வை­யிடும் பொருட்டு வீர­கே­சரி வார வெளி­யீட்டு ஊட­க­வி­ய­லாளர் குழு கடந்த வௌ்ளிக்­கி­ழமை அங்கு சென்­றி­ருந்­தது. அதனை தொடர்ந்து பலாலி இரா­ணுவ தலை­மை­ய­கத்தில் யாழ். மாவட்ட கட்­டளை தள­பதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்­கவை சந்­தித்து சுமார் ஒரு மணி நேரம் கலந்­து­ரை­யா­டி­யது. இந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் மேலும் கூறு­கையில்,

இரா­ணுவம் நிர்­மா­ணிக்கும் விடு­க­ளுக்கு பய­னா­ளி­களைத் தெரிவு செய்­வது நாங்­க­ளல்ல. அதை தெரி­வு­செய்­வது அர­சாங்க அதி­பரும் மாவட்ட செய­லா­ள­ருமே. சகல இடம்­பெ­யர்ந்த மக்­களும் பதி­வு­செய்­யப்­பட்­டி­ருக்­கின்ற கார­ணத்­தினால் அர­சாங்க அதி­ப­ருக்கும், மாவட்ட செய­லா­ள­ருக்கும் யாருக்கு வீடு வேண்டும், யாருக்கு தேவை­யில்லை என்­பது தெரியும். மேலும், இதில் நாங்கள் தலை­யி­டு­வ­தில்லை. அத்­துடன் சொந்தக் காணி இல்­லா­த­வர்­க­ளுக்கே இவ்­வீ­டுகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

தற்­போது வடக்கில் இரு பொருத்து வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு மக்கள் பார்­வைக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், அந்த வீடுகள் யாழ்ப்­பா­ணத்தில் வசிக்கும் மக்­களின் கலா­சா­ரத்­திற்கு முற்­றிலும் மாறு­பட்­ட­வை­யாகக் காணப்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

 பிரான்ஸ் அர­சாங்­கத்தின் நிதி­யு­த­வி­யுடன் இந்த வீட்டுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த குறித்த அமைச்சு முயற்­சி­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது.

 இந்த வீட்­டத்­திட்டம் ஏற்­பு­டை­யதா? இல்­லையா? என்­பது குறித்து ஆய்­வு­செய்­வ­தற்­கு­ரிய திறன் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் இருக்­கின்­றது. நானும் ஒரு சிவில் பொறி­யி­ய­லாளர்.

ஆகவே, நாங்கள் இது பற்­றிய ஆய்­வொன்றை மேற்­கொண்டோம். அதா­வது நாங்கள் யாழி­லுள்ள சகல மக்­க­ளி­டமும் சென்றோம். அங்­குள்ள குருக்­க­ளி­டமும் பாட­சாலை அதி­பர்­க­ளி­டமும் சென்று இது பற்றி கேட்­ட­றிந்தோம். அங்­குள்ள மக்­க­ளுக்கு என்ன தேவை என்­பது பற்­றியும் யாழ். கலா­சாரம் பற்­றியும் எங்­க­ளுக்கும் நிறை­யவே தெரியும். ஏனென்றால், நாங்­களும் இங்கு 36 வரு­டங்­க­ளாக நிலை­கொண்­டுள்­ளோ­மல்­லவா?

 உதா­ர­ண­மாக யாழ்ப்­பாண பெண்கள் சில சந்­தர்ப்­பங்­களில் வீட்டின் முன்­வாசல் வழி­யாக பய­ணிப்­ப­தில்லை. ஆனால், பொருத்து வீட்­டுத்­திட்­டத்தில் வீடு­க­ளுக்கு முன் கதவு மாத்­திரம் இருப்­பதால் இவ்­வீடு அவர்­க­ளுக்கு சற்றும் பொருந்­தாது என்றே நினைக்­கின்றேன்.

மேலும், நாங்கள் ஐந்து வகை­யான வீடு­களின் வரை­ப­டங்­களை எடுத்துக் கொண்டு அர­சாங்க அதி­ப­ரிடம் சென்றோம். அங்கு அவ­ரிடம் இந்த வீடு­களில் எவை சிறந்­தவை என்று கேட்டு தெரிந்­து­கொண்டோம். எங்­க­ளு­டைய கட்­டட வடி­வ­மைப்­பா­ளரே பொறி­யி­லா­ளார்­க­ளுடன் இணைந்து வீடு­களின் வரை­ப­டங்­களைத் தயா­ரித்­தனர்.

அந்த பொருத்து வீடு ஒன்­றுக்கு 2.1 மில்­லியன் அதா­வது 21 லட்சம் ரூபாய்கள் செலா­வாகும். ஆனால், நாங்கள் நிர்­மா­ணிக்கும் வீடு­களின் மொத்தப் பெறு­மதி ஒரு மில்­லியன் ரூபாய்­க­ளாகும். ஏனென்றால், நிர்­மா­ணப்­ப­ணி­களை இரா­ணுவம் மேற்­கொள்­வதால் கூலிச்­செ­ல­வுகள் ஏதும் ஏற்­ப­டு­வ­தில்லை.

அத்­துடன், இரா­ணு­வத்­தி­ன­ருக்கு சகல வளங்­களும் இருக்­கின்­றன. ஆகவே, நான் அர­சாங்க அதி­ப­ரிடம், வீடுகள் நிர்­மா­ணிப்­ப­தற்கு தேவை­யான சகல கட்­டப்­பொ­ருட்­க­ளையும் இங்­கி­ருந்­தே­கொள்­வ­னவு செய்ய வேண்டும் என்றும் கொழும்­பி­லி­ருந்து எதையும் கொண்­டு­வ­ரத்­தே­வை­யில்லை எனவும் கேட்டுக் கொண்டேன்.

இவ்­வாறு உள்ளூர் வளங்­களை பயன்­ப­டுத்தி வீடு­களைக் கட்­டினால் வளங்­க­ளுக்­கான நிதி வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­லாது. பணச்­சுற்­றோ­டட்டம் எங்கள் மக்­க­ளுக்­கி­டையே பகி­ரப்­படும். நான் ஒன்றும் நிதி­ய­மைச்­ச­ரல்ல. ஆனால், பொரு­ளியல் பற்­றிய அறிவு எனக்கும் இருக்­கின்­றது. ஆகவே தான் நாங்கள் எங்­க­ளது வீட்­டுத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

இதற்குத் தேவை­யான பணம் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சி­ட­மி­ருந்­துதான் கிடைக்­கின்­றது. நாங்கள் தற்­போது 100 வீடு­களை முழு­மை­யாக நிர்­மா­ணித்­துள்ளோம். மேலும் 33 வீடு­களை இப்­போது நிர்­மா­ணித்துக் கொண்­டி­ருக்­கின்றோம். இந்த வீடு­களை எதிர்­வரும் மாதம் 28 ஆம் திக­திக்கு முன்னர் மக்­க­ளிடம் கைய­ளிப்போம்.

சில தாம­தங்­க­ளுக்கு காரணம் எல்லா கட்­ட­டப்­பொ­ருட்­களும் இங்கு கிடைப்­ப­தில்லை. சில­வற்றை வெளி­மா­வட்­டங்­க­ளி­லி­ருந்தே பெற்றுக் கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கின்­றது. எது எப்­ப­டியோ சிறந்த வீடு­களை நிர்­மா­ணித்துக் கொடுப்­ப­தற்கு இரா­ணுவம் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றது. 44 நாட்­களில் ஒரு வீட்டைக் கட்டும் அள­விற்கு எங்­க­ளிடம் ஆளணி இருக்­கின்­றது. ஆகவே, 44 நாட்­க­ளுக்குள் ஒரு வீட்டைக் கட்டி முடிப்­பதே எங்கள் இலக்கு. ஆனால் சகல மூலப் பொருட்­க­ளையும் இங்கு பெற்றுக் கொள்ள முடி­யா­ம­லி­ருப்­பதே தாம­தத்­திற்குக் கார­ண­மாகும்.

 2016 ஜன­வரி 26ஆம் திகதி முதல் யாழ். கட்­டளைத் தள­ப­தி­யாக பொறுப்­பேற்றேன். எதிர்­வரும் வார­ம­ள­வில்தான் எனது முத­லா­வது வருடம் பூர்த்­தி­யா­க­வுள்­ளது.. ஆரம்­பத்தில் யுத்­தத்­திற்கு பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த முக்­கிய இரா­ணுவ அதி­கா­ரி­களில் நானும் ஒருவன். கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­பின்னர் நான் ஒப்­பந்த அடிப்­ப­டையில் அமெ­ரிக்க இரா­ணு­வத்­திற்கு பணி­யாற்­றிய பின்னர் இலங்­கைக்கு வந்தேன்.

இங்கு வந்­த­பின்னர் போருக்கு பின்­ன­ரான சூழலில் காணப்­படும் உண்­மைத்­தன்மை மற்றும் இச்­சூ­ழலில் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு இருக்­க­வேண்­டிய வகி­பா­கங்கள் மற்றும் ஆற்­ற­வேண்­டிய பணிகள், தற்­போது எதிர்­நோக்கும் முக்­கிய பிரச்­சி­னைகள் பற்­றிய ஆய்­வொன்றை மேற்­கொண்டோம். இங்கு முக்­கி­ய­மான மூன்று பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. அதில் முத­லா­வது காணிப்­பி­ரச்­சி­னை­யாகும். இதற்குள் பல பிரி­வுகள் காணப்­ப­டு­கின்­றன. இரண்­டா­வது புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளிகள் மற்றும் அவர்­க­ளது பிரச்­சி­னை­யாகும். மூன்­றா­வது பிரச்­சினை அனைத்து மக்­களும் தமது சொந்த மதத்தை பின்­பற்­ற­வது சம்­மந்­த­மாக எழுந்­துள்ள பிரச்­சி­னை­யாகும்.

நான் யாழில் கட்­ட­ளைத்­த­ள­ப­தி­யாக பொறுப்­பேற்­ற­பின்னர் இரா­ணுவ தலை­மை­ய­கத்தில், காணி­களை விடு­விப்­ப­தற்­கு­ரிய ஒரு தனிப் பிரிவு ஒன்றை நிறு­வினேன். இங்கு இரா­ணுவம் 1963 இலி­ருந்து நிலை­கொண்­டி­ருக்­கின்­றது. நாங்கள் ஆரம்­பத்தில் இந்­தி­யா­வி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­படும் கடத்­தலை நிறுத்­து­வ­தற்­கா­கவே யாழிற்கு வர­வ­ழைக்­கப்­பட்டோம்..

யாழ்ப்­பா­ணத்தில் மூன்று இரா­ணுவ டிவி­சன்கள் காணப்­ப­டு­கின்­றன. இங்கு மீண்டும் எந்த யுத்­தமும் இடம்­பெ­றப்­போ­வ­தில்லை என்­பதை நான் உறு­தி­யாகத் தெரி­விக்­கின்றேன். ஆனால், வழ­மை­யாக தெற்­கில்­போன்று சில குற்­றச்­செயல் நட­வ­டிக்­கைகள் இங்கும் தொடர்ந்த வண்­ணமே இருக்­கின்­றன.

நான் யாழ் குடா­நாட்டில் பத­வியை பொறுப்­ப­பேற்­ற­போது யாழ் குடா­நாட்­டில்­இ­டம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்­கான 31 முகாம்கள் இருந்­தன. இதில் 971 குடும்­பங்கள் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்த குடும்­பங்­களைப் பற்­றிய பதி­வு­களை ஆய்­வு­செய்­த­போது இங்­குள்ள குடும்­பங்­களில் 200 குடும்பங்களுக்கு சொந்தமான காணி இருப்பதை அறிந்துகொண்டோம். எஞ்சிய குடும்பங்களுக்கு காணி இருக்கவில்லை. 26 வருடங்களாக முகாம்களில் வாழும் இக்குடும்பங்கள் இன்று பல குடும்பங்களாக பெருகியுள்ளன. எனவே காணி இல்லாத குடும்பங்களுக்கு காணியும் வீடும் வழங்கவேண்டும் என அரசு தீர்மானித்தது.

தேசிய பாதுகாப்பிற்காக மாத்திரமே நாங்கள் இந்தக் காணிகளில் நிலைகொண்டுள்ளோம். மேலும், புலிகள் மீண்டும் உருவாகாமல் இருப்பதை கண்காணித்துக் கொள்வது மாத்திரமல்ல தேசிய பாதுகாப்பு. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக காணப்படும் குற்றங்கள், ஆட்கடத்தல்கள் போன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இராணுவப் பிரசன்னம் இங்கு அத்தியாவசியமாகும். நாட்டில் சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்ட பொலிஸார் இருந்தாலும் யுத்தம் இடம்பெற்ற இடத்தில் இராணுவம் இருப்பது அவசியமாகும் என்றார்.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-01-22#page-1

Categories: merge-rss, yarl-category

சீனக்குடா எண்ணெய் குதங்களை வழங்க மறுக்கும் இந்திய எண்ணெய் நிறுவனம்

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 06:15
சீனக்குடா எண்ணெய் குதங்களை வழங்க மறுக்கும் இந்திய எண்ணெய் நிறுவனம்
 
 
சீனக்குடா எண்ணெய் குதங்களை வழங்க மறுக்கும் இந்திய எண்ணெய் நிறுவனம்
சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனம் வழங்க மறுத்து வருவதால் இலங்கை பெற்றோலியக் கூட்டு த்தாபனம், 1 பில்லியன் ரூபா செலவில் நான்கு எண்ணெய் தாங்கிகளை அவசரமாக அமைக்கவுள்ளது.
 
வறட்சியை எதிர்கொள்வதற்காக மின்சார உற்பத்திக்குத் தேவைப்படும் எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கு, இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் உள்ள சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றை மீளப் பெறுவதற்கு  அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
 
இதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்த போதும், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், எண்ணெய்க் குதங்களை மீள வழங்க மறுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் அடுத்த வாரம் புதிய இந்தியத் தூதுவர் பொறுப்பேற்கும் வரை இதுதொடர்பான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
 
எனினும், மின்சார உற்பத்திக்குத் தேவைப்படும் டீசலை சேமித்து வைப்பதற்கு தாங்கிகள் அவசரமாகத் தேவைப்படுவதால், முத்து ராஜவெலவில் நான்கு தாங்கிகளை அமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளது.
 
முதலாவது எண்ணெய் தாங்கியை அமைப்பதற்கு கோரப்பட்ட கேள்விப்பத்திரம் மூடப்பட்டுள்ளது. இதற்கு 400 மில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த தாங்கிகள் ஒவ்வொன்றும் 15 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை சேமித்து வைக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட வுள்ளன.
 
மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை வாங்கி வந்த இலங்கை மின்சார சபை, இந்த மாதம், மேலதிகமாக 60 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை வழங்குமாறு கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/22983

Categories: merge-rss, yarl-category

சில தமிழ்த் தலைவர்கள் அதிகாரம் பகிரப்படுவதனை விரும்பவில்லை – டிலான் பெரேரா

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 06:13
சில தமிழ்த் தலைவர்கள் அதிகாரம் பகிரப்படுவதனை விரும்பவில்லை – டிலான் பெரேரா

dilan-2.jpg
சில தமிழ்த் தலைவர்கள் அதிகாரம் பகிரப்படுவதனை விரும்பவில்லை என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வு என்பது நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடு அல்ல எனவும், எனினும் அதிகாரப் பகிர்வு நடவடிக்கைக்கு  தமிழ்த் தலைவர்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர் எனவும் மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என கோரி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கொண்ட அரசாங்கத்திற்கு மக்கள் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என  சுட்டிக்காட்டியுள்ள அவர் எனவே, மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என கோரும் தமிழ் தலைவர்கள் அதனை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி தமிழ் சிங்கள மக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டங்களை  நடத்தவுள்ளதாகவும் டிலான் பெரேரா எச்சரித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/14680

Categories: merge-rss, yarl-category

பப்புவா நியூகினியில் 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம்

பப்புவா நியூகினியில் 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம்
 

அவுஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள, பசுபிக் சமுத்திர நாடான பப்புவா நியூகினியில் சற்றுமுன் பாரிய பூகமபம் ஏற்பட்டுள்ளது.

 

21930_Powerful-8.0-quake-hits-off-Papua-

 

8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம் இது என ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்துள்ளன. 

 

பப்புவா நியூகினியின் அரவா நகரிலிருந்து 47 கிலோமீற்றர் தூரத்தில் கடற்பகுதியில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=21930#sthash.YnWZYp5i.dpuf
Categories: merge-rss, yarl-world-news

மஹிந்தவின் பாதையில் மைத்திரி அரசாங்கம்

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 06:01
மஹிந்தவின் பாதையில் மைத்திரி அரசாங்கம்
 

article_1485064293-Maithripala1.jpg- கே.சஞ்சயன்  

அரசாங்கம் வெளியிட்டு வரும் பல்வேறு செய்திகள், தகவல்கள் உண்மைக்கு முரணானதாகவும் மக்களை ஏமாற்றும் விதத்திலும் இருக்கின்றன.  

ஹம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரத்தில், ‘வொக்ஸ்வெகன்’ கார் ஒருங்கிணைப்புத் தொழிற்சாலை, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை போன்ற விவகாரங்களில் தற்போதைய அரசாங்கம் வெளியிட்டு வரும் தகவல்கள் சர்ச்சைக்குரியவையாகவே இருந்திருக்கின்றன.  

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகளை நினைவுபடுத்துகின்ற அளவுக்குத் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளும் மாறத் தொடங்கியிருக்கின்றன. 

மஹிந்த ராஜபக்ஷஅரசாங்கத்தின் முதலாவது பதவிக்காலம், போருடனும் போர் சார்ந்த சூழலுடனும் கழிந்து போனது. 

அதனால், பொருளாதார மற்றும் அரசியல் சூழலை நாட்டு மக்களோ, எதிர்க்கட்சிகளோ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.  

அதுபற்றிப் பெரியளவில் பிரசாரப்படுத்தப்பட்டாலும், அவை மக்களிடம் எடுபடக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை.   

ஆனால், இரண்டாவது பதவிக்காலத்தில், மஹிந்த ராஜபக்ஷஅரசாங்கம் சராசரியாக ஓர் அரசாங்கம் எதிர்கொள்ளக் கூடிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டது.  

போரினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்துவது, உள்நாட்டு அரசியல் சக்திகளின் பிரசாரங்களைச் சமாளிப்பது என்று சிரமங்களைச் சந்திக்க வேண்டிய நிலை காணப்பட்டது.  

ஜனநாயகச் சூழல் மறுக்கப்பட்டு, கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டு, அதிகாரத்துவ ஆட்சி ஒன்றை நடத்திய போதிலும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு உண்மை என்பது மிகப்பெரிய எதிரியாகவே இருந்தது.  

இதனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அவ்வப்போது, நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டும், இல்லாத விடயங்களைப் பூதாகரப்படுத்தியும் பிரசாரப்படுத்தி வந்தது.  

இதன் மூலம், அரசாங்கத்தின் மதிப்பைப் பாதுகாக்கவும் பொருளாதார மற்றும் அரசியல் உறுதித் தன்மையைப் பேணுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  

மன்னார் வளைகுடாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில், எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் எரிவாயு உற்பத்தி இடம்பெறப் போவதாகவும் மாகாணசபைத் தேர்தல் ஒன்றுக்கு முன்பாக அறிவித்தது மஹிந்த அரசாங்கம்.  

இன்று வரை அங்கு எரிவாயு உற்பத்தி தொடங்கப்படவில்லை. கெய்ன் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் எரிவாயுப் படிமங்கள் கண்டறியப்பட்டது உண்மையே. ஆனால், அந்த எரிவாயுப் படிமங்கள் வணிக ரீதியாக உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய அளவுக்கு பெறுமானம் கொண்டதாக இருக்கவில்லை.  

அது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் தெரிந்திருந்தது. அந்த உண்மையை மறைத்து, மன்னார் கடலில் எரிவாயு கிணறுகளை அமைத்து, நாட்டை அபிவிருத்தி செய்யப் போவது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயன்றது அப்போதைய அரசாங்கம்.  

இது போலத் தான், 2012 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ, சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்துக்காக செய்மதி ஒன்றை ஏவியதாகவும் செய்தி வெளியாகின.   

அந்தச் செய்மதிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. சில மாதங்களுக்கு முன்னர், இதுபற்றி நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், யாருக்கும் பதில் தெரியவில்லை.  

குறித்த சீன நிறுவனம், ஒரு விண்வெளி ஆய்வு நிறுவனமே அல்ல; பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற ஒரு நிறுவனமே அது என்றும், அதற்கும் விண்வெளிக்குச் செய்மதிகளை ஏவும் திட்டத்துக்கும் தொடர்பே இல்லை என்றும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்திருந்தார்.  

இதற்கென மில்லியன் கணக்கான டொலர் செலவிடப்பட்டதாகவும் கூறப்பட்ட போதிலும் அவை எங்கே சென்றன என்பது யாருக்கும் தெரியாது.  

இதுபோல, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாகத் திட்டங்கள் தொடர்பாக, உண்மைக்கு மாறான தகவல்களே மக்களுக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் பெரியளவில் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் காண்பிக்க முயற்சிக்கப்பட்டது.  

சர்வதேச அழுத்தங்களால், பொருளாதார ரீதியாக இலங்கை பின்னடைவுகளைச் சந்தித்த போதும், குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி, பொருளாதார அபிவிருத்தி பற்றிய, பணவீக்கம் பற்றிய உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதாகவும் கூடக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  

பொருளாதார மற்றும் அரசியல் உறுதித்தன்மை பாதிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், மக்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்க முற்பட்டது அல்லது பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பும் தகவல்களை வெளியிட்டது.  

அதேபோலத்தான், இப்போதைய அரசாங்கமும் செயற்படத் தொடங்கியிருக்கிறது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த போது மக்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன.

ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அளவுக்கு வேகத்துடனோ, வீரியத்துடனோ இதன் செயற்பாடுகள் இருக்கவில்லை.  

இதனால் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனம் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதைவிட அரசாங்கத்துக்குள்ளேயே குழப்பங்களும் ஏற்படத் தொடங்கியுள்ளதால், இந்த அரசாங்கம் தனது முழு ஆயுள்காலத்துக்கும் நிலைத்திருக்குமா என்ற சந்தேகமும் கூட இருக்கிறது.  

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் முதலீட்டு வலயத் திட்டம் என்பனவற்றுக்கு எதிர்ப்புகள் எழத் தொடங்கியதும், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துகளை வெளியிட்டுக் குழப்பி வருகின்றனர். 

ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமான, கருத்துகளை வெளியிட, அது கூட்டு எதிரணிக்கு இன்னும் வாய்ப்பாக மாறிக் கொண்டிருக்கிறது.   

பிரச்சினைக்குரிய விவகாரங்களில், ஒரே குரலாக அமைச்சர்களை கருத்து வெளியிடச் செய்வதில் இந்த அரசாங்கம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.  

ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில், 10 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஆரம்பத்தில் கூறிய அரசாங்கம், பின்னர் நான்கு இலட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றது.  

இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது, ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறியிருக்கிறது. உண்மையில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கிறது.  

அதுபோல, ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்துக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. அதற்கு எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் இப்போது, 1,235 ஏக்கர் நிலம்தான் ஹம்பாந்தோட்டையில் ஒதுக்கப்படும் என்றும், எஞ்சிய காணிகள் ஏனைய மாவட்டங்களில் ஒதுக்கப்படும் என்றும் கூறுகிறது.  

இந்த விவகாரத்தில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களையே அரசாங்கம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.  
ஹம்பாந்தோட்டை விவகாரம், சூடுபிடித்திருந்த தருணத்தில் அதனைத் திசை திருப்பக் குளியாப்பிட்டியவில் ‘வொக்ஸ்வெகன் கார்’ ஒருங்கிணைப்புத் தொழிற்சாலைக்கு, பெரியளவில் பிரசாரம் செய்யப்பட்டு ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கல் நாட்டினர்.  

ஆனால், ஊடக நிறுவனம் ஒன்று அதுபற்றி ஜேர்மனி தூதரகத்திடம் கேள்வி எழுப்ப, அத்தகைய முதலீடு பற்றித் தமக்குத் தெரியாது என்ற பதில் கிடைத்தது. இதையடுடுத்து ‘வொக்ஸ்வெகன்’ நிறுவனமும், தாம் எந்த முதலீடும் செய்யவில்லை என்று கையை விரிக்க, அரசாங்கம் முழியைப் பிதுக்கிக் கொண்டு நின்றது.  

எதற்காக ஜேர்மனியிடம் கேட்க வேண்டும், என்னிடம் கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன் என்று பிரதமர் பதில் கூறி மழுப்பினார்.  

உண்மையில், ‘வொக்ஸ்வெகன்’ நிறுவனம் அந்தக் கார் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை அமைக்கவில்லை. உள்ளூர் நிறுவனம் ஒன்றே அத்தகைய பெயரைப் பயன்படுத்தி தொழிற்சாலையை அமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த விடயத்தில் ஜனாதிபதி, பிரதமரும் கூட ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

நாட்டின் தலைவர்களாக - அரசாங்கத்தின் தலைவர்களாக இருப்பவர்கள் இந்தளவுக்கு இலகுவாக ஏமாற்றப்படுபவர்களாக இருப்பார்களா அல்லது அவர்களும் சேர்ந்தே இதுபோன்ற தகவல்கள் கசிவதற்கு காரணமாக இருந்தனரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கிறது.  

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை விடயத்திலும் அரசாங்கம் அவசரப்பட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஐரோப்பிய ஆணையத்தின் பரிந்துரையை, ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவாகக் காண்பிக்க அரசாங்கம் முனைந்திருக்கிறது.  

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கான நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதற்கான உறுதிமொழிகள் வழங்கப்பட்டாலேயே அது சாத்தியமாகும். அதற்குள்ளாகவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்து விட்டதாக அரசாங்கம் பிரசாரங்களை செய்து மூக்குடைபட்டு நிற்கிறது.  

இதுபோலத் தான், உலகின் மிகப்பெரிய நத்தார் மரம் என்ற கின்னஸ் சாதனைக்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட நத்தார் மரமும் பிசுபிசுத்துப் போனது தான் மிச்சம்.   

அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கிக் கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முனைகிறது.  

அரசியல் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில், இதுபோன்ற குழப்பமானதும் உண்மையில்லாததுமான தகவல்கள், அரசாங்கத்தின் மதிப்பைக் குலைப்பதாகவே இருக்கிறது. 

போர் வெற்றியின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ கட்டிய சாம்ராஜ்யம், அதன் தவறுகளால் தான் சரிந்து விழும் நிலை ஏற்பட்டது. அந்தப் பாடங்களை தற்போதைய அரசாங்கம் கவனத்தில் கொள்ளத் தவறினால், அதே நிலையைத் தான் எதிர்கொள்ள வேண்டியேற்படும்.    

- See more at: http://www.tamilmirror.lk/190084/மஹ-ந-தவ-ன-ப-த-ய-ல-ம-த-த-ர-அரச-ங-கம-#sthash.ACD4a7cl.dpuf
Categories: merge-rss, yarl-category

ஈராண்டு கால ராஜதந்திரப்போர்?

அரசியல்-அலசல் - Sun, 22/01/2017 - 05:44
ஈராண்டு கால ராஜதந்திரப்போர்? நிலாந்தன்:-

Diplomacy.jpg

கடந்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முனபு; கூட்டமைப்பின் உயர்;மட்டத்தை சேர்;ந்த ஒருவர் இக்கட்டுரை ஆசிரியரை சந்தித்தார். இந்தியப் பிரதமர் மோடிக்கும் கூட்டமைப்பின் உயர்மட்டத்தினருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பின் போது அவரும் பங்கு பற்றியிருந்தார.; அச்சந்திப்பில் உரையாடப்பபட்ட ஒரு விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.  அச்சந்திப்பின் போது சம்பந்தர் மோடியிடம் பின்வரும் தொனிப்பபட ஒருவிடயத்தை அழுத்திக் கூறினாராம்.  ‘நாங்கள் நாட்டை பிரிக்குமாறு கேட்கமாட்டோம். ஆனால் எமது தாயகம் பிரிக்கப்படாது இருப்பது அதாவது வடக்கு கிழக்கு பிரிக்கப் படாது இருப்பதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்’  என்று இந்த விடயத்தை சம்பந்தர் ஒன்றுக்கு மேற்பட்ட தடைவைகள் திரும்பத் திரும்ப அழுத்தி கூறியதாக மேற்படி கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர் குறிப்பிட்டார்.

அதே கூட்டமைப்பின் முக்கியஸ்தர் இப்பொழுது கூறுகிறார் வடக்கு கிழக்கு இணைப்பு உடனடிக்கு சாத்தியம் இல்லை என்று . அவர் இதை கடந்த பல வாரங்களாக திரும்ப திரும்ப கூறி வருகிறார். அப்படி என்றால் வடக்கு கிழக்கு இணைப்புக்காக இந்தியாவுக்கு ஊடாக இலங்கை அரசாங்கத்தின மீது அழுத்தங்களை பிரயோகி;க்கும் முயற்சியில் கூட்;டமைறப்பு வெற்றி பெற முடியவில்லையா?  அதாவது அவர்கள் பிரகடனப்படுத்திய ராஜதந்திரப் போர் எனப்படுவது எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடையத் தவறிவிட்டதா?

இந்த இடத்தில் மேலும் சில கேள்விகளை கேட்டகவேண்டும் .  ராஜதந்திரப் போர் எனப்படுவதை அவர்கள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள? ;இனப்பிரச்சனை எனப்படுவது சாராம்சத்தில் ஒரு புவி சார் அரசியல்பிரச்சினை தான் என்பதனை அவர்கள் விளங்கி வைத்திருக்கறார்களா? ஆயின் அதற்குரிய மூலோபாயப்  பொறி முறை என்ன? அப்படி ஏதும் பொறி முறை அவர்களிடம் உண்டா? அதை முன்னெடுப்பதற்கு வேண்டிய வெளிவிவகாரக் குழு ஏதும் அவர்களிடம் உண்டா? இந்தியப் பிரதமரோடு உரையாடினால் மட்டும் போதுமா? இது தொடர்பில் முடிவுகளை எடுக்கும் கொள்கை வகுப்பாளர்களை நோக்கி எதும் ‘லொபி’ செய்யப்பட்டதா?

மேற்படி கேள்விகளுக்கு கூட்டமைப்பே பதில் சொல்லவேண்டும். ஆனால் மேற் சொன்ன கூட்டமைப்பின் முக்கியஸ்தர் வடகிழக்கு இணைப்பை முஸ்லீம் மக்கள் ஆதரிக்கவில்லை என்று இப்பொழுது கூறுகிறார். அப்படி என்றால் அரசாங்கதி;தின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கா அல்லது முஸ்லீம்கள் தலைவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கா கூட்டமைப்பினர் மோடியை அணுகினார்கள்?  முஸ்லீம் மக்கள் வடகிழக்கு இணைப்பிற்கு ஆதரவாக இல்லை என்றால் இதுதொடர்பில் முஸ்லீம் தலைவர்களோடு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்திருந்திருக்க வேண்டும.; ஆனால் அப்படிப்பட்ட உடன்படிக்கைள் எவையுமின்றித்தான் இனப்பிச்சனை;க்கான தீர்வைக்குறித்து கடந்த 24மாதங்களாக கூட்டமைப்பு  பேசி வருகிறது.  முஸ்லீம் தலைவர்களோடு மட்டுமல்ல சிங்களத்தலைவர்களோடும் அப்படிப்பட்ட உடன் படிக்கைகள் எவையும் செய்யப்படாத ஒரு வெற்றிடத்தில் தான் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு குறித்துப்பேசப்படுகிறது.

இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்மொழிவு ஒன்றை கடந்த ஆண்டு தமிழ் மக்கள் பேரவை சமர்ப்பித்திருந்தது.  அந்த முன்மொழிவின் அறிமுகத்தில் அவர்கள் ஒரு விடயத்தை அழுத்தி கூறியிருந்தார்கள். யாப்புருவாக்க முயற்சிகளை தொடங்க முன்பு இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கிடையே ஓர் உடன்படிக்கை செய்யப்பட வேண்டும் என்று அதில் குறிப்படப்பட்டிருந்தது.  ஆனால் அப்படிப்பட்ட உடன்படிககை எதுவும் சிங்கள, தமிழ், முஸ்லீம்களுக்கிடையே செய்யப்பட்டிருக்கவில்லை. அப்படி ஒரு சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டிருந்திருந்தால் அது மூன்று தரப்புக்களுக்குமான பேரம் பேசும் சக்திகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்திருக்கும.; அது முத்தரப் பேரம் பேசும் சக்திகளுக்கிடையலான வலுச்சமநிலையின் மீது எழுதப்பட்ட ஓர் உடன்படிக்கையாக இருந்திருக்கும்.  ஆனால் அப்படி எந்த ஓர் உடன்படிக்கையும் இலங்கைத்தீவில் எழுதப்படவில்லை.  இங்கே வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடையிலான வலுச்சமநிலைதான் உண்டு.

வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்குமிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்;டது. அதுவும் எழுதப்படாத உடன்படிக்கைதான். அது தொடர்பில் சிங்கப்பூரில் சில சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக சில செய்திகள்; தெரிவி;க்கின்றன. இவ்வாறு எழுதப்படாத ஒருகனவான் உடன்படிக்கையின் மீதே யாப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.  அதிலும் கூட இனப்பிரச்சனைக்கான தீர்வு எனப்படுவது யாப்புருவாக்கத்தின்  ஒரு பகுதியாக குறுக்கப்பட்டுள்ளது.

யாப்புருவாக்கம் எனப்படுவது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அல்ல என்றும் காட்டப்படுகிறது.  நாட்டின் ஜனநாயக ஆட்சியை பலப்படுத்துவதற்காகவே யாப்பு உருவாக்கப்படுவதாக காட்டப்படுகிறது. கடந்த ஆண்டு நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்ட பொழுது அதற்குரிய முகப்புரை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தன. முகப்புரையில் 3விடயங்கள் இருந்தன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை மாற்றுவது, தேர்தல் முறைமையை மாற்றுவது  ஆகிய மூன்றுமே அவையாகும்.. இதில் இனப்பிரச்சசனைக்கான தீர்வு என்றிருப்பதை நீக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கேட்டன.  அரசாங்கத்துக்குள்ளும் ஒரு பகுதியனர் அவ்வாறு கேட்டனர். சில மாதகால இழுபறிக்குப்; பின் முகப்புரையிலிருந்த அந்த வசனங்கள் நீக்கப்பட்டன .

இவ்வாறு யாப்புருவாக்க முயற்சிகளின் தொடக்கத்திலேயே பலியிடப்பட்டது இனப்பிரச்சினைக்கான தீர்வுதான். வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்குமிடையலான எழுதப்படாத ஒரு புரிந்துணர்வின் மீது தொடக்கப்பட்ட யாப்புருவாக்க முயற்சிகள் அவை. மிக பலவீனமான வலுச்சமநிலை காரணமாகவே யாப்புருவாக்க முயற்சிகள் இழுபடுகின்றன.  கூட்டமைப்பினர் மேம்போக்காக பிரகடனப்படுத்திய ராஜதந்திர போர் என்ற ஒன்று மெய்யாகவே முன்னெடுக்கப்பட்டிருந்திருந்தால் தழிழத்; தரப்பின் பேரம் அதிகரித்து வந்திருக்கும்.

அல்லது கூட்டமைப்புக்கு எதிரான அதிருப்திகளை ஒருமுகப்படுத்தி நிறுவனமயப்படுத்திய தழிழ்மக்கள் பேரவையாவது அந்த ராஜதந்திரப் போரை முன்னெடுத்திருந்திக்கலாம். அவர்களிடமும் சரியான ஒரு தரிசனம் இருப்பதாக தெரியவில்லை. ஒரு இராஜதந்திர போரை முன்னெடுப்பதற்கான கொள்கைத்திட்ட வரைபு எதுவும் அவரிகளிடம் இருப்பதாக தெரியவில்லை. அதற்கு வேண்டிய கட்டமைப்பு எதுவும் அவரிகளிடமும் இல்லை தமிழ் மக்கள் பேரவையின் பலமே விக்னேஸ்வரன்தான். பலவீனமும் அவர்தான்.

துமிழ் தலைவர்களில் இப்பொழுது ஜனவசியம்; மிக்கவராக விக்னேஸ்வரன்; திகழ்கிறார். தனக்கு வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக இருக்க முயற்சிக்கிறார். அவருடைய அறிக்;கைகள் பேச்சுக்கள் தீர்மானங்கள் நேர்காணல்கள் போன்ற எல்லாவற்றிகூடாகவும் அவர் தமிழ் தேசிய நெருப்பை அணைய விடாது பாதுதுகாக்கும்  ஒருவராக் காட்சியளிக்கிறார். புலம்பெயர்ந்த தமிழர்களால் அதிகம் எதிர்பார்ப்போடு பார்கப்படும் ஒருவராக அவர் காணப்படுகிறார்

ஆனால் அவருடைய தீர்மானங்களில் பல செயலுக்கு போகாதவை. உதாரணமாக இனப்;படுகொலை என்ற தீர்மானத்தை எடுத்துக் கொள்ளலாம்.  ஆந்த தீர்மானத்துக்குத்; தேவையான ஆதாரங்களை திரட்டுவதற்கான முயற்சிகள் எதையாவது அவர் முன்னெடுத்திருக்கிறாரா? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 7ஆண்டுகளாகி விட்டன. ஆனால் தமிழ் மக்கள் இப்பொழுதும் இறந்தவர்களையும்  காணாமல் போனவர்களையும் எண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவ்வாற எண்ணிக்கணக்கெடுப்பதையே ஒரு செயற்பாட்டியக்கமாக முன்னெடுக்கலாம். இது தொடர்பில் உலகளாவிய அங்கிகாரத்தைப் பெற்ற ர்சுனுயுபு-( Human rights Data Analysis Group) மனித உரிமைகளுக்கான தகவல்களை ஆராய்ந்தறியும் அமைப்பு போன்ற அமைப்புக்களின் உதவியை தமிழ் மக்கள் பெற முடியும்.

ஆட்சி மாற்றத்தின் பின் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ள  சிவில் வெளியை பரிசோதிக்கும் விதத்தில் செயற்பாட்டியக்கங்களை முன்னெடுக்க விக்னேஸ்வரனால் முடியவில்லை.  அறிக்கைகள் மற்றும் வெளிநாட்டுபிரதிநிதிகளுடனான சந்திப்பு;ககள் போன்றவற்றில் முன்வைக்கும் துணிச்சலான கருத்துக்களுக்கும் அப்பால் செயலுக்கு போகத்தயங்கும் ஒருவராகவே அவர் காணப்படுகிறார். முதலில் அவர் ஒன்றை தீர்மானிக்கவேண்டும். கூட்டமைப்பின் தலைமை மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் அதிருப்தியாளராக இருக்கப்போகிறாரா? அல்லது ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்கப் போகிறாரா?தமிழ் மக்கள் பேரவையை ஒரு மாற்று அணியாக கட்டியெழுப்புவது தொடர்பில் விக்னேஸ்வரனிடம் அரசியல் தரிசனம் ஏதும் உண்டா?

கடந்த ஆண்டு மட்டக்களப்பில் முத்தமிழ் விழாவில் பேசிய பொழுது தமிழ் மக்கள் பேரவை ஒரு கட்சியாக மாறப் போவதில்லை என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே அதில் தான் இணைந்ததாக உரையாற்றி யிருந்தார். அவருக்கு அவ்வாறு ஓர் உத்தரவாதம் வழங்கப்பட்டதாக தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.சில நாட்களுக்கு முன் நெடுந்தீவுக்கான புதிய படகு சேவையை தொடக்கி வைத்த பின் அவுஸ்ரேலியத் தூதுவரோடு உரையாடிய போதும் அவர் இதே கருத்தை மறுபடியும் அழுத்தி கூறியிருக்கிறார்.

அப்படி என்றால் ஒரு மாற்று அணிக்;கு தலைமை தாங்க விக்னேஸ்வரன் தயாரில்லையா? சம்பந்தரின் மீது அழுத்;தத்தை பிரயோகிக்கும் ஓர் அமுக்கக் குழுவுக்குத்தான் அவர் தலைமை தாங்குவாரா? ஒரு மாற்று அணியைக்குறித்த நம்பிக்கைகள் குறுகிய காலத்துள் அதிகரிப்பதற்குக் காரணமாகவிருந்த அவரே அதற்கு தலைமை தாங்க தாயாராக இல்லையா? இது சில சமயங்களில் தனது அரசியல் பிரவேசத்தைக் குறித்து துலக்கமின்றிக் கதைக்கும் ரஜனி;காந்தை ஞாபகப்படுத்தவில்லையா?

வுpக்னேஸ்வரன் ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்க தயாராக இல்லாத வரை ராஜதந்திர போர் எனப்படுவது இப்போதிருப்பதைப் போலவே தொடர்ந்துமிருக்கும். பேரவையின் முதலாவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு தீர்வை தமிழ் மக்கள் மீது திணிக்க முடியாது என்பதை பேரவை உணர்த்தியிருக்கிறது என்ற தொனிப்பட  உரையாற்றியிருந்தார். ஆனால் யாப்புருவாக்கச் செயற்பாடுகளைப் பார்க்கும் போது அப்படியா தோன்றுகிறது?

இதுதான் பிரச்சனை கூட்டமைப்பிடமும் ஒரு ராஜதந்திர போருக்கான தயாரிப்புக்கள் எவையுமில்லை பேரவையிடமும் அப்படி ஏதுவும் இல்லை இந்நிலையில் வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்குமிடையிலான ஓர் இணக்க அரசியலின் விளைவாக பிறக்கக்கூடிய ஒரு தீர்வு தமிழ் மக்கள் மீது சுமத்தப்படுகையில் அதை யார் தடுப்பது?

இது விடயத்தில் ஈழத்தமிழர்கள் தமிழகத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் எப்படித் தெருவில் இறங்கியது என்பது ஓர் ஆகப் பிந்திய முன்னுதாரணம் ஆகும்.  ஜல்லிக்கட்டானது தமிழ் பெரும் பரப்பை மறுபடியும் ஒன்றிணைத்திருக்கிறது. 2009 மே மாதத்தில் இருந்து இன்றுவரையிலான காலப்பகுதியில் தமிழகம் மூன்று தடைவை இவ்வாறு கொந்தளித்திருக்கிறது. அவர்கள் ஜல்லிக்கட்டுகாக மட்டும் கொந்தளிக்கவில்லை. 2009மே க்கு பின்னரான தமிழ் பொது உளவியலின் ஒரு வெளிப்பாடே அது. நவீன தமிழில் தோன்றிய ஒரு வீர யுகத்தின் வீழ்ச்சிக்கு பின்னரும் தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருப்பார்கள் என்பதற்கான ஆகப்பிந்திய ஓர் எடுத்துக்காட்டு அது.

கொந்தளிக்கும் தமிழகம் ஈழத்தமிழர்களுக்கு ஒரு முன்னுதாரணம். ஆட்சி மாற்றத்தின் பின்னரான ராஜதந்திரப் போருக்குரிய முக்கிய பேரம் பேசும் சக்திகளில் அதுவும் ஒன்று.  கூட்டமைப்பு இதிலிருந்து எதையாவது கற்குமா? ஆல்லது பேரவை எதையாவது கற்குமா?  ஆல்லது இனிமேலும் அறிக்கை ப்போரைத்தான் ராஜதந்திரப்போர் என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களா?

http://globaltamilnews.net/archives/14665

Categories: merge-rss

கிழக்கு பல்கலையில் விடுதி வசதி கோரி மாணவர்கள் போராட்டம்

ஊர்ப்புதினம் - Sun, 22/01/2017 - 05:00

இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதி உரிமைப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் விரிவுரைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

 
கிழக்கு பல்கலையில் விடுதி வசதி கோரி மாணவர்கள் போராட்டம்

இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு பின்னர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி கோரி பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு மாணவர்கள் தங்கியிருப்பதால் எழுந்துள்ள நெருக்கடி நிலை காரணமாகவே பல்கலைக்கழக பேரவை கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

பல்கலைக்கழக பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக பதில் துணை வேந்தர் டாக்டர் கே. ஈ. கருணாகரன் விடுத்துள்ள அறிவித்தலில் அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே அந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

  கிழக்கு பல்கலையில் விடுதி வசதி கோரி மாணவர்கள் போராட்டம்

சௌக்கிய பராமரிப்பு ( மருத்துவ ) பீடம் உட்பட அனைத்து பீட மாணவர்களுக்கும் இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் தீர்மானம் கூறுகின்றது

'' பல்கலைக்கழக வளாகத்திற்குள் தொடந்து தங்கியிருக்கும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் ''என்றும் அந்தத் தீர்மானத்தில் மாணவர்களுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி கோரி 2ம் 3ம் ஆண்டு மாணவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு தங்கள் உடமைகளுடன் மாணவர்கள் அங்கு தங்கியிருந்த மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு நிர்வாகத்தினால் இரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் மாணவர்கள் வெளியேற மறுத்து வந்தனர். என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

http://www.bbc.com/tamil/sri-lanka-38703898

Categories: merge-rss, yarl-category

ஒரு வரியில் எல்லாமே உடைந்துபோயிற்று - Peta

அரசியல்-அலசல் - Sat, 21/01/2017 - 19:38

மனித நேய தொண்டர்கள் பற்றி எப்பொழுதும் எனக்கொரு மரியாதையுண்டு. அந்தவகையில் ஐல்லிக்கட்டுத்தடை தொடங்கியதிலிருந்து நாமும் இந்த விளையாட்டில் கொஞ்சம் வலிகளை ஏற்படுத்துகின்றோமோ அதனால் தான் பீட்டா(Peta) அமைப்பினருக்கு வலிக்கிறதோ என்ற சிறு சந்தேகம் இருந்தது.

ஆனால் Peta வை சேர்ந்த ராதா ராஜன் அவர்கள் பேசிய ஒரு வரியில் எல்லாமே உடைந்துபோயிற்று.
அவரது தூற்றுதல் என்பது தனது இனத்தை (பெண்களையே) குறி வைப்பதாக உள்ளது.
இவ்வாறு தனது பெண்மை சார்ந்து மனிதாபிமானத்தோடு சிந்திக்க தெரியாத ஒருவர் மாட்டின் மீது பற்று வைக்கிறார் என்பதெல்லாம் வெறும் பாசாங்கு. பணத்தைக்கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்பதை தவிர வேறொன்றுமில்லை.
பணம் துட்டு மணி மணி.....
இனி ஆண்டவனாலும் தமிழிச்சிகளிடமிருந்து இவரை காப்பாற்றமுடியாது. ஆழ்ந்த இரங்கல்கள்.

16142346_1301788733191302_50059669699041

 

 

Categories: merge-rss

புதிய அமெரிக்க அதிபருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்

Washington (CNN)It's Donald Trump's first full day as the 45th President of the United States, and people across the world are taking to the streets to protest against the incoming administration.

Thousands are expected to participate Saturday in the Women's March on Washington and more than 600 sister marches are planned, according to organizers, to send a message to Trump "that women's rights are human rights."
We'll be covering the protests here all day -- get the latest developments below, and our full report here.

வெளிநாடுகளிலும் குறிப்பாக சிட்னி பேர்லின் லண்டன் பாரிஸ் தென்ஆபிரிக்கா போன்ற இடங்களிலும் ரம்புக்கு எதிரான போராட்டம்

 (CNN)Protesters in the United States and around the world are joining marches Saturday to raise awareness of women's rights and other civil rights they fear could be under threat under Donald Trump's presidency.
The key focus of the day is the Women's March on Washington, which organizers say could attract a quarter of a million participants.

Women's March: Thousands to protest worldwide on Donald Trump's first day
Women's March live: Thousands worldwide protest Trump
But there are also hundreds of "sister marches" planned around the United States, with some of the biggest expected in Boston, New York, Chicago and Los Angeles.
And women and men in cities around the world -- including Sydney, Berlin, London, Paris and Cape Town, South Africa -- are also marching in solidarity and in opposition to the values they think Trump represents.
Women of color on what's at stake under Trump

http://www.cnn.com/2017/01/21/politics/trump-women-march-on-washington/index.html

 

Categories: merge-rss, yarl-world-news

துணுக்காயில் இருந்து ஆரோக்கியபுரம் கிராமம் வரை பஸ் சேவையினை வழங்குவாரா? வடமாகாண சபை போக்குவரத்து அமைச்சர்

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 17:13
துணுக்காயில் இருந்து ஆரோக்கியபுரம் கிராமம் வரை பஸ் சேவையினை வழங்குவாரா? வடமாகாண சபை போக்குவரத்து அமைச்சர்

 

முல்லைத்தீவு துணுக்காயில் இருந்து ஆரோக்கியபுரம் கிராமம் வரை பஸ் சேவையினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் வ.கமலேஸ்வரனிடம் ஆரோக்கியபுரம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நேற்று 19.01.2017 குடிநீர்த்திட்டத்தினை தொடக்கி வைப்பதற்கு வருகை தந்த பிரதி அவைத் தலைவரிடமே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 125 வரையான குடும்பங்கள் தமது கிராமத்தில் வாழ்வதாகவும் ஆரோக்கியபுரத்திற்கும்; துணுக்காயுக்கும் இடையிலான இருபத்தியிரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக பஸ் சேவை இடம்பெறுவதில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக துணுக்காய் பிரதேச செயலகம், நீதிமன்றம் ஆகியவற்றிற்கு சென்று வருவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும், குறித்த வீதி வழியாக பஸ் சேவைகள் இடம்பெறாததன் காரணமாக, கிளிநொச்சி, திருமுறிகண்டி ஆகிய இடங்களுக்குச் சென்று மாங்குளம் வழியாக துணுக்காயை சென்றடைய வேண்டிய நெருக்கடி நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆரோக்கியபுரத்திற்கும் துணுக்காயிற்கும் இடையில் பஸ் சேவையினை நடாத்துவதற்கு வழி செய்யுங்கள் என மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் போது கருத்துத் தெரிவித்த பிரதி அவைத்தலைவர் பஸ் போக்குவரத்து தொடர்பாக வடமாகாண போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் கிராம மக்கள் சார்பாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை மாவட்ட முகாமையாளர், மாகாண முகாமையாளர் ஆகியோரிடமும் கடிதங்களை கையளியுங்கள் எனவும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/14626

Categories: merge-rss, yarl-category

நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யா ட்ராம்பின் கொள்கை வரவேற்கப்பட வேண்டியது – மஹிந்த

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 17:06
நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யா ட்ராம்பின் கொள்கை வரவேற்கப்பட வேண்டியது – மஹிந்த

mahinda-rajapaksa-smiling_CI.jpg

அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள டொனால்ட் ட்ராம்பிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் கணக்கில் ட்ராம்பின் பதவிப்; பிரமாணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யா ட்ராம்ப்பின் வெளியுறவுக் கொள்கை வரவேற்கப்பட வேண்டியது என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/14638

Categories: merge-rss, yarl-category

கிளிநொச்சி அக்கராயன்குளத்து நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 17:05
கிளிநொச்சி அக்கராயன்குளத்து நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை:-

IMG_7553.jpg

கிளிநொச்சி அக்கராயன்குளத்து நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கிளிநொச்சி விவசாயத் திணைக்களமும் இக்குளத்தின் கீழான விவசாய அமைப்புகளும் விவசாயிகளிடம் வலியுறுத்தி வருகின்றன.

அக்கராயன்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள 4,500 ஏக்கர் வரையான காலபோக நெற்செய்கைக்கு தற்போது நீர்ப்பாசனம் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை குளத்தின் வலதுகரை வாய்க்கால் மூலமாக உருத்திரபுரத்தின் நீவில் பகுதியிலுள்ள 1,200 ஏக்கர் வரையான வயல் நிலங்களுக்கும் நீர் விநியோகம் நடைபெறும் நிலையில், குளத்தின் நீரை வயல்களுக்கு சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் நீர் வீண்விரயம் ஏற்பட்டு கழிவு ஆறுகள் மூலம் நீர் வெளியேறாமல் விவசாயிகள் நீரைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்திலே இரணைமடு குளத்தின் கீழான நெற்செய்கை வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய நீர்ப்பாசனக் குளங்களில் இருந்து நீர்ப்பாசன முயற்சிகள் நெற்பயிர்களுக்கு மிகுந்த திட்டமிடல்களுடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/14621

Categories: merge-rss, yarl-category

போருக்குப் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட முல்லைத்தீவு மக்களின் துயர்களை துடைப்பார்களா அரசியல்வாதிகள்?

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 17:04
போருக்குப் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட முல்லைத்தீவு மக்களின் துயர்களை துடைப்பார்களா அரசியல்வாதிகள்?

IMG_7556.jpg

முல்லைத்தீவு மாவட்டத்திலே போருக்குப் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பல குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்காததன் காரணமாக மீளக் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தமது வாழ்க்கையை நடாத்த வேண்டியுள்ளனர்.

குறிப்பாக கிராமங்களில் உள்ள மக்கள் தமக்கு வீடு கிடைக்காததன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போரினால் தமது சொத்துகள் அனைத்தும் இழந்து நலன்புரி முகாம்களில் ஓராண்டுகளுக்கு மேலாக வாழ்க்கை நடாத்திய நிலையில், தமது சொந்த இடத்தில் குடியமர்த்தப்பட்டாலும் வழங்கப்பட்டுள்ள உதவிகள் தமது வாழ்க்கை நடாத்துவதற்கு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தற்காலிக வீடுகளில் ஏழாண்டுகள் வரை வாழ்க்கை நடாத்துவதாகவும் கடந்த ஆட்சிக் காலத்திலும் வீடுகள் கிடைக்கவில்லை. நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய ஆட்சிக் காலத்திலும் வீடுகள் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் “நாம் அரசிடம் கேட்பது போர்காலத்தில் அழிக்கப்பட்ட எமது வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைத்துத் தாருங்கள் என்பதையே அதனை விரைந்து செய்வதன் மூலமாகவே எமது வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்ள முடியும் எனவும், கிராமங்களில் போக்குவரத்து, மருத்துவ வசதிகள் குறைந்து காணப்படுவதன் காரணமாக நிரந்தர வீடுகளையாவது விரைவாக அமைத்துத் தாருங்கள்” எனவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://globaltamilnews.net/archives/14628

Categories: merge-rss, yarl-category