merge-rss

யாழில் முழங்கிய அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்

ஊர்ப்புதினம் - Mon, 03/10/2016 - 19:33

இந்திய தேசபிதா மகாத்மா காந்தியின் 147வது பிறந்ததின நினைவு நாளை முன்னிட்டும் சர்வதேச அகிம்சா தின நிகழ்வை முன்னிட்டும் சிறப்பு நிகழ்வு ஒன்று நேற்று நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம் பெற்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகமானது அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினருடன் இணைந்து நடாத்தியது.

இந்நிகழ்வில் உள்ளூர் கலைஞர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வியியலாளரும் எழுத்தாளரும் கவிஞரும் சிறந்த பேச்சாளருமாகிய பேராசிரியர் கலாநிதி திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ;ணன் அவர்களுடைய பேருரையும் இடம்பெற்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்' எனும் தலைப்பிலான அவருடைய பேருரையில் மகாத்மா காந்தியினுடைய அகிம்சையை பற்றியும், அன்பு, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றி அவர் கூறிய கருத்துக்களை அவையோர் வரவேற்று இரசித்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இரகுபதி ராகவ ராஜாராம் எனும் காந்தி கீதத்துடன் தொடங்கிய நிகழ்வினைத் தொடர்ந்து உள்ளூர் வீணைக் கலைஞர்களின் வீணாகானத்துடன், மாணவர்களின் தேசபக்திப்பாடல்களும் இடம்பெற்றன.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மகாத்மா காந்தியினுடைய கொள்கைகளைப் பின்பற்றும் காந்தியவாதிகளுடன் பல கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், கலா இரசிகர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அரசாங்கம் நிறைந்த மக்களுடன் நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/119761?ref=morenews

Categories: merge-rss, yarl-category

ரவிராஜ், லசந்த கொலைக் குற்றவாளிகளை விரைவில் கூண்டில் ஏற்றுவோம்: மனோ கணேசன்

ஊர்ப்புதினம் - Mon, 03/10/2016 - 19:29

ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க ஆகியோரை கொலை செய்த குற்றவாளிகளை விரைவில் கூண்டில் ஏற்றுவோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலய 125 வருட ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழா வித்தியாலய மைதானத்தில் இன்று நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இளைஞர்களே எழுந்து வாருங்கள், தலைமை தாங்குங்கள், தாய் பூமியை, தாய் நாட்டை, தாய் மொழியை, தாய் இனத்தை காப்பாற்றுவோமானால் அத்தகைய இளைஞர்களுக்கு நாம் உரிய இடத்தை வழங்க வேண்டும். இடத்தை பெற்றுக் கொள்ள ஊக்குவிப்பை வழங்க வேண்டும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

தமிழர்கள் ஆட்சி அமைக்கும் காலம் வரும் போது கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அமைச்சராக வரும் காலம் வரும். இருபது வருடங்களாக நான் தெருவில் இருந்து போராடியுள்ளேன்.

2005ஆம் ஆண்டுகளில் கொழும்பு தலைநகர் தெருவில் ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க, விக்ரம கருணாரட்ண, ஜயசூரிய, பிரயாண குணரெட்ண ஆகியோர் காணாமல் போதல், கடத்தல் சம்பவத்திற்கு எதிராக கலமிரங்கினோம்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ரவிராஜ் அன்றைய ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டார். லசந்த விக்ரமதுங்க நடுத்தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். வெகு விரைவில் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவோம்.

அதன் பிற்பாடு என்னை கொலை செய்ய மூன்று தடவை முயற்சித்தார்கள். அவர்கள் கில்லாடி என்றால் நான் பலே கில்லாடி. அதனால் என்னை கொலை செய்ய முடியவில்லை என்றார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/119753?ref=morenews

Categories: merge-rss, yarl-category

மாகாண அதிகார வரம்பிற்குள் தலையீடு செய்யும் வடக்கு ஆளுனர் - சிறீதரன் எம்.பி காட்டம்

ஊர்ப்புதினம் - Mon, 03/10/2016 - 19:21

அண்மையில் கௌதாரிமுனை மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கொண்டுவந்ததை அடுத்து அப்பகுதிக்கு பூநகரி பிரதேச செயலாளருடன் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அங்கு நடைபெறுகின்ற அபிவிருத்திட்டங்களை பார்வையிட்ட பின் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

இந்த பூநகரி பிரதேசம் பல தொன்மை வரலாறுகளை கொண்டது. குறிப்பாக பூநகரி கோட்டை மண்ணித்தலை சோழர் கால சிவன் கோவில் என்று கூறிக்கொண்டு போகலாம்.

நீங்கள் இருக்கும் இந்த கௌதாரிமுனைப் பகுதியும் கூட தமிழர்களின் தொன்மை வரலாற்றை கொண்டு காணப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஆனால் இன்று இந்த வரலாறுகளை முழுமையாக இல்லாமல் ஆக்குவதற்கு பல முனைப்புக்களில் பலர் பல முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தில் பொன்னவெளிப்பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் முருகற் பாறை அகழ்விற்கு வந்தார்கள் நாங்கள் அதனை தடுத்து நிறுத்தினோம்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதைவிட பாருங்கள் எங்களிடம் வடக்கு மாகாண சபை இருக்கும் போது எங்களின் கனிய வளங்களை அழிக்கும் நோக்கில் வடக்கு ஆளுநர் இப்பகுதியிலே மாத்தறைப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு கபானா வகை சுற்றுலா விடுதி அமைப்பதற்க்கான அனுமதியை வழங்குமாறு பிரதேச சபையை பணித்திருக்கிறார்.

குறித்த விடுதி கட்டுபவர் காணி உரிமையை எவ்வாறு பெற்றார்.? அக்காணிகளுக்குரிய மூல ஆவணங்கள் யாருடையவை...? என்பவற்றிக்கு தெளிவான பதில் இல்லை.

அரச காணிகளுக்கு கள்ள உறுதிகளை முடித்து விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றரர்கள் பிரதேச சபை மாகாண சபையின் அதிகாரங்களுக்கு உட்பட்ட இவ்விடயத்தை ஆளுனர் கையில் எடுத்திருப்பதன் நோக்கம் தான் என்ன?

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இவ்வாறு தான் எம் மீதான இன அழிப்பு நடைபெறுகின்றது . இவற்றுக்கு எல்லாம் அப்பால் எங்களுடை விடுதலை போராட்ட வரலாற்றை கூட இந்த பூநகரி மண் பேசும்.

பல மாவீரர்கள் இந்த விடுதலைப்போராட்டத்தில் மடிந்தார்கள் அவர்களின் கனவுகள் நிறைவேற நாங்கள் எங்களுக்குள் ஒர் அணியாக இருக்க வேண்டும். இழந்த எங்கள் இனத்தின் தனித்துவத்தை ஜனநாயக ரீதியில் வென்ற எடுக்க எங்களை பாராளுமன்றம் அனுப்பினீர்கள்.

உங்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டிய பெறுப்பு எங்களுக்கு உண்டு. இதனால் தான் இன்று நாங்கள் உங்கள் பகுதி வந்திருக்கின்றோம். உங்களின் அடிப்படை பிரச்சனைகள் பலவற்றை எங்களுக்கு கூறினிர்கள்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இங்கு பூநகரி பிரதேச செயலாளரும் வந்திருக்கின்றார் உங்கள் பிரச்சனைகள் தொடர்பில் அவருடன் கதைத்து தீர்க்கமான முடிவினை உங்களுக்கு நாங்கள் பெற்றுத்தருவோம் என்றார்

இந்த விஜயத்தின் போது பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வேழமாலிகிதன் மற்றும் கட்சியின் பெரியபரந்தன் அமைப்பாளர் ஜதீஸ் மற்றும் உருத்திரபுரம் பிரதேச அமைப்பாளர் திலக்சன் கிராம சேவையாளர் சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

http://www.tamilwin.com/politics/01/119769?ref=home

Categories: merge-rss, yarl-category

முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராட்டிய மஹிந்த!

ஊர்ப்புதினம் - Mon, 03/10/2016 - 19:17

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கான தீர்வு, வேலைவாய்ப்பு, வீதிகள் அபிவிருத்தியின்மை, விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கமும் வட மாகாண சபையும் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லையென தெரிவித்த மஹிந்த, இதனால் மக்கள் கொந்தளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அரசாங்கமும் வட மாகாண சபையும் மக்களை திசைதிருப்புவதாகவும், அதன் ஒரு செயற்பாடாகவே ‘எழுக தமிழ்’ பேரணி போன்றவை நடத்தப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது தென்னிலங்கையில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப் படும் நிலையில் நேற்று வரை விமர்சனங்களை முன்வைத்த மஹிந்த ராஜபக்ச திடீர் என பாராட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளமை அரசியல் காய் நகர்த்தல் என்பதுடன் தமிழ் மக்கள் மத்தியில் நற் பெயரை வாங்குவதற்கு எத்தனிப்பதாக அமையும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

http://www.tamilwin.com/politics/01/119739?ref=editorpick

Categories: merge-rss, yarl-category

ஓட்டமாவடியில் இருந்த பிள்ளையார் ஆலய காணியை சுவீகரித்தது ஹிஸ்புல்லா

ஊர்ப்புதினம் - Mon, 03/10/2016 - 19:14

ஓட்டமாவடி பகுதியில் இருந்த பிள்ளையார் ஆலயம், மயானம் மற்றும் மக்களின் காணிகள் என்பவற்றை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக இருந்த போது தான் சுவீகரித்தேன் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் வெளியிட்ட ஒலி நாடா என்னிடம் உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலய 125 வருட ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழா வித்தியாலய மைதானத்தில் இன்று நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முறாவோடைக் கிராமமானது பூர்வீக தமிழ் கிராமம். இக்கிராமத்தின் எல்லை தற்போது உள்ளவையல்ல. அவை நாடளவில் சுவீகரிக்கப்பட்டு சகோதர இனத்தவர்கள் இக்கிராமத்திற்குள் ஊடுருவி விட்டார்கள்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

யுத்த சூழலால் இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து சென்றவர்களின் சிலர் இங்கு இன்னும் குடியேறவில்லை. மீள்குடியேறியவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் சிலர் இங்கு இன்னும் வரவில்லை.

இக்கிராம மக்கள் இங்கு குடியேறினால் நாங்கள் இன்னொருவருடன் சண்டைபோட வேண்டிய தேவையில்லை. ஒப்பக் காணிகள் உள்ள போதிலும் அதில் குடியேறாமல் இருந்ததால் தற்போது காணிக்காக போராடுகின்றோம்.

இங்குள்ள ஆலயத்திற்குள் இந்து சமயத்திற்கு முரணான பொருட்கள் வீசப்படுவதாகவும், இக்கிராம பெண்கள் வெளியே செல்லும் போது சேட்டைகளையும் செய்வதும் சகோதர இனத்தவர்களின் செயற்பாடானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

இக்கிராம மக்களின் காணிகள் பல சுவீகரிக்கப்பட்டுள்ளது. இவ்விடயமாக பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டால் பாரபட்டசமாக நடவடிக்கையே இடம்பெறுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இப்போது அத்துமீறி இப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் விபரங்களை உடனடியாக பொலிஸார் பெற்றுக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

நாங்கள் இன்னொருவரின் காணிகளை, பொருட்களை சுவீகரிக்கச் செல்லவில்லை. எங்கள் மக்களின் வாழ்விடங்களை சுவீகரிக்கின்றார்கள்.

அதில் எங்கள் மக்களில் தவறு உள்ளது. சில காணிகளை விற்றதும் நமது மக்களே. இதனாலே ஆலயத்திற்கு முன்னால் பொருட்களை வீசக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

நான் சகோதர மக்களுக்கு எதிரானவர் அல்ல. அந்த மக்களுக்கும் காணிகள் தேவை. அவ்வாறு காணிகள் தேவையெனில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கத் தேவையில்லை. தங்களுக்குரிய இடங்களை அரசுடன் பேசி பெற்றுக் கொள்ள வேண்டும்.

http://www.tamilwin.com/community/01/119784?ref=youmaylike3

 

 

Categories: merge-rss, yarl-category

இரணைமடு குளத்தின் நிர்மாணப் பணியில் ஈடுபட்ட இளம் பொறியியலாளர் பலி

ஊர்ப்புதினம் - Mon, 03/10/2016 - 18:41
இரணைமடு குளத்தின் நிர்மாணப் பணியில் ஈடுபட்ட இளம் பொறியியலாளர் பலி

 

இரணைமடு குளத்தின் நிர்மாணப் பணியில் ஈடுபட்ட இளம் பொறியியலாளர் பலி


கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளம் பொறியியலாளர் கணகராசா கோபிநாத் 25 வயது என்பவர்  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் 03.10.2016 இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.  அவசரஅவசரமாக இராப்பகலாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136613/language/ta-IN/article.aspx

Categories: merge-rss, yarl-category

பிபிசி தொலைக்காட்சி செய்திகள் 03/10/2016

 

இன்றைய நிகழ்ச்சியில்,
* கொலம்பியாவில் பல்லாண்டு போருக்கு முடிவு காண்பதற்கான போர்நிறுத்ததை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நிராகரித்தது. அமைதிக்காக போராட ஃபார்க் அமைப்பும், கொலம்பிய அதிபரும் உறுதி.
* எத்தியோப்பியாவில் ஐம்பது பேர் கொல்லப்பட்டது குறித்து முரண்பாடு. பாதுகாப்பு படையினர் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் குற்றஞ்சாட்ட, பிரதமரோ ஆர்ப்பாட்டக்காரர்களை குறை கூறுகிறார்.
* சிலியில் கருக்கலைப்பு சட்டத்தை மாற்ற தீவிர முயற்சி. கருக்கலைப்புக்கு அனுமதி அவசியம் என்கிறார் பெண் அதிபர்.

Categories: merge-rss, yarl-world-news

விசாரணை

எனக்கு முன்னால் இருந்த நாற்காலியில் முழுக்கை நீல நிற மேலங்கியுடன், மெல்லியதேகமும் நிமிர்ந்த பார்வையும் கொண்ட அவனின் கண்களை உற்று நோக்கினேன். எனது தேடலுக்கு எந்தவித பலனும் இல்லாமல் அவனது கண்கள் இருந்தன.

மெல்லிய நீல வர்ண பூச்சுடன் இருந்த ஒரு தனியறையில் என்னையும் அவனையும் தவிர வேறு ஒருவரும் இல்லை. எமது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு கொண்டு இருந்தன. அவற்றில் 50 வீதத்துக்கும் அதிகமாக மௌனமே பதியப்பட்டிருந்தது. வாசலில் இரண்டு காவலர்கள் விசாரணை முடிவுக்காக அசைவின்றி காத்திருந்தார்கள்.

"நான் அதை செய்யவில்லை" என்பதை தவிர அவனிடம் இருந்து வேறு எந்த பதிலும் எனக்கு உருப்படியாக கிடைக்கவில்லை. 

அம்மான் கரும்புலிகளுக்காக ஆற்றிய உரையை பொதுவெளி இணைய பாவனையில் இருந்த ஒரு கணினியில் தரவேற்றம் செய்திருந்த குற்றத்திற்கான சந்தேகத்தின்  பெயரில் அவனை கைது செய்திருந்தார்கள். அந்த துறை சார் நிர்வாகத்தில் துணைப்பொறுப்பாளர் இவன். 

அவன் புலம்பெயர் நாட்டில் இருந்து போராளியாக தன்னை இணைத்து கொண்டவன். அவனது குடும்பமே இயக்கத்துக்காக பல்வேறு பணிகளில் செயற்பட்டு கொண்டிருந்தார்கள். அவனது குடும்பத்தின் மீதிருந்த நம்பிக்கையும், மதிப்பும் அவன் அந்த குற்றத்தை செய்திருப்பதற்கான வாய்ப்புகளை மழுங்கடித்திருந்தன.

இருந்தாலும் விசாரணை அனைவருக்கும் பொதுவானது.

இதே சம்பவத்தில்,  இவனது பொறுப்பாளர் கைது செயற்பட்டு, ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர், தண்டனைக்காக பாலம்பிட்டி களமுனைக்கு அனுப்பப்படிருந்தான். களமுனையில் விழுப்புண் அடைந்த நிலையில் அவன் அனுப்பிய கடிதம் எங்களை வந்து சேரும் போது அவன் வீர மரணத்தை தழுவி இருந்தான். அவனது கடிதம், மற்றும் கணினி துறைசார் வல்லுநர்களின் ஆராய்ச்சிக்கு பிறகே குற்றவாளியாக இவன் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தான்.

 பொறுப்பாளர்- துணை பொறுப்பாளர்களுக்கு இடையே இருந்த ஈகோ, தன்னைவிட கல்வியறிவில், துறைசார் அறிவில் குறைந்த ஒருவன் தன்னைவிட  உயர்பதவியில் இருந்ததை ஒப்புக்கொள்ள மறுத்த மனதினால் எழுந்த வினையே இவனை அப்படி ஒரு காரியத்தை செய்ய தூண்டி இருந்ததாக முன்னைய விசாரணையாளர்கள் அறிக்கை என் முன்னே இருந்தது. 

இவன் தான் அந்த குற்றத்தை செய்திருந்தான் என்பதை கணினியே காட்டி கொடுத்த விண்டோஸ் log அறிக்கையும் சேர்த்தே இணைத்திருந்தார்கள். 

முழு அறிக்கையையும், சான்றாக கிடைத்த விண்டோஸ் log கோப்பையும் அவனிடம் கொடுத்தேன். வாசித்து முடித்த பின்னரும் அவன் கண்களில் எந்தவித சலனமும் இல்லை. 

எதற்காக இப்படி செய்தாய்.? உன்னால் ஒரு அருமையான போராளி தணடனை பெற்று களத்தில் காவியமானது கூட உன் மனதை சுடவில்லையா.? நான் ஐந்தாம் முறையாக அவனிடம் கேட்டேன்.

மீண்டும் அதே பதில் நான் இதை செய்யவில்லை. உண்மையில் அவன்தான் குற்றவாளி என்று நீக்கமற உறுதி செய்திருந்தாலும் அதை வெளியே சொல்லக்கூடிய தைரியத்தை அவனது ஈகோ தின்று விட்டு இருந்தது.

இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. உனக்கான தண்டனையை நாளை இறுதி செய்வோம் என்று கூறிவிட்டு எழுந்தேன். பயம் அவன் கண்களில் லேசாக தெரிந்தது. காட்டி கொள்ளாமல் மேசையில் இருந்த குவளையில் தண்ணீரை மென்று குடித்தான்.

வெளியே வந்த நான், காவலர்களிடம் அவனது கழுத்தில் இருக்கும் சயனைட் வில்லைகளை கழற்றி விட்டு, 1-9 முகாமின் தனியறையில் காவலில் வைக்கும்படி கூறினேன். ஏனைய போராளிகள் அவனது முகத்தை காணாமல் இருக்க முகமூடி அணிவிக்கும்படி கூறினேன். 

அம்மானிடம் சென்று விசாரணை  முழு அறிக்கையையும் கொடுத்துவிட்டு, இது எந்த வித தேச துரோக நடவடிக்கையும் இல்லை என்று தெளிவுற விளக்கினேன், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவனது போராடடத்துக்கான பங்களிப்பு, குடும்ப பங்களிப்பை கருத்தில் கொண்டு  வேறு துறைக்கு மாற்றி விடுதலை செய்வது என்று முடிவு எடுத்திருந்தோம். இரவை தாண்டி இருந்தமையால் காலையில் அவனிடம் சொல்லி விடுதலை செய்ய அதிகாரி ஒருவரை நியமித்து விட்டு விடைபெற்றேன்.

அந்த அதிகாரி அதிகாலையிலேயே விடுதலை முடிவோடு 1-9 முகாமின் தனி அறையை திறந்தபோது, வாயிலே சயனைட் வில்லையுடன் அவனது உடலில் இருந்து உயிர் நிரந்தர விடுதலை பெற்று இருந்தது.

அவன் அருகே இருந்த அந்த ஒற்றை காகிதத்தில், "நான் அதை  செய்யவில்லை செய்தவனை கண்டுபிடியுங்கள் " என்ற ஒற்றை வாக்கியமே எஞ்சி இருந்தது.

அந்த வாக்கியம் என் போன்ற எத்தனையோ விசாரணையாளர்களின்  பல நாள் தூக்கத்தை தொலைத்திருந்தது. 

 

 

 

Categories: merge-rss

தாஜூதீனின் உடற்பாகங்களை தேடி கல்லூரியில் திடீர் சோதனை : 26 மனித உடற்பாகங்கள் கண்டு பிடிப்பு

ஊர்ப்புதினம் - Mon, 03/10/2016 - 15:06
தாஜூதீனின் உடற்பாகங்களை தேடி கல்லூரியில் திடீர் சோதனை : 26 மனித உடற்பாகங்கள் கண்டு பிடிப்பு

 

 

றக்பி வீரர், வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பரிசோதனையின் போது காணாமல் போன உடல் பாகங்கள் தொடர்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனை செய்த குற்றப் புலனாய்வு பிரிவினர் 26 மனித உடற்பாகங்களை கைப்பற்றியுள்ளனர்.D000000000000000ddd.jpg

றக்பி வீரர், வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பரிசோதனையின் போது காணாமல் போன உடல் பாகங்கள் தொடர்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை திடீர் சோதனை செய்த குற்றப் புலனாய்வு பிரிவினரும் வைத்திய நிபுணர்களும் 26 மனித உடற்பாகங்களை கைப்பற்றியுள்ளனர்.

http://www.virakesari.lk/article/12021

Categories: merge-rss, yarl-category

அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலும் அஸ்வின் 400 விக்கெட்டுகள்

அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலும் அஸ்வின் 400 விக்கெட்டுகள்

 

 
 ராய்ட்டர்ஸ்.
ராஸ் டெய்லர் விக்கெட்டைக் கைப்பற்றிய அஸ்வின். | படம்: ராய்ட்டர்ஸ்.

38 டெஸ்ட்கள், 101 ஒருநாள் போட்டிகள், 45 டி20 சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ள அஸ்வின் தனது 400-வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

கொல்கத்தாவில் இன்று இந்தியா வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியதோடு, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது. இதில் 2-வது இன்னிங்சில் நியூஸிலாந்து பொறுப்பு கேப்டன் ராஸ் டெய்லர் விக்கெட்டைக் கைப்பற்றிய போது அஸ்வின் தனது 400-வது சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றினார்.

மொத்தம் 185 சர்வதேச போட்டிகளில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து ஆடியுள்ள அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 38 போட்டிகளில் 207 விக்கெட்டுகளையும், 102 ஒருநாள் போட்டிகளில் 142 விக்கெட்டுகளையும் 45 டி20 போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மொத்தம் 401 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 19 முறை 5 விக்கெட்டுகளையும், 5 முறை ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/அனைத்து-சர்வதேச-கிரிக்கெட்டிலும்-அஸ்வின்-400-விக்கெட்டுகள்/article9180514.ece?homepage=true

Categories: merge-rss

எழுகதமிழ் பேரணிக்கு பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளனர் - மகிந்த

ஊர்ப்புதினம் - Mon, 03/10/2016 - 14:18
எழுகதமிழ் பேரணிக்கு பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளனர் - மகிந்த

 

எழுகதமிழ் பேரணிக்கு பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளனர் - மகிந்த
வடக்கில் இடம்பெற்ற எழுகதமிழ் பேரணிக்கு பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். வெலிகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்ற எழுக தமிழ்பேரணியின் பின்னால் அரசில்  உள்ள சிலர் உள்ளனர், பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு, நாமும்  பார்த்துக்கொண்டுதானிருக்கின்றோம், சுவரை நோக்கி எம்மை தள்ளிச்செல்ல முடியும் ஆனால் சுவரில் சாய்ந்து மன்னிப்பு கேட்கும் இனம் அல்ல சிங்களவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136600/language/ta-IN/article.aspx

Categories: merge-rss, yarl-category

ஜப்பானியருக்கு மருத்துவத்துக்கான நோபல்! #NobelPrize #Medicine

ஜப்பானியருக்கு மருத்துவத்துக்கான நோபல்! #NobelPrize #Medicine

oshoo.jpg

லகின் உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுக்க அறிவிக்கப்படும். இன்று ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில், மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வருடத்துக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, ஜப்பான் நாட்டை சேர்ந்த யோஷினோரி ஓஷுமிக்கு வழங்கப்பட உள்ளதாக நோபல் கமிட்டி அறிவித்தது.

Ct1TPljWEAARPge.jpg

BREAKING NEWS The 2016 #NobelPrize #Medicine awarded to Yoshinori Ohsumi @tokyotech_en ”for his discoveries of mechanisms for autophagy”

ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் செல் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோபேஜி என்றால் தன்னைத்தானே உண்ணுதல் என்று பெயர். யோஷினோரி ஓஷூமி ஜப்பான் நாட்டில் இருந்து நோபல் பரிசைப் பெறும் 23-வது நபர். ஜப்பான் நாட்டில் இருந்து, மருத்துவத்துறைக்காக பெறும் 6-வது நபர் ஆவார். பயோமெடிக்கல் துறையில் தீவிர ஆராய்ச்சியில் இருக்கும் பிரிவுகளில் ஒன்று, இந்த ஆட்டோபேஜி. அதில் மிக விரிவான ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார் ஓஷூமி.

ஓஷூமி 1945ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தவர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1974-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றவர். டோக்கியோ தொழில்நுட்ப கல்லூரியில் 2009-ம் ஆண்டு முதல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஆட்டோபேஜி என்பது நமது உடல் செல்கள் தன்னைத்தானே உண்பது. இது ஆரோக்கியமற்ற விஷயமாக தெரிந்தாலும், இதுதான் நமது உடலின் மிக முக்கியமான தற்காப்பு நடவடிக்கை. பழைய செல்களை அழிப்பதற்கும், புதிய செல்களை உருவாகவும் இதுதான் உதவுகிறது. இந்த ஆட்டோபேஜி முறையில் நடக்கும் குளறுபடிகள்தான் பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. இப்படி ஆட்டோபேஜி முறையினை தடுக்கும் ஜீன்களை ஓஷூமி கண்டறிந்திருக்கிறார். இவை பெரும்பாலான நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு விடையாக அமைந்திருக்கின்றன. ஆட்டோபேஜியானது  பார்க்கின்சன், டைப் 2 சர்க்கரை வியாதி,பரம்பரை வியாதிகள் உட்பட பல வியாதிகளுடன் தொடர்புடையது. இந்த ஆட்டோபேஜியை குறிவைத்து மருந்துகள் தயாரிக்க, தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. 

”I was surprised. I was in my lab” says Yoshinori Ohsumi on being awarded the 2016 #NobelPrize #Medicine. Interview to follow!

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நேரத்தில் தனது ஆய்வகத்தில் ஆராய்ச்சியில் இருந்திருக்கிறார் ஓஷூமி. "எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நான் எனது லேப்பில் இருந்தேன்" என்கிறார் ஓஷூமி. இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளையும், வேதியியலுக்கான நோபல் பரிசு 5-ம் தேதியும், அமைதிக்கான நோபல் பரிசு 7-ம் தேதியும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 10-ம் தேதியும், இலக்கியத்திற்கான நோபல் அதற்குப் பின்னரும் அறிவிக்கப்படும்.

http://www.vikatan.com/news/world/69105-nobel-prize-in-medicine-awarded-to-yoshinori-ohsumi.art

Categories: merge-rss, yarl-world-news

அரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள்

அரசியல்-அலசல் - Mon, 03/10/2016 - 13:23
அரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள் 

 

தமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில் அணிதிரண்ட முதல் வெகுஜன அரசியல் போராட்ட இயக்கமாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் இப் பேரணி தமிழர் அரசியலில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நிற்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாகும். 

D0225540.jpg

தமிழ் மக்களை இன்று அழுத்திக் கொண்டிருக்கின்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு விரைவானதும் உருப்படியானதுமான தீர்வுகளை வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘எழுக தமிழ்' பேரணி, தமிழ் மக்கள் பேரவையின் தலைவர்கள் என்னதான் விளக்கங்களைக் கூறினாலும்இ அரசாங்கத்தை நோக்கியதாக மாத்திரமல்ல, இன்று இலங்கைத் தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறிப்பாக, அதன் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை நோக்கியதாகவும் விளங்கியது என்பதே உண்மையாகும். 

மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின் அவலங்களில் இருந்து இன்னமும் முழுமையாக விடுபட முடியாதவர்களாக இருக்கும் தமிழ் மக்கள் தங்களது  பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசியல் போராட்டங்களில் மீண்டும் இறங்குவதில் பெரிதாக அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இல்லை என்று பரவலாக கருதப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் யாழ். நகரப் பேரணி நிச்சயமாக வித்தியாசமான ஒரு செய்தியைக் கொடுத்திருக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. தமிழ் மக்கள் பேரவையினால் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் இந்த வகையாக மக்களை பெருமளவுக்கு அணித்திரட்டக் கூடியதாக இருந்ததைப் போன்று வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் செய்ய இயலுமாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எது எவ்வாறிருப்பினும்இ  தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்பதையும் அதற்காக அவர்கள் தைரியமான ஒரு தலைமைத்துவத்தை தேட ஆரம்பித்துவிட்டார்கள் அல்லது இப்போது இருக்கக்கூடிய தலைவர்கள் தங்களது அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை எழுகிறது என்பதை சுட்டிக்காட்ட முனைந்து நிற்கிறார்கள் என்பதையுமே ‘எழுக தமிழின்’ மூலமான செய்தியாகப் பார்க்க வேண்டும்.

14469705_1746844508676471_43607990847744

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ –மூனை யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்துப்பேசி இன்றுடன் சரியாக ஒருமாதம் பூர்த்தியாகிறது. செயலாளர் நாயகத்திடம் சம்பந்தன்  தெரிவித்த ஒரு விடயத்தை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். போருக்குப் பின்னரான கால கட்டத்தில் தமிழ் மக்களை அழுத்திக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகளையெல்லாம் பான் கீ –மூனுக்கு விளக்கிக்கூறிய அவர்இ  சுயாட்சிக்கான தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் தவறுமேயானால் நாட்டில் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளை அரசாங்கத்தினால் நிருவகிக்க முடியாத நிலைமையை அவர்கள் ஏற்படுத்துவார்கள் என்று கடுமையான தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார். பாராளுமன்றத்தில்  எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றபோதிலும்இ  தற்போதைய அரசாங்கத்துடன் இணக்கப்போக்கொன்றைக் கடைப்பிடிக்கின்ற சம்பந்தன்இ அரசியல் தீர்வு விடயத்தில் கொழும்பு அரசாங்கத்தினால் தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுவிடக்கூடும் என்ற அச்சத்தை உணர்வதினால்தான் போலும் அத்தகைய எச்சரிக்கையை தனது  சுபாவத்துக்கு முரணானவகையில் பான் கீ – மூனிடம் விடுத்திருந்தார். தமிழர் பிரதேசங்களை அரசாங்கத்தினால்  ஆட்சி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும் என்று சம்பந்தன் கூறியதை நாம் சத்தியாக்கிரகப் போராட்டம்இ ஒத்துழையாமை இயக்கம் என்று தான் அர்த்தப்படுத்த வேண்டும். மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த ஆயுதப் போராட்டத்தைப் போன்று மீண்டுமொரு போராட்டத்தை தமிழர்களினால் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்குமென்று யாரும் நினைக்கமாட்டார்கள். 

இத்தகையதொரு பின்புலத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை இணைத் தலைவராகக் கொண்டு செயற்பட்டு வருகின்ற தமிழ் மக்கள் பேரவை மக்களை வீதிப் போராட்டங்களுக்குத் தயார் செய்ய ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. போரின் முடிவுக்குப் பின்னரும் கூட தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில் கிஞ்சித்தேனும் அக்கறை காட்டாத ராஜ பக் ஷ ஆட்சியின் இராணுவவாத அரசியலின் அடாவடித் தனங்களுக்குப் பிறகு 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் நாட்டில் ஒப்பீட்டளவில் ஒரு ஜனநாயக வெளியை தோற்றுவித்திருக்கிறது என்பதை இன்றைய அரசாங்கத்தை விரும்பாதவர்கள் கூட ஒத்துக் கொள்வார்கள். அத்தகைய ஜனநாயக வெளியை தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வேண்டி உறுதியான முறையில் குரல் கொடுப்பதற்கும் ஆட்சியாளர்கள் மீது நெருக்குதல்களைப் பிரயோகிப்பதற்கும் நிச்சயம் பயன்படுத்தியேயாகவேண்டும் முற்றிலுமாக இணக்கப்போக்கு அரசியலில் கவனத்தைக் குவித்திருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக்கட்சியென்றே சொல்வோம்) தலைவர்கள் ஜனநாயக ரீதியான வெகுஜனபோராட்டங்களுக்கு தமிழ்மக்களைத் தயார்படுத்த வேண்டுமென்பதில் அக்கறை காண்பிக்காத இடைவெளியை தமிழ் மக்கள் பேரவை நிரப்புவதற்கு முயற்சிக்கிறது. பேரவையின் தலைவர்களைப் பொறுத்தவரை யாழ். நகர் “எழுக தமிழ்” பேரணி அவர்களுக்குப் ெபரும் நம்பிக்கையூட்டுவதாக  அமைந்துவிட்டது.

14359271_1746844448676477_17941421420377

தங்களது அரசியல் அணுகுமுறைக்கும் தந்திரோபாயங்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பயனின் தொடக்கமாக இவர்கள் இதைக் கருதுவதை அவர்களின் கருத்துக்களின் மூலம் உணரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் “எழுக தமிழ்”போன்ற வெகுஜன அணிதிரட்டல் இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலமாக தமிழர் அரசியலின் தலைமைத்துவத்தை தமதாக்குவதில் அவர்கள் அக்கறையும் காட்டுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனான அணி சேருகை இவர்களுக்கு இது விடயத்தில் மேலும் தெம்பூட்டக்கூடும்.

யாழ். நகர் “எழுக தமிழ்” பேரணியில் தமிழ்மக்கள் பேரவையின் தலைவர்களினால் நிகழ்த்தப்பட்ட உரைகளிலும் அங்கு வெளியிடப்பட்ட பிரகடனத்திலும் உள்ளடங்கியிருக்கும் கோரிக்கைகளையும் வலியுறுத்தல்களையும்  பற்றி இங்கு பிரத்தியேகமாகக் குறிப்பிட வேண்டியதில்லை. ஏனென்றால் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களின் சார்பில் தமிழ் அரசியல் சமூகத்தினால் முன்வைக்கப்பட்டு வந்திருக்கும் முக்கியமான கோரிக்கைகளே அவையாகும்.

இது விடயத்தில் தமிழ் மக்கள் பேரவையின் தலைவர்களுக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடே கிடையாது. அணுகுமுறைகள் குறித்தே வேறுபாடு.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத்து வருகின்ற கோரிக்கைகளும் அவரது அரசியல் பேச்சுக்களும் தமிழர் அரசியலை மீண்டும் தீவிரவாத மயப்படுத்தும் செயற்திட்டமொன்றின் அங்கம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.. உண்மையிலேயே அவரால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளோ அல்லது உரைகளில் அவர் வெளிப்படுத்துகின்ற கருத்துக்களோ தமிழர் அரசியல் உரிமைப் போராட்டத்தின் இதுவரையான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தீவிரவாதத்தன்மை கொண்டவையல்ல. தமிழ் மிதவாதத் தலைவர்கள் காலங்காலமாக முன்வைத்துவந்திருக்கக் கூடிய அரசியல் கோரிக்கைகளை புதிய சூழ்நிலைகளின் கீழ் –  அதாவது போரின் முடிவுக்குப் பின்னர் தமிழர் மத்தியில் வலுவான ஒரு அரசியல் சமுதாயம் இல்லாமல் இருந்துவந்த சூழ்நிலைகளின் கீழ் அவர் மீண்டும் முன்வைக்கிறார். என்றுதான் நோக்க வேண்டும். 

விக்னேஸ்வரன் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக சம்பந்தனால் முன்வைக்கப்பட்ட கோரிக் கைகளையும் கருத்துக்களையும் கூட நாட்டுப் பிரிவினையை மீண்டும் தூண்டுபவை என்றுதான் தென்னிலங்கை இனவாதிகள் வர்ணித்தார்கள். தமிழ் மக்களுடைய நியாயபூர்வமான எந்தவொரு கோரிக்கையையும் ‘இனவாதத்தன்மை’ கொண்டதாக தென்னிலங்கையில் சிங்கள மக்களுக்கு காட்சிப்படுத்தி மிக எளிதாகவே அரசியல் இலாபம் கிடைக்கக்கூடிய  அளவுக்கு சிங்கள இனவாதம் மலைபோல் வளர்ந்து நிற்பது பெரும் கவலைக்குரியது. 

தமிழரசுக் கட்சியின் தலைவர்களுடைய அணுகு முறை களையும் செயற்பாடு களையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பெருமளவுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வெளிப்படையானது. இன்றைய அரசாங்கத்தை எவ்வாறு தமிழர்களின் நலன்களுக்காக பயன்படுத்துவது என்பதில்தான் அவருக்கும் சம்பந்தனுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகிறது. போருக்குப் பின்னரான சூழ்நிலைகளில் மனிதஉரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கவேண்டிய பொறுப்புக்கூறலுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் கொழும்பு மீது சர்வதேச சமூகம் பிரயோகிக்கின்ற நெருக்குதல்களை அடிப்படையாகக் கொண்டே தமிழர் அரசியல் சமுதாயம் இன்று பொதுவில் அதன் அரசியல் அணுகுமுறையையும் தந்திரோபாயத்தையும் வகுத்துச் செயற்படுகிறது. தமிழர்களை அழுத்துகின்ற பிரச்சினைகளை உலகிற்கு கூறுவதே தமிழர் அரசியல் சக்திகள் இன்று பிரதானமாகச் செய்கின்ற காரியம். இது விடயத்தில் விக்னேஸ்வரனும் அவ்வாறே செயற்படுகிறார். ஆனால் இணக்கப் போக்கு அரசியல் ஒன்றை கொழும்புடன் செய்வதற்கு அவர் தயாரில்லை. அதுவே ஒரு வித்தியாசம். தற்போதைய அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணுகின்ற மார்க்கங்களை ஆராயுமாறே சர்வதேச சமூகம் தமிழர் தலைவர்களை அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகிறது. விக்னேஸ்வரனைச் சந்தித்த சர்வதேச சமூகப் பிரதிநிதிகள் பலரும் கூட இதையே இவரிடம் வலியுறுத்தியிருந்தார்கள்.அத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் பேரவையும் விக்னேஸ்வரனும் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கின்ற வெகுசன அணிதிட்டலை சர்வதேச சமூகம் எவ்வாறு நோக்குகிறது என்பதும் முக்கியமான கேள்வி.

எது எவ்வாறெனினும்,  தமிழ் மக்கள் தங்களது அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் அடுத்த கட்டம் பற்றி  சிந்தித்தாக வேண்டியிருக்கிறது. சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல தமிழ் மக்களை அதற்குத் தயார்படுத்துவதற்கான அரசியல் துணிவாற்றலையும் விவேகத்தையும் தமிழ் தலைமைத்துவங்கள் வரவழைத்துக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் பேரவையின் தலைவர்களைப் பொறுத்தவரை தங்களது தற்போதைய அணுகுமுறையும் செயற்பாடுகளும் தான் அந்தத் தயார்படுத்தல் என்று கூறுவார்களாக இருந்தால் வீதியில் இறங்குகின்ற தமிழ் மக்கள் அடுத்து போக வேண்டிய அரசியல் பாதை எது என்பதை அவர்கள் தெளிவாக முன்வைக்க வேண்டும். மக்களை வீதிக்கு இறக்கிவிட்டு அவர்கள் திரும்பிச் செல்ல முடியாது.மீண்டும் தமிழர்களை அவலத்துக்குள்ளாக்காத பாதையாக அது இருக்க வேண்டும். 'எழுக தமிழை' எட்டிப்பிடித்துக் கொண்டு மேலும் கெம்புவதற்கு சிங்கள இனவாதம் தயாராகி விட்டது என்பதும்  கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

http://www.virakesari.lk/article/12019

Categories: merge-rss

டெங்கு ஒழிப்பு இறுதிநாளில் யாழ். கந்தர்மட பகுதி வீடொன்றில் கழிவுப்பொருட்கள் கண்டுபிடிப்பு

ஊர்ப்புதினம் - Mon, 03/10/2016 - 12:29
டெங்கு ஒழிப்பு இறுதிநாளில் யாழ். கந்தர்மட பகுதி வீடொன்றில் கழிவுப்பொருட்கள் கண்டுபிடிப்பு
 
 
டெங்கு ஒழிப்பு இறுதிநாளில் யாழ். கந்தர்மட பகுதி வீடொன்றில் கழிவுப்பொருட்கள் கண்டுபிடிப்பு
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு  இன்றையதினம் யாழ் கந்தர்மடம்   பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்ட நிலையில்  அங்குள்ள வீடொன்றில்  கழிவுப்பொருட்கள் கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.
 
ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு பணிமனையால் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளாகிய இன்று யாழ் பொலிஸ் பிரிவிக்கு்ட்பட்ட கந்தர்மடம் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது . இதன் போது குறித்த வீடு ஒன்றை பார்வையிட்ட அதிகாரிகள் வீட்டினுள் ஒரு அறையினுள் கிடந்த போத்தல்கள் , கழிவுப் பொருட்கள் , குப்பைகளைக் கண்டு வியந்தனர் அதோடு குறித்த வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கையும் மேற்கொண்டனர். 
 
இந்த  டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸார், இரானுவத்தினர் , சுகாதாரப்பிரிவினர் போன்றோர் பங்கு பற்றியிருந்தனர்.
 
14569653_1831203367113314_1565981967_n.jpg
 
14585393_1831203383779979_1451129403_n.jpg

http://onlineuthayan.com/news/18457

Categories: merge-rss, yarl-category

சுவிஸ் அமைச்சருடன் சி.வி. சந்திப்பு

ஊர்ப்புதினம் - Mon, 03/10/2016 - 12:27
சுவிஸ் அமைச்சருடன் சி.வி. சந்திப்பு
 
 

article_1475490552-1.jpg-எஸ்.ஜெகநாதன்

'இலங்கையில் இனரீதியான பாகுபாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பானது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் சுவிட்சர்லாந்தின் நீதியமைச்சர் சைமனேட்டா சொமாருகாவை யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (03) சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே முதலமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'மாறிமாறி ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், பாகுபாடுகளைத் தொடர்ந்து வந்தன. 1948ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்களின் ஆட்சியில் நாம் சகலரும் சமமாக நடத்தப்பட்டோம். பரீட்சைகள் உள்ளிட்ட சகலவற்றிலும் நாம் சமமாக போட்டியிட்டோம். பாகுபாடு இல்லாவிட்டால் சமமாக எம்மால் போட்டியிட முடியும் என அவருக்கு கூறினேன்' என்றார்.

'எனினும், 1948ஆம் ஆண்டின் பின்னர் இந்த நிலைமை மாற்றப்பட்டது. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர், இன ரீதியான பாகுபாடு ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து கல்வி தரப்படுத்தல்களால் தமிழ் மாணவர்கள் பலருக்கு, பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாது போனது. இவ்வாறான பாகுபாடுகள் தொடர்கின்றன என்பதை விளக்கினேன்.

இவ்வாறான பின்னணியில் கொண்டுவரப்படக்கூடிய அரசியலமைப்பானது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உண்மையில் பாகுபாடு காட்டாது சகலரும் சமமாக மதிக்கப்படுவர் என்ற நிலைமைய பெரும்பான்மையினர் உறுதிப்படுத்தினால் அரசியலமைப்பினால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்ற ரீதியில் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அதேநேரம், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும், இது இன்னமும் செய்யப்படவில்லை. நாட்டில் 17 பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் உள்ளன. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இவ்வாறான சில சம்பவங்கள் குறித்து பதிவாகியுள்ளன.

முன்னரைவிட நாட்டில் நிலைமைகள் மாறியுள்ளன. தற்பொழுது ஜனநாயகம் உள்ளது. கலந்துரையாடல்களுக்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. இருந்தபோதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திலிருந்து இளைஞர்கள் விடுவிக்கப்பட்டாலே தீர்வொன்று கிடைக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

வடக்கில் இராணுவப் பிரசன்னம் தொடர்ந்தும் அதிகமாகக் காணப்படுவதாகச் கூறினேன். யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் உள்ளனர். இவர்கள் தற்பொழுது ஓரளவுக்கு அடக்கி வைக்கப்பட்டுள்ள போதும், அவர்கள் பல ஏக்கர் கணக்கான காணிகளைப் பிடித்து வைத்திருப்பதுடன், அதில் விவசாயங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனைக் கேட்பதற்காகவே கடந்த வாரம் நாம் பேரணியை நடத்தியிருந்தோம்.

நாம் நடத்தியிருந்த பேரணியானது அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல. அரசியல் செயற்பாடுகளுக்கு பக்கபலமாக சிவில் சமூக அமைப்புக்கள் இருப்பது வழமையானது. அவ்வாறானதொரு அமைப்பின் ஊடாகவே தமிழ் மக்கள் தமது உணர்வுகளை வெளிக்காட்டியிருந்தனர் என்பதை அவருக்கு கூறினேன்' என முதலமைச்சர் மேலும் கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/183140/ச-வ-ஸ-அம-ச-சர-டன-ச-வ-சந-த-ப-ப-#sthash.7TZTuShA.dpuf
Categories: merge-rss, yarl-category