merge-rss

இரட்டை நிலைப்பாட்டில் தடுமாறும் அரசாங்கம்

அரசியல்-அலசல் - Sat, 21/01/2017 - 06:30
இரட்டை நிலைப்பாட்டில் தடுமாறும் அரசாங்கம்

 

இலங்கை தேயி­லைக்குப் பெயர் பெற்ற நாடாகும். உலகில் எந்­த­வொரு நாட்­டிலும் தேயி­லையைப் பற்றி குறிப்­பிட்டால், உட­ன­டி­யாக நினைவில் இலங்கை என்ற சின்­னஞ்­சி­றிய நாடே மனதில் நிழ­லாடும். சிலோன் என்று ஆரம்ப காலத்தில் அழைக்­கப்­பட்டு சிறி­லங்கா என பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள இலங்கை தேயி­லையின் மறு­பெ­ய­ரா­கவே உலக நாடுகள் பல­வற்­றி­னாலும் கரு­தப்­பட்டு வந்­தது. 

ஆனால் அந்த நிலை­மைகள் இப்­போது இல்லை. ஆங்­கி­லே­யரின் நாடா­கிய பிரித்­தா­னி­யாவில் இன்னும் இலங்கைத் தேயி­லைக்கு இருந்த மரி­யா­தையும் கௌவ­ரமும் இருப்­ப­தாகக் கருதப்­ப­டு­கின்ற போதிலும், உலக அரங்கில் மனித உரி­மை­களை மீறிய ஒரு நாடா­கவே இப்­போது இலங்கை உரு­வ­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. 

முப்­பது வரு­டங்­க­ளாக நில­விய போர்ச்­சூ­ழலில், இலங்­கையில் மனித உரி­மை­களும், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­களும் மீறப்­பட்­டி­ருப்­ப­தா­கவே குற்றம் சாட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இதனை தற்­போ­தைய அர­சாங்­கமும் உலக அரங்கில் கொள்­கை­ய­ளவில் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது.

மனித உரி­மைகள் மிக மோச­மான முறையில் மீறப்­பட்­டி­ருக்கின்றன என்­பதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் கொள்கை அளவில் ஏற்­றுக்­கொண்­டதன் கார­ண­மா­கவே அது­பற்­றிய பொறுப்பு கூறு­தலை வலி­யு­றுத்தி ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராகக் கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்கி ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது.

யுத்­தத்தைத் தீவி­ர­மாகக் கொண்டு நடத்­திய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான முன்­னைய அர­சாங்கம், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட யுத்­தத்தில் அர­ச­ப­டைகள் மனித உரி­மை­களை மீறிச் செயற்­ப­ட­வில்லை என முற்­றாக மறு­த­லித்­தி­ருந்­தது.

அதன் கார­ண­மா­கவே, ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில் தனக்கு எதி­ராகக் கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணையை அது ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அதற்கு வெளிப்­ப­டை­யாகத் தனது எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தது.

ஆனால் மஹிந்த ராஜ­பக்­ ஷவை ஜனா­தி­பதி தேர்­தலில் தோற்­க­டித்து ஆட்­சியைக் கைப்­பற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, மனிதஉரி­மைகள் மீறப்­பட்­டி­ருப்­பதை ஏற்று அதற்கு பொறுப்பு கூறு­வ­தற்­கு­ரிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான பொறி­மு­றைகள் உரு­வாக்­கப்­படும் என்று ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

இறுதி யுத்தம் நடை­பெற்ற போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்பு கூறும் அதே­வேளை, மனித உரிமை நிலை­மைகள் மேம்­ப­டுத்­தப்­படும் என்றும் அர­சாங்கம் ஐ.நா. மனித உரி­மை கள் பேர­வையில் ஒப்­புக்­கொண்­டி­ருந்­தது.

மனித உரி­மைகள் விவ­கா­ரத்தில் இரண்டு படி நிலை­களில் அர­சாங்கம் செயற்­பட வேண்­டி­யி­ருக்­கின்­றது. இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல் சம்­ப­வங்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­கின்ற அதே­வேளை. மனித உரிமை நிலை­மை­களை நாட்டில் மேம்­ப­டுத்­தவும் வேண்டும்.

ஆனால் பொறுப்பு கூறு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் உரிய முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. அதே­வேளை, மனித உரி­மைகள் நிலை­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய முக்­கி­ய­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­திலும் அர­சாங்கம் தயக்கம் காட்டிச் செயற்­ப­டு­கின்ற ஒரு போக்­கையே அவ­தா­னிக்க முடி­கின்­றது. 

இறுதி யுத்­தத்தில் மனித உரி­மைகள் மீறப்­பட்­ட­மைக்கு பொறுப்பு கூற வேண்டும் என்­ப­தையும் நாட்டில் மனித உரிமை நிலை­மைகள் மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற இந்த இரண்டு விட­யங்­களும் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பல்­வேறு தரப்­பி­ன­ராலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. எனவே, இது ஒரு புதிய விட­ய­மல்ல.

சந்­தர்ப்­பங்­களில் மட்­டுமே கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் அமர்­வுகள் மார்ச் மற்றும் செப்­டம்பர் மாதங்­களில் நடை­பெ­றும்­போது, அவற்றில் தனக்குப் புதிய நெருக்­க­டிகள் எதுவும் வந்­து­விடக் கூடாது என்­பதில் அர­சாங்கம் மிகுந்த கவனம் செலுத்திச் செயற்­பட்டு வரு­கின்­றது.

அண்­மைய சில வரு­டங்­க­ளாக இலங்­கையின் மனித உரிமைகள் விவ­காரம், ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் தொடர்ச்­சி­யாக சூடு பிடித்த வண்ணம் இருக்­கின்­றது. அந்த அவையில் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ரணை தொடர்பில் எத்­த­கைய முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்கின்றன, உண்­மையில் அங்கு உள்­நாட்டில் என்ன நடை­பெ­று­கின்­றது என்­பது தொடர்­பாக அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்டு, விவா­தங்­களும் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

சர்­வ­தேச மட்­டத்தில் இடம்­பெ­று­கின்ற இந்த அமர்­வு­க­ளுக்­கான காலம் நெருங்கி வரும்­போ­தெல்லாம், உள்­நாட்டில் எதிரும் புதி­ரு­மாக மனித உரி­மைகள் பற்­றிய விட­யங்கள் பல­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருக்கும். மனித உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சியம். இழைக்­கப்­பட்ட மனித உரிமைகள் மீறல்­க­ளுக்கு பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாடு என்­பவை குறித்து அரச தரப்­பினர் தேனொ­ழுக பேசு­வார்கள்.

அதே­வேளை, மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராகக் குரல் கொடுக்­கின்ற மனித உரிமை அமைப்­புக்­களும், பாதிக்­கப்­பட்ட மக்கள் சார்­பான அர­சியல் கட்­சிகள் மற்றும் அர­சியல் சார்ந்த அமைப்­புக்­களும், இவற்றின் முக்­கி­யஸ்­தர்­களும் அது அப்­படி இது இப்­படி என்று முழங்கித் தள்­ளு­வார்கள்.

அத்­த­கைய ஒரு நிலை­மைதான் இப்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இது ஐ.நா. மனித உரி­மைப் பேர­வையை இலக்கு வைத்­த­தாக அமை­யாமல், ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜி.எஸ்.பி வரிச் சலு­கையை குறி­வைத்­த­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.

மனித உரி­மைகள் நிலை­மையின் முன்­னேற்றம், ஜன­நா­யக முறை­மைகள் கையா­ளப்­ப­டு­கின்ற முறைமை என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டே, ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜி.எஸ்.பி வரிச்­ச­லு­கை­யா­னது, வழங்­கப்­ப­டு­கின்­றது.

இந்த வரிச்­ச­லு­கையைப் பெற்றுக் கொள்­ வ­தற்­காக மனித உரி­மை­களில் முன்­னேற்­றத்தைக் காட்ட வேண்­டிய அவ­சியம் அர­சாங்­கத்­திற்கு எழுந்­தி­ருக்­கின்­றது. ஜன­நா­யகச் செயற்­பா­டுகள் பற்­றியும் வெளிப்­ப­டுத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

இலங்­கையில் மனித உரி­மைகள் நிலைமை மேம்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஜன­நா­யக முறை­க­ளிலும் முன்­னேற்றம் ஏற்­ப­ட­வில்லை என்­பது போன்ற கார­ணங்­களை முன்­வைத்தே ஐரோப்­பிய ஒன்­றியம் ஜி.எஸ்.பி வரிச் சலு­கையை இடை நிறுத்­தி­யி­ருந்­தது.

அதனை மீண்டும் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்ட அர­சாங்­கத்­திற்கு ஐரோப்­பிய ஒன்­றியம் பல நிபந்­த­னை­களை விதித்­தி­ருக்­கின்­றது. எனவே, இந்த ஜி.எஸ்.பி வரிச்­ச­லு­கையைப் பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் அரச தரப்பில் பல ஆழ­மான கருத்­துக்கள் முன்வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

செவி வழி­யாகக் கேட்­ப­தற்கு இந்தக் கருத்­துக்கள், குறிப்பாக மனித உரிமை மீறல்­களின் போது பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் மனித உரிமை ஆர்­வ­லர்கள், மனித உரிமை அமைப்­புக்­க­ளுக்கும் - நன்­றா­கவும் உற்­சா­க­ம­ளிப்­ப­தா­கவும் இருக்­கின்­றன. ஆனால் அந்தக் கருத்­துக்கள் அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டுகள் மற்றும் செயற்­பா­டு­க­ளுடன் முரண்­பட்­டி­ருப்­பதைத் தெளி­வாகக் காண முடி­கின்­றது.

இதனால், சந்­தர்ப்­பத்­திற்­கா­கவே மனித உரி­மைகள் தொடர்பில், மற்­ற­வர்­க­ளினால் வர­வேற்­கத்­தக்க வகை­யி­லான கருத்­துக்­களை அரச தரப்­பினர் வெளி­யிட்டு வரு­கின்­றனர் என்­பது நிரூ­ப­ண­மா­கி­யி­ருக்­கின்­றது.

இரட்டை நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் கூற்­றுக்கள்

ஜி.எஸ்.பி வரிச்­ச­லு­கை­யா­னது, மோச­மான ஒரு பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்­கி­யி­ருக்­கின்ற அரா­சங்­கத்­திற்குக் கைகொ­டுக்­கக்­கூ­டிய ஒரு வரப்­பி­ர­சா­த­மா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது என்­பது பொரு­ளி­ய­லா­ளர்­களின் கருத்­தாகும். ஜி.எஸ்.பி வரிச்­ச­லு­கையின் மூலம் பெரும் கடன் சுமையில் மூழ்­கி­யுள்ள அர­சாங்கம் சிறி­தாக ஆறுதல் மூச்சு விடு­­வதற்குப் பேரு­த­வி­யாக இருக்கும் என்று கரு­தப்­ப­டு­கின்­றது.  

ஆனால் இந்த வரிச்­ச­லு­கையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் பல நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டி இருக்­கின்­றது. அது­பற்­றிய கருத்­துக்­களை, அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன, திறன் அபி­வி­ருத்தி மற்றும் தொழில்­ப­யிற்சி அமைச்சர் மஹிந்த சம­ரசிங்க ஆகியோர் செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர்.

இறு­திக்­கட்டப் போரில் இரா­ணுவம் படு­கொ­லை­களில் ஈடு­பட்­டி­ருந்தால், அதற்குத் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். படு­கொ­லை­களை நியா­யப்­ப­டுத்­தவோ ஆள் கடத்­தல்­களை அங்­கீ­க­ரிப்­பதோ நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கொள்­கை­யில்லை என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அதே­வேளை, ஜி.எஸ்.பி வரிச் சலுகை உள்­ளிட்ட சலு­கை­களைத் தக்க வைக்க வேண்­டு­மாயின், மனித உரி­மைகள் மற்றும் சமத்­து­வ­மான நகர்­வு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட வேண்டும். ஒரு குறிப்­பிட்ட காலத்­திற்கு மாத்­திரம் அல்­லாமல் தொடர்ச்­சி­யாக நாம் அந்தப் பய­ணத்தை முன்­னெ­டுக்க வேண்டும் என்று அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்­தி­ருக்­கின்றார்.ஆனால் இரா­ணுவம் பல்­வேறு மனித உரிமை மீறல் செ­யற்­பா­டு­களில் ஈடுபட்­டி­ருந்­தது. அதனால் பலர் பாதிக்­கப்­பட்­டனர். கொல்­லப்­பட்­டனர் என்­ப­தற்­கான பல சம்­ப­வங்­களைப் பற்­றிய விப­ரங்கள் ஆதா­ர­பூர்­வ­மாக வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. இருப்­பினும் அவை குறித்து எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அதே­வேளை, மனித உரி­மை­களும், சமத்­து­வ­மான செயற்­பா­டு­களும் தொடர்ச்­சி­யாக நாட்டில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தற்கு ஆதா­ர­பூர்­வ­மான பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. குறிப்­பாக மதங்­க­ளுக்­கி­டையில் சமத்­து­வ­மின்­மையைப் பேணு­வ­தற்­காக பௌத்த மதத் துற­வி­களின் தூண்­டு­தலில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய மசூ­திகள் தாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்­துக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற பகு­தி­களில் புத்தர் சிலை­களும், பௌத்த விகா­ரை­களும் அமைக்­கப்­பட்டு மத ரீதி­யான ஆக்­கி­ர­மிப்புச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இது குறித்து அர­சாங்­கத்­திற்குப் பல­ராலும் எடுத்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆயினும் அந்தச் சம்­ப­வங்­க­ளுக்குக் கார­ண­மா­ன­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை. குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­வு­மில்லை. 

இந்த நிலையில் யுத்­தக்­குற்றம் செய்­தி­ருந்தால் இரா­ணு­வத்­தினர் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்­பதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகும் என்று கூறு­வது அர­சாங்கம் இரட்டை நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றது என்று முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டினை உறு­திப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

இறுதி யுத்த காலச் சம்­ப­வங்கள்

இறுதி யுத்தம் நடை­பெற்­ற­போது, விடு­த­லைப்­பு­லி­களை எந்த வகை­யி­லா­வது இரா­ணுவ ரீதி­யாகத் தோற்­க­டிக்க வேண்டும். அவர்­களை இல்­லாமற் செய்ய வேண்டும் என்­ப­தற்­காக முன்­னைய அர­சாங்கம் மிக மிகத் தீவி­ர­மாகச் செயற்­பட்­டி­ருந்­தது. விடு­த­லைப்­பு­லி­களின் போராட்ட சக்­தியை மழுங்­க­டித்து முறி­ய­டிக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே, மூன்று இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட பொது­மக்­களை முன்­னைய அரா­சங்கம் தொடர்ச்­சி­யா­னதோர் இரா­ணுவ முற்­று­கைக்குள் சிக்க வைத்­தி­ருந்­தது.

அந்த மக்கள் மீது பொரு­ளா­தாரத் தடை­யையும், உணவு மற்றும் மருந்துப் பொருட்­க­ளுக்­கான தடை­யை­யும்­கூட விதித்து கடு­மை­யாகச் செயற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. விடு­த­லைப்­பு­லி­களைப் பல­மி­ழக்கச் செய்ய வேண்டும் என்­பதே, அப்­போது அர­சாங்­கத்தின் நோக்­க­மாக இருந்த போதிலும், இந்தத் தடை­யுத்­த­ரவு நட­வ­டிக்­கை­க­ளினால் அப்­பாவிப் பொது­மக்­களே பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

அது மட்­டு­மல்­லாமல் அகோ­ர­மாக நடத்­தப்­பட்ட எறி­கணை தாக்­கு­தல்கள், விமானக் குண்டுத் தாக்­கு­தல்கள் என்­ப­வற்­றி­னாலும் பொது­மக்­களே அதிகம் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

யுத்த மோதல்­களில் சிக்­கி­யி­ருந்த மக்கள் அராங்கப் படைகள் நடத்­திய இத்­த­கைய தாக்­கு­தல்­க­ளினால் காய­ம­டைந்து, அவர்­களின் உயிர்­களைக் காப்­ப­தற்­காகச் செயற்­பட்­டி­ருந்த வைத்­தி­ய­சா­லைகள் மீதும் இரா­ணு­வத்­தினர் தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருந்­தனர். இத்­த­கைய தாக்­கு­தல்­களில் சிக்கி உயிர் தப்­பி­ய­வர்­களும், பொது­மக்கள் இலக்­குகள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களில் காய­ம­டைந்தும், தெய்­வா­தீ­ன­மாகக் காய­ம­டை­யாமல் உயிர் தப்­பி­ய­வர்­களும் கதை கதை­யாகத் தக­வல்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர். இந்தத் தக­வல்கள் இலங்கை இரா­ணு­வத்தின் மனித உரிமைகள் மீறல்கள் பற்­றிய சாட்­சி­யங்­க­ளாகப் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன.

அதே­வேளை, இலங்­கையில் செய­லாற்றி வந்த ஐ.நா. அதி­கா­ரி­களை அர­சாங்கம் வெளி­யே­று­மாறு கூறி­யதை ஏற்று, இறுதி யுத்­தத்த காலத்தல் வன்­னிப்­பி­ர­தேசத்தில் இருந்து வெளி­யே­றி­யதன் மூலம், யுத்­த­மோ­தல்­களில் சிக்­கி­யுள்ள பொது­மக்­களைப் பாது­காப்­பதை ஒரு முக்­கிய நோக்­க­மாகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட ஐ.நா. மன்றம், தனது பொறுப்பில் இருந்து தவ­றி­யி­ருந்­தது என்­பதை முன்னாள் ஐ.நா. செய­லாளர் நாயகம் ஆதா­ரங்­க­ளுடன் ஏற்று அதற்­காக மனம் வருந்­தி­யி­ருந்தார்.

இலங்­கையில் ஐ.நா.வின் செயற்­பா­டுகள் தொடர்­பான ஐ.நா. மன்­றத்தின் உள்­ளக மீளாய்வு அறிக்­கை­யொன்றில் ஐ.நா. பொறுப்பு தவ­றி­யி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்டு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன், வன்னி யத்­தத்தின் இறுதி ஆறு மாத காலப்­ப­கு­தியில் மாத்­திரம் 70 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பொது­மக்கள் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர் என்­ப­தையும் அந்த அறிக்கை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது.

இறுதி யுத்­தத்தின் போது இரா­ணுவம் மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தது, ஆட்­கொ­லை­களைப் புரிந்­தது என்­ப­தற்­கான, இது போன்று பல ஆதா­ரங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

இருந்தும் இந்தப் போர்க்­குற்­றங்­க­ளுக்­காக இது­வ­ரையில் இலங்­கையில் எவரும் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை. அவற்­றுக்கு அர­சாங்­கமோ அல்­லது இரா­ணு­வமோ இன்னும் பொறுப்பு கூற­வு­மில்லை. இந்த நிலையில் இறதிப் போரில் படு­கொ­லை­களைச் செய்­தி­ருந்தால் அதற்குத் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்­பதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகும் என அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரா­கிய அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருப்­பது நகைப்­புக்கு இட­மா­கி­யி­ருக்­கின்­றது என்றே கூற வேண்டி இருக்­கின்­றது.

வேடிக்கைக் கூற்று

அர­சாங்கம் மனித உரிமைகள் மீறல்­களை அனு­ம­திக்­க­மாட்­டாது, மனித உரி­மை­களைப் பேணு­வ­தற்­காக அதைச் செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டும் என்று வாய­ளவில் செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் கருத்­துக்­களைக் கூறிக்­கொண்­டி­ருப்­பதன் மூலம், நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காட்ட முடியாது.

உண்மையாகவே நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்காக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் ஒப்புக்கொண்டவாறான செயற்பாடுகளை அரசாங்கம் தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மை உடையதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பினருடைய பங்களிப்புடன் கூடியதாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்குப் பொறப்பு கூறுவதற்கான பொறிமுறைகளை அமைப்பதற்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனைச் செயலணியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளராகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன மறுத்துரைத்திருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.

பொறுப்பு கூற வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பாக நாட்டு மக்களுடைய கருத்துக்கள் திரட்டப்பட்டன. அவ்வாறு திரட்டப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் சர்வதேச நீதிபதிகள் இந்தப் பொறிமுறைகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று அதிகாரபூர்வமாக அமைச்சரவைப் பேச்சாளர் என்ற நிலையில் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே அரசாங்கத்திற்கு நன்மை தருகின்ற ஜி.எஸ்.பி சலுகையைப் பெறுவதற்காக மனித உரிமைகளைப் பேண வேண்டும் மனி உரிமைகள் மீறல்களுக்குப் பொறுப்பு கூறவேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொள்கையாகக் கொண்டிருக்கின்றது என்பது அரசாங்கத்தின் ஒரு முரண் நிலையான கருத்தாகவும் வேடிக்கையான கூற்றாகவுமே அமைந்திருக்கின்றது,  

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-21#page-1

Categories: merge-rss

நிதிநகரத்தை உருவாக்க கடலுக்குள் நிலப்பரப்பு உருவாக்கும் பணிகள் இவ்வருடத்தில் நிறைவு

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 06:21
நிதிநகரத்தை உருவாக்க கடலுக்குள் நிலப்பரப்பு உருவாக்கும் பணிகள் இவ்வருடத்தில் நிறைவு
 
 
நிதிநகரத்தை உருவாக்க கடலுக்குள் நிலப்பரப்பு உருவாக்கும் பணிகள் இவ்வருடத்தில் நிறைவு
கொழும்பு நிதி நகரத்தை உருவாக்குவதற்காக  மணல் அகழும் கப்பல்கள் மூலம் கடலுக்குள் நிலப்பரப்பை உருவாக்கும் செயற்பா டுகள் இடம்பெற்று வருகின்றன.
 
இதற்காக கடலில் இருந்து 28 வீத நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய நிலப்பரப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கப்பட்டு விடும் என்றும் சீன துறைமுக பொறியியல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று கொழும்பு துறைமுக நகர திட்ட த்தை ஆய்வு செய்யச் சென்றிருந்த போது சீன அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
 
புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியில், 28 வீதம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிலப்பரப்பு, இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்பட்டு விடும் எனவும் கூறியுள்ளார்.
 
இதன் பின்னர், அடுத்த ஆண்டு கொழும்பு நிதி நகர கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் சீன நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/22949

Categories: merge-rss, yarl-category

இந்தியாவுக்கு திருமலை துறைமுகம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 06:20
இந்தியாவுக்கு திருமலை துறைமுகம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
 
இந்தியாவுக்கு திருமலை துறைமுகம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம் இன்னும் அடையாளம் காணவில்லையென பாதுகாப்புத் துறை விசேட நிபுணரான ஓய்வு பெற்ற கேணல் சுசந்த செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
 
திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி  குறித்து அவர் தெரிவிக்கையி
லேயே இவ்வாறு கூறியுள்ளார்.
 
இந்தியாவுக்கு திருகோணமலைத் துறைமுகம் தொடர்பில் வரலாற்று நெடுகிலும் ஒரு அவதானம் இருந்து வருகின்றது. இவ்வாறு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

http://onlineuthayan.com/news/22945

Categories: merge-rss, yarl-category

பிரேரணைகளால் சாதனை படைத்த வடமாகாணசபை

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 06:03
பிரேரணைகளால் சாதனை படைத்த வடமாகாணசபை
 
 
பிரேரணைகளால் சாதனை படைத்த வடமாகாணசபை
வடமாகாண சபையில் 81 கூட்டத் தொடர்களில் 321 பிரேரணைகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகி ன்றது.
 
கடந்த 2013 ஆம் ஆண்டு சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட வட மாகாண சபையில் இடம்பெற்ற கூட்டத்தொடர்க ளிலேயே இவ்வாறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2_444.jpg
இதில் அதிகமான தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிரானவை எனவும் கூறப்படுகின்றது.
இந்த பிரேரணைகளில் அதிகமானவை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்படுகின்றது

http://onlineuthayan.com/news/22947

Categories: merge-rss, yarl-category

யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்ட 5 பேர் கைது

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 05:59
யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்ட 5 பேர் கைது

arrested.jpg

யாழ்ப்பாணத்தில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  வல்வெட்டித்துறை பகுதியில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

போலி நாணயத் தாள்களை அச்சிடும் கணினி மற்றும் ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்கள் நான்கு என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 18 முதல் 27 வயதெல்லைக்கு உட்பட்ட ஐந்து இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புதுக்குடியிருப்பு நீதவானின் முன்னிலையில் இன்று  முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

http://globaltamilnews.net/archives/14539

Categories: merge-rss, yarl-category

உலக தலைவர்கள், வர்த்தக பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்திய பிரதமர் ரணில்

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 05:54
உலக தலைவர்கள், வர்த்தக பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்திய பிரதமர் ரணில்
p6-b56f2217e047a7b8c502a4ea0d3734acddc6d9fd.jpg

 

பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

(நமது நிருபர்)

உலகப் பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொள்ளும் முக­மாக சுவிற்சர்­லாந்து சென்­ றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று டெவோஸ் நகரில் வெளி­நாட்டுத் தலை­வர் கள், வெளி­வி­வ­கார அமைச்­சர்கள், பிர­பல சர்­வ­தேச வர்த்­தக நிறு­வ­னங்­களின் தலை­வர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் பலரை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். 

இந்த சந்­திப்­பு­களின் போது இலங்­கை­யு­ட­னான நட்­பு­றவு தொடர்­பிலும் பல­மிக்­கதோர் இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நிலை­யான அபி­வி­ருத்தி வேலைத்­திட்டம் ‍குறித்தும் விசேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

நோர்வே பிர­தமர் அர்னா சொல்பேர்க், வியட்நாம் பிர­தமர் நயென் ஷூஹான் பக், ஆந்­திரா மாநில முத­ல­மைச்சர் சந்­தி­ர­பாபு நாயுடு, சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் முகா­மைத்­துவப் பணிப்­பாளர் கிறிஸ்டின் லகார்ட், நியூ­சி­லாந்து வர்த்­தக அமைச்சர் டொட் மெக்லே, ஜப்பான் சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு வங்­கியின் தலைவர் தத­ஹசி மயேதா மற்றும் சர்­வ­தேச ரீதி­யான வர்த்­த­கர்கள் உள்­ளிட்­டோ­ரையே சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யுள்ளார்.

நோர்வே பிர­தமர்

நோர்வே பிர­தமர் அர்னா சொல்­பேர்க்கை சந்­தித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சங்­களில் பொரு­ளா­தார மற்றும் வாழ்­வா­தா­ரங்­களை எழுச்சி பெறச் செய்­வ­தற்கு விசேட வேலைத்­திட்­டங்கள் அவ­சி­ய­மாகும் என வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  அத்­துடன் இரு நாடு­களின் நட்­பு­றவை பலப்­ப­டுத்­து­வது தொடர்பில் விசேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. 

வியட்நாம் பிர­தமர்

 டெவோஸ் நகரில் வியட்நாம் பிர­தமர் நயேன் ஷூஹான்­பக்கை பிர­தமர் ரணில் சந்­தித்து பேசினார். இதன்­போது இரு­ நா­டுகளுக்கிடையில் காணப்­படும் வர்த்­தக, பொரு­ளா­தார மற்றும் சமூக தொடர்­பு­களை பலப்­ப­டுத்­து­வது குறித்து பேசப்­பட்­டுள்­ளது. அத்­துடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வியட்நாம் விஜ­யத்தின் போது வர்த்­தக ஒப்­பந்தம் கைச்­சாத்­திட திட்­ட­மிட்­டுள்­ள­தாக வியட்நாம் பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.

சந்­தி­ர­பாபு நாயுடு

இந்­திய ஆந்­திர மாநில முத­ல­மைச்சர் சந்­தி­ர­பாபு நாயு­டுவை சந்­தித்த பிர­தமர் ரணில் விக்கி­ர­மசிங்க ஆந்­திர மாநில வளர்ச்சிப் போக்­ கினை மைய­மாக கொண்டு மீன்­பிடி , ஒன்­றி­ணைந்த வர்த்­தகம் உள்­ளிட்ட துறை­களில் ஆந்­திர நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­களைப் பெறு  வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். அத்­துடன் இலங்­கைக்கும் ஆந்­திர மாநி­லத்­துக்­கு­மி­டை­யி­லான உற­வினை வளர்ப்­பது குறித்தும் இதன்­போது பேசப்­பட்­டுள்­ளது. 

நியூ­சி­லாந்து வெளி­வி­வ­கார அமைச்சர்

இதே­வேளை டெவோஸ் நகரில் நியூ­சி­லாந்து வெளி­வி­வ­கார அமைச்சர் டோட் மெக்­லேவை பிர­தமர் ரணில் சந்­தித்துப் பேச்­சு ­ந­டத்­தினார். இதன்­போது நியூ­சி­லாந்து நாட்­டுடன் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டு­வது தொடர்­பி­லான சந்­திப்­பு­களை மேலும் வலுப்­ப­டுத்த வேண்டும் என வெளி­வி­வ­கார அமைச்சர் டொட் மெக்லே வலி­யு­றுத்­தி­யுள்ளார். இரு நாடு­களின் உற­வினைப் பலப்­ப­டுத்­து­வது குறித்து அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச நாணய நிதிய பணிப்­பாளர்

சுவிற்சர்­லாந்து வந்­தி­ருந்த சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் முகா­மைத்­துவப் பணிப்­பாளர் கிறிஸ்டின் லகார்ட்­டையும் பிர­தமர் சந்­தித்து பேசி­யுள்ளார். 15 வரு­டங்­க­ளுக்கு பின்னர் முகங்­கொ­டுக்க நேரிட்­டுள்ள வரட்­சி­யினால் எதிர்­பார்த்த அபி­வி­ருத்தி வளர்ச்சிப் போக்கை பெறு­வது கடினம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதன்­போது எடுத்­து­ரைத்­துள்ளார்.

வர்த்­தக பிர­தி­நி­திகள்

மேலும் சர்­வ­தேச வர்த்­தக பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இலங்­கையில் அதி­க­ளவில் முத­லீ­டு­களை செய்­வ­தற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்­துள்ளார். இதன்போது பல வர்த்தக முக்கியஸ்தர்கள் இலங்கையில் அதிகளவில் முதலீடுகளை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்புக்களில் இலங்கை சார்பாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க, சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-21#page-2

Categories: merge-rss, yarl-category

தமிழ் மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளாது அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 05:54
தமிழ் மக்­களை மீண்டும் படு­கு­ழியில் தள்­ளாது அவர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­க­ வேண்டும்
p10-1921870a445923a64653b5fbaa39f6ac7abdc931.jpg

 

சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் கோரிக்கை

(ரி.விருஷன்)

தமிழ் மக்­களை மீண்டும் படு­கு­ழியில் தள்­ளாது அபி­வி­ருத்­தி­யிலும் வேலை­வாய்ப்­பிலும் அவர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும். வடக்கு மக்கள் புலி­க­ளுக்கு வாக்­க­ளித்­தார்கள் என்­ப­தற்­கா­கவும் அவர்­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் வாழ்ந்­தார்கள் என்­ப­தற்­கா­கவும் கடந்த ஆட்­சி­யி­னரால் வீதிக்கு இறக்­கப்­பட்­டனர். இந்த நிலைமை இனியும் தொட­ரக்­கூ­டாது. வட­மா­கா­ணத்­திற்கு பூரண அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்று சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார்.

அவுஸ்­தி­ரே­லிய நாட்டின் 100 மில்­லியன் ரூபா, உலக வங்­கியின் 50 மில்­லியன் ரூபா நிதி­யு­த­வி­யுடன் குறி­கட்­டு­வா­னுக்கும் நெடுந்­தீ­வுக்­கு­மான பாது­காப்­பான போக்­கு­வ­ரத்­துக்கு புதி­தாக அமைக்­கப்­பட்ட நெடுந்­தா­ரகை பய­ணிகள் படகுச் சேவை­யினை ஆரம்­பிக்கும் நிகழ்வு நேற்று குறி­காட்­டுவான் இறங்­கு­து­றையில் நடை­பெற்­றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்­நி­கழ்வில் உள்­ளூ­ராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா, வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன், கூட்­ட­மைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்­திரன், அவுஸ்­தி­ரே­லிய தூதுவர், மாகாண சபை உறுப்­பி­னர்கள், மாகாண திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்கள் எனப் பெரு­ம­ள­வானோர் கலந்­து­கொண்­டனர். 

இங்கு தொடர்ந் தும் உரை­யாற்­றிய இரா­ஜாங்க அமைச் சர் விஜ­ய­கலா மகே ஸ்­வரன். கடந்த இரு­பது வரு­டங்­க­ளாக தீவுப்­ப­கு­தி­க­ளுக்கு உரிய போக்­கு­வ­ரத்து வச­திகள் இருக்­க­வில்லை. தற்­போது இந்­தப்­ப­ட­கினை வழங்­கியன் மூலம் போக்­கு­வ­ரத்­துக்  கான வசதி செய்­து­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களைப் பொறுத்­த­வ­ரையில் வரட்­சிக்கும் வறு­மைக்கும் நாம் முகம்­கொ­டுத்து வரு­கின்றோம். வடக்கில் வழ­மை­யாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்­க­ளி­லேயே வரட்சி ஏற்­ப­டு­வது வழக்­க­மாகும். ஆனால் தற்­போது ஜன­வ­ரி­யி­லேயே வரட்சி ஏற்­பட்­டி­ருக்­கி­றது. வரட்­சி­யினால் வடக்கு, கிழக்கு பகுதி மக்­களே அதி­க­ளவில் பாதிப்பை சந்­தித்­துள்­ளனர்.   

நெடுந்­தீவு, ஊர்­கா­வற்­றுறை, அன­லை­தீவு, எழு­வைதீவு ஆகிய பகு­தி­களில் வாழும் மக்கள் உரிய பட­குச்­சே­வை­யின்றி பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்­கி­ வ­ரு­கின்­றனர். உரிய போக்­கு­வ­ரத்து வசதி இன்­மையால் இவர்கள் தொன்­று­தொட்டு கஷ்­டப்­பட்டு வரு­கின்­றனர். இப்­ப­கு­தி­க­ளுக்கு அர­சாங்க ஊழி­யர்கள் நிய­மிக்­கப்­ப­டும்­போது அவர்கள் போக்­கு­வ­ரத்து கஷ்டம் கார­ண­மாக அங்கு செல்வதற்கு மறுக்­கின்­றனர். சிலர் தீவுப்­ப­கு­திக்கு கட­மை­யாற்­று­வ­தற்கு செல்­வதே இல்லை. இதனால் தீவுப்­ப­குதி மாண­வர்கள் கல்வி துறையில் பின்­தங்­கி­யுள்­ளனர். கல்வி உட்­பட சகல வச­தி­க­ளையும் இவர்கள் இழந்­தி­ருக்­கின்­றனர்.

உரிய போக்­கு­வ­ரத்து சேவை­யின்­மையால் இந்த மக்கள் பெரும் பாதிப்­புக்­களை சந்­திக்­கின்­றனர். கடந்த முப்­ப­து­வ­ரு­ட­கால யுத்­தத்தின் போது கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்ட மக்கள் பெரும் கஷ்­டங்­களை அனு­ப­வித்­தனர். இதேபோல் தீவுப்­ப­கு­தியும் உரிய போக்­கு­வ­ரத்து வச­தி­யின்­மையால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­யா­கவே காணப்­ப­டு­கின்­றது. அன­லைதீவு, எழு­வை­தீவு, நயி­னா­தீவு உட்­பட தீவுப்­ப­கு­திக்­கான பட­குச்­சே­வையை அதி­க­ரித்து போக்­கு­வ­ரத்­தினை இல­கு­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

யுத்­தத்­திற்கு முன்னர் கல்­வியில் சிறந்­து­வி­ளங்­கிய வட­மா­காணம் தற்­போது பெரும் பின்­ன­டைவை சந்­தித்­தி­ருக்­கி­றது. யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும். புலி­க­ளுக்கு வாக்­க­ளித்­தார்கள் என்­ப­தற்­கா­கவும் புலி­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் வாழ்ந்­தார்கள் என்­ப­த­னாலும் வட­ப­குதி மக்­களை கடந்த அர­சாங்கம் வீதிக்கு இறக்­கி­யி­ருந்­தது. வட மாகா­ணத்­திற்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. நிதி வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு சரி­யான அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும். முத­ல­மைச்­சரின் அதி­கா­ரங்­களை அதி­க­ரிப்­ப­துடன் மாகா­ண­ ச­பைக்கும் உரிய நிதியும் அதி­கா­ரமும் வழங்­கப்­ப­ட­வேண்டும். தற்­போ­தைய சூழ்­நி­லையில் ஒரு­வரை இட­மாற்­று­வது என்றால் கூட மாகா­ண­ச­பை­யா­னது மத்­திய அர­சிடம் செல்­ல­வேண்­டிய சூழல் காணப்­ப­டு­கின்­றது.

ஏனைய மாகா­ணங்­களில் முத­ல­மைச்­சரும், ஆளு­நரும் இணைந்து பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். எமது வட­மா­காண தொண்டர் ஆசி­ரி­யர்கள் தமக்கு நிரந்­தர நிய­மனம் கோரி பல வரு­டங்­க­ளாக போராடி வரு­கின்­றனர். ஆனால் இன்­னமும் உரிய நிய­மனம் வழங்­கப்­ப­ட­வில்லை. அண்­மையில் வேறொரு மாகா­ணத்தில் 1987 ஆம் ஆண்டு முதல் தொண்டர் ஆசி­ரி­யர்­க­ளாக பணி­யாற்­றி­ய­வர்­க­ளுக்கு நிரந்­தர நிய­மனம் வழங்­கப்­பட்­டதை தொலைக்­காட்சி செய்­தி­மூலம் நான் பார்த்தேன். இவ்­வா­றான நிலையில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு இத்­த­கைய சந்­தர்ப்­பங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டமை தவ­றா­ன­தாகும்.

கடந்த 30 வரு­ட­கா­ல­மா­கவே நெடுந்­தீவு, அன­லை­தீவு, ஊர்­கா­வற்­றுறை, வேலணை, உட்­பட தீவுப்­ப­கு­தி­களில் வீதிகள் போடப்­ப­ட  வில்லை. உரிய போக்குவரத்து வச­திகள் வழங்­கப்ப­ட­வில்லை. இத்­த­கைய குறை­பா­டு­க­ளுக்கு நல்­லாட்சி அர­சாங்கம் தீர்­வு­கா­ண­வேண்டும். தீவுப்­ப­கு­தி­களை உள்­ள­டக்­கிய பிர­தே­சங்­க­ளுக்கு கூடு­த­லான நிதி வழங்­கப்­ப­டுதல் வேண்டும். 2002 முதல் 2004 வரை எனது கணவர் மகேஸ்­வரன் அமைச்­ச­ராக இருந்­த­போது காரை­நகர் பிர­தேச செய­லகம் உரு­வாக்­கப்­பட்­டது.

 ஆனால் அதன் பின்னர் கடந்த அர­சாங்க காலத்தில் மகேஸ்­வரனின் குடும்­பத்­திற்­காக காரை­நகர் மக்கள் பழி­வாங்­கப்­பட்­டனர். எனவே இத்­த­கைய பிர­தேச சபை­க­ளுக்கு கூடுதல் நிதிகள் வழங்­கப்­ப­டுதல் வேண்டும்.  யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடபகு திக்கு விகிதாசார அடிப்படை யில் வேலை  வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அந்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்க மும் தவறிழைத்து வருகின்றது. 

 பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்ற மாணவர்  கள் மரக்கறி விற்பதிலும், வீதிகளை செப்பனி  டும் பணிகளிலும் ஈடுபடும் நிலை காணப்ப  டுகின்றது. இந்த நிலைமை மாற்றியமைக்கப் படவேண்டும். நல்லாட்சி அரசாங்கமானது சரியான முறையில் வேலைவாய்ப்புக்களை வழங்கவேண்டும். தற்போதும் வடபகுதிக்கு தென்பகுதியிலுள்ளவர்களை நியமிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.

 இத்தகைய நியமனங்கள் நிறுத்தப்படவேண்டும். மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளாது வீதியில் இறக்காது அபிவிருத்தியிலும் வேலைவாய்ப்பிலும் வடபகுதி மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-21#page-2

Categories: merge-rss, yarl-category

பௌத்த மதம், ஒற்றையாட்சியில் எந்த மாற்றமும் இடம்பெறாது புதிய அரசியலமைப்பு குறித்து அமைச்சர் நவீன் திசாநாயக்க

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 05:52
பௌத்த மதம், ஒற்­றை­யாட்சியில் எந்த மாற்­றமும் இடம்பெறாது
02-4992c148b52e00770dc7b84cce21bcf12b7640eb.jpg
 

 (பா.ருத்­ர­குமார்)

புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி என்ற பதத்­திலும் பௌத்த மதத்­துக்கு உள்ள முன்­னு­ரிமை தொடர்­பிலும் எவ்­வி­த­மான மாற்­றமும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. கருத்து வேறு­பா­டுகள் முன்­மொ­ழி­வு­களை எல்லாம் பாரா­ளு­மன்­றத்தில் பேசித்­தீர்த்­துக்­கொள்­ளலாம். அர­சாங்­கத்­திடம் இது தொடர்பில் மறைப்­ப­தற்கு ஒன்­று­மில்லை என  பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சர் நவீன் திசா­நா­யக்க தெரி­வித்தார். 

 நிதி­ய­மைச்சர் லொத்தர் சீட்­டுக்­க­ளுக்கு விலை அதி­க­ரித்­த­மையை ஜனா­தி­பதி நிரா­க­ரித்து 20 ரூபாய் என மீண்டும் நிர்­ண­யித்­தமை ஜன­நா­யத்தின் சிறப்­பான பண்­பாகும். இவ்­வாறு எடுத்த தீர்­மா­னத்தை முன்னாள் ஜனா­தி­ப­தியும் முன்னாள் நிதி­ய­மைச்­ச­ரு­மான மகிந்த ராஜ­பக்ஷ மாற்­றிக்­கொண்­ட­துண்டா என்­பதை யோசித்து பார்க்க வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.

செத்­சி­றி­பா­யவில் அமைந்­துள்ள பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­ளாளர் மாநாட்டில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் மத்­தியில் தனிப்­பட்ட தொடர்பை கொண்­டுள்­ளவன் என்ற வகையில் என்னால் அவர்கள் இரு­வ­ருக்­கு­மி­டையில் பேசித்­தீர்க்­க­மு­டி­யா­டித எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை என்­பதை உறு­தி­யாக கூற­மு­டியும். நாட்டை நேசிப்­ப­வர்கள் என்ற வகையில் அவர்கள் இரு­வரும் இணைந்து தேசிய நல­னுக்­காக செயற்­பட்டு வரு­கின்­றனர்.

ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் இரு­வேறு கொள்­கைகள், கருத்­துக்கள் காணப்­ப­டலாம். ஐக்­கிய தேசிய கட்சி வெகு­கா­ல­மாக எதிர்க்­கட்­சி­யாக இருந்­துள்­ளது. இதனால் சில எதிர்ப்­பார்ப்­புகள் இருக்கும். நாம் கொடுத்த வாக்­கு­று­த­தி­களை நிறை­வேற்ற வேண்டும். அதனால் சில பிரச்­சி­னைகள் தோற்றம் பெறலாம். இது ஸ்ரீலங்கா சதந்­திர கட்­சிக்கும் பொது­வா­ன­தாகும். எனவே நல்­லாட்­சிக்குள் கொள்கை ரீதி­யாக பிள­வுகள் எவையும் இல்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்பை பொறுத்­த­வ­ரையில் பலரும் பல கருத்­துக்­களை கூறலாம். ஆனால் ஒற்­றை­யாட்சி என்ற பதத்­திலும் பௌத்த மதத்­துக்கு உள்ள முன்­னு­ரிமை தொடர்­பிலும் எவ்­வி­த­மான மாற்­றமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என என்னால் உறு­தி­யாக கூற­மு­டியும். ஆனால் அர­சி­ய­ல­மைப்பு உப­கு­ழுக்கள் சில யோச­னை­களை முன்­வைத்­துள்­ளன. அதனை பாரா­ளு­மன்­றத்தில் விவா­திக்க முடியும். இதில் அர­சாங்­கத்­தினால் மறைப்­ப­தற்கு எதுவும் இல்லை.

அது­மட்­டு­மல்­லாது பிணை­முறி தொடர்ப்pலும் எதிர்­வரும் 24 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. சிலர் முன்னாள் மத்­திய வங்கி ஆளு­னரை பத­வி­யி­லி­ருந்து விலக்க இய­லாது என்­றார்கள். ஆனால் என்ன நடந்­தது. சில தவ­றுகள் காணப்­ப­டு­வ­தாக உணர்ந்த பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் உரிய நட­வ­டிக்கை எடுத்­தனர். எனவே படிப்­ப­டி­யாக உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.

தற்­போது வாழ்­வா­தார பிரச்­சினை தொடர்­பிலும் அடிப்­படை வாழ்­வா­தா­ரத்­துக்­கான தேவை­களை பூர்த்தி செய்­வ­திலும் அதிகம் கவனம் செலுத்­தப்­பட வேண்டும். அத­னையும் நாம் முறை­யாக செயற்­ப­டுத்தி வரு­கின்றோம். இவ்­வ­ரு­டத்­துக்குள் பொரு­ளா­தா­ரத்தில் ஸ்திரத்­தன்­மையை அடைய முடியும் என உறு­தி­யாக கூறிக்­கொள்­கின்றேன். இனி­வரும் காலங்­களில் நாண­யத்தின் பெறு­மதி அதி­க­ரிப்­பது தொடர்­பிலும் ஏனைய கடன் கொடுக்­கல்­வாங்­கல்கள் தொடர்­பிலும் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளப்­படும்.

எனவே நான் முன்­னைய அர­சாங்­கத்­திலும் அமைச்­ச­ராக இருந்­தவன் என்ற வகையில் என்னால் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பண்­புகள் தொடர்பில் தெளி­வாக விளக்­கத்தை இணங்­காண முடி­கின்­றது. அத்­துடன் நிதி­ய­மைச்­ச­ருக்கு எனது அமைச்­சி­லுள்ள பணத்தை தேசிய வேலைத்­திட்­டத்­துக்கு பயன்­ப­டுத்தும் உரிமை உள்­ள­தென்றால் அதனை பாது­காக்கும் உரி­மையும் எனக்­குண்டு. அவ்­வாறே அனை­வ­ருக்கும் ஒவ்வோர் அபி­லா­ஷைகள் காணப்­ப­டலாம்.

மேலும் அர­சி­ய­லுக்­காக பல பிரச்­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அர­சாங்­கத்­துக்குள் பிள­வுகள் காணப்­ப­டு­கின்­ற­தென்றும் வேலைத்­திட்­டங்­களில் முறை­யான செயற்­றிட்­டங்கள் காணப்­ப­ட­வில்லை எனவும் கூறு­வ­தெல்லாம் வெறும் பிரச்­சா­ரங்கள் மட்­டு­மே­யாகும்.

சிலர் நிதி­ய­மைச்சர் லொத்தர் சீட்­டுக்­க­ளுக்கு விலை அதி­க­ரித்­த­மையை ஜனா­தி­பதி நிராகரித்து 20 ரூபாய் என மீண்டும் நிர்ணயித்தமை பிளவுக்கான உதாரணம் என்கின்றனர். ஆனால் இதுவே ஜனநாயத்தின் சிறப்பான பண்பாகும். கடந்த அரசாங்கத்தினால் இவ்வாறு எடுத்த தீர்மானத்தை முன்னள் ஜனாதிபதியும் முன்னாள் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ மாற்றிக்கொண்டதுண்டா. ஒருபோதும் தனது தீர்மானத்தை மாற்றிக்கொள்ள மாட்டார் என்பது அனைவரும் அறிந்தததாகும். அவ்வாறான போது இதுவே நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய பண்பு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-21

Categories: merge-rss, yarl-category

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மோசடி குறித்து சர்வதேச விசாரணை மத்திய வங்கி மோசடிக்கு எதிராக நிதி புலனாய்வு பிரிவில் முறைப்பாடு என்கிறார் கபீர்

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 05:51
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மோசடி குறித்து சர்வதேச விசாரணை

 

மத்திய வங்கி மோசடிக்கு எதிராக நிதி புலனாய்வு பிரிவில் முறைப்பாடு என்கிறார் கபீர் 

(எம்.எம்.மின்ஹாஜ்)

முன்னைய ஆட்சியின் போது ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறு வனத்தில் நடந்த மோசடிகள் தொடர்பில் சர்வதேச  விசாரணை இடம்பெற்று வருகின்றது. இந்த விசாரணையின் முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும் என அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார். 

அத்துடன் முன்னைய ஆட்சியின் போது முன்னெடுக்கப்பட்ட மத்திய வங்கி மோசடிகள் குறித்து விரைவில் விசேட நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ளோம். மேலும் முன்னைய ஆட்சியின் போது அரச நிறுவனங்களில் இருந்த மாபியா கும்பல் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனத்தில் பங்கு வகித்த போது 440 கோடி ரூபா இலாபம் பெற்றிருந்தது. எனினும் தனது சுய இலாபத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசுடமை ஆக்கினார். இதனால் 2009 ஆம் ஆண்டு 930 கோடி ரூபாவும், 2014 ஆம் ஆண்டு 320 கோடி ரூபாவும், 2016 ஆம் ஆண்டு 108 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  

இதன்பிரகாரம் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு முதல் அரசுடமை ஆக்கப்பட்டதில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரைக்கும் சுமார் 3200 கோடி ரூபா நட்டம் அடைந்துள்ளது. எனினும் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு 2016 ஆம் ஆண்டளவில் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் நட்டத்தை 108 கோடி ரூபா வரைக்கும் குறைத்தோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசுடமையாக்கும் நோக்குடன் எமிரேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்தார். அதேபோன்று முன்னைய ஆட்சியின் போது எயார்லைன்ஸ் நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டதன் பின்னர் 15 ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுள்ளனர். ஆகவே இவ்வளவு மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்த தருவாயிலேயே ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை நாம் பொற்பேற்றோம். தற்போது இந்த பாரத்தையும் நாமே சுமக்க வேண்டியுள்ளது.

கடந்த பத்து வருடத்தின் போது பாரிய அளவிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாறாக மக்கள் உடைமைகள் வீணான முறையில் செலவிடப்பட்டது. இதனால் மக்களுக்கே பாதிப்பாகும். இவ்வளவு அநியாயம் நடக்கும் போது தற்போது எங்கள் மீது சேறு பூசுபவர்கள் எங்கிருந்தனர். கண்ணாடி முன் இருந்து கல் அடிப்பதனையே எதிரணியினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் முன்னைய ஆட்சியின் போது தனது உறவினர் ஒருவரை நிறுவனத்தின் தலைவராக நியமித்து ஏ 330 விமானமொன்றை கொள்வனவு செய்து அரச குடும்பம் பயணிப்பதற்காக அதிசொகுசு வாய்ந்த தனி பிரிவொன்றை அமைத்தனர். அந்த பிரிவில் அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதற்காக 10 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு கூறுவது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு யார் அனுமதி கொடுத்தது? எவ்வளவு அநியாயங்கள் செய்துள்ளனர்.

அதேபோன்று முன்னைய ஆட்சியின் போது ஏ 350 ரக விமானம் எயார் கெப் நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு பெறப்பட்டது. இந்த விமானங்கள் குத்தகைக்கு செல்லும் முழு செலவானது 600 மில்லியன் டொலராகும். அத்துடன் இந்த முறைமையின் ஊடாக ஒரு மாதத்திற்கு ஒரு விமானத்திற்கு செலுத்தப்படும் தொகையானது 22 கோடி ரூபாவாகும். இதன்மூலம் இலங்கைக்கு 7.5 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டது. இவ்வாறான கொடுக்கல் வாங்கல் முறைமை கொண்ட முக்கிய தீர்மானங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படவில்லை. அந்த காலத்தின் போது உலக சந்தை தரவுகளின் பிரகாரம் குறித்த விமான குத்தகை பெறும் விலை தரவு 14 கோடியாகும். எனினும் முன்னைய அரசாங்கம் 22 கோடி ரூபாவிற்கு குத்தகைக்கு பெற்றுள்ளது. இது பாரிய மோசடியாகும்.

இதன்பிரகாரம் நான்கு விமானங்களின் குத்தகை ஒப்பந்ததை இரத்து செய்து விட்டோம். குறிப்பாக ஏ350 விமானம் என்பது தூர பயணங்கள் செய்வதற்காகவே கொள்வனவு செய்யப்படுகின்றன.இந்த விமானம் 14 மணித்தியாலங்கள் வான்பரப்பில் பயணிக்க கூடியது. இலங்கையை பொறுத்தவரையில் தூர பயணம் எனும்போது லண்டனுக்கு மாத்திரமே செல்கின்றன. லண்டனுக்கு செல்வதற்கு 10 மணித்தியாலங்கள் எடுக்கும். அப்படியாக இருக்கும் போது இலங்கையின் பயண கட்டமைப்பின் பிரகாரம் இந்த விமானத்திற்கு எந்தவொரு தேவையும் கிடையாது.

முன்னைய ஆட்சியின் போது 8 ஏ350 ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே இந்த ஏ350 விமான குத்தகை பெறும் ஒப்பந்ததை இரத்து செய்துள்ளோம். இதனால் 8 விமானத்திற்கு 98 மில்லியன் டொலர் நஷ்ட ஈடாக செலுத்த வேண்டியுள்ளது. எனினும் ஏற்கனவே நான்கு விமானங்களுக்கு இரத்து செய்யப்பட்டமைக்கு 17 மில்லியன் நஷ்ட ஈடு செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக எயார் கெப் நிறுவனத்திடமிருந்து மேலதிகமாக செலுத்தப்பட்ட 4 விமானங்களில் 3 விமானங்களுக்கு பதிலாக ஏ330 விமானங்களை குத்தகைக்கு பெறவுள்ளோம்.

எனவே முன்னைய ஆட்சியின் போது எவ்வளவு அநியாயம் செய்துள்ளனர். இது மோசடி இல்லையா? . எனவே இது தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து எந்தவொரு இரகசியத்தை என்னால் வெளியிட முடியாது.

அத்துடன் முன்னைய ஆட்சியின் போது இலங்கை மத்திய வங்கி கொடுக்கல் வாங்கல்களின் போது பாரியளவில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பில் விரைவில் விசேட நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ளோம்.

மேலும் தற்போதும் அரச நிறுவனங்களின் முன்னைய ஆட்சியின் போது இருந்த மாபியா கும்பல் இன்னமும் செயற்பட்டு வருகின்றன. இதற்கு என்னால் எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முடியாமல் உள்ளன. எனினும் விரைவில் இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-21

Categories: merge-rss, yarl-category

இலங்கைக்கு கால அவகாசம் வழங்க மற்றுமொரு பிரேரணை 34 ஆவது கூட்டத் தொடரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொண்டுவர முயற்சி?

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 05:50
இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்க மற்­று­மொரு பிரே­ரணை
p11-6fd08658e9d4fb58cbc5211cfc5d7501316588d7.jpg

 

34 ஆவது கூட்டத் தொடரில் ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள் கொண்­டு­வர முயற்சி? 

(ரொபட் அன்­டனி)

மனித உரிமை விவ­கா­ரத்தில் முன்னேற்­றங்­களை ஏற்­ப­டுத்­தவும் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் முறை­மையை பரந்­து­பட்ட ரீதியில் முன்­னெ­டுக்­கவும் இலங்­கைக்கு கால அவ­கா­சத்தை வழங்கும் வகை யில் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டலாம் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.    

ஜெனி­வாவில்  அமைந்­துள்ள  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொடர் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 27 ஆம்­தி­கதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இதன்­போது பேர­வையின் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்­பான இந்தப் பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­மென தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  

அதா­வது இலங்­கைக்கு மேலும் கால அவ­கா­சத்­தையும் உத­வி­க­ளையும் பெற்­றுக்­கொ­டுத்தல் என்ற தொனிப்­பொ­ருளில் இந்த பிரே­ரணை முன்­வைக்­கப்­ப­டலாம் என நம்­பப்­ப­டு­கின்­றது. கடந்த 2012, 2013, 2014, 2015 ஆகிய ஆண்­டு­களில் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணை­களை அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நாடுகள் கொண்­டு­வந்­தி­ருந்­தன. ஆனால் இம்­முறை அமெ­ரிக்கா இலங்கை தொடர்­பாக பிரே­ரணை கொண்­டு­வரும் முயற்­சி­களில் ஈடு­ப­டுமா என்­பது இது­வரை தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.   

அந்­த­வ­கை­யி­லேயே மனித உரிமை பேரவை உறுப்பு நாடு­களின் ஐரோப்­பிய ஒன்­றியப் பிரிவு இந்தப் பிரே­ர­ணையை கொண்­டு­வர முயற்­சிப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எவ்­வா­றெ­னினும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தால் கொண்­டு­வ­ரப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­படும் புதிய பிரே­ரணை இலங்­கைக்கு கால அவ­கா­சத்தை வழங்க இருப்­பதன் கார­ண­மாக அதனை இலங்கை எதிர்க்­காது என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இருந்­த­போ­திலும் இலங்கை தொடர்­பாக ஜெனிவா மனித உரிமை பேர­வையில் மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வரும் நோக்கில் இது­வரை எந்­த­வி­த­மான உத்­தி­யோ­கப்­பூர்­வ­மான பேச்­சு­வார்த்­தை­களும் இடம்­பெ­ற­வில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணை­யா­னது வாக்­கெ­டுப்­பின்றி ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது. விசே­ட­மாக இலங்கை அர­சாங்­கமும் இந்தப் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.  

அந்தப் பிரே­ர­ணையில் பொது­ந­ல­வாய சர்­வ­தேச நீதி­ப­திகள் சட்­டத்­த­ர­ணிகள், வழக்­கு­ரை­ஞர்கள், விசா­ர­ணை­யா­ளர்­களைக் கொண்டு விசா­ரணைப் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்­கப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

தற்­போது பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு ஒன்­றரை வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலையில் அதன் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் பிரே­ர­ணை­யொன்று நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றெ­னினும் இம்­முறை 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை எவ்­வாறு ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­தி­யது என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் எழுத்துமூல அறிக்கையை முன்வைக்கவிருக்கிறார்.

அந்த அறிக்கையில் இலங்கைக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே அந்த அறிக்கை அடிப்படையாகக் கொண்டு புதிய பிரேரணையொன்று இம்முறை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படலாம் எனத் தெரியவருகிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-21

Categories: merge-rss, yarl-category

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நட்டஈடு வழங்கும் அலுவலகம் விரைவில்

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 05:49
உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­லகம் விரைவில்
mangala-df785d5dee37d36d1255eaa09a9cbd2b5cf9ba5d.jpg

 

சுவிடன் வட்­ட­மேசை கலந்­து­ரை­யா­டலில் அறி­வித்தார் மங்­கள

 (நமது விசேட நிருபர்)

நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்­பான மக்­களின் ஆலோ­ச­னை­களைப் பெறு­வ­தற்கு அமைக்­கப்­பட்ட செய­லணி தனது அறிக்­கையை அர­சாங்­கத்­ திடம் சமர்ப்­பித்­துள்­ளது. அந்த அறிக்­கையை அர­சாங்கம்  ஆராய்ந்து வரு­வ­துடன் அதற்கு அமை­வாக உண்­மையை கண்­ட­றியும்  ஆணைக்­குழு மற்றும் நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­ல­கத்தை அமைப்­பது தொடர்பில் விரைவில் தீர்­மானம் எடுக்­க­வுள்­ளது என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.  

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்­பான முக்­கிய வேலைத்­திட்­டங்கள் நிறை­வு­பெற்­று­விட்­டன. ஆறு உப நிறை­வேற்­றுக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் தொடர்­பாக தற்­போது ஆய்­வுகள் இடம்­பெ­று­கின்­றன என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார். சுவி­ட­னுக்கு விஜயம் செய்­துள்ள அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று முன்­தினம் அங்கு இடம்­பெற்ற வட்­ட­மேசை கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.   

இந்த கலந்­து­ரை­யா­டலில் அமைச்சர் மேலும் உரை­யாற்­று­கையில்:- இலங்­கையில் தற்­போது துப்­பாக்­கி­களும் குண்­டு­களும் மௌன­மா­கி­யுள்­ள­துடன் புதிய அர­சியல் பயணம் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. ஜன­வரி மாதம் என்­பது இலங்கை மக்­க­ளுக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். 2015 ஜன­வ­ரி­மாதம் 8 ஆம்­தி­கதி இலங்­கையில் அதி­கார மாற்றம் ஏற்­பட்­டது.  

அந்த வகையில் ஜன­வ­ரி­மாதம் என்­பது இலங்­கையின் சமா­தா­னத்­திற்கும் நல்­லி­ணக்­கத்­திற்கும் அர்ப்­ப­ணிக்­கப்­பட்­டுள்­ளது. நாங்கள் ஆட்­சிக்கு வந்து 19 ஆவது திருத்த சட்­டத்தை நிறை­வேற்­றி­யதன் மூலம் 18 ஆவது திருத்த சட்­டத்தை இரத்­து­செய்தோம்.

இத­னூ­டாக ஒருவர் இரண்டு முறையே ஜனா­தி­ப­தி­யாக பத­வி­வ­கிக்க முடியும் என்றும் ஜனா­தி­பதி பத­விக்­காலம் ஆறு வரு­டங்­க­ளி­லி­ருந்து ஐந்து வரு­டங்­க­ளாக குறைக்­கப்­ப­டு­மென்றும் ஏற்­பா­டுகள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. அத்­துடன் தக­வ­ல­றியும் உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­துடன் அர­சி­ய­ல­மைப்பு சபை நிறு­வப்­பட்டு சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களும் கொண்­டு­வ­ரப்­பட்­டன.

  2015 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் இலங்கை சர்­வ­தேச நாடு­க­ளுடன் புதிய உறவை ஆரம்­பித்­தது. பாரா­ளு­மன்­றத்தின் பலம் அதி­க­ரிக்­கப்­பட்­டது. 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணைக்கு இலங்கை இணை அனு­ச­ர­ணையும் வழங்­கி­யது.

நல்­லி­ணக்க செயற்­பாட்டில் அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­களின் கவ­லை­களை போக்­கு­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­கின்­றது. உண்­மையை கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், நட்­ட­ஈடு வழங்­குதல், மீள்­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்தல் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

முத­லா­வது கட்­ட­மாக காணா­மல்­போனோர் தொடர்­பாக நிரந்­தர அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டது. நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்­பான மக்­களின் ஆலே­ச­னை­களைப் பெறு­வ­தற்கு அமைக்­கப்­பட்ட செய­லணி தனது அறிக்­கையை அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பித்­துள்­ளது.

அந்த அறிக்­கையை அர­சாங்கம் ஆராய்ந்து வரு­வ­துடன் அதற்கு அமை­வாக உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு மற்றும் நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­ல­கத்தை அமைப்­பது தொடர்பில் விரைவில் தீர்­மானம் எடுக்­க­வுள்­ளது.

 அர­சாங்கம் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்தும் முத­லா­வது நட­வ­டிக்­கை­யாக வடக்கு, கிழக்கில் சிவில் நிர்­வா­கத்தை உறு­திப்­ப­டுத்­தி­யது. தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் நோக்கில் பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­ச­பை­யாக மாற்­றப்­பட்­டது.

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்­பான முக்­கிய வேலைத்­திட்­டங்கள் நிறை­வு­பெற்­று­விட்­டன. ஆறு உப நிறை­வேற்­றுக்­கு­ழுக்­களின் அறிக்கைகள் தொடர்பாக தற்போது ஆய்வுகள் இடம்பெறுகின்றன.

இலங்கை ஜனநாயகத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த வேண்டுமானால் பொருளாதாரம் சிறந்தமுறையில் இருக்கவேண்டும். சமாதானத்தின் நன்மையானது அனைத்து மக்களுக்கும் பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

இலங்கையை இந்து சமுத்திரத்தின் பொருளாதார தளமாக மாற்றியமைக்க அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். எனவே இலங்கைக்கு தற்போது சர்வதேசத்தின் உதவிகள் அவசியமாகும் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-21#page-1

Categories: merge-rss, yarl-category

மதச்சார்பற்ற நாடாகவே இலங்கை இருக்க வேண்டும் அன்னை திரேசாவின் நினைவு நிகழ்வில் சம்பந்தன்

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 05:48
மதச்­சார்­பற்ற நாடா­கவே இலங்கை இருக்க வேண்டும்
03-a4e8b7e699bafc4e8054635095f6eaca2e8fe79d.jpg

 

அன்னை திரே­சாவின் நினைவு நிகழ்வில் சம்­பந்தன்

(ரி.விருஷன்)

இலங்கை மதச் சார்­பற்ற நாடாக இருக்க வேண்டும். அனைத்து மக்­களும் விரும்­பக்­கூ­டி­யதும் பார­பட்சம் அற்­றதும் சமய அங்­கீ­கா­ரத்­துடன் கூடிய மதச் ­சார்­பின்­மையில் நாம் இணைந்து செயற்­பட வேண்டும் அதுவே நாட்டில்  சிறந்த சுழலை ஏற்­ப­டுத்தும் 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் உள்ள சமய புறக்­க­ணிப்பு இனியும் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது. அனைத்து மக்­களும் இணைந்து வாழக்­கூ­டிய சமய சுதந்­திரம் நிச்­சயம் பெறப்­பட வேண்டும் என்று எதிர்­கட்சி தலைவர் இரா சம்­பந்தன் தெரி­வித்தார். 

அன்னை திரே­சாவின் நினைவு தின நிகழ்வு நேற்று வௌ்ளிக்­கி­ழமை யாழ்ப்­பாணம் பாது­கா­வலன் மண்­ட­பத்தில் இடம்­பெற்­றி­ருந்­தது. இந் நிகழ்வை யாழ்.,ந்திய துணை­தூ­த­ர­கமும் யாழ்.கத்­தோ­லிக்க திருச்­ச­பையும் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்­தன. இந் நிகழ்வில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், யாழ்.மறை­மா­வட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்­பி­ர­காசம், இந்­திய துணைத்­தூ­துவர் எம்.நட்­ராஜன் மற்றும் அன்னை திரே­சா­வுடன் இணைந்து பணி­யாற்­றிய இந்­திய மும்பை தேர்தல் ஆணை­யாளர் ஆகியோர் கலந்­தக்­கொண்­டி­ருந்­தனர்.

இந்­நி­கழ்வில் சிறப்­பு­ரை­யாற்­றிய எதிர்­கட்சி தலைவர் இரா சம்­பந்தன் மேலும் கூறி­ய­தா­வது:- அன்னை திரேசா 20 ஆம் நூற்­றாண்டில் வாழ்ந்த மாபெரும் கருணை உள்­ள­மாவார். அவரை தவிர மனி­தா­பி­மா­னத்­திற்கு முக்­கியம் கொடுத்த ஒரு­வரை நூற்­றாண்டில் காண முடி­யாது. ஐரோப்­பாவில் பிறந்து இந்­தி­யாவில் வாழ்ந்து வந்தார். கொல்­கத்­தாவில் சேரிப்­புற பகு­தியில் அம்­மக்­க­ளுக்­கா­கவே வாழ்ந்து ஏழை­க­ளுடன் ஏழை­யாக வாழ்ந்து வந்தார். 

அநா­தை­க­ளுக்கும் வித­வை­க­ளுக்கும் தயாக வாழ்ந்­தவர். அவ­ரது சேவையை என்றும் மறக்க முடி­யாது. இந்­தியா மட்­டு­மல்­லாது உல­க­ள­விலும் அவ­ரது சேவை பறை­சாற்­றப்­பட்­டது அத­ன­டிப்­ப­டையில் சமா­தா­னத்­திற்­கான நோபல் பரிசு அவ­ருக்கு கிடைக்­கப்­பெற்­றமை அவ­ரது சேவையின் மகத்­து­வத்தை வௌிக்­காட்­டு­கின்­றது.

அது மட்­டு­மல்­லாது அன்னை திரே­சா­வுக்கு பிறகு அவ­ரது சேவை பன்­மு­கப்­ப­டுத்­தப்­ப­டடு உலகம் முழு­வதும் வியா­பித்­தது. பல மில்­லியன் கணக்­கான மக்­க­ளுக்கு வாழ்க்கை கொடுத்­தவர். ஒரு ரோமன் கத்­தோ­லிக்­க­ராக பிறந்து அவ­ரது சேவை எல்லாம் அம்­மத்­தினை சார­த­வ­ருக்கே பெரும்­பாலும் வழங்­கி­யுள்ளார்.

இதுவே மத­சார்­பின்­மைக்­கான சிறந்த உதா­ரணம் மத­சார்­பின்­மையை தௌிவான கோணத்தில் வௌிக்­காட்­டி­ய­வரும் இவ­ரா­வார.் அரசும் சம­யமும் ஒரு நாட்டின் அத்­தி­யா­வ­சி­ய­மான இரு தூண்­க­ளாகும். ஆனால் அரசை சம­யமும் சம­யத்தை அரசும் சார்ந்­தி­ருக்க கூடாது.ஒவ்­வொ­ரு­வரும் தான் விரும்பும் சம­யத்தை போற்­றவும் வழி­ப­டவும் அதனை பின்­பற்­று­வ­தற்கும் புரண சுதந்­திரம் உண்டு.

அதில் அரசு எவ்­வித்­திலும் தலை­யீடு செய்­யக்­கூ­டாது. தனிப்­பட்ட சமய சுதந்­தி­ரத்தை அல்­லது மதச்­சார்­பின்­மையை முடக்க கூடாது. இதுவே மத­சார்­பின்­மையின் முக்­கிய பண்­பாகும். இந்­திய அர­சி­ய­லை­மப்பில் அதன் முன்­னு­ரை­யி­லேயே சோஷ­லிச மத­சார்­பற்ற குடி­ய­ர­சாக அடை­யா­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய அமெ­ரிக்­காவும் மத சுதந்­தி­ரத்தை அடிப்­படை உரி­மை­யாக குறிப்­பிட்­டுள்­ளது. அர­சி­ய­லுக்கு அப்­பாட்­பட்டு நாடுகள் மத­சார்­பற்று செயற்­ப­டு­கின்­றன.

ஐரோப்­பிய நாடு­களை பொறுத்­த­வ­ரையில் சில­வற்றில் மேற்­கத்­தேய நாடு­க­ளிலும் கிறிஸ்­தவ மதம் பெரும்­பான்­மை­யாக காணப்­ப­டு­வதால் மதச்­சார்­பின்­மையின் பண்­புகள் மாறு­ப­டலாம். இதற்கு இன்­னொரு உதா­ர­ண­மாக சோவியத் குடி­ய­ரசின் அனைத்து மதங்­க­ளையும் பின்­பற்ற முடி­யாது அனைத்து மத கலா­சா­ரங்­க­ளையும் தழு­வவும் முடி­யாது. இயற்கை வாத்­தினை தாண்டி சில விட­யங்கள் மத­சார்ப்­பி­னை­மையுள் அங்கு செல்­வாக்கு செலுத்­து­கின்­றது.

அதி­யுச்ச செல்­வாக்கு அதிக முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. சீனாவில் கம்­யுனிஸ்ட் வாதப்­ப­டுத்­தப்­பட்ட அர­சியல் கோட்­பா­டுகள் சமய மத சார்­பின்­மையில் செல்­வாக்கு செலுத்­து­கின்­றது. அங்கு மத சார்­பின்மை மாறு­பட்­ட­தாகும் இலங்­கையில் 1947 ஆம் ஆண்டு சுதந்­திரம் பெற்ற போது சோல்­பரி அர­சி­ய­லை­மப்பின் 29 ஆம் அத்­தி­யாயம் தௌிவாக சில விட­யங்­களை வரை­ய­றுக்­கின்­றது.

தனிப்­பட்ட மதம் கலா­சா­ரத்­திற்கு முன்­னு­ரிமை வழங்கும் எந்­த­வொரு சட்­டத்­தி­னையும் இயற்ற முடி­யாது. என தௌிவாக வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் 1972 ஆம் ஆண்டு அர­சி­ய­லை­மப்பில் பௌத்த மத்­திற்­கான அடிப்­படை இடப்­பட்­டி­ருந்­தது அதன் பின்னர் அல்­லது 78 ஆம் ஆண்டு அர­சி­ய­லை­மப்பில் தௌிவாக பௌத்த மத்­திற்கு முதன்மை ஸ்தானமும் புத்­த­சா­ச­னத்தை பாது­காத்தல் என்­பது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது.

இவ்­வா­றி­ருக்­கையில் புதிய அர­சி­ய­லை­மப்பு எவ்வாறான சமய சீர்திருத்தங்களை கொண்டுவரும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் 1972 மற்றும் 78 ஆம் ஆண்டு அரசியலமைப்புகளில் அடிப்படை உரிமையாக விரும்பிய சமயத்தை தேர்ந்தெடுகும் உரிமை வரையறுக்கப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் இலங்கையும மத சார்பற்று இருக்க வேண்டும் என்பதோடு அனைத்து மக்களுக்கும் விரும்பக்கூடியதும் பாரபட்சம் அற்றதும் சமய அங்கீகாரத்துடன் கூடிய மதசார்பின்மையில் இணைத்து செயற்பட வேண்டும். அதுவே நாட்டில் சிறந்த சுழலை ஏற்படுத்தும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-21#page-1

அன்னை திரேசாவின் நினைவு தின நிகழ்வானது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பாதுகாவலன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
Page-01-b6357c45ebac69b4532d3d4f256252037a830733.jpg

 

அன்னை திரேசாவின் நினைவு தின நிகழ்வானது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பாதுகாவலன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வை யாழ்.இந்திய துணைதூதரகமும் யாழ்.கத்தோலிக்க திருச்சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், ,இந்திய துணைத்தூதுவர் ஆர்.நட்ராஜன் மற்றும் அன்னை திரேசாவுடன் இணைந்து பணியாற்றிய இந்திய மும்பை தேர்தல் ஆணையாளர் ஆகியோர் மேடையில் அமர்ந்திருப்பதையும் அன்னை திரேசாவிற்கு அஞ்சலி செலுத்தப்படுவதையும் படங்களில் காணலாம்.

Categories: merge-rss, yarl-category

சிறுபான்மையினருக்கு புதிய தேர்தல் முறையில் அநீதி இழைக்க இடமளியோம்

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 05:46
சிறு­பான்­மை­யி­ன­ருக்­கு­ பு­திய தேர்தல் முறையில் அநீதி இழைக்க இட­ம­ளியோம்
kABEER-hASIM-0aa1e0903affcd001bb634a597dbab915fe0f8f3.jpg

 

திருத்­தங்­கள்­ இல்­லை­யேல் ­ப­ழை­ய­ மு­றை­மையில் தேர்­தல்­ என்­கி­ற­து ஐ.தே.க.

 (எம்.எம்.மின்ஹாஜ்)

சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அநீ­தி­யான தேர்தல் முறை­மையை நாம் ஒரு­போதும் ஏற்கமாட்டோம். சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு அநீதி ஏற்­ப­டாத வகையில் புதிய தேர்தல் முறை­மையில் திருத்­தங்கள் செய்­யப்­பட வேண்டும். இல்­லையேல் பழைய முறை­மையின் பிர­கா­ரமே தேர்தல் நடத்த வேண்டி ஏற்­படும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார். 

இது தொடர்­பாக அனைத்து கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். கொழும்­பி­லுள்ள உலக வர்த்­தக மையம் கட்­ட­டத்­தொ­கு­தியில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் பின்னர் பிரத்­தி­யே­க­மாக இது தொடர்பில் அமைச்­ச­ரிடம் வின­விய போதே கேச­ரிக்கு மேற்­கண்­ட­வாறு கூறினார்.   

இது தொடர்பில் அவர்  மேலும் தெரி­விக்­கையில்,   எல்லை நிர்­ணய அறிக்கை அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இதில் சிறுப்­பான்­மை­யி­ன­ருக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.  

இதன்­பி­ர­காரம் சிறுப்­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் புதிய தேர்தல் முறை­மையை நாம் ஏற்க மாட்டோம். சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு அநீதி ஏற்­பா­டாத வகையில் புதிய தேர்தல் முறை­மையில் உடன் திருத்­தங்கள் செய்ய வேண்டும். அப்­படி முடி­யா­விடின் பழை முறை­யான விகி­தா­சார முறை­மையின் பிர­கா­ரமே தேர்­தலை நடத்த வேண்டி ஏற்­படும்.

அத்­துடன் இது தொடர்பில் அனைத்து அர­சியல் கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளோம் என்றார். இதே­வேளை உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் அண்­மையில் கைய­ளிக்­கப்­பட்­டது. இது தொடர்பில் புதன்­கி­ழமை தமிழ் முற்­போக்கு கூட்­டணி , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் , ஈழ மக்கள் ஜன­நா­யக முன்­னணி, நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்கம் ஆகிய சிறுப்­பான்மை இன கட்­சிகள் ஒன்று கூடி ஆராய்ந்­தன.  

இந்த கூட்­டத்தின் போது புதிய தேர்தல் முறைமையில் சிறுப்பான்மை இன மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகவே தேர்தலுக்கு அவசரமாக செல்ல வேண்டாம் என சிறுப்பான்மையின கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-21#page-1

Categories: merge-rss, yarl-category

அரசியலமைப்பில் சகலரதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 05:43
அர­சி­ய­ல­மைப்பில் சக­ல­ரதும் உரி­மைகள் உறு­தி­ப்ப­டுத்­தப்­படும்
p5-14b1767b14ffecd6b214d19cc7ee774e64c134d4.jpg

 

செயிட் அல் ஹுசை­னிடம் உத்­த­ர­வா­த­ம­ளித்தார் பிர­தமர் ரணில்  

(நமது விசேட நிருபர்)

அனைத்து மக்­க­ளி­னதும் உரி­மை­களை புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக உறு­திப்­ப­டுத்­து­வதே இலங்கை அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­பாகும். மக்­களின் உரி­மைகள் தொடர்பில் அனைத்து நிறு­வ­னங்­க­ளி­னதும் அதி­கா­ரி­க­ளுக்கு பயிற்சி வழங்­கு­வ­தற்­கான அத்­தி­யாயம் தொடங்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசை­னிடம் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.   

உலகப் பொரு­ளா­தார மாநாட்டில் கலந்­து­கொள்ளும் நோக்கில் சுவிட்­ஸர்­லாந்தின் டேவோஸ் நக­ருக்கு விஜயம் செய்­துள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைனை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.  

இந்த சந்­திப்­பின்­போது ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் குறிப்­பி­டு­கையில்; இலங்­கையின் மனித உரிமை நிலைமை  தொடர்­பாக ஏற்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் முன்­னேற்­ற­க­ர­மான நிலைமை மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது. இலங்­கையில் மக்­களின் அனைத்து உரி­மை­க­ளையும் பாது­காக்கும் வகை­யி­லான மற்றும் உறு­திப்­ப­டுத்தும் ரீதி­யி­லான வேலைத்­திட்­ட­மொன்றை நிரந்­த­ர­மாக முன்­கொண்­டு­செல்­வதை காண்­பது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் எதிர்­பார்ப்­பாகும் என்று குறிப்­பிட்­டுள்ளார்.  

அத்­துடன் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனக்­கா­யங்­களை ஆற்­றுப்­ப­டுத்­து­வது தொடர்பில் அர­சாங்கம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­மை­யா­னது வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும் என்றும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

இதன்­போது கருத்­து­ரைத்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அனைத்து மக்­க­ளி­னதும் உரி­மை­களை புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக உறு­திப்­ப­டுத்­து­வதே இலங்கை அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­பாகும். இது­தொ­டர்பில் மக்­களின் உரி­மைகள் குறித்து அனைத்து நிறு­வ­னங்­க­ளி­னதும் அதி­கா­ரி­க­ளுக்கு பயிற்சி வழங்­கு­வ­தற்­கான அத்­தி­யாயம் தொடங்­கப்­படும் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொடர் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ளரும் சுவிட்­ஸர்­லாந்தின் டெவோஸ் நகரில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­மை­யா­னது முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக இம்­முறை கூட்டத் தொட­ரின்­போது ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் இலங்கை தொடர்­பான எழுத்­து­மூல அறிக்­கையை வெளி­யி­ட­வி­ருக்­கின்றார். அந்­த­வ­கையில் இலங்­கைக்கு இந்த 34 ஆவது கூட்டத் தொடர் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக காணப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் செயிட் அல் ஹுசைனும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர்.

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் முன்வைக்கவுள்ள அறிக்கையை பின்பற்றியதாக இலங்கை தொடர்பான புதிய பிரேரணையொன்று ஜெனிவாவில் இம்முறை முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-21#page-1

Categories: merge-rss, yarl-category

மகிந்த ராஜபக்சவை ஸ்ரீல.சு.க. அமைச்சர்கள் சந்திக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதி

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 05:42
மகிந்த ராஜபக்சவை ஸ்ரீல.சு.க. அமைச்சர்கள் சந்திக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதி

 

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு பிரதான அமைச்சர்கள் ஏற்பாடு செய்த சந்திப்பு ஒன்றை திட்டமிட்டபடி நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

1_MS_Meeting.jpg

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்க இந்தச் சந்திப்பு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையின் பேரிலேயே இந்தச் சந்திப்புக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்துவதோடு, மகிந்த ராஜபக்ச மீண்டும் கட்சியில் இணையவேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.virakesari.lk/

Categories: merge-rss, yarl-category

மஹிந்தவும் கோத்தாவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் : சங்க சபை கூறுகின்றது

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 05:39
மஹிந்தவும்  கோத்தாவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் : சங்க சபை கூறுகின்றது

Published on 2017-01-21 09:26:37

 

 

வரலாற்று காலத்திலிருந்து இலங்கை பெளத்தர்கள் மீது தொடரும் ஆக்கிரமிப்புக்கள் 2500 வருடங்களுக்கு பின்னரான இன்றும் குறைவில்லை. இந்நிலையில் நாட்டினை பிளவு படுத்தி பிரிவினைவாதிகளுக்கு எழுதிக்கொடுக்க  அரசாங்கம் முயற்சிக்கின்றது என தேசிய சங்க சபை தெரிவிக்கின்றது.cdda62735b7d48c1c87a65c52461566a_XL.jpg

இதனை எதிர்க்கின்றமையினாலேயே விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டார். இதன் அடுத்த கட்டமாக விரைவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் கைது செய்யப்படுவர் என தேசிய சங்க சபையின் தலைவர் மாதுரு ஒயே தம்மிஸ்ஸர தேரர் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவையும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இலங்கையில் பெளத்த மதத்திற்கு முரணான செயற்பாடுகளை அரசாஙகம் முன்னெடுத்து வருகின்றது. மறுபுறத்தில் இதற்கு எதிராக குரல் கொடுக்கும் தேசிய தலைவர்கள் சிறையிடப்படுகின்றனர்.

அம்பாந்தோட்டையில் அண்மையில் நாட்டினை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றமைக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது பிக்குகளின் காவி உடைகளை களைந்து துரத்தியடிக்குமாறு பொலிஸ் மா அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். 

இவற்றையெல்லாம் இந்த நாட்டினை சங்க சபையான நாங்கள் அனுமதியோம். வெளிவிவகார அமைச்சர் நாட்டில் காவிவாதம் ஊற்றெடுக்கின்றது என்று குற்றம் சாட்டியுள்ளார. அவ்வாறு பிக்குகளை காவிதாரிகள் என்று அமைச்சர் குறிப்பிடுவாராயின் புத்தரும் ஒரு காவிதாரி என்றே குறிப்பிட்ட  வேண்டும். அவ்வாறான வார்த்தை பிரயோகங்கள் பெளத்தர்களையும் புத்த பெருமானையும் நிந்தனை செய்வதாக அமையும்.

இந்த விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். வரலாற்றிலும் நாட்டில் இவ்வாறான இன்னல்களுக்கு பிக்குகள் முகம்கொடுத்தனர். ஆனால் அவ்வாறு பிக்குகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தி அரசியல் வாதிகள் இன்று அடையாளம் இல்லாமல் போயுள்ளனர்.  பிக்குகளை  நிந்தித்தால் இதுதான் நிலைமை என்றும் தற்போதைய ஆட்சியாளர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

இந்த நிலைமை நீடித்தால் பெரும் அழிவுக்கு முகம்கொடுக்க நேரிடும். விமல் வீரவன்ச உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய  ராஜபக்சவுமே கைது செய்யப்படுவர். 

http://www.virakesari.lk/article/15633

Categories: merge-rss, yarl-category

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மீண்டும் கொழும்பிற்கு மாற்றம்

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 05:38
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மீண்டும் கொழும்பிற்கு மாற்றம்

 

 

நீண்ட காலமாக சிறையில் தடுப்பில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை ஹோமாகமை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதற்கு எடுக்கப்பட்ட முனைப்புகள் கைவிடப்பட்டுள்ளது. வழக்குகளின் இடமாற்றம் குறித்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் ஆஜராகும் சட்டத்தரணிகள் எடுத்த முயற்சின் பிரகாரம் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

courts.png

இது தொடர்பிலான மேலும் தெரியவருவதாவது,

 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் தமிழ் அரரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்து இருப்பினும்  கொழும்பிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகளை துரிதப்படடுத்த முடியவில்லை என்று காரணம் கூறப்பட்டு ம38 இற்கும்  மேற்பட்ட வழக்குகளை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது.

 

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வழக்கில் ஆஜராகும் சிரேச்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் தமிழ அரசியல் கைதிகள் வழக்கு இடமாற்றம் செய்யப்பட கடுமையான விசனங்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டு உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தாக தெரியவருகின்றது.

 

அதேநேரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்குகள் தமிழ் பேசும் நீதிமன்றங்களில் குறிப்பாக வடக்கு கிழக்க மாகாண நீதிமன்றங்களில் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுதத்னர் மேலும் தாங்கள் தற்போதைய நிலையிலேயே பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடு்த்துள்ள நேரத்தில் வழக்குகளை வெளி மாவட்டத்திற்கு மாற்றுவவது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

 

அது மட்டுமன்றி மொழி ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படும் வழக்கு விசாரணைகளில் மீண்டும் தாமதங்கள் ஏற்படலாம். புதிய சட்டத்தரணிகளை அனுகுவதும் சிறைசாலைகளுக்கு இருந்துக்கொண்டு இயலாத விடயம் என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தனர் இவ்வாறான நிலையில் தற்போது தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை ஹோமாகமை நீதிமன்றத்திற்கு மாற்றும் நடவடிக்கை முற்றுமுழுதான கைவிடப்பட்டுள்ளதாக அவ்வழக்கில் ஆஜராகவும் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டிசம்பர் மாத்திலிருந்து இந்த வழக்கு விசாரணைகள் ஹோமாகமவிற்கு மாற்றப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.virakesari.lk/

Categories: merge-rss, yarl-category

யாழ். குடாநாட்டில் திடீர் மழை...! விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி

ஊர்ப்புதினம் - Sat, 21/01/2017 - 02:30
யாழ். குடா நாட்டில் இன்று முற்பகல் முதல் அவ்வப்போது விட்டு விட்டு மழை பொழிந்துள்ளது. முற்பகல் 11 மணியளவில் மிதமான மழை வீழ்ச்சியுடன் ஆரம்பித்த மழை இன்று பிற்பகல் சற்று அதிகமாகப் பொழிந்தது.

மழையுடன் பலத்த காற்றும் வீசியுள்ளது. இதனால், மழையின்மையால் ஏக்கத்துடன் வாடிய யாழ். விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

யாழ். குடா நாட்டில் வரட்சி காரணமாக ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில தினங்களுக்கு வடக்கில் மழை பெய்யும் என வளிமண்டலத் திணைக்களம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/132545?ref=home

Categories: merge-rss, yarl-category

பாரிஸில் தொடர் கத்தி குத்து தாக்குதல்..! படுகாயமடைந்த நிலையில் பலர் வைத்தியசாலையில்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இடம்பெற்ற தொடர் கத்தி குத்து சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதே ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 09.15 மணியளவில் இடம்பெற்ற முதலாவது கத்தி குத்து சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டதாக கருதப்படும் சந்தேகநபர் தப்பிச்சென்ற நிலையில், இரவு 11 மணியளவில் Jacques Bonsergent மெட்ரோ ரயில் நிலையத்தில் மற்றும் ஒரு கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

எனினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து பயணிகள் தப்பித்துக்கொண்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர், இறுதியாக மற்றும் ஒரு கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இந்த தாக்குதல் இன்று அதிகாலை 12.50 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Gare de L’Est மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அனைத்து கத்தி குத்து தாக்குதல் சம்பவங்களையும் ஒரே நபரே மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை அந்நாட்டு பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் தொடர்ச்சியாக தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகி வந்துள்ளமையினால், இந்த தாக்குதல் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/france/01/132540?ref=home

Categories: merge-rss, yarl-world-news

பொருத்து வீடுகளைப் பெற கிளிநொச்சியில் 5 ஆயிரம் பேர் விருப்பம்

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 22:38

கிளிநொச்சி மாவட்டத்தில் பொருத்து வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு 5003 பேர் கடந்த 13 ஆம் திகதி வரை தமது விருப்பங்களைத் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தில் இடப்பெயர்வின் பின்னரான மீள் குடியேற்றத்தின்போது குடியமர்ந்துள்ள குடும்பங்களில் இன்னமும் 16 ஆயிரத்து 119 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்தின் ஊடாக புதிய வீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் மீள்குடியேற்ற அமைச்சின் பொருத்து வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளை இணைத்துக் கொள்வதற்கு எமது மாவட்டத்திற்கு 11 ஆயிரம் விண்ணப்பப் படிவங்களை மீள் குடியேற்ற அமைச்சு வழங்கியுள்ளது.

இதனை நாம் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 16 கிராம அலுவலர் பிரிவுகளின் ஊடாக 2300 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில் பயனாளிகளிடமிருந்து 1294 பூரணப்படுத்திய படிவங்களும்,

பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள 19 கிராம அலுவலர் பிரிவுகளின் ஊடாக 1340 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில் பயனாளிகளிடம் இருந்து 957 படிவங்களும்,

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 18 கிராம அலுவலகப் பிரிவுகளின் கிராம அலுவலர்கள் ஊடாக 520 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில் மீளவும் 420 பூரணப்படுத்திய படிவங்களும்,

கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 42 கிராம அலுவலர் பிரிவுகளின் ஊடாக 5550 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில் மீளவும் பயனாளிகளிடம் இருந்து 2232 படிவங்களும் பூரணப்படுத்திய படிவங்களாக இது வரையில் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதேவேளை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதிக்குள் விடுமுறை தினங்கள் அதிகம் வந்துள்ளமையால் தம்மால் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.

எனவே காலநீடிப்பு வழங்குமாறு அனைத்து மாவட்ட பயனாளிகளும் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மீள்குடியேற்ற அமைச்சினால் இன்று வெள்ளிக்கிழமை வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே பொருத்தும் வீட்டுத்திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் காலநீடிப்பு முடிவடைவதற்கு முன்னர் தமது பகுதி பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக பூரணப்படுத்திய விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்குமாறு அவர் மேலும் அறிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/community/01/132528?ref=home

Categories: merge-rss, yarl-category