merge-rss

நீதி கிடைத்தால் மட்டுமே சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படும்! விக்னேஸ்வரன்

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 13:15
இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைத்தால் மட்டுமே சமாதானமும் நல்லிணக்கத்தினையும்ஏற்படுத்த முடியுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகரிடம் வடமாகாணமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகர் போல் மற்றும் அவரது பிரதிநிதிகள்இன்று வெள்ளிக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில்அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு முதமைச்சர் கருத்து தெரிவிக்கையில், வடமாகாணமக்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்ய முடியுமென கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

போரினால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினைஉயர்த்தும் முகமாக பல்வேறு செயற்திட்டங்களைவ குக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளிற்கு வாழ்வாதார உதவிகளை செய்துமீண்டும் சமூகத்துடன் இணைக்க வேண்டியுள்ளது கூறியுள்ளேன்.

கடந்த காலங்களில் இவ்வாறு தான் பல உதவித்திட்டங்களை வழங்கி வந்துள்ளோம். மீண்டும் இவ்வாறான உதவிகளை வழங்குவோம் என உறுதியளித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கும் போது, எந்தவிதமான பயிற்சிகளையும் முன்னாள் போராளிகளுக்கு வழங்கவில்லை. மீளவும் தமது வாழ்க்கையினை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் எதுவும் செய்துகொடுக்கப்படவில்லை.

மாவட்டத்தில் ஏதாவது குற்றங்கள் நடந்தால், பொலிஸ் மற்றும் இராணுவம் முன்னாள்போராளிகளையே கைது செய்து செல்கின்றனர்.

இவ்வாறான கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம்கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள்மேற்கொள்ள முடியுமென கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

போர்க்குற்றங்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் நடைபெற வேண்டும். நடந்த தவறுகளுக்குநீதி கிடைத்தால் மாத்திரமே சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் உருவாக்க முடியும்.

அரசியல் ரீதியான உரித்துக்களைப் பெற்றுத்தந்தால் மாத்திரமே ஏனைய விடயங்களில்கரிசனை கொள்ள முடியும்.

அரசியல் ரீதியான உரித்துக்களை வழங்குவதற்கு தென்பகுதியினர் தடையாக உள்ளனர்.

அதிகார பகிர்வு எவ்வாறு நாட்டிற்கு நன்மைகளைப் பயக்கும் என்பதுபற்றி பல்கலைக்கழகங்களிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டங்களை மேற்கொண்டால், வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென எடுத்துக் கூறினேன் என்றார்.

 

http://www.tamilwin.com/politics/01/132495?ref=home

Categories: merge-rss, yarl-category

தாய் தந்தையரின் கல்லறைகளை புனரமைத்த கோத்தா! படையெடுத்த விசாரணைப்பிரிவினர்

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 12:39
மெதமுலனவில் அமைந்துள்ள மஹிந்தவின் தந்தை “டி.ஏ.ராஜபக்ஸ அருங்காட்சியகம்” மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் அரச மதிப்பீட்டு அதிகாரிகள் இணைந்து நேற்று காலை குறித்த பகுதியை சோதனையிட்டுள்ளனர்.

இறுதி மதிப்பீட்டு அறிக்கையை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த தேடுதலை முன்னெடுத்திருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“வீரகெட்டிய திட்டம்” என்ற பெயரில் திட்டமொன்றை ஆரம்பித்து தமது தாய் தந்தையரான டி.ஏ. ராஜபக்ஸ தம்பதிகளின் கல்லறைகளைப் புனரமைத்தல் மற்றும் அருங்காட்சியகமொன்றை நிர்மாணிப்பதற்காக 9 கோடி ரூபா செலவிடப்பட்டதாக கடந்த காலத்தல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விசாரணைகளுக்காகவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலப்பகுதியில் அந்த அமைச்சுக்கு சொந்தமான காணிகளை நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக குறித்த நிதி ராஜபக்ஸ அமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/statements/01/132483?ref=home

Categories: merge-rss, yarl-category

டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 11:51
கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக தெரிவாகிய டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இலங்கை அரசாங்கம் சார்பில் குறித்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/132492?ref=home

Categories: merge-rss, yarl-category

மல்லுக்கட்டு...

மல்லுக் கட்டி நிற்கின்றோம்
ஜல்லி கட்டை நடத்திவிட
கொள்ளிக் கட்டை கொண்டு வந்து
தமிழ் குல தொன்மம் அழித்துவிட
மல்லுக் கட்டும் 
உலகமயமாக்கலோடு நாமும்
மல்லுக்கட்டி நிற்கின்றோம்.

புல்லுக் கட்டு போல எங்கள்
புராதன தொன்மைகளை
புதைத்துவிட்டு
பல்லுக்காட்டி நிற்கச் சொல்லி
பாடம் சொல்லும் கயவரோடு
மல்லுக்கட்டி நிற்கின்றோம்

#ஈழத்துப்பித்தன்
19.01.2017

Categories: merge-rss

அப்பம் 

நாவூற வாயூற - Fri, 20/01/2017 - 06:56

அப்பம் 

 

 

Categories: merge-rss

தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கு என்ன?

அரசியல்-அலசல் - Fri, 20/01/2017 - 06:06
தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கு என்ன?
 

article_1484882279-Muslims.jpg- மொஹமட் பாதுஷா 

இந்தியத் தமிழர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு பிராந்தியங்களிலும் உள்ள இந்து மக்கள் ஏர்தழுவுதல் (ஜல்லிக்கட்டு) சார்ந்த உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, உலகின் ஏனைய பாகங்களில் வாழும் முஸ்லிம்களைப் போலவே, தம்முடைய இருப்பு மற்றும் அபிலாஷைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் சமூகமாகவே இலங்கை முஸ்லிம்களும் இருக்கின்றனர்.  

 வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களுடைய பிரச்சினையும் தெற்கில், மலைநாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளும் வடிவத்தில் வேறுபட்டாலும் பெரும்பாலும் அவற்றின் அதனது தோற்றுவாயும் பண்புகளும் ஒத்த தன்மையையே கொண்டிருக்கின்றன.   

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான முயற்சிகள் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீண்டகால இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையக் கூடிய ஒரு தீர்வுத்திட்டத்தைக் கொண்டுவருவது அதன் பிரதான நோக்கங்களுள் ஒன்றாக இருக்கின்றது.  

 ஆனால், அரசியலமைப்பை மறுசீரமைப்பதற்கான அதாவது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் வெற்றியளிக்குமா? என்ற ஐயப்பாடு தற்போது ஏற்பட்டிருக்கின்றது.   

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றின் அடிப்படை அரசியல் சித்தாந்தங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.   

ஆனால் சர்வதேச, இந்திய மற்றும் புலம்பெயர் சக்திகளின் அழுத்தங்கள், நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு ஆகிய அடிப்படைகளின் கீழ், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் ஏதேனும் ஓர் ஏற்பாட்டை அரசியலமைப்பின் ஊடாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.   

இனப் பிரச்சினைக்கான தீர்வு என்று வரும்போது, அது தமிழர்களுக்கு மட்டுமான தீர்வாக இருக்க இயலாது. அந்தத் தீர்வு சமகாலத்தில் சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறில்லாத எந்தத் தீர்வும் உண்மையில் நிரந்தரத் தீர்வாகவும் மாட்டாது.   

இந்தவகையில் நோக்கினால், தமிழ் மக்களுக்கு என்ன தேவையோ, அவர்களுடைய அபிலாஷை என்னவோ, அதனைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தரப்பு அரசியல் சக்திகள் எல்லாமே ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றன.   

அரசியல் ரீதியாக வேறுவேறு முகாம்களில் இருந்து செயற்படுகின்ற தமிழ் அரசியல்வாதிகளும் இந்த நல்ல நோக்கத்துக்காக ஒரு பொதுத் தளத்துக்கு வந்திருக்கின்றனர்.   

அந்த அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, அதற்குள் தம்மைத் தாமே ஆளும் விதத்தில் அமையப்பெற்ற அதிகாரத்தைக் கொண்ட தீர்வொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றது.

இதனை அடைந்து கொள்வதற்காக, அரசியலமைப்பு ரீதியாக எதைச் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் சத்தமில்லாமல், அவர்கள் செய்து கொண்டுமிருக்கின்றார்கள்.   

ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் வெட்கித் தலைகுனியச் செய்வதாக அமைந்திருக்கின்றன.

தேசியத் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அதாவுல்லா போன்றோரோ அல்லது பிராந்திய அரசியல்வாதிகளோ கூட்டாக முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை ஆவண ரீதியாக இன்னும் முன்வைக்கவில்லை என்றே கூற வேண்டும்.  

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு உட்கட்சிப் பிரச்சினையிலும் மக்கள் காங்கிரஸ் தலைவருக்கு வில்பத்து விவகாரத்திலும் தேசிய காங்கிரஸ் தலைவருக்கு விழிப்புணர்வுக் கூட்டங்களை நடாத்துவதற்குமே நேரம் சரியாக இருக்கின்றது.   

முஸ்லிம் மக்கள் தங்களுடைய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளின் இயலுமையின் அளவு என்ன என்பதை இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பதைப் போன்ற வேறு கைசேதங்கள் எதுவும் இருக்காது.   

தீர்வுத்திட்டம் என்று வருகின்ற போது தமிழர்களுக்கு எதைக் கொடுக்கக் கூடாது என்று கூறுவதற்கு முஸ்லிம்களுக்கு உரிமையில்லை. மாறாக, உங்களுக்கு என்ன தேவை என்ற கோரிக்கையையே முன்வைக்க வேண்டும்.  

அரை நூற்றாண்டு காலமாகப் போராடி வருகின்ற தமிழ் மக்களுக்கே உருப்படியாக எதையும் கொடுப்பதில் மெத்தனப் போக்கைக் காட்டுகின்ற ஆட்சியாளர்கள், முஸ்லிம்களுக்குத் தங்கத்தட்டில் தீர்வை வைத்து நீட்டுவார்கள் என்று கனவிலும் நினைக்கத் தேவையில்லை.   

குறைந்தபட்சம், ஒருமித்த குரலில், எழுத்துவடிவில் கோரிக்கைகளை முன்வைத்து, அதனை அரசியலமைப்பு ஊடாக உறுதிப்படுத்தாவிட்டால், வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல அதற்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்களின் எதிர்காலமும் சூனியமாகிவிடக் கூடிய அபாயமிருக்கின்றது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து ஓர் ஆட்சியை நிறுவுவது எனவும், அதில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது’ என்றும் ஓர் அறிவிப்பை விடுத்துள்ளது.   

வட மாகாண சபை ‘முஸ்லிம்களுக்கான தன்னாட்சி அதிகார சபை’ ஒன்றை வழங்குவதற்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆனால், முஸ்லிம்கள் தங்களது நிலைப்பாடு, கோரிக்கை என்னவென்பதை அறுதியும் உறுதியுமாகத் தெரியப்படுத்தவில்லை என்பது பட்டவர்த்தனமானது.  

சில முஸ்லிம் அரசியல்வாதிகள், இவ்விரு மாகாணங்களும் இணைந்தால் இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் வேண்டுமெனக் கூறி வருகின்றனர்.

சில அரசியல்வாதிகள், இணையாத கிழக்கில் முஸ்லிம் தனி மாகாணம் தர வேண்டும் எனச் சொல்கின்றனர். இன்னும் சிலர், இவ்விரு மாகாணங்களும் இணையாதிருத்தலே தீர்வு என்று கூறி வருகின்றனர்.

ஓரிரு அரசியல்வாதிகள் சமஷ்டி (பெடரல்) முறையை பரிந்துரை செய்கின்றனர். வேறு சிலருக்கு இதுபற்றி எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.   

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முஸ்லிம்கள் பெரிதும் மதித்தனர்; இன்னும் மதிக்கின்றனர். தமிழர்களின் கனவுக்காக விடுதலைப் புலிகளோடு இணைந்து முஸ்லிம் இளைஞர்களும் போராடினர் என்பதுதான் வரலாறு. அந்த வரலாற்றை கறைபடியச் செய்தது புலிகளே அன்றி முஸ்லிம்கள் அல்லர்.  

அதுபோலவே, முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலும் தமிழர் அரசியலில் இருந்துதான் தோற்றம் பெற்றிருக்கின்றது. பெருந்தேசியக் கட்சிகளின் ஊடாகவோ, தமிழரசுக் கட்சியின் ஊடாகவோ முஸ்லிம்களின் அபிலாஷைகளை முற்றுமுழுதாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்ற பட்டறிவே, தனியடையாள முஸ்லிம் கட்சிகள் உருவாகக் காரணமாயிற்று என்றும் கூறலாம். இவற்றிலிருந்துதான் முஸ்லிம்கள் பாடம் கற்றுக் கொள்கின்றனர்.  

ஆரம்பத்தில் இருந்தே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரேபாதையில் கூட்டாக பயணித்த போதிலும், அவையிரண்டும் தனித்தனி இனக்குழுமங்கள் என்பதையும் இருவேறுபட்ட அபிலாஷைகளைக் கொண்டுள்ளன என்பதையும் பரஸ்பரம் இருதரப்பு அரசியல்வாதிகளும் விளங்கிக் கொண்டனர்.  

1956 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் ‘இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி தமிழரசும், முஸ்லிம்களுக்கு ஒரு சுயாட்சி முஸ்லிம் அரசும்’ என்று தீர்மானித்து, அதைத் ‘திருமலை தீர்மானம்’ ஆக அன்றைய தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்தினார்கள்.   

1961 இல் இடம்பெற்ற அக்கட்சியின் மாநாட்டில் தந்தை செல்வநாயகம் “தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சமமான ஆட்சி அதிகாரம் நிறுவப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தியிருந்தார்.  

அதேநேரம், 1977 இல் வெளியிடப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், ‘முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களில் ஒரு சுயாட்சிமுறை ஏற்படுத்தப்படும். தமது விருப்பத்தின் அடிப்படையில் பிரிந்துசெல்லும் வகையில் அவர்களது சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கும் தமிழர் விடுதலைக்கூட்டணி உத்தரவாதம் அளிக்கின்றது’ என்று கூறப்பட்டுள்ளது.  

எவ்வாறிருப்பினும், இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் அவ்வாறான ஓர் ஆட்சியதிகார நிலப்பரப்பை முஸ்லிம்களுக்கு வழங்குவதில் தயக்கம் காட்டுவதை அவதானிக்க முடிகின்றது என்று, இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளருமான சேகு இஸ்ஸதீன் அண்மையில் வெளியிட்டுள்ள முஸ்லிம் சமஷ்டி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 

 இதனை அடிப்படையாக வைத்து, அன்றைய தமிழ் தலைவர்கள் போல் இன்றையவர்கள் இல்லை என்று கூறினால், மறுபுறத்தில், அன்றைய முஸ்லிம் தலைவர்கள் போல இப்போதிருப்பவர்களும் இல்லை என்று, அங்கிருந்து ஒரு குரல் வரலாம் என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.   

எதுஎவ்வாறிருந்த போதும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்துவ இன, மத அடையாளத்துடனும் அரசியல் உரிமை சார்ந்த வேட்கைகளோடும் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் இனப்பிரச்சினைத் தீர்வின் ஊடாக ஒரு முஸ்லிம் மாகாணமோ, சமஷ்டி ஆட்சியே வழங்கப்பட வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.   

அதைவிடுத்து, முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிக்கின்ற கதைகள் எல்லாம், 1948 இல் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக டீ.எஸ்.சேனநாயக்கா ஆசை வார்த்தை கூறியதைப் போல, ஒரு தற்காலிக பிரதியுபகாரமாகவே அமையும் என்றும் சேகு இஸ்ஸதீன் கூறியுள்ளார்.   

தமிழர்களின் வேண்டுதலான வடக்கு, கிழக்கு இணைப்பை சாத்தியமாக்குவது முஸ்லிம்களின் கைகளிலேயே கணிசமாகத் தங்கியுள்ளது. எனவே, இதற்கு முஸ்லிம்கள் ஆதரவை வழங்கும் பட்சத்தில் சம அதிகாரமுள்ள ஒரு தீர்வை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என்பதே முக்கியமானது. அது சமஷ்டியாக, வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணமாக, கிழக்கில் தனி முஸ்லிம் மாகாணமாக... எதுவாகவும் இருக்கலாம்.   

இங்கு சமஷ்டி முறையில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். சமஷ்டி (பெடரல் முறைமை) முறை என்பது அதிகாரப் பரவலாக்கலின் ஒரு முக்கிய கூறாக கருதப்படுவதுடன், அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா உள்ளடங்கலாக பல நாடுகளில் இம்முறை அமுலில் இருக்கின்றது.   

சமஷ்டியில் பல்வேறு மாதிரிகள் இருக்கின்றன. ஆனால், மத்திய, மாநில அரசாங்கங்களை உள்ளடக்கிய ஒரு பொது அரச கட்டமைப்பின் ஊடாகத் தனித்துவ அரசியல் சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு கூட்டாட்சி முறை என்று இதனை மேலோட்டமாகக் குறிப்பிடலாம்.  

 எனவே, இது இலங்கைக்கு மிகப் பொருத்தமானது என்று நீண்டகாலமாக கூறப்பட்டு வருகின்றது. ஆனாலும், சமஷ்டியை கொண்டுவருவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.  

அதிகாரப்பரவலாக்கலின் ஓர் ஏற்பாடாக சமஷ்டி இருப்பதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மாத்திரமல்லாது மலையக தமிழர்கள், தென்பகுதி சிங்கள மக்கள் என ஒவ்வொரு வகையினருக்கும் சமஷ்டியை வழங்கக் கூடிய மாதிரிகள் உலகில் காணப்படுகின்றன. அது பிரச்சினையில்லை.  

ஆனால், சமஷ்டி முறையை கொண்டு வருவதென்றால், அது அரசியலமைப்பின் ஊடாகவே மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இலங்கையின் ஆளுகைக் கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும். இதில்தான் சிக்கலும் சவால்களும் உள்ளன.   

எப்படியென்றால், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதும் அதற்காக பொதுஜனவாக்கெடுப்பில் வெற்றியையும் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் பெறுவதில் நல்லாட்சி அரசாங்கம் நிச்சயமற்ற நிலமைகளை எதிர்நோக்கியிருக்கின்றது.  

இந்நிலையில், சமஷ்டி போன்ற ஓர் ஆட்சி முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. குறிப்பாக, ஆளும்கட்சி அரசியல்வாதிகள் ஒருசிலரே சமஷ்டியின் சாத்தியமின்மைகள் பற்றி பேசத் தொடங்கியிருக்கின்றனர்.  

எனவே, அரசாங்கமானது மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை உச்சபட்சமாக அதிகரிக்கும் சாத்தியமே அதிகரித்து வருவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.   

அந்த வகையில், இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்தோ, ஒன்றிணைக்காமலோ ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க முடியும்.   

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தவிர, நாடளாவிய மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்போ ஏனைய மாகாண சபைகளின் ஒப்புதலோ கட்டாயமில்லை. ஒரு விசேட ஏற்பாடாக அதைச் செய்ய முடியும் என்று விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.   

எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, அதில் தமிழ்பேசும் மக்களுக்கான ஆட்சியதிகாரம் வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கின்றது. ஒருவேளை அதில் நிலத்தொடர்பற்ற இரு (தமிழ், முஸ்லிம்) மாகாணங்கள் உருவாகலாம். 

அல்லது தென்கிழக்கு அலகு என்ற பெயரில் ஒரு சிறிய நிலப்பரப்பு முஸ்லிம்களுக்கு கிடைக்கலாம். இது எதுவும் நடக்காமலேயே காலம் கடந்து போகவும் கூடும்.   

ஆனால், சமஷ்டி வந்தாலும், இரு மாகாணங்கள் இணைந்து தீர்வு கிடைத்தாலும், இணையாமல் தீர்வு தந்தாலும் அதற்குள் தமிழர்களுக்கு கிடைக்கின்றதைப் போன்ற நியாயமான ஆட்சியதிகாரம் முஸ்லிம்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.   

தமிழர்களும் முஸ்லிம்களும் மிக நெருக்கமாக வாழ்ந்த அந்தக் காலத்திலேயே தமிழரக் கட்சியானது முஸ்லிம்களுக்கான சுயாட்சியையும் முன்மொழிந்திருக்கின்றது என்றால், இரு இனங்களுக்கும் இடையில் இத்தனை மனக் கசப்புக்கள் ஏற்பட்டு, தனித்தனி இனங்களாக செயற்படத் தொடங்கிவிட்ட இன்றைய காலப்பகுதியில், அவ்வாறு ஒரு சம அதிகார ஏற்பாட்டை வழங்குவதற்கு தமிழ் தரப்பு முன்வர வேண்டியது மேலும் இன்றியமையாததாகி இருக்கின்றது.   

முஸ்லிம்களின் நியாயங்களை ஏற்றுக் கொண்டும் விடுதலைப் போராட்டத்தின் பக்கவிளைவாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து தடவும் முகமாகவும் இதை தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொள்ள முடியும்.   

அதேபோல், நாடு தழுவிய ரீதியிலான சமஷ்டியோ, பிராந்திய ரீதியிலான சமஷ்டி ஆட்சியோ எது கொண்டு வரப்பட்டாலும் அல்லது வடக்கு, கிழக்குக்ள் பிரத்தியேக தீர்வுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டாலும் முஸ்லிம்களுக்கு குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வோருக்கான சம ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவது முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரினதும் கடமையாகும்.   

- See more at: http://www.tamilmirror.lk/190033/த-ர-வ-த-த-ட-டத-த-ல-ம-ஸ-ல-ம-கள-க-க-ர-ய-பங-க-என-ன-#sthash.UPXXtL2Z.dpuf
Categories: merge-rss

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க நாசகாரி

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 06:03
கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க நாசகாரி
 
 
கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க நாசகாரி
அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர், நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
 
அமெரிக்க நாசகாரி கப்பலுக்கு, கொழும்புத் துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளி க்கப்பட்டது.
USS-Hopper-colombo-2-1024x494.jpg
விமான எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, மற்றும் தரை இலக்குகளைத் தாக்கும் பலநோக்கு போராயுத வசதிகளைக் கொண்ட இந்த நாச காரி கப்பல், பேர்ள் ஹாபரில் இருந்து இயங்கி வருகிறது.
 
தற்போது இந்த நாசகாரி, இந்தோ-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
USS-Hopper-colombo-3-1024x535.jpg
வரும் 23ஆம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கும் அமெரிக்க நாசகாரி கப்பல், இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளிலும் பங்கேற்கவுள்ளது.
 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் இலங்கைக்கு  பயணம் மேற்கொள்ளும் ஐந்தாவது அமெரிக்கப் போர்க்கப்பல் இது வாகும்.
 
ஏற்கனவே  யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், யுஎஸ்எஸ் நியூ ஓர்லியன்ஸ், யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் ஆகிய அமெரிக்க போர்க்கப்பல்கள் கொழு ம்புத் துறைமுகத்துக்கும், யுஎஸ்எஸ் சோமசெற் போர்க்கப்பல், திருகோணமலை துறைமுகத்துக்கும் கடந்த ஆண்டில் பய ணம் மேற்கொண்டிருந்தன.
 
அதேவேளை கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம், இலங்கை கடற்பரப்புக்கு அருகாக பயணத்தை மேற்கொண்டிருந்த போது யுஎஸ் எஸ் ஹொப்பர் நாசகாரியின் மாலுமி ஒருவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக, இந்தப் போர்க்கப்பல் இலங்கை கடற்ப ரப்பில் நுழைந்திருந்தது.
 
அந்த மாலுமி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு கொழும்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார் என்பது குறி ப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/22906

Categories: merge-rss, yarl-category

மிகுந்த நன்றியுடன் இரணவில 400 ஏக்கர் காணியை இலங்கையிடம் மீள அளிக்கின்றோம் அமெரிக்க தூதரகம் அறிக்கை

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 05:48
மிகுந்த நன்­றி­யுடன் இர­ண­வில 400 ஏக்கர் காணியை இலங்­கை­யிடம் மீள அளிக்­கின்றோம்

 

அமெ­ரிக்க தூத­ரகம் அறிக்கை

(நமது நிருபர்)

இலங்கை அர­சாங்­கத்­திடம் இருந்து குத்­த­கையின் அடிப்­ப­டையில் பெறப்­பட்ட 400 ஏக்­கர்­க­ளுக்கு அதி­க­மான இர­ண­வில பகு­தியில் அமைந்­துள்ள காணியை மிகுந்த நன்­றி­யுடன் அமெ­ரிக்க அர­சாங்கம் இலங்­கை­யிடம் மீள அளிக்­கின்­றது. இலங்­கை­யு­ட­னான நெருக்­க­மான உற­வையும், 60 ஆண்டு கால எமது இரு தரப்பு பங்­கா­ளித்­து­வத்­தையும் அமெ­ரிக்கா மதிக்­கின்­றது என்று கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது.

இர­ண­வில நிலையம் மூடப்­பட்­டமை தொடர்பில் கொழும்பில் அமைந்­துள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்­கை­யு­ட­னான நெருக்­க­மான உற­வையும், 60 ஆண்டு கால எமது இரு தரப்பு பங்­கா­ளித்­து­வத்­தையும் அமெ­ரிக்கா மதிக்­கின்­றது. அந்­த­வ­கையில் சுயா­தீன அமெ­ரிக்க நிறு­வ­னத்­தினால் நிர்­வ­கிக்­கப்­பட்ட, இர­ண­வில சிற்­றலை வானொலி நிலையம் இந்த பங்­கா­ளித்­து­வத்­திற்­கான ஒரு சிறந்த உதா­ர­ண­மாகும்.  

வாஷிங்டன் நக­ரி­லி­ருந்து வொய்ஸ் ஒப் அமெ­ரிக்கா நிகழ்ச்­சி­களை சிற்­றலை வானொலி அலை­களின் ஊடாக உல­கெங்­கிலும் உள்ள ரசி­கர்­க­ளுக்கு இந்த சிற்­றலை நிலையம் கொண்டு சேர்த்­தது. செய்­திகள், இசை மற்றும் அமெ­ரிக்கா குறித்த விசேட நிகழ்ச்­சிகள் இதில் உள்­ள­டங்­கின. உல­கிற்கு அமெ­ரிக்­காவின் கதை­களை கொண்டு செல்லும் பணி­நோக்­கத்­தினை பல வருட கால­மாக இலங்கை அர­சாங்­கங்­களின் ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கா­விடின் வொய்ஸ் ஒப் அமெ­ரிக்­கா­வினால் நிறை­வேற்­றி­யி­ருக்க முடி­யாது.

கடந்த காலங்­களில், எவ்­வா­றா­யினும் சிற்­றலை ஒலி­ப­ரப்­பு­க­ளுக்­கான ரசி­கர்கள் குறைந்து வரு­கின்­றனர். செய்­திகள் மற்றும் தக­வ­லுக்­காக எப்.எம். வானொ­லிகள் மாத்­தி­ர­மின்றி, செய்­மதி தொலைக்­காட்சி சேவை, இணை­யத்­த­ளங்கள், மற்றும் சமூக ஊடகம் என, கைபே­சி­களின் ஊடாக வழங்­கப்­படும் வேறு மூலங்­களை நோக்கி மக்கள் திரும்பி வரு­கின்­றனர்.

தமக்கு விருப்­ப­மான ஊட­கத்தின் வழி­யாக இரசி­கர்­களை அடை­வதில் சுயா­தீன அமெ­ரிக்க நிறு­வனம் என்றும் அர்ப்­ப­ணிப்­புடன் உள்­ளது. ரசி­கர்­களின் மாறும் பழக்­கங்கள் மற்றும் சிற்­றலை ஒலி­ப­ரப்பு நிலை­யத்தைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான அதி­க­ரித்த செலவு என்­ப­வற்றின் கார­ண­மாக இர­ண­வி­லவில் அமைந்­துள்ள நிலை­யத்தை மூடு­வ­தற்கு சுயா­தீன அமெ­ரிக்க நிறு­வனம் தீர்­மா­னித்­தது.

இலங்கை அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நீண்ட கால குத்­த­கையில் பெறப்­பட்ட நிலையம் அமைந்­துள்ள காணி­யா­னது, மீண்டும் இலங்­கை­யி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. வீதி­களை அமைத்தல், காணி­களை துப்­பு­ரவு செய்தல் மற்றும் சரி செய்தல், கழிவு வடிகால், வேலிகள் அமைத்தல், மற்றும் நவீன அலு­வ­லகக் கட்­ட­டங்கள் என தமது செயற்­பாட்டு காலப்­ப­கு­தியில், இர­ண­வி­லவை அமெ­ரிக்க அர­சாங்கம் மேம்­ப­டுத்­தி­யி­ருந்­தது. 

பொது வச­தி­க­ளுக்­கான சேவை மையங்­க­ளையும், 4.2 மெகா வோட் சுய மின்­னுற்­பத்தி நிலை­யத்­தையும் அமெ­ரிக்க அர­சாங்கம் அமைத்­துள்­ளது. எதிர்­கா­லத்தில் பல வகி­பா­கங்­களை ஆற்­று­வ­தற்­கான உடை­மையின் பெறு­மதி மற்றும் தளத்தின் நெகிழ்வு திறனை இந்த மேம்­ப­டுத்தல் வச­திகள் அனைத்தும் அதி­க­ரித்­துள்­ளன. அனைத்து முன்­னேற்­றங்­களும் உள்ளடங்கலாக, முழுமையாக இலங்கை அரசாங்கத்திடம் 400 ஏக்கர்களுக்கு அதிக மான இரணவில உடைமைக்கான குத்த கையை மிகுந்த நன்றியுடன் அமெரிக்க அரசாங்கம் மீள அளிக்கின்றது.

வாராந்தம் உலகெங்கிலும் 236.6 மில் லியனுக்கும் அதிகமான மக்களுக்கு, 47 மொழிகளில் நம்பகமான, குறிக்கோள்சார் செய்திகளையும், தகவல்களையும் வொய்ஸ் ஒப் அமெரிக்கா வழங்குகின்றது.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-20#page-2

Categories: merge-rss, yarl-category

இலங்கையில் கால்பதிக்கிறது சீனாவின் அலிபாபா

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 05:46
இலங்கையில் கால்பதிக்கிறது சீனாவின் அலிபாபா
 
 
இலங்கையில் கால்பதிக்கிறது சீனாவின் அலிபாபா
உலகின் மிகப் பிரபலமான சீன இணைய வணிக நிறுவனமான அலிபாபா, இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வரு வதாக  நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
 
டாவோசில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில், அலிபாபா நிறுவனத்தின் தலைவரான ஜாக் மாவை, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
 
இந்தச் சந்திப்பின் போதே, இலங்கையில் முதலீடு செய்வதற்கான உடனடி நடவடிக்கையை ஆரம்பிக்கப் போவதாக, அலிபாபாவின் தலைவர் ஜாக் மா தெரிவித்துள்ளார்.
 
தமது முதலீட்டு திட்டம், நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/news/22905

Categories: merge-rss, yarl-category

கைதடியில் சிங்கள மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டால் யாழில் போராட்டங்கள் வெடிக்கும் -சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 05:43
கைதடியில் சிங்கள மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டால் யாழில் போராட்டங்கள் வெடிக்கும் -சிவாஜிலிங்கம் எச்சரிக்கை
 
 
கைதடியில் சிங்கள மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டால் யாழில் போராட்டங்கள் வெடிக்கும் -சிவாஜிலிங்கம் எச்சரிக்கை
வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் கைதடியில் அமைக்கப்பட்டுவரும் வீடுகள் எமது மாவட்ட மக்களைத்தவிர    சிங்கள மக்களுக்கு கொடுக்கப்படுமேயானால் யாழில் போராட்டங்கள் வெடிக்கும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்கே. சிவாஜி லிங்கம்  எச்சரிக்கை விடுத்தார்.
 
வீடமைப்பு அதிகாரசபையினால் நாவற்குழிப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 200 வீடுகள் கொண்ட மாதிரிக்கிராமத்தினை எமது மக்களுக்கு மட்டுமே பகிர்ந்தளிக்கவேண்டும். அதனைவிட்டுவிட்டு சிங்கள மக்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களை அங்கே குடியேற்றினால் இங்கே பலத்த போராட்டங்கள் அரசாங்கத்துக்கு எதிராகவும் வீடமைப்பு அதிகார சபைக்கு எதிராகவும் நாம் முன்னெடுப்போம்.  
 
அத்தோடு யாழ் போதனா வைத்தியசாலையின் சிறுவர் பிரிவிற்கான கட்டத்தை அமைப்பதற்காக யாழ் பேரூந்து நிலையத்தினை அண்டிய பகுதிகள் சுவீகரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளரினால் யாழ்போதனா வைத்தியசாலையின் தலைமை அதிகாரிக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.  
 
அந்தக் கடிதம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் குறித்த பகுதியினை அபகரிக்கும் செயல் நடைபெற்றால் அதற்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கையை எடுப்போம்.
 
வைத்தியசாலை அமைப்பதற்கு போதியளவு காணி தீவகப்பகுதிகள் மற்றும் பலாலி வீதிகளை அண்டிய பகுதிகளில் தாராளமாகக் காணப்படுகின்றன. அதனை விட்டுவிட்டு நீண்டகாலமாக ஒற்றுமையாக வாழும்  யாழ் குடாநாட்டின் நகரப்பகுதிகளில் காணி களை அபகரித்து வைத்தியசாலைக்கட்டடங்கள் அமையுமானால் யாழ்ப்பாணத்துக்கு எந்த ஒரு தென்னிலங்கை அரசின் பிரதிநிதி கள் எவரும் தமிழ் மக்கள் வசிக்கும் மண்ணில் காலடி வைக்கமுடியாது என நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட த்தில் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/22898

Categories: merge-rss, yarl-category

தென் ஆபிரிக்கா, இலங்கை மோதும் இருபது 20 தொடர்

 
தென் ஆபிரிக்கா, இலங்கை மோதும் இருபது 20 தொடர் இன்று ஆரம்பம்
 

தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடர் செஞ்­சூ­ரியன் விளை­யாட்­ட­ரங்கில் இன்று இரவு மின்­னொ­ளியில் நடை­பெ­ற­வுள்ள போட்­டி­யுடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

21907Untitled-5.jpg

இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்­யூ­ஸ் - தென் ஆபி­ரிக்­க­ அணித் தலைவர் பர்ஹான் புஹார்தீன்

 

இரண்டு அணி­களும் 2012 முதல் கடந்த வருடம் வரை விளை­யா­டி­யுள்ள 6 சர்­வ­தேச இரு­பது 20 போட்­டி­களில் 4 – 2 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபி­ரிக்கா முன்­னி­லையில் இருக்­கின்­றது.

 

இதே­வேளை தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெள்­ளை­ய­டிப்புச் செய்­யப்­பட்ட இலங்கை, இரு­பது 20 தொடரில் திற­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சியில் இறங்­க­வுள்­ளது.

 

தென் ஆபி­ரிக்க வேகப்­பந்­து­ வீச்­சா­ளர்­களை எதிர்­கொள்­வ­தற்கு இலங்கை துடுப்­பாட்ட வீரர்கள் முதலில் மனதை திடப்­ப­டுத்­திக்­கொள்­வது அவ­சியம் என இலங்கை கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால  தெரி­வித்தார்.

 

தென் ஆபி­ரிக்­கா­வு­டனான டெஸ்ட் தொடர் தோல்­வியை அடுத்து அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்­யூ­ஸுடன் ஸ்கைப்  கலந்­து­ரை­யாடல் மூலம் ஆலோ­ச­னைகள் வழங்­கப்­பட்­ட­தா­கவும் அடுத்­து­வரும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் தொடர்­களில் இலங்கை அணியை பிர­கா­சிக்கச் செய்ய கடும் முயற்சி எடுக்­கப்­படும் என ஏஞ்­சலோ மெத்யூஸ் உறுதி வழங்­கி­ய­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

 

இன்­றைய போட்­டியில் தனுஷ்க குண­தி­லக்­க­வுடன் நிரோஷன் டிக்­வெல்ல ஆரம்ப வீர­ராக விளை­யா­டுவார் என எதிர்­பா­ர்க்­கப்­ப­டு­கின்­றது. இவர்­களைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ், தினேஷ் சந்­திமால், ஏஞ்­சலோ மெத்யூஸ், தனஞ்­செய டி சில்வா, சச்தித் பத்­தி­ரன, சீக்­குகே பிர­சன்ன அல்­லது லக்ஷான் சந்­தகான், நுவன் குல­சே­கர, சுரங்க லக்மால் ஆகியோர் அணியில் இடம்­பெ­றுவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

பதி­னோ­றா­வது வீர­ராக நுவன் பிரதீப்,  தி­க்ஷிலா டி சில்வா, இசுரு உதான ஆகிய மூவரில் ஒருவர் இடம்­பெ­று­வ­தற்கு வாய்ப்­புள்­ளது.

 

தென் ஆபி­ரிக்­காவைப் பொறுத்­த­ மட்டில் 6 புதிய வீரர்­க­ளுடன் முத­லா­வது போட்­டியை எதிர்­கொள்­ள­வுள்­ளது. எனவே இப் போட்டி தென் ஆபி­ரிக்­கா­வுக்கு சவால் மிக்­க­தாக அமையும் என கருதப்படுகின்றது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21907#sthash.UXQjYIkV.dpuf

 

Categories: merge-rss

ஜி.எஸ்.பி.வரிச் சலுகையை பெறுவதற்கு மனித உரிமையும் சமத்துவமும் அவசியம்

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 05:36
ஜி.எஸ்.பி.வரிச் சலு­கையை பெறு­வ­தற்கு மனித உரி­மையும் சமத்­து­வமும் அவ­சியம்
05-55d8f56ea3f9aae1928cb65cf0651e9443e46a21.jpg

 

வலி­யு­றுத்­து­கின்றார் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க  

(ஆர்.யசி)

மனித உரி­மை­களை பலப்­ப­டுத்தி நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கும் முயற்­சி­களில் நாம் கடி­ன­மான பாதையில் பய­ணித்­துக்­கொண் டுள்ளோம். ஜி.எஸ்.பி. பிளஸ் உள்­ளிட்ட சலு­கை­களை தக்­க­வைக்க வேண்­டு­மாயின் மனித உரி­மைகள் மற்றும் சமத்­து­வ­மான நகர்­வு  க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்க வேண்டும். ஒரு குறிப்­பிட்ட காலத்­துக்கு மாத்­திரம் அல்­லாது தொடர்ச்­சி­யாக நாம் அந்த பய­ணத்தை முன்­னெ­டுக்க வேண்டும் என அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.  

சர்­வ­தேச உத­வி­க­ளையும் பொரு­ளா­தார நகர்­வு­க­ளையும் கையாள வேண்டும் என்­ப­தற்­காக சர்­வ­தேச நாடுகள் அல்­லது புலம்­பெயர் அமைப்­பு­களின் அழுத்­தங்­களை சமா­ளிக்க அவர்­களின் கோரிக்­கை­களை ஏற்­று­கொள்ள வேண்டும் என்ற கட்­டா­யமும் இல்லை எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,  இலங்­கைக்கு ஐரோப்­பிய ஒன்­றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண்டும் வழங்­கு­வ­தற்­கான நல்­ல­தொரு வாய்ப்பு எமக்கு கிடைத்­துள்­ளது. ஆரம்­பத்தில் ஜி.எஸ்.பி சலுகை எமக்கு கிடைத்த நிலையில் எம்மால் அதற்­கான நகர்­வு­களை மேற்­கொள்ள முடி­யாமல் போனது. எனினும் ஓர­ளவு சலு­கைகள் இருந்த நிலையில் சுனாமி பாதிப்பின் பின்னர் எமக்கு நிவா­ரணம் வழங்கும் வகையில் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்­கப்­பட்­டது.  

 யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட நிலையில் இலங்கை அர­சாங்கம் நடந்­து­கொண்டு விதம், மனித உரி­மையை கையாள்­வதில் அர­சாங்­கத்தின் நகர்­வுகள் எ ன்பன திருப்­தி­யில்­லா­த­தன கார­ணத்­தினால் மீண்டும் எம்­மிடம் இருந்து இந்த சலுகை பறிக்­கப்­பட்­டது. உண்­மையில் ஐரோப்­பிய ஒன்­றியம் மூலம் இவ்­வா­றான சலு­கைகள் வழங்­கப்­ப­டு­மாயின் அதன் பின்­ன­ணியில் அர­சியல் நகர்­வு­களும் கட்­டாயம் இருக்கும் என்­பது சக­ல­ருக்கும் தெரி­விந்த விடை­ய­மே­யாகும்.

நாட்டின் அர­சியல் சூழல், வர்த்­தக நகர்­வுகள், சூழ­லியல் பாது­காப்பு அத்­துடன் பிர­தா­ன­மாக மனித உரி­மை­களை கையாள்­வதில் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நகர்­வு­க­ளுக்கு அமை­யவே இவ்­வாறு ஜி.எஸ்.பி சலுகை போன்­றவை வழங்­கப்­படும். கடந்த காலத்தில் எமக்கு ஜி.எஸ்.பி தடை விதிப்பின் பின்­ன­ணியில் மனித உரி­மை­களை மதிக்­காமை மற்றும் இலங்­கையின் சர்­வ­தேச இரா­ஜ­தந்­திர நகர்­வு­களில் காணப்­பட்ட மோச­மான தன்மை என்­ப­னவே இருந்­தன.  

எனினும் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்து இரண்டு ஆண்­டு­களில் சர்­வ­தேச நம்­பிக்­கையை பெற்­றுள்ளோம். மனித உரி­மை­களை பலப்­ப­டுத்தும் நகர்­வு­களும் எமக்கு வெற்­றிய பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளன. மனித உரி­மை­களை பலப்­ப­டுத்தும் நகர்­வு­களில் இலங்கை அர­சாங்கம் மேற்­கொண்ட விட­யங்கள் சர்­வ­தே­சத்தின் நம்­பிக்­கையை பெரும் வகையில் அமைந்­துள்­ளன.

அதன் பிர­கா­ரமே ஜி.எஸ்.பி வரிச்­ச­லுகை மீண்டும் இலங்­கைக்கு வழங்க ஐரோப்­பிய ஒன்­றியம் முன்­வந்­துள்­ளது. ஐரோப்­பிய ஒன்­றிய சங்கம் எமக்கு இந்த சலு­கை­களை வழங்க தீர்­மா­னித்­துள்­ளது. எனினும் ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்றம் இன்னும் இந்த விவ­காரம் தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்ற போதிலும் இன்னும் நான்­கு­மாத காலத்­திலும் எமக்கு இந்த சலு­கை­களை வழங்க தீர்­மானம் எடுக்­கப்­படும் என எம்மால் கூற­மு­டியும்.

 இலங்­கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்க ஐரோப்­பிய ஒன்­றி­யத்தால் 58 நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் கருத்­துக்கள் தொடர்பில் எமக்கு சரி­யாக எதுவும் தெரி­ய­வில்லை. எனினும் அவ்­வாறு நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்­டி­ருப்பின் அவற்றை உட­ன­டி­யாக அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்க வேண்டும் என நாம் வெளி­வி­வ­கார அமைச்­சிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளோம். இவ்­வா­றான சலு­கை­களை அவர்கள் இல­வ­ச­மாக வழங்­கப்­போ­வ­தில்லை.

மாறாக அவர்­க­ளுக்கும் சாத­க­மான சில விட­யங்­க­ளையும் அதேபோல் பொதுப்­ப­டை­யான கார­ணி­க­ளையும் கவ­னத்தில் கொண்டு இந்த நட­வ­டிக்­கை­களை கையா­ளு­கின்­றனர். அந்த வகையில் 27 கார­ணி­களை ஐரோப்­பிய ஒன்­றியம் எமக்கு செயற்­பாட்டு திட்­ட­மிடல் விட­யங்­க­ளாக முன்­வைத்­துள்­ளது.

அதா­வது மனித உரி­மை­களை பலப்­ப­டுத்தும் நகர்­வு­களை உறு­திப்­ப­டுத்தல், சூழ­லியல் நகர்­வு­களில் சூழலை பாது­காக்கும் பல­மான தீர்­மா­னங்­களை முன்­னெ­டுத்தல், சர்­வ­தேச நாடு­க­ளுடன் இலங்கை கையாளும் நட்­பு­றவு மற்றும் பொரு­ளா­தார அர­சியல் நகர்­வுகள் என்­ப­வற்றை உறு­திப்­ப­டுத்தல் போன்ற விட­யங்­களை பிர­தா­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஆகவே இந்த விட­யங்­க­ளுடன் அர­சாங்கம் உடன்­பட்­டுள்ள நிலையில் தான் மீண்டும் எமக்கு வரி­ச­லு­கை­களை வழங்க தீர்­மா­னித்­துள்­ளது. எனினும் இந்த செயற்­பாட்டு திட்­டங்­களை முன்­னைய அர­சாங்­கமும் ஆத­ரித்­தது. இந்த திட்­டங்­களை எவ­ராலும் தவிர்க்க முடி­யாது. ஆகவே ஜி.எஸ்.பி பிளஸ் சலு­கை­களை இலங்கை அர­சாங்கம் பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மாயின் இலங்­கையில் மனித உரி­மை­களை பூர­ண­மாக செயற்­ப­டுத்த வேண்டும். அதேபோல் தேசிய ரீதி­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­த­ர­மான தீர்­வு­களை பெற்­று­கொ­டுக்க வேண்டும்.

நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்த அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள நகர்­வுகள் கடி­ன­மான பாதை­க­ளா­கவே உள்­ளன. மனித உரி­மை­களை பலப்­ப­டுத்தி நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கும் முயற்­சி­களில் நாம் கடி­ன­மாக செயற்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. எனினும் இப்­போது எமக்கு கிடைத்­துள்ள வாய்ப்­பு­களை தக்­க­வைக்க வேண்­டு­மாயின் மனித உரி­மைகள் மற்றும் சமத்­து­வ­மான நகர்­வு­களில் முக்­கி­யத்­துவம் வழங்க வேண்டும்.

ஒரு குறிப்­பிட்ட காலத்­துக்கு மாத்­திரம் அல்ல தொடர்ச்­சி­யாக நாம் அந்த பய­ணத்தை முன்­னெ­டுக்க வேண்டும். ஆனால் சர்­வ­தேச உத­வி­க­ளையும் பொரு­ளா­தார நகர்­வு­க­ளையும் கையாள வேண்டும் என்­ப­தற்­காக சர்­வ­தேச நாடு­களின் அல்­லது புலம்­பெயர் அமைப்­பு­களின் அழுத்­தங்­களை சமா­ளிப்­ப­தற்­காக அவர்­களின் கோரிக்­கை­களை ஏற்­று­கொள்ள வேண்டும் என்ற கட்­டா­யமும் எமக்கு இல்லை. எந்த நகர்­வு­களை மேற்­கொண்ட போதிலும் அது இலங்­கையை பாது­காக்கும் வகை­யிலும் ஐக்­கி­யத்தை உறு­திப்­ப­டுத்தும் வகை­யிலும் அமைய வேண்டும்.

கேள்வி :- சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­காது தப்­பிக்கும் நோக்­கத்தில் முன்­னெ­டுக்கும் நகர்­வு­களா இவை ?

பதில் :இல்லை, நாம் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு அஞ்­ச­வில்லை. எனினும் சர்­வ­தேச அழுத்­தங்­களும் இல்­லா­மலும் இல்லை. கடந்த காலத்தில் பல­மாக இருந்த சர்­வ­தேச அழுத்­தங்கள் இப்­போது குறைக்­கப்­பட்­டுள்­ளன. நாம் பல பிரச்­சி­னை­களில் இருந்து தப்­பித்­துள்ளோம். அதேபோல் எமது இரா­ணு­வத்தை காப்­பாற்­றி­யுள்ளோம்.

அது மட்­டு­மல்­லாது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவையும் காப்­பாற்­றி­யுள்ளோம். எனினும் நாடாக நாம் முன்­னெ­டுக்கும் நகர்­வுகள், மனித உரி­மை­களை பாது­காக்க அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நகர்வுகள் மற்றும் வெளிநாட்டு கொள்கையின் தன்மைகள் என்பன எமக்கு முக்கியமானவை என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த நிலைமைகளில் மோசமான நடந்துகொண்டமையே மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படவும் காரணமாகும்.

கேள்வி :- அப்படியாயின் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியை கவிழ்க்க சர்வதேச அழுத்தங்களா காரணம்? சர்வதேச சதிகளின் விளைவா அவரின் தோல்வி ?

பதில் :அவ்வாறு எம்மால் கூறமுடியாது. மக்களின் தீர்மானமே முக்கியமாக அமைந்தது. ஆனால் யுத்தத்தை வெற்றிகொள்ள நாம் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் ஆதரவை பெற்றோம். அதன் பின்னர் மனித உரிமைகள் விவகாரத்தில் எம்மை எச்சரித்த நாடுகளுடன் நாம் உறவுகளை துண்டித்தோம். இந்த விடயம்ஒரு காரணியாக அமைந்தது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-20#page-1

Categories: merge-rss, yarl-category

தெற்கை ஆட்டிப்படைத்த கொலைக் கும்பல் சிக்கியது ஐவருக்கு விளக்கமறியல்; ஒருவர் தடுப்புக் காவலில்

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 05:29
தெற்கை ஆட்டிப்படைத்த கொலைக் கும்பல் சிக்கியது ஐவருக்கு விளக்கமறியல்; ஒருவர் தடுப்புக் காவலில்

 

 

அண்மையில் தெற்கை உலுக்கும் விதமாக அம்பலாங்கொடை மற்றும் மீட்டியாகொட பகுதிகளில் இடம்பெற்று வந்த தொடர் மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் 6 பிரதான சந்தேகநபர்களை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். எல்பிட்டிய தீர்க்கப்படாத குற்றம் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளின் அடிப்படையிலேயே அப்பிரிவுக்கு உட்பட்ட அம்பலாங்கொடை பொலிஸ் குழுவினரால் இந்த திட்டமிட்ட கொலைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் இவர்களைக் கைதுசெய்ததாகவும் அவர்களிட மிருந்து கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரீ 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட மூன்று துப்பாக்கிகளும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களையும் கொலைக்கு பயன்படுத் தப்பட்டதாக நம்பப்படும் கார் ஒன்றையும் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.  

கைது செய்யப்பட்டவர்கள் களனி, மீட்டியாகொட மற்றும் ஹிக்கடுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் ஐவர் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் 48 மணி நேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2016.12. 05 ஆம் திகதி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடம்தொட்ட பகுதியில் வைத்து இளம் தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் அவர்களது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அதே குடும்பத்தின் தூரத்து சொந்தம் என கருதப்படும் பழ வர்த்தகர் ஒருவர் 2016.12.12 அன்று மீட்டியாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அந் நகரத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

இக்கொலைகள் தொடர்பில் பல்வேறு மட்ட விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கீழ் எல்பிட்டிய தீர்க்கப்படாத குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன் காரணமாகவே சந்தேகநபர்கள் அறுவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து ரீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்ப டுத்தப்படும் தோட்டாக்கள்  ஆறும் மீட்கப்பட்டுள்ளன. இதனைவிட மைக்ரோ ரக கைத்துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தோட்டாவும் ரிவோல்வர் ஒன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 5 தோட்டாக்களும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 இந் நிலையிலேயே கைதான அறுவரும் நேற்று பலப்பிட்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெ டுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/15603

Categories: merge-rss, yarl-category

இன்று முதல் நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை ஆரம்பம்

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 05:28
இன்று முதல் நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை ஆரம்பம் 

 

 

குறிகட்டுவான் முதல் நெடுந்தீவு வரையிலான நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

b62846fd1ec54801f7a8228fe7b3cc52_XL.jpg
இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்தின் மூலம் நெடுந்தாரகை பயணிகள் படகு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த படகை தயரிப்பதற்கு சுமார் 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மேலும் படகு சேவையை ஆரம்பிக்கும் நிகழ்வில் உள்ளுராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா, இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்ச்சன்  மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் என்போர் பங்குபற்ற உள்ளனர். 

http://www.virakesari.lk/

Categories: merge-rss, yarl-category

ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என்ற மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் ஆச்சரியமான வெற்றி உலகமெங்கிலுமுள்ள ஜனநாயகப் பற்றாளர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

அரசியல் அனுபவம் இல்லாத ஆனால், பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈராக், போன்ற பல நாடுகளுடன் அமெரிக்காவுக்குள்ள பதற்ற நிலையை தணிக்கும் வகையிலான அரசியல் செய்வாரா அல்லது நிலைமையை இன்னும் மோசமாக்குவாரா என்ற அங்கலாய்ப்பில் அமெரிக்க மக்களும் உலகமும் இருக்கின்ற ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது.

இவர் ஏற்கனவே ஊடகவியலாளர்கள்., விமர்சகர்கள் என பலரைக் கண்டித்துப் பேசியிருப்பதனால் தனது பதவிக் காலத்தின் போது ஜனநாயக விரோத போக்கையே கடைப்பிடிப்பார் என்ற பரவலான எண்ணமும் இருக்கிறது.

அமெரிக்காவிலுளள முஸ்லிம்களை வெளியேற்றப் போவதாக இவர் அதிரடியாக வெளியிட்ட கருத்து உலகமெங்கும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது.

அமெரிக்கா இஸ்லாமிய தேசம் என்ற பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள போதும் அவருடைய இந்த திடீர் அறிவிப்பால் அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளில் பெரும் விரிசல் தோன்றக் கூடிய சாத்தியம் இருக்கிறது.

எப்படியோ டிரம்ப் அறிவித்தபடி நடந்து கொள்வாரா அல்லது பதவியேற்ற பின்னர் மாறிவரும் உலக அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கேற்ப தனது அரசின் கொள்கைகளை சரிசெய்து கொள்வாரா என்பதைத்தான் ஜனநாயக உலகம் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறது.

http://www.tamilwin.com/politics/01/132428?ref=morenews

Categories: merge-rss, yarl-world-news

யாழில் போஞ்சிச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 01:17
யாழ்.குடாநாட்டில் போஞ்சிச் செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பனி காலத்திலேயே போஞ்சிச் செய்கைக்கு உகந்த காலமாகையால் டிசம்பர் மாதம் முதல் பங்குனி மாதம் வரை போஞ்சிச் செய்கை விவசாயிகளால் மேற்கொள்ளப்படுவது வழமையாகும்.

கடந்த டிசம்பர் மாத முற்பகுதியில் போஞ்சிச் செய்கையை மேற்கொண்டவர்கள் தற்போது அதிலிருந்து விளைச்சலைப் பெற ஆரம்பித்துள்ளனர்.

இதனால், தற்போது யாழ்.குடாநாட்டின் திருநெல்வேலிச் சந்தை மற்றும் மருதனார்மடம், சுன்னாகம் உள்ளிட்ட பொதுச் சந்தைகளுக்கு போஞ்சி அதிகளவில் விவசாயிகளால் எடுத்து வரப்படுகிறது.

மேலும், முன்னர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ போஞ்சி தற்போது 60 ரூபா முதல் 70 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/132421?ref=home

Categories: merge-rss, yarl-category

“வவுனியா-பிரம்டன்” ஒப்பந்த நடவடிக்கை இடம்பெறவில்லை. நற்பெயரை இழக்கும் ஆபத்தில் பிரம்டன் மேயர்!

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 01:09

வவுனியாவை பிரம்டன் நகருடன் சகோதர நகரமாக்குவது தொடர்பான தகவல்களில் உள்ள தவறுகளால் பிரம்டன் நகர முதல்வர் லிண்டா ஜெப்ரி அவர்கள் மிகவும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளதாக பத்திரிகைகள் சுட்டிக் காட்டியுள்ளன.

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரம்டன் நகர மேயரைச் சந்திக்கச் சென்ற அன்று முதல்வர் நகரசபையில் பிரசன்னம் தரமால், விடுமுறை எடுத்துச் சென்றத சம்பவம் இடம்பெற்றிருந்ததோடு, அன்றைய தினம் கவுன்சில் கூட்டமும் இடம்பெறவில்லையென்ற போதும் “அடையாளத்திற்கான ஒரு சம்பிரதாய கூட்டமாக” சிலரைச் சந்தித்து விட்டு முதலமைச்சர் சென்ற நிகழ்வானது இந்த விவகாரத்தை ஏற்கனவே அடையாளம் காட்டியிருந்தது.

பிரம்டன் மேயர் தனது வவுனியாவை இணை நகரமாக்குவது தொடர்பான விவகாரத்தில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளார் என எழுதியுள்ள பிரம்டன் கார்டியன் பத்திரிகை அதற்கான காரணமாக டிசம்பர் 20ம் திகதி வெளியிடப்பட்ட முதல்வரின் அறிக்கையைச் சுட்டிக் காட்டியுள்ளது.

பிரம்டன் நகரம் அவ்வாறானதொரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதனால் அதன் அதிகாரிகள் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை ஆராய்ந்து நகரசபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை நகரசபை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறான நிலைகள் ஏதும் ஏற்படததாலேயே பிரம்டன் மேயர் தன்னால் அழைக்கப்பட்ட விருந்தினரான விக்கினேஸ்வரன் வரும் போது தான் நகரசபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதேவேளை மார்க்கம் நகராட்சியுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் ஒரு “நட்பு நகர ஒப்பந்தமேயாகும்”[Friendship Agreement]. இதனைத் தமிழ் ஊடகங்கள் “இரட்டை நகர ஒப்பந்தம்”, “சகோதர நகர ஒப்பந்தம்” [Sister city Agreement / Twin City Agreement]. எனத் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலும்,

இது ஒரு வெறும் நட்பு நகர ஒப்பந்தமே என்பதும், இதனால் முல்லைத்தீவிற்கு பொருளாதார உதவிகளைச் செய்யவோ, அல்லது மனிதவள உதவிகளைச் செய்யவோ மார்க்கம் நகரம் முன்வராது [NO financial consideration / NO Human Resources Consideration] என்பதை கீழுள்ள அதன் ஒப்பந்த நகலில் காணலாம்.

கனடாவுக்கு வருகை தரும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இங்குள்ள இரண்டு நகரசபைகளோடு இரட்டை நகர் உடன்பாடு எழுதுவதற்கு வருவதாக பரப்புரை செய்யப்பட்டது. இந்தப் பிரச்சாரமே அவர் இங்கு தங்கியிருக்கும் வரையும் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அதில் உண்மையில்லை என்ற விவகாரம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தற்போது இந்த விவகாரத்தை வெளிக்கொணர்ந்திருக்கின்ற பிரம்ரன் நகரத்துக்கும் வவுனியா நகரத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் என்ற விவகாரத்தில், விக்னேஸ்வரனைச் சந்திப்பைத் தவிர்ப்பதற்காக மேயர் இந்த நாட்டிலேயே இல்லை. அவர் சுற்றுலா போய்விட்டார்.

முதல்வர் தான் தமிழர்களிற்காக வெளியிட்ட செய்திக் குறிப்பை அவமானத்தால் தனது இணையத்தில் இருந்து நீக்கியிருந்தாலும், பிரம்ரனின் நல்லாட்சிக்கும், சிறந்த நிர்வாகத்திற்குமான அமைப்பு Citizens For Better Brampton அவரது நீக்கப்பட்ட அறிக்கையை படமாக்கி அவரது செயலிற்கு ஜனவரி முதல் வாரத்திலேயே ஆட்சேபனை தெரிவித்திருந்தது.

பிரம்ரன் நகர உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்த காரணத்தால் அந்த செய்தி அறிக்கை பிரம்ரன் நகரின் உத்தியோக பூர்வ இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டது. இது மேயருக்கும் பிரம்ரன் நகரத்துக்கும் பெரிய சங்கடத்தை [embarrassment] உண்டாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈழத்தமிழர்களிற்கும், கனடியத் தமிழர்களிற்கும் கூட மயங்கந் தரும் செய்திகளை இந்த விவகாரத்தில் வெளியிட்டு வந்த முதலமைச்சர் தரப்பு பத்திரிகைகளிற்கு தந்த அறிக்கைகளில் சாதித்ததாகக் உண்மைக்குப் புறம்பாகக் குறிப்பிட்ட விடயங்களிற்கு மேலாக தமிழர்கள் இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதே கீழேயுள்ள இணைப்புக்களும், படங்களும் தெரிவித்து நிற்கும் செய்தியாகும்.

பிரம்டன் நகர முதல்வரிடம் இந்த ஒப்பந்தந் தொடர்பாக இரண்டு கேள்விகளை மின்னஞ்சலினூடாக கனடாவில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர் கேட்டதையறிந்த தமிழர்கள் ஊடகவியலாளருக்கு இடைஞ்சல் கொடுத்த போது, முதல்வர் தானாகவே பொலிசாரைத் தொடர்பு கொண்டு ஊடகவியலாளருக்கு ஏற்பட்டுள்ள இடைஞ்சலையறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியவர் என்பது அவர் ஒரு நல்ல நடுநிலையாளர் என்பதைக் காட்டி நின்றது.

Screen-Shot-2016-12-30-at-3_33_59-PM

Markham-page-001

 

 

 

http://www.canadamirror.com/canada/78825.html

Categories: merge-rss, yarl-category

தமிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? - விவாத களம்

வணக்கம்,

மிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? எனும் கருத்துக்கணிப்பிற்கான விவாதத்திரி

உங்கள் அபிப்பிராயங்களையும் இப் போராட்டம் தொடர்பான உங்கள் பார்வையையும் பகிருங்கள்

நன்றி

Categories: merge-rss, yarl-world-news

அமைச்சர் பைசர் முஸ்தபாக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு

ஊர்ப்புதினம் - Fri, 20/01/2017 - 00:42
யாழ் - கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று(19) மாலை 5.30 மணியளவில் இலங்கையின் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டு, தீர்வுகளும் காணப்பட்டிருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவுக்கான படகு போக்குவரத்தை ஆரம்பிக்கும் நிகழ்வுக்காக இன்றைய தினம் யாழிற்கு விஜயம் மேற்கொண்ட மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் ஐங்கரநேசன், ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் நிறைவில் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன்போது, மத்திய அரசாங்கம் மாகாணசபையின் எல்லைக்குள் தான் தோன்றி தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக மாகாணசபை முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் முஸ்தபா, இரு தரப்பினருக்குமிடையில் ஒழுங்கான கருத்து பரிமாற்றம் இல்லாமையினாலேயே இவ்வாறான பிரச்சினைகள் உருவாகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

எனவே ஒழுங்கான கருத்து பரிமாற்றத்தை உருவாக்கினால் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும். இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக எமக்கு முன்னதாகவே தெரியப்படுத்தினால் அனேகமான பிரச்சினைகளை தீர்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

குறித்த சந்திப்பின் போது முதலமைச்சர் பதிலளிக்கையில், அமைச்சர் கூறியதைப்போல் எமக்குள் ஒழுங்கான கருத்து பரிமாற்றம் இல்லாமையினால்பல பிரச்சினைகள் உருவாகின்றது என்பதையும் ஒழுங்கான கருத்து பரிமாற்றங்கள் இருக்குமாக இருந்தால் நாங்கள் பல நன்மைகளை பெறலாம் என்பதையும் அறிந்திருக்கின்றோம்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதனடிப்படையில் 2 மாதங்களுக்கு ஒரு தடவை வடமாகாண முதலமைச்சர் அமைச்சர்கள் தேவை ஏற்படின் மற்றைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் இணைந்து அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பில் வடமாகாணத்தில் உள்ள பல பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதேவேளை வடமாகாண முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டத்திற்கு மத்திய அரசாங்கம் அங்கீகாரமளிக்க வேண்டும் என முதலமைச்சர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது ஊவாமாகாணம், சப்ரகமுவ மாகாணம் ஆகிய மாகாணங்களில் முதலமைச்சர் நியதிச்சட்டம் நடைமுறையில் உள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மேலும் வடகிழக்கு மாகாணமாக இருந்தபோதும் இவ்வாறான ஒரு சட்டம் இருந்துள்ளது. எனவே வடமாகாணசபையினால் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என முதலமைச்சர் கேட்டு கொண்டுள்ளதுடன் இதற்கான கவனம் செலுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/politics/01/132417?ref=home

Categories: merge-rss, yarl-category