1 month 2 weeks ago
கொலை செய்யப்பட்டவர் யாராயினும் கண்டிக்கப்பட வேண்டும். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சில ட்றம்ப் ஆதரவு அரசியல்வாதிகள் இவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் அரசியல் வன்முறைப் பேச்சும் ஒருவித அராஜகம்தான். அதனை ஐரோப்பிய பாராளுமன்றம் அனுமதிக்கக் குடாது என்கிறார்கள். பார்க்கலாம். எமது வலதுசாரித் தமிழர்கள் ஆதரிக்கக் கூடிய எல்லாத் தகுதியும் இவருக்கு உள்ளது போலுள்ளதே 😁
1 month 2 weeks ago
மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது Published By: Vishnu 11 Sep, 2025 | 06:33 PM இலங்கையின் பாதாள உலக குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கைகள் ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வியாழக்கிழமை (11) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: "இந்த குற்றவாளிகள் தற்போது அந்தந்த நாடுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவை நிறைவடைந்தவுடன், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்," என்றார். இதேவேளை, ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், இத்தகைய கைது நடவடிக்கைகள் பாதாள உலக குற்றங்களை ஒழிக்க பெரும் பங்களிப்பு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை தொடர்பில் நாட்டில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. https://www.virakesari.lk/article/224853
1 month 2 weeks ago
வணக்கம் நிர்வாகத்தினரே, யாழ் களத்தின் இலச்சினை எனக்குத் தெரியவில்லை (Light mode)இல்.
1 month 2 weeks ago
இலங்கை: திருட வந்ததாக கருதி தாக்கப்பட்ட இளைஞர் தற்கொலை - என்ன நடந்தது? LOGESH ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 10 செப்டெம்பர் 2025 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையில் இளைஞர் ஒருவரின் தற்கொலை, நாட்டில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. திருட வந்ததாக கருதி பிரதேச மக்களினால் தாக்குதல் நடத்தப்பட்ட இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்தநிலையில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டி - புசல்லாவை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக, போலீஸ் ஊடகப் பிரிவு பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றது. எனினும், இந்த இளைஞரின் உயிரிழப்புக்கு தாக்குதல் சம்பவமா அல்லது சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டமை காரணமா என்பது இதுவரை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகின்றது. நடந்தது என்ன? மலையகத்தின் புசல்லாவை பகுதியைச் சேர்ந்த 35 வயதான ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் (முரளி), கொழும்புவில் வேலை செய்து வந்துள்ளார். ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு கடந்த 6ம் தேதி இரவு கொழும்புவிலிருந்து வெலிமடை நோக்கி பயணிக்கும் பேருந்தில் வருகைத் தந்துள்ளதாக அவரது நண்பரான ஸ்ரீகுமார், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''இவ்வாறு வருகைத் தந்த ரவிச்சந்திரன் புவனேஸ்வரன், பேருந்தில் அசந்து தூங்கியுள்ளார்.'' Getty Images சித்தரிப்புப் படம் ''தனது சொந்த ஊரான புசல்லாவை தாண்டி, ரம்பொடை எனும் இடத்தில் வைத்தே ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் எழுந்துள்ளதுடன், தான் இறங்கும் இடத்தை தாண்டி பயணித்துள்ளமையை உணர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ரம்பொடை பகுதியில் இறங்கிய அவர், தனது உறவினர் வீடொன்றை நோக்கி சென்றுள்ளார்.'' என்கிறார் ஸ்ரீகுமார் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது உறவினர் வீட்டை நோக்கி சென்ற ரவிச்சந்திரன் புவனேஸ்வரனுக்கு, உறவினர் வீட்டை தேடிக்கொள்ள முடியாத நிலையில், அவர் வேறொரு வீட்டை தட்டியுள்ளார் என்கிறார் ஸ்ரீகுமார். ''அந்த வீட்டிலுள்ளவர்களிடம் தனது உறவினர்கள் குறித்து வினவிய நிலையில், அவர்கள் உறவினர்கள் என கூறப்படும் நபர்களை அழைத்து வினவியுள்ளனர். எனினும், உறவினர்கள் என கூறப்படுவோர், ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை தெரியாது என கூறிய நிலையில், பிரதேச மக்கள் ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை திருடன் என கூறி அவரை கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.'' என்கிறார் ஸ்ரீகுமார். இவ்வாறு பிரதேச மக்கள் தாக்கிய நிலையில், அங்குள்ள இளைஞர்கள் ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை தாக்கும் காட்சிகளை தமது தொலைபேசிகளில் வீடியோவாக பதிவு செய்து, அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், கொத்மலை போலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், போலீஸார் ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் புவனேஸ்வரனிடம் விசாரணைகளை நடத்திய நிலையில், அவரின் புசல்லாவையிலுள்ள உறவினர்களுக்கு விடயம் தொடர்பில் அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, போலீஸ் நிலையத்திற்கு சென்று அவரை வீட்டுக்கு அழைத்ததாகவும் அப்போது இந்த தகவலை அவர் பகிர்ந்ததாகவும் ஸ்ரீகுமார் கூறுகிறார். அதனைத் தொடர்ந்தே, அடுத்த நாள் ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். Getty Images சித்தரிப்புப் படம் ''போலீஸிலிருந்து கூட்டிக் கொண்டு வரும் போதே அவர் எங்களிடம் , 'மாமா வீடு இருக்குனு சொல்லி தான் இரவில் போயிட்டேன். இவ்வளவு காலத்துக்கு நான் இப்படி அடி வாங்கியது இல்லை. அவமானமாக்கிட்டேன்.' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.'' என ஸ்ரீகுமார், பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். வீட்டுக்கு வந்த ரவிச்சந்திரன் புவனேஸ்வரன், இரவு உணவு கூட உட்கொள்ளாத நிலையிலேயே இவ்வாறு தவறான முடிவை எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறுகின்றார். தாக்குதல் நடத்தியமை மற்றும் தாக்குதல் நடத்திய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தமையே இந்த மரணத்திற்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார். போலீஸார் கூறுவது என்ன? ரவிச்சந்திரன் புவனேஸ்வரனின் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில், பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்திடம் வினவியது. தாக்குதல் நடத்தி, வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டமை, இந்த மரணத்திற்கான காரணம் என்பது இதுவரை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என கூறிய போலீஸார், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் புசல்லாவை போலீஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். முக்கிய குறிப்பு தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை உருவாகுமேயானால், உடனடியாக தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கங்கள் இலங்கையில் தற்போதும் நடைமுறையில் உள்ளன. 0707 308 308, 1333, 1926 போன்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக, தமது மனநிலையை சரி செய்துகொள்ள முடியும். இந்த இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக தற்கொலைகளை தடுக்க முயற்சி செய்ய முடியும். இந்தியாவில் உதவியை நாடுபவர்கள் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.virakesari.lk/article/224853 Sri Lanka SumithrayoSri Lanka SumithrayoSri Lanka Sumithrayo is a government approved charity founded in 1974, by late Mrs. Joan De Mel and was incorporated by Act of Parliament No.10 of 1986.
1 month 2 weeks ago
பல தசாப்தங்களாக லாறி எலிசன் பில் கேட்சின் பரம எதிரி. கோடிகளின் போட்டியில் அன்று பில் டேட்சை வெல்ல முடியாமல் இருந்தது. 81 வயதில் அதனைத் சாதித்துள்ளார். எலன் மஸ்கை வென்றதைவிட இதுவே அவருக்குப் பெருமையாக இருக்கும்.
1 month 2 weeks ago
உலகின் பணக்காரர் பட்டியலில் லேரி எலிசன் : எலான் மஸ்க்கை முந்தினார்! Published By: Digital Desk 3 11 Sep, 2025 | 12:31 PM ஒரேக்கிள் (Oracle) நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன் (Larry Ellison), உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ப்ளூம்பெர்க் குறியீட்டின் படி, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பை விட எலிசனின் நிகர மதிப்பு உயர்ந்துள்ளது. ஒரேக்கிள் நிறுவனப் பங்குகள் 43 வீதம் வரை உயர்ந்ததன் காரணமாக, 81 வயதான எலிசனின் மொத்த நிகர மதிப்பு $393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. எலிசன் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து, எலான் மஸ்க் $385 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திற்குச் சரிந்துள்ளார். ஓரேக்கிள் நிறுவனத்தின் கிளவுட் வணிகத்தில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதனால், ஒரேக்கிள் பங்குகள் ஒரு நாளில் $101 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து, அதன் சந்தை மதிப்பு $947 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. லேரி எலிசன் ஒரேக்கிள் நிறுவனத்தின் 41 வீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளார். அவரது செல்வத்தின் பெரும்பகுதி இந்த நிறுவனத்தின் முதலீடுகளிலிருந்தே வருகிறது. உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், எல்விஎம்ஹெச் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் போன்றோர் சில நேரங்களில் அவரை முந்தியிருந்தாலும், மஸ்க் மீண்டும் முதலிடத்திற்கு வந்திருந்தார். ஆனால், தற்போது ஒரேக்கிள் பங்குகளில் ஏற்பட்ட பெரும் ஏற்றம், எலான் மஸ்கின் ஆதிக்கத்தை முறியடித்துள்ளது. லேரி எலிசன் யார் ? நவீன தொழில்நுட்பத்தின் ஜாம்பவானான ஒரேக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், நவீன தொழில்நுட்ப உலகில் முக்கியமான நபர்களில் ஒருவராவார். லோரன்ஸ் ஜோசப் எலிசன் என்பது இவரது இயற்பெயர், 1944 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பிறந்தார். சிக்காக்கோவில் பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்த இவர், பொருளாதார ரீதியாக மிகவும் சவாலான சூழலில் இருந்து பெரும் வெற்றியாளராக உருவெடுத்தவர். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் படித்த பின்னர், கல்வியை நிறுத்திவிட்டு மென்பொருள் துறையில் பணியாற்றத் தொடங்கினார். 1977 இல், வெறும் $2,000 அமெரிக்க டொலர் முதலீட்டில், தனது நண்பர்களான பொப் மைனர் (Bob Miner) மற்றும் எட் ஓட்டிஸ் (Ed Oates) ஆகியோருடன் இணைந்து ஒரேக்கிள் (Oracle) என்ற மென்பொருள் நிறுவனத்தை நிறுவினார். ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் தொடர்புசார் தரவுத்தளம் (relational database) பற்றிய ஆய்வுக்கட்டுரையால் ஈர்க்கப்பட்டு, ஒரேக்கிளை உருவாக்கி, தரவுத்தள துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். 2014 வரை ஒரேக்கிளின் தலை நிறைவேற்று அதிகாரியாகப் (CEO) பணியாற்றிய எலிசன், தற்போது நிர்வாகத் தலைவராகவும் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் (CTO) இருந்து நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை வழங்கி வருகிறார். தொழில் வாழ்க்கையைத் தாண்டி, எலிசன் தனது சாதாரண வாழ்க்கையில், ஹவாய் தீவில் உள்ள லானா தீவின் பெரும்பாலான பகுதிகளை சொந்தமாக வைத்துள்ளார். படகுப் பந்தயம் மற்றும் உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க சொத்துகளில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் கொண்டுள்ளார். மனிதநேயப் பணிகளில் ஆர்வம் கொண்ட இவர், உடல்நலம், காலநிலை மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள எலிசன் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியுள்ளார். எலிசனின் குடும்பமும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது மகன் டேவிட் எலிசன், ஸ்கைடான்ஸை வாங்கியதைத் தொடர்ந்து பாரமவுண்ட் குளோபல் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். அவரது மகள் மேகன் எலிசன், புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளராகவும், அன்னபூர்ணா பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனராகவும் இருக்கிறார். https://www.virakesari.lk/article/224800
1 month 2 weeks ago
ஆனாலும் எவ்வளவு பணத்துக்கு விற்றாலும் முதல்நாளே பாயைப்போட்டு படுத்திருந்து முண்டியடித்து வாங்குவமில்ல. அதேமாதிரி இளையராசாவை விட அனிருத்துக்கு மிகப்பெரிய கூட்டமே இருக்கு என்கிறார்களே பாஸ்.
1 month 2 weeks ago
கார்ல்டன் இல்லத்தை அடைந்த மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்தை இன்று (11) பிற்பகல் சென்றடைந்துள்ளார். இந்நிலையில் அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள் கூடி வரவேற்பதை அவதானிக்க முடிகின்றது. https://adaderanatamil.lk/news/cmffcu4k100deo29nv7ba43pz
1 month 2 weeks ago
கமாண்டோ சலிந்தவுக்கு தோட்டாக்களை வழங்கிய இராணுவ அதிகாரி கைது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கமாண்டோ சலிந்துவுக்கு T56 வெடிமருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லுதினன் கேர்னல் ஒருவர் இன்று (11) மேல்மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்ட நேரத்தில் முல்லைத்தீவின் மல்லாவியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். கணேமுல்ல கமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் T56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 260 தோட்டாக்களை குற்றவாளியான கமாண்டோ சலிந்தவுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் 650,000 ரூபாய்க்கு அவர் விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் அவர் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் உள்ளதாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmffbyfoe00ddo29njrhb1egp
1 month 2 weeks ago
ஐபோன் 17 தொடர் வெளியிட்ட உடனே இந்த மீம் பொருத்தமாக வந்திருக்கு! ஐபோன் 16e புதிது நேற்று என் கைக்கு வந்தது! விலை 140000 ரூபா என்றதும் வடிவாக பார்த்திட்டு திரும்ப பத்திரமாக பெட்டியில் வைத்து கொட்த்துவிட்டேன்!!
1 month 2 weeks ago
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 ஆகஸ்ட் 2025 யாழ்ப்பாணம் தங்கத்தால் போர்த்தது போல் இருந்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தொடங்கியது, தெருக்கள் உயிர்ப்புடன் மலர்ந்தன. விடியற்காலை முதல் மாலை வரை, சங்குகள், மணி ஓசைகள் மற்றும் மேளங்களின் சத்தங்கள் காற்றில் எதிரொலித்தன. ஒவ்வொரு காற்றிலும் மல்லிகை மாலைகள் மற்றும் கற்பூர புகையின் நறுமணம் வீசியது. இலங்கைத் தீவு முழுவதிலுமிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் பக்தர்கள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட, 'அலங்கார முருகனை' வணங்க ஒன்று கூடினர். அவர்களிடையே, இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும், யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்ட, அருண் என்ற இளைஞன் நடந்து வந்தான். அவன் எளிமையான உடையில் - சாதாரண வெள்ளைப் பருத்தி சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி உடன் ஒரு உள்ளூர் வாலிபனாக பார்வைக்கு தோன்றினாலும், அவரது முகம் இன்னும் வெளிநாட்டு நிலங்களின் புத்துணர்ச்சியை பறைசாற்றிக் கொண்டுதான் இருந்தது. அது அவனால் மறைக்க முடியவில்லை. மற்றும் அவனது இதயம், தன் தாய் தந்தை பிறந்த மண்ணின் வாசனையைத் தேடி அலைந்து கொண்டு இருந்தது. முதலில், அவன் தமிழ் கடவுள் முருகனின் முன் உண்மையாக, பக்தியாக, பண்பாடாக வழிபடத் தான் அங்கு வந்தான். என்றாலும் பட்டு, நகைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான, 'அலங்கார கந்தனின்' மீது கண்கள் பதிந்த பொழுது அவன் தடுமாறினான். அந்த தடுமாற்றத்தில் தான், கூட்டத்தில், தன் தோழிகளுடன் நின்றிருந்த ஒரு இளம் பெண், அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தைக்கூட ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு அழகைக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டான். கோயில் விளக்குகளின் கீழ் அவளுடைய சேலை மின்னியது, அவளுடைய கண்ணாடி வளையல்கள் ஒவ்வொரு அசைவிலும் ஒலித்தன, ஒளிர்ந்தன. அவளுடைய கரும் கூந்தலில் மல்லிகைப் பூக்கள் காற்றோடு நடனமாடின. மேளம் மற்றும் கோயில் மணிகளின் சத்தங்களுக்கு மேலே அவளுடைய சிரிப்பு மின்னியது. அருணுக்கு, அவள் வெறும் பெண் அல்ல - அவள் "அலங்காரக் காந்தை" யாகத் தோன்றினாள்! அன்று மாலை முதல், அருணின் உள்ளம் அவளை அமைதியாகத் தேடி அலையத் தொடங்கியது. அவன் இப்ப அலங்கார கந்தனுக்காக அல்ல, மாறாக அலங்கார காந்தைக்காகத் நல்லூர் வரத் தொடங்கினான். முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே! சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே கண்திறந்து பார்க்காயோ கருணை காட்டாயோ !! திருவிழாவின் பத்தாம் நாள் இன்று. நல்லூரைச் சுற்றி பல பல குளிர்பானங்கள், வளையல்கள், சேலைகள் மற்றும் இனிப்புகளால் கடைகள் நிரம்பி இருந்தது. முருகன் வள்ளி தெய்வானையுடன் பொன் மஞ்சத்தில் வரும் ஆகஸ்ட் ஏழாம் நாள். இந்த 7 ஆம் எண் மதத்தில் - இஸ்லாத்தில் 7 வானங்கள், கிறிஸ்தவத்தில் 7 படைப்பின் நாட்கள், இந்து மதத்தில் 7 சக்கரங்கள் எனவும், இயற்கையில் - வாரத்தில் 7 நாட்கள், வானவில்லில் 7 வண்ணங்கள், 7 இசைக் குறிப்புகள் எனவும் மற்றும் வரலாற்றில் - உலகின் 7 அதிசயங்கள் எனவும் தோன்றுவதால், பல மேற்கத்திய மற்றும் கிழக்கு கலாச்சாரங்களில் 7 என்ற எண் ஒரு அதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அருண் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துபவன் அல்ல. என்றாலும், இன்று எனோ அது அவனுக்கு ஒரு உற்சாகம் கொடுத்தது. அந்த உற்சகம் கொடுத்த தைரியத்தில், அவன் அவளை அணுகி, "எக்ஸ்க்யூஸ் மீ [Excuse me]" என்றான். பச்சை நிற சுடிதாரில் பச்சைகிளி போல் போஸ் [Pose] கொடுத்துக் கொண்டு, வெள்ளைக் கொடி ஒன்று படர்ந்து, நுனியில் பூக்கள் மலர்ந்தது போல, கொண்டையில் மல்லிகை மாலை சூடிக்கொண்டு, தன் தோழிகளுடன் நின்ற அவள் கண்களில் ஒரு கவர்ச்சி தீபம் எரிந்து கொண்டு இருந்தது. அவள் சற்று தலை நிமிர்ந்து, மென்மையான வார்த்தைகளில் ”சொல்லுங்க… ‘ப்ளீஸ் [Please]’ .. என்ன வேணும்?” என்றாள். அந்த ‘ப்ளீஸ்’ அப்படி ஒரு மென்மை. சினிமா காதல் காட்சியாக… காடு முழுக்க ஆள் உயரக் கம்பி மத்தாப்புகளை நட்டுவைத்து ஒரே நேரத்தில் பற்ற வைத்தது போல் அவன் மனதுக்குள் அத்தனை பிரகாசம்.”ஐ’யம் [I am] அருண் ” என்றான். அவள் கண்களால் ஒரு வித வலை வீசியபடி நான் ”ஆரணி” என்றாள் தயங்கியபடி. பெண்களின் பெயரை அந்தப் பெண்களே உச்சரிக்கக் கேட்கும் போது அது இன்னும் அழகாகிவிடுகிறது! அது மட்டும் அல்ல, ஆலய வளவில், மாகாளி ; பார்வதி போன்ற இறைவிகளின் பெயரைக் கொண்ட அவளில், மேலும் ஒரு தனி விருப்பமும் நம்பிக்கையும் அவனுக்குத் தானாக மலர்ந்தது ”நாம் ரியோ [Rio] வுக்கு போகிறோம், நீங்களும் இணையலாம். ஆறுதலாக அங்கு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்வோம், நீங்கள் பிரீ [free] என்றால்? எங்களுடன் வரலாம்" என்றாள், எந்த தயக்கமும் இன்றி, இதமான வரவேற்பு புன்னகையுடன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/31263916889923550/?
1 month 2 weeks ago
"சார்லி கேர்க் அமெரிக்காவில் பேச்சுச் சுதந்திரத்தின் பிதாமகன்" என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரை அவரது எண்ணங்களின் வெளிப்பாட்டிற்காக மட்டும் கொலை செய்வது நவீன உலகில் இல்லாதொழிக்கப் பட வேண்டிய ஒரு குற்றம். ஆனால், சார்லி கேர்க் வெளிப்படுத்திய, அமெரிக்க இளையோரிடம் பரப்பிய எண்ணங்களின் உள்ளடக்கத்தை அவர் இறந்த பிறகு திரித்துச் சொல்லக் கூடாது. அவரது எண்ணங்களில் சில இவை: பெண்கள் "பெண்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். அங்கே தங்களுடைய கணவரை அவர்கள் தேடிப் பெறுவதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்" "குழந்தை குடும்பமா, தொழில் வெற்றியா என்று வரும் போது குழந்தை குடும்பம் தான் முன்னுரிமை பெற வெண்டும்" அமெரிக்காவின் பல்லினத்தன்மை The great replacement theory என சில வெள்ளையின மேலாண்மையுடையோர் நம்பும் சதிக் கோட்பாட்டை கேர்க்கும் ஆதரித்துப் பரப்பினார். இதன் அடிப்படை தான், "வெள்ளையின பெண்கள் எவ்வளவு அதிகமாகக் குழந்தைகள் பெற்று வெள்ளைத் தோல், நீலக்கண் குழந்தைகளை உருவாக்க முடியுமோ, அவ்வளவுக்கு அமெரிக்காவிற்கு நல்லது" என்ற போதனை. அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம் சில மாதங்கள் முன்னர் சார்லி கேர்க் சொன்னது :" துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டுமானால், ஒவ்வொரு ஆண்டும் சிலர் துப்பாக்கி வன்முறைக்கு ஆளாகி உயிரிழப்பது தவிர்க்க இயலாதது. அது துவக்கு வைத்திருக்கும் உரிமைக்கு நாம் கொடுக்க வேண்டிய ஒரு விலை" நேற்று அவரது குடும்பமும் அமெரிக்கர்களின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையைப் பேண அவரை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள். பரப்பிய பொய்த்தகவல்கள் "அமெரிக்காவின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் (mass shootings) ஏராளமானவை பால் மாற்றம் செய்து கொண்டவர்களால் (trans people) தான் நடத்தப் பட்டன" தரவுகள் இல்லாத இந்தப் பொய்யை, நேற்று சுடப் படுவதற்கு 1 நிமிடம் முன்னரும் கூறியிருந்தார். அவர் பேசிய இறுதியான பேச்சே இந்தப் பொய் தான் என்பது பதிவில் இருக்க வேண்டும். கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான போலித் தகவல்களும் பரப்பினார். 2020 தேர்தலில் ட்ரம்ப் தான் வென்றார் என்று இறுதி வரை பேசி வந்தார். எப்படி உருவானார் கேர்க்? 2008 இல் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா வந்த போது, உறுத்தல் ஏற்பட்ட வெள்ளையின மேலாண்மை கொண்ட ஒரு சிறு பிரிவில் இருந்து உருவானவர் தான் சார்லி கேர்க். 2012 இல் ஒபாமா இரண்டாம் தடவையும் வென்ற பின்னர், கல்லூரிகளில் கறுப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சமவுரிமைத் திட்டத்தை (affirmative action) எதிர்த்து தொலைக்காட்சிகளில் தோன்றிப் பேச ஆரம்பித்தார். இதைக் கேட்ட பலர் "இந்த வெள்ளை இளைஞனுக்கு கறுப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதால் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது" என நம்ப ஆரம்பித்தார்கள். ஆனால், சார்லி கேர்க் எந்தக் கல்லூரிக்கும் தன் தகுதிகளை வைத்து விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாக தரவுகள் இல்லை. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், அமெரிக்காவின் எந்தக் கல்லூரியிலும் பணம் செலுத்தி, சராசரித் தகுதிகளோடு படித்திருக்கலாம். லோயராக, எஞ்சினியராக வந்திருக்கலாம். அவர் அதைச் செய்யாமல் உள்ளூர் கல்லூரியொன்றில் சேர்ந்து, அங்கேயும் கல்வி கைகூடாமல் படிப்பை இடையில் நிறுத்தி விட்டார். வாய்ப்பேச்சை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது உருவான திட்டம் தான் "Turning Point USA -TPUSA" என்ற அமைப்பின் உருவாக்கம். இந்த TPUSA அமைப்பு மூலம், கல்லூரிகளுக்குச் சென்று திறந்த வெளிக் கூட்டங்களில் "Prove Me Wrong" என்ற தலைப்பில் மேலே இருப்பது போன்ற கருத்துக்களை Sound Bites ஆக தூக்கி வீசுவது தான் அவர் பாணி. கல்லூரி மாணவர்கள் எனும் போது impressionable age உடைய, தகவல்கள் அறியும் ஆர்வமோ நேரமோ இல்லாத பலர் இருப்பார்கள்.அத்தகைய மாணவர்களிடையே, மேலே இருப்பது போன்ற விச விதைகளை விதைத்து, அவர்கள் தகவல் அறியும் முன்னரே வலதுசாரித் தனத்தை Cool Trend ஆக மாற்றி விடுவது தான் சார்லி கேர்க் அணியின் திட்டம்- Play book. அதில் கணிசமாக வெற்றியும் பெற்றார்கள். இந்த கேர்க் வெற்றியின் பலாபலன்: 2017 இல் ட்ரம்ப், 2024 இல் மீண்டும் ட்ரம்ப் 2.0. இதனால் மாற்றியமைக்கப் பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்றம். சாதாரண, மிதவாதிகளான மக்கள் எங்கும் நிவாரணம் பெற இயலாத நிலை. இப்படி மக்களை மிதவாதிகளாக அல்லாமல், வலதுசாரிகளாக மட்டும் இருக்க வற்புறுத்தும் "பேச்சுச் சுதந்திரத்தின்" பிதாமகன் தான் சார்லி கேர்க். தன் வாய்ப்பேச்சினால் தனது குடும்பத்தினருக்கு ஏராளமான செல்வம் சேர்த்து வைத்து விட்டிருக்கும் அமரர் கேர்க் நித்திய அமைதியில் இளைப்பாறட்டும்! அவர் விதைத்த நச்சு விதைகளை அடுத்த 50 ஆண்டுகளுக்கு அமெரிக்கர்கள் நாம் அறுவடை செய்வோம்!
1 month 2 weeks ago
🔴 தினமும் பல லட்சம், ஆண்டுதோறும் பல மில்லியன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செலவு, ஏன் விஷேட சலுகை தள்ளுபடி முக்கியம்? நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஷேட சலுகைகள் நீக்கப்படும் சட்டமூலம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கூறுகையில், முன்னாள் அரச தலைவர்களுக்கான பாதுகாப்பு தனியாக நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், அது அப்படியே தொடரும் எனவும் வலியுறுத்தினார். தமது பாதுகாப்புக் குறித்து கவலை கொண்ட எவரும், பாதுகாப்புக் இடர் குழுவிடம் கோரிக்கை சமர்ப்பிக்க முடியும் எனவும், அக்குழுவே தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொறுப்பானது எனவும் அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விரிவான பணியாளர்கள் குறித்தும் இதன்போது அமைச்சர் விஜேபால விவரித்தார். அதன்படி விஷேடமாக, மஹிந்த ராஜபக்சவுக்கு 111 பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். அவர்களில், 9 மருத்துவ ஊழியர்கள் 8 சாரதிகள் 2 எழுதுபவர்கள் 5 இயந்திரப் பணியாளர்கள் 1 கடற்படை உதவியாளர் 46 சிறப்பு நடவடிக்கைப் பணியாளர்கள் 16 சமையல்காரர்கள் 26 மின்சார வல்லுநர்கள் 4 சிவில் பொறியியலாளர்கள் 4 தொழில்நுட்ப பொறியியலாளர்கள் 2 களஞ்சிய காவலர்கள் 3 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் 1 தச்சர் 1 நாய் பராமரிப்பாளர் ஆகியோர் அடங்குவதாக அவர் கூறினார். மேலும், கோட்டாபய ராஜபக்சவுக்கு 60 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில்: 3 மருத்துவ உதவியாளர்கள் 1 பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர் 6 சாரதிகள் 5 எழுதுபவர்கள் 8 பாதுகாப்பு அதிகாரிகள் 13 ஆதரவு பணியாளர்கள் 8 சமையல்காரர்கள் 3 தொழில்நுட்ப வல்லுநர்கள் 1 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் 6 சிறப்பு நிபுணர்கள் 1 நாய் பராமரிப்பாளர் ஆகியோர் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சலுகைகள் சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கும் அவர்களது விதவைகளுக்கும் 2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் ரூபா 98.5 மில்லியன் செலவழித்ததாக அமைச்சர் தெரிவித்தார். அதன் விபரம்: ஹேமா பிரேமதாச – ரூபா 2.687 மில்லியன் சந்திரிகா குமாரதுங்க – ரூபா 16.43 மில்லியன் மஹிந்த ராஜபக்ச – ரூபா 54.62 மில்லியன் மைத்திரிபால சிறிசேன – ரூபா 15.77 மில்லியன் கோட்டாபய ராஜபக்ச – ரூபா 12.28 மில்லியன் ரணில் விக்கிரமசிங்க – ரூபா 3.49 மில்லியன் இவ்வாறு பொதுப்பணத்தை குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கு அதிகபட்சமாக செலவளிப்பதானது நாடு தற்போதுள்ள நிலையில் சிந்திக்கவேண்டியது என்றும் குறிப்பிட்டார். Vaanam.lk
1 month 2 weeks ago
இதென்னடா இப்படி முன்னுக்குப்பின் முரணான கதை. பாதுகாப்பு கேட்கிற சிங்கம். இது அசிங்கம்.
1 month 2 weeks ago
அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன்! -மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்காக தனது அரசியலை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கடந்த காலத்தில் அளவிற்கு அதிகமாக வரப்பிரசாதங்களை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் குறைத்து புதிய சட்டம் ஒன்றை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது. இப் புதிய சட்டம் நேற்றில் இருந்து அமுலுக்கு வந்த நிலையில் அரச இல்லங்களை இன்று வரை பயன்படுத்தியிருந்த மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா ஆகியோர் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அந்தவகையில் கொழும்பு, விஜேராம வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மனைவியுடன் தங்கல்லையில் அமைந்துள்ள கால்டன் வீட்டுக்கு சென்றார் இதன்போது அவரது ஆதரவாளர்கள் மகிந்தவின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆரவாரம் செய்திருந்தனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ” அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன். அரசியல் நடவடிக்கைகள் தொடரும் நாட்டுமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எம்மை உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறசொன்னார்கள் அதனால் இங்கிருந்து செல்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர் வருகை தந்திருந்தனர். குறிப்பாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் உள்ளிட்ட பல இராஜதந்திரிகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் ”தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்” என மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே இதன்போது தெரிவித்திருந்தார். இது குறித்து மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கருத்துத் தெரிவிக்கையில் ”பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய நாள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒருநாளாக இருந்திருக்கும். இன்றைய நாள் அரசாங்கத்திற்கு மிகவும் சந்தோசமான நாள். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான டயஸ்போராக்களுக்கு சந்தோசமாக இருக்கும் என நினைக்கிறேன். சட்டத்திற்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 24 மணிநேரத்திற்குள் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இந்த வீடு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படும். 30வருடகால யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திய தலைவருக்கு அரசாங்கம் கௌரவமளிக்கும் விதத்தினை நாட்டு மக்கள் இன்று கண்முன்பார்க்கக்கூடியதாக இருந்தது. சிங்கம் எங்கிருந்தாலும் சிங்கம்தான். தங்காலையில் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுமாயின் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446859
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
"அன்புமணியை நீக்குவதற்கு ராமதாஸுக்கு அதிகாரமில்லை" தீவிரமடையும் பாமகவின் உள்கட்சி மோதல் PMK 11 செப்டெம்பர் 2025, 06:09 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பாமகவிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்காத நிலையில், அவர் நீக்கப்படுவதாக அறிவித்தார். ஆனால், அன்புமணியை கட்சியிலிருந்து நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று அன்புமணி தரப்பில் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். பொதுக்குழு தீர்மானத்தின் படியும், தேர்தல் ஆணைய உத்தரவின் படியும் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியே கட்சியின் தலைவர் என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறினார். அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை சுமத்தி அதற்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவரிடமிருந்து விளக்கம் கேட்டிருந்தது. ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவருக்கு பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அன்புமணி எந்த பதிலும் அளிக்காத நிலையில், மீண்டும் அவருக்கு பதிலளிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் அன்புமணியிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் இன்று காலை அறிவித்திருந்தார். PMK "கட்சி விரோத நடவடிக்கை உள்பட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதில் அளிக்க வழங்கிய அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு இருமுறை அவகாசம் அளித்தும் அன்புமணி பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். அன்புமணி மீதான அனைத்து குற்றச்சாட்டுகள் உண்மையானது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பாமக தொடங்கியதில் இருந்து இதுவரை எவரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கையில் அன்புமணி ஈடுபட்டுள்ளார். அரசியல்வாதி என்பதற்கு தகுதியற்றவர் அன்புமணி. ஆகவே பாமக செயல்தலைவர் உட்பட அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கம் செய்கிறோம். அன்புமணியுடன் பாமகவைச் சேர்ந்த யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அன்புமணியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் பாமகவினரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி நீக்கப்படுவதால் கட்சிக்கு பின்னடைவா என்று சிலர் கேட்கின்றனர். பயிரிடும் போது களைகள் வரும், அதை அகற்றிட வேண்டும், இப்போது களை நீக்கப்பட்டுள்ளது என்றும் ராமதாஸ் பேசினார். அன்புமணி சில தொண்டர்களுடன் தனிக்கட்சி போன்று செயல்படுவதாகவும், அவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னிக்க தயாராக இருப்பதாக ராமதாஸ் கூறினார். "அவர்கள் யார் என்று சொல்ல இந்நேரத்தில் தேவை இல்லை. அன்புமணியோடு இருந்தால் நன்மைகள் இருக்கும் என்று நினைத்து அவருடன் இருக்கலாம். அவர்களும் என்னோடு இருந்தவர்கள் தான், நான் இல்லாமல் அவர்கள் வளர்ந்திருக்க முடியாது. மூத்த தலைவர்கள் சிலர் அன்புமணிக்கு அறிவுரை சொன்ன போது, அவர் எதையும் கேட்காமல், மதிக்காமல் போனார். பழ கருப்பையா கூட தந்தையிடம் மகன் தோற்பது, தோல்வி அல்ல என்று கூறியிருக்கிறார்." என்று ராமதாஸ் பேசினார். 'அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை' அன்புமணி ராமதாஸை பாமகவிலிருந்து நீக்க, ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று, கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாலு, அன்புமணியை நீக்குவதாக கூறுவது கட்சி விதிகளுக்கு விரோதமானது என்று கூறினார். அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தார். அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் பதில் தருவதாக கூறி பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, " பாமக விதிகளின் படி பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், செயலாளருக்கே நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது. கட்சியின் நிறுவனருக்கு அதிகாரம் இல்லை. இன்றைய அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது. கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வருகிறார். ஆகஸ்ட் 9ம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. அதில் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் பொறுப்புகள் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. அது ஒரு மனதாக பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினோம். அதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக் காலத்தை பொதுக்குழு தீர்மானங்களின் படி நீட்டித்து அறிவித்தது. எனவே, தலைவராக அன்புமணி ராமதாஸ், பொருளாளராக திலகபாமா, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன் தொடர்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். எனவே கட்சி நிறுவனரின் இன்றைய அறிவிப்பு செல்லாது,ராமதாஸின் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது என்றும் பாலு தெரிவித்தார். "கட்சியின் நிறுவனராக ராமதாஸ் தொடர்கிறார். ஆனால் வேறு பொறுப்புகளில் யாரேனும் நியமிக்கப்பட்டதாக அறிவிப்புகள் வந்தால், அந்த தகவல்களை பாமக நிர்வாகிகள் பகிர வேண்டாம்." என்றும் அவர் வலியுறுத்தினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0m41kkd0r4o
1 month 2 weeks ago
கத்தாரில் இஸ்ரேல் குறிவைத்த ஹமாஸ் தலைவர் எங்கே? - உலக நாடுகளை பகைத்து நடத்திய தாக்குதல் தோல்வியா? Getty Images ஹமாஸின் பேச்சுவார்த்தை குழு தலைவர் கலீல் அல்-ஹய்யா கட்டுரை தகவல் டேவிட் கிரிட்டன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் செவ்வாயன்று தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காணாமல் போன இரண்டு பேரைத் தேடி வருவதாகவும், மனித எச்சங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிகவும் சர்ச்சைக்குரிய இந்த தாக்குதல் வெற்றி பெறவில்லை என்ற கவலை இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களில் உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தெரிவித்த ஐந்து கீழ்மட்ட உறுப்பினர்களில் மூவரின் உடல்களை, கத்தார் உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது, அவர்களோடு ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளார். தனது பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்த இந்த தாக்குதல் தோல்வியடைந்ததாக ஹமாஸ் கூறியுள்ளது. சின்என்-க்கு அளித்த பேட்டியில், ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளர் கலீல் அல்-ஹய்யாவின் நிலை குறித்து கத்தார் பிரதமர் எதையும் வெளிப்படுத்தவில்லை. "இதுவரை... எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை," என்று ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி புதன்கிழமை மாலையில் தெரிவித்திருந்தார். இஸ்ரேலின் நடவடிக்கை "அரச பயங்கரவாதம்" எனக் கருதப்பட வேண்டியதாகவும், கத்தாரின் பிராந்திய கூட்டாளிகள் "கூட்டாகப் பதில்" அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் "பயங்கரவாத மூளையாக இருந்தவர்களை" குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நியாயமானது என்று தெரிவித்தார். அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போரில், காஸாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 64,656 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதியில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. AFP மிகவும் சர்ச்சைக்குரிய இந்த தாக்குதல் வெற்றி பெறவில்லை என்ற கவலை இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களில் உள்ளது என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் முக்கிய பிராந்தியக் கூட்டாளியாக இருக்கும் கத்தாரில், பெரிய அமெரிக்க விமானத் தளம் அமைந்துள்ளது. 2012 முதல் ஹமாஸ் அரசியல் பணியகம் அங்கு செயல்பட்டு வருகிறது. மேலும், அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணைந்து, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகளில் கத்தார் மத்தியஸ்தராகவும் இருந்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு தோஹாவில் நடந்த வான்வழித் தாக்குதல், ஹமாஸ் அரசியல் பணியகத்தின் பல உறுப்பினர்கள் வசித்த குடியிருப்பு வளாகத்தை குறிவைத்ததாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், அமெரிக்கா முன்மொழிந்த சமீபத்திய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தைப் பற்றி ஆலோசித்து வந்தனர். இந்த நடவடிக்கையை "ஆபரேஷன் சம்மிட் ஆஃப் ஃபயர்" என அழைத்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதன் முடிவுகள் குறித்து தொடக்கத்தில் நம்பிக்கையுடன் இருந்ததாக இஸ்ரேலிய ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். ஆனால் புதன்கிழமை வந்த தகவல்கள், அந்த தாக்குதல் அவர்கள் நினைத்த அளவுக்கு வெற்றிகரமாக அமையவில்லை என்ற சந்தேகங்களை வெளிப்படுத்தின. சில அதிகாரிகள், ஹமாஸ் தலைவர்கள் கட்டிடத்தின் வேறு பகுதியில் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹமாஸ், இந்த "கொடூரமான குற்றத் தாக்குதலில்" தனது ஐந்து உறுப்பினர்கள் உயிரிழந்ததாகக் கூறியது. கலீல் அல்-ஹய்யாவின் மகன் ஹுமாம், ஹய்யாவின் அலுவலக இயக்குநர் ஜிஹாத் லபாத், மற்றும் பாதுகாப்பு வீரர்கள் மோமன் ஹசௌனா, அப்துல்லா அப்துல் வாஹித், அகமது அல்-மம்லுக் ஆகியோர் தான் அந்த ஐவர். "பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள எங்கள் சகோதரர்களை கொல்லும் முயற்சி தோல்வியடைந்தது," என்று ஹமாஸ் கூறியிருந்தாலும், அதற்கான எந்த ஆதாரத்தையும் அது வெளியிடவில்லை. புதன்கிழமை மாலை, ஹுமாம் அல்-ஹய்யா, லபாத், ஹசௌனா, மேலும் கத்தார் உள்நாட்டு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கார்ப்ரல் பத்ர் அல்-ஹுமைடி ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. "காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றும், "பல்வேறு இடங்களில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கலீல் அல்-ஹய்யாவின் இருப்பிடத்தைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் வெளிப்படவில்லை. அவர் இன்னும் பொதுவெளியிலும் தோன்றவில்லை. கத்தார் ஹமாஸ் தலைவர்களுக்கு "பாதுகாப்பான புகலிடத்தை" வழங்கியதால், அவர்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். "பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் கத்தார் உட்பட அனைத்து நாடுகளுக்கும் நான் கூறுகிறேன், அவர்களை வெளியேற்றுங்கள் அல்லது நீதியின் முன் நிறுத்துங்கள். இல்லையெனில், நாங்களே நடவடிக்கை எடுப்போம்," என்று அவர் எச்சரித்தார். இதற்கு பதிலளித்த கத்தார் பிரதமர் ஷேக் முகமது, "நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது நெதன்யாகு தான். அவர் தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தேடப்பட்டு வருபவர்," என்று சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். கடந்த ஆண்டு, காஸாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நெதன்யாகுவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்டும் குற்றவியல் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளதாகக் கூறி, ஐசிசி நீதிபதிகள் இருவருக்கும் கைது வாரண்டுகளை பிறப்பித்தனர். ஆனால் இஸ்ரேலிய அரசும், அந்த இருவரும் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இஸ்ரேலின் சமீபத்தியத் தாக்குதல், காஸாவில் மீதமுள்ள 48 பணயக்கைதிகள் மீதான நம்பிக்கையை "கொன்றுவிட்டது" என தாம் அஞ்சுவதாகவும், அதில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுவதாகவும் ஷேக் முகமது தெரிவித்தார். தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன், ஒரு பணயக்கைதியின் குடும்பத்தினரை சந்தித்ததாகவும், அவர்கள் "இந்த போர்நிறுத்த மத்தியஸ்தத்தையே முழுமையாக நம்பியிருந்தனர், அவர்களுக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை" எனக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலின் நடவடிக்கை "போருக்கு முடிவு காணும் கதவைத் திறக்கக்கூடும்" என்று நெதன்யாகு செவ்வாயன்று கூறினார். மேலும், அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாகவும் உறுதிப்படுத்தினார். அதேசமயம் காஸா மக்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். கத்தார் இப்போது ஹமாஸ் அலுவலகத்தை மூடுமா என்ற கேள்விக்கு, தனது அரசு "எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்து வருகிறது" என்றும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் "விரிவான உரையாடல்" நடத்தி வருவதாகவும் ஷேக் முகமது கூறினார். இந்தத் தாக்குதலின் ஒவ்வொரு அம்சத்திலும் தான் மிகவும் அதிருப்தியடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். "அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியும் இறையாண்மை கொண்ட நாடான கத்தாருக்குள் ஒருதலைப்பட்சமாக குண்டுவீசுவது, அமைதியை நிலைநாட்ட எங்களுடன் கடினமாகவும் துணிச்சலாகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு செயல்படும் ஒரு நாட்டுக்கு எதிராகச் செய்யப்படும் நடவடிக்கை. இது இஸ்ரேலின் இலக்குகளையோ அல்லது அமெரிக்காவின் இலக்குகளையோ முன்னேற்றாது", "ஆனால், காஸாவில் வாழும் மக்களின் துயரத்திலிருந்து லாபம் ஈட்டிய ஹமாஸை ஒழிப்பது ஒரு நியாயமான குறிக்கோள்"என்று டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க ராணுவத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும், வரவிருக்கும் தாக்குதல் குறித்து கத்தாருக்குத் தெரிவிக்குமாறு சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அது "மிகவும் தாமதமாகிவிட்டது" என்றும் டிரம்ப் கூறினார். அமெரிக்கா "தாக்குதல் நடந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு தான்" கத்தாரைத் தொடர்பு கொண்டதாக ஷேக் முகமது தெரிவித்தார். கத்தாரின் சக அரபு நாடுகளும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதன்கிழமை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஒற்றுமையை வெளிப்படுத்த தோஹாவிற்கு விமானம் மூலம் சென்றார். கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியிடம், இஸ்ரேலின் "குற்றவியல் தாக்குதல்" மத்திய கிழக்கின் "பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் அமைதிக்கான வாய்ப்புகளை" அச்சுறுத்துவதாக கூறியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டபுள்யூஏஎம் (WAM) செய்தி நிறுவனம் தெரிவித்தது. வியாழக்கிழமையன்று தோஹாவுக்கு வரவிருக்கும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத், இஸ்ரேலின் "கொடூரமான ஆக்கிரமிப்பு" நடவடிக்கைக்கு பதில் தேவைப்படுவதாகக் கூறினார். ஷேக் முகமதுவின் கூற்றுப்படி, பிராந்திய ரீதியான பதிலை விவாதிக்க விரைவில் கத்தாரில் ஒரு உச்சிமாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c931lw7e8zwo
1 month 2 weeks ago
மஹிந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் Published By: Digital Desk 3 11 Sep, 2025 | 02:24 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார். கொழும்பு, விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள்,வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர் வியாழக்கிழமை (11) காலை முதல் வருகை தந்திருந்தனர். இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறவுள்ளதாக வெளியான தகவலையடுத்து அனைவரும் அங்கு சென்றனர். சீனத்தூதுவர் உள்ளிட்ட பல இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்தனர். முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் புதன்கிழமை (9) பாராளுமன்றத்தில் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு நேற்றையதினம் சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று வெளியேறுவார் என்ற தகவல் வெளியான நிலையிலேயே அரசியல்வாதிகளும் இராஜதந்திரிகளும் ஆதரவாகளர்களும் அசரைச் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார். இதேவேளை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224815
1 month 2 weeks ago
11 Sep, 2025 | 10:12 AM யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவரங்கால் பகுதியில் நேற்று புதன்கிழமை (10) இரவு இராணுவத்தினரின் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/224784
Checked
Sun, 11/02/2025 - 02:33
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed