புதிய பதிவுகள்2

பிள்ளையான் உண்மைகளை வெளிப்படுத்துவதை தடுக்க சதி; அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும் - ஹிருணிகா வலியுறுத்தல்

3 months 2 weeks ago
18 APR, 2025 | 02:01 PM (எம்.மனோசித்ரா) பிள்ளையான் என்பவர் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் மிக முக்கிய சாட்சியாளராவார். எனவே அவர் அவற்றை வெளியளிடுவதைத் தடுப்பதற்கு ஒரு குழு முயற்சிக்கின்றது. அவருக்கு சுயாதீன சட்டத்தரணிகள் குழுவையும், சிறப்பு பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர வலியுறுத்தினார். கடுவலையில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடு;கையில், மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவார் என தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய மக்கள் சக்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் எவற்றையும் முன்னெடுக்காது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை அரசாங்கம் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என எவ்வாறு நம்ப முடியும்? பிள்ளையானின் கைது அனைவர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் ஏன் இதனை சரியாகக் கையாளவில்லை? உதய கம்மன்பில பிள்ளையானை தேசிய வீரர் எனக் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை? இது தொடர்பில் விசாரணைகளேனும் முன்னெடுக்கப்பட வேண்டும். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, பிள்ளையான் இராணுவத்துக்கு உளவுத் தகவல்களை வழங்கியமை பொய் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் ஊடாக இராணுவத்துக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறிருக்கையில் கம்மன்பில போன்றோர் குறிப்பிடும் விடயங்கள் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடியவையாகும். இது ஒரு பெரிய நாடகம் என்றே எமக்குத் தோன்றுகிறது. ஒருபுறம் பட்டலந்த குறித்து பேசப்பட்டது. மறுபுறம் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. பிள்ளையான் போன்றோரது குரலை முடக்குவதற்காக முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். பிள்ளையான் என்ற நபர் மிக முக்கிய சாட்சியாளராவார். எனவே அவருக்கு வழங்க வேண்டிய சகல பாதுகாப்புக்களை வழங்கி, அவருக்கு சுயாதீன சட்டத்தரணிகள் குழுவொன்றை வழங்க வேண்டும். பிள்ளையான் வாயைத் திறந்தால் எமது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் வெளிவரக் கூடும். எனவே அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான பணியாளராகவே கம்மன்பில தன்னை சட்டத்தரணியெனக் காண்பித்துக் கொண்டு பிள்ளையானை சந்திக்கின்றார். அவரை எவரேனும் இதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே அரசாங்கம் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/212285

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர

3 months 2 weeks ago
குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி; ஜனாதிபதி குறிப்பிடவுள்ள புதியவர் யார் ? - சரத் வீரசேகர Published By: VISHNU 18 APR, 2025 | 10:49 PM (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். 11 விசாரணை அறிக்கைகளில் இல்லாத புதிய விடயத்தை ஜனாதிபதி குறிப்பிடுவதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் நோக்கத்துக்காக குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எந்த விசாரணை அறிக்கைகளிலும் குறிப்பிடப்படவில்லை. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏமாற்றப்பட்டதையிட்டு கவலையடைகிறோம் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் பிரதான பொறுப்புதாரிகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். நாளை இந்த இரண்டு நாட்களில் ஜனாதிபதி எதை சொல்ல போகிறார் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் வைத்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு, குண்டுத்தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21 தினத்துக்கு முன்னர் பகிரங்கப்படுத்துவதாக வாக்குறுதியளித்தார். குண்டுத்தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை அறிவிக்காவிடின் ஏப்ரல் 21 தினத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்குவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பேராயர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தேசிய மட்டத்தில் 7 விசாரணைகளும், சர்வதேச மட்டத்தில் 4 விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. எந்த விசாரணைகளிலும் பிரதான சூத்திரதாரி யாரென்பது குறிப்பிடப்படவில்லை. இந்த விசாரணைகளில் குறிப்பிடப்படாத விடயங்களையா ஜனாதிபதி இவ்விரு தினங்களில் குறிப்பிட போகிறார் என்பதை பார்த்துக்கொண்டிக்கிறோம். ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் அது பேராயரை ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும். அது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கும் பாரியதொரு அநீதியாகும். குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பதையும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாதி சஹ்ரானை கொண்டு நௌபர் மௌலவி இந்த தாக்குதல்களை நடத்தினார் என்பதை முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பொறுப்புடன் பாராளுமன்றத்துக்கு அறிவித்திருந்தேன். நியூசிலாந்து நாட்டில் பள்ளிவாசல் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் தான் நௌபர் மௌலவியின் வழிநடத்தலின் கீழ் பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவினர் கத்தோலிக்க தேவாலயங்கள் மீதும், மேற்கத்தேயர்கள் இருந்த நட்சத்திர ஹோட்டல்களிலும் தாக்குதல்களை நடத்தினர். பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவினர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் கூட்டாக ஒன்றிணைந்து இந்த விடயத்தை குறிப்பிட்டு சுய உடன்படிக்கை செய்துக் கொண்டுள்ளனர். இவ்விடயம் விசாரணைகளில் வெளிவந்தன. இவ்வாறான நிலையில் குண்டுத்தாக்குதல்கள் விவகாரத்தை குறுகிய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது பாதிக்கப்பட்டவர்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பேராயர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அவரும் ஏமாற்றப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நீதியரசர் விஜித் மலல்கொட விசாரணை ஆணைக்குழு அறிக்கை, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அறிக்கை, தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு அறிக்கை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை, இமாம் அறிக்கை மற்றும் அல்விஸ் அறிக்கை ஆகியன உரிய தரப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எந்த அறிக்கையிலும் 'அரசியல் நோக்கத்துக்காக குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக'குறிப்பிடப்படவில்லை. அனைத்து அறிக்கைகளிலும் இது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தேவைக்காக நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் 45 வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்தனர். மேற்கொள்ளப்பட்ட 4 சர்வதேச மட்ட விசாரணைகளிலும் இது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. நௌபர் மௌலவி, மொஹமட் ரிஸ்கான் மற்றும் அஹமட் மில்ஹான் ஆகிய மூவரை பயங்கரவாதிகளாக குறிப்பிட்டு அமெரிக்க லொஸ் ஏஞ்சல் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். 11 விசாரணை அறிக்கைகளில் இல்லாத புதிய விடயத்தை ஜனாதிபதி குறிப்பிடுவதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/212334

பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்

3 months 2 weeks ago
பிள்ளையானின் சாரதி ஜெயந்தன் சிஐடியினரால் கைது செய்திகள் மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானின் சாரதியான ஜெயந்தன், இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த 8ஆம் திகதி பிள்ளையான் அவரது அலுவலகத்தில் சிஐடியினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளைத் தொடர்ந்து, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிள்ளையானின் சாரதி ஜெயந்தனை, கொழும்பிலிருந்து வந்த சிஐடி அதிகாரிகள், வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cm9mx35gp00hyhyg3leur5p0n

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 2 weeks ago
சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வி: பேட்டிங் சொர்க்கபுரியில் ஆர்சிபி 95 ரன்னில் சுருண்டது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல்லின் 34-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. மழை காரணமாக நீண்ட தாமதத்துக்குப்பின் 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் சேர்த்தது. 96 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்து வென்றது. நடப்பு சீசனில் வெளியூர் மைதானங்களில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ள ஆர்சிபி அணி, தனது சொந்த மைதானத்தில் நடந்த மூன்றாவது போட்டியிலும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துள்ளது. பேட்டிங் சொர்க்கபுரியான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் என்ன நடந்தது? ஆர்சிபி மோசமான பேட்டிங் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபி அணி இந்த சீசனில் தனது மோசமான பேட்டிங்கை நேற்று வெளிப்படுத்தியது. எந்த பேட்டரும், எந்தத் திட்டமிடலும் இன்றி களத்துக்கு வந்து விளையாடினர். தொடக்கத்தில் விக்கெட்டை இழந்து செல்லும் பேட்டர்கள் ஆடுகளத்தின் தன்மையைக் கூறி மற்ற பேட்டர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்களா எனத் தெரியவில்லை. அனைத்து பேட்டர்களும் ஒரே மனநிலையில் வந்து பெரிய ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டுகளை இழந்தனர். பில்சால்ட்(4) வழக்கம் போல் பவுண்டரியுடன் தொடங்கினாலும், கிராஸ்பேட்டில் சிக்ஸர் அடிக்க முயன்று யான் சென் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் விக்கெட்டை இழந்தார். விராட் கோலியும்(1) கிராஸ் பேட்டில் பெரிய ஷாட்டுக்கு முயன்று அர்ஷ்தீப் பந்துவீச்சில் யான்செனிடம் கேட்ச் கொடுத்தார். லிவிங்ஸ்டோன் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் பார்ட்லெட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் இவரை ரூ.8.75 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி அணி. இதுவரை 7 போட்டிகளில் 87 ரன்கள் மட்டுமே லிவிங்ஸ்டன் சேர்த்துள்ளார். அணிக்கு தேவையான நேரத்தில் பங்களிப்பு செய்யாமல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES 4 ஓவர்கள் பவர்ப்ளே முடிவில் ஆர்சிபி 3 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பட்டிதாருடன் ஜோடி சேர்ந்த ஜிதேஷ் சர்மாவும் நிலைக்கவில்லை. யான்சென் பந்துவீச்சை சமாளிக்க திணறிய ஜிதேஷ் சர்மா, பலமுறை "பீட்டன்" ஆகிய ஷாட்களை அடிக்க முடியாமல் தடுமாறினார். சஹல் பந்துவீச்சில் ஜிதேஷ் சர்மா 2 ரன்னில் வதேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த க்ருணால் பாண்டியா ஒரு ரன் சேர்த்த நிலையில் யான்சென் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிவந்த கேப்டன் பட்டிதார் 23 ரன்னில் சஹல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இம்பாக்ட் ப்ளேயர் என்று மனோஜ் பண்டகே என்ற வீரரை களமிறக்கினர். யான்சென் பந்துவீச்சில் தடுமாறிய மனோஜ், எந்த ஷாட் விளையாட போகிறோம் எனத் தெளிவில்லாமல் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். 8வது விக்கெட்டுக்கு புவனேஷ்வர்- டிம் டேவிட் ஜோடி 21 ரன்கள் சேர்த்தது, ஆர்சிபி அணியும் 50 ரன்களைக் கடந்தது.ஹர்பிரித் பிரார் தனது முதல் ஓவரிலேயே புவனேஷ்வர்(8), யாஷ் தயால் விக்கெட்டை வீழ்த்தினார். 9-வது விக்கெட்டுக்கு ஹேசல்வுடன், ஜோடி சேர்ந்த டேவிட் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். பிரார்ட்வெல் பந்துவீச்சில் 2 பவுண்டரியும், ஹர்பிரித்பிரார் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களையும் விளாசி 26 பந்துகளில் அரைசதம் அடித்தார், ஆர்சிபியும் 95 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபியின் போராட்டம் ஆர்சிபி அணியும் 95 ரன்களை டிபெண்ட் செய்யலாம் என்ற ஆசையில் களமிறங்கியது. புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் ஸ்கூப்ஷாட் அடிக்க முயன்று 13 ரன்னில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிரியான்ஷ் ஆர்யா(16)ரன்னில் ஹேசல்வுட் பந்துவீச்சில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலிஸ் நிதானமாக ஆடி மோசமான பந்துகளை மட்டும் ஷாட்களாக மாற்றினர். ஆனால் ஹேசல்வுட் தான் வீசிய 8-வது ஓவரில் எக்ஸ்ட்ரா பவுன்ஸரில் ஒரே ஓவரில் ஸ்ரேயாஸ்(7), இங்கிலிஸ்(14) விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளித்தார். 43 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES சுழற்பந்துவீச்சாளர் சூயஷ் சர்மா தொடக்கத்தில் நன்றாகத்தான் பந்துவீசினார். நேஹல் வதேராவும் சூயஷ் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டு சில பவுண்டரிகளை விளாசி, ரன்ரேட்டை உயர்த்தினார். புவனேஷ்வர் ஓவரில் சசாங்சிங் விக்கெட்டை இழந்தார். சூயஷ் சர்மாவால் கடைசி நேரத்தில் பேட்டர்களுக்கு அழுத்தத்தை தர முடியவில்லை. இதனால் நேஹல் வதேரா லாங்ஆப், கவர் டிரைவில் பவுண்டரி, சிக்ஸரை அடித்து வெற்றியை நோக்கி அணியை விரட்டினார். ஸ்டாய்னிஷ் களமிறங்கி சிக்ஸர் விளாசவே, பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நேஹல் வதேரா 19 பந்துகளில் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்விக்கு காரணம் என்ன? ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் " ஆடுகளத்தில் பந்து நின்று வந்ததால் கணிக்க முடியவில்லை. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக பந்து வந்தது. என்னைப் பொருத்தவரை பேட்டர்கள் இன்னும் சிறப்பாக ஆடியிருக்கலாம். பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் முக்கியம். அதை செய்யத் தவறினோம். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தவறவிட்டோம். இந்த சூழலில் படிக்கலை களமிறக்காமல் விட்டுவிட்டோம். ஆடுகளம் மோசமாக இல்லை என்றாலும் நிதானமாக பேட் செய்திருந்தால் ஸ்கோர் செய்திருக்கலாம். பஞ்சாப் அணியினர் ஆடுகளத்தை அறிந்து பந்துவீசியதால் அவர்களுக்கு உதவியது. எங்கள் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எங்கள் பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை இருந்தது. சில நேரங்களில் பேட்டிங் எடுபடும், சில நேரங்களில் சொதப்பிவிடும். எங்கள் பேட்டிங் மீது என்ன பிரச்சினை என்று வீரர்களிடம் பேச இருக்கிறேன்" எனத் தெரிவித்தார். ஆர்சிபிக்கு தொடரும் சொந்த மைதான சோகம்! பட மூலாதாரம்,GETTY IMAGES பெங்களூரு அணிக்கம் சொந்த மைதானமான சின்னசாமி அரங்கிற்கும் ராசியே கிடையாது. பெரும்பாலான அணிகள் சொந்த மைதானத்தில் அற்புதமான சாதனைகளை வைத்திருக்கும் நிலையில் ஆர்சிபி அணி சொந்தமைதானத்தில் அதிகமான தோல்விகளைத்தான் சந்தித்துள்ளது. இதுவரை 92 போட்டிகளில் பெங்களூருவில் ஆடிய ஆர்சிபி அதில் 44 போட்டிகளில் தோற்றுள்ளது, 43 போட்டிகளில் வென்றுள்ளது. 4 போட்டிகளில் முடிவு இல்லை, ஒரு போட்டிடையில் முடிந்தது. இந்த சீசனிலும் கூட ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் ஆடிய ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது, ஆனால், வெளி மைதானங்களில் பங்கேற்ற போட்டிகளில் வென்றுள்ளது. ஆர்சிபியின் சொந்த மைதான சோகம் இந்த சீசனிலும் தொடர்கிறது. ஆர்சிபி மானம் காத்த டிம்டேவிட் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டர் டிம் டேவிட் நேற்றுமட்டும் பொறுப்புடன் பேட் செய்யவில்லையென்றால் ஆர்சிபி 50 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் என 26 பந்துகளில் அரைசதம் அடித்து ஆர்சியின் மானத்தை காப்பாற்றி 95 ரன்கள் சேர்க்க உதவினார். ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள், அதன்பின் 9 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் என்ற மோசமானநிலையில் இருந்தது. இந்தநிலையில் இருந்து அணியை மீட்டு ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தது டிம் டேவிட்தான். கடைசியில் பிரார் ஓவரில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. டிம் டேவிட் இல்லாவிட்டால் ஆர்சிபியின் நிலைமை மோசமாக இருந்திருக்கும். 26 பந்துகளில் அரைசதம் அடித்த டிம் டேவிட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அணியுடன் ஒருநாள் இடைவெளியில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நியூ சண்டிகரில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடுகிறது. இதில் ஆர்சிபி வென்றால் புள்ளிப்பட்டியல் பரபரப்பாக மாறும். தற்போது ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. மழையால் மாறிய ஆடுகளம் பட மூலாதாரம்,GETTY IMAGES பெங்களூருவில் நேற்று மாலை பெய்ததையடுத்து, ஆட்டம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக, 6 ஓவர்கள் குறைக்கப்பட்டு 9 மணிக்கு மேல்தான் தொடங்கியது. மழையாலும், குளிர்ந்த காற்றாலும் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியிருந்தது. வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங்கிற்கும், பவுன்ஸருக்கும் நன்றாக மைதானம் ஒத்துழைத்தது. சேஸிங்கிற்கு சொர்க்கபுரியென பெயரெடுத்த பெங்களூரு ஆடுகளம் தலைகீழாக மாறியது. இதைப் பயன்படுத்திய பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென், யுஸ்வேந்திர சஹல், ஹர்பிரித் பிரார் ஆகியோர் ஆர்சிபி பேட்டிங் வரிசையை உருக்குலைத்தனர். முதல் 6 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப், யான்சென், சஹல் கைப்பற்றிய நிலையில் பிரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார்(23), டிம் டேவிட்(50) ஆகியோரைத் தவிர அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னோடு வெளியேறினர். இந்த ஆட்டத்தில் மொத்தம் 84 பந்துகள் வீசப்பட்ட நிலையில் அதில் 42 பந்துகளை டாட் பந்துகளாக ஆர்சிபி பேட்டர்கள் விட்டனர். அதேபோல ஆர்சிபி அணியிலும் ஹேசல்வுட் தனது பந்து வீச்சால் பஞ்சாப் பேட்டர்களை இந்த சேஸிங்கை எளிதாக முடிக்க விடாமல் தடுத்து 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் சூயஷ் சர்மா ஓவரில் அடிக்கப்பட்ட சிக்ஸர், பவுண்டரிகள், புவனேஷ்வர் ஓவரில் அடிக்கப்பட்ட ரன்கள் ஆட்டத்தை மாற்றியது. ஹேசல்வுட்டுக்கு ஒத்துழைத்து பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியிருந்தால், ஆர்சிபி வென்றிருந்தாலும் வியப்பில்லை. இன்றைய ஆட்டம் குஜராஜ் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் இடம்: ஆமதாபாத் நேரம்: மாலை 3.30 ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னெள இடம்: ஜெய்பூர் நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – நியூ சண்டிகர் நேரம்- மாலை 3.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்) நீலத் தொப்பி நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) ஜோஸ் ஹேசல்வுட்(ஆர்சிபி) 12 விக்கெட்டுகள்(7 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) https://www.bbc.com/tamil/articles/cx28lzlp4gyo

10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு

3 months 2 weeks ago
தமிழ்நாட்டு விடயத்தில் மட்டும் இல்லை, விளாடிமிர் புடின் ஆட்சி முடிடிவுக்கு வரும் நாளில் தான் நாங்களும் உக்ரைன் மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்று ரஷ்ய மாணவர்கள் இளைஞர்கள் சொல்வதில் உள்ள உண்மைகளயும் நம்புகின்றோம்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அவர்களுக்கு நடுவில் வரும் துடுப்பாட்டக்காரர்களாள்தான் பிரச்சினை. அதனை நிவர்த்தி செய்யத்தான் இவர் உதவுவார். அதனால்தான் சங்கரோ என்று நினைத்தேன். ஓவர்டன் அவர்களுக்குத் தேவை. பேபிய impact sub ஆகக் கொண்டு வரலாம். அப்படியாயின் டூபே தொடங்க வேணும். அப்படியாயின் சங்கர்தான் பலி. திருப்பாதி மூன்றாம் இடத்துக்குத் தேவை.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
Facebookல் அபிலாஷ் சந்திரன் எழுதியிருந்தார். நீண்டநாள் IPL ரசிகர்கள்தான் இது உண்மையா இருக்குமா என்று சொல்ல வேண்டும். அவரின் பத்தி கீழே: நேற்றைய போட்டியில் லக்னவ் அணியின் பல முடிவுகள் வினோதம் - பவர் பிளெவில் அவர்கள் பந்துகளை நிறைய விட்டது, பண்ட் மிக மெதுவாக ஆடியது, மில்லரை மிகத் தாமதமாக இறக்கியது. கட்டக்கடைசியாக முக்கியமாக பிஷ்னாய்க்கு நான்காவது ஓவரைக் கொடுக்காதது. ஆனால் யோசித்துப் பார்த்தால் இதில் வினோதமோ சர்ச்சையோ இல்லை - எல்லா ஐ.பி.எல்களிலும் சில போட்டிகளை தாரை வார்ப்பார்கள் - பெரும்பாலும் சென்னையும் மும்பையும் மோசமாக ஆடிவரும்போது அவர்களுடைய ரசிகர் படையை சோர்வடையச் செய்யாமல் இருக்க, விளம்பரங்கள், ஸ்பான்ஸர்கள் வெளியேறாமல் இருக்க, ஆட்டத்தொடரை விறுவிறுப்பாக்க நிர்வாகக் குழுவும் அணி உரிமையாளர்களுமாக இம்முடிவை எடுப்பார்கள் என நினைக்கிறேன். அதிகாரபூர்வ fixing இது. நேற்றைய போட்டியை சென்னைக்கு விட்டுக்கொடுத்தால், அதற்கு முந்தின நாள் போட்டி மும்பைக்குப் போனது. ஐ.பி.எல் தொடரின் மிகப்பெரிய பலவீனம் இதுதான். இதனாலே மக்கள் மெல்லமெல்ல நம்பிக்கை இழப்பார்கள். விளையாட்டை முழுமையான பொழுதுபோக்காக, வியாபாரமாக மட்டும் பார்க்கையில் வரும் விபத்து இது. இறுதிப் போட்டியிலாவது பிக்ஸிங் பண்ணாதீங்க என்பதே என் வேண்டுகோள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர

3 months 2 weeks ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர. “உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை ஜனாதிபதி உரிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்தாவிடின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்” என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி வழங்கிய போலி வாக்குறுதியாகவே இது கருதப்படும் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக வெளிப்படுத்துவதாக கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் வைத்து ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார் எனவும், தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஜனாதிபதி வெளிப்படுத்தாவிடின் வீதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கொழும்பு பேராயர் தெரிவித்திருந்தார் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும் இந்த அரசாங்கத்தினை ஆட்சியில் அமர்த்துவதற்கு கொழும்பு பேராயர் குழுவினர் பாரிய ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர் எனவும் எனவே தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி வாக்குறுதியளித்தவாறு உரிய ஆதாரங்களுடன் உண்மையான சூத்திரதாரி அடையாளப்படுத்தப்படுவாரா இல்லையா என்பது தெரியவில்லை எனவும், சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றாவிடின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும் எனவும், அத்துடன் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி செய்த செயலாகவே கருதப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1428809

ஸ்ரீ தலதா வழிபாடு; ஆரம்ப நிகழ்வுக்காக இராஜதந்திரிகள் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணம்!

3 months 2 weeks ago
ஸ்ரீ தலதா வழிபாடு; ஆரம்ப நிகழ்வுக்காக இராஜதந்திரிகள் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணம்! 16 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, இன்று காலை 7.00 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்பட்ட புகையிரதத்தின் சிறப்பு கண்காணிப்புப் பெட்டியில் பயணித்தது. இலங்கை மீண்டும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்து வருவதுடன், இதுவரை நாட்டைச் சூழ்ந்திருந்த அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு, நாட்டிற்குள் சகவாழ்வு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை நட்பு நாடுகளுக்கு தெரிவிக்கவும், அந்தப் பயணத்திற்கு அவர்கள் அனைவரின் ஆதரவையும் பெறம் நோக்கத்துடனும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டியை நோக்கிப் பயணித்த இக்குழு, முதலில் மகாவலி ரீச் ஹோட்டலை சென்றடைந்ததுடன், அங்கு ஹெல பாரம்பரியத்திற்கு ஏற்ப அவர்களுக்காக சிறப்பு சிங்கள-தமிழ் புத்தாண்டு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு இந்தக் குழுவுடன் மற்றொரு இராஜதந்திரிகள் குழுவும் இணைய திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் 44 பேர் கொண்ட இந்தக் குழு “சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க தலதா மாளிகைக்குச் செல்லவுள்ளதோடு, அதன் பின்னர் அந்தக் குழு அதே புகையிரதத்தில் மீண்டும் கொழும்புக்கு நோக்கித் திரும்பும். ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசாசனையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட “சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும். ஆரம்ப நாளான இன்று (18) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு “தலதா” புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நாளை (19) முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும். https://athavannews.com/2025/1428771

ஏமன் எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 58 பேர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago
ஏமன் எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 58 பேர் உயிரிழப்பு! ஹவுத்தி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 126 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் வழங்கும் இந்த மூலத்தை அகற்றவும், அவர்களின் சட்டவிரோத வருவாயை இழக்கச் செய்யவும் இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. எனினும், வடமேற்கு ஏமனை ஆளும் ஹவுத்தி தலைமையிலான அரசாங்கம், அந்த முனையம் ஒரு பொதுமக்களை கொண்ட பகுதி என்றும், அந்தத் தாக்குதல் “முழுமையான போர்க்குற்றம்” என்றும் கூறியது. செங்கடல் கப்பல் போக்குவரத்து மற்றும் காசா போருடன் தொடர்புடைய இஸ்ரேல் மீதான ஹவுத்தி தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த மாதம் அமெரிக்கப் படைகள் தங்கள் குண்டுவீச்சு தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். அன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்தது. https://athavannews.com/2025/1428787

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
விஜய் சங்கருக்கா, ராகுல் திருப்பதிக்கா? பேபி AB விளையாடுவாரனால் ஒரு வெளிநாட்டு வீரருக்கு பதிலாக களமிறங்குவார். ஓவர்டன்க்கு பதிலாகவா?

Tamil Genocide Illustrations

3 months 2 weeks ago
AI was used to construct these pictures, which offer a glimpse of the Mullivaikkal massacre and the Eelam Tamil Genocide. Only those who are 18 years of age or older are advised to view these photographs. I, Nanni Chozhan, used a variety of AI picture production technologies to create all of the images on this page. However, I make them available under free copyrights, so anyone can use them for educational purpose.

இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் நிறுத்தி வைப்பது பொதுமக்களின் சந்தேகத்தைத் தூண்டுகிறது - முஜிபுர் ரஹ்மான்

3 months 2 weeks ago
வெளிப்படுத்தினால் பிறகு அதில் உள்ள சிலதுகளை தூக்கி வைத்து நீங்கள் போராடி ஆட்சியை பிடித்து விடுவீர்கள் என்ற பயம் காரணமாக .... அடுத்த பொது தேர்தலிலும் ஜெ.வி.பி வெற்றிபெற்றால் நீங்கள் எல்லாம் அரசியல் செய்வதை மறந்திட வேணும் ...ஒற்றைக் கட்சி ஆட்சி ...எந்த வித ஒப்பந்தங்களும் பகிரங்கப்படுத்த படமாட்டாது ...ரில்வீன் சில்வாவும் அனுராவும் சேர்ந்து கை தூக்கினால் சகல ஒப்பந்தங்களும் நடைமுறை படுத்தப்படும்..🤣
Checked
Fri, 08/08/2025 - 00:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed