புதிய பதிவுகள்2

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
முதல் முறை இவ்வளவு ஆர்வமாக பார்க்கிறேன். போதையை ஏத்தி விட்டார்கள். நீங்கள் சொன்ன மாதிரி இனி இதை விட முடியாது போல் தான் உள்ளது.

அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!

3 months 2 weeks ago
அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட உக்ரேனின் கனிம ஒப்பந்தம்! உக்ரேனில் கனிம வளங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஆரம்ப படியாக, கெய்வ் மற்றும் வொஷிங்டன் வியாழக்கிழமை (17) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக உக்ரேன் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். இயற்கை வளங்கள் தொடர்பான ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாடுகளும் கடந்த பெப்ரவரியில் தயாராக இருந்தபோதிலும், ட்ரம்பிற்கும் உக்ரேனிய தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான ஓவல் அலுவலக சந்திப்பு குழப்பமாக மாறியதால் அது தாமதமானது. இந்த நிலையில் குறித்த ஒப்பந்தம் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள உக்ரேனின் முதல் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்வைரிடென்கோ, எங்கள் அமெரிக்க கூட்டாளிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்திடுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்ட உள்நோக்க ஒப்பந்தம் ஒரு பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தமாகும். இது உக்ரேனின் மறுகட்டமைப்புக்கான முதலீட்டு நிதியை அமைப்பதற்கும் வழி வகுக்கிறது – என்றார். 2022 இல் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்திய ரஷ்யாவுடனான போரில் உக்ரேனுக்கு அமெரிக்க ஆதரவு தேவை என்பதை அங்கீகரித்த பின்னர் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது. https://athavannews.com/2025/1428765

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நீங்க மேல நிற்கிறபடியால் நம்ப முடியாது. என்னடா மழை எதுவும் வந்து இன்னமும் குழப்பலையே என்று நேற்று தான் யோசித்தேன். போட்டி நடக்காது போல.

வெப்பநிலை குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்!

3 months 2 weeks ago
அதிகரிக்கும் வெப்பநிலை; விழிப்புடன் இருக்கவும்! 18 APR, 2025 | 11:13 AM நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று வெள்ளிக்கிழமை (18) எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருத்தல் மற்றும் வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுத்தல் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பம் தொடர்பான நோய்களிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அதிகளவு நீர் அருந்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212267
Checked
Fri, 08/08/2025 - 00:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed