3 months 2 weeks ago
இவரா ..அவரு ....கூட்டி கழித்துப் பார்த்தால் ...பயில்வான் சொன்னதுபோல் 60 வயதும் வரு ...☹️
3 months 2 weeks ago
18 APR, 2025 | 04:52 PM ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில் இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விலகிவிடுவார் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய உக்ரேனிய தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய மார்கோ ரூபியோ “இந்த முயற்சியை வாரக்கணக்கிலோ மாதக்கணக்கிலோ தொடர நாங்கள் விரும்பவில்லை. நாம் இப்போது மிக விரைவாக தீர்மானிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்குள் இது சாத்தியமாகுமா இல்லையா என்பது குறித்து சில நாட்களில் நான் பேசுகிறேன். ட்ரம்ப் இவ்விஷயத்தில் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளார். ஏனெனில் இதற்காக அவர் நிறைய நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணித்துள்ளார். இது முக்கியமானது. என்றாலும் இதே அளவுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் உள்ளன. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்வது நம் முன் உள்ள ஒரு பிரச்சினை. அதேநேரத்தில் இது சாத்தியமாகுமா என்பதை நாம் குறுகிய காலத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த சவாலும் நம் முன் உள்ளது. ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டுவது கடினம் என்பது தெளிவாகத் தெரிந்தாலும் அது விரைவில் செய்யப்படுவதற்கான அறிகுறிகள் இருக்க வேண்டும். இதை 12 மணி நேரத்தில் செய்து முடிக்க முடியும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அது எவ்வளவு தூரம் வித்தியாசமாக இருக்கிறது என்பதையும்இ அந்த வேறுபாடுகளைக் குறைக்க முடியுமா என்பதையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.” என தெரிவித்தார். உக்ரைனின் கனிமங்களை அமெரிக்கா அணுக அனுமதிக்கும் ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறேன் என்று ட்ரம்ப் நேற்று(வியாழக்கிழமை) கூறி இருந்தார். உக்ரைனுடனான அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் வெளிப்பட்ட நிலையில் ரூபியோ இவ்வாறு கூறி இருக்கிறார். வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சவால்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் இல்லாததால் வெள்ளை மாளிகையில் அதிகரித்து வரும் விரக்தியை ரூபியோவின் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன. வெள்ளை மாளிகையில் தனது முதல் 24 மணி நேரத்திற்குள் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212307
3 months 2 weeks ago
உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .......... ! 👍 சார் ..ஒரு சந்தேகம் ..கிருபனுக்கும் உங்களுக்கும் இடையில் ஏதாவது டீல்....😆
3 months 2 weeks ago
அப்பிடி நீங்க நினைக்கலாம் அண்ணை! ஆயுள்தண்டனை(திருமணம்) கைதி தானே!!!
3 months 2 weeks ago
பயணம் இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.
3 months 2 weeks ago
நலம்.நலமறிய ஆவல். என்று எழுதுவார்கள். இது என்னடா தலைமுடி நிலையை ஆவல்? கடவுளே இன்னும் என்னென்ன கேட்கப் போறாங்களோ? எதுக்கும் கோசான் கொஞ்சம் உசாராக இருப்பது நல்லது.
3 months 2 weeks ago
யார்யாரை தெரிவு செய்திருக்கிறேன் என்று கிருபன் பதியும் போது தான் எனக்கு தெரியவரும். பையா பயணம் நன்றாகவும் பாதுகாப்பாகவும் அமையட்டும். போற இடத்தில் கைபேசி வேலை செய்தால் அப்பப்ப செய்திகள் அனுப்பவும்.
3 months 2 weeks ago
சென்னை அணியில் தென்னாப்பிரிக்கா வீரர் டெவால்ட் பிரவேஸ் இணைகிறார். இவர் நன்றாக 6 ஒட்டங்கள் எடுக்கக்கூடியவர். முன்பு 2023,2024 இல் மும்பாய் அணிக்காக அதிரடியாக 6 ஓட்டங்கள் எடுத்தவர். சென்ற ஏலத்தில் ஒரு அணியும் இவரை எடுக்கவில்லை. ஆனால் அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடந்த SAT20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். சென்னை ஏலத்தில் 25 பேரை எடுத்திருந்தது. அதில் வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்நீத் சிங் ஒரு போட்டியிலும் இம்முறை விளையாட விட்டாலும் பயிற்சியின் போது காயமடைந்தார். அவருக்கு பதிலாக டெவால்ட் பிரவேஸ் இணைகிறார். சென்னை ஏலத்தில் 7 வெள்ளிநாடடு வீரர்களை மட்டுமே எடுத்தது, அதிகபட்சம் 8 வெளிநாடு வீரரை ஒரு அணி வைத்திருக்கலாம்.ஆகவே சென்னை அணியின் 8 வது வெளிநாட்டு வீரராக இணைகிறார் டெவால்ட். முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் எபி டி விளர்ஸ் போல விளையாடுவதினால் இவரை பேபி AB என அழைப்பார்கள்.
3 months 2 weeks ago
ஓம். எனது வயதை அண்ணளவாக கணித்து விட்டீர்கள். முடி கொட்டவில்லை, தலையில் ஆங்காங்கே வெள்ளி ஓடுகிறது. ஆனால் எண்ணை வைத்து இழுப்பதால் அது தெரிவதில்லை. காதோரம் நரை கொஞ்சம் உள்ளது. ஆகவே இப்போ கிம் ஜொங் பாணியில் காதை சுற்றிலும், தலையின் பின்புறமாகவும் சீரோவில் அடிக்கிறேன். தாடி பர பர என நரைத்து விட்டது. சிலவருடம் வரை கூட சால்ட் பெப்பர் சரிசமானாக இருந்தது. ஆனால் இப்போ 75% க்கு மேல் சால்ட். கருவாடு மீனாகிறது🤣
3 months 2 weeks ago
இனிய திருமண வாழ்த்து.
3 months 2 weeks ago
பயணம் இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.
3 months 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
3 months 2 weeks ago
ஆமைகளோடு ஆமைத்துறுமார்களுக்கும் தலையில் எண்ணெய் தடவ வேண்டும்.
3 months 2 weeks ago
உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .......... ! 👍
3 months 2 weeks ago
சரி உறவுகளே மூன்று கிழமை கழிச்சு சந்திப்போம்👍................... நீங்கள் எல்லாரும் இஞ்சோய் பண்ணுங்கோ🥰🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏..................................
3 months 2 weeks ago
உங்கள் ஆயுளில்... 40 வருடங்கள் நல்லெண்ணெய் வைத்து இருக்கின்றீர்கள் போலுள்ளது. நல்லெண்ணெய் வைத்தால் தலை முடி... பொசு பொசு என்றும், நரை இல்லாமல் கரு, கரு என்றும், சொட்டை விழாமல் அடர்த்தியாக இப்ப இருக்க வேணுமே. இப்போ உங்கள் தலைமுடியின் நிலைமையை அறிய ஆவல். பொய் சொல்லாமல்... நேர்மையான பதிலை எதிர் பார்க்கின்றேன். 😂
3 months 2 weeks ago
பம்பலுக்கு இல்லை. உண்மையாகத்தான். 13-21 வயது காலத்தை தவிர மிகுதி காலம் எல்லாம் இதை செய்தே வருகிறேன். தலைக்கு வைப்பதும் நல்லெண்ணைதான். ஜெல் வைத்தால் தலையிடிக்கும். கிரீம் வைதால் சொடுகு முப்போகம் விளையும்🤣
3 months 2 weeks ago
உங்கள் வாயிலிருக்கும் கருவாடு போதாதென்று நான் வேறு கருவாடு தரவேண்டுமா?.
3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ........ ! பெண் : சூடிக் கொடுத்தவள் நான் தோழி சூட்டிக் கொண்டவளே நீ வாழி சூடிக் கொடுத்தவள் நான் தோழி சூட்டிக் கொண்டவளே நீ வாழி பெண் : பாடிக் கொடுத்தவள் நான் தோழி பாடிக் கொடுத்தவள் நான் தோழி பாட்டை முடித்தவள் நீ வாழி பெண் : நிலத்தைப் பார்த்தா பயிர் வைத்தேன் அதன் நிறத்தைப் பார்த்தா உயிர் வைத்தேன் முகத்தைப் பார்த்தா மனம் வைத்தேன் வரும் முடிவைப் பார்த்தா கதை சொன்னேன் முடிவைப் பார்த்தா கதை சொன்னேன் பெண் : மாலை தொடுத்து மலர் கொண்டு நல்ல மஞ்சள் குங்குமம் சிமிழ் கொண்டு ஏழை எழுந்தேன் எனக்கென்று அந்த இறைவன் முடித்தான் உனக்கென்று இறைவன் முடித்தான் உனக்கென்று பெண் : கடலும் வானும் உள்ளவரை தென்றல் காற்று நடந்து செல்லும் வரை வளர்க உந்தன் பள்ளியறை நீ நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை........! --- சூடிக் கொடுத்தவள் நான் தோழி ---
3 months 2 weeks ago
சூடிக் கொடுத்தவள் நான் தோழி ........ சூடிக் கொண்டவளே நீ வாழி ....... ! 😍
Checked
Fri, 08/08/2025 - 00:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed