வாழும்-புலம்

ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறுவது சரியானதா????

Sun, 01/01/2017 - 12:35

ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறுவது சரியானதா????

தமிழர்கள் தொன்மையான இனம் என்பதும் அவர்களுக்கென்று ஓர்  தனித்துவம் இருப்பதும் நீங்கள் அறிந்ததே. சுமேரிய மக்களே உலகின் முதல் நாகரிக மாந்தர்கள் என்பதும் அவர்களே உலகின் பல கண்டுபிடிப்புக்களையும் செய்தார்கள் என்பதும் ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

மாந்த இனம் இத்தனை பாரிய வளர்ச்சியை எட்டுவதற்கு அவர்கள் கண்டுபிடித்த கோட்டுமொழியே பின்நாளில் எழுத்து மொழியாகி உலகின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. மெசொப்பொத்தேமியா என்று முன்னர் அழைக்கப்பட்ட, தற்போது ஈராக், சிரியா போன்ற நாடுகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்த நிலப்பரப்பு நாகரீகத்தின் தொட்டில் என்றும் கிரேக்க, எகிப்திய, யூத இனத்தவரால் அழைக்கப்பட்ட சுமேரிய இனமே தமிழர்களின் மூதாதைகள் என்றால் உங்களால் நம்ப முடியாதுதான்.

அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கால அளவுகளான 60 வினாடி -1 நிமிடம், 60 நிமிடம் - 1மணித்துளி, 24 மணித்துளி - 1நாள், 7 நாட்கள் -1 வாரம், 4 வாரங்கள்- 1மாதம், 12 மாதம் 1ஆண்டு என்பன கிறித்துவுக்கு முன் -BC 3000 கணிக்கப்பட்டு BC1800 இல் தை மாதம் 14 ம் திகதி புதுவருடப்பிறப்பும் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. இவையே தொடர்ச்சியாக எம்மிடமும் வந்துள்ளன. சுமேரியரின் கால அளவை கதிரவனின் சுழற்சியை வைத்தே கணிக்கப்பட்டுள்ளன.

சுமேரியரிடமிருந்தே சிறுசிறு மாற்றங்களுடன் இவை காலத்துக்குக் காலம் மாற்றம் பெற்று மற்றைய இனங்கள் தமதாக்கிக் கொண்டன. தென்னமெரிக்காவில் வாழ்ந்த மாயன்சும் சீனர்களுமே சுமேரியர்களிடமிருந்து மாறுபட்ட கால அளவைக் கொண்ட கணிப்பீடுகளை இப்பொழுதும் கொண்டுள்ளனர். நாட்கள் கூடிக் குறைந்து பல தடவை இந்தக் கணக்கில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் யூலியசீசரே மீண்டும் தை மாதத்தில் புத்தாண்டை நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.

யாருடன் ஆட்சியும் அதிகாரமும் இருக்கின்றதோ அவர்களாலேயே பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவும் அவற்றை நடை முறைப்படுத்தவும் முடியும். அந்த வகையில் பல நாடுகலில் தம் அதிகாரத்தை ஆங்கிலேயர் நிலைநாட்டினர் தான் எனினும் அப்பொழுது கூடத் தமிழர்கள் அவர்களுக்குப் பயந்து தமது நம்பிக்கைகளையும் கொண்டாட்டங்களையும் விட்டுவிடவில்லை. தொடர்ந்தும் தைத்திங்கள் முதல் நாளில் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் தைப்பொங்கல் பின்னாளில் சேர்த்துக்கொள்ளபட்டதா?? என்றொரு வினாவும் உண்டுதான் எனினும் தை மாதமே தமிழர்களின் புத்தாண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அப்பொழுது சித்திரைப் புத்தாண்டு தமிழர்களது இல்லையா என்றால் அது BC1000 ஆண்டின் பின்னர் ஆரியர்களால் தமிழர்களிடையே புகுத்தப்பட்டுள்ள கொண்டாட்டம் எனப் பல பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்பொழுது மேற்குலகில் பரந்துவாழும் தமிழ் இந்துக்கள் எப்படி மரம், பரிசுப்பொருட்கள் எல்லாம் வைத்து நத்தார் தினத்தைக் கொண்டாடுகிறார்களோ அதுபோலவே சித்திரைப் புத்தாண்டும் ஆரம்ப காலத்தில் தமிழில் இருந்தே தோற்றுவிக்கப்பட்ட சம்ஸ்கிருத மொழியை தமிழுள் புகுத்தி தமிழின் சிறப்பை அழித்து,  தமிழரின் பண்பாட்டு விழாக்களையும் ஆரியர் மறக்கடிக்க முனைந்தார்கள். அதற்கு ஏற்றாற்போல் தமிழர்களும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதுபோல் தமக்கென திடமனம் இல்லாது, தன் தனித்துவத்தை மற்றவனுக்காக விட்டுக்கொடுத்து இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

ஆங்கிலேயர் பல நாடுகளை ஆண்டதனாலும் , உலகப் பொதுமொழியாக ஆங்கிலம் இருப்பதனாலும், நாம் புலம்பெயர்ந்து வேற்று மொழி பேசும் நாடுகளில் அதிகம் வாழாததாலும், புத்தாண்டை ஒப்பிட ஆங்கிலப் புத்தாண்டு என்பது தமிழர்களால் மட்டுமன்றி வேறு இனத்தவர் பலராலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் சிலர் ஆங்கிலப்புத்தாண்டு என்று கொண்டாடப்படுவது கிறித்தவ மதம் தொடர்பானது என்ற ஒரு மாயையுள் சிக்கியுள்ளனர். அது தவறு.  யூலியசீசர் மீண்டும் அதை நடைமுறையில் கொண்டுவந்தாரே தவிர அது கிறித்தவப் புத்தாண்டு அல்ல.

அதேபோல் நாம் அதை ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறுவதும் மிகத் தவறு. ஆங்கிலேயர்கள்  அதைக் கண்டுபிடிக்கவும் இல்லை. அதை அமுல்படுத்தவும் இல்லை. அதுபோல் ஏன் ஆங்கிலப் புத்தாண்டு என்று கூற வேண்டும் எனச் சிந்திக்கவோ அல்லது எதிர்க்கேள்வி கேட்பதோ கூட இல்லை.

 

Categories: merge-rss

யாழ் கள நினவுகள்

Fri, 30/12/2016 - 21:07

கிருபன், சுகன், ரதி, ஜீவா, சுபேஸ், ஜஸ்ரின், நிழலி, தப்பிலி, நந்தன், தும்பளையான், சாத்திரி, நுணாவிலான், காவலுர்கண்மணி, பகலவன், ஷாந்தி, சஹாரா, ஈசன், அர்யுன், கோமகன், சுவைப்பிரியன், ஈழத்திருமகன், குளக்காட்டான், மீராபாரதி, தயா, வினித், சபேசன், இளங்கோ, நாரதர், விசுகு, சுவி, புத்தன், புங்iயூரான், மாப்பிள்ளை, சினேகிதி, தமிழிச்சி, சாணக்கியன், பண்டிதர், இணையவன், மோகன், இசைக்கலைஞன், வல்க்கேனோ, அபராஜிதன், வசிசுதா, தூயவன், எழுஞாயிறு, காவடி, அறிவிலி, குறுக்காலபோவான், ஐ.வி.சசி. ப்பிறியசகி, வசம்பு, ஜோக்கர், கரு, துல்பன், ஸ்மோல்பொயின்ற், ஓல்ற்றனேற்றிவ், பரணி, ஆதித்தியஇளம்பிறையன், ஜமுனா, சுண்டல், புலவர், கோஷன், உடையார், வாத்தியார், கறுப்பி, மருதன்கேணி, மாதரசி, யாயினி, நொச்சி, குட்டி, குமாரசாமி, சின்னக்குட்டி, குக்கூ, வசீ, துளசி, சோளியன், பொயெட், சுமேரியர், விசசாயிவிக், அஞ்சரன்....

பத்து வருடங்களாகின்றன யாழில் அங்கத்தவனாகி. இணையவெளி இந்தப் பத்துவருடங்களில் பெரிதும் மாறிவிட்டது. யாழிலும் அந்த மாற்றம் வெட்டவெளிச்சமாக வெளித்தெரிகிறது. எவரிற்கும் நீண்ட நெடிய விவாதங்களில் ஈடுபடுவதில் அவ்வளவு ஆர்வமில்லை. இரு வினாடிகளிற்குள் பார்த்துப் பச்சை குத்திவிட்டு நகரும் போக்கே உலகில் வியாபித்திருக்கிறது. வாசிப்பதற்குப் பதில் வீடியோக்களையே மக்கள் நாடுகிறார்கள். அந்தவகையில் யாழும் ஒரு முகநூல் போன்று மட்டும் தொழிற்படுவது தவிர்க்கமுடியாதது தான். இருப்பினும், பத்து வருடங்கள் என்பது நீண்ட காலம். அந்தவகையில் யாழ் சார்ந்தே பல ஞாபகங்கள் இருக்கவே செய்கின்றன. நான் மேலே பட்டியலிட்ட பெயர்களில் எத்தனை டுப்பிளிக்கேட் பெயர்கள் என்று தெரியவில்லை ஆனால் மூன்று ஐடிக்கள் தற்போது உயிருடன் இல்லை. 

முன்பெல்லாம் எதையாவது எழுதும் போது, இன்னார் இந்தக் கேள்வி கேட்பார்கள் எனத் தோன்றும். அவர்கள் கேள்விகளிற்கான பதிலை ஆரம்பப்பதிவிலேயே உள்ளடக்கிப் பதிவிடத் தோன்றும். விவாதங்கள் நாம் சிந்திக்காக கோணங்களில் சிந்திக்கத் தூண்டும். சில வாசகரின் கேழ்விகள் திணறடிக்கும்—எமது நிலை சார்ந்தும், நாம் முன்வைத்த கருத்துச் சார்ந்தும் ஆழ்ந்து சிந்திக்க நிர்ப்பந்திக்கும். இதனால் யாழிற்கு வருவது ஒரு போதை போன்று நாளாந்தம் நிகழும். தற்போது யாழில் விவாதங்கள் வெகுவாக அருகிவிட்டன. இன்னமும் சொல்வதானால், காத்திரமான பின்னூட்டங்கள் அருகிவிட்டன. எவரும் எவரையும் சவாலிற்கு அழைப்பதில்லை என்றே சொல்லலாம். 

யாழை விடுவோம், தமிழ் இணையவெளியில் எங்கேயாவது காத்திரமான விவாதங்களிற்கான முனை தெரிகிறதா என்று தேடினால் அப்படி எதுவும் கண்ணில் படுவதாக இல்லை. எனவே எழுத்து என்பதை விடுத்து எங்காவது எப்போதாவது அலைவரிசை ஒத்தவர்களைக்கண்டால் அவர்களுடன் விவாதிப்பது என்பதோடு தமிழ் மொழி விவாதம் நின்றுவிடுகிறது. இது தமிழ் இணையவெளிக்கு மட்டுமானதல்ல. சந்தை மீண்டும் தனது வெற்றியினை அறிவித்துக்கொள்கிறது. இணையவெளியினை முடக்கி மீண்டும் காத்திரமான விவாதங்களைப் பல்கலைக்களகங்களிற்குள்ளும் பிரத்தியேக விடுதிகளிற்குள்ளும் ஆனவையாகப் பூட்டிக்கொள்கிறது. இணையம் பரபரப்புடன் புரட்சி போல ஆரம்பித்துப் பிசுபிசுத்துப் போகிறது. "சிந்திப்பவர்கள்" என்பவர்கள் மீண்டும் எலீற்றுக்களாக மட்டும் சிறு குழுமங்களிற்குள் தங்கிவிட, சந்தை பெரும்பான்மையினரை நுகத்தில் பூட்டி உழுதபடி நகருகிறது...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவரிற்கும்.

Categories: merge-rss

ஐரோப்பாவில் அழகு ராணியாக பட்டம் வென்ற இலங்கை யுவதி!

Fri, 30/12/2016 - 10:21
ஐரோப்பாவில் அழகு ராணியாக பட்டம் வென்ற இலங்கை யுவதி!
 
 
ஐரோப்பாவில் அழகு ராணியாக பட்டம் வென்ற இலங்கை யுவதி!
2016 ஆண்டு ஐரோப்பிய இலங்கை அழகு ராணியாக (Miss Sri Lanka in Europe 2016) சபிதா தோமஸ் தெரிவாகியுள்ளார்.
 
ஐரோப்பாவின் இலங்கை அழகு ராணியாக இம்முறை  தெரிவாகியுள்ள சபிதா தோமஸ் நீர்கொழும்பில் இருந்து ஐரோப்பா சென்ற பெண்ணாவார்.
 
தற்போது டென்மார்க்கில் வசிக்கும் அவர் நீர்கொழும்பு கெபுன்கொட பிரதேசத்தை சேர்ந்த மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்.
 
ஐரோப்பா முழுவதும் இலங்கை கொடியை நாட்டும் எதிர்பார்ப்பில் சபிதா தோமஸ் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சபிதா தோமஸ் தமது குடும்பத்தினருடன் அடிக்கடி இலங்கை வந்து செல்வதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/news/22008

Categories: merge-rss

பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்கள்

Fri, 30/12/2016 - 06:31
பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்கள்
 
 
பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்கள்
இலங்கையர்கள் இருவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்ற காரணத்தால் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். 
 
சுரேஷ் கரனி மற்றும் ஜெபனேஷன் ஆகிய இருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இலங்கையிலிருந்து சுமார் 10 வருடங்களுக்கு முதன்னர் இந்தியா சென்ற குறித்த நபர்கள் போலி ஆவணங்களை காட்டி இந்தியப் பிரஜைகளுக்குரிய அந்தஸ்தினை பெற்றுள்ளனர்.
 
இந் நிலையில் போலி ஆவணங்களை வழங்கி பெற்றுக்கொண்ட இந்திய கடவுச்சீட்டுடன், சீனாவிலிருந்து பிரான்ஸ் வந்துள்ளனர். பிரான்ஸ் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்த்த போது, குறித்த நபர்கள் போலி இந்திய கடவுச்சீட்டில் பிரான்ஸ் வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
பிரான்ஸ் குடிவரவு திணைக்கள அதிகாரிகள், குறித்த பிரஜைகள் தொடர்பில் இந்திய குடிவரவு அதிகாரிகளுக்கும், இலங்கை பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளனர்.

http://www.onlineuthayan.com/news/22000

Categories: merge-rss

கனடா-பிக்கறிங்கில் கோரவிபத்து. இரண்டு தமிழர்கள் பரிதாப மரணம்

Wed, 28/12/2016 - 07:30
கனடா-பிக்கறிங்கில் கோரவிபத்து. இரண்டு தமிழர்கள் பரிதாப மரணம்.

 

Image

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பிக்கறிங்கில் Taunton வீதி & Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் 26-11-2016 இரவு 11:30 மணியளவில் நடைபெற்ற கோரவிபத்தில் இரண்டு வாகன சாரதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Honda Accord, Toyota Corolla ஆகிய வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரியவருகிறது.  மதுபோதை விபத்துக்கான காரணமல்ல என தெரிய வருகிறது.  இவ்கோர விபத்து தொடர்பான விசாரணைகளை DURHAM  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


இவ்கோர விபத்து தொடர்பான தகவல்கள் இருப்பின DURHAM பொலிஸாருக்கு அறிவிக்கலாம். மேற்படி விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் நீர்வேலியைச் சேர்ந்த சதீஸ் லோகநாதன் (35), இரண்டாவது நபர் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் எனவும் தெரியவருகிறது.


அன்னாரின் குடும்பத்தினருக்கு தமிழன் வழிகாட்டி ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.  

http://www.tamilsguide.com/blog/canada-news/4349Pickering%281%29.jpg

Categories: merge-rss

பாரீஸ் நகரில் கத்திக்குத்து.. நண்பர் வீடு வரை ஓடி உயிரிழந்த தமிழக பொறியியலார்

Sun, 25/12/2016 - 12:11
பாரீஸ் நகரில் கத்திக்குத்து.. நண்பர் வீடு வரை ஓடி உயிரிழந்த தமிழக பொறியியலார்


பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பொறியியலாராக பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் இனம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணிமாறன் என்ற 26 வயது இளைஞர் பாரீஸில் பொறியியலாராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பரை காண மெட்ரோ ரயிலில் பாரீஸின் வாகிரார்ட் புகையிரத நிலையத்தில் இறங்கியுள்ளார்.

மெட்ரோ புகையிரத நிலையத்துக்கு வெளியே சென்ற அவரை இம்தெரியாதவர்கள், கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் ரத்தம் வெளியேறிய நிலையிலும் நண்பரின் வீட்டுக்கு ஓடியுள்ளார்.

நண்பரின் வீட்டு அழைப்பு மணியை அழுத்திய அவர் அங்கே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். கதவை திறந்த நண்பர், ரத்த வெள்ளத்தில் மணிமாறன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் கொள்ளை முயற்சியில் மணிமாறன் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் அந்நாட்டு போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

http://globaltamilnews.net/archives/11595

Categories: merge-rss

கனடாவில் தமிழர் திருமணத்தில் நடைபெற்ற உக்கிர மோதல்: காரணம் இதுவா?

Fri, 23/12/2016 - 13:00
கனடாவில் தமிழர் திருமணத்தில் நடைபெற்ற உக்கிர மோதல்: காரணம் இதுவா?
 

 

கனடாவின், டொரன்டோவில் இடம்பெற்ற திருமணமொன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மோதலானது மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தினரிடையே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோதலின் காணொளியும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இம்மோதலுக்கான காரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

மணமகளின் முன்னாள் காதலன் திருமணத்துக்கு வந்து அந்தரங்க படங்களை சிலவற்றை வெளியிட்ட தாகவும் இதன் பின்னரே மோதல் இடம்பெற்றதாகவும் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மணமகன் மற்றும் மணமகள் தரப்புகளுக்கிடையில் நிலவிய மனக்கசப்பே மோதலுக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

இத் திருமணம் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்களுடையது என அத்திருமணத்தில் கலந்துகொண்டவர்களால் சமூகவலைதளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இது இலங்கைத் தமிழர்களினது எனக் கூறி காணொளியும் பதிவேற்றப்பட்டுள்ளது.canada_toronto

- See more at: http://www.canadamirror.com/canada/76891.html#sthash.YM4RwisE.dpuf
Categories: merge-rss

இலங்கையை சேர்ந்த 3 தலைமுறையினரை காவுகொண்ட நியூசிலாந்து தீவிபத்து

Thu, 22/12/2016 - 12:49
இலங்கையை சேர்ந்த 3 தலைமுறையினரை காவுகொண்ட நியூசிலாந்து தீவிபத்து

newsziland-1.jpg

நியூசிலாந்தின் அகதிகள் பேரவை நிறைவேற்று அதிகாரி கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக வைத்தியசாலையில் போராடிக் கொண்டிருப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக  இவரது 5 வயது மகன், 39 வயதுடைய மனைவி, 66 வயதுடைய மனைவியின் தாயார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

11 வயதுடைய மகள், 69 வயதுடைய அவரின் தாத்தா ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எனினும் 47 வயதுடைய கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக போராடுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து கைலேஸ் தனபாலசிங்கத்தின் 3 தலைமுறையை காவுகொண்டுள்ளது என கைலேசின் குடும்ப நண்பர் சிவராம் ஆனந்தசிவம் தெரிவித்துள்ளார்.

தற்போது நியூசிலாந்தின் அகதிகள் பேரவையின் நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றும் கைலேஸ் தனபாலச்ங்கம், நியூசிலாந்தில் குடியேறும் மக்களுக்கு உயர்ந்த சேவையை வழங்குபவர். அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த அபத்தம் இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் இனக்குழுமங்களுக்கு பேரதிர்ச்சி எனவும் கைலேசின் குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/11181

Categories: merge-rss

புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை

Wed, 21/12/2016 - 09:21
புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை

ltte.png
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப் பட்டியலில் இணைத்துக் கொண்ட காரணத்தினால் பல்வேறு நபர்கள் பிரச்சினைகளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் அமெரிக்காவிற்கு திரும்பும் போதும் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகளை சந்தித்த வருவதாகத் தெரிவித்துள்ள அவர்கள் அமெரிக்கத் தமிழர்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கி றிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் புலிகளை தடைப் பட்டியலிலிருந்து நீக்கி தமிழ் மக்களுக்கு ஒபாமா ஏதேனும் ஒன்றை பரிசாக வழங்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரமில்ஸ் போ ஒபாமா என்ற அமைப்பினால் இவ்வாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புஸ் அரசாங்கம் இலங்கையில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பிற்கு உதவியதாகவும், புலிகளை தடைப் பட்டியலில் நீடிப்பதற்கு எவ்வித அவசியமும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/11064

Categories: merge-rss

குருத்துவ வாழ்வில் பொன்விழா காணும் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார்

Fri, 16/12/2016 - 07:38
குருத்துவ வாழ்வில் பொன்விழா காணும் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார்
888-5fe554db45a4469adc380bcee188002bb29d942d.jpg

 

யாழ்ப்­பாண மறை­மா­வட்­டத்தின் மூத்த குருக்­களில் ஒரு­வரும், யாழ். மறை­மா­வட்­டத்தின் முன்னாள் குரு­மு­தல்­வரும், யாழ். புனித சவேரியார் உயர் குருத்­துவக் கல்­லூ­ரியின் முன்னாள் அதி­பரும், உலகத் தமிழர் பேர­வையின் தலை­வ­ரு­மான அருட்­தந்தை எஸ்.ஜே. இம்­மா­னுவேல் அடி­களார் தனது குருத்­துவ வாழ்வில் 50 வரு­டங்­களை (1966 –2016) நிறை­வு­செய்து இவ்­வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி பொன்­விழாக் காண்­கிறார்.

 தற்­போது ஜேர்மன் நாட்டில் இருந்­து­கொண்டு இறைபணி­யையும் தமிழ் மக்­களின் உரி­மைக்­கான பணி­யையும் அடி­களார் முன்­னெ­டுத்து வரு­கின்றார். சர்­வ­தேச அரங்கில் ஈழத்­த­மி­ழர்­களின் உரி­மை­க­ளுக்­காக உரத்துக் குரல் கொடுத்து ஓயாது இயங்­கி­வரும் அருட்­திரு. எஸ்.ஜே. இம்­மா­னுவேல் அடி­க­ளாரை வாழ்த்­துவோம். அவ­ரு­டைய நற்­ப­ணி­க­ளுக்­காக அவ­ருக்கும் இறை­வ­னுக்கும் நன்றி கூறுவோம்.

இன்று இலங்­கையில் குறிப்­பாக, தமிழ் மறை­மா­வட்­டங்­களில் பணி­யாற்றும் பெரும்­பா­லான குருக்கள் இவ­ரிடம் இறை­யியல் கற்றும், இவ­ரு­டைய உரு­வாக்­கத்தில் பயிற்சி பெற்றும் வெளிவந்­த­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. சிறந்த இறை­யியல் அறி­ஞ­ராகத் திகழும் அடி­களார் ஆசிய இறை­யி­ய­லா­ளர்­களில் ஒரு­வ­ராகக் கணிக்­கப்­ப­டு­கின்றார்.

1934ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்தில் பிறந்த இவர் யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியில் பாட­சாலைக் கல்­வியைக் கற்றார். பின்னர் 1958இல் கொழும்­பி­லுள்ள இலங்கைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்று விஞ்­ஞானப் பட்­ட­தா­ரி­யாக வெளியே­றினார். தனது பட்­டப்­ப­டிப்­புக்குப் பின்னர் குருத்­துவ வாழ்வைத் தேர்வுசெய்யும் முன் சில காலம் ஆசி­ரி­ய­ரா­கவும், ஊட­க­வி­ய­லா­ள­ரா­கவும் பணி­யாற்­றினார். பின்னர் உரோ­மையில் உள்ள ஊர்­பா­னியா பல்­க­லைக்­க­ழ­கத்தில் மெய்­யியல் மற்றும் இறை­யியல் கல்­வியைக் கற்று 1966ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி உரோ­மில் உள்ள புனித பேதுரு பேரா­ல­யத்தில் குரு­வாகத் திரு­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டார்.

குரு­வாகி நாடுதிரும்­பிய அவர் சில ஆண்­டுகள் யாழ். மறை­மா­வட்­டத்தில் பணி­யாற்­றினார். பின்னர் 1976ஆம் ஆண்டு மீண்டும் உரோம் சென்று தனது உயர் கல்­வியைக் கற்று இறை­யி­யலில் கலா­நிதிப் பட்­டத்தைப் பெற்­றுக்­கொண்டார். நாடுதிரும்­பிய அவர் கண்டி தேசிய குருத்­துவக் கல்­லூ­ரியில் 1976 1986 வரை இறை­யியல் விரி­வு­ரை­யா­ள­ரா­கவும் இறை­யியல் பீடத் தலை­வ­ரா­கவும் பணி­யாற்­றினார். பின்னர் யாழ்ப்­பாணம் திரும்­பிய அவர் 10 வரு­டங்­க­ளாக யாழ். கொழும்­புத்­து­றையில் அமைந்­துள்ள புனித சவேரியார் உயர் குருத்­துவக் கல்­லூ­ரியின் அதி­ப­ராகப் பணி­யாற்­றினார். 1997 வரை அவர் யாழ். மறை­மா­வட்­டத்தின் குரு­மு­தல்­வ­ரா­கவும் பணி­யாற்­றினார்.

1995இல் யாழ். குடா­நாட்டை விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து திரும்பக் கைப்­பற்றும் இலங்கை அரச படை­களின் படை­ந­கர்வு நட­வ­டிக்கை கார­ண­மாக யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வெளியே­றிய ஐந்து இலட்சம் மக்­க­ளோடு இவரும் வெளியேறி வன்­னியில் மக்­க­ளோடு மக்­க­ளாக வாழ்ந்தார். 1997இல் அவர் தமிழர் தாய­கத்­தி­லி­ருந்து வெளியேற வேண்­டிய சூழ்­நி­லைக்கு உள்­ளாக்­கப்­பட்ட நிலையில் வெளிநாட்டில் புக­லிடம் தேடினார். இங்­கி­லாந்தில் ஒரு வருடம் பணி­யாற்­றிய பின் ஜேர்மன் நாட்­டிற்குச் சென்றார். முன்ஸ்ரர் மறை­மா­வட்­டத்தில் சமயப் பணி­யாற்­றிக்­கொண்டு ஈழத்­த­மி­ழரின் உரி­மை­க­ளுக்­கான பணி­யையும் சர்­வ­தேச அரங்கில் முன்­னெ­டுத்தார்.

தமிழ் மக்­களின் நியா­ய­மான உரி­மைகள் குறித்து சர்­வ­தே­சத்தின் மனச்­சாட்­சியை உலுக்­கி­ய­வ­ராக பேசியும் எழு­தியும் வந்த அடி­களார் 2010ஆம் ஆண்டு உலகத் தமிழர் பேர­வையின் தலை­வ­ராகத் தெரிவு­செய்­யப்­பட்டார். இன்று 82 வய­திலும் அவர் துடிப்­புள்ள ஒரு குரு­வாக இன்றும் மக்கள் பணி­யாற்றிக்கொண்­டி­ருக்­கிறார்.

இவர் எழு­திய பல ஆங்­கில மற்றும் தமிழ் நூல்­களில் தனது சிந்­த­னை­களை தெளிவாக முன்­வைத்­துள்ளார். தமிழ் மக்­களின் போராட்­டத்­திற்­கான நியா­யங்கள், திருச்­ச­பையின் பங்­க­ளிப்பு, இலங்கை அர­சாங்­கத்தின் கடி­னப்­போக்கு போன்ற விட­யங்­களை விரி­வாக ஆராய்ந்­துள்ளார்.

மனச்­சாட்­சிக்கு ஏற்ப உண்­மை­களை உரக்கச் சொல்லும் அவர் ஒரு காலத்தில் விடு­த­லைப்­புலி­களின் ஆத­ர­வாளர் எனவும், இலங்கை அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­னவர் என்றும் முத்­திரை குத்­தப்­பட்டார். அவர் என்­றுமே யாருக்­குமே ஆத­ர­வா­ள­ரா­கவோ, எதி­ரா­ன­வ­ரா­கவோ இருந்­த­தில்லை. உண்­மைக்கும் நீதிக்கும் ஏற்­பவே அவர் பேசினார்; எழு­தினார்; செய­லாற்­றினார். அது அவரை சில­ருக்கு ஆத­ர­வா­ன­வ­ரா­கவும் சில­ருக்கு எதி­ரா­ன­வ­ரா­கவும் இனங்­காட்­டி­யது.

தனிப்­பட்ட முறையில் அவர் ஏழைப் பிள்­ளை­களின் கல்­விக்­காக குறிப்­பாக மலை­யகப் பிள்­ளை­களின் கல்வி வளர்ச்­சிக்­காக பல ஆண்­டு­க­ளாக யாருக்கும் தெரியாமல் உதவி வரு­கின்றார். இவ­ரு­டைய உத­வி­யினால் பல மலை­யகப் பிள்­ளைகள் கல்வி கற்று இன்று வள­மான வாழ்க்­கையை அமைத்­துள்­ளனர்.

அண்மைக்காலங்­களில் அவர் வழங்­கிய செய்­தி­களில், நேர்காணல்­களில் இன்­றைய சம­காலச் சூழ்­நி­லையில் தனது நிலைப்­பாட்­டையும் உல­கத்­த­மிழர் பேர­வையின் நிலைப்­பாட்­டையும் தெளிவாக்­கி­யுள்ளார். போருக்குப் பின்­ன­ரான இன்­றைய யதார்த்­தத்தைப் புரிந்­து­கொண்டு தேர்ந்தெடுக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் தலை­வர்­க­ளோடு இணைந்து செய­லாற்ற வேண்டும் எனக் கூறும் இவர், இன்­றைய இலங்­கையின் அர­சாங்­க­த­்துக்கு விமர்­சன ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தா­கவும் குறிப்­பி­டு­கின்றார். தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­காகச் செய­லாற்றும் அமைப்­பு­க­்களி­டையே ஒற்­றுமை நிலவ வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் வலி­யு­றுத்­து­கின்றார்.

இவ்­வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி தனது குருத்­துவப் பொன்­விழா நாளில் இவர் பாப்­ப­ரசர் பிரான்சிஸ் அவர்­க­ளுடன் இணைந்து திருப்­பலி ஒப்­புக்­கொ­டுக்­கின்றார்.

ஒரு பிர­மா­ணிக்­க­முள்ள கத்­தோ­லிக்கக் குரு­வாக, இனப்­பற்று மிக்க ஈழத்­தமிழ்க் குடி­ம­க­னாக, மனச்­சாட்­சி­யுள்ள ஓர் உலகக் குடி­ம­க­னாக நின்­று­கொண்டே அவர் தனது கருத்­து­களைத் தெரிவிக்­கின்றார்; பணி­களை முன்­னெ­டுக்­கின்றார். இயேசு கிறிஸ்துவில் அவர் கொண்ட ஆழமான விசுவாசமே அவரை இப்பணிகளில் உந்தித்தள்ளுகிறது.

முதிர்ந்த வயதிலும், நோயின் பிடியிலும் உள்ளத்து உறுதி தளராது, எம் மக்களின் உரிமைக்காகக் கண்டங்கள் கடந்து பயணம் செய்தும், ஓயாது பேசியும் எழுதியும் வரும் அடிகளாரை உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம். சிறப்பாக அவரிடம் இறையியல் கல்வி பயின்றும், குருத்துவ உருவாக்கம் பெற்றும் குருக்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் கத்தோலிக்கக் குருக்கள் சார்பாகவும் அடிகளாரை வாழ்த்துகின்றோம்.

ஈழத்தமிழர் உரிமை வரலாற்றில் அடிக­ளாரின் பணி என்றென்றும் நினைவு கூரப்படும்.

அருட்­திரு. தமிழ்நேசன் அடி­களார்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-16#page-4

Categories: merge-rss

"நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.!

Wed, 14/12/2016 - 10:38
"நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.!

நாளையோடு ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் தமிழ்பேசும் புலம்பெயர் மாநாடு எதிர்வரும 17ஆம் 18ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெறவுள்ளது.

conference.jpg

லண்டன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் புலம்பெயர் அமைப்புக்கள், புலம்பெயர் சமுக குழுக்கள், தனிநபர்கள் என பலதரப்பட்ட தரப்புக்கள் பங்குபற்றவுள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் மனித உரிமைகளை நிiநாட்டுதல், சமுகங்களின் முன்னேற்றல், கலாசாரங்களை பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொர்டர்பாக கலந்துரையாடப்படவுள்ளன. 

அதுமட்டுமன்றி யுத்தத்தின் பின்னரான மீள்கட்டுமானங்கள், அபவிருத்திகள், நல்லிணக்கச் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் அதிகூடிய கவனம் செலுத்தப்படவுள்ளன. 

அதேநேரம் வடக்கு கிழக்கில் மலையகத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிதல்களை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், புலம்பெயர் தரப்பினரிடையான உறவைப் பலப்படுத்திக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளை பிரதிநிதிகள், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை உட்பட பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது. 

http://www.virakesari.lk/article/14384

Categories: merge-rss

பிரான்ஸ் அழகி போட்டியில் பட்டத்தை வென்ற ஈழத் தமிழ்ப் பெண்!

Tue, 13/12/2016 - 14:26
பிரான்சில் நடந்த Miss Elegante France அழகி போட்டியில்  ஈழத்தமிழ் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகளுடன் போட்டியிட்டு, சபறினா கணேசபவன் என்ற ஈழத் தமிழ் பெண், Miss Elegante France  அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சில் நடந்த Miss Elegante France அழகி போட்டியில் ஈழத்தமிழ் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகளுடன் போட்டியிட்டு, சபறினா கணேசபவன் என்ற ஈழத் தமிழ் பெண், Miss Elegante France அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

   

 

miss-france-131216-seithy%20(1).jpg

 

 

miss-france-131216-seithy%20(2).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=171647&category=TamilNews&language=tamil

Categories: merge-rss

அவுஸ்ரேலியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இலங்கை இளைஞன் மாயம்

Tue, 13/12/2016 - 08:27
அவுஸ்ரேலியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இலங்கை இளைஞன் மாயம்
 
 
அவுஸ்ரேலியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இலங்கை இளைஞன் மாயம்
அவுஸ்ரேலியாவில்  நான்கு நண்பர்களுடன் கடந்த ஞாயிறன்று ஆற்றில் குளிக்கச் சென்ற  28 வயது இலங்கை இளைஞர் காணாமற் போன நிலையில் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் மீட்புக்குழு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.
 
உயரமான ஒரு குன்றிலிருந்து ஆற்றுக்குள் குதித்த ஒஸான் ஜானக ஜெயசூர்ய என்ற இந்த இளைஞர் ஆற்றுக்குள் விழுந்தபின் ஒரு தடவை மேலே வந்ததாகவும் பின்பு ஒரேயடியாக மறைந்து விட்டதாகவும் இவருடன் சென்ற நண்பர்கள் தெரிவித்தனர்
 
நண்பர்களில் ஒருவர் ஆற்றுக்குள் பாய்ந்ததாகவும், ஜானகவின் உடலை எங்கும் காணமுடியவில்லை என்றும், பிழையாக ஏதோ நடந்துவிட்டதை தான் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
 
ஜானகவின் உடலைக் கண்டுபிடிக்க அவரது நண்பர்கள் அங்கே 40 நிமிடங்கள் காத்திருந்து முயற்சித்துள்ளார்கள் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/news/21311

Categories: merge-rss

இந்திய சஞ்சிகையில் எனது நிறுவனம் தொழில்ரீதியான முதலீடு தொடர்பான கட்டுரை

Thu, 08/12/2016 - 19:17

இந்திய சஞ்சிகையில் எனது நிறுவனம் தொழில்ரீதியான முதலீடு தொடர்பான கட்டுரையை இன்று வெளியிட்டுள்ளது. மகிழ்ச்சி!!
 

இன்னிலைக்கு வளர துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள் பல !!!

 

உங்கள் ஊக்கப்படுத்தலும் வாழ்த்துகளும் என்னை இன்னும் சாதனை படைக்க வைக்கும்.

Categories: merge-rss

இலங்கை தம்பதிக்கு புகலிடம் அளித்த நியூஸிலாந்து

Fri, 02/12/2016 - 11:22
இலங்கை தம்பதிக்கு புகலிடம் அளித்த நியூஸிலாந்து
 
 
இலங்கை தம்பதிக்கு புகலிடம் அளித்த நியூஸிலாந்து
தமது உறவினர்கள் பாதாள குழுக்களால் கொலை செய்யப்பட்ட நிலையில், புகலிடம் கோரிச் சென்ற இல ங்கையை சேர்ந்த தம்பதி ஒன்றுக்கு நியூசிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊட கம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
இலங்கை அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழலை வெளிக்கொண்டு வர முயற்சித்தமைக்காக பாதாள குழுவி னரால், அவர்களது உறவினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
 
இந்த நிலையில், குறித்த கொலைக்கு நீதி கோரியமையை அடுத்து, தந்தையாரையும் (கணவரின்) அவர்கள் கொலை செய்ததாக அந்தத் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர். 
 
அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த நியூசிலாந்து அரசாங்கம் அவர்களுக்கான குடியுரிமையை வழங்கி யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.onlineuthayan.com/news/20904

Categories: merge-rss

பிரான்சில் துப்பாக்கி சூடு தமிழ்சிறுமி படுகாயம்

Tue, 29/11/2016 - 05:23
பிரான்சில் துப்பாக்கி சூடு தமிழ்சிறுமி படுகாயம்
 
 
பிரான்சில் துப்பாக்கி சூடு  தமிழ்சிறுமி படுகாயம்
பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
29-11-2016%209.11.29%202.jpg
தொடர்மாடி குடியிருப்பை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எதிர்பாராத விதமாக குறித்த சிறுமி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
எனினும், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா கவும், தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை,துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்காக காரணம் ஏதும் அறியப்படாத நிலையில், விசாரணைகளை முன்னெடு த்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

http://onlineuthayan.com/news/20781

Categories: merge-rss

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது

Mon, 28/11/2016 - 14:37
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது
 

arrest
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு நோர்வே காவல்துறையினர் 70 இலங்கையர்களை கைது செய்துள்ளனர். நோர்வேயில் துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூய்மைப்படுத்தும் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் 34 வயதான இலங்கையரே இந்த மோசடியின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் கோரி வரும் இலங்கைத் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/8547

Categories: merge-rss

எப்பொழுதெல்லாம் நாம் துவண்டு போகின்றோமோ..

Mon, 28/11/2016 - 13:45
எப்பொதெல்லாம் நாம் துவண்டு போகின்றோமோ அப்பொழுதெல்லாம் ஒரு சக்தி எம்மை தட்டி எழுப்பணும் தட்டி எழுப்புகிறது அதற்காகவே மாவீரர் நாள் வந்து போகிறது. தாயகத்தில் மீண்டும் எழுச்சியுடன் நடைபெற்றிருக்கிறது. இதில் புலம் பெயர் மக்களுக்கு பெரும் பங்கிருப்பதை பலரும் புரிந்து கொள்ளணும். 2009 இலிருந்து அதை காப்பாற்றி வந்தவர்கள் புலம் பெயர் மக்களே. எத்தனையோ இடையூறுகளுக்கும் வசைகளுக்குமிடையில் அதை தொடர்ந்தார்கள். இன்று தாயகத்தையும் புலத்தையும் உலகமே பார்த்து தகர்க்கமுடியாத இந்த தியாக வேள்வி அணைந்துவிடவில்லை அழித்துவிடமுடியாது என திகைத்திருக்கிறது. 
மாவீரரே அஞ்சலிக்கின்றோம் எமக்காக உயிர் தந்தீர் எமக்கான தடைகளை நீக்க உயிர்க்கொடை தந்தீர் இறக்கும் போதும் நீங்கள் நினைத்த உதிர்ந்தசொல் தமிழீழம் உங்களுக்காக இன்று குனிந்த எமது தலைகள் மீண்டும் நிமிர்கின்றன உங்கள் கனவை நினைவாக்க உழைப்போம் உங்கள் மீது உறுதி கூறுகின்றோம் மாவீரரே....
இந்த குவியல் சொல்லும் செய்தி கனதியாது
உறுதியானது...
image.jpg
Categories: merge-rss

மாவீரர் நாள் 2016 நிகழ்வுகளின் தொகுப்பு

Sun, 27/11/2016 - 10:59
யாழில். இரண்டு இடங்களில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (27) காலை 9 மணியளவில் திலீபனின் நினைவிடம் முன்பாக நினைவுகூரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கோப்பாய் மாவீரர் மயானம் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையில் நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது.

 

 

இதேவேளை, கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் மாவீரர் மயானம் முன்பாக மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/ltte/01/126118

Categories: merge-rss