வாழும்-புலம்

கியூப தேசத்தினருக்கு வாழ்வளிக்கும் தமிழர்கள்!

Wed, 23/11/2016 - 08:43

 

Image result for cuban cigar

 

கனடாவிலுள்ள தமிழர்களிற்கு விடுமுறைக்குச் செல்வதற்கு ஏற்ற இடமாக இருப்பது கியூபா. அங்கே பல தமிழர்களிற்கு குடும்பங்கள் இருக்கின்றன என்ற உண்மை தற்போது கியூபர்களாலேயே வெளிக் கொணரப்படுகின்றது.

அண்மையில் வாகணங்கள் திருத்தும் நிலையத்திற்கு சென்ற ஒருவர் கிழக்கு ஐரோப்பியரான வாகணந் திருந்துனரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது அவருக்கு திருமணமாகி விட்டதா எனக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த மேற்படி வாகணந் திருந்துனர் தான் வருடத்திற்கு இரண்டு முறை கியூபாவிற்கு சென்று வருவதாகவும் அங்கேயுள்ள ஒரு கியூபப் பெண்ணை தனது காதலியாக வைத்திருப்பதாகவும் கூறினார்.

அப்போது அவரை எப்போ இங்கே அழைத்து வரப் போகின்றீர்கள் எனக் கேட்ட போது, அவர் இங்கு அழைத்து வருவதற்காக அல்ல, அவர் அங்கேயே தான் தொடர்ந்து இருப்பார். நான் வருடாவருடம் சென்று வருவேன் எனத் தெரிவித்தார்.

கதையோடு கதையாக நீங்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர் என கார் திருத்தச் சென்றவரிடம் கேட்க அவர் நான் ஒரு தமிழன் சிறீலங்காவைச் சேர்ந்தவன் எனத் தெரித்தார்.

பலமாகச் சிரித்த கார் திருத்துனர் என்னுடைய காதலி இருக்கும் தெருவில் சில தமிழர்களும் காதலிகளை வைத்திருக்கின்றார்கள். அந்தத் தமிழர்கள் வண்டியும் தொந்தியுமாக ஏற்கனவே கல்யானம் செய்து இங்கே மனைவி, பிள்ளைகளை வைத்துக் கொண்டு அங்கு களவாகக் குடும்பம் வைத்திருக்கின்றார்கள் என்றார்.

இதனை கேட்ட தமிழருக்கு இருக்கப் பொறுக்கவில்லை. அவர் சட்டஞ்சார்ந்த துறையில் பணியாற்றும் தனது நண்பரிடம் இதுபற்றிக் கேட்ட போது, அவர் இது உண்மை, பல குடும்பங்கள் இதனால் பிரிந்திருக்கின்றன. அமெரிக்காவிற்குச் வேலை நிமிர்த்தமாக ஒரு வாரம் செல்கின்றேன், ஐரோப்பாவிற்குச் ஒரு வாரம் செல்கின்றேன் எனக் கூறிகியூபா சென்று வருபவர்கள் அங்கேயுள்ள கியூப மனைவிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட சம்பங்களை இவருடன் பகிர்ந்தார்.

அதாவது கியூபப் பெண்கள் தங்களிற்கு ஒரு பிள்ளை பிறந்தவுடன் இங்குள்ள மனைவியுடன் தொடர்பு கொண்டு உண்மைகளை உடைத்துப் போடுகின்றார்கள். இதனால் இங்குள்ள குடும்பங்கள் பிரிய அகப்படும் நபரோ கியூபப் பெண்மணியே தஞ்சம் என்று தொடர்ந்து சென்று வருகின்றார்.

இன்னொரு விவகாரத்தில் ஒருவர் டூபாயில் ஒரு வியாபார முயற்சி சம்பந்தமாக பேசப் போகின்றேன் என மனைவியிடம் கூறி கியூபாவிற்குச் செல்ல, அந்த நபரின் தமையனாரே இல்லை உணது கணவர் கியூபாவிற்குச் சென்று விட்டார். எனது நண்பர் அங்கே கண்டார் எனக் கூற அந்தக் குடும்பமும் பிரிந்தது.

இன்னொருவரோ கடற்கரையில் இரவுப் பொழுதென இரண்டு பதின்ம வயதுப்பெண்களைக் கட்டித் தழுவியபடி செல்ல, அந்த இருட்டிலும் அவரை அடையாளம் கண்ட உண்மையான விடுமுறைக்குச் சென்ற தமிழ் இளைஞர்கள், நாயே நீ உண் பெண்பிள்ளையின் வயதையுடைய பிள்ளைகளை அநியாயமாக்குகிறாய் என அவரது முகத்தில் துப்பியது போது,

அவருடன் இருந்த பெண்கள் தப்பியோட அவர் எதுவும் நடக்காத மாதிரி சென்றதாகவும் மேற்படி நபருக்குத் தெரிவித்திருக்கின்றார். எனவே கனடாவிலுள்ள தமிழ்ப் பெண்களின் குடும்பங்களைச் சிதைக்கும் நபர்களாக கியூபப் பெண்கள் மாறியுள்ளதும்,

அதேவேளை கியூபாவிற்குச் சென்று அங்குள்ள பெண்களிற்கு வாழ்வு கொடுக்கும் நபர்களாக மணமுடித்த தமிழர்கள் “சிலர்” மாறியிருப்பதும் தமிழர்களின் ஒரு சமுதாயச் சிதைவாகவே பார்க்கப்படுகின்றது.

இன்னொரு தமிழரோ கனடாவிலேயே தனது குடும்பஞ்சார்ந்த பார்ட்டி ஒன்றிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு மதுபோதையில் வந்தவர். மனைவி எரிபொருள் நிரப்ப, காசு கொடுப்பதற்காக உள்ளே சென்றவர். பணம் பெறுபவராக நின்ற கியூபப் பெண்ணுடன்,

சரளமாக ஸ்பானிய மொழியில் உரையாடி, தனக்குப் பின்னால் மனைவி நிற்பதையும் கவனிக்காமல், தான் கியூபாவிற்கு அடிக்கடி சென்று வருவதாகக் கூறி “மங்களகரமாக” எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே வாங்கிக் கட்டி, இப்போது குடும்பத்திலிருந்து அப்புறப்படுத்தி வைத்திருக்கின்றப்பட்டுள்ளார்.

இன்னமும் சிலரோ குடும்பத் துணையைப் பிரிந்து வாழ்ந்து வருகின்ற படியால், நான் மன ஆறுதலிற்காக இந்தியா சென்றேன், ஐரோப்பாவிலுள்ள நண்பர்களைப் பார்க்கச் சென்றேன் என்று வாலி பட அஜித் பாணியில் இரண்டு மனநிலைகொண்டு கியூபாவை நாடிச் செல்கின்றனர்.

- See more at: http://www.canadamirror.com/canada/74692.html#sthash.NZ6zZPQd.qB0EqUZu.dpuf

Categories: merge-rss

பிரான்சில் ஈழத் தமிழர் மீது வாள் வெட்டு தாக்குதல்..!

Mon, 21/11/2016 - 21:52

 

பிரான்சில் ஈழத் தமிழர் மீது வாள் வெட்டு தாக்குதல்..!

அண்மைய நாட்களாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாள் வெட்டு சம்பவங்கள் தலை தூக்கியுள்ளது.

இதன் காரணமாக தமிழ் மக்கள் ஒருவித அச்சு உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ் மக்களை அச்சுறுத்திய இந்த வாள் வெட்டு கலாச்சாரமானது தற்போது புலம் பெயர் தேசங்களில் தமிழ் மக்களுக்காக செயற்படுவர்கள் மீதும் மேற்கொள்ளப்படுகின்றது.

அந்த வகையில், பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர் ஜெயகுமார் மீது சற்று முன்னர் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவீரர்நாள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கிக்கொண்டிருந்த போதே இனம் தெரியாத சிலர் குறித்த செயற்பாட்டாளர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாள் வெட்டில் காயமடைந்த செயற்பாட்டாளர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

http://www.tamilwin.com/diaspora/01/125432

Categories: merge-rss

எவ்வித பணியும் வழங்காது சம்பளம் வழங்கியதாக அமெரிக்க பல்கலைக்கழகம் மீது இலங்கையர் வழக்கு

Mon, 21/11/2016 - 14:54
எவ்வித பணியும் வழங்காது சம்பளம் வழங்கியதாக அமெரிக்க பல்கலைக்கழகம் மீது இலங்கையர் வழக்கு

gentleman
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எவ்வித பணியையும் தமக்கு வழங்காது சம்பளத்தை வழங்கியதாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் மீது இலங்கையர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள சிட்டி பல்கலைக்கழகத்திற்கு எதிராக இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட 72 வயதான    ஹரேந்திர ஹெரால்ட் சிறிசேன என்ற நபரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 1995ம் ஆண்டில் தாம் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டதாகவும் அந்தக் காலப்பகுதியில் சிறந்த முறையில் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், 2003ம் ஆண்டின் பின்னர் திடீரென இளையவர் ஒருவரை பணிக்கு அமர்த்தி தம்மை ஓரம் கட்டியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். வருடத்திற்கு 30 நாட்கள் மட்டுமே சிறு வேலைகள் வழங்கப்பட்டதாகவும் ஏனைய 171 நாட்கள் தாம் வெறுமனே பணி எதுவமின்றி காலத்தை கழித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிசேன கொலம்பிய பல்கலைக்கழகத்தின் முதுமாணி பட்டம்பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 13 ஆண்டுகளில் 96000 அமெரிக்க டொலர்களை அவர் சம்பளமாக பெற்றுக்கொண்டுள்ளார். எனினும் எவ்வித பணியையும் ஆற்றாது அவர் இவ்வாறு சம்பளம் பெற்றுக்கொண்டுள்ளார். பாடல்களை கேட்பது, கிரிக்கட் மற்றும் உதை பந்தாட்ட போட்டிகளை ரசிப்பது, பல்கலைக்கழகத்தின் அருகாமையில் அமைந்துள்ள பூங்காவின் பறவைகளுக்கு உணவு ஊட்டுவது என தாம் காலத்தை கழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசமந்த போக்கு உதாசீனத்தன்மையினால் தமக்கு பெரும் மன உலைச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமக்கு உரிய பணி வழங்கப்படவில்லை என பல தடவைகள் முறைப்பாடு செய்தும் அந்த முறைப்பாடுகளுக்கு எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இன ஒடுக்குமுறைக்கு உட்பட்டதாகவும் வயது உதாசீனம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/archives/7735

Categories: merge-rss

வெளிநாடுகளில் வசிப்பவர்களா நீங்கள்? உங்கள் வாழ்வில் எதையெல்லாம் இழந்திருக்கின்றீர்கள் என்று சிந்தித்ததுண்டா?

Sat, 19/11/2016 - 00:40
இலங்கைவாழ் மக்கள் பல காரணங்களுக்காக சொந்த மண்ணை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். இவ்வாறு செல்வதால் அவர்கள் வாழ்வில் எவற்றை எல்லாம் இழக்கின்றார்கள் என்று யாரேனும் சிந்தித்து பார்த்ததுண்டா?

வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உள்நாட்டு யுத்தம், கல்வி, திருமணம், உத்தியோகம் மற்றும் பொருளாதாரத்தை தேடிக்கொள்ளவது போன்ற பல விடயங்களை முன்வைக்கலாம்.

இதில் சிலர் விருப்பத்துடன் செல்கின்றனர், பலர் ஒருமனதுடன் செல்கின்றனர். இதில் முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. மன விருப்பத்துடன் செல்பவர்கள் கூட காலப்போக்கில் சொந்த மண்ணை நினைத்தும், சொந்தங்களை நினைத்தும் ஏங்குவது உண்டு.

ஒவ்வொரு நபரும் வெளிநாடுகளுக்கு சென்ற சந்தர்ப்பங்களையும், அவர்கள் இழந்த விடயங்களையும் சற்று மீட்டுப்பார்ப்போம்.

 

உள்நாட்டு யுத்தம்...

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. இதில் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தமது உயிரை காப்பாற்றுவதற்கும், தங்கள் சந்ததியினரின் உயிரை காப்பாற்றுவதற்கும் கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

இவ்வாறு சென்றவர்கள் தற்போது சுகபோக வாழ்க்கையை அனுபவித்தாலும் இழந்தவை ஏராளம்.

சொந்தங்கள், வாழ்ந்த இடம், பூர்வீக சொத்துக்கள், மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் அனைத்தையும் இவர்கள் தவறவிட்டுள்ளார்கள்.

 

கல்வி...

625.0.560.320.160.600.053.800.668.160.90.png

கல்விக்காக சிறுவயதிலேயே பிரிந்து செல்லும் இளம் சமூகத்தினர் பெற்றோரின் அரவணைப்பை இழக்கின்றார்கள்.

எதிர்காலத்தில் நல்லநிலையில் இருக்க நினைப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதற்காக இவர்கள் இழப்பது தாய், தந்தை, சகோதரம், உறவினர்களின் பாசம்.

ஆனால் ஒன்று கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் சிலவேளை நாடு திரும்பி விடுவார்கள்.

குறிப்பிட்ட சிலர் வெளிநாடுகளிலேயே வேலைகளைத் தேடி சொந்த நாட்டிற்கு விருந்தினர்களைப் போல் வந்து செல்வார்கள் என்றால் மிகையாகாது.

 

திருமணம்...

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

தற்போதைய காலக்கட்டத்தில் இலங்கைப் பெண்கள் வெளிநாடுகளில் இருப்பவர்களை மணந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றது. இதில் சில ஆண்களும் வெளிநாடுகளில் இருக்கும் பெண்களை மணக்கும் சந்தர்ப்பத்தையும் காணக்கூடியதாக இருக்கின்றது. காரணம் அவர்களை மணந்தால் அந்த நாடுகளுக்குசென்று வாழலாம் என்ற ஒரு ஆசை என்றே கூறவேண்டும்.

பிள்ளைகள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சில பெற்றோரும், தாங்கள் எதிர்காலத்தில் சிறந்த இடத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக பிள்ளைகளும் இந்த வெளிநாட்டு வாழ்வை விரும்புகின்றனர்.

ஆனால்.... இவர்கள் மணமுடித்து சென்றபோது கிடைக்கும் சந்தோசங்களும், துக்கங்களும் ஒன்றுக்கொன்று சமனாகவே இருக்கும்.

குடும்ப உறவுகளைக்காண தவம் கிடக்க வேண்டும். தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறிச்சென்றாலும், முகம் பார்த்து கதைக்கும் அளவிற்கு வந்தாலும், நேரில் பார்த்து கதைப்பதைப் போல் இருக்காது.

பெற்ற தாயின் மடியில் தலைவைத்து உறங்கும் சுகத்தை தராது. பிள்ளைகளுக்கு வாரிசுகள் உருவாகும் போது கட்டி அணைக்கும் சந்தோசத்தினை இவர்கள் இழக்கின்றார்கள்.

எல்லா சந்தோசங்களுக்கும் மத்தியில் வாழ்ந்து விட்டு இவற்றை விட்டுப் பிரிந்து செல்வதென்பது ஆரம்பத்தில் சுகமாக இருந்தாலும் காலம் போக போக ஒரு ஏக்கம் தோன்றத்தான் செய்கின்றது.

 

உத்தியோகம்...

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

நல்ல ஒரு உத்தியோகத்திற்காக செல்பவர்களும் ஒரு வகையில் அங்கேயே வாழ்ந்து வருபவர்கள் என்றுதான் கூற வேண்டும்.

இவர்களுக்கு விடுமுறை கிடைத்தால்தான் வரலாம், அதிலும் முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்க கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்!

 

பொருளாதாரம்...

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

பொருளாதார முன்னேற்றத்திற்காக வெளிநாடுகளுக்கு சென்று உழைப்பவர்கள் அனைவரையும் விட துன்பத்தில் இருப்பார்கள் என்பது அனுபவப்பட்டவர்களிடம் கேட்டால் உங்களுக்கே புரிந்து விடும்.

ஆம் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல வேண்டம் என்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று இளைஞர் யுவதிகள் படும் துயரங்கள் எண்ணிலடங்காதவை,

தங்குமிடம், சம்பளம், பாதுகாப்பு போன்றவை பெரும் அச்சநிலையில் காணப்படுகின்றது.

பெற்றோரையும், உறவுகளையும், மனைவி பிள்ளைகளையும் பிரிந்து பெரும் கஷ்டப்பட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெளிநாடு செல்கின்றார்கள்.

இலங்கையை எடுத்துக்கொண்டால் மலையகத்தில் பொருளாதார மேம்பாட்டிற்காக குடும்பத் தலைவிகள் பிள்ளைகளை பிரிந்து செல்கின்றனர்.

இதனால் குடும்பத்திலுள்ள சிறு சிறு சந்தோஷங்களை இழக்கின்றார்கள். ஆனால் இவர்கள் திரும்பி வரும் செய்தியைக் கேட்டால் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தூர ஓடிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/125059?ref=home

Categories: merge-rss

யாழ் சோழியன் அண்ணாவும் நாங்களும்..

Wed, 16/11/2016 - 13:57
 

வுடனான எமது அனுபவங்களையும் நினைவுகளையும் பதிந்து வைப்பொம் உறவுகளே...

 

யாழ் ஒரு குடும்பம் என்ற நாங்கள் சொல்வோம்

 

சோழியன் அண்ணாவின் இழப்பு என்பது எமது யாழ் குடும்பத்தின்

அதன் உண்மையான அர்த்தத்தை

பாசத்தை சொல்கிறது

நேற்றிலிருந்து எதுவுமே ஓடவில்லை

ஒவ்வொரு செக்கனும் அவரது நினைவுகள் வந்து மோதுகின்றன

கண்ணால் காணாது உறவு

ஆனால் அவரை மறக்கமுடியவில்லை.

என்னுடன் அவரது தொடர்புகளையும்

எழுத்துக்களையும் இங்கு பதிகின்றோம்

முடிந்தவரை எல்லோரும் பதியுங்கள்.

அவரது நினைவுப்பதிவாக காலம் காலமாக இங்கு இருக்கட்டும்.

 

 

Categories: merge-rss

"இலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை"

Sat, 12/11/2016 - 05:27
"இலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை"

 

சுவிஸ் அரசாங்கம்  இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அந்நாட்டின்  சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார்.

received_1808051736136896.jpeg

சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தர்சிகா கிருஸ்ணானந்தம் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இச் சந்திப்பு குறித்து அவர் மேலும்  கூறுகையில், 

சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதியின் அழைப்பின் பெயரில், சுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நான் இச்சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.

received_1808051869470216.jpeg

இதன்போது எமது மக்களின் பிரச்சினைகளை தெளிவாக அவர்களுக்கு எடுத்துத்துரைத்தேன்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகா, புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் மிக முக்கிய ஒப்பத்தத்தில் இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திட்டிருந்தார். குறித்த ஒப்பந்தம் தொடர்பில் அவர்களிடம் பேசினேன்.

இதனால் எவ்வித பாதிப்பும் சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளுக்கு ஏற்படாதென  தெரிவித்தனர்.

குறித்த ஒப்பந்தம் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இருப்பதாகவும்  இவ்வாறான ஒப்பந்தங்கள் ஏனைய நாடுகளுடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட நாட்டை கண்காணிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஏறத்தாழ இங்கு 50 ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள், இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன, காணாமல் போகிறார்கள், காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடைபெறவில்லை, பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என கேட்டபோது,

சுவிற்ஸர்லாந்தில் தற்போது அகதி தஞ்சமடைந்திருக்கும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்வதாகவும் அவர்கள் தஞ்சம் கோரும் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களின்  அகதி தஞ்சம் கிடைக்கும்.

இதேவேளை இலங்கை தொடர்பில் அனைத்தும் தெரிந்தவரே அவர்களை விசாரணை செய்வார். இதனால் அவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு அகதி தஞ்சம் கிடைக்கும் என தெரிவித்தனர்.

நான் இங்கு இருக்கும் உறவுகளுக்கு தெரிவிக்க விரும்புவது,

நான் ஒரு சுவிஸ் அரசியல்வாதி. நீங்கள் தெரிவிக்கும் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்களது வழக்குகளை விசாரித்து நடத்த முடியாது.

ஆகவே நீங்கள் சிறந்த சட்டத்தரணி மூலம் உரிய ஆதாரங்களை திரட்டி  இதனை மேற்கொள்ளுங்கள்.

சட்டத்தரணிகள் தொடர்பில் உதவி தேவைப்பட்டால் என்னுடன் தொடர்பு கொண்டால் உதவி செய்ய முடியும்.

இன்று என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூவரும்  சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவுடன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவர்களாவர்.

எனினும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து உறுதியாக தெரிவிக்கவில்லை.

உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவுடன் சந்தித்து கலந்துரையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தி தருவதாக அவர்கள் தெரிவித்தாக தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/13415

Categories: merge-rss

கிலாரியின் தோல்வி உங்கள் நிலைப்பாடு என்ன..?!

Thu, 10/11/2016 - 22:51

கிலாரி தோற்கனுன்னு தான் நாங்கள் விரும்பினம்.

காரணம் கிளிங்டன் தான் எமது விடுதலைப் போராட்ட சக்திக்கு பயங்கரவாத முலாம் குத்தி.. தடை போட்டவர்.

அம்மையார் கிலாரி முக்கிய பொறுப்பில் இருந்த போது தான் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தேறியது. தடுக்க வக்கற்று இருந்தவர்.

எங்கள் விடயத்திலேயே தோல்வி கண்டவர்கள்.. சர்வதேச நகர்வுகளிலும் ( பெரிய வெள்ளி உடன்படிக்கை தவிர).. பெரிதாகச் சாதித்ததாக இல்லை. பிரச்சனைகளின் வடிவங்களை மாற்றி கூட்டினது தான் மிச்சம்.

ஒபாமாவும்.. வெற்றுக்கு ஒன்றும் புடுங்கல்ல. உலக யுத்தங்கள் கண்டிராத அளவுக்கு மத்திய கிழக்கை சீரழிச்சு அகதிகளைப் பெருக்கி.. ஈழப் படுகொலையில் தடுக்க வக்கற்று நின்றவர் தான் ஒபாமா.

பார்ப்போம்.. ரம்பின் அணுகுமுறை எப்படி இருக்கென்பது. ஆனாலும் ரம்பும் நம்பக் கூடிய மனிதரல்ல. ஏனெனில்.. அவர் அரசியல்வாதி இல்லாவிடிலும்.. ஒரு பெரிய வியாபாரி. :rolleyes:

Categories: merge-rss

பொக்கற் மணி வேணும்

Wed, 09/11/2016 - 19:39

நான் கொஞ்ச நாட்கள் வேலை இல்லாமல் இருக்கிறன். வேலை தேடவும் மனம் இல்லை. மனிசன் எனக்குக் காசு தாறார் இல்லை. கடைக்குப் போய் சாமான்கள் வாங்குவதும் அவர் தான். சேவிங் எக்கவுண்ட் என் பேர்ல இருந்தாலும் காட் அந்தாளிட்டைத்தான். காசைக் கரியாக்காதை என்று அட்வைஸ் வேற. நான் சொல்லிவிடுற பொருட்கள் எல்லாம் வாங்கிவந்து தாறார் தான். அந்தாளோட கடைக்குப் போனாலும் தேவையில்லாமல் உதை ஏன் எடுக்கிறாய் என்றால் எரிச்சல் வருமோ வராதோ???  நானே கடைக்குப் போய் கூடக் குறைய இரண்டு சாமான்களை வாங்குவதிலுள்ள சந்தோசம் இவரோட போய் வாங்கிறதில வராதுதானே. நீ போய் வேலை செய்து அவ்வளவத்தையும் செலவழி  நான் கேட்கேல்லை எண்டிறார்.  அந்தாளிட்டைக் கதைச்சுக் களைச்சுப்போய் இப்ப எனக்கு ஒவ்வொரு கிழமையும் பொக்கற் மணி தரவேணும் எண்டு போராட்டத்தில இறங்கியிருக்கிறன். நான் கேக்கிறது சரிதானே???

 

 

Categories: merge-rss

பிரித்தானிய பிரதமர் இந்திய விசயத்தில் ஈழத்தமிழர் வியாபார முன்னெடுப்பு ஒப்பந்தமும் உறுதி படுத்தப் படுகிறது.

Mon, 07/11/2016 - 10:43

பிரித்தானிய பிரதமர் இந்திய விசயத்தில் ஈழத்தமிழர் வியாபார முன்னெடுப்பு ஒப்பந்தமும் உறுதி படுத்தப் படுகிறது.

நேற்று இரவு, 20 வருடங்களுக்குப் பின்னரான கடும் பனிப்புகாரினூடு டெல்லி வந்திறங்கிய பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, மூன்று அமைச்சர்கள், 33 பெரு வியாபார நிறுவன குழுவுடன் பயணிக்கிறார்.

இவர்களது பயணத்தின் போது கை சாத்திடும் முக்கிய வர்த்தக உடன்படிக்கைகளில் ஒன்று... 

லைக்கா சுகாதார நிறுவனத்தின், சென்னையில், £15 மில்லியன் முதலீட்டில் ஸ்கேனிங் டைகோனோஸ்ட்டிக் சென்டர் 
 

Mrs May will be accompanied on the three-day trip by International Trade Secretary Liam Fox and trade minister Greg Hands as well as representatives from 33 UK companies.

Deals expected to be confirmed during the trip include:

  • A £1.2m joint venture between the Pandrol Group UK and Rahee Group in India to set up a manufacturing plant for rail projects
  • A £15m imaging and diagnostic centre in Chennai by Lyca Health UK
  • A £350m investment from UK start-up Kloudpad in high-tech electronics manufacturing in Kochi.

 

source: bbcnews.com

Categories: merge-rss

பிரான்சில் படுகொலை முயற்சி இலங்கைத் தமிழர் மூவர் கைது

Mon, 07/11/2016 - 06:01
பிரான்சில் படுகொலை முயற்சி இலங்கைத் தமிழர் மூவர் கைது
 
 
பிரான்சில் படுகொலை முயற்சி இலங்கைத் தமிழர் மூவர் கைது
பிரான்சில் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்கள் மூவரை அந்நாட்டு பொலிஸார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி லாச்சப்பல் என்ற பகுதிக்கு அருகிலிருந்து 18 வயதான இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டார்.
 
தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நூறு நாட்களுக்கு மேல் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த படுகொலை முயற்சியின் விசாரணைகள் பாரிஸ் இரண்டாவது பிரிவின் சட்டவியல் பொலிஸாரினால் மிகவும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில், அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் இலங்கை தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.
 
இது குறித்து பிரான்ஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்நாட்டு பொலிஸார், இந்த தாக்குதல் சம்பவம் தமிழ் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற பழிவாங்கல் மோதல் என  அறிவித்துள்ளனர்.
 
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சம்பவதினம் அங்கு இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஒருவர் தொட ர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருவதாக அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

http://www.onlineuthayan.com/news/19826

Categories: merge-rss

கனடாவின் தேசத்து மைந்தர்கள் நாம்!!!

Mon, 07/11/2016 - 03:31

 

கனடாவின் தேசத்து மைந்தர்கள் நாம்!!!

www.cbc.ca/1.3836796

Categories: merge-rss

காலங்கள் தான் ஓடியிருக்கு

Sat, 05/11/2016 - 12:10

ஒரு காலத்தில் என் சின்ன மைத்துணரை பாட்டுப்படிக்கச்சொன்னால் அவர் படிக்கும் பாட்டு இது

https://www.youtube.com/watch?v=5xfeQ6H3HA8

இப்ப என்ர சின்ன பொடி இதை படிச்சுக்கொண்டு திரியுது

https://www.youtube.com/watch?v=AWG0YP7-HwY

காலங்கள் தான் ஓடியிருக்கு
கலரை மாத்தமுடிஞ்சுது
குணத்தை....???

Categories: merge-rss

கானா நாட்டின் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான உயர் விருது இரு ஈழத் தமிழர்களுக்கு!

Thu, 03/11/2016 - 11:37

கானா நாட்டின் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான உயர் விருது இரு ஈழத் தமிழர்களுக்கு!

மேற்கு ஆபிரிக்க நாடான கானா நாட்டில் இரண்டு ஈழத் தமிழர்களுக்கு அதியுயர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேசராசா சதீசன் மற்றும் கரணவாய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குகதாசன் ஆகிய இருவரும் இணைத்து 2000 ஆம் ஆண்டுமுதல் கானா நாட்டில் விவசாய மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அண்மையில், ஏற்றுமதி மூலம் கானா நாட்டிற்கு அன்னியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கின்ற முன்னணித் தொழிலதிபர்களாக இவர்கள் இருவரும் திகழ்து வருகின்றனர்

இந்நிலையில், கடந்த வருடம் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற இருவரும் இவ்வருடம் கானா நாட்டுத் தொழிலதிபர்களைப் பின்தள்ளி முன்னிலை வகிக்கின்றனர்.

இதனால், கானா நாட்டில் வருந்தோறும் வழங்கப்படுகின்ற சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான ஜனாதிபதி விருதும் தங்கப் பதக்கமும் இவர்களுக்கு கிடைத்துள்ளது.

இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த தொழிலதிபர்களில் ஒருவரான கணேசராசா சதீசன், சிறந்த திட்டமிடலுடன், மனந்தளராத முயற்சியுடன் கூடிய கடின உழைப்பினாலேயே முகவரி அறியாத நாட்டில் கால்பதித்த தமக்கு உயர் விருதினைப் பெற்றுத் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=46918

Categories: merge-rss

குளிர் கால நேர மாற்றம்.

Fri, 28/10/2016 - 23:04

A clock showing the change from summertime to wintertime. All isolated on white background. Stock Photo - 7143172

இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை (30 .10.02016 ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும்.

இம்முறை தீபாவளியை ஒரு மணி நேரம் அதிகமாகக் கொண்டாடலாம்.

 

கனடாவில் 6.11.2016 என உள்ளது.

6. Nov
Back 1 hour

 
Categories: merge-rss

சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர்

Fri, 28/10/2016 - 06:40
சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர்
 
 
சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர்
சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
 
இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
 
சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம்  முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
 
வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://onlineuthayan.com/news/19464

http://www.blick.ch/news/schweiz/mittelland/taeter-auf-der-flucht-mann-am-bahnhof-solothurn-erschossen-id5658079.html

Categories: merge-rss

நானும் என் கொன்சேவேற்றியும்

Mon, 24/10/2016 - 12:42

எனக்கு உந்தப் பூங்கன்றுகளில விருப்பம் எண்டு உங்களுக்குத் தெரிஞ்சது தானே. வீட்டோட சேர்த்து பூக்கண்டுகளுக்கு ஒரு  கொன்சேவேற்றி கட்டவேணும் எண்ட என் நீண்டநாள் கனவு இந்த ஆண்டுதான் நிறைவேறினது. குளிர் தொடங்கினாலும் அதுக்குள்ளே வச்ச கண்டுகள் எல்லாம் இப்பவும் பூத்துக் குலுங்குறதை காலையில் எழுந்து போய்ப் பார்த்து சந்தோசப்பட்டுகொண்டு இருந்த எனக்கு வெள்ளிக்கிழமை வந்த கவுன்சில் கடிதம் இடியை இறக்கிச்சுது.

என்ன பிரச்சனை எண்டா, இங்க மேலதிகமாக கட்டடம் கட்ட வேணும் எண்டால் கவுன்சிலில அனுமதி எடுத்து பிளானிங் பெமிசன் எடுத்து வரைபடம் வரஞ்சு கொடுத்து அதுக்குப் பிறகுதான் கட்டலாம். எங்கடைஆட்கள் பற்றித் தெரியும் தானே. £450-500 எடுக்கிறவை ப்ளான் கீற. கட்டினபிறகும் கவுன்சிலில இருந்து ஒரு பொறியியலாளர் வந்து எல்லாம் சரி என்று கூறி ஒரு கடிதம் தருவார். அதன்பின் தான் நின்மதி. இது முன்பு. 

இப்ப புதிய சட்டம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. அது  2019 வரை இந்த அனுமதிகள் ஒன்றும் தேவை இல்லை. ஆனால் கவுன்சிலில் £80 மட்டும் செலுத்தி வரைபடமும் கொடுக்க வேண்டும். அத்தோடு சரி. நான் போனபோது ஒரு நல்ல ஒருவர் இருந்ததனால் உன்னால் முடிந்தால் நீயே கீறிக்கொண்டு வரலாம் எண்டு சொன்னதில £500 மிச்சம் எண்டு நானே படம் கீறிக்கொடுத்துவிட்டு வேலை தொடங்கியாச்சு. 

ஒரு ஐந்து நிறுவனங்களைக் கூப்பிட்டுக் காட்டி மலிவான விலை சொன்ன ஒருவரைத் தெரிவு செய்தாச்சு.

முதல்ல நான் கவுன்சிளுக்குக் கீறிக் குடுத்தது  கீழே உள்ள படத்தில உள்ளது போல.  

Image result for lean to conservatories

 

நான் தெரிவு செய்த ஆள் கொஞ்சப் படங்களைக் கொண்டுவந்து காட்டினார். அதில் விக்டோரியன் ஸ்டைல் கூரை எண்டு உயரமாய் அழகாய் இருக்க நானும் ஆசையாப் பாத்தன் அதை. அக்கா இது ஒரு £1000 தான் கூட என்று அவரும் ஆசைகாட்ட அப்படியே செய் எண்டு விட்டாச்சு. அப்பவும் என் கணவர் "ஒரு பிளானைக் குடுத்துப்போட்டு இன்னொரு பிளானிலை கட்டாதை. பிறகு வீண் பிரச்சனை" எண்டார் தான். ஆசை ஆரைத்தான் விட்டுது. கீழே உள்ளதுபோலக் கூரையுடன் கட்டி முடிச்சாச்சு.

Image result for conservatories for bungalows

 

இண்டைக்குக் கவுன்சில்காறன் வந்து பாத்திட்டு 30 cm உயர்ந்துபோச்சு. நான் போய் நீ குடுத்த பிளானைப் பார்த்துவிட்டு உனக்குக் கடிதம் போடுறன் எண்டான். பின் வீடுகளிலை எல்லாம் என் வீட்டதிலும் பெரிதாகக் கட்டியிருக்கே என்று சொன்னேன். அவர்கள் கட்டினால் நீயும் கட்டுவாயா என்று கோபமாகக் கூறிவிட்டுப் போய்விட்டான். என்னத்தை எழுதப்போறானோ எண்ட பயம் ஒருபக்கம், என்ர மனிசன் இனி ஒவ்வொருநாளும் உதுபற்றிக் கதைச்சு வெறுப்பேத்தப் போறார் எண்டதை நினைக்கத்தான் என்ன செய்யிறது எண்டு ஒண்டுமா விளங்கேல்ல.

ஆராவது இதுபற்றித் தெரிந்தால் நான் தப்பிப் பிழைக்க வழி சொல்லுங்கோ உறவுகளே.

 

 

Categories: merge-rss

ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா அரசு

Mon, 24/10/2016 - 03:49

 தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா அரசு

 

 

Categories: merge-rss

லண்டன் கூட்டத்தில் உரையாற்றும் முதல்வர்

Sat, 22/10/2016 - 06:56
லண்டன் கூட்டத்தில் உரையாற்றும் முதல்வர்
cv4-cff5b474f2fa202ca3e1daf7de1cbe3a2e862e94.jpg

 

(நமது நிருபர்)

லண்­டனுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை ரெய்னர்ஸ் லேனில் ஏற்­பா­டாகி உள்ள மாபெரும் பொதுக்­கூட்­டத்தில் உரை­யாற்ற இருக்­கிறார்.

'இரட்டை நகர்' உடன்­ப­டிக்கை கடந்த செய்­வாய்க்­கி­ழமை கைச்­சாத்­தான பின்னர் பல்­வேறு சந்­திப்­புக்­களில் ஈடு­பட்­டு­வரும் முத­ல­மைச்சர் தாயகம் திரும்­பு­வ­தற்கு முன்னர் பிரித்­தா­னியா வாழ் தமிழ் மக்­களை சந்­தித்து பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஆர்­வ­மாக இருப்­பதால் இந்த கூட்டம் ஒழுங்­கு­செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த கூட்டம் 440 Alexandra Ave, Harrow HA2 9TL என்ற முக­வ­ரியில் உள்ள Zoroastrian Centre  இல் நடை­பெற ஏற்­பா­டாகி உள்­ளது. நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடை­பெற இருக்கும் இந்த கூட்­டத்­துக்­கான அனு­மதி இல­வசம் என்றும் பிரித்­தா­னியா வாழ் தமிழ் மக்­களை கலந்­து­கொள்­ளு­மாறு விழா ஏற்­பாட்­டுக்­குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. 

பல கலை நிகழ்ச்­சி­களும் இந்த கூட்­டத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. கிங்ஸ்ரன் மற்றும் யாழ்­பாணம் ஆகிய நக­ரங்கள் இடையே 'இரட்டை நகர்' உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டு­வ­தற்­கா­கவே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-22#page-1

Categories: merge-rss