விளையாட்டுத் திடல்

சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17 வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ்.மத்திய கல்லூரி.

Wed, 05/10/2016 - 23:59
சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17 வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ்.மத்திய கல்லூரி. 
 

received_1758044017556520

 

சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17 வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ்.மத்திய கல்லூரி. 

மதுசனின் அதிரடியான அரைச்சதமும் அபாரமான பந்துவீச்சும் கைகொடுக்க சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17 வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ்.மத்திய கல்லூரி.

யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுப் பிரிவினருக்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் நேற்று புதன்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இவ் இறுதியாட்டத்தில் யாழ்.மத்திய கல்லூரியை எதிர்த்து சென்.பற்றிக்ஸ் கல்லூரி மோதியது.  நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்.மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

இவ்வணி ஆரம்பத்தில் 40 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய வேளையில் ஜோடி சேர்ந்த மதுசன்- விதுசன் ஆகியோர் தமது பொறுமையான ஆட்டத்தின் மூலம் 108 ஓட்டங்களை இணைப்பாட்டங்களாக பெற்றுக் கொடுக்க மத்திய கல்லூரி 40.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் மதுசன் 62 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 72, நிதர்சன் 34, தேனுஜன் 26, ஜெயதர்சன் 14 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

received_1758044020889853

பந்துவீச்சில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி சார்பில்  றதீசன், அனோஜன் தலா 3, பற்றிக், அன்ரோ தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாது 33.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவியது.

இவ்வணி சார்பில் பற்றிக் 29, ராஜபோல் 13,  டில்சான் 10 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மத்திய கல்லூரி சார்பில் மதுசன் 7 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களை கொடுத்து 3, குகசதுஸ் 8

ஓவர்கள் பந்துவீசி 13 ஓட்டங்களைக் கொடுத்து 3, அனஸ்ராஜ், நிதுசன் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாகவும் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் மதுசன், சிறந்த பந்துவீச்சாளராக குகசதுஸ்,

சிறந்த களத்தடுப்பாளராக ஐவன் றொசாந்தன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

http://vilaiyattu.com/19016-2/

Categories: merge-rss

ஜாவித் மியன்டாட்டின் 19 ஆண்டுகால சாதனை முறியடித்த 21 வயதான பாபர் அசாம்.தொடர்ச்சியான 3 சதம் விளாசினார்.

Wed, 05/10/2016 - 23:58
ஜாவித் மியன்டாட்டின் 19 ஆண்டுகால சாதனை முறியடித்த 21 வயதான பாபர் அசாம்.தொடர்ச்சியான 3 சதம் விளாசினார். 
 

received_10210620093928081

ஜாவித் மியன்டாட்டின் 19 ஆண்டுகால சாதனை முறியடித்த 21 வயதான பாபர் அசாம்.தொடர்ச்சியான 3 சதம் விளாசினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் 21 வயதான இளம் துடுப்பாட்ட வீரரான பாபர் அசாம் மகத்தான சாதனையொன்றை இன்று படைத்துள்ளார்.

பாகிஸ்தான் அணி சார்பில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பெறப்பட்ட அதிகப்படியான ஓட்டங்கள் எனும் சாதனையை 19 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் மியண்டாட் தன்வசம் வைத்திருந்தார்.

1987 ம் ஆண்டு இங்கிலாந்துக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில், மியண்டாட் 262 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டமையே இதுவரையான பாகிஸ்தான் தரப்பு சாதனையாகும், இந்த 19 ஆண்டுகால சாதனையை இன்று பாபர் அசாம் முறியடித்தார்.

அத்தோடு 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளிலும் சதம் கடந்த வீரர் எனும் சாதனையையும் தனதாக்கினார்.பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆரம்ப வீரர் சயிட் அன்வர் தொடர்ச்சியான 3 போட்டிகளில் 3 சதம் எனும் சாதனையை இருதடவை நிலைநாட்டினார்.

இந்த சாதனைப் பட்டியலிலும் பாபர் அசாம் இன்று 3 வது வீரராக தன் பெயரிப் பதித்துக் கொண்டார்.

அத்தோடு அடுத்துவரும் 2 போட்டிகளில் 114 ஓட்டங்கள் பெறுவாராயின் , ஒருநாள் போட்டிகளில் வேகமாக 1000 ஓட்டங்கள் பெற்றுக்கொண்ட வீரர் எனும் உலக சாதனை படைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ், இங்கிலாந்தின் கெவின் பிட்டர்சன், ஜோனாதன் ட்ரொட்,தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி கொக் ஆகியோர் 21 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்கள் பெற்றுள்ள நிலையில், இதுவரை பாபர் அசாம் 18 இன்னிங்ஸ்களில் 886 ஓட்டங்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://vilaiyattu.com/ஜாவித்-மியன்டாட்டின்-19-ஆண/

Categories: merge-rss

பிரீமியர் லீக் 2016/2017 ஏழாவது வார போட்டி முடிவுகள்

Wed, 05/10/2016 - 23:57
பிரீமியர் லீக் 2016/2017 ஏழாவது வார போட்டி முடிவுகள் 
 

 

 

Football Soccer - Real Madrid v Manchester City - UEFA Champions League Semi Final Second Leg - Estadio Santiago Bernabeu, Madrid, Spain - 4/5/16Gareth Bale celebrates scoring the first goal for Real MadridAction Images via Reuters / Carl RecineLivepicEDITORIAL USE ONLY.   TPX IMAGES OF THE DAY

பிரீமியர் லீக் 2016/2017 ஏழாவது வார போட்டி முடிவுகள்

#Everton 1-1 Crystal Palace

எவெர்ட்டன் கிரிஸ்டல் பலஸ் அணிகள் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிவடைந்துள்ளது. எவெர்ட்டன் சார்பாக லுகாகு 1 கோலும் கிரிஸ்டல் பல்ஸ் சார்பாக பெண்டேகே 1 கோலும் பெற்றனர்.

#Swancea City 1-2 Liverpool

ஸ்வான்சி சிட்டி அணிக்கெதிராக லிவர்பூல் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே லெரோய் பெர் இன் கோலுடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்வான்சி முதல் பாதியில் முன்னிலை பெற்றாலும் இரண்டாம் பாதியில் லிவர்பூல் சார்பாக பிர்மினோ 1 கோலும் இறுதி நேரத்தில் மில்னர் பெனால்டி வாய்ப்பில் ஒரு கோலும் அடித்து லிவர்பூல் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

#Hull City 0-2 Chelsea

ஹல் சிட்டி செல்சி அணிகள் மோதிய சுவாரஸ்யமான போட்டியில் செல்சி அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் இரண்டாம் பாதியில் வில்லியன் மற்றும் கோஸ்டா அடுத்தடுத்து கோலடிக்க 2-0 என செல்சி அணி வெற்றி பெற்றுள்ளது. கோஸ்டா இந்த சீசனில் மொத்தம் 6 கோல்கள் அடித்து செல்சி அணிக்கு பக்க பலமாக உள்ளார்.

#Sunderland 1-1 West Bromwich Albion

சண்டர்லாண்ட்  மற்றும் வெஸ்ட் ப்ரோம் அணிகள் மோதிய போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளது. வெஸ்ட் ப்ரோம் சார்பாக சாட்லியும் சண்டர்லாண்ட் சார்பாக ஆன்ஹோல்ட் உம் தலா ஒரு கோல் பெற்றனர்.

#Watford 2-2 Bournemouth

வாட்போர்ட் மற்றும் பெர்னெமௌத் மோதிய போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளது. வடபோர்ட் சார்பாக டீனே, சக்ஸஸ் ஆகியோரும் பெர்னெமௌத் சார்பாக வில்சன், கிங் ஆகியோரும் கோல் அடித்தனர்.

#West Ham United 1-1 Middlesbrough

வெஸ்ட் ஹாம் அணி புது முக அணியான மிட்ட்ல்ஸ்ப்ரோ அணியுடனான போட்டியை சமன் செய்துள்ளது. மிட்ட்ல்ஸ்ப்ரோ சார்பாக ஸ்டுயணி முதல் கோல் அடித்தாலும் பாயெட் உடனடியாக பதில் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

#Manchester United 1-1 Stoke City

மான்செஸ்டர் யுனைடெட் ஸ்டோக் சிட்டி உடனான போட்டியை சமன் செய்து மீண்டும் ஏமாற்றம் அளித்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தும் போட்டியை வெல்ல முடியவில்லை. கோல் அடிப்பதற்கு நிறைய வாய்ப்புக்கள் அமைந்தும் மான்செஸ்டர் யுனைடெட் அணியினாரால் ஒரு கோலை மாத்திரமே பெற முடிந்தது. மார்சியால் மான்செஸ்டர் யுனைடெட் சார்பாக ஒரு கோல் அடித்தார். எனினும் மான்செஸ்டர் யுனைடெட் கோல் காப்பாளரின் சிறு தவறால் ஸ்டோக் அணியின் ஆலன் ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

#Leicester City 0-0 Southampton

சாம்பியன்ஸ் லெஸ்டர் அணி சௌதாம்டன் அணியுடனான போட்டியை சமன் செய்துள்ளது. இரு அணி சார்பிலும் கோல் ஏதும் பெறப்படாத நிலையில் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. இந்த சீசனில் லெஸ்டர் 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 12 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tottenham Hotspur 2-0 Manchester City

டோட்டன்ஹாம் அணிக்கெதிரான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி தோல்வியை தழுவியுள்ளது. மான்செஸ்டர் சிட்டி அணியின் கொளரவ் ஓவ்ன் கோல் அடித்து டோட்டன்ஹாம் அணியை முன்னிலைப்படுத்தினார். டெலோ அல்லி டோட்டன்ஹாம் சார்பாக 2 ஆவது கோல் அடித்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். மான்செஸ்டர் சிட்டி அணி இந்த சீசனில் வெற்றி இல்லாமல் நிறைவு செய்த முதல் போட்டி இதுவாகும்.

#Burnley 0-1 Arsenal

பெர்ன்லி அணிக்கெதிரான போட்டியில் ஆர்சனல் அணி கூடுதல் நேரத்தில் கோல் அடித்து வெற்றி பெற்றுள்ளது. ஆர்சனல் அணியின் கோசிலேனி கூடுதல் நேரத்தின் 3 ஆவது நிமிடத்தில் கோலடித்து அணிக்கு த்ரில் வெற்றி தேடித்தந்தார்

http://vilaiyattu.com/18973-2/

Categories: merge-rss

மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்காலம் குறைப்பு.

Wed, 05/10/2016 - 23:56
மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்காலம் குறைப்பு. 
 

biz55-maria-sharapova

மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்காலம் குறைப்பு.

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த இரணடு வருட கால போட்டித் தடை 15 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருத்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டிற்காக மரியா ஷரபோவாவிற்கு இரணடு வருட கால போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்கு எதிராக மரியா ஷரபோவா மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டை அடுத்து அவரது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமை அவர் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் போட்டிகளில் பங்குப்பற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மரியா ஷரபோவாவிற்கு ப்ரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டிகளிலும் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது

http://vilaiyattu.com/மரியா-ஷரபோவாவிற்கு-விதிக/

Categories: merge-rss

3 வது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டு தொடரை வென்றது பாகிஸ்தான்.

Wed, 05/10/2016 - 23:55
3 வது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டு தொடரை வென்றது பாகிஸ்தான். 
 

 Shoaib Malik of Pakistan celebrates taking the wicket of Kraigg Brathwaite of West Indies during the third One Day International match between Pakistan and West Indies at Zayed Cricket Stadium on October 5, 2016 in Abu Dhabi, United Arab Emirates. (Photo by Tom Dulat/Getty Images)

3 வது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டு தொடரை வென்றது பாகிஸ்தான்.

பாகிஸ்தான்,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 3 வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி அபுதாபியில் நிறைவுக்கு வந்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் 111 ஓட்டங்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2 வது ஒருநாள் போட்டியில் 59 ஓட்டங்களாலும் ,இன்றைய போட்டியில் 136 ஓட்டங்களாலும் வெற்றிப்பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற நிலையில் தொடரை வென்றது.

போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலி முதலில் துடுப்பெடுத்தாட விருப்பம் வெளியிட்டார்.

அதனடிப்படையில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்கள் பெற்றது.இளம் வீரர் பாபர் அசாம் முதல் போட்டியில் 120 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தவர் இரண்டாவது போட்டியில் (123) இன்றும் தொடர்ச்சியாக 3 வது சதம் கடந்து சாதித்தார்.அத்துடன் அணித்தலைவர் அசார் அலியும் தனது 3 வது சதத்தைப் பெற்றுக்கொண்டார்.fb_img_1475693488912

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 309 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.மேற்கிந்திய தீவுகள் அணியால் இன்றைய போட்டியிலும் அவர்களால் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாதுபோனது.

இறுதியில் 44/ஓவர்களுக்கு முகம்கொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை பெற்று 136 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இன்றும் சதம் கடந்த இளம் வீரர் பாபர் அசாம் தேர்வானார்.

ஏற்கனவே நிறைவுக்கு வந்த 3 T20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்று வெற்றிகொண்ட பாகிஸ்தான், இப்போது ஒருநாள் தொடரையும் 3-0 என்ற நிலையில் கைப்பற்றியது.

இங்கிலாந்து அணியுடனான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 4 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய பாகிஸ்தான், அதன்பின்னரான 8 சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய வெற்றி மூலமாக பாகிஸ்தான் அணி தரவரிசையில் 8 வது இடத்திற்கு முன்னேறியது.

fb_img_1475691874378

Pakistan v West Indies - One Day International253089

 Shoaib Malik of Pakistan celebrates taking the wicket of Kraigg Brathwaite of West Indies during the third One Day International match between Pakistan and West Indies at Zayed Cricket Stadium on October 5, 2016 in Abu Dhabi, United Arab Emirates. (Photo by Tom Dulat/Getty Images)

http://vilaiyattu.com/3-வது-ஒருநாள்-போட்டியிலும/

Categories: merge-rss

டேவிட் மில்லரின் அதிரடியில் உலக சாம்பியன்களை நிலைகுலையச் செய்து ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா.

Wed, 05/10/2016 - 23:46
10 ஓவர்களில் 96 ரன்கள் புரட்டி எடுக்கப்பட்ட ஸ்டெய்ன் பந்து வீச்சு: ஆஸி. 371 ரன்கள் குவிப்பு

 

 
 
 
 • ஏ.எப்.பி.
  சதம் எடுத்த ஸ்டீவ் ஸ்மித். | படம்: ஏ.எப்.பி.
 • ஏ.எஃப்.பி.
  சதம் எடுத்த வார்னர் மட்டையை உயர்த்தும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.

டர்பனில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ரன்கள் குவித்துள்ளது.

தொடரில் நிலைபெற ஆஸ்திரேலியாவுக்கு இதில் வெற்றி பெறுவது முக்கியம். இன்று டேல் ஸ்டெய்னை விளாசித் தள்ளினர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள், 10 ஓவர்களில் ஸ்டெய்ன் 96 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்க ஒருநாள் வரலாற்றில் அதிக ரன்கள் விளாசித் தள்ளப்பட்ட பவுலர் என்ற எதிர்மறை சாதனைக்குரியவரானார் டேல் ஸ்டெய்ன்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ரபாதா 10 ஒவர்களில் 86 ரன்கள் விளாசப்பட்டார். தென் ஆப்பிரிக்க பிட்ச்களும் பேட்டிங் சாதக ஆட்டக்களங்களாக மாற்றப்பட்டுள்ளதை ஸ்டெய்னுக்கு இன்று நடந்த சாத்துமுறை பறைசாற்றுகிறது, பாங்கிசோ ரபாதாவுக்கும் நல்ல அடி.

போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்த கேப்டன் ஸ்மித் டாஸ் வென்றவுடன் பேட்டிங் என்றார்.

வார்னர், ஸ்மித் அதிரடி சதங்கள்:

வார்னர் 107 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 117 ரன்களையும் கேப்டன் ஸ்மித் 107 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 108 ரன்களையும் எடுத்தனர். முதல் விக்கெட்டுக்காக வார்னரும், பிஞ்சும் இணைந்து 13 ஓவர்களில் 110 ரன்களை விளாசினர்.

டேவிட் வார்னர் ஒருநாள் போட்டிகளில் 81 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களை எடுத்து மைக்கேல் பெவனுக்கு அடுத்தபடியாக அதிவேக 3000 ஒருநாள் ரன்களை எடுத்த சாதனையை நிகழ்த்தினார்.

ஏரோன் பிஞ்ச் 34 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் அடித்து நொறுக்கினார். இம்ரான் தாஹிர் வந்துதான் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

வார்னரும் பிஞ்சும் இணைந்து டேல் ஸ்டெய்ன், ரபாதாவை பிய்த்து உதற 12-வது ஓவரிலேயே ஸ்கோர் 100ஐ எட்டியது. ஸ்டெய்ன் வீசிய ஆட்டத்தின் 3-வது ஓவரிலேயே வார்னர் அவரை 2பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 17 ரன்களை விளாசினார். 7-வது ஓவரில் ஸ்டெய்னை பிஞ்ச் ஒரு அருமையான பிளிக் சிக்ஸும் ஒரு புல் சிக்சும் அடித்தார். ஸ்டெய்ன் 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக் கொடுத்தார். மொத்தம் டேல் ஸ்டெய்ன் தனது 10 ஓவர்களில் 9 பவுண்டரிகள் 5 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். ஸ்டெய்ன் மோசமாக வீசினார் என்று கூறுவதற்கில்லை, வழக்கம் போல்தான் வீசினார், ஆனால் இன்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் பேசிவைத்து ஸ்டெய்னுக்குப் ‘பூசை’ நடத்தினால்தான் தென் ஆப்பிரிக்காவை ஆதிக்கம் செலுத்த முடியும் என்று முடிவு கட்டி ஆடினர், இதில் ரபாதாவும் சிக்கிச் சின்னாபின்னமானார்.

பிஞ்ச் ஆட்டமிழந்த பிறகு ஸ்மித், வார்னர் ஜோடி 2-வது விக்கெட்டுக்காக சுமார் 21 ஓவர்களில் 124 ரன்களைச் சேர்த்தனர். வார்னரும் இம்ரான் தாஹிரிடம் வீழ்ந்து விட, பெய்லி இறங்கி தன் பங்கிற்கு 18 பந்துகளில் 28 ரன்களை விளாசினார், இவரும் ஸ்மித்தும் இணைந்த் 3-வது விக்கெட்டுக்காக 6 ஓவர்களில் 46 ரன்களை விளாசினர். பெய்லி பெலுக்வாயோ பந்தில் டு பிளெசிஸ் பிடித்த அபார கேட்சிற்கு வெளியேறினார் அதேபோல் மிட்செல் மார்ஷ் 2 ரன்களில் டேவிட் மில்லர் பிடித்த மேலும் அபாரமான கேட்சிற்கு ஸ்டெய்ன் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்மித் 47-வது ஓவரில் ஸ்டெய்னிடம் பவுல்டு ஆனார்.

டிராவிஸ் ஹெட், ஸ்டெய்னின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுமாறு 49வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க வேட் இறங்கி அவர் ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது. டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுக்க மேத்யூ வேட் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். டுமினி மட்டுமே சிக்கனமாக வீசி 6 ஓவர்களில் வெறும் 32 ரன்களை கொடுத்தார். கடைசி 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 101 ரன்களை விளாசியது. இதில் கடைசி 5 ஓவர்களில் 65 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு இலக்கு 372 ரன்கள்.

http://tamil.thehindu.com/sports/10-ஓவர்களில்-96-ரன்கள்-புரட்டி-எடுக்கப்பட்ட-ஸ்டெய்ன்-பந்து-வீச்சு-ஆஸி-371-ரன்கள்-குவிப்பு/article9189163.ece?homepage=true

டேவிட் மில்லரின் அதிரடியில் உலக சாம்பியன்களை நிலைகுலையச் செய்து ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா. 
 

 

fb_img_1475697632224

டேவிட் மில்லரின் அதிரடியில் உலக சாம்பியன்களை நிலைகுலையச் செய்து ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா.

தென் ஆப்பிரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலியா அணிக்கும் ,தென் ஆபிரிக்க அணிக்குமிடையிலான 3 வது போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

5 போட்டிகள் கொண்டதான இந்த தொடரின் முதலிரு போட்டிகளிலும் வெற்றியைப்பெற்ற தென் ஆப்பிரிக்கா இன்றைய போட்டியிலும் அசத்தல் வெற்றியுடன் தொடரை வெற்றிகொண்டது.

போட்டியில் முதலில் ஆடிய அவுசுதிரேலியா இறுதி 10 ஓவர்களில் 101 ஓட்டங்கள் பெற்றுகொள்ள, அணித்தலைவர் ஸ்மித், வோர்னர் ஆகியோரின் சதத்தின் துணையுடன் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 371 ஓட்டங்கள் குவித்தது.

fb_img_1475696708503fb_img_1475696701984

372 எனும் இமாலய இலக்குடன் களம் புகுந்த தென் ஆபிரிக்க அணி ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டியது.இறுதியில் அதிரடி மன்னன் டேவிட் மில்லர் அனல் பறக்கும் அதிரடிகாட்ட 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது.

இறுதி விக்கெட்டில் ஜோடி சேர்ந்த பேலுக்வாயோ மற்றும் மில்லர் ஜோடி 7 வது விக்கெட்டில் 107 ஓட்டங்களை பெற்று அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தது.

இறுதி 10 ஒருநாள் தொடர்களில் 8 இல் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா இந்த தொடரில் தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் இன்னுமிரு போட்டிகள் மீதமிருக்க ஹட்ரிக் வெற்றியுடன் தொடரை தனதாக்கி உலக சாம்பியன்களை நிலைகுலைய செய்தது தென் ஆப்பிரிக்கா அணி..

fb_img_1475696633900 fb_img_1475697553675

http://vilaiyattu.com/19007-2/

Categories: merge-rss

கபடி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை

Wed, 05/10/2016 - 10:44
கபடி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை

 

 
கபடி உலகக்கோப்பை அதிகாரபூர்வ லோகோ. | பிடிஐ.
கபடி உலகக்கோப்பை அதிகாரபூர்வ லோகோ. | பிடிஐ.

12 நாடுகள் பங்கேற்கும் கபடி உலகக் கோப்பை போட்டிகள் இந்த வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இருநாட்டு உறவுகளில் பதற்றம் நீடிப்பதால் பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா அணிகளும் ஈரான் அணி புதிய அணியான அமெரிக்க அணியுடனும் மோதுகின்றன.

பாகிஸ்தான் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது குறித்து சர்வதேச கபடி கூட்டமைப்பு தலைவர் தியோராஜ் சதுர்வேதி கூறும்போது, “இரண்டு நாடுகளுக்கு இடையேயும் பதற்றம் தொடரும் நிலையில் பாகிஸ்தானை அனுமதிப்பது சரியாகாது. பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு இது உகந்த நேரமல்ல.

சர்வதேச கபடி கூட்டமைப்பின் மதிப்பு மிக்க உறுப்பினர் பாகிஸ்தான், இருந்தாலும் இப்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் இருநாட்டு நல்லுறவுகள் என்ற நலம் கருதி கபடி உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்வது சரியாக இருக்காது என்று நினைத்தோம்” என்றார்.

ஆனால் பாகிஸ்தானோ, இருநாடுகளுக்கு இடையேயும் பதற்றம் இருந்தால், பாதுகாப்பு கவலைகள் இருந்தால் இருநாட்டு அணிகளையும்தாம் தடை செய்ய வேண்டும் என்று சர்வதேச கபடி கூட்டமைப்பை கேள்வி கேட்டுள்ளது.

பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு செயலர் ரானா முகமது சர்வார் கூறும்போது, “இந்த விவகாரத்தை விவாதிக்க கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளோம். பாகிஸ்தான் இல்லாமல் கபடி உலகக்கோப்பை போட்டிகள் உலகக்கோப்பையே அல்ல.

பிரேசில் இல்லாத கால்பந்து உலகக்கோப்பை போன்றது இது” என்றார்.

பாகிஸ்தான் கேப்டன் நசிர் அலி கூறும்போது, மே மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற 6 நாடுகள் பங்கேற்ற கபடி கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றதாகவும் இம்முறையும் கோப்பையை வெல்ல தகுதியான அணி பாகிஸ்தானே என்றும் கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/கபடி-உலகக்-கோப்பையில்-பாகிஸ்தான்-அணிக்கு-தடை/article9188295.ece?homepage=true

Categories: merge-rss

உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 48 நாடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்

Tue, 04/10/2016 - 06:26
உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 48 நாடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்
உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 48 நாடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்
உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 48 நாடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் தலைவர் Gianni Infantino இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது அளித்த வாக்குறுதிகளை விடவும் அதிகளவு எண்ணிக்கையிலான அணிகள் சேர்க்கப்பட வேண்டுமென அவர் தற்போது கோரியுள்ளார்.


16 அணிகள் முதல் நொக்அவுட் சுற்றில் மோதிக் கொள்ள வேண்டுமெனவும் அதன் பின்னர் தற்போது காணப்படுவது போன்று 32 அணிகளைக் கொண்ட சாதாரண சுற்றுக்களை நடத்த முடியும் எனவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.


உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரை மேலும் காத்திரமான முறையில் நடாத்த அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136627/language/ta-IN/--48--.aspx

Categories: merge-rss

அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலும் அஸ்வின் 400 விக்கெட்டுகள்

Mon, 03/10/2016 - 14:20
அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலும் அஸ்வின் 400 விக்கெட்டுகள்

 

 
 ராய்ட்டர்ஸ்.
ராஸ் டெய்லர் விக்கெட்டைக் கைப்பற்றிய அஸ்வின். | படம்: ராய்ட்டர்ஸ்.

38 டெஸ்ட்கள், 101 ஒருநாள் போட்டிகள், 45 டி20 சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ள அஸ்வின் தனது 400-வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

கொல்கத்தாவில் இன்று இந்தியா வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியதோடு, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது. இதில் 2-வது இன்னிங்சில் நியூஸிலாந்து பொறுப்பு கேப்டன் ராஸ் டெய்லர் விக்கெட்டைக் கைப்பற்றிய போது அஸ்வின் தனது 400-வது சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றினார்.

மொத்தம் 185 சர்வதேச போட்டிகளில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து ஆடியுள்ள அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 38 போட்டிகளில் 207 விக்கெட்டுகளையும், 102 ஒருநாள் போட்டிகளில் 142 விக்கெட்டுகளையும் 45 டி20 போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மொத்தம் 401 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 19 முறை 5 விக்கெட்டுகளையும், 5 முறை ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/அனைத்து-சர்வதேச-கிரிக்கெட்டிலும்-அஸ்வின்-400-விக்கெட்டுகள்/article9180514.ece?homepage=true

Categories: merge-rss