விளையாட்டுத் திடல்

10 விக்கெட்டுகளுக்கு மேல் 7-வது முறையாக வீழ்த்திய அஸ்வின்

Tue, 13/12/2016 - 05:40
10 விக்கெட்டுகளுக்கு மேல் 7-வது முறையாக வீழ்த்திய அஸ்வின்

மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினின் அபார பந்து வீச்சில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

 
 
 
 
10 விக்கெட்டுகளுக்கு மேல் 7-வது முறையாக வீழ்த்திய அஸ்வின்
 
மும்பை :

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகள் சாய்த்து மொத்தம் 12 விக்கெட்டுகளை அள்ளினார்.

* முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இன்னிங்சிலும் 6 விக்கெட்டுகள் சாய்த்து மொத்தம் 12 விக்கெட்டுகளை அள்ளினார். 43-வது டெஸ்டில் ஆடிய அஸ்வின் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியது இது 7-வது முறையாகும். இந்திய வீரர்களில் கும்பிளே 8 முறை 10 விக்கெட்டுகள் (132 டெஸ்ட்களில்) கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் சிட்னி பார்னஸ் (27 டெஸ்டில்), ஆஸ்திரேலிய வீரர் கிலாரி கிரிம்மெட் (37 டெஸ்டில்) ஆகியோர் மட்டுமே அஸ்வினை விட குறைந்த டெஸ்டில் ஆடி 7 முறை 10 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர். அஸ்வினுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லிலே 58 டெஸ்ட் போட்டியில் இந்த அரிய இலக்கை எட்டி இருக்கிறார்.

* இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நேற்று டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 24-வது முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் கபில்தேவை (131 டெஸ்டில் ஆடி 23 இன்னிங்சில் 5 விக்கெட்) முந்திய அஸ்வின் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தார். கும்பிளே (132 டெஸ்டில் விளையாடி 35 முறை), ஹர்பஜன்சிங் (103 டெஸ்டில் விளையாடி 25 முறை) ஆகியோர் இந்த பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.

* மும்பை டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 167 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகளை அள்ளினார். வான்கடே ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டியில் 2-வது சிறப்பான பந்து வீச்சு இதுவாகும். 1980-ம் ஆண்டு இந்த மைதானத்தில் இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் 106 ரன் கொடுத்து 13 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இங்கு சிறப்பான பந்து வீச்சாக உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/13084546/1055730/10-wickets-in-7th-time-defeated-Ashwin.vpf

Categories: merge-rss

17 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்காத இந்திய அணி

Tue, 13/12/2016 - 05:39
17 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்காத இந்திய அணி

 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 17 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது இல்லை என்ற சாதனையை சமன் செய்ததுள்ளது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 
 
 
 
17 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்காத இந்திய அணி
 
* டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 17 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது இல்லை என்ற சாதனையை நேற்று சமன் செய்தது. கடைசியாக 2015-ம் ஆகஸ்டு மாதம் காலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, அதன் பிறகு தோல்வி முகம் கண்டதில்லை. 1985-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 1987-ம் ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்திய அணி இதேபோல் 17 ஆட்டங்களில் தோல்வியை தொட்டதில்லை என்ற பெருமை பெற்றதையே தனது சாதனையாக வைத்து இருந்தது. அப்போது இந்திய அணி 4 ஆட்டத்தில் வெற்றியும், 12 ஆட்டத்தில் டிராவும், ஒரு ஆட்டத்தில் டையும் கண்டு இருந்தது. ஆனால் தற்போது 17 போட்டிகளில் 13 ஆட்டத்தில் வெற்றியும், 4 ஆட்டத்தில் டிராவும் கண்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அணிகள் 17 போட்டிகளுக்கு மேல் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்காத நிலை 6 சமயங்களில் அரங்கேறி இருக்கிறது. 1980-ம் ஆண்டு காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தொட்டு பார்க்காததே சாதனையாக இன்றளவும் நீடிக்கிறது.

* இந்திய அணி தொடர்ச்சியாக 5-வது டெஸ்ட் போட்டி தொடரை வென்றுள்ளது. கடந்த ஆண்டில் இலங்கைக்கு எதிரான தொடரை (வெளியூரில்) 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை (உள்ளூரில்) 3-0 என்ற கணக்கிலும், வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை (வெளியூரில்) 2-0 என்ற கணக்கிலும், உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரை 3-0 என்ற கணக்கிலும் வென்று இருக்கிறது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2010-ம் ஆண்டு ஜனவரி இடையிலான காலத்தில் இந்திய அணி 5 தொடரை இடைவிடாமல் வென்று இருந்தது. அந்த சாதனையை நேற்று சமன் செய்தது. டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக அதிக தொடரை வென்ற அணிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை 9 முறை வென்று முதலிடத்தில் உள்ளன.

* முதல் இன்னிங்சில் 400 மற்றும் அதற்கு மேல் ரன் எடுத்த அணி அந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 1930-ம் ஆண்டில் ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிடமும், 2011-ம் ஆண்டில் கார்டிப்பில் நடந்த போட்டியில் இலங்கை அணி, இங்கிலாந்திடம் இதேபோல் இன்னிங்ஸ் தோல்வியை கண்டது. இந்திய மண்ணில் ஒரு அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்து விட்டு அந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது இதுவே முதல் முறையாகும்.

* இங்கிலாந்துக்கு எதிராக 116-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி பெற்ற 24-வது வெற்றி இதுவாகும்.

* அலஸ்டயர் குக் தலைமையில் 58 டெஸ்ட் போட்டியில் ஆடிய இங்கிலாந்து அணி சந்தித்த 21-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்ட இங்கிலாந்து கேப்டன்கள் பட்டியலில் மைக்கேல் ஆர்தருடன்(51 டெஸ்டில் தலைமை தாங்கி 21 தோல்வி) குக் இணைந்தார்.

* கேப்டன் விராட்கோலி தலைமையில் 21-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி பெற்ற 13-வது வெற்றி இதுவாகும். 6 ஆட்டத்தில் டிராவும், 2 ஆட்டத்தில் தோல்வியும் கண்டது. இந்த ஆண்டில் இந்திய அணி டெஸ்டில் பெற்ற 8-வது வெற்றி (11 டெஸ்டில்) இது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/13082750/1055727/Indian-team-is-undefeated-in-17-continuously-Test.vpf

Categories: merge-rss

இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: செல்சியா தொடர்ந்து 9-வது வெற்றிகள் மூலம் முதலிடம்

Sun, 11/12/2016 - 17:10
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: செல்சியா தொடர்ந்து 9-வது வெற்றிகள் மூலம் முதலிடம்

 

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் செல்சியா அணி தொடர்ந்து 9-வது வெற்றியை பெற்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

 
 
 செல்சியா தொடர்ந்து 9-வது வெற்றிகள் மூலம் முதலிடம்
 
இங்கிலாந்து நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

இன்று முன்னணி கிளப் அணியான செல்சியா வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியோன் அணியை எதிர்கொண்டது. இதில் 1-0 என செல்சியா வெற்றி பெற்றது. அந்த அணியின் டியகோ கோஸ்டா 76-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் செல்சியா 1-0 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் தொடர்ச்சியாக 9-வது வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 37 புள்ளிகளுடன் செல்சியா முதல் இடத்தில் உள்ளது. அர்செனல் 15 போட்டிகள் முடிவில் 34 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. லிவர்பூல் 3-வது இடத்திலும், மான்செஸ்டர் சிட்டி 4-வது இடத்திலும், மான்செஸ்டர் யுனைடெட் 6-வது இடத்திலும் உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/11205412/1055642/Chelsea-edge-out-West-Bromwich-Albion-to-go-top-of.vpf

Categories: merge-rss

35 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடைபோடும் ரியல் மாட்ரிட்

Sun, 11/12/2016 - 17:00
35 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடைபோடும் ரியல் மாட்ரிட்

ஷினேடின் ஷிடேன் தலைமையில் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணி 35 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

 
35 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடைபோடும் ரியல் மாட்ரிட்
 
ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணி ரியல் மாட்ரிட். பார்சிலோனா அணிக்கு இணையாக தற்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் பயிற்சியாளராக ஷினேடின் ஷிடேன் பதவி ஏற்றபின் ரியல் மாட்ரிட் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, பென்சிமா, கரேத் பேலே மற்றும் கேப்டன் ரமோஸ் ஆகியோர் அந்த அணிக்கு வெற்றிமேல் வெற்றியை தேடிக்கொடுத்து வருகிறார்கள்.

லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் டெபொர்டிவோ லா கொருனா அணியை எதிர்கொண்டது. இதில் கடைசி நேரத்தில் ரமோஸ் கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 3-2 என த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 35 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடுகிறது.

இதற்கு முன் ரியல் மாட்ரிட் 1988 அக்டோபர் முதல் 1989 ஏப்ரல் வரை தொடர்ச்சியாக 34 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதை தற்போது முறியடித்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/11220003/1055647/Real-Madrid-set-new-35-match-unbeaten-record.vpf

Categories: merge-rss

அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை குழாம் தென்னாபிரிக்கா நோக்கிப் பயணம்

Sun, 11/12/2016 - 06:21
அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை குழாம் தென்னாபிரிக்கா நோக்கிப் பயணம்

 

அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை குழாம் தென்னாபிரிக்கா நோக்கிப் பயணம்

நான்கு வருடங்களுக்கு பின்னர் கிரிக்கெட் தொடரொன்றுக்காக அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று தென்னாபிரிக்கா நோக்கிப் பயணமானது.

தென்னாபிரிக்காவில் 03 டெஸ்ட் 05 ஒரு நாள் மற்றும் 03 இருபதுக்கு இருபது போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணியை வழியனுப்பும் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த 12 பேர் கொண்ட இலங்கை குழாமில் பி.ஆர்.சீ விளையாட்டுக்கழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய பண்டாரவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர்களான ரங்கன ஹேரத், உபுல் தரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளதோடு, உபாதையில் இருந்து மீண்டு வந்த தினேஷ் சந்திமால் அணியின் உப தலைவராக செயற்படுகின்றார்.

இலங்கை அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்கவிற்குப் பதிலாக ரஞ்சித் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://newsfirst.lk/tamil/2016/12/அஞ்சலோ-மெத்தியூஸ்-தலைமைய/

Categories: merge-rss

ஐ.பி.எல்.-2017: கே.கே.ஆர். அணியில் வாசிம் அக்ரம் இடம்பெறவில்லை

Sat, 10/12/2016 - 19:45
ஐ.பி.எல்.-2017: கே.கே.ஆர். அணியில் வாசிம் அக்ரம் இடம்பெறவில்லை
 

2017-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வாசிம் அக்ரம் இடம்பெறமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 கே.கே.ஆர். அணியில் வாசிம் அக்ரம் இடம்பெறவில்லை
 
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் மிகவும் பிரபலமானது. இந்த ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பங்கேற்று வருகிறது.

9 வருடங்கள் சிறப்பாக முடிந்துள்ள நிலையில் 10-வது தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான வாசிம் அக்ரம் பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அணியின் மானேஜிங் டைரக்டர் மற்றும் சிஇஓ வெங்கி மைசூர் இதுகுறித்து கூறுகையில் ‘‘கொல்கத்தா நைட்ரைடர்ஸ் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வாசிம் அக்ரமை அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் நாங்கள் இழக்கிறோம். எங்கள் அணி 2012 மற்றும் 2014-ம் ஆண்டு சாம்பியன் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சொந்த வேலைக் காரணமாக தன்னால் பங்கேற்க இயலாது என்று வாசிம் அக்ரம் கூறியதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/10205653/1055521/Wasim-Akram-to-miss-2017-season-with-KKR.vpf

Categories: merge-rss

ஒருநாள் தரவரிசை: முதல் இடத்திற்கு டி வி்ல்லியர்ஸ், கோலி, வார்னர் கடும் போட்டி

Sat, 10/12/2016 - 19:44
ஒருநாள் தரவரிசை: முதல் இடத்திற்கு டி வி்ல்லியர்ஸ், கோலி, வார்னர் கடும் போட்டி

 

 
 

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

 
 
 
 
 முதல் இடத்திற்கு டி வி்ல்லியர்ஸ், கோலி, வார்னர் கடும் போட்டி
 
சமீபத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் டேவிட் வார்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி இரண்டு போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார். 3 போட்டியில் 299 ரன்கள் குவித்தார்.

இதனால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தரவரிசையில் வார்னர் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி தென்ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் 861 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 13 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் விராட் கோலி (848) 2-வது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 786 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். விராட் கோலியைவிட 62 புள்ளிகள்தான் பின்தங்கியுள்ளார்.
 
BEE0AE17-2E10-49E3-9062-46F7A4065C91_L_s


விரைவில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது.

அதேபோல் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஜனவரி மாதம் 13-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 28-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.
 
02CFA7E4-9431-4CBE-BBD4-AF3BA563B928_L_s


இந்த மூன்று தொடர்களிலும் யார் அதிக அளவு ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி முதல் இடத்திலும், டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 3-வது இடத்திலும் உள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/10163729/1055477/Virat-Kohli-Faces-Close-Contest-From-David-Warner.vpf

Categories: merge-rss

உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பிய திலிப் வெங்சர்க்காருக்கு டோனி பதிலடி

Sat, 10/12/2016 - 19:42
உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பிய திலிப் வெங்சர்க்காருக்கு டோனி பதிலடி
 

நீண்ட நாட்கள் விளையாடாமல் இருக்கும் டோனியின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு டோனி பதிலடி கொடுத்துள்ளார்.

 
 
உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பிய திலிப் வெங்சர்க்காருக்கு டோனி பதிலடி
 
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று வி்ட்டார்.

இதனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு அதிக அளவில் ஓய்வு கிடைக்கிறது.

இந்த ஓய்வு நேரத்தில் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடுவதில்லை. இதனால் ஓய்வை கழித்துவிட்டு உடனடியாக இந்திய அணிக்கு அவர் திரும்பும்போது உடற்தகுதி எவ்வாறு திருப்திகரமாக இருக்கும் என்று முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த டோனி ‘‘நான் ராஞ்சியில் பயிற்சி எடுத்து வருகிறேன். அதேபோல் உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்றுள்ளேன். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்காக என்னை நான் தயார் செய்து கொண்டுள்ளேன்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/10210456/1055522/MS-Dhoni-answers-Dilip-Vengsarkar-fitness-criticism.vpf

Categories: merge-rss

கவாஸ்கர், சச்சின், திராவிடுடன் இணைந்த விராட் கோலியின் சாதனை சதம்

Sat, 10/12/2016 - 11:50
கவாஸ்கர், சச்சின், திராவிடுடன் இணைந்த விராட் கோலியின் சாதனை சதம்

 

 
 
மும்பை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் எடுத்த விராட் கோலி. | படம்.| பிடிஐ.
மும்பை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் எடுத்த விராட் கோலி. | படம்.| பிடிஐ.
 
 

இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் இன்று அதிதிறமை வாய்ந்த ஒரு சதம் எடுத்து 147 ரன்களுடன் ஆடி வரும் விராட் கோலி இதன் மூலம் சிலபல சாதனைகளைப் புரிந்துள்ளார்.

சாதனைத்துளிகள் வருமாறு:

1. இந்திய கேப்டன் ஒருவர் ஒரே தொடரில் 500 ரன்களை எடுத்தவகையில் விராட் கோலி, சுனில் கவாஸ்கருடன் இணைந்துள்ளார். கவாஸ்கர் இதனை இருமுறை சாதித்துள்ளார், மே.இ.தீவுகளுக்கு எதிராக 1978-79 தொடரில் கேப்டனாக கவாஸ்கர் 732 ரன்களை எடுத்தார், பிறகு 1981-82 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 500 ரன்களை ஒரு தொடரில் எடுத்தார்.

2. கேப்டனாக ஒரு ஆண்டில் 1,000 ரன்களை எடுத்த வகையில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிடுடன் இணைந்துள்ளார் விராட் கோலி. சச்சின் 1997-ம் ஆண்டு 1,000 ரன்களையும், 2006-ல் ராகுல் திராவிட் 1095 ரன்களையும் எடுத்தனர், தற்போது விராட் கோலி ஒரே ஆண்டில் 1,000 ரன்களைக் கடந்த கேப்டன் ஆனார்.

3. கோலி தனது 15-வது சதத்தை இன்று தனது 89-வது இன்னிங்சில் எடுத்தார். கவாஸ்கர் மட்டுமே 15 சதங்களை 77 இன்னிங்ஸ்களில் எடுத்து சாதனையை தன்வசம் வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கரும் தனது 15-வது டெஸ்ட் சதத்தை 89-வது இன்னிங்ஸில்தான் எடுத்தார்.

4. 2011-ல் கடைசியாக ராகுல் திராவிட் ஒரே ஆண்டில் 57.25 என்ற சராசரியில் 1,145 ரன்களைக் குவித்தார். தற்போது கோலியுடன் சேர்த்து ஒரு ஆண்டில் ஆயிரம் ரன்களுக்கும் மேல் குவித்த வகையில் 23 இந்திய பேட்ஸ்மென்கள் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

5 ஒரே டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கும் மேல் எடுத்த 5-வது வீரராகிறார் விராட் கோலி. முன்னதாக கோலியே 2014-15 ஆஸ்திரேலிய தொடரில் 692 ரன்களை விளாசி சாதனை புரிந்தார். கவாஸ்கர் சுமார் 6 முறை தொடரில் 500க்கும் மேல் ரன்களை எடுத்துள்ளார். குண்டப்பா விஸ்வநாத், மொஹீந்தர் அமர்நாத், ராகுல் திராவிட் ஆகியோர் இருமுறை ஒரு டெஸ்ட் தொடரில் 500க்கும் மேல் ரன்கள் எடுத்துள்ளனர்.

6. 89 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 4,000 டெஸ்ட் ரன்களை எடுத்ததன் மூலம் 6-வது விரைவு 4,000 ரன் பேட்ஸ்மெனாகிறார் கோலி. விரேந்திர சேவாக் 79 இன்னிங்ஸ்களில் 4,000 ரன்களைக் கடக்க கவாஸ்கர் 81 இன்னிங்ஸ்களிலும், ராகுல் திராவிட் 84 இன்னிங்ஸ்களிலும், சச்சின் 86 இன்னிங்ஸ்களிலும். அசாருதீன் 88 இன்னிங்ஸ்களிலும் 4,000 டெஸ்ட் ரன்களை எட்டினர்.

http://tamil.thehindu.com/sports/கவாஸ்கர்-சச்சின்-திராவிடுடன்-இணைந்த-விராட்-கோலியின்-சாதனை-சதம்/article9421754.ece?homepage=true

Categories: merge-rss

பங்காளதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட்: டாக்கா அணி சாம்பியன்

Sat, 10/12/2016 - 06:30
பங்காளதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட்: டாக்கா அணி சாம்பியன்

பங்காளதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராஜ்ஷாஹி அணியுடனான ஆட்டத்தில் டாக்கா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

 
 
 டாக்கா அணி சாம்பியன்
 
டாக்கா அணி சாம்பியன்

வங்காளதேசம் கிரிக்கெட் வாரியம் சார்பில் பங்காளதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்தது. 7 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இறுதிப் போட்டிக்கு ‌ஷகிப் - அல்-ஹசன் தலைமையிலான டாக்கா டைனமைட்ஸ் அணியும், டேரன் சமி தலைமையிலான ராஜ்ஷாஹி கிங்ஸ் அணியும் மோதின.

முடிவில் பேட்டிங் செய்த டாக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்தது. லீவிஸ் 45 ரன்னும், சங்ககரா 36 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய ராஜ்ஷாஹி அணி 17.4 ஓவரில் 103 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் டாக்கா அணி 56 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/10113503/1055394/Dhaka-clinch-Bangladesh-Premier-League-title-with.vpf

256110.jpg

Player of the Match Kumar Sangakkara scored a 33-ball 36 to lift Dhaka to 159 in the finals © Daily Star

Categories: merge-rss

முதல் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இம்மாதம் ஆரம்பம்

Sat, 10/12/2016 - 05:56
முதல் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இம்மாதம் ஆரம்பம்
1425341561-5fd13a77b9dabc255d12951f1ac7ca4e349eaa13.jpg

 

19 வயதிற்குட்பட்டவர் களுக்கான இளையோர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய கிரிக்கெட் சம்மே ளனத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இளையோர்களுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. 

இதில் இலங்கை, இந் தியா, நேபாளம், மலேசியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கனிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மோதுகின்றன. இந்தத் தொடரின் போட்டி  கள் கொழும்பு, காலி, மாத் தறை, மொறட்டுவை ஆகிய இடங்களிலுள்ள மைதானங்க ளில் நடைபெறவுள்ளன. இதன் இறுதிப்போட்டி மட்டும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதில் கலந்துகொள்ளும் எட்டு நாடுகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ' குழுவில் இலங்கை, இந்தியா, நேபாளம், மலேசியா ஆகிய நாடுகளும் 'பி' குழுவில் பாகிஸ்தான், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொடரின் முதல் நாளில் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன்போது குழு 'ஏ' இல் இந்தியா எதிர் மலேசியாவும், இலங்கை எதிர் நேபாளமும் மோதுகின்றன. குழு 'பி' இல் பாகிஸ்தான் எதிர் சிங்கப்பூரும், ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷும் களம் காண்கின்றன.

குழு 'ஏ' இல் இடம்பெற் றுள்ள இலங்கை அணி தனது முதல் போட்டியில் நேபாளத்தை எதிர்கொள்கிறது. எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இலங்கை அணி மலேசியாவை எதிர்த்தாடுகி றது. அதேபோல் 18ஆம் திகதி இந்தியாவை எதிர்கொள்கிறது. முதல் முறையாக இளையோருக்கான ஆசியக் கிண்ணம் இலங்கையில் நடத்தப்படுவதால் எதிர்காலத் தில் இளம் வீரர்கள் மேலும் மெருகேற்றப்பட்டு தேசிய அணிக்கு உள்வாங்கிக் கொள்ளப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-10#page-12

Categories: merge-rss

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் உருவாகிறது

Fri, 09/12/2016 - 17:43
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் உருவாகிறது
 

குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாக இருக்கிறது.

 
 
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் உருவாகிறது
 
இந்தியாவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மோதிராவில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானமும் ஒன்று.

இந்த மைதானத்தை உலகத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாக்க குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. அதன்படி பழைய மைதானத்தை இடித்து புதிய மைதானத்தை கட்டுவதற்கான வேலையை லார்சன் அண்டு டூப்போ (L&T) நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

தற்போதைய பழைய மைதானத்தில் நடைபெறும் போட்டியை 54 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து ரசிக்கும்படியாக கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிதாக கட்டப்படும் மைதானத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டப்பட இருக்கிறது.

தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் ஒரு லட்சத்து 24 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த சாதனையை சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானம் முறியடிக்க இருக்கிறது.

பெரிய மைதானத்தை கட்டும் அதேவேளையில் ரசிகர்களுக்கான பார்க்கிங் வசதி, குளிர்சாதன பெட்டிகள் வசதிகளை அதிகப்படுத்தும் கடமையும் உள்ளது.

இந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராஜேஷ் பட்டேல் கூறியுள்ளார்.

தற்போது இந்தியாவில் கொல்கத்தா ஈடன் கார்டனில் 66 ஆயிரம் ரசிகர்களும், ஷாகித் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 65 ஆயிரம் ரசிகர்களும், கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 60 ஆயிரம் ரசிகர்களும் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் 60 ஆயிரம் ரசிகர்களும் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/09154926/1055252/Motera-Sardar-Patel-Cricket-Stadium--become-largest.vpf

Categories: merge-rss

இலங்கை டி20 தொடர்: ஆஸ்திரேலியா அணிக்கு லாங்கர் பயிற்சியாளர்

Fri, 09/12/2016 - 17:42
இலங்கை டி20 தொடர்: ஆஸ்திரேலியா அணிக்கு லாங்கர் பயிற்சியாளர்

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இலங்கை டி20 தொடர் வருவதால் இலங்கை தொடருக்கு ஜஸ்டின் லாங்கரை பயிற்சியாளராக ஆஸ்திரேலியா நியமித்துள்ளது.

 
 
 ஆஸ்திரேலியா அணிக்கு லாங்கர் பயிற்சியாளர்
 
இலங்கை அணி மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா செல்கிறது. முதல் போட்டி மெல்போர்னில் பிப்ரவரி 17-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்தேதியும் நடக்க இருக்கிறது.

அதே சமயத்தில் பிப்ரவரி 23-ந்தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

இரண்டிற்கும் வெவ்வேறு அணி என்பதால் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி முன்கூட்டியே இந்தியாவிற்கு வந்து விட திட்டமிட்டுள்ளது. அந்த அணியுடன் தலைமை பயிற்சியாளர் லீமென் இந்தியா வந்துவிடுவார். இதனால் இலங்கை அணிக்கெதிரான டி20 ஆஸ்திரேலியா அணிக்கு பயிற்சியாளர் இருக்கமாட்டார். ஆகையால், ஜஸ்டின் லாங்கரை இலங்கை அணிக்கெதிரான தொடருக்காக பயிற்சியாளராக நியமித்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/09184157/1055297/Langer-to-coach-Australia-for-T20s-against-Sri-Lanka.vpf

Categories: merge-rss

வார்னர் 156 ரன்கள்; நியூஸிலாந்து 147 ஆல் அவுட்: தொடரை 3-0 என கைப்பற்றிய ஆஸ்திரேலியா

Fri, 09/12/2016 - 16:22
வார்னர் 156 ரன்கள்; நியூஸிலாந்து 147 ஆல் அவுட்: தொடரை 3-0 என கைப்பற்றிய ஆஸ்திரேலியா
 
 ஏஎப்பி.
சாப்பல்-ஹேட்லி ஒருநாள் தொடர் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி. | படம்: ஏஎப்பி.
 
 

மெல்பர்னில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது, இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 117 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு நியூஸிலாந்தை 3-0 என்று ‘ஒயிட்வாஷ்’ செய்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா வார்னரின் 156 ரன்கள் பெரும்பங்களிப்புடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுக்க நியூஸிலாந்து படுமோசமாக ஆடி 36.1 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களில் தோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனது.

முதல் முறையாக மெல்போர்ன் மைதானத்தில் ரசிகர்கள் வருகை மிகமிகக் குறைவாகக் காணப்பட்டது. 20,000த்திற்கும் கொஞ்சம் அதிகம் அவ்வளவே. காரணம் நியூஸிலாந்து அணி சவாலாக ஆடவில்லை என்பதே.

வார்னர் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டில் 7 ஒருநாள் சதங்களை எடுத்துள்ளார் வார்னர். ஒரு ஆண்டில் அதிக ஒருநாள் சதங்களை எடுத்தவர் சச்சின், இவரது எண்ணிக்கை 9 சதங்களாகும். சச்சின் இதனை 1998-ம் ஆண்டு தனது உச்சகட்ட ஆட்டத்தில் சாதித்தது. இதில் பெரும்பாலும் சிக்கியது ஆஸ்திரேலிய பந்து வீச்சே. இந்தச் சாதனையை இந்த ஆண்டு வார்னரால் முறியடிக்க முடியவில்லை. இனிமேலும் சச்சினை முறியடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் இன்னொன்றையும் கூறிவிடுவது பொருந்தும் சச்சின் 33 இன்னிங்ஸ்களில் 9 சதங்களை எடுக்க வார்னர் 23 இன்னிங்ஸ்களில் 7 சதம் எடுத்துள்ளார்.

128பந்துகளைச் சந்தித்த வார்னர் 13 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 156 ரன்கள் எடுத்து 8-வது விக்கெட்டாக கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். 264 ரன்களில் வார்னர் மட்டும் 156, இவருக்கு அடுத்த அதிகபட்ச தனிநபர் ரன் எண்ணிக்கை டிராவிஸ் ஹெட், இவர் 37 ரன்களை எடுத்தார். இரு அணிகளிலும் இவர்கள் இருவருமே அதிகமாக ரன் எடுத்துள்ளனர், நியூஸிலாந்தில் மார்டின் கப்தில் மட்டுமே அதிகபட்சமாக 34 ரன்களை எடுத்தார்.

வார்னர் ஒருவரே 156 ரன்கள், ஒட்டுமொத்த நியூஸிலாந்தும் சேர்ந்து 147 ரன்கள்!! வழக்கத்துக்கு மாறான மந்தமான (இந்திய ரக) மெல்பர்ன் பிட்சில் அனைத்து பேட்ஸ்மென்களும் ரன் எடுக்கத் திணறிய போது வார்னர் மட்டுமே வித்தியாசம் காட்டினார். இவர் வேறொரு நிலையிலிருந்து ஆடுவதாகவே தெரிகிறது. இந்த மந்தப் பிட்சில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 121. பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் விளையாட முடியாத பாதம் பெயர்க்கும் யார்க்கர்களை வீசினார். ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஒரு நம்பமுடியாத கேட்சைப் பிடித்து இன்னிங்ஸை முடித்து வைத்தார், கடந்த போட்டியிலும் நம்ப முடியாத ஒரு கேட்சை ஸ்மித் பிடித்தார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா சரியாக தொடங்கவில்லை. ஏரோன் பிஞ்ச் மீண்டும் சொதப்பி 3 ரன்களில் போல்ட் பந்தில் இன்சைடு எட்ஜ் ஆக ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், அநேகமாக இவர் உஸ்மான் கவாஜாவுக்கு வழி விடுவார் என்று தெரிகிறது. இந்தப் பந்தை மிட் ஆன், அல்லது நேராக ஆட நினைத்தார் ஆனால் போல்ட்டின் இன்ஸ்விங்கர் இவரது விக்கெட்டைச் சாய்த்தது. கேப்டன் ஸ்மித் ரன் எடுக்காமல் கேன் வில்லியம்சன், போல்ட் ஏற்படுத்திய லெக் திசை பொறியில் சிக்கினார். 6 பந்துகளை ஆஃப் திசையில் வீசிய போல்ட் ஒரு பந்தை ரவுண்ட் த விக்கெட்டில் வீசி உள்ளே கொண்டு வந்தார், இரண்டு ஷார்ட் மிட்விக்கெட், ஒரு ஷார்ட் ஸ்கொயர் லெக். இடுப்பளவு வந்த பந்தை ஸ்மித் ஆட நேராக ஷார்ட் ஸ்கொயர்லெக்கில் நிகோல்ஸ் கையில் கேட்ச் ஆனது. முன்னதாக கடினமான வாய்ப்பை நிகோல்ஸ் வார்னர் 18 ரன்களில் இருந்த போது விட்டார். இது திருப்பு முனையானது. ஆனால் இம்முறை பாதிக்கப்பட்டது அதிவேக பவுலர் லாக்கி பெர்குசன்.

பெய்லியின் அசிங்கமான ஸ்டான்ஸ்:

பேட்டிங் பார்மை தேடி வரும் ஜார்ஜ் பெய்லி, பாகிஸ்தானின் இஜாஜ் அகமது போன்ற ஒரு ஸ்டான்சில் நின்றார். இஜாஜ் அகமது கூட பரவாயில்லை எனும் அளவுக்கு பவுலருக்கு பின்புறத்தைப் பாதிகாட்டுமாறு அமைந்த இவரது ஸ்டான்ஸ் சிரிப்பையே வரவழைத்தது. 51 பந்துகளைச் சந்தித்து 1 பவுண்டரியுடன் 23ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது, லாக்கி பெர்குசன் இவரை தனது 150+ கிமீ வேகப்பந்துகளால் மிரட்டினார்.

அவரது இந்த புதிய ஸ்டான்ஸும் பெய்லிக்குக் கை கொடுக்கவில்லை. கிராண்ட் ஹோமிடம் இவர் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் எப்படியோ வார்னருடன் சேர்ந்து 62 ரன்கள் சேர்க்கப்பட்டது.

வார்னர் தனிநபர் போராட்டம்:

பெய்லி ஆட்டமிழந்த அதே ஓவரில் கிராண்ட் ஹோமின் சற்றே எழும்பிய பந்தை மிட்செல் மார்ஷ் மட்டையில், காலில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார்.

டிராவிஸ் ஹெட், வார்னர் இணைந்து 105 ரன்கள் சேர்த்தனர், இதில் ஹெட் 70 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார்.

61 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அரைசதம் கடந்த வார்னர், 95 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் சதம் எடுத்தார். ஆனால் கடைசி 25 பந்துகளில் மேலும் 56 ரன்களை மேலும் 3 பவுண்டரிக்ள் 3 சிக்சர்களுடன் விளாசி 128 பந்துகளில் 13 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 156 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் சாத்தியமில்லாத ரன்னை எடுக்கும் முயற்சியில் ரன் அவுட் ஆனார்.

மேத்யூ வேட் 14 ரன்களையும் பாக்னர் 13 ரன்களையும் எடுக்க உதிரிகள் வகையில் 18 ரன்கள் கிடைக்க ஆஸ்திரேலியா 264 ரன்கள் எடுத்தது. போல்ட் சிறப்பாக வீசி 10 ஒவர்கள் 49 ரன்கல் 3 விக்கெட் என்று அசத்தினார். சாண்ட்னர் ஒரு முனையில் அருமையாகக் கட்டுப்படுத்தி 9 ஓவர்களில் 43 ரன்களையே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிராண்ட் ஹோம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சவுதி 45 ரன்கள் கொடுத்து விக்கெட் இல்லை.

நியூஸிலாந்து வீழ்ச்சி:

265 ரன்கள் இலக்கை மந்தமான பிட்சில் துரத்த களமிறங்கிய நியூஸிலாந்து லேதம் (28), கப்தில் (34) ஆகியோர் மூலம் 9 ஓவர்கள் 44 ரன்கள் என்ற டீசண்டான துவக்கம் கண்டது. இந்நிலையில் பேட் கமின்ஸிடம் லேதம் ஆட்டமிழந்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 13 ரன்களில் ஜேம்ஸ் பாக்னர் ரவுண்ட் த விக்கெட்டில் எல்.பி.ஆனார். சிறிது நேரத்தில் கப்தில், டிராவிஸ் ஹெட்டின் ஆஃப் பிரேக்கை கவரில் பெய்லியிடம் கேட்ச் கொடுத்து 34 ரன்களில் வெளியேறினார். நிகோல்ஸ், ஸ்டார்க்கின் பாதம் பெயர்க்கும் யார்க்கரில் பவுல்டு ஆக, வாட்லிங்கும் 8 ரன்களில் ஹெட்டிடம் எல்.பி.ஆக 98/5 என்று நியூஸிலாந்துக்கு ஆணியடிக்கப்பட்டது.

கடைசியில் நியூஸிலாந்து 37-வது ஓவர் முதல் பந்தில் ஸ்மித்தின் ஸ்டன்னிங் கேட்சிற்கு 147 ரன்களுக்குச் சுருண்டு ஒயிட்வாஷ் ஆனது.

ஆட்ட நாயகன், தொடர் நாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹெட், பாக்னர், கமின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் ஹேசில்வுட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/வார்னர்-156-ரன்கள்-நியூஸிலாந்து-147-ஆல்-அவுட்-தொடரை-30-என-கைப்பற்றிய-ஆஸ்திரேலியா/article9420010.ece

Categories: merge-rss

எதிர்கால பீபா உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் 16 குழுக்கள், 48 அணிகள் - ஜியானி யோசனை

Fri, 09/12/2016 - 15:39
எதிர்­கால பீபா உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் 16 குழுக்கள், 48 அணிகள் - ஜியானி யோசனை
 

எதிர்­கால உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறுதிச் சுற்றில் 16 குழுக்­களில் 48 நாடுகள் பங்­கு­பற்­ற­வேண்டும் என்­பது பீபா தலைவர் ஜியானி இன்ஃ­பன்­டீ­னோவின் விருப்­ப­மாகும்.

21166gianni-infantino.jpg

ஜியானி இன்ஃ­பன்­டீ­னோ

 

உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்­கு­பற்றும் நாடு­களின் எண்­ணிக்­கையை 32 இலி­ருந்து 40 ஆக அதி­க­ரிக்க வேண்டும் என பீபாவின் தலை­வ­ராக கடந்த பெப்­ர­வரி மாதம் தெரி­வான இன்ஃ­பன்­டீனோ முன்னர் தெரி­வித்­தி­ருந்தார்.

 

அவ­ரது புதிய விருப்­ப­மான 16 குழுக்­களில் 3 நாடுகள் வீதம் பங்­கு­பற்­றினால் ஒவ்­வொரு குழு­விலும் முத­லி­ரண்டு இடங்­களைப் பெறும் 32 நாடுகள் நொக் அவுட் சுற்றில் விளை­யாட தகு­தி பெறும்.

 

இது தொடர்­பான தீர்­மானம் புதிய வரு­டத்தில் ஜன­வரி மாதம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. ஆனால் இந்தப் புதிய திட்டம் 2026 உலகக் கிண்ணப் போட்­டி­க­ளுக்கு முன்னர் அமு­லுக்கு வரு­வது உறு­தி­யில்லை.

 

இந்தப் புதிய யோசனை தொடர்­பாக 2017 ஜன­வரி 9ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பீபா பேர­வையின் கூட்­டத்­தின்­போது விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. ஒரு வேளை இந்த யோச­னையை பீபா அங்­கீ­க­ரிக்­கா­விட்டால் வேறு யோசனைகள் பற்றி ஆராயப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21166#sthash.j97dH96s.dpuf
Categories: merge-rss

லசித் மாலிங்க வைத்தியசாலையில் அனுமதி

Fri, 09/12/2016 - 15:38
லசித் மாலிங்க வைத்தியசாலையில் அனுமதி
 

21167download.jpgகிரிக்கெட் வீரா் லசித் மாலிங்க, சுகயீனம் காரணமாக நேற்றிரவு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர்  அனுஷ சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

 

எனினும் லசித் மாலிங்க டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிப்பதாகவும் அதற்கமைய சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் வைத்தியசாலை வட்டரங்கள் தெரிவிக்கின்றனர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21167#sthash.Ed01UOxw.dpuf
Categories: merge-rss

இலங்கை கிரிக்கெட் கண்ட இளம் நட்சத்திரம் குஷல் மெண்டிஸ்

Thu, 08/12/2016 - 20:20
இலங்கை கிரிக்கெட் கண்ட இளம் நட்சத்திரம் குஷல் மெண்டிஸ் http://cdn.newsapi.com.au/image/v1/4b1917b651f214683fe730439afd6095?width=700

அண்மையில் ஜிம்பாப்வேயில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடர் மற்றும் முக்கோண ஒருநாள் தொடர் என்பவற்றில், இலங்கை அணி முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையில், அனுபவம் குறைந்த இளம் வீரர்களைக் கொண்ட குழாமினை வைத்து இரு தொடர்களையும் வெற்றிகரமாக கைப்பற்றியது. இந்த வெற்றிகளுக்கு இளம் வீரரான “மொரட்டுவையின் இளவரசர்” என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்படும் 21 வயதேயான குஷல் மெண்டிஸ் பெரும் பாங்காற்றியிருந்தார்.

இலங்கை அணியின் எதிர்கால நம்பிக்கைக்குறிய வீரரான குஷல் குறித்தும், அவர் கடந்து வந்த  பாதைகள் குறித்தும் அறிந்துகொள்வதற்காக thepapare.com அவருடன் பிரத்யேக நேர்காணல் ஒன்றை நடத்தியது. அதனைத் தொடர்ந்து குஷல் குறித்த சில ஆழமான தகவல்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

 குஷல் மெண்டிஸின் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பம்

இலங்கை அணிக்கு லஹிரு திரிமான்ன, அமல் சில்வா போன்ற சிறந்த வீரர்களை கொடுத்த,  கிரிக்கெட்டிற்கு மிகவும் பிரபல்யம் வாய்ந்த, அதேபோன்று பெருந்தொகையான கிரிக்கெட் பிரியர்களைக் கொண்ட இடமான மொரட்டுவ நகரில் பிறந்தவரே குஷல் மெண்டிஸ்.

குஷல் மெண்டிசின் தந்தையும், அவரது மிகப்பெரிய இரசிகருமான தினேஷ் மெண்டிஸின் மூலமே அவர் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆர்வமூட்டப்பட்டார். தான் ஆர்வமூட்டப்பட்டமை குறித்து குஷல் கீழ்வருமாறு குறிப்பிட்டார்

எனது தந்தையே எனக்கு கிரிக்கெட் விளையாட ஆர்வமூட்டியவர். எனது நிழல் போன்று என்னை தொடர்பவர். எனது விளையாட்டினை விமர்சிப்பதில் முதலிடம் வகிக்கும் அவர் குறைகளை திருத்துவதிலும் உறுதுணையாக இருப்பார். என்னை சிறுவயதில் இருக்கும்போது மொரட்டுவ கிரிக்கெட் அகடமியில் சேர்த்து, ஜயலத் அபோன்சோவின் மேற்பார்வையின் கீழ் எனக்கு பயிற்சி வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை எனது தந்தை செய்தார். எனது ஆரம்ப பயிற்சியாளரான அபோன்சோ அவர்களே  கிரிக்கெட் விளையாட்டின் ஆரம்பம் என்ன என்பதை எனக்கு கற்பித்தார் என்றார்.

மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில், சிறுவயதில் இருந்தே துடுப்பாட்டத்திற்கு பிரபல்யமான ஒருவராக விளங்கிய குஷல் மெண்டிஸ், ஆரம்பத்தில் இருந்தே  பாடசாலைகளிற்கு இடையிலான போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரராக இருந்ததோடு சவலான பந்து வீச்சாளர்கள் பலரையும் திடுக்கிடச் செய்துமுள்ளார்.

இதன் காரணமாக, குஷல் மெண்டிஸிற்கு தனது 15ஆவது வயதிலேயே தேசிய ரீதியிலான பொறுப்புக்களை ஏற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னரும் தொடர்ச்சியாக தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்ததன் மூலம் கடந்த 2014இல் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கிண்ணத்திற்கு இலங்கை அணியினை தலைமை தாங்கும் பொறுப்பினையும் அவர் பெற்றுக்கொண்டார்.

மெண்டிஸின் தலைமையில் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி

தனக்கு எவ்வாறு தேசிய அணியை தலைமை தாங்க வாய்ப்பு கிட்டியது என்பதனை மெண்டிஸ் இவ்வாறு நினைவு கூர்ந்தார்.

அவுஸ்திரேலியாவில் 2012இல் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கிண்ண தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து 2013இன் ஆரம்பத்தில் இருந்து எப்படியாவது அடுத்த உலக கிண்ணத்தில் வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் கடுமையாக உழைத்தேன். இதனால், 2014இல் ஐக்கிய அரபு இராட்சியத்தில் இடம்பெற்ற உலக கிண்ணத்திற்கு இலங்கை அணியை தலைமை தாங்கும் வாய்ப்பே எனக்கு கிடைத்தது. எனது தாயகத்தை வழிநடாத்தியதனை அனைத்திலும் விட சிறந்த கெளரவமாக நான் கருதுகின்றேன்

Kushal Mendis 03குறித்த உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. எனினும் குஷல் மெண்டிஸ் இத்தொடரில் இலங்கை அணி விளையாடிய முதலாவது போட்டியில் 91 ஓட்டங்களை பெற்று, ஜிம்பாப்வே அணியை வீழ்த்த பெரும் உதவியாக இருந்தார். அத்துடன், இத்தொடரில் மொத்தமாக 167 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்கள் குவித்த ஒரு முன்னணி வீரராகவும் அவர் திகழ்ந்தார்.

திருப்பு முனையான சுற்றுத்தொடர்கள்

2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற இலங்கை இளையோர் அணி மற்றும் தென்னாபிரிக்க இளையோர் அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 170 ஓட்டங்களை குவித்த மென்டிஸ், தனது துடுப்பாட்ட திறமையினை மீண்டும் வெளிக்காட்டி இருந்தார். இதனால், அப்பொழுது மிலிந்த சிறிவர்தன தலைமையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அபிவிருத்தி அணியின் குழாமில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பு மூலம் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இடம்பெற்ற மூன்று நாட்கள் கொண்ட மொயின் உத் தவ்லா தொடரில் சிறப்பாக பிரகாசித்தார். இதன் காரணமாகவே குசல் மெண்டிஸுக்கு 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இலங்கை தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு முதல் முறையாகக் கிடைத்தது.

இதனை கீழ்க்கண்டவாறு குஷல் குறிப்பிட்டிருந்தார்.

நான் ஒரு சதத்தினையும் (156), இரண்டு அரைச் சதங்களையும் இந்தியாவில் இடம்பெற்ற தொடரில் பெற்றிருந்தேன். எனது இந்த ஆட்டம் காரணமாகவே என்னை மேற்கிந்திய தீவுகள் உடனான தொடரில் அழைத்திருந்தார்கள் என நான் முழுமையாக நம்புகின்றேன். அத்தருணத்தில் வெறும் 20 வயதுடைய நான் இலங்கை அணிக்காக முதல் தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் எதிர்பார்ப்புகளுடன்  இருந்தேன்

முதல்தர கிரிக்கெட்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டிற்கு….

இவருக்கு தனது கச்சிதமான துடுப்பாட்டத்தின் மூலம் மிக வேகமாக தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்தது. தேசிய அணியில் வாய்ப்பு கிடைப்பதற்கு 2 வருடங்களுக்கு முன்னரே அவர் முதல்தர போட்டிகளில் தடம் பதித்தார். வெறும் 23 முதல்தர போட்டிகளில் விளையாடிய நிலையில், தனது தேசிய அணி பிரவேசத்தை பெற்றமை அவரது திறமைக்கு மற்றொரு சான்றாக அமைந்தது.

23 போட்டிகளிலும், 31.07 என்கிற ஓட்ட சராசரியுடன் 1,200 ஓட்டங்களை மென்டிஸ் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் போட்டிகளிலிருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவது என்பது பலருக்கு சிக்கலாக இருப்பினும் குஷல் மெண்டிஸ் தனது நேர்த்தியான துடுப்பாட்டத்தினால் சர்வதேச போட்டிகளிலும் பெரிய அளவில் அழுத்தம் எதனையும் சந்திக்கவில்லை.

உண்மையில் உள்ளூர் போட்டிகளுக்கும், சர்வதேச போட்டிகளுக்கும் பாரிய வித்தியாசம் இருப்பதாக நான் கருதுகின்றேன். நான் குறைந்த எண்ணிக்கையான முதல்தர போட்டிகளில் மாத்திரம் விளையாடிய காரணத்தில் பெரிய அனுபவம் எதனையும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் எனக்கு பெரிய அணிகளை எப்படி கையாள்வது என்பதற்கான உதவிகள் அளிக்கப்பட்டிருந்தது. அதனைவிட நான் விரும்பியபடி அவ்வணிகளில் செயலாற்றுவதற்கான சுதந்திரமும் எனக்கு எப்போதும் தரப்பட்டிருந்தது. இதனால் சிறப்பாக செயற்பட முடிந்தது

மெண்டிஸ், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தனது முதலாவது தேசிய போட்டித்தொடரில், துடுப்பாட்ட வரிசையில் மூன்றாவது இடத்தில் களமிறங்கியிருந்தார். இதனை அடுத்து நியூசிலாந்துடனான தொடரில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடினார்.

இது சரிவராததை தொடர்ந்து அடுத்து இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான தொடரில் மீண்டும் மூன்றாவது இடத்தில் விளையாடும் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி, கடினமான பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு துடுப்பாடினார். இதனால், எதிர்காலத்தில் தனக்கு பொருத்தமான இடம் அதுதான் என்பதனை அவர் உறுதி செய்துகொண்டார்.

என்னை என் பாணியில் விளையாடுவதற்கு இலங்கை அணியின் தலைவர், உபதலைவர், முகாமையாளர்கள் என அனைவரும் ஊக்கம் தந்தனர். அடுத்து நான் பந்தை எவ்வாறு பதம் பார்த்து அடிப்பது என்பதிலேயே குறியாக இருந்தேனே தவிர, பெரிய பந்து வீச்சாளர்களான டிம் சவுத்தி, ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவார்ட் ப்ரோட் ஆகியோரின் பெயரினை கண்டு பயம்கொள்ளவில்லைஎன குஷல் மெண்டிஸ் தனது நம்பிக்கையை வார்த்தைகளால் எமக்குத் தெரிவித்தார்.

இதுவரை 28 இரண்டு வகையான (டெஸ்ட்,ஒருநாள்) போட்டிகளில் விளையாடியுள்ள மெண்டிஸ் 9 அரைச் சதங்களையும் ஒரு சதத்தினையும் பெற்றுள்ளதோடு இரண்டு வகையான போட்டிகளிலும் 30 இற்கு மேல் ஓட்ட சராசரியையும் வைத்துள்ளார்.

விக்கெட் காப்பாளராக குஷல் மெண்டிஸ் விக்கெட் காப்பாளராக குஷல் மெண்டிஸ்

துடுப்பாட்டத்தினை ஆரம்பித்து 20-30 வரையான ஓட்டங்களை பெறுவது எனக்கு இலகுவாக இருக்கும். நான் எப்போதும் ஒரு நீண்ட இன்னிங்சினையே தொடர விரும்புவேன். இதனை தொடர்ந்து 50 ஓட்டங்களை பெற்றவுடன் சந்தோசமாக இருக்கும். ஆனால் அதனை நூறு ஓட்டங்களாக மாற்றுவதில் நான் பலமுறை தோல்வி கண்டுள்ளேன்.” என தனது கடந்த போட்டிகளின் அனுபவங்களை அவர் குறிப்பிட்டார்.

துடுப்பாட்டத்திற்கு துணை கொடுத்த விக்கெட் காப்பு பணி

குஷல் மெண்டிஸ் சிறுவயதிலிருந்தே  விக்கெட் காப்பாளராக செயற்பட்டு வந்தவர். அவர் துடுப்பாட்டத்தில் இவ்வாறு சிறந்த முறையில் பிரகாசிப்பதற்கு விக்கெட் காப்பாளராக இருந்தமை முக்கிய உதவியாக இருந்துள்ளது. எனினும் விக்கெட் காப்பாளருக்குப் பஞ்சம் அற்ற இலங்கை அணியில் தற்பொழுது குஷல் சாதாரண களத்தடுப்பாளராகவே செயற்படுகின்றார். ்

அது குறித்து அவர் குறிப்பிடுகையில், விக்கெட் காப்பாளராக இருக்கும் ஒருவரின் கவனம் எப்போதும் பந்தை நோக்கியே இருக்கும். இது எனது துடுப்பாட்டத்தில் பந்தின் மீது கவனம் செலுத்த உதவியாக இருக்கும். ஆனால், இப்போது ஏனைய களத்தடுப்பு வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.”

மெண்டிசின் துடுப்பாட்ட நுணுக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு துடுப்பாட்ட வீரர் சாதிக்க வேண்டுமெனில் அவர் பலமான அடித்தளம் ஒன்றினை கொண்டிருக்க வேண்டும். அதாவது பந்துகளை எப்போதும் தடுத்து ஆடும் மாறாத  திறன் ஒன்றினையும், பந்து எந்த இடத்தில் பட்டால் சிறந்த பயனைப் பெறலாம் என்ற நுணுக்கத்தினையும் தனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே சரிவர புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த கிரகம் போர்ட், குஷல் மெண்டிஸ் குறித்து குறிப்பிடுகையில்,  உலகின் எந்த இடத்திற்கு போனாலும் குஷல அவரின் அந்த அழகிய துடுப்பாட்ட நுணுக்கங்கள் மூலம் சாதிப்பார் என்று உறுதியாக குறிப்பிட்டார்.

இதுவரை மெண்டிஸ் தனக்கு உதவியாக வைத்திருக்கும் துடுப்பாட்ட நுணுக்கங்களே போதுமாக இருப்பினும், இடத்திற்கு ஏற்றாற்போல் சில நிலைமைகளை கருத்திற்கொண்டு அவரது துடுப்பாட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும். இதனை மெண்டிஸே இவ்வாறு ஒப்புக்கொள்கின்றார்.

எனது துடுப்பாட்ட நுணுக்கத்தில் நான் இங்கிலாந்துடனான தொடரில் பெரிய மாற்றங்கள் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. இருப்பினும் பந்து வரும் போது துடுப்பாட்ட மட்டையை கீழாக தூக்கி அடிக்கும் ஒரு சிறிய மாற்றத்தினை மேற்கொண்டிருந்தேன். இது எனக்கு ஸ்வீங் பந்துகளையும் நேர்த்தியான வேகப்பந்து வீச்சுகளையும் சமாளிக்க உதவியிருந்தது.

இன்னும், மதிவ்ஸ் மற்றும் ஷந்திமால் ஆகியோரின் ஆலோசனைப்படி, மிடில் ஸ்டம்பில் இருந்து ஆடாமல் ஓப் ஸ்டம்பில் இருந்து ஆட பணிக்கப்பட்டேன். இதன் காரணமாக எனது துடுப்பாட்ட எல்லைக்கு அப்பால் வரும் பந்துகளை ஆடாமல் இலகுவாக விடமுடியுமாறு இருந்தது

உலகிற்கு மெண்டிசை அறிய வைத்த அவுஸ்திரேலியாவுடனான தொடர்

சவால் மிக்க பந்து வீச்சாளர்களான மிச்சல் ஸ்டார்க், ஜோஸ் ஹெசல்வூட், மிச்சல் மார்ஸ் ஆகியோரை கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சாதிப்பேன் என்று குஷல் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அது போன்றே குறித்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணி தடுமாறிய வேளையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி தனது கன்னி சதத்தினை (176) பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு குஷல் வழிவகுத்திருந்தார். இந்த போட்டியே, ஓரளவு அறியப்பட்டிருந்த குசல் மெண்டிஸை பலரும் திரும்பிப் பார்கும் அளவிற்கு மிகவும் பிரபல்யமாக மாற்றியது எனலாம்.

அத்துடன், குறித்த டெஸ்ட் தொடரில் 49.33 என்கிற ஓட்ட சராசரியுடன் மொத்தமாக 296 ஓட்டங்களினைப்பெற்று  அவுஸ்திரேலிய அணியினை வைட் வாஷ் செய்யவும் தனது  பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

அதன் காரணமாக, பின்னர் இடம்பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்யும் முக்கிய வீரர் என்ற எதிர்பார்ப்பை அவர் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தார்.

முக்கோண ஒருநாள் தொடரின் வெற்றிக்கு வழிவகுத்த குஷல்

ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதிய இத்தொடரின் ஆரம்ப போட்டிகளில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் விதமான ஆட்டத்தினை குசல் மெண்டிஸ் வெளிப்படுத்தவில்லை. எனினும், தொடர்ந்து இடம்பெற்ற போட்டிகளில் தனது சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய மெண்டிஸ் அத்தொடரின் ஆட்ட நாயகனாக தெரிவாகினார்.

2015ஆம் ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதைப் பெறும்பொழுது 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதைப் பெறும்பொழுது

குறிப்பாக, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது போட்டியில் 94 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை இறுதிப்போட்டிக்கு செல்ல வழிநடாத்தியதுடன், இறுதிப்போட்டியில் அரைச்சதம் கடந்து வெற்றியிலக்கினை நெருங்க வழியமைத்து அணிக்கு பெரிய பங்களிப்பை அவர் ஆற்றினார்.

குஷல் மெண்டிஸ் இத்தொடரில் 55.66 என்ற ஓட்ட சராசரியுடன் 167 ஓட்டங்களை இலங்கை அணிக்காக குவித்திருந்தார்.

சிறந்த எதிர்கால கிரிக்கெட் வீரருக்கான விருது

ஏற்கனவே பல விருதுகளை சுவீகரித்த குஷல் மெண்டிஸிற்கு கடந்த வாரம் தனது கிரிக்கெட் வாழ்வின் மறக்க முடியாத ஒரு விருது கிடைத்தது. இலங்கை கிரிக்கெட்டின் மிகப் பெரிய விருது வழங்கும் விழாவான டயலொக் கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் ”2015ஆம் ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருது” கிடைத்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த ஆரம்ப காலகட்டத்திலேயே குஷல் இந்த விருதைப் பெற்றமை, தனக்கு சிறந்த கிரிக்கெட் எதிர்காலம் இருக்கின்றது என்பதை காண்பிக்கின்றது.

அதேவேளை, தான் எதிர்காலத்தில் இலங்கை அணிக்கு மிகப்பெரிய அளவில் பங்காற்ற வேண்டும் என்பதையும் இந்த விருது அவருக்கு உணர்த்தியிருக்கும்.

இறுதியாக

தனது நேர்த்தியான, துணிச்சல் மிக்க துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணியைப் பலப்படுத்திய ஓய்வு பெற்ற வீரர்களான மஹேல மற்றும் சங்கக்காரவின் இடத்தினை பூர்த்தி செய்ய தயராகி வருகின்றார் குஷல் மெண்டிஸ்.

இந்நிலையில், தன்னை இந்த அளவிற்கு சர்வதேச அளவில் பேசப்படும் ஒரு வீரராக ஆக்குவதற்கு உதவிய அனைவரையும் நினைவு கூர்வதற்கும் அவர்களுக்கு நன்றி கூறுவதற்கும் குஷல் மறக்கவில்லை.

நான் துடுப்பாட்டத்தில் மோசமாக ஆடும் வேளையில், என்னை கஷ்டப்படுத்தும் விதமாகவோ, மோசமாக நடத்தும் விதமாகவோ மற்றையோர் இருப்பதில்லைஎன்னுடன் இருந்த ஏனைய வீரர்கள் எனக்கு எப்போதும் ஆதரவு நல்கியே இருந்துள்ளனர். அதன் காரணமாகவே தற்பொழுது சிறந்த முறையில் விளையாட முடிகின்றது.

எனது பெற்றோர், எனது மாமாமார், அனைவரும் நான் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய நிலைகளில் தொடர்ந்து எனக்குs தன்னம்பிக்கையினை ஊட்டி வந்தனர். என் மீது நம்பிக்கை வைத்த அனைத்து உள்ளங்களிற்கும் நான் உளப்பூர்வமான எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

http://www.thepapare.com

Categories: merge-rss

கால்பந்து போட்டியை போல கிரிக்கெட் போட்டியில் சிவப்பு அட்டை

Thu, 08/12/2016 - 13:03
கால்பந்து போட்டியை போல கிரிக்கெட் போட்டியில் சிவப்பு அட்டை

 

 
 

கிரிக்கெட் போட்டியில் களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரருக்கு சிவப்பு அட்டை காட்டும் முறை கொண்டு வர வேண்டும் என்று எம்.சி.சி. பரிந்துரை செய்து உள்ளது.

 
 
 
 
கால்பந்து போட்டியை போல கிரிக்கெட் போட்டியில் சிவப்பு அட்டை
 
மும்பை:

லண்டனில் உள்ளது மெர்லிபோர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) இந்த கிளப் தான் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள், பரிந்துரைகள் ஆகியவற்றை ஆராய்ந்து ஐ.சி.சி.யிடம் தெரிவிக்கும்.

கிளப் தலைவராக மைக் பிரியர்லே, தலைமை நிர்வாகிகள் ஜான் ஸ்டெப்ஹன்சன் உறுப்பினர்களாக ரிக்கி பாண்டிங், ரமீஸ் ராசா ஆகியோர் உள்ளனர்.

இந்த கிளப் கமிட்டி, கிரிக்கெட்டில் மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை தெரிவித்துள்ளது. கால்பந்து, ஆக்கி போட்டிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரர்கள் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்படும் முறை உள்ளது.

அதேபோல் கிரிக்கெட் போட்டியில் களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரருக்கு சிவப்பு அட்டை காட்டும் முறை கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரை செய்து உள்ளது.

இதேபோல் ‘பேட்’ அளவு குறித்தும் யோசனை தெரிவித்துள்ளது. அதுபற்றி ரிக்கி பாண்டிங் கூறுகையில், 60 சதவீத வீரர்கள் பேட் விளிம்பு பகுதி 40 மில்லி மிட்டர் அளவு இருக்க ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

நாங்கள் பேட் முனை பகுதிகள் 38 முதல் 42 மில்லி மீட்டர் வரை இருக்க விரும்புகிறோம். பேட் விளிம்பில் பந்து பட்டு சிக்சர் செல்வதை நாம் பார்த்து வருகிறோம். பேட்டிங், பந்துவீச்சு இரண்டுக்கும் சரி சமமான அளவு வாய்ப்பு அளிக்க பரிந்துரைந்துள்ளோம்.

பேட் அளவு மாறுவதால் அதிரடியாக விளையாடும் வீரர்களுக்கு பாதிப்பு இல்லை. பவுண்டரி, சிக்சர் தாராளமாக அடிக்கலாம் என்றார்.

சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறுகையில், ரஞ்சி கிரிக்கெட்டில் இரு ஆடுகளங்கள் முறை பயன்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்து இருந்தார். ஆனால் இதை எம்.சி.சி. கிளப் உறுப்பினர்கள் ஏற்க மறுத்து உள்ளது.

ரஞ்சி கிரிக்கெட் என்பது உண்மையான போட்டியில் விளையாடுவது போன்ற உணர்வை தருகிறது. அதில் இரு வேறு ஆடுகள முறையை பின்பற்றினால் பயிற்சிக்குரிய போட்டியாகிவிடும் என்று கூறி உள்ளது.

எம்.சி.சி. கிளப் கமிட்டி உறுப்பினர்கள் தெரிவித்துள்ள பரிந்துரைகள் முதன்மை கமிட்டி குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த குழு பரிந்துரைகளை ஏற்று கொண்டால் அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/08120940/1054949/Red-card-in-cricket-as-MCC-goes-the-football-way.vpf

Categories: merge-rss

இலங்கை அணிக்கு புதிய முகாமையாளர் நியமனம்

Thu, 08/12/2016 - 09:52
இலங்கை  அணிக்கு புதிய முகாமையாளர் நியமனம்

 

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக முன்னாள் இலங்கை வீரர் ரஞ்சித் பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

asfas.jpg

எதிர்வரும் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா  அணிகளுக்கெதிராக இடம்பெறவுள்ள தொடர்களுக்கு இவர் இலங்கை அணியின் முகாமையாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்  போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: merge-rss

தென் ஆபிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய.

Wed, 07/12/2016 - 19:03
தென் ஆபிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய.
 
received_10211228851506640.jpeg

தென் ஆபிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய.

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளது.

இதுவரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக வெளியிடாத பட்டியலில்  24 வயதான வலதுகை புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய் என்ற வீரர் இடம்பெற்றுள்ளார்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் மிகசாதுரியமாக சுவிங் முறைமூலம் பந்துகளை வீசுவதில் வல்லவரான இவர் ,BRC கழகத்துக்காக விளையாடி வருபவர் என்றும் அறியக் கிடைக்கிறது.

ஆயினும் சிம்பாவே தொடரில் கலக்கிய அசேல குணரத்ன , நிரோஷான் டிக்கவெல்லா, ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் அசத்திய சூழல் பந்து வீச்சாளர் லக்சன் சண்டகன் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

மத்தியூஸ், சந்திமால் ஆகியோர் மீளவும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில் திமுத் கருணாரத்ன, கௌஷல் சில்வா, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், உப்புல் தரங்க , தனஞ்சய டீ  சில்வா, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், துஷ்மந்த சமீரா, லஹிரு குமார , விகும் சஞ்சய ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af/

Categories: merge-rss