விளையாட்டுத் திடல்

இந்தியா-இங்கிலாந்து மோதல்: சென்னை டெஸ்ட் போட்டி மாற்றப்படுமா?

Wed, 07/12/2016 - 09:33
இந்தியா-இங்கிலாந்து மோதல்: சென்னை டெஸ்ட் போட்டி மாற்றப்படுமா?

 

ஜெயலலிதாவின் திடீர் மறைவால் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
 
 சென்னை டெஸ்ட் போட்டி மாற்றப்படுமா?
 
சென்னை:

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை சென்னையில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் இந்த டெஸ்ட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அஜய் ஷிர்கே நேற்று கூறும் போது, ‘சென்னை டெஸ்ட் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சில நேரம் சூழ்நிலையையும், மக்களின் உணர்வுகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அங்கு நிலவும் சூழல் குறித்து அறிய தமிழக கிரிக்கெட் சங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/07140405/1054784/India-England-match-Chennai-to-be-transformed-into.vpf

Categories: merge-rss

ஒரே ஆண்டில் 6 சதம் அடித்து வார்னர் சாதனை

Wed, 07/12/2016 - 07:26
ஒரே ஆண்டில் 6 சதம் அடித்து வார்னர் சாதனை

ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

 
 
 
 
ஒரே ஆண்டில் 6 சதம் அடித்து வார்னர் சாதனை
 
* ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த ஆண்டில் 22 ஆட்டங்களில் விளையாடி 6 சதம், 4 அரைசதம் உள்பட 1,232 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் (இரண்டு முறை 2003, 2007-ம் ஆண்டு), மேத்யூ ஹைடன் (2007) ஆகியோர் ஒரு ஆண்டில் 5 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

* ஆஸ்திரேலிய அணியின் 3-வது அதிகபட்ச ஸ்கோராக (378 ரன்) இது அமைந்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 434 ரன்களும் (2006), ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 417 ரன்களும் (2015) எடுத்த ஸ்கோர் முதல் இரு அதிகபட்சமாக நீடிக்கிறது.

* இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து பவுலர்கள் மேட் ஹென்றி 91 ரன்களும், டிரென்ட் பவுல்ட் 80 ரன்களும் வாரி வழங்கினர். ஒரே ஆட்டத்தில் நியூசிலாந்து பவுலர்கள் இருவர் 80 ரன்களுக்கு மேல் வழங்கியது இதுவே முதல் முறையாகும்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/07085009/1054704/David-Warner-beats-record-6-century-in-one-year.vpf

Categories: merge-rss

விமான விபத்தில் உயிரிழந்த வீரர்களின் செப்போகொன்சே கழகம் சம்பியனாகப் பிரகடனம்

Wed, 07/12/2016 - 06:53
விமான விபத்தில் உயி­ரி­ழந்த வீரர்­களின் செப்­போ­கொன்சே கழகம் சம்­பி­ய­னாகப் பிர­க­டனம்
2016-12-07 12:20:11

தென் அமெ­ரிக்க கால்­பந்­தாட்ட கூட்­டு­சம்­மே­ள­னத்­தினால் பிரேஸில் கால்­பந்­தாட்டக் கழ­க­மான சேப்­போ­கொன்சே கழ­கத்­திற்கு கோபா சுடா­அ­மெ­ரிக்­கான வெற்றிக் கிண்ணம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

 

21125600-2.jpg

 

 

கொலம்­பி­யாவில் நடை­பெ­ற­வி­ருந்த முதலாம் கட்ட இறுதிப் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்­காக இக் கழ­கத்தின் வீரர்கள் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த விமானம் விபத்­திற்­குள்­ளா­னதில் அணியின் பெரும்­பா­லான வீரர்கள் உயி­ரி­ழந்­தனர். 

 

இதனை அடுத்து சேப்­போ­கொன்சே கழ­கத்­திற்கு சம்­பியன் பட்­டத்­துடன் வெற்றிக் கிண்­ணத்தை வழங்­கு­மாறு அதன் எதி­ர­ணி­யான அத்­லெட்­டிகோ நெஷனல் விடுத்த கோரிக்­கையை தென் அமெ­ரிக்க கால்­பந்­தாட்ட கூட்­டு­சம்­மே­ளனம் நிறை­வேற்­றி­யது.

 

அதே­வேளை, அத்­லெட்­டிகோ நெஷனல் கழ­கத்தின் விட்­டுக்­கொ­டுக்கும் மனப்­பான்­மையை மதிக்கும் வகையில் அக் கழ­கத்­திற்கு நேர்த்­தி­யான (பெயார் ப்ளே) விளை­யாட்­டுக்­கு­ரிய விருதை தென் அமெ­ரிக்க கால்­பந்­தாட்ட கூட்­டு­சம்­மே­ளனம் வழங்­கி­யது.

 

சேப்­போ­கொன்சே கழ­கத்­திற்கு 2 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களும் அத்­லெட்­டிகோ நெஷனல் கழ­கத்­திற்கு 1 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களும் பணப்­ப­ரி­சாக வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

 

இந்த விமான விபத்தில் உயிர்­தப்­பிய அறு­வரில் மூவர் செப்­போ­கொன்சே கழ­கத்தைச் சேர்ந்த வீரர்­க­ளாவர்.

 

21125600--1.jpg

 

விபத்தில் பலி­யான வீரர்­க­ளது இறுதி ஆரா­த­னைகள் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்­ற­போது ஏரா­ள­மானோர் கலந்­து­கொண்டு தங்­க­ளது அனு­தா­பங்­க ளைப் பகிர்ந்­து­கொண்­டனர். இதே­வேளை, இக்கழ­கத்தில் உறுப்­புரிமை பெறு­வ­தற்­காக இரண்டே தினங்­களில் 13,000 பேர் விண்­ணப்பித்துள்­ளனர்.  

 

செப்­போ­கொன்சே கழ­கத்­திற்கு தங்­க­ளது வீரர்­களை இரவல் கொடுக்க பிரேஸில் தேசத்தின் முன்னணி கால்பந்தாட்டக் கழகங்கள் உறுதி வழங்கியுள்ளன. 

 

அத்துடன் செப்போகொன்சே கழகம் மூன்று வருடங்களுக்கு தரமிறக்க ப்படக்கூடாது என்ற கோரிக்கையையும் அக்கழகங்கள் முன்வைத்துள்ளன.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21125#sthash.yYz1DVTN.dpuf
Categories: merge-rss

2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா நியூஸிலாந்து - வில்லியம்சனுக்கு 100-வது ஆட்டம்

Tue, 06/12/2016 - 05:46
2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா நியூஸிலாந்து - வில்லியம்சனுக்கு 100-வது ஆட்டம்

 

 
william_3099604f.jpg
 
 
 

ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இன்று நடைபெறுகிறது.

வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா வில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இந்திய நேரப்படி இன்று காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் நியூஸிலாந்து அணி தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் விளையாடக்கூடும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் படுதோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. முதல் போட்டியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 164 ரன்கள் விளாசி அணியின் ஒட்டுமொத்த ரன்குவிப்பில் முக்கிய பங்காற்றினார். இன்றைய ஆட்டத்தி லும் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

நியூஸிலாந்து தொடக்க வீரரான மார்ட்டின் குப்தில் கடந்த ஆட்டத் தில் தனிநபராக போராடினார். 102 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்த அவருக்கு மற்ற வீரர்கள் உறுதுணை யாக ரன் சேர்க்க தவறினர்.

கடைசி கட்டத்தில் ஓவருக்கு 9 ரன்கள் விகிதம் தேவைப்பட்ட நிலையில் காலின் முன்ரோ, மேட் ஹென்றி ஜோடி அதிரடியாக விளையாடியது. ஆனால் இவர்களை 44 ஓவரில் கம்மின்ஸ் வெளியேற்றியதால் தோல்வி தவிர்க்க முடியாததாக அமைந்தது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என கருதப்படுகிறது. கான்பரா மைதானம் வழக்கமாகவே ரன் குவிப்புக்கு சாதகமானதுதான். எனினும் இங்கு நடைபெற்ற கடைசி 6 ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் ஆரோன் பின்சுக்கு கான்பரா மைதானம் மிகவும் ராசியானது. கடைசியாக அவர் இங்கு விளை யாடிய 3 ஆட்டங்களில் இரு சதங் கள் அடித்துள்ளார். சிட்னி ஆட்டத் தில் டக்-அவுட் ஆன அவர் இன்று ரன்வேட்டை நிகழ்த்தக்கூடும்.

இரு அணியிலும் இன்று சிறு மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. உள்ளூர் போட்டி தொடர்பாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ் வெல் இன்று களமிறங்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் நியூஸிலாந்து அணியில் கடந்த ஆட்டத்தில் அறிமுக பந்து வீச்சாளராக விளையாடிய பெர்குசன் நீக்கப்படக்கூடும். சிட்னி போட்டியில் அவர் 9 ஓவர்கள் வீசிய நிலையில் 73 ரன்களை வாரி வழங்கியிருந்தார். மேலும் 4 நோ பால்கள் வீசி, 4 ப்ரீஹிட்டுகளையும் தாரை வார்த்தார். இதனால் பெர்குசன் நீக்கப்பட்டு டிம் சவுத்தி சேர்க்கப்படக்கூடும்.

மேலும் பேட்டிங்கை வலுப்படுத்தும் வகையில் ஹென்றி நிக்கோல்ஸ் அணியிடம் இடம் பெற வாய்ப்புள்ளது. இன்றைய ஆட்டம் வில்லியம்சனுக்கு 100-வது ஒருநாள் போட்டியாகும். இதனால் அவர் மீது சற்று எதிர்பார்ப்பு உள்ளது.

http://tamil.thehindu.com/sports/2வது-ஒருநாள்-போட்டியில்-இன்று-மோதல்-பதிலடி-கொடுக்குமா-நியூஸிலாந்து-வில்லியம்சனுக்கு-100வது-ஆட்டம்/article9412271.ece

Australia 182/1 (33.1 ov)
New Zealand
New Zealand won the toss and elected to field
Categories: merge-rss

வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி ஆகியோரின் அனுபவம் தேவை ; அரவிந்த

Mon, 05/12/2016 - 14:39
வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி ஆகியோரின் அனுபவம் தேவை ; அரவிந்த

 

 

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி, அசங்க குருசிங்க போன்ற முன்னாள் வீரர்களின் அனுவம் மற்றும் அவர்களின் அறிவுத்திறன் போன்றன தேவைப்படுவதாக இலங்கை கிரிக்கெட் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்தார்.

DSC_6959.JPG

“ எதிர்கால திட்டத்திற்கான பயிற்சி ” எனும் திட்டத்தின் கீழ் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கு விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

DSC_6934.JPG

குறித்த கருத்தரங்கின் பின்னர் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

DSC_6928.JPG

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

அடிமட்டத்தில் இருந்து வீரர்களை உருவாக்குவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். ஹசன் திலகரட்ண, உப்புல் சந்தன  ஆகியோரின் அனுபவம் மற்றும் அறிவு ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே துடுப்பாட்டத்திற்கு ஹசனையும் களத்தடுப்புக்கு சந்தனவையும் நியமித்துள்ளோம்.

DSC_6940.JPG

எதிர்காலத்தில் இவ்வாறான பயிற்சிக் கருத்தரங்குகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். முக்கியமாக துடுப்பாட்ட பயிற்சியை இலங்கை  ஏ அணி மற்றும் மாகாண அணிகளுக்கு வழங்க திட்மிட்டுள்ளோம்.

அந்தவகையில் உப்புல் சந்தன களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது களத்தடுப்பு அனுபவம் மற்றும் திறன்களை வீரர்களுக்கு பகிர்ந்து கொள்வார்.

 

இதுவொரு நீண்டகால திட்டம் என்பதுடன் வீரர்கள் இன்னும் மேலும் வளர்ச்சியடைய வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி, அசங்க குருசிங்க போன்ற முன்னாள் வீரர்களின் அனுவம் மற்றும் அவர்களின் அறிவு போன்றன தேவைப்படுகின்றது.

DSC_6918.JPG

தனஞ்சய, குஷல் மென்டிஸ் போன்ற வீரர்கள் அவுஸ்திரேலியா போன்ற அணிகளுக்கெதிராக நன்றாக விளையாடக் கூடியவர்கள். இவ்வாறான வீரர்களை உருவாக்கதுடன்  வீரர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கே இவ்வாறான பயிற்சிக் கருத்தரங்குகள் முன்னெடுக்கப்படுகின்றன.

DSC_6920.JPG

ஓட்டங்களை குவிப்பதால் தேசிய அணியில் வீரர்களை தெரிவுசெய்ய முடியாது. இக்கட்டான சூழ்நிலைகளில் தமது மூளையை பாவித்து தன்னம்பிக்கையுடன் விளையாடுபவர்களே எதிர்காலத்தில் தேசிய அணியில் இடம்பிடிப்பர் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/14179

Categories: merge-rss

20 இன் கீழ் பீபா மகளிர் கால்பந்தாட்டம்; வட கொரியா உலக சம்பியன்

Mon, 05/12/2016 - 04:56
20 இன் கீழ் பீபா மகளிர் கால்­பந்­தாட்டம்; வட கொரியா உலக சம்­பியன்
2016-12-05 09:51:44

20 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான பீபா (FIFA)  உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் வட கொரிய மகளிர் அணி சம்­பி­ய­னா­னது. பிரான்ஸ் இரண்டாம் இடத்­தையும் ஜப்பான் மூன்றாம் இடத்­தையும் பெற்­றன.

 

21071North-korea.jpg

 

பப்­புவா நியூ கினியில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் பிரான்ஸை எதிர்த்­தாடி வட கொரியா 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்­றி­பெற்று உலகக் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது.

 

20 வய­துக்­குட்­பட்ட மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட வர­லாற்றில் 10 வரு­டங்­களின் பின்னர் இரண்­டா­வது தட­வை­யாக வட கொரியா சம்­பி­ய­னா­கி­யுள்­ளது. 

 

இவ் வருட இறுதிப் போட்­டியின் 17ஆவது நிமி­டத்தில் கிறேஸ் கியோரோ கோல் ஒன்றைப் போட்டு பிரான்ஸ் அணியை முன்­னி­லையில் இட்டார். போட்­டியின் ஆரம்­பத்­தி­லேயே பிரான்ஸ் கோல் போட்­டதால் அவ்­வணி சம்­பி­யா­னா­கலாம் என்ற எதிர்­பார்ப்பு அரங்கில் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யது.

 

ஆனால் அடுத்த 13ஆவது நிமி­டத்தில் வட கொரியா சார்­பாக  ஜொங் சிம் வீ கோல் நிலையை சமப்­ப­டுத்த போட்­டியில் சூடு பிடிக்க ஆரம்­பித்­தது.

 

இடை­வே­ளையின் பின்னர் சிறந்த வியூ­கங்­களை அமைத்து வேகத்­து­டனும் விறு­வி­றுப்­பு­டனும் விளை­யா­டிய வட கொரியா பியொங் ஹுவா கிம் 55ஆவது நிமி­டத்தில் போட்ட கோல் மூலம் முன்­னிலை அடைந்­தது.

 

போட்­டியின் 87ஆவது நிமி­டத்தில் கிடைக்­கப்­பெற்ற பெனல்­டியை வட கொரிய வீராங்­கனை சோ யொன் ஜொன் இலக்கு தவ­றாமல் கோலினுள் புகுத்தி தனது அணி சம்­பி­ய­னா­வதை மேலும் உறு­தி­செய்தார்.

 

21071Untitled-1.jpg

 

இப் போட்­டிக்கு முன்­ப­தாக நடை­பெற்ற மூன்றாம் இடத்தைத் தீர்­மா­னிக்கும் போட்­டியில் ஐக்­கிய அமெ­ரிக்­காவை 1 – 0 என்ற கோல் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்ட ஜப்பான் வெண்­கலப் பதக்­கத்தை தன­தாக்­கிக்­கொண்­டது.

 

ஆசிய நாடுகள் ஆதிக்கம்
இவ் வருடப் போட்­டி­களில் ஒரு விசேடம் என்­ன­வென்றால் பிர­தான கிண்ணம் உட்­பட வழங்­கப்­பட்ட விசேட பரி­சு­களில் இரண்டைத் தவிர மற்­றைய அனைத்­தையும் இரண்டு ஆசிய நாடுகள் பெற்­றதன் மூலம் தங்­க­ளது ஆதிக்­கத்தை வெளிப்­ப­டுத்­தின.

 

அதி சிறந்த வீராங்­க­னைக்­கான தங்கப் பந்து: சுகிட்டா ஹினா (ஜப்பான்).
 

அதிக கோல்கள் (5) போட்ட வீராங்­க­னைக்­கான தங்கப் பாதணி: மாமி யூனோ (வட கொரியா) 

 

அதி சிறந்த கோல்­காப்­பா­ளி­னிக்­கான தங்க கையுறை: மிலேனி சவாஸ் (பிரான்ஸ்).

 

நேர்த்­தி­யான விளை­யாட்­டுக்­கு­ரிய விருது: ஜப்பான்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21071#sthash.nu90wevO.dpuf
Categories: merge-rss

சமபல அண்டைய நாடுகளுக்கிடையிலான மோதல்

Mon, 05/12/2016 - 04:14
சமபல அண்டைய நாடுகளுக்கிடையிலான மோதல்
 
 

- ச.விமல்

article_1480762611-Ink2cefbx6.jpg

சமபலமாக உள்ள அயல் நாட்டு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி அணிகள் இரண்டும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் விளையாடும் போட்டிகள், போட்டித்தன்மை மிக்கவையாக மாறியுள்ளன. நியூசிலாந்து அணி, ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பலமான நிலையிலேயே  உள்ளது.

இந்த வருடத்தில் ஏற்கெனவே இரண்டு அணிகளும் மோதியுள்ளன. நியூசிலாந்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில், 2-1 என்ற ரீதியில் நியூசிலாந்து அணி வென்றிருந்தது. இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற தொடரிலும் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. தொடரில் தோல்வியைச் சந்தித்தாலும், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த வருடத்தில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி ஏழு  போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நான்கு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டது. எந்த அணிகளுக்கும், எந்த மைதானங்களிலும் அச்சுறுத்தும் அணியாக திகழும் நியூசிலாந்து அணி, அவுஸ்திரேலியா அணியை வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.

அவுஸ்திரேலியா அணி உலக சம்பியனாக இருந்தாலும், அண்மைக் காலமாக போதியளவு சிறப்பாகச் செயற்படவில்லை. இந்தாண்டு 26 போட்டிகளில் விளையாடியுள்ள அவுஸ்திரேலியா அணி, 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 11 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டது.

தென்னாபிரிக்கா அணியுடனான ஒரு நாள் சர்வதேச போட்டித் தொடரில் வெள்ளையடிப்புச் செய்யப்பட்டு ஐந்து போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. அதற்கு  முன்னர்  இலங்கை அணியை இலங்கையில் வைத்து 4-1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது. அண்மைக்கால தோல்விகள், இவர்களை தடுமாற வைத்துள்ளது. அழுத்தத்துடன் இந்த தொடரில் களமிறங்கவுள்ளனர். எப்படியாவது வெல்லவேண்டும் என்ற நிலை உள்ளது. இல்லாவிட்டால் அணித் தலைவர், வீரர்கள் என சிலருக்கு சாவு மணி காத்திருக்கின்றது எனக்கூறலாம். இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் தொடர் இவர்களுக்கு கடினமாக அமைய  வாய்ப்புகள் உள்ளன.

அவுஸ்திரேலியா அணி தரப்படுத்தலில் முதலிடத்தை இழக்குமா என்ற நிலை உள்ளது. நியூசிலாந்து அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அவுஸ்திரேலியா அணி இரண்டாமிடத்துக்கு பின்தள்ளபப்டும். ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும், முதலிடத்தை அவுஸ்திரேலியா அணி தக்க வைத்துக்கொள்ளும். மூன்றாமிடத்திலுள்ள நியூசிலாந்து அணி , மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அவுஸ்திரேலியா அணியுடன் இணைந்து 115 புள்ளிகளைப் பெறும். நியூசிலாந்து அணி எந்த முடிவை பெற்றாலும் அவர்களின் இடத்தில் மாற்றம் ஏற்படாது. ஆனால் புள்ளிகளில் மட்டும் மாற்றம் ஏற்படும்.

ஒரு நாள் சர்வதேசப் போட்டி தரப்படுத்தல்

1              அவுஸ்திரேலியா               51           6023       118

2              தென்னாபிரிக்கா                52          6024       116

3              நியூசிலாந்து                       46           5133      112

4              இந்தியா                              53           5891       111

5              இங்கிலாந்து                       54           5804       107

6              இலங்கை                           60           6056       101

7              பங்களாதேஷ்                    30           2840       95

8              பாகிஸ்தான்                       51           4555       89

9              மேற்கிந்தியத் தீவுகள்       37           3168       86

10           ஆப்கானிஸ்தான்                26           1341       52

11           சிம்பாப்வே                           50           2409       48

12           அயர்லாந்து                          20           834        42

இரு அணிகளும் 130 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் அவுஸ்திரேலியா அணி 87 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 37 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆறு போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது அவுஸ்திரேலியா அணி மிகப்பலமாகவே இருந்து வந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் நியூசிலாந்து அணி மிகப் பலமாக மாறியுள்ளது. இதுதான் அவுஸ்திரேலியா அணிக்கான பெரிய சவால். அந்தச் சவாலை எப்படி முறியடிக்கப் போகின்றார்கள் என்பது முக்கிய விடயம். அவுஸ்திரேலிய அணியைப் பார்த்ததும் பயந்து போய் அழுத்தத்துக்கு உள்ளாகும் அணிகளில் நியூசிலாந்து அணியும் முக்கியமானதே. அந்த அழுத்தம் மட்டுமே நியூசிலாந்து அணியை பொறுத்தளவில் பின்னடைவைத் தரும் விடயம். இரண்டு அணிகளதும் அண்மைய பெறுபேறுகளை பார்க்கும்போது நியூசிலாந்து அணிக்கு இந்தத் தொடரில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.

- See more at: http://www.tamilmirror.lk/187412/சமபல-அண-ட-ய-ந-ட-கள-க-க-ட-ய-ல-ன-ம-தல-#sthash.NURgNyMu.dpuf
Categories: merge-rss

கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனா வெற்றியை தடுத்த ரியல் மாட்ரிட் கேப்டன்

Sun, 04/12/2016 - 15:41
கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனா வெற்றியை தடுத்த ரியல் மாட்ரிட் கேப்டன்

 

ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனாவின் வெற்றியை தடுத்தார்.

 
கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனா வெற்றியை தடுத்த ரியல் மாட்ரிட் கேப்டன்
 
‘எல் கிளாசிகோ’ என்று அழைக்கப்படும் பரம எதிரிகளான பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் நேற்று ஸ்பெயினில் உள்ள கேம்ப் நவு மைதானத்தில் ‘லா லிகா’ லீக் போட்டியில் மோதின. இந்த போட்டியை நேரில் பார்க்க 98 ஆயிரத்து 485 ரசிகர்கள் வந்திருந்தனர்.

சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பார்சிலோனா அணி களம் இறங்கியது. அதே சமயத்தில் 6 புள்ளிகள் முன்னிலையில் இருக்கும் ரியல் மாட்ரிட் அணி எந்தவிதத்திலும் புள்ளிகளை விட்டு கொடுக்கக் கூடாது என்ற வகையில் களம் இறங்கின.
 
213AC5FB-A702-42D4-ADEA-C6F1039D23CB_L_s


ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடினார்கள். ஆனால், பாதுகாப்பு வீரர்களால் அவர்களால் எளிதில் கோல் அடிக்க முடியவில்லை. ரியல் மாட்ரிட் அணியின் இஸ்கோ 13-வது நிமிடத்தில் மஞ்சள் அட்டை பெற்றார். 28-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியி்ன் முன்னணி வீரர் நெய்மர் மஞ்சள் அட்டை பெற்றார்.

முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரம் தொடங்கியதும் பார்சிலோனா அணியின் கை ஓங்கியது. 53-வது நிமிடத்தில் நெய்மர் அடித்த ‘ப்ரீ ஹிக்’ பந்தை சுவாரஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது.
 
95243676-CDB3-4EC3-92C0-1EC33BBB029A_L_s


அதன்பின் பார்சிலோனா தடுப்பு ஆட்டத்தில் கவனத்தை செலுத்தியது. இதனால் 75-வது நிமிடத்தில் சுவாரஸ், 83-வது நிமிடத்தில் செர்ஜியோ பஸ்குயட்ஸ், 90-வது நிமிடத்தில் சேவியர் மாஸ்செரானோ ஆகியோர் மஞ்சள் அட்டை பெற்றனர்.

ஆட்டம் 90-வது நிமிடத்தை நெறுங்கி கொண்டிருந்தது. அப்போது பார்சிலோனாதான் வெற்றி பெறும் என்று ரசிகளர் எண்ணி கொண்டிருந்தார்கள். ஆனால் சரியாக 90-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் லூகா மோட்ரிக் ப்ரீ ஹிக் மூலம் பந்தை தூக்கி அடித்தார். அதை அந்த அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டி கோலாக்கினார்.

இதனால் 1-1 என போட்டி சமநிலையில் முடிந்தது. ஆகவே, ரியல் மாட்ரிட் 6 புள்ளிகள் முன்னிலையுடன் லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனாவின் வெற்றியை தடுத்து நிறுத்தினார் ரமோஸ்.

ஒட்டு மொத்தமாக பார்சிலோனா வசம் 55 சதவீதமும், ரியல் மாட்ரிட் வசம் 45 சதவீதமும் பந்து ஆக்கிரமித்திருந்தது. ரியல் மாட்ரிட் அணிக்கு 7 கார்னர், பார்சிலோனாவிற்கு 5 கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/04153419/1054412/El-Clasico-Barcelona-1-Real-Madrid-1-Last-minute-Sergio.vpf

 

Categories: merge-rss

FIFA 2016-க்கான சிறந்த வீரர் யார்?

Sun, 04/12/2016 - 11:54
FIFA 2016-க்கான சிறந்த வீரர் யார்?
 

collage_new_2_15256.jpg

கால்பந்து விளையாட்டுக்கான சர்வதேச அமைப்பு FIFA, இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் அன்டோயின் கிறிஸ்மேன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முதற்கட்ட பட்டியலில் 23 வீரர்கள் இருந்தார்கள். Fifa.com இணையதளம் வாயிலாக கால்பந்து ரசிகர்கள் இறுதிப் பட்டியலுக்கு ஓட்டுப்போட்டனர்.

இதன் அடிப்படையில், இம்மூன்று வீரர்கள் 2016-க்கான சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சிறந்த வீரர் யார் என்பது ஜனவரி 9-ம் தேதி அறிவிக்கப்படும்.

http://www.vikatan.com/news/sports/74144-who-is-the-fifa-best-player-for-2016.art

Categories: merge-rss

இந்திய மகளிர் அணி இப்போ ஆசிய சாம்பியன்!

Sun, 04/12/2016 - 10:17
இந்திய மகளிர் அணி இப்போ ஆசிய சாம்பியன்!
 

Cy0b_sbVEAANPVf_14367.jpg

மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் ஏக்டா பிஷ்ட் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய சாம்பியனானது.

http://www.vikatan.com/news/sports/74134-indian-wins-pakistan-at-asain-trophy-t20-final.art

Categories: merge-rss

அணித்தலைவர் ஸ்மித் சதம் ; வலுவான நிலையில் ஆஸி

Sun, 04/12/2016 - 06:16
அணித்தலைவர் ஸ்மித் சதம் ; வலுவான நிலையில் ஆஸி

 

 

அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

 

afaff1.jpg

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 39 ஓவர்கள் நறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 103 ஓட்டங்களையும், டிராவிஷ் ஹெட் 48 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

பந்து வீச்சில் நியுஸிலாந்து அணி சார்பில் நீஸம், பெர்கஷன் மற்றும் ஹென்றி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

http://www.virakesari.lk/article/14137

Categories: merge-rss

ஆண்டின் டாப் 3 கோல்கள்: மெஸ்ஸி, நெய்மரைக் கடந்து முக்கியத்துவம் பெற்ற மலேசிய வீரர்

Sun, 04/12/2016 - 06:00
ஆண்டின் டாப் 3 கோல்கள்: மெஸ்ஸி, நெய்மரைக் கடந்து முக்கியத்துவம் பெற்ற மலேசிய வீரர்

 

 

இந்த ஆண்டின் 3 டாப் கோல்களுக்கான பரிசுப் பட்டியலில் மெஸ்ஸி, நெய்மர் போன்றோரைக் கடந்து மலேசிய கால்பந்து வீரர் மொஹமது ஃபைஸ் சுப்ரி என்பவரது கோல் ஃபிபா பட்டியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மலேசிய சூபர் லீக் கால்பந்து போட்டியில் பெனாங் அணிக்காக ஆடிய மொகமது ஃபைஸ் சுப்ரி, பஹாங் அணிக்கு எதிராக அடித்த கோல் பல சர்வதேச கோல்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

அதாவது 1997-ம் ஆண்டு பிரேசில் நட்சத்திரம் ரொபர்ட்டோ கார்லோஸ் பிரான்ஸுக்கு எதிராக அடித்த மறக்க முடியாத ஃப்ரீ கிக் கோலை இது பலவகையிலும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

இடது புறத்தில், சற்றே ஓரமாக, கோலிலிருந்து சுமார் 115 அடி தூரத்திலிருந்து மொகமது ஃபைஸ் சுப்ரி அடித்த ஷாட்டில் பந்து ஒரு சமயத்தில் கிட்டத்தட்ட 90டிகிரி நேராகச் சென்று பிறகு பெரிய அளவில் வலது புறம் வளைந்து சென்று கோலின் வலது கோடியில் உள்ளே சென்று கோலாக மாறியது, கோல் கீப்பர் ஒன்றும் செய்ய முடியவில்லை. அபாரமான இந்த கோல் சமூக வலைத்தளங்களில் வைரலாக சென்றுள்ளது.

இந்நிலையில் ஃபிபா புஸ்காஸ் விருதுக்கு உலகம் முழுதும் நடைபெறும் ஆட்டங்களிலிருந்து 205 செப்டம்பர் முதல் 2016 செப்டம்பர் வரை அடிக்கப்பட்ட சுமார் 1000 கோல்களிலிருந்து டாப் 3 கோல்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் டாப் 3 கோல்களில் மெஸ்ஸி, நெய்மரையும் பின்னுக்குத் தள்ளியதாக இந்த மலேசிய வீரர் மொகமது ஃபைஸ் சுப்ரியின் கோல் பெரிய அளவில் கவன ஈர்ப்பு பெற்றுள்ளது.

இது குறித்து 29 வயது மொகமது ஃபைஸ் சுப்ரியின் கூறும்போது, “இதனை என்னால் மறக்க முடியாது. எனது ஆட்டத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல இந்த விருது தேர்வு எனக்கு உத்வேகம் அளிக்கிறது” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “கால்பந்து மனிதர்களை ஒன்றிணைக்கிறது, கால்பந்து ரசிகர்களில் பல இனத்தவர்களும் உள்ளனர். சீனர்கள், இந்தியர்கள் மற்றும் மலேசியர்கள் இருக்கிறார்கள், இவர்கள் எனது கோலுக்கு வாக்களித்தனர்” என்றார்.

இந்தப் பட்டியலில் பிரேசிலின் மர்லோன் மற்றும் வெனிசூலா கால்பந்து வீராங்கனை ஸ்டெபானி ரோச் ஆகியோர் ஃபைஸ் சுப்ரியுடன் இணைந்துள்ளனர்.

வெற்றி பெறுபவர் பெயர் ஜனவரி 9-ம் தேதி ஜூரிச்சில் அறிவிக்கப்படுகிறது.

“விருதுக்கு இன்னமும் நாட்கள் இருக்கிறது, அதுவரை காத்திருப்போம், எனவே இது பார்ட்டிக்கான தருணம் அல்ல” என்கிறார் ஃபைஸ் சுப்ரி தன்னடக்கத்துடன்.

வீடியோவைக் காண

 

http://tamil.thehindu.com/sports/ஆண்டின்-டாப்-3-கோல்கள்-மெஸ்ஸி-நெய்மரைக்-கடந்து-முக்கியத்துவம்-பெற்ற-மலேசிய-வீரர்/article9409141.ece

Categories: merge-rss

கிளென் மேக்ஸ்வெலுக்கு அபராதம்: ஆதரவும் எதிர்ப்பும்

Sun, 04/12/2016 - 05:58
கிளென் மேக்ஸ்வெலுக்கு அபராதம்: ஆதரவும் எதிர்ப்பும்

 

 
 கே.ஆர்.தீபக்.
மேக்ஸ்வெல். | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக்.
 
 

மேத்யூ வேட் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக விமர்சனம் செய்த அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெலுக்கு ஆஸ்திரேலிய லீடர்ஷிப் குழு அபராதம் விதித்துள்ளது.

அபராதம் என்பதற்கும் மேலாக கிளென் மேக்ஸ்வெலின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதாகவே ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விக்டோரிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் யார் எந்த நிலையில் களமிறங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார், நான் அவருக்குப் பின்னால் களமிறங்குவது வேதனை அளிக்கிறது, இது எனது டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பை பறித்துள்ளது என்று ஊடகங்களில் கிளென் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்ததையடுத்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகமும், மேத்யூ வேடும் கடும் கோபமடைந்துள்ளனர்.

கேப்டன் ஸ்மித், மேக்ஸ்வெல் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். லீடர்ஷிப் குழுவில் ஸ்மித், துணைத்தலைவர் டேவிட் வார்னர், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்டோர் உள்ளனர். மேக்ஸ்வெலின் கருத்து ‘மரியாதைக்குறைவானது’ என்று முடிவெடுக்கப்பட்டு அவருக்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கிளென் மேக்ஸ்வெலின் ‘வெளிப்படையான’, ‘மனம் திறந்த’ கருத்திற்கு மற்ற வீரர்களிடமிருந்து ஆதரவும் கிளம்பியுள்ளது.

மேக்ஸ்வெலுக்கு ஆதரவாக மிட்செல் ஜான்சன் தனது ட்விட்டரில், “அபராதம்?! விக்கெட் கீப்பருக்கு முன்பாகத்தான் மேக்ஸ்வெல் பேட் செய்ய வேண்டும். அவர் ஒரு பேட்ஸ்மென், அவர் நேர்மையாக இருந்திருக்கிறார். சரியா?” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் மேக்ஸ்வெலுக்கு பேராதரவு கிட்டியுள்ளது. அதாவது வெளிப்படையாக கருத்தை தெரிவித்ததற்கு அபராதம் விதிப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

ஆனால் ஸ்மித், “மேக்ஸ்வெல் கருத்தினால் நாங்கள் அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளோம். நான் இதனை அவரிடமே தெரிவித்து விட்டேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முக்கிய மதிப்பீடுகளில் அணியின் சக வீரர்களையும் எதிரணியினரையும் மதிக்க வேண்டும் என்பது முக்கியமானது. மேக்ஸ்வெல் கருத்து மரியாதைக்குறைவானது.

ஆனால் நாளை (ஞாயிறு) நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆட மேக்ஸ்வெல் பெயர் பரிசீலனையில்தான் உள்ளது” என்றார்.

http://tamil.thehindu.com/sports/கிளென்-மேக்ஸ்வெலுக்கு-அபராதம்-ஆதரவும்-எதிர்ப்பும்/article9409253.ece

Categories: merge-rss

ஐபிஎல் போட்டிகளில் ஆடி காயமடைய வேண்டாம்: ஆஸி. வீரர்களுக்கு மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை

Sun, 04/12/2016 - 05:58
ஐபிஎல் போட்டிகளில் ஆடி காயமடைய வேண்டாம்: ஆஸி. வீரர்களுக்கு மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை
 ஏ.எஃப்.பி.
மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி.
 
 

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை ஆஸ்திரேலிய வீரர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுரை வழங்கியுள்ளார்.

2016 ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் போட்டிகளில் ஆடிய முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் காயமடைந்ததை அடுத்து மைக்கேல் கிளார்க் கூறும்போது, “வீரர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது ஐபிஎல். இதனால் ஓய்வு இன்றி கடுமையான களைப்பு ஏற்படுகிறது.

சாதகமான அம்சம் பணம் வருகிறது என்பதுதான். ஆனால் அதற்கு கொடுக்கும் விலை அதிகமாக உள்ளது. களைப்பு, ஓய்வின்மை. நமக்கு சிறந்தது எது என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்பந்த வீரர்களுக்கு 6 வாரங்கள் ஓய்வு அளிக்கிறது. இது ஐபிஎல் நடைபெறும் காலக்கட்டமாகும். எனவே தனிப்பட்ட வீரர்கள் ஐபிஎல் விளையாடுவதைத் தேர்வு செய்கின்றனர். 6 வார விடுமுறையை ஐபிஎல் ஆடுவதற்காக நீங்கள் முடிவெடுத்தால் அது உங்கள் தேர்வு” என்று கூறியுள்ளார்.

2016 ஐபிஎல் போட்டிகளில் ஸ்டீவன் ஸ்மித் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஆடும் போது காயமடைந்து வெளியேறினார், விரல் காயம் அவரது ஆட்டத்தை பாதித்தது.

அதே போல் ஷான் மார்ஷ் காயமடைந்து வெளியேறினார். ஐபிஎல் என்றாலே காயமடையும் வெளிநாட்டு வீரர்களில் நம் நினைவுக்கு வருபவர்களில் இருவர் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்: டேல் ஸ்டெய்ன், ஏ.பி.டிவில்லியர்ஸ். இருவரும் இன்னமும் காயங்களிலிருந்து விடுபடமுடியவில்லை. ஐபிஎல் பணிச்சுமையினால் ஏற்படும் காயம் மேன்மேலும் அவர்களை காயத்திற்குத் தள்ளியதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் மைக்கேல் கிளார்க் மேலும் கூறும் போது, “நான் எந்த அணிக்கு எதிராக ஆடுகிறேன் என்பது முக்கியமல்ல, ஆஸ்திரேலியாவுக்கு முதலுரிமை கொடுப்பதே தலையாயது. ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். எனவே அனைத்து வடிவங்களுக்கும் ஆஸ்திரேலிய அணி முழு வலுவுடன் திகழ வேண்டும், அதற்கான வீரர்கள் அவசியம் என்று நான் ஐயமற கருதுகிறேன்” என்று திட்டவட்டமாக ஐபிஎல் கிரிக்கெட்டின் பாதகங்களை சுட்டிக்காட்டினார்.

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-போட்டிகளில்-ஆடி-காயமடைய-வேண்டாம்-ஆஸி-வீரர்களுக்கு-மைக்கேல்-கிளார்க்-எச்சரிக்கை/article9409227.ece

Categories: merge-rss

பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ உள்பட பிற வீரர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

Sat, 03/12/2016 - 16:43
பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ உள்பட பிற வீரர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
 
 

ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் பிரபல வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பிற வீரர்கள் வரி செலுத்துவதை தவிர்க்கும் விதமாக மில்லியன் கணக்கான டாலர் வருவாயை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாக முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிஸ்டியானோ ரொனால்டோ
 கிரிஸ்டியானோ ரொனால்டோ

மின்னஞ்சல்கள், ரகசிய உடன்படிக்கைகள், ரகசிய ஒப்பந்தங்கள் என சுமார் 18 மில்லியன் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவலை பல ஐரோப்பிய செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன.

ரொனால்டோவை தவிர்த்து ஜோஸ் மொரின்ஹோ, மான்செஸ்டர் யுனைடட் அணியின் பயிற்சியாளர் ஜோர்ஜ் மெண்டீஸ் ஆகிய பிரபலங்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

பிரிட்டிஷ் மற்றும் ஸ்பானிஷ் அதிகாரிகளை ரொனால்டோ மற்றும் மொரின்ஹோ ஆகிய இருவரும் தங்களுடைய வரி தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் அதிகாரிகளிடம் முழுமையாக பூர்த்தி செய்திருப்பதாக

மெண்டீஸ் நிறுவனமான கெஸ்டிஃபூட் தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/sport-38194817

Categories: merge-rss

விராட் கோலியுடனான சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்: ஹசீப் ஹமீத்

Sat, 03/12/2016 - 15:55
விராட் கோலியுடனான சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்: ஹசீப் ஹமீத்

‘மொகாலி டெஸ்டிற்குப் பிறகு விராட் கோலி என்னை சந்தித்தார். இந்த சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்’ என்று இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹமீத் கூறியுள்ளார்.

 
 
 ஹசீப் ஹமீத்
 
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 19 வயதே ஆன தொடக்க வீரரான ஹசீப் ஹமீத், இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். ரன்கள் அதிக அளவில் குவிக்கவில்லை என்றாலும், சமாளித்து விளையாடினார். அவரது ஆட்டம் அனைவரையும் ஈர்த்தது.

ராஜ்கோட் டெஸ்டில் அறிமுகமான அவர் அந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 31 ரன்னும், 2-வது இன்னிங்சில் 82 ரன்களும் சேர்த்தார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 13 ரன்னும், 25 ரன்னும் எடுத்தார்.

மொகாலி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் வீசிய பந்து ஹமீத்தின் இடது கை சுண்டு விரலில் பட்டு ரகானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சுண்டு விரலில் பந்து வேகமாக பட்டதால் அவருக்கு முறிவு ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. 8-வது வீரராக களம் இறங்கிய அவர் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

காயத்துடன் இந்தியாவின் பந்து வீச்சை சமாளித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த அவரை, இந்திய வீரர்கள் அனைவரும் கைகொடுத்து ஊக்கப்படுத்தினார்கள்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஹமீத் தங்கியிருந்த அறைக்குச் சென்று அவருடன் பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஹமீத் கூறுகையில் வீராட் கோலி என்னை சந்தித்தது, எனக்கு சிறந்த தருணம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹமீத் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விராட் கோலியுடன் சந்தித்தது எனக்கு மிகவும் சிறந்த தருணமாக இருந்தது. உண்மையிலேயே விராட் கோலி கபடமற்ற உண்மையான மனிதர். மொகாலி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றபின், அவர் என்னை சந்தித்த ஒவ்வொரு நிமிடமும் சிறந்த நேரம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/03184652/1054288/India-vs-England-Meeting-Virat-Kohli-was-a-great-moment.vpf

Categories: merge-rss

இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்

Sat, 03/12/2016 - 15:20
இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்
 

pak_1_18469.jpg

பெண்களுக்கான ஆசிய கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. நாளை தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடக்கும் போட்டியில் இரண்டு அணிகளும் பலப்பரிட்சை செய்ய உள்ளன. முன்னர், இந்தியா மற்றும் பாக்., மோதிய லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணியை எந்த நாடும் லீக் போட்டிகளில் வீழத்தவில்லை.

http://www.vikatan.com/news/sports/74091-india-to-take-on-pakistan-in-finals.art

Categories: merge-rss

இந்தியா எதிர் இங்கிலாந்து ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Sat, 03/12/2016 - 11:50
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி: அஸ்வின், ஜடேஜா, சமிக்கு ஓய்வு
 

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

 
 
 அஸ்வின், ஜடேஜா, சமிக்கு ஓய்வு
 
மும்பை:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்து இருக்கிறது.

இதில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது.

டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டியும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க தேர்வு குழு முடிவு செய்து இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வங்காளதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்காக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 4 முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் புத்துணர்வுடன் டெஸ்ட் தொடரில் விளையாட முடியும் என்று கருதி தேர்வுக் குழு முடிவு செய்து இருக்கிறது.

இதனால் ஒரு நாள் போட்டி தொடரில் ஜெய்ந்த் யாதவ், குல்கர்னி ஆகியோர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு நாள் போட்டி தொடரில் ஜனவரி 15-ந்தேதி தொடங்குகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/03115322/1054187/One-day-match-against-England-rest-to-ashwin-jadeja.vpf

Categories: merge-rss

இந்த முறையும் இவர் தான் உலகின் தலைசிறந்த தடகள வீரர்!

Sat, 03/12/2016 - 09:52
இந்த முறையும் இவர் தான் உலகின் தலைசிறந்த தடகள வீரர்!
 

bolt_13476.png

உலகின் வேகமான மனிதர் உசேன் போல்ட் ஆறாவது முறையாக உலகின் சிறந்த தடகள வீரர் விருதைப் பெற்றுள்ளார். தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம் IIAF (International Association of Athletics Federations) ஒவ்வொரு ஆண்டும் தலை சிறந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதளிப்பது வழக்கம். 

Cysn6IuWgAAiUsY.jpg

ஒன்பது முறை ஒலிம்பிக் சாம்பியனான போல்ட் இதுவரை 5 முறை உலகின் தலைசிறந்த தடகள வீரர் விருதை பெற்றுள்ளார். இந்த ஆண்டும் விருதை தக்க வைத்து ஆறாவது முறையாக தலைசிறந்த தடகள வீரர் என்னும் மகுடத்தை சூட்டிக் கொண்டுள்ளார். தலைசிறந்த தடகள வீராங்கனையாக எத்தியோப்பியா நாட்டின் அல்மாஸ் அயனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

usain_13492.png

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எத்தியோப்பியா வீராங்கனை அல்மாஸ் அயனா 29 நிமிடம் 17.45 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய உலக சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/sports/74066-for-the-sixth-time-this-man-wins-world-athlete-of-the-year-award.art

Categories: merge-rss

இலங்கை அணிக்கு இரு புதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்

Sat, 03/12/2016 - 07:17
இலங்கை அணிக்கு இரு புதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்

 

 

sri-lanka-cricket-team-coach.jpg

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலகரட்ன இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை உப்புல் சந்தன இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/

Categories: merge-rss