தமிழகச் செய்திகள்

சசிகலாவிடம் இருந்து ஜெயலலிதாவை மீட்க மோடியின் ஸ்கெட்ச்!

Fri, 14/10/2016 - 13:05
சசிகலாவிடம் இருந்து ஜெயலலிதாவை மீட்க மோடியின் ஸ்கெட்ச்!

jayayayayaya1_16268.jpg

 

இத்தனை காலமாக, முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் யாரும் நெருங்கமுடியாமல் இரும்புத்திரையை போட்டிருந்தார் அவரது தோழி சசிகலா. இதனால், அரசியல்ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் டெல்லியில் இருந்து பி.ஜே.பி. தலைவர்கள் யாரும் ஜெயலலிதாவை தொடர்பு கொள்ளமுடியவில்லை.

ராஜதந்திரமாக கையாளவேண்டிய பல விவகாரங்களை முதல்வர் என்கிற முறையில் ஜெயலலிதாவிடம் மட்டுமே பேசவேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், ஜெயலலிதாவுடன் நிழலாக சசிகலா இருந்து வந்தது மத்திய அரசுக்கு எரிச்சலைக் கொடுத்தது. மத்திய உளவுத்துறையின் தமிழக தலைவராக வர்மா ஐ.பி.எஸ். சில மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றார். டெல்லியில் பிரபல அரசியல் தலைவர்களுடன் சகஜமாக பேசும் அவரால் முதல்வர் ஜெயலலிதாவுடன் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அப்பாயின்ட்மென்ட் என்றாலே, பல்வேறு செக்போஸ்டுகளை சந்திக்க வேண்டிவந்தது. அதை அவர் விரும்பவில்லை. 'போயஸ்கார்டனில் சசிகலா கஸ்டடியில் இருக்கிறார்... அரசு நிர்வாகத்தில் மறைமுகமாக அவரும் அவரது குடும்பத்தினரும் தலையிடுகிறார்கள்' என்று மத்திய உளவுத்துறை ரிப்போர்ட்டை மத்திய அரசுக்கு அனுப்பியது. இந்த நிலையில்தான், ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போலோவில் அட்மிட் செய்யப்பட்டார். ஜெயலலிதாவைப் பார்க்க தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேரில் போனபோது, ஜெயலலிதாவை நேரில் சந்திக்க விடவில்லை. 'இதுதான் சசிகலா தரப்பினர் செய்த பெரிய தவறு. கவர்னரின் கோபத்துக்கு ஆளாகிவிட்டார் சசிகலா. அதன்பிறகுதான், மத்திய அரசு தலையிட ஆரம்பித்தது.

ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றியும், சசிகலாவின் கஸ்டடியில் ஜெயலலிதா இருப்பது பற்றியும் சில சந்தேகங்களை திடீரென சசிகலா புஷ்பா மீடியாக்களிடம் கிளப்பினார் அல்லவா?...இதன் பின்னணி டெல்லி மேலிட அரசியல் பிரமுகர்களுக்குத்தான் தெரியும். அதேபோல், சசிகலாவின் உக்கிரப் பார்வையில் சிக்கி பதவி இழந்தவர்கள், கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள் யார் யார் என்று பெரிய பட்டியலை மத்திய உளவுத்துறையினர் ரெடி செய்துவிட்டனர். அவர்களை வைத்தும் அ.தி.மு.க-வில் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.  ஜெயலிதாவின் அண்ணன் மகள் தரப்பினர் அப்போலோவுக்குள் போக முயன்றபோது, தடுத்து விரட்டப்பட்டார். அவரையும் சசிகலாவின் எதிர்தரப்பினர் நேரில் சந்தித்து வருகிறார்கள். விரைவில் அவரிடம் இருந்தும் சசிகலாவுக்கு எதிரான கருத்து வெளியாகலாம். டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் இருவர் வந்ததுதான் வெளி உலகத்துக்கு தெரியும். ஆனால், டெல்லியில் இருந்து கில்லாடிகளான உளவுத்துறை அதிகாரிகள் ஆறு பேர்கள் அப்போலோவுக்கு வந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மொத்தம் 27 பேர் சென்னையில் பல்வேறு ரகசிய அசெய்ன்மெண்ட்டுகளை செய்து வருகின்றனர். பி.ஜே.பி-க்கு சாதகமான சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்துவதுதான் அவர்களின் அசெய்ன்மெண்ட். தமிழக கவர்னர்தான் இவர்களுக்கெல்லாம் தற்போதைக்கு 'பாஸ்'. அவரை வைத்துதான் அரசியல் சதுரங்கத்தை நகர்த்த ஆரம்பித்துள்ளனர் டெல்லி பி.ஜே.பி. தலைவர்கள். 
அப்போலோவில் மாற்றங்கள்


டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் இருந்து தனது பிரதிநிதிகளாக இரண்டு பிரபல டாக்டர்களை பிரதமர் மோடி சென்னை அப்போலோவுக்கு அனுப்பினார். அவர்கள் வந்ததும் இங்கே நிலைமை மாற ஆரம்பித்தது. ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான விவரங்களை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டனர். அனைத்து வகை டெஸ்ட் ரிப்போர்ட்டுகளையும் எய்ம்ஸ் டாக்டர்கள் பார்த்து, உடனுக்குடன் பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க ஆரம்பித்தனர். எய்ம்ஸ் டாக்டர்கள் வரும்வரை, சசிகலாவின் அண்ணன் மருமகன் டாக்டர் சிவக்குமார் முழு கண்காணிப்பில்தான் ஜெயலலிதா இருந்துவந்தார். எய்ம்ஸ் டாக்டர்கள் ஆலோசனை சொல்ல ஆரம்பித்தும், ஒரங்கட்டப்பட்டார் சிவக்குமார். அவரின் வாய்ஸ் எடுபடவில்லை. இது அப்போலோ மருத்துவமனையைப் பொறுத்தவரையில் நடந்த மாற்றங்கள். 

ஒ. பன்னீர்செல்வம் யார் சாய்ஸ்?

ops_16347.jpg


நிச்சயமாக கவர்னர் சாய்ஸ்தான். ஆனால், ஜெயலலிதாவின் அறிவுரைப்படி என்கிற சாமர்த்தியமான வார்த்தையைப் போட்டு அறிக்கை விட்டிருந்தார். ஆனால், சசிகலா தரப்பினர் அவர்களின் உறவினரும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவருமான திருநாவுக்கரசரைப் பிடித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்...இருவரிடமும் பேசி தங்களுக்கு அரசியல் அரவணைப்பு வழங்க கோரிக்கை விடுத்தனர். அதையடுத்துதான், ராகுல் அப்போலோவுக்கு கிளம்பி வந்தார். சசிகலா தரப்பினர் காங்கிரஸ் பக்கம் சாயக் காரணம்.. பி.ஜே.பி-யின் அதிரடியில் இருந்து தப்பிக்கத்தான். டெல்லியில் இருந்தபடி தமிழக அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறும்போது, ''சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, சசிகலா போட்டுக்கொடுத்து ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கப்பட்ட அமைச்சர்களில் ஒ. பன்னீர் செல்வமும் ஒருவர். பல்வேறு ரெய்டுகளுக்கு பன்னீர் செல்வமும், அவரது குடும்பத்தினரும் ஆளானார்கள். இதனால், சசிகலாவின் மீது கடுங்கோபத்தில் பன்னீர்செல்வம் இருந்தார். அவர் இந்தமாதிரி மூடில் இருப்பது மத்திய உளவுத்துறை மூலம் டெல்லி பி.ஜே.பி. தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆக, ஜெயலலிதாவின் துறைகளை யார் கவனிக்கலாம் என்கிற பேச்சு வந்தபோது, சசிகலா தரப்பினர் சிபாரிசு செய்தவர்களை புறக்கணித்துவிட்டு, டெல்லி பி.ஜே.பியின் சாய்ஸ் ஆக ஒ. பன்னீர் செல்வத்தை கவர்னர் நியமிக்க முன்வந்தார். அதுதான் நடந்தேறியது. கொஞ்ச நாட்களுக்கு பன்னீர்செல்வம் பொறுமையாக இருப்பார். அதன்பிறகு, அவரின் இன்னொரு பக்கத்தை சசிகலா தரப்பினர் சந்திப்பார்கள். அவர் வெறும் அம்புதான். அவரை இயக்குவது மத்திய அரசாக இருக்கும்'' என்றார்.
அவரிடம், 'இது எப்படி சாத்தியமாகும்?' என்றோம்!.

'' மத்திய அரசு நினைத்தால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரையும் தன் வலையில் வீழ்த்தும். ஏற்கெனவே பன்னீர்செல்வம், அவரது மகன்கள், உறவினர்கள் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த விஷயங்களை தனி ஃபைல் போட்டு ரெடியாக வைத்திருக்கிறார்கள். அதன் விவரங்களை அரசல்புசலாக மத்திய அரசு பரப்பினாலே போதும். பிறகு, பன்னீர்செல்வம் தலையாட்டி பொம்மை ஆகிவிடுவார். சசிகலா தரப்பினரை பன்னீர்செல்வமே பார்த்துக்கொள்வார். ஏனென்றால், அவர்தானே.. முதல்வரின் துறைகளை கவனிப்பவர். ஜெயலலிதாவின் உடல்நிலை, மருத்துவமனை சிகிச்சை...இதெற்கெலலாம் அவர்தான் பொறுப்பு. எந்தப் பிரச்னை எழுந்தாலும், அவர்தான் அதை தீர்க்கவேண்டும். போயஸ்கார்டனில் சசிகலா கஸ்டடியில் ஜெயலலிதா என்கிற நிலைமை இனி எந்தக்காலத்திலும் வராது. வரவும் விடாது மத்திய அரசு. பொறுத்திருந்து பாருங்கள்'' என்கிறார்.

சசிகலா மூவ்?

சசிகலாவின் மூத்த நாத்தனார் வனரோஜா சில நாட்களுக்கு முன்பு, தஞ்சையில் இறந்துபோனார். அவரின் இறுதிச்சடங்கில் கூட சசிகலா போய் கலந்துகொள்ளவில்லை. ஜெயலலிதாவை விட்டு எங்கும் செல்லாமல் அருகிலேயே இருக்கிறார். சசிகலா இல்லாத நேரங்களில் இங்கு ஏதாவது அரசியல் செய்துவிடுவார்களோ? என்று மிரண்டு போயிருக்கிறார். மெள்ள மெள்ள சசிகலா பிடியில் இருந்து ஜெயலலிதா விலகிவருகிறார் என்றுதான் தமிழக அமைச்சர் ஒருவர் அவரது நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார்.
நடப்பதை பொறுத்திருந்து பார்போம்!.

http://www.vikatan.com/news/india/69626-modi-devised-a-plan-to-free-jayalalithaa-from-sasikala.art

Categories: Tamilnadu-news

ரயிலில் போராடிய உயிர்...காப்பாற்றிய பெண்... நெகிழ்ச்சித் தருணம்!!

Fri, 14/10/2016 - 07:09
ரயிலில் போராடிய உயிர்...காப்பாற்றிய பெண்... நெகிழ்ச்சித் தருணம்!!

dr%20pon.jpg

காமெடியில் இருந்து கார்ட்டூன் வரை அதிமான விஷயங்களிலும் கிண்டலுக்கு உள்ளாகுபவர்கள் மருத்துவர்கள்தான். இப்போதுகூட முதல்வர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையைக் தாறுமாறாக கிண்டல் செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளை பார்க்க முடிகிறது. ஆனால் உடலுக்கு ஒன்று வந்து விட்டால் டாக்டர் கொஞ்சம் பாருங்க டாக்டர்னு விழுந்தடித்துக் கொண்டு  ஓடுவோம். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ராஜரத்தினம் பொன்மணி . அண்மையில் தூத்தூக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரசில் பயணித்த நேர்ந்த  அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். 

''கடந்த ஞாயிறு( 09-10-2016) இரவு 8 மணி தூத்துக்குடியிலிருந்து முத்துநகர் எக்ஸ்பிரசில் சென்னை கிளம்பினேன். நம் ஊர் இரயில் பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.. இரவு 8.30 மணிக்கு 3 இட்லிகளை விழுங்கி விட்டு 9.30 மணிக்கெல்லாம் படுத்து விட்டேன். நடுநிசி .....சில குரல்கள் " டாக்டரம்மா எங்கம்மா இருக்கீங்க ?'' திடுக்கென்று எழுந்து... என்ன சார் என்றேன். டிக்கெட் பரிசோதகரும் ,ரயில்வே ஊழியர்கள் சிலரும் ''  ஒருவர் பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார்மா, வந்து பார்க்க முடியுமானு '' கேட்டார்கள். பதில் சொல்லாமல் என் கைப்பையில் எப்போதும் இருக்கும் ஸ்டெதஸ்கோப்பை எடுத்துக் கொண்டு அவர்களுடன் ஓடினேன்.

அப்போது ரயில் மதுரையை கடந்திருந்தது. 3 கோச்சுகள் தாண்டியதும் வாந்தியெடுத்து சரிந்து கிடந்த அந்த மனிதரை என்னிடம் காட்டினார்கள். .பலமான ஹார்ட் அட்டாக் என்று புரிந்துக் கொண்டேன்.  அவரது இதயம் கொஞ்சம் கொஞ்சமாக  தன் துடிப்பை நிறுத்திக் கொண்டு இருந்தது . கோச்சில் அனைவரும் விழித்திருந்தனர். ஆனால் என்ன செய்யவென்றுத் தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் அழுதுக் கொண்டிருந்தனர். உடனே செயலில் இறங்கினேன்.மார்புக்கூட்டை அழுத்தி, வாயினால்  செயற்கை சுவாசம் கொடுத்து CPR ( CARDIO PULMONARY RESUSCITATION ) செய்து ஏறக்குறைய முக்கால் மணி நேரம் போராடினேன்.

dr%20.jpg

சிபிஆர் செய்தால் துடிப்பை நிறுத்திக் கொண்டிருக்கும் இதயத்தை மறுபடியும் சீராக இயங்க வைக்க முடியும். ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் ரயிலில் உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற எந்த அடிப்படை  வசதியும் இல்லை. என்னுடன் சேர்ந்து சில .இளைஞர்களும் போராடினார்கள். சிலர் பயத்தில், சிலர் பிரார்த்தனையில், சிலர் கவலையில், சிலர் தங்கள் மொபைலில் படமும் வீடியோவும் எடுத்தபடி சுற்றி நின்று கொண்டிருந்தனர். ஆனால் அத்தனை பேரின்  நோக்கமும் அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்பதில்தான் இருந்தது..சாதி மதம் மாநிலம் மொழி இனம் கடந்த மனித நேயத்துடன் அனைவரும் போராடிக் கொண்டிருந்தோம். நடு நடுவே விட்டு விட்டு இதயத் துடிப்பு மீண்டு வந்து வந்து போனது. முழுமையான  முறையாக. சிகிச்சை செய்ய முடியாமல் , தனியாக என்னால் முடிந்ததை எல்லாம் செய்து கொண்டிருந்தேன்.

ரயிலில் ஆக்ஸிஜன் சிலிண்டரோ அல்லது Defibrillation Machine or Intubation Instruments இருந்திருந்தால் 15 -20 நிமிடங்களில் அந்த மனிதர் மீண்டிருப்பார். ஆனால் ரயிலில் மருத்துவ ரெட் அலர்ட் சிக்னல் கூட. இல்லை. ரயில் திண்டுக்கல் வந்தடைந்தது. ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. வருத்தமாக இருந்தது. அங்கே தூக்கக் கலக்கத்தோடு காத்திருந்த ரயிவேயின் இளம் பெண் மருத்துவரிடமும் ஊழியர்களிடமும் சொல்லி, தேவையான அவசரச் சிகிச்சைகளை செய்து விட்டு,அடுத்து செய்ய வேண்டியவைகளையும் சொல்லி கொடுத்து விட்டு அந்த மனிதரையும் அவரின் குடும்பத்தாரையும் அங்கு ஒப்படைத்தேன். 

பின் ஒரு மன திருப்தியோடு சக பயணிகளின், TTR கள் , அங்கிருந்த இரயில்வே ஊழியர்களின் ஆசிகளோடு மீண்டும் சென்னை நோக்கி என் பயணத்தைத் தொடர்ந்தேன். அந்த மனிதர் 71 வயது குஜராத்காரர். நம் தமிழகக் கோவில்களை சுற்றிப் பார்க்க தன் குடும்பத்துடன் வந்தவர். அவர் உயிர் பிழைத்திருப்பார் என நம்புவவோம். வேண்டுவோம்.நம் இரயில்வே நிர்வாகம் டெக்னிக்கலாக முன்னேற வேண்டும். நிறைய வருமானம் கிடைக்கும் துறை. உயிர் காக்கும் உபகரணங்கள் மிக அவசியம் என்பதை உணர வேண்டும்.

இதைப் படிக்கும் உயர் இரயில்வே அதிகாரிகளே உணருங்கள். இன்று அவர்.......நாளை நாமாகக் கூட இருக்கலாம். இந்தப் படங்கள் கூட TTR அவரது மொபைலில் கிளிக்கி என்னிடம் பகிர்ந்தவையே....நிறையவே பாராட்டினார்.  பார்த்த பயணிகள் எல்லாம் பாராட்டினர்.

வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம்... அதில் ஒரு மகிழ்ச்சி...நன்றி மக்கா.......!''

http://www.vikatan.com/news/tamilnadu/69538-train-passenger-escaped-after-massive-heart-attack.art

 

இவர் யாழ் கள உறவு. துரதிர்ஷ்டவசமாக அவர் இங்கு தொடரவில்லை.:(

 

 

போன வருடம்  Los angeles இல் இருந்து தைவான் நோக்கி பறந்து கொண்டு இருந்த விமானத்திலும் இப்படி ஒருவரைதான் காப்பாற்றியதாக முகநூலில் பதிந்து இருந்தார்.

இன்று அவரது பிறந்தநாளும்..

Categories: Tamilnadu-news

ஜெயலலிதாவின் உதவியும் பணியாளர்களின் நெகிழ்ச்சியும்!

Fri, 14/10/2016 - 06:45
ஜெயலலிதாவின் உதவியும் பணியாளர்களின் நெகிழ்ச்சியும்!

47924596_10419.jpg

எம்.ஜி. ஆர் வாழ்ந்த காலத்தில் அவரிடம் வேலை பார்த்தவர்களில் தொடங்கி  அவரை நேரில் பார்த்தவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் அவர் செய்த உதவிகள் ஏராளம். .அதனாலே வள்ளல் எம்.ஜி .ஆர் என இன்று வரை மக்கள் அவரை அழைக்கின்றனர். அவர் வழி வந்த ஜெயலலிதாவிற்கு இரும்பு பெண், சிறந்த நிர்வாகி போன்ற பெயர்கள் கிடைத்தாலும் உதவி செய்வதில் எம்.ஜி.ஆர் போன்றவர் என்ற பிம்பம் கொடுக்கப்படவில்லை. ஆனால், அவரும் முதல்வராக இல்லாமல், தனிப்பட்ட முறையிலும் நிறைய பேருக்கு உதவிகள் செய்து வருபவர்தான்.

எளிய மனிதர்கள் சிலருக்கு ஜெயலலிதா செய்த உதவிகளின் பட்டியல் பெரிது. அதில் சில மட்டும் இங்கே...

காட்சி 1

2011ம் ஆண்டில் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா, கோட்டையில் இருந்து வீட்டுக்கு திரும்பியபோது, போயஸ் கார்டன் சாலையில் உள்ள ஒரு மரத்தடியை பார்த்துக்  கடும் கோபம் அடைந்தார். வேதா இல்லத்தின் வாசலில் காத்து இருந்த IAS, IPS, அதிகாரிகள் யாரையும் சட்டை செய்யாமல் முதல்வர் கோபத்துடன் சென்றதை பார்த்து அரண்டு போயினர் அங்கு கூடி இருந்த அனைவரும். முதல்வரின் கோபத்திற்கு ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்லி கொண்டு இருக்க, வீட்டுக்குள் இருந்து ஒடி வந்த உதவியாளர் அங்கு இருந்த காவல் துறை அதிகாரிகள் காதுகளில் கிசு கிசுத்தார். சீறிக் கொண்டு சென்ற வாகனங்கள் சிறிது நேரத்தில், வேதா இல்ல வாசலில் வந்து களைத்து நின்றன.

அதிகாரத்தின் அத்தனை ஜோடி கண்களும் வண்டியின் கதவு திறக்க காத்து இருந்தன. கதவுக்கு பின்னால் கிழிந்த கைலியும், விடுமுறை போதையில் சிவந்த கண்களுமாய் மெலிந்த தேகம் ஒன்று கதவை திறந்து கொண்டு இறங்கியது. மற்றொறு வண்டியில் இருந்து வறுமையே இறங்கியது  பெண் ஒருவரும் இறங்கினார் . இவர்கள் வந்ததை உறுதி செய்து கொண்டு சென்றார் உதவியாளர். இப்போது வேதா இல்ல கதவு திறக்கப்படுகிறது. வெளியில் காத்து இருக்கும் அதிகாரிகள் தாங்கள் கையில் உள்ள பூங்கொத்துகளை மீண்டும் ஒரு முறை இறுக்கிக்  கொண்டனர்.

முதல்வர் முதலில் யாரை அழைப்பார் என மூத்த அதிகாரிகள் தங்களுக்குள் மனப்போர் நடத்தி கொண்டு இருந்தனர். உதவியாளர் நேராக வந்து மெலிந்த தேகதுடன் குறுகி நின்று கொண்டு இருந்தவரை அழைத்தார் "மணி அண்ணன் உள்ள வா ,நீயும் வாம்மா" என இருவரையும் உள்ளே அழைத்து சென்றனர்.வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்த ஜெயலலிதா, “ நீங்க ரெண்டு பேரும் என் இன்னைக்கு கடை திறக்கல” என கேட்க இருவரும் திரு திரு வென முழித்தனர்.

'பயப்படாம சொல்லுங்க'. 

'இல்லம்மா... இது முதல்வர் போற வழி. இனி மேல் இங்க கடை வைக்க கூடாதுன்னு போலீஸ்காரங்க சொல்லிட்டாங்கம்மா” என டீ கடை மணி தைரியத்தை வரவழைத்து சொல்லி முடித்தார்.

'நேத்துக்  கொண்டு வந்த சாப்பாட்டைக்  கூட விக்க விடாம அனுப்பிட்டாங்கம்மா' என அந்தப்  பெண்ணும் சொல்ல, உதவியாளரைப்  பார்த்து அந்த கமிஷனரை வர சொல்லு என ஜெயலலிதா சொல்ல அடுத்த நொடி என்ன நடந்தது என்று உதவியாளர் கமிஷனருக்கு விளக்கிக்  கூறினார்.

எங்கக்  கட்சியில இருக்குற பாதி பேரு ரொம்ப சாதாரணமானவங்க. இந்த ஏரியாவுல அவங்க சாப்பிடுற மாதிரி இருக்குறது இவங்க கடை மட்டும் தான். எனக்கு என்ன செய்வீங்கன்னு தெரியாது இன்னும் ஒரு மணி நேரத்துல இவங்க கடை அங்க இருக்கனும்.போலீஸ்காரங்க வருவாங்க போவாங்க அவங்க சொன்னாங்கன்னு இனிமேல் கடையை எடுக்க கூடாது புரியுதா என்ன ஜெயலலிதா சொல்லி முடிக்க, நடப்பது கனவா நனவா என புரியாமல் முழித்த படியே வணக்கம் வைத்து விட்டு வெளியே வந்தனர்.மணியும்,சாப்பாடு கடை அக்காவும்.

கமிஷனர், மணியை பார்த்து சரி கடையை போய் திறங்க என கூற, “இப்ப எப்படி சார் திறக்க முடியும்? ரெண்டு நாளா  கடைய திறக்கலை. கையுல காசு இல்ல. அதுவும் இல்லாம 1 மணி ஆச்சு. இனிமேல்நான் எங்க போய் பால் வாங்கி டீ போட்டு...” என எந்தவித பயமும் இல்லாமல் மணி சொல்லி முடிக்க, சரி போங்க உங்களுக்கு தேவையான பொருட்கள் வந்து சேரும் என்றார் கமிஷ்னர்.

அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டில் நின்று கொண்டு இருந்த மணியின் சைக்கிளையும்,அக்காவின் சாப்பாடு பாத்திரங்களும் போயஸ் கார்டன் சாலைக்கு எடுத்து வந்தது காவல்துறை. சைக்களில் இருந்த டீ கேனில் முழுவதுமாக டீ நிரப்பப்பட்டது.அக்காவின் பாத்திரங்கள் முழுவதும் சரவண பவன் சாப்பாடு நிரம்பி வழிந்தது. சாப்பாட்டையும் டீயையும் இலவசமாக அனைவருக்கு வழங்கி கொண்டு இருந்தனர் இருவரும்.

காட்சி 2

அவருக்கு கார்டனில் செடிக்கு தண்ணீர் ஊற்றும் வேலை. வேலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதி வேதா இல்ல போர்டிகோ. அங்கு உள்ள நீர் ஊற்று, அதை சுற்றியுள்ள புல்தரைகளை பராமரிப்பது. ஓரங்களில் உள்ள செடிகளுக்கு நீர் ஊற்றுவது பலர் வந்து செல்லும் வாசலை சுத்தமாக வைத்து கொள்வது என வேதா இல்லத்தில் மிக பொறுப்பான பதவி. பொதுவாக இந்த வேலையை கவனிப்பவர்கள் யாரும் கார்டனில் வெகு நாட்கள் நீடித்தது இல்லை என்பார்கள்.

அவர் பொறுப்பு ஏற்கும் போது புல் தரைகள் காய்ந்து இருந்தன .நீர் ஊற்று செயல்படவில்லை. உடனடியாக களத்தில் இறங்கினார். தினமும் புல் தரைக்கு நீர் ஊற்றி பராமரிக்க தொடங்கினர்.அதே போல் போர்டிகோ முதல் கேட் வரையுள்ள தரையை ஒரு நாளைக்கு 10 முறை அவர் செய்த சுத்தத்தால் பழைய மார்பிள் எல்லாம் உயிர் பெற்று. புதுசாக சிரித்தது. ஸ்பெஷல் கவனிப்பால் புற்கள்  உயிர் பெற்றன. 

சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டு இருந்த காலகட்டம். கார்டனில் இருந்து கோட்டைக்குச்  செல்ல முதல்வர் ஜெயலலிதா தயாராகிக்  கொண்டு இருந்தார்.போர்டிகோவில் அவருக்கான வாகனம் தயாராக இருந்தது.வேதா இல்ல வாசலை விட்டு வெளியே வந்த ஜெயலலிதா முகம் மாறியது.காரில் ஏறிய மறு நொடி தான் உதவியாளரை அழைத்தார்.இந்த போர்டிகோவை கவனிக்கும் நபரை கோட்டைக்கு வர சொல்லுங்கள் என கூறிவிட்டுச் சென்று விட்டார். கார்டனுக்குள் நுழைந்தவரை ஊழியர்கள் சூழ்ந்து கொண்டனர்.

'அதிக பிரசங்கி தனமா பண்ணாதேன்னு சொன்னா கேட்டியா'. 'புல் தரையை சரி பண்ண வேண்டான்னு ஒரு தடவ அம்மா சொன்னாங்க'. அதனால தான் நாங்க யாருமே சரி பண்ணல. நீ என்னடான்னா அத போய் சரி பண்ணி இருக்க போ. இன்னையோட உன் சீட்டு கிழிஞ்சது. உனக்கு முன்னாடி இருந்தவனாவது ஆறு மாசம் வரைக்கும் தாக்கு பிடிச்சான். நீ அது கூட இல்ல” என ஊழியர்கள் கூறியதைக்  கேட்டு தூக்கிவாரி போட்டது அவருக்கு.

பயத்துடன் கோட்டையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். முதல் முறையாக தலைமை செயலகத்துக்குள் அதுவும் முதல்வரை சந்திக்க. ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும் மறு பக்கம் வேலை போக போகிறதோ என்ற பயத்துடன் உள்ளே நுழைந்தார். கோட்டை வாயிலில் நின்ற காவலர்கள் முதல்வரின் செயலர்களிடம் உறுதிபடுத்திக்  கொண்டு அவரை முதல்வரின்  அறை இருந்த தளத்திற்கு அனுமதித்தனர்.மூன்று மணி நேர காத்திருப்பிற்கு பிறகு முதல்வர் அறைக்குள் அனுப்பப்பட்டார்.

உள்ளே இருந்த ஜெயலலிதா ''இனி மேல் நீ கார்டனுக்கு வேலைக்கு வர வேண்டாம்''என சொல்ல அவருக்கு கண்ணீர் கோர்த்துக்  கொண்டு நின்றது. பயத்துடன் நின்றவரை பார்த்து.’ நாளையில் இருந்து இங்க வேலைக்கு வந்துரு.உனக்கு இனிமேல் தலைமை செயலகத்துல தான் வேலை’ என கூறி அடித்து வைக்கப்பட்டு இருந்த அப்பாயின்மென்ட் ஆர்டரை அவர் கையில் கொடுத்தார் ஜெயலலிதா.

இரத்த ஓட்டம் ஒரு நிமிடம் நின்று ஓடியது போல் இருந்தது அவருக்கு. சட்டசபையில் நான் உட்காரும் இருக்கையை சுத்தமாக வைத்து கொள்வது தான் உன் வேலை. என்னை ஒரு கொசு கடிச்சா கூட உன்னை சும்மா விட மாட்டேன் என ஜெயலலிதா சிரித்துக்  கொண்டே சொல்ல அங்கு இருந்த அனைவரும் அனைவரும் சிரித்தனர்,

காட்சி 3

ஜெயலலிதாவை முக்கிய பிரமுகர்களைச்  சந்திக்க வரும் போது அந்தச்  சந்திப்பை புகைப்படம் எடுக்க நேரம் ஒதுக்கப்படும். சந்திப்பின் போது உள்ளே  அனுப்பப்படும் கேமரா மேன்கள் ஜெயலலிதா சைகை செய்த உடன் வெளியே சென்று விட வேண்டும். அது போன்ற ஒரு சந்திப்புக்காக கேமராமேன்கள் வேதா இல்லத்தில் காத்து இருந்தனர்.

டெல்லிலியில் இருந்து வந்து இருந்த தொழில் அதிபருக்கு அன்று சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கேமராமேன் உள்ளே அனுப்பப்பட்டனர். வழக்கமாக உள்ளே சென்ற 5 நிமிடத்தில் ஜெயலலிதா சைகை காட்டி விடுவார் அவர்களும் வெளியே வந்துவிடுவார்கள். ஆனால் அன்று பத்து நிமிடத்திற்கு மேல் ஆகியும் ஜெயலலிதா எந்த சைகையும் காட்டவில்லை.கேமராமேனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்க பொறுத்து பார்த்த தொழில் அதிபர் கேமரா மேன்களை பார்த்து '' படம் எடுத்துட்டேங்கன்னா வெளியில போங்க. இப்படியா நின்னுகிட்டு இருப்பீங்க. மேனர்ஸ் இல்ல'' என சொல்ல சிவந்து விட்டது ஜெயலலிதாவின் கண்கள்.

'first you may get out 'சத்தம் வந்த திசையை நோக்கி தொழிலதிபர் திரும்ப,” மிஸ்டர் முதல்ல நீங்க வெளிய போங்க. என் வீட்டுக்குள்ள வந்துட்டு என் ஸ்டாஃப வெளிய போக சொல்ல நீங்க யாரு? நீங்க உங்க தேவைக்காக இங்க வந்து இருக்கீங்க. அவங்க எனக்காக இங்க இருக்காங்க.” என கோவத்தில் ஜெயலலிதா கொதிக்க கார்டன் ஊழியர்கள் அந்த தொழிலதிபரை அங்கு இருந்து அப்புறப்படுத்தினர்.

கோபம்  குறையாத ஜெயலலிதா, கேமராமேனை பார்த்து ”தைரியமா எதிர்த்து பேச வேண்டியதுதான. இனி மேல் யாராவது என் முன்னாடி உங்கள அப்படி பேசுனா அவங்ககிட்ட தைரியமா பேசணும்” என்றாராம் ஜெயலலிதா.

http://www.vikatan.com/news/tamilnadu/69547-emotional-moments-between-jayalalitha-and-her-servants.art

Categories: Tamilnadu-news

’நான் அரசியல் தவிர்த்து பெர்சனல் பற்றிப் பேசினால்... அவ்வளவுதான்...!’ கொந்தளிக்கும் சசிகலா புஷ்பா

Fri, 14/10/2016 - 06:44
’நான் அரசியல் தவிர்த்து பெர்சனல் பற்றிப் பேசினால்... அவ்வளவுதான்...!’ கொந்தளிக்கும் சசிகலா புஷ்பா

sasikala-pushpa-1_19390.jpg

டந்த புதன்கிழமையன்று ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் சசிகலா புஷ்பா எம்.பி-யை திட்டி, ‘சாக்கடை புஷ்பாவின் பூக்கடை சமாச்சாரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தனர். இதனைப் படித்த சசிகலா புஷ்பா ஆதரவாளர்கள், இதுதான் அ.தி.மு.க-வின் அரசியல் நாகரிகமா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதுகுறித்து சசிகலா புஷ்பா விகடனுக்கு அளித்த பேட்டி...

‘‘மிக மோசமான வார்த்தைகளால் உங்களைத் திட்டி கட்டுரை எழுதியிருக்கிறார்களே?’’

‘‘ஒரு பெண்ணை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது. அவர்களும் பெண்கள்தான். அப்படி நான் ஒன்றும் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. எனது வளர்ச்சி பிடிக்காததால், என்னைக் கவிழ்க்க நினைத்தார்கள். எவ்வளவோ பிரச்னை கொடுத்தார்கள். நான் பயப்படவில்லை. இப்போது மக்களிடம் எனக்கு உள்ள நல்ல பெயரை கெடுக்க நினைக்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே. அவர்களுடைய பத்திரிகை என்ற காரணத்தால் கண்டபடி என்ன வேண்டுமாலும் எழுதுகிறார்கள். சசிகலா குடும்பத்துக்கு அரசியல் நாகரிகம் என்பதே தெரியாது. அதனால்தான் ஒரு பெண்ணை, ஒரு எம்.பி-யைப் பற்றி இப்படி அவதூறு பேசுகிறார்கள். ‘எனக்கு அரசியல் நாகரிகம் தெரியும்’ என்ற காரணத்தினால்தான் அமைதியாக இருக்கிறேன். நானும் அரசியலைத் தவிர்த்து தனி வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், அவ்வளவுதான். ஆனால், அப்படி ஒருபோதும் நான் பேசமாட்டேன். ஏனென்றால், நான் அரசியல் நாகரிகம் இல்லாதவர் அல்ல.’’

‘‘இப்படி ஒரு கட்டுரை வந்ததற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?’’

‘‘வேறு யார்...? சசிகலா தாம்...! கண்டிப்பாக அவர் மட்டும்தான் காரணம். அவருக்கு டெக்னாலஜி பற்றித் தெரியாது. அதனால் அவருடைய அண்ணன் மற்றும் அவருடைய மகன்களை வைத்து இப்படிச் செய்கிறார்.’’

‘‘உங்கள் மீது பாலியல் வழக்கு, பணமோசடி வழக்கு... இப்படி பல வழக்குகள் சமீபகாலமாக வருகிறதே?’’

‘‘இது எல்லாமே ஜோடிக்கப்பட்ட வழக்குகள். நான் எப்போது அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டேனோ, அதன் பிறகுதானே இப்படிப்பட்ட புகார்கள் என் மீது விழுகின்றன. இவை அனைத்தும் என்னைக் கவிழ்ப்பதற்காக சசிகலா குடும்பத்தாரால் செய்யப்பட்ட சதியே. எவ்வளவு மிரட்டல்கள், எவ்வளவு பொய் வழக்குகள்... இப்போதுகூட நான் டெல்லியில் இருக்கிறேன். ஆனால், எனக்கு எதிராக வழக்காடும் வழக்கறிஞரின் வீட்டை நான் தாக்கியதாகவும், கொள்ளை அடித்ததாகவும் சொல்லி வருகின்றனர். அரசியல் வேலையே தலைக்குமேல் இருக்கிறது. நான் ஏன் அவர்களைத் தாக்க வேண்டும்? இது எல்லாம் என்னை எப்படியாவது பழிவாங்க வேண்டும், ஜெயிலுக்குப் போக வைக்க வேண்டும் என்று நினைக்கும் அந்தக் கும்பலின் சதி. எனக்கு இந்தக் கும்பலால் எவ்வளவு ஆபத்து வந்தாலும் பயந்து ஓடமாட்டேன்; அடிபணியவும் மாட்டேன்; எதிர்த்து தைரியமாக நிற்பேன்.’’

‘‘அவர்களுக்கும், உங்களுக்கும் அப்படி என்னதான் பிரச்னை?’’

‘‘எனக்கு அரசியல் நாகரிகம் தெரியும் என்பதால் அதைப் பற்றிச் சொல்ல விரும்பவில்லை.’

‘‘ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களைச் சுற்றி நடப்பது என்ன?’’

‘‘முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேறி வருவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும். உடல்நிலையைப் பற்றிப் பலரும் பேசுகின்றனர். இவர்கள்தான் ஜெயலலிதாவைப் பார்க்கவே இல்லையே. அப்பறம் எப்படிச் சொல்கிறார்கள்? டாக்டரும், சசிகலாவும் சொல்வதைத்தான் கேட்டு சொல்கிறார். பல அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர்கூட ஜெயலலிதாவை நேரில் சந்தித்தது இல்லை. இவர்களை அங்கு தடுக்கும் சக்தி எது? ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 22 நாட்கள் ஆகின்றன. ஆனால், அவர்களின் உண்மை நிலை என்ன என்று ஓட்டு போட்ட மக்களுக்குச் சொல்லாமல் மறைக்கிறார்கள். ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சி ஜெயலலிதாவை சுற்றி நடந்துகொண்டிருக்கிறது. ஒட்டுபோட்ட மக்களையும் முட்டாள் ஆக்கி வருகின்றனர். பிரதமர், இந்த விஷயத்தில் தலையிட்டு, தீவிர விசாரணை செய்து, ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மை நிலையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.’’

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
69417_thumb.jpg

அரசியலில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரும் உயரத்துக்குச் சென்றவர் சசிகலா புஷ்பா. இவர் சில மாதங்களுக்கு முன் திருச்சி சிவாவை விமானநிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்தார், இதனால் தனக்கு அ.தி.மு.க-வில் நல்ல பெயர் கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் கிடைத்ததோ கட்சிப் பதவி பறிப்பு. Namadhu MGR Magazine Slams Sasikala PushpaNamadhu MGR Magazine Slams Sasikala Pushpa | உனது 'பூக்கடை' சமாச்சாரங்களை நீயே தோண்டி எடுக்காதே! - சசிகலா புஷ்பாவை தாக்கிய 'நமது எம்.ஜி.ஆர்'.! - VIKATAN

- ஜெ.அன்பரசன்

Categories: Tamilnadu-news

முதல்வர் கோப்புகளில் கையெழுத்திடப்போகும் ஓ.பி.எஸ்?

Fri, 14/10/2016 - 05:11
முதல்வர் கோப்புகளில் கையெழுத்திடப்போகும் ஓ.பி.எஸ்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், முதல்வரின் துறைகள் அனைத்தும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் தலைமை செயலகத்தில் வழக்கமான அரசுப் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. 

400_08132.jpg

இந்நிலையில், இனி முதலமைச்சரின் அலுவலக கோப்புகளில் நிதித்துறை அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட உள்ளதாக தலைமை செயலாளர் ராம்மோகன ராவ் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். 

http://www.vikatan.com/news/politics/69564-o-panneerselvam-to-sign-on-files-for-chief-minister.art

Categories: Tamilnadu-news

மைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்!

Thu, 13/10/2016 - 10:11
மைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - அத்தியாயம் 1

Jayalalithaa%20article.jpg

Jayalalithaa.jpg

‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ - இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து சென்றுவிட முடியாது. ஜெயலலிதாவை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், இந்த வரியை... அதன் உள்ளே பல அடுக்குகளில் ஒளிந்து இருக்கும் விஷயத்தை, அதன் அடர்த்தியை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆம், இந்த வரியைப் புரிந்துகொள்வதும் ஜெயலலிதாவை புரிந்துகொள்வதும் வெவ்வேறானது அல்ல.

பெங்களூரு நோக்கி முதல் பயணம்:

jaya.jpgபெரிய வசதியெல்லாம் இல்லைதான். ஆனால், குறையொன்றும் இல்லை என்பதாகத்தான் அம்முவின் (ஜெயலலிதா) வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது, அந்தச் சம்பவம் நிகழும்வரை. அப்போது அம்முவுக்கு இரண்டு வயதுக்கும் குறைவுதான். அவரது அப்பா ஜெயராம், பிணமாகக் கிடத்தப்பட்டு இருக்கிறார். சோகம் அப்பிய இரவு... எங்கும் அழுகை குரல். அம்முவுக்குத் தன்னைச்சுற்றி என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று புரியவில்லை. அதுவும் குறிப்பாகத் தன் அம்மா வேதவல்லி ஏன் அழுதுகொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. ஆனால், ஏதோ சரியில்லை என்று மட்டும் தெரிந்தது.

ஜெயராமின் அப்பா நரசிம்மன் ரெங்காச்சாரி, மைசூர் மகாராஜா அரண்மனையில் மருத்துவ பொறுப்பாளராக பணிபுரிந்தவர். அரண்மனையில் பணியென்றால் கேட்கவா வேண்டும்...? நல்ல ஊதியம் தான்.  நிறைவான வாழ்வு தான். ஆனால், ஜெயராமிற்கு அதை முறையாக நிர்வகிக்க தெரியவில்லை. ஆம், கல்லூரி முடித்தும் வேலைக்கு செல்லாமல், அப்பாவின் சொத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். மழையில் கரையும் மண் வீடு போல, சேமிப்பும் கரைந்து கொண்டே போனது.   ஹூம்... உங்களுக்கு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். ஜெயராமிற்கு வேதவல்லி முதல் மனைவி அல்ல... இரண்டாம் மனைவி.

வேதவல்லி அன்று தன் கணவருக்காக மட்டும் அழவில்லை. இனி, தன் இரண்டு பிள்ளைகளையும் எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற கேள்வி நடுக்கத்தை உண்டாக்கியது. கணவர் இல்லை... இனி தனியாக மைசூரு மாண்டியாவில் வசிக்க முடியாது. இப்போது வேதவல்லிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தன் தந்தை ரெங்கசாமி வசிக்கும் பெங்களூருவுக்குச் செல்வது மட்டும்தான். கணவருடைய ஈமக்கிரியை முடிந்தவுடன் தன் இரண்டு பிள்ளைகளுடன் பெங்களூருவுக்குப் பயணமானார்.

சினிமா வாய்ப்பு:

ரெங்கசாமிக்கு, ஹிந்துஸ்தான் ஏவியேசன் லிமிடெட்டில் குமாஸ்தா பணி. ஸ்ரீரங்கத்திலிருந்து வந்து பெங்களூருவில் வேலைநிமித்தமாக jaya%20sandhiya.jpgசெட்டில் ஆனவர். அவரும், ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். அதனால் தன் அப்பாவின் சுமையைக் குறைக்க, அம்முவுக்கு நல்ல கல்வியைத் தர வேதவல்லி பணிக்குச் செல்ல வெரும்பினார். தட்டச்சு தெரியும், சுருக்கெழுத்தும் நன்கு வரும். அப்போது இந்த தகுதிகளே போதுமானதாக இருந்தது. பணி கிடைத்தது.  ஆனால், அதிலிருந்து வந்த ஊதியம் போதுமானதாக இல்லை. வாழ்க்கை, வெயில்பொழுதில் வனாந்திரத்தில் நடப்பதுபோன்று இறுக்கமாகச் சென்றுகொண்டிருந்தது.

அந்த சமயத்தில் தான் , கன்னட சினிமா தாயாரிப்பாளர் கெம்பராஜ், வேதவல்லியைப் பார்த்தார். லட்சணமான முகம் என ஒரு நடிகைக்கான அம்சத்தைக் கண்டு கொண்டார். உடனடியாக ரெங்கசாமியைச் சந்தித்து, “என் படத்துக்கு ஒரு நாயகியை தேடிக்கொண்டு இருக்கிறேன். உங்கள் மகள் பொருத்தமாக இருப்பார். நடிக்க அனுமதிப்பீர்களா...?” என்று கேட்ட அடுத்த நொடியே ரெங்கசாமிக்கு கோபம் தலைக்கேறியது. ‘‘முடியாது’’ என்று மறுதலித்தார். உண்மையில், அந்தச் சமயத்தில் வேதவல்லிக்கும் சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்ததுதான். அதற்கு ஒரே காரணம் ‘நல்ல ஊதியம்’. ஆம், பொருளாதாரச் சிரமத்தில் இருக்கிறோம். இந்தச் சமயத்தில் இது நல்ல வாய்ப்பு. இரு பிள்ளைகளையும் படிக்கவைக்கலாம்... அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். ஆனால், அப்பா மறுக்கிறாரே. இப்போது என்ன செய்ய முடியும்...? என்று அமைதியாக இருந்துவிட்டார்.

ரெங்கசாமி மறுத்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அப்போது, அவரது இன்னொரு மகள் அம்புஜா விமானப் பணிப்பெண்ணாகப் பணியில் இருந்தார். ஓர் ஆச்சாரமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் விமானப் பணிப்பெண்ணாகப் பணி செய்வது ரெங்கசாமிக்குப் பிடிக்கவில்லை. அம்புஜாவுடன் பேசுவதையே நிறுத்தி இருந்தார். இன்னொரு மகளும் தங்கள் சமூகநெறியை மீறி ஒரு பணிக்குச் செல்வதை ரெங்கசாமி விரும்பவில்லை.

ஆனால், மனிதர்களின் விருப்பங்கள் மட்டுமே நிகழ்கிறதா என்ன..? அப்போது, விதி வேறு மாதிரி இருந்தது. ஆம், விமானப் பணிப்பெண்ணாக இருந்த அம்புஜா, வித்யாவதி என்று தன் பெயரை மாற்றி சினிமாவில் நடிக்க தொடங்கி இருந்தார். இந்தப் புள்ளியிலிருந்துதான் அம்முவின் வாழ்க்கை மாறியது.

ஆம்... அம்புஜா, ‘வித்யாவதி’யாக மாறாமல் இருந்திருந்தால்... ஒருவேளை, அம்முவும் ‘அம்மா’வாக மாறாமல் இருந்து இருப்பார்.

வித்யாவதி சென்னையில் தங்கி திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது, வித்யா தன் சகோதரி வேதவல்லியை, தன்னுடன் சென்னை வந்து தங்குமாறு அழைத்தார். ‘‘அம்முவை, தான் நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறேன்’’ என்றார். எந்த மறுப்பும் சொல்லாமல் இந்த வாய்ப்பை வேதவல்லி ஏற்றுக்கொண்டு சென்னைக்குப் பயணமானார்.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/69460-from-mysuru-to-81-poes-garden-travel-of-jayalalithaa-episode-1.art

Categories: Tamilnadu-news

முதல்வருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் இன்று மீண்டும் சென்னை வருகை

Thu, 13/10/2016 - 06:19
முதல்வருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் இன்று மீண்டும் சென்னை வருகை

 

 
முதல்வர் ஜெயலலிதா | கோப்பு படம்
முதல்வர் ஜெயலலிதா | கோப்பு படம்

முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணத் தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக் டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த லண்டன் டாக்டர் டாக்டர் ரிச்சர்ட் பீலே, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

முதல்வரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, கடந்த 2-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். கடந்த 5-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட குழுவினர் மருத்துவமனைக்கு வந்தனர். முதல்வருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள் குறித்து கேட்ட றிந்த குழுவினர் தேவையான ஆலோ சனைகளை வழங்கினர். இதற்கிடையில் கடந்த 6-ம் தேதி லண்டனில் இருந்து மீண்டும் வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் டாக்டர்களும் இணைந்து முதல்வருக்கு அடுத்தக் கட்டமாக அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து தீவிர ஆலோசனைகளை நடத்தினார்.

அவர்களின் பரிந்துரைப்படி டாக்டர் கள் குழுவினர் முதல்வருக்கு செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரல் சிகிச்சை, நோய் தொற்றுக்கான மருந்துகள் மற்றும் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முதல்வருக்கு ஊட்டச்சத்து மற்றும் பிசியோதெரப்பி சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே இன்று சென்னை வருவ தாக சொல்லப்படுகிறது. சென்னையில் 5 நாட்கள் தங்கி முதல்வருக்கு அளிக் கப்பட்ட சிகிச்சைகளை ஆராய்ந்து, அடுத்தக் கட்ட சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். மீண்டும் லண்டன் டாக்டர் வருவதால், முதல்வர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கை அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/முதல்வருக்கு-சிகிச்சை-அளிக்க-லண்டன்-டாக்டர்-இன்று-மீண்டும்-சென்னை-வருகை/article9213790.ece?homepage=true

Categories: Tamilnadu-news

ஜெயலலிதாவை காதலித்தேன் : முன்னாள் நீதிபதி.!

Wed, 12/10/2016 - 10:31
ஜெயலலிதாவை காதலித்தேன் : முன்னாள் நீதிபதி.!

 

 

markandey-katju-s-love-note-for-jayalali

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் 3 வார காலமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா விரைவில் குணம் பெற்று பணிக்கு திரும்புவார் என தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஜெயலலிதாவை தான் ஒரு தலையாக காதலித்ததாக சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

அவரது பதிவில், ஜெயலலிதா சிங்கம் போன்ற ஒரு பெண். அவரி எதிர்ப்பவர்கள் குரங்குகள். அவர் விரைவில் குணம்பெற்று பணிக்கு திரும்புவார்.

நான் இளைஞனாக இருந்த போது, ஜெயலலிதா மிகவும் இளமையாக இருப்பார் அவரது கவர்ந்திழுக்கும் அழகால் அவரை நான் காதலித்தேன். ஆனால் அது ஜெயலலிதாவுக்கு தெரியாது. என்னுடைய காதல் என்றுமே மாறாதது.

இப்பொழுதும் அவரது கவரும் அழகை பார்க்க முடிகிறது. இப்பொழுதும் அவரை நான் காதலிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். என மார்கண்டேய கட்ஜூ கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு பலரும் கம்மெண்ட் செய்து வந்தனர். இதனால் சர்ச்சை எழவே அவர் தனது பதிவை பேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார்.

http://www.virakesari.lk/article/12324

Categories: Tamilnadu-news

முதல்வர் ஜெயலலிதாதான்... பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பு! - முதல்வர் ஆலோசனைப்படி அறிவிப்பு

Tue, 11/10/2016 - 17:37
முதல்வர் ஜெயலலிதாதான்... பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பு! - முதல்வர் ஆலோசனைப்படி அறிவிப்பு

 

 

ops.jpg

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.அவரது உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.சற்றுமுன்பு ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

 

அதில்,   முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.   இனி அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார். மேலும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா முதலமைச்சராகவே நீடிப்பார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%B0.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/69375-ops-takes-over-jayalalithaas-portfolios.art

Categories: Tamilnadu-news

இவர் சசிகலா மட்டும் அல்ல... ஜெயலலிதாவின் நிழல் !

Tue, 11/10/2016 - 14:30
இவர் சசிகலா மட்டும் அல்ல... ஜெயலலிதாவின் நிழல் !

jaya%20sasi.jpg

மிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்து விட்டது. ஜெயலலிதாவின் ரத்த உறவுகளில் துவங்கி... தமிழக ஆளுநர், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என ஜெயலலிதாவை யாரும் சந்திக்க முடியவில்லை. ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றவர்கள், மருத்துவர்களை சந்தித்து ஜெயலலிதாவின் நலம் குறித்து கேட்டு திரும்பினர். 'பார்த்தவர்களை பார்த்தோம். அவர்கள் சொன்னதை சொல்கிறோம்' என்பதை மட்டுமே ஜெயலலிதாவை சந்திக்க சென்றவர்கள் சொல்ல முடிந்தது.

உண்மையில் மருத்துவர்களை தவிர்த்து ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்தித்திருப்பார்கள் என்றால், ஒருவர் பெயரைத்தவிர வேறு யார் பெயரையும் அறுதியிட்டு கூற முடியாது. அந்த ஒருவர் தான் சசிகலா.

ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் மருத்துவமனைக்குள் கூட அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக ஆளும் தமிழகத்தின் ஆளுநர் கூட அவரை சந்திக்க முடியவில்லை. மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் என யாரும் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அறை பகுதிக்கு கூட சென்று விட முடியவில்லை. ஆனால் ரத்த உறவாக இல்லாமல், ஆட்சி, அரசியலில் எந்த நேரடித் தொடர்பும் இல்லாமல்... ஜெயலலிதாவை உடன் இருந்து கவனித்துக்கொள்பவர் சசிகலா தான். யார் இவர்? இவருக்கு ஜெயலலிதாவுக்கும் என்ன தொடர்பு? அதைத்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.

jaya%20sasi%201.jpg

ஜெ - சசிகலா அறிமுகமானது இப்படித்தான் !

ஜெயலலிதாவுக்கு சசிகலா அறிமுகமானது 1984-ம் ஆண்டு. அப்போது ஜெயலலிதா அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர். ஒவ்வொரு ஊராக பொதுக்கூட்டத்துக்கு செல்லும் ஜெயலலிதா, தனது நிகழ்வுகளை வீடியோக்களாக பதிவு செய்ய விரும்புகிறார். அப்போது வீடியோ கவரேஜ் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார் சசிகலா. கடலூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த தனது கணவர் ம.நடராஜன் மூலம் கலெக்டர் சந்திரலேகாவின் தொடர்பை பிடித்து, சந்திரலேகா மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமாகிறார் சசிகலா.

ஜெயலலிதாவுக்கு திரைப்பட வீடியோ கேசட்களை சசிகலா தரத்துவங்க... இருவருக்கு நட்பு உருவானது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, கட்சியில் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி அதிகரித்திருந்தது. அந்த நேரத்திலும், எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அரசியல் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்த போதும் ஜெயலலிதாவுடன் இருந்து நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டார் சசிகலா.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாக பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்த நேரத்தில் ஜெயலலிதா அரசியல் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எல்லாம் ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா தான். ஜெயலலிதா சட்டமன்றத்துக்குள் சென்றபோது, பல நெருக்கடிக்குள்ளானார். சட்டப்பேரவையிலேயே தாக்கப்பட்டார். இதனால் ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் ஜெயலலிதா. இந்த நெருக்கடியான கால கட்டங்கள் அனைத்திலும் ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருந்த சசிகலா, அதன்பின்னர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனுக்கே வந்து தங்க ஆரம்பித்தார்.

sasi%20with%20j%201.jpg

உச்சம் தொட்ட மன்னார்குடி குடும்பம்

j%20sasi.jpg1991-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா. அப்போது சசிகலாவுடன் அவரது உறவினர்கள் சிலரும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாகினர். போயஸ் கார்டனில் சசிகலாவின் உறவினர்கள் தலைகாட்டத்துவங்கியது 1991-க்கு பின்னால் தான்.

இதன் ஒரு பகுதியாகத்தான் சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை தத்தெடுத்தார் ஜெயலலிதா. சசிகலாவின் இன்னொரு சகோதரரான ஜெயராமன், ஹைதராபாத் தோட்டத்தில் தங்கி நிர்வாகப்பணிகளை கவனிக்க அனுமதிக்கப்பட்டார். ஹைதரபாத் தோட்டத்தில் நடந்த மின் விபத்தொன்றில் ஜெயராமன் இறந்துவிட... ஜெயராமனின் மனைவி இளவரசிக்கு ஆறுதல் சொல்லி... கைக்குழந்தையுடன் போயஸ் கார்டனுக்கு அழைத்து வந்தார். (அந்த கைக்குழந்தைதான் இப்போது போயஸ் கார்டனில் அதிகாரம் செலுத்தி வரும் விவேக் ஜெயராமன்)

இதோடு நிற்கவில்லை. சசிகலாவின் அண்ணன் மகன் டிடிவி தினகரனுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இப்போது ஓ.பன்னீர் செல்வத்தின் வசமுள்ள கட்சி பொருளாளர் பதவியையும் டிடிவி தினகரனுக்கு கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. எல்லாவற்றுக்கும் மேல் சசிகலா ஜெயலலிதாவின் நிழலாக பார்க்கப்பட்டார். எல்லாம் சசிகலாவின் கண்ணசைவிலேயே நடப்பதாக சொல்லப்பட்டது. சசிகலா மட்டுமில்லாமல், சசிகலாவால், சசிகலாவுக்கு நெருங்கியவர்களும் உச்சம் போனார்கள்.

sudhakaran%20marriage.jpg

நெருக்கடியான நேரத்திலும் ஜெ. உடன்...

ஜெயலலிதாவோடு இணைந்து சசிகலா ஆடம்பர வாழ்க்கையை மட்டுமில்லாமல் நெருக்கடி காலத்தையும் கழித்தார்.  1996-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சோதனையான ஆண்டு. வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடத்திய ஆடம்பர திருமணம், சொத்துக்குவிப்பு புகார் உள்ளிட்ட சில புகார்களும் ஜெயலலிதாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைதானார். இந்த நேரத்தில் ஜெயலலிதாவுடன் சசிகலாவும் கைதானார். அதோடு ஜெயலலிதா மீது திமுக சேர்த்த அனைத்து வழக்குகளில் சசிகலாவும் சேர்க்கப்பட்டார்.

சசிகலாவின் தொடர்புதான் ஜெயலலிதாவின் சரிவுக்கு காரணம் என பரவலாக பேசப்பட்டது. வளர்ப்பு மகன் தத்தெடுத்தது துவங்கி, சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தியது வரை எல்லாம் சசிகலாவால்தான் என சொல்லப்பட... அதுவே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிவித்தார் ஜெயலலிதா.

ஆனால் சில நாட்களில் நிலைமை தலை கீழானாது. எனது உடன்பிறவா சகோதாரி சசிகலா என அறிவித்தார் ஜெயலலிதா. அதோடு 'சசிகலா எப்போதும் என்னோடுதான் இருப்பார். அவரைப்பற்றிய எந்த கேள்வியும் அவசியமற்றது' என வெளிப்படையாகவே அறிவித்தார் ஜெயலலிதா.

sasi%20jaya.jpg

'சின்னம்மா'வான சசிகலா

இதன் பின்னர்தான் சசிகலா கட்சியில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினார். ஆட்சியிலும், கட்சியிலும் அவரது பிடி இறுகத்துவங்கியது அப்போதுதான். ஜெயலலிதாவை அம்மா என அழைத்த அதிமுகவினர், சசிகலாவை சின்னம்மா என அழைக்கத்துவங்கியது இதற்கு பின்னால் தான்.

2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதா முதல்வராக முடியாத சூழலில், முதல்வர் இடத்துக்கு ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தது சசிகலா தான் என சொல்வார்கள். அதோடு யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி என்பதை தீர்மானிப்பவராகவும் சசிகலா மாறினார் என சொல்லப்படுவதுண்டு. அம்மா என ஜெயலலிதாவுக்கு கிடைத்த அனைத்து மரியாதைகளும், 'சின்னம்மா' சசிகலாவுக்கும் கிடைக்கத்துவங்கியது 2001க்கு பின்னர் தான்.

ஒருபுறம் ஜெயலலிதாவின் நிழலாக இயங்கிய போதும், மறுபுறம் சசிகலாவின் உறவினர்கள் ஜெயலலிதாவினால் பல நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர். சசிகலாவின் கணவர் ம.நடராசனை ஒதுக்கி வைத்த ஜெயலலிதா, அவர் மீது பல்வேறு வழக்குகளை போட்டு கைது செய்தார். அப்போது எந்த சலனமும் இல்லாமல் ஜெயலலிதாவோடு இருந்தார் சசிகலா. கட்சியின் பொருளாளர், எம்.பி. என பதவி வழங்கப்பட்டிருந்த டிடிவி தினகரன் கட்சியில் இருந்தும், நிர்வாகத்தில் இருந்தும் முழுமையாக ஒதுக்கப்பட்டார். வளர்ப்பு மகனாக தத்தெடுக்கப்பட்ட சுதாகரன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது. சசிகலாவின் உறவினர்கள் போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டனர். கணவர் உட்பட உறவினர்கள் எல்லாம் விலக்கி வைக்கப்பட்ட நேரத்தில்கூட ஜெயலலிதாவை விட்டு விலகாமல் இருந்தார் சசிகலா.

sasi%20+ilavarasi.jpg

மீண்டும் மன்னார்குடி குடும்பம்

2011 மீண்டும் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர... சசிகலா குடும்பத்தினரின் ஆட்டம் மீண்டும் வேகமெடுத்தது. நிர்வாகத்தில் முன்னர் இருந்தவர்களுக்கு பதில் வேறு நபர்கள் இருந்தார்கள். எல்லோரும் மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.
பல மட்டங்களில் இவர்களது அட்டகாசம் தொடர... அதிர்ந்து போன ஜெயலலிதா, மீண்டும் சசிகலாவை வெளியேற்றினார். சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ராவணன், கலியபெருமாள், மிடாஸ் மோகன் என பலர் மீது வழக்குகள்  பாய்ந்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவுடனும், அவரது குடும்பத்தினரிடமும் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என பகிரங்கமாகவே எச்சரித்தார் ஜெயலலிதா.

இத்தனை நடந்த போதும் சசிகலா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. தான் சார்ந்த யாரையும் எதிர் வினையாற்ற அனுமதிக்கவில்லை. இதுநாள் வரை செய்தியாளர்களை சந்தித்ததில்லை. எந்த கூட்டத்திலும் சசிகலா பேசியதில்லை. அரசியல் தலைவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதாக தெரியவில்லை. யூகங்களை கடந்து, சசிகலா பெயரை பழக்கத்தின் அடிப்படையில் யாரும் உச்சரித்து விடவில்லை.

j%20with%20sasi.jpg

சிறை வரை தொடர்ந்த நட்பு

இந்த பிரிவும் சில நாட்களே நீடித்தது. மீண்டும் போயஸ் கார்டன் வந்தார். ஜெயலலிதாவை கவனித்துக்கொள்ள சசிகலாவால் தான் முடியும். அவர் இல்லாமல் ஜெயலலிதாவால் தனித்து இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு சசிகலா ஜெயலலிதாவுடன் ஐக்கியமானார்.

மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் செல்ல, அவருடன் சசிகலாவும் சென்றார். அரசியல் எதிர்காலம் என்னவென தெரியாதபோது, போயஸ் கார்டனில் அதிகாரத்தில் இருந்தபோது, தோல்வியை தழுவி நெருக்கடியான காலகட்டங்களில், சிறையில், கணவரை கைது செய்து சிறையில் அடைத்தபோது, குடும்ப உறவுகளை எல்லாம் விலக்கி வைத்தபோது ஜெயலலிதாவுடனே இருந்தார் சசிகலா.

கடைசியாக பரப்பன அக்ரஹார சிறையிலும் ஜெயலலிதா உடன் இருந்து அவரை கவனித்துக்கொண்ட சசிகலா தான், இப்போது அப்போலோ மருத்துவமனையிலும் இருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் துவங்கிய நட்பு, சசிகலாவுடன் 32 ஆண்டுகளை கடந்து தொடர்கிறது. ஜெயலலிதாவுக்கு இது மிக நெருக்கடியான கால கட்டம். இப்போது அவருடன் சசிகலா இருப்பது என்பது இந்த 32 ஆண்டுகால நட்பின் அடிப்படையில் தான்.

உண்மையில் அவர் சசிகலா அல்ல. ஜெயலலிதாவின் நிழல்.

http://www.vikatan.com/news/coverstory/69353-sasikala-is-jayalalithaas-shadow-.art

Categories: Tamilnadu-news

கண்காணிப்பில் தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்! -ஆடுபுலி அரசியல்!?

Tue, 11/10/2016 - 08:59
கண்காணிப்பில் தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்!  -ஆடுபுலி அரசியல்!?

appolollo.jpg

அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 19 நாட்கள் கடந்துவிட்டன. ' தலைமைச் செயலாளரை மட்டுமே நம்புகிறார் சசிகலா. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரிக்க வரும் தலைவர்களால், கிரீம்ஸ் சாலை நிரம்பி வழிகிறது. அகில இந்திய தலைவர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்களின் தொடர் வருகையும் முதல்வர் உடல்நலன் குறித்தான பாசிட்டிவ் பேச்சுக்களும் தொண்டர்களுக்கு ஆறுதலை அளித்து வருகின்றன. அப்போலோ வெளியிடும் அறிக்கைகளை மட்டுமே நம்ப வேண்டிய சூழலில் அ.தி.மு.க தொண்டர்கள் உள்ளனர். ஆட்சி அதிகாரத்தை வழிநடத்துவதற்கு 'பொறுப்பான' ஒருவர் தேவை என்ற பேச்சு சகலமட்டத்திலும் எழுந்துள்ளது. ' முதல்வர் போயஸ் கார்டன் வந்துவிட்டாலும், ஆட்சியை வழிநடத்திச் செல்வதற்கு மேலும் பல மாதங்கள் ஆகலாம்' என்பதால், அடுத்துச் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார் சசிகலா. 

sasikala%20apollo.jpgஅ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "முன்பு சசிகலா என்ன சொல்கிறாரோ, அதைச் செயல்படுத்துவது மட்டுமே தலைமைச் செயலாளரின் பணியாக இருந்தது. ஆனால், இப்போது தலைமைச் செயலாளர் சொல்வதை மட்டுமே நம்புகிறார் சசிகலா. ஆளுநரை சந்தித்து விவாதிக்கவும் ராமமோகன் ராவையே அனுப்பினார். கூடவே, பெயரளவுக்கு அமைச்சர்கள் ஓ.பி.எஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் உடன் சென்றனர். தற்போதைய அரசியல் சூழலில், முதல்வரின் உடல்நிலையைப் பயன்படுத்தி, எம்.எல்.ஏக்களை வளைக்கும் நடவடிக்கைகள் நடக்கிறதா என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறார் சசிகலா. முதல்வர் சிகிச்சை பெறும் சூழலைப் பயன்படுத்தி, கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் தொழிலதிபர்களை தீவிரமாக கண்காணிக்கிறது உளவுத்துறை.

அவர்கள் மூலம் என்ன மாதிரியான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது? எத்தனை எம்.எல்.ஏக்களை வளைக்கத் திட்டமிட்டுள்ளனர் என்கின்ற தகவல்கள் எல்லாம் உடனுக்குடன் அவரது கவனத்துக்குச் செல்கிறது. அ.தி.மு.கவின் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர். சசிகலாவின் உறவினர்களால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் யார்? அவர்களுக்கு தற்போதைய தேவை என்ன? அவர்களை சமாதானப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விரிவான விவாதம் நடந்து வருகிறது. இந்தப் பணியில் சில சீனியர்கள் ஈடுபட்டுள்ளனர்" என்றார். 

அதேநேரத்தில், தி.மு.க தரப்பிலும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ' அ.தி.மு.கவில் ஜெயலலிதாவால் நேரடியாக பாதிக்கப்பட்டு, தி.மு.கவில் ஐக்கியமானவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் பத்துக்கும் மேற்பட்டோர் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். அ.தி.மு.கவில் ஏதேனும் சிறு மாற்றம் ஏற்பட்டால்கூட, சசிகலா ஆதரவில் செல்வாக்கோடு வலம் வரலாம் என்ற கனவில் சிலர் உள்ளனர். இவர்களும் ஒருகாலத்தில் அ.தி.மு.கவில் பவர்ஃபுல்லாக கோலோச்சியவர்கள்தான். ' இப்படியொரு முடிவை நோக்கி இவர்கள் செல்லலாம்' என்பதால், அவர்களில் சிலர் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது தி.மு.க' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

அ.தி.மு.கவின் நாடாளுமன்ற பலத்தை குறிவைத்து பா.ஜ.கவும் காங்கிரஸும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, அ.தி.மு.கவிலும் தி.மு.கவிலும் நடக்கும் 'கண்காணிப்பு அரசியலை' கவனித்து வருகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/69334-dmk-and-admk-parties-monitoring-their-mlas.art

Categories: Tamilnadu-news

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக இருவர் கைது

Mon, 10/10/2016 - 16:33
தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக இருவர் கைது
 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாக இரண்டு நபர்களை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சைபர் கிரைம்
 தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக இருவர் கைது

கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ம் தேதியன்று முதல் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் கண்காணிப்பில் முதல்வர் உள்ளார் என்றும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருவைத்தால், அவ்வாறு வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பிய இரண்டு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் சென்னையை சேர்ந்த ராஜ்கமல் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில், ''சதீஷ்சர்மா'' என்ற முகநூல் கணக்கில் இயங்கி வந்த நாமக்கல்லை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மதுரையை சேர்ந்த மாடசாமி ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இதேபோன்று சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவு செய்ததாக 43 வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்குவதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதற்காகவும், தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் இம்மாதிரியான தவறான தகவல்களையும், வதந்திகளையும், சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும், அதனை பிறருக்கு அனுப்புவதும் சட்டப்படி குற்றமாகும். மேலும் இதுபோன்ற குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் வரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறை அச்செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளது.

http://www.bbc.com/tamil/india-37606779

Categories: Tamilnadu-news

எந்தக் கூட்டணியும் ஆயுட்கால கூட்டணி இல்லை: சர்ச்சைகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம்

Mon, 10/10/2016 - 12:24
எந்தக் கூட்டணியும் ஆயுட்கால கூட்டணி இல்லை: சர்ச்சைகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம்

 

 
திருநாவுக்கரசர் | கோப்புப் படம்
திருநாவுக்கரசர் | கோப்புப் படம்

கூட்டணியில் இருப்பவர்கள் ஒரே கருத்தை சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆயுட்கால கூட்டணி என்று எதுவும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்காமல் டெல்லி திரும்பினார். தமிழகத்தில் பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியபோது, அது தேவையில்லை என்று திருநாவுக்கரசர் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலில் குறைவான இடங்களை காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியதால்தான், ஸ்டாலினின் கருத்துக்கு எதிரான கருத்தை திருநாவுக்கரசர் கூறி வருகிறார். இதனால், திமுக - காங்கிரஸ் உறவில் சிக்கல் நிலவுகிறது என செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு திருநாவுக்கரசர் அளித்த சிறப்புப் பேட்டி:

திமுக காங்கிரஸ் கூட்டணியில் முரண்பாடுகள் நிலவுவதாக கூறப்படுகிறதே?

திமுக - காங்கிரஸ் உறவு எப்போதும் போலத்தான் உள்ளது. அதில் எந்தச் சிக்கலும் இல்லை.

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு குறைவான இடங்களை ஒதுக்கியதுடன், அந்த இடங்களிலும் திமுகவினர் மனு தாக்கல் செய்தார்களே?

உள்ளாட்சியில் சுமார் 20 ஆயிரம் பதவிகளுக்குக் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும். இத்தனை இடங்களை பிரித்துக் கொள்வதற்கு தலைவர்கள் மட்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே, இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸுக்கு திமுக அதிக இடங்களை ஒதுக்கியது. சென்னை மாநகராட்சியில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளதால், தொகுதிக்கு தலா 1 வார்டு என்ற அடிப்படையில் 22 வார்டுகள் கேட்டோம். அவர்கள் 14 கொடுத்தனர். பேச்சுவார்த்தை சுமூகமாக எட்டப்படாத இடங்களில் காங்கிரஸ், திமுக என இரு தரப்புமே வேட்பு மனு தாக்கல் செய்தது. இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும்போது திமுகவு டன் பேசுவோம்.

சென்னை வந்த ராகுல் காந்தி, திமுக தலைவரை சந்தித்திருக்கலாமே?

ராகுல் காந்தியின் பயணம் அரசியல் சார்பின்றி முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணமாகவே இருந்தது. உடல்நலம் சரியில்லாத முதல்வரை பார்க்க வரும்போது அரசியல் கூடாது என்று அவர் கூறினார். அதனால்தான் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் விமான நிலையம் மற்றும் மருத்துவமனைக்கு வரவில்லை. தமிழக தலைவர் என்ற முறையில் நான் மட்டுமே சென்றேன். முதல்வரை பார்த்துவிட்டு திமுக தலைவர் கருணாநிதியை பார்த்தால், அது அரசியல் சமநிலையை ஏற்படுத்தும் செயலாக அமைந்துவிடும் என்றே அவர் தவிர்த்தார்.

பொறுப்பு முதல்வர் வேண்டும் என்று மு.க.ஸ்டாலினின் கருத்தில் இருந்து நீங்கள் மாறுபடுகிறீர்களே?

நான் வேறு கட்சி. அவர் வேறு கட்சி. நாங்கள் ஒரே கூட்டணியில் இருக்கிறோம் என்பதால் ஒரே கருத்தை சொல்ல வேண்டுமா என்ன? ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த அடிப்படையில் தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வர் தேவையில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதே, நேரத்தில் நிர்வாகம் நன்றாக நடக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம்.

திமுக காங்கிரஸ் உறவில் எந்தச் சிக்கலும் இல்லை என்று உறுதியாக கூறுகிறீர்களா?

இன்றைய நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. அதே நேரத்தில், எந்தக் கூட்டணியும் ஆயுட்கால கூட்டணி கிடையாது. ஏனென்றால், முன்பு திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். பின்னர், கூட்டணி இல்லாமல் இருந்திருக்கிறோம். இப்போது கூட்டணியில் இருக்கிறோம். அவ்வளவுதான்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/எந்தக்-கூட்டணியும்-ஆயுட்கால-கூட்டணி-இல்லை-சர்ச்சைகளுக்கு-தமிழக-காங்கிரஸ்-தலைவர்-திருநாவுக்கரசர்-விளக்கம்/article9206266.ece?homepage=true

Categories: Tamilnadu-news

' நான் வெறும் பார்வையாளன் மட்டுமே!' -கட்சித் தலைவர்களிடம் மனம் திறந்த கவர்னர்

Mon, 10/10/2016 - 10:58
' நான் வெறும் பார்வையாளன் மட்டுமே!'  -கட்சித் தலைவர்களிடம் மனம் திறந்த கவர்னர்

ops%20governor.jpg

அப்போலோவுக்கு இணையாக தினசரி தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கிறது கிண்டி ராஜ்பவன் மாளிகை. ' பொறுப்பு முதல்வரை நியமிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை' என மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஆளுநரின் சந்திப்பால் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. ஆனால், அப்படியொரு எந்த ஓர் அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன்பிறகு, ஆளுநரை சந்தித்துப் பேசுவதற்காக அமைச்சர்கள் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோர் சென்றனர். அப்போதும், ' காவிரி பிரச்னை மற்றும் அரசின் பொது நிர்வாகம் பற்றியே கேட்டறிந்ததாக' ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியானது. அப்போலோ மருத்துவமனைக்கு இணையாக, ஆளுநர் அலுவலக அறிக்கைகளும் தொண்டர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த வாரம் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். வெளியில் வந்தவர், ' மத்திய அமைச்சரவையில் இருந்தபோதே ஆளுநரை நன்கு அறிவேன். இது நட்புரீதியிலான சந்திப்பு' என சிரித்துக் கொண்டே பேட்டியளித்தார். 

இதன்பின்னர், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் ஆளுநரை சந்தித்துவிட்டுத் திரும்பினார். ' என்னதான் விவாதிக்கப்படுகிறது ஆளுநர் மாளிகையில்?' என்ற கேள்வியை ராஜ்பவன் வட்டாரத்தில் கேட்டோம். நம்மிடம் விவரித்தவர்கள், " அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் வந்தாலும், வரவேற்று உபசரிப்பு கொடுப்பது ஆளுநர் மாளிகை வழக்கம். ஆனால், தற்போதைய தமிழக அரசியல் சூழலில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளனர். குறிப்பாக, மத்திய அரசின் பிரதிநிதியாகவே ஆளுநர் இருக்கிறார். தமிழ்நாட்டின் சூழலில் அவர் எடுக்கப் போகும் முக்கிய முடிவுகளை அறிந்து கொள்ளவும் விரும்புகின்றனர். இதுபற்றித்தான் நேரடி சந்திப்பில் விவாதித்தார்கள். 

அவர்களிடம் பேசிய ஆளுநர், ' நான் பொறுப்பு ஆளுநராக இருக்கிறேன். மத்திய அரசைப் பொறுத்தவரையில் நான் வெறும் பார்வையாளன்தான். சுப்ரமணியன் சுவாமி போன்றவர்கள், ட்விட்டரில் பேசுவதற்கு நான் பொறுப்பாக முடியாது. மோடி என்ன நினைக்கிறாரோ, அதை செயல்படுத்துவது மட்டும்தான் என் வேலை. அவர் மனதில் என்ன ஓடுகிறது என்றும் தெரியவில்லை. முதல்வர் குணமடைந்து வரும் வரையில், தமிழ்நாட்டில் நிர்வாக பொறுப்புக்கு யாரை நியமிப்பது என்பதை கேபினட்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒரு பார்வையாளனாக கவனித்துக் கொண்டிருக்கிறேன் என மனம் திறந்து பேசினார்" என விவரித்தனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/69324-i-am-just-an-observer-governor-says-about-tn-government-situation.art

Categories: Tamilnadu-news

முதல்வர் உடல்நிலை... சி.பி.ஐ விசாரணை தேவை! -சசிகலா புஷ்பா 'திடீர்' சர்ச்சை

Mon, 10/10/2016 - 08:26
முதல்வர் உடல்நிலை... சி.பி.ஐ விசாரணை தேவை! -சசிகலா புஷ்பா 'திடீர்' சர்ச்சை

sasikala%20pushpa600.jpg

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிரடியாக பேசி இருக்கிறார் சசிகலா புஷ்பா. ' முதல்வரின் உடல்நிலை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்' என சர்ச்சை கிளப்பியிருக்கிறார். 

டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா எம்.பி, " முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, நான் பேசிய பிறகே அப்போலோ மருத்துவனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிடுகிறது. குறிப்பாக, 'ஹேபியஸ் கார்பஸ் பெட்டிஷன் போடுவேன்' என பேட்டி கொடுத்த பிறகுதான் அறிக்கை வெளிவருகிறது. என்னைப் போல, சசிகலா நடராஜனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் மீது பாய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். கட்சியின் சீனியர் நிர்வாகிகள் என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். முதலில், sasi%20letter.jpg'முதல்வருக்கு டிஹைட்ரேட் ஏற்பட்டது' என்றார்கள். எதனால் அது வந்தது? அவருக்குப் பின்னால் இருந்து இரண்டு மாத காலம் கவனித்தபோது கொடுத்த மாத்திரைகள் என்ன என்பதற்கு சி.பி.ஐ விசாரணை தேவை.

அவருக்குப் பின்னால் உள்ளவர்களால் ஏற்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை தேவை. முதல்வர் உடல்நலன் குறித்து பலவித சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. சசிகலா நடராஜனும் அவர்கள் குடும்பமும் மருத்துவமனையில் இருந்து வெளியேற வேண்டும். முதல்வர் உடல்நலன் பெற்று மீண்டு வர வேண்டும் என்பதில் என்னைப் போன்ற தொண்டர்கள் விரும்புகின்றனர். 2011-ல் சசிகலா குடும்பத்தினர் மீது பல வழக்குகள் பாய்ந்தன. 'ஆட்சிக்கு எதிராக சதி செய்தார்கள்' என்று சொல்லித்தான் முதல்வர் நடவடிக்கை எடுத்தார். 

இப்போது அவர்கள் மருத்துவமனையில் உட்கார்ந்து கொண்டு செயல்படுகிறார்கள். அந்த இடத்தில் இருந்தே அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். அம்மா பிடித்து வைத்தால்தான் பிள்ளையார். இல்லாவிட்டால் சாணி என்பதை தொண்டர்கள் அறிவார்கள். முதல்வரைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களுக்கு அவர்கள்தான் பொறுப்பு. சசிகலா நடராஜன் ஏன் வரக் கூடாது என தொலைக்காட்சி விவாதங்களில் வலிந்து திணிக்கிறார்கள். இது திட்டமிட்ட சதியாகவே பார்க்கிறேன். எந்தப் பதவியிலும் இல்லாத சிலர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிடத் துடிக்கிறார்கள். சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. மீண்டும் அவர் வந்தபோது, ' ஆட்சி அதிகாரத்திற்கு வர மாட்டேன்' என மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு வந்தார். அவரை பதவியில் அமர வைக்கும் முயற்சிகளை அ.தி.மு.க தொண்டர்கள் முறியடிப்பார்கள்' எனக் கொந்தளித்தார் சசிகலா புஷ்பா. 

இந்நிலையில், முதல்வர் கையெழுத்தைப் பயன்படுத்தி மோசடி நடந்தால், அதன்பேரில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா. 

சசிகலாவை எதிர்க்கும் சசிகலாவின் அரசியல் ஆயுதம் எந்த எல்லையை நோக்கிப் பயணிக்கும் என்பதை கவனித்து வருகிறார்கள் அண்ணா தி.மு.க தொண்டர்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/69318-sasikala-pushpa-slams-sasikala-natarajan-for-cm-health.art

Categories: Tamilnadu-news

ஜெ. இலாகா இல்லாத முதல்வர்? எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அரசு? 

Sun, 09/10/2016 - 14:19

09-1475995794-edappadi-palanisamy-600.jpg

ஜெ. இலாகா இல்லாத முதல்வர்? எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அரசு? 

சென்னை: மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் வரை ஜெயலலிதா இலாகா இல்லா முதல்வராக இருப்பார் என்றும் அவர் வசம் தற்போது உள்ள இலாகாக்கள் மூத்த அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2 வாரங்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது.

இதையடுத்து இடைக்கால முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆளுநர் வித்யாசகர் ராவ் இதனை வலியுறுத்தி இருக்கிறார்.

ஆனால் இதற்கு அமைச்சர்கள் இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை. மாற்றாக முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள இலாகாக்களை மூத்த அமைச்சர்கள் பகிர்ந்து கொள்கிறோம் எனவும் ஆளுநரிடம் கூறப்பட்டுள்ளது.

அதாவது தற்போது ஜெயலலிதா வசம் பொதுநிர்வாகம், உள்துறை உள்ளிட்ட இலாகாக்கள் உள்ளன. இவற்றை மூத்த அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் பகிர்ந்து கொள்ளப்படக் கூடும் என தெரிகிறது.

அதே நேரத்தில் அமைச்சரவை கூட்டங்களுக்கு தலைமை வகிப்பது யார்? அரசாங்கத்தை வழிநடத்துவது யார் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு முன்னர் முதல்வராக இருந்த அண்ணாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதும் எம்ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்ட போதும் நெடுஞ்செழியன்தான் அரசாங்கத்தை வழிநடத்தினார்; அவர்தான் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை வகித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி...

அதேபாணியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அரசாங்கத்தை வழிநடத்த மன்னார்குடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா உடல்நிலை உள்ளிட்ட ஆட்சி, கட்சி விவகாரங்கள் அனைத்துமே மன்னார்குடி தரப்பு எடப்பாடி பழனிச்சாமியிடமே விவாதிக்கிறது. ஓ பன்னீர்செல்வத்திடம் எதனையும் பகிர்ந்துகொள்வதில்லையாம். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கே அரசை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கக் கூடும். வழக்கம்போல அமைச்சரவையில் 2-வது இடத்தில் ஓ. பன்னீர்செல்வம் தொடருவார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

நன்றி தற்ஸ் தமிழ்.

Categories: Tamilnadu-news

ஜெயாவை பார்க்க வந்த மர்ம நபர் யார்.? : காரணம் வெளியாகியது.!

Sun, 09/10/2016 - 11:16
ஜெயாவை பார்க்க வந்த மர்ம நபர் யார்.? : காரணம் வெளியாகியது.!

 

 
 

தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு வாரங்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில்; உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பூங்கொத்து அனுப்பி வைத்து விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவரை இன்னமும் நேரில் சென்று நலம் விசாரிக்கவில்லை.

ஒரு மாநில முதல்வர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவின் நல்ல நண்பரும் கூட. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூட அப்பல்லோ வந்து முதல்வரின் நலம் விசாரித்தார். ஆனால் பிரதமர் மோடி இன்னமும் வராதது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வராததற்கு காரணம் காவிரி விவகாரம் தான் பேசப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கர்நாடகா பா.ஜ.க நிர்பந்தம் காரணமாக தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு நடந்து கொண்டதால் தமிழக அரசும் தமிழக மக்களும் பிரதமர் மோடி மீது வெறுப்பில் இருக்கின்றனர்.

இதன் காரணமாகவே பிரதமர் மோடி சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதை தவிர்த்து வருவதாக அவரது வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதேவேளை, நேற்று வெளியான ஒரு புலனாய்வு வார இதழில் முதல்வரின் உடல்நிலை பற்றி அறிவதற்காக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில்;; இருந்து வந்த மருத்துவர்களுடன் பிரதமரின் உளவுப் பிரிவு அதிகாரியும் வந்து முதல்வரைப் பார்த்துச்சென்றார் என்று குறித்த இதழில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/12231

Categories: Tamilnadu-news

'உள்துறை அமைச்சர் போதும்!'- அ.தி.மு.க: 'பொறுப்பு முதல்வர் வேண்டும்!' - கவர்னர்

Sun, 09/10/2016 - 07:38
'உள்துறை அமைச்சர் போதும்!'- அ.தி.மு.க: 'பொறுப்பு முதல்வர் வேண்டும்!' - கவர்னர்

opsgove.jpg

 

ராஜ் பவனில் நடந்த அரசியல் பஞ்சாயத்து

முதல்வர் ஜெயலலிதா குணமாக நீண்ட நாட்கள் ஆகும் என்று மருத்துவமனை தரப்பில் சொன்னதால், ஆளுங்கட்சியில் அடுத்தடுத்த விறுப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் காலகட்டம் மாதிரியான அசாதாரண அரசியல் சூழ்நிலையில்  பி.ஜே.பி. அரசு மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமித்தது. தற்போது ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிற சூழ்நிலையில், பி.ஜே.பி-யின் ஆதரவு அ.தி.மு.க&வில் யாருக்கு என்கிற பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ராகுல் வந்த பின்னணி...

இதுபற்றி டெல்லியில் உள்ள பி.ஜே.பி. தலைவர் ஒருவரிடம் பேசியபோது, '' முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையை மையமாக வைத்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ...தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால், சசிகலாவை முன்னிருத்த ஆதரவு கேட்டு எங்களிடம் சிலர் வந்தார்கள். ஆனால், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் 'நோ' சொல்லிவிட்டனர். முதல்வர் ஜெயலலிதா நிச்சியமாக உடல்நலம் சரியாகி முதல்வர் நாற்காலியில் அமருவார். அவருக்குத்தான் எங்களது ஆதரவு. வேறு யாரும் அந்த நாற்காலிக்கு சொந்தம் கொண்டாட நினைத்தால், சும்மா இருக்கமாட்டோம். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அடுத்து சசிகலா இருப்பதை மறந்துவிடாதீர்கள். தீர்ப்பு எப்படி இருக்குமோ? தெரியவில்லை. அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள்? என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டோம். சசிகலா கோஷ்டியினருக்கு டெல்லி பி.ஜே.பி-யின் ஆதரவு கிடைக்காது என்று தெரிந்தவுடன், எங்களை சமாளிக்க காங்கிரஸுடன் பார்ட்னர் ஷிப் பற்றி பேசினார்கள். தமிழகத்தில் தற்போது தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர், சசிகலா சமூகத்தை சேர்ந்தவர். அந்த வகையில், திருநாவுக்கரசர் சொல்லித்தான் ராகுல் உடனே தமிழகத்துககு போய்விட்டு வந்தார். காங்கிரஸ் ஆதரவு தந்தால், துணை முதல்வர் பதவி திருநாவுக்கரசருக்கு வழக்கப்படும் என்று பேசி முடித்துள்ளார்கள். இன்னும் ஒரிரு நாளில் பிரதமர் மோடி சென்னைக்கு போகிறார். முதல்வரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிக்கப்போகிறார். அதன் பிறகுதான்...அடுத்தகட்ட அதிரடி திருப்பங்கள் தமிழகத்தில் ஏற்படும். பொறுத்திருந்து பாருங்கள்''  என்று சொல்கிறார்.
பி.ஜே.பி.

டார்ச்சர் ஆரம்பம்...

டெல்லியில் ராகுல் ஒ.கே. சொல்லிவிட்டார் என்று தெரிந்ததும், பி.ஜே.பி. மேலிட பிரமுகர்கள் டென்ஷன் ஆனார்கள்.  மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்த கவர்னரை உடனே கிளம்பி தமிழகம் வந்தார். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி, ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்தவேண்டும் என்று பி.ஜே.பி&யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமி அறிக்கை விட்டார். கவர்னரும், சுவாமியும் அக்டோபர் 7-ம் தேதியன்று சென்னையில்தான் இருந்தனர். சுவாமி போய் நேரில் கவர்னரை அக்டோபர் 8-ம் தேதியன்று சந்திப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டது. தமிழகத்தின் முக்கிய அமைச்சர்களை நேரில் ராஜ் பவனுக்கு கவர்னர் வரவழைத்து பொது விஷயங்கள் குறித்து விவாதித்தார் என்று பத்திரிக்கை செய்தி அனுப்பினார்கள். ஆனால், உள்ளுக்குள் நடந்தது வேறு! காவிரி பிரச்னை சீரியஸாகிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு விவகாரங்களை தமிழக அரசு கையாளுவதில் புகார்கள் வருகின்றன. இதையெல்லாம் சமாளிக்க, உடனடியாக பொறுப்பு முதல்வரை நியமிக்கும்படி கவர்னர் தரப்பில் சொன்னதாக கேள்வி. ஆனால், அதற்கு அ.தி.மு.கழக அமைச்சர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.


அ.தி.மு.வின் அடுத்த மூவ்

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால், முதல்வர் ஜெயலலிதா வசம் இருக்கும் துறைகளி உள்துறையை ஸ்பெஷலாக கவனிக்க அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்கிறோம். முதல்வரின் மற்ற துறைகளை சீனியர்கள் பிரித்துக்கொண்டு கவனிக்கிறோம். மற்றபடி...'முதல்வர் என்கிற நாற்காலியில் இனி ஜெயலலிதா திரும்பி வந்து அமர வேண்டும். வேறு யாரும் உடகார கூடாது என்று ஒருமனதாக முடிவு செய்திருக்கிறோம்' எனறு தெரிவித்திருக்கிறார்கள். இதை கவர்னர் ஏற்றுக்கொள்ளவில்லையாம். அமைச்சரவையில் இதுவரை இல்லாத உள்துறை அமைச்சர் பதவியில் புதியதாக யாரையும் உட்காரவைக்க வேண்டுமானால், ஜனாதிபதி, மத்திய அரசிடம் நான் ஆலோசனை நடத்தவேண்டும். சட்ட ஆலோசனையும் தேவைப்படும். 'இதெல்லாம ஏதற்கு?..பேசாமல் பொறுப்பு முதல்வரை நியமிக்கவேண்டியதுதானே?' என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டாராம்.


ஒ.பி.எஸ் மீண்டும் பொறுப்பு முதல்வர் ஆவாரா?

இங்குதான் சிக்கலே இருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, ஒ.பி.எஸ் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றி முதல்வரிடம் போட்டுக்கொடுத்து ரெய்டு நடந்ததற்கு சசிகலாதான் காரணம் என்று ஒ.பி.எஸ்&ஸின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக குற்றம் சாற்றுகிறார்கள். இந்த நிலையில், அவர் முதல்வர் ஸீட்டில் மறுபடியும் அமர்ந்தால், சசிகலாவுக்கு எதிராக தனது அதிகாரத்தை ஒ.பி.எஸ். பயன்படுத்தி விடுவாரோ? என்று சசிகலா கோஷ்டியினர் நினைக்கிறார்கள. அதனால், ஒ.பி.எஸ்&ஸுக்கு வாய்ப்புகள குறைவுதான் என்கிறார் ஆளுங்கட்சியின முக்கிய பிரமுகர் ஒருவர்.

மன்னார்குடிகாரர்களின் திடீர் முடிவு?''

சசிகலா புஷ்பாதான் எங்களை குடும்பத்தினரைப் பற்றியும், சசிகலா பற்றியும் டெல்லியில் வத்தி வைக்கிறார். நாங்கள் ஏதோ ஆட்சியை பிடிக்கப்போவதாக வீண் வதந்தியை பரப்புகிறார். அதெல்லாம் பொய். எங்களைப் பொறுத்தவரையில், ஜெயலலிதா உடல்நலம் தேறி வீட்டுக்கு வரவேண்டும் என்பதில்தான் முழு மூச்சில் செயல்படுகிறோம். அவர் வந்து முதல்வர் பதவியில் அமர்ந்தவுடன் மற்றதை பிறகு பார்க்கலாம்''  என்று சொல்கிறார். நிலவரம் கலவரமாக இருப்பதால்,
மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு கைகொடுக்காவிட்டால், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கும். எனவே, சசிகலாவின் சொல்படி கேட்டு நடக்கும் ஒருவரை தற்போதைக்கு பொறுப்பு முதல்வராக ஆக்கிவிட்டு, பிறகு நடக்கும் அரசியல் நிகழ்வுகளை வைத்து அடுத்தகட்ட அரசியல் மூவ் செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.
பொறுத்திருந்து பார்ப்போம்!

http://www.vikatan.com/news/tamilnadu/69294-home-minister-is-enough-says-admk-cm-incharge-must-says-governor.art

Categories: Tamilnadu-news

முதல்வர் இல்லாமல் இன்னும் எத்தனை நாட்கள் அரசு இயந்திரம் இயங்கும் ?

Sat, 08/10/2016 - 15:27
முதல்வர் இல்லாமல் இன்னும் எத்தனை நாட்கள் அரசு இயந்திரம் இயங்கும் ?

p14d.jpg

15 நாட்களைக் கடந்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் 22ம் தேதி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வருக்குக் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு மட்டுமே காரணம் என தொடக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், லண்டனிலிருந்து சிறப்பு நுரையீரல் மற்றும் செப்ஸிஸ் மருத்துவ நிபுணர் வந்து சென்ற பிறகுதான் தொற்றுக்கான சிகிச்சை தருகிறோம் என்று அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு அப்போலோ வந்து முதல்வருக்கான சிகிச்சைகளை பார்த்துச்சென்றுள்ளனர். இந்தநிலையில், முதல்வருக்கு இதுநாள் வரை அளிக்கப்பட்ட சிகிச்சைகளே தொடரும் எனவும், அதற்கு அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கிறது எனவும் அப்போலோ இரண்டு பக்க செய்தியறிக்கையை  வெளியிட்டது.


உயர்நீதிமன்றமும் பொதுநல வழக்கும்

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வரின் உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பி ட்ராபிக் ராமசாமியால் பொதுநலவழக்கு ஒன்று தொடரப்பட்டது. மனுவை முதலில் விசாரித்த நீதிமன்றம் அரசுதரப்பு வழக்கறிஞர் அதற்கான விளக்கத்தை அளிக்குமாறு கேட்டது. ஆனால், அதே உயர்நீதிமன்றம் இரண்டே நாட்களில் நிலையை மாற்றிக்கொண்டு அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

 

முதல்வரைப் பார்க்கவில்லை ராகுல் 

இந்நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முதல்வரை பார்க்க அப்போலோவுக்கு வருகை தந்தார். மாநிலத்தில் எதிர்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் ஒரு தேசிய கட்சியின் தலைவர் திடீரென மருத்துவமனைக்கு வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முதல்வரின் தோழி சசிகலா, இளவரசி மற்றும் சில அதிமுக முன்னணியினர் தவிர ஜெயலலிதாவை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை. ’யாருக்கும்’ என்பது ஆளுநரையும் சேர்த்துத் தான். ஆளுநருக்கே அனுமதி இல்லாத போதும், டெல்லியிலிருந்து வந்த காங்கிரஸ் தலைவர் ராகுலையாவது ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் அவரும் மருத்துவர்களை மட்டுமே சந்தித்துவிட்டு முதல்வரின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்து விட்டுத் திரும்பினார்.

 

சுப்ரமணியசாமி கடிதம் 

sswamy.jpg

தற்போது முதல்வர் உடல்நிலை மீதான பரபரப்பு அடங்கியுள்ள நிலையில்,  கடந்த 15 நாட்களாக முடங்கிக் கிடக்கும் அரசு இயந்திரத்தை யார் கவனிப்பது என்கிற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இதே கேள்வியை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான சுப்பிரமணிய சாமி எழுப்பி உள்ளார்.  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் மருத்துவமனையில் இருப்பதால் அரசு இயந்திரம் இயங்காமல் கிடக்கிறது என்றும், அதனால் வன்முறைகள் அதிகரித்து ஐ.எஸ்.ஐ.எஸ் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சிலரை கோவையில் கைது செய்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

 

ஆளுநரும் அமைச்சர்களும்!

இத்தகைய சூழலில் அப்போலோவுக்கும், ஆளுநர் மாளிகைக்குமாக அமைச்சர்களும், அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகனராவும் மாற்றி மாற்றி சென்று வந்திருக்கிறார்கள்.ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர்களை நேரில் அழைத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவர்களுடன் சில மணிநேரம் விவாதித்தார். இந்த விவாதத்தின்போது,  அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இருந்தனர். துணை முதல்வர் அல்லது தற்காலிக முதல்வர் பதவியில் யாராவது நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், காவிரி பிரச்னை தொடர்பாகவும், அரசின் தற்போதைய செயல்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர்களுடன் ஆளுநர் விவாதித்தார் என ராஜ் பவன் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
 

_77984366_114139690.jpg


சட்டத்துக்குப் புறம்பானதா?

முதல்வர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் பொறுப்பில் இல்லாதவர்கள்  சென்று மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு பற்றி விவாதிப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்நிலையில், இத்தனை நாட்களுக்குப் பிறகும் அமைச்சர்களோ அல்லது தலைமைச் செயலக வட்டாரமோ, முதல்வரின் உடல்நிலை குறித்தான அறிக்கை எதையும் வெளியிடவில்லை, முதல்வர் பொறுப்புகளை யார் தற்போது கவனிப்பார்கள் என்பது பற்றிய தகவலும் மக்களுக்குத் தரப்படவில்லை.

இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஒவ்வொரு தேர்தலின்போதும் மக்களிடம் அடையாளப்படுத்தி வாக்கு கேட்கும் கட்சி, இத்தகைய இக்கட்டான சூழலில் இவர்தான் தற்போதைய முதல்வர் என அடையாளம் காட்டத் தயங்குவது ஏன் என்றும், சசிகலா தரப்புக்கும் அமைச்சர்கள் தரப்புக்கும் யாரை முதல்வராக நியமிக்கலாம் என்பதில் கருத்து வேறுபாடு நிலவி வருவதால் எத்தகைய முடிவையும் எட்டமுடியவில்லை என்றும் அரசியல் விமர்சகர்களிடையே கேள்விகள் எழுகின்றன.

 

தற்போதைய முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது எத்தகைய  'நீண்ட நாட்கள்' என்றும், இன்னமும் எத்தனை நாட்கள் முதல்வர் இன்றி அரசு இயந்திரம் இயங்கும் என்கிற கேள்விகளும் தமிழக மக்களின் மனதில் எழாமல் இல்லை? தமிழக அரசு இதுபற்றி சிந்திக்குமா ?

http://www.vikatan.com/news/coverstory/69291-how-many-long-this-government-will-run-without-a-chiefminister.art

Categories: Tamilnadu-news

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை... அப்போலோ அறிக்கையில் முக்கிய மாற்றம்!

Sat, 08/10/2016 - 15:14
 
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை... அப்போலோ அறிக்கையில் முக்கிய மாற்றம்!

apoloo1008_1.jpg

 

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் 17 நாட்கள் ஆகிறது. இதுவரை அவரை மருத்துவர்கள் தவிர யாரும் சந்திக்க வில்லை. ஆளுநர் வித்யாசாகர் ராவ் உட்பட பல தலைவர்கள் மருத்துவமனை வந்தும், மருத்துவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து பேசினார்களே தவிர, ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. இதற்கு அப்போலோ மருத்துவமனை முற்றுப்புள்ளி வைத்து வருகிறது.

மதிமுக பொதுச் செயலாளர்கள் வைகோ, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை தெரிந்து கொள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம், மருத்துவர்கள், முதல்வரின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதா நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினர். 

apoloo1008_2.jpg

 

இந்த நிலையில், முதல்வரின் உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன. சுவாச உதவி சிகிச்சையும் தொடர்ந்து தரப்படுகிறது. முதல்வரின் உடல்நிலையை மருத்துவக்குழுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் மேலும் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

http://www.vikatan.com/news/tamilnadu/69296-apollo-updates-on-chief-minister-jayalalithaas-health.art

Categories: Tamilnadu-news