தமிழகச் செய்திகள்

தீபாவுக்கு எல்லாமே இவர்கள்தான்! அதிர்ச்சியில் சசிகலா

Tue, 10/01/2017 - 15:59
தீபாவுக்கு எல்லாமே இவர்கள்தான்! அதிர்ச்சியில் சசிகலா

deepa_long_15034.jpg

தீபாவுக்கு மறைமுகமாக உதவும் அ.தி.மு.க எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் தயாராகி சசிகலாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக செயல்படுபவர் சசிகலா புஷ்பா எம்.பி. சசிகலா, பொதுச் செயலாளராகக் கூடாது என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்திடம் புகார் கொடுத்துள்ளார். இவ்வாறு அ.தி.மு.க.வுக்கு எதிரணியில் இருந்து கொண்டு தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் சசிகலாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் சசிகலா புஷ்பா.
 
தி.மு.க எம்.பி, சிவாவை கன்னத்தில் அறைந்த சம்பவத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா மீது குற்றம்சாட்டினார் சசிகலா புஷ்பா எம்.பி, . தற்போது அவர் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நம்மிடம் பேசுகையில், "அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் தென்மாவட்டங்களில் கோலோச்சியவர்களில் ஒருவர் மணல் மனிதர் என்று அழைக்கப்படும் வைகுண்டராஜன். இவரை ஜெயலலிதா, சில காரணங்களுக்காக கட்சியிலிருந்து ஓரங்கட்டினார். இவர் மூலமாகவே கட்சிக்குள் நுழைந்தவர் சசிகலா புஷ்பா. தற்போது சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாகவே வைகுண்ட ராஜனின் செயல்பாடுகள் உள்ளன. ஜெயலலிதா, மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படக் கூடாது என்று சசிகலா கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இதனால் பொதுச் செயலாளரானதும் தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் பங்கேற்க பலருக்கு விருப்பம் இல்லை. கட்டாயப்படுத்தியே நிர்வாகிகளை மாவட்ட அளவில் பொறுப்பிலிருப்பவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த காலக்கட்டத்திலேயே சசிகலாவுக்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பலைகள் இருந்தன. ஜெயலலிதாவுக்குப் பயந்தவர்கள் சசிகலாவுக்கு பயப்பட வேண்டும் என்ற அவசியமில்லை எங்களுக்கு இல்லை என்ற எண்ணம் கட்சியினரிடம் மேலோங்கி இருக்கிறது. அவர்கள் அனைவரும் சசிகலாவின் தலைமையை ஏற்கவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஒரு தரப்பு அ.தி.மு.க.வினர் முன்னிறுத்தி வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள சசிகலா புஷ்பா எம்.பி திட்டமிட்டு அதற்கான காயை நகர்த்தி வருகிறார்.

சசிகலாவின் தலைமையை ஏற்காதவர்கள் எல்லோரும் ஒரே அணியில் சேர்ந்து அ.தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்த உள்ளோம். தென்மாவட்டங்களில் வைகுண்ட ராஜன் மூலம் அ.தி.மு.க.வுக்குள் நுழைந்தவர்கள் இன்னும் அவருக்கும், சசிகலா புஷ்பாவுக்கும் ஆதரவாகவே இருக்கின்றனர். சமீபத்தில், ஆலோசனை கூட்டத்துக்கு சசிகலா அழைத்தும் அவரது ஆதரவாளர்கள்  செல்லவில்லை.  பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ்பாண்டியன், அமைச்சர் சண்முகநாதனுடன் அதிக நெருக்கமாக இருந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன், உடன்குடி மகேந்திரன் ஆகியோர் செல்லவில்லை. இதில் சுப்பிரமணியன், மகேந்திரன் ஆகியோர் தீபாவுக்கு ஆதரவு என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டனர்.

குமரி மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரத்துக்கு எதிராக ஏற்கெனவே ஒரு அணி செயல்படுகிறது. அந்த அணியில் இருப்பவர்களை சசிகலா புஷ்பா தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி தீபா அணியில் சேர வழிவகை செய்துள்ளனர். இவ்வாறு தென்மாவட்டங்களில் தீபாவின் கை ஓங்குவதற்குப் பின்னணியில் சசிகலா புஷ்பா இருக்கிறார். தமிழகம் முழுவதும் தீபா சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அப்போதுதான் தீபாவுக்குப் பின்னால் இருக்கும் சசிகலா புஷ்பாவின் அரசியல் தெரியவரும்" என்றார்.

தீபா பேரவையை தொடங்கி இருக்கும் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த மகேந்திரன் கூறுகையில், "நான், கடந்த 98-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் இருந்து வருகிறேன். உடன்குடி அருகே லட்சுமிபுரம் ஊராட்சி கழகச் செயலாளராக உள்ளேன். உடன்குடி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான அ.தி.மு.க.வினர் சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அம்மாவின் வாரிசான தீபாவின் தலைமையில் செயல்பட முடிவு செய்து தீபா பேரவையை தொடங்கி இருக்கிறோம். சென்னையில் தீபாவை சந்தித்து எங்களது ஆதரவை அவருக்கு தெரிவிக்க உள்ளோம்" என்றார்.

"தீபா பேரவை பல இடங்களில் தொடங்கப்பட்டு வரும் நேரத்தில் அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் தீபாவுக்கு ஆதரவாக செயல்படத் தயாராக இருக்கின்றனர். தஞ்சாவூரைச் சேர்ந்த எம்.பி. ஒருவரின் உறவினர் தீபாவின் ஆதரவாளராக உள்ளார். அவர், அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தென்மாவட்டங்கள் மட்டுமல்ல கொங்கு மண்டலத்திலும் தீபாவை ஆதரிக்கும் குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன. இவ்வாறு தீபாவுக்கு தமிழகத்தில் பல இடங்களிலிருந்து ஆதரவு கிடைப்பது தொடர்பாக சசிகலா தரப்பு ஆலோசனை நடத்தி உள்ளது. அப்போது, தீபாவுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க.வினரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலும் சசிகலா பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்குப் பிறகு தீபாவுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க.வினரிடம் முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும். அடுத்து, அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும்" என்றனர் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்

http://www.vikatan.com/news/coverstory/77468-are-these-people-behind-deepa-shocks-sasikala.art

Categories: Tamilnadu-news

ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்படுவது ஏன்?

Tue, 10/01/2017 - 10:51
ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்படுவது ஏன்?

sasikala-_ops_1a_16454_New_07051.jpg

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு... தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவர் ஓ.பி.எஸ். அ.திமு.க. பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர், சசிகலா. ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒரே தலைமைதான் என்று எழுதப்படாத கட்சி விதிப்படி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, வெகுவிரைவில் முதலமைச்சராகப் பதவியேற்பார் என கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘‘சசிகலா, முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் அந்த நாள்... எப்போது என்பது இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாத பட்சத்தில்... முழு பெளர்ணமி நாளான ஜனவரி 12-ம் தேதியோ அல்லது எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதியோ பதவியேற்கலாம்’’ என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.  

சசிகலா தரப்புக்குச் சந்தேகம்!

‘சசிகலா முதல்வராகிறார்’ என்ற தகவல் அ.தி.மு.க-வினருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருந்தாலும், கடந்த சில நாட்களாகவே அதில் பாதியளவுகூட, சசிகலா தரப்பு மகிழ்ச்சியாக இல்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. மகிழ்ச்சி குறைவுக்கு என்ன காரணம்... என்று கார்டன் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘ஜெயலலிதா, இறந்த சில மணி நேரங்களிலேயே ஓ.பி.எஸ் முதல்வரானதுபோல, அடுத்த சில நாட்களிலேயே சசிகலா பொதுச்செயலாளர் பதவிக்கு வந்திருக்க வேண்டும். அது, காலதாமதம் ஆனதால்தான் சசிகலாவுக்கு இப்போது பிரச்னையே ஏற்பட்டிருக்கிறது. முதல்வரான ஓ.பி.எஸ்ஸின் அணுகுமுறை, கடந்த சில நாட்களாகத் தலைகீழாக மாறிவிட்டதுபோல சசிகலா தரப்புக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. 

கோட்டையைப் பொறுத்தவரையில் ‘ஏ’, ‘பி’ என இரண்டு செக்‌ஷன்கள்தான் முக்கிய அம்சங்களைத் தீர்மானிப்பவை. ‘பி’ செக்‌ஷன் என்பது, இணை மற்றும் துணைச் செயலாளர்களைக் கொண்டவை. ‘ஏ’ செக்‌ஷன் என்பது, சீனியர் அரசுச் செயலாளர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்டவை. ‘ஏ’ செக்‌ஷனில் இருந்துதான் முக்கியமான கோப்புகள் முதல்வர் அலுவலகத்துக்கு நகரும். அதேபோல், முதல்வர் அலுவலகத்துக் கோப்புகளும் நேரடியாக இங்குதான் வரும். மந்திரி சபையில் புதிய மந்திரி சேர்க்கை மற்றும் நீக்கம் குறித்து முதல்வரின் உத்தரவு முதலில் இங்குதான் வரும். முதல்வரின் உத்தரவுக்கேற்ப புதிய மந்திரிகள் குறித்த விவரம் இங்கிருந்துதான் ‘நோட்’ போட்டு முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். முதல்வரின் உத்தரவுப்படி கவர்னர் மாளிகைக்கும் அதன் இன்னொரு பிரதி அனுப்பிவைக்கப்படும். ‘ஏ’ செக்‌ஷன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த செக்‌ஷனில் உள்ள அரசு அதிகாரிகளுடன் முதல்வர் கலந்து ஆலோசிப்பது என்பதும் அதேபோல முக்கியத்துவம் வாய்ந்தது. 
 

secretariate_600_13264_Ne_07337.jpg

ஓ.பி.எஸ்ஸா, இப்படிச் செய்கிறார்?

சாதாரணமாக கூட்டமுடியாத மீட்டிங் இது என்பது சசிகலாவுக்கு நன்கு தெரியும். ஓ.பி.எஸ்ஸுக்கு கார்டனில் இருந்து அழைப்பு வரும்போதெல்லாம், ‘அய்யா... ஏ செக்‌ஷன் ஆபீஸ் ரிவ்யூ மீட்டிங்கில் இருக்கிறார்’ என்ற தகவலை முதல்வர் அலுவலகத்தில் இருந்து சொல்கிறார்கள். பலமுறை இப்படி முதல்வர் அலுவலகத்தில் இருந்து கார்டனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்’. இவையனைத்தும், ஓ.பி.எஸ்ஸுக்குத் தெரிந்துதான் நடக்கிறதா அல்லது தனக்கென்று ஒரு செல்வாக்கை, ஏதாவதொரு ரூட்டில் போட்டுக்கொண்டு இருக்கிறாரா என்ற ஐயம் சசிகலா தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. ‘ஒவ்வொருநாளும் மாலை 7 மணியளவில் கார்டனுக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாத குறையாக ஆஜராகிவிடும் ஓ.பி.எஸ்ஸா, இப்படிச் செய்கிறார் என்ற கேள்வியும் சசிகலா தரப்பில் இருந்து எழுப்பப்படுகிறது. அதற்குக்கூட, பகல் நேரங்களில் அதாவது... கோட்டையில் இருக்கும்போது மட்டும்தான் ஓ.பி.எஸ். இப்படி நடந்துகொள்கிறார். மற்றபடி கோட்டையில் இருந்து கார்டனுக்குப் போனதுமே அவர் அப்பாவி ஓ.பி.எஸ்ஸாக மாறிவிடுகிறார் என்றும் பதில் சொல்லப்படுகிறது. 

பா.வளர்மதிக்குப் பதவி!

‘கோட்டையில் அப்படித்தான்மா இருக்க வேண்டியுள்ளது. இதுபோன்று மீட்டிங்குகளை நடத்தாமல்போனால், கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்டப்பெயர் வந்துவிடும்’ என்று விளக்கத்தையும் சசிகலா தரப்புக்குத் தெரியப்படுத்திவிடுகிறாராம், ஓ.பி.எஸ். அவர், நல்லவரா... கெட்டவரா என்று புரியாத சூழ்நிலையில்தான் கார்டன் இருக்கிறது. ஓ.பி.எஸ்ஸுக்கு கார்டன் செல்வாக்கு என்னவென்று காட்டுவதற்காகத்தான்... சசிகலாவை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிய பா.வளர்மதிக்கு பாடநூல் வாரியத் தலைவராகப் பதவி கொடுத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நான்காவது நாளாக நடந்த கூட்டத்தில், எந்த இடத்திலும் ஓ.பி.எஸ் பெயரைச் சொல்லாமல் நடத்தியதும் அவரை ஓரங்கட்டுவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ‘இந்தியா டுடே’ பத்திரிகையின் விழாவில் இது வெளிப்படையாகவே தெரிந்தது. மற்றபடி, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் என்றுவரும் தகவல்களில் உண்மை இல்லை. இது வெளியில் தெரியாத, வெளியில் சொல்ல முடியாத உட்கட்சிப் போராட்டம்” என்கின்றனர்.

உண்மையான விசுவாசிகள் ஓரங்கட்டப்படுவது சகஜம்தானே!

http://www.vikatan.com/news/tamilnadu/77419-why-opaneer-selvam-is-sidelined.art

Categories: Tamilnadu-news

ரஜினியை நம்பும் சசிகலா! கார்டனின் 'ஆல் இன் ஆல்'

Tue, 10/01/2017 - 06:04
ரஜினியை நம்பும் சசிகலா! கார்டனின் 'ஆல் இன் ஆல்'

rajini_women-_jaya_11174.jpg

கார்டனில் ஆதிக்கம் செலுத்துவதில் நாகர்கோவிலைச் சேர்ந்த ரஜினி என்ற பெண் முக்கியமானவர் என்று சொல்லத் தொடங்கி இருக்கின்றனர் கட்சியினர். அவரை முழுமையாக நம்பிய சசிகலா, சில அமைச்சர்களை ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா, மறைந்து ஒரு மாதம் கடந்து விட்டது. அதற்குள் அ.தி.மு.க.வில் பல மாற்றங்கள். அ.தி.மு.க.வின் தலைமை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கையில் உள்ளது. அடுத்து சசிகலா, முதல்வராவார் என்ற எதிர்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது, சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்பவர்களில் முக்கியமானவராக நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண் கார்டனில் வலம் வருவதாக உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர்.

யார் அந்த நாகர்கோவில் பெண்?

ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இயற்கை மீதும், செடிகள் மீதும் அளவில்லாத பிரியம் உண்டு. இதனால், போயஸ் கார்டன் வீட்டிலேயே கார்டன் பராமரிக்கப்பட்டது. அதில் தினமும் ஜெயலலிதாவும், சசிகலாவும் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். அதுபோல சிறுதாவூர் பங்களாவுக்குச் செல்லும்போதும் அங்கேயும் நடைபயிற்சி மேற்கொள்வதுண்டு. அப்போது ஒருநாள், ஜெயலலிதா, ஒரு மலர் குறித்து சசிகலாவிடம் கேட்டுள்ளார். அந்த மலரின் அழகு ஜெயலலிதாவை வெகுவாக கவர்ந்தது. அந்த மலர் குறித்த விவரமும் சசிகலாவுக்கும் தெரியவில்லை. அடுத்து கார்டனில் உள்ள சிலரிடமும் அந்த கேள்வியை கேட்க அவர்களும் விழிபிதுங்கி உள்ளனர்.
 இதையடுத்து ஜெயலலிதாவின் மலர் குறித்த ஐயத்தை விளக்க உடனடியாக அங்கு அழைக்கப்பட்டவர் ரஜினி. இவர், நாகர்கோவில் தோவாளையைச் சேர்ந்தவர். வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்றவர் என்பதால் ஜெயலலிதாவின் மலர் சந்தேகத்தை ஆங்கிலத்திலேயே விளக்கியுள்ளார் ரஜினி. இதன்பிறகு ரஜினிக்கு, தோட்டங்களை மேற்பார்வையிடும் பொறுப்பு அங்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது கணவர் ரவீந்திரன், அ.தி.மு.க.வின் தொலைகாட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். இதனால் கார்டனுக்குள் எளிதில் ரஜினி நுழைந்து விட்டார்.

ஜெயலலிதாவுடன் நெருக்கம்

போயஸ் கார்டனுக்குள் சென்ற ரஜினி, ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான பூங்கொத்தை கொடுப்பது வழக்கம். அதுவே அவருக்கு ரஜினியைப் பிடித்து போய்விட்டது. ஜெயலலிதாவை விட சசிகலாவிடமும் ரஜினி, விசுவாசமாக இருந்துள்ளார். தற்போது ரஜினியின் செல்வாக்கு இப்போது அதிகரித்துள்ளது. சமீபத்தில் சசிகலாவை சந்தித்த அரசியல் தலைவர்கள், வி.வி.ஐ.பிக்கள், கட்சியினருக்கு வழியை ஏற்படுத்தியவர் ரஜினி. சசிகலா, ரஜினியை அதிகம் நம்பியதால் அவருக்கு இப்போது கார்டனில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதன்விளைவு, ரஜினியின் தயவைப் பெற கட்சியினர் பலரிடம் போட்டோ போட்டி நிலவுதாம். சமீபத்தில் நாஞ்சில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிகுறிகள் ஏற்பட்டன. உடனடியாக அவரை  சந்தித்து சமரசப்படுத்தி கார்டனுக்கு அழைத்து வந்ததில் ரஜினிக்கு முக்கியப் பங்கு உள்ளது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கார்டனுக்கு அழைத்து வந்ததிலும் ரஜினியின் பங்கு இருக்கிறது.

கார்டன் டூ அரசியல்

சசிகலாவும், ரஜினியும் நீண்ட நேரம் பேசிக் கொள்வதாக கார்டன் வட்டார முக்கிய நிர்வாகிகள் சொல்கின்றனர். அதில் அரசியல் பேச்சும் இடம் பெறுகிறது. காலையில் ரவீந்திரன், காரில் ரஜினியை போயஸ் கார்டனுக்கு அழைத்து வருவாராம். மாலையில் அவரே ரஜினியை பிக்அப் செய்து கொள்வாராம். கார்டனில் இருந்தபடியே அரசியல் நிலவரங்களை கண்காணிக்கும் பொறுப்பும் ரஜினி வசம் கொடுக்கப்பட்டுள்ளதாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி, சிபாரிசு செய்த சிலருக்கு எம்.எல்.ஏ சீட்கள் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. ரஜினியின் கை ஓங்குவதை கார்டனில் உள்ள சிலர் விரும்பவில்லையாம். ரஜினி, சசிகலாவின் நட்பில் பிளவு ஏற்படுத்த முயற்சிகளும் நடக்கிறதாம்.

எம்.என்.நடராஜன்

ரஜினியை கார்டனிலிருந்தும், சசிகலாவிடமிருந்தும் பிரிக்க சில வியூகங்களை ஒரு தரப்பு செய்து வருகிறதாம். அதிலிருந்து ஒவ்வொரு முறையும் ரஜினி தரப்பு தப்பித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ரஜினியின் மீது புகார் பட்டியலை மன்னார்குடி தரப்பு சசிகலாவிடம் சமீபத்தில் கொடுத்துள்ளதாம். அதில் பால் கலப்பட ஊழலில் ரஜினியின் தலையீடு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினி மீது முழுமையாக சசிகலா தரப்பு நம்பிக்கை வைத்துள்ளதால் எந்த குற்றச்சாட்டுக்களும் எடுபடவில்லை. வழக்கம் போல கார்டனுக்குள் காலையில் வந்து மாலையில் வீடு திரும்புகிறார் ரஜினி. தற்போது அ.தி.மு.க.விலிருந்து விலகுவதாக முடிவெடுத்த சில அமைச்சர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பு ரஜினியிடம் சசிகலா கொடுத்துள்ளாராம். அந்த அசைமெண்டில் பிஸியாக ரஜினி இருக்கிறாராம்.

http://www.vikatan.com/news/coverstory/77429-sasikala-pins-hopes-on-rajini.art

Categories: Tamilnadu-news

நேற்றொரு தோற்றம்.. இன்றொரு மாற்றம்..: அடுத்த கட்டத்துக்கு தயாராகும் சசிகலா!

Tue, 10/01/2017 - 05:21
நேற்றொரு தோற்றம்.. இன்றொரு மாற்றம்..: அடுத்த கட்டத்துக்கு தயாராகும் சசிகலா!

 

 
 
 
 
 பிடிஐ)
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றபோது. (கோப்புப் படம்: பிடிஐ)
 
 

அரசியல் தலைவர்களின் திடீர் மறைவு, கட்சிக்குள் சலசலப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவது வழக்கம். ஜெயலலிதாவின் மறைவிலும் ஒருசில நாட்களுக்கு இந்த குழப்பங்களும் சலசலப்புகளும் காணப்பட்டன. ஆனாலும், மாற்றுக் கட்சியினரின் அரசியல்களுக்கு எந்தவிதத்திலும் வாய்ப்பு தந்துவிடாத வகையில், குறுகிய காலத்தில் குழப்பங்களில் இருந்து அதிமுக மீண்டிருப்பதாகவே தெரிகிறது. தலைவர் இருக்கும் காலத்திலேயே வாரிசு சுட்டப்படாத அதிமுக, இவ்வளவு விரைவில் சகஜ நிலைக்குத் திரும்பியது அரசியல் நோக்கர்களும் எதிர்பார்க்காத ஒன்று.

அங்கும் இங்குமாக சில எதிர்ப்புகள், அதிருப்திகள் காணப்பட்டாலும், ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு கடந்த டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

இடையிடையே சில மாதங்கள் தவிர, கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நிழலாக அவரது போயஸ் தோட்ட இல்லத்திலேயே வசித்து வந்தவர் சசிகலா. தலைமைச் செயலகம் தவிர ஜெயலலிதா எங்கு சென்றாலும் அவரது காரின் பின் இருக்கையில் சசிகலா கட்டாயம் இருப்பார். ஜெயலலிதாவுக்கு உணவு வழங்குதல், அவருக்கு தேவையான வற்றை எடுத்து கொடுத்தல், பிரச்சாரத் துக்கான உரைகளை எடுத்துக் கொடுத் தல் என எல்லாமே சசிகலாதான்.

sasikala5_3115773a.jpg

கட்சி தலைமை அலுவலகத்தின் மாடத்தில் இருந்து இருவிரல் நீட்டுகிறார்.

33 ஆண்டுகளாக ஜெயலலிதாவை விட்டு நீங்காமல், அவரது நிழல்போல உடனிருந்த, பின்னால் இருந்த சசிகலா தற்போது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முன்னுக்கு, முகப்புக்கு வரத் தொடங்கியிருக்கிறார்.

ஜெயலலிதா பாணி

முதல்வராகவும், பொதுச் செயலாள ராகவும் ஜெயலலிதாவை பார்த்தவர்கள், அதே பாணியில் சிறிய மாற்றத்துடன் சசிகலாவை பார்க்க முடிகிறது. உடையைப் பொறுத்தவரை லேசான மாற்றங்களுடன், ஆனால் ஏறக்குறைய ஜெயலலிதா பாணியிலேயே வலம் வருகிறார். வழக்கம்போல, மென்மை யான நிறங்களிலான சேலைகளையே உடுத்துகிறார். அதே நிறத்தில் செருப்பு அணிகிறார். பொதுச் செயலாளரான பிறகு, அவரது சிகை அலங்காரம் மாறியிருக்கிறது. முன்பெல்லாம் சாதார ணமாக முடியைப் பின்னி சிறிய ஜடை போட்டிருந்த அவர், தற்போது ஜெயலலிதா பாணியில், வலையுடன் கூடிய கொண்டை போட்டிருக்கிறார். முகத்தில் மேக்கப் தனித்துவமாக தெரிகிறது. உடைக்கு ஏற்றபடி, கருப்பு, பழுப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரங்கள் அணிகிறார். வட்ட வடிவப் பொட்டுக்கு மேல் லட்சுமியை குறிக்கும் ‘ சூர்ணம்’ வைத்துள்ளார். கையெழுத்து நிபுணர்களின் ஆலோசனை பெற்று, எழுத்துக்களை கூம்பு வடிவத்தில் எழுதுவது, இறுதி எழுத்தை மேல் நோக்கி கொண்டு செல்வது என தமிழ், ஆங்கிலம் இரண் டிலும் கையெழுத்து போடுகிறார். ஜெய லலிதா வழக்கமாக பயன்படுத்தும் பேனா வகையையே இவரும் பயன் படுத்துகிறார். முதல்வராக இருந்த போது ஜெயலலிதா பயன்படுத்தும் ‘டொயோட்டோ லேண்ட் க்ரூசர் பிராடோ’ வாகனத்தையே சசிகலா தற்போது பயன்படுத்துகிறார். ஓட்டுநர்களும் பழைய ஆட்களே என்பதால், அவரது எண்ணமறிந்து செயல்படுகின்றனர்.

எங்கு சென்றாலும் வாகனத்தை விட்டு இறங்கி, தொண்டர்களைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறார். கட்சி அலுவலகத்தில், முதல் தளத்துக்குச் சென்று, முதலில் ஜெயலலிதா பாணியில் புன்முறுவல் பூத்து, எல்லா பக்கமும் திரும்பி வணக்கம் செலுத்து கிறார். இது முதல் நாள் கூட்டத்தில் நடந்த நிகழ்வு. அடுத்த நாள் கூட்டத் தில் வணக்கத்துடன், இரட்டை இலை காட்டுவதும் சேர்ந்தது. மூன்றாம் நாள் கூட்டத்தில், இரட்டை இலையுடன் ஜெயலலிதாவைப் போல் புன்னகை யுடன், கையை ஆட்டி தனது ஆதரவை தொண்டர்களுக்கு தெரிவித்தார். உள்ளே செல்லும்போதும், மீண்டும் போயஸ் தோட்டத்துக்குப் புறப்படும் போதும் இதை தவறாமல் கடைபிடிக்கிறார்.

sasikala1_3115777a.jpg

காரில் இருந்தபடியே தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் வி.கே.சசிகலா.

வாகனத்தில் இருந்து இறங்கும் முன்னரும், ஏறி அமர்ந்த பின்னரும், புன்முறுவலுடன் வணக்கம் செலுத்து கிறார். ஜெயலலிதா போலவே, காரில் ஏறிய பிறகு நிர்வாகிகளை அழைத்துப் பேசுகிறார். ஜெயலலிதா இருந்தபோது, காரின் முன்பகுதியில், பறக்கும் குதிரை உருவம் இருக்கும். தற்போது அது இல்லை. அதற்குப் பதிலாக, கற்பக விநாயகர், நரசிம்மர், ஆஞ்சனேயர் படங்கள் உள்ளன. காரில் ஏறி அமர்ந்த தும் அந்த சாமி படங்களை வணங்கிய பின்னரே பயணத்தை தொடங்குகிறார்.

நிர்வாகிகளுடன் சந்திப்பு

சசிகலா பொதுச் செயலாளரான பிறகுதான் கட்சியின் அடுத்தகட்ட நிர்வாகிகளை நேரடியாக சந்திக்கிறார். ஆனபோதிலும், அவர் தங்களுக்கு உரிய மரியாதை அளித்து தங்களுடன் சகஜமாக உரையாடுவதாகவும், சொல்ல வரும் தகவல்களைப் புரிந்து கொண்டு உரிய ஆலோசனைகள் வழங்கு வதாகவும் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் எத்தனையோ தடவை சசிகலாவைப் பார்த்திருக்கலாம். ஆனால், அவரது குரலைக் கேட்டது, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடந்த முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் தான். அதுவரை அவர் பொதுவெளியில் உரையாற்றியதில்லை. ‘தலைமைக் கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே’ எனத் தொடங்கிய அவரது உரையில் ‘ஜெயலலிதா போலவே ராணுவக் கட்டுப்பாட்டுடன் அதிமுகவை நடத்து வேன்’ என்றும் உறுதியோடு தெரி வித்தார். ‘கனி தெரியும், காய் தெரியும், வேர் தெரியாது’ என்றும் பேச்சில் அவர் குறிப்பிட்டார். ‘அதிமுகவின் வளர்ச்சியில், வெளியே தெரியாத வேராக நான் இருந்தேன்’ என்பதையே சசிகலா கோடிட்டுக் காட்டுகிறார். ‘ஜெய லலிதாவிடம் காட்டிய மரியாதையை என்னிடமும் காட்ட வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பும் அவரது நடவடிக்கையில் வெளிப்படுவதாக கட்சியினர் கூறுகின்றனர்.

கெடுபிடியற்ற போயஸ் தோட்டம்

ஜெயலலிதா இருந்தபோது, அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் 240 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு உதவி ஆணையர் தலைமையில் 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், இந்த பாதுகாப்புகள் தொடர்ந்ததற்கு எதிர்ப்பு வலுத்ததால் அங்கு போலீ ஸார் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப் பட்டது. பழைய கெடுபிடிகளும் தற்போது இல்லை. ‘லிங்க்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபாரி உடை அணிந்த இவர்கள் சுமார் 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போயஸ் தோட்டம் பகுதியில் 5 இடங்களில் நின்றுகொண்டு, அங்கு வருபவர்களைக் கண்காணிக்கின்றனர். மேலும், சசிகலா செல்லும் இடங்களுக்கு எல்லாம் முன்னும் பின்னும் காரில் இவர்கள் செல்கின்றனர். மேலும், சசிகலாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அவரது உறவினர்கள் சிலர் எப்போதும் அவர் கூடவே உள்ளனர்.

sasikala4_3115774a.jpg

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தனியார் காவலர்கள்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா வரும்போது மட்டும் அவ்வை சண்முகம் சாலையில் 10 மீட்டருக்கு ஒரு போலீஸார் வீதம் நிற்கின்றனர். மேலும், நுழைவுவாயிலில் சுமார் 15 போலீஸார் பாதுகாப்புக்கு நிற்கின்ற னர். தொண்டர்கள் அதிகம் கூடும் நேரங்களில் போலீஸார் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. தலைமை அலு வலகத்தில் தொண்டர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் இவர்கள் அனுமதி யின்றி செல்ல முடியாது. இவர்களில் பெரும்பாலானோர் டெல்டா மாவட்டத் தினர் என்கின்றனர் சக போலீஸார்.

இடமாற்றம் வாங்கும் உறவினர்கள்

சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி வந்த சில நாட்களிலேயே, தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக ஜெயச் சந்திரன் நியமிக்கப்பட்டார். சசிகலாவின் நெருங்கிய உறவினராக இவர், திரு நெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இதுபோல, சசிகலா உறவினர்கள் பலர் காவல் துறையில் இடமாற்றம் வாங்கியுள்ளனர்.

sasikala2_3115776a.jpg

நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு செலவுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.

அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக் கள், நிர்வாகிகள் அனைவரும் மறுபேச்சில்லாமல் சசிகலாவை ஏற்றுக் கொண்டிருப்பதாகவே தற்போதைய நிலவரங்கள் காட்டுகின்றன. ஆனாலும், கிளை கமிட்டி நிர்வாகிகள், அடிமட்டத் தொண்டர்கள், பரவலாக மகளிர் தொண்டர்கள் மத்தியில் இந்த அளவுக்கு முழு ஆதரவு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பல்வேறு கருத்துக்கணிப்புகளும் இதை உறுதி செய்கின்றன. இதை சசிகலாவும் அறியாமல் இல்லை. டிசம்பர் 29-ம் தேதிக்குப் பிறகு பொது நிகழ்வில் அவர் பேசவில்லை. ஆனால், ஜனவரி 4-ம் தேதிமுதல், மாவட்டவாரியாக கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களிடம் பேசி வருகிறார். ‘தொண்டர்களை ஒருங் கிணைக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறவேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண் டாட வேண்டும்’ என்பதை ஒவ்வொரு சந்திப்பிலும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

ஒருபுறம் கட்சி அலுவலகத்தில் நிர் வாகிகளிடம் கலந்துரையாடும் அவர், போயஸ் தோட்ட இல்லத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறையினர் என பல்வேறு துறை பிரபலங்களை நாள்தோறும் சந்தித்து வருகிறார். சந்திப்பவர்களிடம் எல்லாம் ‘உங்களுக்காக நான் இருக்கிறேன். எனக்கு பக்கபலமாக நீங்கள் இருங்கள்’ என்பதை வலியுறுத்துவது போலவே சசிகலா பேசுவதாக கூறுகின்றனர்.

எதிர்ப்புகளைச் சமாளிப்பதிலும் அவர் தனக்கென தனி பாணியை பின்பற்றி வருகிறார். சமீபத்தில் திசை மாறிச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப் பட்ட அக்கட்சியின் செய்தி தொடர் பாளர் நாஞ்சில் சம்பத்தை மீண்டும் அழைத்து பேசி, அவரை கட்சியில் தொடரச் செய்துள்ளார். இதுபோல, அதிருப்தியில் இருக்கும் இன்னும் சில முக்கிய நிர்வாகிகளையும் அரவணைத் துச் சென்று, கட்சியில் தனக்கிருக்கும் முக்கியத்துவத்தை அதிகரிக்கவும், அதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறவும் சசிகலா விரும்புகிறார்.

sasikala3_3115775a.jpg

அதிமுக தலைமை அலுவலகம் அருகே பாதுகாப்புக்காக வரிசைகட்டி நிறுத்தப்பட்டிருக்கும் போலீஸார்.

கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகி களின் ஆதரவுடன் அதிமுக பொதுச் செயலாளராகிவிட்டார் சசிகலா. அடுத்து, தமிழகத்தின் முதல்வர் இருக்கை யிலும் அவரை அமர்த்திப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல், அக்கட்சி யினர், முக்கியமாக மேல்மட்டத் தலைவர் கள், மூத்த நிர்வாகிகள் மத்தியில் காணப்படுகிறது. அவர் வெகு விரைவில் அடுத்தகட்டத்துக்கு வருவார் என்று நம்பிக்கையோடு கூறுகின்றனர் நிர்வாகிகள்.

http://tamil.thehindu.com/tamilnadu/நேற்றொரு-தோற்றம்-இன்றொரு-மாற்றம்-அடுத்த-கட்டத்துக்கு-தயாராகும்-சசிகலா/article9469159.ece

Categories: Tamilnadu-news

பொங்கலுக்கு விடுமுறை இல்லை... பாஜக அரசின் அதிரடி.

Tue, 10/01/2017 - 05:11

 Union government

பொங்கலுக்கு விடுமுறை இல்லை... பாஜக அரசின் அதிரடியால் அதிர்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!

டெல்லி: நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும் கட்டாய விடுமுறை தினத்திலிருந்து பொங்கல் விடுமுறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் சூரியன், மழை, பனி உள்ளிட்ட இயற்கை சக்திகளுக்கும், கடவுளுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகையாக பொங்கலை முன்னோர்கள் கொண்டாடினர். பிற்காலத்தில் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடங்கினர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், விருப்ப விடுமுறையாக அன்றைய தினத்தை எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கியமான பண்டிகை பொங்கல். தமிழர்கள் பண்டிகை இது. இப்பண்டிகை கட்டாய விடுமுறை தினத்திலிருந்து மத்திய அரசு நீக்கியுள்ளதால் தமிழகத்தில், மத்திய அரசு ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். ஆனால் மலையாள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகைக்கு பொது விடுமுறை விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழர் விரோத மத்திய பாஜக அரசின் இந்த அறிவிப்பால் தமிழக மத்திய அரசு ஊழியர்கள் முழுமையாக விடுமுறையை கொண்டாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

-  தற்ஸ் தமிழ். -

Categories: Tamilnadu-news

முதல்வர் பேசும்போது வெளியேறிய சசிகலா கருத்தரங்கில் பங்கேற்றோர் அதிர்ச்சி

Mon, 09/01/2017 - 19:18
முதல்வர் பேசும்போது வெளியேறிய சசிகலா
கருத்தரங்கில் பங்கேற்றோர் அதிர்ச்சி
 
 
 

கருத்தரங்கில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா வெளியேறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

Tamil_News_large_1687216_318_219.jpg

'இந்தியா டுடே' குழுமம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று துவங்கியது. கருத்தரங்கை, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா துவக்கி வைத்தார்; ஜெயலலிதா உருவ படத்தையும் திறந்து வைத்தார்.


கருத்தரங்கில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போதே, அரங்கில் இருந்து சசிகலா வெளியேறினார். மாநில முதல்வர் பேசும் போது, அவர் சார்ந்த கட்சி பொதுச்செயலர் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. அவர், கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
விழாவிற்கு வந்தோர், 'முதல்வர் பேசும் முன் புறப்பட்டிருக்கலாம்; இல்லாவிட்டால் அவர் பேசி முடித்த பின் புறப்பட்டிருக்க வேண்டும். முதல்வர் பேசும் போதே அவர் வெளியேறியது, அநாகரிகமான செயல்' என்றனர்.
 

முதல் பேட்டியில் சசிகலா சொதப்பல்


விழாவில் பங்கேற்ற சசிகலா, பேட்டி அளித்தார். அப்போது, ''இந்தியா டுடே கருத்தரங்கு, முதல் முறையாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது.

 

ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்திய மொழிகளிலும்; தமிழகத்தில் தமிழ் மொழியிலும், இந்தியா டுடே வெளிவருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சேவை தொடர வேண்டும்,'' என்றார்.
தமிழில், 'இந்தியா டுடே' பத்திரிகை வெளியாவது நிறுத்தப்பட்டு விட்டது. இது தெரியாமல், சசிகலா முதல் பேட்டியிலேயே சொதப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1687216

Categories: Tamilnadu-news

தீபாவிற்கு பெருகும் ஆதரவு ... சசிகலா உறவினர்கள் திக்... திக்

Mon, 09/01/2017 - 19:17
தீபாவிற்கு பெருகும் ஆதரவு ...
சசிகலா உறவினர்கள் திக்... திக்
 
 
 

தஞ்சாவூர், : - சசிகலாவின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டங்களில், தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவால், சசிகலா உறவினர்களை பீதியடைய செய்துள்ளது.

 

Tamil_News_large_1687199_318_219.jpg

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் உயர்மட்ட நிர்வாகிகள், பகீரத பிரயத்தனம் செய்து, சசிகலாவை பொதுச் செயலராக அமரச் செய்துவிட்டனர். சசிகலாவை ஏற்காத, அதிருப்தியாளர்கள், சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்படும், 'பிளக்ஸ்' பேனர்கள் மீது, சாணம் வீசி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர்.
மேலும், இதற்கு மாற்றாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு, ஆதரவுகள் தமிழகம் முழுவதும் தற்போது வலுவாக எழுந்துள்ளது.
 

ஆதரவுகள் பெருக துவங்கி விட்டன

தீபாவிற்கு ஆதரவாக, பேரவைகளை துவக்கியுள்ள, அ.தி.மு.க., அதிருப்தியாளர்கள். தீபாவை தமிழக முதல்வராக்க சபதம் எடுத்து செயல்பட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், சசிகலா அவரது கணவன் நடராஜன் மற்றும் சசிகலாவின் ஒட்டுமொத்த உறவினர்களும் உள்ள சொந்த மண்ணான தஞ்சாவூர் மாவட்டங்களில், தீபாவிற்குஆதரவுகள் பெருக துவங்கி விட்டன.தீபா பேரவைக்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு விட்ட நிலையில், தீபா பேரவை சார்பாக, போஸ்டர், பிளக்ஸ் வைப்பது, கூட்டங்களை கூட்டி, புதிய நிர்வாகிகள் சேர்ப்பு என, துவங்கி விட்டனர்.

சசிகலா உறவினர்கள், சாதிகளின் அடிப்படையில் கட்சியின் மேல் மட்ட நிர்வாகிகளை வளைத்து, அவர்களை மிரட்டியும் தாங்களின் செல்வாக்கை தஞ்சாவூரின் சுற்றுவட்டாரங்களில் பெருக்கி வருகின்றனர். இதற்கு மாற்றாக, சசிகலாவின் சொல்வாக்கை குறைக்கும் வகையில், தீபா பேரவை வலு பெற்று வருவதால், மன்னார்குடியினர் மத்தியில், பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 

சசிகலாவை விமர்சிக்காதீங்க


'அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, மக்கள் அங்கீகாரம் பெறாதவர். எனவே, அவரை விமர்சிக்காதீர்கள்' என, தன்னை சந்தித்த ஆதரவாளர்களிடம், ஜெ., மருமகள் தீபா கூறியுள்ளார்.

 

இது குறித்து, தீபாவை சந்தித்த, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., - ஜெ., - கருணாநிதி போன்ற தலைவர்கள், மக்களை சந்தித்து, அவர்களின் அங்கீகாரம் பெற்றவர்கள். சசிகலா, இன்னும் மக்கள் அங்கீகாரம் பெறவில்லை. எனவே, அவரை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை என, எங்களிடம், தீபா தெரிவித்தார்.
அவரது உத்தரவை ஏற்று, சசிகலாவை புறக்கணித்து விட்டு, அ.தி.மு.க.,வின் ஒட்டுமொத்த ஆதரவும், தீபாவுக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
அ.தி.மு.க.,வை உருவாக்கிய, எம்.ஜி.ஆர்., மற்றும் தொண்டர்களை வழிநடத்திய ஜெயலலிதாவின் புகழை முன்னெடுத்து செல்ல வேண்டும் என, எங்களிடம், தீபா தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1687199

Categories: Tamilnadu-news

ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள், விரைவில்

Mon, 09/01/2017 - 18:53
gallerye_234051390_1687151.jpg

சென்னை:ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள், விரைவில் அம்பலமாகும் சூழல் உருவாகியுள்ளது.
 

 

Tamil_News_large_1687151_318_219.jpg

இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பான விசாரணையின் போது, ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் குறித்த அறிக்கையை, தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., தொண்டர் ஜோசப் தாக்கல் செய்த மனுவில், 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது; இந்த சந்தேகம், கட்சி தொண்டர்கள் மத்தியில் உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூலம், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
'ஜெயலலிதா மரணம் குறித்து, சி.பி.ஐ., மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமித்து விசாரிக்க வேண்டும்; அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள், மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த, ஞானசேகரனும் மனு தாக்கல் செய்தார்.

'சி.பி.ஐ., தேசிய புலனாய்வு நிறுவனம், மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அடங்கிய, சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்' என, 'டிராபிக்' ராமசாமியும் மனு தாக்கல் செய்தார்.

மூன்று மனுக்களும், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. ஜோசப் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜயன்; ஞானசேகரன் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி; அரசு தரப்பில்,அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி; அப்பல்லோ மருத்துவமனை சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகினர்.
வழக்கறிஞர் விஜயன்: ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது; அவரது கால்கள் துண்டிக்கப்பட்டதாக கூறுகின்றனர்; மக்கள், இது குறித்து கவலை கொள்கின்றனர். மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கைகள் தவிர, அவரது உடல் நிலை குறித்து, அரசு எந்த விபரங்களையும் வெளியிடவில்லை.
தலைமை நீதிபதி: எந்த அடிப்படையில், இதை கூறுகிறீர்கள்; எல்லாம் முடிந்து விட்டது; இப்போது வருத்தப்பட வேண்டியதில்லை.
வழக்கறிஞர் காந்தி: மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, அவரை பார்க்க, கவர்னரை கூட அனுமதிக்கவில்லை.
வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் அடங்கிய அறிக்கை, மருத்துவமனை வசம் தயாராக உள்ளது. அதை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். ஜெயலலிதா மரணத்தில், எந்த மர்மமும் இல்லை.

 

இதையடுத்து, தலைமை நீதிபதி கூறியதாவது:

இந்த வழக்கில், மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டியதுள்ளது. ஒன்று, இந்தப் பிரச்னையை எழுப்ப, வழக்கு தொடுத்தவர்களுக்கு தகுதி உள்ளதா; ஜெயலலிதாவின் உறவினர்கள் யாரும், வழக்கு எதுவும் தொடரவில்லை.
இரண்டாவதாக, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து, குறிப்பிட்ட சந்தேகங்கள் எதுவும் உள்ளதா என்பது தெரிய வேண்டும். மூன்றாவதாக, அரசு பதவியில் இருந்த ஒருவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை, பொது தளத்தில் எந்த அளவுக்கு வெளியிட முடியும்; நோயாளி பற்றியது என்பதால், மருத்துவமனைக்கும் தர்மசங்கடமான நிலை உள்ளது.இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.
 

தள்ளி வைப்புஇதையடுத்து, இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறிய நீதிபதிகள், விசாரணையை, பிப்., 23க்கு தள்ளி வைத்தனர்.
டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி செய்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: ஒரே விஷயத்துக்காக, பல மனுக்களை விசாரணைக்கு ஏற்பதில் அர்த்தமில்லை. மேலும், இந்த மனுவில் விரிவான விபரங்களும் இல்லை. மறைந்த முதல்வருக்கு எதிரான நிலையை, மனுதாரர் தொடர்ந்து எடுத்து வந்த நிலையில், அவரது மரணம் குறித்து, இப்போது அக்கறை கொள்வது புதிராக உள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1687151

Categories: Tamilnadu-news

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

Mon, 09/01/2017 - 16:45
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
ஜெயலலிதா இறுதிப்பயணம்

 

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக 3 ஓய்வுபெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய கமிஷனை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் வந்தபோது, அதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய, மாநில அரசுகள் முழுமையான தகவல்களை வெளியிடவில்லை எனவும் ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து ஆராய வேண்டுமெனவும் கருத்துத் தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்குத் தொடர்ந்திருப்பவர் ஜெயலலிதாவுக்கு ரத்த உறவு அல்ல. இப்படி ஒவ்வொருவராக, தனிநபர்களின் சிகிச்சை விவரங்களைக் கேட்டால் எப்படித் தர முடியும் எனக் கேள்வியெழுப்பினார்.

ஜெயலலிதா தனிநபரல்ல என்றும் அவர் மாநிலத்தின் முதல்வர்; மேலும் அ.தி.மு.கவின் தலைவர். அக்கட்சியின் தொண்டர் என்ற வகையிலும் அவருக்கான சிகிச்சை விவரங்களைக் கேட்பதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது.

நீதிமன்றத்திற்கு, சீலிட்ட உறையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களைத் தரத் தயாராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பு நீதிபதிகளிடம் தெரிவித்தது.

இந்த வழக்கில் பதிலளிக்க தங்களுக்கு கால அவகாசம் வேண்டுமென மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் கோரியதால் பிப்ரவரி 23 தேதிக்கு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

http://www.bbc.com/tamil/india-38560896

Categories: Tamilnadu-news

ராம மோகன ராவின் மருத்துவனை ஒப்பந்த ஊழல்... அதிர வைக்கும் ஆதாரங்கள்?!

Mon, 09/01/2017 - 13:36
ராம மோகன ராவின் மருத்துவனை ஒப்பந்த ஊழல்... அதிர வைக்கும் ஆதாரங்கள்?!

ராம மோகன ராவ்

ரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஆதாரங்களை வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் செய்யப்படுகின்றன.தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்ய டெண்டர்முறை பின்பற்றப்படுகின்றது.கடந்த 2013 - ம் ஆண்டு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டிஸ் (Padmavathi Hospitality And Facility Management Services) என்ற நிறுவனத்துக்கு சுமார் 360 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் மகன் விவேக்கும் பாஸ்கர் நாயுடும் பங்குதாரராக இருக்கின்றனர்.இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். 

ராம மோகன ராவ் ஊழல் ஆதாரம்

சி.பி.ஐ.யிடம் ஆதாரங்கள்..

இந்த நிலையில் தான் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டிஸ்  நிறுவனத்துக்கு விதிகளை மீறி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் சி.பி.ஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகாருக்கான ஆதாரங்களையும் அவர்கள் வழங்கி உள்ளனர்.ராம மோகன ராவின் மகன் விவேக்கும், பாஸ்கர் நாயுடுவும் இணைந்து “Swan Facilities Pvt Ltd” என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராம மோகன ராவிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷிடம் பேசியபோது,"ஒரு வருடத்திற்கு130 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு,3 வருடத்திற்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.மேலும் ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெண்டரில் பங்கேற்ற 6 நிறுவனங்களில் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டிஸ் நிறுவனத்தை தவிர்த்து மற்ற 5 அறப்போர் இயக்கம்,ராம மோகன ராவ்நிறுவனங்கள் பிரைவேட் மற்றும் பப்ளிக் லிமிடட் நிறுவனங்கள் ஆகும்.ஒப்பந்தத்தில் பிரைவேட் மற்றும் பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள்தான் பங்கேற்கவேண்டும் என்பது விதிமுறை.ஆனால் (Proprietorship ans partnership) பிரப்ரைட்ரி பார்டனர்ஷிப் நிறுவனங்களும் ஒப்பந்ததில் பங்கேற்கலாம் என விதிமுறைகள் திருத்தப்பட்டிருக்கிறது.அது குறித்த ஆதாரங்களைத்தான் சி.பி.ஐ- யிடம் வழங்கியுள்ளோம்.

பணியாளர்கள் குறித்து போலியான பதிவு

 தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷன்தான் ( Tamilnadu Medical Services Corporation) இதற்கான ஒப்பந்ததை முடிவு செய்கிறது.ராம மோகன ராவ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அனுமதி வாங்கித் தந்துள்ளார்.100 துப்புரவாளர்கள் தேவைபடுகிற அரசு மருத்துவமனையில் வெறும் 50 பேர் 30 பேர் என ஆட்களை நியமித்திருக்கின்றனர்.அதற்காக போலியான பணியாளர் பதிவேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மருத்துவமனைகளில் பணியில் இருக்கும் பல உயர் அதிகாரிகள் மிரட்டப்பட்டுள்ளதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது" என்றார்.

ராம மோகன ராவ் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் பணம், தங்க கட்டிகள்,ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.இதனால் ராமமோகன ராவ் பதவி பறிபோனது.தொடர்ந்து அவருக்கு எதிராகப் பாயும் ஆதாரங்கள் வலுவாகி வருகின்றன.அறப்போர் இயக்கத்தின் இந்த ஆதாரம் கோட்டையில் என்ன அதிர்வலைகளை ஏற்படுத்த போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://www.vikatan.com/news/coverstory/77375-evidences-pile-up-against-rama-mohana-raos-hospital-agreement-scam.art

Categories: Tamilnadu-news

'என் வழி... தனி வழி!'- சசிகலாவின் புது வியூகம்

Mon, 09/01/2017 - 13:29
'என் வழி... தனி வழி!'- சசிகலாவின் புது வியூகம்

sasikala

அ.தி.மு.க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்த அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் நிர்வாகிகளிடம் உணர்வுபூர்வமாக பேசி உள்ளார். அப்போது, 'அம்மாவின் கனவை நினைவாக்க வேண்டும். கட்சிக்காக உண்மையாக உழையுங்கள், உங்களுக்குரிய பலன் உங்களைத் தேடி வரும்' என்று கூறியுள்ளார். 

ஜெயலலிதா மறைவையொட்டி அவரது தோழி சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானார். அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளை கட்சி அலுவலகத்தில் சசிகலா சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு பல அதிரடி மாற்றங்கள் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகிகளின் மனநிலையை அறிந்து கொள்ளவே இந்த ஆலோசனை நடத்தப்படுகிறது. ஆனால், கட்சியை வலுப்படுத்தவே ஆலோசனை நடத்தப்படுவதாக அ.தி.மு.க தரப்பு சொல்கிறது.

கூட்டத்தில் பங்கேற்ற தென்மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், "சின்னம்மாவின் செயல்பாடு அனைத்தும் அம்மாவைப் போல இருந்தது. பேச்சு முதல் அனைத்து நடவடிக்கைகளும் அம்மாவைப் போலவே தெரிந்தன. கூட்டத்தில் சின்னம்மா, 'கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். உள்கட்சி பூசல் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அதை இந்த கூட்டத்துக்குப் பிறகு மறந்து விட வேண்டும். அம்மாவின் கனவை நினைவாக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது. அதை மனதில் வைத்து கட்சி நிர்வாகிகள் செயல்பட வேண்டும்' என்று கூறினார்.

கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் நிர்வாகிகள் கூறுகையில், "பொறுப்பிலிருக்கும் நிர்வாகிகளை சந்தித்தப்பிறகு எங்களை சின்னம்மா சந்தித்தார். 'முன்னாள் நிர்வாகிகள் என்று யாரும் நினைக்க வேண்டாம். நீங்களும் கட்சிக்காக உண்மையாக உழையுங்கள். உங்களுக்குரிய பலன் உங்களைத் தேடி வரும். மேலும் என்னுடைய செயல்பாடு சாதி ரீதியாக எப்போதும் இருக்காது. அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அ.தி.மு.க.வின் வளர்ச்சி கட்சித் தொண்டர்களின் கையில் இருக்கிறது. அம்மா இருக்கும் போது இருந்ததைப் போல அடிமட்ட தொண்டனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். என்னை பொறுத்தவரைக்கும் என் குடும்பமே இந்த கட்சித்தான். அம்மா வழியை நானும் பின்பற்றி வருகிறேன்' என்று கூறினார். சின்னம்மாவின் பேச்சு எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது" என்றனர். 

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தங்களது ஊருக்குச் சென்றவுடன் சின்னம்மாவின் பேச்சு குறித்து கட்சியினருக்கு சொல்ல வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கூட்டத்தை முடித்து ஊருக்கு திரும்பிய மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் தனித்தனியாக சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அதில் சசிகலாவின் பேச்சை அப்படியே ஒப்பித்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

கார்டன் வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலா, ஒவ்வொரு கூட்டத்திலும் பேசுதற்கான தனி உரை கார்டனிலேயே தயாரிக்கப்படுகிறது. அந்த பேச்சு தொடர்பாக அவர் ஒத்திகையை செய்து கொள்கிறார். அப்போது, ஜெயலலிதாவின் ஸ்டைலையே அவர் பின்பற்றுகிறார். மேலும், ஜெயலலிதா கட்சியை எப்படி வழிநடத்திச் சென்றாரோ அதுபோலவே சசிகலாவும் கட்சியை வழிநடத்த உள்ளார். அதே நேரத்தில் தனக்கென்று 'தனி வழி' ஒன்றை சசிகலா பின்பற்றுகிறார். அது என்னவென்றால், கட்சி நிர்வாகிகளின் மனநிலைமை அறிந்து கொள்ளவே இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கட்சியில் பொறுப்பிலிருப்பவர்களிடம் இருந்து சசிகலாவுக்கு எந்தவித எதிர்ப்பும் இருக்கப்போவதில்லை. ஆனால் பதவிகள் பறிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தி அ.தி.மு.க.வினர் இடையே சசிகலா மீது ஒருவித எதிர்ப்பு இருக்கிறது. இதனால்தான் அவர்களிடம் கட்சிக்காக உழைக்க வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகளின் மனநிலையைப் பொறுத்து முதல்வராகலாம் என்று சசிகலா தரப்பு முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அரசியலில் களமிறங்கப் போவதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. அவருக்கு உறுதுணையாக இருக்கும் கட்சி நிர்வாகிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான பட்டியல் கார்டனில் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் முன்னாள் நிர்வாகிகளின் பெயர்கள் அதிகம் இடம் பிடித்துள்ளன. இந்த நடவடிக்கைக்குப் பிறகு சசிகலாவின் வழி தனித்துவமாக தெரியும்" என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/77345-sasikala-natarajans-new-strategy.art

Categories: Tamilnadu-news

மோடியின் அடுத்த ஆப்பு ரெடி ...

Mon, 09/01/2017 - 12:59

மோடியின்  அடுத்த  ஆப்பு ரெடி ...

316ox03.jpg

 

டிஸ்கி :

ஒணம் ..கூனம்...  மகாவீர் ஜெயந்தி .. மயிறு ஜெயந்திகெல்லாம் விடுமுறை அளித்து அழகு  பார்த்த தமிழனுக்கு இப்படி ஒரு கண்றாவியா ..?

எல்லாம் பேசமா ஊரை காலி பண்ணிட்டு வேற ஊருக்கு கிளம்புங்கப்பா .. பாரத மாதாக்கி ஜே !!

Categories: Tamilnadu-news

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநரின் நம்பிக்கை! - எம்.பிக்கள் கூட்டத்தில் உறைந்த சசிகலா

Mon, 09/01/2017 - 06:44
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநரின் நம்பிக்கை! - எம்.பிக்கள் கூட்டத்தில் உறைந்த சசிகலா

ops_governor_new_11161.jpg

பிரதமருக்குத் தொடர் கடிதம், அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பு என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகத்தோடு வலம் வரத் தொடங்கிவிட்டார். 'குடியரசு தினத்தில் ஓ.பி.எஸ் கொடியேற்றுவார் என ஆளுநர் அலுவலகம் கொடுத்த உத்தரவும் ஜெயலலிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட மனுவை பணியாளர் நலத்துறைக்கு ஒப்படைத்ததையும் அதிர்ச்சியோடு கவனிக்கிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 

அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா, 'ஜனவரி 2-ம் தேதி முதல்வராக பதவியேற்பார்' என நிர்வாகிகள் பேசி வந்தனர். அதன்பிறகு, 'ஜனவரி 12-ம் தேதி முதல்வர் ஆவார்' என்றனர். அதையொட்டி, அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள், 'முதல்வர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும்' என்பதை வற்புறுத்தியபடியே இருந்தனர். ஒருகட்டத்தில், கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, நீண்ட அறிக்கையே வெளியிட்டார்.

இதுகுறித்தெல்லாம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எந்த எதிர்வினையும் கிளம்பவில்லை. வழக்கம்போல, தலைமைச் செயலகப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். அ.தி.மு.க நிர்வாகிகளும் சசிகலாவை முன்னிறுத்துவதை மறந்துவிட்டனர். "பொதுச் செயலாளர் பதவிக்கு வந்த சில நாட்களில் முதல்வர் பதவியில் சசிகலா அமர்ந்துவிட வேண்டும் என்றுதான் மன்னார்குடி உறவுகள் திட்டம் வகுத்தனர். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்குள், முதல்வராகிவிட வேண்டும் என பணிகளை துரிதப்படுத்தினர். ஆனால், முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மௌனமும் ஆளுநர் மாளிகையின் நெருக்குதல்களும் முடிவைத் தள்ளிப் போட வைத்துவிட்டன. பொதுவாக , குடியரசு தின விழாவில் ஆளுநர்தான் கொடியேற்ற வேண்டும். மகாராஷ்ட்டிரா மாநில ஆளுநராகவும் வித்யாசாகர் ராவ் இருக்கிறார். 'அங்கு கொடியேற்றச் செல்வதால், தமிழகத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கொடியேற்றுவார்' என கடிதம் எழுதியுள்ளது ஆளுநர் அலுவலகம்.' முதல்வர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் விலக மாட்டார்' என்பதை ஆளுநர் அலுவலக கடிதமே சுட்டிக் காட்டிவிட்டது" என விவரித்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், 

sasi_new600_11499.jpg

"அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்களை நேற்று சந்தித்தார் சசிகலா. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்பட சீனியர்கள் பலரும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். 'விசுவாசமாக பணியாற்றுபவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது' என சசிகலா பேசிக் கொண்டிருக்கும்போது, அவர் அருகில் வந்தார் டாக்டர் வெங்கடேஷ். ' ஜெயலலிதா மரணம் தொடர்பாக பணியாளர் நலத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியிருந்த' தகவலை சசிகலாவிடம் தெரிவித்தார். ஒருகணம், அதிர்ச்சியில் உறைந்தவர், அருகில் இருந்த அறைக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவர், கார்டனுக்குச் சென்றுவிட்டார். 'சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இந்தநேரத்தில், சசிகலாவுக்கு எதிராகக் கொடுக்கப்படும் புகார்களை மத்திய அரசு பெற்றுக் கொள்வதையும் அதிர்ச்சியோடு கவனிக்கிறது கார்டன். 

‘உங்களுக்கு எதிராக வரும் சிறு துரும்பையும் விட்டுவிட மாட்டோம்' என்பதை நேரடியாக தெரிவிக்கிறது மத்திய அரசு. எனவேதான், 'நிலைமை சீராகும் வரையில் அமைதியாக இருப்போம்' என மன்னார்குடி உறவுகள் முடிவெடுத்தனர். கூடவே, தீபாவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் எரிச்சலில் இருக்கிறார் சசிகலா. தீபாவை சந்திக்க வரும் பிரமுகர்களை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. 'தீபாவை இயக்குவது யார்?' என்ற கேள்விதான் வலம் வருகிறது. முதலமைச்சர் உத்தரவின்பேரில் தீபா வீட்டிற்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17-ம் தேதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்க இருக்கிறார் தீபா. இதை மன்னார்குடி உறவுகள் எதிர்பார்க்கவில்லை. எந்தவகையில் அவரைத் தடுத்து நிறுத்துவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்" என்றார் விரிவாக. 

அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "ஜனவரிக்குள் முதல்வர் ஆவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு மன்னார்குடி உறவுகள் வந்துவிட்டனர். டி.டி.வி தினகரனை அமலாக்கத்துறையின் வழக்கு நெருக்கியதையும் தி.மு.க தலைவருக்கு ஆளுநர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததையும் கவனித்து வருகின்றனர் மன்னார்குடி உறவுகள். ஒருவேளை முதல்வராக சசிகலாவை முன்னிறுத்தினாலும், 'ஒரு முதல்வரை அறிவித்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் இன்னொருவரை முன்னிறுத்துவது எப்படி சாத்தியம்? பன்னீர்செல்வம் பலத்தை நிரூபிக்கவில்லையென்றால், அடுத்த முதல்வரைப் பார்த்துக் கொள்ளலாம்' எனத் தெரிவிக்கும் முடிவில் ஆளுநர் அலுவலகம் இருக்கிறது. அரசின் பிடி முழுக்க ஆளுநர் கையில் இருப்பதை கார்டனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மத்திய அரசை சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டன. அரசியல்ரீதியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து, நிதானமாகவே செயல்பட்டு வருகிறார் சசிகலா" என்றார். 

முதல்வர் கனவு தள்ளிப் போகும் கவலை ஒருபுறம் வாட்டினாலும் தீபாவின் வருகை; சசிகலா புஷ்பாவின் மனு; ஆளுநர் அலுவலக நெருக்குதல்; சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு என ஆக்டோபஸ் பிடியில் சிக்கியிருக்கிறார் சசிகலா. இன்று நடக்கும் இந்தியா டுடே மாநாட்டிலும் கண்ணீரோடு காட்சியளித்தார் சசிகலா. நெருக்குதல்கள் கொடுக்கும் வலிதான் காரணமா என்ற கேள்விகளும் அரசியல் மட்டத்தில் எழுந்துள்ளது.  

http://www.vikatan.com/news/tamilnadu/77316-governor-assures-o-panneerselvam-sasikala-in-shocked.art

Categories: Tamilnadu-news

தமிழகத்தில் விறுவிறு... சுப்ரீம் கோர்ட் சுறுசுறு... தொட்டுவிடும் தூரத்தில் வருகிறது தீர்ப்பு தேதி

Sun, 08/01/2017 - 19:43

தமிழகத்தில் விறுவிறு... சுப்ரீம் கோர்ட் சுறுசுறு... தொட்டுவிடும் தூரத்தில் வருகிறது தீர்ப்பு தேதி

 

தமிழகத்தில் அரசியல் நிகழ்வுகள் வேகமாக மாறியபடி உள்ள நிலையில், தலைமை நீதிபதி மாற்றம், நீதிபதி விரைவில் ஓய்வு என, டில்லி யில் சுப்ரீம் கோர்ட்டும் சுறுசுறுப்பாவதால், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்கு கிறது என்ற பேச்சு அடிபடுகிறது.

 

Tamil_News_large_168641320170109002229_318_219.jpg

பெங்களூர் சிறப்பு கோர்ட்டில், 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பால், முதல்வர் பதவியை இழந்து சிறைக்கு சென்றார் ஜெய லலிதா. ஆனால், நான்கு பேரும் அளித்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட் தனி நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்தார்.

அந்த தீர்ப்பு, அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஜெயலலிதா உள் ளிட்ட நான்கு பேரின் விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசும், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனும், மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர், தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளனர். தீர்ப்பு வெளி யிடப்படுவது குறித்த காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதா திடீரென உடல் நலம் குன்றி மருத்துவமனையில்

சேர்க்கப்பட்ட போது, சொத்துக் குவிப்பு வழக்கில் எதிர்மறையான தகவல் டில்லியிலிருந்து வந்த அதிர்ச்சி யால் அவர் மயக்கமடைந்ததாக வதந்தி கிளம்பியது.

பின், ஜெயலலிதாவின் மருத்துவமனை காட்சிகள் நாள்தோறும் அரங்கேறி, தமிழக அரசியல் அரங்கை வேறு திசை திருப்பவே, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த எதிர்பார்ப்பே மங்கியது. நெருக்கடி யான அரசியல் சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியிடுமா என்ற சந்தேகங்களும் கிளம்பின.

யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா மரணமடைய, சூழ்நிலை இன்னும் குழப்பமானது. பா.ஜ., - எம்.பி.,யும், இவ்வழக்கின் காரண கர்த்தா வுமான சுப்பிரமணியன் சாமி, 'ஜனவரியில் தீர்ப்பு வரப் போகிறது' எனக் கூறி, பரபரப்பை அதிகப்படுத் தினார். இவையாவும் சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலராவதற்கு முன் நடந்தவை.

வழக்கு முடிந்ததும், மூன்று அல்லது நான்கு மாதங்களில் தீர்ப்பை எதிர்பார்க்கலாம் என, பலரும் நம்பினர். தற்போது, ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. தலைமை நீதிபதியாக இருந்த, டி.எஸ். தாக்குர் ஓய்வு பெற்று, ஜே.எஸ்.கெஹர் பதவி யேற்றுள்ளார்.

இதையொட்டிய அலுவல்கள் முடிந்துள்ளதால், சுப்ரீம் கோர்ட்டின் பார்வை, சொத்துக் குவிப்பு வழக்கு மீது படலாம் என தெரிகிறது. இதுகுறித்த செய்தி, சுப்ரீம் கோர்ட் வட்டாரங்களில் சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவு, தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா, அரசியல்செல்வாக்கு மிக்க தலைவர் இப்போது இல்லாத நிலையில், மீதமுள்ளவர்கள் மீதான கோர்ட் டின் பார்வை எப்படி இருக்கும் என்பன போன்ற கேள்விகள், அரசியல் அரங்கில் வட்டமடிக்க வும் தவறவில்லை.

இந்நிலையில், இரு நீதிபதிகளில் ஒருவரான, பினாகி சந்திரகோஷ், மே 27ல் ஓய்வு பெற வுள்ளார். ஆனால், சனிக்கிழமையான மே 6 முதல், சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை

 

துவங்கவுள்ளதால், அவரது கடைசி அலுவல், மே 5ல் நிறைவுபெறும். வழக்கை விசாரித்த நீதிபதி என்பதால் பினாகி சந்திரகோஷ் பணி ஓய்வு பெறுவதற்கு முன், எப்போது வேண்டு மானாலும் தீர்ப்பும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த விஷயங்களை மையமாக வைத்து, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கான தேதி, வெகு துாரத்தில் இல்லையென, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

மூன்று விஷயங்கள்


* கர்நாடக அரசின் வாதங்கள் ஏற்கப்பட்டால், குன்காவின் தீர்ப்பு உறுதி செய்யப்படலாம் அல்லது புதிய தண்டனை விபரங்கள் அறிவிக் கப்படலாம்; அது சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும்

* நான்கு பேரது வாதங்கள் ஏற்கப்பட்டால், குன்காவின் தீர்ப்பு ரத்தாகி விடுதலையாவர்; இதை எதிர்த்து, கர்நாடக அரசு மறுசீராய்வு வழக்கை தொடுக்கலாம்

* மீண்டும் கர்நாடகா ஐகோர்ட்டுக்கே வழக்கு திருப்ப அனுப்பப்படலாம்; கணக்கு பிழைகளை சரி செய்ய உத்தரவிடலாம். ஆனால், 'இதற்கு வாய்ப்பே இல்லை' என, நீதிபதி அமித்தவ் ராய் விசாரணையின் போது கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும். - நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1686413

 

 

 

Categories: Tamilnadu-news

மூன்று நிமிட பேச்சுக்கு 3 மணி நேரம் காத்திருக்கச் செய்வதா?* சசிகலா கூட்டத்தில் பங்கேற்ற, 'மாஜி'க்கள் கொதிப்பு

Sun, 08/01/2017 - 19:37

மூன்று நிமிட பேச்சுக்கு 3 மணி நேரம் காத்திருக்கச் செய்வதா?* சசிகலா கூட்டத்தில் பங்கேற்ற, 'மாஜி'க்கள் கொதிப்பு

Tamil_News_large_168650720170108231019_318_219.jpg

 

சசிகலாவின் மூன்று நிமிட பேச்சை கேட்க, மூன்று மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால், 'மாஜி' அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 'மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சந்திப்பு, கசப்பானதாக முடிந்து விட்டது' என்றும், கொதிப்புடன் கூறினர்.

அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலாவுக்கு, பல மட்டத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைச் சமாளிக்க, தலைமை அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்து வருகிறார். நேற்று காலை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.
மதியம், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

இதற்காக, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், பகல், 12:00 மணிக்கு, கட்சி அலுவலகம் வந்தனர். அலுவலகத்தின், முதல் தளத்தில் அமர வைக்கப்பட்டனர்.
பகல், 2:50 மணிக்கு, மேடைக்கு வந்த, கட்சி அலுவலக மேலாளர் மகாலிங்கம், 'சின்னம்மா வரும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்' என, நிர்வாகிகளிடம், கை விரல்களால் சொடுக்கு போட்டு, கட்டளை பிறப்பித்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில், அங்கு வந்த சசிகலா, 'ஜெயலலிதா, முன்னாள் நிர்வாகிகள், இந்நாள் நிர்வாகிகள் என, வேறுபாடு பார்க்காமல், ஒரே மாதிரியாக பார்த்தார். அதே போல, நானும் பார்க்கிறேன். அனைவரும் ஒன்றாக இணைந்து, கட்சிப் பணியாற்றுங்கள். வெற்றி மேல் வெற்றி பெற்று, ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குவோம்' என, பேசி உள்ளார்.

அவர் தன், மூன்று நிமிட பேச்சை முடித்ததும், அருகில் இருந்த அறைக்கு சென்றுள்ளார். 'மூன்று நிமிட பேச்சுக்காக, மூன்று மணி நேரம் காத்திருக்க வைப்பதா...' என, கூட்டத்தில் பங்கேற்ற, முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கொதிப்படைந்தனர்.

இது குறித்து, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறியதாவது:

முன்னாள் எம்.எல்.ஏ.,க்களை, சசிகலா சந்திக்கிறார் என்றதும், சொந்த ஊரில் இருந்து, வேகமாக வந்தோம். ஆனால், உரிய மரியாதை தரப்படவில்லை. வாசலில் நுழையும் போதே, போலீசார் கெடுபிடி செய்தனர். அதை தாண்டி, அலுவலகம் உள்ளே சென்று அமர்ந்தால், குடிக்க தண்ணீர் கூட தரவில்லை.

மூன்று மணி நேரமாக, இருக்கையில் தவித்தோம். கட்சி அலுவலக மேலாளரான மகாலிங்கம், ஓர் ஊழியர். அவர், சசிகலாவிற்கு அடுத்த இடத்தில் இருப்பது போல, சொடக்கு போட்டு, ஆணை பிறப்பிக்கிறார்; அவருக்கு அவ்வளவு அதிகாரம் கொடுத்தது யார் என, தெரியவில்லை.
சசிகலாவும், மூன்று நிமிடம் மட்டுமே பேசினார்; யாரிடமும் ஆலோசிக்கவில்லை. ஜெயலலிதா என்றால், ஒவ்வொருவரிடமும் நலம் விசாரிப்பார். சசிகலாவோ பேசி முடித்ததும், அறைக்குள் சென்று விட்டார்; உடன் எங்களை கீழே இறங்கும்படி உத்தரவிட்டனர்.

கீழே வந்தால், போலீசார் வெளியே போக விடாமல் தடுத்தனர்; அவர்களிடம், சண்டை போட்டு தான் வெளியேறினோம். மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டிய சந்திப்பு, கசப்பாகவே முடிந்தது. இப்பவே இப்படி என்றால், சசிகலா முதல்வரானால், மரியாதை என்பது துளியும் இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

'மாஜி'க்கள் புறக்கணிப்பு

இந்த சந்திப்பில், முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் ஆதிராஜாராம் உட்பட, ஏராளமானோர் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு வராதோரை கண்டறிந்து, சமாதானப்படுத்த, சசிகலா தரப்பு முடிவு செய்துள்ளது.

தே.மு.தி.க., அதிருப்திகள்

தே.மு.தி.க.,வில் இருந்து, அ.தி.மு.க.,விற்கு தாவிய, சுந்தர்ராஜன், தமிழழகன், சாந்தி உள்ளிட்ட, ஏழு 'மாஜி' எம்.எல்.ஏ.,க்களுக்கு, சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா வாய்ப்பு தரவில்லை. இதனால், அமைச்சர்கள் முதல், எம்.எல்.ஏ.,க்கள் வரை, இவர்களை ஒதுக்கி வைத்திருந்தனர். கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், சசிகலா நேற்று நடத்திய சந்திப்பில், ஏழு பேரும் பங்கேற்றனர். ஜெ., ஒதுக்கி வைத்திருந்தோருக்கு, சசிகலா அழைப்பு விடுத்துள்ளது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

'பிளவுப்படுத்த முடியாது'

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளை, சசிகலா நேற்று சந்தித்தார். அவர்களிடம், 'அ.தி.மு.க.,வை யாராலும் பிளவுப்படுத்த முடியாது. விஷம பிரசாரங்களை கண்டு கொள்ள வேண்டாம். பொறுப்புடன் கட்சி பணியாற்றுங்கள்' என, பேசியுள்ளார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1686507

Categories: Tamilnadu-news

எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் முடிவு * தீபா அறிவிப்பு

Sun, 08/01/2017 - 19:07
எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் முடிவு * தீபா அறிவிப்பு
 
 
 

''எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில், என் முடிவை அறிவிப்பேன்,'' என, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.

 

Tamil_News_large_168650420170108232301_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் எல்லாம், 'கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும்' என, ஜெ., அண்ணன் மகள் தீபாவை வலியுறுத்தி வருகின்றனர். தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

நேற்று மாலை, தொண்டர்களிடம் தீபா பேசுகை யில், ''வரும், 17ல், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை, அனைவரும் கொண்டாட வேண்டும். அன்று, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க

உள்ளேன். அப்போது, என் முடிவை அறிவிப் பேன்; அதுவரை அனைவரும் காத்திருப்போம்,'' என்றார்.

தீபாவை சந்தித்த, திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ., மணிவாசகன் கூறுகையில், ''முன்னாள் எம்.பி.,- எம்.எல்.ஏ.,க் களை, அ.தி.மு.க., அலுவலகத்திற்கு அழைத்துள்ள னர். எனக்கு சசிகலா தலைமை பிடிக்கவில்லை. எனவே, தீபாவை பார்க்க வந்துள் ளேன். எங்கள் மாவட்ட தொண்டர்களும், சசிகலாவை ஏற்றுக் கொள்ளவில்லை,'' என்றார்.

நாஞ்சில் சம்பத்தை கண்டித்து மறியல்


சசிகலாவை சந்தித்த பின், பேட்டி அளித்த, அ.தி. மு.க., பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தீபா குறித்த கேள்விக்கு, 'சில நேரங்களில், துரும்பு கூட துாணாக தெரியும்' என, பதில் அளித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீபா ஆதரவாளர்கள், நேற்று காலை, தி.நகர் வெங்கட் நாராயணன்சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தீபாவுக்கு ஆதரவு திரட்ட 'வாட்ஸ் ஆப்' குழுக்கள்


தீபாவுக்கு ஆதரவு திரட்ட, அனைத்து மாவட்டங்களிலும், அ.தி.மு.க.,வினர் தனி, 'வாட்ஸ்

 

ஆப்' குழுக்களை துவக்கி உள்ளனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டற்கு, கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அந்த எதிர்ப்பாளர்கள் எல்லாம், 'கட்சிக்கு தலைமையேற்க வாருங்கள்' என, ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு, அழைப்பு விடுத்து வருகின்றனர். அவரும் அரசியலுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து, அவருக்கு ஆதரவு திரட்ட, அனைத்து மாவட்டங்களிலும், 'ஜெ., தீபா ஆதரவு குழு' என்ற பெயரில், வாட்ஸ் ஆப் குழுக்களை, ஆதரவாளர்கள் துவக்கி உள்ளனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1686504

Categories: Tamilnadu-news

தீபா ஆதரவாளர்கள், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயரில், புதிய கட்சியை, ஈரோட்டில் நேற்று துவங்கினர்.

Sun, 08/01/2017 - 19:05
gallerye_234525909_1686540.jpg

தீபா ஆதரவாளர்கள், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயரில், புதிய கட்சியை, ஈரோட்டில் நேற்று துவங்கினர். கட்சிக்கு, கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. தீபாவுக்கு நாளுக்கு நாள் பெருகும் ஆதரவால், சசிகலா வட்டாரங்கள் கலக்கத்தில் உள்ளன.

 

Tamil_News_large_168654020170108231218_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச்செயலராக பொறுப்பேற் றுள்ள சசிகலாவை, அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால், 'ஜெ.,யின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வர வேண்டும்; ஜெ., விட்டு சென்ற பணிகளை தொடர வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, தமிழகம் முழுக்க பல இடங்களில், தீபா பெயரில் பேரவை துவங்கி, ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோட்டில் நேற்று, தீபா ஆதர வாளர்கள், புதிய கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை அறிமுகம் செய்தனர். ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலரும், 22வது வட்ட செயலருமான தமிழ் மாதேஸ் வீட்டில், கட்சியின் துவக்க விழா நடந்தது.

மீனவரணி மாவட்ட செயலர் பாரூக், கொடுமுடி முன்னாள் சேர்மன் தமிழ்செல்வி, 57வது வட்ட செயலர் சரவணன் உட்பட, 50க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என, கட்சிக்கு பெயரிட்டுள்ளனர். கறுப்பு, சிவப்பு, நடுவில் வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளை பகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெற்றுள்ளன; இரட்டை ரோஜாவை சின்ன மாகவும் அறிவித்துள்ளனர்.

'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கை,

கோட்பாடு மற்றும் கட்சியை காப்பாற்ற, ஜெ. தீபாவை, தலைமையேற்று வழிநடத்த அழைக்கிறோம். ஈரோடு மாவட்டம் முழுவதும் கிளைகளை உருவாக்கி, இரண்டு முதல், ஐந்து லட்சம்உறுப்பினர்களை சேர்ப்பது; ஜெ., வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை,நினைவு இல்ல மாக மாற்ற வேண்டும்; எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்' என்பது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
 

31 கிளைகள் கலைப்பு


சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம், பெரியசோரகை பஞ்சாயத்தில் உள்ள, 42 அ.தி.மு.க., கிளை கமிட்டிகளில், 31 கிளைகள் கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக, தீபா பேரவையை துவக்கி உள்ளனர்.பேரவை ஒன் றிய செயலராக, முன்னாள் ஒன்றிய இளைஞ ரணி செயலர்கார்த்திகேயன் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.17ம் தேதிக்குள்,நங்கவள்ளி ஒன்றி யத்தில், 300 தீபா பேரவை கிளை கமிட்டிகளை அமைத்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 

சசி ஆதரவாளர்கள் கலக்கம்


பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களின் பல பகுதிகளில், தீபாவை ஆதரித்து பேனர்கள் வைப் பது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதே நேரத்தில், சசிகலாவின் பேனர்கள் கிழிக்கப் படும் சம்பவங்களும்அதிகரித்துள்ளன. பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்கள் மட்டு மல்லாமல், தமிழகம் முழுவதுமே தீபாவுக்கு ஆதரவு பெருகுவதால், சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

இதனால், பல பகுதிகளிலும், தீபாவை ஆதரித்து வைக்கப்படும் பேனர், போஸ்டர்களை கிழித்து எறிகின்றனர். மேலும், போலீசார் உதவியுடன், அவற்றை அகற்றியும் வருகின்றனர்.

'இளைய புரட்சி தலைவி'


தீபாவிற்கு, திண்டுக்கல் மாவட்டத்திலும் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். கோட்டப்பட்டியில் கிராமமே ஒன்று

 

திரண்டு, பிரம்மாண்ட பேனரை, தீபாவிற்கு ஆதரவாக வைத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில், 13 இடங்களில் பிரசார பயணம் மற்றும் பொதுக் கூட்டங்களை, போலீசாரின் அனுமதி பெற்று நடத்த, தீபாவின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஜன., 22ல், 'இளைய புரட்சி தலைவி ஜெ.தீபா பேரவை' சார்பில், செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடக்கிறது.

இது குறித்து, பேரவை நிர்வாகிகள் சகாயம், முத்தரசன், ராஜன் கூறியதாவது:


உடனடியாக ஆதரவாளர்களை ஒன்றிணைப்பது கடினம். எங்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தலைமையில், மாவட்டந்தோறும் ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர். தீபாவுக்கு ஆதரவு அதிகரித்துள் ளது.திண்டுக்கல் மாவட்டம் சார்பில், செயற் குழு நடத்த திட்டமிட்டுள்ளோம். அனுமதி வழங்கக் கோரி, திண்டுக்கல் எஸ்.பி.,யை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

'மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம்'


'எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவை' சார்பில், இரண்டாம் கட்ட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியிடும் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில ஒருங்கிணைப் பாளர் ராமச்சந்திரன் பேசியதாவது:

நம் பொறுப்பாளர்களுக்கு மிரட்டல் வருவதாக தகவல் வருகிறது. ஆயிரம் மிரட்டல்கள் வந்தாலும், பயந்து விடக்கூடாது. நாம், ஜெயலலிதாவின் வாரிசுகள். உண்மையான தொண்டர்கள் மற்றும் மக்கள், தீபா பக்கம் உள்ளனர். வரும், பிப்., 24ல், ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, தீபா முன்னிலையில், உறுப்பினர்கள் சேர்க்கை விபரம் அளிக்கப்படும்.

தொடர்ந்து, அவரது அறிவுரைப்படி, சேலம் போஸ் மைதானத்தில் மாநில மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிக் கப்பட்டனர். இதுவரை, 28 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். - நமது நிருபர் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1686540

Categories: Tamilnadu-news

சசிகலா கட்சிப் பதவி ஏற்ற பிறகு தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக வளர்மதி அறிவிப்பு

Sun, 08/01/2017 - 16:51

சசிகலா கட்சிப் பதவி ஏற்ற பிறகு தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக வளர்மதி அறிவிப்பு

2017-01-0800:04:59

Daily_News_5692821741105.jpg

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட பிறகு, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக கட்சியின் இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, வளர்மதி தனது குடும்பத்தினருடன் நேற்று போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

மறைந்த ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது வளர்மதி சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். 2016ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் வளர்மதி அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். ஜெயலலிதா மறைந்ததையடுத்து, சசிகலாவின் தீவிர ஆதரவாளராக வளர்மதி செயல்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் வளர்மதி அளித்த பேட்டியில் கூட, “ஜெயலலிதா முதல்வராக வருவதற்கு சசிகலாதான் காரணம்” என்று கூறினார். அந்த அளவுக்கு சசிகலாவின் ஆதரவாளர் என்று தன்னை காட்டிக் கொண்டார்.

சசிகலாவும் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளை தன் பக்கம் தக்கவைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுக் கொண்டபிறகு கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவருக்கு முதல் முதலாக பெரிய அளவிலான பதவி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒரு அமைச்சருக்கு உள்ள அந்தஸ்து வளர்மதிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=270960

**கல்வி வளம்பெற சிறப்பான முடிவு** :D:

Categories: Tamilnadu-news

ஜெயலலிதா மரணத்தில் விசாரணை: சசிகலாபுஷ்பா கோரிக்கைக்கு கிடைத்த பலன்!

Sun, 08/01/2017 - 16:19
ஜெயலலிதா மரணத்தில் விசாரணை: சசிகலாபுஷ்பா கோரிக்கைக்கு கிடைத்த பலன்!

Home ministry ordered Dopt in Jayalalithaa's demise

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம், தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், சசிகலா புஷ்பாவிடம் மனு அளித்திருந்தார்.

இதுதொடர்பாக தனிப்பட்ட மற்றும் பயிற்சி துறை (department of personal and training) நடவடிக்கை எடுத்து, சசிகலாபுஷ்பாவுக்கு, தெரிவிக்க உள்துறை அமைச்சம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த தகவல் தொடர்பாக சசிகலாபுஷ்பா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

15941564_10211995006336088_612692033_n_1

http://www.vikatan.com/news/india/77270-sasikalapushpas-petition-effect--home-ministry-ordered-dopt-to-take-action-in-jayalalithaas-demise.art

Categories: Tamilnadu-news

அண்ணா... எம்.ஜி.ஆர்... ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்தது என்ன?

Sun, 08/01/2017 - 12:15
அண்ணா... எம்.ஜி.ஆர்... ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்தது என்ன?

 

நாற்காலியில் வெற்றிடம் விழுந்ததும், அதை வசப்படுத்த அசுர வேகத்தில் அரண்மனை சதி நிகழ்வதே வரலாறு நெடுக பாடங்களாக இருக்கின்றன. ஜனநாயக வெளிச்சத்திலும் இந்த வரலாறு மாறவில்லை. பதவி வெறி என்றால் என்ன? அதிகார போதை எப்படி இருக்கும்? அதை அடைய என்னவெல்லாம் செய்வார்கள்?

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் மரணத்துக்குப் பிறகு அதற்கான அர்த்தங்களை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இவர்களின் மரணத்துக்குப் பிறகு நடந்தவை என்ன? அவை சொல்லும் உண்மைகள் என்ன? இதோ ஓர் ஒப்பீடு:

p18.jpg

உடல்நலக் குறைவு!

அண்ணா: 1968 செப்டம்பர் முதல் வாரம். சாப்பிட்டுக்கொண்டிருந்த அண்ணாவுக்குத் திடீரென தொண்டையில் வலி. மருத்துவப் பரி சோதனையில் புற்றுநோய் எனக் கண்டறியப் பட்டது.

எம்.ஜி.ஆர்: 1984 அக்டோபர் 5. திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அப்போலோவில் எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா: காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவால் அப்போலோவில் அனுமதி.

 வெளிநாட்டு சிகிச்சை!

அண்ணா: அமெரிக்காவின் நியூயார்க் மெமோரியல் புற்றுநோய் மையத்தில் உலகப் புகழ்பெற்ற டாக்டர் மில்லர் தலைமையில் அண்ணாவுக்கு  அறுவைச் சிகிச்சை.

எம்.ஜி.ஆர்: அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதி. இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்ததால் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதற்கு முன்பு அவருக்கு என்ன நோய், எதற்காக ஆபரேஷன் என விளக்கி ‘ஆபரேஷன் வெற்றிகரமாக நடக்க வழிபாடு நடத்துங்கள்’ என எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

ஜெயலலிதா: சிகிச்சைக்கு வெளிநாடு போகவில்லை. வெளிநாட்டு டாக்டர்கள் மட்டும் வந்து போனார்கள்.

p18a.jpg

போட்டோ, வீடியோ!

அண்ணா: புகைப்படம் வெளியிடப்பட்டது.

எம்.ஜி.ஆர்: புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். பேப்பர் படிப்பது, பயிற்சி செய்வது, நடப்பது போன்ற போட்டோக்களும், வீடியோவும் வெளியிடப்பட்டன. ‘உடல்நிலை’ பற்றி எழுந்த கேள்விகளுக்கு இவை விடைகளாக அமைந்தன.

ஜெயலலிதா: நோ போட்டோஸ்... நஹி வீடியோஸ்.

மரணம்!

அண்ணா: அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை. இதயத் துடிப்பு குறைந்ததால் செயற்கை சுவாசம் வைக்கப்பட்டது. பிறகு மூச்சுக்குழாயில் துளை போட்டு அதன் மூலம் சுவாசிக்க வைத்தனர். 1969 பிப்ரவரி 3-ம் தேதி நள்ளிரவு 12.20 மணிக்கு உயிர் பிரிந்தது. அமைச்சர் நெடுஞ்செழியன் கண்ணீரோடு பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தார்.

எம்.ஜி.ஆர்: நள்ளிரவு (1987 டிசம்பர் 24-ம் தேதி) 12.30 மணிக்கு பாத்ரூம் சென்றவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைய, அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்தது.

ஜெயலலிதா: மரணத்தை அப்போலோதான் அறிவித்தது. அதற்கு முன்பாகவே அவர் மரணம் தொடர்பான செய்திகள் மாறி மாறி முரண்பாடாக வந்துகொண்டிருந்தன.

p18b.jpg

ராஜாஜி ஹால்!

அண்ணா: அண்ணாவின் மனைவி ராணி அம்மாள், அக்கா நாகம்மாள் மற்றும் உறவினர்கள் உடலுக்கு அருகில் அழுதபடியே நின்றிருந்தனர்.

எம்.ஜி.ஆர்: உடலுக்கு அருகில் மனைவி ஜானகி அம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தார்கள்.

ஜெயலலிதா: சசிகலா குடும்பத்தினர் மட்டுமே சூழ்ந்திருந்தார்கள்.

அஞ்சலி நேரம்!

அண்ணா: 3-ம் தேதி அதிகாலை 5.30 மணியில் இருந்து 4-ம் தேதி காலை 8.15 மணி வரை.

எம்.ஜி.ஆர்: 24-ம் தேதி காலை 10 மணியில் இருந்து 25-ம் தேதி காலை 11 மணி வரை.

ஜெயலலிதா: காலை 6 மணி டு மாலை 4.30 மணி வரை.

இறுதி ஊர்வலம்!

அண்ணா: ராணுவ வண்டிக்குப் பின்னால் அண்ணாவின் உறவினர்கள், முக்கியப் பிரமுகர்கள் கார்களில் வந்தார்கள். ராஜாஜி ஹாலில் இருந்து ஊர்வலம் அண்ணா சாலை வழியாக ஜெமினி வந்து கதீட்ரல் சாலை வழியாக உழைப்பாளர் சிலையை அடைந்தது.

எம்.ஜி.ஆர்: ராணுவ வண்டிக்குப் பின்னால் எம்.ஜி.ஆர் குடும்பத்தினர் ஒரு வேனில் சென்றனர். அண்ணா இறுதி ஊர்வலம் நடந்த பாதையிலேயே எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலமும் நடைபெற்றது.

ஜெயலலிதா: சசிகலா, அவரது உறவினர்கள் ராணுவ வண்டியில் இருந்தனர். அண்ணா சாலை வழியாக நீண்ட தூரத்துக்கு ஊர்வலம் போகவில்லை. வாலாஜா சாலையிலேயே திரும்பி கடற்கரையை அடைந்தது.

p18c.jpg

தற்காலிக முதல்வர்!

அண்ணா: அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த நெடுஞ்செழியனை தற்காலிக முதல்வராக கவர்னர் உஜ்ஜல் சிங் நியமித்தார்.

எம்.ஜி.ஆர்: அமைச்சராக இருந்த நெடுஞ்செழியனுக்கு தற்காலிக முதல்வராக கவர்னர் குரானா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜெயலலிதா: தற்காலிக முதல்வர் நியமிக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் உடல் அப்போலோவில் இருந்தபோது கவர்னர் மாளிகையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மொத்த அமைச்சரவையும் பதவியேற்றது.

புதிய முதல்வர்!

அண்ணா: முதல்வர் பதவியை நெடுஞ்செழியன் விரும்பினார். ஆனால், பெரும்பாலானவர்கள் ‘கருணாநிதிதான் சாய்ஸ்’ என்றார்கள். பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் விருப்பமும் அதுதான். அண்ணா இறந்த 7-வது நாள் அதாவது, பிப்ரவரி 9-ம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 10-ம் தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. அண்ணா அமைச்சரவையில் இருந்தவர்கள் மீண்டும் பதவியில் அமர்ந்தார்கள், நெடுஞ்செழியன் தவிர்த்து.

எம்.ஜி.ஆர்: தற்காலிக முதல்வர் நெடுஞ்செழியன், முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்தார். ‘பெரும்பான்மையோர் விருப்பத்துக்கு ஏற்ப முதல்வர் பதவி ஏற்க சம்மதிக்கிறேன். நெடுஞ்செழியன் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என அறிக்கை விட்டார் ஜானகி அம்மாள். ஜானகி அம்மாள் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் அரசு டிஸ்மிஸ் ஆனது.

ஜெயலலிதா: அப்போலோவில் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்து கொண்டிருந்தபோது  அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கே ஓ.பன்னீர்செல்வத்தைப் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார் கள்.

p18d.jpg

கட்சித் தலைவர்!

அண்ணா: ஆறு மாதங்கள் கழித்து 1969 ஜூலை 26-ம் தேதி தி.மு.க பொதுக்குழு கூடியது. அதுவரை இருந்துவந்த ‘அவைத் தலைவர்’ பதவியை ‘தலைவர்’ என்று மாற்ற முடிவு செய்தார்கள். அதன்படி, தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் தேர்வு செய்யப்பட்டனர்.

எம்.ஜி.ஆர்: நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்திருப்பதாக அறிவித்தார்கள். அது செல்லாது என ஜானகி அம்மாள் தரப்பு சொன்னது. கட்சி பிளவுபட்டது.

ஜெயலலிதா: ஜெ. இறந்த பிறகு ‘சசிகலாதான் தலைமையேற்க வேண்டும்’ என நிர்வாகிகள் எல்லாம் சொல்லி வைத்ததுபோல சொல்ல ஆரம்பித்தார்கள். 24-வது நாள் அவசர(!) பொதுக்குழு கூட்டி, சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்தார்கள்.

ப்போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்திருக்கும். அண்ணா, எம்.ஜி.ஆர் உடல்நிலை குன்றியபோதும், மறைந்தபோதும் காட்டப்பட்ட வெளிப்படைத் தன்மையும், அரசியல் நிதானமும், ஜெயலலிதா மரணத்தில் மயான அமைதி பெற்றிருந்தது. வெளிநாட்டுச் சிகிச்சை மறுக்கப்பட்டதும், போட்டோகூட வெளியிடப்படாததும், உறவினர்களைக்கூட அனுமதிக்காமல் ஜெயலலிதாவின் உடலைச்சுற்றி மன்னார்குடி உறவுகள் அரண் அமைத்ததும், பொதுமக்கள் அஞ்சலிக்கு முழுதாக ஒருநாளைக்கூட தராததும் ஏன்? எதைப் பிடிக்க(!) இவ்வளவு அவசரம்?

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பதவியேற்ற ஓ.பன்னீசெல்வம், ஜெயலலிதாவின் மரண விநாடிகளில் காத்திருக்காமல் கவர்னர் மாளிகைக்கு ஓடினாரே, ஏன்? தலைவி இறந்த துக்கத்தில் இருக்கும்போது புது அமைச்சரவைப் பதவியேற்பு கண்களை உறுத்தாதா?

குடியரசு, சுதந்திர தினக் கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்த, அதற்கு முன்பு ஒத்திகைகள் நடக்கும். போக்குவரத்து நிறுத்தப்படும். காவல் துறையினர் அணிவகுப்பு நடத்துவார்கள். அலங்கார ஊர்திகள் எப்படிப் போக வேண்டும், கவர்னர் மற்றும் முதல்வர் கார்கள் எந்த திசையில் இருந்து வரும், யார் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என பக்காவாக ஒத்திகையில் பாடம் எடுப்பார்கள். இப்படிப் பலநாள் ஒத்திகைக்குப் பிறகு நடக்கும் விழாவில் தேசியக் கொடி கயிற்றில் சுற்றிக்கொண்டு ஒழுங்காகப் பறக்காது. பூ தூவும் ஹெலிகாப்டர் உரிய நேரத்துக்கு வராமல் போகும். மைக் மக்கார் செய்யும். ஆனால், இப்படி எந்த ஒத்திகையும் பார்க்காமலே கச்சிதமாக நடந்து முடிந்திருக்கிறது சசிகலா மணிமுடி தரிப்பு வைபவம்.

அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், ‘கழகத்தின் பொதுச் செயலாளராக தலைமையேற்க தலைமகளே வா’ என்ற பேனர்கள், ‘சின்னம்மா தான் தலைமையேற்க வேண்டும்’ என கிளைக் கழகம் வரையில் தீர்மானம், போயஸ் கார்டனுக்குள் வந்து சசிகலாவிடம் கெஞ்சல்கள், பொதுக்குழு கூட்டி அங்கே தீர்மானம், தலைமைக் கழகத்தில் பொறுப்பேற்பு, பக்காவான உரை என அச்சுபிசகாமல் நடத்தப்பட்ட நாடகத்துக்கு ஒத்திகையே நடக்கவில்லை. இது ஆஸ்காருக்கு நேர்ந்த அவமானம்.  

p18e.jpg

1969 ஜனவரி 14-ம் தேதி வெளியான ‘காஞ்சி‘ பொங்கல் மலரில் தன்னுடைய உடல் நலிவடைந்திருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொன்னார் அண்ணா. ‘தம்பிகளுக்கு’ எழுதிய கடிதத்தில் உண்மையைப் போட்டு உடைத்தார். ‘எந்தப் பணி மூலம் எப்போதும் உன் இதயத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்து அது குறித்து நான் அளவற்ற அக மகிழ்ச்சி பெற முடிந்ததோ, அந்தப் பணியினை முன்புபோல செய்ய முடியாதவனாக்கப்பட்டு, முடியவில்லையே என்ற ஏக்கத்தால் துக்கப்பட்டுச் சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டுக் கிடக்கிறேன் என்பதனை அறிவாய். கடந்த ஓராண்டாகவே இந்தக் கேள்வி கிளம்பியபடி இருந்தது. அமெரிக்கா சென்று அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய அளவுக்கு உடல்நலம் பாழ்பட்டது’ என எழுதியிருந்தார் அண்ணா.

அந்த அண்ணாவின் பெயரைக் கொண்ட அண்ணா தி.மு.க-வின் தலைவிக்கு என்ன ஆச்சு என்கிற கேள்விக்கு விடையே தெரியவில்லை. ‘‘தந்தை பெரியாரின் தன்மானம்! பேரறிஞர் அண்ணாவின் இனமானம்! எம்.ஜி.ஆரின் பொன்மனம்!’’ என ரைமிங் பேசிய சசிகலா, அண்ணா தன் உடல்நிலையை வெளிப்படையாகச் சொன்னதுபோல, எம்.ஜி.ஆர் போட்டோவை வெளியிட்டது போல, ‘ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது’ என்பதை ஏன் சொல்லவில்லை?

அண்ணா இறந்த 6-வது நாள். அவர் புதைக்கப்பட்ட அதே கடற்கரையில் 1969 பிப்ரவரி 8-ம் தேதி இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி, பெரியார், ராஜாஜி, கவர்னர் உஜ்ஜல் சிங்,

எம்.ஜி.ஆர், ஆந்திர முதல்வர் பிரம்மானந்த ரெட்டி என இந்திய அரசியல்வாதிகள் பங்கேற்று புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம்கூட நடத்த முடியாமல் சசிகலாவுக்கு மகுடம் சூட்டு விழாவை நடத்துகிற வித்தைக்குப் பெயர்தானே பதவி வெறி! நீதிமன்றத் தீர்ப்பால் ஜெயலலிதா முதல்வர் பதவி இழந்து கார்டனில் முடங்கிக் கிடந்தபோது, அரசு திட்டங்களை அவர் வந்து தொடங்கி வைக்கக் காத்திருந்தார்கள். ஏன், கட்சியின் பொதுக்குழுவையே அந்த ஆண்டு கூட்டவில்லை. ஆனால், இறந்தபிறகு அவசரப் பொதுக்குழு கூட்டியது, கிரீடத்தை இடம் மாற்றி வைக்கத்தானே! சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 2014 செப்டம்பர்  27-ம் தேதியே ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. அந்தத் தொகுதி காலியானது என்பதை நவம்பர் 12-ம் தேதி அறிவித்தது சட்டமன்றம். அதாவது 47 நாட்கள் கழித்து அரசாணை வெளியிட்டார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதி காலியானது என்கிற அறிவிப்பு 18-வது நாளிலேயே வெளியாகிவிட்டது. ‘இடைத் தேர்தல் உடனே நடக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட இந்த ஏற்பாடு யாருக்காக?

கழுத்து வரை மறைக்கும் ஜாக்கெட் தைக்க காலமும் கூந்தலை முடித்து அதற்கு வலை பின்ன நேரமும் இருக்கிறது. ஜெயலலிதா போல ஸ்டைல் பண்ண முடிந்த உங்களின் அரசியல், தமிழகத்தில் இதுவரை எழுதப்படாத புதிய அத்தியாயம்.

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news