தமிழகச் செய்திகள்

எதிர்ப்புக்களைத் தாண்டி முதலமைச்சராவாரா சசிகலா?

Sun, 08/01/2017 - 11:31
எதிர்ப்புக்களைத் தாண்டி முதலமைச்சராவாரா சசிகலா?
Tamilagam-9a6e8ee60335f0862d7a68d54c619620079742d7.jpg

 

சசி­கலா அ.தி.மு.க. வில் பொதுச்­செ­ய­லா­ள­ரா­கி­யுள்ள நிலையில் அடுத்த கட்­ட­மாக தமி­ழக முத­ல­மைச்­ச­ராக வேண்­டு­மென்று கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்கள், அமைச்­சர்கள் மற்றும் மாவட்ட நிர்­வா­கிகள் போன்றோர் குரல் கொடுத்து வரு­கின்­றனர்.

இதன் உச்ச கட்­ட­மாக அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செய­லா­ளரும், பாரா­ளு­மன்ற மக்­க­ளவை துணை சபா­நா­ய­க­ரு­மான தம்­பி­துரை 'கட்சி தலை­மையும் ஆட்­சி­ய­தி­கா­ரமும் ஒரு­வ­ரி­டமே இருக்க வேண்டும். இரண்டும் தனித்­த­னி­யாக இரு­வ­ரி­டமும் இருப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல. அந்த வகையில் சசி­கலா முதல்­வ­ரா­வது கட்­சிக்கும், தமி­ழ­கத்­துக்கும் இன்­றி­ய­மை­யா­தது' என்று அறிக்கை விடுத்­தி­ருந்தார். இது கட்சி தொண்­டர்­க­ளி­டையே அதி­ருப்­தி­யையும் கோபத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யது.

ஓ.பன்­னீர்­செல்­வத்தை முத­ல­மைச்சர் பத­வி­யி­லி­ருந்து அகற்­றி­விட்டு, அந்த இடத்­திற்கு சசி­கலா அமர்த்­தப்­பட வேண்­டு­மென்­பதே தம்­பி­து­ரையின் கோரிக்­கை­யாக இருக்­கி­றது. இந்த தம்­பி­து­ரையும் தமி­ழக முத­ல­மைச்­ச­ராக வரு­வ­தற்­கான முயற்­சியில் ஈடு­பட்டு தோற்­றுப்­போ­னவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதா­வது, ஜெய­ல­லிதா கால­மான பின்னர் புதிய முத­ல­மைச்­சரை தெரிவு செய்­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­போது சசி­க­லாவின் ஆத­ர­வா­ளர்­க­ளான தம்­பி­துரை மற்றும் எடப்­பாடி பழ­னிச்­சாமி ஆகி­யோரின் பெயர்­களும் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டன.

ஆனால் பா.ஜ.க.வினர் அவர்­களை ஒதுக்­கி­விட்டு தமக்கு சாத­க­மா­ன­வ­ரான ஓ.பன்­னீர்­செல்­வத்தை தமி­ழக முதல்­வ­ராக்­கினர். இதனால் பன்­னீர்­செல்­வத்தின் மீது தம்­பி­துரை கடு­மை­யான கோபத்­துடன் உள்ளார். இதன் கார­ண­மா­கவே பன்­னீர்­செல்­வத்தை முத­ல­மைச்சர் பத­வி­யி­லி­ருந்து அகற்ற வேண்டும் என்ற முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்றார். இவ­ருடன் இணைந்து அமைச்சர் உத­ய­குமார், எடப்­பாடி பழ­னிச்­சாமி, முன்னாள் அமைச்சர் வளர்­மதி, அ.தி.மு.க. பேச்­சாளர் பொன்­னையன் உள்­ளிட்ட பலரும் பகி­ரங்­க­மாக சசி­க­லாவை ஆத­ரித்து பேசு­வதும் முதல்வர் பன்­னீர்­செல்­வத்தை தூற்­று­வ­து­மாக உள்­ளனர்.

பொது­வாக அ.தி.மு.க. அமைச்­சர்­களும் எம்.எல்.ஏ.க்களும் தங்­க­ளது பத­வி­களை பாது­காத்து கொள்­வ­தற்கும் பணத்தை தேடு­வ­தற்கும் சசி­க­லா­வுக்கு ஆத­ர­வாக பேசி­வரும் அதே­வேளை, அடி­மட்டத் தொண்­டர்கள் சசி­க­லா­வுக்கு தமது முழு­மை­யான எதிப்­பி­னையும் வெளி­யிட்டு வரு­கின்­றனர். பல இடங்­களில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றுள்­ளன. தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கின்­றன.

பல முக்­கிய பிர­மு­கர்கள் அ.தி.மு.கவை விட்டு விலகி மாற்றுக் கட்­சி­களில் இணைந்து வரு­கின்­றனர். அதிலும் எதிர்க்­கட்­சி­யான தி.மு.க. வில் சேர்­வதில் அதிக ஆர்வம் கொண்­டுள்­ளனர்.

இத­னி­டையே, ஜெய­ல­லி­தாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவை அ.தி.மு.க வின் பொதுச்­செ­ய­லா­ள­ராக்க வேண்­டு­மென்று ஒரு பகு­தி­யினர் கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர். 'ஜெ.தீபா பேரவை' என்ற அமைப்பை ஏற்­ப­டுத்தி அவர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர். இது சசி­கலா அமைப்­புக்கு தலை­யி­டி­யாக அமைந்­துள்­ளது.

இது இவ்­வா­றி­ருக்க, அ.தி.மு.க.வுக்குள் ஜாதி ரீதி­யான பிள­வுகள் உச்­சக்­கட்­டத்தை அடைந்­துள்­ளன. ஜெய­ல­லிதா உயி­ருடன் இருந்­த­வரை இந்த பிரச்­சினை எழ­வில்லை. அவர் எல்லா இன மக்­க­ளையும் அர­வ­ணைத்­துக்­கொண்டு அமைச்­ச­ர­வை­யிலும், நிர்­வாக செயற்­பா­டு­க­ளிலும் பத­வி­களை வழங்­கினார். தவிர, அவரை எதிர்த்துப் பேசு­வ­தற்கு எவ­ருக்கும் தைரியம் இல்­லாத நிலையில் அடங்­கிப்­போ­யினர்.

சசி­கலா பொதுச்­செ­ய­லாளர் பத­வியை ஏற்ற பின்னர் சில குறிப்­பிட்ட சமூ­கத்­தினர் மட்டும் முக்­கிய அமைச்சுப் பொறுப்­புக்­க­ளையும் நிர்­வா­கத்­தையும் மாவட்ட நிர்­வாகப் பொறுப்­புக்­க­ளிலும் நிய­மிக்­கப்­ப­டு­வ­தாக பகி­ரங்க புகார் எழுந்­துள்­ளது. இது பெரும் பிளவை ஏற்­ப­டுத்­தி­வி­டுமோ என்ற அச்­சமும் எழுந்­துள்­ளது.

ஆளும் கட்­சி­யான அ.தி.மு.க.வுக்கு சட்­டப்­பே­ர­வையில் 135 எம்.எல்.ஏ.க்கள் உள்­ளனர். ஜெய­ல­லிதா இருந்­த­போது அந்­தந்த சமு­தாய எம்.எல்.ஏ.க்களின் எண்­ணிக்­கைக்கு ஏற்­ற­வாறு அமைச்­ச­ர­வை­யிலும் முக்­கிய பத­வி­க­ளிலும் இடம் கொடுத்தார். ஒரு அமைச்சர் ஏதோ கார­ணத்­துக்­காக நீக்­கப்­பட்டால், அவ­ருக்கு பதி­லாக அதே சமு­தா­யத்தைச் சேர்ந்த வேறொ­ரு­வரை நிய­மனம் செய்தார். இதனால் பிரச்­சி­னைகள் எழ­வில்லை.

தற்­போ­தைய முத­ல­மைச்சர் ஓ.பன்­னீர்­செல்வம் மற்றும் பொதுச்­செ­ய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சசி­கலா ஆகிய இரு­வரும் ஒரே சமு­தா­யத்தைச் சேர்ந்­த­வர்கள். சில­வேளை சசி­க­லாவே முத­ல­மைச்­ச­ராக தெரிவு செய்­யப்­பட்டால் பன்­னீர்­செல்வம் மீண்டும் அமைச்­ச­ராக்­கப்­ப­டுவார். இதன் கார­ண­மாக அமைச்­ச­ர­வையில் அந்த சமூக அமைச்­சர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும். அந்த வகையில் 8 பேர் அமைச்­சர்­க­ளாக இருப்பர்.

இன்­னொரு சமு­தா­யத்தைச் சேர்ந்த 5 அமைச்­சர்கள் மற்றும் வேறொரு சமு­தா­யத்தைச் சேர்ந்த 5 அமைச்­சர்கள் உள்­ளனர். ஆனால் அதி­கப்­ப­டி­யான எம்.எல்.ஏ.க்கள் பிற்­ப­டுத்­தப்­பட்ட சமு­தா­யத்­தி­லேயே (32 பேர்) உள்­ளனர். ஆனால் இவர்­க­ளது சமு­தா­யத்தைச் சேர்ந்த மூவர் மட்­டுமே அமைச்­சர்­க­ளாக உள்­ளனர். அத்­துடன் இவர்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வ­மற்ற அமைச்­சுக்­களே வழங்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நிலையில் அமைச்­ச­ர­வை­யிலும் ஏனைய பொறுப்­புக்­க­ளிலும் தமது சமூ­கத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கூடுதல் பிர­தி­நி­தித்­து­வமும் முக்­கிய அமைச்சுப் பொறுப்­புக்­களும் வழங்க வேண்டும் என்று பிற்­ப­டுத்­தப்­பட்ட சமூ­கத்­தினர் போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளனர். இது பற்றி அந்த சமூ­கத்தைச் சேர்ந்த ஒருவர் கருத்துத் தெரி­விக்­கையில்,

ஜெய­ல­லிதா உயி­ருடன் இருக்கும் வரை எந்த பிரச்­சி­னையும் இல்லை. தற்­போது சசி­கலா பொது செய­லா­ள­ராக பதவி ஏற்­ற­வுடன் அவ­ரது சமு­தா­யத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கே முக்­கி­யத்­துவம் கொடுக்­கிறார். முக்­கிய பத­விகள் அனைத்தும் அவர்­க­ளி­டமே உள்­ளன. அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்­டுள்ள எமது சமு­தா­யத்­திற்கு அமைச்­ச­ர­வையில் உரிய பிர­தி­நி­தித்­துவம் இல்­லாமல் இருக்­கிறோம். எனவே, எமக்கும் போதிய பிர­தி­நி­தித்­துவம் வழங்க வேண்­டு­மென்று கோரிக்கை விடுத்து வரு­வ­துடன், அவ்­வாறு வழங்­கா­விட்டால் அதற்கு எதி­ராக போரா­டு­வ­தற்கு தயங்­க­மாட்டோம் என்றார்.

இதே­போன்று பல பிரச்­சி­னைகள் அ.தி.மு.க.வுக்குள் தற்­போது ஏற்­பட்­டுள்­ள­துடன் சசிக்­க­லா­வுக்கு சவால் விடுக்கும் வகை­யிலும் தோன்­றி­யுள்­ளன. இதற்கு தீர்வு காணப்­ப­டா­விட்டால் ஒரு தொகுதி எம்.எல்.ஏ.க்கள் கட்­சி­யை­விட்டு விலகும் நிலை ஏற்­ப­டு­ வ­துடன்எதிர்­வரும் தேர்­தல்­க­ளிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்று சமூக ஆய்­வா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.  

இது இவ்­வா­றி­ருக்க, சசி­க­லாவை முதல்வர் பத­வியில் அமர்த்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் வேக­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதில் கட்சித் தொண்­டர்கள் பற்றி எவரும் கவ­லைப்­ப­டு­வ­தாக இல்லை. மிகு­தி­யாக இருக்கும் 4 ½ வரு­ட­கால ஆட்­சியை கொண்டு செல்ல வேண்டும். முடிந்­த­வரை 'உழைத்துக் கொள்ள' வேண்டும் என்ற எண்­ணத்­து­ட­னேயே அ.தி.மு.க.வினர் இருக்­கின்­றனர். தேர்­த­லுக்­காக செலவு செய்த பணத்தை மீட்­டு­விட வேண்டும் என்­பதே அவர்­களின் கணக்கு. எனவே யார் ஆட்­சிக்கு வந்­தாலும் அவ­ரது காலில் விழுந்து ஆட்­சியைத் தக்­க­வைக்க வேண்­டு­மென்று விரும்­பு­கின்­றனர். அதனால் கட்சித் தொண்­டர்­களைப் பற்றி அவர்கள் கவ­லைப்­ப­ட­வில்லை. கட்சித் தொண்­டர்­களோ தமது தலை­வி­யான ஜெய­ல­லி­தாவின் இடத்தில் அவ­ரது உத­வி­யா­ள­ரான கட்­சிக்­காக எந்­த­வித உழைப்­பையும் வழங்­காத சசி­கலா வரு­வதை சிறிதும் விரும்­ப­வில்லை. மறு­புறம் அவர்கள் தற்­போ­தைய முதல்வர் ஓ.பன்­னீர்­செல்­வமே தொடர்ந்து முத­ல­மைச்­ச­ராக இருந்து விட்டுப் போகட்டும் என்று நினைக்­கின்­றனர்.

அ.தி.மு.க தொண்­டர்கள் சசி­கலா கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரா­னதை விரும்­பு­கின்­ற­னரா? அத்­துடன் அவர்கள் முத­ல­மைச்­ச­ரா­வதை வர­வேற்­கின்­ற­னரா? என்­பது பற்றி தமி­ழ­கத்தின் பல நிறு­வ­னங்கள், பத்­தி­ரி­கைகள், இணைய செய்­தித்­த­ளங்கள் கருத்து கணிப்­புக்­களை நடத்தி வரு­கின்­றன.

அவ்­வா­றான கருத்துக் கணிப்­புக்கள் அனைத்­துமே சசி­க­லா­வுக்கு எதி­ரான முடி­வு­க­ளையே வெளி­யிட்­டுள்­ளன. ஏறக்­கு­றைய 70 – 75 வீத­மான தொண்­டர்கள் மற்றும் பொது­மக்கள் சசி­க­லாவை விரும்­பா­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றனர். ஆனால் அவர் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­று­வந்தால் அவரை ஏற்றுக் கொள்ள முடி­யு­மென்று ஒரு­சாரார் தெரி­வித்­துள்­ளனர்.

சசி­கலா முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்று அதனைத் தொட­ர­வேண்­டு­மென்றால் அவர் ஏதா­வது ஒரு சட்டப் பேரவைத் தொகு­தியில் (06 மாதங்­க­ளுக்குள்) போட்­டி­யிட்டு வெற்­றிப்­பெற வேண்டும். ஜெய­ல­லிதா சென்னை ஆர்.கே.நகர் தொகு­தியில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றவர். அவ­ரது மறைவின் பின் அந்தத் தொகுதி வெற்­றி­ட­மாக இருப்­ப­துடன் ஆறு­மாத காலத்­திற்குள் அங்கு தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மென்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகு­தியில் சசி­கலா போட்­டு­யி­டு­வாரா? என்ற கேள்வி எழுந்­துள்­ளது. ஆனால் அந்தத் தொகுதி சசி­க­லா­வுக்கு பெரும் சவால்­மிக்க தொகு­தி­யாக அமை­வ­துடன் அவர் நிச்­ச­ய­மாக தோல்­வியை சந்­திப்பார் என்று கூறப்­ப­டு­கி­றது. எனவே அந்­தத்­தொ­கு­தியில் அவர் போட்­டி­யி­ட­மாட்­டா­ரென நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

தனக்கு பாது­காப்­பான தமது சமு­தாய மக்கள் அதிக எண்­ணிக்கை உள்ள பெரி­ய­குளம் தொகு­தியில் அவர் போட்­டி­யி­டக்­கூ­டு­மென தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. தற்­போது பெரி­ய­குளம் தொகு­தியில் எம்.எல்.ஏ.வாக இருப்­பவர் அமைச்சர் உத­ய­குமார். சசி­க­லாவின் தீவிர ஆத­ர­வா­ள­ரான உத­ய­குமார் தமது எம்.எல்.ஏ. பத­வியை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு அந்தத் தொகு­தியை சசி­க­லா­வுக்கு விட்­டுக்­கொ­டுக்க தயா­ராக இருப்­ப­தா­கவும் அறி­வித்­துள்ளார். எனவே பெரி­ய­குளம் தொகு­தியில் சசி­கலா போட்­டி­யி­டு­வது உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றெ­னினும் சகி­க­லாவை முத­ல­மைச்­ச­ராக்­கு­வ­தை­விட தமி­ழக ஆட்­சியைக் கலைத்­து­விட்டு சட்­டப்­பே­ர­வைக்­கான பொதுத்­தேர்­தலை நடத்­து­வதே சிறந்­தது என்று பெரும்­பா­லான தமி­ழக மக்கள் கரு­து­வ­தாக ஆய்வு ஒன்று தெரி­விக்­கின்­றது. அதன் மூலம் தமி­ழ­கத்­திற்கு சிறந்த, நேர்­மை­யான, ஊழ­லற்ற, நிரந்­தர ஆட்­சியைத் தரக்­கூ­டிய அரசு ஒன்று அமைய வாய்ப்பு ஏற்­படும். அத்­துடன் சசி­கலா தலை­மை­யி­லான அ.தி.மு.க.வுக்­கான மக்கள் ஆத­ர­வையும் தெரிந்­து­கொள்ள முடியும் என்று அவர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

ஆனால் சசி­கலா தரப்­பினர் எத­னையும் பற்றி கவ­லைப்­ப­டாமல் முதல்வர் பத­வியைக் கைப்­பற்­று­வதில் குறி­யாக இருக்­கின்­றனர். எப்­ப­டியும் இந்த வாரத்தில் சசி­கலா முத­ல­மைச்­ச­ராகப் பத­வி­யேற்­கக்­கூ­டு­மென தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. அதே­வேளை, தற்­போ­தைய முதல்வர் ஓ.பன்­னீர்­செல்­வத்­தி­ட­மி­ருந்து பதவி வில­க­ளுக்­கான கடி­தத்தை சசி­கலா தரப்­பினர் ஏற்­க­னவே வாங்­கி­வைத்­துள்­ள­தா­கவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, புதிய அமைச்சரவைக்கான பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகின்றதாம். சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரி மகன் தினகரன் ஆகிய இருவரும் இணைந்து அமைச்சர்கள் பட்டியலை தயார் செய்து வரும் நிலையில் அதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவமற்ற பதவியே வழங்கப்படுமாம்.

இது இவ்வாறிருக்க, தி.மு.க.வின் ‘செயல்தலைவராக’ அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதியின் மகனும் கட்சியின் பொருளாளரும் இளைஞரணித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருக்கிறார். வயோதிபம் காரணமாக செயற்படமுடியாத நிலையிலிருக்கும் மு.கருணாநிதி தொடர்ந்தும் கட்சியின் தலைவராக இருப்பார். எனினும் கட்சியின் செயல் தலைவராக கருணாநிதியின் அதிகாரங்களுக்கு இணையான அதிகாரங்களைக் கொண்டவராக மு.க.ஸ்டாலின் இருப்பார்.

தி.மு.க.பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையின் கூடிய கட்சியின் பொதுக்குழுவின் தீர்மானத்துக்கமையவே செயல் தலைவராக ஸ்டாலினின் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டாலினின் நியமனம் அந்தக் கட்சித்தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே வரவேற்பினையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவரது குடும்ப உறுப்பினர்களிடையே (மு.க.அழகிரி, மு.க.கனிமொழி) அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Categories: Tamilnadu-news

நினைவு தவறிய கருணாநிதி... நிலை நிறுத்திய ஸ்டாலின்!

Sun, 08/01/2017 - 09:29
நினைவு தவறிய கருணாநிதி... நிலை நிறுத்திய ஸ்டாலின்!

 

டோனி பற்றிய பெட்டிச் செய்தியை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார்.

‘‘உம்மிடமிருந்து இப்படி ஒரு செய்தியை எதிர்பார்க்கவில்லை’’ என்றோம்.

p42d.jpg‘‘அதில் ஒளிந்திருக்கும் அரசியலை ஜூ.வி வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்’’ என்று சொல்லி அமைதியானவரிடம் முதல் கேள்வியைப் போட்டோம்.

‘‘செயல் தலைவர் ஆகிவிட்டாரே ஸ்டாலின்?”

‘‘அது என்ன செயல் தலைவர்? தலைவர் ஆகிவிட்டார் என்றே சொல்லும். ‘தலைவர் பதவி விலகினாலோ, நீண்ட நாட்களுக்குக் கழகப் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டாலோ கழகப் பொதுக்குழு, செயல் தலைவர் ஒருவரை நியமிக்கலாம். சட்ட திட்டங்களில் தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்கள், பணிகளையும் செயல் தலைவர் ஆற்றுவார்’ என்று புதிய விதியைச் சேர்த்துவிட்டார்கள். இதன்படி பார்த்தால் தலைவரின் அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கும் உண்டு. அதனால்தான், ‘ஸ்டாலின் செயல் தலைவர் ஆகவில்லை, தலைவராகவே ஆகிவிட்டார்’ என்று சொன்னேன்.”

‘‘கருணாநிதி வரவில்லையே?”

‘‘பொதுக்குழுவுக்கு வரும் நிலைமையில் கருணாநிதியின் உடல்நிலை இல்லை. அவருக்கு நினைவு தவறிய நிலைதான். பெரும்பாலும் யாரையும் அடையாளம் தெரியவில்லை. பேச்சும் இல்லை. வயிற்றில் போட்டுள்ள குழாய் மூலமாகத் திரவ உணவு செலுத்தப்படுகிறது. படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறார். முதுமையினால் ஏற்பட்ட பாதிப்பு என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். முன்பு உடலில் இருந்த கொப்புளங்கள் இப்போது இல்லை. திடீர் மூச்சுத் திணறலுக்குக் காரணமான சளி அடைப்பு நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், தன்னைச் சுற்றிலும் நடப்பதையெல்லாம் அறியும் நிலைமையில் அவர் இல்லை. அந்த சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். அதனால்தான் நாளிதழ்களைப் படித்துக் காண்பிப்பது, டி.வி-யில் பாடல்களை ஓடவிடுவது என்று அவருக்கு நினைவூட்ட சில காரியங்களைச் செய்து வருகிறார்கள்.

கருணாநிதியை மருத்துவமனையில் வைத்துக்கொண்டு செயல் தலைவர் ஆகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்டாலின். அதனால்தான் வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டு, தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.”

‘‘ஏனாம் இந்த அவசரம்?”

p42dd.jpg

‘‘கருணாநிதிக்கு ஏதாவது ஆகி, அந்த நேரத்தில் குடும்பத்திலும் கட்சியிலும் கொந்தளிப்பு உருவாகிவிடக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார். இன்றைய நிலையில் அழகிரி பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றாலும் சிறு சலசலப்புகூட இருக்கக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதனால்தான் இந்த அவசரமாம். பொதுவாக, பொதுக்குழு என்றால் அனைவரையும் பேசவிட்டு கடைசியில் கருணாநிதி கருத்துச் சொல்வார். அப்படி எந்த நிகழ்வும் வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே ஸ்டாலின் சொல்லிவிட்டார். ‘ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தலைவரிடம் ஆசி வாங்கப் போய்விட வேண்டும்’ என்று முதலிலேயே சொல்லிவிட்டார். ‘மகிழ்ச்சியோடு இந்தப் பதவியை ஏற்கவில்லை’ என்றும் காட்ட நினைத்தார் ஸ்டாலின். அவர் பேச்சும் அப்படித்தான் இருந்தது. வழக்கமாக, ஸ்டாலின் பேசி முடித்ததும் அவருக்குக் கைகொடுத்து சால்வைகள் வழங்குவார்கள். இப்போது அவர் செயல் தலைவர் ஆனபோதும் யாரும் சால்வை கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். விட்டால் மொத்தக் கூட்டமும் சால்வைகளைக் குவித்திருக்கும். சோகம் தாங்கிய முகத்துடன் உடனடியாக கோபாலபுரம் வந்துவிட்டார் ஸ்டாலின். அவரோடு அன்பழகன், துரைமுருகன் ஆகியோரும் வந்தார்கள். கருணாநிதி தோளில் மஞ்சள் சால்வை போர்த்தி உட்கார வைத்து இருந்தார்கள். அவரிடம் ஆசி வாங்குவது மாதிரி புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது.’’

‘‘நீர் பயன்படுத்திய வார்த்தைகளைப் பார்க்கும்போது என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது!”

‘‘புரிந்தால் சரி! போட்டோ எடுத்துக்கொண்டதும் தனது செனடாப் ரோடு வீட்டுக்கு ஸ்டாலின் போனார். அங்கு அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். மருமகன் சபரீசன், தனது மாமனாரைக் கட்டி அணைத்து வரவேற்றாராம்.”

‘‘இன்னும் சிலர் தங்களுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று நினைத்தார்களே?”

‘‘அவை அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டார் ஸ்டாலின். பொருளாளர் பதவியைக் கைப்பற்ற கே.என்.நேருவும் எ.வ.வேலுவும் முயன்று வருகிறார்கள். ஒருவேளை அன்பழகன் பதவி விலகினால் பொதுச்செயலாளர் பதவியை அடைய துரைமுருகன் முயல்கிறார். இந்த ஆட்டத்தை சில மாதங்கள் கழித்து ஆடலாம் என்று நினைக்கிறார் ஸ்டாலின்!” என்ற கழுகாரின் கவனத்தை போயஸ் கார்டன் பக்கம் திருப்பினோம்.

‘‘அண்ணி, அத்தை, அத்தாச்சி, சித்தி போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் கூட்டம், போயஸ் கார்டனிலும் தலைமைச்செயலகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதாமே?’’

‘‘வராதா பின்னே? பொதுச் செயலாளர் ஆனதும் சசிகலா தனது உறவுக்காரர்கள், குடும்பத்தினரின் தலையில் குட்டு வைத்து எச்சரிக்கும் வகையில் பேசுவார் என்றே கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் எதிர்பார்த்தனர். ஆனால், சசிகலா அப்படி ஏதும் பேசவில்லை. அதனால் ஏற்பட்ட தைரியம் உறவுமுறைகளைச் சொல்லி அதிகாரம் செய்யும் பவர் ஏஜென்ட்டுகள் பெருகிவிட்டனர்.’’

‘‘ம்ம்ம்... சசிகலாவின் கவனத்துக்கு இந்த விஷயங்கள் போனதா?’’

‘‘தெரியவில்லை!’’

‘‘நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஒருபுறம்... அமைச்சர்கள் மறுபுறம்... சசிகலாவுக்கு ஐஸ் வைக்கும் வகையில் ‘விரைவில் சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசித் திரிகிறார்களே?’’

‘‘ஆனால் அவர்களில் யாருக்கும் பாராட்டுப் பத்திரம் கிடைக்கவில்லை.  முதலில், தம்பிதுரையை வரச்சொல்லி, ஸ்பெஷல் அர்ச்சனை நடத்தினாராம் சசிகலா. ‘நான் முதல்வர் ஆக வேண்டுமென்று  உங்களை அஃபிஷியல் லெட்டர் பேடில் அறிக்கை விடச் சொன்னேனா? ஆனால், நான் சொல்லி நீங்கள் அப்படிச் செய்ததாக ஊரே பேசுகிறது. என்னை தர்மசங்கடத்தில் தள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தீர்களா? யாராவது சொல்லி நீங்கள் அப்படிச் செய்தீர்களா?’ என்று சத்தம் போட... தம்பிதுரை வாயடைத்துப்போய் நின்றாராம். அவரைப்போலவே, ‘சசிகலா முதல்வர் ஆகவேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசிய அமைச்சர்களுக்கும் தனித்தனிக் கச்சேரி நடந்ததாம். ‘நாம சரியாதானே பேசினோம்’ என்ற குழப்பத்தோடு அவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள்!”

‘‘அது இருக்கட்டும்... எப்போது பதவி ஏற்பார் சசிகலா?”

‘‘ஜனவரி 12, 14 ஆகிய தேதிகளைக் குறித்துக் கொடுத்துள்ளார்களாம். மார்கழியாக இருந்தாலும் ஜனவரி 12 பௌர்ணமி தினம், 14-ம் தேதி தை பிறக்கிறது. சலசலப்புகள், முணுமுணுப்புகள்கூட பொங்கல் கொண்டாட்டத்தில் அமுங்கிப் போகும் எனக் கணக்கு போடுகிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால், அதிகபட்சம் 18-ம் தேதிக்குள் பதவி ஏற்பு முடிந்துவிடுமாம்!”

p42c.jpg

‘‘ஓ!’’

‘‘இப்போது இளவரசியை ‘நம்பர் டூ’ என்று கார்டனில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். சசிகலாவுக்கு சில அன்புக்கட்டளைகள் போட்டுவருகிறாராம் இளவரசி. ‘முன்பைப்போல வீட்டிலிருக்கும் செக்யூரிட்டிகள், சமையல்
காரர்கள், உதவியாளர்களிடம் சகஜமாகப் பேச வேண்டாம். முதல் மாடி அறையிலேயே இருக்கவேண்டும். அப்போதுதான், மற்றவர்களிடம் சசிகலாவின் இமேஜ் கூடும்” என்று நினைக்கிறாராம் இளவரசி.’’

‘‘இதை சசிகலா ஏற்றுக்கொள்வாரா?’’

‘‘ஏற்றுக்கொள்ளாமலா இருப்பார்! கார்டனில் இரண்டு டெய்லர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்துவிட்டு, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாதான் சசிகலாவின் புது காஸ்ட்யூம்களை வடிவமைத்தாராம். ஜெயலலிதா வழக்கமாகத் தலையில் கொண்டை போட்டுக்கொள்வார். அதேபோல், சசிகலாவின் தலையில் கொண்டை போட வைத்தது கிருஷ்ணப்ரியா என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தில். சசிகலா, அ.தி.மு.க பொதுச்செயலாளராக டிசம்பர் 31-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, ஜெயலலிதா போலவே அவர் மாறி இருந்தார்.’’

‘‘திவாகரன் வீடும் மகாதேவன் வீடும் பரபரப்பாக இயங்குவதாகச் சொல்கிறார்களே?’’

‘‘ஆம்! புத்தாண்டு காலை மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகளும், அர்ச்சனைகளும் திவாகரன் பெயரில் செய்யப்பட்டன. அவரின் ஆதரவாளராக மாறுவதற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தீவிர முயற்சி செய்து வருகிறார். விசுவாசத்தைக் காட்ட காலையிலேயே திவாகரனை சந்திக்க வந்த அமைச்சர் ஆர்.காமராஜ் வலது பக்கத்தில் நின்றுகொண்டார். சிறிது நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் இடது பக்கம் நின்றுகொண்டார். எஸ்.காமராஜுடன் டிபன் சாப்பிட்ட திவாகரன், ஆர்.காமராஜுடன் மதிய உணவை முடித்திருக்கிறார். இருவரில் யாரை இனி திவாகரன் கைதூக்கி விடுவார் என்பதுதான் இப்போது மன்னார்குடி சஸ்பென்ஸ்! அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோரும் திவாகரனை  சந்தித்து வாழ்த்து பெற்றுச் சென்றிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் முதல்முறையாக திவாகரனை வந்து சந்தித்திருக்கிறார். ‘காலில் விழச் சென்றார்’ என்றும், ‘பதற்றத்தில் தவறி கீழே விழுந்துவிட்டார்’ என்றும் மாறி மாறி சொல்கிறார்கள்.

தஞ்சையில் உள்ள மகாதேவன் வீடும் தடபுடலாக இருக்கிறது. அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்.பி பரசுராமன் எனப் பலரும் புத்தாண்டில் வந்து வாழ்த்து வாங்கிச் சென்றுள்ளார்கள். எல்லோருக்கும் அ.தி.மு.க கரைபோட்ட வேட்டி-சட்டையுடன், இனிப்பும் வழங்கியிருக்கிறார் மகாதேவன்.”

‘‘சரி, சேகர் ரெட்டி விவகாரம் எப்படி இருக்கிறது?’’

‘‘சேகர் ரெட்டி தலைமையில் சர்வேயர் ரத்னம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், ஆடிட்டர் பிரேம் ஆகியோர் பிடியில்தான் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டன. இவர்கள் அனைவருமே இப்போது வருமானவரித் துறையிடம் சிக்கிவிட்டதால் தடைப்பட்டுள்ள மணல் பிசினஸைத் தொடர்ந்து செய்ய மணல்மேல்குடி கார்த்திகேயன் பெயரை மன்னார்குடி திவாகரன் பரிந்துரை செய்துள்ளாராம். குடவாசல் ராஜேந்திரனின் மருமகனான இவர், சைலன்ட்டாக திருச்சி ஏரியாவில் மணல் பிசினஸ் செய்துவந்தார். இனித் தமிழ்நாடு முழுவதும் மணலில் கோலோச்சப் போகிறார். 2011-ம் ஆண்டு தென் மாவட்டங்களில் மணல் பிசினஸை சில மாதங்கள் செய்தவர் இவர். இவரின் அடாவடிப்போக்கினால் கோபம்கொண்ட ஜெயலலிதா, கட்சியில் இருந்தே இவரை நீக்கினார். ஜெயலலிதா இருந்த வரை கார்டனுக்குள் இவரால் நுழைய முடியாத நிலை இருந்தது. இப்போது திவாகரனின் நிழலாக மணல் பிசினஸை இவர் கையில் ஒப்படைக்க உள்ளார்கள். மாதா மாதம் பல கோடி கறுப்புப் பணம் இதில் விளையாடுமாம். இப்போதே கார்த்திகேயன் தலைமையில் ஒரு டீம் வசூலில் இறங்கிவிட்டார்கள்.’’

‘‘சேகர் ரெட்டியைத் தொடர்ந்து இப்போது இ.டி.ஏ. குரூப்பில் ரெய்டு நடந்துள்ளதே?’’

‘‘எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான பி.எஸ்.அப்துல்ரகுமான் உருவாக்கிய இ.டி.ஏ மற்றும் புஹாரி குழுமங்களில், வருமானவரித் துறை ரெய்டால் பல அரசியல் கட்சிகளும் கலங்கி உள்ளன. இவர்களிடம் நன்கொடை வாங்காத அரசியல் கட்சிகளே இந்தியாவில் இல்லையாம். சமீபத்தில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கியுள்ள ஆயிரம் கோடி மதிப்பிலான மின் உற்பத்தி நிலைய அனுமதிக்காக சில பி.ஜே.பி பிரமுகர்களைப் பெரிய அளவில் கவனித்துள்ளார்
களாம்.’’

‘‘எதற்காக இந்த ரெய்டு?’’

‘‘இந்த ரெய்டின் பின்னணியில் ஹவாலா விஷயங்கள் இருக்கலாம் என்கிறார்கள். அப்துல் ரகுமான் உயிரோடு இருந்த வரை அவருடைய உறவினர் சலாவுதீன் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு தி.மு.க ஆட்சியில் பல ஒப்பந்தங்களைப் பெற்றார். துபாயில் ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தினார். உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாஃபர் சேட்டுக்குப் பல உதவிகளைச்் செய்து கொடுத்தார். ராசாத்தி அம்மாளுக்கும் பல நிறுவனங்களை உருவாக்கிக் கொடுத்தார். ராம மோகன ராவ் ஆரம்பத்திலிருந்து இவர்களின் தொழில்துறை ஆலோசகராக இருந்து வருகிறார். தி.மு.க ஆதரவாளராக சலாவுதீன் வெளிப்படையாக இயங்கியதால் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆட்சி மாறியவுடன்     அ.தி.மு.க-வுடன் ஒட்டிக்கொள்ள வந்த சலாவுதீனை சந்திக்க மறுத்தார் ஜெயலலிதா.

அப்துல் ரகுமான் மறைவுக்குப்பின் அவருடைய வாரிசுகள் சலாவுதீனை டம்மியாக்கிவிட்டு, மன்னார்குடி குடும்பத்துடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார்கள். இதோடு பல ஏற்றுமதி நிறுவனங்களுடன் பார்ட்னராகப் பல நாடுகளில் தொழில் செய்கிறார்கள் இவர்கள். தற்போது இ.டி.ஏ குருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டதாம்’’ என்ற கழுகார், மேலும் இரண்டு பெட்டிச் செய்திகளைக் கொடுத்துவிட்டு அவசரமாகப் பறந்தார்.

அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி

இது விளையாட்டுச் செய்தி அல்ல!

ஒரு நாள் மற்றும் ட்வென்ட்டி 20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து புதன் கிழமை அதிரடியாக விலகியிருக்கிறார் டோனி. ‘’இது என் முடிவு’’ என தனது இளமைக்காலப் பயிற்சியாளர் சஞ்சல் பட்டாச்சார்யாவிடம் உற்சாகமாகச் சொல்லியிருக்கிறார் டோனி. ‘’சரியான நேரத்தில் டோனி எடுத்த சரியான முடிவு இது’’ என்கிறார் பட்டாச்சார்யா. ‘விராட் கோஹ்லி இந்திய அணிக்குத் தலைமை ஏற்க வேண்டும்’ என முன்னாள் வீரர்கள் பலர் சொல்ல ஆரம்பித்திருக்கும்போதே டோனி விலகி வழி விட்டிருக்கிறார். 

p42b.jpg

2 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் இப்படித்தான் திடீரென விலகி ஓய்வை அறிவித்தார் அவர். இந்தமுறை ஓய்வு இல்லை, அணியில் ஒரு வீரராக அவர் தொடர்வார். கடந்த 12 ஆண்டுகளில் டோனியின் தலைமைத் திறமை கேள்விக்குள்ளானது சமீப மாதங்களில்தான். தன் தலைமைப் பதவியைப் பற்றி பெரும் விமர்சனங்கள் கிளப்புவதற்கு முன்பே, ‘`எப்போதுதான் இவர் விட்டுக் கொடுப்பாரோ” எனச் சலிப்போடு யாரும் பேசுவதற்கு முன்பே, டோனி ஒதுங்கியிருக்கிறார்.

தங்கமாக மாறிய ரூ.20 ஆயிரம் கோடி கறுப்புப் பணம்!

p42a.jpg

தங்க இறக்குமதி தொடர்பான தகவல்களைத் திரட்டிய மத்திய அமலாக்கத் துறையினர் திகைத்துப் போயிருக்கிறார்கள். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதத்தில் நகைக்கடைகளில் வியாபாரமே இல்லை எனப் புலம்பல் கேட்டது அல்லவா? இந்த நவம்பரில் மட்டும் 66 ஆயிரம் கிலோ தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் செய்த இறக்குமதியைவிட 14 ஆயிரம் கிலோ அதிகம். ஒட்டுமொத்தமாக தங்க நகை விற்பனை கடந்த 2015-ம் ஆண்டைவிட 2016-ம் ஆண்டில் குறைவாக இருக்கும்போது, நவம்பர் மாதத்தில் மட்டும் தாறுமாறு விற்பனை எப்படி ஆனது என இப்போது புலன் விசாரணை நடக்கிறது.
சென்னையில் மட்டுமே சுமார் 7 ஆயிரம் கிலோ தங்கம் நவம்பரின் சில நாட்களில் விற்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் இப்படி தங்கமாக மாறியிருக்கலாம் எனக் கணக்கிட்டிருக்கிறது அமலாக்கத் துறை. மாற்றிய பெரும்புள்ளிகள்மீது இப்போது விசாரணை வெளிச்சம் விழுந்திருக்கிறது.

நடராசனுக்கு நன்றியோடு இருப்பேன்!   - வைகோவின் புதிய பாதை!

p42.jpg

விஞர் காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி ஜெயத்துக்கு (கடிதம் 2)’ நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, “இந்த நூலை நான் வெளியிட, அதைப் பெற்றவர் ம.நடராசன். நன்றி உணர்வோடு நான் இதைப் பார்க்கிறேன். ‘தமிழர்களின் சுவடே இல்லாமல் போகட்டும்’ என்று இந்திய அரசு அழித்ததே ஈழத்தை, எந்தப் புலிக்கொடியை புலிகள் தங்கள் கொடியாகப் பயன்படுத்தினார்களோ, அதே கொடிதான் சோழனின் ஆட்சியிலும், அருள்மொழித்தேவனின் ஆட்சியிலும் பறந்த கொடி. அந்தப் புலிக்கொடி சோழமண்டலத் தலைநகரான தஞ்சையிலே பறந்தது என்று அந்தத் தஞ்சையிலே முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்து, காலத்தால் அழியாத சாட்சியாக அதை உருவாக்க பழ.நெடுமாறனுக்குத் துணை நின்று அந்த இடத்தையும்  அளித்த ம.நடராசனுக்கு தமிழ்ச்சமூகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. நான் நடராசனைப் புகழ்ந்து பேசியதை நாளை ஊடகங்கள் ஆயிரம் அர்த்தங்கள் பொதித்து எழுதுவார்கள். நான் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நான் ரோஜாவை ரோஜா என்று அழைப்பேன். முட்களை முட்கள் என்று அழைப்பேன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவனாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தலைமையேற்று நின்ற அந்த நடராசன் என் மனதில் நிற்கிறான். குற்றாலத்தில் நடைபெற்ற எனது திருமணத்துக்காக மூன்று நாட்கள் அங்கு தங்கி துணையாக இருந்து திருமணம் நடைபெற உதவிசெய்த அந்த நடராசனை நான் மறக்க மாட்டேன். நன்றியோடு இருப்பேன்” என்று நடராசனுக்குப் புகழ் மாலை சூட்டினார்.

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news

மெரீனாவை, மிரட்டிய ஜல்லிக்கட்டு பேரணி.....

Sun, 08/01/2017 - 08:33
Rally in Chennai Marina demanding Jallikattu!Rally in Chennai Marina demanding Jallikattu! மெரீனாவை, மிரட்டிய ஜல்லிக்கட்டு பேரணி..... வேட்டியுடன் வரிந்து கட்டிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள்.

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை மெரினாவில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது.

இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழகத்தில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சென்னை கலங்கரைவிளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை இப்போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டனர்.

நன்றி தற்ஸ்  தமிழ்.

Categories: Tamilnadu-news

நெவர்! 'ஜெ., இடத்தில் சசிகலாவா... நெவர்!:' கொந்தளிக்கும் ஸ்ரீரங்கம் மக்கள்

Sat, 07/01/2017 - 20:24
நெவர்!
'ஜெ., இடத்தில் சசிகலாவா... நெவர்!:'
கொந்தளிக்கும் ஸ்ரீரங்கம் மக்கள்
 

 

  • gallerye_005544351_1685936.jpg

 

 
 

திருச்சி: 'ஜெயலலிதா இருந்த இடத்தில், சசிகலாவை நினைத்து கூட பார்க்க முடியாது; அவரை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்வோம்?' என, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

Tamil_News_large_168593620170108005510_318_219.jpg

கடந்த, 2011ல், ஸ்ரீரங்கம் தொகுதியில், ஜெ., போட்டியிட்ட போது, 'ஸ்ரீரங்கம் என் பூர்வீகம்; என் முன்னோர் இங்கு வாழ்ந்துள்ளனர்' என, உருக்கமாக பிரசாரம் செய்தார். இதையடுத்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, 'நம்ம ஊர் பெண்' என, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள், அவரை வெற்றி பெற வைத்தனர்.

முதல்வரானதும், நன்றிக்கடனாக, ஸ்ரீரங்கம் தொகுதியில் மட்டும், 4,000 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சி பணிகளை, ஜெ., செயல்படுத்தி னார்.இந்நிலையில், ஜெ., இறந்ததை அடுத்து, அவரது இடத்தில்,சசிகலாவை வைத்து அழகு பார்ப்பதை, ஸ்ரீரங்கம் மக்கள் ரசிக்கவில்லை.
ஜெ., இடத்தில் சசிகலாவை ஏற்க முடியாது. அவரின் தோழியாக இருந்த காரணத்தால் தான், பல வழக்குகளில், ஜெ., சிக்கினார். அந்த கும்பலைச் சேர்ந்தவர்களால் அவருக்கு கெட்ட பெயரே. ஆகையால், ஸ்ரீரங்கத்தில் சசிகலா

நின்றாலும், நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.
ஆண்டாள், 57, ஸ்ரீரங்கம் தெற்கு உத்தர வீதி
நாங்கள் சசிகலாவை விரும்பவில்லை என்பதை விட, மக்களே அவரை விரும்பவில்லை. அ.தி.மு.க.,வில் கூட, நிர்வாகிகள் தான் அவரை ஏற்றுக் கொண்டு உள்ளனர். தொண்டர்கள் யாரும் அவரை, மனதார ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக, ஜெ.,யின் ரத்த உறவான தீபாவை முன்னிறுத்தி னால், அ.தி.மு.க.,வின் எதிர் காலம் நன்றாக இருக்கும். ஸ்ரீரங்கத்தில் சசிகலா போட்டியிட்டால், அவருக்கு ஆதரவாக ஓட்டு போடும் எண்ணம் இல்லை.
ரெங்கநாதன், 40,
சசிகலா எந்த அடிப்படையில், ஜெ., இடத்துக்கு வருகிறார் என்று புரியவில்லை. கட்சிக்காக அவர் ஏதும் செய்யவில்லை. வாரிசு அடிப்படை என்றால் அதற்கு தகுதியானவர் தீபா தான்.
எல்.எஸ்.வீழிநாதன், 51
ஜெயலலிதா போல் அரசியலில் ஈடுபடும் தகுதி, சசிகலாவுக்கு இல்லை. அவரால் ஜெயலலிதா எல்லா பிரச்னைகளிலும் சிக்கினார். எந்த இடத்தி லும் சசிகலாவை தன் அரசியல் வாரிசு என, ஜெயலலிதா சொல்லவே இல்லை.

அப்படி சசிகலா அரசியலுக்கு வர வேண்டும் என, ஜெ., விரும்பியி ருந்தால், கடந்த தேர்தலில் கூட போட்டியிட வைத்திருப்பார். சசிகலாவை, தோழி யாகத் தான் ஜெ., வைத்திருந்தார்; அரசியல் வாரிசாக வளர்க்க வில்லை. ஜெ., சாவில் மர்மம் உள்ளது குறித்து, இவ்வளவு கேள்விகள் எழுப்பியும்,

 

இதுவரை சசிகலா மவுனம் காப்பதே அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால், சசிகலாவுக்கு நாங்கள் நிச்சயம்ஆதரவுஅளிக்க மாட்டோம்.ராதா, 58
ஜெ., போல் சசிகலாவுக்கு நிர்வாகத் திறமை எல்லாம் கிடையாது; அவரை மக்களும் ஏற்க வில்லை; அ.தி.மு.க., தொண்டர்களும் ஏற்க வில்லை. அவர், அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்புக்கு வந்ததையோ, ஸ்ரீரங்கம் தொகுதி யில் நிற்பதையோ, நாங்கள் ஆதரிக்க மாட்டோம். ஜெ.,வை ஆதரித்தோம் என்பதற் காக, சசிகலாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை; ஆதரிக்கவும் மாட்டோம்.ராதாகிருஷ்ணன், 48
ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அனைத்து சிக்கல் களுக்கும் காரணம் சசிகலாவும், அவரது உறவினர்களும் தான். ஆகையால் தான் அவரையும், அவரது உறவினர்களையும், ஜெ., ஒதுக்கினார். நட்புக்கு மரியாதை கொடுத்து, சசிகலாவை மட்டும் சேர்த்துக் கொண்டார்.

ஜெ., இடத்துக்கு சசிகலா வர விரும்பியதே தவறு. ஜெ.,யின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். அதை அவர் சொல்லவில்லை என்பதால், மக்கள் அவரைத் தான் சந்தேகப்படுகின்றனர். மேலும், ஜெ.,யின் ஒரே உறவான தீபாவை கூட பார்க்க அனுமதிக்காதது, அவர் மீது மக்கள் அதிகம் கோபப்பட வழிவகை செய்துள்ளது.
பத்மினி சாரி, 64
சசிகலா, எம்.எல்.ஏ.,வாக இல்லை. ஜெ.,யுடன் இருந்தார் என்பதற்காக, ஜெ., இடத்தில் வைத்து அவரை பார்க்க முடியாது.
கண்ணன், 73

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685936

Categories: Tamilnadu-news

சசிகலா படம் மீது சாணம் வீச்சு சுத்தம் செய்த போலீசார்

Sat, 07/01/2017 - 20:09
சசிகலா படம் மீது சாணம் வீச்சு சுத்தம் செய்த போலீசார்

Tamil_News_large_168597020170107232702_318_219.jpg

 

மயிலாடுதுறை:மயிலாடுதுறையில், அ.தி.மு.க.,வினர் வைத்த டிஜிட்டல் பேனரில், பொதுச் செயலர் சசிகலா உருவப்படம் மீது பூசப்பட்ட சாணத்தை, போலீசார் சுத்தப்படுத்தியது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறையில் பல இடங்களில், ஜெயலலிதா, சசிகலா படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில், சசிகலா படத்தின் மீது சாணம் வீசப்பட்டது.

அதை, அ.தி.மு.க., நிர்வாகிகளே கண்டுகொள்ளாத நிலையில், போலீசார் உடனடியாக ஆட்களை அழைத்து வந்து, பேனரிலிருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். போலீசாரின் இச்செயல், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

சசி வருகைக்காககாத்திருந்த முதல்வர்

அ.தி.மு.க., பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, தன் நடை, உடை, சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார். ஜெயலலிதா வரும் போது, போயஸ் கார்டனில் இருந்து, கட்சி அலுவலகம் வரை, சாலையின் இரு புறங்களிலும், தொண்டர்கள் நின்று, வரவேற்பு கொடுப்பர்.

அதே போல, தனக்கும் வரவேற்பு அளிக்க வேண்டும் என, சசிகலா எதிர்பார்க்கிறார். அதற்காக, மக்களை அழைத்து வரும் பொறுப்பு, தினம் ஒரு மாவட்ட செயலரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
நான்கு நாட்களாக, வடசென்னை வடக்கு, வடசென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆட்களை அழைத்து வந்தனர்.

சசிகலாவிற்கு வரவேற்பு கொடுக்க வருவோருக்கு, ஆளுக்கு, 200 முதல், 500 ரூபாய் வரை வழங்கப்பட்டது. நேற்று ஆட்களை அழைத்து வரும் பொறுப்பு, திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்களும், பஸ் மற்றும் வேன்களில், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, ஆட்களை அழைத்து வந்திருந்தனர்.

சசிகலாவை வரவேற்பதற்காக, முதல்வர் பன்னீர்செல்வம், காலை, 10:00 மணிக்கு, கட்சி அலுவலகம் வந்தார். அமைச்சர்கள், அவருக்கு முன்னதாக வந்தனர். ஆனால், சசிகலா காலை, 11:00 மணிக்கு தான் வந்தார். அவருக்காக, முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் அழைத்து வரப்பட்டவர்கள், மணிக்கணக்கில் காத்திருந்தனர். இந்த நிலை, தினமும் தொடர்கிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685970

Categories: Tamilnadu-news

பன்னீருக்கு எதிராக தம்பிதுரை பனிப்போர்: சசிகலா குடும்பம் 'ஷாக்'

Sat, 07/01/2017 - 20:08
பன்னீருக்கு எதிராக தம்பிதுரை பனிப்போர்:
சசிகலா குடும்பம் 'ஷாக்'
 
 
 

அ.தி.மு.க.,வில், முதல்வர் பன்னீர்செல்வத்திற் கும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரைக் கும் இடையே பனிப்போர் நிகழ்வது, சசிகலா குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tamil_News_large_168579020170107233134_318_219.jpg

ஜெயலலிதா இருந்தவரை, அவரை எதிர்க்கும் துணிவு இல்லாததால், அனைவரும் அடக்கி வாசித்தனர். அனைத்து நிர்வாகிகளும், உளவுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டனர்.
நிர்வாகிகளில் யார் தவறு செய்தாலும், தயவு தாட்சண்யம் பார்க்காமல், ஜெயலலிதா
நடவடிக்கை எடுத்து வந்தார். இதன் காரணமாக, நிர்வாகிகள் பயத்துடன், ஜெ., கூறும் பணிகளை மட்டும் செய்து வந்தனர்.

எனினும், கட்சிக்குள், ஜெ.,வுக்கு அடுத்த இடம் யாருக்கு என்பதில், மூத்த நிர்வாகிகளிடம் புகைச்சல் இருந்து வந்தது. ஜெயலலிதா, இரண்டு முறை, முதல்வர் பதவியை இழக்க
நேர்ந்தபோது, அதில் தன் விசுவாசியான பன்னீர் செல்வத்தை அமர செய்தார். அவர் மீண்டும் முதல்வரானபோது, பன்னீர்செல்வத்திற்கு அமைச்சரவையில், இரண்டாமிடம் கொடுத்தார்.

இரண்டாம் இடம்: இது, கட்சியில் சிலருக்கு

பிடிக்கவில்லை. குறிப்பாக, கொங்கு மண்டல நிர்வாகிகள், இரண்டாம் இடத்தை பிடிக்க, மறைமுக மாக முயற்சிகள் மேற்கொண்டனர். இதை உணர்ந்த, ஜெ., கட்சியின் கொள்கை பரப்பு செயலரான தம்பி துரையை, டில்லி அரசியலை கவனிக்க அனுப்பினார்.

மாநிலத்தில், பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் தந்தது போல், டில்லியில் தம்பிதுரைக்கு முக்கியத் துவம் கிடைக்கச் செய்தார். அவருக்கு, லோக்சபா துணை சபாநாயகர் பதவி கிடைக்கச் செய்தார். எனினும், பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும், அவரை முதல்வர் பதவியில் அமர வைத்ததும், தம்பிதுரைக்கு பிடிக்கவில்லை.

சட்டசபை தேர்தலுக்கு முன், பன்னீர்செல்வம் மீது, ஒரு தரப்பினர் திடீர் குற்றச்சாட்டுகள் சுமத்தினர். இதன் காரணமாக, அவர் மீது, ஜெ., அதிருப்தி அடைந்தார். அவரது ஆதரவாளர்களின் பதவியை பறித்தார். சட்டசபை தேர்தலில், பன்னீர் செல்வத் திற்கு, 'சீட்' கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டது. எதிர்ப்பையும் மீறி, பன்னீர் செல்வத் திற்கு, ஜெ., சீட் வழங்கினார். ஆட்சி அமைத்ததும், அவரை நிதி அமைச்சராக்கினார். மீண்டும், பன்னீர்செல்வம் கை ஓங்கத் துவங்கியது.

ஜெ., மறைந்ததும், முதல்வர் பதவியை பெற, கொங்கு மண்டல நிர்வாகிகள் முயற்சித்தனர்.அதை முறியடித்து, மூன்றாவது முறையாக, பன்னீர்செல்வம் முதல்வரானார்.
 

செல்வாக்கு


அப்போது, சசிகலா பொதுச்செயலராக விரும்புவ தாக தெரிவிக்க, அதற்கு பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்தார். ஜெ.,விடம் செல்வாக்குடன்

 

இருந்ததுபோல், சசியிடமும் பன்னீர்செல்வம் செல்வாக்கு பெற்று விடக் கூடாது என, தம்பிதுரை உட்பட சிலர் காய் நகர்த்தினர். எனவே, முதல்வர் பதவியில் இருக்கும் பன்னீர்செல்வத்திற்கு, நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக, சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என, தம்பிதுரை, லோக்சபா துணை சபாநாயகருக்கான லெட்டர்பேடில், அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கை, பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி தருவதற்கு பதிலாக, சசிகலாவிற்கு
நெருக்கடியை தந்து விட்டது.

முதல்வர் பதவியை, உடனடியாக ஏற்க விரும்பிய சசிகலாவிற்கு, தம்பிதுரை அறிக்கை, பின்ன டைவை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் மோத லால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால், சசிகலா குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685790

Categories: Tamilnadu-news

'வளைந்து, குனிந்து, தவழ்ந்து, தரையில் உருண்டு, கால் நோக்கி கும்பிடு போடுபவர்களால், தமிழகம் பாழ்பட்டு கிடக்கி து.

Sat, 07/01/2017 - 19:58
ஸ்டாலின் பதிலளிக்க மறுப்பு
சசிகலா தரப்பு செம கடுப்பு
 
 
 

சென்னை:'வளைந்து, குனிந்து, தவழ்ந்து, தரையில் உருண்டு, கால் நோக்கி கும்பிடு போடுபவர்களால், தமிழகம் பாழ்பட்டு கிடக்கி து. எனவே, காலில் விழுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tamil_News_large_168578820170107232316_318_219.jpg

அவரது அறிக்கை: தி.மு.க., செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள என்னை சந்திக்க வரும் கட்சியினர் சிலர், ஆர்வம் மிகுதியால் சற்றும் எதிர்பாராத நிலையில், காலில் விழுந்து வணங்க முயற்சிக்கின்றனர். இதை, நான் சிறிதும் விரும்புவதில்லை. யார் காலிலும் விழ வேண்டிய அடிமை நிலை, எந்த மனிதருக்கும் எப்போதும் ஏற்படக் கூடாது.

வாழும் தெய்வங்களான, நம் பெற்றோர் கால் தொட்டு வணங்குவது தமிழர் பண்பாடு. அதற்கு ஊறு விளையாமல், மற்றவர் காலில் விழும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். கட்சியினர் சொல்லும், 'வணக்கம்' என்ற கம்பீரமான வாழ்த்து போதும். வளைந்து, குனிந்து, தவழ்ந்து,

தரையில் உருண்டு, கால் நோக்கி கும்பிடு போடுப வர்களால், தமிழகம் பாழ்பட்டு கிடக்கிறது; அந்த பாதை, நமக்கு வேண்டாம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

ஸ்டாலின் அறிக்கை: சசிகலா ஷாக்


சசிகலா அறிக்கைக்கு, ஸ்டாலின் பதில் அளிக்கா மல் புறக்கணித்தது, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். இதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்கவில்லை.அவர்கள், சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரை ஆதரித்து ஒட்டப்படும் போஸ்டர்களை கிழித்து வருகின்றனர்.

கட்சியினரின் எதிர்ப்பு குறித்து கவலைப்படாமல், பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலா, மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். பொதுச் செயலராக அரசியல் பணியை துவக்க வேண்டும் என்பதற்காக, ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி, தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஸ்டாலின் பேசியபேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கை வெளியான அன்று, ஸ்டாலின் தலைமை செயலகம் சென்று, முதல்வர்
பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். அவர் வெளியில் வந்தபோது, சசிகலா அறிக்கை குறித்து கேட்டதற்கு, 'இது தொடர்பாக, முதல்வரிடம் பேசி

 

விட்டேன்' என்று மட்டும் பதில் அளித்தார். மறந்தும் சசிகலா பெயரை உச்சரிக்கவில்லை.

அதேநேரம், சசிகலா அறிக்கைக்கு பதிலடியாக, தி.மு.க., துணைப் பொதுச்செயலர்
ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டார். சசிகலாவை தனக்கு சமமாக, ஸ்டாலின் ஏற்று கொள்ளாததால், அவர் பதில் அளிக்க வில்லை.இது, சசிகலா குடும்பத்தினரி டமும், அ.தி.மு.க.,வினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சசிக்கு, ஸ்டாலின் பதில் அளித்தால், அரசியல் அங்கீகாரம் பெறலாம் என எதிர்பார்த்தவர் களுக்கு, ஐ.பெரியசாமி பதில் அளித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சொந்த கட்சி யினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சி யும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறதோ என்ற சந்தேகம், அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685788

Categories: Tamilnadu-news

"திக்திக்"

Sat, 07/01/2017 - 19:57
gallerye_235523362_1685945.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமிக்கப் பட்டுள்ள சசிகலாவிற்கு, தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக, சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு, 'திக் திக்' மனநிலையில், சசிகலா தரப்பினர் காத்திருக்கின்றனர்.

 

Tamil_News_large_1685945_318_219.jpg

அதேபோல, ஜெயலலிதாவின் வாரிசாக உரு வெடுக்க தயாராக இருக்கும், அவரது மருமகள் தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின், களம், 'கிளியர்' ஆகும் என்பதால், பொறுத்திருக்கிறார்.

வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்துக்கள் சேர்த்ததாக, ஜெ., மீது
கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில், 1996ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. கூட்டு சதி மற்றும் சொத்து சேர்ப்புக்கு, உடந்தையாக இருந்ததாக, சசிகலா, இளவரசி, சுதாகரன்

ஆகியோர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 

4 ஆண்டு சிறை


இந்த வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பரில், தீர்ப்பு வழங்கினார். ஜெ.,வுக்கு நான்கு ஆண்டு கள் சிறை, 100 கோடி ரூபாய் அபராதம்; சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை, தலா, 10 கோடி ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, நான்கு பேரும், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டு மனுவை விசாரித்த, நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை, நீதிபதிகள் பி.சி.கோஷ், அமித்வ ராய் ஆகியோர் விசாரித்தனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்து, தேதி குறிப்பிடாமல், 2016 ஜூன் மாதம், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், டிச., 5ல், ஜெயலலிதா திடீர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வின் புதிய பொதுச்செயலராக, அவரது தோழி சசிகலா பொறுப்பேற்றுள்ளார்; முதல்வராகவும் முடிவு செய்துள்ளார். அதற்கு, சொத்து குவிப்பு வழக்குஇடையூறாக உள்ளது.

 

இதில், எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம் என்ற நிலை காணப்படுகிறது.

எனவே, முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு, தற்போது தீர்ப்புக்காக, சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் காத்து இருக்கின்றனர்.
 

ஆதரவு அதிகரிப்பு


இந்நிலையில், ஜெயலலிதாவின் மருமகள் தீபாவுக்கு, அ.தி.மு.க., வினரிடம் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு, ஆதரவாளர் கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் அழைப்பை ஏற்று, அரசியலுக்கு வர முடிவு செய்துள்ள தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்காக காத்திருக் கிறார். அந்த முடிவு, சசிகலாவுக்கு எதிராக வந்தால், அவரை ஆதரிக்கும் முன்னணி தலைவர்கள் பலர் அணி மாறக்கூடும் என்பதால், அரசியல் பிரவேசத்தை தள்ளிப்போட்டு, தீர்ப்புக்காக காத்திருப்பதாக தெரிகிறது.

அத்துடன், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு, தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதால், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆவலோடு காத்திருக்கின்றன.

- நமது நிருபர் -

திக்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685945

Categories: Tamilnadu-news

சசிகலா சொல்லும் ‘கறையான்’ யார்?

Sat, 07/01/2017 - 16:03
சசிகலா சொல்லும் ‘கறையான்’ யார்?

 

“நான் உங்களுக்கு இணக்கமானவராகத் தான் நடந்துகொள்வேன்” என்பதைத் தனது கட்சியினருக்கு உணர்த்த சசிகலா திறமையாகக் காய் நகர்த்துகிறார் என வியந்துபோகிறார்கள் அ.தி.மு.க-வின் நிர்வாகிகள். சென்னையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அவரின் அணுகுமுறையும் அதைத்தான் காட்டியது.

‘ஜெயலலிதாவின் இடத்தைத் தன்னால் நிரப்ப முடியாது. ஆனால், தனக்கென ஒரு தனித்துவம் இருப்பதை அ.தி.மு.க-வினருக்கு உணர்த்திவிட வேண்டும்’ என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது முதல், அதற்கான திட்டங்களை சசிகலா கச்சிதமாகச் செய்து வருகிறார். அதன் முதல்படியாக ‘மாவட்ட நிர்வாகிகளோடு சந்திப்பு’ என அறிவித்து, கட்சியினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் 10 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்திக்கிறார். இதில் முதல் நாளான கடந்த 4-ம் தேதி காலை சென்னை மாவட்ட நிர்வாகிகளை சசிகலா சந்தித்தார்.

p8.jpg

அவசரமாக வந்த ஓ.பி.எஸ்!

மாவட்ட நிர்வாகிகள் மட்டத்திலான கூட்டம் என்றாலும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தனர். 4-ம் தேதி காலை தலைமைச்செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 9-30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. 10-30 மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்று அவசர அவசரமாக நிகழ்வுகளை முடித்துவிட்டு எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓ.பி.எஸ்,  தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். ரோட்டிலேயே காரை நிறுத்திவிட்டு, நடந்தே அலுவலகத்துக்குள் வந்தார். பெண்கள் கூட்டம் குறைவாக இருந்ததை அங்கிருந்த நிர்வாகிகளிடம் அவர் சுட்டிக்காட்டியதும், சசிகலா வருவதற்குள் அவசரமாக எங்கிருந்தோ ஒரு வேனில் பெண்கள் கூட்டத்தைக் கூட்டிவந்தனர்.

புரட்சித் தலைவி சின்னம்மா!

சசிகலாவின் கார் 10-45 மணிக்கு தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, சுற்றி நின்றவர்கள் ‘‘புரட்சித் தலைவி வாழ்க’’ என கோஷமிட்டனர். அவர் காரை விட்டு இறங்கியபோது, திடீரென அந்தக் கோஷம் நின்றுபோய், ‘‘சின்னம்மா வாழ்க’’ என்று கோஷம் எழுந்தது. அதைப் புன்முறுவலோடு ரசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் சசிகலா. எப்போதும் ஜெயலலிதா முன்பு உடலை வளைத்து குனிந்து கும்பிடு போடுவது போலவே, சசிகலா முன்பும் அதே பாணியில் ஓ.பி.எஸ் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் வணக்கம் வைத்தனர். அப்போது டைமிங்காக, “புரட்சித் தலைவி சின்னம்மா” என்று வெளியில் நின்றவர்கள் கோஷமிட்டனர்.

p8b.jpg

ஜெயலலிதா ஸ்டைலில் சசி!

பொதுச்செயலாளராகத் தேர்வாகி பதவியேற்க முதன்முறையாகக் கட்சி அலுவலகம் வந்தபோது கட்சியினரைப் பார்த்து சசிகலா வணக்கம் மட்டுமே வைத்தார். அன்றைக்கு அவர் நடவடிக்கைகளில் ஒருவித தயக்கம் இருந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்தபோது, அந்தத் தயக்கம் சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. கம்பீரமாக மாடிக்குச் சென்றவர், ஜெயலலிதா பால்கனியில் நின்று  தொண்டர்களைப் பார்த்துக் கையசைப்பது போல கையசைத்தார். ஜெயலலிதாவைப் போலவே, இரண்டு விரலை உயர்த்திக் காட்டி கட்சியினரை உற்சாகப்படுத்தினார். 

ஒன் வுமன் ஆர்மி!

கூட்ட அரங்குக்குள் சசிகலா நுழைந்ததும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வணக்கம் சொல்ல, சசிகலாவும் பதில் வணக்கம் சொன்னார். முன்பகுதியில் சசிகலா மட்டும் அமர நாற்காலி் போடப்பட்டிருந்தது. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட உரையைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். அதன் பிறகு குறிப்புகள் இல்லாமலும் சிறிது நேரம் பேசி அசத்தினார். அமைச்சர்கள் அனைவரும் ஓரமாக அமர்ந்து நிகழ்வுகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். 

கறையான்களை நுழையவிடக் கூடாது!

ஜெயலலிதா பற்றிய புகழுரையோடு பேச்சைத் தொடங்கிய சசிகலா, கட்சியின் நிர்வாகிகள் இனி என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். “அம்மா அவர்கள் கட்சியை இரும்புக் கோட்டையாக வைத்திருந்தார். இந்தக் கட்சியில் கறையான்கள் நுழைய, நாம் இடம் தந்துவிடக் கூடாது... இரும்புக்கோட்டையாகவே இனியும் வைத்திருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் மக்களின் மனதில் நின்று எப்படிக் கழகத்தை வழிநடத்தினார்களோ, அதைவிட அதிகமாகக் கழகத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வழிநடத்த வேண்டும். நமக்குள் எவ்விதப் பிரச்னையும் ஏற்படக் கூடாது. ஜெயலலிதா இருந்திருந்தால் கட்சியை எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் கட்டுக்குள் வைத்திருப்பாரோ அதேபோல் நாமும் அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும்” என்றார். ‘கறையான்கள் என்று அவர் யாரைக் குறிப்பிட்டார்’ என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது.

‘‘சசிகலாவின் தலைமையை கொஞ்சம் நெருடலாக நினைப்பவர்களைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார். அவர்களை மெள்ள மெள்ளக் களையெடுக்க நினைக்கிறார்’’ என்று சொல்கிறார்கள் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.

p8a.jpg

இளைஞர்களுக்கு அழைப்பு!

‘‘கட்சியில் தொண்டர்களை அதிகமாகச் சேர்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர் சக்தியை கட்சிக்குள் அதிகம் கொண்டுவர வேண்டும். கல்லூரி களுக்குச் சென்று இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேருங்கள். பாசறை நிர்வாகிகள் இந்தப் பொறுப்பை ஏற்றுச் செய்ய வேண்டும். அவர்கள்தான் கட்சியின் எதிர்காலம். மாவட்டம்தோறும் கட்சிக் கூட்டங்களை அதிக அளவில் நடத்துங்கள். இடைவெளி இல்லாமல், சட்டமன்றத் தொகுதிவாரியாகவும், மாவட்ட வாரியாகவும் கூட்டம் நடத்துங்கள்” என்று இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்து அசத்தினார் சசிகலா.

“தலைவர்களின் பிறந்தநாள், கட்சி தொடங்கப்பட்ட நாள் போன்ற முக்கிய தினங்களின்போது மாவட்டவாரியாக மாணவர்களுக்கான போட்டிகளை நடத்துங்கள். வெற்றி பெறுபவர்களுக்கு நானே பரிசு வழங்கு கிறேன். நான் இல்லாவிட்டாலும், தலைமைக் கழக நிர்வாகிகள் பரிசு வழங்குவார்கள்” என்றார். சுமார் அரை மணி நேரம் சசிகலா பேசினார். 

`போட்டோ எடுத்துக்கொள்ளலாம்!’

பேச்சை முடித்துவிட்டு சசிகலா கிளம்பத் தயாரானபோது, தென் சென்னை மாவட்டச் செயலாளர் கலைராஜன், சசிகலாவிடம் “உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள அனைவரும் ஆசைப்படுகிறார்கள்” என்று சொன்னதும், புன்முறுவல் பொங்க மாவட்ட நிர்வாகிகள் அனைவருடனும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். எல்லாம் 45 நிமிடங்களில் முடிந்துவிட்டது இந்த நிகழ்ச்சி. மாலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடனும் இதே போன்ற சந்திப்பை நடத்திமுடித்தார்.

இந்த மக்கள் தரிசனம் முடிந்ததும் ‘முதல்வர்’ ஆகிறார் சசிகலா!

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news

மக்கள் பணியாற்ற காத்திருக்கிறேன்: ஜெ. அண்ணன் மகள் தீபா பேச்சு

Sat, 07/01/2017 - 13:04
மக்கள் பணியாற்ற காத்திருக்கிறேன்: ஜெ. அண்ணன் மகள் தீபா பேச்சு

 

 
 எல்.சீனிவாசன்
தீபா | படங்கள்: எல்.சீனிவாசன்
 
 

மக்கள் பணியாற்றக் காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். அதுவரை தொண்டர்கள் காத்திருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள செய்தியாளர்களை சந்தித்து தீபா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களுக்காக விரைவில் பணியாற்றக் காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். அதுவரை தொண்டர்கள் காத்திருக்க வேண்டும்.

நல்ல எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்யக் காத்திருக்கிறேன். அதற்கான விளக்கங்களை, தீர்க்கமான முடிவை விரைவில் அறிவிப்பேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரையும், புகழையும் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. ஜெயலலிதா மீது மக்கள் வைத்திருக்கிற அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் உணர முடிகிறது.

அரசியலுக்கு வருவது என் ஆசையல்ல. அனைவரின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த முடிவை எடுத்துள்ளேன். அரசியலுக்கு வர விருப்பம் உள்ளது. அதை கூர்ந்து கவனித்து வருகிறேன். மக்கள் விரும்பினால் இந்த அரசியல் பணியை செய்ய நான் தயங்க மாட்டேன்'' என்றார் தீபா.

செய்தியாளர் சந்திப்பால் தீபாவின் இல்லம் அருகே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

அதன் புகைப்படப் பதிவுகள்

deepa_1_3114771a.jpg

deepa_2_3114772a.jpg

deepa_3_3114773a.jpg

deepa_4_3114774a.jpg

 

http://tamil.thehindu.com/tamilnadu/மக்கள்-பணியாற்ற-காத்திருக்கிறேன்-ஜெ-அண்ணன்-மகள்-தீபா-பேச்சு/article9466113.ece?homepage=true

Categories: Tamilnadu-news

"தீபா ஆதரவு அணி" : சென்னைக்கு முதல் இடம் !

Sat, 07/01/2017 - 11:11
"தீபா ஆதரவு அணி" : சென்னைக்கு முதல் இடம் !

தீபா

மிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அவர் வகித்து வந்த முதல்வர் பதவி ஓ.பி.எஸ் கைக்குப் போனது நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவி,  பொதுச் செயலாளர் பதவியாகச் சுருங்கி சசிகலா கைக்குப் போனது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா  இருந்தபோது, அவரைப் பார்க்க பலமுறை முயன்று வாசலிலேயே தடுக்கப்பட்டவர் தீபா.  உள்ளே போனவர்களும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப் படவில்லை என்பது வேறு. 

ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயராமனின் மகளான தீபாவுக்கு  அப்போலோவில் மட்டுமல்ல, ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலிலும் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. டிசம்பர்  29-ந்தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் - 31-ம் தேதி காலை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில்  பொதுச் செயலாளராகப்  பொறுப்பேற்றுக் கொண்டார்.

கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட டிசம்பர்- 29,  கட்சி அலுவலகத்தில்  பொறுப்பேற்றுக் கொண்ட டிசம்பர் -31 ஆகிய இரு நாட்களிலும் தலைமைக்கழகத்தில் எதிர்பார்த்த அளவில் கூட்டம் இல்லை. அதே வேளையில் கட்சியிலோ, ஆட்சி அதிகாரத்திலோ இல்லாத தீபாவின் வீட்டுக்கு அ.தி.மு.க தொண்டர்கள் தேடி வந்து ஆறுதல் சொல்கின்றனர்.  பொதுச் செயலாளர் பதவியைப் பிடித்த சசிகலா அடுத்து முதல்வர் ஆகலாம் என்ற முடிவில் இருந்தாராம். ஆனால், தீபாவுக்கான வரவேற்பைப் பார்த்து  சசிகலா தரப்பினர், முதல்வர் பதவிக்கான காலம் இதுவல்ல, எதிர்ப்புகள் பெருகி வரும் நேரம்' என்று  கருதுகின்றார்களாம். கட்சியில் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அறிவிப்பு டிசம்பர் 29-ம் தேதி வெளியானது முதல் சென்னை தி.நகர், சிவஞானம் தெருவிலுள்ள தீபா வீட்டுக்கு தொண்டர்கள் திரள ஆரம்பித்து விட்டனர். தீபா வீடு களை கட்டிப் போனது.

முதல் இரண்டுநாட்கள் வரையில் தேடிவந்த சொற்ப ஆட்களிடம் தீபாவே பேசி அனுப்பி வைத்தார். "எனக்குத் தெரியும்... உங்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்ளாமல் இல்லை. கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லியே  வந்தவர்களை வழியனுப்பி வைத்தார். நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனதால், தேடி வருகிறவர்களின் பெயர், செல்போன் நம்பர்களை அங்குள்ள  'என்ட்ரி' புத்தகத்தில் எழுதி வாங்க தீபாவின் உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க-வினரில் சிலர் சசிகலாவின் படங்களை புரொபைல் படங்களாக வைத்துக்  கொண்டது போல தீபாவின் படங்களையும் சிலர்  புரொபைல் படமாக செல்போன்களில் வைக்கத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தீபாவுக்கு தமிழ்நாடு முழுவதிலும் அ.தி.மு.க-வினரின் ஆதரவு கூட ஆரம்பித்துள்ளது.

தீபாதீபாவுக்கு உண்மையிலேயே எதனால்  கட்சியினர்  ஆதரவு கூடி வருகிறது என்று விசாரித்தோம். "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி  ஆகிய இடங்களில், தீபாவுக்கு ஆதரவு கணிசமாக கூடியுள்ளது. தலைநகர் சென்னையில், பகுதிச் செயலாளர்கள்,  அணிச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் என்று பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள்  25 பேரும் முன்னாள் நிர்வாகிகள் 15 பேரும்  தீபாவை சந்திக்க 'டேட்' கேட்டுள்ளனர். உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளில் முன்னாள் மேயரில் தொடங்கி கவுன்சிலர்கள் வரையில் ஒவ்வொரு மாவட்டமாக போனில் தொடர்பு கொண்டு பேசி  தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்துக் கொண்டு வருகின்றனர். தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது இருந்த எழுச்சியை இப்போது மீண்டும் பார்க்கமுடிகிறது. ராமாவரம் கார்டனில் இருந்து போயஸ் கார்டனுக்கு மாறிய எங்கள் கட்சி  இப்போது தி.நகருக்கு மாறிப் போய் இருக்கிறது அவ்வளவுதான் !

தீபா வசிக்கும் தி.நகர் சிவஞானம் தெருவில் உளவுப் போலீசார் சாதாரணமாகச் சுற்றி வருகிறார்கள். அங்கே தினமும் வந்து செல்லும் சிலரிடம் பேசினேன்.

"இப்போதைக்கு எங்கள் கட்சியின் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கிறது. தீபாம்மாவின் அரசியல் பிரவேசமும் சிறப்பாக இருக்கிறது" என்கின்றனர்  தீபா வீட்டு முன் கூடும் அ.தி.மு.க-வினர். "ஒரு இடத்திலாவது 'தீபாம்மா' போஸ்டர் கிழிக்கப் பட்டிருக்கிறதா என்று பாருங்கள் எல்லா இடங்களிலும் கிழிபடும் போஸ்டர்கள் சசிகலா போஸ்டர்களே. தமிழ்நாட்டுக்கு யாராவது முதலமைச்சராக வரட்டும், போகட்டும். இப்போது அவர்களின் பக்கம் அதிகாரமும் சக்தியும் இருக்கலாம். ஆனால் தலைவரும், புரட்சித் தலைவி அம்மாவும் வளர்த்துக் கொடுத்த கட்சி இருப்பது எங்களிடம் தான். அதைத்தான் எங்களின் தீபாம்மா மூலம் மேலும் வளர்க்கப் போகிறோம் "  என்றனர் சிலர். அடுத்து வரும்  நாட்களில் இன்னும் கூடுதல் தகவல்கள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது ...

ஜனவரி 1 அல்லது 2 ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றில் சசிகலா முதல்வராக முடிசூட்டப் படுகிறார் என்று சொல்லிக் கொண்டு இருந்த அ.தி.மு.க. வட்டாரங்கள் அதன் பின்னர் இது பற்றிப் பேசுவதைக் கணிசமாக குறைத்திருப்பதைப் பார்க்கலாம்.

http://www.vikatan.com/news/tamilnadu/77193-chennai-leads-in-the-support-for-deepa-deepavssasikala.art

Categories: Tamilnadu-news

ஜெயலலிதாவாக மாறும் ஸ்டாலின்... கருணாநிதியாக மாறும் சசிகலா!

Sat, 07/01/2017 - 09:12
ஜெயலலிதாவாக மாறும் ஸ்டாலின்... கருணாநிதியாக மாறும் சசிகலா!

சசிகலா

ரை நூற்றாண்டுகால திராவிட இயக்க வரலாற்றில் இரு பெரிய கட்சிகளின் தலைமை தற்போது மாறியுள்ளது. இது தொண்டர்களுக்கு புதிய அனுபவம்தான். முந்தைய தலைமையின் குணங்களுக்கு அனுசரித்துப் பழக்கப்பட்ட அவர்களுக்கு... புதிய தலைமையின் குணங்களால், இதுவரை பார்க்காத காட்சிகளைநோக்கி, அவர்களைக் கடத்த  இருக்கிறது. ஓர் ஆளுமையின் கீழ் இருந்து, எதிர்த்து கருத்துகள் கூறாமல்... விசுவாசத்தை மட்டுமே மூலதனமாய்க் கொண்டு, பதவி வாங்கிப் பழக்கப்பட்ட அ.தி.மு.க-வில், இனி அதற்கு வாய்ப்பு இல்லை. பொதுக்குழுவில்  கருணாநிதியையே எதிர்த்துப் பேசிப் பழக்கப்பட்ட தி.மு.க-வில், அதுபோன்ற நிகழ்வுகளை இனி பழைய வரலாற்றில்  மட்டும்தான் பார்க்க முடியும். சுருக்கமாகச் சொன்னால்... இரண்டு கட்சிகளின் தலைமை மாற்றத்தால் இனி, தி.மு.க.  என்பது அ.தி.மு.க. போலவும்... அ.தி.மு.க. என்பது தி.மு.க போலவும் மாறப் போகிறது. 

ஜெயலலிதா

கட்டுப்பாடும்... ஜனநாயகமும்! 

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மக்கள் எதிர்ப்பு இருந்தாலும்... சசிகலாவால், கட்சிக்குள் எந்தச் சிக்கலும் இல்லாமல் பொதுச் செயலாளர் ஆக முடிகிறது என்றால்... அதற்குக் காரணம் ஜெயலலிதாதான். ‘சசிகலாவை விட்டால் அந்தக் கட்சியில் வேறு யாரும் இல்லை’ என்று பொதுமக்களே பேசும் அளவுக்கு ஒற்றைத் தலைமையை உணரவைத்து இருந்தார் ஜெயலலிதா. அவர், இருந்தவரை கட்சியின் தலைமைக்கு எதிராக யாரும் கருத்துச் சொல்லத் தைரியம் இல்லாத பொம்மை ராணுவப் படையாகத்தான் அ.தி.மு.க-வை வைத்து இருந்தார். 30 வருடங்களாக ஒற்றைத் தலைமையின் கீழ் சுயக் கருத்து இல்லாமல் இயங்கிவந்தவர்கள் திடீர் என சசிகலாவை எதிர்த்து எப்படிப் பேசுவார்கள்? இதை நன்கு தெரிந்தனால்தான் ஜெயலலிதா பயன்படுத்திய வாகனம், பேனா என அவரின் பொருட்களின் மூலம் நிழலைக் காட்டிப் பயமுறுத்தி வருகிறார் சசிகலா. ஆனால், இதற்கு நேர் எதிராக உள்ளது ஸ்டாலின் விவகாரம்.

தி.மு.க-வின் உட்கட்சி ஜனநாயகத்தால்தான் ஸ்டாலின் செயல் தலைவர் ஆவதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ‘இந்தத் தேர்தலில் வாரிசு யாருக்கும் சீட் கிடையாது’ என்று ஒருமுறை கருணாநிதி கூறியபோது... ‘ஸ்டாலினும் போட்டியிட மாட்டாரா’ என்று பதில் கேள்வி கேட்டு கருணாநிதியை வாய் அடைக்கவைத்தவர் வீரபாண்டி ஆறுமுகம். இதுபோல ஆயிரம் கதைகள் உண்டு, தி.மு.க-வின் உட்கட்சி ஜனநாயத்துக்கு. ஸ்டாலின், கட்சியில் முன்னேறுவதற்குத் தடையாக இருந்ததும் இதுதான். இந்த உட்கட்சி ஜனநாயகத்தை உரம்போட்டு வளர்த்தவர் கருணாநிதிதான் என்றாலும், ஸ்டாலினின் நெருக்குதலில் இருந்து அவரைக் காப்பாற்றிக்கொள்ளும் கேடயமாக அது பயன்பட்டது.

இந்த வளையத்தை உடைக்க ஸ்டாலின் தலைகீழாய் நிற்கவேண்டி இருந்தது. சிறிதுசிறிதாக அந்த மலைகளை எல்லாம் உடைத்து, அவரின் சூரியனை இன்று பிரகாசிக்க  செய்து இருக்கிறார். தனக்குத் தடையாக இருந்த இந்த ஜனநாயகக் கொடியை... இனி, எந்தக் காலத்திலும் தி.மு.க-வில் படரவிட மாட்டார் ஸ்டாலின். இனி, தி.மு.க-வின் ஒரே குரல், ஸ்டாலின் மட்டும்தான். தி.மு.க-வில் ஒரு ஜெயலலிதாவாக ஸ்டாலின் இருப்பார். அதற்கான முதல் படியைக் கடந்த சட்டமன்றத் தேர்தலிலே எடுத்து  வைத்துவிட்டார். கூட்டணிக்காக எந்தக் கட்சியுடனும் இறங்கிப் பேசவில்லை. தான் தேர்வுசெய்தவர்களைத்தான்  வேட்பாளர்களாக நிறுத்தினார். இது, அனைத்தும் ஜெயலலிதாவின் ஸ்டைல். ஆனால், அ.தி.மு.க-வில் தற்போது  நடக்கும் காட்சிகள் எதுவும் கடந்த 30 வருடங்களில் தொண்டர்கள் பார்க்காத விஷயங்கள். என்ன ஆனாலும் தினமும் கட்சி அலுவலகம் வருவது கருணாநிதியின் வழக்கம். அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்தவரை ஜெயலலிதா, கட்சி அலுவலகம் வருவதே ஒரு நிகழ்ச்சியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்ற 6 நாட்களில்... 4 நாட்கள் அவர் கட்சி அலுவலகம் வந்து இருக்கிறார். நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார். கட்சி சீனியர்களை அருகில் வைத்துக்கொள்வது என்று அப்படியே கருணாநிதி ஸ்டைலில் அரசியலுக்கு வந்துவிட்டார் சசிகலா. தொண்டர்களுக்கு அவர்மேல் இருக்கும் கோபத்தைப்  போக்க... இதைத் தவிர வேறு வழியும் இல்லை.

கருணாநிதி

சாதி... மதம்... மொழி!

திராவிட இயக்கத்தின் ஆணிவேர் மதமும்... மொழியும்தான். மத அடக்குமுறையில் வேர்விட்டு, மொழி வேறுபாட்டால் துளிர்விட்ட இயக்கம் தி.மு.க. அரை நூற்றாண்டுகால திராவிட இயக்கக் கொள்கைகளில் ஏதாவது  ஒரு பிணைப்பை, தி.மு.க-வுடன் ஏற்படுத்திக்கொண்டே இருந்தார் கருணாநிதி. பெயரில் மட்டுமே திராவிடத்தை வைத்துக்கொண்டு... அதில் இருந்து வெகுதூரம் தள்ளியே இருந்தார் ஜெயலலிதா. புதிய தலைமைகள், இந்த இருவேறு விஷயங்களில் எப்படி இருக்கும்? பாரம்பர்ய தி.மு.க-வில் இருந்து கொள்கைரீதியாக மாறுபடுகிறார்  ஸ்டாலின். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்தபோது... கட்சியிலிருந்தும், வெளியிலிருந்தும் எதிர்ப்பு வந்ததை அடுத்து அதை மறுத்தார். பின்பு, ‘தி.மு.க-விலும் இந்துக்கள் இருக்கிறார்கள்’ என்று கூறினார். அவர் செயல் தலைவராகப் பதவி ஏற்ற பொதுக்குழுகூட நல்ல நேரம் பார்த்துத்தான் தொடங்கப்பட்டது. காலை, 10 மணிக்கு, பொதுக்குழு கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டாலும்... காலை, 9.10 மணிக்கே கூட்டம் கூடி, 10.25 மணிக்கு முடிக்கப்பட்டது. மதியம், 12 மணிக்கு மேல், ராகு காலம் தொடங்கயிருந்ததால்... அதற்கு முன்னே, ஸ்டாலின் செயல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். மொத்தத்தில் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து மாறுபட்டு வரும் காலங்களில் அனைவரும் கட்சிக்குள் வரும் வண்ணம் அவரது செயல்பாடுகள் இருக்கும்.

தென்  மாவட்டங்களில் தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் கட்சியாக தி.மு.க. பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம்,  கருணாநிதி. அவர், பல்வேறு நலத் திட்டங்களையும், நகரங்களில் பாலங்களையும் அமைத்திருக்கிறார். கிராமங்களில் தி.மு.க-வுக்கு அப்படி ஒரு சாதி அடையாளம் இருந்துவருகிறது. ஜெயலலிதாவை பொறுத்தவரை, சங்கராச்சாரியாரை கைதுசெய்து... சிறுபான்மையினர் ஆதரவைப் பெறுவார். அதேநேரம், மதமாற்றத் தடைச்  சட்டத்தைக் கொண்டுவந்து இந்துக்கள் ஆதரவைச் சரிசெய்வார். ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவரை என்கவுன்டர்  செய்தால்... அதில், உள்ள ஒருவருக்கு முக்கியப் பதவி கொடுப்பார்.

இப்படி இரண்டு பக்கமும் பேலன்ஸ் செய்து வந்தார். அந்த வழியைத்தான் ஸ்டாலின், இனி பின்பற்றுவார். சசிகலாவை, பொறுத்தவரை தெய்வ நம்பிக்கை உடையவர் என்று எடுத்துக்கொண்டாலும், அவரைப் பின்னால் இருந்து இயக்கும் நடராஜனின் எண்ணங்கள்தான் கட்சியில் பிரதிபலிக்கும். பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு... பதவி ஏற்றபோது பேசிய சசிகலா, ‘பெரியாரின் தன்மானம், அண்ணாவின் இனமானம்’ என்று கோடிட்டுப் பேசினார். இதுவரை அண்ணா பெயரைக்கூட, குறிப்பிட்டு இருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், பெரியார் பெயரை அதிகம் பயன்படுத்தியது கிடையாது. அதேபோன்று பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு சசிகலா, சந்தித்த முதல் தலைவர் திருமாவளவன். குறிப்பிட்ட சாதி அடையாளத்தை மறைக்க தலித் தலைவரை சந்திப்பது, நடராஜனுக்கு உள்ள தமிழ்  அமைப்புகளின் தொடர்புகள் மூலம் அதுசார்ந்த விஷயங்களில் இனி அ.தி.மு.க அதிக ஈடுபாடு இருப்பதுபோல்  நடிக்கும். இரண்டு கட்சிகளும் இந்த விஷயங்களில் செய்யப் போகும் மாற்றங்களால் தமிழக அரசியல் சூழலே  மாறும். 

ஸ்டாலின்

உறவுகள்! 

‘கருணாநிதி, குடும்பத்தால் கெட்டார்... ஜெயலலிதா, நட்பால் கெட்டார்’ என்பார்கள். நட்பைவிட, கருணாநிதியின் குடும்ப அரசியலுக்குத்தான் தமிழக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதனால்தான் இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க. தோற்பதற்கு அதுவே முக்கியக் காரணமாக இருந்தது. குடும்பம் இல்லாதவர் என்கிற இமேஜ்தான் ஜெயலலிதாவுக்கு இரண்டுமுறை ஆட்சியைக் கொடுத்தது. ஆனால், தற்போது எல்லாம் தலைகீழ்தான். உறவுகள் அனைத்தையும் தள்ளியே வைத்து இருக்கிறார் ஸ்டாலின். அழகிரியை கட்சியைவிட்டு நீக்கியது, கனிமொழியை டெல்லி அரசியலை பார்த்துக்கொள்ள வைத்தது... இப்படி உறவுகள் அனைத்தையும்  துறந்து தனி மரமாக நிற்கிறார் ஸ்டாலின்.

கருணாநிதி, காலத்தைப்போன்று ஸ்டாலின் காலத்தில் அவரின் உறவுகள் ஆட்டம்போட முடியாது. அ.தி.மு.க-வின் நிலைமையைச் சொல்லவே வேண்டாம். ஜெயலலிதா, இறந்தபோதுகூடக் கட்சிக்காரர்கள் யாரும் இல்லாமல் சுற்றிலும் தன் உறவுகளை நிறுத்திக்கொண்டார் சசிகலா. ‘ஒன்வுமன் ஆர்மி’யாக இருந்த அ.தி.மு.க-வை, இன்று அரை டஜன் அதிகார மையங்களைக்கொண்டு இயக்கி வருகிறார். கட்சியைவிட்டு விரட்டப்பட்டவர்கள் எல்லாம்... இன்று, போயஸ் தோட்டத்தில் உட்கார்ந்து இருக்கிறார்கள். மாவட்டத்துக்கு ஒருவர் என குடும்ப உறுப்பினர்களைப் பிரித்து... கட்சியைக் கட்டுக்குள்வைத்து வருகிறார் சசிகலா. மன்னார்குடி சென்று திவாகரனைச் சந்திக்கச் சொல்லிக் கட்சிக்காரர்களை வற்புறுத்துவது, தி.மு.க-வினரை மதுரையில் சென்று அழகிரியை சந்திக்கவைத்ததை ஞாபகப்படுத்துகிறது.

ஓர் இயக்கம், அது தோன்றிய காலத்தில் இருந்த பிரச்னைகளுக்கும்... தற்போது உள்ள பிரச்னைகளுக்கும் ஒரே அளவுகோலில் தீர்வுகாண முடியாது. காலத்துக்கு தகுந்தாற்போல் அதன் கொள்கைகள் மாறவேண்டியது அவசியம்தான். அது, அந்த இயக்கத்தின் தொண்டர்கள் மூலமாக நடக்க வேண்டுமே தவிர, தனிநபர் விருப்பு வெறுப்புக்காகக் கட்சியின் கொள்கையை மாற்றுவது... அந்த இயக்கம், தோன்றிய நோக்கத்தைச் சிதைப்பதாகும்.

http://www.vikatan.com/news/tamilnadu/77176-stalin-following-jayalalaithaa-sasikala-following-karunanidhi.art

Categories: Tamilnadu-news

ஸ்டாலினை எதிர்க்கப் போவது சசிகலாவா? தீபாவா? - கதிகலங்கும் கார்டன் பாலிடிக்ஸ்

Sat, 07/01/2017 - 08:08
ஸ்டாலினை எதிர்க்கப் போவது சசிகலாவா? தீபாவா? - கதிகலங்கும் கார்டன் பாலிடிக்ஸ்

sasi_new1_13511.jpg

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் சசிகலாவுக்கும் இடையில் உண்மையிலேயே பிரச்னையா எனத் தொண்டர்கள் கேட்கும் அளவுக்கு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. 'மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதினால், அதை வலியுறுத்தி சசிகலாவும் கடிதம் எழுகிறார். ஓ.பி.எஸ்ஸின் மௌனமும் தீபாவின் அரசியல் பிரவேசமும் கார்டனை கலங்க வைத்துள்ளன' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் வி.கே.சசிகலா. முதல் அறிக்கையாக, 'ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பாக ஸ்டாலின் பேசுவதாக' சுட்டிக் காட்டியிருந்தார். அதேபோல், மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அதில், 'தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாள் விரைவில் வர உள்ளது. ஊரெங்கும் பொங்கல் திருநாள் நடைபெற உள்ள இந்த வேளையில், மீனவர் குடும்பங்களில் தலைவனும், பிள்ளைகளும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு அல்லல்படும் சோகம் சூழ்ந்திருக்க வேண்டுமா?' என குமுறலை வெளிப் படுத்தியிருந்தார். நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடக் கோரி, பிரதமருக்குக் கடிதம் எழுதினார் சசிகலா. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். ஒரே கட்சியில் இருந்து ஒரே கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பப்படுவதை ஆச்சரித்தோடு கவனிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

"ஆட்சியில் இருந்து ஓ.பி.எஸ் விலகுவார் என மன்னார்குடி உறவுகள் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு, பிரதமருக்குக் கடிதம் என முன்பைவிட உற்சாகமாக செயல்பட ஆரம்பித்துவிட்டார். 'முடிவுகளை எடுக்க முடியாமல் முதல்வர் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறார்; அவருக்கு எதிராக அமைச்சர்கள் நம்பிக்கை இல்லாமல் பேசுவதால் ஓட்டெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்' என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பேச ஆரம்பித்திருப்பதை, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வரவேற்கின்றனர். இதை அறிந்துதான், ஸ்டாலினைக் கண்டித்து அறிக்கை விடுகிறார் சசிகலா. அவருக்கு நேரடியாக பதில் சொல்ல விரும்பாமல், தி.மு.கவின் இரண்டாம் கட்டத் தலைவர்களைவிட்டு அறிக்கை விட வைத்தார் ஸ்டாலின். ஜெயலலிதாவைப் போல, தீவிர தி.மு.க எதிர்ப்பை முன்வைத்தால், தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறார். ஆனால், களநிலவரம் சசிகலாவுக்குச் சாதகமாக இல்லை" என விவரித்த அரசியல் விமர்சகர் ஒருவர், 

deepa3_13342.jpg

"பிரதமருக்குக் கடிதம் எழுதிவிட்டு, மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயை நேற்று சந்தித்தார் சசிகலா. 'உங்களுக்கு எதிராக நாங்கள் இல்லை' என்பதை மோடிக்கு நேரடியாக உணர்த்த விரும்புகிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் மூலமாகவே, கார்டனை முடக்கும் பணிகள் நடந்து வருவதாக அச்சப்படுகின்றனர். எனவேதான், பிரதமருக்குக் கடிதம் எழுதும் பணிகள் வேகம் பெற்றுள்ளன. கூடவே, தீபாவின் அரசியல் பிரவேசம் கார்டன் வட்டாரத்தை கதிகலக்கி வருகிறது. தீபாவிடம் பேசும் அரசியல் பிரமுகர்கள், 'சசிகலா எதிர்ப்பு அரசியலை முன்வைக்கும்போது தாய்மார்களின் ஆதரவு உங்கள் பக்கம் இருக்கும். அரசியலில் இளைஞர்கள்தான் வெற்றி பெற்றுள்ளனர். நெடுஞ்செழியனை பின்னுக்குத் தள்ளி கருணாநிதி அதிகாரத்திற்கு வந்தபோது அவருக்கு 44 வயதுதான். கலைஞரை எம்.ஜி.ஆர் வீழ்த்தியபோது, எம்.ஜி.ஆரை வயது குறைவானவராகத்தான் மக்கள் பார்த்தனர். ஜானகியை ஜெயலலிதா வீழத்தும்போது, ஜெயலலிதா இளவயதில் இருந்தார். அதேபோல், அறுபது வயதைத் தாண்டிய ஸ்டாலினையும் சசிகலாவையும் இளைஞர் பலத்தால் உங்களால் முறியடிக்க முடியும்' எனப் பேசி வருகின்றனர். கார்டன் வட்டாரத்தால் அவரை சமாதானப்படுத்த முடியவில்லை. 'நல்ல சூழல்கள் ஏற்படும்போது அரசியலுக்கு வருவேன்' என ஜெயலலிதா சமாதிக்குச் சென்றபோது கூறினார் தீபா. தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறார் தீபா" என விவரித்தார். 

"ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக வரிந்துகட்டிய அமைச்சர்கள் எல்லாம் அமைதியாகிவிட்டனர். மாவட்ட செயலாளர்கள் சந்திப்பை மட்டும் நடத்தி வருகிறார் சசிகலா. ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக தம்பிதுரை வெளியிட்ட அறிக்கை, கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. இதுகுறித்து அவரிடம் சசிகலா பேசியிருக்கிறார். 'அறிக்கை வெளியிடுமாறு அண்ணன்தான் (ம.நடராசன்) சொன்னார். அதன்படியே செயல்பட்டேன்' என விளக்கியிருக்கிறார். அரசியல் சூழல்களை மிகுந்த கவனத்தோடு கவனித்து வருகிறார் சசிகலா. பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் ஸ்டாலினுக்குக் அறிக்கை வெளியிடுவதையும் பதற்றத்தின் ஒரு பகுதியாகத்தான் பார்க்க முடிகிறது.

தீபாவை சந்திக்க சொந்தப் பணத்தைச் செலவு செய்து தொண்டர்கள் வருகின்றனர். அதுவே, சசிகலாவை சந்திக்க நிர்வாகிகள் மட்டுமே வருகின்றனர். போயஸ் கார்டன் தெருவில் கடைகள் முளைப்பதைப் போல, தீபா வீட்டின் முன்பு கடைகள் முளைக்க ஆரம்பித்துள்ளன. அரசியலில் இல்லாத தீபாவுக்கு இவ்வளவு கூட்டம் கூடுவதை மன்னார்குடி உறவுகள் ரசிக்கவில்லை. ஆறுமுகநேரி, காங்கேயம், வெள்ளக் கோவில் என பரவலாக அவருக்குப் போஸ்டர்கள் முளைக்கின்றன. 'சசிகலாவுக்குத் தொண்டர்கள் ஆதரவு இல்லை' என்பது அம்பலப்பட்டுவிடுமோ என சீனியர் நிர்வாகிகள் கவலைப்படுகின்றனர். ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் செய்யப் போவது சசிகலாவா? தீபாவா என அரசியல் களம் திசைமாறியிருக்கிறது" என்கின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள். 

மத்திய அரசின் நெருக்குதல்; ஓ.பி.எஸ்.ஸின் சைலண்ட் மோட்; தீபாவின் திடீர் பிரவேசம்; ஸ்டாலின்-ஓ.பி.எஸ் பாசம் என நான்கு முனைத் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறார் சசிகலா. 'நான்கு சுவற்றுக்குள் இருந்து கொண்டே இதுவரையில் அரசியல் செய்து வந்தவர், முதல்முறையாக அரசியல் களத்தை அச்சத்தோடு கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். அ.தி.மு.கவின் எதிர்காலம் குறித்த அச்சமும் தொண்டர்கள் மத்தியில் சூழ்ந்துள்ளன' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/77171-who-will-oppose-stalin-deepa-vs-sasikala.art

Categories: Tamilnadu-news

சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் திடீர் சந்திப்பு! 'அதிமுகவில் தொடர்வேன்' என பேட்டி

Sat, 07/01/2017 - 06:46
சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் திடீர் சந்திப்பு! 'அதிமுகவில் தொடர்வேன்' என பேட்டி

sampat_11442.jpg

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை இன்று நாஞ்சில் சம்பத் திடீரென சந்தித்து பேசினார். அதிமுகவில் இருந்து விலகுவதாக வந்த தகவலையடுத்து, இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அதிமுக செய்தித் தொடர்பாளராக இருக்கும் நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைதியாகவே இருந்தார். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, அமைச்சர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை வாழ்த்து தெரிவித்த நிலையில், நாஞ்சில் சம்பத் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா பரிசாக கொடுத்த இனோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத். அப்போது, தேர்தல் பிரசாரம் எதுவும் இல்லாததால் காரை ஒப்படைத்ததாக விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து  அதிமுகவில் அவர் விலகப் போவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை போயஸ் கார்டன் இல்லத்தில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், 'அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன். சசிகலாவின் ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/77158-nanjil-sampath-meets-sasikala.art

Categories: Tamilnadu-news

ராமமோகன ராவிடம் மீண்டும் விசாரணை

Fri, 06/01/2017 - 20:33
ராமமோகன ராவிடம் மீண்டும் விசாரணை
 
 
 

முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக்கிடம், வரு மான வரித் துறையினர், மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

Tamil_News_large_168517620170106230314_318_219.jpg

இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறிய தாவது: டிச., 30ல் ஆஜரான விவேக், நாங்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு, பதில் அளித்தார். முழுமையான விளக்கம் அளிக்க,

கூடுதல் அவகாசம் கேட்டு உள்ளார். அதுபோல், ராவின் அலுவலகத்தில் சிக்கிய, இரண்டு மொபைல் போன்களில் உள்ள பதிவுகளை, ஆய்வு செய்ய உள்ளோம். சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என்ப தால், சேகர் ரெட்டி,ராமமோகன ராவ் வீடுகளில், முதலில் சோதனை செய்தோம்.

அந்த சோதனைகள் முடிந்ததும், புஹாரி குழுமத் தில், சோதனையை துவங்கினோம். தற்போது, அதில் அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர். அது முடிந்ததும், ராமமோகன ராவ் மற்றும் விவேக் கிடம், மீண்டும் விசாரணை நடத்துவோம். அரசு அதிகாரி என்பதால், ராமமோகன ராவ் மீது, இப்போதைய நிலையில், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்ய முடியாது.

எனினும், விவேக் மீது வழக்குப் பதிவு செய்ய முடி யும். ஆனால், அவர் வீட்டில், புதிய ரூபாய் நோட்டு கள் சிக்கவில்லை. அதனால், அதுவும் சாத்தியம்

 

இல்லை. அவரது மாமனார் வீட்டில் சிக்கிய, புதிய ரூபாய் நோட்டுகளை, வங்கி அதிகாரிகளு டன் கூட்டு வைத்து மாற்றியிருந்தால் மட்டுமே, விவேக் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685176

Categories: Tamilnadu-news

ஜெ., - சசி வாங்கி குவித்த நிலங்கள் : திரும்ப கிடைக்குமா என விவசாயிகள் ஏக்கம்

Fri, 06/01/2017 - 20:33
ஜெ., - சசி வாங்கி குவித்த நிலங்கள் :
திரும்ப கிடைக்குமா என விவசாயிகள் ஏக்கம்
 
 
 

திருநெல்வேலி: ஏக்கருக்கு, 2,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் கள், ஜெ., இறந்ததை அடுத்து, தங்களுக்கு திரும்ப கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

 

Tamil_News_large_1685197_318_219.jpg

கடந்த 1991 - 96 அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா பெயர்களில், தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டன.

அவர்கள் வாங்கி குவித்த சொத்து பட்டியலில், துாத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகே சேரகுளம், வல்லகுளம், மீரான்குளம், அரசர்குளம் உள்ளிட்ட இடங்களில், 969 ஏக்கர் நிலங்களும் அடக்கம். வானம் பார்த்த பூமியான

இந்த பகுதியில், ரோட்டின் இருபுறங்களிலும், வாங்கி குவிக்கப்பட்ட இந்த நிலங்கள், தற்போது, வேலியிடப்பட்டு தரிசாக கிடக்கின்றன.
வல்லகுளத்தைச் சேர்ந்த வைகுண்டம், 60, என்பவர்கூறியதாவது:

எங்களுக்கு பூர்வீகமாக, இந்த பகுதியில் நிறைய நிலங்கள் இருந்தன; விவசாயம் செய்து வந்தோம். மழையில்லாத காலங்களில் கொள்ளு பயறு வகைகளை சாகுபடி செய்தோம். கடந்த, 1995ல் ஜெயலலிதா, சசிகலாவிற்கு நிலம் வேண்டும் என கூறி, கருங்குளத்தைச் சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம், நிலம் வாங்கினர். சசிகலா வருவார் என கூறி, அந்த இடத்தில் மாடி கட்டடம் எல்லாம் கட்டினர்.

அடிமாட்டு விலை :


அப்போது, எங்கள் தந்தை ராமகிருஷ்ணன் பெயரில் தான் நிலம் இருந்தது. இந்தபகுதி முழுவதும் பலரிடமும் நிலம் வாங்கினர். பெரும்பாலும் நாடார்கள், யாதவர்களிடம், அடிமாட்டு விலைக்கு வாங்கினர். ஏக்கருக்கு வெறும், 2,000 ரூபாய் வீதம் எங்களிடம், 40 ஏக்கர் வாங்கினர். சுற்று வட்டாரம் முழுக்க ஆயிரக்கணக்கான ஏக்கர்களை வாங்கினர்.

 

ஆனால், சும்மா தான் போட்டுள்ளனர். இந்த இடத்தில், 'எம்.பி. சுகர்' என்ற போர்டு மட்டும் உள்ளது.

விவசாயம் :


கிட்டத்தட்ட, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெறுமனே கிடக்கும் நிலத்தை, எங்களுக்கு திரும்ப அளித்தால், மீண்டும் விவசாய பணி களை துவங்கி, வாழ்க்கை நடத்துவோம். அந்த அம்மா தான் இறந்து விட்டாரே... அந்த நிலங்கள் எங்களுக்கு மீண்டும் கிடைத்தால், விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685197

Categories: Tamilnadu-news

சசிகலாவுக்கு எதிராக தீபா வீட்டில் குவியுது கூட்டம்: அரசு இடையூறு செய்வதாக கட்சியினர் மறியல்

Fri, 06/01/2017 - 20:32
சசிகலாவுக்கு எதிராக
தீபா வீட்டில் குவியுது கூட்டம்:
அரசு இடையூறு செய்வதாக கட்சியினர் மறியல்
 

 

  • gallerye_234457830_1685171.jpg

 

 
 

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டின் முன், நாளுக்கு நாள் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தன் பேச்சு அனைவருக்கும் கேட்க வேண்டும் என்பதால், 'மைக்' பிடித்து பேச ஆரம்பித்துள்ளார் தீபா. கூட்டம் குவிவதால், இடையூறு ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதாக, தொண்டர்கள் நேற்று, மறியல் செய்தனர்.

 

Tamil_News_large_168517120170106234347_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, அரசியலுக்கு வரும் படி, வலியுறுத்தி வருகின்றனர். ஜெயலலிதா வசித்து வந்த, போயஸ் கார்டன் பகுதி, வெறிச்சோடியுள்ள நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

தினமும் மாலை, 5:00 மணிக்கு வீட்டின் முன்

குவியும் தொண்டர்களிடம், தீபா பேசுகிறார். இதன் காரணமாக, நாளுக்கு நாள் அவர் வீட்டிற்கு வரு வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றும், ஏராளமானோர் குவிந்தனர்.

நேற்று, அனைத்து தொண்டர்களுக்கும் கேட்கும் வகையில், 'மைக்' பிடித்து பேசிய தீபா, ''உங்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறேன்; உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன். எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., புகழைகாப்பாற்றுவேன்,'' என்றார்.
 

சாலை மறியல்


நேற்று, வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் குவிந்ததால், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சி துப்புரவு வாகனம், அடிக்கடி சாலையில் வந்து சென்றது. இதனால், ஆத்திரமடைந்த தொண்டர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் போலீசார், அவர்களை சமாதானம் செய்து, கலைந்து போகச் செய்தனர்.

தீபா வீட்டின் முன் நடைபாதை கடை


அ.தி.மு.க., அலுவலகம் முன், நடைபாதை கடை வைத்திருந்த வியாபாரிகள், அங்கு வியாபாரம்

 

டல்லடிப்பதால், தீபா வீட்டின் முன் கடை போட்டுள்ளனர். இது குறித்து, பெரம்பலுாரைச் சேர்ந்த, நடைபாதை வியாபாரி தணிகாசலம் கூறியதாவது:

கட்சி அலுவலகம் முன், 25 ஆண்டுகளாக கடை வைத்திருந்தேன். தற்போது அங்கு வியாபாரம் குறைந்து விட்டது. தீபா வீட்டிற்கு அதிகம் பேர் வருவதால், இங்கு கடை வைத்துள்ளேன். கட்சி அலுவலகம் அருகே, 200 ரூபாய்க்கு வியாபாரம் இருக்கும். இங்கு, 400 ரூபாய் வரை வியாபாரம் நடக்கிறது.

நான், ஜெயலலிதா படம், அ.தி.மு.க., கொடி போன்றவற்றை விற்கிறேன். இங்கு வருவோர், தீபா படத்தை கேட்கின்றனர்; அவர் படம் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 

தீபா பேரவை துவக்கம்


துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணி, தீபா பேரவை துவக்கி உள்ளார். இதில், ஏராளமானோர் சேர்ந்து வருகின்றனர். தீபா பேரவை கூட்டம், நேற்று நடந்தது. இதில், ஜெ., மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

'ஜெ., மறைவில் உள்ள மர்ம முடிச்சுகளை, அவிழ்க்க வேண்டும்; போயஸ் கார்டன், வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக்க வேண்டும்; தீபா அரசியலுக்கு வர வேண்டும் என வலியு றுத்தி, தொடர் உண்ணாவிரதம் இருப்பது' என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685171

Categories: Tamilnadu-news

* அ.தி.மு.க., ஆதரவுக் கூட்டத்தை அழைத்து வர...ரூ.200!:* எதிர்ப்பாளர்களைச் சமாளிக்க 'படியளப்பு' தீவிரம்

Fri, 06/01/2017 - 20:30
* அ.தி.மு.க., ஆதரவுக் கூட்டத்தை அழைத்து வர...ரூ.200!:* எதிர்ப்பாளர்களைச் சமாளிக்க 'படியளப்பு' தீவிரம்

Tamil_News_large_1685437_318_219.jpg

 

அ.தி.மு.க.,வில், ஆதரவுக் கூட்டத்தை அழைத்து வர, தலைக்கு, 200 ரூபாய் பட்டுவாடா செய்யப்படும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா தலைமைக்கு, தொண்டர்களிடமும், மக்களிடமும் எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்க, 'படியளப்பு' ஏற்பாடுகளில், நிர்வாகிகள் தீவிரம் காட்ட துவங்கி உள்ளனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இரண்டாவது நாளாக நேற்று, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளை, அவர் சந்தித்தார்.

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு, ஜெயலலிதா வரும்போது, அவரை வரவேற்க, கட்சியினர் திரண்டு வருவர்; தாரை தப்பட்டை முழங்க, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பர். அதே போன்ற வரவேற்பும், ஆதரவும், தற்போது சசிகலாவுக்கும் இருப்பதாக காட்ட, ஆண்களும், பெண்களும் பணம் கொடுத்து, அழைத்து வரப்படுகின்றனர்.

நேற்று அந்த பெண்கள், கட்சி அலுவலகம் உட்புறம், வரிசையில் நிறுத்தப்பட்டனர். இவர்களில், பெரும்பாலானோர் மூதாட்டிகள். காலை, 10:45 மணிக்கு சசிகலா வந்தார். அவர் கார் உள்ளே நுழைந்ததும், அங்கு கூடியிருந்த பெண்கள், சசிகலாவை வாழ்த்தி கோஷமிட்டனர். சசிகலா அலுவலகத்தின் முதல் மாடிக்கு சென்று, 'போர்டிகோ'வில் நின்று, அவர்களை பார்த்து, இரட்டை விரலை காட்டினார்.

அவர் உள்ளே சென்றதும், அழைத்து வரப்பட்ட பெண்கள் வெளியேற முயன்றனர்; போலீசார் தடுத்து நிறுத்தினர். சசிகலா செல்லும் வரை, உள்ளேயே இருக்கும்படி வலியுறுத்தினர். அதை ஏற்றுக் கொள்ள மறுத்த பெண்கள், போலீசாரை மீறி வெளியேற முயன்றனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதற்கு இடையில், எம்.ஜி.ஆர்., சிலையை சுற்றி போடப்பட்டிருந்த, தடுப்பைத் தாண்டி, பெண்கள் வெளியேறினர். அதை பத்திரிகையாளர்கள், புகைப்படம் எடுத்தனர். உடனே போலீசார், பெண்களை வெளியேற அனுமதி அளித்தனர்.கட்சி அலுவலகத்திற்கு வெளியே வந்ததும், அந்த பெண்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டனர்; பின், அழைத்து வந்த நிர்வாகிகள், தலா, 200 ரூபாய், அவர்களுக்கு வழங்கினர். சில பெண்கள் பணம் போதாது எனக் கூறி, சண்டை போட்டனர்; பணம் கிடைத்ததும், கிளம்பிச் சென்றனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள், 'இவர்களுடைய இம்சை தாங்கவில்லை; இப்படி தான் கூட்டம் சேர்க்கின்றனரோ...' எனக் கருத்து தெரிவித்தபடி, அ.தி.மு.க., அலுவலகத்தை கடந்து சென்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685437

Categories: Tamilnadu-news

சசிகலாவின் வீடா இது?

Fri, 06/01/2017 - 19:06

 

சென்னை பழைய மஹாபலிபுரம் ரோட்டில் பயனூர் இன்னும் ஒரு இடத்தில் சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு பெரிய சொகுசு பங்களா. மன்னார்குடி மக்களுக்கு சொந்தமான பெரிய வீடு

Categories: Tamilnadu-news

அப்போலோ, போயஸ் கார்டன், அ.தி.மு.க. அலுவலகம்... இப்போது எப்படி இருக்கின்றன?! #3MinuteRead

Fri, 06/01/2017 - 16:41
அப்போலோ, போயஸ் கார்டன், அ.தி.மு.க. அலுவலகம்... இப்போது எப்படி இருக்கின்றன?! #3MinuteRead

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்து 30 நாட்களைக் கடந்துவிட்டபோதிலும்... அ.தி.மு.க வட்டாரத்தில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனாலும், அடிமட்டத் தொண்டர்களின் மனங்களில்... ஜெயலலிதா மட்டும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது நிதர்சனம். சிகிச்சைப் பலனின்றி ஜெயலலிதா இறந்த பிறகு... அவர் உடலைக் கொண்டுசென்ற இடங்கள், அன்றும்... இன்றும் எப்படியிருக்கின்றன என்பதே இந்தத் தொகுப்பு...

எம்.ஜி.ஆர் சமாதி

அப்போலோ அன்று: 

கடந்த டிசம்பர் 5-ம் தேதி மதியம் 2.30 மணிக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக  முதல்வர் ஜெயலலிதா, ‘அபாயக்கட்டத்தில் இருக்கிறார்’ என அப்போலோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியானது. இதன் காரணமாக, தொண்டர்கள் படை அப்போலோவின் வாசலை முற்றுகையிடத் தொடங்கியது. மாலை 5.30 மணிக்கு, ஒருசில தொலைக்காட்சி ஊடகங்கள், ‘முதல்வர் ஜெயலலிதா காலமானார்’ என செய்தி வெளியிட்டதால்... அப்போலோ வாசலில் கலவரம் வெடித்தது. 15 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்தக் கலவரத்தை காவல் துறை கட்டுக்குள் கொண்டுவந்தது. அதன் பிறகு, அப்போலோவில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குத் தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு... சி.ஆர்.பி.எஃப். வீரர்கள், என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் மற்றும் பவுன்சர்கள் குவிக்கப்பட்டனர். ‘இரவு 11.30 மணிக்கு, சிகிச்சைப் பலனின்றி... ஜெயலலிதா உயிரிழந்ததாக’ நள்ளிரவு 12.03 மணிக்கு அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை நிர்வாகம். இதனால், அ.தி.மு.க உண்மை விசுவாசிகள் கதறி அழத்தொடங்கி, கூச்சலிட்டுக்கொண்டு இருந்தனர். பின் சரியாக அதிகாலை 2.26 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் பலத்த பாதுகாப்போடு, போயஸ் கார்டனுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.   

அப்போலோ இன்று: 

அப்போலோ

ஜெ. இறந்து ஒரு மாதத்துக்குப் பிறகு, அப்போலோவில் நிலைமை தற்போது சுமுகமாகி இருக்கிறது. வாசலில் இரண்டு செக்யூரிட்டிகள் மட்டும் நின்று... கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அருகே இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில்... ஆட்டோக்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி வரிசைகட்டி நிற்கின்றன. முழுக்க முழுக்க அன்று தொண்டர்களால்  சூழப்பட்டு இருந்த... அப்போலோவின் எமர்ஜென்ஸி எக்ஸிட் பகுதி, ஃபார்மஸி தெரு, வேலாஸ் தோட்டம் 2-வது தெரு... ஆகியவை மக்களின் நடமாட்டம் இன்றி வெறிச்சொடி இருந்தன. அப்போலோவின் வாசலில், ஜெ.-வும்... சசியும் ஒன்றாக நிற்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அன்று, பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு இருந்த தடுப்பு வளையங்களில் சில... இன்னும் எடுத்துச் செல்லப்படாமல் அங்கேயே ஒதுக்கிவைக்கப்பட்டு இருக்கின்றன. 

போயஸ் கார்டன் அன்று: 

கடந்த டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 2.40 மணியளவில்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடான வேதா இல்லத்தில்... அவருடைய உடல், ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு, சுமார் இரண்டு மணிநேரம் வைக்கப்பட்டு இருந்தது. இங்கு, தொண்டர்களும்... பொதுமக்களும் சொல்லொண்ணாத் துயரத்துடன் கண்கலங்கி நின்றனர்.

போயஸ் கார்டன் இன்று:

போயஸ் கார்டன்

போயஸ் கார்டனில் குவிக்கப்பட்டிருந்த போலீஸார் விலக்கிக்கொள்ளப் பட்டதால்... அதன், முந்தைய தெருவான பின்னி சாலையின் முனையில் 3 போலீஸாரும், போயஸ் கார்டனின் முனைப்பகுதியில் 5 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போயஸ் கார்டன் தெருவுக்கு நெருக்கமானவர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கின்றனர். அந்தத் தெருவின் முனைப் பகுதியில் 5 நிமிடங்களுக்கு மேல் நிற்கும் நபர்களிடம்... விசாரணை செய்வதில் முனைப்புக் காட்டுகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள், அந்தப் பகுதியைக் கடப்பதில் மிகுந்த கெடுபிடிகளைச் சந்திக்க நேரிடுகிறது. 

அ.தி.மு.க. கட்சி அலுவலகம் அன்று:  

கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு வெகுநேரம் ஆகியும் சீனியர்களின் தாமதத்தால் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறவில்லை. நள்ளிரவு 11.30 மணிக்கு மேல், ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி உள்ளிட்டோர் அலுவலகம் வர... சிறிது நேரத்தில் கூட்டம் தொடங்கியது. ஜெயலலிதா மரணித்தது தொடர்பான அறிக்கையை அப்போலோ நிர்வாகம் வெளியிட்ட பிறகு, அவைத்தலைவர் மதுசூதனன், ‘பன்னீர்செல்வம் முதல்வராகத் தேர்வுசெய்யப்படுகிறார்’ என்று அறிவிக்கப்பட்டார்.

அ.தி.மு.க. கட்சி அலுவலகம் இன்று:

அதிமுக அலுவலகம்

தற்போது ராயப்பேட்டை, டி.டி.கே. சாலையில் இருக்கும் அ.தி.மு.க தலைமை அலுவகத்தைப் பாதுகாக்கும் பணியில் ஒரே ஒரு போலீஸார் மட்டும் அங்கு பணிபுரிந்து வருகிறார். தலைமை அலுவலம் இருக்கும் சாலையின் இருமருங்கிலும் ‘பேரி-காடுகள்’ வைக்கப்பட்டு உள்ளன. கட்சி அலுவலகத்தின் உள்ளே வைக்கப்பட்ட பேனர்களில் ஒன்று... ஜெயலலிதாவை ஒதுக்கி, சசிகலாவை முன்னிறுத்துகிற மாதிரி வைக்கப்பட்டிருக்கிறது. 

ராஜாஜி ஹால் அன்று:

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகில் இருக்கும் ராஜாஜி ஹாலுக்கு கடந்த டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4.35 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டது. இதனால் பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரின் படையெடுப்பால் ராஜாஜி ஹால் வளாகம் திணறியது.

ராஜாஜி ஹால் இன்று:

ராஜாஜி ஹால்

ராஜாஜி ஹாலின் மெயின் கேட், இன்று பூட்டப்பட்டிருக்கிறது. அதன், உள்ளே செல்வதற்கு ஓமந்தூரார் மருத்துவமனையின் வழியாகத்தான் செல்லும்படி தடுப்புகள் போடப்பட்டு இருக்கின்றன. தவிர, அங்கு 2 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெ.-வைத் தாங்கியிருந்த ராஜாஜி ஹால், தற்போது இருள் சூழ்ந்து காட்சி அளித்தது. ‘‘ஜெ. வைக்கப்பட்டு இருந்த இடத்தை... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மக்கள் வந்து... வெளியில் நின்றபடி பார்வையிட்டுச் செல்கின்றனர்’’ என்றார் காவலர் ஒருவர்.

ஜெயலலிதா சமாதி அன்று:

எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்குள்ளேயே ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா சமாதி இன்று:

ஜெயலலிதா சமாதி

இன்று ஜெயலலிதாவுடைய சமாதியில்... தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. அதில் பெண்கள் பலர், கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தியது... பார்க்கும் மனங்களைக்கூடக் கண்ணீர் சிந்தவைத்தது. அம்மாவின் உண்மை விசுவாசிகள் பலர், இன்றும் அங்கே மொட்டைப்போட்டு அஞ்சலி செலுத்துவதைப் பார்த்தால்... தற்போதைய அ.தி.மு.க கழகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் பொறுக்க முடியாமல்தான் மொட்டைப் போட்டிருப்பார்களோ என்று சொல்லத் தோன்றுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/77086-apollo-poes-garden-admk-office--now-and-then-3minuteread.art

Categories: Tamilnadu-news