தமிழகச் செய்திகள்

உடை, கம்மல் முதல் நாற்காலி வரை கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவாக மாறிவரும் சசிகலா!

Fri, 06/01/2017 - 11:57
உடை, கம்மல் முதல் நாற்காலி வரை கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவாக மாறிவரும் சசிகலா!

sasikala_new13_13494.jpg

ரசியல் தலைவர்கள் தங்களுக்கென தனிஅடையாளம் இருக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள்.  அரசியல் தலைவர்கள் எதேனும் ஒரு விஷயத்தில் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் மாறுபட்டு இருப்பார்கள். அதிலும் பெண் அரசியல் தலைவர்கள் என்றால், கண்டிப்பாக குறிப்பிடும்படியான தனித்துவம் இருந்தே தீரும். அதுபோல அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால், அந்த மாற்றங்கள் அனைத்தும் மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவைப் பின்பற்றுவதுபோலத் தோன்றுகிறது. அப்படி அவரைப்போலவே சசிகலா பின்பற்றும் மாற்றங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

உடை:

பொதுச் செயலாளர் பதவிக்கு அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களால் நியமிக்கப்பட்டவர் சசிகலா. பொதுச்செயலாளர் ஆவதற்கு முதல்நாள் வரை சாதாரணமான உடையில் காணப்பட்டார். பொதுச்செயலாளர் ஆனபிறகு கழுத்து மூடப்பட்ட , கை முட்டி நீள ரவிக்கையும் அணிய ஆரம்பித்தார். ஏப்போதும் டல்லான கலர் புடவைகளை மட்டுமே அணிந்து வந்தவர், அன்றிலிருந்து பளீர் நிறங்களைக் கொண்ட உடைகளை அதிகம் உடுத்துகின்றார்.  புடவைக்குப் பொருத்தமான  நிறங்களில் ரவிக்கையும் அணிகிறார். ஜெயலலிதாவும் பெரும்பாலும் இதே தோற்றத்தில்தான் இருப்பார். உடைகளில் இருக்கும் வித்தியாசம் ஒன்றுதான். அவர் புடவை முந்தானையை தோள்களை மூடியபடி இருப்பார். சசிகலா இன்னும் அவ்வாறு மாறவில்லை.

தோடு (கம்மல்):

ஜெயலலிதா, சின்னதாக வைரத்தோடு மட்டுமே அணிந்திருந்தார். அதேபோல, இப்போது சசிகலாவும் அதே மாதிரி தோடு அணியத் தொடங்கியுள்ளார். 

சசிகலா

வாட்ச்:

பெரும்பாலும் இரு கைகளிலும் வளையல் அணியும் பழக்கம் உள்ளவர் சசிகலா. சில சமயங்களில் புடவை நிறத்துக்குத் தகுந்தாற் போல வாட்ச் அணியும் பழக்கமும் கொண்டவர். வாட்ச்-சின் பட்டை மிகவும் சின்னதாக இருக்கும். பொதுச்செயலாளர்  ஆனதும், ஜெயலலிதாவை போலவே கருப்பு பட்டை உடைய வாட்சை கட்டுகின்றார். அது போல  வாட்சின் டையலும் பெரியதாக இருக்கிறது. 

வைர மோதிரம்:

பொதுச்செயலாளர் பதவி ஏற்க அ.தி.மு.க அலுவலகத்துக்கு டிசம்பர் 31-ம் தேதி வந்தார் சசிகலா. அன்று எப்போதும் இல்லாத அளவுக்கு வைர மோதிரம் அணிந்திருந்தார். மிக எளிமையாக இருந்தவர், திடீரென்று அன்று ஆடம்பரத்தை வெளிகாட்டத் தொடங்கினார்.

தலை முடி:

எப்போதும் சசிகலா தலைமுடியை பின்னலாகப் போட்டிருப்பார். பொதுச்செயலாளர் பதவியேற்றபிறகு தன்னுடைய தலைமுடியை வலை போட்டு மூடியிருந்தார். இதுவும் ஜெயலலிதாவின் ஸ்டைல் தான்.

பொட்டு:

ஜெயலலிதா ஐயங்கார் வழக்கப்படி நெற்றியில் நாமம் போட்டிருப்பார். அதையும் தவறவிடாமல் சசிகலா பின்பற்றிக் கொண்டிருக்கிறார். வட்டமாக ஒரு பொட்டு வைத்து அதன் மேல் நாமம் போட்டுத்தான் இப்போதெல்லாம் சசிகலா அலுவலத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்.

11_13141.jpg

கார்:

ஜெயலலிதா பயன்படுத்திய TN09BE 6167 என்ற எண் கொண்ட லேண்ட் க்ரூஸர் காரில்தான் சசிகலா பயணிக்கிறார். அவரது பாதுகாப்புக்கு  நான்கு கார்கள் உடன் வருகின்றன. காரின் முன்பக்கம் ஜெயலலிதா உட்காரும் இடத்தில் இப்போது சசிகலா உட்காருகின்றார். 

நாற்காலி:

சசிகலா அ.தி.மு.க அலுவலகம் வருவதற்கு முன்னரே ஜெயலலிதா பயன்படுத்திய நாற்காலிகள் வந்து இறங்கின. அதில் இரண்டு நாற்காலிகள் அலுவலகத்தின் கீழ் தளத்திலும், மற்ற இரண்டு நாற்காலிகள் மேல் தளத்திலும் போடப்பட்டிருக்கின்றன. அந்த நாற்காலிகளில் ஒன்றில்தான் சசிகலா உட்கார்ந்தார். அதில் உட்கார்ந்து தான் கையெழுத்திட்டார். 

உச்சி முதல் உள்ளங்கால் வரை ஜெயலலிதாவை பின்பற்றுகின்றார் சசிகலா.ஜெயலலிதாவை பார்ப்பதுபோல உள்ளது என ஒரு தரப்பு மக்கள் சொன்னாலும், 'ஜெயலலிதா எப்போதும் ஜெயலலிதாவாக மட்டுமே இருக்கமுடியும்' என்று ஜெ.,வின் விசுவாசத் தொண்டர்கள் சொல்கிறார்கள், சந்திரமுகி படத்தில் ரஜினி, 

“கங்கா சந்திரமுகியா நின்னா

கங்கா சந்திரமுகியா நடந்தா

கங்கா முழு சந்திர முகியா மாறினா” என்று சொல்வது போல, சசிகலா ஜெயலலிதாவாக மாற , முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரியத்தான் செய்கிறது. வெளிதோற்றத்தில் ஜெயலலிதாவை பின்பற்றலாம். ஆனால், அவரின் தைரியம், கம்பீரம், ஆளுமையில் அவரை பின்பற்றுவாரா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/77079-is-sasikala-copying-jayalalithaa.art

Categories: Tamilnadu-news

பிறப்பில் இருந்து விடுதலை பெறுவதே, சந்தோஷம்! - இதுவரை வெளிவராத ஜெயலலிதா பேட்டி

Fri, 06/01/2017 - 10:48
பிறப்பில் இருந்து விடுதலை பெறுவதே, சந்தோஷம்! - இதுவரை வெளிவராத ஜெயலலிதா பேட்டி

ஜெயலிலதா

சிமி கேர்வல், 'ரான்டவுஸ் (Rendevous)' என்ற தன் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக 1999-ம் ஆண்டு ஜெயலலிதா கொடுத்த நேர்காணலின் எடிட் செய்யப்படாத தொகுதியை நேற்று இரவு வெளியிட்டுள்ளார்.

''ஜெயா ஜி உடனான எனது நேர்காணல், ஒரு மணி நேரத்துக்கும் மேல் சென்றது. ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நேரச் சுருக்கம் காரணமாக, அதை 46 நிமிடங்களுக்குள் எடிட் செய்ய வேண்டியதாயிற்று. மிக அழகான அவரின் பல வார்த்தைகளை, நிகழ்சியில் இருந்து வெளியே எடுத்ததில் எனக்கு மிகவும் வருத்தம். ஆனால், மக்கள் அதை முழுமையாகக் காண விரும்புகிறேன்.

ஜெயா ஜி அவர் எண்ணங்களையும் வாழ்க்கையையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை எனக்கு அளித்தார். அவருக்கான நினைவஞ்சலியாக என் நேர்காணலின் முழு பகுதியையும் நான் மக்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்" என்ற குறிப்புடன், சிமி வெளியிட்டுள்ள வீடியோவில், பார்க்கப்படாத அந்த 24 நிமிட ஃபுட்டேஜ் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வைரலாகி கொண்டிருக்கிறது இந்த வீடியோ.

ஜெயலலிதாஜெயலலிதாவின் கேட்கப்படாத அந்த வார்த்தைகளின் ஹைலட் தொகுப்பு இங்கே படிக்கலாம்.

"மகிழ்சியின் அளவுகோல் இங்கு யாரிடமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.''

''நான் கர்மாவை நம்புகிறேன்.''

''ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமை என்று ஒன்று இருக்கும்.''

''சிறு வயதில் நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ள பெண். மேடை வெளிச்சத்தை எப்போதும் நான் சௌகர்யமாக உணர்ந்ததில்லை. மேடையில் ஏறுவதையும், ஒரு கூட்டத்தின் முன் நடனமாடுவதையும் நான் வெறுத்திருக்கிறேன்.

''என் அம்மா மட்டுமே என் உலகமாக இருந்தார். அம்மாவின் இறப்புக்குப் பின், அந்த இழப்பை எம்.ஜி.ஆர். என் வாழ்க்கையில் ஈடுசெய்தார். அவர் எனக்கு அனைத்துமாக இருந்தார். அவர் ஒரு வகையில், என் வாழ்க்கையின் பொறுப்பை எடுத்துக்கொண்டார்."

 

 

''என் சினிமா வாழ்க்கை...  வெல்... என் காலகட்டத்தின் நம்பர் 1 நடிகையாக நான் இருந்தேன்.''

''ஆரம்பகாலத்தில், அனுமதி மறுக்கப்பட்ட, வாழவே பாதுகாப்பில்லாத ஓர் அரசியல் தளத்தில் நான் வைக்கப்பட்டேன். பழைய ஆங்கிலத் திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்... பழிவாங்கப்பட வேண்டியவர்கள் பகைமை சூழ்ந்த பாழ் கட்டடங்களில் வைக்கப்பட்டிருப்பார்கள். அப்படியான ஒரு மிடீவல் கால சிறைச்சாலை போலதான் என்  சூழலும் இருந்தது."

''கட்டுப்பாடுகள் களையப்பட்ட, சுதந்திரம் மிகுந்த நாடாகச் சொல்லப்படும் அமெரிக்காவில்கூட, கண்ணுக்கு முன் தெரியக்கூடிய எதிர்காலத்தில்கூட ஒரு பெண் ஜனாதிபதியாக வரும் சூழலை உங்களால் பார்க்கமுடிகிறதா? குறைந்தபட்சம், துணை ஜனாதிபதியாகக் கூட இன்னும் அங்கு ஒரு பெண்ணால் தலைமையைக் கைப்பற்ற முடியவில்லை. ஆணாதிக்கம் என்பது அமெரிக்க சமூகத்திலும் உள்ளது. எனில், இந்திய அரசியலில் எந்தளவுக்கு ஆணாதிக்கத்தின் வேர்விட்டிருக்கும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.''

''சசிகலா கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சிறையில் கழிக்க நேர்ந்தது. அவர் மிகவும் சிரமங்கள் அனுபவிக்க நேரிட்டது. என்னுடன் பிறந்த சகோதரி யாரும் இல்லை. அப்படி ஒரு சகோதரியாக சகிகலா எனக்குக் கிடைத்தார்.''

''இப்போது அச்சம் என்பது என் வாழ்க்கையில் இல்லை.''

''ஒருவர் சந்தோஷத்தை அடையும் ஒரே வழியாக நான் நம்புவது, மோட்சத்தை அடைவதால் மட்டுமே. அதாவது, பிறப்பில் இருந்து விடுதலை பெறுவது!"

http://www.vikatan.com/news/womens/77049-unabridged-version-of-jayalalithaa-interview.art

Categories: Tamilnadu-news

டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் உறுதியானது!

Fri, 06/01/2017 - 10:22
டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் உறுதியானது!

ttv_dinakaran_1_15339.jpg

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை விதித்த ரூ.28 கோடி அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

1991 முதல் 1995 வரை வெளிநாட்டில் பலகோடி ரூபாய் முதலீடு செய்ததாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிந்து ரூ.28 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து, டி.டி.வி.தினகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், டி.டி.வி.தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தாெகையை உறுதி செய்ததோடு, அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், தினகரனை திவாலானவராக அறிவிக்க வேண்டும் எனக்கோரிய வழக்கு விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/77071-hc-dismissed-dinakarans--foreign-exchange-case.art

Categories: Tamilnadu-news

'இனி சசிகலா முதல்வர் என்று சொல்ல வேண்டாம்!' -கார்டன் உத்தரவும் ஸ்டாலின் அறிக்கையும்

Fri, 06/01/2017 - 06:36
'இனி சசிகலா முதல்வர் என்று சொல்ல வேண்டாம்!' -கார்டன் உத்தரவும் ஸ்டாலின் அறிக்கையும் 

sasi_speech_11187.jpg

முதலமைச்சர் பன்னீர்செல்வம் குறித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது கார்டன். 'தீபாவின் அரசியல் பிரவேசமும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நீடிப்பதையும் மன்னார்குடி உறவுகள் ரசிக்கவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அன்றாட அரசுப் பணிகளைக் கவனிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். புத்தாண்டுக்கு பிரதமருக்கு வாழ்த்துச் சொல்வதில் ஆரம்பித்து, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை சந்திப்பது, பா.ஜ.க தலைவர் தமிழிசைக்கு நேரம் ஒதுக்கியது என உற்சாகத்தோடு வலம் வருகிறார். நேற்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தி, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன். தி.மு.க சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையில் உள்ள நியாயத்தை முதலமைச்சர் உணர்ந்திருந்தாலும், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத ஏதோ ஒரு நெருக்கடியில் இருக்கிறார் என்பதை அந்த சந்திப்பில் உணர முடிந்தது. அதிகாரத்தைத் திரைமறைவில் இருந்து வழி நடத்துபவர்களின் அலட்சியத்தால், நாட்டின் அச்சாணியாகத் திகழும் விவசாயிகளின் வாழ்வு பாழாகிவிடக் கூடாது' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

stalin_11322.jpg"தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்திக்க ஸ்டாலின் சென்றபோதும், என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்க சிலரை கார்டன் நியமித்துள்ளது. அவர்கள் மூலமாக கோட்டைக்குள் நடக்கும் விவரங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. தன்னிச்சையாக அவர் எந்த முடிவையும் எடுக்க முடியாத அளவுக்கு, மன்னார்குடி அதிகாரம் அவரைக் கட்டிப் போட்டிருக்கிறது. அவர்களை மீறி எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறார் ஓ.பி.எஸ். முன்பு ஒருமுறை முதல்வரின் அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தபோதும், பன்னீர்செல்வத்தை சந்திக்க, அவருடைய அலுவலகத்திற்குச் சென்றார் ஸ்டாலின். அப்போது போனில் யாருடனோ அனுமதி கேட்டிருக்கிறார். எதிர்முனையில் பேசியவர்களும், ' மனுவை வாங்கிக் கொள்ளுங்கள். எந்த உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டாம்' எனக் கூறியுள்ளனர். அதைத்தான் அவரும் கடைபிடித்தார். முதல்வரால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை என்பதை மக்கள் முன் வெளிப்படுத்தி, ஓ.பி.எஸ்ஸை பலவீனப்படுத்துவது ஒருபுறம், நம்பிக்கை வாக்கெடுப்பு என்று வரும்போது, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுக்கும் வேலையில் தி.மு.க ஈடுபடலாம். அப்போது, ஸ்டாலின் தயவில் முதலமைச்சர் என்ற பெயரும் கிடைக்க வாய்ப்புள்ளது. கோட்டைக்குள் நடக்கும் அனைத்து விவகாரங்களும் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனை உணர்ந்து நிதானமாக காய் நகர்த்தி வருகிறார் சசிகலா" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

ops_11153.jpg"அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர்களுக்கு கார்டனில் இருந்து ஓர் உத்தரவு சென்றுள்ளது. 'முதலமைச்சர் சசிகலா என டி.வி விவாதங்களில் யாரும் பேச வேண்டாம். மறு உத்தரவு வரும் வரையில் இதுதொடர்பான தலைப்புகளைத் தவிர்த்துவிடுங்கள்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல் சூழல்கள் எதுவும் சாதகமில்லாததால்தான், இப்படியொரு முடிவை கார்டனில் உள்ளவர்கள் எடுத்துள்ளனர். கூடவே, கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வெளியிட்டு வரும் அதிரடிகளை மன்னார்குடி உறவுகள் கொதிப்புடன் கவனித்து வருகின்றனர். 'சசிகலா முதல்வரானால்தான் என்னுடைய அரசியல் பிரவேசம் நல்லபடியாக அமையும். அவருக்கு எதிராகப் போட்டியிட்டு, தாய்மார்களின் ஆதரவோடு நான் வெற்றி பெறுவேன். ஜெயலலிதா மீது பாசம் கொண்ட அனைத்து அ.தி.மு.க தொண்டர்களும் என்னுடன் இருக்கின்றனர். உசிலம்பட்டியில் அவர் போட்டியிட்டாலும், களத்தில் நேரடியாகச் சந்திப்பேன். விரைவில் என்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவிப்பேன்' எனப் பேட்டி அளித்தார்.

தினம்தினம் தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன்பு அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். சசிகலா எதிர்ப்பை முன்வைக்கும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரும், தீபாவை முன்னிறுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். ' சசிகலா பிரசாரத்திற்குப் போனால், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி உள்ளிட்டவர்கள் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதுவே, தீபா பிரசாரத்திற்குச் சென்றால் எந்த ஓர் அமைச்சரின் தயவும் தேவையில்லை. இயல்பாகவே மக்கள் குவிந்துவிடுவார்கள். இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது' என அவருக்கு ஆலோசனை கூறி வருகின்றனர். எதிர்ப்பாளர்கள் அனைவரும் தி.நகரில் குவிந்து வருவதை உளவுப்பிரிவு போலீஸார் தீவிரமாக கவனித்து வருகின்றனர். கோட்டைக்குள் நுழையும் வரையில், அமைதி காக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் சசிகலா. நடக்கும் சூழல்கள் எதுவும் மன்னார்குடிக்குச் சாதகமாக இல்லை" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். 

கடந்த சில நாட்களாக, அமைச்சர்கள் உள்பட யாருமே சின்னம்மா முதல்வர் என்று சொல்வதில்லை. கார்டனில் இருந்து உத்தரவு வந்ததா என அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் ஆவடி குமாரிடம் கேட்டோம். 'அப்படி எந்த உத்தரவும் வரவில்லை' என ஒற்றை வரியோடு முடித்துக் கொண்டார். 

http://www.vikatan.com/news/tamilnadu/77045-reason-behind-for-stalins-statement-about-opanneerselvam.art

Categories: Tamilnadu-news

சசிக்கு எதிர்ப்பு வலுக்கிறது: தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறது

Thu, 05/01/2017 - 20:35
சசிக்கு எதிர்ப்பு வலுக்கிறது:
தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறது
 
 
 

அ.தி.மு.க.,வில், சசிகலாவுக்கு எதிர்ப்பும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதர வும் அதிகரித்து வருகிறது. தொண்டர்களிடம் பேசிய தீபா, 'என் அரசியல் பயணத்தை, யாராலும் தடுக்க முடியாது' என, தெரிவித்தார்.

 

Tamil_News_large_168467620170105235329_318_219.jpg

ஜெயலலிதா மறைந்ததும், அவர் வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலாவை நியமனம் செய்து, பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அவரும் பொறுப்பேற்றார்.

அதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், 'தலைமை ஏற்க வர வேண்டும்' என, தீபாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
சசிகலா தங்கியுள்ள,

சென்னை, போயஸ் கார்டன் வீடு வெறிச்சோடி கிடக்க, தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், மதுரை என, 14 மாவட்டங் களில் இருந்து, ஏராளமான தொண்டர்கள், தீபா வீட்டுக்கு வந்தனர்.

அவர்களிடம் தீபா பேசும் போது, ''என் அரசியல் பயணத்தை, யாராலும் தடுக்க முடியாது. நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். தொண்டர் கள் பொறுமையோடு இருக்க வேண்டும். விரைவில், நல்ல முடிவை அறிவிக்கிறேன். ஜெயலலிதாவின் புகழை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் பணியாற்ற, தயாராக உள்ளேன்,'' என்றார்.

அப்போது தொண்டர்கள், 'அரசியலுக்கு வர பயப்படாதீர்கள்; நாங்கள் இருக்கிறோம்' என கோஷமிட்டனர். அதற்கு பதில் அளித்த தீபா, ''எனக்கு பயம் எதுவும் இல்லை,'' என்றார்.

 

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:


இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தொண் டர்களிடம் கருத்து கேட்டு, என் கருத்தை பகிர்ந்து கொண்ட பின், முடிவை அறிவிப்பேன். தொண்டர் களுடன் கலந்து பேசியே, முடிவு செய்வேன். அ.தி. மு.க.,வை கைப்பற்றுவதா, புதிய கட்சி துவங்குவதா என, இன்னமும் முடிவு செய்யவில்லை.சசிகலா, பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது குறித்து, கருத்து கூற விரும்பவில்லை. அவர் முதல்வரா னால், அப்போது கருத்து தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பேனர்கள் கிழிப்பு


பெரம்பலுார் நகரில், சசிகலாவுக்கு ஆதரவுமற்றும் வாழ்த்து தெரிவித்து, நகரின் முக்கிய இடங்களில், அவரது ஆதரவாளர்கள், 'டிஜிட்டல்' பேனர் வைத் தனர். அவற்றில் உள்ள, சசிகலா புகைப்படங் கள் கிழிக்கப்பட்டன.

தம்பிதுரையின் சசி புராணம்


மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 30ம் நாள் நினைவு மவுன ஊர்வலம், கரூரில் நடந்தது. ஊர்வலம் முடி வில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார். அப்போது, ஜெயலலிதா குறித்து பேசா மல், சசிகலா புராணம் பாடினார். இது, அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

தை மாதம் அரசியல் பிரவேசம்


தீபா, அரசியலுக்கு வர வேண்டும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவரும் வர விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும், தன் முடிவை, தை மாதம் அறிவிக்கலாம் என, அவர் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரண மாகவே, அவர் விரைவில் முடிவை அறிவிப்பேன் எனக்கூறி வருகிறார்.
 

மதுரையில் குமுறல்


மதுரை, ஜெய்ஹிந்த்புரம், 90வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர் போஸ். மாநகராட்சியில் சுகாதார குழு உறுப்பினராகவும் இருந்தார். அவர், ''என் போன்ற கட்சிக்காரர்களுக்கு, சசிகலா

 

தலைமை பிடிக்கலை. இதே மனநிலையில் தான் தொண்டர்கள் உள்ளனர். தீபா தலைமையை ஏற்க தயாராக இருக்கிறோம். அவர் முடிவை பொறுத்து எங்கள் முடிவு இருக்கும். அவர் அரசியலுக்கு வராதபட்சத்தில், நாங்கள் கட்சியை விட்டு விலகி விடுவோம்,'' என்றார்.இந்நிலையில், தீபா ஆதரவாளர்கள், 7ம் தேதி, கடலுாரில் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

கிராமங்களில் தீபாவுக்கு பெருகும் ஆதரவுசென்னை செல்லும் வாகனங்கள் கணக்கெடுப்பு

திண்டுக்கல்:தமிழக கிராமங்களில் ஜெ.,யின் அண்ணன் மகள் தீபாவிற்கு பெருகும் ஆதரவு குறித்தும், அவருக்கு ஆதரவாக சென்னை செல்லும் வாகனங்கள் குறித்தும் உளவுத்துறை யினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்குப்பின், சசிகலாவை விரும்பாத தொண்டர்களிடையே, ஜெ.,யின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, வேடசந்துார், வடமதுரை, வத்தலகுண்டு, நத்தம், கொடைக்கானல் உட்பட பல இடங்களில் அவருக்கு ஆதரவாக போஸ்டர், பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. போலீசார் தடை விதித்த போதும், எதிர்ப்பை மீறி ஆதரவு தெரிவிக்கின்றனர். மேலும் தீபா விற்கு ஆதரவு தெரிவிக்க பலர் சென்னை சென்ற வண்ணம் உள்ளனர். அதேநேரம் சசிகலா போஸ்டர்கள் கிழிக்கப்படுவதும் நடக்கிறது.
 

உளவுத்துறை கணக்கெடுப்பு


தீபாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கிராமங்கள், கட்சியினர், நிர்வாகிகள் விபரங்களை உளவுத் துறை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவ ருக்கு ஆதரவு தெரிவிப்பவர் எத்தனை ஆண்டு களாக கட்சியில் உள்ளார், அவர் அ.தி.மு.க., விலும், உள்ளாட்சி அமைப்பிலும் பதவிகள் ஏதும் வகித்துள்ளாரா என்பது குறித்தும் தகவல்கள் திரட்டுகின்றனர்.
 

வாகனங்கள் கண்காணிப்பு


தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் அவரின் வீடு முன் ஆதரவாளர்கள் தினமும் குவிகின்றனர். இதனால் சென்னை செல்லும் வாகனங்களையும், யார் தலைமையில் செல் கின்றனர் என்ற விபரங்களையும் உளவுத்துறை யினர் கண்காணித்து வருகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1684676

Categories: Tamilnadu-news

அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலா, கூட்டங்களில் பேசிப் பழக்கம் இல்லாததால், எழுதி வைத்ததை படிக்கவே திணறி வருகிறார்.

Thu, 05/01/2017 - 20:27
gallerye_232538562_1684658.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலா, கூட்டங்களில் பேசிப் பழக்கம் இல்லாததால், எழுதி வைத்ததை படிக்கவே திணறி வருகிறார். மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின் போது, சரியாக பேச முடியாமல் தவித்தது, கட்சி நிர்வாகி களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tamil_News_large_1684658_318_219.jpg

ஜெயலலிதாவுடன், 33 ஆண்டு களாக வசித்து வந்தவர், அவரது தோழி சசிகலா. அவருக்கு உதவியாளராக மட்டுமே செயல்பட்டு வந்தார். ஜெ., பங்கேற்ற பொதுக் கூட்டங்களுக்கு, அவருடன் சென்றாலும், எந்தக் கூட்டத்திலும் பேசியதில்லை.

ஜெ., செல்லும் வாகனத்தில், பின் சீட்டில் அமர்ந்து, அவருக்கு குடிக்க தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, அவர் பேச வேண்டிய உரையை, ஒவ்வொரு பக்கமாக எடுத்துக் கொடுப்பது போன்ற வேலைகளை மட்டும் செய்து வந்தார். கட்சி பொதுக் குழு மற்றும் பொதுக் கூட்டங்கள்

அனைத்திலும், ஜெ., பேசுவதை வேடிக்கை பார்க்கும், பார்வையாளராக மட்டுமே இருந்தார்.

ஜெ., மறைந்ததும், அவர் வகித்து வந்த, பொதுச்செயலர் பதவியை, ஏற்றுக் கொண்டார். இதற்கு அவருக்குள்ள ஒரே தகுதி, ஜெ., உடன் இருந்தார் என்பது மட்டுமே. அவருக்கு கூட்டங் களில் பேசத் தெரியுமா; அரசு நடைமுறைகள் தெரியுமா; கட்சி நிர்வாகம் தெரியுமா என, எதுபற்றியும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிந்திக்கவில்லை.

கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எதிர்ப்பையும் கண்டு கொள்ள வில்லை. பதவியை தக்க வைத்துக் கொள்வதற் காக, மூத்த நிர்வாகிகள், சசி புராணம் பாடி வருகின்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலராக, கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றதும், உள் அரங்கில், கட்சி நிர்வாகிகள் மத்தியில், முதன் முறையாக பேசினார்.

அப்போது, எழுதி வைத்திருந்ததை படித்தார்; அதையும், அவரால் சரளமாக படிக்க முடிய வில்லை. ஜெ., குறித்து பேசும் போது, கண்ணீர் சிந்தியதால், அவரது பேச்சு அப்படி உள்ளது என, கட்சி நிர்வாகிகள் கருதினர். ஆனால், ஜன., 4 அன்று காலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளை, கட்சி தலைமை அலுவலகத்தில்சந்தித்தார்.

 

அப்போது, எழுதி வைத்திருந்ததைக் கூட, சரியாக படிக்க முடியாமல் திணறினார்; அதை கண்டு நிர்வாகிகள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

பொதுச் செயலராக பதவியேற்ற போது, பேசுவதற்கான அறிக்கையை, வீட்டில் பல முறை பேசி பயிற்சி பெற்றதால், அழுகை, ஏற்ற இறக்கத்துடன், ஓரளவு பேசி சமாளித்தார்; ஆனால்,அடுத்த கூட்டத்தில் தடுமாறி விட்டார்.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


அ.தி.மு.க., பொதுச் செயலரானதும், ஜெயலலிதா போல் நடை, உடை, சிகை அலங் காரத்தை மாற்றி விட்டார் சசிகலா; ஆனால், அவர் போன்று பேச வரவில்லை. நிர்வாகிகள் மத்தியில் பேசும் போதும், எழுதி வைக்காமல், சசிகலாவால் பேச முடிய வில்லை; எழுதி வைத்ததையும், சரியாக படிக்க முடியவில்லை.

நிர்வாகிகள் மத்தியிலேயே, இப்படி பேச முடி யாமல் சொதப்புபவர், மக்கள் கூடும் பொதுக் கூட்டங்களில், அவர்களை கவரும் வகையில் எப்படி பேச முடியும். தேர்தல் பிரசாரத்தின் போது, சசிகலாவை வைத்து சமாளிப்பது என்பது, பெரும் சவாலாகவே இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1684658

Categories: Tamilnadu-news

கண்ணீர்... களங்கம்... கொலைப்பழி! - சசிகலா நெக்ஸ்ட்?

Thu, 05/01/2017 - 18:23
 
கண்ணீர்... களங்கம்... கொலைப்பழி! - சசிகலா நெக்ஸ்ட்?
ப.திருமாவேலன், படம்: ப.சரவணகுமார்

 

10p1.jpg

ளவுபார்க்க வந்தவருக்கு உயர்ந்த பரிசுப்பொருள் கிடைக்கும். ஆனால், நாடே கிடைத்ததாக சரித்திரம் இல்லை. சசிகலா, சரித்திரத்தையே மாற்றியவர்?!

அரசியலுக்கு அது வேண்டும், இது வேண்டும், அது இருக்கிறதா, இது இருக்கிறதா என... நூறு விஷயங்களை அடுக்குவார்கள். அது இது எதுவும் இல்லாமல் லட்சக்கணக்கான தொண்டர்களை வழிநடத்தும் இடத்துக்கு சசிகலா வந்துவிட்டார். சிரமம் இல்லாமல் வந்துவிட்ட அவர், சின்னம்மா அல்ல... அதிர்ஷ்ட அம்மா!

`ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவுடன் சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ கூட்டங்களில் அவருடன் கலந்துகொண்டேன். ஆனால், இன்று மேடைக்கு வந்து உங்களிடையே பேசும் ஒரு சூழல் எனக்கு உருவாகியிருக்கிறது. உங்களின் அன்புக்கட்டளையை ஏற்கவேண்டிய கடமையும் கட்டாயமும் எனக்கு ஏற்பட்டுள்ளது.

நான் கனவிலும் நினைக்காத ஒன்று, கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஒன்று நடந்துவிட்டது' என, கடந்த டிசம்பர் 31-ம் தேதி அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சசிகலா கண்ணீரோடு உரையாற்றத் தொடங்கினார்.

ஜெயலலிதாவுக்குப் பிறகு, சசிகலா கைக்குத்தான் கட்சி போகும் என கணக்குப்போட, யாருக்கும் தமிழ்நாட்டு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜெயலலிதாவையும் சசிகலாவையும் ஒரே ஒருமுறை பார்த்தவர்கள்கூட இதை உணர்ந்துவிடுவார்கள்.

இறந்துபோன எம்.ஜி.ஆரின் உடல் அருகே ஜெயலலிதா இருந்தபோது, ஒட்டிய கன்னங்களுடன் உடன் இருந்த சசிகலாவை ஏதோ பணிப்பெண் என்றுதான் நினைத்திருப்பார்கள் பலர். ஆனால், 1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சர் ஆனபோது சட்டமன்றத்துக்குள் தன்னோடு சசிகலாவையும் அழைத்துவந்து உட்காரவைத்தபோதே, இவரே ‘அடுத்த கண்’ என உணர்த்தப்பட்டார்.

போயஸ் கார்டனுக்குள் போனவர்களுக்கும் அதிகார மையங்களில் வலம்வருபவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது, சசிகலா நினைத்தால்தான் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியும் என்று; சசிகலா நினைப்பதைத்தான் ஜெயலலிதா செய்கிறார் என்று; சசிகலாவைப் பகைத்துக்கொண்டால் அ.தி.மு.க-வில் எதிர்காலமே இல்லை என்று. அந்த அளவுக்கு தனது இருப்பை ஜெயலலிதாவுடன் நெருக்கப்படுத்திக்கொண்டார் சசிகலா.

10p2.jpg

‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன்’ என்ற அடைமொழியுடன் சுதாகரன் - சத்தியலட்சுமி திருமணம் நடந்தபோது ‘அடுத்த கண்’ என்பது மட்டும் அல்ல, ஜெயலலிதாதான் சசிகலா... சசிகலாதான் ஜெயலலிதா என்பதும் நாட்டுக்கு அறிவிக்கப்பட்டது. கும்பகோணம் மகாமகத்தில் இருவரும் மாறி மாறி புனித நீராடியதன் மூலமாக, உலகத்துக்கு உரக்கச் சொன்னார்கள்.

1996-ம் ஆண்டு தேர்தலின் மரண தோல்விக்கு, இது மட்டுமே போதுமானதாக இருந்தது. கண்துடைப்புப் படலமாக, சசிகலாவை சில நாட்கள் கட்சியைவிட்டு நீக்கிவைத்திருந்தார் ஜெயலலிதா. அப்போது, சசிகலா சிறையில் இருந்தார். அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்த ஜெயலலிதா, வீட்டுக்கு வந்ததும் அவரை நீக்கினார். சில நாட்களில் சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா. அவர் நேராக போயஸ் கார்டனுக்கு வந்ததும், ஆரத்தித் தட்டுடன் நின்றுகொண்டிருந்தார் ஜெயலலிதா. அப்பட்டமான நாடகம் இது. நாடகம் பார்ப்பதில்தானே நமக்கு அலாதியான ப்ரியம்.

1997-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை, சசிகலாவின் குடும்பம் ஆக்டோபஸ் போல ஜெயலலிதாவை வளைத்துக்கொண்டது. ஜெயலலிதாவுக்கும் இந்த வலைதான் வசதியாகவும் இருந்தது. மூன்று முறை (1991, 2001, 2011) ஆட்சியின்போதும் முறைவைத்து இயக்கியது சசிகலா குடும்பத்தினர்தான். குடும்பத்தில் தலைகள் மாறியிருக்கலாம். ஆனால், குடும்பம் மாறவில்லை. டி.டி.வி.தினகரன், மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோருக்கு மட்டும்தான் கட்சிப் பதவிகள் நேரடியாகத் தரப்பட்டன. ஆனால், மற்றவர்கள் அனைவரும் கட்சியையும் ஆட்சியையும் நேரடியாகவே இயக்கினார்கள். டெண்டர்கள் இவர்கள் இல்லாமல் நடக்காது. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை இவர்களே பேசினார்கள். இவர்கள் நினைத்த ஆட்களுக்கு மட்டுமே சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் உரிமை தரப்பட்டது. இவர்கள் நினைத்தவர்கள் மட்டுமே அமைச்சர்கள் ஆனார்கள். பலரது தலைகளை உருட்டியதும் இவர்கள்தான். இதுவரை மறைமுகமாகக் கோலோச்சிவந்தவர்களுக்கு, ஜெயலலிதாவின் மரணம் நேரடியாகவே வந்து உட்கார பாதை அமைத்துக் கொடுத்துவிட்டது.

10p3.jpg

இவை அனைத்தும் ஜெயலலிதாவுக்குத் தெரிந்தே நடந்தன. அவருக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவுக்கு இவை எல்லாம் தெரியாமல் நடந்தன என்று சொன்னால், ஜெயலலிதாவுக்கு என உருவகப்படுத்தும் ஆளுமைத்திறன் அனைத்துமே பொய் என்றாகிவிடும்.

‘ஜெயலலிதா நல்லவர்; சசிகலாதான் கெட்டவர்’ என சிலர் சுருதி மாற்றிப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். சசிகலா மற்றும் அவரது உறவுகள் செய்தவை அனைத்தும் ஜெயலலிதாவுக்குத் தெரியும் என்பதற்கு, பல உதாரணங்கள் இருக்கின்றன. சசிகலா மற்றும் அவரது உறவுகளின் நடவடிக்கைகளை, ஜெயலலிதா  பட்டவர்த்தனமாக நியாயப்படுத்திப் பேசினார்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஜெயலலிதாவின் ஹைதராபாத் தோட்டத்தைக் கவனித்து வந்தார். அவர் திடீரென இறந்துபோனார். அவரது மனைவிதான் இளவரசி. இவர்களது மகள் கிருஷ்ணப்ரியாவின் திருமணம், 2000-ம் ஆண்டு நடந்தது. ‘எனக்கு வேண்டியவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எந்தத் தவறும் செய்யாத திருமதி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த நான்கு ஆண்டுகளாகச் சந்தித்த அவமானங்கள், அவதூறுகள், துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எனக்காகவும் இந்த இயக்கத்துக்காகவும் வாழும் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பதை என் கடமையாகக் கருதுகிறேன்' என்று ஜெயலலிதாவே பேசினார். தனக்காகவும் அ.தி.மு.க-வுக்காகவும், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் வாழ்கிறார்கள் என, தனது வாயாலேயே மாலை கட்டிய சசிகலாவுக்குத்தான் இன்று பொதுச்செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

10p6.jpg

டாக்டர் வெங்கடேஷ் திருமணத்தை நடத்திவைத்துப் பேசிய ஜெயலலிதா, ‘என்னோடு துணையாக இருந்து, எல்லா வகைகளிலும் எனக்கு உதவியாக இருந்ததற்காகவே சசிகலாவுக்கு இப்படி ஒரு தண்டனை’ என்று காரணம் கற்பித்தார். அப்போது மணமேடையில் இருந்த சசிகலா அழுதார். இதோ இப்போதும் சசிகலா அழுகிறார். அன்று அக்கா அங்கீகாரம் தந்தார். இன்று அக்கா, தான் வகித்த பதவியையே தந்துவிட்டுப் போய்விட்டார்.

‘எனக்கு இப்போது 62 வயது. என்னுடைய 29-வது வயது முதல் நம் இதயதெய்வம் அம்மாவோடுதான் இருந்துள்ளேன். எஞ்சி இருக்கும் காலத்தை, கழகத்துக்காக வாழ்வேன்’ என்று சசிகலா சபதம் எடுத்துள்ளார்.

சபதம் சரி. ஆனால், நிலைமை சரியில்லையே!

10p4.jpg

சசிகலாவின் பொதுவாழ்வு என்பது, கொலைப்பழியோடு தொடங்குகிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, சசிகலா ஏதோ செய்துவிட்டார், சசிகலா எதையோ மறைக்கிறார் போன்ற சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் பரவலாக இருக்கின்றன. 

அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் மனதிலும் இருக்கிறது. இது ஏதோ அரசியல் குற்றச்சாட்டுகளைப்போல சாதாரணமானது அல்ல, அதற்கு மேம்போக்கான பதில் அல்ல. உண்மையான விளக்கத்தை மக்கள் மன்றத்தில் சசிகலா வைத்தாக வேண்டும்.

‘நன்கு உடல்நலம் தேறிவந்த நம் அம்மா, தலையில் இடி விழுந்ததைப்போல நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். 10 கோடி தமிழ் மக்களின் பாசத்தாயை நம்மிடம் இருந்து இறைவன் பறித்துக்கொண்டான்’ என்று சசிகலா பேசியதைக் கேட்கும்போது சந்தேகம்தான் கூடுகிறது.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி இரவு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். இதயத்துடிப்பு நின்றுபோனதாக அறிவிக்கப்பட்டது வரையிலான 75 நாட்களும், சிரித்தார், பேசினார், டி.வி பார்த்தார், கிச்சடி சாப்பிட்டார், பந்து தூக்கிப்போட்டார், நர்ஸ்களுக்குப் பரிசு கொடுத்தார், ‘போயஸ் கார்டன் வந்தால் காபி எப்படிப் போடணும் எனச் சொல்லித் தருகிறேன்’ என்றார், டாக்டர்களுக்கே அறிவுரை கூறினார் என்று பல நூறு குணச்சித்திரக் காட்சிகள் பரப்பப்பட்டன. அதாவது கார்டியாக் அரெஸ்ட் ஆவதற்கு முன்பு வரை நன்றாக இருந்தார் என்றே சொல்லப்பட்டது. சசிகலாவும் அதைத்தான் சொல்கிறார். ‘நன்றாக இருந்த’ ஜெயலலிதாவை, யாருக்குமே காட்டாமல் மறைத்துவைத்திருக்கவேண்டிய மர்மம் என்ன? தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படும் என, ஒருவேளை ஜெயலலிதாவே நினைத்துத் தடுத்திருக்கலாம் என்றால், அவர் இல்லாத நிலையில் மருத்துவம் பற்றி பேசத் தயங்குவது ஏன்?

10p5.jpg

டிசம்பர் 5-ம் தேதிக்கு முன்னர் வரை ஜெயலலிதா நன்றாகத்தான் இருந்தார் என்பதற்கு ஆதாரமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டால், ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிட்டால், சசிகலா மீதான களங்கம் துடைக்கப்படுமே. என்ன தயக்கம், ஏன் தயக்கம்?

‘கொலைப்பழியோடு’ பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார் சசிகலா. ‘கொலைப்பழியோடு’ முதலமைச்சராகவும் ஆகலாம். இவை இரண்டுமே தானாக வருவன. ஜெயலலிதா தந்துவிட்டுச் சென்றது. யாராலும் தடுக்க முடியாதது. ஆனால், மக்கள் மன்றத்தில் நேரடியாக வாக்குக் கேட்டு சசிகலா செல்லும்போதுதான் இந்தக் கறை மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் எழும். அவருக்கும் உணர்த்தப்படும். இரண்டு சொட்டு அழுகை, இந்தக் கறையை நீக்கிவிடாது. தன் மீதான பழியை அவர் உடனடியாகத் துடைத்தாக வேண்டும்.

சசிகலாவிடம் கேட்பது மிகவும் சாதாரணமான ஒரு கோரிக்கைதான்...

ஜெயலலிதா நன்றாகத்தான் இருந்தார் என்பதற்கு ஆதாரமான ஒரு வீடியோ கேசட் வெளியிடுங்கள். கேசட் ரிலீஸ் செய்ய, உங்களுக்கு யாரும் சொல்லித் தர வேண்டுமா என்ன?

http://www.vikatan.com/anandavikatan

Categories: Tamilnadu-news

“அன்பு சகோதரர் நடராசனுக்கு நான் நன்றியுள்ளவன்!'' உருகிய வைகோ

Thu, 05/01/2017 - 15:23
“அன்பு சகோதரர் நடராசனுக்கு நான் நன்றியுள்ளவன்!'' உருகிய வைகோ

வைகோ,நெடுமாறன்,நடராஜன்

'மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறுகிறது' என்று திடீரென அறிவித்து  அதிரடி அரசியல் காட்டினார் வைகோ. 'அ.தி.மு.க-வின்  தலைமையோடு வைகோவுக்கு இருக்கும் நெருக்கம்தான் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறுவதற்கு காரணம்' என்றப் பேச்சுக்கள் பலமாக அடிப்பட்டது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவின்  கணவர் நடராஜனும் வைகோவும் நண்பர்கள் என்பதால் இந்த கருத்தின் உறுதித்தன்மைக்கு வலுசேர்த்தது. 

அ.தி.மு.க தரப்பிலோ அல்லது ம.தி.மு.க கட்சியினரோ, இவ்விரு கட்சிகளுக்கு இடையேயான உறவு குறித்த எந்தத் தகவலையும் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில்தான் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய 'தம்பி ஜெயந்த்துக்கு...' நுாலின் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில், வைகோ-வும் , பழ.நெடுமாறனும்  நடராஜனும் கலந்து கொண்டனர். ஒரே மேடையில், வைகோ நுாலை வெளியிட அதை நடராஜன் பெற்றுக்கொண்ட நிகழ்வு அரங்கேறியது. அதே மேடையில், ''தனி ஈழம் என்பதுதான் வைகோவின் ஒரே கோரிக்கை. கண்டிப்பாக ஒரு நாள் அது நடந்தேறும்.'' என்று உணர்ச்சிப் பிழம்பான வைகோ தொடர்ந்து, “நான் நடராஜனை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

வைகோ பேசும் போது, “இந்த நூலை பெற்றவர் அன்பு சகோதரர் நடராசன் அவர்கள். நான் நன்றியுள்ளவன். தமிழரின் சுவடுகளே இல்லாமல் இந்திய அரசு ஈழத்தை அழித்ததே, எந்த புலிக்கொடி  தஞ்சையில்  பறந்ததோ, அதே தஞ்சையில்  முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை அமைப்பதற்கு பழ.நெடுமாறனோடு துணை நின்று இடமும் கொடுத்தவர் நடராஜன். அதை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன். அதேபோல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கொடியை கையில் ஏந்திக்கொண்டு மாணவத்தலைவனாக நின்ற இந்த நடராஜனை நான் நினைத்துப் பார்க்கின்றேன். எனது திருமணம் குற்றாலத்தில் நடைபெற்ற போது எனது திருமணத்துக்கு மூன்று நாட்கள் துணையாக இருந்து உதவி செய்தது இந்த நடராஜன்தான் என்று எத்தனை பேருக்கு தெரியும். நான் நன்றியுள்ளவன். நன்றியை ஒரு போதும் மறக்கமாட்டேன். 

நடராஜனைப் பாராட்டி பேசியதை நாளை ஊடகங்கள் திரித்து சொல்லலாம். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஐடோன்ட் கேர்” என்றார் ஆவேசமாக.நடராஜனோ “நான் அரசியல் பேசப் போவதில்லை. ஆனால், ஈழப்பிரச்சனையில் தொடர்ந்து எனது குரல் ஒலிக்கும்'' என்று சுருக்கமாகப் பேசி முடித்தார். 

http://www.vikatan.com/news/tamilnadu/76998-i-am-very-thankful-to-natarajan--vaiko.art

Categories: Tamilnadu-news

சதமடித்த விவசாயிகளின் மரணம்- என்ன செய்யப் போகிறது அரசு #StandWithFarmers

Thu, 05/01/2017 - 12:41

சதமடித்த விவசாயிகளின் மரணம்- என்ன செய்யப் போகிறது அரசு #StandWithFarmers

PIL seeks State drought declaration

சென்னை: தமிழகத்தில் பருவ மழை பொய்துப்போனது. காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் பயிர்கள் கருகிவிட்டன. வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொத்த விவசாயிகள் பலர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் எதெதுக்கோ ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்யும் இளைய தலைமுறையினர், நெட்டிசன்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி #StandWithFarmers என்ற ஹேஸ்டேக் உடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விவசாயிகளை பாதுகாக்கக் கோரி டுவிட்டரில் பதிவிடப்பட்டு வரும் #StandWithFarmers என்ற ஹேஸ்டேக்கானது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் விவசாயிக்கு ஆதரவான கருத்துக்களை கூறி தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அது பரபரப்பு செய்தியாகிறது. அதுவே விவசாயியின் தற்கொலை கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இன்றைய தினம் காலை முதல் மாலை வரை விவசாயிகளின் பிரச்சினைகள், தற்கொலைகளை, பாதிப்புகளை மக்களுக்கு தெரிவிக்கிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி

விவசாயிகளின் வியர்வை

நாம் அன்றாடம் உண்ணும் அரிசி விவசாயிகளின் வியர்வையில் விளைவது என்று பதிவிட்டுள்ளார் ராம்குமார் என்ற வலைத்தளவாசி.

வேண்டும் ஒரு புரட்சி

விவசாயிகளின் தற்கொலையை தடுக்க ஒரு புரட்சி நடக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர். ஆனால் அது எதுமாதிரியான புரட்சி என்று கூறவில்லை

பணத்தை சாப்பிட முடியாது

இயற்கையை அழிக்கிறோம்... ஆறுகளை பாழாக்குகிறோம். நிலத்தை விஷமாக்குகிறோம். இதனாலேயே மழை குறைந்து விவசாயம் அழிகிறது. பணத்தை சாப்பிட முடியாது என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

வறண்டே கிடக்கிறது

கடந்த ஆண்டு வெள்ளம், இந்த ஆண்டு வறட்சி, தமிழக விவசாயிகளின் வயலும், வயிறும் வறண்டு கிடக்கிறது பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். விவசாயிகளின் தற்கொலையும், மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி : தட்ஸ்தமிழ்

டிஸ்கி:

வர்தா புயலுக்கே பெரிய பாதிப்பெல்லாம் இல்லை காசு தர மிடியாது என்று சொல்லிபோட்டார் மோடி ஜி அதே போல உங்க உயிரெல்லாம் !@#$% அளவுக்கு மதிக்க இல்லை என்று சொல்லி போடுவாரோ ? அதை கூட பொறுத்து கொள்ளலாம்

இவ்வளவுக்கும் காரணமான ....அடித்தவனுக்கு ...காசு தரார் மோடி ! ஒருவேளை அதற்கான கூலியாக இருக்குமோ ?

Quote

கர்நாடகாவுக்கு ரூ.1782.44 கோடி வறட்சி நிவாரணம்!
நன்றி :விகடன்

தமிழ்நாட்டு எம்பி மார்களை நீங்க பார்த்தீங்களா ? அவங்க எங்க இருக்காங்க? என்ன செய்து கொண்டு இருக்காங்க ? என்கிற தகவல் உங்களுக்கு தெரியுமா ? ரெல் மீ.!.:rolleyes:

Categories: Tamilnadu-news

'கவர்னருக்கு சபை மட்டும்தான் கணக்கு!' -ஓ.பி.எஸ் மௌனமும் மன்னார்குடி வியூகமும்

Thu, 05/01/2017 - 11:20
'கவர்னருக்கு சபை மட்டும்தான் கணக்கு!'  -ஓ.பி.எஸ் மௌனமும் மன்னார்குடி வியூகமும் 

ops_governor1_14299.jpg

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே அவருக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளனர் நிர்வாகிகள். ' தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து அரசியலையும் கவனித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். தலைமைச் செயலகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களும் ஆளுநர் பார்வைக்கு அனுப்பப்படுகின்றன' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

சட்டமன்றத் தேர்தலின்போது, 'போடி நாயக்கனூர் தொகுதியில் பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுவாரா? தலைமை சீட் கொடுக்குமா' என்ற கேள்வி தேனி மாவட்ட அ.தி.மு.கவினர் மத்தியில் வலம் வந்தது. அவரது விசுவாசத்தின் மீது ஜெயலலிதாவுக்கு எந்தவித சந்தேகமும் இல்லாததால், சீட் கொடுக்கப்பட்டது. எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று வந்த பிறகு, அமைச்சர் பதவி குறித்தும் கேள்வி எழுந்தது. நிதித்துறையை மட்டும் அவரிடம் வழங்கிவிட்டு, பொதுப் பணித்துறையை எடப்பாடி பழனிச்சாமிக்குக் கிடைக்கச் செய்தார் சசிகலா. ஆனால், ஓ.பி.எஸ் பக்கம் காற்றின் திசை வீச ஆரம்பித்ததால், அப்போலோ சிகிச்சையில் ஜெயலலிதா இருந்தபோதே, முதல்வரின் அதிகாரங்கள் அவரிடம் வந்து சேர்ந்தன. பின்னர், தமிழகத்தின் முதல்வராகவும் பதவியேற்றார். கடந்த இருபது நாட்களாக, ' சசிகலாவை முதல்வராக்குவதற்காக, பன்னீர்செல்வம் விட்டுத் தர வேண்டும்' என அமைச்சர்கள் பேசிக் கொண்டிருந்தனர். விவசாய மரணங்கள் தொடர்ச்சியாக நிகழ்வதால், இந்தக் கோஷத்தின் அளவு சற்று குறைந்திருக்கிறது. " மாவட்ட நிர்வாகிகளை வரும் 9-ம் தேதி வரையில் சந்திக்க இருக்கிறார் சசிகலா. அதன்பிறகு, ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என மன்னார்குடி உறவுகள் தீர்மானித்தாலும், பன்னீர்செல்வத்தின் மௌனம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மத்திய அரசின் தலையீடு தீவிரமாக இருப்பதால், முதல்வர் பதவி குறித்த பேச்சுக்களை சில நாட்கள் நிறுத்தி வைக்குமாறு கார்டன் தரப்பில் இருந்து உத்தரவு வந்துள்ளது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

" தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக நிர்வாகிகள் வரிந்து கட்டுகின்றனர். தேர்தல் நேரத்திலேயே அவருக்கு எதிராக முக்கிய நிர்வாகிகள் யாரும் வேலை செய்யவில்லை. மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வனின் உத்தரவுகளைத்தான் கீழ்மட்ட நிர்வாகிகள் பின்பற்றி வருகின்றனர். இதில் எரிச்சலான ஓ.பி.எஸ், தன்னுடைய மகனை தேர்தல் பணிகளில் ஈடுபட வைத்தார். அதன் விளைவாகவே வெற்றி பெற முடிந்தது. ' சொந்த மாவட்டத்துக்குள் எதிர்ப்பு நீடிப்பதால், தி.மு.கவின் லட்சுமணன் வெற்றி பெற்றுவிடுவார்' என்றுதான் அ.தி.மு.கவினர் பேசி வந்தனர். அதையும் மீறி நல்ல ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஓ.பி.எஸ்ஸை பதவியில் இருந்த அகற்றுவதற்காக, சசிகலாவை முதல்வர் ஆக்க வேண்டும் என தேனி மாவட்ட அ.தி.மு.கவினர் தீர்மானம் நிறைவேற்றி, கார்டனுக்கே வந்து அளித்தனர். கடந்த ஓரிரு நாட்களாக, ஓ.பி.எஸ் பதவி விலக வேண்டும் எனப் பேசி வருகிறார் தங்க தமிழ்ச்செல்வன். இதை ஓ.பி.எஸ் சமுதாயத்து மக்கள் ஏற்கவில்லை. ' இப்போதே இப்படி நடந்து கொள்கிறார்கள். நாளை முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்டால், அமைச்சரவையில் என்ன இடம் கொடுப்பார்கள் என்பதும் சொந்த மாவட்டத்தில் என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும்' என்பதையும் அவருடைய ஆதரவாளர்கள் உணர்ந்து வைத்துள்ளனர். தன்னைச் சுற்றி நடக்கும் உள்கட்சி அரசியலையும் கவனித்து வருகிறார் பன்னீர்செல்வம். அதனால்தான் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் காக்கிறார்" என்றார். 

secretariate_600_14044.jpg

" தமிழக அரசியலில் நடக்கும் விவகாரங்கள் குறித்து, மத்திய அரசின் பார்வைக்குத் தகவல்களை அனுப்பி வருகிறது ஆளுநர் அலுவலகம். வெளியில் உள்ள அ.தி.மு.க அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி ஆளுநருக்கு எந்த அக்கறையும் இல்லை. சபை நடவடிக்கை மட்டும்தான் கவர்னரின் கணக்கு. அந்தக் கணக்கிற்குள் குழப்பம் வந்தால் மட்டுமே, அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பற்றி அவர் ஆராய்வார். ஒருவேளை, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் சொல்வதுபோல, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பன்னீர்செல்வம் சென்றாலும், பலத்தை நிரூபிக்க ஒரு மாதம் வரையில் அவகாசம் கொடுக்கும் முடிவில் ஆளுநர் இருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுவிட்டால், ஆறு மாதத்துக்கு அவருடைய பதவியை யாரும் அசைக்க முடியாது. எதிர்க்கட்சிகளின் கனிவான பார்வை ஓ.பி.எஸ்ஸை நோக்கி இருப்பதையும், கார்டன் வட்டாரத்தினர் கவனித்து வருகிறார்கள். ' சட்டரீதியாக தனக்குள்ள வலுவை அவர் பயன்படுத்த வேண்டும். முதல்வர் பதவியில் சமரசம் காட்ட வேண்டாம்' என அவருக்கு அறிவுறுத்தல்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை தொடங்கி அமைச்சர்கள் வரையில், கடந்த இருபது நாட்களாக சசிகலா முதல்வர் ஆக வேண்டும் எனப் பேசி வருகின்றனர். இன்னும் ஓ.பி.எஸ் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. ' சசிகலாவுடன் அவர் சமரசம் ஆகிவிட்டார்' என திட்டமிட்டே தகவல் பரப்பப்படுகிறது. ' தானாக பதவி விலகுவார்' என எதிர்பார்த்து, மன்னார்குடி உறவுகள் இவ்வாறு பேசி வருகின்றனர். ஓ.பி.எஸ் எடுக்கும் முடிவைப் பொறுத்துத்தான், அவருடைய அரசியல் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர். 

'சின்னம்மா முதல்வர் ஆனால், ஆறு பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட இருக்கிறது. இனிப்பான பொங்கலை எதிர்பார்க்கலாம்' என எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிர்வாகிகளுக்கு, கசப்பான பொங்கலை ஓ.பி.எஸ் கொடுப்பாரா என்ற பேச்சுக்களும் தொண்டர்கள் மத்தியில் வலம் வருகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/76951-governor-goes-ahead-as-per-the-assembly-will-silence-of-ops-have-an-effect-on-mannargudi-family.art

Categories: Tamilnadu-news

சசிகலாவை அதிரவைத்த ஆன்லைன் சர்வே முடிவு

Thu, 05/01/2017 - 09:55
சசிகலாவை அதிரவைத்த ஆன்லைன் சர்வே முடிவு 

sasikala_serve_12015.jpg


ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானதற்கும், முதல்வராகும் முடிவுக்கும் பொது மக்களிடையே கருத்துக் கணிப்பை சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆன்லைன் மூலம் நடத்தியது. இதன் முடிவு சசிகலாவுக்கு பாதகமாகவே வந்துள்ளதாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செந்தில் ஆறுமுகம் கூறுகையில், "சசிகலா முதல்வராவதற்கும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானது தொடர்பாக கடந்த டிசம்பர் 28-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்தோம். அதன்படி ஆன்-லைன் மூலம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பவர்களிடம் அவர்களின் வயது, மாவட்டம் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே கேட்கப்பட்டன. அதை பூர்த்தி செய்து விட்டு கருத்துக்கணிப்பில் பங்கேற்கலாம்.

surveryyyy1_13035.jpg

 

இதில் சசிகலா முதல்வராவது, பொதுச் செயலாளராவது குறித்து இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. 32 மாவட்டங்களிலிருந்து 3,090 பேர்  கருத்துக்கணிப்பில் பங்கேற்று வாக்களித்துள்ளனர். இதில் 2,916 பேர், சசிகலா பொதுச் செயலாளரானதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது 94 சதவிகிதம். ஆதரவாக 174 பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். இது 6 சதவிகிதம். அதுபோல முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2,984 பேரும், ஆதரவாக 106 பேரும் வாக்களித்துள்ளனர். 97 சதவிகிதம் முதல்வராகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

surveryyyy2_13161.jpgசென்னை, கோவை, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து அதிகம் பேர் வாக்களித்துள்ளனர். மேலும், நீலகிரி, பெரம்பலூர், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் குறைவான வாக்குப்பதிவாகி உள்ளது. 20 வயது முதல் 40 வயது வரை 72 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்" என்றார்.

surveryyyy3_13314.jpg

 இதையடுத்து சசிகலா, பொதுச் செயலாளராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அமைப்பு சார்பில் மூன்று நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. அடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் இந்த அமைப்பு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/76928-online-survey-result-leaves-sasikala-in-shock.art

Categories: Tamilnadu-news

சசி ‘ஸ்டைல்’! - சசி... அன்று முதல் இன்று வரை...

Thu, 05/01/2017 - 06:33
சசி ‘ஸ்டைல்’! - சசி... அன்று முதல் இன்று வரை...

 

ரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் உடைகளில் தங்களுக்கென ஒரு பாணி வைத்துக்கொள்வது பொதுவான வழக்கம். கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு, ஜெயலலிதாவுக்கு பச்சைப் புடவை, எம்.ஜி.ஆருக்கு தொப்பி... தற்போது, அரசியலில் அடியெடுத்துவைக்கும் சசிகலாவும் அப்படி ஓர் அடையாளத்தோடு வந்திருக்கிறார்.

p36.jpg

p36b.jpg

p36a.jpg

 

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதில், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சான்றிதழை சசிகலாவிடம் கொடுப்பதற்காக போயஸ் தோட்டம் சென்றார்,   முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போதுதான் சசிகலாவின் உடையில் அந்த மாற்றங்கள் தெரிந்தன.

கழுத்து மூடப்பட்ட, முக்கால் அளவுக்கு கைகள் மூடப்பட்ட ரவிக்கை அணிய ஆரம்பித்துள்ளார். இரட்டை இலையை ஞாபகப்படுத்தும் வெளிர்பச்சை நிறப் புடவை. வட்டமான குங்குமப் பொட்டு... அதற்கு மேலே செந்தூரக் கீற்று.திடீரென அவருடைய உடையணியும் பாங்கு ஒரே நாளில் இப்படி மாறிப்போனது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

p36c.jpg

p36d.jpg

‘ஜெயலலிதாவைப் பார்ப்பது போல இருக்கிறது’ என்று எல்லோரும் தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

மாற்றம் உடையில் மட்டுமா சின்ன மேடம்?

http://www.vikatan.com/juniorvikatan/

இந்த ஸ்டைல் போதுமா கலைஞன்..:grin:

Categories: Tamilnadu-news

‘எனக்காக சிலுவையை சுமப்பவர் 'சசிகலா'...!' யாரைக் குறிப்பிடுகிறார் நாஞ்சில் சம்பத்?

Thu, 05/01/2017 - 06:26
‘எனக்காக சிலுவையை சுமப்பவர் 'சசிகலா'...!' யாரைக் குறிப்பிடுகிறார் நாஞ்சில் சம்பத்?

a3_10062.jpg

“என்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் சசிகலா எந்த கருத்தும் சொன்னதில்லை. கூட்டத்துக்குப் போக வேண்டாம் என்றோ, அரசியலை விட்டு விலக சொல்லியோ ஒரு போதும் சொல்லவில்லை. கடந்த 8 மாதகாலமாக மேடையில் பேசுகிற வாய்ப்பு இல்லாமல்,  நான் வீட்டில் வெறுமனே இருந்த காலகட்டங்களில், தன்னுடைய நகைகளை அடகு வைத்து குடும்பத்தை காப்பாற்றியவர் சசிகலா. ஏசு சிலுவையை தூக்கி, தானே தோளில் போட்டுக் கொண்டதைப் போல, என்னுடைய சுமைகளை முற்றிலுமாக சுமந்து கொள்ளும் சுமைதாங்கி சசிகலா.” என உருக்கமாக பேசுகிறார் நாஞ்சில் சம்பத்.

'சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதற்கான எந்தத் தகுதியும் எனக்கு இல்லை' எனச்சொல்லி கடந்த இருதினங்களாக அரசியலில் பரபரப்பை கிளப்பி வந்த நாஞ்சில் சம்பத், திடீரென இப்படி அந்தர் பல்டி அடிக்கிறாரே என யோசிக்க வேண்டாம்.

தனக்கான சிலுவையை சுமப்பவர் என நாஞ்சில் சம்பத்  உருகுவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அல்ல. அவரது அன்பு மனைவி சசிகலாவைப்பற்றி.

a1_10266.jpgதன் மனைவி சசிகலாவை பற்றி முதன்முதலாக விகடனுக்கு மனம் திறக்கிறார் நாஞ்சில் சம்பத். “1989 ஆகஸ்ட் 17-ம்தேதி எனக்கு அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையில் திருமணம் நடந்தது. ஆகஸ்ட் 29-ம் தேதியே நான் காரமடை பொதுக்கூட்டத்துக்குப் போய்விட்டேன். அதைத் தொடர்ந்து 2012 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நான் வீட்டில் இருப்பது போன்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை. என்னுடைய பருவகாலங்கள் அனைத்தையும் நான் கட்டிலில் செலவழிக்கவில்லை. மேடையில் செலவழித்தேன்.

அன்பும், ஆதரவும் உள்ள கணவனாக நான் இருந்திருக்கிறேன். ஆனால் நம்முடைய சமூக அமைப்பில் ஒரு பெண் எதிர்பார்க்கின்ற எதையும் என் மனைவிக்கு நிறைவாக செய்ய முடியவில்லை என்ற குற்ற மனப்பான்மை எனக்கு உண்டு. ஆனால் அவள் அதை பொருட்படுத்தியதே இல்லை. சேலம் மத்திய சிறைச்சாலைத் தவிர, தமிழகத்தில் இருக்கிற 7 மத்திய சிறைச்சாலைகளிலும் வாசம் செய்தவன் நான். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவன். சிறைச்சாலைக்குள் தாக்கப்பட்டவன். மேடையிலேயே வத்தலக்குண்டில், குளித்தளையில் தாக்கப்பட்டவன். நான் காயம் பட்டு வீட்டுக்குச் செல்லும் போது கண்ணீர் சிந்தி அழுதிருக்கிறாளே தவிர, இனிமேல் மேடைக்கு போகக்கூடாது என்று ஒரு போதும் சொன்னதில்லை. என்னை நன்கு புரிந்துகொண்டவள் சசிகலா.

என்னுடைய குழந்தைகள் என்னுடைய மகள் மதிவதினி, என் மகன் சரத்பாஸ்கர் அவர்கள் வளருவதை நான் நேரடியாக பார்த்து அனுபவிக்கவில்லை. என்னுடைய வயதான தாய் தந்தையின் இறுதிக்காலத்தில், அவர்களை அவள் பரிவோடு பார்த்துக் கொண்டது என்னை நெகிழ வைத்தது. என்னுடைய குடும்பத்தில் ஓரளவு வருவாய் ஈட்டுபவன் நான்தான். அதை என்னுடைய சகோதரர்களுக்கும், ரத்த சொந்தங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறபோது அவள் ஒருநாளும் தடுத்ததில்லை. என்னுடைய குணமும், இயல்பும் அறிந்து, என்னுடைய குடும்பத் தேரை அவள்தான் இன்னும் இழுத்துச் செல்கிறாள். ஒருநாள் கூட எனக்கு அதுவேண்டும் இதுவேண்டும் என்று கேட்டதில்லை.

கடந்த 8 மாதகாலமாக மேடையில் பேசுகிற வாய்ப்பு இல்லாமல்  நான் வீட்டில் வெறுமனே இருந்த காலகட்டங்களில் தன்னுடைய நகைகளை அடகு வைத்து எங்கள் குடும்பத்தினுடைய தேவைகளை அவள் நிறைவேற்றுவதற்கு முன்வந்தாள். எனக்கு என்ன கிடைக்கிறதோ, அதை அவளிடத்திலே போய் ஒப்படைத்துவிடுவேன். இதுவரை நான் மருந்து கடைக்கோ, மளிகைக்கடைக்கோ, துணிக்கடைக்கோ சென்றதில்லை. பருப்பு வாங்குவதிலிருந்து பயணச்சீட்டு வாங்குவது வரை எல்லாமே அவள்தான். எல்லா வேலைகளையும் ஏசு சிலுவையை தூக்கி தானே தோளில் போட்டுக் கொண்டதைப் போல செய்கிறாள். என்னுடைய சுமைகளை முற்றிலுமாக சுமந்து கொள்ளும் சுமைதாங்கியாக அவள் இருக்கிறாள்.

a3_10523.jpg

அரசியல் நடவடிக்கைகளில் எந்த கருத்தும் சொன்னதில்லை. கூட்டத்துக்குப் போக வேண்டாம் என்றோ எதுவும் சொன்னதில்லை. அவள் சுட்டுத்தருகிற வரட்டியும், மட்டன் குழம்பும் அவள் வைத்துக் கொடுக்கும் மீன்குழம்பும் அலாதியான சுவையுடையது. என்னுடைய குடும்பத்தில் அவள் வந்தபிறகு என்னுடைய சுமையையெல்லாம் தூக்கி வைத்துவிட்டேன். எனக்கு பொதுவாழ்வே சுமையாகிப்போனது. கனமாகவும் இருக்கிறது. இதை இறக்கி வைக்க முடியாமல் திண்டாடுகிறேன். ஆனால் என் குடும்பச் சுமையை அவளே தாங்கிக் கொண்டாள். இதன் மூலம் கொடுத்துவைத்தவர்களின் பட்டியலில் நான் இருக்கிறேன். அவர்களுக்காக செலவழிக்கிற வாய்ப்பு இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. என்னுடைய மகளுக்கு மெடிக்கல் சீட்டு கிடைக்காத போது, அவள் சொல்லிதான் ஹோமியோபதி மருத்துவராக்கினோம்.

அவள் தலைக்குள் ஒரு கட்டி வந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவளுக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் என்று சொன்னார்கள். அறுவைசிகிச்சசை நடைபெறும் அன்று வைகோ அவர்கள் திருச்சி வழக்கறிஞர் மாநாட்டை நடத்தினார். நாளைக்கு உனக்கு அறுவைசிகிச்சை. வழக்கறிஞர் மாநாடு இருக்கிறது என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றேன். ‘அறுவைசிகிச்சையை டாக்டர்கள்தானே செய்கிறார்கள். மகளும் மகனும் உடன் இருக்கிறார்கள். நீங்கள் போய்வாருங்கள்.’ என்றாள். அதைக் கூட அவள் தாங்கிக் கொண்டார். அவள் துயரப்படுகிற போதெல்லாம் துணையாக நான் இல்லை என்ற கவலை எனக்கு உண்டு. எங்க கிராமத்தில் எங்க குடும்பம்தான் செல்வாக்குள்ள குடும்பம். அப்பா இருக்கும் போது எல்லோரும் தேடி வருவார்கள். எல்லோரையும் உபசரித்து அனுப்புவதிலே, அவள் ஒருநாள் கூட முகம் சுழித்ததில்லை.” என்கிறார்.

இரண்டு சசிகலாவை பற்றியும் என்ன நினைக்கிறீர்கள் என அவரிடம் கேட்டோம். “இந்த சசிகலா அரசியலில் திணிக்கப்படுகிறவர். அந்த சசிகலா என்னுடைய குடும்பத்தை வழிநடத்துபவர். இந்த சசிகலாவை நான் பார்த்ததில்லை. பழகியதில்லை. ஒருநாள் கூட நான் அறிமுகமானதில்லை. ஆனால் அந்த சசிகலா என்னை மணம்முடித்த நாள்முதலாக கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்கிற ஒரு குலமகளாக இருக்கிறாள்.”  எனச்சொல்லி பேட்டியை முடித்தார் நாஞ்சில் சம்பத்.

நாஞ்சில் சம்பத்துக்கு பரமபதத்தில் வரும் ஏணியும், பாம்பும் போல ‘சசிகலா’ என்ற பெயர் அமைந்து போனது தான் ஆச்சரியம்.

http://www.vikatan.com/news/coverstory/76914-nanjil-sampath-speaks-about-his-wife-sasikala.art

Categories: Tamilnadu-news

'பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கும் வரை போராட்டம் ஓயாது' சசிகலா புஷ்பா ஆவேசம்

Wed, 04/01/2017 - 19:35
'பொதுச் செயலாளர் பதவியிலிருந்து
சசிகலாவை நீக்கும் வரை
போராட்டம் ஓயாது' சசிகலா புஷ்பா ஆவேசம்
 
 
 

''அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பதவியி லிருந்து சசிகலாவை நீக்கும் வரை என் போராட்டம் ஓயாது,'' என, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., ஆவேசமுற்றார்.

 

Tamil_News_large_168389220170104232033_318_219.jpg

தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

*அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுள்ளாரே?

அவர் பொது செயலாளராக பொறுப்பு ஏற்றது, கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வு களுக்கு எதிரானது. அவர் தற்காலிகமாக பொது செயலாளர் பொறுப்பு ஏற்றது சட்டப்படியான செயல்பாடு இல்லை.

*எப்படி கூறுகிறீர்கள்?

பொது செயலாளராக வருபவர் கட்சியில் தொடர்ந்து ஐந்தாண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். இதை அ.தி.மு.க., விதி 30(5)ல் இருக்கிறது. ஆனால் கட்சிக்கு துரோகம் செய்ததாக கூறி சசிகலாவை மறைந்த முதல் வர் ஜெயலலிதா 2011ல் நீக்கினார். பின் 2012ல் அவர் மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப் பட்டார். அவர் இணைந்து ஐந்தாண்டுகள் பூர்த்தியாகவில்லை.

அதற்குள், அவர் பொது செயலாளரானது அடாவடி செயல். தொண்டர்கள் ஏற்க மாட்டார் கள். அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும் என தேர்தலில் ஓட்டு போட்ட மக்களும், இதை ஏற்க மாட்டார்கள். வேண்டுமானாலும் இப்பவே தேர்தல் வைக்கட்டுமே?

* ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவலியுறுத்தப்படுகிறதே?

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்

இருப்பதாகவும், அப்போலோ மருத்துவ மனையில் 75 நாட்கள் என்ன நடந்தது? இதுகுறித்து நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும் என நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

* சசிகலாவிற்கு தொண்டர்கள் ஆதரவு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்களே?

எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர், கவுன்சிலர் பதவிகளில் இருப்பவர்கள் பதவி ஆசைக்காக சசிகலா பின்னால் உள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொண்டர்கள், தன்மானத்தை விட்டு கொடுக்காமல் அமைதியாக உள்ளனர்.

* எதை வைத்து இப்படி கூறுகிறீர்கள்?

தமிழகம் முழுவதும் சசிகலா போஸ்டர்கள் மீது மக்கள் சாணம் அடிக்கின்றனர். அவரது போஸ்டர்களை கிழித்தெறிகின்றனர். மாறாக, உண்மையான தொண்டர்கள் என்னை தொடர்பு கொண்டு பாராட்டி வருகின்றனர். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் எனக் கூறியவர்கள், அப்படி கூற வைத்தவர்கள் பின்னால் உள்ளனர்.

சசிகலா பின்னால் போனால் அ.தி.மு.க.,விற்கு எதிர்காலத்தில் வளர்ச்சி இருக்காது. ஜெயலலிதா மீது உயிரை வைத்திருந்த தொண்டர்கள் அரசியலே வேண்டாம் என்ற மனஉளைச்சலில் உள்ளனர்.

* தீபா மற்றும் உங்களை போன்றவர்கள் சசிகலாவிற்கு எதிராக ஒன்றிணைவீர்களா?

விரைவில் தமிழகத்தில் மாற்றம் வரும். திருப்பு முனை ஏற்படும். சசிகலா குடும்பத்தினருக்கு பயந்து உண்மையான தொண்டர்கள் பொறுமையாக காத்து இருக்கின்றனர்.

* சசிகலாவிற்கு எதிராக பேசுவோர் மீது தாக்குதல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுகிறதே?

கன்னியாகுமரி மாவட்டத்தில், சசிகலாவிற்கு எதிராக குரல் கொடுத்தநாஞ்சில்முருகன் என்பவர் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் உள்ளார். சசிகலா குடும்பத்தினர் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர்.

* சசிகலாவை அ.தி.மு.க., பொதுக்குழு கூடி பொது செயலாளராக தேர்வு செய்துள்ளதே?

அ.தி.மு.க., சட்டவிதிகளின்படி, முறையாக

 

அவர் தேர்வு செய்யப்படவில்லை. அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் வரை, என் போராட்டம் ஓயாது.

* போயஸ்கார்டனை நினைவு இல்லமாக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளதே?

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனை நினைவு இல்லமாக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்ததே நான் தான். ஜெயலலிதாவே இல்லை. இன்னும் ஏன் சசிகலா அங்கிருக்கிறார். நான் இறந்து விட்டால், என் வீட்டில் வேலைக்காரிக்கு என்ன வேலை. இல்லத்தை கபளீகரம் செய்யும் வேலை இது.

* சசிகலா முதல்வராக வேண்டும் என உதயகுமார், தம்பித்துரை போன்றவர்கள்
கூறுகிறார்களே?


சசிகலா முதல்வராக வேண்டும் என்றால் முதலில் எம்.எல்.ஏ., ஆக வேண்டும். தமிழகத்தில் ஊழல் எதிரொலியாக வருமான வரி ரெய்டு நடத்தி வருகின்றனர். சசிகலா ஓட்டு கேட்டு போனால் மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர் எம்.எல்.ஏ., ஆக முடியாது.

* அ.தி.மு.க., தற்போதைய நிலை குறித்து?

அ.தி.மு.க., என்ற பெரிய இயக்கத்தை சீரழிக்க சிலர் நினைக்கின்றனர். பதவி சுகத்திற்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் சசிகலா பின்னால் உள்ளனர். அவர்கள் வரும் காலத்தில் தொகுதி பக்கமே போக முடியாத நிலை ஏற்படும். இதனால் அ.தி.மு.க.,விற்கு எதிர்காலத்தில் வளர்ச்சி இல்லாமல் போய் விடும். இவ்வாறு பேட்டியளித்தார்.

-நமது சிறப்பு நிருபர்-

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683892

Categories: Tamilnadu-news

தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., ஆகியவை, கட்சியை வளர்க்கும் பொருட்டு, பல நிலைப் பதவிகளை உருவாக்கி, அதற்கேற்றபடி அதிகாரத்தை பரவலாக்கி வைத்திருந்தன.

Wed, 04/01/2017 - 19:34
gallerye_234620433_1683787.jpg

 

  • gallerye_232216376_1683787.jpg

 

தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., ஆகியவை, கட்சியை வளர்க்கும் பொருட்டு, பல நிலைப் பதவிகளை உருவாக்கி, அதற்கேற்றபடி அதிகாரத்தை பரவலாக்கி வைத்திருந்தன.

 

Tamil_News_large_1683787_318_219.jpg

ஆனால், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மரணம் மற்றும், தி.மு.க., தலைவர் உடல்நலம் குன்றி இருத்தல் ஆகிய காரணங்களால், புதிதாக தலைமை ஏற்றிருக்கும், இரு கட்சிகளின் பொறுப்பாளர் களும், கட்சி ரீதியிலான பதவிகளில் மாற்றம் ஏதும் செய்யாமல், அதிகாரத்தை, தங்கள் கைகளில் மட்டுமே இருக்கும் வகையில் மாற்றி அமைத்து விட்டனர்.

அ.தி.மு.க.,வில், தலைவர் பதவி, அதைத் தோற்றுவித்த, எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உரித்தானது; எனவே, அதற்கடுத்த, பொதுச் செயலர் பதவியில், பல ஆண்டு காலமாய், ஜெயலலிதா இருந்தார். அவர் மறைந்த பின், தற்போது, அவரது தோழி சசிகலா, அப்பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவிப்போர் அனைவரும், அடுத்த நாளே, அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடும் நிலைக்கு மாற்றப்படுகின்றனர்.

இது தொடர்கதையாகும் என்பதை, அவர்களின் எதிர்கால திட்டங்கள் விளக்குகின்றன. அதாவது, தனக்குச் சாதகமாகச் செயல்படும் அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் அதிகாரம் அளிப்பது,
மற்றவர்களை, கட்சியிலிருந்து வெளியேற்றாமல், 'டம்மி'யாக்கி விடுவது ஆகியவை, திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.அதே போல், தி.மு.க.,விலும், தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி, சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாத நிலையில் இருப்பதால், அக்கட்சியில், செயல் தலைவர் என்ற புதுப் பதவி உருவாக்கப்பட்டு, அவர் மகன் ஸ்டாலின், நேற்று அப்பதவியில் அமர்த்தப்பட்டார்.

அவர் ஏற்கனவே பார்த்து வந்த பொருளாளர் பதவி, அவர் சகோதரி கனிமொழிக்கோ,முதன்மைச் செயலர் துரைமுருகனுக்கோ வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அப்பதவியை, ஸ்டாலினே தக்க வைத்துக் கொண்டார்; இவர் ஏற்கனவே வகித்து வந்த, இளைஞரணி செயலர் பதவியையும், வேறு யாருக்கும் கொடுக்கவில்லை.

ஆக, கட்சியின் முக்கிய மூன்று பதவிகளையும் தன்னிடம் இருத்தி, மொத்த அதிகாரத்தையும் தன் வசமாக்கிக் கொண்டுள்ளார். இனி கட்சி ரீதியான எந்த செயல்பாடும் ஸ்டாலினிடம் கேட்காமல் நடக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 

தலையாட்டிகளுக்கு மட்டுமே பதவி நீட்டிப்பு


அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமிக்கப்பட்டு உள்ள சசிகலா, மாவட்ட வாரியாக, நிர்வாகிகளை சந்தித்து பேச முடிவு செய்தார். அதன்படி, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் உள்ள, எட்டு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். காலை, 9:00 மணிக்கு நிர்வாகிகள் வந்தனர். 10:15 மணிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வந்தனர். சசிகலா வருகைக்காக, அனைவரும் காத்திருந்தனர். பகல், 11:50 மணிக்கு, சசிகலா வந்தார்.

கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பேச, அனுமதி

வழங்கப்படவில்லை; சசிகலா மட்டும் பேசினார்.

அவர் பேசியதாவது:மாவட்ட செயலர்கள், அனைத்து நிர்வாகிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும். வேற்றுமையை மறந்து, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். மாவட்டங்களில் நடக்கும், நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழாவில், நானும் கலந்து கொள்வேன். அனைவரும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்; கரையான்கள் புக வழி விடக்கூடாது.

ஜெயலலிதா இருந்தபோது, எப்படி செயல்பட்டீர் களோ, அப்படியே தொடர்ந்து செயல்படுங்கள். மாதந்தோறும்,கிளை கூட்டம் நடத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒன்றிய, நகர கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விபரங்களை, தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதிக அளவில், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை, கட்சியில் சேருங்கள். சிறப்பாக செயல்படுங்கள்; உங்களுக்கு நல்லது நடக்கும். இவ்வாறு சசிகலா பேசினார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி,9ம் தேதி வரை நடைபெற உள்ளது.சந்திப்பு முடிந்ததும், தனக்கு ஆதரவாக தலையாட்டும் நிர்வாகிகளை மட்டும், பதவி யில் தொடர அனுமதிப்பது என்றும், எதிராக உள்ளவர்களை, 'டம்மி'யாக்கவும், சசிகலா முடிவு செய்துள்ளார்.

'கட்சியை சசி கட்டுப்பாட்டில் வைத்தால் தான், மற்ற வேலைகளை எளிதாக முடிக்க முடியும். 'மாவட்ட'ங்களையும், 'வட்ட'ங்களையும், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களையும் பேச விட்டால் பிரச்னை வெடிக்கும்.

ராணுவ கட்டுப்பாட்டுடன், ஜெ., போல கட்சியை வழி நடத்துவேன் என, அக்கா சொல்லி இருக்காங்க...' என, சசிகலா ஆதரவாளர் சிலர், இப்போதே கூறி வருவது, சசிகலாவின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருப்பதாக, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 

சசி காருக்கு மட்டும் அனுமதி!


கட்சி அலுவலகம் உள்ளே, சசிகலா காருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அவர், ஜெயலலிதா பயன்படுத்தும் காரில் வந்தார். முதல்வர் பன்னீர்செல்வம் கார் உட்பட அனை வருடைய கார்களும், வெளியே நிறுத்தப் பட்டன. முதல்வர் பன்னீர்செல்வம், காரில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.

கூட்டம் குறைவு!


மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க, சசிகலா காலை, 10:00 மணிக்கு, கட்சி அலுவலகம் வருவார் என, நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், தொண்டர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால், அவர் குறித்த நேரத்திற்கு வரவில்லை.

அவரை வரவேற்க, பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். சசிகலா வருவதற்கு முன், கட்சி அலுவலகம் உள்ளே நிறுத்தப்பட்டனர். அவர்களின் கைகளில், ஜெயலலிதா, சசிகலா படத்துடன் கூடிய அட்டைகள் வழங்கப்பட்டன. சிறிது நேரத்தில், அவற்றை திரும்ப பெற்று, கட்சிக் கொடிகளை வழங்கினர்.

அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு இடையே, முன் வரிசையில் நிற்பது தொடர்பாக, மோதல் எழுந்தது; போலீசார் சமாதானப்படுத்தினர். ஜெயலலிதா, கட்சி அலுவலகம் வருவது, திருவிழா போல் இருக்கும்; தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிவர்.

ஆனால், நேற்று அந்த எழுச்சி இல்லை.சந்திப்பு முடிந்ததும், மாவட்ட வாரியாக,

 

நிர்வாகிகளுடன் சசிகலா, குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.

முழு அதிகாரத்துடன் செயல் தலைவர்


தி.மு.க., வரலாற்றில், முதன்முறையாக, செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, அப் பதவி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னை
அறிவாலயத்தில், நேற்று காலை, 9:10 மணிக்கு துவங்கியது; 10:25 மணிக்கு முடிந்தது. உடல்
நலக்குறைவு காரணமாக,கட்சி தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை.

பொருளாளர் ஸ்டாலின், முதன்மை செயலர் துரைமுருகன், மகளிர் அணி செயலர் கனி மொழி, துணை பொதுச் செயலர், ஐ.பெரிய சாமி, முன்னாள் மத்திய அமைச்சர், டி.ஆர். பாலு, மருத்துவ அணி நிர்வாகி சரவணன், அமைப்புச் செயலர் இளங்கோவன் உட்பட, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தி.மு.க., சட்டப்பிரிவு செயலரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, ஆர்.எஸ்.பாரதி பேசுகையில்,
''கட்சியின் சட்டவிதிகளில், திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. செயல் தலைவர் பதவி என்பது, தி.மு.க., தலைவர் பதவிக்கு இணை யானது; தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு உண்டு,'' என்றார்.

பொதுச் செயலர் அன்பழகன் பேசுகையில், ''கட்சியின் சட்டவிதி, 18வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டு, செயல் தலைவராக, ஸ்டாலினை நியமனம் செய்யும் அறிவிப்பை முன்மொழிகிறேன்,'' என்றார். முதன்மை செயலர் துரைமுருகன், அந்த அறிவிப்பை வழிமொழிந்தார். ஸ்டாலின், செயல் தலை வராக நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட தும், அவர், அன்பழகனின் காலை தொட்டு வணங்கி, ஆசி பெற்றார்.

பின், ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவி, துரைமுருகனுக்கோ, கனிமொழிக்கோ வழங்கப்படும் என, அனைவரும் அமைதி காத்து, கைகட்டினர்; ஆனால், அது போன்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.தவிர, ஸ்டாலின் வகித்து வரும் இளைஞரணி செயலர் பதவியை, வேறு யாருக்காவது மாற்றித் தருவார் என, எதிர்பார்க்கப்பட்டது; அதுவும் நடக்கவில்லை.

உறுப்பினர்கள் அனைவரும், மனதில் எழுந்த சந்தேகத்திற்கு விடை தெரியாமல் கிளம்பிச் சென்றதை பார்க்க முடிந்தது.'மூன்று பதவிகளையும் ஸ்டாலின் வைத்திருப்பதைப் பார்க்கும் போது, அ.தி.மு.க., போல, ராணுவக் கட்டுப்பாட்டில் கட்சியை கொண்டு வர ஆசைப் படுகிறாரோ என, நினைக்கத் தோன்றுகிறது.

ஏற்கனவே, கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட, இவருடைய ஆதரவாளர்களுக்கு மட்டுமே, 'சீட்' கொடுக்கப்பட்டது என, புகார் கிளம்பி, தலைவர் காதுக்குச் சென்றது. அவர் பல முறை, பலரைச் சமாதானம் செய்ய வேண்டிய சூழல் உருவானது. இனி, எதிர்ப் பாளர்கள் யாரும், வாயைத் திறக்க முடியாத சூழல் உருவாகி விட்டது' என்ற கருத்து, கட்சி யினரிடையே எழுந்துள்ளது.
 

ஜெ., போல் சசிகலா சைகை!


அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமனம் செய்யப்பட்டதும், தனது நடை, உடை மற்றும் சிகை அலங்காரத்தை, ஜெயலலிதா போல் மாற்றிக் கொண்டுள்ளார். பொதுச் செயலராக பதவியேற்க, கட்சி அலுவலகம் வந்தபோது, ஜெயலலிதாவை போலவே, முதல் மாடியில் நின்று, தொண்டர்களை பார்த்து வணங்கினார். அதேபோல், நேற்று கட்சி அலுவலகம் வந்த சசிகலா, ஜெ.,வை போல் மாடியில் நின்று, இரட்டை விரலை காண்பித்தார். மேடையில், சசிகலா மட்டும் அமர்ந்தார். மற்றவர்கள், அவர் முன் பவ்வியமாக உட்கார்ந்திருந்தனர்.
 

கனிமொழி ஏமாற்றம்


கனிமொழிக்கு, பொருளாளர் பதவி அல்லது காலியாக உள்ள துணை பொதுச் செயலர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அவருக்கு, இன்று பிறந்த நாள்; பிறந்த நாள் பரிசாக, பொருளாளர் பதவி வழங்கப்படாத தால், அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதற்கு காரணம், பொருளாளர் பதவியை, முன்னாள் அமைச்சர்கள் துரை முருகனும், எ.வ.வேலுவும் எதிர்பார்த்தனர். இந்த போட்டியின் காரணமாக, அப் பதவியை யாருக்கும் வழங்காமல், ஸ்டாலினே வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683787

Categories: Tamilnadu-news

கார்... சேர்... ஹேர்! - ஜெயலலிதாவாக மாறிய சசிகலா!

Wed, 04/01/2017 - 18:18
கார்... சேர்... ஹேர்! - ஜெயலலிதாவாக மாறிய சசிகலா!

 

ஜெயலலிதாவின் கார் பின் சீட்டில் அமர்ந்தும் ஆட்சியின் நிழலாகவும் இருந்துவந்த சசிகலா, முன் சீட்டுக்கு வந்துவிட்டார். நிழல் நிஜமாகிவிட்டது.

ஜெயலலிதா, தலைமை அலுவலகம் வந்தால் போயஸ் கார்டன் டு ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு வரை திருவிழாதான். அது வழக்கமான சம்பிரதாயம். முதன்முறையாக சசிகலா பொறுப்பேற்று வரும்போது சும்மா இருப்பார்களா? ஜெயலலிதாவுக்கு இல்லாத அளவுக்குப் பதவிக்காகப் பட்டையை கிளப்பிவிட்டார்கள் கட்சியினர். முதல்வர் பதவியேற்கும்போது அண்ணா, எம்ஜி.ஆர் சமாதிகளில் அஞ்சலி செலுத்துவது ஜெயலலிதாவின் ஸ்டைல். அதை ஃபாலோ அப் செய்தார் சசிகலா. பொதுக்குழு முடிந்து ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் சமாதிக்கு வந்து அட்டெண்டன்ஸ் போட்டார்கள். ஜெயலலிதா பயன்படுத்திய TN07 AD 0006 பதிவு எண் கொண்ட காரில் முன் சீட்டில் அமர்ந்தபடி ஜெயலலிதா சமாதிக்கு வந்தார் சசிகலா. முதல்வர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அவைத்தலைவர் மதுசூதனன் என முன்னணித் தலைவர்கள் பலரும் சசிகலாவுக்காகக் காத்திருந்தார்கள். பொதுக்குழுத் தீர்மானத்தை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வணங்கினார் சசிகலா. அங்கே அஞ்சலி வைபவம் முடிந்ததும் எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதிகளுக்கும் சென்றார். 

p12.jpg

அடுத்த நாள். கட்சித் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள். ‘‘புரட்சித் தலைவி’’ கோஷத்துக்குப் பதிலாக ‘‘சின்னம்மா வாழ்க’’ என ஸ்ருதி மாறியிருந்தது. கூட்டம் சேர்க்கும் பொறுப்பு சென்னையை சேர்ந்த மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிர்வாகிகள் மட்டுமே சசிகலாவை ஆதரிக்கும் நிலையில் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த ஏற்பாடு. தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்குச் செல்ல மேடை, சசிகலாவை வரவேற்க நின்ற நிர்வாகிகள் என ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட மரியாதைக் காட்சிகள் அப்படியே ரிப்பீட் ஆகின. முதல்வர் பன்னீர்செல்வம் கார் முதலில் வந்து நின்றது. அவர் இறங்கிச் சென்றவுடன் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் ஓடிவந்து ‘‘சின்னம்மாவின் கார் இங்கேதான் நிற்கும். உடனடியாக முதல்வர் காரை வெளியே எடுங்கள்’’ என விரட்டினார்கள். பன்னீர் கார் வெளியேறியது. கூட்டம் முடிந்து சசிகலா சென்ற பிறகு, தனது காரைத் தேடி முதல்வர் பன்னீர்செல்வம் ரோட்டுக்கு வர வேண்டியிருந்தது.

சசிகலா வருகைக்காகப் புத்தம் புதிய சஃபாரி உடை அணிந்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சஃபாரி உடைக்குள் வாக்கி டாக்கியும் பிஸ்டலும் தெரிந்தன. வடிகட்டித்தான் உள்ளே நிர்வாகிகளை அனுமதித்தனர் போலீஸார். மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் நுழைந்தபோது அடையாள அட்டையைக் கேட்டனர். ‘‘எங்களுக்கு உறுப்பினர் அட்டைதான் கொடுப்பாங்க. இது என்ன ஃபேக்டரியா? என்ன பொறுப்புன்னு போட்டு கார்டு கொடுக்குறதுக்கு?’’ என எகிறினார்கள். ‘‘அம்மா வந்தபோதுகூட இவ்ளோ கெடுபிடி இல்லை’’ எனப் புலம்பினார் கள். அலுவலகத்துக்குள் குறைவான தொண்டர் களையே அனுமதித்தனர். கூட்டம் குறைவாக இருந்தால் வெளியில் நின்ற மகளிர் அணியினரை உள்ளே அழைத்துச் சென்றார்கள். பால்கனியில் இருந்து மைக் பிடித்த செங்கோட்டையன், அங்கு நின்ற ஆண்களைப் பின்னால் செல்லும்படி கூறினார். அந்தப் பகுதி முழுவதும் மகளிர் அணியினர் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர்.

p12a.jpg

p12b.jpg

சசிகலா வருவதற்கு முன்பு கார்டனில் இருந்து ஜெயலலிதா பயன்படுத்திய நான்கு குஷன் நாற்காலிகள் எடுத்து வரப்பட்டன. கீழ்த் தளத்துக்கு இரண்டு, மேல் தளத்துக்கு இரண்டு என 4 நாற்காலிகளும் கொண்டு செல்லப்பட்டன. அந்த நாற்காலிகளைத்தான் சசிகலா பயன்படுத்தினார். ஜிம்மி ஜிப் கேமரா, அகண்ட எல்.இ.டி திரைகள் என நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக ஜெயா டி.வி-யின் 11 யூனிட்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றின. வெளியே பிரமாண்ட திரை எல்லாம் ஜெயலலிதா வந்தபோது வைக்கப்பட்டது கிடையாது. ஜெயலலிதாவால் முன்பு நீக்கப்பட்ட டி.டி.வி தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் அலுவலகத்துக்கு வந்தனர். நான்கு வாகனங்கள் பாதுகாப்புக்கு அணிவகுத்து வர ஜெயலலிதா பயன்படுத்திய TN09 BE 6167 லேண்ட் க்ரூஸர் காரில் வந்து இறங்கினார் சசிகலா. ஜெயலலிதா பெயரில் இருக்கும் இந்த கார், 2010 ஆகஸ்ட்டில் வாங்கப்பட்டது. கார் டேஷ் போர்டில் விநாயகர், பார்த்தசாரதி, ஆஞ்சநேயர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அரசு வீடியோகிராபர் பாபு அ.தி.மு.க. நிகழ்ச்சியை கவரேஜ் செய்து கொண்டிருந்தார்.

கீழ்த் தளத்தில்தான் பொதுச்செயலாளர் அறை இருக்கிறது. அதைப் புதுப்பித்திருந்தார்கள். தரையில் புது டைல்ஸ்கள், இன்டீரியர் மாற்றம் எல்லாம் செய்திருந்தார்கள். அங்கே சென்று சீட்டில் உட்கார்ந்து கையெழுத்துப் போட்டார். பொறுப்பேற்பு சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு முதல் தளத்துக்கு லிஃப்ட்டில் போனார். இந்த லிஃப்டும் ஜெயலலிதா மட்டுமே பயன்படுத்துவது. பால்கனியில் நின்றபடி தொண்டர்களுக்கு போஸ் கொடுத்தார். இதுவும் ஜெயலலிதாவின் ஸ்டைல். வழக்கமான கம்மலை அணியாமல் ஜெயலலிதா அணிந்து வரும் கம்மலைப் போலவே அணிந்துவந்தார்.  ஹேர் ஸ்டைலும் மாறியிருந்தது. கூந்தலை வலை போட்டு மூடியிருந்தார்.

p12sm.jpg

முதல் மாடிக் கூட்ட அரங்கத்தில் சசிகலா உரையாற்றினார். அவரின் முதல் உரையை கேட்க ஏக எதிர்ப்பார்ப்பு இருந்தது. “என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே!” என கன்னிப் பேச்சைத் தொடங்கினார். ‘‘நம் அம்மாவுக்கு இந்த இயக்கம்தான் வாழ்க்கை. எனக்கோ அம்மாதான் வாழ்க்கை. ஆனால், இறைவன் தன் அன்பு மகளை தன்னிடம் அழைத்துக் கொண்டுவிட்டார்’’ என  சொன்ன போது கண்ணீர்விட்டார். உடனே “சின்னம்மா நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அழக்கூடாது. உங்கள் உருவத்தில் நாங்கள் அம்மாவைப் பார்க்கிறோம்” என அ.தி.மு.க. நிர்வாகிகள் கோஷமிட்டனர். இது அரங்கத்துக்கு உள்ளே நடந்தது. ஆனால், வெளியே இருந்த தொண்டர்கள் மத்தியில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ‘‘ ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று முழக்கமிட்ட நம் அம்மாவின் வழியில் நம் பயணத்தை மேற்கொள்வோம்” என ஜெயலலிதாவின் வார்த்தைகளுடன் உரையை முடித்தார். கையில் இருந்த கர்ச்சீஃப் அடிக்கடி கண்ணுக்கும் கைக்கும் இடையே ரன்கள்  எடுத்துக் கொண்டிருந்தது.

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news

சசிகலா படத்தை கிழிப்பவர்களை பிடித்தால் 10 ஆயிரம் பரிசு - நெல்லை கலாட்டா !

Wed, 04/01/2017 - 16:52
சசிகலா படத்தை கிழிப்பவர்களை பிடித்தால் 10 ஆயிரம் பரிசு - நெல்லை கலாட்டா !

சசிகலா பேனர்

நெல்லை : அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் ஃபிளக்ஸ் பேனர்கள் கிழித்தும், சேதப்படுத்தப்பட்டும் வரும் நிலையில், 'இவ்வாறு ஃபிளக்ஸ் பேனர்களை சேதப்படுத்துபவர்களை கண்டுபிடித்தால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்' என அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்கள் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர்.

தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சசிகலா. இதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு நிலவுகிறது. பல இடங்களில் சசிகலா படங்களை சேதப்படுத்தியும், கிழித்தெறிந்தும் தங்களது எதிர்ப்புகளை மக்கள் காட்டி வருகிறார்கள்.  

திருநெல்வேலி மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு கணிசமான அளவு எதிர்ப்புகள் இருந்து வருகிறது. கடையநல்லூர், தென்காசி. சங்கரன்கோவில், திசையன்விளை, வள்ளியூர் உள்ளிட்ட பல இடங்களில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக ஃபிளக்ஸ் பேனர்களை வைத்துள்ள அ.தி.மு.க.வினர், சசிகலாவின் பேனர்கள், போஸ்டர்களை கிழித்தெறிந்து வருகின்றனர். பல இடங்களில் சசிகலாவின் படம் கிழிக்கப்பட்டும், தார் ஊற்றியும், சாணத்தை பூசியும் சேதப்படுத்தி வருகிறார்கள். இது சசிகலா ஆதரவாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தார் ஊற்றியும், சாணத்தை பூசியும் சேதப்படுத்தப்பட்ட பேனர்களை கழுவியும், கிழிக்கப்பட்ட பேனர்களை உடனடியாக மாற்றியும் வருகிறார்கள்.

சசிகலா பேனர்

காவல்துறையில் வாய்மொழியாக புகார் அளிக்கப்பட்டபோதும், பெரும்பாலான இடங்களில் இவ்வாறு நடப்பதால் யார் செய்கிறார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை. தீவிரமாக கண்காணித்தும் யார் இப்படிச் செய்கிறார்கள் என்பதை கண்டறிய முடியாததால் சசிகலா ஆதரவாளர்கள் தவித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. நிர்வாகிகளின் வாட்ஸ் அப் குழுவிலும் இதை தடுப்பது எப்படி என்பது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் விவாதித்து வந்தனர். இந்த குழுவின் அட்மினாக மாநகர மாவட்ட ஜெ பேரவைச் செயலாளரான கே.ஜே.சி.ஜெரால்ட் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அந்த வாட்ஸ் குருப்பில் இந்த விவகாரம் தொடர்பாக  அ.தி.மு.க. மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளரான பல்சசிகலா வாட்ஸப் பேனர்லிக்கோட்டை செல்லத்துரை என்பவர், 'சின்னம்மா படத்தை சேதப்படுத்துபவர்களை கண்டறிபவர்களுக்கு 10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்' என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அம்மாவின் நல்லாசியோடு சின்னம்மா கழகப் பொதுச்செயலாளராக தலைமையேற்று நடத்தும் அ.தி.மு.க.வின் ஆற்றல் மிக்க தொண்டர்களே..’ என்று தொடங்கும் அந்த அறிவிப்பில், ‘‘நமது கழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சூது மதியாளர்களின் சூழ்ச்சியால் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தில் மாற்றுக் கட்சியினரின் தூண்டுதலுடன் செயல்படும் வன்முறையாளர்களின் செயல்களைத் தடுக்கும் கடமை நமக்கு உள்ளது.

குறிப்பாக, நமது கட்சியினர் வைக்கும் ஃபிளக்ஸ் போர்டுகளைச் சேதப்படுத்துபவர்களை அடையாளப்படுத்தும் பணியினைச் செய்ய நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு சின்னம்மாவின் படங்களை சேதப்படுத்தும் செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கும் பணியில் நாம் அனைவருமே இணைந்து செயல்படுவோம். இதற்காக இரவில் நாம் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். ஃபிளக்ஸ் போர்டுகளைச் சேதப்படுத்தும் வன்முறையாளர்களைக் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட கட்சியினர் அனைவரும் முன்வர வேண்டும்.

அவ்வாறு அனைவரும் இரவு நேரங்களில் தீவிரமாக செயல்பட்டு கூடுதல் கண்காணிப்புடன் இருந்தால் போர்டுகளை சேதப்படுத்தும் நபர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க முடியும். நமது கட்சியின் ஃபிளக்ஸ் போர்டுகளை சேதப்படுத்தும் வன்முறையாளர்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தின் சார்பில் 10,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்,’’ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

சசிகலா படம் அச்சடிக்கப்பட்ட ஃபிளக்ஸ் பேனர்களை கிழிப்பவர்களைக் கண்டுபிடித்தால் பரிசுத் தொகை வழங்கப்படும் என்கிற இந்த அறிவிப்பு குறித்து கட்சியினர் பரபரப்பாக பேசப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/76875-admk-functionary-announce-prize-money-to-find-the-suspect-who-tore-sasikala-flex-banner.art

Categories: Tamilnadu-news

சசிகலா சொன்னதும் பொய்யே...பொய்யே...

Wed, 04/01/2017 - 16:24
சசிகலா சொன்னதும் பொய்யே...பொய்யே...
Categories: Tamilnadu-news

சசிகலாவுக்கு 20 கேள்விகள்!

Wed, 04/01/2017 - 16:11
சசிகலாவுக்கு 20 கேள்விகள்!

பொதுச்செயலாளர் பேச்சு...

 

p3.jpgசிகலா முதன்முறையாக மைக் முன்பு வந்து நின்றிருக்கிறார். அவருடைய `அக்கா’வைப் போலவே எழுதிவைத்த உரையை ஏற்ற இறக்கத்தோடு முழங்கியிருக்கிறார். நவரசங்களும் கொட்டிய அவருடைய பேச்சு சொல்வது என்ன? அந்தப் பேச்சில் ஏகப்பட்ட முரண்பாடுகள். அதில் எழும் கேள்விகள் என்னென்ன?

1. ‘‘என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே!’’ என உரையைத் தொடங்கினார். ‘உயிரில் சுமந்த’ ஜெயலலிதாவின் உடல்நிலை தொடங்கி, உயிர் போகும் வரையில் அவருக்கு என்ன நடந்தது என்பதை மறைத்தது ஏன்?

2. ‘‘என்னை பொதுச்செயலாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி’’ எனச் சொன்னார். உங்களைத் ‘தேர்வு’ செய்யவில்லை. ‘நியமனம்’தான் செய்திருக்கிறார்கள்.  இது உங்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

3. ‘‘ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவோடு சென்றிருக்கிறேன். ஆனால், இன்று, மேடைக்கு வந்து பேசுகிற சூழல் உருவாகி இருக்கிறது’’ என்கிறார். ‘அரசியலில் ஈடுபடும் எண்ணமோ பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையோ எனக்குத் துளியும் கிடையாது’ என 2012 மார்ச் 28-ம் தேதி நீங்கள் வெளியிட்ட அறிக்கை உங்களுக்குத் தெரியாமல் வெளியானதா?

4. ‘‘நன்கு உடல் நலம் தேறிவந்த நம் அம்மா... அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு வருகிற அளவுக்கு உடல் நிலையில் முன்னேற்றம்...’’ என்றெல்லாம் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்வதற்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன?

5. ‘‘75 நாட்கள் எவ்வளவோ போராட்டங்கள்’’ எனச் சொல்லியிருக்கிறார். அந்தப் போராட்டங்களின் ஒரு படத்தைக்கூட ஏன் வெளியிடவில்லை?

p3a.jpg

6. ‘‘நம் அம்மாவுக்கு இந்த இயக்கம்தான் வாழ்க்கை. எனக்கோ அம்மாதான் வாழ்க்கை’’ என்கிறவர், அவர் இறந்த 26-வது நாளிலேயே இயக்கம்தான் வாழ்க்கை என வந்தது ஏன்?

7. ‘‘சில நாட்களில் அம்மாவை பூரண நலம் பெற்ற முழுமதியாக போயஸ் தோட்டத்துக்கு அழைத்து வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன்’’ எனச் சொல்கிறார். அந்த நம்பிக்கைக்கு என்ன ஆதாரம்?

8. ‘அழைத்து வந்துவிடுவோம்’ என்பதற்குப் பதிலாக ‘அழைத்து வந்துவிடுவேன்’ என ஜெயலலிதாவைப் போலவே ‘நான்’ என்கிற மனோபாவம் வெளிப்பட்டது ஏன்?

9. ‘‘10 கோடி தமிழ் மக்களின் பாசத் தாயை இறைவன் பறித்துக்கொண்டான்’’ எனச் சொல்கிறார். இந்த மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் மரணம் பற்றிய சந்தேகம்தான் இருக்கிறது. அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.
10. ‘‘33 வருடங்களாக அம்மாவுடன் மட்டுமே என் வாழ்நாட்களைக் கரைத்துவிட்டேன்’’ என்கிறீர்கள். அது சங்கடமான வாழ்க்கையா? அப்படி வாழ்க்கையை கரைத்துவிட்டதற்கு காரணம் என்ன?

11. ``அக்கா, கோட்டைக்குக் கிளம்பிட்டீங்களா? மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்?’’ என அனுதினமும் அம்மாவைப் பற்றிய சிந்திப்புகளிலேயே என் வாழ்நாட்களை செலவழித்தவள் நான்’’ என சொல்லியிருக்கிறீர்கள். ‘அக்காவின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்திருக்கிறேன்’ எனச் சொல்லும் நீங்கள், கோட்டைக்குப் போக ஆசைப்பட்டது ஏன்?

12. ‘‘அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்த என்னை, கழகக் கண்மணிகளுக்காகவும் நான் வாழ வேண்டும் என்கிற உறுதியை எனக்குள் எடுக்க வைத்திருக்கிறது’’ எனச் சொல்கிறார் சசிகலா. ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆனபோது இந்தக் கண்மணிகள் உயிர் தியாகம் செய்தார்களே... அந்தக் கண்மணிகளிடம் இருந்து அம்மாவை மறைத்தது ஏன்?

13. ‘‘எத்தனையோ போராட்டங்கள், அரசியல் நெருக்கடிகள், எதிரிகளின் சூழ்ச்சிகள், ஏற்றத்தாழ்வுகள் என எவ்வளவோ வந்தபோதிலும், அதில் எல்லாம் அம்மா வென்று வருவார்; நான் உறுதுணையாக இருப்பேன்’’ என்கிறீர்கள். இந்தச் சோதனைகள் எல்லாம் யாரால் வந்தன? சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைத் தள்ளியது யார்? உங்கள் குடும்பத்தினருக்கு அதில் பங்கு இல்லையா? அனைவரும் சேர்ந்துதானே நீதிமன்றப் படியேறினீர்கள். இதைத்தான் போராட்டம், நெருக்கடி எனச் சொல்கிறீர்களா?

14. ‘‘அம்மாவின் அரசியல் பிரவேசம், பெண் இனத்துக்கே வழிகாட்டுதலையும், நம்பிக்கையையும் கொடுத்தது. இன்றும் அம்மாவுக்குப் பிறகு ஒரு பெண்ணாக, நான் பொதுச்செயலாளர் கடமையை ஆற்றுவதற்கு முன் வந்திருக்கிறேன்’’ எனச் சொல்வது ஜெயலலிதாவைப் போலவே உங்களுக்கும் அரசியல் பாரம்பர்யம் உள்ளது என்று சொல்ல வருகிறீர்களா?

15 ‘‘தந்தை பெரியாரின் தன்மானம், பேரறிஞர் அண்ணாவின் இனமானம், புரட்சித் தலைவரின் பொன்மனம்’’ என்றெல்லாம் எதுகை மோனை நடையில் பேசுகிறீர்கள். தலைமைச்செயலகத்துக்குள் சோதனை போட்டபோதும் துணை ராணுவப் படை வந்தபோதும் ‘தன்மானம்’ எங்கே போனது? ‘இனமானம்’ எங்கே இடறியது?

16. ‘‘அம்மா, நமக்குக் கற்றுத் தந்திருக்கிற அரசியல் பாடங்களை, பாதத் தடங்களை, வேதமெனப் பின்பற்றுவோம்’’ எனச் சொல்கிறார். உதய், துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், ஜி.எஸ்.டி. என ஜெயலலிதா எதிர்த்தத் திட்டங்களை எல்லாம் ஏன் இப்போது ஆதரிக்கிறீர்கள்? அந்தப் பாதத் தடங்களில் பயணிக்காமல் மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசுவது அம்மாவுக்குச் செய்யும் துரோகம்தானே? இதுதான் அவர் காட்டிய பாதையா? அதில்தான் உங்கள் பயணமா?

p3b.jpg

17. ‘‘அண்ணா, புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, இவர்கள்தான் அ.தி.மு.க-வின் அடையாளங்கள். இவர்களைத் தவிர, வேறு யாரும் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என்பது உறுதி’’ எனச் சொல்கிறீர்கள். பிறகு எப்படி உங்கள் படத்தை மட்டும் பெரிதாகப் போட்டு ஃபிளெக்ஸும் பேனர்களும் முளைக்கின்றன?

18. ‘‘நம் அம்மா காட்டிய வழியில் இருந்து இம்மிகூட விலகாமல் இந்த இயக்கத்தைக் கொண்டு செலுத்துவோம்’’ என்கிறார். பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் ஏற்றினாலே ஜெயலலிதாவிடம் இருந்து கண்டன அறிக்கை வரும். ஆனால், ‘செல்லாக்காசு’ அறிவிப்புக்குப் பிறகு மக்கள் வீதியில் நிறுத்தப்பட்டபோதும் ஒரு அறிக்கைகூட வரவில்லையே... இதுதான் இம்மியளவா?

19. ‘‘தமிழக மக்களால் ஆராதிக்கப்படுகிற கழக அரசின் மீதான மக்களின் அன்பில் குன்றிமணி அளவுக்கும் குறை வராது பாதுகாப்போம்’’ என முழங்குகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்த மத்திய அரசு, அதன்பிறகு பல்டி அடித்ததை ஜெயலலிதா இருந்திருந்தால் சும்மா விட்டிருப்பாரா? ஆனால், குன்றிமணி அளவுகூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே?

20. ‘‘தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால், நாளை நமதே’’ என்று பாடினீர்கள். நாளை நமதே என்று எம்.ஜி.ஆர் சொன்னது உங்களுக்காகத்தானா?

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news