தமிழகச் செய்திகள்

ஸ்டாலினை விளாசும் சசிகலாவின் முதல் அறிக்கை!

Wed, 04/01/2017 - 12:05
ஸ்டாலினை விளாசும் சசிகலாவின் முதல் அறிக்கை!

sasikala_new_2a_15446.jpg

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். இரண்டாவது முறையாக மீண்டும் சசிகலா இன்று தலைமை அலுவலகத்துக்கு வந்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டச் செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக சசிகலா முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளதோடு, எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு என்னும் கிராமிய விழா தடையின்றி நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா மேற்கொண்ட கடும் முயற்சிகளை மறைத்துவிட்டு; அவர் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கக் கூறிய நுணுக்கமான வாதங்களை புறம்தள்ளிவிட்டு; அவரின் அரும் செயல்களை கொச்சைப்படுத்தும் வகையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்.  இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் உள்ளது.

ஜெயலலிதாவின், ஜல்லிக்கட்டுக்கான சட்டப் போராட்டத்தைப் பற்றிய முழு உண்மைகளையும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி, அதை உண்மையாக்கும் முயற்சி கடந்த தலைமுறைகளின் தந்திரமாக இருந்திருக்கலாம். அனைத்துத் தகவல்களும் ஒரு நொடியில் எல்லோரது விரல் நுணிக்கும் வந்துவிடும் இந்த அறிவியல் யுகத்தில் பொய்ப் பிரசாரங்கள் நெடு நேரம் உலவ முடியாது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக 2006-ஆம் ஆண்டு முதலே பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. ஜெயலலிதா ஆணையின்படி, உச்ச நீதிமன்றத்தின் தடை ஆணையை மறு பரிசீலனை செய்யக் கேட்டு 19.5.2014 அன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. திமுக பலம் வாய்ந்த உறுப்பினராக பங்கு பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, 11.7.2011 அன்று காட்சி விலங்குகள் பட்டியலில் புலிகள், கரடிகள் போன்றவற்றுடன் காளை மாடுகளையும் சேர்த்து ஓர் அறிவிக்கையை வெளியிட்டது.  இந்த அறிவிக்கை காரணமாகத் தான் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உச்ச நீதிமன்றம் முழுமையாக தடை செய்தது.  எளிய எடுத்துக்காட்டு மூலம் சொல்வதென்றால், நெடுங்காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்த ஓர் இரு வழிச் சாலையை திடீரென்று ஒருவழிச் சாலை என்று கூறிவிட்டால், அந்த சாலையில் மறுக்கப்பட்ட திசையில் பயணிப்பது `குற்றம்' என்றாகிவிடுவதைப் போல, ஜல்லிக்கட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஓர் அறிவிக்கையால் தடை செய்யப்பட்டுவிட்டது. ஜல்லிக்கட்டுக்கு `தடை' என்பது  மத்திய அரசின் ஒரு திடீர் அறிவிப்பால் இப்படித் தான் வந்தது.

பிரதமரிடம் 7.8.2015 அன்று ஜெயலலிதா பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்த போது, அதில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு `காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகள் நீக்கப்பட வேண்டும்' என்பதை வலியுறுத்திக் கூறினார்.  மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டு 22.12.2015 அன்று கடிதம் ஒன்றினையும் பிரதமருக்கு ஜெயலலிதா எழுதி இருந்தார். ஆனால், மத்திய அரசு காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகள் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் 7.1.2016 அன்று ஒரு காப்புரையை மட்டும் வெளியிட்டதே தவிர, ஜல்லிக்கட்டுக்குத் தடை வரக் காரணமாக இருந்த அம்சத்தைத் தொடவே இல்லை.

1960-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் விலங்குகள் வதை தடைச் சட்டத்தை உரிய முறையில் திருத்தியும், இது தொடர்பான ஏனைய மத்திய அரசு அறிவிக்கைகளில் மாற்றங்களைச் செய்தும், ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெறும் வகையில் நாடாளுமன்றத்தில் உடனடியாக சட்டத் திருத்தம் கொண்டு வாருங்கள் என்று ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருந்தார்கள்.  நாடாளுமன்றத்தில் இத்தகைய ஒரு சட்டத் திருத்தம் வருவதற்கு நேரமில்லை என்று கூறி புறக்கணித்துவிடாமல், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நீட்டித்து, இதற்கான நேரம் ஒதுக்கி ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குங்கள் என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்தியதோடு, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனையையும் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார் ஜெயலலிதா.

விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் 7.1.2016 அன்று மத்திய அரசு அளித்த காப்புரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் 12.1.2016 அன்று உச்ச நீதிமன்றம் தடையை உறுதி செய்தது.  காட்சி விலங்குகள் பட்டியலில் காளை மாடுகள் நீடிக்கும் வரை தடையை நீக்க முடியாது என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடாக இருந்தது. ஒரு நிகழ்ச்சியில், குறிப்பிட்ட ஒரு வகையில், பயன்படும் வண்ணம் எந்த ஒரு காளை மாட்டையும் பயிற்றுவிப்பதே 1960-ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதல்ல; எனவே, ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகள் பயிற்றுவிக்கப்படுவதையே ஏற்க இயலாது என்ற நிலைப்பாட்டில் இருந்து தான் ஜல்லிக்கட்டை இப்போது உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. "ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக 2009-ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு இயற்றிய சட்டம், 1960-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் விலங்குகள் வதை தடைச் சட்டத்திற்கு முரணானது; ஏற்க இயலாதது'' என்று ஜல்லிக்கட்டுக்கு தடை கோரியவர்கள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்டார்.

ஜெயலலிதா அரசால் ஜல்லிக்கட்டு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நெப்ஷடே மாநில அரசு 2009-ஆம் ஆண்டு இயற்றிய சட்டத்தை கேள்வி கேட்க 1960-ஆம் ஆண்டின் மத்திய அரசு சட்டத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், காளை மாட்டை பயிற்றுவிப்பது மிருக வதை அல்ல என்றும், பல ஆண்டுகளுக்கு முன்னர் எங்கோ ஒரு சம்பவம் நடந்தது என்று கூறி இன்று ஜல்லிக்கட்டு தடை செய்வதை ஏற்க முடியாதது என்றும் வாதிட்டார்.  இதற்கு ஒரு உதாரணத்தையும் குறிப்பிட்டார்: ``யாரோ ஒருவர் வங்கியில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் விட்டுவிட்டார் என்பதற்காக, இனி வங்கிகள் யாருக்கும் கடன் தரவே முடியாது'' என்று உத்தரவிட முடியுமா? அதைப் போலத் தான் இதுவும் என்று ஆணித்தரமான வாதங்களை ஜெயலலிதா தலைமையிலான அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்தார்.  ஆனாலும் மத்திய விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960, காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகளும் சேர்க்கப்பட்டு இருப்பது ஆகிய இரு மூலக் காரணங்களை உச்ச நீதிமன்றம் உறுதியாகப் பிடித்துக்கொண்டு கடந்த நவம்பர் மாதம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டது.

ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் மூடி மறைத்துவிட்டு, திமுக மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த போது மேற்கொண்ட ஒரு நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும் நிலை வந்தது என்ற உண்மையை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, மக்களை திசை திருப்பும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபடுவது பொறுப்பான செயல் அல்ல. நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி "ஜல்லிக்கட்டுக்கு தடை வந்ததற்கான காரணங்கள்'' என்று யார் ஒருவர் கூகுளில் தேடினாலும் பல்லாயிரக்கணக்கில் பக்கம் பக்கமாக உண்மை தகவல்கள் கிடைக்கும் காலம் இது. எனவே, தமிழத்தின் உரிமைகளைக் காப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியிலும், உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/76852-admk-general-secretary-sasikala-slams-stalin-in-jallikattu-ban.art

Categories: Tamilnadu-news

சசிகலா நேரில் சொல்லட்டும்... பாய்ந்தார் பன்னீர்

Wed, 04/01/2017 - 11:50

சசிகலா நேரில் சொல்லட்டும்... பாய்ந்தார் பன்னீர்

 

 

சென்னை: தன்னிச்சையாகவும்; வேகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சர்கள் சிலர் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, முதல்வராவதற்காக, முதல்வர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம், விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது, சசிகலா மீது பன்னீர்செல்வத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து, அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகி இருக்கும் பன்னீர்செல்வம், தன்னிச்சையாகவும்; வேகமாகவும் செயல்படுகிறார். அவரை, நிம்மதியாக ஆட்சி செய்ய விடாமல், அ.தி.மு.க.,வின் அமைச்சர்கள் சிலர், சசிகலா தரப்பினரின் தூண்டுதலின் பேரில், பதவி இறங்க வேண்டும் என, அறிக்கைவிடுவதும்; பேட்டி கொடுப்பதுமாக இருக்கின்றனர்.ஆனால், அவர்கள் யாருக்கும் இதுவரை, பன்னீர் தர்ப்பில் இருந்து எவ்வித பதிலும் இல்லை. அதேநேரம், அமைச்சர்கள் யார் தூண்டுதலின் பேரில் இதெல்லாம் நடக்கிறது என்பதை அறிந்தும், அவரை, அடிக்கடி சந்தித்துத்தான் வருகிறார். ஆட்சி நிர்வாகம் குறித்து, ஆலோசனையும் செய்து விட்டு திரும்புகிறார். ஆனால், ஆட்சி அதிகாரம் தனக்கு வேண்டும் என, அவர், பன்னீர்செல்வத்திடம் நேரடியாக தெரிவிக்கவில்லை. அதனால், அவரிடம் அதுகுறித்து, பன்னீர்செல்வம் எதுவும் பேசுவதில்லை.

இதற்கிடையில், பன்னீர்செல்வத்தை பதவி விலக்கோரி, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அறிக்கை விட்டதும், பன்னீர் கோபமாகி விட்டார். சசிகலா தூண்டுதலின் பேரில்தான், தன்னை அனைவரும்,‛ டார்கெட்' செய்கின்றனர் என்பதை அறிந்த பன்னீர்செல்வம், ‛என்றைக்கும் நான் பதவியை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்ததும் இல்லை; தேடிப் போனது இல்லை. பதவி எல்லா நேரங்களிலும் என்னைத் தேடித்தான் வந்திருக்கிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த நலன்களுக்காக பாடுபட வேண்டும் என்று, நிறைய உழைக்கிறேன்; மக்களுக்காகப் பாடுபடுகிறேன். இதெல்லாமே, அ.தி.மு.க.,வுக்கு எதிர்காலத்திலும் பலன் அளிப்பவை.

‛ஆனால், அது எதையுமே புரியாமல்; தெரியாமல், சசிகலாவை குஷிப்படுத்த வேண்டும் என்று, என்னை பதவி விலகச் சொன்னால், நான் பதவி விலக மாட்டேன். சசிகலாவே, முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டால், அதை என்னிடம் நேரடியாக சொல்ல வேண்டும். விருப்பத்தை சொன்ன, சில மணி நேரங்களில், பதவிவை விட்டு இறங்கி விடுவேன். அதற்காக, சிலரை தூண்டிவிட்டு, வேடிக்கைப் பார்ப்பது நல்லதல்ல; நாகரிகமும் அல்ல' என, சக அமைச்சர்களிடம் கொந்தளித்துள்ளார். இந்த விபரமும், சசிகலாவுக்கு சென்றடைந்துள்ளது. ஆனாலும், இவ்விஷத்தில் அவர் அமைதி காக்கிறார். பன்னீர்செல்வமே, தானாக முன் வந்து, பதவி விலக வேண்டும் என, சசிகலா எதிர்பார்க்கிறார். எத்தனை நாளைக்கு, இப்படியே போகும் என தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683634

Categories: Tamilnadu-news

ஜெ. மரணம்! நீதிபதி கருத்தை விமர்சித்த வைகோ மீது அவதூறு வழக்கு!

Wed, 04/01/2017 - 10:31
ஜெ. மரணம்! நீதிபதி கருத்தை விமர்சித்த வைகோ மீது அவதூறு வழக்கு!

1cb_15277.jpg

ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி வைத்தியநாதனுக்கு கண்டனம் தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி மரணம் அடைந்தார். இந்த நிலையில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட அமர்வு விசாாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியும் அதிமுக பிரமுகர் ஜோசப் ஆண்டனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், "முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைபயிற்சி மேற்கொள்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி. அவரைப் பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்க வில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகாவது அதில் உள்ள மர்மங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இதனிடையே, ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி வைத்தியநாதனுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வைகோ மீது வழக்கறிஞர் சூரியபிரகாஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/76845-defamation-case-filed-against-vaiko.art

Categories: Tamilnadu-news

எம்.ஜி.ஆரை முன்வைத்த சசிகலா! -மிரள வைத்த மா.செக்கள் சந்திப்பு

Wed, 04/01/2017 - 10:27
எம்.ஜி.ஆரை முன்வைத்த சசிகலா! -மிரள வைத்த மா.செக்கள் சந்திப்பு 

sasi_admk_13279.jpg

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களுடன் இன்று விரிவான ஆலோசனை நடத்தியிருக்கிறார் பொதுச் செயலாளர் சசிகலா. ' கழகத்தை அம்மா எந்தளவுக்கு வழிநடத்தினாரோ, அதில் சற்றும் குறைவில்லாமல் நாம் கொண்டு செல்ல வேண்டும்' என நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் அவர். 

அண்ணா தி.மு.கவின் பொதுச் செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா.  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அளவுக்குத் தொண்டர்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நிர்வாகிகள் சந்திப்புக்கு தேதி குறித்தார். இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு பச்சை கலர் உடையில் வந்திருந்தார் சசிகலா. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் செயலாளர்கள் இன்று அழைக்கப்பட்டனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்களைப் பற்றி நம்மிடம் பேசினார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

" கட்சித் தொண்டர்களிடம் ஒற்றுமையை நிலைநிறுத்தினால் மட்டுமே, கழகத்தை சிறப்பாக வழிநடத்த முடியும் என்பதை சசிகலா உணர்ந்திருக்கிறார். கீழ்மட்ட அளவில் தனக்கான செல்வாக்கை உயர்த்த வேண்டுமென்றால், நகரம், ஒன்றியம், கிளைக் கழக அளவில் உள்ள நிர்வாகிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் முடிவில் இருக்கிறார். அதன் ஒருபகுதியாகத்தான் இன்று காலை மாவட்டச் செயலாளர்களை சந்தித்தார். அப்போது, ' நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கழகத்தை சிறப்பான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அம்மா இருந்திருந்தால், எவ்வளவு கட்டுக்கோப்பாக கட்சியை நடத்துவார் என்பது உங்களுக்குத் தெரியும். அதில் சற்றும் குறைவில்லாமல் நாம் செயல்பட வேண்டும். மாதத்துக்கு ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும். வார்டுக்கு 50 புதிய உறுப்பினர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும். வரக்கூடிய ஜனவரி 17 அன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். வழக்கம்போல, அவரது பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுவீர்களோ, அதைவிட சிறப்பாக கொண்டாடுங்கள். அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாக முன்னெடுக்க வேண்டும். அண்ணா பிறந்தநாள், அம்மா பிறந்தநாள் வரும்போதும், இதேபோன்று கொண்டாட வேண்டும். அடிமட்டத் தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்' என விரிவாகப் பேசியிருக்கிறார் சசிகலா. கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்தாலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியிலேயே தன்னுடைய பயணமும் இருக்கும் என்பதையும் உணர்த்துகிறார்" என்றார் அவர். 

" கட்சித் தொண்டர்கள் சந்திப்பை அடுத்தகட்டத் திட்டமாக வைத்திருக்கிறார் சசிகலா. இதற்காக மாவட்டம்தோறும் சுற்றுப் பயணம் மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாவட்டச் செயலாளர்களுக்கு இன்று என்ன அறிவுறுத்தப்பட்டதோ, அதைக் கிளைக் கழகம் வரையில் கொண்டு செல்லுமாறு சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல், சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்னைகள் என்ன? நீண்டகாலம் தீர்க்கப்படாமல் உள்ள திட்டங்கள்? கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்? சாலை வசதிகள், குடிநீர், மின்சார வசதிகள் போன்றவை இல்லாத பகுதிகள்; பொதுவிநியோகத் திட்டம் சிறப்பாகச் சென்றடைகிறதா என்பது பற்றியெல்லாம் விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன. ' சிறப்பான ஆட்சியைக் கொடுத்தால், மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்' என்ற நம்பிக்கையை சிலர் விதைத்திருக்கிறார். முதல்வர் பதவியை நெருங்குவதற்கு முன்பு, கிளைக் கழகம் முதல் பொதுமக்கள் வரையில் சரி செய்ய வேண்டிய விஷயங்களுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுத்து வருகிறார் சசிகலா" என்கிறார் மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர். 

கோட்டையை நோக்கிய பயணத்தில் எதிர்வரும் இடர்பாடுகளைக் களையும் முயற்சியை தீவிரமாகச் செய்து வருகின்றனர் மன்னார்குடி உறவுகள். ' ஆட்சி பீடத்தில் அமர்வதற்கு நாள் குறிக்கும் வேலையும் ஒருபக்கம் நடந்து வருகிறது' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 

http://www.vikatan.com/news/tamilnadu/76825-sasikala-gives-priority-to-mgr-in-centenary-celebrations.art

Categories: Tamilnadu-news

அரசியலற்ற 1 மணி நேர பேச்சு... இனி நாஞ்சில் சம்பத் இப்படித்தானா?

Wed, 04/01/2017 - 08:57
அரசியலற்ற 1 மணி நேர பேச்சு... இனி நாஞ்சில் சம்பத் இப்படித்தானா?

a1_12215.jpg

.தி.மு.க.வில் இணையும் போது ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்து விட்டார். 'சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதற்கான எந்தத் தகுதியும் எனக்கு இல்லை' எனச்சொல்லி அமைதியானார் நாஞ்சில் சம்பத். அ.தி.மு.க.வில் தான் இருக்கிறாரா? தி.மு.க.வில் இணையப்போகிறாரா? என அவரை மையப்படுத்தி ஆயிரம் கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதாலும் செங்கல்பட்டு புத்தக திருவிழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசப்போகிறார் என்பதாலும் அங்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நாஞ்சில் சம்பத் என்ன பேசப்போகிறார் என்பதும், நிச்சயம் அரசியல் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து ரயிலில் வந்தார் நாஞ்சில் சம்பத். சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பினாலும் அவரால் அது முடியவில்லை. மீடியாக்களிடம் தொடர்ச்சியாக பேச வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. 'இன்னும் நான் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறேன். விரைவில் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது' என மீடியாக்களிடம் சொன்னார் நாஞ்சில் சம்பத்.

இரவு 7 மணிக்கு  செங்கை புத்தகத்திருவிழாவிற்கு வந்தார் நாஞ்சில் சம்பத். அவருடன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த எழுத்தாளர் பிரபஞ்சனுடன் மேடையேறிய நாஞ்சில் சம்பத்,  பிரபஞ்சனைத்தொடர்ந்து பேசினார். சசிகலா தலைமையை விமர்சித்தும், அரசியலில் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும் சொன்ன நாஞ்சில் சம்பத், அந்த முடிவெடுத்த பின்னர் பங்கேற்கும் முதல் பொது மேடை என்பதால் அதை முன்னிறுத்தியே பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்புக்கேற்ப புத்தக திருவிழா அரங்கு நிரம்பி வழிந்தது.

a2_12383.jpg

அமைதியாக பேச்சைத்துவங்கினார் நாஞ்சில் சம்பத். “ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அந்த எழுத்தாளனோடு நாம் ரத்தமும் சதையுமாக இசைந்து விடுகின்றோம். இன்றைக்கு இருக்கும் தலைமுறையினர் வாசிக்க தயக்கம் காட்டும் யுகம் இது. கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும் போது புத்தகத்தை கொண்டு செல்வதில்லை. அதைப் பேராசிரியர் கொண்டுவருவார் என்கிறான் மாணவர். புத்தகத்தை தொடுவது பாவம் என்று கருதும் இந்த சூழலில் இந்த புத்தகத்திருவிழா வாசிக்கின்ற நோக்கத்தை ஒரு வரலாற்று திருப்பத்திற்கு வகுப்பெடுக்கிறது.

இன்றைக்கு வாசிக்கும் தலைமுறையை புதிதாக மாற்றியே தீரவேண்டும். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் நிலை இனிஉண்டோ  என்று கேட்டான் யுகக்கவிஞன் பாரதி. ஆனால் மனிதன் நோக மனிதன் எதையும் செய்யத் தயாராகும் இந்த காலக்கட்டத்தில் ஆயுதங்களால் சாதிக்க முடியாதவற்றை புத்தகங்கள் சாதிக்கும் என்பதை நாம் நிலை நிறுத்துவதற்கு இந்த விழாக்களை நடத்தியாக வேண்டும். நம் குழந்தைகளுக்கு எழுத்தாளர் பெயர்களை சூட்டுவோம். திருமணங்களுக்கு செல்லும் போது புத்தகங்களை பரிசாக கொடுங்கள். ஒரு புதிய தலைமுறை புத்தகவாசிப்பில் பூத்து வரட்டும்” என ஒருமணி நேரம் பேசினார்.

அரசியலோடு இலக்கியத்தையும், இலக்கியத்தோடு அரசியலையும் கலந்து பேசுவது நாஞ்சில் சம்பத் ஸ்டைல். ஆனால் இந்த ஒரு மணி நேர நாஞ்சில் சம்பத் பேச்சில் ஒரு துளி கூட அரசியல் இல்லை. இனி நாஞ்சில் சம்பத் இப்படித்தானா என்பதும் தெரியவில்லை.

http://www.vikatan.com/news/tamilnadu/76819-nanjil-sampath-speech-in-chengalpattu-book-fair.art

Categories: Tamilnadu-news

பங்கு பிரித்தார் சசிகலா! - ஆட்சிக்கு நடராஜன்... கட்சிக்கு திவாகரன்!!

Wed, 04/01/2017 - 06:41
பங்கு பிரித்தார் சசிகலா! - ஆட்சிக்கு நடராஜன்... கட்சிக்கு திவாகரன்!!

 

‘‘மன்னார்குடி குடும்பத்துக்குள் அதிகாரப் பங்கீடுகள் நடந்து முடிந்துவிட்டன” என்ற பீடிகையுடன் ஆஜரானார் கழுகார். அவரைப் பேசவிட்டுக் காத்திருந்தோம்.

p42c.jpg‘‘சில மாதங்கள் காத்திருப்பார். தனது குடும்பத்திலேயே யாரையாவது நியமித்துவிட்டு சசிகலா அமைதியாக இருப்பார், ஏப்ரல் மாதம் வரை துணைப் பொதுச்செயலாளராக இருந்துவிட்டு அதன்பிறகு பொதுச்செயலாளர் ஆவார் என்றெல்லாம் பலரும் சொல்லி வந்தார்கள். அதை பொய்யாக்கிவிட்டு அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுவிட்டார். தலைமை அலுவலகத்துக்கு வந்த சசிகலா, ‘இனி எல்லாமே நான்தான்’ என்பதைச் சொல்லிச் சென்றுவிட்டார். தலைமை அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் உமது நிருபர்கள் விரிவாகச் சொல்லி இருப்பார்கள். அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.”

‘‘சொல்லும்!”

‘‘பொதுச்செயலாளர் பதவியை ஏற்பதற்கு சசிகலாவுக்கு முதலில் தயக்கம் இருந்ததற்கு காரணம், ‘அனைத்து நிலைமைகளையும் தன்னால் சமாளிக்க முடியுமா?’ என்பதால்தான். ஆனால், அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டியது மொத்தமும் அவரது கணவர் நடராஜன்தான். ‘இன்றைய சூழ்நிலையில் நீங்கள்தான் பொதுச்செயலாளர் ஆகவேண்டும். நமது குடும்பத்திலேயே யாரை நியமித்தாலும் இந்தக் கட்சியை நடத்திச் செல்ல முடியாது. ஜெயலலிதாவைத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் சசிகலாவைத் தெரியும். மேடம், சின்ன மேடம்.... அம்மா, சின்னம்மா.... என்று ஜெயலலிதாவின் இமேஜுடன் சேர்ந்து உங்கள் இமேஜும் வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களைப் புதிதாக அறிமுகப்படுத்த வேண்டியது இல்லை. அதனால், இந்தப் பொறுப்பை தயங்காமல் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சொல்லி இருக்கிறார். ‘எனக்குப் பேச வராது’ என்று சசிகலா சொல்ல... ‘ஜெயலலிதாவே எழுதி வைத்துக்கொண்டுதான் வாசித்தார். ஸ்டாலினும் பலநேரங்களில் எழுதிவைத்துதான் பேசுகிறார். அதனால், எழுதிப் படிப்பது தவறு இல்லை’ என்று அவருக்கு உற்சாக வார்த்தைகள் சொல்லப்பட்டன. சசிகலாவின் இந்த தயக்கத்தைப் பார்த்து சில ஏற்பாடுகள் செய்யப்பட்டனவாம்.”

p42big.jpg

‘‘அது என்ன?”

‘‘கட்சி, ஆட்சி என இரண்டு பெரிய பிரிவுகள் பிரிக்கப்பட்டன. ஆட்சியை எம்.நடராஜன் மேற்பார்வை பார்ப்பது. கட்சியை திவாகரன் கவனித்துக்கொள்வது. கட்சி ரீதியான விஷயங்களில் திவாகரனே அனைத்தையும் தீர்மானிப்பார். நடராஜன் அதில் அதிகமாகத் தலையிட மாட்டார். ஆட்சி நிர்வாகம், அதிகாரிகள் போன்ற விஷயங்களில் நடராஜனே கட்டளைப் பிறப்பிப்பார். அதில் திவாகரன் தலையிட மாட்டார். இப்படி அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் நடந்துள்ளதாம். ஒரேநாளில் நான்கைந்து தடவை திவாகரனுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போன் செய்ததாகவும், ‘அத்தானிடம் இதுபற்றி பேசுங்களேன்’ என்று அவர் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. ‘அத்தான்’ என்று திவாகரன் சொல்வது, அக்கா சசிகலாவின் கணவர் என்ற அடிப்படையில் நடராஜனை!”

‘‘ஓஹோ!”

‘‘ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு நடந்ததைத் தொடர்ந்து அவரை தலைமைச்செயலாளர் நாற்காலியில் இருந்து அதிரடியாகத் தூக்கினார்கள். இதனை ராம மோகன ராவ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தன்னை முழுமையாகக் காப்பாற்றுவார்கள் என்று அவர் நினைத்தார். நடராஜன்தான், ‘இப்படி ஒரு நடவடிக்கைக்கு உள்ளானவரை தலைமைச்செயலாளராக வைத்திருக்க முடியாது’ என்று சொல்லி ஆக்‌ஷனுக்குத் தூண்டினாராம். இதை அறிந்துதான், ‘தமிழக அரசுக்குத் துணிச்சல் இல்லை. எனக்கு எதிராகப் பலரும் செயல்படுகிறார்கள்’ என்ற தொனியில் ராம மோகன ராவ் பேட்டியில் சீறினார். அதிகாரிகள் நியமனம், மாற்றம் போன்றவை நடராஜன் மேற்பார்வையில் நடக்க ஆரம்பித்துவிட்டன.”

‘‘திவாகரனும் நடராஜனும் உட்கார்ந்துகொண்டு சசிகலாவை ஆட்டிவைக்கிறார்கள் என்கிறீரா?”

“இப்படித்தான் கோட்டையில் பேசிக்கொள்கிறார்கள். நடராஜனின் நண்பரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பன்னீர்செல்வம் அவருடன் இருக்கிறார். அனைத்துக் கட்டளைகளையும் அவர்கள் பிறப்பிக்கிறார்கள் என்று அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் கோலோச்சிய ஷீலா பாலகிருஷ்ணனும் வெங்கடரமணனும் சைலன்ட் ஆகிவிட்டார்களாம். இப்போது வந்துள்ள தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எதிலும் பட்டுக்கொள்ளாதவர்.”

‘‘திவாகரன், கட்சிக்காரர்களை கன்ட்ரோல் பண்ணிவிடுவாரா?”

p42b.jpg

“அவரை அ.தி.மு.க-வினர் எப்போதும் ‘பாஸ்’ என்றுதான் அழைப்பார்கள். ஜெயலலிதா இருந்தபோதே, ‘பாஸ்’ என அழைக்கப்பட்ட அவர், ஜெயலலிதா இல்லாதபோது சும்மா இருப்பாரா? புத்தாண்டு தினத்தில் அவரது வீட்டை நோக்கிப் பலரும் படையெடுத்தார்கள். எம்.ஜி.ஆர். நினைவு தினத்தன்று உறுதிமொழி வாசிப்பை திவாகரனின் ஆளான ஓ.எஸ்.மணியனிடம் கொடுத்ததில் இருந்தே இதனை அறியலாம். இந்த அடிப்படையில் 12 மாவட்டச் செயலாளர்களை மாற்றப் போகிறார்கள். போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கட்சியைக் கவனிக்கிறார் டி.டி.வி.தினகரன். தலைமைக்கழகத்தில் இருந்து கட்சியைக் கவனிக்கப் போகிறார் டாக்டர் வெங்கடேஷ்.”

‘‘அமைச்சரவையில் மாற்றம் வருமா?”

“வரலாம். உதயகுமார், செல்லூர் ராஜு, பாலகிருஷ்ண ரெட்டி, கருப்பணன், துரைக்கண்ணு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறதாம். சில அமைச்சர்களின் துறைகள் மாறலாம். சிலர் புதிதாகச் சேர்க்கப்படலாம். செங்கோட்டையன், செந்தில்பாலாஜி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் பெயர்கள் புதிய அமைச்சர்கள் பெயருக்கு அடிபடுகின்றன. கவுண்டர், நாடார் சமூகத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த மாற்றம் அமையுமாம். தேவர் டாமினேஷன் தெரியாதது மாதிரி இந்த மாற்றத்தைச் செய்யப் போகிறார்களாம்.”

‘‘சசிகலா முதலமைச்சரானால், பன்னீர்?”

‘‘ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் ஆக்கப்படலாம். சபாநாயகராக இருக்கும் தனபால், அமைச்சர் ஆகலாம். பன்னீர் வகித்த நிதித்துறை மாஃபா பாண்டியராஜனுக்குப் போகலாம் என்கிறார்கள்.”

‘‘அ.தி,மு.க-வில்கூட அதிரடி மாற்றங்கள் இருக்கும்போல?”

‘‘ஆமாம். அது அ.தி.மு.க பொதுக்குழுவிலேயே தெரிந்துவிட்டது. சுமார் 20 மாவட்டச் செயலாளர்களின் பெயர்களை தீர்மானம் முன்மொழிதல் பட்டியலில் இருந்து தூக்கிவிட்டார்கள். அதுவே பலருக்கும் பீதியைக் கொடுத்துள்ளது. முக்கிய அமைச்சர்களில் சிலரும் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைக்கப்பட்டார்கள். தலைமைக்கழக நிர்வாகிகளில் சிலருக்கும் பொதுக்குழுவில் உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. பொதுக்குழு மேடையில் அமரவேண்டியவர்கள், பார்வையாளர்கள் வரிசையில் முக்கியத்துவம் தரப்படவேண்டியவர்கள், தீர்மானங்களை முன்மொழிபவர்கள் என்று போயஸ் கார்டனில் முன்கூட்டியே ரிகர்சல் நடந்தது. அனைத்தும் சசிகலா மேற்பார்வையில்!”

“அட!”

“ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க பொதுக்குழுவுடன், செயற்குழுக் கூட்டமும் பெரும்பாலும் சேர்த்தே நடத்தப்படும்.  சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொதுக்குழுவில் அனுமதிக்கப்படுவார்கள். இப்போது சசிகலா குடும்பத்தினர் `டிக்’ செய்தவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைத்ததாம். கடந்த காலங்களில் சசிகலாவால் மறைமுகமாகத் தட்டி வைக்கப்பட்ட
வர்கள், சசிகலாவை நிச்சயமாக ஆதரிக்க மாட்டார்கள் என்ற சின்ன சந்தேகம் உள்ளவர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் என்கிற பேனரில் தப்பித்தவறிக்கூட அழைப்பிதழ் போகாமல் பார்த்துக்கொண்டனர். அதாவது, நிர்வாகிகள் அளவில் யாருமே தனக்கு எதிர்ப்பாக இல்லை என்பதைக் காட்ட நினைக்கிறார் சசிகலா!”

‘‘அவைத்தலைவரில் மாற்றம் உண்டா?”

‘‘பண்ருட்டி ராமச்சந்திரன் அவைத்தலைவர் ஆக்கப்படலாம் என்கிறார்கள். பொன்னையனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. செங்கோட்டையன் பெயரைச் சிலர் சொல்கிறார்கள். கட்சிப் பதவியில் இருந்துகொண்டு ஆட்சிக்கு ஆலோசனை சொல்லும் ஒரு குழுவை உருவாக்கப் போகிறார்களாம். அமைப்புச் செயலாளர் பதவியிலும் மாற்றங்கள் வரப்போகின்றன. டெல்டா ஏரியாவில் முன்பு கோலோச்சினார் வைத்திலிங்கம். இனி, அந்த இடத்துக்கு ஓ.எஸ்.மணியன் வருவார். சசிகலா இனி கட்சிக்குள் செய்யப்போகும் கல்தா, புது நியமனம்... போன்ற நடவடிக்கைகளைக் கட்சியின் முன்னணி தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். அவரின் நடவடிக்கையைப் பொறுத்து அதிருப்தி கோஷ்டிகள் உருவாகும்.”

p42a.jpg

“தம்பிதுரைக்கு முக்கியத்துவம் கூடுமோ?”

‘‘அப்படித் தெரியவில்லை. நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகராக அவர் இருப்பதால் டெல்லிக்கும் இந்த ஆட்சிக்குமான மீடியேட்டராக தம்பிதுரை இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவர் அனைத்துக்கும் முன்னால் வந்து நிற்பதை முதல்வர் பன்னீர் விரும்பவில்லை. டெல்லி பி.ஜே.பி தலைமையிடம் நெருக்கம் இருப்பதாக ஒரு தோற்றத்தைக் காட்டிக்கொண்டு நிறைய விஷயங்களில் தம்பிதுரை தலையிடுவதாகச் சொல்கிறார்கள். ‘சசிகலாவே முதலமைச்சர் ஆகவேண்டும், ஆட்சியும் கட்சியும் ஒரே நபரிடம்தான் இருக்க வேண்டும்’ என்று தம்பிதுரை, சசிகலாவுக்கு ஏகத்துக்கும் ஐஸ் வைத்துள்ளார். இதன் மூலமாக சசிகலாவிடம் தனக்கு செல்வாக்கு உயரும் என்று நினைக்கிறாராம். ஆனால், அ.தி.மு.க எம்.பி-க்கள் தம்பிதுரைக்கு சசிகலா முக்கியத்துவம் தருவதை ரசிக்கவில்லையாம். புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.!”

‘‘அப்படியா?”

“தேசிய அளவில் எங்காவது இயற்கை பாதிப்பு ஏற்பட்டால் எம்.பி-க்கள் விருப்பப்பட்டால், அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையை அங்கே தரலாம். தமிழகத்தில் சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது எம்.பி-க்கள் நிதியில் இருந்து பணம் தரலாம் என்று மத்திய அரசு வழக்கம்போல் ஒரு அறிவிப்பை வெளியிட்டதாம். அ.தி.மு.க எம்.பி-க்கள் பலரும் பணம் தர முன்வரவில்லை. ஆனால், தம்பிதுரை முந்திக்கொண்டு தமிழகத்திலுள்ள அ.தி.மு.க-வின் 50 எம்.பி-க்களும் அவர்களின் நிதியில் இருந்து தலா ஒரு கோடி ரூபாய் வீதம் கட்டாயமாகத் தர வைத்துவிட்டாராம். இது பல எம்.பி-க்களுக்குப் பிடிக்கவில்லை. அடுத்த அதிருப்தி... நாடாளுமன்ற மக்களவைத் துணை சபாநாயகர் பதவியுடன் அனைத்து எம்.பி-க்கள் நிதியை கையாளும் குழுத் தலைவர் பதவியையும் வைத்திருக்கிறார். ஆறு வருடங்கள் கடந்துவிட்ட சூழ்நிலையில், அந்த நிதியை உயர்த்தி வாங்கவேண்டிய பொறுப்பு தம்பிதுரையிடம்தான் உள்ளதாம். ஆனால், இதை அவர் மத்திய அரசிடம் இதுவரை கொண்டுபோகவே இல்லை என்கிற புலம்பலும் அகில இந்திய அளவில் எம்.பி-க்கள் மத்தியில் கேட்கிறது. இவை ஒட்டுமொத்தமாக தம்பிதுரைக்கான எதிர்ப்பாக மாறி வருகிறது.”

‘‘சசிகலா உடனடியாக முதல்வராவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றனவா?”

‘‘இரட்டை மனநிலையில் இருக்கிறார் சசிகலா. உடனடியாக அவர் முதல்வர் ஆகிவிடுவது நல்லது என்று உளவுத்துறை ரிப்போர்ட் போட்டிருக்கிறதாம். ‘எதிர்ப்பு மனநிலை இருக்கிறது என்பதை வைத்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்கத் தேவையில்லை. லேசான எதிர்ப்பு இருக்கும்போதே பதவி ஏற்றுக்கொண்டால் அது வளராமல் அமுங்கிவிடும்’ எனச் சொல்லியிருக்கிறாராம் உளவுத்துறை அதிகாரி ஒருவர். சசி தரப்புக்கு எதிர்ப்பாக இருந்து இப்போது மாற்றுப் பதவியில் இருக்கும் ஓர் அதிகாரியும் இதனை ஆதரித்தாராம். அதனால், வெகுசீக்கிரமே பதவிப்பிரமாணத்தை கிண்டியில் பார்க்கலாம்” என்றபடி எழுந்த கழுகார்,

‘‘1991-96-ம் ஆண்டு நடந்த மோசமான கேடுகளுக்கு அந்த மூத்தவல்லியைக் காரணம் என்பார்கள். அவர் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்” என்றபடி பறந்தார்.

அட்டை ஓவியம்: க.நன்மாறன்

p42.jpg

‘‘நான் சாதி அரசியல் பண்ண மாட்டேன்!”

சிகலாவை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்தது அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அப்போலோவில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்கச் சென்ற முதல் அரசியல்வாதி திருமாதான்.
அதன்பிறகுதான் அனைத்துத் தலைவர்களும் படையெடுத்தனர். அதேபோல், சசிகலாவைப் பாராட்டச் சென்றுள்ளார் திருமா. ‘‘சசிகலா பொதுச்செயலாளராகி உள்ளார். அவரை நீங்கள் சென்று வாழ்த்த வேண்டும்” என்று கட்சி நிர்வாகிகள் சிலரே திருமாவைத் தூண்டினார்களாம். ‘‘என்ன பேசுகிறார் என்பதைவைத்து அவரைச் சந்திக்கலாம்” என்றாராம் திருமா.

பொதுச்செயலாளராக பதவி ஏற்ற அன்று பேசிய சசிகலா, ‘‘சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த இயக்கத்தை நடத்துவேன்” என்று சொன்னார் அல்லவா? அதன்பிறகுதான் சசிகலாவைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தாராம். சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டதும் உடனடியாகத் தரப்பட்டது. திருமாவுடன் வி.சி.க-வின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் சென்றார்.

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news

முதல்வருக்கு எதிராக தம்பிதுரை 'பொங்கியதற்குக்' காரணம் இதுவா?

Wed, 04/01/2017 - 06:32
முதல்வருக்கு எதிராக தம்பிதுரை 'பொங்கியதற்குக்' காரணம் இதுவா?

 

 
thambidurai2


சென்னை: அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஏறக்குறைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான குரல் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கட்சியின் தலைமையும், ஆட்சியின் தலைமையும் ஒருவராக இருந்தால்தான் ஒருமித்து செயல்பட முடியும் என்றும் அவர் சசிகலாவுக்குக் கூறியுள்ளார்.

இது கட்சி அடிப்படையில் அவர் கூறியுள்ள கருத்தாக எடுத்துக் கொண்டாலும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் என்னவென்று தகவல் அறிந்த வட்டாரங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறார்கள்.

அதாவது, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யும் போது, ஓ. பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரையின் பெயரும் அலசப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போதே தம்பிதுரைக்கு பன்னீர்செல்வத்தின் மீது சற்று வருத்தம் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், அந்த வருத்தம் காண்டாக மாறும் வகையில் புது தில்லியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புது தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். அப்போது, பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரையும் சென்றார். இருவரும் ஒன்றாகத்தான் மோடியை சந்தித்துப் பேசினர்.

ஆனால், இடையே தம்பிதுரையை வெளியே செல்லுமாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தம்பிதுரையை வெளியே அனுப்பிவிட்டு, சுமார் 20 நிமிடங்கள் மோடியுடன் அவர் தனியாக பேசியுள்ளார். அப்போது அவர் என்ன கூறினார்? என்பது இன்னமும் சிதம்பரம் ரகசியமாகவே உள்ளது.

புது தில்லியில் கட்சி அளவில் செல்வாக்கு மிக்க தன்னையே வெளியே அனுப்பிவிட்டாரே பன்னீர்செல்வம் என்று அப்போதுதான் தம்பிதுரைக்கு அதிருப்தி ஏற்பட்டு, அது காண்டாக மாறி, சசிகலாவை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுக்கும் அளவுக்கு மாறிவிட்டதாக தகவல் அறிந்த பட்சிகள் கதறுகின்றன.

http://www.dinamani.com/tamilnadu/2017/jan/02/முதல்வருக்கு-எதிராக-தம்பிதுரை-காண்டானதற்கு-காரணம்-இதுவா-2625895.html

Categories: Tamilnadu-news

'முதல்வர் ஆனாலும், எம்.எல்.ஏ ஆக வேண்டுமே?!' - சசிகலாவுக்கு எதிராக சீறும் தீபா

Wed, 04/01/2017 - 06:30
'முதல்வர் ஆனாலும், எம்.எல்.ஏ ஆக வேண்டுமே?!' - சசிகலாவுக்கு எதிராக சீறும் தீபா

deepa3_11145.jpg

'முதலமைச்சர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்' என அ.தி.மு.க நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். 'முதல்வர் ஆனாலும் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார் தீபா. நேற்று தி.நகர் வீட்டில் தன்னை சந்தித்தவர்களிடம் இதனைத் தெரிவித்தார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் பொதுச் செயலாளர் சசிகலா. " ஜெயலலிதா அளவுக்கு மக்களை ஈர்த்த தலைவராக சசிகலா இல்லை என்ற குறையைப் போக்குவதற்காக, பதவியேற்பு விழாவில் விரிவாகப் பேசினார் சசிகலா. வரக் கூடிய நாட்களில் மாவட்ட செயலாளர்கள், நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகளை சந்தித்துப் பேச இருக்கிறார். கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரையில் தனக்கான ஆதரவைப் பெருக்குவதில் மும்முரமாக இருக்கிறார். ஜனவரிக்குள் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்பதற்காக, சீனியர் நிர்வாகிகளான தம்பிதுரை உள்ளிட்டவர்கள் வலிந்து பேசி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த அச்சமும் கார்டன் தரப்பை வாட்டி வருகிறது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "முதல்வர் பதவியை விட்டுத் தருவது குறித்து பொதுவெளியில் எந்தக் கருத்தையும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவிக்கவில்லை. அவர் எப்போதும் போலவே அமைதியாக இருக்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை வலியுறுத்திய நிர்வாகிகள்தான், முதல்வர் பதவிக்கும் அவரை முன்னிறுத்துகிறார்கள். பதவியேற்ற ஆறு மாதங்களில் எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்பதால், எந்தத் தொகுதி சரியாக இருக்கும் என்ற தேடுதலில் மன்னார்குடி உறவுகள் ஈடுபட்டுள்ளனர். எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் வெற்றித் தொகுதியாக இருந்த ஆண்டிப்பட்டியில் போட்டியிடலாமா? உசிலம்பட்டியைத் தேர்வு செய்யலாமா என பலவித ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஜெயலலிதா மரணத்தால் காலியாக இருக்கின்ற, ஆர்.கே.நகரைவிடவும் தென்மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியைத் தேர்வு செய்வதுதான் அவரது விருப்பம். வரும் 9-ம் தேதி வரையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அதன்பிறகு, ஆட்சி அதிகாரத்திற்குள் சசிகலா வருவார்" என்றார் விரிவாக.

11_11200.jpg

அதேநேரம், அ.தி.மு.கவில் உள்ள ஜெயலலிதாவின் விசுவாசிகள் தீபாவை முன்னிறுத்தி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். சசிகலாவை ஏற்காத தொண்டர்கள் அனைவரும், 'தீபா ஜெயலலிதா' என்ற பெயரிலேயே நோட்டீஸ்களை விநியோகித்து வருகின்றனர். நேற்று தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். தன்னை முன்னிறுத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார். கூடவே, 'இன்னும் மூன்றே வாரத்தில் முடிவை அறிவிப்பேன்' எனவும் தெரிவித்தார். இதன்பின்னர், அரசியல் பிரமுகர்களிடம் விரிவாகப் பேசியிருக்கிறார் தீபா. அவர்களிடம் பேசும்போது, "சசிகலா முதல்வர் ஆனாலும், பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அங்கு போட்டியிடுவேன். சாதி அரசியல் என்பதெல்லாம் இங்கு எடுபடாது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள்.

அவர் உசிலம்பட்டியில் போட்டியிட்டாலும் களமிறங்குவேன். திண்டுக்கல் தொகுதியில் மாயத் தேவரை நிறுத்தி வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் களத்தில் தலைவராக உருவெடுத்தார் எம்.ஜி.ஆர். அதைப்போல, ஜெயலலிதாவின் ரத்த உறவான என்னை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள். சசிகலாவின் சமூகத்து மக்களுக்கும் நான் யார் என்பது தெரியும். அவர்களும் என்னை ஆதரிப்பார்கள். பெண்கள் ஆதரவு முழுமையாக எனக்கு இருக்கிறது. இரட்டை சின்னம் ஒரு பிரச்னையே இல்லை. தலைமைக்குத்தான் ஓட்டு கிடைக்கும். பென்னாகரத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு டெபாசிட் பறிபோனதும் மதுரை மேற்கில் தே.மு.தி.கவோடு திணறிய காலமும் உண்டு. எனவே, இரட்டை இலை சின்னத்தினால் மட்டும் சசிகலா வெற்றி பெற முடியாது. தேர்தல் களத்தில் மூன்றாவது இடத்திற்குத்தான் தள்ளப்படுவார். அதிகாரத்தையும் பலத்தையும் மீறி மக்கள் ஆதரவில் வெற்றி பெறுவேன். அரவிந்த் கெஜ்ரிவால் ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்ததைப் போல, சசிகலாவை தோற்கடிப்பேன். அதிகாரத்திற்குள் அவர் காலடி எடுத்து வைக்கும்போது, என்னுடைய முடிவை அறிவிப்பேன்" என தேர்ந்த அரசியல் தலைவரைப் போல் விவாதித்திருக்கிறார். 

'பொங்கலுக்குள் சின்னம்மா முதல்வர் என்ற இனிப்பான செய்தி வரும்' என அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் பேசி வருகின்றனர். பொதுச் செயலாளர் பதவியைப் பிடித்ததைப் போலவே, முதல்வர் பதவிக்கும் படிப்படியாக காய்கள் நகர்த்தப்படுகின்றன. 'சசிகலா முதல்வர் ஆவாரா?' என கோட்டை வட்டாரத்திலும் விவாதம் நடந்து வருகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/76804-deepa-says-she-will-contest-against-sasikala-in-by-election.art

Categories: Tamilnadu-news

"வாஸ்து பார்க்கும் சசிகலா... வழியை மாற்றிய ஓ.பி.எஸ்...!"

Wed, 04/01/2017 - 06:18
"வாஸ்து பார்க்கும் சசிகலா... வழியை மாற்றிய ஓ.பி.எஸ்...!"

           சசிகலா

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இடத்தை அதிமுகவிலும் அரசு நிர்வாகத்திலும் நிரப்ப சசிகலாவும், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரம பிரயத்தனம் செய்து வருகிறார்கள்.

சசிகலா நினைத்தபடியே அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட்டார். அதே இப்போது தமிழக முதல்வராகவும் அவர் வரவேண்டும் என்றும் அதிமுகவினர் கூறிவருகிறார்கள். அதற்கென ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்துவருகிறது. அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை "ஆட்சித் தலைமை ஒருவரிடமும் கட்சித் தலைமை ஒருவரிடமும் இருப்பது கட்சிக்கும் மக்களுக்கும் ஏற்புடையதல்ல என்பதால், அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள சசிகலா, தமிழக முதலமைச்சராகவும் பொறுப்பேற்க வேண்டும்" என வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இதனால், மிக விறுவிறுப்பாக, சசிகலா முதல்வராக சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. அதன் முதல் கட்டமாக அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் வாஸ்து வேலைகள் நடந்து முடிந்துள்ளன. அந்த அலுவலகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய பொதுச் செயலாளர் அறையை புத்தாக்கம் செய்ய சசிகலா முடிவெடுத்துள்ளார்.

அதனையடுத்து அந்த அறையை வாஸ்து முறைப்படி மாற்றியமைக்கும் வேலைகள் துரித கதியில் செய்யப்பட்டுள்ளன. இதில், சசிகலாவின் ஆஸ்தான வாஸ்து நிபுணர் ஒருவரே செய்துள்ளார். அவர் ஏற்கெனவே,சிறுதாவூர் மற்றும் போயஸ் கார்டன் பங்களாக்களை வாஸ்து முறைப்படி அலங்கார வேலைகள் செய்தவர். வாஸ்து உள்ளிட்ட நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் சசிகலா எப்போதும் அதிகம் ஆர்வம் காட்டுபவர் என்பதால் தலைமைக்கழக அறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதகாக் கூறப்படுகிறது.

 

           .ops_review_18134.jpg

இது தொடர்பாக அதிமுகவின் தலைமைக் கழக வட்டாரத்தில் விசாரித்தோம்."சின்னம்மா எப்போதும் பூஜைகள், ஆலய வழிபாடுகளில் அதிக ஆர்வம் உள்ளவர். அதே நேரத்தில் நல்ல நேரம் உள்ளிட்ட விஷயங்களிலும் அதீத கவனம் செலுத்துபவர். அதனால் அம்மா பயன்படுத்திய அறையில் தாம் அமர்ந்து கட்சிப் பணியாற்றுவது எந்த வகையிலும் நெருடலாக இருந்துவிடக் கூடாது, அம்மாவுக்குப்பிறகே நாம் என்பதில் சின்னம்மா உறுதியாக இருக்கிறார். அதனால் அவர் அமர்ந்த இருக்கை, அவர் பயன்படுத்திய பேனா என்று எல்லாவற்றிலும் மாற்றம் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். அதற்காக வாஸ்து நிபுணர் வரவழைக்கப்பட்டுள்ளார்." என்றனர் தலைமைக் கழக அலுவலக உதவியாளர்கள்.

ஜெயலலிதாவின் கான்வாய் ரூட்டை மாற்றிய முதல்வர் ஓ.பி.எஸ்.!

சசிகலாவின் விருப்பத்துக்கு ஏற்றவாறே முதல்வரானார் ஓ.பி.எஸ். என்றும் இல்லை அவர் ஜெயலலிதாவின் சாய்ஸ் என்றும் செய்திகள் பரபரத்தாலும் முதல்வர் பன்னீர்செல்வம் அவருக்கென தனி ரூட்டில் சென்றுவருகிறார். தலைமைச் செயலகத்திலிருந்து போயஸ் கார்டன் செல்வது என்றால் ஜெயலலிதாவின் கான்வாய் சென்ற ராதாகிருஷ்ணன் சாலையைத் தவிர்த்துவிட்டு ஆழ்வார்பேட்டை சிக்னல் வழியாக போயஸ் கார்டனுக்கு பின் வழியாகச் செல்கிறார். கார்டனில் சசிகலாவைச் சந்தித்துவிட்டு பின்னர் வந்த வழியே திரும்புகிறார். ஆர்ப்பாட்டம் இல்லாது எளிமையான கான்வாய் ரூட்டில் முதல்வர் பயணிக்கிறார்.

அதே போல தலைமைச் செயலகத்தில் உள்ள சிஎம் சேம்பரையும் பன்னீர்செல்வம் பயன்படுத்துவது கிடையாது. பொதுப்பணித்துறை அமைச்சருக்கான முதல் தள அறையையே இப்போது வரை ஓபிஎஸ் பயன்படுத்துகிறார். அங்குதான் அமைச்சர்கள் சந்திப்பும், அதிகாரிகள் சந்திப்பும் நடத்துகிறார். அயல்நாட்டு தூதர்கள், மத்திய அமைச்சர்கள் என்று யார் வந்தாலும் இந்த அறையில்தான் சந்திக்கிறார் முதல்வர். காலையில் வழக்கமான நேரத்துக்குத் தலைமைச் செயலகம் வந்தார் என்றால் இரவு 7.30 மணி வரைக்கும் பணிகளை மேற்கொள்கிறார் ஓபிஎஸ். மதிய உணவு வீட்டில் இருந்து வந்துவிடுகிறது அவருக்கு. மாலை வேர்க்கடலையும் கிரீன் டீயும் எடுத்துக்கொள்கிறார். அப்பாயிண்ட் மென்டுகள் எளிதாகக் கிடைக்கின்றன என்கிறார்கள் அமைச்சர்கள் அலுவலக அதிகாரிகள்.

             sasi_ops_garden_18021.jpg

'பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் முதல்வரிடம் அப்பாயின்மென்ட் கேட்டேன். வாங்க உடனே பார்க்கிறேன் என்றார். அவரின் அறைக்குச் சென்றதும் உள்ளே அழைத்தார். என்ன செய்யணும் என்றார். துறை நடவடிக்கைக்கான முக்கிய கோப்பு இது. நீங்கள் பார்த்துவிட்டு உடனே ஆவண செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். சில நிமிடங்கள் பைலை பார்த்தார். செயலாளரிடம் உரிய கேள்விகள் கேட்டார். தாமதிக்காமல் கோப்பில் கையெழுத்திட்டார். நான் இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முன்னாள் தலைமைச் செயலாளர் இருந்தபோது இதெல்லாம் சாத்தியமாகவில்லை. அதிகாரிகளின் தலையீடு நிறைய தேக்கம் நிகழ வழியேற்படுத்திவிட்டது." என்று சிலாகிக்கிறார் விருதுநகர் மாவட்ட அமைச்சர் ஒருவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/76791-jayalalithaa-room-is-under-renovation-and-ops-use-separate-route-to-reach-poes.art

Categories: Tamilnadu-news

#LIVE - தி.மு.க செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு

Wed, 04/01/2017 - 06:14
#LIVE - தி.மு.க செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு

dmk-stalin-made-executive-head_10229.jpg

 

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதற்காக கட்சியின் விதி 18ல் மாற்றம் செய்யப்பட்டது. தி.மு.கவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் ஸ்டாலினை செயல் தலைவராக முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார். தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவரான ஸ்டாலினுக்கு தரப்பட்டது. செயல் தலைவரான ஸ்டாலினுக்கு பொதுக்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஸ்டாலினை புகழ்ந்து துரைமுருகன் கண்ணீர் மல்க உரையாற்றினார். துரைமுருகனின் உரையைக் கேட்ட ஸ்டாலினும் கண்ணீர் விட்டார்.

'தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது.  சூழல்தான் என்னை செயல்தலைவராக ஆக்கியுள்ளது' என ஸ்டாலின் உரையாற்றினார்.  மேலும் அவர் பேசுகையில், 'எல்லா பொறுப்புகளுக்கு விதிப்படி தேர்ந்தெடுக்கப்பட்டேன். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டேன். ஆனால் தலைவர் உடல்நலம் குன்றி இருக்கும் பொழுது இந்த பதவியை ஏற்றுக் கொள்வதில் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த பொறுப்பினை சிறப்பாக ஏற்று செயல்படுவேன்.

nsdsd0114a_10418.jpgபள்ளிப் பருவத்தில் இருந்தே திமுகவில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. செயல் தலைவர் என்பதை பதவியாக கருதவில்லை, பொறுப்பாக கருதுகிறேன்" என்றார்.

இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

திமுக செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

----------------------

அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இந்தப் பொதுக்குழுவால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நந்தனம், தேனாம்பேட்டையில் கடும் வாகன நெரிசல்.

dmk-general-body-meet-traffic-chennai

படங்கள்: பா.காளிமுத்து

http://www.vikatan.com/news/politics/76795-dmks-stalin-made-as-partys-executive-chief.art

Categories: Tamilnadu-news

தி.மு.க.வின் செயல் தலைவரானார்.. ஸ்டாலின்!

Wed, 04/01/2017 - 04:54
DMK's general council appoints MK Stalin as Acting President திமுகவின் செயல் தலைவரானார் ஸ்டாலின்! பொதுக்குழுவில் தீர்மானம்- தொண்டர்கள் உற்சாகம்!!

சென்னை: திமுகவின் செயல் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் முக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினை செயல் தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டதை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வருகிறார். முதுமை காரணமாக அவரால் முழுமையாக கட்சிப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை.

இதையடுத்து கருணாநிதியின் மகனும் திமுக பொருளாளருமான ஸ்டாலினை செயல் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இன்றைய திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் செயல் தலைவராக்கப்படுவது உறுதி என கூறப்பட்டது. இருப்பினும் கருணாநிதியின் உடல்நலக் குறைவை முன்வைத்து ஸ்டாலின் செயல் தலைவராக்கப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் திமுக பொதுக்குழு இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்கவில்லை.

திமுக பொதுச்செயலர் அன்பழகன் இப்பொதுக்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் முதலில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலினை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக திமுகவின் சட்டவிதி 18-ல் திருத்தம் மேற்கொள்ள இன்றைய பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்கும் தீர்மானத்தை க. அன்பழகன் முன்மொழிந்தார். துரைமுருகன் வழிமொழிந்தார். இதையடுத்து திமுகவின் செயல் தலைவரான ஸ்டாலினுக்கு அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். ஸ்டாலின் செயல் தலைவரானதை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

- தற்ஸ்  தமிழ். - 

 

Categories: Tamilnadu-news

சசிகலா எனது தாய்.. தமிழக முதல்வராக்கியே தீருவோம்: ஜெ. அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டி

Tue, 03/01/2017 - 22:39

சசிகலா எனது தாய்.. தமிழக முதல்வராக்கியே தீருவோம்: ஜெ. அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டி

 

சசிகலாதான் முதல்வராக வேண்டும் என்ற பேச்சு உள்ளதே என்ற கேள்விக்கு "சசிகலாதான் முதல்வர். சசிகலாதான் முதல்வராகப்போகிறார். அவர் முதல்வராக உறுதி செய்வோம்" என்று ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமார் மகன் தீபக் 

 

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா எனது அம்மா போன்றவர் என்று ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். ஜெயலலிதா மறைவின்போது இறுதி சடங்குகள் செய்தவர் அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன், தீபக். அவரோடு சேர்ந்து ஜெ. தோழி சசிகலாவும் ஈமக் கிரியைகள் செய்தார்

 Jayalalithaa's nephew Deepak

 

இந்த நிலையில், ஆங்கில செய்தி சேனல் ஒன்றின் தொலைபேசி வழியில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு தீபக் பதிலளித்துள்ளார்.

உங்களுக்கு சசிகலா மீது முழு நம்பிக்கையுள்ளதா? எந்த வகையான உறவு முறை உங்களுடையது? என்ற கேள்விக்கு பதிலளித்த தீபக், "அவர் எனது அம்மா போன்றவர்" என்றார்.

சசிகலாவுடன் அடிக்கடி பேசிக்கொள்வது உண்டா என்ற கேள்விக்கு "அவர் எனது தாய். பிறகு எதற்காக அவ்வப்போது பேசிக்கொள்ள வேண்டும்" என்றார் தீபக்.

சசிகலாதான் முதல்வராக வேண்டும் என்ற பேச்சு உள்ளதே என்ற கேள்விக்கு "சசிகலாதான் முதல்வர். சசிகலாதான் முதல்வராகப்போகிறார். அவர் முதல்வராக உறுதி செய்வோம்" என்றார்.

தீபக்கின் சகோதரியான தீபா, தன்னைத்தான் அதிமுகவின் அடுத்த வாரிசு என கூறிவருகிறார். அவரை சசிகலாவுக்கு எதிராக களமிறக்க அதிமுகவின் ஒரு பிரிவு முயன்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தீபக் இவ்வாறு கூறியுள்ளது தீபா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-will-become-cm-tamilnadu-jayalalithaa-nephew-deepak-271044.html
 

Categories: Tamilnadu-news

கேள்வி.....! துணை சபாநாயகர் நெறிமுறைகளை காற்றில் பறக்க விடுகிறாரா தம்பிதுரை? பார்லி., புத்தகம் சொல்வது என்ன?

Tue, 03/01/2017 - 22:28
கேள்வி.....!
துணை சபாநாயகர் நெறிமுறைகளை
காற்றில் பறக்க விடுகிறாரா தம்பிதுரை?
பார்லி., புத்தகம் சொல்வது என்ன?
 
 
 

'தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டுவதை தவிர்க்க வேண்டுமென்பது மட்டுமல்ல; தான் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்துக்களிலும், மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்' என்ற, பார்லிமென்ட் நெறிமுறைகளை, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, காற்றில் பறக்க விடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Tamil_News_large_1683270_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலாவே, தமிழக முதல்வராகவும் ஆக வேண்டுமென வலியுறுத்தி, லோக்சபா துணை சபாநாயகர் பதவியில் உள்ள தம்பிதுரை அறிக்கை வெளியிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், லோக்சபா துணை சபாநாயகர் பதவியில் உள்ளவர்கள், 'அரசியல் பேசலாமா, கூடாதா' என்ற கேள்வி எழுந்துள்ளது; இதற்கு, சட்ட விதிமுறைகள் என, தனியாக இல்லையென்றாலும், பார்லி., வழிகாட்டுதல் நெறிமுறை விளக்க புத்தகத்தில், விரிவான பதிலளிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா செயலகம் சார்பில் வெளியிடப்பட்டதும், மல்கோத்ரா என்பவரை ஆசிரியராக வைத்து எழுதப்பட்டதுமான, 'பிராக்ட்டீஸ் அன்ட் புரொசீஜர் ஆப் பார்லிமென்ட்' என்ற தலைப்பிலான புத்தகம் தான், லோக்சபா நடைமுறைகளின் வேதப் புத்தகமாக கருதப்படுகிறது.

இந்த புத்தகத்தின், 125, 126, 127 ஆகிய பக்கங்களில், துணை சபாநாயகர் பதவியின் முக்கியத்துவம் கண்ணியம், அந்த பதவிக்கான தார்மீக நெறிமுறைகள் விளக்கப்பட்டு உள்ளன.
அதன் விபரம்:
துணை சபாநாயகர் பதவி, சபாநாயகர் பதவிக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. சபாநாயகரை போலவே, எம்.பி.,க்களால், இவரும் தேர்வு செய்யப்படுகிறார்; சபையின் ஆதரவு உள்ளவரை, அந்த பதவியில் அவர் நீடிக்க முடியும்.
 

அரசியல் நடவடிக்கை


சபாநாயகர் இல்லாத நேரங்களில், துணை சபாநாயகரே, சபையின் தலைவராக செயல்படுகிறார். பல முக்கிய முடிவுகளையும், இவரது தலைமையின் கீழ் எடுக்கலாம்.

சபாநாயகரை போல் அல்லாமல், இவர் சபையில் பேசலாம்.
விவாதங்களில் பங்கேற்று, எம்.பி., என்ற முறையில் பேசலாம். சர்ச்சைக்குரிய வகையிலோ, கட்சி அடையாளம் தெரியும் வகையிலோ, அவரது பேச்சு இருக்கக் கூடாது.
தான் சார்ந்துள்ள கட்சிக்காக, அரசியல் நடவடிக்கையில் ஈடுபட அவருக்கு உரிமை இருந்தாலும், முடிந்தவரை, தீவிர அரசியல் அலுவல்களில் இருந்தும், சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் இருந்தும் விலகி இருக்க வேண்டும்.
தான் வகிக்கும் துணைசபாநாயகர் பதவியின் கண்ணியம் கருதி, அந்த பதவிக்கான நடுநிலை தவறாத மாண்பையும் பேணி பாதுகாக்க வேண்டும்.

சபையின் முழுநேர அதிகாரி என்பதால், இவருக்கு என, தனித் தொழில், வர்த்தகம், சுய சார்புடைய வேறெந்த பணிகளிலுமே ஈடுபடக் கூடாது.கடந்த, 1953ல், அப்போதைய சபாநாயகர், மாவ்லங்கர் தலைமையில், மத்திய, மாநில மாகாண சபைகளின் தலைவர்கள் மாநாடு நடந்தது; அதில், 'துணை சபாநாயகர், ஒரு சாதாரண, எம்.பி.,யைப் போல, விவாதங்களில் பங்கெடுப்பதும், அரசாங்கத்தை விமர்சித்துப் பேசுவதும் சரியா' என்ற மிக முக்கியமான கேள்வி எழுப்பப்பட்டது.

மிக நீண்ட விவாதம் நடந்து, அந்த மாநாட்டை முடித்து வைத்து, மவ்லாங்கர் அளித்த பதிலுரை தான், துணை சபாநாயகர் குறித்த கேள்விக்கு விடையாக அமைந்துள்ளது.

மாவ்லங்கர், தன் உரையில் கூறியதாவது: தங்கள் மீது எழுப்பப்பட்டுள்ள இந்த கேள்வியை, ஒவ்வொரு துணை சபாநாயகரும், தங்களை தாங்களே சுயமாக பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும்.
துணை சபாநாயகர் என்பவர், ஒரு எம்.பி., தான். ஆனால், தாங்கள் ஒரு மாபெரும் சபைக்கு தலைமை தாங்கும் இருக்கையில் அமரக் கூடியவர்கள் என்பதை, அவர்கள் நினைவில் வைக்க வேண்டும்.
விவாதங்களின் போது, தங்கள் நடத்தை எவ்வாறு அமைய வேண்டுமென்பதில், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சபைக்குள், எம்.பி.,க்கள் மத்தியில், தன் மீது, கட்சி அடையாளம் விழ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இந்த கட்டுப்பாடு, சபைக்கு உள்ளேமட்டுமல்லாமல், சபைக்கு வெளியிலும், தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டுவதை அவர் தவிர்க்க வேண்டும். மேலும், தான் வெளிப்படுத்தும் ஒவ்வொரு கருத்துக்களிலும், மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என, மாவ்லங்கர் உரையில் கூறப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு

 

உள்ளது.இந்த நெறிமுறைகளை மீறும் வகையில், தம்பிதுரையின், சமீபத்திய நடவடிக்கைகள் அமைந்துள்ளனவா என்ற கேள்வி, தற்போது எழுந்துள்ளது.
 

இது நியாயம் தானா?


இந்த விவகாரம் குறித்து, பார்லி., வட்டாரங்கள் கூறியதாவது:தார்மீக நெறிமுறைகள் பின்பற்றப்பட்டால் தான், அரசியல் சாசன பதவிகளுக்கே பெருமை. பி.எம்.சயீத், 15 ஆண்டுகளுக்கு மேல் துணை சபாநாயகராக இருந்தார்; அவர், கட்சி சார்ந்து அரசியல் பேசுவதை தவிர்த்தே வந்தார்.ஆனால், தான் வகிப்பது அரசியல் சாசன பதவி என்பது தெரிந்திருந்தும், தன்னை போலவே, மற்றொரு அரசியல் சாசன பதவி வகிக்கும் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், தம்பிதுரை பேசுவது ஏற்புடையது அல்ல.
ஒருமுறை, தானும் சபையில் பேச வேண்டுமென தம்பிதுரை கேட்க, அவரது பதவிக்கு, அது பொருத்தமானது அல்ல எனக்கூறி, சபாநாயகர் சுமித்ரா மறுத்தார். ஆனாலும், வலியுறுத்தி அனுமதி பெற்று பேசிய தம்பிதுரை, அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.அப்போது, அது சர்ச்சையானது. துணை சபாநாயகர் பதவியில் இருந்து கொண்டே, மத்திய அரசை விமர்சித்ததால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடுதான், பல முறை தம்பிதுரை நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டபோதெல்லாம், பிரதமர் தராததற்கு காரணம்.
தற்போது, மீண்டும் தன் அரசியல் நடவடிக்கைகள் மூலம், மவ்லாங்கர் வகுத்து அளித்துள்ள நெறிமுறைகளை, தம்பிதுரை காற்றில் பறக்க விட்டுள்ளார்.
தன் அரசியல் தலைமையை திருப்திபடுத்த, அரசியல் சாசன பதவியை பயன்படுத்தி இருக்கக் கூடாது. குறைந்தபட்சம், துணை சபாநாயகர், 'லெட்டர் பேடில்' அறிக்கை விட்டதையாவது, அவர் தவிர்த்திருக்கலாம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683270

Categories: Tamilnadu-news

சசிகலாவுக்கு ஆதரவு பேனர்: தொண்டர்கள் வேதனை

Tue, 03/01/2017 - 22:27
சசிகலாவுக்கு ஆதரவு பேனர்: தொண்டர்கள் வேதனை
 
 
 

தஞ்சாவூர் : 'மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவிற்கு பயந்து தான், விருப்பம் இல்லாமல், சசிகலாவுக்கு ஆதரவாக பிளக்ஸ் வைத்து வருகிறோம்' என, அடிமட்ட தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

Tamil_News_large_1683177_318_219.jpg


சசிகலா பொதுச் செயலராக பதவி ஏற்றதிலிருந்து, வாழ்த்துகள் தெரிவித்து, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பெயரில் தான், அதிகளவில் பிளக்ஸ் பேனர்கள் முளைத்துள்ளன.
இருப்பினும், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களில் உள்ள, சசிகலாவின் படத்தின் மீது, அதிருப்தியாளர்கள் சாணம் வீசியும், கிழித்தும் வருவது, முக்கிய நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை எல்லாம் தாண்டி, பல்வேறு இடங்களில் அடிமட்ட தொண்டர்களின் பெயர்களில் பிளக்ஸ்கள் முளைத்து உள்ளன. விருப்பம் இல்லாத நிலையில், மேல்மட்ட நிர்வாகி களின் மிரட்டலுக்கு பயந்து தான், பிளக்ஸ் வைக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடரும் மிரட்டல்


இது குறித்து, தொண்டர்கள் சிலர் கூறியதாவது:சசிகலா, அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக இருப்பதற்கு, கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் யாருக்கும் துளிக்கூட விருப்பம் இல்லை.


இப்படி இருக்கும் நிலையில், சசிகலாவிற்கு ஆதர வாக, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ., ரங்கசாமி உள்ளிட்ட மேல்மட்ட நிர்வாகிகளும், அவர்களின் ஆதரவாளர்களும், 'சசிகலாவிற்கு ஆதரவாக கண்டிப்பாக பிளக்ஸ் வைக்க வேண்டும்; இல்லை என்றால் கட்சியில் இருந்து விலக்கி விடுவோம்' என, பல்வேறு விதங்களிலும் மிரட்டி வருகின்றனர். இதற்காக தான், நாங்களும் பிளக்ஸ் வைக்க வேண்டிய நிலையில்உள்ளோம். இவ்வாறு வேதனையுடன் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட செயலராக வைத்திலிங்கம் உள்ளார். இவரது பதவிக்கு, மன்னார்குடி கும்பல் குறி வைத்துள்ளது. இதற்கு பயந்துதான், வைத்திலிங்கம் பதவியை தக்கவைக்க, முஸ்தீபுகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 

பேனர்கள் அகற்றம்


சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில், சசிகலா மற்றும் தீபா பேனர்கள் அகற்றப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி, கடைவீதி உள்ளிட்ட இடங்களில், தீபா மற்றும் சசிகலா படத்துடன் பேனர்கள் வைத்திருந்தனர். நேற்று முன்தினம், சசிகலா பேனர் கிழிக்கப்பட்டிருந்தது. இது குறித்து, அ.தி.மு.க., ஒன்றிய செயலர், கெங்கவல்லி போலீசில் புகார் செய்தார்.
அனுமதி பெறப்பட்டு பேனர்கள் வைக்க வேண்டும்; சசிகலா, தீபா பேனர்களை அகற்றும்படி, இரு தரப்பினருக்கும் போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று, இரு தரப்பினரும் அனைத்து பேனர்களையும் அகற்றினர். மற்ற அரசியல் கட்சி பேனர்களை போலீசார் அகற்றினர். பேரூராட்சி நிர்வாக அனுமதி பெறப்பட்டு, பேனர்கள் வைக்க வேண்டும் என, போலீசார் தெரிவித்தனர்.
 

பன்னீரை பதவி விலக கூறுவது அநாகரிகம்


''ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுத்த பின், அவரை பதவி விலகும்படி கூறுவது அநாகரிகம். இதனால், முதல்வருக்கு பின்னடைவு ஏற்படும்; நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படும்,'' என, நாஞ்சில் சம்பத் கூறினார்.

 

செங்கல்பட்டில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு கருவியாக என்னை, பயன்படுத்திக் கொள்ள அவர்கள் தயாராக இல்லாததால், அ.தி.மு.க.,வில் இருந்தும், பொது வாழ்வில் இருந்தும் விலகுகிறேன். தி.மு.க.,வில் இருந்து என் நண்பர்கள் பேசினர்; ம.தி.மு.க.,வில் இருந்தும் அழைப்பு வந்தது. இலக்கிய சொற்பொழிவு கூட்டங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன்.
தமிழகத்தில், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது, கவலை அளிக்கிறது. காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க, உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதா தீர்ப்பு பெற்று தந்தார்; ஆனால், மத்திய அரசு செயல்படுத்தவில்லை.முதல்வராக சசிகலா வர வேண்டும் என்பது, அமைச்சர் உதயகுமாரின் ஆசை.
ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுத்த பின், அவரை பதவி விலகும்படி கூறுவது அநாகரிகம். இது, முதல்வருக்கு பின்னடைவை ஏற்படுத்தும்; நிர்வாகத்தில், சிக்கல் ஏற்படும்.
சேகர் ரெட்டி வீட்டில் இருந்து, 132 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ் வீட்டில், 2,000 ரூபாய் புதிய நோட்டுகள், தங்கம் பறிமுதல்செ ய்யப்பட்டுள்ளது. இது, இந்தியாவிற்கு தலைக்குனிவு. அவரை உடனே, 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683177

Categories: Tamilnadu-news

போயஸ் கார்டன் வீட்டுக்கு மீண்டும் போலீஸ் குவிப்பு!

Tue, 03/01/2017 - 22:24

போயஸ் கார்டன் வீட்டுக்கு மீண்டும் போலீஸ் குவிப்பு!

 

சசிகலா தங்கியுள்ள, சென்னை, போயஸ் கார்டன் வீட்டுக்கு, மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, போயஸ் கார்டன், வேதா இல்லத்தில் வசித்து வந்தார். அங்கு, தற்போது தோழி சசிகலா தங்கி உள்ளார். பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டதால், ஜெ.,வுக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மாநில காவல் துறை, முதல்வர் பாதுகாப்பு பிரிவு உட்பட, தினமும், 500 போலீசார்,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டிச., 5ல், ஜெ., மரண அறிவிப்பு வெளியானதும், மத்திய அரசு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பை திரும்ப பெற்றது. ஆனால், மாநில போலீசார், ஜெ., மறைவுக்கு பின்னரும், போயஸ் கார்டனில் தங்கியுள்ள சசிகலாவுக்கு, அதே அளவு பாதுகாப்பு அளித்து வந்தனர். இதற்கு, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதனால், போயஸ் கார்டனில், போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, தனியார் நிறுவன காவலாளிகள் பணி அமர்த்தப்பட்டனர்.
 

இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வராக பொறுப்பு ஏற்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதனால், போயஸ் கார்டனில், மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
-நமது நிருபர்-

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683433

Categories: Tamilnadu-news

அதிருப்தி

Tue, 03/01/2017 - 22:20
gallerye_231017693_1683079.jpg

ஜெயலலிதாவின் திடீர் மறைவு, பொதுச்செயலராக சசிகலா தேர்வு போன்ற காரணங்களால், அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், முக்கிய பேச்சாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில், நடிகர் ஆனந்தராஜை தொடர்ந்து, நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,விலிருந்து நேற்று வெளியேறினார். இவர்களைப் போல மேலும் பல அதிருப்தி யாளர்களும், மாற்று கட்சிகளுக்கு வண்டி கட்டி கிளம்ப, ஆயத்தமாகி வருகின்றனர்.

 

Tamil_News_large_1683079_318_219.jpg

முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சசிகலாவும், சென்னை, போயஸ் தோட்டம் இல்லத்தில் வசித்து வந்தார். அவரைத் தொடர்ந்து, சசிகலாவின் அண்ணி இளவரசியும், போயஸ் தோட்டத்தில் தங்கினார். சசிகலாவும், அவரது உறவினர்களும் தனக்கு எதிராக செயல்படுவதை அறிந்த ஜெயலலிதா, கடும் அதிர்ச்சி அடைந்தார்.
 

விரட்டி அடிக்கப்பட்ட சசிகலா


இதையடுத்து, 2011ல் அதிரடி நடவடிக்கை எடுத்தார்; சசிகலா மற்றும் அவரது உறவினர்களை, போயஸ் கார்டனில் இருந்து விரட்டினார்; கட்சியில் இருந்தும் நீக்கினார். அவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என, கட்சியினருக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார்.சில மாதங்களுக்கு பின், சசிகலா மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார்.
'உறவினர்கள் செய்த துரோகம், எனக்கு தெரியாது. நான் எந்தப் பதவிக்கும் வர விரும்பவில்லை; விரும்பவும் மாட்டேன்' என, உறுதிமொழி கொடுத்தார்.அதை ஏற்று, சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக் கொண்டார்; மற்றவர்களை சேர்க்கவில்லை. ஜெயலலிதா மறையும் வரை, இந்நிலை தொடர்ந்தது.

ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவரால் விரட்டி அடிக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் வரத் துவங்கினர்.ஜெயலலிதா மறைந்ததும், எந்த தடையும் இன்றி போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து விட்டனர். கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சசிகலாவை பொதுச்செயலராகவும் ஆக்கிவிட்டனர்.
இதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; மாறாக, சசிகலா தலைமைக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்தனர்.
 

தொண்டர்களிடம் எதிர்ப்பு


இதை விரும்பாத கட்சித் தொண்டர்கள், சசிகலா பேனர் கிழிப்பு உட்பட பல்வேறு வகையில், தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சசிகலா பொதுச் செயலராவதை ஏற்றுக் கொள்ள முடியாத தொண்டர் ஒருவர், ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்தார். தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, தற்போது மேல் மட்டத்திலும் பரவத் துவங்கி உள்ளது. அ.தி.மு.க.,வின் வெற்றிக்காக, அனைத்து தொகுதிகளுக்கும் சென்று, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டவர், நடிகர் ஆனந்தராஜ். அவர், 'ஜெ., இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியவில்லை' எனக்கூறி, அ.தி.மு.க.,விலிருந்து விலகினார்.
 

காரை ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்முக்கிய பேச்சாளர்களான, நடிகை விந்தியா உட்பட பலர், எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். இச்சூழலில், ஆனந்தராஜை தொடர்ந்து, கட்சியின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத், விலக முடிவு செய்துள்ளார்.இவர், ம.தி.மு.க.,விலிருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த போது அவருக்கு, இன்னோவா கார் ஒன்றை, ஜெயலலிதா பரிசாக வழங்கினார்.

 

அவர் மறைவுக்கு பின், அதிருப்தியில் இருந்த நாஞ்சில் சம்பத், கட்சிஅலுவலகத்தில் நேற்று, இன்னோவா காரை ஒப்படைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எட்டு மாதங்களாக, கட்சி பிரசார கூட்டம் எதற்கும் செல்லவில்லை; அதனால், காரை பயன்படுத்தவில்லை. என் நண்பர் வீட்டில், காரை நிறுத்தியிருந்தேன். என் சொந்த உபயோகத்திற்கு அதை பயன்படுத்தியதில்லை. இனியும், பிரசார கூட்டம் எதுவும் நடைபெறுவது மாதிரி தெரியவில்லை. எனவே, காரை வீணாக வைத்திருக்க வேண்டாம் எனக்கருதி, கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டேன். கட்சியில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளேன். மற்ற விபரங்களை, பின்னர் தெரிவிக்கிறேன். இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

ஆனந்தராஜ், நாஞ்சில் சம்பத் வரிசையில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள், கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். விரைவில், அவர்களும் விலகல் முடிவை அறிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 

சசிகலாவுக்கு எதிர்ப்பு: பேச்சாளர் விலகல்


அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்நிலை பேச்சாளர் ஜெயவேல், கட்சியிலிருந்து விலகினார்.
அவரது அறிக்கை: ஜெயலலிதாவால், ஐந்து ஆண்டுகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு, பின் மன்னிப்பு கடிதம் கொடுத்து இணைந்த சசிகலாவை, பதவியிலிருப்போர் தங்கள் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆதரிக்கலாம்; அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். 'எம்.ஜி.ஆர்., இரட்டை இலை சின்னத்தை மட்டும் விட்டு விட்டுச் செல்லவில்லை; சின்னம்மாவையும் விட்டுச் சென்றார்' என, பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய பிறகு தான், எம்.ஜி.ஆருக்கு ஒரு சின்னம்மா இருப்பதையே தெரிந்து கொண்டோம்.
முதல்வர் என்ற நிலை மறந்து, சசிகலா காலில் விழுந்த பன்னீர்செல்வம் போன்றவர்களை, மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். எனவே, அ.தி.மு.க.,விலிருந்து விலகுகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683079

 

Categories: Tamilnadu-news

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனும்... சாமான்யனின் பெருங்கனவும்!

Tue, 03/01/2017 - 12:05
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனும்... சாமான்யனின் பெருங்கனவும்!

Sasikala_Bungalow_16394.jpg

‘வீடு’. எல்லோருக்குமான பெருங்கனவு. சராசரியாக, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 1,09,980 மணி நேரம் உழைக்கிறான் என்கிறது ஓர் ஆய்வு. அப்படியானால், இதில் 80 ஆயிரம் மணி நேரம் அவன் தனக்கான ஒரு நிரந்தரக் கூட்டுக்காகத்தான் உழைக்கிறான். அவன் சிந்தை முழுவதும் வீடு குறித்த பிம்பங்கள்தான் படிந்திருக்கின்றன. அதற்கு உயிர் கொடுக்கத்தான், தன் உயிரைக் கரைத்து ஓடுகிறான். வீடு என்றால் ஆயிரக்கணக்கான சதுர அடிகளில் எல்லாம் இல்லை. எட்டு நூறு சதுர அடி வீடே சாமான்யனின் மனதுக்கு பேராசைதான். என்றாவது ஒருநாள், மஞ்சள் வெயில் மாலைப் பொழுதில் வீட்டின் கூடத்தில் அமர்ந்து, ஜன்னலில் வைக்கப்பட்டிருக்கும் செடியின் நிழல் தரையில் படர்ந்து இருப்பதை குடும்பத்துடன் ரசிக்க மாட்டோமா என்பதற்காகத்தான் மூச்சடைக்கும் இவ்வளவு ஓட்டமும். 

சரி... விஷயத்துக்கு வருவோம். கடந்த வாரம், சூரியனின் மஞ்சள் கதிர்கள் இலைகளுடன் ரகசியம் பேசும் ஒரு மாலைப் பொழுதில், பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் பையனூருக்குச் சென்றோம். சாலையின் ஒரு பக்கத்தில், கடல் பேரிரைச்சலுடன் நிலத்தைக் கழுவிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கத்தில், மேய்ச்சல் நிலம் பல ஏக்கர் கணக்கில் பரந்துவிரிந்து கால்நடைகளின் பசியைப் போக்கிக்கொண்டு இருந்தது. 

எங்கள் பயணத்தின் நோக்கம். அந்தச் சாலையில் கருங்குழி பள்ளம் என்ற இடத்தின் அருகே இருக்கும் சசிகலா, இளவரசி, விவேக் மற்றும் சுதாகரனுக்குச் சொந்தமான இடத்துக்குள் செல்ல வேண்டும் என்பது மட்டும்தான். 

சசிகலாவின் இடத்துக்குள் ஒரு பயணம்!

சசிகலா

கருங்குழி பள்ளம் அருகே இருக்கும் ஒரு கிராமத்துக்குச் சென்று... அதன், பின்வழியாகப் புதர்கள் நிறைந்திருக்கும் ஒரு முல்லை நிலத்துக்குள் புகுந்து... அங்கே மறைவாக ஓர் இடத்தில் எங்கள் வண்டியை நிறுத்திவிட்டு, மன்னார்குடி குடும்பத்துக்குச் சொந்தமான அந்த இடத்துக்குள் நுழைந்தோம். ஏறத்தாழ 200 அடி தூரத்தில் மக்களை நில ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காக்கவேண்டிய காவலர்கள் அங்கு நின்றுகொண்டிருந்தனர். மெல்ல அவர்கள் கண்களுக்குப் படாமல் ஓர் இடத்தில் பதுங்கி, அந்த இடத்தை எங்கள் கைப்பேசியில் பதிவு செய்யத் தொடங்கினோம். நீரோடை, மேய்ச்சல் நிலம் என இன்னும் சங்க இலக்கியத்தில் வரும் முல்லை நிலத்தின் வர்ணனை அங்கே விரிந்துகிடந்தது... ரியல் எஸ்டேட் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்...  “சென்னை மிக அருகில் ஐங்குறுநூற்று முல்லை நிலம்.”

எங்கள் அவசரம் எல்லாம் சூரியனுக்குத் தெரியவில்லை. ஓய்வு எடுக்க அவசரமாக மறையத் தொடங்கியது. இருள் தன் கருமையை மெல்ல வெளியின் மீது பூசத் தொடங்கியது. இப்போது நாங்கள் இருப்பது ஒரு மேய்ச்சல் நிலம். இதுவும் மன்னார்குடி குடும்பத்துக்குச் சொந்தமானதுதான்... இதனைக் கடந்து கொஞ்சம் உள்ளே புகுந்தால், அந்தச்  சொகுசு மாளிகை அருகே சென்றுவிடலாம். ஆனால், அது அவ்வளவு எளிமையானது இல்லை என்பது அதற்கு போடப்பட்டிருக்கும் பாதுகாப்பிலிருந்து தெரிந்தது. அருகே இருக்கும் இரண்டு மாடி கட்டடம், ஒரு கண்காணிப்புக் கோபுரம்போல் செயல்படுகிறது. 

நாங்கள் ஒரு மரத்தின் மீது ஏறி நின்று பார்த்தது வரை... அந்தப் பங்களா, அதைச் சுற்றி உள்ள 100 ஏக்கர் மாயக் கோட்டைக்குள்ளே ஏறத்தாழ 100 மின்விளக்குகள், சாலை வசதிகள் என அந்த ஊரின் அருகே இருக்கும் எளிய மனிதர்களின் வீடுகளுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாமல், சாமான்யர்களின் உலகத்திடமிருந்து தன்னை துண்டித்துக்கொண்டு வேறோர் உலகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. 

நாங்கள் இருந்த மேய்ச்சல் நிலத்தின் அருகே ஓர் ஓடை... இந்த வறட்சியிலும் மெல்ல சலசலத்து ஓட, அங்கு நீர் பருகிய எகினம் என்னும் முல்லை நிலத்துப் பறவை, மெல்ல உயரப் பறந்து... அந்தக் கட்டடத்துக்கு மேல் சென்று மறைந்தது. ஆனால், அந்த மாளிகை மற்றும் இடத்துடன் பின்னப்பட்டிருக்கும் சந்தேகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
  
அறத்தைப் புதைத்து நடப்பட்ட மரம்!

Sasikala_pic_16401.jpgஇவ்வளவுதானா... நாங்கள்கூட என்னமோ ஏதோ என்று நினைத்துவிட்டோம்... அவர்களுக்குத்தான் பல இடங்களில் சொத்து இருக்கிறதே...? ஆம். இருக்கிறது. அதையெல்லாம் எப்படி வாங்கினார்கள் என்று தெரியாது. ஆனால், இந்த இடம், அதில் இருக்கும் ஒரு சொகுசு வீடு எல்லாம் இசையமைப்பாளர் கங்கை அமரனை மிரட்டி வாங்கியது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறது. இந்தச் சொத்தை வாங்கியபோது... சசிகலா, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் இல்லை. அவர், கட்சியைக் கைப்பற்றி... ஆட்சியைக் கைப்பற்ற காய் நகர்த்துவார் என்று அப்போது யாரும் நினைக்கவில்லை. அப்போது அவர் ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரி மட்டும்தான். இப்போது, அவரிடம் எல்லாம் இருக்கிறது... குறிப்பாக, ஜெயலலிதாவினால் விரட்டப்பட்டவர்கள் எல்லாம் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள். 

நீங்கள் என்றாவது பழைய மகாபலிபுரம் சாலையில் செல்லும்போது நெய்தல், முல்லை நிலங்களை மட்டும் பார்த்துச் செல்லாதீர்கள். இந்தக் கட்டடத்தை, அங்கு அறத்தை புதைத்து அதன் மீது நடப்பட்டிருக்கும் மரத்தை, அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் காவலையும் பாருங்கள்.... இதுவெல்லாம் எப்படி வந்தது என்று உங்களுக்குள் கேள்வி கேளுங்கள். அந்தக் கேள்வியில்தான் எல்லாம் இருக்கிறது... தமிழகத்துக்கான வெளிச்சமும்!

இல்லை... இதற்கு முன்னால் இருந்தவர்களும் இதைத்தானே செய்தார்கள் என்று இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வோமாயின், நம் பிள்ளைகளைச் சகதியில்தான் விட்டுச் செல்வோம். மீண்டும் நினைவூட்டுகிறேன், இந்தக் கருங்குழி பள்ளம் நிலத்தை மிரட்டி வாங்கியபோது... சசிகலாவிடம் நேரடியாக எந்த அதிகாரமும் இல்லை.

ஹும்... சொல்ல மறந்துவிட்டேன்... நாம் கடினப்பட்டு உழைத்துச் சம்பாதித்து கட்டிய 400 சதுர அடி வீட்டில்... 100 ஏக்கர் நிலத்தில் பரந்துவிரிந்திருக்கும் இந்தச் சொகுசு மாளிகையில் தூங்குவதைவிட நிம்மதியாகத் தூங்க முடியும்!

http://www.vikatan.com/news/coverstory/76737-sasikala-ilavarasi-sudhakaran-and-a-dream-of-common-man.art

Categories: Tamilnadu-news

கார்டனில் கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா! கலக்கத்தில் அமைச்சர்கள்

Tue, 03/01/2017 - 09:38
கார்டனில் கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா! கலக்கத்தில் அமைச்சர்கள்

sasikala_new_1a_12164.jpg

ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் முகம் பதித்த கேக்கை கார்டனில் சசிகலா வெட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. புத்தாண்டையொட்டி அவர் கேக் வெட்டியதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அடுத்து சசிகலாவை கார்டனில் சந்தித்தவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளதாம். அந்த கையெழுத்தை சசிகலாவை முதல்வராக்கப் போகிறது என்ற தகவல் அமைச்சர்களை கலக்கத்தில் ஏற்படுத்தி இருக்கிறதாம். 

அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து நிகழும் காட்சிகள் கடும் அதிர்வலைகளையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருவதாக அடிமட்ட தொண்டர்கள் முனுமுனுக்கத் தொடங்கிவிட்டனர்.  கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு சசிகலா நடராஜன் வந்து விட்டார். அடுத்து அவரது ஆதரவாளர்களின் ஆசை, சசிகலா முதல்வர். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். கார்டனிலிருந்து நேற்று மதியம், அனைத்து அமைச்சர்களுக்கும் ஒரு அவசர அழைப்பு வந்தது. அதில் மாலை 4 மணிக்கு அனைவரும் கார்டனில் ஆஜராக வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி அனைவரும் குறிப்பிட்ட நேரத்துக்குள் அங்கு ஆஜராகினர். ஜெயலலிதாவின் உருவப்படத்திறப்பு நிகழ்ச்சி என்று நினைத்தவர்களுக்கு சசிகலா தரப்பு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்துள்ளது.

கார்டனில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கண்ணீர் மல்க சசிகலா திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். அடுத்து சசிகலா, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கத்தை விட இந்த முறை சசிகலாவின் நடவடிக்கைகள், செயல்பாடுகளில் வித்தியாசத்தை கட்சியினர் உணர்ந்தனர். அது அவரது பேச்சிலும் தெரிந்தது என்கிறார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர். அம்மா படத்தை திறந்தபிறகு எங்களிடம் சின்னம்மா பேசத் தொடங்கினார். அதற்கு முன்பு, புத்தாண்டையொட்டி கேக் வெட்ட சசிகலாவிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதற்கு சம்மதம் தெரிவித்தவுடன் உடனடியாக 5 கிலோ எடையுள்ள கேக் கார்டனுக்குள் கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முன்பு அந்த கேக் வைக்கப்பட்டது.  பச்சை நிறமுடைய அந்த கேக்கில் ஜெயலலிதாவும், சசிகலாவின் முகம் பதித்த படங்கள் இருந்தன. அதை சசிகலா வெட்டினார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு கேக் துண்டு கொடுக்கப்பட்டன. அவர்களும் அதை ஆர்வமாக சாப்பிட்டனர்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு அனைவரிடமும் கையெழுத்து பெறப்பட்டது. அந்த கையெழுத்து எதற்கு என்று கூட யாரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. அனைவரும் அமைதியாக கையெழுத்துப் போட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வமும் கையெழுத்திட்டுள்ளார். இந்த கையெழுத்துதான் அடுத்து சசிகலாவை முதல்வராக்க உள்ளதாம். இதன்பிறகு மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் சசிகலாவும், அவரது தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கார்டனிலிருந்து கிளம்பி சென்று விட்டனர்" என்றார். 

ஜெயலலிதா மறைந்த சமயத்தில் கார்டனில் கேக் வெட்டப்பட்ட தகவல் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்ற தகவலையும் கிளம்புவதற்கு முன்பு மூத்த நிர்வாகி ஒருவர் சொல்ல அதற்கு அனைவரும் சம்மதித்துள்ளனர். ஆனால், நேற்றிரவு போதையில் மூத்த அமைச்சர் ஒருவர், தன்னுடைய ஆதரவாளரிடம் கேக் வெட்டிய விவரத்தை உளறியுள்ளார். அதன்பிறகே கேக் வெட்டப்பட்ட நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

கார்டனிலிருந்து வெளியே வந்த அமைச்சர் ஒருவர், 'அம்மா உயிரோடு இருந்தக் காலக்கட்டத்தில் கையெழுத்து பெறப்படும் காரணத்தையாவது ஏதாவது வழியில் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. கையெழுத்து என்றவுடன் பதவியை காப்பாற்றிக் கொள்ள மூத்த அமைச்சர்களே கையெழுத்து போட்டு விடுகின்றனர். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் போட வேண்டியதுள்ளது' என்று புலம்பி இருக்கிறார். அந்த அமைச்சர் குறித்த தகவல்கள் அடுத்த சில நிமிடங்களில் கார்டனுக்கு ரிப்போர்ட்டாக பறந்துள்ளதாம். இவ்வாறு அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். முன்பெல்லாம் அமாவாசைக்குப் பயந்த காலமாறி இப்போது தினமும் கலக்கத்தில் இருக்கின்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/76689-sasikala-celebrates-new-year-by-cutting-cake-in-poes-garden---minsiters-left-confused.art

Categories: Tamilnadu-news

ஜெயலலிதா மரணம்: மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய கடிதத்தில் இருந்தது என்ன?

Tue, 03/01/2017 - 09:37
ஜெயலலிதா மரணம்: மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய கடிதத்தில் இருந்தது என்ன?

323823_13496.jpg

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்.. மர்மம்... என்று பொதுமக்களும், அ.தி.மு.க-வினர் சிலரும் கூப்பாடு போட்டு வந்தாலும், இந்த பிரச்னையில் இன்னமும் தெளிவு பிறக்கவில்லை. இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒருவர், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அவரது கேள்விகளுக்கான பதில்களை சம்பந்தப்பட்ட நபருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. இந்த பதில்களுடன், ஜெயலலிதா மரணம் குறித்து டிசம்பர் 7-ம் தேதியன்று, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யா சாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தையும் இணைத்துள்ளனர். மிகவும் ரகசியமாக அனுப்பட்ட கவர்னர் வித்யா சாகர் ராவின் கடிதத்தில் இடம்பெற்றிருந்த தகவல்கள் இதோ..

*காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவால், செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வந்தது. ஆனால், ஒரு வாரத்தில் அவரின் உடல்நிலை குன்றியது. 

*மருத்துவர்களின் 50 நாட்கள் தீவிர முயற்சியால், ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இதனால் நவம்பர் 11-ம் தேதியன்று, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா

*டிசம்பர் 4-ம் தேதி, நான் மும்பையில் இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு 'கார்டியாக் அரஸ்ட்' ஏற்பட்டதாகவும், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் தகவல் வந்தது. இதனால், நான் உடனே சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தேன்.

*அப்போலோ மருத்துவமனையின் சேர்மன் மற்றும் மருத்துவர்கள் என்னிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விவரித்தார்கள். ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியாக, அவருக்கு ECMO கருவி பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அவர், தொடர்ந்து அபாயக் கட்டத்திலேயே இருந்த நிலையில், டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்தார். 

*இதனையடுத்து சில மணி நேரங்களில், அ.தி.மு.க பொருளாளரும் மூத்த அமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் என்னை ராஜ்பவனில் சந்தித்தார். அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக ஒ.பி.எஸ் தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும் என்னிடம் அளித்தார்கள். 

*அத்துடன் 31 அமைச்சர்களின் பட்டியலை ஒ.பன்னீர் செல்வம் என்னிடம் அளித்தார். டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு ஒ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் என வித்யாசாகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/76705-rti-query-reveals-backdrop-to-jayalalithaa’s-death.art

Categories: Tamilnadu-news

தலைவா வா அரசியலுக்கு.. தொண்டர்கள் இருக்கிறோம்! - இந்தா கிளம்பிட்டாங்கல்ல#

Tue, 03/01/2017 - 09:09

தலைவா வா அரசியலுக்கு.. தொண்டர்கள் இருக்கிறோம்! - நம்பி இறங்குவாரா ரஜினி?

தமிழகத்தில் இதற்கு முன் எப்போதும் இப்படி ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதில்லை. ஒரு பக்கம் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்த ஜெயலலிதாவின் மரணம். இன்னொரு பக்கம், திமுக தலைவர் மு கருணாநிதி உடல் நலக் குறைவால் அவ்வளவாக செயல்பட முடியாத நிலையில் இருப்பது. இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, இப்போதுள்ள தலைவர்கள் எவருமே தகுதியானவர்களாக, மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இல்லை என்பதுதான் நிதர்சனம்.

Fans inviting Rajini again to politics

இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் ரஜினியை தமிழகத்தின் அரசியல் தலைமை ஏற்க அழைக்கத் தொடங்கியுள்ளனர் ரசிகர்கள். தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அவரை அரசியலுக்கு அழைக்கும் 8 ஷீட் போஸ்டர்கள் பளிச்சிட ஆரம்பித்துள்ளன. "தலைமை ஏற்க மக்கள் அழைக்கிறார்கள்... தொண்டர்கள் இருக்கிறோம்" என்ற வாசகம் அதில் இடம் பெற்றுள்ளது. திருச்சியைச் சேர்ந்த ரஜினி மன்ற பொறுப்பாளர் ராயல் ராஜ் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இந்தப் போஸ்டர்கள், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு குறித்து ராயல் ராஜ் கூறுகையில், "தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினியால் மட்டுமே முடியும். அனைத்து தரப்பினரும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர். ரஜினி அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம். தமிழகத்தில் புரையோடிய நிலையில் இருக்கும் லஞ்சம், வன்முறையால் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் லஞ்சமும், வன்முறையும் முற்றிலுமாக ஒழிக்கப்படும். மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்தே 1996-ம் ஆண்டு ஆட்சிக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். அதேபோல் தற்போதும் அவர் குரல் கொடுப்பதோடு மட்டுமின்றி நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும். விரைவில் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளும் தலைவரைச் சந்திக்கப் போகிறோம்.

 

அப்போது அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்போம்," என்றார். இதனால் அரசியல் உலகில் மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பியிருக்கிறது. ரஜினியை இன்று நேற்றல்ல... கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருமாறு அழைத்து வருகிறார்கள் ரசிகர்கள். ரஜினியின் தலைமையில் புதிய ஆட்சி மலர்வதற்கான தருணம் 1996-ல் வாய்த்தது. முதல்வர் பதவி தேடி வந்தும்கூட ரஜினி அதை ஏற்க மறுத்துவிட்டார். காரணம் அந்த வாய்ப்பு இன்னொரு கட்சியின் தயவில் கிடைத்தது. 'என் சொந்த பலம், சொந்தக் கட்சியின் செல்வாக்கு மூலம் மட்டுமே இத்தகைய பதவியை அடைய வேண்டும். இன்னொருவர் தயவில் வேண்டாம்' என்று கூறி ஒதுங்கினார் ரஜினி. அதன் பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு அவருக்கு அமைந்தது, 2010-ல். ஆனால் இந்த முறை ரஜினியின் தயக்கம் அவரை அரசியலுக்கு வர விடாமல் தடுத்துவிட்டது. ரஜினி அரசியலுக்கு வருவார் என்று காத்திருந்து ஏமாந்த பல ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் பார்வையாளர்கள் கடைசியில் அவரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது மீண்டும் ரஜினியின் அரசியல் பற்றிய பேச்சுகள் கிளம்பியுள்ளன. ரஜினிக்கான இடம் இப்போதும் அரசியலில் உள்ளதா? இனியும் ரஜினியால் அரசியலில் சாதிக்க முடியுமா? இப்போதுள்ள ரசிகர்களை நம்பி அவர் அரசியலில் குதிப்பாரா?

நன்றி : தட்ஸ் தமிழ்

டிஸ்கி :

இந்த நாடு உருப்படும் என்று நீங்க நினைக்கிறீங்க ? சோ சேட்:cool:

 

Categories: Tamilnadu-news