உலக நடப்பு

மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை கோரும் பிரேரணை

1 week 4 days ago

Published By: SETHU

04 APR, 2024 | 06:33 PM
image

இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்கும் பிரேரேணை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை (06) பரிசீலிக்கப்படவுள்ளது.

காஸாவில் இனப்படுகொலைக்கான ஆபத்து உள்ளதால் இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என இப்பிரேரணையில் கோரப்பட்டுள்ளது.

57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தர்ன இப்பிரேரணையை முன்வைத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன்படி, பிரேரணை நிறைவேற்றப்படுதற்கு 24 நாடுகளின் ஆதரவு தேவை. 

எனினும், ஏதேனும் நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாமல்விட்டால், குறைந்த எண்ணிக்கையான வாக்குகளுடனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியும். 

https://www.virakesari.lk/article/180455

தாய்வானில் பாரிய நிலநடுக்கம்.

1 week 5 days ago

தாய்வானில் பாரிய நிலநடுக்கம்.

25 வருடத்துக்குப் பின் 7.4 அளவில் நில நடுக்கம்.

இதுவரை 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.900க்கும் அதிகமானோர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.

https://www.cnn.com/asia/live-news/taiwan-earthquake-hualien-tsunami-warning-hnk-intl/index.html

தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத பெரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை - தற்போதைய தகவல்கள்

1 week 6 days ago
தைவானில் 25 ஆண்டுகளில் காணாத அளவு பெரிய நிலநடுக்கம்

பட மூலாதாரம்,TVBS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கெல்லி Ng மற்றும் ரூபர்ட் விங்ஃபீல்ட்-ஹேயஸ்
  • பதவி, பிபிசி செய்திகள், சிங்கப்பூர் மற்றும் தாய்பெய்
  • 3 ஏப்ரல் 2024, 03:32 GMT
    புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்

தைவானின் கிழக்குக் கடற்கரையில் இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 3-ஆம் தேதி) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தைவான் தீவு மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு மையத்தின் படி, இந்த நிலநடுக்கத்தின் தோற்றப்புள்ளி, தைவானின் ஹுவாலியன் (Hualien) நகருக்கு தெற்கே 18.கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த நிலநடுக்கம், இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு (தைவான் நேரப்படி காலை 07:58 மணி) 15.5 கி.மீ. ஆழத்தில் தாக்கியது. இது ஒன்பது பின் அதிர்வுகளையும் ஏற்படுத்தியது.

ஹுவாலியனில் பல கட்டிடங்கள் பாதி இடந்த நிலையிலும் ஆபத்தான கோணங்களில் சாய்ந்த நிலையிலும் காணப்படுகின்றன.

தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவே என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தைவானிய சிப் தயாரிப்பு நிறுவனமான டி.எஸ்.எம்.சி (TSMC), தனது ஊழியர்களின் பாதுகாப்பிற்காக சின்ச்சு (Hsinchu) மற்றும் தெற்கு தைவானில் உள்ள சில தொழிற்சாலைகளை காலி செய்துள்ளதாகக் கூறியுள்ளது. அதன் பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும்போல இயங்குகின்றன என்றும் கூறியுள்ளது.

ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான செமிகண்டக்டர்களின் முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனம் உள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரம்
தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,AP

தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,NATIONAL FIRE AGENCY

ஹுவாலியன் மற்றும் பிற பகுதிகளில் இடிபாடுகளிலிம் கட்டிடங்களிலும் சிக்கியுள்ள மக்களைச் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தைவானின் தேசிய தீயணைப்பு முகமையின் கூற்றுப்படி, சுரங்கப்பாதைகளிலும் பலர் சிக்கியுள்ளனர்.

ஹுவாலியனில் உள்ள யுரேனஸ் கட்டிடத்தில் இருந்து குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டனர்.

தாய்பெயில், ஜோங்ஷான் மாவட்டத்தின் ஒரு கட்டிடத்தில் சிக்கிய லிஃப்டில் இருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டனர். நியூ தாய்பெய் நகரில் ஸிண்டியான் மாவட்டத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர்.

தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

தைவானின் உள்ளூர் ஊடகங்கள், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடங்களின் காட்சிகளைக் ஒளிபரப்பின

இடிபாடுகளின் காட்சிகள்

தைவானின் தலைநகர் தாய்பெயில் இருந்து பகிரப்பட்ட வீடியோக்கள், கட்டிடங்கள் பலமாகக் குலுங்குவதையும், அலமாரிகளில் இருந்து பொருட்களை தெறித்து விழுவதையும், மேஜை நாற்காலிகள் கவிழ்வதையும் காட்டுகின்றன.

மலைகள் நிறைந்த தைவானின் உட்புறப் பகுதிகளில், நிலநடுக்கம் மிகப்பெரிய நிலச்சரிவை எற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன. ஆனால் அங்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன என்று இன்னும் தெரியவில்லை.

தைவானின் உள்ளூர் ஊடகங்கள், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடங்களின் காட்சிகளைக் ஒளிபரப்பின. மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்படும் காட்சிகளும் காட்டப்பட்டன. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் வாகனங்கள் நொறுங்கிக் கிடப்பதையும், கடைகளில் பொருட்களை கலைந்து கிடப்பதையும் உள்ளூர் தொலைக்காட்சி சேனலான டிவிபிஎஸ் (TVBS) ஒளிபரப்பிய காட்சிகள் காட்டுகின்றன.

தைவான் முழுவதும் மின்வெட்டு நிலவுவதாகவும், இணையச் சேவைகள் தடைபட்டிருப்பதாகவும் இணைய கண்காணிப்புக் குழுவான NetBlocks தெரிவித்துள்ளது.

 
தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

மலைகள் நிறைந்த தைவானின் உட்புறப் பகுதிகளில், நிலநடுக்கம் மிகப்பெரிய நிலச்சரிவை எற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன

அண்டை நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள்

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அண்டை நாடான ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 3மீ உயரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் முன்னர் எச்சரித்திருந்தனர்.

ஆனால் அதன்பின்னர், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த எச்சரிக்கையின் தீவிரத்தைக் குறைத்தது. ஆனால் மக்கள் ‘அதே தீவிரத்துடன் பின் அதிர்வுகள் குறித்து விழிப்புடன்’ இருக்குமாறு கேட்டுக் கொண்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பிலிப்பைன்ஸின் நில அதிர்வு ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டது.

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சுனாமி அச்சுறுத்தல் ‘கடந்து விட்டதாக’ கூறியது.

சீனாவின் தென்கிழக்கு புஜியான் மாகாணத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

"இந்த நிலநடுக்கம் நிலத்திற்கு அருகில் உள்ளது. ஆழமற்றதாக உள்ளது. இது தைவான் மற்றும் அதன் தீவுகள் முழுவதும் உணரப்பட்டுள்ளது. இது 25 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்களிலேயே மிகவும் வலுவானது," என்று தைபேயின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் வூ சியென் ஃபூ கூறினார்.

இதற்குமுன், 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தைவானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 2,400 பேர் இறந்தனர், 5,000 கட்டிடங்கள் இடிந்தன.

தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஆப்பிள் நிறுவனத்திற்கான செமிகண்டக்டர்ளை டி.எஸ்.எம்.சி நிறுவனம் தயாரிக்கிறது

உலகப் பொருளாதாரத்தில் தைவானின் முக்கியத்துவம் என்ன?

கணினி சிப் தயாரிப்பு நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (டி.எஸ்.எம்.சி) மற்றும் ஐபோன் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமான தைவான் உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்காற்றுகிறது, என்கிறார் சிங்கப்பூரில் இருக்கும் பிபிசியின் வணிகச் செய்திகள் நிருபர் பீட்டர் ஹாஸ்கின்ஸ்.

ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான குறைகடத்திகளின் (செமிகண்டக்டர்) முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனம் உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களைத் தயாரிப்பதுடன், அமேசான் கிண்டில், நிண்டெண்டோ மற்றும் சோனி நிறுவனங்களுக்கான வீடியோ கேம் சாதனங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டி.எஸ்.எம்.சி நிறுவனம் அதன் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக அதன் சில தொழிற்சாலைகளில் இருந்து அவர்களை வெளியேற்றியதாகவும், தற்பொது அவர்கள் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறது.

நிலநடுக்கம் அதன் தயாரிப்புச் செயல்பாடுகளில் என்ன தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த விவரங்களை உறுதிப்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான தகவல்களை பிபிசி கேட்டபோது, அதற்கு ஃபாக்ஸ்கான் பதிலளிக்கவில்லை.

தைவானின் தொழில்நுட்ப நிறுவனங்கள் சர்க்யூட் போர்டுகள் மற்றும் மேம்பட்ட கேமரா லென்ஸ்கள் உள்ளிட்ட பாகங்களையும் உற்பத்தி செய்கின்றன.

நைகி, அடிடாஸ் போன்ற உலகளாவிய ஆடை பிராண்டுகளுக்கும் தைவானில் இருக்கும் நிறுவனங்கள் பொருட்களை விநியோகம் செய்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/ckvwwzq3jx9o

நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.

1 week 6 days ago

                                                    நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.

                           நியூயோர்க் வாழ் மக்கள் ஏதாவதொரு சிறிய விடுமுறையில் போனால் திரும்ப வந்து அவர்களது வீட்டில் குடியிருக்க முடியுமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் சிப்பிலியாட்டுகிறது.

                           நாளாந்தம் ஏதோ ஓர் மூலையில் இந்தப் பிரச்சனை நடக்கிறது.

                          மெக்சிக்கோ எல்லையால் வருபவர்களை ரெக்சாஸ் மாநிலம் அத்தனை பேரையும் தனக்கு(நாளாந்தம் 10000 பேர்வரை)இருப்பிட சாப்பாட்டு வசதிகள் செய்ய முடியாதென்று முடிவெடுத்து எல்லையால் வருபவர்களை ஒவ்வொரு பேரூந்துகளைப் பிடித்து சிகப்பு கட்சி நகரங்கள் அதாவது (Sanctuary City)சரணாலய நகரம் என்று சொல்லப்படுகின்ற வாசிங்டன் டிசி,நியூயோர்க்,இலினேஸ்,கலிபோர்ணியா போன்ற நகரங்களுக்கு அனுப்புகிறார்கள்.

                         ஆரம்பத்தில் நகரபிதாக்களில் இருந்து சகல பிரமுகர்களும் வரும் பேரூந்துகளை வரவேற்றார்கள்.நாளாந்தம் பேரூந்துகளின் தொகை கூடக்கூட வரவேற்பவர்களின் தொகையும் குறைந்துவிட்டது.
சரி வந்தவர்களை தங்க வைக்க என்று 2-3-4-5 ஸ்ரார் கொட்டல்களில் விட்டு நல்ல சாப்பாடுகளும் கொடுத்தார்கள்.வந்தவர்களின் தொகை கூடிக்கூடி ஒரு லட்சத்தைத் தாண்டும் போது தான் நிலமை மேசமாகிக் கொண்டு போவதை உணர்ந்தார்கள்.

                        மத்திய அரசோ மாநில ஆளுநரோ இதற்காக மேலதிக பணம் ஒதுக்கவில்லை.

                       கட்டிப் போட்டு பராமரிக்க பணம் இல்லை.எல்லோரும் விரும்பியபடி ஊர் சுற்றுகிறார்கள்.எங்கே போனாலும் களவு.பொலிசுக்கு கூப்பிட்டால் சம்பவம் நடந்து பலமணி நேரத்தின் பின்பே வருகிறார்கள்.

                       கையும் களவுமாக கள்வனைப் பிடித்தாலும் நீதிமன்றம் கொண்டு போனால் பிணை இல்லாமலே வெளியே வருகிறார்கள்.

                      அண்மையில் நியூயோர்க் நகரத்தில் 4-5 பேர் சேர்ந்து 2-3 பொலிசாருக்கு அடித்துவிட்டார்கள்.அவர்களைப் பிடித்து நீதிமன்றம் கொண்டு போனால் உடனேயே பிணை இல்லாமல் விடுவிக்கப்பட்டார்கள்.

                      வெளியே வந்தவர்கள் பொலிசாருக்கு நடுவிரலைக் காட்டிக் கொண்டு போகிறார்கள்.

                    அடுத்தடுத்த நாள் மக்களின் கொந்தளிப்பால் அவர்களைத் தேடினால் கலிபோர்ணியா போய்விட்டார்கள்.பின்பு அங்கு எங்கோ ஒரு மூலையில் வைத்து பிடித்தார்கள்.

 

                                                                                                பெரிய பிரச்சனை

                                  பகலில் தெருத்தெருவாக கூட்டமாக திரிபவர்கள் திடீர் திடீர் என்று ஆள்அரவமற்ற வீடுகளுக்குள் கதவுகள் யன்னல்களை உடைத்து உள்ளே போய் களவும் எடுக்கிறார்கள் அப்படியே தங்கவும் செய்கிறார்கள்.

                                வீட்டுக்காரர் வந்து பார்த்து அவர்களைக் கலைக்க பொலிசைக் கூப்பிட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது நீ நீதிமன்றம் போய் முறையிடு.

                                அதேநேரம் வீட்டின் 

தண்ணீரையோ

மின்சாரத்தையோ

சமையல் காசையொ

நிற்பாட்ட முடியாது.அப்படி நிற்பாட்டினால் உங்களை கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள்.

 

                                     இன்று நியூயோர்க் பிரவுன்ஸ் என்னும் நகரத்தில் சந்தேகத்தில் ஒருவரை துரத்த ஒரு வீட்டு நிலக்கீழ் அறைக்குள் ஓடியிருக்கிறார்.பின்னே சென்ற பொலிசார் உள்ளே போனால் 7 பேர் உள்ளே.போதை வஸ்துகள் குண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் வெற்றுத் துப்பாக்கி ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தேடப்படுபவர் அத்துடன் ஒரு 7 வயதுக் குழந்தை.

                                  அத்தனை பேரையும் நீதிமன்றம் கொண்டு போனால் கொலை வழக்கில் தேடப்பட்டவரைத் தவிர மற்றையோரை விடுவித்துள்ளார் நீதிபதி.

                                 வீட்டுக்காரர் மாதக் கணக்காக நீதிமன்றுக்கு அலைவதாக சொல்கிறார்கள்.

https://abc7ny.com/eight-suspected-migrants-arrested-in-the-bronx-after-police-found-them-squatting-with-guns-and-drugs/14605864/

Child found among guns, drugs in Bronx home occupied by several squatters.

 

NORWOOD, The Bronx (WABC) -- Police have arrested several suspected migrants who they found squatting with guns and drugs in the basement of a Bronx home.

The big bust happened last Wednesday when police received a call about a man with a gun just footsteps away from a school.

Officials say they chased 24-year-old Hector Desousa Villata, who is believed to be from Venezuela, into the home on Hull Avenue.

That is where police arrested him, long with seven other suspected migrants. One man, 22-year-old Javier Alborno, tried to flee with a weapon but was soon arrested.

When authorities obtained a search warrant, they found two more loaded guns, three loaded extended magazines, ammunition, and a bag of ketamine mixed with cocaine.

 

A 7-year-old child was also found in the home.

"Two of the people with the guns had open cases, one for an attempted murder in Yonkers, and one walking around with an open gun indictment, walking around," said NYPD Chief of Patrol John Chell.

A neighbor spoke out Tuesday and said the group had been squatting.

"They're squatters and the owner has been trying to get them out of the apartment for the longest period of time," said neighbor Alfred Munoz. "I think he has a court date set, apparently because they're squatters for more than 30 days..... they came, they were a disruptive force mainly because there were a lot of them. You didn't know who was staying, not staying there, and the owner of the building had a hell of a time trying to get them out."

Desousa Villata and the others were charged with criminal possession of a weapon, criminal possession of controlled substance and acting in a manner injurious to a child. Officials say all of the men, but two were released without bail.

 

Desousa Villalta was already charged with attempted murder for shooting another person in the leg during an argument in Yonkers.

The extent of the criminal activity at the house is the subject of investigation here while six of the suspects are out on release.

The suspect accused of shooting someone in the leg in Yonkers is out on supervised release. Some of the suspects are also under investigation in connection with a robbery pattern in Bergen County.

இந்தச் செய்தியை கூகிளில் மொழிபெயர்த்து போடலாம் என்று நினைத்தேன்.

இருந்தாலும் பண்டிதர் தம்பி @இணையவன் க்கு கூகிள் தமிழ் விளக்கம் குறைவாம்.அதனால் மொழிபெயர்ப்பை விட்டுவிட்டேன்.

இந்த செய்திகள் பற்றி  @ரசோதரன் @நீர்வேலியான்இன் அனுபவங்கள் தகவல்களை அறிய விரும்புகிறேன்.

சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் ‍- ஈரானின் மூத்த தளபதி பலி

1 week 6 days ago

சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் ‍- ஈரானின் மூத்த தளபதி பலி

சிரியாவின் ராணுவத்திற்கு உதவவென்றும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான தாக்குதல்களை செயற்படுத்தவென்றும் சிரியாவின் தலைநகரில் இயங்கிவந்த ஈரானின் கட்ஸ் படைகளின் கட்டடம் ஒன்று இஸ்ரேலின் விமானத் தாக்குதலுக்கு அகப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் தூதரகம் என்று அறியப்பட்ட இக்கட்டடத் தொகுதி பல கட்டடங்களைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பாகும்.

இத்தாக்குதலில் ஈரானிய புரட்சிகரகர காவற்படையின் மிக முக்கிய தளபதியும், இன்னொரு படைப்பிரிவின் தளபதியும் உட்பட 7 ஈரானிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இத்தளபதியின் நடமாட்டத்தினைத் தொடர்ச்சியாக அவதானித்து வந்த இஸ்ரேல், சிரியாவில் அவர் நடமாடியவேளை கொன்றிருக்கிறது. 2020 இல் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கொல்லப்பட்ட ஈரானிய மூத்த தளபதியான அல் சுலைமானியின் இழப்பிற்குப் பின்னர் கொல்லப்பட்டிருக்கும் ஈரானின் மிக முக்கிய தளபதி இவரென்பது குறிப்பிடத் தக்கது. 

இவரது படுகொலைக்குப் பழிவாங்கியே தீருவோம் என்று சூளுரைத்திருக்கும் ஈரான், இத்தாக்குதலுக்கான முழுப்பொறுப்பையும் அமெரிக்காவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. இஸ்ரேலுடனோ அல்லது அமெரிக்காவுடனோ நேரடியான மோதலொன்றைத் தவிர்க்க விரும்பும் ஈரான், தனது முகவர்களான லெபனானின் ஹிஸ்புள்ளாக்கள், யெமெனின் ஹூத்திகள், ஈராக் ‍- சிரியாவில் இயங்கும் அமெரிக்க எதிர்ப்புக் கிளர்ச்சிப் படைகளைக் கொண்டு இஸ்ரேல் மீதோ அல்லது வளைகுடாவில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் மீதோ தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

https://edition.cnn.com/2024/04/02/middleeast/iran-response-israel-damascus-consulate-attack-intl-hnk/index.html

மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்களின் வாகனத்தை இலக்குவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு - 7 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை

1 week 6 days ago

 

மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்கள் உட்பட 7 பணியாளர்கள் இஸ்ரேலின் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

முற்றான முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு, செயற்கையான பட்டினிச்சாவினை எதிர்நோக்கியிருக்கும் மில்லியன் கணக்கான பாலஸ்த்தீனர்களுக்கு நிவாரணம் வழங்கவென வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சென் (World Central Kitchen) எனும் நிவாரண அமைப்பு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் பகுதியில் இயங்கி வருகிறது. அடைபட்டிருக்கும் பலஸ்த்தீனர்களின் வெறும் 30 வீதமானவர்களுக்கு மட்டுமே போதுமான நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் அனுமதித்திருக்கும் இவ்வேளையில், இப்பொருட்களை பகிர்ந்தளிக்கும் பணியிலேயே  இப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரு வாகனங்களில் புறப்பட்ட இப்பணியாளர்கள், தமது வாகன விபரங்கள், அடையாளங்கள், செல்லுமிடம் போன்ற அனைத்து விபரங்களையும் இஸ்ரேலிய இராணுவத்திடம் அறிவித்த பின்னரே தமது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். 

ஆனால், தமக்கு வழங்கப்பட்ட வாகன அடையாளங்களை வைத்தே இஸ்ரேலிய விமானப்படை இவ்வாகனங்களை யுத்த சூனிய வலயம் என்று இஸ்ரேலினால் அறிவிக்கப்பட்ட பகுதியில் வைத்துத் தாக்கியழித்திருக்கிறது. இத்தாக்குதலில் 4 மேற்குநாட்டு பணியாளர்கள் உட்பட ஏழு பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.    

கொல்லப்பட்டவர்களில் அமெரிக்க கனேடிய பிரஜாவுரிமை பெற்ற ஒருவர், அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்தவர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் போலந்து நாட்டவர் என சிலர் அடக்கம். 

இந்த நிவாரணப் பணியகத்தின் நடத்துனர் இத்தாக்குதல் குறித்துப் பேசுகையில், நாம் வழங்கிய வாகன விபரங்களைக் கொண்டே எமது பணியாளர்களை இலக்குவைத்து இஸ்ரேல் படுகொலை செய்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.   வழமை போல இத்தாக்குதல் குறித்து தகவல் ஏதும் இல்லை, வேண்டுமானால் விசாரித்துப் பார்க்கலாம் என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் கூறியிருக்கிறார். 

சுமார் 2.2 மில்லியன் பாலஸ்த்தீனர்களை செயற்கையான பட்டினிச் சாவிற்கு தள்ளிச் சென்றிருக்கும் இஸ்ரேல், வேண்டுமென்றே இம்மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களின் அளவை குறைத்து அனுமதித்து வருவதுடன், அத்தியவசியமாகத் தேவைப்படும் மருந்துப் பொருட்களையும் தடை செய்திருக்கிறது.

2008 - 2009 இல் வன்னியில் சிங்கள மிருகங்களால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த 420,000 தமிழர்களுக்கு வெறும் 25 வீதமான உணவுப்பொருட்களை மட்டுமே அனுமதித்து, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வைத்தியசாலைகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்ட புவியியல் அமைவிடப் புள்ளிகளைப் பயன்படுத்தியே அவ்வைத்தியசாலைகள் மீது இலக்குவைத்து தாக்கி பல நூற்றுக்கணக்கான தமிழர்களைப் பலிகொண்ட, சிங்கள இராணுவம் நடத்திய அட்டூழியங்களை ஒத்தவை இத்தாக்குதல்கள்.

பாலஸ்த்தீன மக்கள் மீதான அப்பட்டமான இனக்கொலையில் இதுவரை இஸ்ரேலிய மிருகங்கள் 33,000 அப்பாவிகளைப் படுகொலை செய்திருக்கின்றன.

இஸ்ரேலிய இனக்கொலையினை ஆதரிக்கும் அன்பர்களுக்கு இது சமர்ப்பணம். 

https://edition.cnn.com/2024/04/01/middleeast/world-central-kitchen-killed-gaza-intl-hnk/index.html

அமெரிக்காவில் மோதிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தவை ஆபத்தான கழிவுப் பொருட்கள்

2 weeks ago

போன வாரம்  அமெரிக்கவின் பால்டிமோர் துறைமுகத்தில் அங்கிருக்கும் பாலத்துடன் மோதி பெரும் சேதத்தை உண்டாக்கிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுக் கொண்டிருந்த பொருட்கள் மிகவும் ஆபத்தான மற்றும் நச்சுத்தன்மையான கழிவுப் பொருட்கள் என்று அமெரிக்காவில் நடைபெற்ற முதலாவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

56 கொள்கலன்களில் 764 டன்கள் எடையுள்ள கழிவுப் பொருட்கள் - லித்தியம் -இரும்பு மின்கலங்கள் மற்றும் வெடிக்கக் கூடிய கழிவுகள் உட்பட - இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தன. இன்னமும் மிகுதியாக இருக்கும் அந்தக் கப்பலின் 4644 கொள்கலன்களில் என்ன பொருட்கள் இருக்கின்றன என்ற விபரங்கள் இப்பொழுது விசாரிக்கப்படுகின்றது.

https://www.dailymirror.lk/breaking-news/Ship-was-carrying-US-toxic-waste-to-Sri-Lanka-Report/108-279925

 

ஆப்கானில் கண்ணிவெடியில் சிக்கி 9 சிறார்கள் பலி

2 weeks ago

Published By: SETHU    01 APR, 2024 | 01:15 PM

image
 

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடியொன்றில் சிக்கி 9 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். 

கஸ்னி மாகாணத்தின் கேரு மாவட்டத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார். 

சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்தபோது இக்கண்ணிவெடி வெடித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படையெடுப்பு காலத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியொன்றே வெடித்துள்ளதாக அம்மாகாண அதிகாரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180130

தென்லெபனானை இலக்குவைத்து எறிகணை வீச்சு - ஐநாவின் கண்காணிப்பாளர்கள் காயம்.

2 weeks 1 day ago
31 MAR, 2024 | 10:28 AM
image
 

லெபனானின் தென்பகுதியில் இடம்பெற்ற எறிகணை தாக்குதலில் ஐநாவின் மூன்று கண்காணிப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக ஐநாவின் அமைதிக்காக்கும் பிரிவு  தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஆளில்லா விமானதாக்குதலே இதற்கு காரணம் என லெபானான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இஸ்ரேல் இதனை நிராகரித்துள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர் தாக்குதல் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என ஐநா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் இருந்து தென்லெபானனை பிரிக்கும் ஐநாவால் வரையறுக்கப்பட்ட நீலக்கோடு வழியாக ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு அருகில்  எறிகணை வீழ்ந்து வெடித்தது என ஐநா தெரிவித்துள்ளது.

அமைதிப்படையினரை இலக்குவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐநா தெரிவித்துள்ளது.

லெபானின் உட்பகுதிகள் தாக்குதலிற்காக தெரிவுசெய்யப்படுகின்றன இதன் காரணமாக பெரும்மோதல் வெடிக்கலாம் என ஐநா பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180049

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்- ‘உடனே பதவி விலக வேண்டும்’

2 weeks 1 day ago
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்- ‘உடனே பதவி விலக வேண்டும்’ 13-24.jpg

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது.

டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பிணைக் கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சாலையில் பொருட்களை போட்டு தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இந்த போராட்டங்கள் காரணமாக இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.

டெல்அவிலில் இன்று அதிகாலை போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே இன்று மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை எகிப்தில் தொடங்குகிறது.

 

https://akkinikkunchu.com/?p=272568

 

ரஷியாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர் – அதிபர் புதின்

2 weeks 2 days ago

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3-வது ஆண்டை எட்டிய இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் புதின் ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், `நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷியா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள். எனவே மக்களை பாதுகாப்பதற்காகவே ரஷியா இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது’ என பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், “உக்ரைன் தனது மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ரஷியா மீது ராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் F-16 களின் விநியோகத்திற்காக காத்திருக்கிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடந்த ஆண்டு 42 எப்-16 விமானங்கள் உறுதி செய்யப்பட்டதாகக் கூறினார். போர் விமானங்களை எப்படி ஓட்டுவது என்பது குறித்து உக்ரைன் விமானிகள் பல மாதங்களாக மேற்கு நாடுகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

F-16 விமானங்கள் தரையில் இருக்கும் போது குண்டுவீச்சு தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க உயர்தர ஓடுபாதைகள் மற்றும் வலுவூட்டப்பட்ட ஹேங்கர்கள் தேவை. எத்தனை உக்ரேனிய விமானத் தளங்கள் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, மேலும் ஜெட் விமானங்கள் வந்தவுடன் அவர்களுக்கு இடமளிக்கக்கூடிய சிலவற்றை ரஷியா விரைவில் குறிவைக்கும்” என்று அவர் கூறினார்.

https://thinakkural.lk/article/297559

அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க வேண்டும் : இலங்கையில் ஐ.நா.வின் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அன்டனி பிளிங்கெனிற்கு கடிதம்

2 weeks 3 days ago

Published By: RAJEEBAN   30 MAR, 2024 | 06:22 AM

image
 

இலங்கையில் ஐநாவின் உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன  என தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கவேண்டும் ஆதரித்து என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டொனால்ட் ஜி டேவிஸ் வைலிநிக்கலஸ் ஜோன்கொதைமர் ஜெப்ஜக்சன் சமர்லீ டானி கே டேவிஸ் சூசன் வைல்ட் ராஜாகிருஸ்ணமூர்த்தி ஜமால்போமன் கேப்வாஸ்குவாஸ் ஆகியோர்  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்

அவர்கள் தங்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

 

இலங்கையில் ஐநாவின் உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன  என தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கவேண்டும் ஆதரித்து என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டொனால்ட் ஜி டேவிஸ் வைலிநிக்கலஸ் ஜோன்கொதைமர் ஜெப்ஜக்சன் சமர்லீ டானி கே டேவிஸ் சூசன் வைல்ட் ராஜாகிருஸ்ணமூர்த்தி ஜமால்போமன் கேப்வாஸ்குவாஸ் ஆகியோர்  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்

அவர்கள் தங்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

1. ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து, மற்றும் சர்வதேச சட்டங்களின்படி அவர்களுக்குள்ள உரிமைகளின் அடிப்படையில், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உலகளாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக வழிமுறையான பொதுவாக்கெடுப்புமுறையை (Referendum) ஆதரிக்கவும். 

 

2. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளைப் பின்பற்றி, போரின் போது பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு விரிவான சர்வதேச விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கவும். அத்தகைய விசாரணையில் இனப்படுகொலை (Genocide) செய்யப்பட்டதா என்பது பற்றிய ஆராய்வதும் அடங்கும். 

 

3. சுயாதீனமான நீதித்துறை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், சாத்தியமான குற்றச்சாட்டுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court) விசாரணைகளுக்காகப் பரிந்துரைக்கவும் அமெரிக்காவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் - பொதுச் சபை (General Assembly), பாதுகாப்பு கவுன்சில் (Security Council) மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட- உள்ள தலைமைப் பாத்திரத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தவும்.

https://www.virakesari.lk/article/179996

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று: தாய்லாந்திலும் எச்சரிக்கை

2 weeks 3 days ago

Published By: SETHU   28 MAR, 2024 | 04:11 PM

image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், அயல்நாடான தாய்லாந்தில் இது தொடர்பாக உயர் விழிப்பு நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கால்நடைகளில் வேகமாக பரவக்கூடிய அந்த்ராக்ஸ் நோயானது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியதாகும். இதனால் சிலவேளை மரணங்களும் ஏற்படலாம்.

இந்நிலையில், லாவோஸில் இம்மாதம் அந்த்ராக்ஸினால் பல மாடுகள் உயிரிழந்ததுடன், குறைந்தபட்சம் 54 மனிதர்களுக்கும் அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்நோய் லாவோஸின் அயல்நாடான தாய்லாந்திலும் பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்குமாறும், குறிப்பாக லாவோஸுடனான எல்லைப்பிரதேசங்களில் தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறும் தாய்லாந்து சுகாதார அமைச்சருக்கு பிரதமர் ஸ்ரேத்தா தவசின் பணிப்புரை விடுத்துள்ளார். 

அசாதாரணமான முறையில் மாடுகள், எருமைகள் போன்ற விலங்குகள் உயிரிந்தால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், இவ்வாறு இறந்த  மிருகங்களின் உடல்களை தொட வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் 2001 ஆம் ஆண்டின் பின்னர் மனிதர்களுக்கு அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.

https://www.virakesari.lk/article/179907

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து : 45 பேர் பலி! 8 வயது சிறுமி மாத்திரம் உயிருடன் மீட்பு!

2 weeks 3 days ago
cf-images.ap-southeast-2.prod.boltdns.net/v1/stati...

தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.

South Africa bus crash leaves at least 45 dead after vehicle plunges off bridge and catches fire - ABC News

Bus plunges off a bridge in South Africa, killing 45 people – an 8-year-old is only survivor - The Columbian

https://thinakkural.lk/article/297513

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும் அனுப்புங்கள் - இஸ்ரேலிற்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

2 weeks 4 days ago
29 MAR, 2024 | 10:23 AM
image
 

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.

 

காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/179954

பூமியின் நேரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

2 weeks 4 days ago
03-17.jpg

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன.

திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர்

ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

https://thinakkural.lk/article/297441

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி - 22 வயது இளைஞர் வெறிச்செயல்

2 weeks 4 days ago
28 MAR, 2024 | 12:32 PM
image
 

அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179892

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம் கோர முயற்சி

2 weeks 4 days ago

Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM

image
 

சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார்.

ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர். 

கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார். 

இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன. 

கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது.

இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

https://www.virakesari.lk/article/179895

நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணமாக கருத்தப்படும் என பாகிஸ்தான் மத அறிஞர்கள் தெரிவிப்பு

2 weeks 5 days ago

1000178888.jpg

 

நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணம் ஆகும் என்று மத அறிஞர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
 
அவர்களின் இந்த அறிக்கை பல சமூக ஊடக பயனர்களிடம் பேசு பொருளாகிஉள்ளது , மேலும் இதுபோன்ற நாடக காட்சிகளில் அடிக்கடி பங்கேற்ற பிரபலங்கள் உட்பட, இப்போது அதன் தாக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
 
வைரலான வீடியோ கிளிப் கடந்த ஆண்டு மார்ச் 29, 2023 தேதியிட்ட ரமலான் ஒலிபரப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
 
பாகிஸ்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரமழான் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள் குழு பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு அறிஞர் மற்றொருவரை கேள்வி எழுப்பினார்.
 
 
தொலைக்காட்சி நாடகங்களில் நடிகர்களுக்கு இடையே நடக்கும் நிக்காஹ் சடங்குகள் செல்லுபடியாகும் திருமணமாக கருதப்படுமா என்று விசாரித்தார்.
 
அதற்கு பதிலளித்த மதகுரு, "ஆம், நிச்சயமாக, இரண்டு சாட்சிகளுடன் ஒரு தொலைக்காட்சி நாடகக் காட்சியில் நிக்காஹ் நடத்தப்பட்டால், அது சரியான திருமணமாக கருதப்படும் என பதில் அளித்தார்.
 
அறிஞரின் கூற்றுப்படி, இரண்டு நடிகர்கள் ஒரு நாடகத்தில் நிக்காஹ் காட்சியை நடித்தால், அவர்களின் திருமணம் உண்மையில் செல்லுபடியாகும் என்று கருதப்படும்.
 
மத அறிஞரின் கூற்று பரவலான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது, பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் இந்த விஷயத்தை பேசி வருகின்றனர்.
 
 

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ் விபத்து : ஐவர் பலி

2 weeks 5 days ago

Published By: SETHU  27 MAR, 2024 | 06:06 PM

image
 

ஜேர்மனியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தபட்சம் ஐவர் பலியானதுடன் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளரன். 

லீப்ஸிக் நகரில் இந்த பஸ் கவிழ்ந்தது. 

ஜேர்மனியின் பேர்லின் நகரிலிருந்து சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரை நோக்கி இந்த பஸ் சென்றுகொண்டிருந்ததாக பிளிக்ஸ்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்படி பஸ்ஸில் 53 பயணிகளும் இரு சாரதிகளும் இருந்தனர் எனவும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் அந்நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/179843

Checked
Tue, 04/16/2024 - 05:14
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe