கவிதைக் களம்

அந்தாதிக் கவிதை / "நல்லதே நடக்கும்"

11 hours 51 minutes ago

அந்தாதிக் கவிதை / "நல்லதே நடக்கும்"

"நல்லதே நடக்கும் நன்மை செய்வோம் 
செய்வது எதுவும் பெருமை கூட்டட்டும் 
கூட்டுவதும் கழிப்பதும் இயற்கையின் விளையாட்டு    
விளையாடல் இல்லையேல் வாழ்வு இனிக்காது 
இனிப்பது எதிலும் கவனம் எடுத்திடு!"

"எடுத்த அடியை பின்னோக்கி வைக்காதே 
வைக்காதா தீர்வால் நேரத்தை வீணாக்காதே 
வீணாக்கும் எதுவுமே திரும்பி வராதே 
வராததை மறந்து செய்திடு நல்லது    
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

May be an image of 2 people and text

 

 

குப்பையிலிருந்து குப்பை

1 day 3 hours ago

குப்பையிலிருந்து குப்பை

---------------------------------------
நல்ல எழுத்தா...........
அதை யார் வாசிப்பார்கள்
ஏதாவது கேளிக்கையாக இருந்தால்
சொல் என்றோம்
 
முடிவு: இன்றைய எழுத்து எதுவும் நாளை நிற்காது.
 
கலைப் படமா..................
இருக்கிற பிரச்சனை போதாதா
ஜனரஞ்சகமா ஏதாவது வந்தால்
சொல் என்றோம்
 
முடிவு: வந்தது கங்குவா.
 
அரசியல்வாதியா............
அவர் நல்ல பகிடி
ஆளும் பார்க்க நல்லா இருக்கின்றார்
அவரே பிரதிநிதி என்றோம்
 
முடிவு: எல்லாமே பகிடி எதுவுமே வெற்றி இல்லை.
 
கருத்துச் சொல்கின்றாயா.........
அதெல்லாம் போதும்
ஏதாவது சிரிக்க சிரிக்க இருந்தால்
சொல் என்றோம்
 
முடிவு: தினம் ஒரு மீம்ஸ்.
 
அடுத்த தலைமுறையா............
அவர்கள் தான் உருப்படாதவர்கள் ஆயிட்டுதே
எல்லாமே போய் விட்டதே
இனி என்ன செய்வது என்கின்றோம்.
 
உள்ளே போவது தான்
வெளியே வருகின்றது.

"விழிகள் மீனோ மொழிகள் தேனோ"

1 day 7 hours ago

"விழிகள் மீனோ மொழிகள் தேனோ"

"விழிகள் மீனோ மொழிகள் தேனோ
பற்கள் முத்தோ இமைகள் சிப்பியோ 
கழுத்து சங்கோ மார்பு குடமோ 
முகம் நிலவோ நெற்றி பிறையோ
யான் அறியேன் அழகு மங்கையே  
உன்னைக் காண இதயம் துடிக்குதே 
உலகம் கூட எனக்கு வெறுக்குதே 
கண்ணே கரும்பே அருகில் வருவாயோ?"

"புருவம் வில்லோ நடை அன்னமோ 
கூந்தல் அறலோ இடை உடுக்கையோ
சாயல் மயிலோ மூக்கு குமிழாம்பூவோ      
தோள் மூங்கிலோ விரல் காந்தள்மலரோ   
வாலிப்பதை தூண்டி வலையில் வீழ்த்திட்டாயே  
ஆழ்ந்த ஆசையில் விண்ணில் பறக்கிறேனே
இனிய இசையும் இடியாய் கேட்குதே 
மானே மடமகளே நெருங்கி அணைக்காயோ?" 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

468214102_10227448239174428_8909910231798707960_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=wKoQ2qEs8-4Q7kNvgEAgDB7&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AV_RPbYquHUP9HXj0reCtsQ&oh=00_AYAbewTZO8HzlGDRqmqYH14j-4o0L1bR7bUYjm0Xc_XfHg&oe=67465CC9  467641629_10227448239214429_6924834547204829465_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=hjaCR6Xm9kUQ7kNvgHPKggp&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AV_RPbYquHUP9HXj0reCtsQ&oh=00_AYBVTSZ4J7SCOyeOYOav-OcRnkIT3HI4lSo8VE0dtjTNFA&oe=674655EF


 

"அன்பின் வடிவே அழைப்பது புரியாதா?"

2 days 12 hours ago

"அன்பின் வடிவே அழைப்பது புரியாதா?"

"அன்பின் வடிவே அழைப்பது புரியாதா  
பண்பின் இருப்பிடமே பழகியது தெரியாதா
அன்ன நடையாளே அருகினில் வருவாயா 
சின்ன இடையாளே சினம் மறவாயா   
மண்ணின் வாசனை அள்ளி வீசுபவளே          
வண்ணப் பூந்தென்றலே தோள் சாயவா?"

"உண்மையை உணர்ந்து உள்ளம் தாராயா 
கன்னக் குழிக்குள் என்னை வீழ்த்தாயா  
மின்னல் வேகத்தில் தோன்றி மறைபவளே      
எண்ணம் எல்லாம் என்றும் நீதானே!"  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

467608752_10227353730411768_7707264556277983325_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=jWKIWe5omdMQ7kNvgGqDvUk&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AoVQ6wJ45H-x8hptlZHOEic&oh=00_AYBj2BZehRXQSnW1rvb55uONsfksVwwfyzDjfZJAJt7_cQ&oe=6744AF4F 

 

நம்பிக்கை ஒளி தெரிகிறது!

2 days 14 hours ago

 

large.IMG_6014.jpg.03835757b7400ca5fdc5e9a83f92da13.jpg

நம்பிக்கை ஒளி தெரிகிறது!
********************************


பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து
பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி
புதுமுக வரவால் பொங்குது மண்றம்
பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம்.

குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை
குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை
கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை
கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை.

இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை
இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை
எனிவரும் காலம் பஞ்சமுமில்லை
எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை.

தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை
தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர்
போரின் அவலத்தை புரிந்ததேயில்லை
போன கதிரயை மறப்பதேயில்லை.

தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு
தென்றலாய் மண்றத்தில் தமிழால் விளையாடு
அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு
அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு.

அன்புடன் -பசுவூர்க்கோபி.
 

"உடற்பயிற்சி..." / தன்முனைக் கவிதை

4 days 13 hours ago

"உடற்பயிற்சி..." / தன்முனைக் கவிதை


"உடற்பயிற்சி மிகினும் குறையினும்
உடம்பு பாதிக்குமே!

உள்ளம் சீராகி தெளிவுபெறுவதும் 
உண்மை நன்மையே!"  
 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

May be an image of 4 people and text

 

குறள்மொழி இன்பம் / ★யாம்◆ வேண்டும்◆ கௌவை★ / குறள் 1150

5 days 12 hours ago
குறள்மொழி இன்பம் / ★யாம்◆ வேண்டும்◆ கௌவை★ / குறள் 1150
 
 
"வம்பு பேசும் என் ஊரே
வசனம் அறிந்து அளவாய் பேசு
வண்டுகள் மொய்க்கும் மலர் நானல்ல
வசவி ஆக என்னை நினைக்காதே!"
 
"வட்டம் போட்டு குந்தி இருந்து
வஞ்சம் இன்றி கதை பரப்பி
வதுகை ஆக என்னை மாற்ற
வரிந்து கட்டிய அலருக்கு நன்றி!"
 
"வயல் வெளியில் என்னை சந்திக்க
வனப்பு மிக்க என் காதலன்
வருவான் என்னை துணை ஆக்க
வருந்த வேண்டாம் வாழ்த்துங்கள் அப்பொழுது!"
 
"வளமான வாழ்வு எமக்கு அமைய
வரைவு கொள்ளலே நலம் என்று
வங்கணத்தி எமக்கு ஆதரவு தர
வழி காட்டிய பழிச்சொல் வாழ்க!"
 
"வரைவின் மகளிர் நான் அல்ல
வருணன் அருள் எமக்கு உண்டு
வந்தனம் கூறி தம்பதியாய் போவோம்
வயிறு ஆற சாப்பிட்டு போங்கள்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  
 
 
வசவி - தேவதாசி
வதுகை - மனைவி
வரைவின் மகளிர் - பொது மகளிர்
வரைவு - திருமணம்
வங்கணத்தி - உற்ற தோழி
275235863_10220687661404209_6114617608449581584_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=SuhzA8YtK5wQ7kNvgGPUZzv&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AhS8EGzF45XfewEOhfK0PYu&oh=00_AYBARut-BIhRGxpv_cKnFvUAr8dJrQUP39bfxdpDMTDw5g&oe=6740D202
 

மூடிய என் முகம்

1 week ago
மூடிய என் முகம்
--------------------------
என் முகமூடியை
எப்போதும்
நான் இறுகப் போட்டிருக்கின்றேன்
 
அறிவு தெரிந்த
அந்த நாளில் இருந்து
வீட்டில்
பாடசாலையில்
வெளியில்
வேலையில்
இந்த முகமூடி
எனக்கு அணியப்பட்டது
 
நானும் இதை விரும்பி ஏற்றேன்
ஆகக் குறைந்த ஒரு அடையாள
மறுப்பு கூட காட்டாமல்
 
போகுமிடம் எங்கும்
இருக்குமிடம் எங்கும்
கதைக்கும் இடம் எங்கும்
இதை இறுக்கிக் காக்கின்றேன்
 
இப்பொழுதெல்லாம்
சில தனிமைகளில்
அதை விலக்கி பார்க்கும் போது
பரிதாபப்படுகின்றேன் 
எனக்காக
 
தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று
ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி
அல்லது அகங்காரம் கொண்டு
பொது ஆளுமை ஒன்றைச் சூடி
முகத்தை மறைத்து 
முடிகின்றதே என்று.

அந்தாதிக் கவிதை / “தன்மானம்”

1 week 1 day ago

அந்தாதிக் கவிதை / “தன்மானம்”

 

"தன்மானம் தழைக்க தற்சார்பு ஓங்கும்
ஓங்கிய எண்ணம் மனதில் பதியும்
பதிந்த பெருமிதம் துணிவு தரும்
தருவது எதையும் தெரிந்து எடுப்போம்
எடுத்த கொள்கையில் திடமாய் நிற்போம்!"

"நிற்கும் ஒன்றில் வளர்ச்சி இருக்கும்
இருக்கும் ஒன்றை பேசுதல் சிறக்கும்
சிறக்கும் கருத்து எதிலும் உதவும்
உதவும் வாய்ப்புக்கள் தூக்கி ஏற்றிடும்
ஏற்றிடும் ஏணியாய் நிற்பதே தன்மானம்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

465726184_10227164661925174_7057556403388104028_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=8Ko74-IESJUQ7kNvgFfU1d4&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AJi1nzRJGUCBtc7aaOoker4&oh=00_AYAFCdOj8PkECwoHO8eDc0lzbBVVKQPI_LEGy_tiKons3Q&oe=673CBEB7

பூச்சிய மாற்றம்

1 week 2 days ago

பூச்சிய மாற்றம்

---------------------------
வீட்டுக் கதவினூடு வெளியேறியதும்
இன்னொரு நாடு வருகின்றது
 
எத்தனை தடவைகள்
கதவைத் திறந்து
நான் போய் வந்தாலும்
அது பழக்கமில்லாத இடமாகவே இருக்கின்றது
 
அதனூடு என் நாட்டிற்கு போய்
என்னவர்களுடன் நான் 
வட்டமாக இருக்கின்றேன்
விளையாடுகின்றேன்
சிரிக்கின்றேன்
 
சில வேளைகளில்
நாங்கள் சேர்ந்து  அழுவதும் உண்டு
 
மீண்டும் அதே பாதையில்
அந்த நாட்டை கடந்து
வீட்டின் கதவை திறந்து
உள்ளே வந்ததும்
இது தான் என் இடம் என்று
மீண்டும் நிமிர்கின்றேன்
 
வீட்டினுள் இருந்து
மாற்றம் ஒன்றே மாறாதது
மாறுங்கள் மாறுங்கள் 
என்று எழுதிக் குவிக்கின்றேன்
 
என் எழுத்து கூட
அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை.

"வாராயோ வான்மதியே"

1 week 3 days ago

"வாராயோ வான்மதியே"

 

"வாராயோ வான்மதியே கண்டாயோ என்னவளை 
தீராத காதலில் வருந்துவது தெரியாதோ? 
தாராயோ நிம்மதி உன்னிடம் கேட்கிறேனே
மாறாத அன்பில் இன்னும் அலைகிறேனே
ஆறாத காயங்களின் வலியில் தவிக்கிறேனே  
பாராயோ என்னைக் கருணை காட்டாயோ?"  

 

"வெண்ணிலாவின் ஒளியிலே அவளைத் தேடுகிறேனே
கண்கள் இரண்டும் சோர்வு அடைகிறதே 
மண்ணின் வாழ்வை முடிக்கும் முன்பே  
பெண்ணே மன்னித்து என்னை அணைக்காயோ?"   
 

 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

466856486_10227114945842303_482168455671376954_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=xaZFnOUQBQUQ7kNvgENVu-2&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=ALuUppJYyIS8TcN9sQwR1fg&oh=00_AYDz2bl5PAPFnzBOhYA6N6qTB-aFn3QQjVpOoyTuey5KBg&oe=673A2325

"அலையாடும் அழகு"

1 week 4 days ago
"அலையாடும் அழகு"
 
 
"அலையாடும் அழகு குமரியின் வனப்பே
விலையற்ற அவளின் கவர்ச்சிச் சிரிப்பே!
உலை வைக்கும் மங்கையின் கண்ணே
அலை எடுத்து எவரையும் மயக்குமே!"
 
"சேலைத் தாவணியில் மனதைக் கவருதே
மாலை அணிந்த அணங்கின் வடிவமே!
சோலை நடுவில் எழில் பொழியுதே
கலை மகளின் அன்புத் தோற்றமே!"
 
"தலை முடி தோளை வருடவே
சிலை போல அழகாய் நிற்கிறாளே!
வாலைப் பருவம் தாண்டிய தருணியே
தலைவனைக் காண ஏக்கம் எனோ?"
 
"நிலை தடுமாற்றம் தரும் தையலே
குலைந்து வீழ்த்தும் அணங்கும் நீயோ!
ஓலை மடலில் எழுதும் கவிதையோ
வலையில் சிக்கா மானும் நீயோ!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
May be an image of 1 person, smiling and text

மண்டியிடும் மன்னர்கள்

1 week 4 days ago
மண்டியிடும் மன்னர்கள்
-------------------------------------
இரண்டு சிறு குழந்தைகளுடன்
இருவர் நாங்கள்
இந்த வீட்டிற்கு
அநேக வருடங்களின் 
முன்னொரு நாள் குடி வந்தோம்
 
பன்னிரண்டு வீடுகள்
உள்ள தெருவில்
பதினொரு மன்னர்கள் 
குடி இருந்தனர்
 
சில மன்னர்கள் பேசினர்
சிலர் வெறும் புன்னகை மட்டும்
சிலர் எங்களைக் காணவேயில்லை
 
அடைமழை நாளென்றில்
கடும் காற்றில்
என் முன் நின்ற பெரும் மரம்
காற்றின் முன் மண்டியிட மறுத்து
முறிந்து விழுந்தது
 
மன்னர்கள் ஓடி வந்தனர்
 
அவர்கள் வீடுகளுக்கும் சேதமில்லை
என் வீட்டிற்கும் சேதமில்லை
எல்லோரும் மீண்டும் போய் விட்டனர்
வந்த வழியே
 
ஓங்கி வளர்ந்து
உள்ளே ஆழ வேர் விட்டு
நித்தியம் என்று நின்ற மரங்களே 
பொத்தென்று விழ
இங்கே மன்னர்கள் மட்டும்
நிலைக்கவா போகின்றார்கள்
 
மூப்பும்
நோயும்
பிணியும்
பிரிவும்
காலத்தில் வர
 
அவர்கள் எவ்வளவு மண்டியிட்டும்
காலம் விடவில்லை
பதினொரு மன்னர்களையும்
 
மாமன்னன் அலெக்சாண்டரே
கடைசியில் மண்டியிட்டாராம்
 
இந்த தெருவில்
இப்போது நான் ஒரு மன்னன்.

"வண்ணங் கொண்ட வெண்ணிலவே"

1 week 6 days ago

"வண்ணங் கொண்ட வெண்ணிலவே"

"வண்ணங் கொண்ட வெண்ணிலவே வாராயோ 
கண்கள் இரண்டும் காணத் துடிக்குதே! 
மண்ணின் வாசனை உடையில் தெரியுதே 
பண்பின் இருப்பிடமே வாழ்த்தி வணங்குகிறேன்!" 

"அன்ன நடையில் மனத்தைக் கவர்ந்தவளே 
சின்ன இடையில் கலக்கம் தந்தவளே!  
என்னை மறந்து உலகம் துறந்து  
உன்னை அடைய விரும்பியது எனோ?" 

"ஏராளம் பூவையரை நான் முகர்ந்தாலும்    
ஏமாற்றம் இல்லா நடத்தை கொண்டவளே! 
ஏற்றவள் எனக்கு நீயென நான்        
ஏதேதோ எண்ணி ஏங்குவது ஏன்!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

465453592_10227042620114205_423318788928610508_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=OhA5SGKJrOgQ7kNvgFe3LLi&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AF_HPny7-HIlIVNGxIh1jJ0&oh=00_AYCcpcsb0aYb6KX73Iviq0k6aWbgfB-Swseppv3Sz1gnWA&oe=67364E34

 

புல்லை வெட்டுங்கோ

1 week 6 days ago

புல்லை வெட்டுங்கோ

----------------------------------
நாலு நாள் ஆகிவிட்டது
ஒவ்வொரு குழாயின் கீழும்
அண்டா குண்டா என்று வைத்து
 
தேனும் பாலும்
இனி வீடு தேடி வரும் என்றனர்
 
வைத்த
அண்டாவும் குண்டாவும்
அப்படியே
காத்து வாங்கிக் கொண்டு
காத்துக் கிடக்கின்றன
 
தேன் எப்ப வரும்
பால் எப்ப வரும் என்று
கொஞ்சம் முன்னரே சொன்னால்
தனி தனியே பிடித்து
வீடு முழுக்க வைத்துக் கொள்வேன்
 
எட்டு வருடம் முந்தியும்
வரும் வரும் என்றீர்கள்
வரவே இல்லை
கடைசி மட்டும்
 
பின்னர் நீங்கள் போய் விட்டீர்கள்
 
இப்ப வந்து விட்டீர்கள்
 
இந்த தடவை என்றாலும்
ஓட விடுங்கள் பாலையும் தேனையும்
 
'ரெண்டு கிழமையா புல்லு வெட்டல்ல
புல்லை வெட்டுங்கோ...........'
உள்ளிருந்து வந்தது
எப்பவும் அன்பாக அதட்டும்
ஒரே குரல்
 
கற்பனை கலைந்தது.

"ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா"

2 weeks ago
"ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா"
 
 
"ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா
ஒளியில் மிளிர்ந்து அழகைக் காட்டி
ஒலி எழுப்பும் வண்டைப் பார்த்து
ஒய்யாரி கேட்குது நீ யார் ?"
 
"துள்ளி பாயும் காட்டு மான்
துணையுடன் மறைவில் ஒளிந்து இருந்து
துரத்தி வந்த புலியைப் பார்த்து
துணிந்து கேட்குது நீ யார் ?"
 
"வாமச் சொரூப கோழிக் குஞ்சு
வாட்டம் கொண்டு நிழலில் பதுங்கி
வானத்தில் வட்டமிடும் கழுகைப் பார்த்து
வாக்குவாதம் செய்யுது நீ யார் ?"
 
"மாணவி ஒருவள் கண்ணீர் வடிய
மாதா வாக்கிய குருவை நொந்து
மாழை மடபெண் வெட்கத்தை விட்டு
மாசுபடுத்தியவனைக் கேட்குது நீ யார் ?"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
வாமச் சொரூப - அழகு மேனி
மாழை மட பெண் - இளமையும், மடமையும் உள்ள பெண்
245370765_10220019595262973_1107466760090450125_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=Q4adydoxFBEQ7kNvgH5UDYi&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AfGsfGm6cfOGBz8XtyQvnha&oh=00_AYCkVp65v2LYNde6acAA35L835GUlcVKUuDQWsFg1PbYRw&oe=6734E084 245505652_10220019597623032_596097259441538697_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=gRUHUTs1vGEQ7kNvgFdWmjU&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AfGsfGm6cfOGBz8XtyQvnha&oh=00_AYBknLcPXikqcMuHOOZRpuYsDmZ4sVBC5HV7JTFStzeBUA&oe=6734F092
 

"தாய்மை" 

2 weeks 2 days ago

"தாய்மை" 

"காதல் உணர்வில் இருவரும் இணைய 
காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற
காதலன் காதலி இல்லம் அமைக்க
காமப் பசியை மகிழ்ந்து உண்ண
காலம் கனிந்து கருணை கட்டிட  
காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

465062590_10226982539972239_7903577297378136264_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=ZZRkTmpwcsgQ7kNvgHZozpu&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A71y2cBRSJEzC3VGVjUYDwC&oh=00_AYAVmSlYJRrnM-iiV6LIB0X_YcghKZkFcqJ-YdTD-zZdRA&oe=6732ECD7

"முகநூல்"

2 weeks 3 days ago
"முகநூல்"
 
 
"முகநூல் படும்பாடு தலையை சுற்றுது
முகர்ந்து பார்க்கினம் காமம் தேடி
முகத்தை ரசிக்கினம் காதல் நாடி
முழுதாய் அலசினம் நட்பு வேண்டி"
 
"முத்து முத்தான அறிவும் அங்குண்டு
முழக்கம் இடும் கவிதைகளும் உண்டு
முடங்க வைக்கும் போலிகளும் அங்குண்டு
முடிந்தவரை ஏமாற்றிக் கறப்பவரும் உண்டு"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
May be an image of 2 people and text 268110683_10220312459864405_3014033316382524770_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=NOQ62aU8BhUQ7kNvgH-oXRR&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AcsgXPfoM1VtVCtb1Sd4vKt&oh=00_AYA3jznEnBJ1XAJDvwNR5q5IQzMgrVObEMoMaNbydz_00A&oe=67311B20

'பாட்டு படித்து வாழ்த்து கூறினேன்'

2 weeks 4 days ago

'பாட்டு படித்து வாழ்த்து கூறினேன்'

 
"ஒட்டாவா நகரில் காலை பொழுதில்
கேட்காத இனிமை காதில் ஒலித்தது
வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது
மொட்டு விரிந்து வாசனை தந்தது"

"சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி
பாட்டன் கையை மெல்ல பிடித்து
வட்ட மிட்டு துள்ளி குதித்து
முட்டி மோதி இன்பம் பொழிந்தது"

"மெட்டி ஒலி காற்றோடு கலக்க
பாட்டு படித்து இனிமை காட்டும்
குட்டி பாட்டி மழலையில் மகிழ்ந்து
எட்டு திக்கும் துள்ளி குதித்தேன்"

"சொட்டு சொட்டாய் விழும் மழையில்
பட்டும் படாமலும் நனைந்து விளையாடி  
நீட்டி நிமிர்ந்து வாங்கில் படுத்து  
லூட்டி அடித்து சிரித்து மகிழ்ந்தோம்"

"ஒட்டி உறவாடும் அன்பு மழலைக்கு   
வெட்டி பேச்சு பட்டாம் பூச்சிக்கு
மொட்டாய், மலரா குட்டி பெண்ணுக்கு  
நட்சத்திரம் சிமிட்ட நானும் போற்றினேன்" 

"கட்டி அனைத்து முத்தம் கொடுத்து
தட்டி கொடுத்து உற்சாகப் படுத்தி
ஒட்டி உடை அழகு தேவதைக்கு
பாட்டு படித்து வாழ்த்து கூறினேன்"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

288542976_10221193232923181_325096476497049692_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=Dx1zTwaih_gQ7kNvgGbXrBj&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AtZVwF9OWcd8vVnEUX33FJw&oh=00_AYCeUD21t6JDZR7FU2oDlivUDKsNP7IKHpWrou99TBHyJA&oe=672FCB4E

 

Checked
Sat, 11/23/2024 - 18:13
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/