Aggregator

வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’

1 month 1 week ago
வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’ -தயாளன், மம்மூட்டியின் அபார நடிப்பில் வந்துள்ளது ‘பிரமயுகம்’. 17-ஆம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்கு முறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவின் தொன்மங்களையும், மாந்திரீகங்களையும், ஒடுக்குமுறை அரசியலையும் நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்; கேரளாவின் எல்லா திரையரங்குகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல், விமர்சகர்களின் கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் கிளாசிக் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பை பிரமயுகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 17- ஆம் நூற்றாண்டில் தெற்கு மலபாரில் நடக்கும் கதை. பாணன் ஒருவர் ஆற்றைக் கடப்பதற்காக முயலும் போது வழி தவறி உயர்சாதியைச் சார்ந்த கொடுமோன் போட்டி என்பவரின் தரவாட்டுக்கு (உயர் சாதியினர் வீடு) வந்து விடுகிறார். கொடுமோன் போட்டி பாணனை பாடச் சொல்கிறார். அவனது இசையில் மயங்கியவர், பாணனை தன்னுடைய வீட்டிலேயே தங்கச் சொல்கிறார். தயங்கினாலும் பிறகு பாணன் சம்மதிக்கிறார். அந்த வீட்டில் போட்டியைத் தவிர ஒரு சமையல்காரர் மட்டுமே இருக்கிறார். ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பாணன் அந்த வீட்டில் தங்கும் போது பல அமானுஷ்யமான நிகழ்வுகளைப் பார்க்கிறார். சமையல்காரன், பாணனிடம் போட்டியை நம்பாதே என்கிறான். அதனால் மனம் குழம்பிப் போகிறான் பாணன். பகடை விளையாட அழைக்கிறான் போட்டி. அதில், தோற்றதால் தனக்கு அடிமையாக இங்கேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறான். ஒரு சிலந்தியைப் போல வலையில் சிக்கிக் கொள்ளும் பாணன் அந்த வீட்டிலிருந்து வெளியேற முயல்கிறான். என்ன நடந்தது? என்பது கிளைமாக்ஸ். இந்த எளிய கதையை வைத்துக் கொண்டு, மூன்றே மூன்று கதாபாத்திரங்களின் மூலம் ஒரு முழு நீள சினிமாவில் நம்மைக் கட்டிப் போடுகிறார் இயக்குனர் ராகுல் சதாசிவன். மொத்தக் கதையும் பெரும்பாலும் ஒரு வீட்டிற்குள்ளே மட்டுமே நடக்கிறது. ஆனால், நேர்த்தியான திரைக்கதையால் பார்வையாளர்களுக்கு சினிமா அனுபவத்தை தருகிறார். படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு மற்ற வண்ணங்கள் தேவையில்லை என்ற முடிவு எடுத்ததிலேயே வெற்றி பெறுகிறார் ராகுல். கதையின் ஊடாக நமக்கு காட்டப்படும் 17ம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்குமுறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவுக்கே உரித்தான தொன்மங்களையும் மாந்திரீக நடைமுறைகளையும் ஒடுக்குமுறை அரசியலையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தின் வசனங்கள் நறுக்கென்று வெளிப்படுகின்றன. ஒரு ‘ஹாரர்’ படத்தில் நுட்பமான கலை அம்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், இயக்குனர். படத்தின் முக்கிய கதாபாத்திரமான கொடுமோன் போட்டி பாத்திரத்தில் அனாயசமாக நடித்திருக்கிறார் மம்மூட்டி. அவரின் நடையும், கூர்ந்த பார்வையும், அச்சத்தை தரும் அவரது எகத்தாள சிரிப்பும் நம்மை பயத்தில் உறைய வைக்கின்றன. எப்பேர்பட்ட நடிகன் மம்மூட்டி என்பதை முதல் ஷாட்டிலேயே காட்டி விடுகிறார். அந்த வீடு முழுக்க எதிரொலிக்கும் அவரது அமானுஷ்யமான அந்தச் சிரிப்பு திரையரங்கு முழுவதும் நிசப்தத்தை தருகிறது. போட்டி என்ற அவரது தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். இவரை விட்டால், வேறு யாரையும் அந்த கேரக்டருக்கு நினைத்துப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தை உருவாக்குகிறார். பாணனாக வரும் அர்ஜூன் அசோகன் நடிப்பில் மம்மூட்டிக்கு சவால் விடுகிறார். ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்தவர் என்பதால் அவர் காட்டும் ஒடுக்கமான உடல் மொழி, தயங்கி தயங்கி பேசுவது, அமானுஷ்யங்களை காணும் போது, திடுக்கிட்டு குழம்புவது என்று அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒரு வேட்டி மட்டுமே உடை. அவரின் கண்களில் காணும் மிரட்சியும், பயமும் நமக்கும் தொற்றிக் கொள்கின்றன. இன்னொரு பாத்திரமான சமையல்காரனாக சித்தார்த். மம்மூட்டியுடன் முரண்படும் போதும், அலட்சியமாக பாணனை நடத்தும் போதும் மிக நிதானமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் தூண் எனில், அது ஒளிப்பதிவு தான். படம் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளை வண்ணங்களில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கதைக்கு தேவையான ஒரு உணர்வு நிலையை இதுவே உருவாக்கி விடுகிறது. கருப்பு வெள்ளை என்பதால் பார்வையாளருக்கு சிதறல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. கதாபாத்திரங்களின் உணர்வுகளின் மீது நமது கவனம் முழுமையாக குவிகிறது. குறிப்பாக அவர்களின் கண்களின் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது. படம் முழுக்க ஒரே வீட்டிற்குள் நடந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்படும் கோணங்களும், ஒளியமைப்பும் புத்துணர்வைத் தருகின்றன. மிக மெதுவாக நகரும் காட்சிகளின் மூலம் அந்தந்த காட்சிகளின் அழுத்தத்தை அதிகரிக்கிறார். படத்தின் இசையும், ஒலிக் கோர்ப்பும் அற்புதமாக அமைந்திருக்கின்றன. சிறு சிறு ஓசைகளை கூட துல்லியமாக பதிவு செய்திருப்பதன் மூலம் அமானுஷ்யத்தை உணர்த்துகிறார்கள். பாணன் பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கின்றன. ஹாரர் படம் என்பதற்காக திடுக்கிட வைக்கும் ஒலிகளோ, இசையோ இல்லாமல், இயல்பாக காட்சியோடு இணைந்திருக்கின்றன. படத்தின் கொண்டாடப்படப் வேண்டிய இன்னொரு அம்சம் கலை இயக்கமும், ஒப்பனையும். பழைய கால தரவாட்டு வீட்டை அதன் புழங்கு பொருள்களோடு, உருவாக்கி இருக்கிறார்கள். சின்னச் சின்ன பொருட்களில் கூட அவ்வளவு மெனக்கெடலை நிகழ்த்தி இருக்கிறார்கள். ‘பாதாள அறைகளும், மாடங்களும், நெல் குதிர்களும், மதுப் பானைகளும் கலை இயக்கம் என்ற ஒன்று நிகழ்ந்தது போலவே இல்லை’ என்ற நேர்த்தியை கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தொகுப்பு காட்சியோடும், ஒலியோடும், இசையோடும் இணைந்து ஒரு ரிதத்தை உருவாக்கி இருக்கிறது. ‘திடுக் திடுக்’ என்று ‘ஜம்ப் கட்’களை செய்து செயற்கையான திகிலை உருவாக்காமல், மொத்த திரைக் கதையின் நீட்சியாக அமானுஷ்யத்தை ஒரு அனுபவமாக நமக்குள் செலுத்துகிறது எடிட்டிங். படத்தில் பத்து பேர் நடித்திருந்தாலும், மூன்றே மூன்று கதாபாத்திரங்களை வைத்து ஒரு தொன்மம் சார்ந்த கதையை வரலாற்று பின்புலத்தில் திகில் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகுல். நடிகர் மம்மூட்டிக்கு இது ஒரு வாழ்நாள் சாதனைப் படம். மாபெரும் அனுபவத்தை தரும் பிரமயுகம், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. https://aramonline.in/16772/brahumayugam-cinema-review/

வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’

1 month 1 week ago
வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’ -தயாளன்,
Mammootty-in-Bramayugam-Movie-Review-1.j

மம்மூட்டியின் அபார நடிப்பில் வந்துள்ளது ‘பிரமயுகம்’.  17-ஆம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்கு முறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவின் தொன்மங்களையும், மாந்திரீகங்களையும், ஒடுக்குமுறை அரசியலையும்  நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்;

கேரளாவின் எல்லா திரையரங்குகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல், விமர்சகர்களின் கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் கிளாசிக் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பை பிரமயுகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

17- ஆம் நூற்றாண்டில் தெற்கு மலபாரில் நடக்கும் கதை. பாணன் ஒருவர் ஆற்றைக் கடப்பதற்காக முயலும் போது வழி தவறி உயர்சாதியைச் சார்ந்த கொடுமோன் போட்டி என்பவரின் தரவாட்டுக்கு (உயர் சாதியினர் வீடு) வந்து விடுகிறார்.  கொடுமோன் போட்டி பாணனை பாடச் சொல்கிறார். அவனது இசையில் மயங்கியவர், பாணனை தன்னுடைய வீட்டிலேயே தங்கச் சொல்கிறார். தயங்கினாலும் பிறகு பாணன் சம்மதிக்கிறார்.  அந்த வீட்டில் போட்டியைத் தவிர ஒரு சமையல்காரர் மட்டுமே இருக்கிறார்.   ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பாணன் அந்த வீட்டில் தங்கும் போது பல அமானுஷ்யமான நிகழ்வுகளைப் பார்க்கிறார்.

சமையல்காரன், பாணனிடம் போட்டியை நம்பாதே என்கிறான். அதனால் மனம் குழம்பிப் போகிறான் பாணன். பகடை விளையாட அழைக்கிறான் போட்டி. அதில், தோற்றதால் தனக்கு அடிமையாக இங்கேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறான்.  ஒரு சிலந்தியைப் போல வலையில் சிக்கிக் கொள்ளும் பாணன் அந்த வீட்டிலிருந்து வெளியேற முயல்கிறான். என்ன நடந்தது? என்பது கிளைமாக்ஸ்.

Bramayugam-is-set-in-17th-century-Kerala
 

இந்த எளிய கதையை வைத்துக் கொண்டு, மூன்றே மூன்று கதாபாத்திரங்களின் மூலம் ஒரு முழு நீள சினிமாவில் நம்மைக் கட்டிப் போடுகிறார் இயக்குனர் ராகுல் சதாசிவன்.  மொத்தக் கதையும் பெரும்பாலும் ஒரு வீட்டிற்குள்ளே மட்டுமே நடக்கிறது. ஆனால், நேர்த்தியான திரைக்கதையால் பார்வையாளர்களுக்கு சினிமா அனுபவத்தை தருகிறார். படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு மற்ற வண்ணங்கள் தேவையில்லை என்ற முடிவு எடுத்ததிலேயே வெற்றி பெறுகிறார் ராகுல்.

கதையின் ஊடாக நமக்கு காட்டப்படும் 17ம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்குமுறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவுக்கே உரித்தான தொன்மங்களையும் மாந்திரீக நடைமுறைகளையும் ஒடுக்குமுறை அரசியலையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தின் வசனங்கள் நறுக்கென்று வெளிப்படுகின்றன. ஒரு ‘ஹாரர்’ படத்தில் நுட்பமான கலை அம்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், இயக்குனர்.

1500x900_1604349-brahmayugam-06-1.png
 

படத்தின் முக்கிய கதாபாத்திரமான கொடுமோன் போட்டி பாத்திரத்தில் அனாயசமாக நடித்திருக்கிறார் மம்மூட்டி.  அவரின் நடையும், கூர்ந்த பார்வையும், அச்சத்தை தரும் அவரது எகத்தாள சிரிப்பும் நம்மை பயத்தில் உறைய வைக்கின்றன. எப்பேர்பட்ட நடிகன் மம்மூட்டி என்பதை முதல் ஷாட்டிலேயே காட்டி விடுகிறார். அந்த வீடு முழுக்க எதிரொலிக்கும் அவரது அமானுஷ்யமான அந்தச் சிரிப்பு திரையரங்கு முழுவதும் நிசப்தத்தை தருகிறது. போட்டி என்ற அவரது தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். இவரை விட்டால், வேறு யாரையும் அந்த கேரக்டருக்கு நினைத்துப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தை உருவாக்குகிறார்.

பாணனாக வரும் அர்ஜூன் அசோகன் நடிப்பில் மம்மூட்டிக்கு சவால் விடுகிறார். ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்தவர் என்பதால் அவர் காட்டும் ஒடுக்கமான உடல் மொழி, தயங்கி தயங்கி பேசுவது, அமானுஷ்யங்களை காணும் போது, திடுக்கிட்டு குழம்புவது என்று அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒரு வேட்டி மட்டுமே உடை. அவரின் கண்களில் காணும் மிரட்சியும், பயமும் நமக்கும் தொற்றிக் கொள்கின்றன.

maxresdefault-2-1.jpg
 

இன்னொரு பாத்திரமான சமையல்காரனாக சித்தார்த். மம்மூட்டியுடன் முரண்படும் போதும், அலட்சியமாக பாணனை நடத்தும் போதும் மிக நிதானமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் தூண் எனில், அது ஒளிப்பதிவு தான்.  படம் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளை வண்ணங்களில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது.  இந்த கதைக்கு தேவையான ஒரு உணர்வு நிலையை இதுவே உருவாக்கி விடுகிறது. கருப்பு வெள்ளை என்பதால் பார்வையாளருக்கு சிதறல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. கதாபாத்திரங்களின் உணர்வுகளின் மீது நமது கவனம் முழுமையாக குவிகிறது. குறிப்பாக அவர்களின் கண்களின் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது. படம் முழுக்க ஒரே வீட்டிற்குள் நடந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்படும் கோணங்களும், ஒளியமைப்பும் புத்துணர்வைத் தருகின்றன. மிக மெதுவாக நகரும் காட்சிகளின் மூலம் அந்தந்த காட்சிகளின் அழுத்தத்தை அதிகரிக்கிறார்.

Bramayugam1708223238792.jpg
 

படத்தின் இசையும், ஒலிக் கோர்ப்பும் அற்புதமாக அமைந்திருக்கின்றன. சிறு சிறு ஓசைகளை கூட துல்லியமாக பதிவு செய்திருப்பதன் மூலம் அமானுஷ்யத்தை உணர்த்துகிறார்கள்.  பாணன் பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கின்றன. ஹாரர் படம் என்பதற்காக திடுக்கிட வைக்கும் ஒலிகளோ, இசையோ இல்லாமல், இயல்பாக காட்சியோடு இணைந்திருக்கின்றன. படத்தின் கொண்டாடப்படப் வேண்டிய இன்னொரு அம்சம் கலை இயக்கமும், ஒப்பனையும். பழைய கால தரவாட்டு வீட்டை அதன் புழங்கு பொருள்களோடு, உருவாக்கி இருக்கிறார்கள்.  சின்னச் சின்ன பொருட்களில் கூட அவ்வளவு மெனக்கெடலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.  ‘பாதாள அறைகளும், மாடங்களும், நெல் குதிர்களும், மதுப் பானைகளும் கலை இயக்கம் என்ற ஒன்று நிகழ்ந்தது போலவே இல்லை’ என்ற நேர்த்தியை கொண்டு வந்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பு காட்சியோடும், ஒலியோடும், இசையோடும் இணைந்து ஒரு ரிதத்தை உருவாக்கி இருக்கிறது. ‘திடுக் திடுக்’ என்று ‘ஜம்ப் கட்’களை செய்து செயற்கையான திகிலை உருவாக்காமல், மொத்த திரைக் கதையின் நீட்சியாக அமானுஷ்யத்தை ஒரு அனுபவமாக நமக்குள் செலுத்துகிறது எடிட்டிங்.

படத்தில் பத்து பேர் நடித்திருந்தாலும், மூன்றே மூன்று கதாபாத்திரங்களை வைத்து ஒரு தொன்மம் சார்ந்த கதையை வரலாற்று பின்புலத்தில் திகில் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகுல். நடிகர் மம்மூட்டிக்கு இது ஒரு வாழ்நாள் சாதனைப் படம். மாபெரும் அனுபவத்தை தரும்  பிரமயுகம், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
 

 

https://aramonline.in/16772/brahumayugam-cinema-review/

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

1 month 1 week ago
இன்று வெளியாகிறது ஐபிஎல் அட்டவணை ManjulaFeb 22, 2024 12:11PM ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடரின் அட்டவணை இன்று (பிப்ரவரி 22) மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வருகின்ற மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி முதல் 15 நாட்களுக்கான ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியாகவிருக்கிறது. அடுத்த அட்டவணை நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் வெளியாகும். ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே மாதம் 26-ம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் வழக்கம்போல சென்னை அணி களமிறங்குகிறது. எதிர்த்து ஆடுவது யாரென்பது தெரியவில்லை. அநேகமாக குஜராத் அல்லது பெங்களூர் அணி எதிர்த்து ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் தொடக்க விழாவில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கோப்பையை எடுத்து வந்து ஒப்படைப்பார். இதையடுத்து தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடும். நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் கூட டி2௦ உலகக்கோப்பை தொடரால், ஐபிஎல் தொடரை தள்ளிப்போடும் சூழ்நிலை தற்போது இல்லை. இதனால் தான் ஐபிஎல் போட்டிகளை முன்னதாகவே நடத்திட பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் வெளிநாடுகளில் போட்டியை நடத்திட பிசிசிஐ துளியும் விரும்பவில்லை. வீரர்களும் ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் தான் ஆடிட விரும்புகின்றனர். எனவே இந்தாண்டு ஐபிஎல் தொடர் முழுவதுமே இந்தியாவில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/sports/bcci-to-release-ipl-2024-schedule-on-february-22-at-5-pm/

யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை

1 month 1 week ago
எல்லாம் எங்கன்ட கையில் தான் இருக்கு....டொலரை விசுக்கியெறிந்தால் வருவினம்...நாஙளும் பார்த்த மாதிரி இருக்கும்....முருகனும்..... நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய புண்ணியமும் கிடைக்கும் ...சிங்கள மக்களின் வ் ருவாய் அதிகரிக்கும் இதனால் அவர்கள் தமிழ் பிபில் மீது லவ் வந்து எங்களுக்கு உரிமையும் தருவினம்

உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு

1 month 1 week ago
உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு உக்ரைன் மீது ரஷியா தனது முழு அளவிலான ராணுவ நடவடிக்கையை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான போலந்து, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து, உக்ரைனில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், உக்ரைனுக்கு ஆயுதங்களையும் வழங்கியது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வதால் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போலந்து விவசாயிகள் குற்றம்சாட்டி போராடத் தொடங்கியதில் இருந்து பிரச்சினை உருவானது. இந்த விவகாரம் நாளுக்குநாள் வலுத்து, பெரிய அளவில் வெடித்துள்ளது. நேற்று முன்தினம் போலந்து விவசாயிகள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். உக்ரைனுக்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளையும் மறித்து போக்குவரத்தை தடை செய்தனர். அத்துடன் சிலர் ரஷிய அதிபர் புதினுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இந்த செயல் உக்ரைனின் கோபத்தை தூண்டும் வகையில் அமைந்தது. இதையடுத்து போலந்து விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசுவதற்காக போலந்து தலைவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:- இரு நாடுகளின் விவசாயிகளும் ஒருவரையொருவர் அவமதிக்கக்கூடாது. நாம் ஒற்றுயாக இருக்க வேண்டும். நம்மிடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும். உக்ரைன் மற்றும் போலந்து இடையே மட்டுமல்லாமல் முழு ஐரோப்பா அளவிலும் தீர்வு தேவை. விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக விவாதித்து தீர்வு காண்பதற்காக எல்லையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டு நிறைவடைய (பிப்ரவரி 24) உள்ள நிலையில், அதற்கு முன்னதாக போலந்து பிரதமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஆகியோருடனான சந்திப்பு நடைபெறும் என நம்புகிறேன். இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம். இவ்வாறு அவர் கூறினார். https://akkinikkunchu.com/?p=269216

உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு

1 month 1 week ago
உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு 8-17.jpg

உக்ரைன் மீது ரஷியா தனது முழு அளவிலான ராணுவ நடவடிக்கையை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான போலந்து, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து, உக்ரைனில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், உக்ரைனுக்கு ஆயுதங்களையும் வழங்கியது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வதால் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போலந்து விவசாயிகள் குற்றம்சாட்டி போராடத் தொடங்கியதில் இருந்து பிரச்சினை உருவானது. இந்த விவகாரம் நாளுக்குநாள் வலுத்து, பெரிய அளவில் வெடித்துள்ளது. நேற்று முன்தினம் போலந்து விவசாயிகள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். உக்ரைனுக்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளையும் மறித்து போக்குவரத்தை தடை செய்தனர். அத்துடன் சிலர் ரஷிய அதிபர் புதினுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இந்த செயல் உக்ரைனின் கோபத்தை தூண்டும் வகையில் அமைந்தது.

இதையடுத்து போலந்து விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசுவதற்காக போலந்து தலைவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:-

இரு நாடுகளின் விவசாயிகளும் ஒருவரையொருவர் அவமதிக்கக்கூடாது. நாம் ஒற்றுயாக இருக்க வேண்டும். நம்மிடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும். உக்ரைன் மற்றும் போலந்து இடையே மட்டுமல்லாமல் முழு ஐரோப்பா அளவிலும் தீர்வு தேவை. விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக விவாதித்து தீர்வு காண்பதற்காக எல்லையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டு நிறைவடைய (பிப்ரவரி 24) உள்ள நிலையில், அதற்கு முன்னதாக போலந்து பிரதமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஆகியோருடனான சந்திப்பு நடைபெறும் என நம்புகிறேன். இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

https://akkinikkunchu.com/?p=269216

ஜீவனின் வளர்ச்சி மனோவிற்கு எரிச்சல், அதனாலேயே புலம்பல்

1 month 1 week ago
ஜீவனின் வளர்ச்சி மனோவிற்கு எரிச்சல், அதனாலேயே புலம்பல் - இது காழ்ப்புணர்ச்சி - வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் PrashahiniFebruary 22, 2024 ஒரு இளம் அரசியல் தலைவராக மக்களுக்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றிவருவதால், அரசியலில் தாம் காணாமல் போய்விடுவோம் என்ற பீதியிலேயே அவர் மீது சில எதிரணி மலையக அரசியல்வாதிகள் விமர்சனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது காழ்ப்புணர்ச்சி – வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். வீட்டுரிமையையும், காணி உரிமையையும் வைத்து இதுவரை அரசியல் நடத்திவந்தவர்கள், இவ்விரண்டு உரிமைகளையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துவிட்டால், தாம் அரசியலில் அநாதையாகிவிடுவோம் என்ற அச்சம் அவர்களை ஆட்கொள்ள தொடங்கியுள்ளது. அதனால்தான் புலம்ப ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது, ஆக 7 பேர்ச்சஸா அல்லது 10 பேர்ச்சஸா என கோமாளி அரசியல்வாதிகள் குழப்பமடைய தேவையில்லை, அதேபோல அவர்களின் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்டது போல் காட்போல் உரித்து அல்ல, சட்டப்பூர்வமான காணி உரித்து பத்திரமே வழங்கப்படவுள்ளது எனவும் பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டியுள்ளார். “ விசேட அமைச்சரவை அனுமதியுடன் 10 பேர்ச்சஸ் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, 10 பேர்ச்சஸ் காணியுடன்தான் எமது மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும். பயனாளிகள் தேர்வும் முறையாகவே இடம்பெறும். இதனை இந்தியாவும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் மேற்பார்வை செய்யும். இதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, தோட்டத்தில் பிறந்திருந்தாலேயே வீடுதான். தோட்டத்தில் 5 வருடங்கள் வாழ்ந்திருந்தால் வீட்டை பெறுவதற்கு அவர் தகுதியுடையவராவார். கடந்த ஆட்சியின்போதே கட்சி பார்த்து வீடுகள் வழங்கப்பட்டன. இதன்போது புறக்கணிக்கப்பட்ட – பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாம் முன்னுரிமை வழங்கியுள்ளோம். கட்டி முடிக்கப்படும் வீடுகள் காணி உரிமையுடன்தான் கையளிக்கப்படும். கடந்த காலங்களில் போன்று கண்டி உட்பட சில மாவட்டங்களில் வழங்கப்பட்டதுபோல் காட்போட் காணி வழங்கப்படமாட்டாது. கண்டி, ஹந்தானை பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றியே வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. எதிரணி மலையக அரசியல்வாதிகள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும்கூட ஹந்தானை பகுதியில் உள்ள அரச காணியை நாம் மக்களுக்கு பிரித்துகொடுக்கதான் போகின்றோம். காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வைத்து அரசியல் நாடகம் நடத்தி வந்தவர்கள், இவற்றுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயல் வடிவம் கொடுத்துவருவதால் நடுங்கியுள்ளனர். கடந்த அரசின் இரு அமைச்சுகளையும், இராஜாங்க அமைச்சு பதவிகளையும் வைத்து செய்ய முடியாவற்றை தனி ஒருவனாக ஜீவன் செய்து காட்டியுள்ளதால் வன்மத்தை அவர்மீது வெளிப்படுத்த முற்படுகின்றனர். காலையில் எதிரணியிலும் இரவில் அரச தரப்புடனும் டீல் அரசியல் நடத்தும் இவர்களை விமர்சிப்பதுகூட எமக்கு இழுக்குதான். இருந்தாலும் சமூகத்தின் போலி கருத்துகளை விதைத்து மக்களை குழப்பக்கூடாது. அதனால்தான் இந்த தெளிவுபடுத்தல்.” என்றார். https://www.thinakaran.lk/2024/02/22/breaking-news/44310/ஜீவனின்-வளர்ச்சி-மனோவிற்/

ஜீவனின் வளர்ச்சி மனோவிற்கு எரிச்சல், அதனாலேயே புலம்பல்

1 month 1 week ago
ஜீவனின் வளர்ச்சி மனோவிற்கு எரிச்சல், அதனாலேயே புலம்பல் - இது காழ்ப்புணர்ச்சி - வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும்
PrashahiniFebruary 22, 2024
barath-1-e1708584429363.jpg

ஒரு இளம் அரசியல் தலைவராக மக்களுக்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றிவருவதால், அரசியலில் தாம் காணாமல் போய்விடுவோம் என்ற பீதியிலேயே அவர் மீது சில எதிரணி மலையக அரசியல்வாதிகள் விமர்சனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது காழ்ப்புணர்ச்சி – வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

வீட்டுரிமையையும், காணி உரிமையையும் வைத்து இதுவரை அரசியல் நடத்திவந்தவர்கள், இவ்விரண்டு உரிமைகளையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துவிட்டால், தாம் அரசியலில் அநாதையாகிவிடுவோம் என்ற அச்சம் அவர்களை ஆட்கொள்ள தொடங்கியுள்ளது. அதனால்தான் புலம்ப ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது, ஆக 7 பேர்ச்சஸா அல்லது 10 பேர்ச்சஸா என கோமாளி அரசியல்வாதிகள் குழப்பமடைய தேவையில்லை, அதேபோல அவர்களின் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்டது போல் காட்போல் உரித்து அல்ல, சட்டப்பூர்வமான காணி உரித்து பத்திரமே வழங்கப்படவுள்ளது எனவும் பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

“ விசேட அமைச்சரவை அனுமதியுடன் 10 பேர்ச்சஸ் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, 10 பேர்ச்சஸ் காணியுடன்தான் எமது மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும். பயனாளிகள் தேர்வும் முறையாகவே இடம்பெறும். இதனை இந்தியாவும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் மேற்பார்வை செய்யும். இதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, தோட்டத்தில் பிறந்திருந்தாலேயே வீடுதான். தோட்டத்தில் 5 வருடங்கள் வாழ்ந்திருந்தால் வீட்டை பெறுவதற்கு அவர் தகுதியுடையவராவார்.

கடந்த ஆட்சியின்போதே கட்சி பார்த்து வீடுகள் வழங்கப்பட்டன. இதன்போது புறக்கணிக்கப்பட்ட – பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாம் முன்னுரிமை வழங்கியுள்ளோம். கட்டி முடிக்கப்படும் வீடுகள் காணி உரிமையுடன்தான் கையளிக்கப்படும். கடந்த காலங்களில் போன்று கண்டி உட்பட சில மாவட்டங்களில் வழங்கப்பட்டதுபோல் காட்போட் காணி வழங்கப்படமாட்டாது.

கண்டி, ஹந்தானை பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றியே வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. எதிரணி மலையக அரசியல்வாதிகள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும்கூட ஹந்தானை பகுதியில் உள்ள அரச காணியை நாம் மக்களுக்கு பிரித்துகொடுக்கதான் போகின்றோம்.

காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வைத்து அரசியல் நாடகம் நடத்தி வந்தவர்கள், இவற்றுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயல் வடிவம் கொடுத்துவருவதால் நடுங்கியுள்ளனர். கடந்த அரசின் இரு அமைச்சுகளையும், இராஜாங்க அமைச்சு பதவிகளையும் வைத்து செய்ய முடியாவற்றை தனி ஒருவனாக ஜீவன் செய்து காட்டியுள்ளதால் வன்மத்தை அவர்மீது வெளிப்படுத்த முற்படுகின்றனர்.

காலையில் எதிரணியிலும் இரவில் அரச தரப்புடனும் டீல் அரசியல் நடத்தும் இவர்களை விமர்சிப்பதுகூட எமக்கு இழுக்குதான். இருந்தாலும் சமூகத்தின் போலி கருத்துகளை விதைத்து மக்களை குழப்பக்கூடாது. அதனால்தான் இந்த தெளிவுபடுத்தல்.” என்றார்.

 

 

https://www.thinakaran.lk/2024/02/22/breaking-news/44310/ஜீவனின்-வளர்ச்சி-மனோவிற்/

 

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு இன்று!

1 month 1 week ago
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு இன்று! ஆதவன்) முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. மனிதப்புதைகுழியின் அகழ்வு நட வடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாதக நிலைமைகள் தொடர்பாகவும், முன்னெடுக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய வழக்கில் ஆராயப்படவுள்ளது. அகழ்வு நடவடிக்கைகளுக்காக 5.7 மில் லியன் ரூபா நிதியமைச்சால் ஒதுக்கப்பட் டுள்ள நிலையில், அதன் ஒருபகுதி முன்னைய அகழ்வு நடவடிக்கைகளுக் குப் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அகழ்வுக்காக 13.7 மில்லியன் ரூபா மாவட்டச் செயலகத்திடம் கோரப்பட்டுள்ளது. முதலாம் திகதி அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. (ஏ) https://newuthayan.com/article/கொக்குத்தொடுவாய்_மனிதப்_புதைகுழி_வழக்கு_இன்று!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு இன்று!

1 month 1 week ago
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு இன்று!
1691778444.jpg
 

ஆதவன்)

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

மனிதப்புதைகுழியின் அகழ்வு நட வடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாதக நிலைமைகள் தொடர்பாகவும், முன்னெடுக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய வழக்கில் ஆராயப்படவுள்ளது.

அகழ்வு நடவடிக்கைகளுக்காக 5.7 மில் லியன் ரூபா நிதியமைச்சால் ஒதுக்கப்பட் டுள்ள நிலையில், அதன் ஒருபகுதி முன்னைய அகழ்வு நடவடிக்கைகளுக் குப் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அகழ்வுக்காக 13.7 மில்லியன் ரூபா மாவட்டச் செயலகத்திடம் கோரப்பட்டுள்ளது. முதலாம் திகதி அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. (ஏ)

 

https://newuthayan.com/article/கொக்குத்தொடுவாய்_மனிதப்_புதைகுழி_வழக்கு_இன்று!

ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன்

1 month 1 week ago
நிலாந்தன் ஏன் சிங்கள தேசத்தை நிர்மாணிப்பதைப் பற்றி அலசவேண்டும்? சிங்கள தேசம் நன்றாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிப்பவர்கள் அவர்களின் அரசியல் தலைவர்களாக இருப்பதால் நாடு வங்குரோத்தாக போயுள்ளது. மற்றும்படி இலங்கை முழுவதுமே சிங்களதேசம் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.

பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

1 month 1 week ago
பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது. விகாரைகளில் இருந்து அறத்தை போதிக்க வேண்டும். காவியுடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் இனிமேல் வாக்களிக்க கூடாது. விகாரையிலேயே இருக்க சொல்லுங்கள்.] நல்லதொரு கருத்தை சொல்லியுள்ளார்.புத்த குருக்குகள் மட்டுமல்ல எந்த ஒரு மத குருக்களும் அரசியலுக்கு வரக்கூடாது. அவர்களுடைய மத வேலையை பார்க்க வேண்டும். நல்லகருத்தை அவர் சொன்னதால் அவர் கொடுக்கபோகும் விலை

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 1 week ago
நீலன் திருச்செல்வம் ஒரு சிறந்த சட்டவாளர், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற புலமை மிகுந்தவர். தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்படாமல் பாராளுமன்ற உறுப்பினராக 83 இலும் பின்னர் 94 இலும் இருந்தவர். அடிப்படையில் அவர் ஒரு கறுவாத் தோட்டத்து உயர்குழாத்தினர். அவர் செய்த நன்மை என்னவென்றால், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஜீ.எல். பீரீஸுடன் சேர்ந்து ஒரு தீர்வுப்பொதியைத் தயாரித்தவர். இப்பொதி இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களுடன் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பரவலாக்கும் திட்டங்களைக் கொண்டிருந்தது. 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே சென்று ஒரு தீர்வை முன்வைத்தது. ஆக, சமஸ்டி என்று எழுத்தில் சொல்லாமல் ஒரு சமஸ்டித் தீர்வை முன்வைத்தது. இந்தப் பொதியை சிங்கள கடும்போக்கினரும், விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பொதியை தயாரித்தமையால்தான் அவர் “துரோகி” என அடைமொழி கொடுக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும்படி அவர் எவரையும் காட்டிக்கொடுத்ததாக வரலாறு இல்லை. அதாவது, அவர் படுகொலை செய்யப்படுமளவிற்கு ஒரு தீமைகளும் செய்யவில்லை. இந்தப் பொதி தயாரிக்கப்ப்பட்டு 30 வருடங்களின் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இந்திய- இலங்கை ஒப்பந்தமூடாக வந்த (13ஆவது திருத்தச்சட்டம்) நீர்த்துப்போன, அதிகாரம் இல்லாத, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு மேலாக இருக்காது. சந்திரிக்கா காலத்து பொதியைப் பற்றி அறிய https://noolaham.net/project/36/3532/3532.pdf

இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்

1 month 1 week ago
இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புகிறது ஆப்கானிஸ்தான் Published By: VISHNU 22 FEB, 2024 | 12:28 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (21) இரவு நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. இலங்கையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது, அந்த ஓவரில் கமிந்து மெண்டிஸினால் 14 ஓட்டங்களையே பெறமுடிந்தது. ஒரு வைட் கிடைக்க ஆப்கானிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இலங்கைக்கான விஜயத்தில் ஒற்றை டெஸ்ட் போட்டியிலும், 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் முழுமையாகத் தொல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் தனது கடைசி முயற்சியில் வெற்றியீட்டிய ஆறுதலுடன் நாடு திரும்புகிறது. எவ்வாறாயினும் சர்வதேச ரி 20 கிரிக்கெட் தொடரையும் 2 - 1 எனற ஆட்டக் கணக்கில் இலங்கை தனதாக்கிக்கொண்டது. ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 210 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் களத்தடுப்பில் விட்ட தவறுகளும் பெத்தும் நிஸ்ஸன்க உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற நேரிட்டதும் இலங்கையின் தோல்விக்கு காரணங்களாக அமைந்தன. பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 34 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். அணியில் மீண்டும் இடம்பிடித்த குசல் பெரேரா 2 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு ஓட்டம் பெறாமல் நடையைக் கட்டினார். மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பெத்தும் நிஸ்ஸன்க 53ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது இடது காலில் உபாதைக்குள்ளாகி கடும் சிரமத்தை எதிர்கொண்டார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார். ஆனால் 60 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவர் மீண்டும் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார். அணித் தலைவர் வனிந்து ஹசரங்க முதல் இரண்டு போட்டிகளில் போன்று அதிரடியில் இறங்க முயற்சித்தபோதிலும் இம்முறை அது பலிக்கவில்லை. அவர் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். சதீர சமரவிக்ரமவும் கமிந்து மெண்டிஸும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 39 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சமரவிக்ரம 23 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஏஞ்சலோ மெத்யூஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்து 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கமிந்து மெண்டிஸ் தனது மீள்வருகையில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கைக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து அதிரடியை ஆரம்பித்த தசுன் ஷானக்க, இலங்கையின் வெற்றிக்கு 7 பந்துகளில் 23 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 13 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். அடுத்து களம் புகுந்த அக்கில தனஞ்சய பவுண்டறி அடித்து வெற்றிக்கு தேவைப்பட்ட எண்ணிக்கையை 19 ஓட்டங்களாகக் குறைந்தார். ஆனால், கடைசி ஓவரில் 3 பந்துகள் வீணடிக்கப்பட்டதால் ஆப்கானிஸ்தான் வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது. கமிந்து மெண்டிஸ் 39 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 65 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மொஹமத் நபி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 209 ஓட்டங்களைக் குவித்தது. சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் இலங்கைக்கு எதிராக ரி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் 200 ஓட்டங்களைக் கடந்ததும் இதுவே முதல் தடவையாகும். ஷார்ஜாவில் 2022ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்களை இழந்து பெற்ற 175 ஓட்டங்களே இலங்கைக்கு எதிராக அதன் அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இதற்கு முன்னர் இருந்தது. ஆரம்ப வீரர்களான ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 44 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். இலங்கைக்கு எதிரான ரி20 போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தானின் அதிசிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாகவும் இது பதிவானது. ஹசரத்துல்லா ஸஸாய் 22 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அணித் தலைவர் இப்ராஹிம் ஸத்ரான் 10 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார். மொத்த எண்ணிக்கை 141 ஓட்டங்களாக இருந்தபோது ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆட்டம் இழந்தார். அவர் 43 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பெற்றார். அவர்களை விட அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 31 ஓட்டங்களைப் பெற்றார். மொஹமத் நபி, மொஹமத் இஷாக் ஆகிய இருவரும் தலா 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் அக்கில தனஞ்சய 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ரஹ்மானுல்லா குர்பாஸ். தொடர்நாயகன்: வனிந்து ஹசரங்க https://www.virakesari.lk/article/176999

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 1 week ago
புலிகளால் அப்பாவிகள் கொல்லப்பட்டது உண்மைதான் உதாரணமாக, மத்திய வங்கி குண்டு வெடிப்பு, அதிபர் ஆனந்தராஜ, கெபிடிகொல்லாவா படுகொலை போன்றவைகள்.

ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்

1 month 1 week ago
உக்ரைன் யுத்தம் - ஏவுகணை தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் பலி Published By: RAJEEBAN 22 FEB, 2024 | 10:51 AM உக்ரைனின் ஏவுகணை தாக்குதல் காரணமாக 60க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பயிற்சி தளமொன்றில் முக்கிய அதிகாரியின் வருகைக்கான படையினர் தயார் நிலையிலிருந்தவேளை உக்ரைன் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக பிபிசி தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. பெருமளவு ரஸ்ய படையினர் உயிரிழந்துள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள ரஸ்ய அதிகாரியொருவர் எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சைபீரியாவை தளமாக கொண்ட படையணியின் படையினர் ட்ருடொவ்ஸ்கே கிராமத்திற்கு அருகில் உள்ள பயிற்சி தளத்தில் தளபதியொருவரின் வருகைக்காக காத்திருந்தவேளை உக்ரைனின் ஏவுகணைகள் அவர்களை தாக்கியுள்ளன. தங்களை தங்களின் தளபதிகள் திறந்தவெளியொன்றில் நிற்கவைத்திருந்தனர் அவ்வேளை ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது என ரஸ்ய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட தளத்தில் உயிரிழந்த நிலையில் பல ரஸ்ய வீரர்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன, https://www.virakesari.lk/article/177018

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி விரையும் ஐரோப்பிய செயற்கைக்கோள் - எங்கே விழும்?

1 month 1 week ago
பூமியில் விழுந்த ஐரோப்பிய செயற்கைக்கோள் என்ன ஆனது? பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு, பூமியில் விழுந்த ERS - 2 செயற்கைக்கோள் கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனதன் அமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர் 21 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பூமியின் தட்பவெப்பநிலையை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் பல தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்த ஐரோப்பிய செயற்கைக்கோள் பூமியில் விழுந்துள்ளது. ERS-2 எனப்படும் இரண்டு டன் எடையுள்ள இந்த விண்கலம் பசிபிக் பெருங்கடலுக்கு மேலே வளிமண்டலத்திலேயே எரிந்தது. எனினும் இதை பூமியில் இருந்து யாரும் கண்டதாக இதுவரை தகவல் இல்லை. ERS-2 என்பது வளிமண்டலம், நிலம் மற்றும் கடல்களை புதுமையான வழிகளில் ஆய்வு செய்வதற்காக 1990-களில் ஐரோப்பிய விண்வெளி முகமையால் தொடங்கப்பட்ட திட்டங்களுள் ஒன்றாகும். பூமியின் பாதுகாப்பு ஓசோன் படலத்தை மதிப்பிடுவதற்கான புதிய திறனை மேலும் ERS-2 விண்கலம் கொண்டிருந்தது. செயற்கைக்கோள் கட்டுப்பாடற்ற வகையில் பூமியில் விழும் என ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான உந்துவிசை அமைப்பு இல்லை. எனினும், ராடார்கள் விண்கலம் பூமியில் விழுவதைக் கண்காணித்தன. கலிபோர்னியாவிற்கு மேற்கே 2,000 கிமீ தொலைவில் அலாஸ்கா மற்றும் ஹவாய் இடையே வடக்கு பசிபிக் பெருங்கடலில் கிரீன்விச் நேரப்படி 17:17 மணிக்கு எரிந்துவிட்டதாக ஐரோப்பிய விண்வெளி முகமை கூறியிருக்கிறது. அதன் பாகங்கள் ஏதும் பூமியின் தரைப்பகுதியிலோ, நீரிலோ விழுந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. https://www.bbc.com/tamil/articles/c2l775gwl89o

மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றினை பயன்படுத்தி கல்விகற்க பழகவேண்டும் - இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர்

1 month 1 week ago
22 FEB, 2024 | 10:00 AM மாணவர்கள் குப்பிவிளக்கில் கல்விகற்க பழகவேண்டும் என இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார். மாணவர்கள் அவசியம் ஏற்பட்டால் குப்பிவிளக்கில் கல்விபயில முயலவேண்டும் இந்த விடயத்தில் முன்னோர்களை அவர்கள் பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் மின்கட்டணங்கள் குறித்த கரிசனைகள் குறித்து; கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மின்கட்டணங்களை செலுத்தாததால் மின்துண்டிக்கப்படுவதால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள மின்சாரசபையின் பேச்சாளர் இலவச மின்சாரம் என்ற கலாச்சாரத்திலிருந்து நுகர்வோர்கள் மாறுவதால் இந்த நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தை மின்கட்டண அதிகரிப்பு ஒரு தசாப்தகாலத்திற்கு பின்னரே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள மின்சாரசபையின் பேச்சாளர் இலங்கை மின்சார சபை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிகள் குறித்தும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்திற்கு பெரும்தொகையை செலுத்தவேண்டிய நிலையில் மின்சார சபை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மின்சாரசபை பேச்சாளரின் கருத்தினை சவாலுக்கு உட்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நவீன தொழில்நுட்பம் இலத்திரனியல் சாதனங்கள் காரணமாக தற்போதைய சிறுவர்களை முன்னைய தலைமுறையுடன் ஒப்பிடமுடியாது என தெரிவித்தார். இதேவேளை மின்கட்டண அதிகரிப்பை நியாயப்படுத்திய மின்சாரசபை பேச்சாளர் கல்வி கற்பதற்கு ஏன் மின்சாரம் அவசியம் என கேள்வி எழுப்பியதுடன் குப்பிவிளக்குகள் போன்ற பாரம்பரிய முறைகள் போதுமானவை என தெரிவித்துள்ளார். நான் குப்பிவிளக்கிலேயே படித்தேன் என தெரிவித்த அவர் தொழில்நுட்ப வசதிகளை நம்பியிருப்பதற்கு பதில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிற்கு அவசியமான தேவைகளை மாத்திரம் வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177012