பேஸ்புக்கில் காதல்..! காதலியை நோில் பார்க்க சென்ற இளைஞன் அடித்து முறிக்கப்பட்டு தொலைபேசி, பணம் திருட்டு. யாழ்.கொக்குவிலில் சம்பவம்.. Attack.jpg பேஸ்புக் மூலம் காதலித்து வந்தவர் காதலியை நோில் சந்திக்க சென்றபோது வழிமறித்த இளைஞர்கள் குழு குறித்த இளைஞனை சரமாரியாக தாக்கியதுடன், பணம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை பறித்து சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியில் இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவத்தில் இளைஞருடை தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, ஆவரங்கால் பகுதியில் உள்ள குறித்த இளைஞர் பேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு உரையாடி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் இருவரும் இராமநாதன் வீதியில் உள்ள ராஜா கிறீம்கவுசில் சந்திப்பதாக பேசிக்  கொண்டுள்ளனர். இதன்படி குறித்த இளைஞர் இருவரும் பேசிவைத்து நேரத்திற்கு அங்கு வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் அங்கு வரவில்லை. இந்நிலையில் அங்கு 3 மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர்கள் தாங்கள் பொலிஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், குறித்த இளைஞரை விசாரிக்க வேண்டும், அதனால் தங்களுடன் வருமாறு கூறி மோட்டார் சைக்கில் இழுத்து ஏற்றியுள்ளனர். அங்கிருந்து கொக்குவில் பெற்பதி வீதிக்கு வந்த அந்த கும்பல், அங்குள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு பின்னால் வைத்து குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர். அத்துடன் அவரிடம் இருந்த கைத்தொலைபேசி மற்றும் பணத்தினை பறித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய குறித்த இளைஞர் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் முன்னால் விழுந்துள்ளார். சிறிது நேரம் அங்கு நின்று அந்த இளைஞர் குழு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இதன் பின்னர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இரத்தம் வழிந்தவாறு வீதிக்கு வந்த இளைஞர் அங்கிருந்துவர்களின் உதவியுடன் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://jaffnazone.com/news/18148 டிஸ்கி : கோரோனோ காலத்தில் பொழுது போகாமல் காதல் கோட்டை , காலமெல்லாம் காதல் வாழ்க , காதலர் தினம் போன்ற படங்களை யு ருபில் பார்த்து கெட்டு போனவை..☺️

மாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி         by : Yuganthini maway.jpg தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தினை, மக்களை கூட்டி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தமக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் அதற்கு தடை விதிக்குமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸார் யாழ்.நீதவான் நீதிமன்றில் கடந்த 17ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்று இருந்தனர். குறித்த வழக்கு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப்போது,  வழக்கினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான ஏதுவான காரணிகள் இல்லை என தெரிவித்த நீதவான், வழக்கினை தள்ளுபடி செய்தார். http://athavannews.com/மாவைக்கு-எதிரான-வழக்கு-த/

வட, கிழக்கு இணைப்புக்கு அரசு அடிக்கும் சாவுமணியே ''ஜனாதிபதி செயலணி'' - சிவசக்தி ஆனந்தன் மீண்டும் ராஜபக்ஷ அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவு சிங்கள பெரும்பான்மை மக்கள் தொகையை  மாற்றியமைப்பதற்கு திட்டமிடுகின்றமை புலனாகின்றது.  sivasakthi.jpg அதன்மூலம் தமிழர்களின் வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு சாவுமணி அடிப்பதற்கே ராஜபக்ஷ அரசு முனைகின்றது. அதன் வெளிப்பாடே கிழக்கு மாகாண தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி விசேட செயலணி என தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி.யுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மாகாண தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி விசேட செயலணி அமைத்துள்ளமையும், அதற்கு பாதுகாப்பு செயலாளர் ஒய்வு பெற்ற கமால் குணரட்ன நியமிக்கப்பட்டுள்ளமையும்  கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு திட்டத்தின் நீட்சியே.  தமிழர் தாயகத்தில் பௌத்தத்தின் பெயரால், தேசிய பாதுகாப்பின் பெயரால், வன, நிலங்கள், தொல்பொருள் பகுதிகள் என்றெல்லாம் சிங்கள பேரினவாதிகள் அகலக்கால் பதித்து வருகின்றார்கள். தமிழர்களின் பூர்விக நிலத்தினை முழுமையாக பறித்து சிங்கள தேசமாக மாற்றியமைப்பதற்கு பல்வேறு முனைப்புக்களைச் செய்துவருகின்றார்கள். அவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் புனித பூமி என்ற ரீதியில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்காக பௌத்த மத சின்னங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன . இதற்கமைய அம்பாறையில் 247 இடங்களும், திருகோணமலையில் 74 இடங்களும், மட்டக்களப்பில் 28 விகாரைகள் உட்பட 55 இடங்கள் பௌத்த மதத்துடன் தொடர்புடைய தொல்லியல் இடங்களாக அடையாளப் படுத்தியுள்ளனர். இந்த விடயத்தினை தனியே கிழக்கு மாகாணத்தினை மட்டும் மையப்படுத்தி பார்க்க முடியாது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்பது தமிழர்களின் நீண்டகால கோரிக்கை. ஆனால் சிங்கள பேரினவாதிகளை பொறுத்தவரையில் கொக்கிளாயில் சுமார் 60 சதுர கிலோ மீற்றர்களுக்குள் 5 கடற்படை முகாம்கள், 8 பௌத்த விகாரைகள், 10 இராணுவ முகாம்கள், 4 இராணுவ வியாபார நிலையங்கள் இவற்றுடன் சிங்களக் குடியேற்றங்களும்  ஏற்படுத்தப்பட்டு வடக்கையும் கிழக்கினையும் நிரந்தரமாக பிரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்கள். இவ்வாறிருக்க, 1932ஆம் ஆண்டிலிருந்து சிங்களவர்கள் கிழக்கு நோக்கிய நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். கந்தளாய், கல்லோயா, மகாஓயா, தீகவாபி திட்டம், துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்று அபிவிருத்திட்டங்களின் போர்வையில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கினர். கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை அதிகரிப்பதை ஒரேநோக்காக வைத்து 24குடியேற்றத் திட்டங்கள் மாறி மாறி வந்த   ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 240 தமிழ்க் கிராமங்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கிழக்கில் போர் நிறைவுக்கு வந்திருந்த சூழலில் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இலட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்துவதற்கும், அங்கு சிங்களவர்களின் சனத்தொகையை 55சதவீதத்தினால் அதிகரிப்பதற்கும் அப்போதைய மஹிந்த அரசு திட்டமிட்டிருந்தது. அதற்காக, திருகோணமலையில் கந்தளாய், அல்லை, மொரவேவ, முதலிக்குளம், பதவியா திட்டங்களின் கீழும் அம்பாறையில் கல்லோயா, பனல் ஓயா, அம்பலன் ஓயா திட்டங்களின் கீழும் நூறுவீதம் சிங்களவர்களே குடிமயர்த்தப்பட்டனர்.  அவ்வாறிருக்கையில் தற்போது,  மகாவலி அபிவிருத்திக் திட்டம், கெடா ஓயா திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் கீழும் குடியேற்றங்களுக்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய பின்னணிகளை வைத்துப் பார்க்கின்றபோது, மீண்டும் ராஜபக்ஷ அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் தான் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து இலக்கை அடைவதற்கு விழைகின்றமை வெளிப்படுகின்றது. அதாவது கிழக்கில் கணிசமான அளவு சிங்கள பெரும்பான்மை மக்கள் தொகை மாற்றியமைப்பதற்கு திட்டமிடுகின்றமை புலனாகின்றது.  அதன்மூலம் தமிழர்களின் வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு சாவுமணி அடிப்பதற்கே ராஜபக்ஷ அரசு முனைகின்றது.இந்த முயற்சிகளுக்கு தொல்பொருளின் பெயரால் காய் நகர்த்தப்படுகின்றது. அதனை கச்சிதமாக செய்து முடிப்பதற்கும், அதுதொடர்பில் பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினர் கேள்வி கேட்காது அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காக படைத்தரப்பு அப்பணியில் களமிறக்கப்பட்டுள்ளது.     https://www.virakesari.lk/article/82972

புதிய பதிவுகள்

Image may contain: 12 people, crowd and outdoorImage may contain: one or more people, people walking, people standing, people on stage, crowd, shoes, child and outdoor
கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்   கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம் கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பதிவு: மே 29,  2020 16:02 PM ஜகார்தா இந்தோனேசியாவில் 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கபட்டு உள்ளனர். 1,496 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.வைரஸ் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட  பல மடங்கு அதிகம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த நிலையில் இந்தோனேசிய பாதுகாப்பு மந்திரி முகமது மஹ்புத் இந்த வார தொடக்கத்தில் உள்ளூர் பல்கலைக்கழகத்திற்கு ஆன்லைன் மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது:- நம் உடல்நலத்தில் கவனம் செலுத்தினால் கொரோனா நிலைமையை சரிசெய்ய முடியும். கொரோனா உங்கள் மனைவியைப் போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் அதை கட்டுப்படுத்த வில்லை என்றால் பிறகு உங்களால் முடியாது என்பதை நீங்கள் உணருங்கள். பிறகு நீங்கள் அதனுடன் வாழ கற்றுக்கொள்வீர்கள் எறுன கூறினார். இதற்கு பல்வேறு சமூக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன நாட்டில் பொது அதிகாரிகளின் பாலியல் மற்றும் தவறான மனநிலையையும் காட்டுகிறது" என்று மகளிர் ஒற்றுமை குழுவின் தலைமை நிர்வாகி டிண்டா நிசா யூரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29160241/Corona-Is-Like-Your-Wife-Anger-Over-Indonesia-Ministers.vpf
nallini.jpg நளினி- முருகன் இணைய வழி ஊடாக உறவினர்களிடம் பேச முடியாது- உயர் நீதிமன்றம் உத்தரவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் இணைய வழி ஊடாக வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாதென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையிலுள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம், இணைய வழி ஊடாக பேச அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், முருகன் லண்டனிலுள்ள தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்த அவர், ஏற்கெனவே காலமான தனது தந்தையின் உடலை இணைய வழி  காணொளி தொடர்பாடல் ஊடாக பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததையும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு, இன்று (வியாழக்கிழமை) மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அயல்நாடுகளில் இருப்பதால் இது மத்திய வெளிவிவகாரத்துறை சம்மந்தபட்டது. எனவே மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/நளினி-மற்றும்-முருகன்-வட/

யாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களம்

பேஸ்புக்கில் காதல்..! காதலியை நோில் பார்க்க சென்ற இளைஞன் அடித்து முறிக்கப்பட்டு தொலைபேசி, பணம் திருட்டு. யாழ்.கொக்குவிலில் சம்பவம்.. Attack.jpg பேஸ்புக் மூலம் காதலித்து வந்தவர் காதலியை நோில் சந்திக்க சென்றபோது வழிமறித்த இளைஞர்கள் குழு குறித்த இளைஞனை சரமாரியாக தாக்கியதுடன், பணம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை பறித்து சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியில் இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவத்தில் இளைஞருடை தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, ஆவரங்கால் பகுதியில் உள்ள குறித்த இளைஞர் பேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு உரையாடி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் இருவரும் இராமநாதன் வீதியில் உள்ள ராஜா கிறீம்கவுசில் சந்திப்பதாக பேசிக்  கொண்டுள்ளனர். இதன்படி குறித்த இளைஞர் இருவரும் பேசிவைத்து நேரத்திற்கு அங்கு வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் அங்கு வரவில்லை. இந்நிலையில் அங்கு 3 மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர்கள் தாங்கள் பொலிஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், குறித்த இளைஞரை விசாரிக்க வேண்டும், அதனால் தங்களுடன் வருமாறு கூறி மோட்டார் சைக்கில் இழுத்து ஏற்றியுள்ளனர். அங்கிருந்து கொக்குவில் பெற்பதி வீதிக்கு வந்த அந்த கும்பல், அங்குள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு பின்னால் வைத்து குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர். அத்துடன் அவரிடம் இருந்த கைத்தொலைபேசி மற்றும் பணத்தினை பறித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய குறித்த இளைஞர் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் முன்னால் விழுந்துள்ளார். சிறிது நேரம் அங்கு நின்று அந்த இளைஞர் குழு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இதன் பின்னர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இரத்தம் வழிந்தவாறு வீதிக்கு வந்த இளைஞர் அங்கிருந்துவர்களின் உதவியுடன் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://jaffnazone.com/news/18148 டிஸ்கி : கோரோனோ காலத்தில் பொழுது போகாமல் காதல் கோட்டை , காலமெல்லாம் காதல் வாழ்க , காதலர் தினம் போன்ற படங்களை யு ருபில் பார்த்து கெட்டு போனவை..☺️
கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்   கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம் கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பதிவு: மே 29,  2020 16:02 PM ஜகார்தா இந்தோனேசியாவில் 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கபட்டு உள்ளனர். 1,496 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.வைரஸ் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட  பல மடங்கு அதிகம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த நிலையில் இந்தோனேசிய பாதுகாப்பு மந்திரி முகமது மஹ்புத் இந்த வார
nallini.jpg நளினி- முருகன் இணைய வழி ஊடாக உறவினர்களிடம் பேச முடியாது- உயர் நீதிமன்றம் உத்தரவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் இணைய வழி ஊடாக வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாதென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையிலுள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம், இணைய வழி ஊடாக பேச அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், முருகன் லண்டனிலுள்ள தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்த அவர்,
`தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது' வைரலாகும் ஒபாமாவின் உரையின் முழுப்பகுதி!  #Graduation2020 ஐஷ்வர்யா
கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னர் உலக அரசியலின் திசைவழிகள்       image_e4ff8dbdcd.jpg-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அல்லைப்பிட்டியில் இருந்தவனின் தலைவிதியை, அமெரிக்காவில் இருந்தவன் தீர்மானித்த காலம் ஒன்று இருந்தது. இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். காலம் மாறிவிட்டது; அவர்கள் காலாவதியாகி விட்டார்கள். கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளி நூலளவே. கனவு காணலாம்; அதில் தவறில்லை. ஆனால், கற்பனையில் வாழ இயலாது. ஒருவேளை, அவ்வாறு வாழ முயன்றால், யதார்த்தம் அவர்கள் முகத்தில் அறையும். ஆனால், பலர் கற்பனையிலும் கனவிலுமே வாழ்கிறார்கள். யதார்த்தம், அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு,
  Mano Ganesan   <அஞ்சலி செய்வோம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்!!> இந்த நொடியில் என் மனதில்… (19/05/20) இன்று பெருந்தேசியவாதம், போர் வெற்றி விழாவை கொண்டாடுகிறது. சிங்களம், பெளத்தம் ஆகிய இரண்டு சிந்தனையோட்டங்களின் ஊடாக தனது அரசியல், இராணுவ பலத்தை உறுதி செய்துகொள்ள இன்றைய ஆட்சி எதுவும் செய்யும். இந்த கொண்டாட்டமும் அதில் ஒன்றுதான். “பிறிதொரு அந்நிய நாட்டுடன் போர் செய்யவில்லை”, “உள்நாட்டுக்குள்ளேயே நடந்த போர்”, “இறந்து போனவர்களும் இலங்கையர்களே” என்ற வாதங்கள் எல்லாம், இங்கே எடுபடாது. இந்த இனவாத இறுக்கம்தான், இவர்களது இருப்புக்கு அடித்தளம். இதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. தமிழ் தேசியவாதம் போரில் மரணித்தோரை நினைந்து கதறி அழுகிறது. அஞ்சலி செலுத்துகிறது. போர் வெற்றி விழாவும், அஞ்சலி நிகழ்வுகளும் ஒன்றை ஒன்று ஈடு செய்பவையல்ல. ஒடுக்குவோரின் தேசியவாதமும், ஒடுக்கப்படுவோரின் தேசியவாதமும் ஒன்றுக்கொன்று சமமானவையல்ல. இனி நாம், “இங்கே இருந்து எங்கே” என சிந்திக்க வேண்டும். வருடாந்த அஞ்சலி ஒன்று மட்டுமே எமது அரசியல் பயணம் ஆகிவிட முடியாது
Sumanthiran forced to backtrack after comments on LTTE spark Tamil ... சுமந்திரன் - சமுதித்த.... சர்ச்சைக்குரிய பேட்டி சிங்களத்திலிருந்து  தமிழாக்கம் : சுவிசிலிருந்து ஜீவன் சமுதித்த : இன்றைய அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவரை தேடி வந்திருக்கிறோம். அவர் யாழ்ப்பாண பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான  M.A. சுமந்திரன் அவர்கள் வணக்கம் சுமந்திரன்: வணக்கம் சமுதித்த : தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முக்கிய காரணம் என்ன சுமந்திரன்: உண்மையான காரணம் தான் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து நியாயமான உரிமை கிடைக்கவில்லை எனும் எண்ணம்  உள்ளது.  அதை சரி செய்வதற்காக 1949 இல்  தமிழரசுக் கட்சி உருவானது. அதன் பின்னர் அதுவே வெவ்வேறு பெயர்களில் மாறி வந்து இப்போது தமிழர் தேசிய கூட்டமைப்பு என ஆகியுள்ளது.
Image may contain: 1 person, closeup     ஜப்பானின் நோபல் பரிசு பெற்ற மருத்துவ பேராசிரியர் டாக்டர் தாசுகு ஹொன்ஜோ, கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல என்று கூறி இன்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்
 விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?! பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று . இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள்.  large.A7127420-1F16-428C-B9D3-D20D57FFEB3F.jpeg.c611fc446d7c93efd90eaba7695cb4dc.jpeg பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் . புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் .  பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும்
    Image may contain: 2 people, eyeglasses     இலங்கையில் இடம் பெற்ற முப்பது வருட யுத்தம், பல
நானும்அவனும் ….................................   ஜீவநதிக்காக .எதோ ஒரு கதை.. சாத்திரி ….     இரவு பன்னிரண்டை தாண்டிக்கொண்டிருந்தது வெளியே இடி மின்னலோடு பெரு மழை நீ சாப்பிட்டால் சாப்பிடு இல்லாட்டி பட்டினியா படு ,என்று சொல்லிவிட்டு உணவை ஒரு தட்டில் போட்டு மைக்கிரோவானில் வைத்து விட்டு மனைவி படுக்கைக்கு போய்விட்டார் . இன்னொரு கிளாஸ் குடித்து விட்டு சாப்பிடலாமென நினைத்து படுக்கையறை கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் .மெதுவாக போத்தலை திறந்து கொஞ்சம் விஸ்கியை கிளாசில் ஊற்றி விட்டு காஸ் வெளியேறும் சத்தம் கேட்காமல் சோடாவை திறப்பதெப்படி என யோசித்துக்கொண்டிருக்கும் போதே இடி இடித்த சத்தத்தில்சட்டென்று சோடாவை திறந்து கிளாசில் ஊற்றி ஒரு இழுவை இழுத்து விட்டு கணணியை திறந்தேன் ஏனென்றால் இப்பிடியான சந்தர்ப்பங்களில் தான் எனக்கு கற்பனை தானாக வந்து கொட்டி ஏதாவது எழுதத் தோன்றும்..   அபோதான் கண்களை கூச வைக்கும் ஒரு பெரு மின்னல்.. சாத்தியிருந்த யன்னலையும் ஊடறுத்து அறை முழுவதையும் பகலாக்கி செல்ல .மழையின் கோரம் அதிகரித்திருந்தது அடுப்படியில் திறந்திருந்த கதவு காற்றுக்கு அடிக்கும் சத்தம் கேட்டு அதை சாத்தி விட்டு வரலாமென எழுந்து போயிருந்தேன். ஏனெனில் அது பின்னால் உள்ள சிறிய தோட்டத்துக்கு செல்லும் பாதை . மழையின் கோரத்தால் எலியோ பூச்சிகளோ அதுவழியாக உள்ளே வந்துவிடும் . கதவை சாத்திக் கொண்டிருக்கும்போது இதுவரை நான் கேட்டிராத பெரும் இடியோசை .சின்ன வயதில் நான் சொன்ன அருச்சுனா (ஆ)பத்து நினைவுக்கு வருமளவு சத்தம் அதே நேரம் மின்சாரமும் போய்விட மீண்டுமொரு மின்னல் அப்போதான் அந்த உருவத்தை தோட்டத்தில் பார்த்தேன்
Image may contain: 10 people, child and outdoor   அணையா நெருப்பாய் ஆண்டுகள் முப்பத்தாறு உரிமைக்காய் சுழன்றடித்த ஊழித்தீ   தன் உயிர் நெய்யூற்றி தான் வாழவன்றி செந்தமிழ் வாழ சொந்தங்கள் செழிக்க செருக்காய் ஒரு தேசம் அமைக்க சோர்வின்றி எரிந்தது.!   தேசங்கள் பல பொறாமை கொள்ள முள்முடி தரித்து முள்ளிவாய்க்காலில் ஊதியணைக்கப்பட்டது அந்த
கைதான ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநிறுத்தம் Bharati May 26, 2020கைதான ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநிறுத்தம்2020-05-26T14:07:10+00:00
அகநானுற்றில் பதுக்கை.! DSCN1088_15032.JPG தமிழர் பண்பாடும் வழிபாடும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. அவ்வாறிருக்க பழந்தமிழரின் பதுக்கை எனப்படும் இறந்தவர்களின் புதையிடங்களும் அவற்றை வழிபடும் முறையையும் இக்கட்டுரை ஆராய உள்ளது. அதில்,அகநானூற்றில் குறிப்பிடப்படும் நடுகல் மரபும், பதுக்கை மரபும் விவாதப் பொருளாகின்றது பல்வேறு இலக்கியங்கள் நடுகற்கள், பதுக்கைகள் குறித்து பேசியிருப்பினும் அகநானூற்றில் அவை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இங்குக் காண்போம். நடுகற்கள் பதுக்கை அறிமுகம் நடுகற்கள் போரிலோ சண்டையிலோ மாண்ட ஒரு வீரனுக்காக வைக்கப்படுவதாகும். இதனால் இதனை வீரக் கற்கள் என்றும் அழைக்கும் வழக்கு உள்ளது. நடுகல் இறந்த மனிதனின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாலேயே நடப்படுகிறது. இறந்தவர் எதற்காக இறந்தார் என்ற
Image may contain: 12 people, crowd and outdoor