இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1987 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு ஆபத்து-13 ஆவது திருத்தச் சட்டம் கைவிடப்படலாம் ஜனாதிபதித் தேர்தலா? நாடாளுமன்றத் தேர்தலா? முரண்பாட்டிலும் உடன்படும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள்     main photo   இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா என்பது ஆலோசித்து வருகின்றது. பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் அதனை விரும்புகின்றன. ஆனால் 2016 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அஙீகரிக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி எந்தத் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும். முதலில் மாகாண சபைத் தேர்தல்களே நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான காலம் பிந்தியுள்ளதாகவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இலங்கைச் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஏலவே கடிதம் அனுப்பியுள்ளார்.    தேர்தலை நடத்த வேண்டுமானால் சிறப்புப் பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.     எதுவுமேயில்லாத அரைகுறை அரசியல் தீர்வு என்று கூறப்படும் மாகாண சபை முறையைக் கைவிட உத்தேசிக்கப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்ற பேச்சைக் கைவிட்டு நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.   அத்துடன் காலம் தாமதித்தாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து உயர் நீதிமன்றத்திடம் சட்ட வியாக்கியாணம் கேட்டுமாறும் மஹிந்த தேசப்பரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சென்ற ஐந்தாம் திகதி கடிதம் எழுதியுமிருந்தார். ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதிலேயே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. இந்த இரண்டு தேர்தல்களிலும் ஏதாவது ஒன்றை முதலில் நடத்த வேண்டும் என்பதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் எதிர்ப்பார்ப்பு என்றும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை இந்தக் குழப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையை இலங்கை அரசாங்கம் அப்படியே கைவிட திட்டமிடுவதாகவும் அதனை பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் விரும்புவதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. 1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாதென தமிழ்க் கட்சிகள் அன்று கூறியிருந்தன. அதற்காக இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் நிராகரித்தன. எனினும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட வேண்டிய கட்டாயம் தமிழ்த் தரப்புக்கு ஏற்பட்டிருந்தது. ஆனாலும் இது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் பல தடவை கூறிவிட்டார். எனினும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் இன்று பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் இதுவரை எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. இந்த நிலையில் எந்த அதிகாரங்களுமே இல்லாத அரைகுறை அரசியல் தீர்வு என்று கூறப்படும் மாகாண சபை முறையைக் கூட கைவிட உத்தேசிக்கப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்ற பேச்சைக் கைவிட்டு நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தன்னை வேட்பாளராக நியமிக்க வேண்டுமென மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பார்த்திருந்தார். அந்த அடிப்படையிலேயே கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி எதிர்க்கட்சியில் இருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டு, அவர் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பதவியேற்றிருந்தது. எனினும் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியையடுத்து ஐம்பத்தி ஒரு நாட்களின் பின்னர் மீண்டும் பிரதமாரக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச வேட்பாளர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கொள்ளையளவில் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போர் நீடித்து வருகின்றது. ஆகவே இவ்வாறானதொரு நிலையில் நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தி, பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவையும் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவையும் நியமிக்கும் திட்டம் ஒன்று உள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. இந்தத் திட்டம் குறித்து மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களோடு: ஆலோசித்து வருகின்றார். ஆனாலும் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதற்கு விரும்பவில்லையெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. எனினும் கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியுரிமை குறித்த சட்டச் சிக்கல் நீடித்தால், மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நியமித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியையும் இணைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆலோசிப்பதாகக் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரேநேரத்தில் நடத்தக் கூடிய வாய்ப்புகள் இல்லையெனவும் அது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசணையைப் பெறவேண்டிய தேவையுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது. https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=898&fbclid=IwAR2JlI0OJ0k0Yi6q9QhwE3lyUYE76gNVQA-9k2WV-8EcNNryoH3LBWLL3-k

ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணைப் பகுதி நிலத்தில் 265 ஏக்கர் நிலம் கடந்த மாதம் மாந்தை பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது . வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்த குறித்த வெள்ளாங்குளம் பண்ணை நிலம் முழுவதும் கயூ மரங்கள் பயிர்செய்யப்பட்ட காரணத்தினால் குறித்த காணிகளை இராணுவத்தின் உதவியுடன் இலங்கை கயூ கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம்(18) குறித்த காணிகளை பார்வையிடுவதற்காக இலங்கை கயூ கூட்டுஸ்தாபன தவிசாளர் மற்றும் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலையிட்டு குறித்த 275 ஏக்கர் காணிகளும் மாந்தை பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு வழங்குவதற்கு என பிரதேச செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு பெயர் பட்டியலும் தயாரிக்கப்பட்ட நிலையில், கயூ கூட்டுத்தாபனத்திற்கு வழங்கமுடியாது எனவும் கட்டாயத் தேவை இருப்பின் வனவள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட 275 ஏக்கர் நிலத்தில் கயூ மரங்கள் காணப்படுவதால் அரச அனுமதிப்பெற்று அக்காணிகளை கயூ கூட்டு தாபனத்தின் கீழ் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து முரண்பாடு ஒன்று தோற்றம் பெற்ற நிலையில் குறித்த விடுவிக்கப்பட்ட காணிகளை உடனடியாக பிரதேச செயளாலரிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டது. அதே நேரத்தில் கயூ கூட்டுத்தாபனத்தின் கோரிக்கையின் அடிப்படையில் குறித்த வெள்ளாங்குளம் பண்ணைப் பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 30 ஏக்கர் காணிகளை பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி கயூ கூட்டு தாபனத்திற்கு வழங்க அனுமதி பெற்று தர முயற்சி எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படது. இந்த நிலையில் குறித்த 275 ஏக்கர் பண்ணை நிலத்தையும் கையகப்படுத்தும் முயற்சி கைவிடப்பட்டது. குறித்த சம்பவ இடத்திற்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், மன்னார் நகரசபை தவிசாளர், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடதக்கது.  IMG_7864.jpg?resize=726%2C409   http://globaltamilnews.net/2019/118573/  

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் lightning.jpg?resize=778%2C480 யாழ்.மீசாலை பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இருவர் இலக்காகிய நிலையில் காயமடைந்துள்ளனர். மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த அம்பலவானார் சிவசுப்பிரமணியம் (வயது 65) மற்றும் அப்புக்குட்டி சிவசுப்பிரமணியம் (வயது 65) ஆகிய இருவருமே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கை மற்றும் முதுகு பகுதிகளில் எரி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குறித்த இருவரும் நேற்றைய தினம் புதன்கிழமை மரம் ஒன்றின் கீழ் உரையாடி கொண்டு இருந்த வேளையே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகினர் என தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை யாழில் கடந்த செவ்வாய்க்கிழமை மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/118562/

புதிய பதிவுகள்

பாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது porn-age-checks-720x405.jpg பிரித்தானியாவில் பாலியல் தளங்கள், ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது. ஜூலை 15 ஆம் திகதி முதல் இத்தகைய காணொளிகளைப் பார்ப்பவர்களின் வயது எல்லை பரிசீலிக்கப்படும் திட்டமானது கடுமையானமுறையில் நடைமுறைக்குவரும் என்று டிஜிட்டல் கலாசாரத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறுவர்களைப் பாதுகாக்கும் சமூகத்திட்டத்தின் அங்கமாக இத்திட்டம் கொண்டுவரப்படுகின்றது. பொருத்தமற்ற உள்ளடக்கத்திலிருந்து சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இலக்காக உள்ளது. ஆபாசத் தளங்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் வயது எல்லையைச் செயற்படுத்த மறுக்கும் தளங்கள் மீது £ 250,000 வரை அபராதம் விதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜூலை 15 ஆம் திகதி முதல் பாலியல் தளங்கள் தமது காணொளிகளைப் பார்ப்பவர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும். தவறுகின்ற பட்சத்தில் அத்தகைய இணையத் தளங்கள் தடுக்கப்படும்.
"இரவில் மின்சாரத்தை அணைத்தைவிட்டு, அதிகாரிகளின் துணையோடு ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். இது தேர்தல்தானா, ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா" என திருமாவளவன் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.                                               355_19214_13027.jpg சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனது தாயார் மற்றும் குடும்பத்துடன் வந்து வாக்கைப் பதிவுசெய்தார்.                                              vck_08361_13398.jpg பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல் திருமாவளவன், ``தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றுவரும் 39 மக்களவைத் தொகுதியிலும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு விழுவதாக ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். இதனை மாவட்டத் தேர்தல் அதிகாரி கவனத்தில்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். ஒருபுறம் நரேந்திர மோடி தலைமையிலான மதவாத சக்திகள், இன்னொரு புறம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஜனநாயக சக்திகள் இரு அணிகளாகப் பிரிந்து நின்று தேர்தலைச் சந்திக்கிறோம். ஜனநாயக சக்திகள் வெற்றிபெற்றால், நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்படும் என
மூக்கில் ரியூப்... வீல்சேர்... வாக்குச்சாவடியில் கருணாநிதியை நினைவுபடுத்திய க.அன்பழகனுக்கு என்னவாயிற்று..? anbazhagan_1200x630xt.jpg 96 வயதில் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் வாக்குச் சாவடிக்கு, வீல் சேரில் வந்து வாக்களித்து கருணாநிதியை நினைவு படுத்தி சென்றிருக்கிறார் அவரது நண்பரான திமுக பொதுச்செயலாளர் அன்பழகன். ’என் 18 வயதில் துணைக்கு வந்த நண்பன்’ என்று கருணாநிதியால் சிலாகிக்கப்பட்டவர் பேராசிரியர் அன்பழகன். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ரொம்பவே சோர்வடைந்து விட்ட அவரது உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. அடிக்கடி காய்ச்சல், சளித்தொல்லைகள் ஏற்பட்டன. அடுத்தடுத்த நாள்களில் அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததால், டிசம்பர் 28-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டார். நுரையீரலில் சளி தங்கியிருப்பதால் மூச்சுவிடுவதற்குச் சிரமப்படுகிறார். நுரையீரலில் உள்ள சளியை அகற்றும் சிகிச்சை எதிர் வினையை உருவாக்கி விடும் என்கிற அச்சத்தால் அந்த சிகிச்சை வேண்டாம் என அன்பழகனின் குடும்பத்தினர் முடிவெடுத்து விட்டனர். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உள்ளதால், ரியூப் மூலம் சிறுநீர் வெளியேற்றம் நடக்கிறது. உணவும் ரியூப் வழியாகவே செலுத்தப்படுகிறது. தற்போது வீட்டில் இருந்தே சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட சிரமங்களுக்கிடையே திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் வாக்குச் சாவடிக்கு, வீல் சேரில் வந்து வாக்களித்தார். அந்த வகையில் 96 வயதான அவரது மூக்கில் ரியூப் பொருத்தப்பட்டு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். இந்த வயதிலும் அவரது கடமை உணர்ச்சியை கண்டு அங்கிருந்த மக்கள் வியந்தனர். கருணாநிதியும் தனது தள்ளாத வயதிலும் இது போல் சக்கர நாற்காலியில் சென்று வாக்களிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் வழியில் க.அன்பழகனும் வாக்குச் சாவடிக்கு வந்தது அனைவருக்கும் முன்னுதாரணம் ஆகியுள்ளது. https://tamil.asianetnews.com/politics/dmk-k-anbazhagan-also-cast-his-vote-pq57e2
நினைவஞ்சலி
பிறப்பு:
இறப்பு:
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பலருக்கு ஆவலாக இருந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்குவது கடினமானது. உடல் எடையைக் குறைக்கப் பல விதங்களாக முயன்று பார்த்திருப்பீர்கள். உணவின் அளவையும் கலோரிகளையும் கட்டுப் படுத்தி உடலையும் மனதையும வருத்தி மெலிய வைப்பது கடினம். எமது உடல் மிகவும் புத்திசாலியானது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது தனக்குக் கிடைக்கும் சொற்ப உணவைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க முயலும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பை மீண்டும் கலோரிகளாக மாற்றி இலகுவில் பாவிக்க முடியாது. நீண்டநேர உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் எடை மீண்டும் ஏறிவிடும்.  keto_diet.jpg முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொழுப்பைக் கொழுப்பால் கரைக்கும் முறை தற்போது மேலை நாடுகளில பரவி வருகிறது. நானும் இதனை முயன்று பார்க்கலாமே என்ற மூன்று மாதங்கள் இந்த முறையை பின்பற்றிய எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் மருத்துவ நிபுணர் கிடையாது, வாசித்துக் கேட்டு அறிந்து கொண்டவற்றைக் கொண்டு பரீட்சித்துப் பார்த்து அந்த அனுபவத்தின்

யாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களம்

இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1987 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு ஆபத்து-13 ஆவது திருத்தச் சட்டம் கைவிடப்படலாம் ஜனாதிபதித் தேர்தலா? நாடாளுமன்றத் தேர்தலா? முரண்பாட்டிலும் உடன்படும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள்     main photo   இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா என்பது ஆலோசித்து வருகின்றது. பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் அதனை விரும்புகின்றன. ஆனால் 2016 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அஙீகரிக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி எந்தத் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும். முதலில் மாகாண சபைத் தேர்தல்களே நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான காலம் பிந்தியுள்ளதாகவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இலங்கைச் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஏலவே கடிதம் அனுப்பியுள்ளார்.    தேர்தலை நடத்த வேண்டுமானால் சிறப்புப் பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.     எதுவுமேயில்லாத அரைகுறை அரசியல் தீர்வு என்று கூறப்படும் மாகாண சபை முறையைக் கைவிட உத்தேசிக்கப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்ற பேச்சைக் கைவிட்டு நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.   அத்துடன் காலம் தாமதித்தாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து உயர் நீதிமன்றத்திடம் சட்ட வியாக்கியாணம் கேட்டுமாறும் மஹிந்த தேசப்பரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சென்ற ஐந்தாம் திகதி கடிதம் எழுதியுமிருந்தார். ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதிலேயே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. இந்த இரண்டு தேர்தல்களிலும் ஏதாவது ஒன்றை முதலில் நடத்த வேண்டும் என்பதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் எதிர்ப்பார்ப்பு என்றும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை இந்தக் குழப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையை இலங்கை அரசாங்கம் அப்படியே கைவிட திட்டமிடுவதாகவும் அதனை பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் விரும்புவதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. 1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாதென தமிழ்க் கட்சிகள் அன்று கூறியிருந்தன. அதற்காக இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் நிராகரித்தன. எனினும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட வேண்டிய கட்டாயம் தமிழ்த் தரப்புக்கு ஏற்பட்டிருந்தது. ஆனாலும் இது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் பல தடவை கூறிவிட்டார். எனினும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் இன்று பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் இதுவரை எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. இந்த நிலையில் எந்த அதிகாரங்களுமே இல்லாத அரைகுறை அரசியல் தீர்வு என்று கூறப்படும் மாகாண சபை முறையைக் கூட கைவிட உத்தேசிக்கப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்ற பேச்சைக் கைவிட்டு நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தன்னை வேட்பாளராக நியமிக்க வேண்டுமென மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பார்த்திருந்தார். அந்த அடிப்படையிலேயே கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி எதிர்க்கட்சியில் இருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டு, அவர் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பதவியேற்றிருந்தது. எனினும் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியையடுத்து ஐம்பத்தி ஒரு நாட்களின் பின்னர் மீண்டும் பிரதமாரக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச வேட்பாளர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கொள்ளையளவில் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போர் நீடித்து வருகின்றது. ஆகவே இவ்வாறானதொரு நிலையில் நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தி, பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவையும் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவையும் நியமிக்கும் திட்டம் ஒன்று உள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. இந்தத் திட்டம் குறித்து மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களோடு: ஆலோசித்து வருகின்றார். ஆனாலும் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதற்கு விரும்பவில்லையெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. எனினும் கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியுரிமை குறித்த சட்டச் சிக்கல் நீடித்தால், மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நியமித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியையும் இணைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆலோசிப்பதாகக் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரேநேரத்தில் நடத்தக் கூடிய வாய்ப்புகள் இல்லையெனவும் அது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசணையைப் பெறவேண்டிய தேவையுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது. https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=898&fbclid=IwAR2JlI0OJ0k0Yi6q9QhwE3lyUYE76gNVQA-9k2WV-8EcNNryoH3LBWLL3-k
பாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது porn-age-checks-720x405.jpg பிரித்தானியாவில் பாலியல் தளங்கள், ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது. ஜூலை 15 ஆம் திகதி முதல் இத்தகைய காணொளிகளைப் பார்ப்பவர்களின் வயது எல்லை பரிசீலிக்கப்படும் திட்டமானது கடுமையானமுறையில் நடைமுறைக்குவரும் என்று டிஜிட்டல் கலாசாரத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறுவர்களைப் பாதுகாக்கும் சமூகத்திட்டத்தின் அங்கமாக இத்திட்டம் கொண்டுவரப்படுகின்றது. பொருத்தமற்ற உள்ளடக்கத்திலிருந்து சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இலக்காக உள்ளது. ஆபாசத் தளங்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் வயது எல்லையைச் செயற்படுத்த மறுக்கும் தளங்கள் மீது £ 250,000 வரை அபராதம் விதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜூலை 15 ஆம் திகதி முதல்
"இரவில் மின்சாரத்தை அணைத்தைவிட்டு, அதிகாரிகளின் துணையோடு ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். இது தேர்தல்தானா, ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா" என திருமாவளவன் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.                                               355_19214_13027.jpg சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனது தாயார் மற்றும் குடும்பத்துடன் வந்து வாக்கைப் பதிவுசெய்தார்.                                              
சற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா சிறப்பாக நடைபெற்றது param-0-720x450.jpg சற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா கவுன்சிலர்பரம் நந்தா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சற்ரன் நகர மேயர் கவுன்சிலர் ஸ்டீவ் குக், மேயரஸ் பவுலின் குக்,ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரொம் பிரேக், போல்ஸ் ஸ்கலி, கவுன்சிலர் ருத் டொம்மி முதலானோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் இலங்கை, இந்திய தூதர அதிகாரிகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். புதுவருட விழாவில் நாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின் இசை என கலைநிகழச்சிகள் வெகுசிறப்பாக நடைபெற்றன. இதில் சற்ரன் தமிழ் பாடசாலை அதிபர் திருமதி கமலா ஜெயபாலன், நாட்டிய ஆசிரியை சுகந்தி, இசை ஆசிரியர் ருக்சாயினி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
2019 இந்திய தேர்தலில் காவியா ?-   தமிழா?   voting-300x192.jpgஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியிலிருந்து மே மாதம் 19ஆம் திகதி வரை தேர்தல் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவதும்  மிக மும்முரமாக பிரசார வேலைகள் நடை பெற்று வருகின்றது
Tik Tokபடத்தின் காப்புரிமை Getty Images நீங்கள் சினிமா பாடல்களுக்கு வாயசைக்கலாம் அல்லது ஏதேனும் வசனங்களுக்கு உங்கள் கற்பனையில் நீங்கள் நடிக்கலாம். உங்களின் சொந்த குரலை நீங்கள் பயன்படுத்த முடியாது. உங்கள் குரலை பயன்படுத்த முடியவில்லை என்றால் நீங்கள் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோக்கிறீர்களா? - ஒரு முறை டிக் டாக்கை பயன்படுத்தி பாருங்கள். என்னவெல்லாம் செய்ய முடியும் என்று தெரியும். இப்போது அதற்கு வாய்பில்லை. இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுவிட்டது. கூகுள் ப்ளே ஸ்டோரிலிரிருந்தும் நீக்கப்பட்டுவிட்டது. டிக் டாக்
ஃபேஸ்புக், வாட்சப் சேவைகள் உலகம் முழுவதிலும் செயலிழந்தது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க FBபடத்தின் காப்புரிமைREUTERS பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் தளம் செயல்படவில்லை என்று ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளும் செயலிழந்திருந்தன. ஃபேஸ்புக் பயன்படுத்த முடியவில்லை என்று 9000க்கும்
No photo description available. "மண்ணுளி பாம்பு" பற்றி... கேள்விப்  பட்டீர்களா? மண்ணுளி பாம்பு நம்மை நாக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப் பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும். SAND BOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன. இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல,
40590781_10160576515130212_3425960575815     Sangarasigamany Bhahi  
Image may contain: tree, sky, plant and outdoor பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை, 1. ஆண் பனை 2. பெண் பனை 3. கூந்தப்பனை 4. தாளிப்பனை 5. குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7. ஈச்சம்பனை 8. ஈழப்பனை 9. சீமைப்பனை 10. ஆதம்பனை 11. திப்பிலிப்பனை 12. உடலற்பனை 13. கிச்சிலிப்பனை 14. குடைப்பனை 15. இளம்பனை 16. கூறைப்பனை 17. இடுக்குப்பனை 18. தாதம்பனை 19. காந்தம்பனை 20. பாக்குப்பனை 21. ஈரம்பனை 22. சீனப்பனை 23. குண்டுப்பனை 24. அலாம்பனை 25. கொண்டைப்பனை 26. ஏரிலைப்பனை 27. ஏசறுப்பனை 28. காட்டுப்பனை 29. கதலிப்பனை 30. வலியப்பனை 31. வாதப்பனை 32. அலகுப்பனை
உன்னை எனக்கு அதிகம் பிடிப்பதில்லை, நாளும் ஒற்றன் போல் என்னைப் பின் தொடர்கிறாய். என்னை உனக்குப் பிடிக்குமா என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ம்ம்ம் சரி கொஞ்சமாகத் தெரிந்திருக்கலாம்...). ஆனாலும் நாமிருவரும் பிரிந்ததில்லை, அதில் எனக்கு எந்தவொரு வியப்புமில்லை – இது காலங்காலமாகத் தொடர்வதுதானே!   அவளும் உன்னை வெறுக்கிறாள், உன் மீதுள்ள பொறாமையே அதற்குக் காரணம். நாம் நெருங்கியிருப்பதைச் சபிக்கிறாள், அதைப் பலமுறை என்னிடமே சொல்லிருக்கிறாள். அப்போதெல்லாம் சிரித்து மழுப்பிவிடுவேன். ஆனாலும் உன்னைச் சபிக்க என் மனம் முன் வருவதில்லை.    %25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%258D%25E0%25AE%25B9%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg   நீ ஆடையின்றி நிர்வாணமாயிருப்பதை நான் ரசிக்கவில்லை, அதை
என்னை நானே வாசிக்கிறேன் என்ற தலைப்பின் கீழ் சின்னச்சின்னதாய் கவிதையில் படையல். இங்கே போர்முகம் இருக்காது...காதல் , நட்பு , சோகம், சுகம்,  தவிப்பு, அணைப்பு ,அழுகை , கனவு என்று பலதும் பத்துமாக அநுபவமும் இருக்கு அதி உச்ச கற்பனையும் மிதக்கும். வாசியுங்கள் சேர்ந்து அழுங்கள், சிரியுங்கள், என்னைப்போல தவியுங்கள் , காதல் கொண்டு கிறங்குங்கள், நட்பால் அணையுங்கள், சோகத்தில் சுகம் காணுங்கள். கவிதைகளை வாசித்து நீங்கள் குழம்பினால் நான் பொறுப்பில்லை.?    
உலகக் கிண்ண போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு ICC-Cricket-World-Cup-2019-South-Africa-cricket-squad-statistics-and-fixture-3.jpg 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டித் தொடருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகள் வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான கிரிக்கெட் அணிகளை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் : பாஃப் டூ பிளசிஸ் (அணித்தலைவர்) ஹாசிம் அம்லா குயின்றன் டி ஹொக் (விக்கெட் காப்பாளர்) ஜெ.பி. டுமினி ஐடென் மார்க்ராம் டேவிட் மில்லர் லுங்கி நிகிடி அன்ரிச்
pattarivua-Recovered.jpg   இலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுருவாக்கம் பற்றிய வரலாற்றை தவிர்த்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக அதன் தோற்றம் பற்றிய விபரங்களை இன்றும் தமிழில் தேடிக் கண்டு பிடிக்க முடிவதில்லை. ஏன் ஆங்கிலத்தில் கூட அது பற்றிய தகவல்கள் இல்லை. இந்தக் கட்டுரை முதற் தடவையாக தமிழ் மொழியில் வெளிவந்த முதல் நூலைப் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் விபரங்களை வெளிக்கொணர்கிறது.     அது போலவே இலங்கையில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளின் எழுத்துக்கள் வடிவம் பெற்ற வரலாறு பற்றிய