Banner

 

புதிய பதிவுகள்

அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர்.
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி
யுக்ரேன் போர்: 50,000 ரஷ்ய வீரர்கள் பலி, சாரிசாரியாக மரணக்குழியில் தள்ளும் ரஷ்யா – என்ன நடக்கிறது? 18 ஏப்ரல் 2024, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு
news-123.jpg யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது | Two Indian Students Arrested In The Us அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது
Savukku-Shankar-750x375.jpeg லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின்
லண்டன், பாரிஸில் புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்கிறது உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் 6-8.jpg லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் மூவினங்களைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் வாரம் சந்திக்கவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா, இதுவரை இலங்கையில் இயங்கிய ஆணைக்குழுக்களில் முதன்முறையாக புலம்பெயர் தமிழர்களையும் உள்வாங்கும் நோக்கிலேயே இச்சந்திப்புக்களை நடத்தவிருப்பதாகத் தெரிவித்தார். நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்படுவரும் நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் இயங்கிவரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலக அதிகாரிகள் அண்மையில் வட, கிழக்கு
Presidential_election-Candidates-2024-75 ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் நிலைப்பாடு என்ன?  - நிலாந்தன். - நாடு ஒரு தேர்தலை நோக்கி போய்க்கொண்டிருக்கும் பொழுது தமிழரசுக் கட்சியானது தொடர்ந்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அதன் செயற்பாடுகள் காரணமாக அது படிப்படியாக உடைந்து உடைந்து அதன் ஏகபோகத்தை இழந்து விட்டது என்பது உண்மைதான்.என்றாலும் அதுதான் இப்பொழுது உள்ளத்தில் பெரிய கட்சி. அக்கட்சி ஒரு தேர்தல் ஆண்டில் முடிவெடுக்க முடியாதபடி உடைந்து காணப்படுவது,தென் இலங்கைக்குச் சாதகமானது. நீதிமன்றம் கட்சியை முடக்கவில்லை. ஆனால் அண்மையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் செயல்பட முடியாத ஒரு நிலை. அதனால் முன்னைய தலைவராகிய மாவை சேனாதிராஜாவே இப்பொழுதும் தலைவராக உள்ளார். மாவை ஒரு திறமையான தலைவராக இருந்திருந்தால் கட்சி இப்படி ஒரு சீரழிவுக்கு வந்திருக்காது என்ற கருத்து கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் உண்டு. அவருடைய தலைமையின் கீழ் தான் கட்சிக்குள் இரண்டு
ரத்த அழுத்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை
மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய, 'மகிழ்' என்று தலைப்பிட்ட சிறுகதையை இங்கே மீள்பதிவு செய்கிறேன். அரசியல் சமூகம்                   மகிழ் !                                       -------சோம. அழகு     OIG2-2.jpeg உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு
spacer.png 1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம்.  இந்தப் புகைப்படம் தொடர்பாக ஒரு அன்பரின் கருத்து இதோ... வீரகேசரி நிறுவனம் 1930 ஆம் ஆண்டு சுப்ரமணிய செட்டியாரால் செட்டியார் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. வீரகேசரி என்பது அவரது மகனின் பெயர். சில மாதங்களே செட்டியார் தெரு அலுவலகம் செயற்பட்டது. பின்னர் சில காலங்கள் மருதானையில் செயற்பட்டது. பின்னரே கிராண்ட்பாஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இன்று வரையும் இயங்கி வருகின்றது. மருதானையில் அலுவலகம் செயற்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படமே இது. இப்படத்தில் தோளில் கருப்பு துண்டுடன் நிற்பவர் இலங்கை திராவிட கழகச் செயலாளராகவும் இந்திய இலங்கை தொடர்பாளராகவும் விளங்கிய ஏ.எஸ்.மணவைத் தம்பி ஆவார். இந்த படம் அவரிடமே இருந்தது. தற்போது இலங்கை இந்திய தொடர்பாளராகவும் சிறந்த பண்பாளராகவும்
zx.jpg இரண்டும் முரண்பட்டுக் கொண்டன.  கடுமையாக முட்டி மோதிக் கொண்டன.  முடிவில் இரண்டுமே செத்து மடிந்து விட்டன. நடந்த சண்டையில் இரண்டில் ஒன்றும் வெற்றிபெறவில்லை.  மாறாக ஓநாய்க்கு எவ்வித சிரமமுமின்றி இரண்டும் உணவாகி விட்டன. இதற்கு இரண்டுமே ஒரே பரம்பரை, ஒரே இனம்; ஒரே வீட்டைச் சேர்ந்தவை. இது போன்றுதான் சிலவேளை நமது குடும்பத்தினுள் நிகழும் சண்டைகளும் கூட  நமக்கு மத்தியில் பிரிவையும் பகையையும் தவிர வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை. நமது சகோதரனுடன் நாம் சண்டையிட்டு வெற்றியீட்டினால்  அதன்மூலம் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல. மாறாக நமது சண்டையினால் மூன்றாம் நபரான எதிரியின் சந்தோஷத்திற்கு  நாம் இரையாகி/விடுவதோடு பேரிழப்புகளுக்கும் ஆளாகி விடுகின்றோம். உலகில் குறைகள், பிரச்சினைகள் இல்லாத மனிதர்களில்லை. உறவுகள்,நட்புகள் நிலைக்க அவர்களது குறைகளையும் சற்று சகித்து வாழ பழகுவோம் மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினால். எல்லாவற்றிலும் குறை காண வேண்டாம்  அனைத்திலும் நுட்பம் பார்க்கவேண்டாம் விட்டுக்கொடுத்து வாழ்வோம்  உறவு செழிக்கும் அன்பு தழைக்கும். 🙏 முகநூலிருந்து......
Published By: PRIYATHARSHAN   09 MAR, 2024 | 10:36 AM image   நாளுக்கு நாள் சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், அவற்றில் ஏமாற்றுப் பேர்வழிகளின் செயல்களும் அதிகரித்துக்கொண்டே காணப்படுகின்றது. அண்மைக்காலமாக பேஸ்புக்கின் மேசஞ்சரில் (Messenger) தொடர்புகொள்ளும் சில ஹக்கர்களின் ஏமாற்று வித்தை அரங்கேறி வருகின்றது. இவ்வாறான ஹக்கர்கள் பேஸ்புக் கணக்குகளுக்குள் நுழைந்து மேசஞ்சர் ஊடாக குறித்து நபரின் மேசஞ்சருக்கு தொடர்புகொள்கின்றார். பேஸ்புக்கை ஹக்செய்து அவர்களுக்குப் பரீட்சயமான நண்பர்களின் போலி கணக்குகள் ஊடாக    மேசஞ்சரில் தொடர்புகொண்டு அவர்களை ஒரு குழுவில் இணைக்க விரும்புவதாகவும் அதற்கு அவர்கள் தொலைபேசி எண் வேண்டும் எனவும் கேட்கிறார்கள். அதைத் தொடர்ந்து குழுவில் இணைக்க ஒரு OTP வந்திருக்கும் என்று கேட்பார்கள். அதைக் கொடுத்துவிட்டால் உங்கள் தனிப்பட்ட தரவுகள் அனைத்தையும் திருடிவிடுவார்கள். இவ்வாறு தான் மெசஞ்சர் மூலம் தொடர்பு கொள்கின்றனர்,  “ Hello I’m
spacer.pngspacer.png
புதன் கோள்: சூரிய குடும்பத்தில் உள்ள இந்த மிகச்சிறிய கிரகம் ஒரு காலத்தில் பூமியைப் போல் பெரிதாக இருந்ததா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின்
"பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்
"பூச்சிய உடல் அளவு பண்பாடு"     இன்று உலக அழகி போட்டி [beauty queen competition], உடை அலங்கார காட்சி [fashion show] மற்றும் நடிகைகளின் தேர்வில், உலகளாவிய ரீதியில் 'உடல் அளவு' முதலிடம் வகுப்பதை காணுகிறோம். அது மட்டும் அல்ல, வரலாற்றில் ரோமில் [Ancient Rome] இருந்து பண்டைய தமிழ் நாடுவரை அது ஆதிக்கம் செலுத்தியும் உள்ளது.   உடல் அளவைப் பற்றி நாம் சிந்திக்கும் பொழுது, ஆண் மற்றும் பெண்களின் உடல் அமைப்பில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதையும் மற்றும் பொதுவாக, பெண்ணின் உடலமைப்பைக் காட்டிலும், ஆணின் உடல் அமைப்பு பெரிதாக இருப்பதையும் காண முடியும். அது மட்டும் அல்ல, உதாரணமாக, பெண்ணுக்கு 36", 24", 36" [bust vs waist vs hip / மார்பளவு vs இடை vs இடுப்பு] போன்ற ஒரு நாழிகை அளக்கும் கருவி வடிவில் [hourglass shape] இருப்பதையே சிறந்ததாகவும், அதேபோல, ஆணுக்கு ஆங்கில எழுத்தான 'வி' (V) வடிவம் சிறந்ததாகவும் கருதப் படுகிறது. இதில் பூச்சிய உடல் அளவு என்பது 30 22 32 அங்குலத்துக்கும் 36 28 36 அங்குலத்துக்கும் இடையில் எங்கேயாவது இருக்கலாம்.   உதாரணமாக "புடைகொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் இடை கண்டிலம்; அல்லதுஎல்லா உருவும் தெரிந்தாம்" [பக்கங்களில் பொங்கி எழுகின்ற மார்பகங்களையும்; அல்குலையும், இணைக்கின்ற இடை என் கண்களுக்குப் புலனாகவில்லை; அது
 "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல
"சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட
பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட தமிழர்களின் மருத்துவத்துறைக்கான பங்களிப்பு எப்போதும் வெகுந்து பாராட்டப்பட்டு வரும் நிலையில்.. பிரித்தானியாவுக்கான.. Institute of Biomedical Science  என்ற உயிரியல் மருத்துவத்துறை புலமைசார் நிறுவனம்.. தமிழர் பாரம்பரிய மாதமாக தை மாதத்தை.. தமிழ் மரபுத் திங்கள் என்று அடைமொழியோடு.. அனுஷ்டித்து தமிழர்கள் உயிரியல் மருத்துவத்துறையில் ஆற்றி வரும் பங்களிப்பை கெளரவப்படுத்தி உள்ளது. Celebrating Tamil Heritage Month 2024   2 January 2024 This January we're celebrating Tamil Heritage Month by speaking to our Tamil members about their heritage  lava1 Lavanya Kanapathypillai, Biomedical Scientist, Cellular Pathology, Royal Berkshire NHS Foundation Trust Tamil Heritage Month is an exciting opportunity to celebrate the invaluable contributions of
'இது பித்தனின் அறிகுறி அல்ல, ஒரு ஆரோக்கியமான திட்டமிடலின் அறிகுறி'     பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த வல்லிபுரம் என்னும் வேளாளர் நல்லூரைச் சேர்ந்த பொன்னம்மா என்பாரை மணந்து வேளாண்மை செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நான்கு பிள்ளைகள். ஆண்களில் ஒருவரின் பெயர் செல்லப்பா ஆகும்.   செல்லப்பா இளமையில் கந்தர்மடத்து சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி கற்றபின், நான் படித்த அதே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆங்கிலம் கற்று வந்தார். ஓரளவு கல்வி கற்றபின், சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தி உத்தியோகம் பார்க்க வேண்டியவரானார். யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆராய்ச்சி [ஆராய்ச்சி / public relations officer] உத்தியோகம் பெற்று வெகுதிறமையாகக் கடமையாற்றினார். என்றாலும் ஞான நாட்டங் கொண்ட செல்லப்பரின் நடையுடை பாவனைகளில் நாளிலும் பொழுதிலும் மாற்றங்கள் உண்டாயின. அவரின் போக்கு பெரிய புதிராகவே இருந்தது. வெளியில் அதை காட்டி கொள்ளாவிட்டாலும் உள்ளுற நாலூர் கந்தசுவாமியாருடன், அதிகமாக அர்த்த சாமத்தின்பின் ஒரு அந்தரங்க தொடர்பை தம்மில் ஏற்படுத்தி, ‘பிதாவே பிதாவே’ என்று பிதற்றியும் வந்தார்.   இந்த பித்தம் ஒரு எல்லையை தாண்டிய வேளையில், தமக்குள்ளேயே பேசிக்கொள்ளுதல், ஓமோம் என்று