புதிய அரசியல் யாப்பில் சைவத்திற்கு முன்னுரிமை கோரி பல பகுதிகளில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்! புதிய அரசியல் யாப்பில்... சைவத்திற்கு, முன்னுரிமை கோரி பல பகுதிகளில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்! இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை இவ்வாறு போராட்டம் நடைபெற்றுள்ளது. சாவகச்சேரி மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் ஏற்பாட்டிர் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் மதம் மாற்றிகள் மூலம் சைவ சமயத்திலிருந்து மக்கள் வேறு மதங்களுக்குச் செல்லமாட்டார்கள் என மறவன்புலவில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். அத்தோடு, சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் பௌத்தம் மற்றும் இந்து மதங்கள் பாதுகாக்கப்படும் என்பதோடு அவ்வாறு இல்லாவிட்டால் குறித்த இரு மதங்களும் மதம் மாற்றிகளால் மாற்றப்பட்டுவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக கிழக்கு இலங்கையில் மதம் மாற்றிகளின் செயற்பாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாக சச்சிதானந்தம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்து மக்கள் பசுவை கோமாதா என வணங்கிவரும் நிலையில், மாடுகளை வெட்டி உண்ணும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அவர் கோரியுள்ளார். மேலும், பாலைவனங்களிலேயே மாடுகளை அறுத்து உண்பார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை ஒரு சோலைவனம் என்பதால், இங்கே மாடுகளை கோமாதா என்று நினைத்து வணங்குவதுடன் அவைகளைப் பாதுகாத்திட வேண்டும் என மறவன்புலவு சச்சிதானந்தம் கூறியுள்ளார். Saiva-Peoples-Protest-600x342.jpg https://athavannews.com/2021/1209022

யாழில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது யாழில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது யாழில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள  திரையரங்குகள் அனைத்தும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அதேபோன்று திருமண மண்டபங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் செயற்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டபோதும், சில திரையரங்குகள் இன்னும் மூடப்படவில்லை என பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. அவை தொடர்பாக ஆராயப்படுவதாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாத்திரம் புதிதாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1209119

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? விக்னேஸ்வரன் கேள்வி   cv-600.png  32 Views மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தன்னிடம் கூறியதாக ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன், மணிவண்ணன் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னராகவே, (i)மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் (ii)அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படமாட்டாது என்றும் (iii) சாதாரண சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்தக் கூற்று இந்த நாட்டில் நீதிமன்றங்களும், பொலிஸாரும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றனவா என்ற கேள்வியையும் ஜனாதிபதினதும் அவரின் அரசாங்கத்தினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பவே அவை செயற்படுகின்றனவா என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது. அதேவேளை, மணிவண்ணன் அரசியல் உள்நோக்கம் கருதி, வேண்டும் என்றே கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்ற உண்மையையும் அமைச்சரின் கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது. மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளித்தது உண்மை என்றால், மணிவண்ணன் ஏதோ தவறு செய்துள்ளார் என்று அர்த்தப்படும். ஆனால், மணிவண்ணன் செய்தது தவறு என்று பொலிஸாரினால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே, ஜனாதிபதி என்ன அடிப்படையில் மணிவண்ணனுக்கு “மன்னிப்பு” வழங்கியுள்ளார்? அமைச்சர் ஏற்கனவே கூறியதுபோலவே, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அதேவேளை, யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பொலிஸார் மற்றும் மணிவண்ணன் தரப்பு வாத பிரதிவாதங்களைக் கேட்டு அறிந்த பின்னரேயே மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக அறிகின்றேன். ஆனால், மணிவண்ணனுக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தேவானந்தா கூறியிருப்பதும் மணிவண்ணன் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்னதாகவே அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் பொலிஸார் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள் என்றும் அமைச்சர் முன்னதாகவே கூறியிருப்பது, இந்த நாட்டில் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றங்களும் எந்தளவுக்குச் சுயாதீனத்தை இழந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரமாகக் காணக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான செயல்களை பொலிஸ் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் அவமதிக்கும் செயற்பாடுகளாகவும் கொள்ள முடியும். இதுதொடர்பில், ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே பொது மக்கள் இம்சைப்படப் போகின்றார்கள் என்றால் நீதிமன்றங்கள் எதற்காக? பொலிசார் மக்கள் பொலிசாரா ஜனாதிபதியின் கையாட்களா? விடை வேண்டும்.     https://www.ilakku.org/?p=47054

புதிய பதிவுகள்

வேட்பாளர் பலி: தேர்தல் களம் கண்டவர்களை மிரட்டும் கொரோனா மின்னம்பலம் spacer.png சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதிக்காக அனைவரும் காத்திருந்த நிலையில்... விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்று (ஏப்ரல் 11) காலமானார். அரசியல் வட்டாரங்களில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1987 முதல் காங்கிரஸில் தீவிரமாக இருந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்லையா. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அவரோடு சென்னை, டெல்லி என்று அரசியலில் பயணித்து பலரை சந்தித்த நிலையில் தனது செல்லையா என்ற பெயரை மாதவராவ் என்று மாற்றிக் கொண்டார். மத்திய அமைச்சர் அருணாசலத்தின் ஆதரவில் சமையல் எரிவாயு ஏஜென்சி எடுத்து நடத்தத் தொடங்கினார். பின் அதையே தொழிலாக செய்தார். காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸின் நெருங்கிய நண்பரான மாதவராவ், கடந்த மாதம் பீட்டர் அல்போன்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று, சிகிச்சை பெறும் அறைக்கு வெளியே நின்று பீட்டரோடு போனில் பேசி ஆலோசனைகள் செய்து வந்தார். அப்போதே நண்பர்கள் பலரும், ‘அண்ணே அடிக்கடி ஆஸ்பத்திரி வராதீங்க. தடுப்பூசி போட்டுக்கங்க’என்று அவரிடம் தெரிவித்தனர். . நீண்ட கால காங்கிரஸ் காரரான மாதவராவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கியது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் விருதுநகர் திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், காங்கிரஸ் நிர்வாகிகளையும் சந்தித்தார் பின் மார்ச் 17ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த மறுநாளே மாதவராவுக்கு லேசான காய்ச்சல் வர, தனது மருத்துவர் நண்பரின் ஆலோசனைப்படி . மதுரை அப்பல்லோவில் அட்மிட் ஆனார். அதேநேரம் அவருக்கு ஏற்கனவே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் இருந்ததால்,தீவிரமாக மருத்துவர்கள் கண்காணித்தனர். சில நாட்களில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்துக்கு அவரால் செல்ல முடியாததால் அவரது மகளும், அவரது டம்மி வேட்பாளருமான திவ்யாதான் பிரச்சாரம் செய்தார்,
மியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மியான்மர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டனர் என்று அந் நாட்டு சுயாதீன ஊடகங்கள் மற்றும் பெப்ரவரி ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் உயிரிழப்புகளைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பின் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. 3000.jpeg நாட்டின் மிகப் பெரிய நகரமான யாங்கோனில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மார்ச் 14 பின்னர் பாகோவில் புதிய இறப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை பதிவுசெய்யப்பட்டுள்ளது. 82 பேரின் இறப்பு எண்ணிக்கை அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தால் தொகுக்கப்பட்டுள்ளது.  இந்த சங்கம் பெப்ரவரி 1 ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றிய பின்னர் ஏற்பட்ட தாக்குதலில் இருந்து தினசரி உயிரிழப்புகள் மற்றும் கைதுகளை வெளியிடுகிறது. அதேநேரம் மியான்மர் நவ் செய்தித்தளமும் 82 பேர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது.     https://www.virakesari.lk/article/103650
அகதித் தஞ்ச விண்ணப்பங்களை இரு பிரிவுகளாக வகைப்படுத்தும் பிரீதி பட்டேலின் சர்ச்சைக்குரிய குடிவரவுத்திட்டம் – தமிழில் ஜெயந்திரன்   Capture-3.jpg  154 Views ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான சாசனத்தில் ஐக்கிய இராச்சியம் 1951 இல் ஒப்பமிட்டதிலிருந்து, போரிலிருந்தும், பல்வேறு துன்புறுத்தல்களிலிருந்தும், பயங்கரவாத தாக்குதல்களிலிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகத் தமது சொந்த நாடுகளை விட்டு வெளியேறி, எமது நாட்டைத்தேடி வந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அவர்கள் இங்கு குடியிருப்பதற்கான ஒரு வாய்ப்பை எமது நாடு வழங்கியிருக்கிறது. தாம் செலுத்த வேண்டிய வரிகளை ஒழுங்காகச் செலுத்தி, எமது சமூகத்துக்குப் பாரிய பங்களிப்பை வழங்கி, மாண்புமிக்க குடிமக்களாக அவர்கள் தற்போது விளங்குகிறார்கள். உண்மையில் இந்தக் கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் தேசிய சுகாதார சேவைகளில் (NHS) பணியாற்றியவர்கள் இவ்வாறாக அகதிகளாக எமது நாட்டுக்கு வந்தவர்கள் என்பது நாம் நினைவிற் கொள்ள வேண்டிய விடயமாகும். இந்த சாசனத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூருகின்ற இத்தருணத்தில் எமது பாதுகாப்பை நாடிநிற்கின்ற அகதிகளை வரவேற்பதன் மூலமே இந்த நிகழ்வை நாம் உரிய முறையில் கொண்டாட முடியும். ஆனால் இதற்குப் பதிலாக உள்நாட்டுச் செயலரான (Home Secretary) பிரீதி பட்டேல் அவர்களோ ஏனைய ‘பாதுகாப்பான நாடுகள் ஊடாக’ பிரித்தானியாவுக்குள் நுழைகின்ற அகதிகளின் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் ‘சட்டபூர்வமான பாதைகள்’ என்று அழைக்கப்படும் மீள்குடியேற்றத் திட்டங்களின் ஊடாக இந்த நாட்டுக்குள் வரும் அகதிகளுக்கு இந்த நாட்டிலே வாழ்வதற்கு உரிய அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த அகதிகள் பிரித்தானியாவுக்கு எப்படிப்பட்ட பாதை ஊடாகப் பயணஞ்செய்திருக்கிறார்கள் என்பதை வைத்துக்கொண்டு அந்த தீர்மானத்தின் அடிப்படையில் போரிலிருந்தும் பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்தும் தப்பி வருகிறவர்களில் யாருக்கு இங்கு தஞ்சம்

யாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களம்

புதிய அரசியல் யாப்பில் சைவத்திற்கு முன்னுரிமை கோரி பல பகுதிகளில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்! புதிய அரசியல் யாப்பில்... சைவத்திற்கு, முன்னுரிமை கோரி பல பகுதிகளில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்! இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை இவ்வாறு போராட்டம் நடைபெற்றுள்ளது. சாவகச்சேரி மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் ஏற்பாட்டிர் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் மதம் மாற்றிகள் மூலம் சைவ சமயத்திலிருந்து மக்கள் வேறு மதங்களுக்குச் செல்லமாட்டார்கள் என மறவன்புலவில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். அத்தோடு, சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் பௌத்தம் மற்றும் இந்து மதங்கள் பாதுகாக்கப்படும் என்பதோடு அவ்வாறு இல்லாவிட்டால் குறித்த இரு மதங்களும் மதம் மாற்றிகளால் மாற்றப்பட்டுவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக கிழக்கு இலங்கையில் மதம் மாற்றிகளின் செயற்பாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாக சச்சிதானந்தம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்து மக்கள் பசுவை கோமாதா என வணங்கிவரும் நிலையில், மாடுகளை வெட்டி உண்ணும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அவர் கோரியுள்ளார். மேலும், பாலைவனங்களிலேயே மாடுகளை அறுத்து உண்பார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை ஒரு சோலைவனம் என்பதால், இங்கே மாடுகளை கோமாதா என்று நினைத்து வணங்குவதுடன் அவைகளைப் பாதுகாத்திட வேண்டும் என மறவன்புலவு சச்சிதானந்தம் கூறியுள்ளார். Saiva-Peoples-Protest-600x342.jpg https://athavannews.com/2021/1209022
மியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மியான்மர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டனர் என்று அந் நாட்டு சுயாதீன ஊடகங்கள் மற்றும் பெப்ரவரி ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் உயிரிழப்புகளைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பின் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. 3000.jpeg நாட்டின் மிகப் பெரிய நகரமான யாங்கோனில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மார்ச் 14 பின்னர் பாகோவில் புதிய இறப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை பதிவுசெய்யப்பட்டுள்ளது. 82 பேரின் இறப்பு எண்ணிக்கை அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தால் தொகுக்கப்பட்டுள்ளது.  இந்த சங்கம் பெப்ரவரி 1 ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றிய பின்னர் ஏற்பட்ட தாக்குதலில் இருந்து தினசரி உயிரிழப்புகள் மற்றும் கைதுகளை வெளியிடுகிறது. அதேநேரம் மியான்மர் நவ் செய்தித்தளமும் 82 பேர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது.     https://www.virakesari.lk/article/103650
வேட்பாளர் பலி: தேர்தல் களம் கண்டவர்களை மிரட்டும் கொரோனா மின்னம்பலம் spacer.png சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதிக்காக அனைவரும் காத்திருந்த நிலையில்... விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்று (ஏப்ரல் 11) காலமானார். அரசியல் வட்டாரங்களில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1987 முதல் காங்கிரஸில் தீவிரமாக இருந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்லையா. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அவரோடு சென்னை, டெல்லி என்று அரசியலில் பயணித்து பலரை சந்தித்த நிலையில் தனது செல்லையா என்ற பெயரை மாதவராவ் என்று மாற்றிக் கொண்டார். மத்திய அமைச்சர் அருணாசலத்தின் ஆதரவில் சமையல் எரிவாயு ஏஜென்சி எடுத்து நடத்தத் தொடங்கினார். பின் அதையே தொழிலாக செய்தார். காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸின் நெருங்கிய நண்பரான மாதவராவ், கடந்த மாதம் பீட்டர் அல்போன்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் மருத்துவமனைக்கு
இந்திய, மோசடியாளர்களினால் இலக்கு வைக்கப்படும், பிரித்தானிய மக்கள். தீடீரென, ஈசல் கூட்டம் போல, பல அழைப்புக்கள் வருகின்றன. அதுவும் மொபைல் இலக்கத்தில் இருந்து. கடந்த வாரம் எனக்கு இரண்டு அழைப்புக்கள் வந்தன. ஒன்றினை HMRC (Her majesty's Revenue and Customs) என்றவுடனே வைத்துவிட்டேன். அடுத்து, சிறிது நேரம் இருந்ததால், ஹலோ என்றேன். பெயர் கேட்டார். நரேந்திர மோடி என்றேன். அவரே தூசணத்தால் பேசி விட்டு வைத்து விட்டார். இன்று எனது நண்பர், டாக்டர் ஒருவர். அழைப்பு வந்தது. அவர் அதனை வைத்துக் கொண்டே எனக்கு லேண்ட் லைனில் அழைத்தார். சிறிது தடுமாறி, ஆலோசனைக்கு அழைத்திருந்தார். மோசடி தடுப்பு பிரிவினர் பேசும்போது, வேறு யாருடன் பேசுவது, தண்டைக்குரிய குற்றம் என்று சொல்வது கேட்டது. நல்ல, தமிழ் தூசனத்தில் பேசிப்போட்டு வை என்றேன். அவரும் பேச, அவளோ, இன்னும் மோசமாக திட்டுறாள்.  அவளுக்கு என்ன, பிரஷர் என்று தெரியவில்லை. மிக மோசமாக திட்ட, எனக்கும், நண்பருக்கும் சிரிப்பு. ஆகவே, மக்களே, HMRC, ஒருபோதுமே, யாரையும் கைது செய்ய போலீசாரை அனுப்ப முடியாது. அது அமெரிக்க வழக்கம். இங்கு இல்லை. இங்கு நீதிமன்றுக்கு மட்டுமே அழைக்க முடியும். மேலும், உங்கள் கணக்கில் பிழை இருப்பின், அது, கணக்காளருடனே விவாதிக்கப்படும். உங்களுடன் அல்ல. ஆகவே, கைபேசி இலக்கத்தில், வந்து, நீங்களும் ஒரு நல்ல மூட்டில்
  ஆயரும் அரசியல் வாதிகளும்! நிலாந்தன். April 11, 2021 politicians.jpg 2013ஆம் ஆண்டு தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது. அப்பொழுது மன்னார் மறைமாவட்டத்தின்ஆயராக இருந்த அமரர் ராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் சிவில் சமூக அமையத்தின் அழைப்பாளராக இருந்தார். அவருடைய தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் சிவில் சமூகத்தில் பிரதிநிதிகளும் ஆர்வமுடையவர்கள் பங்குபற்றினார்கள். இக்கூட்டத்தில்தான் ஒரு தமிழ் தேசியப்பேரவையை உருவாக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக ஒரு ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டது. அதில்கூட்டமைப்பின் சார்பாக சுமந்திரனும் மக்கள் முன்னணியின் சார்பாக கஜேந்திரகுமாரும் சிவில்சமூகத்தின் சார்பாக சட்டவாளர் புவிதரனும் குருபரனும் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழு தொடர்ந்தும் செய்யப்படவில்லை. தமிழ் தேசிய பேரவை உருவாக்கப்படவில்லை. அப்படி ஒரு தமிழ் தேசிய பேரவை உருவாக்க வேண்டிய தேவை
  14608929_1771977559756322_5757448025507714572416_1771977576422987_29343042921284 NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது
150519611_287781746105752_75327910009814   கொங்கோ விடுதலை வீரன் பட்ரிஸ் லுமும்பாவின் (Patrice Lumumba) 60வது ஆண்டு நினைவாக…. (1925 – 1961) கொங்கோ ஆபிரிக்காவிலுள்ள மிகவும் வளம்மிக்க நாடுகளில் ஒன்று. மத்திய ஆபிரிக்காவில் ஆரம்பித்து கொங்கோவின் ஊடாகப் பாய்ந்து அத்திலாந்திச் சமுத்திரத்தில் கலக்கும் கொங்கோ நதியினால் கொங்கோவில் மழைக்காடுகளும், புல்வெளிகளும் செழிப்புற்றிருந்தன. அதைவிட டைட்டானியம், தங்கம், வைரம், தாமிரம் போன்ற ஏராளமான கனிம வளங்களும் நிறைந்த நாடு. ரப்பர் வளமும் மிகுந்த நாடு. (இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் கொங்கோவில் இருந்துதான் தமக்குத் தேவையான பல தாதுப் பொருட்களைப் பெற்றன.) எனவே ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள்
தேசிய கீதமும் சைமன் காசிச் செட்டியின் நினைவும்.   84490013_2665492250153699_26899658316930   தேசிய கீதம் தோன்றுவதற்கு முன்னரே,இலங்கையின் நீளத்தையும் சுற்றளவையும் அளந்து அறிவித்தவர் ஒரு தமிழர் என்ற நினைவை இந்நாட்களில் பதிவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 'இலங்கையின் அட்ச தேசாந்திரத்தையும் நீள அகலத்தையும், சுற்றளவையும் முதன்முதலாக ஐரோப்பிய நில அளவையாள நிபுணர்கள் வியக்கும் வகையில் அளந்து கணித்து நிதானமாக அறிவித்த பெரியார் சைமன் காசிச்செட்டி என்னும் தமிழரே. இன்றைக்கு உடனுக்குடன் வரும் சட்ட மாற்றங்களை அறிக்கைகளை வெளியிடும் அரசாங்க வர்த்தமானி (கசற்) வருவதற்கு முன்னோடி அவரே. பிரித்தானிய அரசுக்கு முதலே, இலங்கை பற்றிய செய்திகளையும், எல்லாவிதமான தகவல்களையும் திரட்டி 'சிலோன் கசற்றியர்' என்று நூலாய் வெளியிட விரும்பினார்
🙏 Thank You, LARRY KING !!! 🙏, LARRY KING, அமெரிக்க ஊடகத்துறையில் 63 ஆண்டுகள் கோலோச்சிய ஜாம்பவான். அவருடைய 87வது வயதில் இன்று (January 23, 2021) காலமானார். ஆட்சியாளர்கள் முதல் புரட்சியாளர்கள் வரை, ஆறு தசாப்தங்களில் சுமார் 50,000 நேர்காணல்களூடாக வரலாற்றைப் பதிவுசெய்த சாதனையாளன்
நீதிக்கும் சமாதானத்துக்குமான, கேள்விகளின் காலம் - 1 – நடராஜா குருபரன்! #justice #peace #memories #peace_talk கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்குப் பின்பற்றப்படும் வழி முறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். ஒரு எண்ணம் சற்று சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அது கொள்கையாகிறது. சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பின்பும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு ஏற்படும் போது அது கோட்பாடாகிவிடுகிறது. முன் கூட்டியே தீர்மானிக்கப்படும் நம் கொள்கைகளில், மூலோபாயம் தந்திரோபாயங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவைப்படின் அவை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய உள்ளீடுகளை புகுத்துவது அவசியமாகிறது. அதேவேளை ஒரே ஒரு முறை நேர்ந்த திருத்தக் கூடிய பிழைகளுக்காகவும், எளிதில் மீண்டும் நிகழாமல் காத்துக் கொள்ளக்கூடிய பிழைகளுக்காகவும் புதிய கொள்கைகளை உருவாக்குவதனையும் தவிர்பது முன்னுதாரணமாகிறது. இறுக்கமான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமாகிறதோ, அந்த அளவிற்கு அவை நெகிழ்வுடன் கூடிய, வழிகாட்டல்களுடன் அமைய வேண்டும் என்பதும் வரலாறாகிறது. உலகலாவிய தேசிய இனங்களின் விடுதலைப்
சபீதா-சிறுகதை-சாத்திரி இம்மாத நடு  இணைய சஞ்சிகையில் . சாத்திரி இப்போதெல்லாம் வரும் தமிழ்ப்படங்களையோ செய்தி சனல்களையோ பார்ப்பதை விட நசினல் ஜியோ கிராபி சனலை பார்க்கலாம். அதை பதிவுசெய்யும் கமராமேன்களுக்குத்தான் உண்மையில் அவார்டு கொடுக்கவேண்டும். காலை எழுந்ததுமே தேநீரோடு கொஞ்சநேரம் ஜெயோ கிராபி சனலை பார்க்கத் தொடங்கி விடுவேன். அதுவும் சிறுத்தை ஒரு மிருகத்தை வேட்டையாட பதுங்கியபடி நடக்கும்போதே ஒரு அழகியின் நடையை பின்னிருந்து இரசிப்பது போல அதன் அசைவுகளை அங்கம் அங்கமாக இரசிக்கத் தொடக்கி விடுவேன். குறி தவறாமல் அது தன் இலக்கின் கழுத்தை பாய்ந்து கவ்வும்போதே நானும் பாய்ந்து டிவியை கவ்வாதகுறையே தவிர அந்த சிறுத்தையாகவே மாறி விட்டிருப்பேன். பொதுவாகவே பெரும்பாலானவர்களின் மனதில் இருக்கும் குரூரம் இது போன்றவற்றை இரசிக்கத் தோன்றும் என்றும் உளவியல் சொல்கிறது. எனக்கு அது பற்றியெல்லாம் ஆழமாகத் தெரியாது. உணவுச் சங்கிலி இப்படிதான் உலகம் இயங்குகின்றது என்றது மட்டும் தெரியும். அன்றும் சிறுத்தையொன்று மானை
  வெளி நாட்டு சரக்கு தம்பி  எங்க விருப்பமான தண்ணி தம்பி  மில்லி கொஞ்சம் உள்ள போனால்  விட்டமீனு தானே தம்பி  வீரம் எல்லாம் ஏறும் தம்பி  வீட்டிலையும் பேச்சு தம்பி வொட்கா விஸ்கி விறண்டி என்று  இந்த வில்லங்கத்தை போட்டு போனா  பாட்டு எல்லாம் தானா வரும்  பல கூத்து எல்லாம் கூட வரும்  அடிச்சுப் போட்டு இருந்தா தம்பி  ஆயிரம் தத்துவத்தோட  அடுக்கு மொழியில் கவிதை வரும்  அரசியலும் பேச வரும்  நேற்று வரை நல்ல பிள்ளை  இன்று போத்தலோட போச்சுதெல்லாம் பேச்சும் மாறிப் போச்சு தம்பி  பார்ட்டி ஓட வாழ்க்கை தம்பி  பிறக்கும் போது இருந்த குணம்  இப்போ இல்லையே  புதுசா எல்லாம் தலையில்  இப்போ மாறிப் போச்சுது  வெளி நாட்டு வாழ்கை எல்லோ  நாம வெள்ளைக்காரன் ஆகிப் போனோம்  வேட்டி சால்வை மறந்து போனோம்  இப்போ கோட்டும் சூட்டும் தானே தம்பி  அவசர வேலை என்று  ஆத்துக்காறிக்கு டூப்பு விட்டு  அண்ணா போத்திலோட போய் இருந்து  அங்க கூத்தும் பாட்டும் வேற என்ன சோசல் என்று சொல்லிப் போட்டு  சோக்கா தண்ணி போட்டு ஆடிப் போட்டு  காலம் எல்லாம் போச்சு தம்பி  கன வருத்தங்களும் ஆச்சு தம்பி  டாக்டர் இப்போ சொல்லிப்போட்டேர்  இனி தண்ணி போட்டா முடிஞ்சாயென்று இப்போ கூத்தும் போச்சு பாட்டும் போச்சு  அலைஞ்சு திரியும் நாளாய் ஆச்சு  ஆசுப்பத்திரி வாழ்வா போச்சு  அப்பவெல்லாம் என் ஆத்துக்காறி
2021 டி-20 உலக் கிண்ணம் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் - ஐ.சி.சி. 2021 ஆண்கள் டி-20 உலக் கிண்ணம் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. செயல் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் தெரிவித்துள்ளார். Geoff_Allardice.jpg 7 ஆவது டி-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புதிய நோயாளர்களின் அன்றாட அடையாளம் ஒரு இலட்சத்தை கடந்துள்ளமையினால் டி-20 உலக கிண்ண போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  இது குறித்து சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி புதன்கிழமை ஊடகங்களிடம் பேசியபோது, டி-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்துவதற்கான வேலைகளை தொடங்குகிறோம். இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு மாற்று திட்டத்தையும் கைவசம் வைத்துள்ளோம். ஆனால் மாற்றுத்திட்டம் குறித்து நாங்கள் இன்னும் எதுவும் விவாதிக்கவில்லை.  இந்திய கிரிக்கெட்
May be an image of 1 person and text that says 'கபிலர்' May be an image of text   1610 ல் கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி மூலம் அதன் வளையங்களை கண்டுபிடித்தார்.ஆனால்,முதன் முதலில் சனிக்கிரகத்தை கண்டுபிடித்தவர் கபிலர் காலம்:கி.மு 3-ம் நூற்றாண்டு!   கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். ... இன்னா நாற்பது என்ற பதினெண் கீழ்கணக்குத் தொகுதியில் உள்ள நூலின் ஆசிரியரான ”
இவ‌ருக்கு த‌மிழ் நாட்டுக்கு வ‌ரும் போது த‌மிழ் தெரியாதாம் , தமிழ் நாட்டுக்கு வ‌ந்த‌ பிற‌க்கு தான் தமிழ் க‌ற்று கொண்டேன் என்று வேறு காணொளியில் சொல்லி இருந்தார்........... எம்ம‌வ‌ர்க‌ளின் தாக்குத‌ல்க‌ளை உண்மையும் நேர்மையுமாய் ஆதார‌த்தோடு அப்ப‌டியே எடுத்து சொல்லுகிறார்............ஹிந்தி கார‌னுக்கு எம் போராட்ட‌ உண‌ர்வு எப்ப‌டி வ‌ந்த‌து..........இது என‌து சிறு ச‌ந்தேக‌ம்............ கோட்டை தாக்குத‌லுக்கு  எம்ம‌வ‌ர்க‌ள் இவ‌ள‌வு தியாக‌ம் செய்து இருக்கின‌ம் என்ற‌து இந்த‌ காணொளிய‌ பார்த்து தான் தெரிந்து கொண்டேன்...........எல்லாம் காற்றோடு காற்றாக‌ போய் விட்ட‌து  கோட்டை தாக்குத‌லில் வீர‌ச்சாவ‌டைந்த‌ அனைத்து  போராளிக‌ளுக்கும் வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏