Aggregator

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் வீரவணக்க நாள்

1 week 5 days hence

முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.

அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.

அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.

தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

விடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.

விடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.
அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.

தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.

இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.

வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.

புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.

அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.

அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.

ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.
பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.
தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.
தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.

நவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.

வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார்.

விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.

முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.
இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.
மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.
ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.

தமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.

ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.

ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் வீரவணக்க நாள்

1 week hence

தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் வீரவணக்க நாள்

விடுதலைப் புலிகளின் பேரூட் இரகசியத் தளமும், அந்த தளத்தின் பின்னால் மறைந்துள்ள சில உண்மைகளும்!!

32 minutes 38 seconds ago
விடுதலைப் புலிகளின் பேரூட் இரகசியத் தளமும், அந்த தளத்தின் பின்னால் மறைந்துள்ள சில உண்மைகளும்!! 987 இன் இறுதிப்பகுதியில் மட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளம் ஒன்றைச் சுற்றிவளைத்து அழிக்கும் நோக்குடன் இந்தியப்படையின்முக்கியமான ஒரு படைப்பிரிவான மவுன்டன் டிவிசன்(Mountain Division) படைப்பிரிவு பாரிய படை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டது. 'ஒப்பரேஷன் புளூமிங் டுளிப்| (Operation Blooming Tulip)என்று பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அந்தப் படை நடவடிக்கை, விடுதலைப் புலிகளின் மிகவும் முக்கியமான ஒரு ரகசியத் தளத்தை நோக்கிததான் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு தரவைக் காடுகளின் மத்தியில் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் முக்கிய தளம் ஒன்றைத் தாக்கி அழிப்பதே அந்த நடவடிக்கையின் குறிக்கோளாக இருந்ததாக இந்தியப்படையின் மட்டக்களப்புத் தலைமை புதுடில்லிக்கு அறிவித்திருந்தது. விடுதலைப்புலிகளின் அந்த முக்கிய தளத்தின் பெயர் 'பேரூட் பேஸ்' என்று இந்தியப் படையினருக்குதகவல்கள் கிடைத்திருந்தன. புலிகளின்ஆயுதக் களஞ்சியங்கள், பிராந்தியத் தலைமை, பயிற்சி முகாம்கள், நடவடிக்கைத் தலைமையகம், தொலைத்தொடர்பு மையங்கள் என்பன இந்த 'பேரூட்' பேசிலேயே அமைந்திருப்பதாகவே இந்தியப்படையினர் நம்பியிருந்தார்கள். மட்டக்களப்பில்அந்தக் காலத்தில் இருந்த அந்த 'பேரூட் தளம்' அல்லது ‘பேரூட் பேஸ் (Beirut Base) பற்றியும், அந்த தளத்திற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்பது பற்றியும், அந்த முகாம் பற்றி மக்கள் மத்தியிலும், மற்றய போராளிகள் மத்தியிலும், ராணுவத்தினரிடமும் பரவியிருந்த வதந்திகளைக்கடந்த உண்மைகள் பற்றியும்தான் இந்தக் கட்டுரையில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம். 'பேரூட் தளம்' மட்டக்களப்பில்அந்தக் காலத்தில் இருந்த புலிகளின் 'பேரூட் தளம்' மக்கள் மத்தியில் மாத்திரமல்ல சிறிலங்காப்படைகள் மத்தியிலும், மற்றய தமிழ் இயக்கங்கள் மத்தியிலும், இந்தியப் படையினர் மத்தியிலும் மிகவும் பிரபல்யமாகவே இருந்தது. மட்டக்களப்பில்இருந்த புலிகளின் மிகப் பெரியதொரு தளமே 'பேரூட் தளம்' என்றே பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அந்த‘பேரூட் தளத்தில் பலவகையான கனரக ஆயுதங்கள், பயிற்சி முகாம்கள் நிலக்கீழ் சுரங்கங்கள்,பாரிய ஆயுதக் களஞ்சியங்கள் எல்லாம் அமைந்திருப்பதாகவே அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். மட்டக்களப்பின் தரவை மற்றும் குடும்பிமலைப் பிரதேசித்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியிலேயே புலிகளின் இந்த பாரிய ‘பேரூட் தளம்‘ அமைந்திருப்பதாகவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பேச்சடிபட்டுக்கொண்டிருந்தது. ஆனால் உண்மையிலேயே 'பேரூட் பேஸ் (Beirut Base) என்று புலிகளால் குறிப்பிடப்பட்ட அந்தத் தளம் தரவையிலோ அல்லது குடும்பிமலைப் பிரதேசத்திலோ அமைந்திருக்கவில்லை. மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள கொக்கட்டிச்சோலையில் உள்ள காடுகளின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு முகாமையே புலிகள் 'பேரூட் பேஸ்' என்று சங்கேத பாஷையில் அழைத்து வந்தார்கள். மக்கள் பேசிக்கொண்டது போன்று அல்லது மற்றய தமிழ் இயக்கங்கள் நம்பிக்கொண்டிருந்தது போன்று, அல்லது சிறிலங்காப் படையினர் அச்சப்பட்டுகொண்டிருந்தது போன்று புலிகளின் அந்த பேரூட்முகாமில் கனரக ஆயுதங்களோ அல்லது நிலக்கீழ் சுரங்கங்களோ இருக்கவில்லை என்பதுதான் உண்மை. இன்னும் குறிப்பாகக் குறிப்பிடுவதானால் அந்த பேரூட் தளத்திலும் அதனை அண்டிய கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலும் 48 போராளிகள் மாத்திரமே செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை. பின்நாட்களில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத்தளபதியாக இருந்த தளபதி ரீகன் தலைமையில், பின்நாட்களில் பிரபல்யமான தளபதிகளான தளபதி ராம், தளபதி ரமேஷ், தளபதி ரமணன் போன்றோர்,அந்தக் காலகட்டத்தில் இந்த ‘பேரூட் பேசிலேயே’ செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலகட்டத்தில் இயக்கங்கள் பற்றிய மிகைப்படுத்தல்கள் மக்கள் மத்தியில் மிக மிக வேகமாகப்பரவிக்கொண்டிருந்ததன் ஒரு அங்கமாக இந்த ‘பேரூட் பேஸ்’ பற்றிய மாயை மக்கள் மத்தியில்பெரிய அளவில் உருவாகி அடிக்கடி அச்சத்துடனும், பெருமையுடனும் பேசப்படுகின்ற ஒரு விடயமாகமாறியிருந்தது. லெபனானின் தலைநகரம் விடுதலைப்புலிகளின் அந்தத் தளத்திற்கு ஏன் ‘பேருட் பேஸ்’ என்ற பெயர் வந்தது என்பதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்தில் லெபனானின் தலைநகரான 'பேரூட்' என்ற பெயரானது போராடுகின்ற இனக் குழுமங்களினால்ஆச்சரியமாக நோக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற ஒரு பெயராகவே இருந்தது. அந்தநேரத்தில் தமிழ் இயக்க உறுப்பினர்களில் பல முக்கியஸ்தர்கள் லெபனானில் இராணுவப் பயிற்சியினை எடுத்துக்கொண்டிருந்ததால் லெபனானின் தலைநகரான பேரூட்டின் பெயர் போராளிகள் மத்தியில்அதிகம் பிரபல்யமாகியிருந்தது. இவை அனைத்தையும்விட 1983ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் லெபனான் தலைநகரில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க இராணுவத் தளம் மீது இஸ்லாமிய போராளிகள் மேற்கொண்டிருந்த ஒரு பாரிய தற்கொலைத் தாக்குதலும், அந்த தாக்குதல் பற்றிய செய்தியும் தமிழ் ஈழப் போராளிகள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததாலும் 'பேரூட்' என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபல்யமாகியிருந்தது. 1983ஒக்டோபர் மாதம் 23ம் திகதி லெபனான் தலைநகரான பெரூட்டில் நிலைகொண்டிருந்த அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் படையினரின் தளம் மீது இஸ்லாமிய ஜிகாத் போராளிகள் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். அதில் அமெரிக்காவின் 220 சிறப்பு அதிரடிப்படையினர் ( United StatesMarine Corps )உட்பட 299 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் உலகம் முழுவதும்- குறிப்பாகப் போராடும் இனக்குழுமங்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகப் பேசப்பட்ட தாக்குதல் அது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அமெரிக்க மரைன் பிரிவுக்கு மிகப் பெரிய இழப்பினை ஏற்படுத்திய தாக்குதல் இடம்பெற்ற பிரதேசம் என்பதால் மக்கள் மத்தியில் 'பேரூட்' என்றபெயர் மிகவும் பிரபல்யமாகியிருந்தது. குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் இந்த 'பேரூட்' என்ற பெயர் அதிக மரியாதையுடனும், பலத்த எதிர்பார்ப்புடனும் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயராகவே இருந்தது. ஆக்கிரமிப்பாளருக்கு அச்சத்தையும், போராடும் இனத்திற்கு விடுதலை உணர்வையும் ஏற்படுத்தும் ஒரு பெயராகவே இந்த "பேரூட்" என்ற பெயர் அந்தநேரத்தில் உலகில் வலம் வந்துகொண்டிருந்தது. (புளொட் அமைப்பு இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தனது தளத்தின் ஒரு முகாமிற்கு 'பேரூட் முகாம்' என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அதேபோன்று யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்குப் பெயர்போன ஒரு விடுதிக்கு 'பேரூட் விடுதி' என்றுபெயரிட்டிருந்தார்கள். 'பேரூட்' என்ற பெயர் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியிலும்போராளிகள் மத்தியிலும் எந்த அளவிற்குப் பிரபல்யமாக இருந்தது என்பதற்கு இவைகள் சில உதாரணங்கள்) சரி. குறிப்பாக மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகளின் இந்த முகாம் அல்லது தளத்திற்கு 'பேரூட் பேஸ்' என்று எவ்வாறு பெயர் வந்தது? இதற்கானகாரணம் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஊகங்கள், அனுமாணங்கள் பல இருக்கின்றன. தொலைத்தொடர்புக்கருவி அந்தக்காலகட்டத்தில் பிரதேசவாரியாக விடுதலைப் புலிகள் தமது தொடர்பாடல்களுக்குப் பயன்படுத்திய சக்திவாய்ந்த பிரதான தொலைத்தொடர்பு கருவிகளை மையப்படுத்தி சில குறியீட்டுகளைப் பயன்படுத்திவந்தார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தொடர்பாடலை மையப்படுத்தி அவர்சார்ந்த தொடர்பாடல்பிரதேசத்தை 1-4 அதாவது வன்-போர் (One-Four) பேஸ் என்று அழைப்பார்கள். புலிகள்தலைவர் இந்தியாவில் தங்கியிருந்த பொழுது இந்தியாவில் இருந்த 'வன்-போர்' தளம் பின்னர்அவர் வன்னியில் அலம்பில் காடுகளில் தங்கியிருந்த பொழுது அங்கு செயற்பட்டது இந்தக் காரணத்தினால்தான். இதேபோன்று யாழ்பாணத்தை 2-2 டு-டு (Two-Two) பேஸ் என்றும் வடமாராட்சியை 2-3 டு-திறீ (Two-Three)பேஸ் என்றும் அழைப்பார்கள். இவை அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் பிரதான தொலைத்தொடர்பு கருவிகளைஅடிப்படையாக வைத்தே நடைமுறைப்படுத்தப்பட்டன. ஒருபெரிய தொலைத் தொடர்பு கருவி. ஏதாவது மரமொன்றில் அதன் 'அன்டனாக்களை' உயரத்தில் கட்டிவிட்டால் இலங்கை முழுவதும் மாத்திரமல்ல, இந்தியாவில் உள்ள புலிகளைக் கூட இதனூடாக இலகுவாகத் தொடர்புகொண்டுவிடமுடியும். அந்தக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் மாத்திரமேஇருந்த தொலைத் தொடர்பு வசதிகள் அவை. 80களின் நடுப்பகுதியில் தளபதி அருணா மட்டக்களப்பிற்கு வந்தபொழுது அவரால் மட்டக்களப்பு அம்பாறைமாவட்டத்திற்கென்று ஒரு பிரதான தொலைத்தொடர்புக் கருவி கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பு வந்தறுமூலைப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட அந்தத் தொலைத்தொடர்பு கருவியை அடிப்படையாக வைத்து 4-6 போர்-சிக்ஸ் (Four-Six) பேஸ் என்று மட்டக்களப்பு பிரதேசதம் குறியீட்டுப் பெயரில்அழைக்கப்பட்டது. மட்டக்களப்பு-அம்பாறைமாவட்டத்தில் இருந்து புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட் முதலாவது போராளியும், இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சிபெற்றவரும், பின்நாட்டகளில் புலிகள் அமைப்பில் மூத்த தளபதியாகப் பல களம் கண்டவரும், தற்பொழுதும் ஐரோப்பிய நாடொன்றில் உயிருடன் இருப்பவருமான தளபதி காந்தன் அவர்களே மட்டக்களப்பின் முதலாவது பிரதான தொலைத்தொடர்புக் கருவியை கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்றுஅம்பாறை மாவட்டத்திற்கான தொலைத்தொடர்புக்கருவி அங்கு அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறைப் பிரதேசத்தை 4-8 போர்-எயிட் (Four-Eight) பேஸ் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகள் அணிகளுக்கான தொலைத்தொடர்புகள் அம்பாறை மாவட்டத்துடனோயே அதிகம் இருந்ததால், கொக்கட்டிச்சோலை புலிகள் அணியின் தளங்களையும் ஆரம்பத்தில் 4-8 போர்எயிட் (Four-Eight) பேஸ் என்றே அழைத்துவந்தார்கள். இந்த 'போர்-எயிட்' - தான் கால ஓட்டத்தில் 'பேரூட்டாக' திரிவடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. 'சிக்காக்கோ ' அதேபோன்று அந்தக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உலகின் பிரபல்யமா நகரங்களின் பெயர்களைச் சூட்டி அழைப்பது வளக்கம். யாழ்பாணப் பிரதேசத்தை 'சிக்காக்கோ ' என்றும், வடமாராட்சிப் பிரதேசத்தை 'கலிபோர்ணியா' என்றும் அழைத்ததைப் போன்று மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தை 'பேரூட்' என்று அழைத்திருப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது. ஆகமொத்தத்தில் 'பேரூட் பேஸ்' என்பது மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் பிரபல்யமான ஒருமுகாம் என்பதும், இந்த 'பேரூட் பேஸ்' என்பது கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலேயே அமையப்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Niraj David அவர்களால் வழங்கப்பட்டு 22 Mar 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Niraj David என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும். https://www.ibctamil.com/articles/80/116446?ref=home-imp-flag&fbclid=IwAR0zvgkp67d57eB6TM2B-baS1DY4nUzByb53iwss7drP7Ib-sBqrvOF-5Og

விடுதலைப் புலிகளின் பேரூட் இரகசியத் தளமும், அந்த தளத்தின் பின்னால் மறைந்துள்ள சில உண்மைகளும்!!

32 minutes 38 seconds ago
விடுதலைப் புலிகளின் பேரூட் இரகசியத் தளமும், அந்த தளத்தின் பின்னால் மறைந்துள்ள சில உண்மைகளும்!!

 

987 இன் இறுதிப்பகுதியில் மட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளம் ஒன்றைச் சுற்றிவளைத்து அழிக்கும் நோக்குடன் இந்தியப்படையின்முக்கியமான ஒரு படைப்பிரிவான மவுன்டன் டிவிசன்(Mountain Division) படைப்பிரிவு பாரிய படை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டது.

'ஒப்பரேஷன் புளூமிங் டுளிப்| (Operation Blooming Tulip)என்று பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அந்தப் படை நடவடிக்கை, விடுதலைப் புலிகளின் மிகவும் முக்கியமான ஒரு ரகசியத் தளத்தை நோக்கிததான் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு தரவைக் காடுகளின் மத்தியில் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் முக்கிய தளம் ஒன்றைத் தாக்கி அழிப்பதே அந்த நடவடிக்கையின் குறிக்கோளாக இருந்ததாக இந்தியப்படையின் மட்டக்களப்புத் தலைமை புதுடில்லிக்கு அறிவித்திருந்தது.

விடுதலைப்புலிகளின் அந்த முக்கிய தளத்தின் பெயர் 'பேரூட் பேஸ்' என்று இந்தியப் படையினருக்குதகவல்கள் கிடைத்திருந்தன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

புலிகளின்ஆயுதக் களஞ்சியங்கள், பிராந்தியத் தலைமை, பயிற்சி முகாம்கள், நடவடிக்கைத் தலைமையகம், தொலைத்தொடர்பு மையங்கள் என்பன இந்த 'பேரூட்' பேசிலேயே அமைந்திருப்பதாகவே இந்தியப்படையினர் நம்பியிருந்தார்கள்.

 

மட்டக்களப்பில்அந்தக் காலத்தில் இருந்த அந்த 'பேரூட் தளம்' அல்லது ‘பேரூட் பேஸ் (Beirut Base) பற்றியும், அந்த தளத்திற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்பது பற்றியும், அந்த முகாம் பற்றி மக்கள் மத்தியிலும், மற்றய போராளிகள் மத்தியிலும், ராணுவத்தினரிடமும் பரவியிருந்த வதந்திகளைக்கடந்த உண்மைகள் பற்றியும்தான் இந்தக் கட்டுரையில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

'பேரூட் தளம்'

மட்டக்களப்பில்அந்தக் காலத்தில் இருந்த புலிகளின் 'பேரூட் தளம்' மக்கள் மத்தியில் மாத்திரமல்ல சிறிலங்காப்படைகள் மத்தியிலும், மற்றய தமிழ் இயக்கங்கள் மத்தியிலும், இந்தியப் படையினர் மத்தியிலும் மிகவும் பிரபல்யமாகவே இருந்தது.

மட்டக்களப்பில்இருந்த புலிகளின் மிகப் பெரியதொரு தளமே 'பேரூட் தளம்' என்றே பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.

அந்த‘பேரூட் தளத்தில் பலவகையான கனரக ஆயுதங்கள், பயிற்சி முகாம்கள் நிலக்கீழ் சுரங்கங்கள்,பாரிய ஆயுதக் களஞ்சியங்கள் எல்லாம் அமைந்திருப்பதாகவே அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.

மட்டக்களப்பின் தரவை மற்றும் குடும்பிமலைப் பிரதேசித்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியிலேயே புலிகளின் இந்த பாரிய ‘பேரூட் தளம்‘ அமைந்திருப்பதாகவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பேச்சடிபட்டுக்கொண்டிருந்தது.

ஆனால் உண்மையிலேயே 'பேரூட் பேஸ் (Beirut Base) என்று புலிகளால் குறிப்பிடப்பட்ட அந்தத் தளம் தரவையிலோ அல்லது குடும்பிமலைப் பிரதேசத்திலோ அமைந்திருக்கவில்லை.

மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள கொக்கட்டிச்சோலையில் உள்ள காடுகளின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு முகாமையே புலிகள் 'பேரூட் பேஸ்' என்று சங்கேத பாஷையில் அழைத்து வந்தார்கள்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

 

மக்கள் பேசிக்கொண்டது போன்று அல்லது மற்றய தமிழ் இயக்கங்கள் நம்பிக்கொண்டிருந்தது போன்று, அல்லது சிறிலங்காப் படையினர் அச்சப்பட்டுகொண்டிருந்தது போன்று புலிகளின் அந்த பேரூட்முகாமில் கனரக ஆயுதங்களோ அல்லது நிலக்கீழ் சுரங்கங்களோ இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

இன்னும் குறிப்பாகக் குறிப்பிடுவதானால் அந்த பேரூட் தளத்திலும் அதனை அண்டிய கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலும் 48 போராளிகள் மாத்திரமே செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை.

பின்நாட்களில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத்தளபதியாக இருந்த தளபதி ரீகன் தலைமையில், பின்நாட்களில் பிரபல்யமான தளபதிகளான தளபதி ராம், தளபதி ரமேஷ், தளபதி ரமணன் போன்றோர்,அந்தக் காலகட்டத்தில் இந்த ‘பேரூட் பேசிலேயே’ செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலகட்டத்தில் இயக்கங்கள் பற்றிய மிகைப்படுத்தல்கள் மக்கள் மத்தியில் மிக மிக வேகமாகப்பரவிக்கொண்டிருந்ததன் ஒரு அங்கமாக இந்த ‘பேரூட் பேஸ்’ பற்றிய மாயை மக்கள் மத்தியில்பெரிய அளவில் உருவாகி அடிக்கடி அச்சத்துடனும், பெருமையுடனும் பேசப்படுகின்ற ஒரு விடயமாகமாறியிருந்தது.

லெபனானின் தலைநகரம்

விடுதலைப்புலிகளின் அந்தத் தளத்திற்கு ஏன் ‘பேருட் பேஸ்’ என்ற பெயர் வந்தது என்பதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை.

அந்தக் காலகட்டத்தில் லெபனானின் தலைநகரான 'பேரூட்' என்ற பெயரானது போராடுகின்ற இனக் குழுமங்களினால்ஆச்சரியமாக நோக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற ஒரு பெயராகவே இருந்தது.

அந்தநேரத்தில் தமிழ் இயக்க உறுப்பினர்களில் பல முக்கியஸ்தர்கள் லெபனானில் இராணுவப் பயிற்சியினை எடுத்துக்கொண்டிருந்ததால் லெபனானின் தலைநகரான பேரூட்டின் பெயர் போராளிகள் மத்தியில்அதிகம் பிரபல்யமாகியிருந்தது.

இவை அனைத்தையும்விட 1983ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் லெபனான் தலைநகரில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க இராணுவத் தளம் மீது இஸ்லாமிய போராளிகள் மேற்கொண்டிருந்த ஒரு பாரிய தற்கொலைத் தாக்குதலும், அந்த தாக்குதல் பற்றிய செய்தியும் தமிழ் ஈழப் போராளிகள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததாலும் 'பேரூட்' என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபல்யமாகியிருந்தது.

1983ஒக்டோபர் மாதம் 23ம் திகதி லெபனான் தலைநகரான பெரூட்டில் நிலைகொண்டிருந்த அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் படையினரின் தளம் மீது இஸ்லாமிய ஜிகாத் போராளிகள் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். அதில் அமெரிக்காவின் 220 சிறப்பு அதிரடிப்படையினர் ( United StatesMarine Corps )உட்பட 299 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் உலகம் முழுவதும்- குறிப்பாகப் போராடும் இனக்குழுமங்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகப் பேசப்பட்ட தாக்குதல் அது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அமெரிக்க மரைன் பிரிவுக்கு மிகப் பெரிய இழப்பினை ஏற்படுத்திய தாக்குதல் இடம்பெற்ற பிரதேசம் என்பதால் மக்கள் மத்தியில் 'பேரூட்' என்றபெயர் மிகவும் பிரபல்யமாகியிருந்தது.

குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் இந்த 'பேரூட்' என்ற பெயர் அதிக மரியாதையுடனும், பலத்த எதிர்பார்ப்புடனும் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயராகவே இருந்தது.

ஆக்கிரமிப்பாளருக்கு அச்சத்தையும், போராடும் இனத்திற்கு விடுதலை உணர்வையும் ஏற்படுத்தும் ஒரு பெயராகவே இந்த "பேரூட்" என்ற பெயர் அந்தநேரத்தில் உலகில் வலம் வந்துகொண்டிருந்தது.

(புளொட் அமைப்பு இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தனது தளத்தின் ஒரு முகாமிற்கு 'பேரூட் முகாம்' என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அதேபோன்று யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்குப் பெயர்போன ஒரு விடுதிக்கு 'பேரூட் விடுதி' என்றுபெயரிட்டிருந்தார்கள். 'பேரூட்' என்ற பெயர் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியிலும்போராளிகள் மத்தியிலும் எந்த அளவிற்குப் பிரபல்யமாக இருந்தது என்பதற்கு இவைகள் சில உதாரணங்கள்)

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

 

சரி. குறிப்பாக மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகளின் இந்த முகாம் அல்லது தளத்திற்கு 'பேரூட் பேஸ்' என்று எவ்வாறு பெயர் வந்தது?

இதற்கானகாரணம் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

ஆனால் ஊகங்கள், அனுமாணங்கள் பல இருக்கின்றன.

தொலைத்தொடர்புக்கருவி

அந்தக்காலகட்டத்தில் பிரதேசவாரியாக விடுதலைப் புலிகள் தமது தொடர்பாடல்களுக்குப் பயன்படுத்திய சக்திவாய்ந்த பிரதான தொலைத்தொடர்பு கருவிகளை மையப்படுத்தி சில குறியீட்டுகளைப் பயன்படுத்திவந்தார்கள்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தொடர்பாடலை மையப்படுத்தி அவர்சார்ந்த தொடர்பாடல்பிரதேசத்தை 1-4 அதாவது வன்-போர் (One-Four) பேஸ் என்று அழைப்பார்கள்.

புலிகள்தலைவர் இந்தியாவில் தங்கியிருந்த பொழுது இந்தியாவில் இருந்த 'வன்-போர்' தளம் பின்னர்அவர் வன்னியில் அலம்பில் காடுகளில் தங்கியிருந்த பொழுது அங்கு செயற்பட்டது இந்தக் காரணத்தினால்தான்.

இதேபோன்று யாழ்பாணத்தை 2-2 டு-டு (Two-Two) பேஸ் என்றும் வடமாராட்சியை 2-3 டு-திறீ (Two-Three)பேஸ் என்றும் அழைப்பார்கள்.

இவை அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் பிரதான தொலைத்தொடர்பு கருவிகளைஅடிப்படையாக வைத்தே நடைமுறைப்படுத்தப்பட்டன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

 

ஒருபெரிய தொலைத் தொடர்பு கருவி. ஏதாவது மரமொன்றில் அதன் 'அன்டனாக்களை' உயரத்தில் கட்டிவிட்டால் இலங்கை முழுவதும் மாத்திரமல்ல, இந்தியாவில் உள்ள புலிகளைக் கூட இதனூடாக இலகுவாகத் தொடர்புகொண்டுவிடமுடியும். அந்தக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் மாத்திரமேஇருந்த தொலைத் தொடர்பு வசதிகள் அவை.

80களின் நடுப்பகுதியில் தளபதி அருணா மட்டக்களப்பிற்கு வந்தபொழுது அவரால் மட்டக்களப்பு அம்பாறைமாவட்டத்திற்கென்று ஒரு பிரதான தொலைத்தொடர்புக் கருவி கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பு வந்தறுமூலைப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட அந்தத் தொலைத்தொடர்பு கருவியை அடிப்படையாக வைத்து 4-6 போர்-சிக்ஸ் (Four-Six) பேஸ் என்று மட்டக்களப்பு பிரதேசதம் குறியீட்டுப் பெயரில்அழைக்கப்பட்டது.

மட்டக்களப்பு-அம்பாறைமாவட்டத்தில் இருந்து புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட் முதலாவது போராளியும், இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சிபெற்றவரும், பின்நாட்டகளில் புலிகள் அமைப்பில் மூத்த தளபதியாகப் பல களம் கண்டவரும், தற்பொழுதும் ஐரோப்பிய நாடொன்றில் உயிருடன் இருப்பவருமான தளபதி காந்தன் அவர்களே மட்டக்களப்பின் முதலாவது பிரதான தொலைத்தொடர்புக் கருவியை கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்றுஅம்பாறை மாவட்டத்திற்கான தொலைத்தொடர்புக்கருவி அங்கு அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறைப் பிரதேசத்தை 4-8 போர்-எயிட் (Four-Eight) பேஸ் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகள் அணிகளுக்கான தொலைத்தொடர்புகள் அம்பாறை மாவட்டத்துடனோயே அதிகம் இருந்ததால், கொக்கட்டிச்சோலை புலிகள் அணியின் தளங்களையும் ஆரம்பத்தில் 4-8 போர்எயிட் (Four-Eight) பேஸ் என்றே அழைத்துவந்தார்கள். இந்த 'போர்-எயிட்' - தான் கால ஓட்டத்தில் 'பேரூட்டாக' திரிவடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

 

'சிக்காக்கோ '

அதேபோன்று அந்தக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உலகின் பிரபல்யமா நகரங்களின் பெயர்களைச் சூட்டி அழைப்பது வளக்கம்.

யாழ்பாணப் பிரதேசத்தை 'சிக்காக்கோ ' என்றும், வடமாராட்சிப் பிரதேசத்தை 'கலிபோர்ணியா' என்றும் அழைத்ததைப் போன்று மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தை 'பேரூட்' என்று அழைத்திருப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

ஆகமொத்தத்தில் 'பேரூட் பேஸ்' என்பது மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் பிரபல்யமான ஒருமுகாம் என்பதும், இந்த 'பேரூட் பேஸ்' என்பது கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலேயே அமையப்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Niraj David அவர்களால் வழங்கப்பட்டு 22 Mar 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Niraj David என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

 

https://www.ibctamil.com/articles/80/116446?ref=home-imp-flag&fbclid=IwAR0zvgkp67d57eB6TM2B-baS1DY4nUzByb53iwss7drP7Ib-sBqrvOF-5Og

அந்த 70 நாட்கள்

37 minutes 58 seconds ago
சிறி நன்றாக ரசித்து என்னுடன் பயணம் செய்து கொண்டு வருகிறீர்கள்.மிக்க நன்றி. கூட்டம் அதிகமாக இருந்ததால் பழக்கமில்லாத பிள்ளைகளுக்கு கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது.அத்துடன் ஓரிரு தடவை வேணுமென்றே இடிக்கிறார்கள் என்று முறைப்பாடு வெய்யில் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு சீக்கிரமே வீடு வந்துவிட்டோம். முன்னர் பந்தல்களில் களையோடவில்லை. ஓ எமது முதலமைச்சர் நிற்கிறார்.இப்போ தான் படத்தையே பார்க்கிறேன்.எந்த பந்தல் என்று யாருக்குத் தெரியும்.

"வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் பொருளாதார மத்திய நிலையம் இடம் மாறியது"

46 minutes 50 seconds ago
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) கொழும்பில் விடப்படுகின்ற வவுனியா பொருளதார மத்திய நிலையத்தின் கேள்விக் கோரல்களை வவுனியாவுக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், வவுனியா பொருளாதார மத்திய நிலையம் வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மை காரணமாக தாண்டிக்குளத்தில் இருந்து இரட்டை பெரியகுளம் பகுதிக்கு இடம்மாறியது. இந் நிலையில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சி எம்.பிக்களும் இணைந்து பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள கடைத்தொகுதிகளை வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு 12 ஆயிரம் ரூபா மாத வாடகைக்கு வழங்குவதெனவும் மிகுதிக்கடைகளை கேள்விக்கோரலுக்கு விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. என்றாலும் தற்போது இதற்கான கேள்விக்கோரல் கொழும்பில் விடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைப்பெற , நேர்முகத்தேர்வுக்கு தோற்ற கொழும்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வை ஏன் வவுனியாவில் செய்ய முடியாது? அதனால் இந்நடவடிக்கைகளை வவுனியா மாவட்ட செயலகத்துக்குக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். http://www.virakesari.lk/article/52483

"வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் பொருளாதார மத்திய நிலையம் இடம் மாறியது"

46 minutes 50 seconds ago

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பில் விடப்படுகின்ற வவுனியா பொருளதார மத்திய நிலையத்தின் கேள்விக் கோரல்களை வவுனியாவுக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், 

vavuniya3.jpg

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மை காரணமாக தாண்டிக்குளத்தில் இருந்து இரட்டை பெரியகுளம் பகுதிக்கு இடம்மாறியது. 

இந் நிலையில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சி எம்.பிக்களும் இணைந்து பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள கடைத்தொகுதிகளை வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு 12 ஆயிரம் ரூபா மாத வாடகைக்கு வழங்குவதெனவும் மிகுதிக்கடைகளை கேள்விக்கோரலுக்கு விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

என்றாலும் தற்போது இதற்கான கேள்விக்கோரல் கொழும்பில் விடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைப்பெற , நேர்முகத்தேர்வுக்கு தோற்ற கொழும்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வை ஏன் வவுனியாவில் செய்ய முடியாது? அதனால் இந்நடவடிக்கைகளை  வவுனியா மாவட்ட செயலகத்துக்குக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/52483

நானும் படமெடுப்பன்

1 hour 3 minutes ago
எனது வீட்டுத் தோட்டம் என்ற தலைப்பில் வீட்டில் வளர்ந்த தோட்்டடங்களை இணைத்திருந்தேன்.நீண்ட காலத்தின் பின் தேடினால் படங்களைக் காணவில்லை. எங்கே தவறு என்று தேடினால் நான் படங்களை இணைத்து தளம் முன்னர் இனாமாக வைத்திருந்தனர்.பின்னர் அதை சந்தாவாக்கி இனாமாக இணைத்த படங்களை அழித்துவிட்டனர். அப்படி ஏதாவது நடந்திருக்கலாமோ?

முஸ்லிம் கட்சியோடு கூட்டணி வைப்பது இந்து மதத்துக்கு எதிரானதல்ல: திருமாவளவன்

1 hour 6 minutes ago
  •  
     
தமிழர் குரல்: 'நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்க அவசியம்' - திருமாவளவன்

2019 மக்களவைத் தேர்தலையொட்டி பிபிசி தமிழ் சார்பில் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுவரும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் "தமிழர் குரல்" தேர்தல் சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பதிலளித்தார்.

 

இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்தத் தேர்தலில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், ஜனநாயகம் குறித்த அவர்களுடைய கருத்து என்ன என்பவற்றை வெளிப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிப்பதே தமிழர் குரல்: நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்த நிகழ்ச்சியின் முதல் அமர்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். நிகழ்ச்சியை பிபிசி தமிழின் ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.

 
தமிழர் குரல்: 'நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்க அவசியம்' - திருமாவளவன்

திருமாவளவனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அவரின் பதில்கள் பின்வருமாறு:-

கேள்வி: வரும் மக்களவை தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். பொதுவாக, கூட்டணிக்காக எந்த மாதிரியான சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது?

பதில்: இந்திய தேர்தல் களத்தில் கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. வாக்கு வங்கிகளை அடிப்படையாக கொண்டுதான் கூட்டணி அமைக்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகளும், இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் பிரதான கட்சிகளாக இருக்கின்றன. அதனால், இதில் ஏதேனும் ஒரு கட்சியுடன்தான் விசிக போன்ற வளரும் கட்சிகள் சேர முடியும்.

எந்த அணியில் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிப்பதை விட, வளர்ந்த கட்சிகள் தான் தீர்மானிக்கிறார்கள். நான் விரும்பினால் மட்டுமே ஏதாவது ஒரு கட்சியில் இடம் பெற்றுவிட முடியாது. அதனை அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அதற்கு நிறுவப்பட்ட வாக்கு வங்கியை கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.

கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிட கொடுக்கப்படும் தொகுதிகள் இங்கு மிகவும் முக்கியமானது. தேர்தல் கூட்டணியை வெற்றிக்கான உக்தியாகதான் ஒவ்வொரு கட்சிகளும் பார்க்கின்றன. கூட்டணி என்பது வாக்கு வங்கிகளை பரிமாறுக் கொள்வதற்கான ஒரு ஒப்பந்தம்.

கொள்கை மற்றும் கோட்பாடுகளும் இங்கு முக்கிய இடம் பெறுகிறது. கூட்டணி என்று வரும்போது, சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், முற்றிலும் கொள்கை மாறுபட்டிருக்கும் கட்சிகளோடு கூட்டணி வைக்க முடியாது. உதாரணமாக நாங்கள் பாஜகவுடன் சேர முடியாது.

நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்றால், வளர்ந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டியது அவசியம்.

மக்கள் மன்றத்தில் பேசும் பேச்சு, சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பேசினால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.

வெற்றி பெற்ற எங்கள் உறுப்பினர்கள் மீது எந்த ஆளுங்கட்சியும் ஆதிக்கம் செலுத்த முடியாது.

திருமாவளவன்

அதனைத் தொடர்ந்து சத்யபாமா கல்லூரி, லயோலா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் திருமாவளவன் பதிலளித்தார்.

மாணவர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பை வழங்குகிறோம்.

கேள்வி: ஒவ்வொரு கிராமங்களிலும் ஜாதிய குடியிருப்புகள் இருக்கிறது. இதை எப்படி ஒழிப்பீர்கள்?

பதில்: ஜாதி என்பது, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது. ஒரு மனிதன் பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று உலகில் வேறெங்கும் கிடையாது. பொருளாதாரம், பணம், அணுகுமுறை ஆகியவற்றில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று நாம் கூறலாம். ஆனால், சமூக ரீதியாக இப்படி இங்குமட்டும்தான் இருக்கிறது.

ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் மட்டும் இன்று பேசவில்லை. இதெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இதற்கு முன் போராடியவர்கள் தோற்று போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஜாதி ஒழிப்பு என்பது ஒரு தலைமுறையில் ஏற்படும் மாற்றம் கிடையாது. பல தலைமுறைகள் ஆகும். இதற்கு கல்வி அவசியம்.

கேள்வி: உங்கள் கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் இடம் பெற்றுவது குறித்து சொல்லுங்கள்.

பதில்: மதத்தை வைத்து ஆதாயம் தேடுவதுதான் ஆபத்தானது. அரசு மதம் சார்ந்து இருக்கக் கூடாது. மக்கள் எந்த மதத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அதுதான் மதசார்பின்மை. ஆனால், அரசாங்கத்துக்கு மதம் இருக்கக்கூடாது.

தமிழர் குரல்: 'நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்க அவசியம்' - திருமாவளவன்

முஸ்லிம் அமைப்பால் மதவாதம் பேச முடியாது. என்னதான் நினைத்தாலும் இந்தியாவில் ஒரு முஸ்லிம் அல்லது கிறித்துவர் கட்சி தொடங்கி பிரதமராக முடியாது. அது இங்கு நிச்சயம் சாத்தியமேயில்லை.

நாங்கள் முஸ்லிம் கட்சிகளோடு கூட்டணி வைத்திருப்பது, சிறுபான்மையினருக்கு ஆதரவான செயல்பாடு. அது இந்து மதத்துக்கு எதிரானது அல்ல.

கேள்வி: உங்களுடைய அரசியல் பயணத்தில் உங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்களா? எது தடையாக இருக்கிறது

மக்களை அமைப்பாக்குவதுதான் என் இலக்கு. அடிதட்டு மக்களை அமைப்பாக்குவது அவ்வளவு எளிதானதல்ல.

https://www.bbc.com/tamil/india-47663597

முஸ்லிம் கட்சியோடு கூட்டணி வைப்பது இந்து மதத்துக்கு எதிரானதல்ல: திருமாவளவன்

1 hour 6 minutes ago
2019 மக்களவைத் தேர்தலையொட்டி பிபிசி தமிழ் சார்பில் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுவரும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் "தமிழர் குரல்" தேர்தல் சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பதிலளித்தார். இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்தத் தேர்தலில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், ஜனநாயகம் குறித்த அவர்களுடைய கருத்து என்ன என்பவற்றை வெளிப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிப்பதே தமிழர் குரல்: நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சியின் முதல் அமர்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். நிகழ்ச்சியை பிபிசி தமிழின் ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி தொகுத்து வழங்கி வருகிறார். திருமாவளவனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அவரின் பதில்கள் பின்வருமாறு:- கேள்வி: வரும் மக்களவை தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். பொதுவாக, கூட்டணிக்காக எந்த மாதிரியான சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது? பதில்: இந்திய தேர்தல் களத்தில் கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. வாக்கு வங்கிகளை அடிப்படையாக கொண்டுதான் கூட்டணி அமைக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகளும், இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் பிரதான கட்சிகளாக இருக்கின்றன. அதனால், இதில் ஏதேனும் ஒரு கட்சியுடன்தான் விசிக போன்ற வளரும் கட்சிகள் சேர முடியும். எந்த அணியில் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிப்பதை விட, வளர்ந்த கட்சிகள் தான் தீர்மானிக்கிறார்கள். நான் விரும்பினால் மட்டுமே ஏதாவது ஒரு கட்சியில் இடம் பெற்றுவிட முடியாது. அதனை அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அதற்கு நிறுவப்பட்ட வாக்கு வங்கியை கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிட கொடுக்கப்படும் தொகுதிகள் இங்கு மிகவும் முக்கியமானது. தேர்தல் கூட்டணியை வெற்றிக்கான உக்தியாகதான் ஒவ்வொரு கட்சிகளும் பார்க்கின்றன. கூட்டணி என்பது வாக்கு வங்கிகளை பரிமாறுக் கொள்வதற்கான ஒரு ஒப்பந்தம். கொள்கை மற்றும் கோட்பாடுகளும் இங்கு முக்கிய இடம் பெறுகிறது. கூட்டணி என்று வரும்போது, சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், முற்றிலும் கொள்கை மாறுபட்டிருக்கும் கட்சிகளோடு கூட்டணி வைக்க முடியாது. உதாரணமாக நாங்கள் பாஜகவுடன் சேர முடியாது. நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்றால், வளர்ந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டியது அவசியம். மக்கள் மன்றத்தில் பேசும் பேச்சு, சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பேசினால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் ஏற்படும். வெற்றி பெற்ற எங்கள் உறுப்பினர்கள் மீது எந்த ஆளுங்கட்சியும் ஆதிக்கம் செலுத்த முடியாது. அதனைத் தொடர்ந்து சத்யபாமா கல்லூரி, லயோலா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் திருமாவளவன் பதிலளித்தார். மாணவர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பை வழங்குகிறோம். கேள்வி: ஒவ்வொரு கிராமங்களிலும் ஜாதிய குடியிருப்புகள் இருக்கிறது. இதை எப்படி ஒழிப்பீர்கள்? பதில்: ஜாதி என்பது, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது. ஒரு மனிதன் பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று உலகில் வேறெங்கும் கிடையாது. பொருளாதாரம், பணம், அணுகுமுறை ஆகியவற்றில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று நாம் கூறலாம். ஆனால், சமூக ரீதியாக இப்படி இங்குமட்டும்தான் இருக்கிறது. ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் மட்டும் இன்று பேசவில்லை. இதெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இதற்கு முன் போராடியவர்கள் தோற்று போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஜாதி ஒழிப்பு என்பது ஒரு தலைமுறையில் ஏற்படும் மாற்றம் கிடையாது. பல தலைமுறைகள் ஆகும். இதற்கு கல்வி அவசியம். கேள்வி: உங்கள் கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் இடம் பெற்றுவது குறித்து சொல்லுங்கள். பதில்: மதத்தை வைத்து ஆதாயம் தேடுவதுதான் ஆபத்தானது. அரசு மதம் சார்ந்து இருக்கக் கூடாது. மக்கள் எந்த மதத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அதுதான் மதசார்பின்மை. ஆனால், அரசாங்கத்துக்கு மதம் இருக்கக்கூடாது. முஸ்லிம் அமைப்பால் மதவாதம் பேச முடியாது. என்னதான் நினைத்தாலும் இந்தியாவில் ஒரு முஸ்லிம் அல்லது கிறித்துவர் கட்சி தொடங்கி பிரதமராக முடியாது. அது இங்கு நிச்சயம் சாத்தியமேயில்லை. நாங்கள் முஸ்லிம் கட்சிகளோடு கூட்டணி வைத்திருப்பது, சிறுபான்மையினருக்கு ஆதரவான செயல்பாடு. அது இந்து மதத்துக்கு எதிரானது அல்ல. கேள்வி: உங்களுடைய அரசியல் பயணத்தில் உங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்களா? எது தடையாக இருக்கிறது மக்களை அமைப்பாக்குவதுதான் என் இலக்கு. அடிதட்டு மக்களை அமைப்பாக்குவது அவ்வளவு எளிதானதல்ல. https://www.bbc.com/tamil/india-47663597

சீனாவில் ரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு: 47 பேர் உயிரிழப்பு

1 hour 17 minutes ago
படத்தின் காப்புரிமை Getty Images கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று, யான்செங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரம் பகல் 2.50க்கு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. உரப்பொருட்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து அந்த இடத்தில் தீ பற்றி எரிந்தது. ரசாயன ஆலையில் ஏற்பட்ட இந்த பெரும் வெடிவிபத்தால் அந்த நேரத்தில் அப்பகுதியில் 2.2 அளவுக்கு சமமான ஒரு நில அதிர்வு இருந்ததாக சீனாவின் பூகம்பம் கண்காணிப்பு தொடர்பான நிர்வாக குழு தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமை Getty Images இந்த வெடிப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள படங்கள் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு தீப்பிழம்பு எழுவதையும், அருகாமையில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளதையும் காண்பிக்கின்றன. இதனிடையே இந்த பகுதியில் கடுமையாக பற்றி எரிந்த தீ வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சீனாவில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படாததால், தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அதிகபட்சமாக, கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவின் டியான்ஜின் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், கிட்டத்தட்ட ஆயிரம் பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/global-47663069

சீனாவில் ரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு: 47 பேர் உயிரிழப்பு

1 hour 17 minutes ago
  •  
     
சீனாவில் ரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு: 44 பேர் உயிரிழப்புபடத்தின் காப்புரிமை Getty Images

கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமையன்று, யான்செங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரம் பகல் 2.50க்கு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

உரப்பொருட்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து அந்த இடத்தில் தீ பற்றி எரிந்தது.

ரசாயன ஆலையில் ஏற்பட்ட இந்த பெரும் வெடிவிபத்தால் அந்த நேரத்தில் அப்பகுதியில் 2.2 அளவுக்கு சமமான ஒரு நில அதிர்வு இருந்ததாக சீனாவின் பூகம்பம் கண்காணிப்பு தொடர்பான நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

சீனாவில் ரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு: 44 பேர் உயிரிழப்புபடத்தின் காப்புரிமை Getty Images

இந்த வெடிப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள படங்கள் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு தீப்பிழம்பு எழுவதையும், அருகாமையில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளதையும் காண்பிக்கின்றன.

இதனிடையே இந்த பகுதியில் கடுமையாக பற்றி எரிந்த தீ வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சீனாவில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படாததால், தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் அதிகபட்சமாக, கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவின் டியான்ஜின் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், கிட்டத்தட்ட ஆயிரம் பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/global-47663069

பனை மரத்தில்.. 34 வகையானவை இருக்கின்றன.

1 hour 17 minutes ago
https://161fb338-a-62cb3a1a-s-sites.googlegroups.com/site/adminswethika/PanaiMaramePanaiMarame.mp3?attachauth=ANoY7cq-9wChOqprvNSx_qH2qqec24Obz6_AFYCxrZtGjaNfH8LdXRWv8wrm4eOMg_lT6O1mJIZYxkwQMr9itbMj82pgYj2TATHJ-YU_uiHS3Nxq2W3vw76FGjc0mbnG2ktoKd8CSKkqQApj-X04VKxW6Sn_MQloowvV3nF8blPMmcH7tbNditnl4mPEbUzUsaz7mrC3728DO7Yl8Eq2opEskffbdW98xZTnLWis-iwG_WTAf6t7jrk%3D&attredirects=0 பனை மரமே பனை மரமே ஏன் பிறந்தாய் பனை மரமே தமிழீழப்பாடல் பனையில் இருந்து எத்தனை விதமான பலன்கள் பெறலாம் என்பதை பாட்டாக தந்துள்ளார்கள் . இணைப்புக்கு நன்றி சிறி.

யாழ்ப்பாணத்தில்- எழுச்சிப் பேரணி!!

1 hour 17 minutes ago
அதெப்படி புலிகளை மிருகங்களென்று சில அல்லக்கைகள் எழுதும்போது மட்டும் அவை அனுமதிக்கப்படுகிறது எழுதியவர்களை மிருகங்களென்று நான் கூறினால் மட்டும் ஏன் என்பதிவுகள் நீக்கப்படுகின்றன. நிர்வாகம் பதில்தருமா ?

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு - அனந்தி சசிதரன் கோரிக்கை

1 hour 19 minutes ago
இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது 'பிச்சைக் காசு' எனத் தெரிவித்துள்ள - வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன்; "குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது, இடைக்கால நஷ்டஈடாக அரசாங்கம் மொத்தமாக வழங்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அல்லது அவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய முடிவு, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை, அவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாவை உதவித் தொகையாக வழங்கத் தீர்மானித்துள்ள அரசாங்கம், அதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. நபரொருவர் காணாமல் போனதாக அரசிடம் சான்றிதழ் பெற்றுக் கொண்ட குடும்பங்களுக்கே, இந்த உதவு தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அனந்தி சசிதரனின் கோரிக்கை தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, அவரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. "காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நஷ்ட ஈடாக 20 அல்லது 50 லட்சம் ரூபாவினை அரசாங்கம் வழங்க வேண்டும். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 'மாதாந்தம் 06 ஆயிரம் ரூபா' எனும் உதவித் தொகையானது பிச்சைக் காசு போன்றதாகும். வடக்கு மாகாணத்தில் மட்டும் 18 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது, இவர்களுக்கு 06 மாதங்களுக்கு வழங்கவே போதுமானதல்ல" என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார். "நாட்டில் ஜே.வி.பி.யின் பிரச்சினை நடைபெற்ற காலத்தில், அப்போதைய அரசாங்கம் கடத்திக் காணாமல் செய்யப்பட்டோரும், காணாமல் போனோர் பட்டியலுக்குள் அடங்கப் போகின்றனர். மேலும், ராணுவத்திலிருந்த ஒரு தொகையானோரும் காணாமல் போனோர் பட்டியலுக்குள் சேர்க்கப்படுவர்" "ராணுவத்தினரின் ஆணையிரவு மற்றும் முல்லைத்தீவு ராணுவ முகாம்கள், விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்ட போது, நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியானார்கள். அவ்வாறு பலியானவர்களின் சடலங்களை, இலங்கை அரசாங்கத்திடம் விடுதலைப் புலிகள் கையளிக்க முயற்சித்த போது, அவற்றில் சிதைந்து போன சடலங்களைப் பொறுப்பேற்பதற்கு, அரசாங்கம் மறுத்தது. இதனையடுத்து ராணுவத்தினரின் உடல்களை எரிப்பதற்கான அனுமதியை அப்போதைய அரச அதிபர் பெற்றுக்கொண்டமைக்கு அமைய, அவை எரியூட்டப்பட்டன. இவ்வாறு யுத்தத்தில் பலியாகி பொறுப்பேற்கப்படாத சடலங்களுக்குரிய ராணுவத்தினரின் பெயர்களும், காணாமல் போனோர் பட்டியலுக்குள்தான் உள்ளடங்கப் போகின்றது". நாட்டில் வாழ்க்கைச் செலவு உச்சத்தில் உள்ள நிலையில், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கத் தீர்மானித்துள்ள மாதாந்த உதவு தொகையான 06 ஆயிரம் ரூபாவானது அற்பமானதாகும். காணாமல் போனோருக்கான அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களாகின்றன. ஆனால், காணாமல்போ ஒருவர் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உதவுவதாக சர்வதேச நாடுகளுக்குக் காட்டிக் கொள்வதற்காகவே, 06 ஆயிரம் ரூபா எனும் சிறுதொகையை அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது". "ஆனால், இந்தப் 'பிச்சைக் காசு' எமக்குத் தேவையில்லை. காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியும் வரை, அவ்வாறானாவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நஷ்டஈடாக, ஆகக் குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்" என்றும் அவர் கூறினார். கேள்வி: உங்கள் கணவரின் பெயரில் இந்த உதவு தொகையினை நீங்கள் பெற்றுக் கொள்வீர்களா? பதில்; இல்லை, ஒருபோதும் பெற்றுக் கொள்ள மாட்டேன். எனது கணவர் காணாமல் போகவில்லை. எனது கணவரை - சரணடையும் பொருட்டு ராணுவத்திடம் நானே ஒப்படைத்தேன். அவருடன் எனது மூன்று பிள்ளைகளையும் இலங்கை ராணுவத்திடம் ஒப்படைத்தேன். எனவே, எனது கணவரை 'காணாமல் போனவர்' என யாரும் கூற முடியாது. இலங்கை அரசு மட்டுமன்றி, யுத்தத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவு கொடுத்த நாடுகளும், எனது கணவர் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் வரை, சரணடைந்தவர்கள் தம்மிடம் இருக்கின்றனர் என்றும், அவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. அதற்குப் பின்னர் எப்படி எனது கணவர் இல்லாமல் போக முடியும்? அப்படி இல்லாமல் போயிருந்தால், அவ்வாறு இல்லாமல் போகச் செய்தவர்கள் யார்? அதற்கு எவர் கட்டளையிட்டார் என்பது பற்றிய விபரங்களை அரசாங்கம் எமக்கு வழங்க வேண்டும். கேள்வி: உங்கள் கணவர் உயிருடன் இருக்கின்றார் என்று நம்புகிறீர்களா? பதில்: "அந்த நம்பிக்கையில்தான் இன்னும் அலைந்து திரிகின்றோம். சரணடைந்தவர்களை யுத்தத்துக்குப் பின்னர் கொல்ல வேண்டிய தேவை கிடையாது". "யுத்தம் முடிந்த பிறகு விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரின் 04ஆம் மாடிக்கு எழிலன் கொண்டு செல்லப்பட்டமைக்கான சாட்சியங்களும் உள்ளன. பத்திரிகையிலும், அது தொடர்பில் அப்போது செய்தி வெளியாகி இருந்தது" என்றார் அனந்தி சசிதரன். இதேவேளை, விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரிடம் உள்ளதாகவும், "கொழும்பில் தமது தேவைக்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்திய காணிகள், இப்போது கோட்டாபய ராஜபக்ஷ வசம் போய்விட்டன" என்றும் அவர் பிபிசியிடம் கூறினார். விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்தமநாதன் கூட - புலிகளின் கப்பல்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் கோட்டாபயவிடம் கையளித்துள்ளார் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/sri-lanka-47656902

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு - அனந்தி சசிதரன் கோரிக்கை

1 hour 19 minutes ago
 
அனந்தி

இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது 'பிச்சைக் காசு' எனத் தெரிவித்துள்ள - வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன்; "குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது, இடைக்கால நஷ்டஈடாக அரசாங்கம் மொத்தமாக வழங்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அல்லது அவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய முடிவு, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை, அவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாவை உதவித் தொகையாக வழங்கத் தீர்மானித்துள்ள அரசாங்கம், அதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

நபரொருவர் காணாமல் போனதாக அரசிடம் சான்றிதழ் பெற்றுக் கொண்ட குடும்பங்களுக்கே, இந்த உதவு தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அனந்தி சசிதரனின் கோரிக்கை தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, அவரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்

"காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நஷ்ட ஈடாக 20 அல்லது 50 லட்சம் ரூபாவினை அரசாங்கம் வழங்க வேண்டும். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 'மாதாந்தம் 06 ஆயிரம் ரூபா' எனும் உதவித் தொகையானது பிச்சைக் காசு போன்றதாகும்.

வடக்கு மாகாணத்தில் மட்டும் 18 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது, இவர்களுக்கு 06 மாதங்களுக்கு வழங்கவே போதுமானதல்ல" என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

"நாட்டில் ஜே.வி.பி.யின் பிரச்சினை நடைபெற்ற காலத்தில், அப்போதைய அரசாங்கம் கடத்திக் காணாமல் செய்யப்பட்டோரும், காணாமல் போனோர் பட்டியலுக்குள் அடங்கப் போகின்றனர். மேலும், ராணுவத்திலிருந்த ஒரு தொகையானோரும் காணாமல் போனோர் பட்டியலுக்குள் சேர்க்கப்படுவர்"

"ராணுவத்தினரின் ஆணையிரவு மற்றும் முல்லைத்தீவு ராணுவ முகாம்கள், விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்ட போது, நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியானார்கள். அவ்வாறு பலியானவர்களின் சடலங்களை, இலங்கை அரசாங்கத்திடம் விடுதலைப் புலிகள் கையளிக்க முயற்சித்த போது, அவற்றில் சிதைந்து போன சடலங்களைப் பொறுப்பேற்பதற்கு, அரசாங்கம் மறுத்தது.

இதனையடுத்து ராணுவத்தினரின் உடல்களை எரிப்பதற்கான அனுமதியை அப்போதைய அரச அதிபர் பெற்றுக்கொண்டமைக்கு அமைய, அவை எரியூட்டப்பட்டன.

அனந்தி

இவ்வாறு யுத்தத்தில் பலியாகி பொறுப்பேற்கப்படாத சடலங்களுக்குரிய ராணுவத்தினரின் பெயர்களும், காணாமல் போனோர் பட்டியலுக்குள்தான் உள்ளடங்கப் போகின்றது".

நாட்டில் வாழ்க்கைச் செலவு உச்சத்தில் உள்ள நிலையில், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கத் தீர்மானித்துள்ள மாதாந்த உதவு தொகையான 06 ஆயிரம் ரூபாவானது அற்பமானதாகும்.

காணாமல் போனோருக்கான அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களாகின்றன. ஆனால், காணாமல்போ ஒருவர் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உதவுவதாக சர்வதேச நாடுகளுக்குக் காட்டிக் கொள்வதற்காகவே, 06 ஆயிரம் ரூபா எனும் சிறுதொகையை அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது".

"ஆனால், இந்தப் 'பிச்சைக் காசு' எமக்குத் தேவையில்லை. காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியும் வரை, அவ்வாறானாவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நஷ்டஈடாக, ஆகக் குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்" என்றும் அவர் கூறினார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சம்பந்தனின் இல்லம் முன் ஆர்ப்பாட்டம்

கேள்வி: உங்கள் கணவரின் பெயரில் இந்த உதவு தொகையினை நீங்கள் பெற்றுக் கொள்வீர்களா?

பதில்; இல்லை, ஒருபோதும் பெற்றுக் கொள்ள மாட்டேன். எனது கணவர் காணாமல் போகவில்லை. எனது கணவரை - சரணடையும் பொருட்டு ராணுவத்திடம் நானே ஒப்படைத்தேன். அவருடன் எனது மூன்று பிள்ளைகளையும் இலங்கை ராணுவத்திடம் ஒப்படைத்தேன். எனவே, எனது கணவரை 'காணாமல் போனவர்' என யாரும் கூற முடியாது.

இலங்கை அரசு மட்டுமன்றி, யுத்தத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவு கொடுத்த நாடுகளும், எனது கணவர் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் வரை, சரணடைந்தவர்கள் தம்மிடம் இருக்கின்றனர் என்றும், அவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. அதற்குப் பின்னர் எப்படி எனது கணவர் இல்லாமல் போக முடியும்?

அப்படி இல்லாமல் போயிருந்தால், அவ்வாறு இல்லாமல் போகச் செய்தவர்கள் யார்? அதற்கு எவர் கட்டளையிட்டார் என்பது பற்றிய விபரங்களை அரசாங்கம் எமக்கு வழங்க வேண்டும்.

கேள்வி: உங்கள் கணவர் உயிருடன் இருக்கின்றார் என்று நம்புகிறீர்களா?

பதில்: "அந்த நம்பிக்கையில்தான் இன்னும் அலைந்து திரிகின்றோம். சரணடைந்தவர்களை யுத்தத்துக்குப் பின்னர் கொல்ல வேண்டிய தேவை கிடையாது".

"யுத்தம் முடிந்த பிறகு விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரின் 04ஆம் மாடிக்கு எழிலன் கொண்டு செல்லப்பட்டமைக்கான சாட்சியங்களும் உள்ளன. பத்திரிகையிலும், அது தொடர்பில் அப்போது செய்தி வெளியாகி இருந்தது" என்றார் அனந்தி சசிதரன்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரிடம் உள்ளதாகவும், "கொழும்பில் தமது தேவைக்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்திய காணிகள், இப்போது கோட்டாபய ராஜபக்ஷ வசம் போய்விட்டன" என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்தமநாதன் கூட - புலிகளின் கப்பல்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் கோட்டாபயவிடம் கையளித்துள்ளார் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-47656902

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய கபில அமரகோன் உயிரிழப்பு

1 hour 29 minutes ago
March 22, 2019 துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெலியத்த பிரதேச சபை எதிர்க் கட்சி தலைவர் கபில அமரகோன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த புதன்கிழமை பல்லன்தர – மொரதவான பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்காள்ளப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/116612/

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய கபில அமரகோன் உயிரிழப்பு

1 hour 29 minutes ago
 
March 22, 2019

Kapila-amarakone.png?resize=783%2C549
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெலியத்த பிரதேச சபை எதிர்க் கட்சி தலைவர் கபில அமரகோன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த புதன்கிழமை பல்லன்தர – மொரதவான பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்காள்ளப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2019/116612/