Aggregator

மாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் நினைவு நாள்

2 weeks hence

தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் திரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள், மார்ச் 6, 2008ம் ஆண்டு பிற்பகல்1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இத்தாக்குதலில் சிவனேசனின் வாகன ஓட்டுனர் பெரியண்ணன் மகேஸ்வரராஜா என்பவரும் கொல்லப்பட்டார்.

மாமனிதர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவு நாள்.

1 week hence

Bild könnte enthalten: 1 Person, Text

மாமனிதர் டாக்டர் சத்தியமூர்த்தி, அவர்களின் நினைவு நாள். - 27.02.2017.

மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும்.தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர்.

இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல்,பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார்.

இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவிலும், பின்னர் லண்டனிலும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த,போற்றுதற்குரிய மாமனிதர்.

1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர். பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் பணியினை, மென்மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு விடுதலை ஊக்கியாக அவர் எல்லோர் மனங்களிலும் நிறைந்திருப்பார் என்பதே காலம் சொல்லும் உண்மையாகும்.

     Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen und Menschenmasse   Bild könnte enthalten: eine oder mehrere Personen und Personen, die stehen  

Bild könnte enthalten: eine oder mehrere Personen  Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen, Hochzeit, Anzug und im Freien 

 

ரணிலின் ‘மறப்போம் மன்னிப்போம்’ கூற்றுக்கு விக்னேஸ்வரன் கடும் விமர்சனம்: உரிமைகளை மறுக்கும் சதிக்கு கூட்டமைப்பு துணைபோவதாக கண்டனம்

1 hour 7 minutes ago
தேர்தல் என்று வந்தால் கூட்டமைப்புக்குத்தானே மக்கள் வாக்குப்போடுவார்கள்! மக்கள் அவ்வளவு தெளிவாக இருப்பதனால்தான் சுமந்திரன் தமிழர்களின் தலைவராக வருவார். ஆனால் அவருக்குத் தலைவர் ரணில்தான்!!😉

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா

1 hour 22 minutes ago
Fair game மிரட்டலை முதலில் செய்தது யார் ஜஸ்டின்? உணர்வை வைத்து மிரட்டவில்லை. ரணிலினதும், சுமந்திரனதும் கருத்துக்களை இங்கே அப்படியே ஆதரித்து எழுதியதாலேயே கேட்கத் தோன்றியது. ஆனாலும், உங்களின் முன்னைய நாள் கருத்துக்களுக்கும் இப்போதைய கருத்துக்களுக்குமிடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. ஏனென்றுதான் தெரியவில்லை. அதை ஆராய வேண்டிய தேவை எனக்கு வேண்டாம்.தக்காளி சோஸும் ரத்தமும் நிறையவே கேட்டாயிற்று. நீங்கள் சொல்லத்தேவையில்லை.

தமிழ்ப் படம் பார்ப்பது எப்படி?! ​​​​​​​​​​​​​​🎬🎥🎞️📺📀

1 hour 54 minutes ago
எனக்கு கிரைம்,திரில்லர் தான் சின்னனின் இருந்து பிடிக்கும்...அநேகமான காதல் படங்கள்,குடும்ப படங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் பிடிப்பதில்லை(அதற்காக பார்க்காமல் இருப்பதில்லை)...நான் பார்த்த படத்திலேயே பிடித்த காதல் படம் என்டால் "டடுக்கன்DHADKAN]" ...மேலோட்டமாய் கதையை வாசித்தாலே இப்படித் தான் படம் இருக்கும் என்று விளங்கிடும்.ஆனாலும் சில படங்கள் ஏமாற்றத்ததை தந்தது உண்டு...யாழில் அபராஜிதன் எழுதும் விமர்சனத்தை வைத்தும் படம் பார்த்ததுண்டு...அநேகமாய் அவரது விமர்சனம் ஏமாற்றம் அளித்ததில்லை

முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின், யுத்தக்குற்றங்கள் பற்றியும் விசாரணை அவசியம்

2 hours 8 minutes ago
தமிழ் மக்களுக்கு எதிரான ஜிகாத்.. மற்றும் முஸ்லீம் ஊர்காவல்படை நடத்திய இனப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகளும்.. சிங்களப் படையுடன் இணைந்து கிழக்கு மாகாணம்.. மற்றும் கல்முனையில் நிகழ்த்திய படுகொலைகள் மற்றும் யாழில் கிருசாந்தி குமாரசாமி மாணவி பாலியன் வன்புணர்வுப் படுகொலை உள்ளடங்க முஸ்லீம் பயங்கரவாதக் காவலிகள்.. காடைகள் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பிலும் முழு விசாரணை அவசியம். குறிப்பாக சவுதி நிதியில் நிகழ்த்தப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் விசாரணைகள் அவசியம்.

விக்னேஸ்வரன் தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் – அனந்தி

2 hours 10 minutes ago
சரி வேற என்ன?...இன்னொரு தேர்தல் வராமலா போகப் போது வீரப் பெண்மணியைம்,ஜயாவும் தேர்தலில் நின்று வெல்லட்டும் பிறகு பார்ப்போம்

ஊர் போய் வந்தவனின் படம் காட்டல்கள் (யாழுக்கு)

2 hours 19 minutes ago
நல்ல விடயம். எங்கள் ஒளிப்படமும் விளக்கமும்.. இவ்வளவு தூரத்துக்கு இந்த விடயத்தில் உங்களிடம் அக்கறை வரவைத்தமைக்கு நன்றி. தெளிவான அண்மை படத்துக்கு நன்றி. மேலும் கேள்விக்குறி.. சேய்மை படத்தில் கடைக்கருத்துக்கள்.. முழுவதுக்குமே..! அதை எழுதியது நாம்.. அந்த வகையில் எமக்கு தான் அதுக்கு விளக்கம் அளிக்க முடியும். 😊

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா

2 hours 52 minutes ago
ஓகோ அப்படியானால் இவ்வளவு அழிவுக்கும் அந்த பயல் தான் காரணமா? அந்த விதியை எழுதிய கடவுளைத் திட்டாமல் ஆளாளுக்கு அவன் எழுதிய விதிப்படி செயற்பட்ட மனிதர்களை இங்கு எல்லோரும் திட்டித்தீர்கிறீர்களே!! ஏன்?

காங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை

3 hours 5 minutes ago
இலங்கையில் ரணில் வெறும் பிரதமர் மட்டுந்தான் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார். இந்தத்திட்டங்களால் பயன்படப்போவது உள்ளுர் மக்களா அல்லது இந்தியாவா சிறிலங்காவா? முதலில் தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு அமைய அவர்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும். தமிழ் பிரதேசங்களிலிருந்து இராணுவம் திரும்பப் பெறப்பட்டு காடையர் வாள்வெட்டுக்குழு என்பன அடக்கப்படவே ண்டும். இவை நடைமுறைப்படுத்தப்படாவிடின் எந்தத்திட்டங்களும் தமிழருக்கு உதவாத திட்டங்கள்தான். எமது மக்கள் பாதுகாப்பான வாழ்க்கை வாழ ஆவன செய்துகொடுக்கப்படவேண்டும். ரணில் சொல்வது வெறும் திட்டங்கள் மட்டுந்தானா அல்லது திரைமறைவில் போடப்படும் சதிவலையா? மகிந்த ரணிலின் அரசைக் கவிழ்க்க சதிப்புரட்சி செய்தபோது பரிதாபகரமாக அலரிமாளிகையில் ஒழிந்திருந்த ரணில் தமிழ் பிரதேசங்களில் புதிய திட்டங்கள் பற்றி பேச புறப்பட்டிருக்கிறார். இவை நாடாளுமன்ற தேர்தல் ஒன்று வரப்போவதை கட்டியங்கூறுகிறது. இந்தியா இதுவரை சிறிய படகில் தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்த போதைப்பொருட்கள் இனிமேல் பொதுமக்களின் பாவனைக்கென்று விடப்படும் பெரியகப்பல்களில் கொள்கலன்களில் ஏற்றப்பட்டு இலங்கை இந்திய அரசுகளின் முழு ஆசீர்வாதத்துடன் அனுப்பிவைக்கப்படும். அவற்றை முஸ்லிம் அரசியல்வாதிகளும் இராணுவ காடையர்ககளும் தமிழ் பிரதேசங்களில் விற்று எமது இளைய சமுதாயத்தைச் சீரழிப்பார்கள். ஆமாம் வடக்கில் எல்லா இடத்திலும் தென்னையை பயிரிடுங்கள் அதைவைத்து தமிழ் சமுதாயம் தலைமுறை தலைமுறையாக தேங்காயில் நார் புடுங்கி வாழ்ந்துகொண்டிருப்பார்கள். தமிழர் பிரதேசங்களில் நடாத்தப்படும் திட்டமிட்ட நில அபகரிப்புக்கு ரணில் புதிய வழியொன்றைச்சொல்கிறார். பாரிய தோட்ட நிறுவனங்களில் வகைதொகையின்றி சிங்களைவர்கள் வேலைக்கமர்த்தப்படுவார்கள். எமது தமிழ் அரசியல் வாதிகளுக்கோ சிங்கள அரசின் கபடத்தனமான நிகழ்ச்சிநிரலுக்கெதிராக ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போட திராணியில்லை.