Aggregator

மாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை

1 day 1 hour ago
உண்மை, சில பிரச்சினைகள் உரிய இடத்தில் இருந்தால் தான் முழுமையாகப் புரியும். வெகு தொலைவில் இருந்து கொண்டு தொலைபேசி, ஊடகங்கள் மூலம் மட்டும் நிலைமையைப் புரிந்து கொள்வது கடினம். இதைத் தாயகம் சென்ற போது நன்றாக உணர்ந்து கொண்டேன். 😊

ஹிந்திய இராணுவமென்று சொல்லி விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி.

1 day 2 hours ago
இதுவரை தமிழ்நாட்டில் இருந்து இந்திய தேசத்தை காக்கவென விதையாகி போனவர்களுக்கு நினைவிடம் உள்ளதா ராஜவன்னியன் சார் ? அப்படி விதையாகி போனவர்கள் இதுவரை எத்தனைபேர் இருப்பார்கள் ? மேல்கொண்ட கேள்விகள் உங்களை நோகடிக்க என்று கேட்க்கபட்டவை அல்ல தெரிந்துகொள்ளவே .

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா

1 day 2 hours ago
உண்மையில் இது அவசியமா? அவர் காணாமல் போனவர்களை, உறவுகளைச் சிறுமைப் படுத்தியிருந்தால் இந்தக் கேள்விகள் இன்றி அவரைக் கண்டிக்க முடியாதா? யார் யார் பக்கம் நிற்க வேண்டும் யாருக்காகப் பேச வேண்டும் என்று விதிமுறைகள் நிர்ணயிக்கவும் காரணம் கேட்கவும் உங்களுக்கோ யாருக்குமோ உரிமை இல்லை என நினைக்கிறேன்! இது என் தாழ்மையான கருத்து மட்டுமே!

இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்!

1 day 4 hours ago
உண்மையும் ஆதாரங்களும் அற்ற தகவல்களை சவாலுக்குட்படுத்த வேண்டிய அவசியத்தைக் காட்ட இதை இணைக்கிறேன். இந்த தடுப்பு மருந்துகள் பற்றி என் தொடரில் "போலிகள்" பற்றி எழுதும் போது மேலும் எழுதுவேன். ட்ரம்பின் நிர்வாகத்தில் இருக்கும் ஒருவரின் மனைவி "வக்சின் போட்டதால் தன் குழந்தைகள் நோயில் இருந்து பாதுகாப்பை இழந்து விட்டார்கள்" என்று போலி "விஞ்ஞானத்தை"ப் பரப்பியதற்கு ஒரு மருத்துவர் எதிர் விளக்கம் கொடுக்கிறார் கேளுங்கள்! "Darla Shine, is boosting the dangerous anti-vaccine movement. After falsely tweeting that the measles vaccine won't confer lifelong immunity, she boldly declared, "Bring back our #ChildhoodDiseases they keep you healthy & fight cancer." -CNN https://www.cnn.com/2019/02/14/opinions/darla-shine-trump-vaccine-conspiracy-dantonio/index.html

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா

1 day 5 hours ago
நீங்கள் யார் சார்பாகப் பேசுகிறீர்கள்? ரணில் சார்பாகவா? ஏனென்றால், அவர் கிளிநொச்சியில் வைத்து இதைத்தான் சொன்னார். அல்லது சுமந்திரன் சார்பாகவா? அவர் இனிமேல்த்தான் அதைச் சொல்லப் போகிறார். இனவாதிகளின் குரலாகவும், அவர்களை ஒத்தூதூம் ஒருவரின் குரலாகவும் நீங்கள் இருக்கவேண்டிய தேவை என்ன?

ரணிலின் ‘மறப்போம் மன்னிப்போம்’ கூற்றுக்கு விக்னேஸ்வரன் கடும் விமர்சனம்: உரிமைகளை மறுக்கும் சதிக்கு கூட்டமைப்பு துணைபோவதாக கண்டனம்

1 day 5 hours ago
நிலைமையை தெளிவாக விளக்கியுள்ளார்! தமிழின படுகொலைகாரர்களுக்கும், அவர்களின் ஜால்ராக்களுக்கும் இவரது விளக்கம் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

பதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…

1 day 5 hours ago
இது போன்ற காமுகர்கள் உடனடியாக ஆசிரிய சேவையிலிருந்து விலக்கப்பட வேண்டியவர்கள். கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் சிலரும் மிகமோசமான காமுகர்களாக உள்ளது ஏற்கனவே வெளிவந்த செய்தி. அந்தக் கயவர்களை அடையாளம் கண்டு வேலை நீக்கப்படுவதுடன், சிறைகளில் அடைக்கப்பட வேண்டும். பதவி நீக்கப்பட்ட முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசாவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் இது போன்ற காமுகர்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள்.

மாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு

1 day 5 hours ago
இது போன்ற மனநிலை உடையவர்கள் வாழ்ந்தும் ஒரு பயனும் இல்லை என்ற எண்ணமே ஏற்படுகின்றது! இது போன்ற கோழைத்தனங்களுக்கு எந்தவித அனுதாபங்களும் காட்ட முடியாது! இது போன்ற கோழைத்தனங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்! இது போன்றவர்களின் பெற்றோர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்!

புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வன்னியிலே வாழ்ந்த மலையக வம்சாவளி தமிழ் மக்கள் சமத்துவமாக தமிழினத்துக்குள்ளே உள்வாங்கப்பட்டார்கள்

1 day 5 hours ago
இந்தப் பிரிவுகளை நீக்கி, அனைவரும் இலங்கைத் தமிழர் என்று பொதுவாக அழைக்கும் வரை மனோகணேசன் போன்ற பேர்வழிகள் ஒற்றுமை என்ற சொல்லக் கூறி முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்!

இன்னொரு பிரபாகரன் உருவெடுப்பார்- முல்லைத்தீவு மக்கள் எச்சரிக்கை!!

1 day 5 hours ago
இனப் படுகொலைகாரர்கள் வீசுவதை பொறுக்கிக் கொண்டு போர்க்குற்றவாளிகளுக்கு ஜால்றா போடும் கோஷ்டிகளுக்கு ஜால்றா போடும் கோஷ்டிகள் "மறப்போம் மன்னிப்போம்" கதைகளை தூக்கி பிடித்துக் கொண்டு அதைவிட வேற வழியில்லை என்று சரடுவிட தொடங்கியுள்ளனர்! பாதிக்கப்பட்ட மக்கள் மனநிலை பற்றிய கவலை அவர்களுக்கு துளியும் இல்லை!

ஜேர்மன் சாப்பாடு.(Traditional GERMAN FOOD)

1 day 5 hours ago
இந்த சாலட்டை கண்ணால் பார்த்தே செய்து விடலாம் அல்லவா? தேவையான பொருட்கள்: அவித்த உருளைக்கிழங்கு (அரை அவியலில் oven பண்ணியது மிகவும் சிறப்பாக இருக்கும்), அவித்த முட்டைகள், chives, mayonnaise, double cream, single cream, சால்ட், புதிதாக நொருக்கப்பட்ட மிளகு). இதில் உள்ள வேலை - உருளைக்கிழங்கையம், முட்டையையும் பதமாக அவித்து எடுப்பது.

பலாலியில் இருந்து அவுஸ்ரேலியா, ஐரோப்பா வரை விமான சேவை

1 day 5 hours ago
இனப் படுகொலைகாரர்களின் ஜால்ரா கோஷ்டிகள் இப்போதிருந்தே "எல்லாம் அந்தமாதிரி இருக்கு" என்று துள்ளப் போகிறார்கள்!

யுத்தக்குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் - வாசுதேவ

1 day 6 hours ago
இவர் மட்டுமல்ல சோசலிசம் கதைத்த 99.99% ஆன சிங்களவர்கள், ஜேவிபி யினர் உட்பட, அனைவரும் சிங்கள-பௌத்த இனமதவெறியர்களாவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்! விக்கிரமபாகு கருணாரட்ன மட்டுமே விதிவிலக்காக உள்ளனர்!

இதைவிட எளிமையாக ஆபத்தை உணர்த்த முடியாது! -கதவைத் தட்டும் பேரழிவு: தீர்வு எங்கே உள்ளது?

1 day 6 hours ago
குறைந்த பட்சம் சொல்லும் ஒரு தகவலுக்கு ஆதாரம் தரக் கூடியவர்கள் தான் செவி மடுக்கப் பட வேண்டும் என்பது எனது கருத்து! ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒரு சிவப்புக் கண்ணாடியை போட்டுக் கொண்டு உலகத்தைப் பார்த்தால் உங்களுக்குச் சிவப்பாக எல்லாம் தெரியும்! அது எனக்குத் தெரியாவிட்டால் என் பார்வை பிழையென்று அர்த்தமில்லை! விடயங்களை case by case ஆக அணுகுவது என் பழக்கம். இது என் தொழிலின் வழி வந்தது. உங்கள் முறை வேறு. அது உங்கள் உரிமை, அவ்வளவு தான் சொல்ல முடிந்தது இந்த விடயத்தில்!

சிலரினால் கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுகின்றது – அடைக்கலநாதன்!

1 day 6 hours ago
விலைபோய் நிறைய காலம் ஆகிவிட்டது! அந்த சிலர் யார்? அதை வெளிப்படையாக சொல்ல முதுகெலும்பு இருக்கிறதா? அல்லது சொன்னால் கிடைக்கும் "விலை" கிடைக்காது என்ற பயமா?