Aggregator

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்

2 months 2 weeks ago
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வீ.தனபாலசிங்கம் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு நான்கு தசாப்தகாலத்தில் 7 ஜனாதிபதி தேர்தல்களை நாடு சந்தித்திருக்கிறது.இவ்வருட இறுதியில் நடைபெறவிருப்பது 8 வது ஜனாதிபதி தேர்தலாகும். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை காலமும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு (போட்டியிடுவதை தவிர்த்த இரு சந்தர்ப்பங்களை தவிர)அதன் வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் ஐக்கிய தேசிய கட்சி பிரச்சினைகளை எதிர்நோக்கியதில்லை. 1977 ஜூலை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்தபோது பிரதமராக பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன இருமாத காலத்தில் 1972 குடியரசு அரசியலமைப்புக்கு திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற போது அவருக்கு போட்டியாக கட்சிக்குள் வேறு எவரும் அந்தப் பதவிக்கு உரிமை கோருவது குறித்து கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க முடியாது.தனது முதலாவது 6 வருட பதவிக்காலத்தில் சுமார் ஐந்து வருடங்கள் நிறைவடைந்த நிலையில் ஜெயவர்தன ( எதிரணி குழப்பநிலைக்குள்ளாகியிருந்த சூழ்நிலையில் ) 1982 அக்டோபரில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றியும் பெற்றார். பிறகு தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் அரசியலில் இருந்து ஒய்வுபெறும்போது 1988 இறுதியில் அவர் தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாசவை நியமித்தார். ஜெயவர்தன அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக இருந்த காமினி திசாநாயக்க போன்றவர்களும் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு விரும்பிய போதிலும் பிரேமதாசவை மீறி வேறு எவரையும் அந்தக்கட்டத்தில் ஜெயவர்தனாவினால் நியமித்திருக்கமுடியாது. 1988 டிசம்பரில் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) யின் இரண்டாவது கிளர்ச்சியின் வன்முறைகளுக்கு மத்தியிலும் பிரேமதாச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான முன்னணியின் வேட்பாளரான முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைத் தோற்கடித்தார். ஜனாதிபதி பிரேமதாச தனது முதலாவது பதவிக்காலத்தின் இடைநடுவில் 1993 மே தினத்தன்று கொழும்பில் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அன்றைய பிரதமர் டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் 1994 நவம்பரில் மூன்றாவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். பிரேமதாசவுடனான முரண்பாட்டின் விளைவாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட காமினி திசாநாயக்க மீண்டும் கட்சிக்குள் வந்து ஜனாதிபதி வேட்பாளரானார்.கொழும்பில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் திசாநாயக்க கொலைசெய்யப்பட்டதை அடுத்து அந்த ஜனாதிபதி தேர்தலில் அவரின் விதவை மனைவி சிறிமா ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். கட்சிக்குள் காமினி திசாநாயக்கவுக்கு அடுத்த தலைவராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க அந்தக்கட்டத்தில் வேட்பாளராக விரும்பவில்லை. சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்றைய பிரதமர் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சிறிமா திசாநாயக்கவை மிகவும் சுலபமாகத் தோற்கடித்தார். ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது முதலாவது பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக 1999 டிசம்பரில் நான்காவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்த விக்கிரமசிங்க அந்த தேர்தலில்தான் முதன் முதலாக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார். கொழும்பு நகரமண்டப மைதானத்தில் பொதுஜன முன்னணியின் இறுதிப்பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த திருமதி குமாரதுங்க விடம் விக்கிரமசிங்க தேர்தலில் தோல்வி கண்டார். ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவு தொடர்பாக எழுந்த சட்டப்பிரச்சினையொன்றில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விளைவாக ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலை 2005 நவம்பரில் நடத்தவேண்டியதாயிற்று. அதில் சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச போட்டியிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக மீண்டும் விக்கிரமசிங்கவே களமிறங்கினார். இவர்களில் எவருக்கும் ஆதரவு அலை என்று ஒன்று இல்லாத நிலையில் நடைபெற்ற அந்த தேர்தலில் ராஜபக்ச வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. தமிழ்ப்பகுதிகளில் குறிப்பாக வடக்கில் விடுதலை புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு மக்களை பலவந்தப்படுத்தியிருக்காவிட்டால் விக்கிரமசிங்கவுக்கே பெரும்பாலும் வெற்றிகிடைத்திருக்கும் என்று நம்பப்பட்டது. ராஜபக்ச சுமார் 28 ஆயிரம் வாக்குகளை குறைவாகப் பெற்றிருந்தால் 50 சதவீத வாக்குகள் என்ற எல்லையைக் கடந்திருக்கமாட்டார் என்று கணிப்பீடுகள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. தனது முதலாவது பதவிக்காலத்தில் விடுதலை புலிகளுடனான போரை முழுவீச்சில் முன்னெடுத்த ஜனாதிபதி ராஜபக்ச ஒவ்வொரு கட்ட வெற்றியின்போதும் சிங்கள மக்களின் ஆதரவை படிப்படியாக அதிகரித்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. கட்டம் கட்டமாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் அதை நிரூபித்தன.இறுதியில் 2009 மேயில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து ராஜபக்ச தனது செலாவாக்கின் உச்சக்கட்டத்தில் இருந்தார். போர் வெற்றிக்களிப்பில் தென்னிலங்கையை மிதக்கவிடும் அரசியல் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் அவரது அரசாங்கம் முன்னெடுத்தது. தனக்கு பெரிதும் வாய்ப்பான அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி ராஜபக்ச தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒன்றரை வருடங்கள் இருந்த நிலையில் இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்காக 2010 ஜனவரியில் ஆறாவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். போர் வெற்றியையடுத்து அன்று தென்னிலங்கையில் இருந்த சூழ்நிலையில் தன்னால் வெற்றிபெறமுடியாது என்பதை நன்கு உணர்ந்த விக்கிரமசிங்க ஏனைய எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ( போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்த ) ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக களமிறக்கினார். ஆனால், போருக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியதாக மார்தட்டிக்கொண்டிருந்த ராஜபக்சவிடம் பொன்சேகா தோல்வி கண்டார். தென்னிலங்கை சிங்கள மக்கள் ராஜபக்சவை அமோகமாக ஆதரித்தார்கள்.ஆனால், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ் மக்கள் பொன்சேகாவுக்கே பெரும்பான்மையாக வாக்களித்தனர். பொன்சேகாவினால் அந்த தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அவரைக் களமிறக்க இணங்கினார் என்பது சந்தேகமே. ராஜபக்சாக்களுக்கு தென்னிலங்கையில் அமோகமான ஆதரவு இருந்த சூழ்நிலைகளில் அரசியல் ரீதியாக பாதிக்கப்படுவது தானாக இருந்துவிடக்கூடாது என்பதே விக்கிரமசிங்கவின் தந்திரோபாயமாக இருந்தது என்பது வெளிப்படையானது. தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இருவருடங்கள் இருந்த நிலையில் மூன்றாவது பதவிக்காலத்தை பெறும் நோக்கில் ஜனாதிபதி ராஜபக்ச நடத்திய ஏழாவது ஜனாதிபதி தேர்தலிலும்(2015 ஜனவரி ) விக்கரமசிங்க அதே தந்திரோபாயத்தையே பயன்படுத்தினார். ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன அன்றைய எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றியும் கண்டார். உரிய காலத்துக்கு முன்கூட்டியே அந்த்தேர்தலை நடத்தியதில் தான் இழைத்த தவறை ராஜபக்ச பிறகு பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டார்.அதற்கு பிறகு நடந்தவையெல்லாம் அண்மைய வருடங்களின் வரலாறு. இன்னும் நான்கு மாதங்களில் நடைபெறவிருக்கும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், இத்தடவை பிரதமர் விக்கிரமசிங்கவின் தந்திரோபாயம் என்னவாக இருக்கும் என்பதே முக்கியமான கேள்வி. மூன்றாவது தடவையும் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் தந்திரோபாயத்தை அவரால் கடைப்பிடிக்க அவரால் முடியாது.அவ்வாறு செய்வதற்கு அவரை கட்சியினர் அனுமதிக்கவும் போவதில்லை என்பது வெளிப்படையானது. இந்த தேர்தல் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அவரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவரும் வீடமைப்பு , நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பியேமதாசவும் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவும் தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமானால், அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு தயாராயிருப்பதாக பகிரக்கமாக கூறுகின்ற அதேவேளை, விக்கிரமசிங்க எதுவும் பேசாமல் இருக்கிறார். கட்சியின் தலைவரே வேட்பாளராக நிற்கவேண்டும் என்று சரத் பொன்சேகா போன்றவர்கள் பகிரங்கமாக பேசுகின்ற வேளையிலும் கூட பிரதமர் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவையே நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் அண்மைய வாரங்களாக வலுவடைந்துகொண்டிருக்கிறது. பிரதமரின் விசுவாசிகள் என்று கருதப்பட்ட பல அமைச்சரகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட பிரேமதாசவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பிரேமதாசவின் மனைவி ஜலானி இரு வாரங்களுக்கு முன்னர் அட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரைாயாற்றும்போது தன்னை ' எதிர்கால முதற்பெண்மணி ' என்று கூட வர்ணித்திருந்தார். இவ்வாறாக எல்லாம் விக்கிரமசிங்கவுக்கு ' செய்திகள் ' அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கப்போவதாக அறிவிப்பதற்கு தயங்குகிறார்.பதிலாக, கட்சியின் செயற்குழுவும் பாராளுமன்றக் குழுவும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவெடுக்கும் என்று அறிவித்துவி்ட்டு அவர் பேசாமல் இருக்கிறார். சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கினால் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பைப் பற்றி நம்பிக்கைகொள்ள முடியும் என்று கட்சிக்குள்ளும் ஆதரவாளர்கள் மத்தியிலும் அபிப்பிராயம் வலுவடைவது ஒன்றும் இரகசியமல்ல. விக்கிரமசிங்க போட்டியிடுவாரேயானால் ராஜபக்ச முகாமின் வேட்பாளருக்கு ஈடுகொடுக்க முடியாமல் போகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பல மட்டங்களிலும் நிலவுகின்ற எண்ணம் கட்சிக்குள் அவரின்தலைமைத்துவ நிலை எதிர்நோக்க ஆரம்பித்திருக்கின்ற கடுஞ்சவாலை உணர்த்திநிற்கிறது. ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் விக்கிரமசிங்கவின் தலைமையில் கால்நூற்றாண்டைக் கடந்து விட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அந்த கால்நூற்றாண்டாக கட்சியினால் அடையமுடியாமல் இருக்கிறது. அவரின் தலைமையே தொடருமானால் தங்களின் எதிர்கால அரசியல் வாய்ப்புகள் ஆபத்துக்குள்ளாகக்கூடும் என்று கட்சியின் முக்கியமான அரசியல்வாதிகளில் கணிசமான எண்ணிக்கையினர் அச்சங்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் போலத்தெரிகிறது. ஆனால், எதுவுமே நடக்காதது போன்று விக்கிரமசிங்க தனது அலுவல்களைப் பார்த்துக்கொண்டு திரிகிறார். ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்றில் மிக நீண்டகாலம் தலைவர் பதவியில் இருப்பவர் விக்கிரமசிங்க.அதேவேளை அக்கட்சியின் தலைவர்களாக இருந்தவர்களில் எவருமே அவரைப் போன்று இடையறாது தலைமைத்துவத்துக்கு சவாலை எதிர்கொண்டு தாக்குப் பிடித்தவர்களும் வேறு எவரும் இல்லை. தற்போது மீண்டும் அவரின் தலைமைத்துவம் சவாலை எதிர்நோக்குகிறது. இத்தடவை அவரால் அதை சமாளிக்கமுடியுமா? இந்த கேள்விக்கான பதிலுக்கு நீண்டகாலம் காத்திருக்கவேண்டியதில்லை. https://www.virakesari.lk/article/61405

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்

2 months 2 weeks ago
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வீ.தனபாலசிங்கம்

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு நான்கு தசாப்தகாலத்தில் 7 ஜனாதிபதி தேர்தல்களை நாடு சந்தித்திருக்கிறது.இவ்வருட இறுதியில் நடைபெறவிருப்பது 8 வது ஜனாதிபதி தேர்தலாகும்.

sajith.jpg

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை காலமும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு (போட்டியிடுவதை தவிர்த்த இரு சந்தர்ப்பங்களை தவிர)அதன்  வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் ஐக்கிய தேசிய கட்சி பிரச்சினைகளை எதிர்நோக்கியதில்லை. 

1977 ஜூலை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்தபோது பிரதமராக பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன இருமாத காலத்தில் 1972 குடியரசு அரசியலமைப்புக்கு திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றி நிறைவேற்று அதிகார  ஜனாதிபதியாக பதவியேற்ற போது அவருக்கு போட்டியாக கட்சிக்குள்  வேறு எவரும் அந்தப் பதவிக்கு உரிமை கோருவது  குறித்து கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க முடியாது.தனது முதலாவது 6 வருட  பதவிக்காலத்தில் சுமார் ஐந்து வருடங்கள் நிறைவடைந்த நிலையில் ஜெயவர்தன ( எதிரணி குழப்பநிலைக்குள்ளாகியிருந்த சூழ்நிலையில் ) 1982 அக்டோபரில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றியும் பெற்றார்.

பிறகு  தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் அரசியலில் இருந்து ஒய்வுபெறும்போது 1988 இறுதியில் அவர் தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாசவை நியமித்தார். ஜெயவர்தன அரசாங்கத்தில் முக்கிய  அமைச்சர்களாக இருந்த காமினி திசாநாயக்க போன்றவர்களும் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு விரும்பிய போதிலும் பிரேமதாசவை மீறி வேறு எவரையும் அந்தக்கட்டத்தில் ஜெயவர்தனாவினால் நியமித்திருக்கமுடியாது. 

1988 டிசம்பரில் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) யின் இரண்டாவது கிளர்ச்சியின் வன்முறைகளுக்கு மத்தியிலும் பிரேமதாச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான முன்னணியின் வேட்பாளரான முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைத் தோற்கடித்தார்.

ஜனாதிபதி பிரேமதாச தனது முதலாவது பதவிக்காலத்தின் இடைநடுவில் 1993 மே தினத்தன்று கொழும்பில் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அன்றைய பிரதமர் டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் 1994 நவம்பரில் மூன்றாவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். பிரேமதாசவுடனான முரண்பாட்டின்  விளைவாக  ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட காமினி திசாநாயக்க மீண்டும் கட்சிக்குள் வந்து ஜனாதிபதி வேட்பாளரானார்.கொழும்பில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் திசாநாயக்க கொலைசெய்யப்பட்டதை அடுத்து அந்த ஜனாதிபதி தேர்தலில் அவரின் விதவை மனைவி சிறிமா ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

கட்சிக்குள்  காமினி திசாநாயக்கவுக்கு அடுத்த தலைவராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க அந்தக்கட்டத்தில் வேட்பாளராக விரும்பவில்லை. சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்றைய பிரதமர் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சிறிமா திசாநாயக்கவை மிகவும் சுலபமாகத் தோற்கடித்தார்.

ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது முதலாவது பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக 1999 டிசம்பரில் நான்காவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்த விக்கிரமசிங்க அந்த தேர்தலில்தான் முதன் முதலாக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார். கொழும்பு நகரமண்டப மைதானத்தில் பொதுஜன முன்னணியின் இறுதிப்பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த திருமதி குமாரதுங்க விடம் விக்கிரமசிங்க தேர்தலில்  தோல்வி கண்டார். 

ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவு தொடர்பாக எழுந்த சட்டப்பிரச்சினையொன்றில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விளைவாக ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலை 2005 நவம்பரில் நடத்தவேண்டியதாயிற்று. அதில் சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச போட்டியிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக மீண்டும் விக்கிரமசிங்கவே களமிறங்கினார். 

இவர்களில் எவருக்கும் ஆதரவு அலை என்று ஒன்று இல்லாத நிலையில் நடைபெற்ற அந்த தேர்தலில் ராஜபக்ச வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. தமிழ்ப்பகுதிகளில் குறிப்பாக வடக்கில் விடுதலை புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு மக்களை பலவந்தப்படுத்தியிருக்காவிட்டால் விக்கிரமசிங்கவுக்கே பெரும்பாலும் வெற்றிகிடைத்திருக்கும் என்று நம்பப்பட்டது. ராஜபக்ச சுமார் 28 ஆயிரம் வாக்குகளை குறைவாகப் பெற்றிருந்தால் 50 சதவீத வாக்குகள் என்ற எல்லையைக் கடந்திருக்கமாட்டார் என்று கணிப்பீடுகள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.

தனது முதலாவது பதவிக்காலத்தில் விடுதலை புலிகளுடனான போரை முழுவீச்சில் முன்னெடுத்த ஜனாதிபதி ராஜபக்ச ஒவ்வொரு கட்ட வெற்றியின்போதும் சிங்கள மக்களின் ஆதரவை படிப்படியாக அதிகரித்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. கட்டம் கட்டமாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் அதை நிரூபித்தன.இறுதியில் 2009 மேயில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து ராஜபக்ச தனது செலாவாக்கின் உச்சக்கட்டத்தில் இருந்தார். போர் வெற்றிக்களிப்பில் தென்னிலங்கையை மிதக்கவிடும் அரசியல் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் அவரது அரசாங்கம் முன்னெடுத்தது. 

தனக்கு பெரிதும் வாய்ப்பான அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி  ஜனாதிபதி ராஜபக்ச தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒன்றரை வருடங்கள் இருந்த நிலையில் இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்காக 2010 ஜனவரியில் ஆறாவது  ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். போர் வெற்றியையடுத்து அன்று தென்னிலங்கையில் இருந்த சூழ்நிலையில் தன்னால் வெற்றிபெறமுடியாது என்பதை நன்கு உணர்ந்த விக்கிரமசிங்க ஏனைய எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ( போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்த ) ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக களமிறக்கினார்.

ஆனால், போருக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியதாக மார்தட்டிக்கொண்டிருந்த ராஜபக்சவிடம் பொன்சேகா தோல்வி கண்டார். தென்னிலங்கை சிங்கள மக்கள் ராஜபக்சவை அமோகமாக ஆதரித்தார்கள்.ஆனால், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ் மக்கள் பொன்சேகாவுக்கே பெரும்பான்மையாக வாக்களித்தனர். பொன்சேகாவினால் அந்த தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில்தான்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அவரைக் களமிறக்க இணங்கினார்  என்பது சந்தேகமே.

ராஜபக்சாக்களுக்கு தென்னிலங்கையில் அமோகமான ஆதரவு இருந்த சூழ்நிலைகளில் அரசியல் ரீதியாக பாதிக்கப்படுவது தானாக இருந்துவிடக்கூடாது என்பதே விக்கிரமசிங்கவின் தந்திரோபாயமாக இருந்தது என்பது வெளிப்படையானது. தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இருவருடங்கள் இருந்த நிலையில் மூன்றாவது பதவிக்காலத்தை பெறும் நோக்கில் ஜனாதிபதி ராஜபக்ச நடத்திய ஏழாவது ஜனாதிபதி தேர்தலிலும்(2015 ஜனவரி ) விக்கரமசிங்க அதே தந்திரோபாயத்தையே பயன்படுத்தினார். ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன அன்றைய எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றியும் கண்டார். உரிய காலத்துக்கு முன்கூட்டியே அந்த்தேர்தலை நடத்தியதில் தான் இழைத்த தவறை ராஜபக்ச பிறகு பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டார்.அதற்கு பிறகு நடந்தவையெல்லாம் அண்மைய வருடங்களின் வரலாறு.

இன்னும் நான்கு மாதங்களில் நடைபெறவிருக்கும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், இத்தடவை பிரதமர் விக்கிரமசிங்கவின் தந்திரோபாயம் என்னவாக இருக்கும் என்பதே முக்கியமான கேள்வி. மூன்றாவது தடவையும் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் தந்திரோபாயத்தை அவரால் கடைப்பிடிக்க அவரால் முடியாது.அவ்வாறு செய்வதற்கு அவரை கட்சியினர் அனுமதிக்கவும் போவதில்லை என்பது வெளிப்படையானது. இந்த தேர்தல் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அவரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. 

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவரும் வீடமைப்பு , நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பியேமதாசவும்  பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவும் தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமானால், அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு தயாராயிருப்பதாக பகிரக்கமாக கூறுகின்ற அதேவேளை, விக்கிரமசிங்க எதுவும் பேசாமல் இருக்கிறார். கட்சியின் தலைவரே வேட்பாளராக நிற்கவேண்டும் என்று சரத் பொன்சேகா போன்றவர்கள் பகிரங்கமாக பேசுகின்ற வேளையிலும் கூட பிரதமர் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதில்லை. 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவையே நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் அண்மைய வாரங்களாக வலுவடைந்துகொண்டிருக்கிறது. பிரதமரின் விசுவாசிகள் என்று கருதப்பட்ட பல அமைச்சரகளும்  பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட பிரேமதாசவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பிரேமதாசவின் மனைவி  ஜலானி இரு வாரங்களுக்கு முன்னர் அட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரைாயாற்றும்போது தன்னை ' எதிர்கால முதற்பெண்மணி ' என்று கூட வர்ணித்திருந்தார். இவ்வாறாக எல்லாம் விக்கிரமசிங்கவுக்கு ' செய்திகள் ' அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கப்போவதாக அறிவிப்பதற்கு தயங்குகிறார்.பதிலாக, கட்சியின் செயற்குழுவும் பாராளுமன்றக் குழுவும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவெடுக்கும் என்று அறிவித்துவி்ட்டு அவர் பேசாமல் இருக்கிறார்.

சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கினால் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பைப் பற்றி நம்பிக்கைகொள்ள முடியும் என்று கட்சிக்குள்ளும் ஆதரவாளர்கள் மத்தியிலும் அபிப்பிராயம் வலுவடைவது ஒன்றும் இரகசியமல்ல. விக்கிரமசிங்க போட்டியிடுவாரேயானால் ராஜபக்ச முகாமின் வேட்பாளருக்கு  ஈடுகொடுக்க முடியாமல் போகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பல மட்டங்களிலும் நிலவுகின்ற எண்ணம் கட்சிக்குள் அவரின்தலைமைத்துவ நிலை எதிர்நோக்க ஆரம்பித்திருக்கின்ற கடுஞ்சவாலை உணர்த்திநிற்கிறது.

ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் விக்கிரமசிங்கவின் தலைமையில் கால்நூற்றாண்டைக் கடந்து விட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அந்த கால்நூற்றாண்டாக கட்சியினால் அடையமுடியாமல் இருக்கிறது. அவரின் தலைமையே தொடருமானால் தங்களின் எதிர்கால அரசியல் வாய்ப்புகள் ஆபத்துக்குள்ளாகக்கூடும் என்று கட்சியின் முக்கியமான அரசியல்வாதிகளில் கணிசமான எண்ணிக்கையினர் அச்சங்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் போலத்தெரிகிறது. ஆனால், எதுவுமே நடக்காதது போன்று விக்கிரமசிங்க தனது அலுவல்களைப் பார்த்துக்கொண்டு திரிகிறார்.

ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்றில் மிக நீண்டகாலம் தலைவர் பதவியில் இருப்பவர் விக்கிரமசிங்க.அதேவேளை அக்கட்சியின் தலைவர்களாக இருந்தவர்களில் எவருமே அவரைப் போன்று இடையறாது தலைமைத்துவத்துக்கு சவாலை எதிர்கொண்டு தாக்குப் பிடித்தவர்களும் வேறு எவரும் இல்லை. தற்போது மீண்டும் அவரின் தலைமைத்துவம் சவாலை எதிர்நோக்குகிறது. இத்தடவை அவரால் அதை சமாளிக்கமுடியுமா?  இந்த கேள்விக்கான பதிலுக்கு நீண்டகாலம் காத்திருக்கவேண்டியதில்லை.

https://www.virakesari.lk/article/61405

ரணிலையும் இணைத்தே எமது அடுத்த ஆட்சி: உறுதியாக கூறுகிறார் ராஜித

2 months 2 weeks ago
ரணிலையும் இணைத்தே எமது அடுத்த ஆட்சி: உறுதியாக கூறுகிறார் ராஜித பொ.ஜ.முவும் சு.கவும் இணை­யாது; எமது கூட்­ட­ணியில் மைத்­தி­ரி­யையும் உள்­ளீர்க்க தயார் கூட்­ட­மைப்பு எமது கூட்­ட­ணியில் இணை­யாது; விக்கி தரப்பு சிந்­தித்து தீர்­மா­னிப்­பதே சிறந்­தது ஜனா­தி­பதித் தேர்தல் திட்­ட­மிட்­ட­படி நடை­பெ­ற வுள்­ள­தோ­டு, நாம் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து புதிய வேட்­பா­ளரை நிறுத்­த­வுள்ளோம். எமது தரப்பில் வேட்­பாளர் குறித்து பிரச்­சி­னைகள் இல்லை. கரு, சஜித், நான், சம்­பிக்க என நீண்ட பட்­டியல் உள்­ளது. எவ்­வா­றா­யினும் எமது அடுத்த ஆட்சி ஞானம் நிறைந்த தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் இணைத்­த­தா­கவே அமையும் என்று சுகா­தார,போச­னைகள் சுதேச மருத்­து­வத்­துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வியில் குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு: கேள்வி:-இட­து­சா­ரித்­துவ கொள்­கை­யு­டனும் போராட்­டத்­து­டனும் ஆரம்­பித்த உங்­களின் அர­சியல் பயணம் தற்­போது எவ்­வா­றுள்­ளது? பதில்:-கால­மாற்­றத்­துக்கு ஏற்ற வகையில் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இரு­கின்­றது. கேள்வி:-அர­சாங்­கத்தில் அங்­கத்­துவம் வகிக்­கும்­போது உங்­களின் போராட்­டக்­குரல் அதிகம் மேெலழு­வ­தில்­லையே? பதில்:-அர­சிலோ அல்­லது எதிர்க்­கட்­சி­யிலோ எங்­கி­ருந்­தாலும் கொள்­கைக்­கா­கவே எனது போராட்டம் இருக்­கின்­றது. கேள்வி:-மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­ய­போது அவர் குறித்து பல சான்று உறு­தி­களை வழங்­கி­யி­ருந்த நீங்கள் அவ­ரு­டைய போக்கில் மாற்­றங்கள் ஏற்­ப­டு­வதை முன்­கூட்­டியே அறி­ய­வில்­லையா? பதில்:- அவ­ரு­டைய போக்கில் மாற்றம் ஏற்­பட்­டதை நான் அவ­தா­னித்தேன். அவ­ருடன் இருந்த நெருங்­கிய நட்பின் கார­ண­மாக அவ­ரு­டைய பாதையில் நானும் இணைவேன் என்று அவர் நம்­பிக்கை கொண்­டி­ருந்தார். எனினும் எனது அர­சியல் கொள்­கையை கைவிட்டு நட்­புக்கு முத­லிடம் அளிக்க நான் விரும்­ப­வில்லை. அத்­துடன் நிறுத்­தாது அவ­ரு­டைய தவ­றான போக்­குக்கு எதி­ராக நானே முன்­னிலை வகித்து போரா­டினேன். நாம் இரு­வரும் ஆரம்­பித்த பய­ணத்தின் பாதையில் இடை­ந­டுவில் ஜனா­தி­பதி மைத்­திரி நின்­று­விட்டார். நான் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்றேன். கேள்வி:- ஒக்­டோபர் 26இல் ஆட்­சியை மாற்­று­வது குறித்து உங்­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­திரி பேசி­யி­ருந்­தாரா? அது­பற்றி தாங்கள் ஏதா­வது அறிந்­தி­ருந்­தீர்­களா? பதில்:- என்­னுடன் அவர் எதுவும் பேச­வு­மில்லை. அவ்­வா­றா­ன­தொரு விடயம் நடக்­க­வி­ருப்­பதை நான் அறிந்­தி­ருக்­க­வு­மில்லை. கேள்வி:- முதலில் எந்த தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்க தயா­ராகி வரு­கின்­றீர்கள்? பதில்:- எந்த தேர்தல் நடை­பெ­றாது விட்­டாலும் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெறும். அதற்கு முகங்­கொ­டுக்க தயா­ரா­கவே உள்ளோம். கேள்வி:- உங்­க­ளு­டைய தரப்­பிலும் பரந்­து­பட்ட கூட்­டணி பற்றி பேசப்­ப­டு­கின்­றதே? அதற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் எவ்­வா­றுள்­ளன? பதில்:- பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் அடை­யா­ளத்தில் எம்­முடன் இணைந்து கொள்­வ­தற்கு விருப்­ப­மற்­ற­வர்கள் இருக்­கின்­றார்கள். ஆகவே தான் நாம் புதிய பெயரில், பொதுச் சின்­னத்தில், புதிய கொள்­கையில் கூட்­ட­ணியை அமைக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்ளோம். அதில் இணை­வ­தற்கு பல தரப்­புக்கள் முன்­வந்­துள்­ளன. கேள்வி:- கூட்­ட­ணியில் சுதந்­தி­ரக்­கட்­சியின் தரப்­பி­னரும் இணை­யவுள்­ள­னரா? பதில்:- அத்­த­ரப்­பிலும் பலர் இணை­ய­வுள்­ளார்கள். அக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள், தொழிற்­சங்­கத்­தினர், சிவில் அமைப்­புக்கள் எனப் பலர் முன்­வந்­துள்­ளனர். கேள்வி:- சுதந்­தி­ரக்­கட்­சியின் தரப்­புக்கள் இணை­வதால் மீண்டும் முரண்­பா­டுகள் ஏற்­ப­டாதா? பதில்:- கடந்­த­மு­றை­போன்று இரண்டு கட்­சி­க­ளாக இணை­ய­வில்லை. ஒரு தலைமை, சின்னம், கொள்­கையின் கீழ் தான் அவர்கள் கைகோர்க்­க­வுள்­ளனர். கேள்வி:- ஐ.தே.க.தனது கொள்­கையை கைவிட்டு பொதுக்­கொள்­கையை ஏற்­றுக்­கொள்­ளுமா? பதில்:- ஐக்­கிய தேசியக் கட்சி 1977இலி­ருந்து ஒரே கொள்­கையின் கீழ் இருந்­தி­ருக்­க­வில்­லையே.காலத்­திற்கேற்ற வ­கையில் அதன் கொள்­கையில் மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. கேள்வி:- எவ்­வா­றா­யினும் கூட்­ட­ணியில் ஐ.தே.க.வே பிர­தான கட்­சி­யாக இருக்­கப்­போ­கின்­றதே? பதில்:- ஐ.தே.க.வின் பாரா­ளு­மன்றக் குழு கூட்­டத்தில் ஐ.தே.கவாக செயற்­பட்டு தேர்­தல்­களில் வெற்றி பெற­மு­டி­யாது என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ஆகவே தான் கூட்­டணி அமைப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. மஹிந்த தரப்­பிலும் கூட்­ட­ணியே கள­மி­றங்கும். யாராலும் தனித்து செயற்­பட்டு வெற்றி பெற முடி­யாது. பூகோள சூழ­லிலும் கூட்­ட­ணி­களே ஆட்­சி­ய­மைக்கும் நிலை­மைகள் அதி­க­ரித்­துள்­ளன. கேள்வி:- புதிய கூட்­ட­ணியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜே.வி.பி ஆகி­ய­வற்றை இணைத்­துக் கொள்­வது பற்றி கரி­சணை கொண்­டி­ருக்­கின்­றீர்­களா? பதில்:- கூட்­ட­மைப்பு கூட்­ட­ணியில் இணை­யாது விட்­டாலும் அவர்­க­ளுடன் இணக்­கப்­பா­டொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு விழைவோம். அதே­போன்று ஜே.வி.பியும் எம்­முடன் இணை­யாது விட்­டாலும் ராஜ­பக் ஷ தரப்­பையா எம்­மையா ஆத­ரிப்­பது என்ற தெரி­வொன்றை மேற்­கொள்ள வேண்­டி­யேற்­படும். கேள்வி:- கூட்­ட­மைப்பு தற்­போ­தைய அர­சாங்­கத்­தினை பல சந்­தர்ப்­பங்­களில் பாது­காத்­தி­ருக்­கின்ற போதும் தமிழ் மக்­களின் எந்­த­வொரு பிரச்­சி­னை­களுக்கும் முற்­றுப்­புள்ளி வைக்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் உங்­களின் புதிய கூட்­டணி மீது நம்­பிக்கை கொள்­ள­வேண்டும் என்று எந்த அடிப்­ப­டையில் தமிழ் மக்­களை மீண்டும் கோரு­வீர்கள்? பதில்:- ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் இருந்த நிலை­மை­க­ளையும் தற்­போ­துள்ள நிலை­மை­க­ளையும் பார்க்­கின்­ற­போது பாரிய இடை­வெ­ளிகள் ஏற்­பட்­டுள்­ளதை மக்­களே அறி­வார்கள். அர­சாங்­கத்­துக்கு எதி­ராக, தமிழ் தலை­வர்­க­ளுக்கு எதி­ராக போரா­டு­கி­றார்கள். நாம் ஜன­நா­யக வெளியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு போரா­டினோம். அதன்­மூலம் கிடைத்த பிர­தி­ப­லிப்­புக்­களே இவை­யா­கின்­றன என்­பதை நினைக்கும் போது எமக்கு மகிழ்ச்­சி­யாக உள்­ளது. கேள்வி:- ஜன­நா­யக வெளி ஏற்­பட்­டது என்­ப­தற்கு அப்பால் வாழ்­வியல் பிரச்­சி­னை­களை முன்­வைத்து போராடும் மக்­க­ளுக்­கான தீர்வு என்ன? பதில்:- புதிய அர­சி­ய­ல­மைப்பு, காணிகள் விடு­விப்பு, அர­சியல் கைதிகள் விடு­தலை, உள்­ளிட்ட பல விட­யங்கள் பகு­தி­ய­ளவில் இருக்­கின்­றன. அவற்றை முழு­மை­யாக பூர்த்தி செய்ய வேண்டும் என்­பதை நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன். காணா­மல்­போ­ன­வர்கள் பற்­றிய அலு­வ­ல­கமும் முழு­மை­ய­டை­வில்லை. காணா­மல்­போ­ன­வர்கள் மர­ணித்­து­விட்­டார்கள் என்று சான்­றிதழ் வழங்க முடி­யாது. அவ்­வாறு வழங்­கினால் அவர்கள் மீண்டு வரு­கின்­ற­போது பிறப்­புச்­சான்­றி­தழை வழங்­கு­வ­தற்கு உல­கத்தில் எங்­குமே சட்­ட­மில்லை. அது­வொரு சிக்­க­லான விட­ய­மாக இருக்­கின்­றது. ஆனால், அதற்கு தீர்வு வழங்­கப்­பட வேண்டும். கேள்வி:- இந்­த­வி­ட­யங்­க­ளுக்கு தீர்வு வழங்­கு­வ­தாக பல தட­வைகள் கூறப்­பட்­டுள்ள போதும் நடை­மு­றைச்­சாத்­தி­ய­மா­க­வில்­லையே? பதில்:- எமது கூட்­டணி ஆட்­சியில் அமர்­கின்­ற­போது குழப்­பங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பில்லை. ஆகவே எமது காலத்தில் இந்த விட­யங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும். அதற்­காக இறு­தி­வ­ரையில் நான் பாடு­ப­டுவேன் என்று பொறுப்­புடன் உறு­ய­ளிக்­கின்றேன். கேள்வி:- விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான மாற்றுக் கூட்­ட­ணியை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்? பதில்:- அந்த அணி­யினர் தமது பிர­தான எதி­ரி­யாக கூட்­ட­மைப்­பையே கரு­கின்­றனர். இவ்­வா­றான கூட்­ட­ணிகள் குறு­கி­ய­வட்­டத்­திற்குள் நின்று சிந்­திப்­பது தான் பெரிய தவ­றாக இருக்­கின்­றது. கூட்­ட­மைப்­பினை பிர­தான எதி­ரி­யாக கொண்டு அவர்கள் செயற்­ப­டும்­போது அது இன­வா­திகள் ஆட்­சியில் அம­ரு­வ­தற்கே வாய்ப்­பினை ஏற்­ப­டுத்­தி­விடும். இதனை மக்கள் உண­ரு­கின்ற சந்­தர்ப்­பத்தில் அவர்­க­ளுக்­கான ஆத­ரவை நீக்கி விடு­வார்கள். கடந்த காலத்தில் இட­து­சாரி கட்­சிகள் வலு­வி­ழந்­தமை சிறந்த உதா­ர­ண­மா­கின்­றது. கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர்­களின் வகி­பா­கத்­தி­னையும் கருத்­தில்­கொள்­ள­வேண்­டி­யேற்­ப­டு­மல்­லவா? பதில்:- ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர்­களின் செயற்­பா­டு­களே அத்தரப்பின் எதிர்­கா­லத்­தினை தீர்­மா­னிக்கும். கூட்­ட­மைப்புக்கு எதி­ராக தீர்­மானம் எடுப்­ப­தாக நினைத்து தவ­றாகச் செயற்­பட்­டார்­க­ளாயின் அவர்­களே மர­ணத்­தினை தேடிச்­செல்லும் நிலை­மை­யையே ஏற்­ப­டுத்­தி­விடும் கேள்வி:- முஸ்லிம் தரப்­புக்­களின் நிலைப்­பா­டு­களில் மாற்றம் ஏற்­படும் என்று கரு­து­கின்­றீர்­களா? பதில்:- இல்லை. அவர்கள் எம்­மு­ட­னேயே இருக்­கின்­றார்கள். மேலும் ஈஸ்டர் தாக்­கு­தல்­களின் பின்னர் அந்த மக்கள் மீது மேற்­கொண்ட வன்­மு­றைகள் மூலம் அவர்கள் தெளி­வான நிலைப்­பாட்­டிற்கு வந்­துள்­ளார்கள். கேள்வி:- பொது­ஜன முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக யார் கள­மி­றக்­கப்­ப­டுவார் என்று கரு­து­கின்­றீர்கள்? பதில்:- கோத்­தா­ப­யவை கூறு­கின்­றார்கள். சமலைக் கூறு­கின்­றார்கள். மஹிந்­த­வுக்கும், நாம­லுக்கும் போட்­டி­யிட முடி­யாது. இல்­லா­விட்டால் அவர்­க­ளையும் கூறு­வார்கள். சிரந்­தி­யையும் கூறு­கின்­றார்கள். எவ்­வா­றா­யினும் ராஜ­பக் ஷ குடும்­பத்­தி­லி­ருந்து தான் தெரிவு இருக்­கப்­போ­கின்­றது. ஏனை­ய­வர்கள் அந்தக் குடும்­பத்­தி­ன­ருக்கு காலம்­பூ­ரா­கவும் தேங்காய் துரு­விக்­கொண்­டி­ருக்க வேண்­டி­யது தான். கேள்வி:- உங்­க­ளு­டைய தரப்பில் யார் கள­மி­றங்­க­வுள்ளார்? பதில்:- ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ராஜ­பக் ஷ போன்று பரம்­பரை அல்­லது குடும்ப அர­சியல் செய்ய வேண்­டி­ய­தில்லை. எமது அணியில் கரு, சஜித், நான்(ராஜித) சம்­பிக்க என பல தெரி­வுகள் இருக்­கின்­றன. சாதா­ரண குடும்­பத்­தி­லி­ருந்து ரண­சிங்க பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­ப­தி­யாக்­கி­யது முதல் விவ­சா­யியின் மக­னையும் எமது தரப்பு தான் அரி­யா­ச­னத்தில் அம­ர­வைத்­தது. அது தான் எமது தரப்பின் முன்­மா­தி­ரித்­துவம். கேள்வி:- பொது­ஜன முன்­னணி, சுதந்­தி­ரக்­கட்சி கூட்­டி­ணைந்தால் அது உங்­க­ளுக்கு சவாலை ஏற்­ப­டுத்­துமா? பதில்:- இந்த இரண்டு தரப்­புக்­களும் ஒரு­போதும் இணை­யப்­போ­வதே இல்லை. கேள்வி:- அப்­ப­டி­யென்றால் உங்கள் கூட்­ட­ணியில் சுதந்­தி­ரக்­கட்­சியை இணைப்­பீர்­களா? பதில்:- அவர்கள் எமது கூட்­ட­ணியில் பங்­கேற்க முடியும். அர­சாங்­கத்தில் இணைந்­தி­ருந்த அவர்கள் ஐ.தே.கவுக்கு எதி­ரான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து பிரிந்து சென்­றமை தவறு என்­பதை அவர்கள் புரிந்­து­கொண்­டுள்­ளார்கள். கேள்வி:- ஜனா­தி­பதி மைத்­திரி மீது மீண்டும் நம்­பிக்கை கொள்­ள­மு­டி­யு­மென்று கரு­து­கின்­றீர்­களா? பதில்:- அவர் எமது அணி­யி­லி­ருந்தே ஜனா­தி­பதி பத­விக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். தற்­போதும் புரிந்­து­ணர்­வுடன் உள்ளார். ஆகவே அவ­ரையும் ராஜ­பக் ஷ ஆட்­சிக்கு எதி­ரான போராட்­டத்தில் இணைத்­து­கொள்ள முடி­யு­மா­க­வி­ருந்தால் அதற்கும் தயா­ரா­கவே இருக்­கின்றோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரியின் தலை­மையில் ஆரம்­பித்த போராட்டப் பய­ணத்தின் இரண்­டா­வது அத்­தி­யாயம் தான் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­த­லாகும். ஆகவே அவர் அதி­லி­ருந்து விலகிச் செல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்லை. கேள்வி:- முத­லா­வது அத்­தி­யா­யத்­திற்கு தலைமை வகித்­த­வ­ருக்கு இரண்­டா­வது அத்­தி­யா­யத்தில் வழங்­கப்­படும் பாத்­திரம் என்ன? பதில்:- பத­விகள் தொடர்பில் பின்னர் கலந்­து­ரை­யா­ட­மு­டியும். முதலில் கொள்கை ரீதி­யாக ஆரம்­பித்த அர­சியல் பய­ணத்­தினை முன்­னெ­டுத்து நிறைவு செய்ய வேண்டும். நாட்­டுக்­காக மக்­க­ளுக்­காக அத­னையே கவ­னத்தில் கொள்ள வேண்டும். எமது நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்ல வேண்­டு­மானால், முதலில் இன,மத,மொழி,குல பேதங்­களை ஒழிக்க வேண்டும். இத்­த­கைய அடிப்­படை பிரச்­சி­னையை விடுத்து அர­சி­ய­லுக்­காக முரண்­ப­ட­மு­டி­யாது. கேள்வி:- தற்­போ­தைய அர­சாங்­கத்­தினை அமைப்­ப­தற்கு முன்­னின்ற மூவரில் ஒரு­வ­ராக இருக்கும் உங்­களின் பெயரும் ஜனா­தி­பதி வேட்­பாளர் பட்­டி­யலில் காணப்­ப­டு­கின்­ற­தல்­லவா? பதில்:- ஆம், ஏனைய இரு­வரும் ஜனா­தி­பதி, பிர­தமர் பத­வி­களை தற்­போது வகிக்­கின்­றனர். நான் மட்­டுமே எஞ்­சி­யி­ருக்­கின்றேன். கேள்வி:- எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் களத்தில் உங்­களின் வகி­பாகம் என்­ன­வாக இருக்­கப்­போ­கி­ன­றது? பதில்:- அதனைச் சற்­றுப்­பொ­றுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும். 2015ஆம் ஆண்டு பொது­வேட்­பா­ள­ராக கரு­ ஜ­ய­சூ­ரி­யவே முன்­மொ­ழி­யப்­பட்டார். இருப்­பினும் அதில் சில பின்­ன­டை­வுகள் இருந்த சம­யத்தில் கரு ஜய­சூ­ரிய எனது பெய­ரையே பொது­வேட்­பா­ள­ராக முன்­மொ­ழிந்­தி­ருந்தார். அச்­ச­ம­யத்தில், சுதந்­தி­ரக்­கட்­சிக்கு தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்தும் வகையில் அதி­லி­ருந்து ஒரு­வரை நிய­மிப்போம் என்று நானே கூறி மைத்­தி­ரி­பா­லவை அழைத்து வந்­தி­ருந்தேன். ஆகவே எமது தரப்பில் வேட்­பா­ளரை நிய­மிப்­பதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. கேள்வி:- தாங்கள் இன்­னமும் ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு இடையில் இணைப்பு பால­மாக செயற்­ப­டு­கின்­றீர்­களா? பதில்:- ஆம், 2015இலி­ருந்து அவ்­வாறு தான் செயற்­ப­டு­கின்றேன். அது தற்­போதும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. எதிர்­கா­லத்­திலும் தொடரும். கேள்வி:- இந்த முயற்­சி­யினை முன்­னெ­டுக்கும் உங்­க­ளுக்கு உள்­ளக அழுத்­தங்கள் காணப்­ப­டு­கின்­ற­னவா? பதில்:- பலர் பல்­வேறு நிலைப்­பாட்டில் இருக்­கின்­றார்கள். இருப்­பினும் பிர­தமர் ரணிலைப் பொறுத்­த­வ­ரையில் தனக்கு எதி­ராக எத்­த­கைய பிரச்­சி­னைகள் வந்­தாலும் அதி­லி­ருந்து மீள்­வ­தற்­கா­கவோ அல்­லது பதி­லடி வழங்­கு­வ­தற்­கா­கவோ அர­சியல் தீர்­மானம் எடுக்கும் ஒரு நப­ராக அவர் என்றும் செயற்­பட்­ட­தில்லை. அர­சியல் கொள்கை ரீதி­யான இலக்­கினை அடை­வ­தற்கு நன்­மை­ய­ளிக்­குமா என்­பதைக் கருத்­திற்­கொண்டே அவர் தீர்­மா­னங்­களை மேற்­கொள்­கின்றார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வது பற்றி நான் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன். அதில் அவ­ருக்கு எந்­த­வி­மான பிரச்­சி­னை­களும் இல்லை என்­பதை உறு­தி­யாக கூறுவேன் கேள்வி:- மத்­தியில் ஆட்­சி­ய­தி­கா­ரத்­தினைக் கொண்­டி­ருந்­தாலும் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தோல்­வி­யுற்ற அர­சாங்­க­மாக உள்ள நிலையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் இதன் தாக்கம் இருக்­கு­மல்­லவா? பதில்:- அர­சாங்­கத்தில் இருப்­ப­வர்­களே அர­சாங்­கத்­திற்கு எதி­ராக பிர­சாரம் செய்யும் போது எந்­த­வொரு சாதா­ரண பொது­ம­கனும் அதனை ஏற்­றுக்­கொள்வார் அல்­லவா. அதனால் தான் பின்­ன­டை­வு­களைச் சந்­திக்க நேர்ந்­தது. இருப்­பினும் தற்­போது அந்த நிலை­மை­களில் அதீத மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. கேள்வி:- அர­சாங்­கத்­திற்கு எதி­ரான பௌத்த தேரர்­களின் குரல்கள் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தி­வி­டாதா? பதில்:- கடந்த தேர்­த­லிலும், நாட்டை மீட்­டெ­டுத்த தலை­வரை மின்­சா­ரக்­க­தி­ரையில் அமர்த்த இட­ம­ளிக்கக் கூடாது என்று கூறி தேரர்கள் நாடு முழு­வதும் வலம் வந்த போதும் அதனை முறி­ய­டித்து நாம் வெற்­றி­பெற்­றி­ருந்­தோமே. கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் இணைந்து பய­ணிப்­ப­தா­னது உங்­க­ளு­டைய தரப்­புக்­கான தென்­னி­லங்கை வாக்கு வங்­கியில் சரிவை ஏற்­ப­டுத்­தாதா? பதில்:- இன­வாத பிர­சா­ரத்­தினை ஏற்­கின்­ற­வர்கள் எமக்கு எதி­ரா­கவே இருப்­பார்கள். ஆனால் சிங்­கள மக்­களில் அதி­க­ள­வா­ன­வர்கள் இன­வா­தத்­தினை மறு­த­லிப்­ப­வர்­க­ளா­கவே தற்­போ­துள்­ளனர். ஆக­வே, அவர்­களால் யதார்த்­தத்­தினை உணர்ந்து கொள்ள முடியும். கேள்வி:- பிர­தமர் ரணி­லுக்கு அப்பால் புதிய தலை­மைத்­துவம் அவ­சியம் என்­பதில் உங்­களின் தனிப்­பட்ட நிலைப்­பாடு என்ன? பதில்:- மாற்­றத்­தினை நோக்கி அடுத்த அர­சியல் பய­ணத்தில் பிரதமர் ரணிலும் உள்­வாங்­கப்­பட வேண்­டி­ய­வரே. தற்போதைய நிலையில், அரசியல், பொருளாதார ஞானம் மிக்கவராகவும் உலக அங்கீகாரம் பெற்றவராகவும் அவர் இருக்கின்றார். அவர் குறுகிய மனநிலை கொண்டவர் அல்ல. மக்கள் செல்வாக்கு கொண்டவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதில்லை. லெனின், லீ குவான் யூ போன்றவர்களை பாருங்கள். நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டு கட்டியெழுப்பியவர்கள். அதன் பின்னரே அவர்கள் மக்கள் செல்வாக்குடையவர்களாக மாறினார்கள். ஐக்கிய தேசியக் கட்சியை பல நெருக்கடிகளிலிருந்து மீட்டுத் தலைமைத்துவம் வழங்கியவராகவும் இருக்கின்றார். கேள்வி:- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு விடயங்களை அர்ப்பணிப்புடன் சாதித்திருப்பதாக நீங்களே ஏற்றுக்கொள்கின்ற நிலையில், ஜனாதிபதி வேட்பாளருக்காக அவர் தவிர்ந்த நபர்களை நோக்கி செல்வது ஏன்? பதில்:- சில தலைவர்கள் அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றைச் செய்திருந்தாலும் மக்கள் செல்வாக்கினை முழுமையாக பெற்றிருக்காத நிலைமை உள்ளது. உதாரணமாக கூறுவதாயின், இந்தியாவில் பி.ஜே.பியை எடுத்துக்கொண்டால் அதன் தலைவராக எல்.கே. அத்வானி இருந்தாலும் அவர்களின் வேட்பாளராக மக்கள் செல்வாக்கு மிக்க வாஜ்பாய், மோடி என்றே நியமித்து வந்திருக்கின்றார்கள். அத்வானியின் தலைமைத்துவத்திலும் அவரது அர்ப்பணிப்பான விட்டுக்கொடுப்பாலும் தான் வலுவான அரசாங்கம் அமைந்துள்ளது. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவும் புரிதலுடன் தீர்மானங்களை எடுப்பார். கேள்வி:- இறுதியாக, வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தாங்கள் அனைத்து சமூகங்களினதும் செல்வாக்கினை பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றீர்களா? பதில்:- இன்றிருக்கும் நிலைமை அடுத்த மூன்று மாதங்களில் இருப்பதில்லை. கடந்த தேர்தலில் இறுதி நேரத்தில் வந்த வேட்பாளர் நீண்டகாலமாக இருந்த தலைவரை தோற்கடித்திருந்தார் அல்லவா? அதுபோன்று தான் இம்முறையும் அதிரடியான மாற்றங்கள் இருக்கும். - நேர்காணல் ஆர்.ராம் - https://www.virakesari.lk/article/61383

7 இந்திய மீனவர்கள் கைது

2 months 2 weeks ago
7 இந்திய மீனவர்கள் கைது (எம்.மனோசித்ரா) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து மீன்பிடிப்படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் 18 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த இந்திய மீனவர்கள் ஏழு பேரும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடல்வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/61442

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து மீன்பிடிப்படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் 18 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த இந்திய மீனவர்கள் ஏழு பேரும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடல்வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/61442

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம்!

2 months 2 weeks ago
மீண்டும் பதவியேற்கும் முஸ்லிம் எம்.பி.க்கள் அண்மையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ரிஷாத் பதியூதீன் உள்ளிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீதும், முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் சிலரின் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், வகைதொகையின்றிய கைதுகள் மற்றும் கண்டி உண்ணாவிரதத்தினால் நாட்டில் ஏற்படவிருந்த பேரழிவு ஆகியவற்றின் அச்சம் காரணமாக அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இருந்தனர். எனினும் பின்னர் கபீர் காசிம், ஹலீம் ஆகியோர் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்றனர். எனினும் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணும் வரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை ஏற்பது இல்லை எனவும் அப்போது முடிவு செய்யப்பட்டது. அதன்பின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை அடுத்து முஸ்லிம்களின் விடுதலை உட்பட சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்ட போதும் இன்னும் சில பிரச்சினைகளுக்கான தீர்வை பெற வேண்டியிருந்ததாகவும் முஸ்லிம் எம்.பிக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். அத்துடன் கட்ந்த 26 ஆம் திகதி பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்திருந்தது. ஜனாதிபதி செயலகத்தின் இந்த அழைப்பு குறித்து கடந்த 25 ஆம் திககி மாலை முன்னாள் அமைச்சர்களான ஹக்கீம், ரிஷாத் மற்றும் பெளதி ஆகியோர் விரிவாக சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்த சந்திப்பின்பின் பின்னர் ரிஷாத் பதியூதீன் 26 ஆம் திகதி காலை ஜனாதிபதியை சந்தித்து பதவியை துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பதவி ஏற்க முடியாத சூழ்நிலை குறித்த நிலைப்பாட்டை எடுத்துரைத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான மீண்டுமொரு சந்திப்பின் பின்னர் பிறிதொரு தினத்தில் அது பற்றி தீர்மானித்துக்கொள்ள முடியும் எனவும் ரிஷாத் தெரிவித்மையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/61431

44 ஆவது கூட்­டத்­தொ­டரில் இலங்கை குறித்து அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ள ஐ.நா. விசேட நிபுணர்

2 months 2 weeks ago
44 ஆவது கூட்­டத்­தொ­டரில் இலங்கை குறித்து அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ள ஐ.நா. விசேட நிபுணர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட அமை­தி­யான ஒன்­று­கூ­டலை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் கிளமன்ட் தனது பரந்­து­பட்ட அறிக்­கையை எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் சமர்ப்­பிக்க இருக்­கின்றார். 2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் 44 ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் இந்த பரந்­து­பட்ட விபர அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வி­ருக்­கிறார். அமை­தி­யான ஒன்­று­கூடல் நிலைமை தொடர்பில் இலங்கை எந்த மட்­டத்தில் உள்­ளது என்­பது குறித்தே அவர் தனது அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வி­ருக்­கிறார். கடந்­த­வாரம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐ.நா. அறிக்­கை­யாளர் பல்­வேறு பகு­தி­க­ளுக்கு விஜயம் மேற்­கொண்­ட­துடன் பல­ரையும் சந்­தித்து அமை­தி­யான ஒன்­று­கூடல் குறித்து மதிப்­பீடு செய்­தி­ருந்தார். தனது விஜ­யத்தின் முடிவில் கொழு ம்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் அவ­ச­ர­காலச் சட்­டத்தின் நீடிப்­பா­னது அமை­தி­யான ஒன்­று­கூ­ட­லுக்கு தடை­யாக அமைந்­துள்­ள­தா­கவும் ஐக்­கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/61429

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட அமை­தி­யான ஒன்­று­கூ­டலை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் கிளமன்ட் தனது பரந்­து­பட்ட அறிக்­கையை எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் சமர்ப்­பிக்க இருக்­கின்றார். 

2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் 44 ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் இந்த பரந்­து­பட்ட விபர அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வி­ருக்­கிறார்.

அமை­தி­யான ஒன்­று­கூடல் நிலைமை தொடர்பில் இலங்கை எந்த மட்­டத்தில் உள்­ளது என்­பது குறித்தே அவர் தனது அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வி­ருக்­கிறார். 

கடந்­த­வாரம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐ.நா. அறிக்­கை­யாளர் பல்­வேறு பகு­தி­க­ளுக்கு விஜயம் மேற்­கொண்­ட­துடன் பல­ரையும் சந்­தித்து அமை­தி­யான ஒன்­று­கூடல் குறித்து மதிப்­பீடு செய்­தி­ருந்தார்.  தனது விஜ­யத்தின் முடிவில் கொழு ம்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் அவ­ச­ர­காலச் சட்­டத்தின் நீடிப்­பா­னது அமை­தி­யான ஒன்­று­கூ­ட­லுக்கு தடை­யாக அமைந்­துள்­ள­தா­கவும் ஐக்­கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/61429

விபத்தில் மூவர் பலி – ஐவர் காயம்

2 months 2 weeks ago
விபத்தில் மூவர் பலி – ஐவர் காயம் July 29, 2019 அநுராதபுரம்- மதவாச்சி வீதியின் வஹமலுகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தொன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதால், இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53, 30, 12 வயதுடையவர்கள் எனவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #யாழ்ப்பாணம் #விபத்தில் #பலி #காயம் http://globaltamilnews.net/2019/127518/

July 29, 2019

அநுராதபுரம்- மதவாச்சி வீதியின் வஹமலுகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தொன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதால், இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53, 30, 12 வயதுடையவர்கள் எனவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  #யாழ்ப்பாணம்  #விபத்தில் #பலி  #காயம்

http://globaltamilnews.net/2019/127518/

தனது சொந்த மகளைச் சீரழித்த தந்தை தலைமறைவு ; தேடுதல் வேட்டையில் பொலிஸார்

2 months 2 weeks ago
தனது சொந்த மகளைச் சீரழித்த தந்தை தலைமறைவு ; தேடுதல் வேட்டையில் பொலிஸார் 13 வயதுச் சிறுமியான தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சிறுமி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சிப் பொலிஸாரால் இந்த அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பரந்தன் சிவபுரத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு வழங்கப்பட்டது. சிறுமியும் அவரது தாயாருமே இந்த முறைப்பாட்டை வழங்கினர். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தந்தையே தன்னை மூன்று தடவைகள் வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார். தாயார் வேலைக்குச் சென்றிருந்த வேளை தந்தை தன்னை அச்சுறுத்தி இவ்வாறு நடந்துகொண்டார் என்றும் சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது . அவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தந்தையை சந்தேகநபராக இணைத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் முதல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அத்துடன், சந்தேகநபர் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்காக நாடுமுழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கிளிநொச்சிப் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர். https://www.virakesari.lk/article/61422

13 வயதுச் சிறுமியான தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

சிறுமி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சிப் பொலிஸாரால் இந்த அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பரந்தன் சிவபுரத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு வழங்கப்பட்டது.

சிறுமியும் அவரது தாயாருமே இந்த முறைப்பாட்டை வழங்கினர்.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தந்தையே தன்னை மூன்று தடவைகள் வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.

தாயார் வேலைக்குச் சென்றிருந்த வேளை தந்தை தன்னை அச்சுறுத்தி இவ்வாறு நடந்துகொண்டார் என்றும் சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது . அவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தந்தையை சந்தேகநபராக இணைத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் முதல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்காக நாடுமுழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கிளிநொச்சிப் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/61422

த‌லைவ‌ரின் ம‌னைவி சிறு பிள்ளையாய் இருந்த‌ போது பெற்றோர்க‌ளுட‌ன் எடுத்த‌ அரிய‌ புகைப் ப‌ட‌ம்

2 months 2 weeks ago
இந்த‌ ப‌ட‌ம் 2014ம் ஆண்டு , புல‌ம் பெய‌ர் நாட்டில் வாழும் என‌து ந‌ண்ப‌ன் மூல‌ம் கிடைச்ச‌து சிறி அண்ணா / எம் இன‌த்துக்காய் அவ‌ர்க‌ள் செய்த‌ தியாக‌ம் மிக‌ பெரிய‌து 🙏😓 /