Aggregator

லண்டன் போராட்டத்தில், ஜேவிபி யின் இனவாதம்.

2 months 2 weeks ago
இலங்கையில் 83 ம் ஆண்டு இடம்பெற்ற இனகலவரம் கறுப்பு ஜூலை என அழைக்கபடுவதும், அது நினைவாக போராட்டம் நடப்பதும் அனைவரும் அறிவர். 1983 ல் இதே நாளில் நடை பெற்ற இனக்கலவரம், மற்றும் சமகாலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன் வைத்து பிரித்தானியா இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஒரு ஆர்பாட்டத்தை இளைஞர்கள் மற்றும் தமிழ்சொலிடாரிட்டி அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். அதே இடத்தில் ஜனநாயக உரிமைகள் வென்றெடுக்க என ஜேவிபி ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். அங்கு வந்து சேர்ந்த ஜேவிபி யினர் கதிகலங்கி கொதிப்படைந்தனர். தமிழர் போராட்டத்தோடு நாம் இணைந்து செய்ய மாட்டோம் – தமிழர்கள் இங்கிருந்து சென்றால் மட்டுமே நாம் போராடுவோம் என அறிவித்தனர். உடனடியாக பொலிசாரை அழைத்து தமிழர்களை கலையுங்கள் என்றும், தங்களுக்கு மட்டும்தான் ‘அனுமதி’ வழங்கப் பட்டு இருக்கு என்றும் வாதாடினர். இலங்கை தூதரகத்தோடு இணைந்து நின்று கொண்டு அவர்கள் தமிழர் போராட்டத்தை எதிர்த்தனர். நீங்கள் போராடும் உரிமையை நாம் எதிர்க்கவில்லை எனவும் அவர்களை ஒரு பக்கம் நின்று போராடும்படியும் நாம் கூறினோம் .ஜே வி பி உடன் வந்து சேர்ந்திருந்த ஒரு சில தமிழர்கள் கூட பேசிப்பார்த்தனர் (முன்னாள் கடும் புலி எதிர்ப்பாளர்கள் – மற்றும் புளொட் இயக்க உறுப்பினர் என சிலர் அவர்களோடு இணைந்து வேலை செய்து வருவதாக தெரிகிறது). சிங்கள இனவாத ஜே வி பி கடும் கொதிப்போடு பேசவே மறுத்து விட்டனர். நாங்கள் அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடுகிறோம்- ஏன் உங்களுக்கு உடன் பாடில்லை? இதுதான் நீங்கள் ஜனநாயகத்திற்காக செய்யும் போராட்டமா என்ற கேள்வியை jvp யினரை நோக்கி மற்றவர்கள் முன்வைத்தனர். தமக்கு அரசில உண்டப்படில்லை என ஒருவர் கூறினார். எத்தகைய உடன்பாடு இல்லை என்ற கேள்விக்கு பதில் வரவில்லை. உடன்பாடு இல்லாவிட்டலும் ஒரு பக்கத்தில் நீங்கள் போராடுங்கள் – மறுபக்கம் நாம் போராடுகிறோம் என்று சொல்லியும் பிரயோசனம் இருக்கவில்லை. கொதிப்போடு போலீசாரோடு பேசி தமிழர் போராட்டத்தை கலைக்கும் படி விடாபிடியாக நின்றனர். நாங்கள் வைத்த கோரிக்கை. இலங்கை அரசு – சர்வாதிகார, படுகொலை அரசு. பேச்சுரிமை, போராடும் உரிமை முதற்கொண்டு அனைத்து சனநாயக உரிமைகளுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்களை நிறுத்து. கல்வி, சுகாதார துறைகளை தனியார் மயப்படுத்துவதை உடனடியாக நிறுத்து. போராடுபவர்களை தாக்குவதை உடனடியாக நிறுத்து. பொய் வழக்குகளை ரத்து செய். அரசியற் கைதிகள் அனைவரையும் விடுதலை செய். தமிழ் பகுதிகளில் இருந்து இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற, கைப்பற்றப்பட்ட நிலங்களை மீட்டெடுக்க, சுய நிர்ணய கோரிக்கையை வென்றெடுக்க ஒன்றுபடுவோம். இந்த எந்த கோரிக்கை அவர்களுக்கு உடன்பாடு இல்லை? இவ்வாறான மக்கள் கோரிக்கையை jvp யினர் மறுக்கின்றனர். தாங்கள் முற்போக்குவாதிகள் -மார்க்ஸிஸ்ட் கள் எனப் பறைசாற்றும் இவர்களது உண்மையான முகத்தை போராட்டத்தில் நின்றவர்கள் வெளிப்படையாக காணக்கூடியதாக இருந்தது. இவர்களுக்கு தமிழ் பேசும் மக்கள் மீது ஒரு அக்கறையும் இல்லை. சிங்கள இனவாதம் தெருவில் நடைமுறையில் இருந்ததை பார்க்க கூடியதாக இருந்தது. பெளத்த இனவாத இலங்கை அரசிற்கும் jvp யினர் களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை இவர்கள் நிரூபித்துள்ளார்கள். வடகிழக்கு பிரிப்பதற்கு இவர்கள் எப்படி பாடு பட்டார்கள் என்ற வரலாற்றையும் நாம் மறக்க முடியாது. அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் ஒன்றினைப்பதற்கு இவர்களுக்கு எந்த திட்டமிடல்களும் இல்லை. இவர்கள் ஒரு இனவாத கட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார்கள். 2009ம் ஆண்டு மே 1 தொழிலாளர் தினத்தின்போது இவர்கள் அரச ஆதரவு கோசம் செய்தார்கள். தமிழ் மக்கள் படுகொலை நிகழ்ந்து கொண்டிருந்த தருனத்தில் இவர்கள் இவ்வாறு கோசமிட்டது ஏற்றுக் கொள்ள முடியாமல் மற்ற போராட்டக் காரர்களால்(தமிழர் அல்ல – இங்கிலாந்து தொழிலாளர்) மே தின ஊர்வலத்தில் இருந்து அடித்து துரத்தப் பட்டார்கள். இன்றும் அது நடந்திருக்கும். ஆனால் அத்தகைய நடமுறையை மறுக்கும் தமிழ் சொலிடாரிட்டி நின்றபடியால் அத்தகைய நடவடிக்கை அனுமதிக்கப்படவில்லை. இன்னுமொரு இடத்தில் போராட்டம் நடந்த படியால் அனாவசிய மோதலை தவிர்க்க கூடியாதாக இருந்தது. மக்கள் கொந்தளிக்கும் வேளையில் மக்களை இணைக்க முடியாதவர்கள், தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை எவ்வாறு போராடி பெறப்போகிறார்கள். இடதுசாரி எனக் கூறும் JVP கட்சியினரிமிருந்து தமிழ் பேசும் மக்களின் தேசிய உரிமையை மட்டுமல்ல எந்த சனநாயக உரிமைகளையும் எதிர்பார்க்க முடியாது என்பது தெட்டதெளிவாகியது. மதன். https://ethir.org/?p=6845

பாப் பீமன்: 52 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ஒலிம்பிக் சாதனைக்கு சொந்தக்காரர்

2 months 2 weeks ago
பாப் பீமன்: 52 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ஒலிம்பிக் சாதனைக்கு சொந்தக்காரர் கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 1968 ஒலிம்பிக் போட்டிகள் மெக்சிகோவில் நடந்தது. அதோ பாப் பீமன், நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார். முதல் இரு முயற்சிகளும் ஃபவுலாகிவிட்டன. தன் மூன்றாவது முயற்சியை சரியாக மேற்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார் அந்த அமெரிக்க வீரர். பீமனோடு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த சக அமெரிக்க வீரரான ரால்ஃப் பாஸ்டன், அவரை சமாதானப்படுத்தி சில அறிவுரைகளை வழங்கினார். மூன்றாவது முயற்சியில் 8.19 மீட்டர் தூரம் தாண்டி, ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் இரவு, அவருக்கு மனமே சரியில்லை. தன் வாழ்வில் எல்லாமே தவறாக நடப்பதாக வருத்தப்பட்டார். பிரிகம் யங் என்பவரின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக, கருப்பினத்தவர்களோடு சேர்ந்து சில புறக்கணிப்பு போராட்டங்களில் கலந்து கொண்டதால் டெக்ஸாஸ் எல் பசோவில் அவருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை இழந்திருந்தார் என்கிறது இ.எஸ்.பி.என் வலைதளம். மேலும் அன்று இரவு, அவர் டகிலா மதுபானத்தை அருந்தியதாகவும் குறிப்பிடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்த நாள் எல்லா சுக துக்கங்களையும் மறந்து, தெளிந்த நீரோடை போல் களத்துக்கு வந்தார். அப்போட்டியில் அமெரிக்காவின் ரால்ஃப் பாஸ்டன். சோவியத்தின் இகோர் டெர் ஓவனேசியன் போன்ற சாதனை படைத்த வெற்றியாளர்கள் இருந்தனர். இந்த இரு வீரர்களும் 1960 - 1967 வரை பல்வேறு சாதனைகளை முறியடித்திருக்கிறார்கள். அப்போது பாப் பீமன் ஓர் இளங்கன்று, அவ்வளவு தான். அவர் தங்கம் வெல்வார் என்று எல்லாம் யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. நிர்வாண ஒலிம்பிக் போட்டிகள் எப்போது, எங்கே நடந்தன தெரியுமா? கஞ்சா பயன்படுத்தும் ஒலிம்பிக் வீரர்கள் தடை செய்யப்படுவது ஏன்? அவருக்கான வாய்ப்பு வந்தது. ஓடத் தொடங்கியதிலிருந்து ஆறே நொடி தான் பறந்து வந்து விழுந்தார். பீமனுக்கே அவர் சிறப்பாக தாண்டியதாகத் தோன்றியது. அந்த நேரத்தில் ஓர் அசாதாரண பிரச்னை எழுந்தது. 1968 ஒலிம்பிக்கில் நீளம் தாண்டும் வீரர்களின் தூரத்தை அளக்க புதிய தொழில்நுட்பக் கருவி பயன்படுத்தத் தொடங்கி இருந்தனர். அக்கருவி, பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்க முடியாமல் திணறியது. ஒலிம்பிக் நீளம் தாண்டுதல் போட்டி சில நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் பழைய படி மீட்டர் டேப்பை வெளியே எடுத்து, பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்கத் தொடங்கினர். ஒன்றுக்கு, இரு முறை, மூன்று முறை... என பல முறை தூரத்தை அளந்தனர். பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்கும் நடவடிக்கை சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்தது என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல். பட மூலாதாரம்,GETTY IMAGES கிட்டத்தட்ட எல்லா தடகள ஒலிம்பிக் அதிகாரிகளும் கூட கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்து அதிர்ந்து போயினர். பாப் பீமன் 8.90 மீட்டர் தூரம் தாண்டி இருந்தார். அந்த காலகட்டத்தில் 8.35 மீட்டர் தான் உலக சாதனையாக இருந்தது. அச்சாதனையை 55 சென்டிமீட்டர் தூரம் கூடுதலாகத் தாண்டி, நீளம் தாண்டுதலில் ஒரு பிரும்மாண்ட ஒலிம்பிக் சாதனையைப் படைத்தார் என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல். பாப் பீமன் ஒரு குழந்தை போல மைதானத்திலேயே சுருண்டு கண்ணீர் விட்டு அழுதார். சக வீரர்கள் தேற்றி சமாதானப்படுத்தினர். இந்த 8.90 மீட்டர் தான் இன்று வரை ஒலிம்பிக் சாதனையாக இருக்கிறது. தற்போது உலக அளவில் மைக் பவல் என்கிற அமெரிக்க வீரர் 8.95 மீட்டர் தூரத்தைத் தாண்டி உலக சாதனை படைத்து இருக்கிறார். சர்ச்சைக்குள்ளான நைக் வேபர்ஃப்லை ஷூ - உலக சாதனைகளை உடைக்க பயன்படுத்தப்பட்டதா? காதலால் தேசங்களைக் கடந்த ஒலிம்பிக் வீராங்கனை ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் யாரும் இதுவரை 8.90 மீட்டரைத் தாண்டவில்லை என்கிறது உலக தடகள சம்மேளனத்தின் தரவுகள். இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், அந்த ஒரு முறைக்குப் பிறகு பாப் பீமனாலேயே, 8.90 மீட்டர் தூரத்தைத் தாண்ட முடியவில்லை. அவ்வளவு ஏன்..? 1968 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு பாப் பீமனால் அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் கூட வெல்ல முடியவில்லை. அவருக்கு தொடர்ந்து காலில் காயம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என பாப் பீமன் கூறியதாக இ.எஸ்.பி.என் வலைதள செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் இவர்? பட மூலாதாரம்,GETTY IMAGES 15 வயதிலேயே 7.34 மீட்டர் தூரம் தாண்டிய பாப் பீமன், உடல் ரீதியாகவே நீளம் தாண்டும் திறனோடு இருந்தார் என்கிறது ஒலிம்பிக் சேனல். போல தன் 22ஆவது வயதில் 8.33 மீட்டர் தூரம் தாண்டி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார் நியூ யார்க் மாகாணத்தைச் சேர்ந்த பாப் பீமன். அவரது தாயார் சிறுவயதிலேயே காச நோயால் இறந்துவிட்டார். தாயை இழந்த, தாயின் அன்புக்கும் கவனிப்புக்கும் ஏங்கிய சிறுவன், தொல்லை கொடுப்பவனாக கொஞ்சம் காலம் கழித்தான். அவர் கவனம் மெல்ல விளையாட்டின் மீது திரும்பியது. சரியான பயிற்சிகள் கிடைக்க மெல்ல தன் திறனை வளர்த்துக் கொண்டு 1968 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு பிரம்மாண்ட உலக சாதனை படைத்தார். பாப் பீமனின் 8.90 மீட்டர் சாதனை, புராணக் கதைகளில் வரும் பீமனைப் போல கடந்த 52 ஆண்டுகளாக யாராலும் உடைக்க முடியாத அளவுக்கு வலுவாக இருக்கிறது. டோக்யோ ஒலிம்பிக்கிலாவது யாரேனும் இவர் சாதனையை உடைப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம். https://www.bbc.com/tamil/sport-58043090

  • கெளதமன் முராரி
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
பாப் பீமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1968 ஒலிம்பிக் போட்டிகள் மெக்சிகோவில் நடந்தது. அதோ பாப் பீமன், நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார். முதல் இரு முயற்சிகளும் ஃபவுலாகிவிட்டன.

தன் மூன்றாவது முயற்சியை சரியாக மேற்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார் அந்த அமெரிக்க வீரர்.

பீமனோடு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த சக அமெரிக்க வீரரான ரால்ஃப் பாஸ்டன், அவரை சமாதானப்படுத்தி சில அறிவுரைகளை வழங்கினார்.

மூன்றாவது முயற்சியில் 8.19 மீட்டர் தூரம் தாண்டி, ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் இரவு, அவருக்கு மனமே சரியில்லை. தன் வாழ்வில் எல்லாமே தவறாக நடப்பதாக வருத்தப்பட்டார்.

பிரிகம் யங் என்பவரின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக, கருப்பினத்தவர்களோடு சேர்ந்து சில புறக்கணிப்பு போராட்டங்களில் கலந்து கொண்டதால் டெக்ஸாஸ் எல் பசோவில் அவருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை இழந்திருந்தார் என்கிறது இ.எஸ்.பி.என் வலைதளம். மேலும் அன்று இரவு, அவர் டகிலா மதுபானத்தை அருந்தியதாகவும் குறிப்பிடுகிறது.

பாப் பீமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த நாள் எல்லா சுக துக்கங்களையும் மறந்து, தெளிந்த நீரோடை போல் களத்துக்கு வந்தார்.

அப்போட்டியில் அமெரிக்காவின் ரால்ஃப் பாஸ்டன். சோவியத்தின் இகோர் டெர் ஓவனேசியன் போன்ற சாதனை படைத்த வெற்றியாளர்கள் இருந்தனர்.

இந்த இரு வீரர்களும் 1960 - 1967 வரை பல்வேறு சாதனைகளை முறியடித்திருக்கிறார்கள். அப்போது பாப் பீமன் ஓர் இளங்கன்று, அவ்வளவு தான். அவர் தங்கம் வெல்வார் என்று எல்லாம் யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை.

அவருக்கான வாய்ப்பு வந்தது. ஓடத் தொடங்கியதிலிருந்து ஆறே நொடி தான் பறந்து வந்து விழுந்தார். பீமனுக்கே அவர் சிறப்பாக தாண்டியதாகத் தோன்றியது.

அந்த நேரத்தில் ஓர் அசாதாரண பிரச்னை எழுந்தது. 1968 ஒலிம்பிக்கில் நீளம் தாண்டும் வீரர்களின் தூரத்தை அளக்க புதிய தொழில்நுட்பக் கருவி பயன்படுத்தத் தொடங்கி இருந்தனர். அக்கருவி, பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்க முடியாமல் திணறியது.

ஒலிம்பிக் நீளம் தாண்டுதல் போட்டி சில நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் பழைய படி மீட்டர் டேப்பை வெளியே எடுத்து, பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்கத் தொடங்கினர். ஒன்றுக்கு, இரு முறை, மூன்று முறை... என பல முறை தூரத்தை அளந்தனர். பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்கும் நடவடிக்கை சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்தது என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல்.

பாப் பீமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிட்டத்தட்ட எல்லா தடகள ஒலிம்பிக் அதிகாரிகளும் கூட கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்து அதிர்ந்து போயினர். பாப் பீமன் 8.90 மீட்டர் தூரம் தாண்டி இருந்தார்.

அந்த காலகட்டத்தில் 8.35 மீட்டர் தான் உலக சாதனையாக இருந்தது. அச்சாதனையை 55 சென்டிமீட்டர் தூரம் கூடுதலாகத் தாண்டி, நீளம் தாண்டுதலில் ஒரு பிரும்மாண்ட ஒலிம்பிக் சாதனையைப் படைத்தார் என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல்.

பாப் பீமன் ஒரு குழந்தை போல மைதானத்திலேயே சுருண்டு கண்ணீர் விட்டு அழுதார். சக வீரர்கள் தேற்றி சமாதானப்படுத்தினர்.

இந்த 8.90 மீட்டர் தான் இன்று வரை ஒலிம்பிக் சாதனையாக இருக்கிறது. தற்போது உலக அளவில் மைக் பவல் என்கிற அமெரிக்க வீரர் 8.95 மீட்டர் தூரத்தைத் தாண்டி உலக சாதனை படைத்து இருக்கிறார்.

ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் யாரும் இதுவரை 8.90 மீட்டரைத் தாண்டவில்லை என்கிறது உலக தடகள சம்மேளனத்தின் தரவுகள்.

இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், அந்த ஒரு முறைக்குப் பிறகு பாப் பீமனாலேயே, 8.90 மீட்டர் தூரத்தைத் தாண்ட முடியவில்லை.

அவ்வளவு ஏன்..? 1968 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு பாப் பீமனால் அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் கூட வெல்ல முடியவில்லை.

அவருக்கு தொடர்ந்து காலில் காயம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என பாப் பீமன் கூறியதாக இ.எஸ்.பி.என் வலைதள செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

யார் இவர்?
பாப் பீமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

15 வயதிலேயே 7.34 மீட்டர் தூரம் தாண்டிய பாப் பீமன், உடல் ரீதியாகவே நீளம் தாண்டும் திறனோடு இருந்தார் என்கிறது ஒலிம்பிக் சேனல். போல தன் 22ஆவது வயதில் 8.33 மீட்டர் தூரம் தாண்டி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார் நியூ யார்க் மாகாணத்தைச் சேர்ந்த பாப் பீமன்.

அவரது தாயார் சிறுவயதிலேயே காச நோயால் இறந்துவிட்டார். தாயை இழந்த, தாயின் அன்புக்கும் கவனிப்புக்கும் ஏங்கிய சிறுவன், தொல்லை கொடுப்பவனாக கொஞ்சம் காலம் கழித்தான்.

அவர் கவனம் மெல்ல விளையாட்டின் மீது திரும்பியது. சரியான பயிற்சிகள் கிடைக்க மெல்ல தன் திறனை வளர்த்துக் கொண்டு 1968 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு பிரம்மாண்ட உலக சாதனை படைத்தார்.

பாப் பீமனின் 8.90 மீட்டர் சாதனை, புராணக் கதைகளில் வரும் பீமனைப் போல கடந்த 52 ஆண்டுகளாக யாராலும் உடைக்க முடியாத அளவுக்கு வலுவாக இருக்கிறது.

டோக்யோ ஒலிம்பிக்கிலாவது யாரேனும் இவர் சாதனையை உடைப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.

https://www.bbc.com/tamil/sport-58043090

ஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு

2 months 2 weeks ago
இந்த ஆலைக்கு அனுமதி கொடுத்ததே திமுகா தான் பேருக்கு இப்படி சொல்லி விட்டு மறுபுறம் ஆலையை தொடர்ந்து நடாத்த அனுமதியை பணத்தை வாங்கி கொண்டு கொடுத்துவிடுவார்கள் .

பச்சை மிளகாய் - ஜூட் பிரகாஷ்

2 months 2 weeks ago
ஊரில் இந்த மிளகாய்க்கு மருந்தடித்து வெள்ளைக்காரன் ஆன ஆட்கள் பாதிக்கப்பட்ட ஆட்கள் பற்றி யாழ் பல்கலை கழகம் ஆராயவில்லை ஆக்கும் அங்கு படிப்பிக்கிறம் என்று புத்தகங்கள் அடித்து விட்டவர்கள் தான் கூட போல் உள்ளது . உங்கடை லாச்சப்பலில் முதன் முதல் வரணி பகுதியை சேர்ந்த ஆள் வெள்ளைக்காரன் உருவில் வந்து வரணி தமிழில் பிளந்து கட்டினவர் அநேகமா நம்ம @விசுகண்ணாவுக்கு தெரிந்து இருப்பார் 80களில் பிரான்ஸ் போயுள்ளார் சொந்த வீடு வாசல் அவுட் ஒப் பாரிஸில் உள்ளதாக கூறினார். இடையில் இப்படி நிறமூர்த்த விளைவால் நடந்தது என்கிறார் என்ன ஊரில் செய்தது என்றால் தோட்டத்துக்கு மருந்தடிப்பது.

நம்பி வாங்கிய நாய்..!

2 months 2 weeks ago
நம்பி வாங்கிய நாய்..! ******************* பஞ்சாயத்து தலைவர் பதிவிலிருந்து.. சாந்தமில்லாத சப்பை முகம் கொண்ட வெளிநாட்டு நாயொன்றை விரும்பி வாங்கினேன். கடனாக.. அயல் வீட்டுத் தொந்தரவை அடக்கலாமென்று.. வாசலில் காவலுக்கு வைத்தால் வரும் எதிரி அனைத்தையும் வரவிடாமல் தடுக்குமென்று.. ஆனால் நாயிப்போ எனது நடு வீட்டுக்குள் கிடந்து.. நான் வளர்க்கும் பிராணிகளை நடு நடுங்க வைக்கிறது. நாளைக்கு என் வீட்டில் நான் இல்லை என்றாலும் நான் பட்ட கடன் சொல்லி நாய் மட்டும் போகாது. அங்கு.. இரு குட்டி போட்டு இறுமாப்பாய் வாழ்ந்ததென்று.. இங்கு பலகுட்டி போட்டு பல்கிப் பெருகும். ஊர் நாய்கள் ஒருநாளும் ஒன்று சேரா என்பதினால் என் நாய்க்கு என்றும் மகிழ்சிதானே அன்புடன். -பசுவூர்க்கோபி- 1.08.2021

large.26-1437886193-pitbull54.jpg.bcf64e99965978ef00b59f26ca2e768b.jpg

நம்பி வாங்கிய நாய்..!

*******************

பஞ்சாயத்து தலைவர்

பதிவிலிருந்து..

சாந்தமில்லாத 

சப்பை

முகம் கொண்ட

வெளிநாட்டு 

நாயொன்றை

விரும்பி 

வாங்கினேன்.

கடனாக..

அயல் வீட்டுத் 

தொந்தரவை

அடக்கலாமென்று..

வாசலில் காவலுக்கு 

வைத்தால்

வரும் எதிரி 

அனைத்தையும்

வரவிடாமல் 

தடுக்குமென்று..

ஆனால் 

நாயிப்போ எனது

நடு வீட்டுக்குள் 

கிடந்து..

நான் வளர்க்கும்

பிராணிகளை

நடு நடுங்க 

வைக்கிறது.

நாளைக்கு 

என் வீட்டில்

நான் இல்லை

என்றாலும்

நான் பட்ட 

கடன் 

சொல்லி

நாய் மட்டும் 

போகாது.

அங்கு..

இரு குட்டி போட்டு

இறுமாப்பாய் 

வாழ்ந்ததென்று..

இங்கு

பலகுட்டி போட்டு

பல்கிப் பெருகும். 

ஊர் நாய்கள்

ஒருநாளும்

ஒன்று சேரா

என்பதினால்

என் நாய்க்கு

என்றும்

மகிழ்சிதானே

அன்புடன்.

-பசுவூர்க்கோபி-

1.08.2021

நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்

2 months 2 weeks ago
நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்துக்கு மலர் மாலை அணிந்து, மலரஞ்சலி செலுத்தி, சுடரேற்றப்பட்டது. யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை , அவரது வீட்டுக்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்தனர். https://newuthayan.com/நிலக்சனின்-14ஆம்-ஆண்டு-நின/

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்துக்கு மலர் மாலை அணிந்து, மலரஞ்சலி செலுத்தி, சுடரேற்றப்பட்டது.

யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை , அவரது வீட்டுக்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்தனர்.

IMG_7033-300x225.jpgIMG_7032-300x225.jpgIMG_7030-300x225.jpgIMG_7025-300x225.jpgIMG_7021-300x225.jpgIMG_7018-300x225.jpgIMG_7002-300x225.jpgIMG_7002-1-300x225.jpg

https://newuthayan.com/நிலக்சனின்-14ஆம்-ஆண்டு-நின/

83யூலை நினைவுகளின் பின்னணியில் ராஜமகேந்திரனை நினைவு கூர்தல் – நிலாந்தன்!

2 months 2 weeks ago
83யூலை நினைவுகளின் பின்னணியில் ராஜமகேந்திரனை நினைவு கூர்தல் – நிலாந்தன்! August 1, 2021 மகாராஜா ஊடக குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சிவராம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ உங்களுடைய தலைவர் ராஜமகேந்திரனிடம் நாட்டைக் கொஞ்ச நாளைக்கு ஆளக் குடுத்தால்…வடிவா ஆண்டு காட்டுவாரடா ! “ – என்று. தமிழ் மக்கள் ஜூலை 83ஐ நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில் ராஜமகேந்திரன் காலமாகியுள்ளார். அவர் ஒரு தமிழ் பெரு முதலாளி. ஒரு ஊடக குழுமத்தில் தலைவர். எல்லாவற்றுக்கும் அப்பால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் அவர் ஒரு நம்பிக்கையின் குறியீடு. எப்படியென்றால் 83 ஜூலையில் அவருடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன எரிக்கப்பட்டன. எனினும்,தனது சொத்துக்கள் எரிந்த சாம்பலில் இருந்து அவர் மறுபடியும் முளைத்தெழுந்தார். அவரோடு சேர்ந்து தொழிலைத் தொடங்கிய அவருடைய சகோதரர் போன்றோர் ஜூலை அழிவுகளின் பின் புலம் பெயர்ந்து போய் விட்டார்கள். ஆனால் ராஜ மகேந்திரன் தான் வேர் கொண்ட இடத்திலேயே தொடர்ந்து நிலைத்து நின்றார். தன் சொந்த சாம்பலிலிருந்து ஒரு ஊடக சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பினார். தனது ஊழியர்களிடம் அவர் அடிக்கடி கூறுவாராம் எனது சொத்துக்களை எரித்தார்கள். எனினும் நான் மீண்டு எழுந்தேன் என்ற தொனிப்பட. அவருடைய அரசியல் தொடர்பில் கேள்விகள் உண்டு. அவர் பிரேமதாசாவுக்கு நெருக்கமானவர். கொழும்பு சிங்கள உயர் குலத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகர் அவருடைய இரண்டாவது மனைவி ஒரு சிங்களப் பெண். அவருடைய புதல்வர்கள் திருமணம் செய்ததும் சிங்களப் பெண்களைத்தான். அவர் ஒரு தமிழராக பிறந்தாலும் வாழ்க்கை முறையால் சிங்கள உயர்குழாத்தில் ஒருவராக மாறி விட்டிருந்தார். இக்கட்டுரை அவரை ஒரு தமிழ் தேசியவாதியாக முன்னிறுத்த வில்லை. மாறாக தோல்வியை ஏற்றுக் கொள்ளாத ஓர்மத்தின் முன்னுதாரணமாகவே அவரை முன்னிறுத்துகிறது. பிரேமதாசவுக்கும் அவருக்கும் இடையிலான நெருக்கம்தான் அவருடைய எஸ்.சிலோன் பைப் கொம்பனி அதிகம் எழுச்சி பெற காரணம் என்று ஒரு விளக்கம் உண்டு. பிரேமதாசவின் கிராம உதயம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய வீடுகளுக்கு பிளாஸ்டிக் குழாய்களை மகாராஜா கொம்பெனியே விநியோகித்தது என்றும் அதுவும் அந்த நிறுவனம் அதிகம் லாபம் அடைய ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அவரை அவருடைய ஊடக குழுமத்தை யு.என்.பிக்கு சார்பானதாகவே உலகம் பார்க்கிறது. யூ.என்.பிக்கும் அவருக்குமுள்ள நெருக்கமும் சிங்கள உயர் குழாத்தில் அவர் பெற்றிருந்த முதன்மையும்தான் அவரை எதிர்க்கட்சிகளை துணிந்து அம்பலப்படுத்தும் ஓர் ஊடக முதலாளியாக நிலைநிறுத்தியது. ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்ததும் 2006 அளவில் அவருடைய முகத்துடன் புலி வாலை இணைத்து கொழும்பில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அவருடைய சகோதரியின் கணவன் ஆகிய நடேசன் சத்தியேந்திராவிற்கும் தமிழ் ஆயுதப் போராட்டத்துக்கு இடையிலான நெருக்கத்தை குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ராஜ மகேந்திரன் பின்வாங்கவில்லை. அவருடைய ஊடக தர்மம் குறித்து விமர்சனங்கள் உண்டு. அவரை தமிழ் ஊடக தாதா என்று விமர்சிப்பவர்கள் உண்டு.மேலும் தென்னிந்தியாவின் வர்த்தக குப்பைகளான நாடக சீரியல்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தவர் என்ற விமர்சனமும் உண்டு. ஆனாலும் ராஜமகேந்திரன் ஒரு முதலாளியாகவும் சிங்கள அரசியலில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரூடகக் குழுமத்தின் தலைவராகவும் கொழும்பில் நிமிர்ந்து நின்றார். எரித்த இடத்திலேயே மீளத் துளிர்த்து பெரு விருட்சமாக வளர்ந்து காட்டினார்.அது ஊடகத்துறைக்கு மட்டுமல்ல தமிழ் முதலாளிகளுக்கு மட்டுமல்ல முழு தமிழ் மக்களுக்கும் ஒரு குறியீட்டு உண்மையை உணர்த்துகிறது. எந்த தலைநகரத்தில் இருந்து தமிழ் மக்களை குறிப்பாக தமிழ் முதலாளிகளை துரத்த வேண்டும் என்று திட்டமிட்டு 83 ஜூலை அழிவுகள் முன்னெடுக்கப்பட்டனவோ அதே தலைநகரத்தில் பீனிக்ஸ் பறவை போல ஒரு தமிழர் மீண்டும் எழுந்தார். இது ஜூலை 83ஐ நினைவு கூரும் காலம். ஜூலை 83ஐ நினைவு கூர்வது என்பது இனப்படுகொலையை நினைவு கூர்வதுதான். தென்னிலங்கையில் தமிழ் மக்கள் பெற்றிருந்த பொருளாதார மற்றும் சமூக முக்கியத்துவத்தை அழிக்கும் நோக்கத்தோடு மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஓர் இன அழிப்பு நடவடிக்கை அது. அதைக் கலவரம் என்று அழைக்க முடியாது. ஏனென்றால் கலவரம் எனப்படுவது சம்பந்தப்பட்ட இரு சாரரும் கைகலப்பில் ஈடுபடுவது. ஆனால் அது தென்னிலங்கையில் நிராயுதபாணிகளாக நின்ற தமிழ்மக்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு தாக்குதலே.கொழும்பை தங்களுடைய தலைநகரமாகவும் தென்னிலங்கையை தமது தாயகமாகவும் நம்பிய அப்பாவித் தமிழர்களை அவர்கள் கொன்றொழித்தார்கள். அவர்களுடைய சொத்துக்களை எரித்து அழித்தார்கள். உங்களுடைய தாயகம் காங்கேசன் துறைக்கப்பால் இருக்கிறது போங்கள் என்று கூறி கப்பலில் ஏற்றி அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார்கள். 83 ஜூலை எனப்படுவது பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தியது. முதலாவது தென்னிலங்கை தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என்ற உண்மையை அது உணர்த்தியது. இரண்டாவதாக இலங்கைத்தீவு பல்லினத்தன்மை மிக்கது அல்ல என்ற ஒருண்மையை வெளிக்காட்டியது. மூன்றாவதாக அது இந்திய தலையீட்டுக்கு வழிவகுத்தது. நாலாவதாக தமிழ்ப் புலப்பெயர்ச்சியின் இரண்டாவது அலையைத் தொடக்கி வைத்தது. இந்த நான்கு விளைவுகளின் தொகுப்பே பின்வந்த தசாப்தங்களும் ஈழப்போரும் ஆகும். முதலாவதாக தென்னிலங்கை தமிழ் மக்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்த்தியது. ராஜ மகேந்திரன் அப்போதிருந்த அரசாங்கத்தின் பிரதமரான பிரேமதாசாவுக்கு நெருக்கமானவராக காணப்பட்டார். எனினும் இரத்மலானையில் அமைந்திருந்த அவருடைய எஸ்.லோன் கொம்பனி எடுக்கப்படுகையில் அதை தடுக்கவோ காப்பாற்றுவோ பிரேமதாசாவால் முடியவில்லை. அதுதான் அன்றைக்கிருந்த கொழும்பு யதார்த்தம். ஜூலை 83இன் மூலம் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் ஒரு உண்மையை வெளிப்படுத்தினார்கள். அது என்னவென்றால் பல்லினத் தன்மை மிக்க ஒரு தீவை கட்டியெழுப்ப நாங்கள் தயாரில்லை என்பதுதான். இது இலங்கை தீவை உலக அளவில் அவமானப்படுத்தியது. இது முதலாவது மற்றும் இரண்டாவது விளைவுகள் மூன்றாவது விளைவு இந்தியத் தலையீடு. ஜூலை 83ஐ முன்வைத்து இலங்கை தீவின் இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டது. அதன் உச்சகட்டம்தான் இந்திய இலங்கை உடன்படிக்கை. அதற்குப் பின்னரும் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டன. இன்றுவரை அந்த விளைவுகளைத்தான் இலங்கைத் தீவு அனுபவிக்கிறது. முதலில் இந்தியா இறங்கியது.பின்னர் ஸ்கண்டிநேவிய நாடுகளும் ஜப்பானும் அமெரிக்காவின் கருவிகளாக இறங்கின. இப்பொழுது சீனா இறங்கியிருக்கிறது.அதன் மெய்யான பொருளில் இலங்கைத்தீவு அதன் இறமையை இழந்துவிட்டது. அது இப்பொழுது பேரரசுகளால் பிச்சுப் பிடுங்கப்படும் ஒரு அப்பம் அதாவது 83 ஜூலையில் இருந்து தொடங்கி இலங்கைத்தீவு அதன் இறமையை இழக்கத் தொடங்கியது. தமிழ் மக்களின் உரிமையை ஏற்றுக் கொள்ளாத தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மொத்தத்தில் இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த இறமையையும் இழந்துவிட்டார்கள். இது 3வது விளைவு. நாலாவது விளைவு புலப்பெயர்ச்சி. தமிழ் புலப் பெயர்ச்சியின் இரண்டாவது அலை 83 ஜூலையில் இருந்து தொடங்கியது. இலங்கைத்தீவு தமக்கு பாதுகாப்பான ஒரு நாடு அல்ல என்பதை உணர்ந்த தமிழர்கள் அதிகரித்த அளவில் அலையலையாக புலம்பெயரத் தொடங்கினார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களின் மத்தியில் ராஜமகேந்திரனின் சகோதரர் இருந்தார். ஆனால் ராஜமகேந்திரன் இருக்கவில்லை. இப்படி புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதிலும் அகதிகளாக பரவிச் சென்றார்கள். ஆனால் சில தசாப்தங்களுக்குள்ளேயே உலகின் கவர்ச்சிமிக்க புலம்பெயர் சமூகமாக மேலெழுந்தார்கள். துடிப்பான, அரசியல் ஆர்வம் மிக்க, முதலீட்டு ஆர்வம் மிக்க, கடுமையாக உழைக்கின்ற, சாதிக்க வேண்டும் என்ற தாகமுடைய. தமது தாயகத்தை புலம்பெயர்ந்த நாடுகளில் ஊறுகாய் போட்டு வைத்திருக்கின்ற கவர்ச்சிமிக்க ஒரு டயஸ்போறாவாக தமிழர்கள் மேலெழுந்தார்கள். எந்த தலைநகரத்தில் இருந்து அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்களோ அதே தலைநகரத்தை நோக்கி வெளிநாட்டு பிரஜைகளாக டொலர்களோடு வந்திறங்கினார்கள். எந்தத் தலை நகரத்தில் அவர்களுடைய சொத்துக்கள் எரிக்கப்பட்டனவோ அதே தலைநகரத்தில் டொலர்களை கொடுத்து புதிய சொத்துக்களை வாங்கிக் குவித்தார்கள். குறிப்பாக ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் தென்னிலங்கையில் நிதி ரீதியாக வங்குரோத்தாக்கிய சிங்களக் கொம்பனிகளை வாங்கும் சக்தி மிக்கவர்களாக மேலெழுந்தார்கள். இப்பொழுது புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எனப்படுவது உலகின் கவனிப்புக்குரிய ஒரு மக்கள் கூட்டமாக எழுந்துவிட்டது. அதுமட்டுமல்ல புலப்பெயர்ச்சியே தங்களை மேலும் பலப்படுத்தியிருக்கிறது என்பதனை நிரூபித்திருக்கிறார்கள்.அது தோற்கடிக்கப்பட முடியாத ஒரு மக்களாக தமிழ் மக்களை நிரூபித்திருக்கிறது. தென்னிலங்கையின் நகரங்களில் ரூபாய்களோடு திரிந்த தமிழர்களை ஜூலை 83 டொலர்களோடு திரிபவர்களாக மாற்றியிருக்கிறது. அதாவது ஜூலை 83 இல் தென்னிலங்கையிலிருந்து தமிழ் மக்களைத் துரத்தியவர்கள் தங்கள் இலக்குகளை அடைய முடியவில்லை என்பதைப் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நிரூபித்திருக்கிறது. இப்படிப்பட்ட ஓர் அரசியல் சமூகப் பொருளாதார பின்னணியில் ராஜமகேந்திரன் புலம் பெயராது தனது சொத்துக்கள் எரிந்த சொந்த சாம்பலில் இருந்து மீண்டும் எழ முடியும் என்பதனை கொழும்பில் தொடர்ந்தும் வசித்தபடியே நிரூபித்தார். அவருக்கும் யூ.என்.பிக்கும் இடையிலான உறவும் சிங்கள உயர் குளாத்தில் அவருக்கிருந்த முதன்மையும் அதற்குப் பக்கபலமாக இருந்தன.எனினும் தமது சொந்த சாம்பலிலிருந்து தமிழர்கள் மீண்டும் உயிர்த்தெழ முடியும் என்ற நம்பிக்கையை அவர் தமிழ் மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய அரசியலை குறித்தும் அவருடைய ஊடக குழுமம் குறித்தும் தனியாக ஆராய வேண்டும். ஆனால் இப்பொழுது தமிழ் மக்கள் அவரை நினைவு கூர வேண்டிய இடம் எதுவென்றால் எரிக்கப்பட்ட பின்னரும் இடிக்கப்பட்ட பின்னரும் இனப்படுகொலைக்குப் பின்னரும் நிமிரலாம் என்ற நம்பிக்கையின் தமிழ்க் குறியீடுகளில் அவரும் ஒருவர் என்பதுதான். https://globaltamilnews.net/2021/164086

August 1, 2021

spacer.png

மகாராஜா ஊடக குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சிவராம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ உங்களுடைய தலைவர் ராஜமகேந்திரனிடம் நாட்டைக் கொஞ்ச நாளைக்கு ஆளக் குடுத்தால்…வடிவா ஆண்டு காட்டுவாரடா ! “ – என்று.

தமிழ் மக்கள் ஜூலை 83ஐ நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில் ராஜமகேந்திரன் காலமாகியுள்ளார்.
அவர் ஒரு தமிழ் பெரு முதலாளி. ஒரு ஊடக குழுமத்தில் தலைவர். எல்லாவற்றுக்கும் அப்பால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் அவர் ஒரு நம்பிக்கையின் குறியீடு. எப்படியென்றால் 83 ஜூலையில் அவருடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன எரிக்கப்பட்டன. எனினும்,தனது சொத்துக்கள் எரிந்த சாம்பலில் இருந்து அவர் மறுபடியும் முளைத்தெழுந்தார். அவரோடு சேர்ந்து தொழிலைத் தொடங்கிய அவருடைய சகோதரர் போன்றோர் ஜூலை அழிவுகளின் பின் புலம் பெயர்ந்து போய் விட்டார்கள். ஆனால் ராஜ மகேந்திரன் தான் வேர் கொண்ட இடத்திலேயே தொடர்ந்து நிலைத்து நின்றார். தன் சொந்த சாம்பலிலிருந்து ஒரு ஊடக சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பினார்.

தனது ஊழியர்களிடம் அவர் அடிக்கடி கூறுவாராம் எனது சொத்துக்களை எரித்தார்கள். எனினும் நான் மீண்டு எழுந்தேன் என்ற தொனிப்பட.

அவருடைய அரசியல் தொடர்பில் கேள்விகள் உண்டு. அவர் பிரேமதாசாவுக்கு நெருக்கமானவர். கொழும்பு சிங்கள உயர் குலத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகர் அவருடைய இரண்டாவது மனைவி ஒரு சிங்களப் பெண். அவருடைய புதல்வர்கள் திருமணம் செய்ததும் சிங்களப் பெண்களைத்தான். அவர் ஒரு தமிழராக பிறந்தாலும் வாழ்க்கை முறையால் சிங்கள உயர்குழாத்தில் ஒருவராக மாறி விட்டிருந்தார். இக்கட்டுரை அவரை ஒரு தமிழ் தேசியவாதியாக முன்னிறுத்த வில்லை. மாறாக தோல்வியை ஏற்றுக் கொள்ளாத ஓர்மத்தின் முன்னுதாரணமாகவே அவரை முன்னிறுத்துகிறது.

பிரேமதாசவுக்கும் அவருக்கும் இடையிலான நெருக்கம்தான் அவருடைய எஸ்.சிலோன் பைப் கொம்பனி அதிகம் எழுச்சி பெற காரணம் என்று ஒரு விளக்கம் உண்டு. பிரேமதாசவின் கிராம உதயம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய வீடுகளுக்கு பிளாஸ்டிக் குழாய்களை மகாராஜா கொம்பெனியே விநியோகித்தது என்றும் அதுவும் அந்த நிறுவனம் அதிகம் லாபம் அடைய ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

அவரை அவருடைய ஊடக குழுமத்தை யு.என்.பிக்கு சார்பானதாகவே உலகம் பார்க்கிறது. யூ.என்.பிக்கும் அவருக்குமுள்ள நெருக்கமும் சிங்கள உயர் குழாத்தில் அவர் பெற்றிருந்த முதன்மையும்தான் அவரை எதிர்க்கட்சிகளை துணிந்து அம்பலப்படுத்தும் ஓர் ஊடக முதலாளியாக நிலைநிறுத்தியது. ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்ததும் 2006 அளவில் அவருடைய முகத்துடன் புலி வாலை இணைத்து கொழும்பில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அவருடைய சகோதரியின் கணவன் ஆகிய நடேசன் சத்தியேந்திராவிற்கும் தமிழ் ஆயுதப் போராட்டத்துக்கு இடையிலான நெருக்கத்தை குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ராஜ மகேந்திரன் பின்வாங்கவில்லை.

அவருடைய ஊடக தர்மம் குறித்து விமர்சனங்கள் உண்டு. அவரை தமிழ் ஊடக தாதா என்று விமர்சிப்பவர்கள் உண்டு.மேலும் தென்னிந்தியாவின் வர்த்தக குப்பைகளான நாடக சீரியல்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தவர் என்ற விமர்சனமும் உண்டு.

ஆனாலும் ராஜமகேந்திரன் ஒரு முதலாளியாகவும் சிங்கள அரசியலில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரூடகக் குழுமத்தின் தலைவராகவும் கொழும்பில் நிமிர்ந்து நின்றார். எரித்த இடத்திலேயே மீளத் துளிர்த்து பெரு விருட்சமாக வளர்ந்து காட்டினார்.அது ஊடகத்துறைக்கு மட்டுமல்ல தமிழ் முதலாளிகளுக்கு மட்டுமல்ல முழு தமிழ் மக்களுக்கும் ஒரு குறியீட்டு உண்மையை உணர்த்துகிறது. எந்த தலைநகரத்தில் இருந்து தமிழ் மக்களை குறிப்பாக தமிழ் முதலாளிகளை துரத்த வேண்டும் என்று திட்டமிட்டு 83 ஜூலை அழிவுகள் முன்னெடுக்கப்பட்டனவோ அதே தலைநகரத்தில் பீனிக்ஸ் பறவை போல ஒரு தமிழர் மீண்டும் எழுந்தார்.

இது ஜூலை 83ஐ நினைவு கூரும் காலம். ஜூலை 83ஐ நினைவு கூர்வது என்பது இனப்படுகொலையை நினைவு கூர்வதுதான். தென்னிலங்கையில் தமிழ் மக்கள் பெற்றிருந்த பொருளாதார மற்றும் சமூக முக்கியத்துவத்தை அழிக்கும் நோக்கத்தோடு மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஓர் இன அழிப்பு நடவடிக்கை அது. அதைக் கலவரம் என்று அழைக்க முடியாது. ஏனென்றால் கலவரம் எனப்படுவது சம்பந்தப்பட்ட இரு சாரரும் கைகலப்பில் ஈடுபடுவது. ஆனால் அது தென்னிலங்கையில் நிராயுதபாணிகளாக நின்ற தமிழ்மக்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு தாக்குதலே.கொழும்பை தங்களுடைய தலைநகரமாகவும் தென்னிலங்கையை தமது தாயகமாகவும் நம்பிய அப்பாவித் தமிழர்களை அவர்கள் கொன்றொழித்தார்கள். அவர்களுடைய சொத்துக்களை எரித்து அழித்தார்கள். உங்களுடைய தாயகம் காங்கேசன் துறைக்கப்பால் இருக்கிறது போங்கள் என்று கூறி கப்பலில் ஏற்றி அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

83 ஜூலை எனப்படுவது பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தியது. முதலாவது தென்னிலங்கை தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என்ற உண்மையை அது உணர்த்தியது. இரண்டாவதாக இலங்கைத்தீவு பல்லினத்தன்மை மிக்கது அல்ல என்ற ஒருண்மையை வெளிக்காட்டியது. மூன்றாவதாக அது இந்திய தலையீட்டுக்கு வழிவகுத்தது. நாலாவதாக தமிழ்ப் புலப்பெயர்ச்சியின் இரண்டாவது அலையைத் தொடக்கி வைத்தது.

இந்த நான்கு விளைவுகளின் தொகுப்பே பின்வந்த தசாப்தங்களும் ஈழப்போரும் ஆகும்.

முதலாவதாக தென்னிலங்கை தமிழ் மக்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்த்தியது. ராஜ மகேந்திரன் அப்போதிருந்த அரசாங்கத்தின் பிரதமரான பிரேமதாசாவுக்கு நெருக்கமானவராக காணப்பட்டார். எனினும் இரத்மலானையில் அமைந்திருந்த அவருடைய எஸ்.லோன் கொம்பனி எடுக்கப்படுகையில் அதை தடுக்கவோ காப்பாற்றுவோ பிரேமதாசாவால் முடியவில்லை. அதுதான் அன்றைக்கிருந்த கொழும்பு யதார்த்தம். ஜூலை 83இன் மூலம் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் ஒரு உண்மையை வெளிப்படுத்தினார்கள். அது என்னவென்றால் பல்லினத் தன்மை மிக்க ஒரு தீவை கட்டியெழுப்ப நாங்கள் தயாரில்லை என்பதுதான். இது இலங்கை தீவை உலக அளவில் அவமானப்படுத்தியது. இது முதலாவது மற்றும் இரண்டாவது விளைவுகள்

மூன்றாவது விளைவு இந்தியத் தலையீடு. ஜூலை 83ஐ முன்வைத்து இலங்கை தீவின் இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டது. அதன் உச்சகட்டம்தான் இந்திய இலங்கை உடன்படிக்கை. அதற்குப் பின்னரும் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டன. இன்றுவரை அந்த விளைவுகளைத்தான் இலங்கைத் தீவு அனுபவிக்கிறது. முதலில் இந்தியா இறங்கியது.பின்னர் ஸ்கண்டிநேவிய நாடுகளும் ஜப்பானும் அமெரிக்காவின் கருவிகளாக இறங்கின. இப்பொழுது சீனா இறங்கியிருக்கிறது.அதன் மெய்யான பொருளில் இலங்கைத்தீவு அதன் இறமையை இழந்துவிட்டது. அது இப்பொழுது பேரரசுகளால் பிச்சுப் பிடுங்கப்படும் ஒரு அப்பம்

அதாவது 83 ஜூலையில் இருந்து தொடங்கி இலங்கைத்தீவு அதன் இறமையை இழக்கத் தொடங்கியது. தமிழ் மக்களின் உரிமையை ஏற்றுக் கொள்ளாத தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மொத்தத்தில் இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த இறமையையும் இழந்துவிட்டார்கள். இது 3வது விளைவு.

நாலாவது விளைவு புலப்பெயர்ச்சி. தமிழ் புலப் பெயர்ச்சியின் இரண்டாவது அலை 83 ஜூலையில் இருந்து தொடங்கியது. இலங்கைத்தீவு தமக்கு பாதுகாப்பான ஒரு நாடு அல்ல என்பதை உணர்ந்த தமிழர்கள் அதிகரித்த அளவில் அலையலையாக புலம்பெயரத் தொடங்கினார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களின் மத்தியில் ராஜமகேந்திரனின் சகோதரர் இருந்தார். ஆனால் ராஜமகேந்திரன் இருக்கவில்லை.

இப்படி புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதிலும் அகதிகளாக பரவிச் சென்றார்கள். ஆனால் சில தசாப்தங்களுக்குள்ளேயே உலகின் கவர்ச்சிமிக்க புலம்பெயர் சமூகமாக மேலெழுந்தார்கள். துடிப்பான, அரசியல் ஆர்வம் மிக்க, முதலீட்டு ஆர்வம் மிக்க, கடுமையாக உழைக்கின்ற, சாதிக்க வேண்டும் என்ற தாகமுடைய. தமது தாயகத்தை புலம்பெயர்ந்த நாடுகளில் ஊறுகாய் போட்டு வைத்திருக்கின்ற கவர்ச்சிமிக்க ஒரு டயஸ்போறாவாக தமிழர்கள் மேலெழுந்தார்கள். எந்த தலைநகரத்தில் இருந்து அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்களோ அதே தலைநகரத்தை நோக்கி வெளிநாட்டு பிரஜைகளாக டொலர்களோடு வந்திறங்கினார்கள். எந்தத் தலை நகரத்தில் அவர்களுடைய சொத்துக்கள் எரிக்கப்பட்டனவோ அதே தலைநகரத்தில் டொலர்களை கொடுத்து புதிய சொத்துக்களை வாங்கிக் குவித்தார்கள். குறிப்பாக ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் தென்னிலங்கையில் நிதி ரீதியாக வங்குரோத்தாக்கிய சிங்களக் கொம்பனிகளை வாங்கும் சக்தி மிக்கவர்களாக மேலெழுந்தார்கள்.

இப்பொழுது புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எனப்படுவது உலகின் கவனிப்புக்குரிய ஒரு மக்கள் கூட்டமாக எழுந்துவிட்டது. அதுமட்டுமல்ல புலப்பெயர்ச்சியே தங்களை மேலும் பலப்படுத்தியிருக்கிறது என்பதனை நிரூபித்திருக்கிறார்கள்.அது தோற்கடிக்கப்பட முடியாத ஒரு மக்களாக தமிழ் மக்களை நிரூபித்திருக்கிறது. தென்னிலங்கையின் நகரங்களில் ரூபாய்களோடு திரிந்த தமிழர்களை ஜூலை 83 டொலர்களோடு திரிபவர்களாக மாற்றியிருக்கிறது. அதாவது ஜூலை 83 இல் தென்னிலங்கையிலிருந்து தமிழ் மக்களைத் துரத்தியவர்கள் தங்கள் இலக்குகளை அடைய முடியவில்லை என்பதைப் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நிரூபித்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஓர் அரசியல் சமூகப் பொருளாதார பின்னணியில் ராஜமகேந்திரன் புலம் பெயராது தனது சொத்துக்கள் எரிந்த சொந்த சாம்பலில் இருந்து மீண்டும் எழ முடியும் என்பதனை கொழும்பில் தொடர்ந்தும் வசித்தபடியே நிரூபித்தார். அவருக்கும் யூ.என்.பிக்கும் இடையிலான உறவும் சிங்கள உயர் குளாத்தில் அவருக்கிருந்த முதன்மையும் அதற்குப் பக்கபலமாக இருந்தன.எனினும் தமது சொந்த சாம்பலிலிருந்து தமிழர்கள் மீண்டும் உயிர்த்தெழ முடியும் என்ற நம்பிக்கையை அவர் தமிழ் மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய அரசியலை குறித்தும் அவருடைய ஊடக குழுமம் குறித்தும் தனியாக ஆராய வேண்டும். ஆனால் இப்பொழுது தமிழ் மக்கள் அவரை நினைவு கூர வேண்டிய இடம் எதுவென்றால் எரிக்கப்பட்ட பின்னரும் இடிக்கப்பட்ட பின்னரும் இனப்படுகொலைக்குப் பின்னரும் நிமிரலாம் என்ற நம்பிக்கையின் தமிழ்க் குறியீடுகளில் அவரும் ஒருவர் என்பதுதான்.

https://globaltamilnews.net/2021/164086