Aggregator

ரஜீவ பிரகாஷ் ஜயவீரவின் மரணத்தில் பாரிய சந்தேகம் : விசாரணை அவசியம் என்கிறார் திஸ்ஸ

1 month 3 weeks ago

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று திஸ்ஸ அத்தனாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

sasa.jpg

கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் அண்மையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கபட்டார். அவரது மரணம் கொலையா தற்கொலையா என்று இருவேறு வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் மறைந்து இரகசியம் என்ன ?

உயிரிழந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர பல ஊழல்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வந்த நபராவார். ஸ்ரீலங்கன் விமான உள்ளிட்ட விமான சேவைகளில் இடம்பெற்றுள்ள ஊழல்கள் தொடர்பில் அவர் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார். இவரது கொலை யாராலும் எதிர்பார்க்க முடியாதளவிற்கு இடம்பெற்றுள்ளது.

இவரது மரணத்தை தற்கொலை என்று உறுதிப்படுத்துவதற்கு சில ஊடகங்களும் பொலிஸாரும் முயற்சிக்கின்றமையை காணக்கூடியதாகவுள்ளது. அவர் தற்கொலைக்கான கடிதமொன்றினையும் எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறு இந்த கொலை இடம்பெற்றுள்ளது. சுதந்திர சதுக்கத்தில் இவ்வாறானதொரு மரணம் இடம்பெற முடியுமா என்பது முதலாவது பிரச்சினையாகும்.

ரஜீவ ஜயவீர அங்கு சென்று மரணத்ததற்கான எவ்வித காட்சிகளும் அங்குள்ள சி.சி.டி.வி. கமராக்களில் பதிவாகவில்லை. அனைத்து சி.சி.டி.வி. பதிவுகளும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிநுட்ப கோளாறு காரணமாக அவை அழிவடைந்துள்ளதாக கூறுகின்றனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தும் காரணியாகும். ரஜீவ ஜயவீர குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த முறை தற்கொலை செய்து கொண்ட முறை என எந்த அடையாளமும் இல்லை.

அவரது கொலை அல்லது மரணம் இடம்பெற்றுள்ள விதம் பற்றி அவதானிக்க வேண்டும். அவர் வாயில் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். வாயில் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்ற செய்தியை இப்போதே முதன்முறையாகக் கேட்கின்றேன்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் தலையில் சுட்டுக் கொண்டே உயிரிழப்பார்கள். வரலாற்றில் நூற்றுக்கு நூறு வீதம் இவ்வாறே இடம்பெற்றுள்ளது. ஆனால் இவர் வாயில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். அத்தோடு அவர் சுட்டுக் கொண்ட துப்பாகி ரவையும் கண்டு பிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவ்வாறெனில் இதற்கான காரணம் என்ன ? வாயில் சுட்டுக் கொண்டார் என்று கூறும் போது , 'வாயைத் திறக்க வேண்டாம். அதிகமாக பேச வேண்டாம். ஊழல்கள் பற்றி பேச வேண்டாம். இதுவே நாம் தரும் தண்டனை.' என்பதை பலவந்தமாக வலியுறுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் செய்யப்பட வேண்டும். இது மனித படுகொலையாகும்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் யாருடைய பாதுகாப்பை உறுதி செய்வது ? இதில் அச்சுறுத்தல் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதன் மூலம் ஏதேனுமொரு கருத்தைக் கூற முற்படுகின்றனர். இது மிகவும் அபாயமானதும்

https://www.virakesari.lk/article/84014

ஜப்பான் வழங்கவிருந்த கடன் திட்டம் இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணத்தை தெரிவிக்கிறார் சம்பிக

1 month 3 weeks ago
(எம்.மனோசித்ரா) கொவிட் தொற்றின் பின்னர் நாட்டிலுள்ள பிரஜைகள் மாத்திரமின்றி அரசாங்கமும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரம் தொடர்பில் ஏற்பட்ட அவநம்பிக்கையின் காரணமாக ஜப்பான் வழங்கவிருந்த கடன் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்றுக்கு பின்னர் நாட்டில் அனைத்து பிரஜைகளும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அனைவருக்கும் வருமானம் அற்றுப் போயுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு தொழில் அற்றுப்போயுள்ளது. தேவையான உணவு பொருட்களை வாங்குவதில் கூட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு மத்தியில் நாட்டில் மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்தேனும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது. அதே போன்று வங்கிகளிலும் லீசிங் கம்பனிகளிலும் பல்வேறு தேவைகளுக்காக கடன் பெற்றவர்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவற்றினடிப்படையிலான மிக மோசமான சம்பவமாக சுனில் ஜயரத்னவின் மரணத்தை நாம் பார்க்கின்றோம். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதில்லை. ஆனால் அரச அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனால் அரசாங்கத்தின் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி அற்றுப் போயுள்ளது. தனிநபர்கள் இவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது ஒரு புறமிருக்க நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த போது கடனை மீள செலுத்துவதற்கு மூன்று வருட கால அவகாசம் கோரியிருந்தார். நாட்டுக்கு கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் சுமார் 70 வருடங்கள் இலங்கைக்கு பெருமளவிலான உதவிகளைச் செய்துள்ள ஜப்பான் இம்முறை வழங்கவிருந்த கடனை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. கடந்த மே மாதம் 7 ஆம் திகதி இது தொடர்பில் உத்தியோகபூர்வ கடிதமும் பிரமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அரசாங்கத்தின் பொது நிதி பற்றி தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஜப்பான் இராஜதந்திய மொழியில் கூறியிருக்கிறது. https://www.virakesari.lk/article/84017

கொவிட் தொற்றின் பின்னர் நாட்டிலுள்ள பிரஜைகள் மாத்திரமின்றி அரசாங்கமும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரம் தொடர்பில் ஏற்பட்ட அவநம்பிக்கையின் காரணமாக ஜப்பான் வழங்கவிருந்த கடன் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் தொற்றுக்கு பின்னர் நாட்டில் அனைத்து பிரஜைகளும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அனைவருக்கும் வருமானம் அற்றுப் போயுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு தொழில் அற்றுப்போயுள்ளது. தேவையான உணவு பொருட்களை வாங்குவதில் கூட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு மத்தியில் நாட்டில் மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்தேனும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.

அதே போன்று வங்கிகளிலும் லீசிங் கம்பனிகளிலும் பல்வேறு தேவைகளுக்காக கடன் பெற்றவர்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவற்றினடிப்படையிலான மிக மோசமான சம்பவமாக சுனில் ஜயரத்னவின் மரணத்தை நாம் பார்க்கின்றோம். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதில்லை. ஆனால் அரச அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனால் அரசாங்கத்தின் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி அற்றுப் போயுள்ளது.

தனிநபர்கள் இவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது ஒரு புறமிருக்க நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த போது கடனை மீள செலுத்துவதற்கு மூன்று வருட கால அவகாசம் கோரியிருந்தார். நாட்டுக்கு கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் சுமார் 70 வருடங்கள் இலங்கைக்கு பெருமளவிலான  உதவிகளைச் செய்துள்ள ஜப்பான் இம்முறை வழங்கவிருந்த கடனை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

கடந்த மே மாதம் 7 ஆம் திகதி இது தொடர்பில் உத்தியோகபூர்வ கடிதமும் பிரமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அரசாங்கத்தின் பொது நிதி பற்றி தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஜப்பான் இராஜதந்திய மொழியில் கூறியிருக்கிறது.

https://www.virakesari.lk/article/84017

இந்தியாவில் இளம் வயதினர் கொரோனாவால் இறப்பது அதிகரித்துள்ளது ஏன்?

1 month 3 weeks ago
சுதா சேஷய்யன் பதில்
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்

தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படும் நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் அக்டோபர் 2020 வரை அதிக அளவில் பரவும் என தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சுதா சேஷய்யன், கொரோனா வைரஸ் மரபணு திடீர் மாற்றமடைவது குறித்தும், இளம் வயது மரணங்கள் ஏன் அதிகரிக்கின்றன, 'சைலன்ட் ஹைபாக்சியா' எனப்படும் அறிகுறிகள் தென்படாமல் நிகழும் சில மரணங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது எப்படி என்பவை குறித்து விளக்கமாகப் பேசினார்.

அவர் அளித்த பேட்டியிலிருந்து:

கொரோனா வைரஸின் கிளையினமான ஏ3ஐ வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விளக்க முடியுமா?

பதில்: ஏ3ஐ குறித்த அறிவியல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஏ3ஐ என்பதை 'க்ளேட்' என்று சொல்வார்கள். கொரோனா வைரஸில் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்களைதான் க்ளேட் என்பார்கள். வைரஸின் தன்மையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டால் அதனை புதிய ஸ்ட்ரெயின் என்பார்கள்.

புதிய ஸ்ட்ரெயின் என்று கூறத்தக்க மாற்றம் ஏற்பட்டால்தான் நாம் அச்சப்படவேண்டும். ஆனால் க்ளேட் உருவாவதை கண்டு நாம் அஞ்சவேண்டியதில்லை. ஒருசில நேரங்களில் இந்த க்ளேட் உருவாவதால், கொரோனா வைரஸின் வீரியம் குறையவும் வாய்ப்புள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்பகட்டத்தில், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள், முதியவர்கள் மட்டும்தான் பலியானார்கள். தற்போது இந்தியாவில் இளம் வயதினரின் மரணங்களும் அதிகரித்துள்ளன. ஏன்?

பதில்: முதலில் வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு நோய்க்கான வரலாறு வெளிப்படையாக தெரிந்தது. ஊரடங்கு அமலில் இருந்தது. நோய் தொற்று இருப்பவர்களின் பயண வரலாறு, அவர்கள் தொடர்பில் இருந்தவர்களை சரியாக அடையாளம் காண முடிந்தது. அதன் மூலம், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள், முதியவர்களுக்கு தாக்கம் இருப்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்கமுடிந்தது. தற்போது பொது மக்கள் பலரும் கொரோனா வைரஸ் பரவலை பொது வெளிகளில் எதிர்கொள்கிறார்கள்.

வெளியிடங்களில் பயணம் செய்யும் போது, காய்கறி மார்க்கெட் அல்லது பிற பொது இடங்களில் தொடர்ந்து வைரஸ் தொற்று பெறுபவர்கள், தங்களது எதிர்ப்புசக்தி கொண்டு சமாளிக்கிறார்கள். இளைஞர்களில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பிற வியாதிகளுக்கு ஏற்கனவே சிகிச்சை எடுப்பவர்களாக இருப்பதால், நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

அதனால் தற்போது இளவயது மரணங்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்த ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. ஒரு சில பொது இடங்களில் தொற்று ஏற்பட்டவர்கள் ஏசிம்ப்டமேடிக் நபர்களாக இருந்தால், அங்கு நோய் பரவல் திரள் (கிளஸ்டர்) ஆகிறது.

தமிழகத்தில் கோயம்பேடு சந்தை திரள் மூலமாக பல மாவட்டங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இது சமூகப் பரவல் தானே?

பதில்: கிளஸ்ட்டர் என்பது வேறு. சமூகப் பரவல் என்பது வேறு. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரவலை தடுக்கிறோம் என்பது கிளஸ்ட்டர். நோய் பரவலை தடுக்க முடியாத நிலைதான் சமூகப் பரவல். அந்த நிலை இந்தியாவில் தற்போதுவரை இல்லை.

கோயம்பேடு சந்தைபடத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் கடந்த வாரத்தில் இறந்தவர்களில் சிலரிடம் இறக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அவர்கள் இறந்ததற்கு 'சைலன்ட் ஹைபாக்சியா' காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள். 'சைலன்ட் ஹைபாக்சியா' மரணம் எப்படி நிகழ்கிறது?

பதில்: நுரையீரலில் ரத்தக் கட்டு ஏற்படும்போது, உடலில் ஆக்ஸிஜன் குறைகிறது. ஆக்ஸிஜன் உடலின் எல்லா திசுக்ககளுக்கும் தேவை. உடலில் ஆக்ஸிஜன் குறையும்போது, 70 சதவீதத்திற்கும் கீழாக சரியும்போது, மரணத்தை தொட்டுவிடுவார்கள்.

சிலருக்கு அவர்கள் அன்றாட வேலைகளை செய்துகொண்டிருக்கும் நேரத்தில் சில சமயம் மூச்சு திணறல் இருக்கும். ஆனால் உடனடி கவனம் கொடுக்காமல் இருந்தால், சில நேரம் மரணம் நேரலாம். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்தவர்களில் ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள். பெண்கள் குறைவாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

பதில்: கொரோனா வைரஸின் வரலாறு வெறும் ஆறு மாதங்கள்தான். தற்போது நம்மிடம் உள்ள புள்ளிவிவரங்களை கொண்டு, ஆண்கள்தான் அதிகம் இறக்கிறார்கள். பெண்களின் இறப்பு குறைவு என சொல்லமுடியாது.

ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். ஆண்கள் வெளியில் நடமாடுவதால், அவர்களுக்கு தாக்கம் அதிகம், பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்பதால் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதுபோல தோன்றும். தற்போது இந்த முடிவை நாம் எட்டமுடியாது.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது சரியா? ரீஇன்பெக்சன்(தொற்று மீண்டும் ஏற்படுவது) ஏற்படுமா?

பதில்: இதுவரை இந்தியாவில் ரீஇன்பெக்சன் ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை. வெளிநாடுகளில் வெகு சில நபர்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. அதனால், இன்னும் ரீஇன்பெக்சன் குறித்த தெளிவான தகவல் நமக்கு கிடைக்கவில்லை.

இந்தியாவில் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இருந்தபோதும், உடனடியாக இதையே சாட்சியாக எடுத்துக்கொள்ளமுடியாது. உலகம் முழுவதும் ஏற்படும் மாற்றங்களை நாம் சிறிது காலத்திற்கு கவனிக்கவேண்டும்.

இந்தியாவில் ரீஇன்பெக்சன்படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் ஏற்படும் கொரோனா இறப்பு விகிதம் குறித்து தமிழக அரசுக்கு உங்கள் பல்கலைக்கழகம் அளித்துள்ள புள்ளிவிவரங்கள் பெருமளவு சரியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன ஆய்வு அது?

பதில்: தமிழக அரசு எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு நாங்கள் செய்த ஆய்வு உதவும். பேரிடர் காலங்களில், சிக்கலான சூழலுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதற்கு இந்த ஆய்வு உதவும்.

நோய் பரவல் ஏற்பட்ட காலம் தொடங்கி இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளை ஒவ்வொரு நாளும் கவனித்துகொண்டே வருகிறோம். அதைவைத்து நோய் பரவல் எவ்வாறு இருக்கும் என கணிதம் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் புள்ளிவிவரங்களை தயாரித்துள்ளோம். அதன்படி, தமிழகத்தில் அக்டோபர் 2020 வரை புதிதாக தொற்று ஏற்படுவது அதிகமாகத்தான் இருக்கும்.

அதாவது நமது மொத்த மக்கள் தொகையில், 60 முதல் 70 சதவீதம் பேர் இந்த கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் சமயத்தில்தான் உண்மையான தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ளமுடியும். இந்தியாவில் செப்டம்பர் மாதம் தாக்கத்தின் அதிகபட்ச காலமாக இருக்கும் என தெரிகிறது.

கொரோனா வைரஸ்

பொது மக்கள் எந்தவிதத்தில் இந்த சவாலான காலத்தை எதிர்கொள்ளவேண்டும்? 2020 கொரோனா ஆண்டாக முடிந்துவிடுமா?

பதில்: நோய்த் தொற்று அதிகரிக்கும் என்பதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும். உங்கள் வீடுகளுக்கு யாராவது வந்தால், நீங்களும், அவர்களும் முகக்கவசம் அணியவேண்டும். சில அடி தூரத்தில் நின்று ஒரு நபரிடம் பேசும்போது, கட்டாயம் முகக்கவசம் தேவை. 2020 கொரோனா ஆண்டு என சொல்லமுடியாது.

ஒருவேளை நாம் பாதுகாப்பாக இருந்து, வைரஸை வெற்றிகொண்டால், அதன் பரவல் தொடர்வதற்கு வாய்ப்பு தரவில்லை என்றால், அது குறையும். அதே நேரம், பாதுகாப்பு குறைவாக இருந்தால், 2021ஆம் ஆண்டும் தாக்கம் தொடரும்.

ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் மூலமாக வைரஸ் தொற்றினை வெல்ல முடியும் என்ற தகவல் சரியானதா?

பதில்: பெரும்பாலான மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும்போது, அவர்களின் எதிர்ப்பு சக்தி காரணமாக வைரஸ் அழிந்துவிட்டால், மேலும் பரவுவது குறைந்து, வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதுதான் ஹெர்ட் இம்யூனிட்டி.

ஆனால் பெரும்பாலான மக்கள், சுமார் 70 சதவீதம் மக்கள், தாக்கத்திற்கு ஆளானால், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாவார்கள். அதனால் இறப்பு விகிதம் அதிகரிக்கும். இந்தியா போன்ற நாடுகளில் இறப்பு ஒரு சதவீதம் என்றால் கூட, அதிகப்படியான மக்களை நாம் இழப்போம். அதனால், ஹெர்ட் இம்யூனிட்டி என்பது தீர்வல்ல.

https://www.bbc.com/tamil/science-53043890

இந்தியாவில் இளம் வயதினர் கொரோனாவால் இறப்பது அதிகரித்துள்ளது ஏன்?

1 month 3 weeks ago
சுதா சேஷய்யன் பதில் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படும் நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் அக்டோபர் 2020 வரை அதிக அளவில் பரவும் என தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சுதா சேஷய்யன், கொரோனா வைரஸ் மரபணு திடீர் மாற்றமடைவது குறித்தும், இளம் வயது மரணங்கள் ஏன் அதிகரிக்கின்றன, 'சைலன்ட் ஹைபாக்சியா' எனப்படும் அறிகுறிகள் தென்படாமல் நிகழும் சில மரணங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது எப்படி என்பவை குறித்து விளக்கமாகப் பேசினார். அவர் அளித்த பேட்டியிலிருந்து: கொரோனா வைரஸின் கிளையினமான ஏ3ஐ வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விளக்க முடியுமா? பதில்: ஏ3ஐ குறித்த அறிவியல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஏ3ஐ என்பதை 'க்ளேட்' என்று சொல்வார்கள். கொரோனா வைரஸில் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்களைதான் க்ளேட் என்பார்கள். வைரஸின் தன்மையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டால் அதனை புதிய ஸ்ட்ரெயின் என்பார்கள். புதிய ஸ்ட்ரெயின் என்று கூறத்தக்க மாற்றம் ஏற்பட்டால்தான் நாம் அச்சப்படவேண்டும். ஆனால் க்ளேட் உருவாவதை கண்டு நாம் அஞ்சவேண்டியதில்லை. ஒருசில நேரங்களில் இந்த க்ளேட் உருவாவதால், கொரோனா வைரஸின் வீரியம் குறையவும் வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்பகட்டத்தில், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள், முதியவர்கள் மட்டும்தான் பலியானார்கள். தற்போது இந்தியாவில் இளம் வயதினரின் மரணங்களும் அதிகரித்துள்ளன. ஏன்? பதில்: முதலில் வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு நோய்க்கான வரலாறு வெளிப்படையாக தெரிந்தது. ஊரடங்கு அமலில் இருந்தது. நோய் தொற்று இருப்பவர்களின் பயண வரலாறு, அவர்கள் தொடர்பில் இருந்தவர்களை சரியாக அடையாளம் காண முடிந்தது. அதன் மூலம், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள், முதியவர்களுக்கு தாக்கம் இருப்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்கமுடிந்தது. தற்போது பொது மக்கள் பலரும் கொரோனா வைரஸ் பரவலை பொது வெளிகளில் எதிர்கொள்கிறார்கள். வெளியிடங்களில் பயணம் செய்யும் போது, காய்கறி மார்க்கெட் அல்லது பிற பொது இடங்களில் தொடர்ந்து வைரஸ் தொற்று பெறுபவர்கள், தங்களது எதிர்ப்புசக்தி கொண்டு சமாளிக்கிறார்கள். இளைஞர்களில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பிற வியாதிகளுக்கு ஏற்கனவே சிகிச்சை எடுப்பவர்களாக இருப்பதால், நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். அதனால் தற்போது இளவயது மரணங்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்த ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. ஒரு சில பொது இடங்களில் தொற்று ஏற்பட்டவர்கள் ஏசிம்ப்டமேடிக் நபர்களாக இருந்தால், அங்கு நோய் பரவல் திரள் (கிளஸ்டர்) ஆகிறது. தமிழகத்தில் கோயம்பேடு சந்தை திரள் மூலமாக பல மாவட்டங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இது சமூகப் பரவல் தானே? பதில்: கிளஸ்ட்டர் என்பது வேறு. சமூகப் பரவல் என்பது வேறு. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரவலை தடுக்கிறோம் என்பது கிளஸ்ட்டர். நோய் பரவலை தடுக்க முடியாத நிலைதான் சமூகப் பரவல். அந்த நிலை இந்தியாவில் தற்போதுவரை இல்லை. படத்தின் காப்புரிமை Getty Images தமிழகத்தில் கடந்த வாரத்தில் இறந்தவர்களில் சிலரிடம் இறக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அவர்கள் இறந்ததற்கு 'சைலன்ட் ஹைபாக்சியா' காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள். 'சைலன்ட் ஹைபாக்சியா' மரணம் எப்படி நிகழ்கிறது? பதில்: நுரையீரலில் ரத்தக் கட்டு ஏற்படும்போது, உடலில் ஆக்ஸிஜன் குறைகிறது. ஆக்ஸிஜன் உடலின் எல்லா திசுக்ககளுக்கும் தேவை. உடலில் ஆக்ஸிஜன் குறையும்போது, 70 சதவீதத்திற்கும் கீழாக சரியும்போது, மரணத்தை தொட்டுவிடுவார்கள். சிலருக்கு அவர்கள் அன்றாட வேலைகளை செய்துகொண்டிருக்கும் நேரத்தில் சில சமயம் மூச்சு திணறல் இருக்கும். ஆனால் உடனடி கவனம் கொடுக்காமல் இருந்தால், சில நேரம் மரணம் நேரலாம். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்தவர்களில் ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள். பெண்கள் குறைவாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? பதில்: கொரோனா வைரஸின் வரலாறு வெறும் ஆறு மாதங்கள்தான். தற்போது நம்மிடம் உள்ள புள்ளிவிவரங்களை கொண்டு, ஆண்கள்தான் அதிகம் இறக்கிறார்கள். பெண்களின் இறப்பு குறைவு என சொல்லமுடியாது. புகைப்பட காப்புரிமை BBC News Tamil BBC News Tamil ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். ஆண்கள் வெளியில் நடமாடுவதால், அவர்களுக்கு தாக்கம் அதிகம், பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்பதால் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதுபோல தோன்றும். தற்போது இந்த முடிவை நாம் எட்டமுடியாது. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது சரியா? ரீஇன்பெக்சன்(தொற்று மீண்டும் ஏற்படுவது) ஏற்படுமா? பதில்: இதுவரை இந்தியாவில் ரீஇன்பெக்சன் ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை. வெளிநாடுகளில் வெகு சில நபர்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. அதனால், இன்னும் ரீஇன்பெக்சன் குறித்த தெளிவான தகவல் நமக்கு கிடைக்கவில்லை. இந்தியாவில் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இருந்தபோதும், உடனடியாக இதையே சாட்சியாக எடுத்துக்கொள்ளமுடியாது. உலகம் முழுவதும் ஏற்படும் மாற்றங்களை நாம் சிறிது காலத்திற்கு கவனிக்கவேண்டும். படத்தின் காப்புரிமை Getty Images தமிழகத்தில் ஏற்படும் கொரோனா இறப்பு விகிதம் குறித்து தமிழக அரசுக்கு உங்கள் பல்கலைக்கழகம் அளித்துள்ள புள்ளிவிவரங்கள் பெருமளவு சரியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன ஆய்வு அது? பதில்: தமிழக அரசு எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு நாங்கள் செய்த ஆய்வு உதவும். பேரிடர் காலங்களில், சிக்கலான சூழலுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதற்கு இந்த ஆய்வு உதவும். நோய் பரவல் ஏற்பட்ட காலம் தொடங்கி இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளை ஒவ்வொரு நாளும் கவனித்துகொண்டே வருகிறோம். அதைவைத்து நோய் பரவல் எவ்வாறு இருக்கும் என கணிதம் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் புள்ளிவிவரங்களை தயாரித்துள்ளோம். அதன்படி, தமிழகத்தில் அக்டோபர் 2020 வரை புதிதாக தொற்று ஏற்படுவது அதிகமாகத்தான் இருக்கும். அதாவது நமது மொத்த மக்கள் தொகையில், 60 முதல் 70 சதவீதம் பேர் இந்த கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் சமயத்தில்தான் உண்மையான தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ளமுடியும். இந்தியாவில் செப்டம்பர் மாதம் தாக்கத்தின் அதிகபட்ச காலமாக இருக்கும் என தெரிகிறது. பொது மக்கள் எந்தவிதத்தில் இந்த சவாலான காலத்தை எதிர்கொள்ளவேண்டும்? 2020 கொரோனா ஆண்டாக முடிந்துவிடுமா? பதில்: நோய்த் தொற்று அதிகரிக்கும் என்பதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும். உங்கள் வீடுகளுக்கு யாராவது வந்தால், நீங்களும், அவர்களும் முகக்கவசம் அணியவேண்டும். சில அடி தூரத்தில் நின்று ஒரு நபரிடம் பேசும்போது, கட்டாயம் முகக்கவசம் தேவை. 2020 கொரோனா ஆண்டு என சொல்லமுடியாது. ஒருவேளை நாம் பாதுகாப்பாக இருந்து, வைரஸை வெற்றிகொண்டால், அதன் பரவல் தொடர்வதற்கு வாய்ப்பு தரவில்லை என்றால், அது குறையும். அதே நேரம், பாதுகாப்பு குறைவாக இருந்தால், 2021ஆம் ஆண்டும் தாக்கம் தொடரும். ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் மூலமாக வைரஸ் தொற்றினை வெல்ல முடியும் என்ற தகவல் சரியானதா? பதில்: பெரும்பாலான மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும்போது, அவர்களின் எதிர்ப்பு சக்தி காரணமாக வைரஸ் அழிந்துவிட்டால், மேலும் பரவுவது குறைந்து, வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதுதான் ஹெர்ட் இம்யூனிட்டி. ஆனால் பெரும்பாலான மக்கள், சுமார் 70 சதவீதம் மக்கள், தாக்கத்திற்கு ஆளானால், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாவார்கள். அதனால் இறப்பு விகிதம் அதிகரிக்கும். இந்தியா போன்ற நாடுகளில் இறப்பு ஒரு சதவீதம் என்றால் கூட, அதிகப்படியான மக்களை நாம் இழப்போம். அதனால், ஹெர்ட் இம்யூனிட்டி என்பது தீர்வல்ல. https://www.bbc.com/tamil/science-53043890

சூரியனுக்கு நெருக்கமான புள்ளியை அடைந்த சோலோ விண்கலன்

1 month 3 weeks ago
ஜொனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 'யூரோப்பியன் சோலார் ஆர்பிட்டர்' (சுருக்கமாக 'சோலோ') என்ற சூரிய சுற்றுவட்டக் கலன் இன்று (ஜூன் 15) தனது தற்போதைய சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கு நெருக்கமான புள்ளியை அடைந்தது. சூரியனில் இருந்து 77மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்தப் புள்ளி. கடந்த பிப்ரவரி மாதம் ஏவப்பட்ட இந்த சூரிய ஆராய்ச்சிக் கலன் நமது நட்சத்திரமான சூரியனின் இயக்க ஆற்றல் பண்புக்கான காரணம் என்ன என்று ஆராயும். வெள்ளி, புதன் ஆகிய இரு கோள்களின் சுற்றுவட்டப் பாதைக்கு நடுவில் இருக்கிறது தற்போது சோலோ கலன் அடைந்திருக்கிற புள்ளி. இன்னும் சில ஆண்டுகளில் ''சோலோ'' விண்கலம் சூரியனை இன்னும் நெருங்கிச் சென்று ஆராயும். சில நேரங்களில் சூரியனிடம் இருந்து 43 மில்லியன் கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்துக்குள் சோலோ செல்லும். தற்போது சோலோ சென்று சேர்ந்திருக்கிற தூரத்தை வைத்துப் பார்க்கும்போது, இதைவிட சூரியனை நெருங்கிச் சென்று ஆராய்ந்தவை மரினர் 10, ஹீலியோஸ் 1 & 2, மெசெஞ்சர், பார்க்கர் சோலார் புரோப் ஆகிய விண்கலன்களே. சூரியனில் இருந்து சுமார் 149 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் சுற்றுப்பாதை உள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கிய இந்த சோலோ விண்கலத்தின் பாகங்கள் பிரிட்டனில் உள்ள ஏரோஸ்பேஸ் கம்பெனியான ஏர்பஸ் நிறுவனத்தில் ஒன்றாகப் பொருத்தப்பட்டன. படத்தின் காப்புரிமை AIRBUS சோலோ விண்கலத்தை விண்ணில் ஏவியதில் இருந்து 4 மாதங்களுக்கு இதன் பல்வேறு கருவிகளை சரிபார்ப்பதற்கே செலவிடப்பட்டது. விண்கலத்தின் பொறியமைவுகள் சரியாக இயங்குகின்றனவா என்று சோதிக்கும் பொறியாளர்கள் இந்த விண்கலனில் பொருத்தப்பட்ட 10 அறிவியல் கருவிகளை செயல்படுத்திப்பார்க்கிறார்கள். விண்கலன் முழுவீச்சில் சோதனை மேற்கொள்வதற்கு மேலும் ஓர் ஆண்டு ஆகிவிடும். ஆனால் சோலோ விண்கலனின் மேக்னெட்டோமீட்டர் எனப்படும் காந்தவிசைமானி செயல்படத் தொடங்கிவிட்டது. விண்கலத்தின் பின் பகுதியில் இருக்கும் இந்த மானி, சூரியக் காற்றில் பொதிந்திருக்கும் காந்தப் புலனை உணர்ந்து அறியும். ஆங்கிலத்தில் சோலார் வின்ட் என்று அழைக்கப்படும் சூரியக் காற்று, சூரியனில் இருந்து வெளியேறி விலகிச் செல்லும் மின்னேற்றம் பெற்ற துகள்களின் ஓட்டம் ஆகும். வாய்ப்பிருந்தால், இந்த விண்கலன் திரும்பி புதனை நோக்கிச் செல்லும்போது புவியின் வழியாகச் செல்லும். பிறகு சோலோ விண்கலனுக்கான முக்கிய நிகழ்வு வெள்ளிக்கு அருகே பறந்து செல்வதாக இருக்கும். அப்போது வெள்ளியின் மேற்பரப்பில் 5 லட்சம் கி.மீ. தூரத்தை இந்த விண்கலன் நோக்கும். https://www.bbc.com/tamil/science-53054815

தமிழகத்தில் தீவிரமாகும் கோரோனோ.

1 month 3 weeks ago
கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு; 1,843 பேர் பாதிப்பு கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் 44 பேர் பலியாகியுள்ளனர். 1,843 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,500ஐ கடந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டில் இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ள 1,843 பேரில் 1,789 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 13 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மீதமுள்ளவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,344ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,403 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இதுவரை செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 7,29,002ஆக உயர்ந்துள்ளது. தற்போது 20,678 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இன்று தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட 1,843 பேரில் 1257 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 120 பேர் செங்கல்பட்டை சேர்ந்தவர்கள். 39 பேர் காஞ்சிபுரத்தையும் 33 பேர் மதுரையையும் சேர்ந்தவர்கள். ராணிப்பேட்டையில் 34 பேரும் தஞ்சாவூரில் 12 பேரும் திருவள்ளூரில் 50 பேரும் திருவண்ணாமலையில் 32 பேரும் தூத்துக்குடியில் 34 பேரும் திருநெல்வேலியில் 17 பேரும் வேலூரில் 20 பேரும் இந்நோய்த் தொற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 33,244 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று உயிரிழந்த 44 பேரில், 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 32 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 11 பேர் கொரோனா தவிர, வேறு எவ்வித நோயாலும் பாதிக்கப்படாதவர்கள். 10 பேர் ஐம்பது வயதுக்குக் குறைவானவர்கள். இவர்களில் நான்கு பேர் 40 வயதுக்குக் குறைவானவர்கள். இதற்கிடையில் சென்னையில் காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவை தடுக்க அரசு தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பது தவறான வாதம் எனக் குறிப்பிட்டார். "கொரோனாவை எதிர்கொள்வதில் தமிழ்நாடு சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளே இந்த நோயை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றன." "தமிழ்நாட்டில் சரியான நடவடிக்கைகள் மூலமாக உயிர் காக்கும் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மிக அதிகமான அளவில் சோதனைகள் செய்கிறோம். அதனால், அதிகமான அளவில் நோயுற்றவர்களைக் கண்டுபிடிக்கிறோம். இன்றோடு 25,344 பேரை குணப்படுத்தியிருக்கிறோம். ஆகவே அரசு திணறிக்கொண்டிருக்கிறது என ஸ்டாலின் சொல்வது தவறான வாதம். அரசு திறமையாக செயல்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார். மேலும், "எண்ணிக்கையை வைத்து அரசியலாக்க வேண்டாம். அரசு வெளிப்படையாக இருக்கிறது. சென்னையில் மட்டும் 1.85 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 17,500 படுக்கை வசதி தயாராக இருக்கிறது. இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறோம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் தயாராக இருக்கின்றன. தமிழ்நாடு முழுக்க 75 படுக்கை வசதிகள் தயாராக இருக்கின்றன. ஆகவே இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. எங்கேயுமே தாமதமும் இல்லை, தடையுமில்லை. இந்தப் பணிக்காக மு.க. ஸ்டாலின் யாரையாவது பாராட்டியிருக்கிறாரா? பாராட்டவிட்டாலும் விமர்சனங்கள் வேண்டாம்" எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-53055147