Aggregator

வன்­மு­றையை தூண்டுவோருக்கு எதி­ராக கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் - ரண­துங்க

1 year 9 months ago

(நா.தினுஷா)

தேசிய பாது­காப்­புக்கு சவால் ஏற்­பட்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் இன­வா­தத்தை தூண்டும் வகை­யி­லான செயற்­பா­டு­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு இட­ம­ளிக்­கவும் முடி­யாது. இன்­னு­மொரு கல­வ­ரத்தை நாட்டில் ஏற்­ப­டுத்த இட­ம­ளிக்கப் போவ­தில்லை. ஒரு­வ­ருக்கு ஒருவர் குற்றஞ் சுமத்­து­வதை தவிர்த்து விரைவில் நாட்டின் நிலை­மை­களை சீர்­செய்­வ­தற்­காக ஆளும் மற்றும் எதிர்த்­த­ரப்­பினர் ஒற்­று­மை­யாக செயற்­ப­டு­வது அவ­சியம் என்று போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார். 

நாட்டில் வன்­மு­றை­களை தூண்டும் வகை­யி­லான அச்­சு­றுத்தல் செயற்­பா­டு­க­ளுக்கு பின்­ன­ணியில் உள்ள அனை­வ­ருக்கும் எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  

மினு­வாங்­கொடை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற குழப்ப நிலையை அடுத்து அந்த பிர­தேச மக்­களை சந்­திப்­ப­தற்­காக சென்ற அமைச்சர் அதன்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில் மேலும் கூறி­ய­தா­வது, உயிர்த்த ஞாயி­று தினத்தன்று இடம்­பெற்ற தொடர் குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வங்­களை தொடர்ந்து நாட்டில் இடம்­பெறும் அசம்­பா­வித செயற்­பா­டு­க­ளினால் நாட்டின் அமைதி யின்மை, சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­களின் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருப்­பினும் அதன் தொடர் தாக்­கங்­களை தவிர்த்­துக்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளோம்.  

இந்­நி­லையில் கடந்த திங்­கட்­கி­ழமை பாது­காப்பு அச்­சு­றுத்தல் நிலைமை காணப்­பட்­ட­துடன் பாட­சா­லை­களின் பாது­காப்­பிலும் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தாக பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆயினும் அவற்றை சமா­ளிக்க தேவை­யான தீர்­வையும் வழங்­கினோம். தாக்­கு­தல்­க­ளுக்­கான அச்­சு­றுத்தல் காணப்பட்டாலும் வேெறாரு குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­படும் இது போன்ற தாக்­கு­தல்­களை அர­சியல் மயப்­ப­டுத்­தவும் ஒரு சிலர் முயற்­சிக்­கின்­றனர். 

இது­போன்ற சூழ்­நி­லையை எமது எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது. இன­வா­தத்தை தூண்டும் வகை­யி­லான செயற்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்ளக் கூடி­யவை அல்ல. 30 வரு­ட­கால யுத்தம் 1983 ஆம் ஆண்டு இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளினால்  நாட்டு மக்கள் அனை­வரும்  பாரிய இழப்­புக்­களை சந்­தித்­தனர். ஆகவே மீண்டும் நாட்டில் இன்­னு­மொரு கல­வர நிலையை ஏற்­ப­டுத்த இட­ம­ளிக்­கவும் முடி­யாது.  

இந்த சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் உள்ள அனை­வ­ருக்கும் கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். அதே­போன்று நாட்டு மக்கள் அனை­வரும் ஒரே இனத்­த­வர்­க­ளாக ஒற்­று­மை­யாக செயற்­பட்டு மிக விரைவில் நாட்டை அபி­வி­ருத்­திப்­பா­தையில் இட்­டுச்­செல்­வது அவசியமாகும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக செயற்படுவதும் அவசியம். ஆனால்  தற்போது அதற்கு எதிர்மாறான சம்பவங்களே நாட்டில் இடம் பெற்று வருகின் றன. இருப்பினும் இந்நிலைமையை  விரைவாக மாற்றிய மைக்க அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.   

http://www.virakesari.lk/article/56053

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய இன்று குழு விஜயம்

1 year 9 months ago
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய இன்று குழு விஜயம் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற உயர் கல்வி ஆலோசனைக் குழு இன்று அங்கு விஜயம் செய்யவுள்ளது. குழுவின் தலைவர் ஆசுமாரசிங்க எம்.பி.யின் தலைமையில் இக்குழுவினர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து இந்தப் பல்கலைக்கழகம் குறித்து ஆராயவுள்ளனர். இந்தக் குழுவானது தனது ஆய்வறிக்கையை உயர் கல்வியமைச்சுக்கும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாக அதன் தலைவர் ஆசுமாரசிங்க எம்.பி. தெரிவித்துள்ளார். இந்தப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா? பல்கலைக்கழகமானது உயர்கல்வி சட்டதிட்டங்களை மீறியுள்ளதா என்பது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த குழு ஆராயவுள்ளது. குறித்த பல்கலைக்கழகம் தொடர்பில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி குழுவானது இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.virakesari.lk/article/56050

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற உயர் கல்வி ஆலோசனைக் குழு இன்று அங்கு விஜயம் செய்யவுள்ளது. குழுவின் தலைவர் ஆசுமாரசிங்க எம்.பி.யின் தலைமையில் இக்குழுவினர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து இந்தப் பல்கலைக்கழகம் குறித்து ஆராயவுள்ளனர். இந்தக் குழுவானது தனது ஆய்வறிக்கையை உயர் கல்வியமைச்சுக்கும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாக அதன் தலைவர் ஆசுமாரசிங்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

இந்தப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா? பல்கலைக்கழகமானது உயர்கல்வி சட்டதிட்டங்களை மீறியுள்ளதா என்பது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த குழு ஆராயவுள்ளது. 

குறித்த பல்கலைக்கழகம் தொடர்பில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி குழுவானது இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.virakesari.lk/article/56050

யாழ் பல்கலைகழக,கிளிநொச்சி வளாகத்தில் சோதனை நடவடிக்கை

1 year 9 months ago
யாழ் பல்கலைகழக,கிளிநொச்சி வளாகத்தில் சோதனை நடவடிக்கை யாழ் பல்கலைகழக,கிளிநொச்சி வளாகத்தில் இன்று காலை 8.30 மணிமுதல் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்வரும் 20 ம் திகதிக்கு பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் நடைபெற இருப்பதனால் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டமைக்கு அமைவாகவே இச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது. குறித்த சோதனை நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி படைத்தலைமையகத்தின் கீழ் நாநூற்று ஐம்பது இராணுவத்தினர் மற்றும் தொண்ணூறு பொலிசார் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது. இச் சோதனை நடவடிக்கைகளை செய்தி அறிக்கையிட சென்ற கிளிநொச்சி பிராந்திய செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/56044

யாழ் பல்கலைகழக,கிளிநொச்சி வளாகத்தில் இன்று காலை 8.30 மணிமுதல் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

IMG_0921.JPG

எதிர்வரும் 20 ம் திகதிக்கு பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் நடைபெற இருப்பதனால் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டமைக்கு அமைவாகவே இச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது.

IMG_0909.JPG

குறித்த சோதனை நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி படைத்தலைமையகத்தின் கீழ் நாநூற்று ஐம்பது இராணுவத்தினர் மற்றும் தொண்ணூறு பொலிசார் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.

இச் சோதனை நடவடிக்கைகளை செய்தி அறிக்கையிட சென்ற கிளிநொச்சி பிராந்திய செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/56044

கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி

1 year 9 months ago
கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி  

எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல. அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் தஜீந்தர் பால் சிங் பாகா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

mode.jpg

“பயங்கரவாதத்தை ஒரு மதத்திற்குள் வரையறுப்பது தவறு. இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியைக் கொன்றவரை இந்து பயங்கரவாதி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கான சீக்கியர்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தியை அவர் எவ்வாறு அழைப்பார்? நாட்டில் மக்களிடையே மத அடிப்படையில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள கமல்ஹாசன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்கையில்,

Kamal.jpg

“எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல. அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. எந்த ஒரு பயங்கரவாதியும் இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,“ சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து. அவர் தான் மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சே.” என பேசியது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/55988

இனவாத தாக்குதல் அல்ல சந்தர்ப்பவாத தாக்குதல்

1 year 9 months ago
இனவாத தாக்குதல் அல்ல சந்தர்ப்பவாத தாக்குதல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்த நொடியிலிருந்து நாட்டில் எழுந்த பதற்றம் இன்னும் தீர்ந்தபாடில்லை... இதற்கு மேலாக ஆங்காங்கே ஆயுதங்கள் மீட்பதும் அதிரடி கைதுகளும் மக்களை அச்சத்திலேயே வைத்திருக்கின்றன... இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளத்தில் ஒருவர் இட்ட பதிவால் ஆத்திரமுற்ற ஒரு தரப்பு கைகலப்பில் ஈடுபட்டது. இதன் நீட்சியாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.... அதில் ஒரு பிரதேசம்தான் மினுவாங்கொடை... சற்று அதிகமாக அடிவாங்கிய இடம் என்று கூட சொல்லலாம். மக்களுக்கு சேதமில்லை. ஆனால் அந்த மக்களின் வாழ்வியலுக்குத்தான் அதிக சேதம். ஆம்... வன்முறையாளர்கள் குறிவைத்தது உடைமைகளை... என்ன நடந்தது... எப்படி நடந்தது... யாரால் நடந்தது என்பதை அறிந்துகொள்ள நாம் நேரடியாக மினுவாங்கொடை பிரதேசத்திற்கு சென்றிருந்தோம். மினு­வாங்­கொடை மத்­தியில் அமைந்­துள்­ளது அந்தப் பள்­ளி­வாசல். சற்று விசா­ல­மான பள்­ளி­வா­ச­லும்தான். அந்த விசா­ல­மான பள்­ளி­வா­சலின் கண்­ணா­டிகள் அனைத்­துமே தூள் தூளாகி தரையில் கிடந்­தன. இத்­த­னைக்கும் ஏன்... நாம் பள்­ளி­வா­ச­லுக்குள் பேசிக்­கொண்­டி­ருக்­கை­யி­லேயே கண்­ணாடித் துண்­டுகள் கொட்­டிக்­கொண்­டுதான் இருந்­தன. பள்­ளி­வா­ச­லுக்குள் பொலிஸ் அதி­கா­ரிகள் வாக்­கு­மூ­லங்கள் பெற்­றுக்­கொண்­டி­ருந்­தனர். ஒவ்­வொரு இடத்தில் நான்­கைந்­துபேர் கூடி தங்­க­ளுக்குள் பேசிக்­கொண்­டி­ருந்­தனர். அவர்­களில் ஒரு­வரை அழைத்தோம்... சொல்­லுங்கள் இங்கே என்ன நடந்­தது என்றோம். விவ­ரிக்க ஆரம்­பித்தார்... அவரின் பெயர் சப்ரின்... 5.30 மணி­யி­ருக்கும் கூட்டம் கூட்­ட­மாக வரத்­தொ­டங்­கினர். முதன் முதலில் பௌஸ் ஹோட்­ட­லுக்­குத்தான் தாக்­குதல் நடத்­தினர். அங்­கி­ருந்­துதான் ஏனைய இடங்­க­ளுக்கும் இந்த வன்­முறை பர­வி­யது. பள்­ளி­வா­ச­லுக்குள் யாரையும் இருக்க அனு­ம­திக்­க­வில்லை. ஊர­டங்குச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­ பின்­புதான் தாக்­குதல் நடத்த தொடங்­கினர். தொடர்ந்து நான்கு மணித்­தி­யா­லங்கள் தாக்­குதல் நடந்­தது. ஏன் நாங்கள் இந்த நாட்டின் பிர­ஜைகள் இல்­லையா? எங்­க­ளுக்கு இந்த நாட்டில் எந்த உரி­மையும் இல்­லையா? ஊர­டங்குச் சட்டம் எங்­க­ளுக்கு மட்­டும்­தானா ஏன் அவர்­க­ளுக்கு இல்­லையா என்று தனது ஆதங்­கத்தைக் கொட்டித் தீர்த்தார் அந்த நபர். பள்­ளி­வா­சலை விட்டு வெளியே வந்­ததும் வலப்­பக்­க­மாக இருந்­தது அந்த வீதி. இரா­ணு­வத்­தினர் இரு மருங்­கிலும் பாது­காப்­புக்கு நின்­றனர். அந்தக் கடை உரி­மை­யா­ளர்­களைத் தவிர வேறு யாரும் அந்த வீதிக்குள் செல்ல இரா­ணு­வத்­தினர் அனு­ம­திக்­க­வில்லை. ஒரு கட்­டத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை உள்ளே செல்ல அனு­ம­தித்­தனர். நாமும் உள்ளே சென்றோம்... அந்த வீதி கடைத் தொகு­திகள் நிறைந்த ஒரு வீதி... இந்த இடம்தான் வெகு­வாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களை கொண்ட ஒரு பிர­தேசம். ஆனால் இங்கு வன்­மு­றையை நடத்­தி­ய­வர்கள் எந்த ஒரு நப­ரையும் தாக்­க­வில்லை. மாறாக உட­மை­க­ளுக்­குத்தான் சேதம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். முதலில் வந்தவர்கள் கடை­களை அடித்து நொருக்­கி­யுள்­ளனர். அங்­கி­ருந்த கடைகள் ஆடை, நகை, சப்­பாத்து மற்றும் அழ­கு­சா­தனப் பொருட்கள் விற்கும் கடைகள். அடித்து நொருக்­கிய கடை­­களில் இருந்­த­வர்கள் அப்­படி அப்­ப­டியே விட்­டு­விட்டு ஓடி­விட்­டனர். பிறகு மீண்­டும் வந்து உடைத்­துப்­ போட்ட கடை­க­ளி­லி­ருந்து வெளியே இழுத்­து­ப்போட்ட பொருட்­களை சேர்த்து கடைக்­குள்ளே தூக்­கிப்­போட்டு போய்­விட்­டனர். பிறகு சற்று நேரத்தில் மீண்டும் வந்த வன்­மு­றை­யா­ளர்கள் கடை­களைத் தீ வைத்துக் கொளுத்­தி­யுள்­ளனர். நாம் குறித்த இடத்­திற்கு செல்­லும்­போது நேற்று மதியம் 12 மணி­யி­ருக்கும்... அப்­போதும் ஆடைக் கடைகள், நகைக்கடைகள்புகைந்­து­கொண்­டுதான் இருந்­தன. ஒரு­வித வெப்­பமும் அந்தச் சூழலில் நிலவ நாம் மெது­வாக அந்தக் கடை­களின் உரி­மை­யா­ளர்கள் குழு­மி­யி­ருந்த இடத்­திற்கு சென்றோம்... அங்கே ஒரு நகைக் கடை... மினு­வாங்­கொடை சந்­தியில் அது­மட்­டும்­தானாம் ஒரே ஒரு நகைக்­கடை... அந்த நகைக் கடையின் உரி­மை­யா­ளரைத் தேடினோம். அந்தக் கடைக்கு முன்னால் ஒரு வாங்கில் இழப்பின் வேத­னையை சுமந்­த­படி அமர்ந்­தி­ருந்தார்... நெருங்கிச் சென்று ஐயா கொஞ்சம் பேச­லாமா என்றோம்... என்ன தம்பி பேச... கதைக்க ஒன்றும் இல்லை என்று தனது ஆதங்­கத்தை சொன்னார்... இந்த நகைக் கடை­யின் சேத விப­ரங்கள் எப்­படி என்றோம்... இன்னும் எரிந்­து­கொண்­டி­ருக்­கி­றது... முழு­மை­யாக எரிந்து முடிந்த பிற­குதான் உள்ளே போக­மு­டியும்... அதன்­பி­ற­குதான் சேத விபரம் தெரியும்.. எப்­ப­டியும் 20 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மாக வெள்ளி மற்றும் தங்க நகைகள் எரிந்­தி­ருக்கும் என்றார் அந்த நகைக் கடையின் உரி­மை­யாளர். அந்த இடத்தில் இன்­னொரு வியா­பாரி நம்­மோடு பேசத் தொடங்­கினார்... இங்கே மொத்­த­மாக 22 கடை­க­ளுக்கு தீ வைக்­கப்­பட்­டுள்­ளது. அனைத்­துமே முஸ்­லிம்­களின் கடை­கள்தான். அதில் நான்கு கடைகள் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளு­டை­யது. இந்தச் சந்­தைக்குள் எங்­க­ளுக்கு எவ்­வித முரண்­பாடோ கருத்து வேற்­று­மையோ இன பாகு­பாடோ கிடை­யாது. வெளியில் இருந்து வந்­த­வர்­க­ளால்தான் இந்த தாக்­குதல் சம்­பவம் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது என்றார். அத்­தோடு இப்­போ­துள்ள அர­சி­யல்­வா­திகள் ஒருவர் மீதும் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. அவர்கள் அனை­வ­ருமே ஒன்­றுதான் என்றும் பெயர் குறிப்­பிட விரும்­பாத அந்த வியா­பாரி தெரிவித்தார். அங்கே எரிந்த 22 கடை­களில் முஸ்லிம் அல்­லா­த­வர்­களின் கடை­களும் உண்­டென்று சொன்­ன­தினால் நாம் அந்தக் கடை­களைத் தேடிப் போனாம். புகை­விட்­டுக்­கொண்­டி­ருந்த ஒரு ஆடைக் கடையின் வெளிப்­ப­டியில் ஒரு ஆணும் பெண்ணும் தலையில் கைவைத்­த­படி அமர்ந்­தி­ருந்­தனர். அந்தக் கடையின் பெயரைப் பார்த ்தோம் 'ஸ்ரீபதி டிரஸ் பொய்ன்ட்' என்­றி­ருந்­தது... அவர்­க­ளிடம் நெருங்­கினோம்... சிங்­க­ளத்தில் பேசத் தொடங்­கினார் அந்த நபர்... பாருங்கள்... என்ன நடந்­தி­ருக்­கி­றது என்று பாருங்கள்... கிட்­டத்­தட்ட 350 இலட்­சத்­திற்கும் அதி­க­மான ஆடைகள் எரிந்து நாச­மா­கி­விட்­டன. இதை யார் எமக்கு திருப்பித் தரு­வார்கள் என்று கேள்­வி­களை எழுப்பிக்கொண்டே போனார். அவரை சற்று ஆசு­வா­சப்­ப­டுத்தி... ஐயா சொல்­லுங்கள் உங்கள் கடைக்கு என்ன நடந்­தது என்றோம்... அன்று ஐந்து மணிக்­கெல்லாம் நாம் கடையை மூடி­விட்டு வைத்­தி­ய­ச­ாலைக்கு ஒரு­வரை பார்­வை­யிடச் சென்றோம். புது­வ­ருட காலம் என்­பதால் சொந்த பந்­தங்­க­ளுக்கு வெற்­றிலை கொடுத்து வாழ்­த்­து­வது வழக்கம். அன்று அப்­ப­டித்தான் வைத்­தி­ய­சா­லைக்கு ஒரு­வரைப் பார்க்க சென்­று­கொண்­டி­ருந்த வேளையில், உங்கள் கடையில் தீ பற்­று­கி­றது என்று ஒரு அழைப்பு வந்­தது. வைத்­தி­ய­சா­லைக்கு செல்­வதை நிறுத்­தி­விட்டு மீண்டும் இங்கு வந்தேன். வந்து பார்த்­த­போது இங்கே ஏரா­ள­மா­ன­வர்கள் கூடி­யி­ருந்­தனர். என்னால் என் கடை­ய­ருகே வர­மு­டி­ய­வில்லை. தூர­மாக நின்று என் கடை எரி­வதைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்தேன்... என்னால் வேறென்­னதான் செய்­தி­ருக்க முடியும் என்றார்... அந்த சந்­தர்ப்­பத்தில் பேச ஆரம்­பித்த அந்த நபரின் மனைவி... எமக்­கான அனைத்­துமே இந்த கடைதான். இதில்தான் எமது ஒட்­டு­மொத்த குடும்­ப­முமே வாழ்­கி­றது. ஒரு­வாரம் வரை நாம் தாக்­குப்­பி­டிக்­கலாம். அதன்­பி­றகு நாம் எமது குடும்­பத்தின் வாழ்­வா­தா­ரத்­திற்கு என்ன செய்­வது. எங்கள் வீட்டுக் குழந்­தை பாலுக்கு அழுமே என்ன செய்வேன் என்று பதை பதைத்தார் அந்த தாய். பாதிக்­கப்­பட்ட கடை­க­ளைத்­தாண்டி... வெளியே வர ஒரு பாதி­ரியார் அந்தச் சந்­தியில் நின்­று­கொண்­டி­ருந்தார். அவரின் முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்­தது... அவ­ரிடம் பேசுவோம் என்று அவரை அணு­கினோம்... நாம் யார் என்­பதை சொன்­ன­வு­ட­னேயே நாம் கேள்வி எழுப்பும் முன்னே அந்தப் பாதி­ரியார் பேசத் தொடங்­கினார்... அவர் மினு­வாங்­கொடை மெதடிஸ்ட் தேவா­ல­யத்தின் பாதி­ரியார். அவரின் பெயர் நதீர பெர்­னாண்டோ... இது இன­வாதம் அல்ல. சந்­தர்ப்­ப­வாதம். ஆம் நான் இந்தத் தாக்­கு­தலை இப்­ப­டித்தான் விளிப்பேன் என்று பேசத் தொடங்­கினார் பாதி­ரியார் நதீர. சம்­பவம் நடக்­கும்­போது நான் இங்­கேதான் இருந்தேன். ஆனால் நான் ஒருவன் மட்டும் அத்­தனை பேரையம் எப்­படித் தடுக்க முடியும். 300 க்கும் அதி­க­மான மோட்டார் சைக்­கிளில் வந்­தார்கள். எங்­கி­ருந்து யார் வந்­தார்கள் என்று தெரி­யாது. இது திட்­ட­மிட்ட தாக்­கு­தலா என்று சொல்­வ­தற்கும் எனக்குத் தெரி­யாது. ஆனால் ஒன்று பாது­காப்பு பற்­றாக்­குறை இருக்­கி­றது என்­பதை சொல்­லி­யா­க­வேண்டும். ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்­கு­த­லினால் மக்கள் பெரும் கோபத்­திற்கு ஆளா­கி­யுள்­ளனர். அது உண்­மைதான்... யாரும் மறுப்­ப­தற்­கில்லை... அந்தக் கோபத்தை அடக்கப் பார்த்­தார்­களே தவிர அதி­லி­ருந்து மக்கள் விடு­ப­டு­வ தற்கு எவ்­வித முயற்­சி­க­ளையும் எந்தத் தரப் பும் மேற்­கொள்­ள­வில்லை. கோபம் எனும் காற்று பலூனில் நிறைந்­து­கொண்டே வந்­தது. அந்தக் காற்றை வெளியேற விடாமல் அமர்த்திக்கொண்டே இருந்­தார்கள். இந்த பலூன் ஒரு கட்­டத்தில் வெடிக்கும் என்று எனக்குத் தெரியும். அதுதான் தற்­போது வெடித்­துள்­ளது. ஆயு­தங்கள் எங்கும் இல்லை. நீங்கள் அஞ்­ச­வேண்டாம். பாது­காப்­புக்கு நாம் உத்த­ர­வாதம் தரு­கிறோம் என்று இன்­று­வ­ரையில் ஏன் யாரும் அறி­விக்­க­வில்லை. மக்­க­ளுக்கு நம்­பிக்­கையைக் கொடுக்க இவர்கள் தவறிவிட்டனர். ஒரு சந்தேகத்துடனேயே அனைவரும் இருக்கிறார்கள். இந்தச் சூழலை நுணுக்கமாக கையாள வேண்டும் என்று பேசிக்கொண்டே பாதிக்கப்பட்ட அந்த பள்ளிவாசலுக்குள் சென்றார் அந்த பாதிரியார். அத்தோடு நாமும் அங்கிருந்து விடைபெற்றோம்... எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது என்றுதான் வன்முறை குறித்தான எந்தப் பதிவையும் இட்டு முடிக்கும்போது யாரும் குறிப்பிடுவது. நாமும் அதையே சொல்கிறோம். எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வா காது. நாட்டின் நலனே முக்கியம் என மக்கள் உணர வேண்டும். சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்தால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். மக்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகவும் இருக்கிறது... - எஸ்.ஜே.பிரசாத் - http://www.virakesari.lk/article/56048

யாழ். மாணவர்களின் விடுதலை – முக்கிய தீர்ப்பு இன்று.

1 year 9 months ago
யாழ். மாணவர்களின் விடுதலை – முக்கிய தீர்ப்பு! பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையிலிருந்து மீட்கப்பட்டதாக படையினர் தெரிவித்திருந்தனர். அத்துடன் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலையில் திலீபனின் ஒளிப்படம் ஒட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பிணை வழங்கும்படி கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும் பிணை கோரிக்கைக்கு அரசுத் தரப்பு ஆட்சேபனை தெரிவித்ததால், அதனை மீறி பிணை வழங்க முடியாதென பிணை மனுக்களை நீதவான் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சட்டமா அதிபருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து சட்டமா அதிபரை நேரில் சந்தித்தும் கலந்துரையாடியிருந்தார். இவ்வாறான நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களைப் பிணையில் விடுவிப்பதை அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் ஆட்சேபிக்காது என சட்டமா அதிபர் அலுவலகம் நேற்று மாலை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக கூறப்படுகிறது. http://athavannews.com/யாழ்-மாணவர்களின்-விடுதல/