Aggregator

2019 ஐ.பி.எல். ரி-20 தொடர் செய்திகள்

1 day 11 hours ago
ஐ.பி.எல். முதல் போட்டியில் சி.எஸ்.கே.யின் அதிரடி முடிவு 12 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முதல் போட்டியில் நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோயல் சேஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப் போட்டி சென்னை சேப்பாக்கம், சிதம்பரம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. இந்த நிலையில் ஐ.பி.எல். முதலாவது ஆட்டத்தின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி, இராணுவத்தில் கெளரவப் பொறுப்பில் உள்ளதனால், நலநிதிக்கான இந்த காசோலையை அவர் வழங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/52377

மீண்டும் திரைப்பட பாடல்களை எழுதுவதற்கு தயாராகிவிட்டேன்- வைரமுத்து அறிவிப்பு

1 day 11 hours ago
மீண்டும் திரைப்பட பாடல்களை எழுதுவதற்கு தயாராகிவிட்டேன்- வைரமுத்து அறிவிப்பு கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக, இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி தமிழாற்றுப்படை கட்டுரைகளை படைத்து முடித்து விட்டேன். தற்பொழுது மீண்டும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகவும், கவிதை எழுதுவதற்கும் காத்திருக்கிறேன். இளம் இயக்குநர்களும், இளம் இசையமைப்பாளர்களும் என்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதன் போது, விழாவில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய வைரமுத்து தெரிவிக்கையில், “நெடுநல்வாடை’ என்ற இந்த படத்தின் தலைப்பிற்காகவே இயக்குனருக்கு தமிழ் இலக்கிய உலகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மொழி பேசும் போதும், புழங்கும் போது தான் உயிர்ப்புடன் இருக்கிறது. அந்த வகையில் 2000 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட நெடுநல்வாடையை இன்றைய டிஜிற்றல் யுகத்தில் ஒரு திரைப்படத்திற்கு தலைப்பாக்கி அதனை மீண்டும் உயிருள்ளதாக ஆக்கியதற்காக இயக்குனருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் கி ராஜநாராயணன் போலவோ, ஜெயகாந்தன் போலவோ, புதுமைப்பித்தன் போலவோ, தி ஜானகிராமன் போலவோ முழுநேர நாவலாசிரியரோ அல்லது சிறுகதை ஆசிரியனும் அல்ல. அடிப்படையில் நான் ஒரு கவிஞன். பாட்டு எழுதுவதில் சுகம் காண்பவன். பாடல் எழுதுவதில் இலாபம் காண்பவன். தமிழ் திரைப்பட பாடல்கள் சற்று தொய்வடைந்து இருப்பதாக நான் கருதுகிறேன். ஒரு படத்தில் இடம்பெறும் பாடல்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டிருக்கிறது .எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை எண்ணங்கள் குறையாத பாடல்கள் வேண்டுமே என்பதுதான் என் போன்ற தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. திரைப்படப் பாடல்கள், தமிழர்களுக்கு கவிதை செய்யும் வேலையை மாறுவேடமிட்டு செய்து கொண்டிருக்கிறது. தமிழாற்றுப்படை யை நான் இன்றுடன் நிறைவு செய்து இருக்கிறேன். தொல்காப்பியர், கபிலர், அவ்வையார், இளங்கோ, கம்பர், திருவள்ளுவர், ஆண்டாள் ,அப்பர், திருமூலர், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், ஜெயகாந்தன், அப்துல் ரகுமான், அண்ணா என இந்த வரிசையில் கடைசியாக பெரியாரை பற்றி தமிழாற்றுப்படை கட்டுரையுடன் நிறைவு செய்கிறேன். பெரியாரை பற்றிய தமிழாற்றுப்படை, மே மாதம் 5ஆம் திகதி திருச்சியில் அரங்கேற்றுகிறேன். அத்துடன் தமிழாற்றுப்படையின் ஒரு பெரும் பணி தற்காலிகமாக நிறைவடைகிறது. இது நூலாக ஜூலை 12ஆம் திகதி அன்று வெளியாகிறது. இனி முழுக்க தமிழ் திரையுலகில் பாடல்களை எழுதுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எம்மை தயாராக் வைத்துக் கொண்டிருக்கிறேன். இளம் இயக்குனர்கள் இளம் படைப்பாளிகள் இளம் இசையமைப்பாளர்கள் என்னை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார். http://www.virakesari.lk/article/52374

மீண்டும் திரைப்பட பாடல்களை எழுதுவதற்கு தயாராகிவிட்டேன்- வைரமுத்து அறிவிப்பு

1 day 11 hours ago
மீண்டும் திரைப்பட பாடல்களை எழுதுவதற்கு தயாராகிவிட்டேன்- வைரமுத்து அறிவிப்பு

கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக, இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி தமிழாற்றுப்படை கட்டுரைகளை படைத்து முடித்து விட்டேன். தற்பொழுது மீண்டும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகவும்,  கவிதை எழுதுவதற்கும் காத்திருக்கிறேன். இளம் இயக்குநர்களும், இளம் இசையமைப்பாளர்களும் என்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். 

அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதன் போது, விழாவில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய வைரமுத்து தெரிவிக்கையில்,

image_cinema_21319.jpg

“நெடுநல்வாடை’ என்ற இந்த படத்தின் தலைப்பிற்காகவே இயக்குனருக்கு தமிழ் இலக்கிய உலகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மொழி பேசும் போதும், புழங்கும் போது தான் உயிர்ப்புடன் இருக்கிறது. அந்த வகையில் 2000 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட நெடுநல்வாடையை இன்றைய டிஜிற்றல் யுகத்தில் ஒரு திரைப்படத்திற்கு தலைப்பாக்கி அதனை மீண்டும் உயிருள்ளதாக ஆக்கியதற்காக இயக்குனருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கி ராஜநாராயணன் போலவோ, ஜெயகாந்தன் போலவோ, புதுமைப்பித்தன் போலவோ, தி ஜானகிராமன் போலவோ முழுநேர நாவலாசிரியரோ அல்லது சிறுகதை ஆசிரியனும் அல்ல. அடிப்படையில் நான் ஒரு கவிஞன். பாட்டு எழுதுவதில் சுகம் காண்பவன்.  பாடல் எழுதுவதில் இலாபம் காண்பவன்.

தமிழ் திரைப்பட பாடல்கள் சற்று தொய்வடைந்து இருப்பதாக நான் கருதுகிறேன். ஒரு படத்தில் இடம்பெறும் பாடல்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டிருக்கிறது .எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை எண்ணங்கள் குறையாத பாடல்கள் வேண்டுமே என்பதுதான் என் போன்ற தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. திரைப்படப் பாடல்கள், தமிழர்களுக்கு கவிதை செய்யும் வேலையை மாறுவேடமிட்டு செய்து கொண்டிருக்கிறது.

தமிழாற்றுப்படை யை நான் இன்றுடன் நிறைவு செய்து இருக்கிறேன். தொல்காப்பியர், கபிலர், அவ்வையார், இளங்கோ, கம்பர், திருவள்ளுவர், ஆண்டாள் ,அப்பர், திருமூலர், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், ஜெயகாந்தன், அப்துல் ரகுமான், அண்ணா என இந்த வரிசையில் கடைசியாக பெரியாரை பற்றி தமிழாற்றுப்படை கட்டுரையுடன் நிறைவு செய்கிறேன்.

பெரியாரை பற்றிய தமிழாற்றுப்படை, மே மாதம் 5ஆம் திகதி திருச்சியில் அரங்கேற்றுகிறேன். அத்துடன் தமிழாற்றுப்படையின் ஒரு பெரும் பணி தற்காலிகமாக நிறைவடைகிறது. இது நூலாக ஜூலை 12ஆம் திகதி அன்று வெளியாகிறது. இனி முழுக்க தமிழ் திரையுலகில் பாடல்களை எழுதுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எம்மை தயாராக் வைத்துக் கொண்டிருக்கிறேன். இளம் இயக்குனர்கள் இளம் படைப்பாளிகள் இளம் இசையமைப்பாளர்கள் என்னை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

 

http://www.virakesari.lk/article/52374

ஈராகில் படகு கவிழ்ந்ததில் 70 பேர் பலி ; 20 பேர் மாயம்

1 day 11 hours ago
ஈராகில் படகு கவிழ்ந்ததில் 70 பேர் பலி ; 20 பேர் மாயம் ஈராக் – மொசூல் நகரிலுள்ள ரைக்ரிஸ் எனும் நதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் அதில் பயணித்த 71 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விபத்தில் மேலும் 20 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல் படி அந்த விபத்தில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 100 க்கும் மேற்பட்ட பயணிகள் குறித்த படகில் பயணித்ததாகவும், அவர்கள் நீந்திக் கரையேறுவதற்கு முடியாமையாலேயே உயிரிழக்க நேரிட்டதாகவும் மொசூல் குடியியல் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. எனினும், படகில் சிக்கியிருந்த எஞ்சியவர்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ள நிலையில், குறித்த படகு ஒரு சுற்றுலாத் தீவுக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் பாதிக்கபட்டோரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/52422

ஈராகில் படகு கவிழ்ந்ததில் 70 பேர் பலி ; 20 பேர் மாயம்

1 day 11 hours ago
ஈராகில் படகு கவிழ்ந்ததில் 70 பேர் பலி  ; 20 பேர் மாயம்

ஈராக் – மொசூல் நகரிலுள்ள ரைக்ரிஸ் எனும் நதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் அதில் பயணித்த  71 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

5c93a777dda4c885318b4578.jpg

அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த  விபத்தில் மேலும் 20 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல் படி அந்த விபத்தில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

645x344-45-dead-after-overloaded-ferry-s

100 க்கும் மேற்பட்ட பயணிகள் குறித்த படகில் பயணித்ததாகவும், அவர்கள் நீந்திக் கரையேறுவதற்கு முடியாமையாலேயே உயிரிழக்க நேரிட்டதாகவும் மொசூல் குடியியல் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

2000.jpeg

எனினும், படகில் சிக்கியிருந்த எஞ்சியவர்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ள நிலையில், குறித்த படகு ஒரு சுற்றுலாத் தீவுக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

bag105-321_2019_223338.jpg

குறித்த விபத்தில் பாதிக்கபட்டோரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

images__1_.jpg

 

http://www.virakesari.lk/article/52422

நடைமுறைக்கு ஒவ்வாத தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும் பிரதான திராவிட கட்சிகள்

1 day 11 hours ago
நடைமுறைக்கு ஒவ்வாத தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும் பிரதான திராவிட கட்சிகள்

 பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு தொடக்கம் பெண் பிள்ளைகளுக்கான பலவித ஊக்குவிப்புகள் வரை பயனுறுதியுடைய சமூக நலன்புரி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்கிவந்திருக்கிறது. 

indiaN.jpg

ஆனால், லோக்சபா தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்வைத்திருக்கும் விஞ்ஞாபனங்கள் ஏமாற்றத்தைத் தருபவையாக இருக்கின்றன.

இரு கட்சிகளுமே முன்னைய திட்டங்களை திரும்பத்திரும்ப கூறியிருக்கின்ற அதேவேளை, மத்திய அரசின் கீழ் வருகின்ற விடயங்கள் தொடர்பில் பல முக்கியமான வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றன.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதாதாக இரு கட்சிகளும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளன.

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்யவேண்டுமென்று கோரி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானமொன்று ஏகமனதாக ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டும் இருக்கிறது. ஆனால், மத்திய அரசினால் நியமிக்கப்படுகின்ற மாநில ஆளுநர் தான் இது தொடர்பிலான அரசியல் தீர்மானத்தை எடுக்கவேண்டியவராக இருக்கிறார். இரு கட்சிகளுமே புதுச்சேரியை தற்போதைய யூனியன் பிரதேச அந்தஸ்திலிருந்து ஒரு மாநிலமாக்குவதாக உறுதியளித்திருக்கின்றன ; ஆனால், அத்தகைய ஒரு மாற்றத்தை நிறைவேற்றக்கூடிய அதிகாரம் மாநிலங்களுக்கு கிடையாது.

இரு விஞ்ஞாபனங்களுமே இலங்கை தமிழர்களின் அவலநிலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியளித்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடனான அரசாங்கமொன்று மத்தியில் பதவிக்கு வந்தாலும் கூட, அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது பற்றிய யோசனையை நடைமுறைப்படுத்துவது சுலபமானதாக இருக்கப்போவதில்லை. 8 இலட்சம் ரூபா வரைக்கும் வருமானவரியில் இருந்து விலக்களிக்கப்போவதாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் கூறியிருக்கிறது.இது மாநில அரசாங்கம் எடுக்கவோ, நடைமுறைப்படுத்தவோ கூடிய ஒரு தீர்மானமல்ல.

எவ்வாறெனினும், விஞ்ஞாபனங்களில் உள்ள பொதுப்படையான பல யோசனைகள் மாநில மக்களைக் கவரக்கூடியவையாக இருக்கலாம். உதாரணமாக, மாநிலங்களுக்கிடையே நதிகளை இணைப்பது தொடர்பான யோசனையை சொல்லலாம். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் வங்கிக் கணக்கிற்கு மாதாந்தம் 1,500 ரூபாவை வைப்புச்செய்யப்போவதாக ஆண்ணா தி.மு.க. ஒரு உறுதிமொழியை வழங்கியிருக்கிறது.குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 8, 000 ரூபாவாக நிர்ணயிக்கப்போவதாக தி.மு.க. கூறுகிறது. அடிப்படைச் சம்பளம் நாடுபூராவும் ஒரேமாதிரியானதாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கை ஆரவாரமாக முன்வைக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் மாநில கட்சிகள் இந்த விடயத்தில் முந்திக்கொண்டுள்ளன.விவசாயத்துக்கென்று தனியான பட்ஜெட் அல்லது மீன்பிடிக்கென்று தனியான அமைச்சு போன்ற ஏனைய வாக்குறுதிகள் வாக்காளர்களினால் விரும்பப்படக்கூடும்.

கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பது அரிது ;  வேட்பாளர்களின் ஆளுமை, சாதி, மதம் மற்றும் பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாக்குகள் அளிக்கப்படுகின்றனன்று அரசியல் அவதானிகள் கூறலாம் எனகின்ற அதேவேளை,  வாக்காளர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் கூடுதல் பங்கைக்கொண்ட மத்திக்கும் மாநிலங்களுக்கும் இடையே  தோன்ற  ஆரம்பித்திருக்கின்ற வெடிப்புக்களை பிரதான திராவிட கட்சிகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.

  (இந்துஸ்தான் ரைம்ஸ் ஆசிரிய தலையங்கம், 20, மார்ச் 20019 )

 

http://www.virakesari.lk/article/52407

பூர்வீக தேசத்தை அடைவதே திபெத்தியர்களின் கனவு; ஒரு கள ஆய்வு

1 day 11 hours ago
பூர்வீக தேசத்தை அடைவதே திபெத்தியர்களின் கனவு; ஒரு கள ஆய்வு ( லியோ நிரோஷ தர்ஷன் ) திபெத் பூமியின் கூரை என்று அழைக்கப்படும் நாடு. பௌத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கங்கள் மற்றும் இஸ்லாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடாகும். இந்தியாவின் தலைப் பாகமாக இருக்கும் இயமமலைத் தொடரில் திபெத் தேசம் காணப்பட்டதால், அதனை தனதாக்கிக் கொள்வதற்காக சீனா திபெத் மீது மேலாதிக்கத்தை கடுமையாக செலுத்த தொடங்கியது. இதனால் ஏற்பட்ட மோதல்களினால் பல்லாயிரம் கணக்கான திபெத்தியர்கள் உயிரிழந்ததுடன் பல்வேறு தேசங்களுக்கு அகதிகளாகவும் சென்றனர். அவ்வாறு சென்ற திபெத்தியர்கள் இன்றும் தமது பூர்வீகத்தை இழந்து பல்வேறு தேசங்களில் அகதிகளாக வாழ்கின்றனர் . நேபாளம் - லலிட்பூரில் அமைந்துள்ள இந்த திபெத்திய முகாமில் சுமார் 10 ஆயிரம் வரையிலான திபெத்தியர்கள் வாழ்கின்றனர். இவர்கள் 1959 மற்றும் 1960 காலப்பகுதியில் திபெத்தில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக தஞ்சமடைந்தவர்கள். எத்தேசம் சென்றாலும் தமக்குறிய அடையாளத்துடன் திபெத் மக்கள் வர்கின்றனர். திபெத்திய மத தலைவராகக் கருதப்படும் பாரம்பரிய தலாய் லாமாவை வழிப்படுவதில் ஈடற்ற நம்பிக்கையுடையவர்களாவே இந்த மக்கள் உள்ளனர். திபெத்திய பாரம்பரியங்களை பாதுகாப்பதிலும் தமக்குறிய கைத்தொழில்களை முன்னெடுப்பதிலும் மிகவும் ஆர்வமாக இந்த முகாம் வாழ் திபெத்தியர்கள் உள்ளனர். நேபாள அரசாங்கம் இந்த மக்களுக்கு தேவையான கல்வி மற்றும் தொழில் உள்ளிட்ட வாழ்வியல் உரிமைகளை வழங்கியுள்ளது. திபெத்திய இளைய சமூகத்தினர் நேபாளத்தின் வெளியிடங்களுக்கு சென்று தொழில் புரிந்தாலும் முதியோர் மற்றும் பெண்கள் முகாமில் பல்வேறு கைத்தொழில்களை ஆர்வமாக செய்து வருகின்றனர். குறிப்பாக கம்பளியிலான படுக்கை விரிப்புக்கள் உள்ளிட்ட உற்பத்திகளை இந்த திபெத்திய முகாம் பெண்கள் தமது வாழ்வாதாரத்தை ஈடுசெய்வதற்காக செய்து வருகின்றனர். இந்த உற்பத்திகளுக்கு உள்ளுர் மற்றும் வெளியூர் சந்தைகளில் சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது. அனைத்து கம்பளி உற்பத்திகளுமே திபெத்திய பாராம்பரியத்தை உணர்த்தும் வகையிலான வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் ஓவியங்களும் தனி சிறப்பு மிக்கவையாவே உள்ளது. புன்னகை நிறைந்த முகத்துடன் இந்த அகதி முகாமில் வாழும் திபெத்திய முதியோர்கள் எப்போதும் பாரம்பரிய மத தலைவரான தலாய் லாமாவை வழிபடுவதில் ஆர்வமாக உள்ளனர். இவர்கள் வழிபடுகின்ற முறையும் தலாய் லாமா மீது வைத்துள்ள எல்லையற்ற நம்பிக்கையும் ஆச்சரியமிக்கது. எவ்வாறாயினும் அடக்குமுறையினாலான மோதல்களில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் எத்தேச மக்களானாலும் அவர்களின் ஏக்கமும் எதிர்ப்பார்ப்பும் தமது பூர்வீக தேசமாகும். அதற்கு திபெத்திய அதிகதிகள் மாத்திரம் விதிவிளக்கல்ல. இந்த முதியவரின் எதிர்ப்பார்ப்பும் பிரார்தனையும் திபெத் தேசம் மீதான எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையுமே வெளிப்படுத்துகின்றது. http://www.virakesari.lk/article/52391

பூர்வீக தேசத்தை அடைவதே திபெத்தியர்களின் கனவு; ஒரு கள ஆய்வு

1 day 11 hours ago
பூர்வீக தேசத்தை அடைவதே திபெத்தியர்களின் கனவு; ஒரு கள ஆய்வு

( லியோ நிரோஷ தர்ஷன் )

திபெத் பூமியின் கூரை என்று அழைக்கப்படும் நாடு. பௌத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கங்கள் மற்றும் இஸ்லாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடாகும். 

இந்தியாவின் தலைப் பாகமாக இருக்கும் இயமமலைத் தொடரில் திபெத் தேசம் காணப்பட்டதால், அதனை தனதாக்கிக் கொள்வதற்காக சீனா திபெத் மீது மேலாதிக்கத்தை கடுமையாக செலுத்த தொடங்கியது. 

இதனால் ஏற்பட்ட மோதல்களினால் பல்லாயிரம் கணக்கான திபெத்தியர்கள் உயிரிழந்ததுடன் பல்வேறு தேசங்களுக்கு அகதிகளாகவும் சென்றனர்.  அவ்வாறு சென்ற திபெத்தியர்கள் இன்றும் தமது பூர்வீகத்தை இழந்து பல்வேறு தேசங்களில் அகதிகளாக வாழ்கின்றனர் .

நேபாளம் - லலிட்பூரில் அமைந்துள்ள இந்த திபெத்திய முகாமில் சுமார் 10 ஆயிரம் வரையிலான திபெத்தியர்கள் வாழ்கின்றனர். இவர்கள்  1959 மற்றும் 1960 காலப்பகுதியில் திபெத்தில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக தஞ்சமடைந்தவர்கள். 

9.jpg     

எத்தேசம் சென்றாலும் தமக்குறிய அடையாளத்துடன் திபெத் மக்கள்  வர்கின்றனர். திபெத்திய மத தலைவராகக் கருதப்படும் பாரம்பரிய தலாய் லாமாவை வழிப்படுவதில் ஈடற்ற நம்பிக்கையுடையவர்களாவே இந்த மக்கள் உள்ளனர். திபெத்திய பாரம்பரியங்களை பாதுகாப்பதிலும் தமக்குறிய கைத்தொழில்களை முன்னெடுப்பதிலும் மிகவும் ஆர்வமாக இந்த முகாம் வாழ் திபெத்தியர்கள் உள்ளனர். 

8.jpg

நேபாள அரசாங்கம் இந்த மக்களுக்கு தேவையான கல்வி மற்றும் தொழில்  உள்ளிட்ட வாழ்வியல் உரிமைகளை வழங்கியுள்ளது. திபெத்திய இளைய சமூகத்தினர் நேபாளத்தின் வெளியிடங்களுக்கு சென்று தொழில்  புரிந்தாலும் முதியோர் மற்றும் பெண்கள் முகாமில் பல்வேறு கைத்தொழில்களை ஆர்வமாக செய்து வருகின்றனர். 

7.jpg

1.jpg

குறிப்பாக கம்பளியிலான படுக்கை விரிப்புக்கள் உள்ளிட்ட உற்பத்திகளை இந்த திபெத்திய முகாம் பெண்கள் தமது வாழ்வாதாரத்தை ஈடுசெய்வதற்காக செய்து வருகின்றனர். இந்த உற்பத்திகளுக்கு உள்ளுர் மற்றும் வெளியூர் சந்தைகளில் சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது. 

2.jpg

அனைத்து கம்பளி உற்பத்திகளுமே திபெத்திய பாராம்பரியத்தை உணர்த்தும் வகையிலான வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அதன்  ஓவியங்களும் தனி சிறப்பு மிக்கவையாவே உள்ளது.

6.jpg

புன்னகை நிறைந்த முகத்துடன்   இந்த அகதி முகாமில் வாழும் திபெத்திய முதியோர்கள்  எப்போதும் பாரம்பரிய மத தலைவரான தலாய் லாமாவை வழிபடுவதில் ஆர்வமாக உள்ளனர். இவர்கள் வழிபடுகின்ற முறையும் தலாய் லாமா மீது வைத்துள்ள எல்லையற்ற நம்பிக்கையும் ஆச்சரியமிக்கது. 

11.jpg

எவ்வாறாயினும் அடக்குமுறையினாலான மோதல்களில் பாதிக்கப்பட்டு  இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் எத்தேச மக்களானாலும் அவர்களின் ஏக்கமும் எதிர்ப்பார்ப்பும் தமது பூர்வீக தேசமாகும். அதற்கு திபெத்திய அதிகதிகள் மாத்திரம் விதிவிளக்கல்ல. 

இந்த முதியவரின் எதிர்ப்பார்ப்பும் பிரார்தனையும் திபெத் தேசம் மீதான எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையுமே வெளிப்படுத்துகின்றது.

10.jpg

 

http://www.virakesari.lk/article/52391

புதிய ஜெனிவா பிரே­ரணை ஊடாக மக்­க­ளுக்கு விமோ­சனம் கிடைக்­குமா?

1 day 11 hours ago
புதிய ஜெனிவா பிரே­ரணை ஊடாக மக்­க­ளுக்கு விமோ­சனம் கிடைக்­குமா? ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இன்­றைய தினம் இலங்கை தொடர்­பாக பிரித்தானியா, கனடா, ஜேர்மன் உள்­ளிட்ட ஐந்து நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வி­ருக்­கி­றது. ஏற்­க­னவே இலங்கை அர­சாங்கம் தீர்­மானம் எடுத்­துள்­ளதன் பிர­காரம் பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்கும் பட்­சத்தில் இலங்கை தொடர்­பான 40/1 என்ற இந்தப் புதிய பிரே­ரணை வாக்­கெ­டுப்­பின்றி நிறை­வேற்­றப்­படும். ஒரு­வேளை ஏதா­வது ஒரு உறுப்­பு­நாடு எதிர்ப்பு தெரி­வித்தால் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்­டிய தேவை மனித உரிமை பேர­வைக்கு ஏற்­படும். அவ்­வாறு எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­டா­விடின் ஐ.நா. மனி­த உ­ரிமை பேர­வையின் 47 உறுப்பு நாடு­க­ளி­னதும் ஏகோ­பித்த ஆத­ர­வுடன் இலங்கை தொடர்­பான பிரே­ரணை நிறை­வேற்­றப்­படும். இந்­த­நி­லையில் இந்தப் புதிய பிரே­ரணை எதனை வலி­யு­றுத்­து­கி­றது. அத­னூ­டாக மக்­க­ளுக்கு கிடைக்­கப்­போகும் நன்மை என்ன? பாதிக்­கப்­பட்ட மக்கள் நம்­பிக்கை வைக்கும் அள­வுக்கு இந்த பிரே­ர­ணையின் உள்­ள­டக்­கங்கள் காணப்­ப­டு­கின்­ற­னவா என்­பது தொடர்பில் தற்­போது அனைத்துத் தரப்­பி­னரும் ஆர்­வ­மாக இருக்­கின்­றனர். உண்­மையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 பிரே­ர­ணையே இம்­முறை மீண்டும் இரண்டு வரு­ட­கால நீடிப்­புக்கு உட்­ப­டு­கின்­றது. இந்தப் பிரே­ரணை ஏற்­க­னவே 2017ஆம் ஆண்டு 34/1 என்ற பெயரில் 2019 ஆம் ஆண்­டு­வ­ரை­யான காலப்­ப­கு­தி­வரை நீடிப்­புக்­குட்­பட்­டது. தற்­போது மீண்டும் இரண்­டு வ­ரு­ட­கால நீடிப்­புக்கு உட்­ப­டு­கின்­றது. இக்­கா­லப்­ப­கு­தியில் அர­சாங்கம் எவ்­வாறு 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­தப்­போ­கின்­றது என்­பதை சர்­வ­தேசம் கண்­காணிப்பு செய்­வ­தற்­கான ஆணை இந்தப் பிரே­ரணை நிறை­வே­று­வதன் மூலம் கிடைக்­கின்­றது. புதிய பிரே­ர­ணையில் நான்கு செயற்­பாட்டுப் பந்­திகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. அதா­வது இலங்­கையும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் ஒத்­து­ழைப்­புடன் இணைந்து செயற்­ப­ட­வேண்­டு­மென்று இந்த செயற்­பாட்டு பந்­திகள் வலி­யு­றுத்­து­கின்­றன. அதே­போன்று உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், இழப்­பீடு வழங்­குதல் உள்­ளிட்ட செயற்­பா­டு­களில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையும் இலங்கை அர­சாங்­கமும் இணைந்து செயற்­ப­ட­வேண்­டு­மென இந்த செயற்­பாட்டு பந்­திகள் மேலும் வலி­யு­றுத்­து­கின்­றன. அதே­போன்று எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு பிரே­ரணை அமு­லாக்கம் தொடர்­பான இடைக்­கால அறிக்­கையை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் வெளி­யிட வேண்­டு­மென்றும் 2021 ஆம் ஆண்டு அது தொடர்­பான முழு­மை­யான அறிக்­கையை வெளி­யி­ட­வேண்­டு­மென்றும் இந்த 40/1 என்ற புதிய பிரே­ர­ணையின் செயற்­பாட்டு பந்­திகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. அது­மட்­டு­மன்றி இலங்கை இந்தப் பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் தொடர்ந்து கண்­கா­ணிக்­க­வேண்டும் என்றும் இந்த புதிய பிரே­ரணை நான்கு செயற்­பாட்டு பந்­திகள் ஊடாக வலி­யு­றுத்­து­கின்­றது. அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட 30/1 என்ற பிரே­ரணை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டா­ததன் கார­ண­மா­கவே இந்த புதிய பிரே­ர­ணையை கொண்­டு­வ­ர­வேண்­டிய தேவை சர்­வ­தேச நாடு­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இது தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் முரண்­பா­டான கருத்­துக்கள் நில­வு­கின்­றன. தமிழ் பேசும் மக்­களின் பிர­தி­நி­தி­களைப் பொறுத்­த­வ­ரையில் ஒரு­த­ரப்­பினர் இவ்­வாறு இரண்­டு­ வ­ரு­ட­காலம் நீடிக்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் இல்லை என்றும் நேர­டி­யா­கவே இந்த விவ­கா­ரத்தை ஐக்­கி­ய நா­டுகள் பாது­காப்பு சபைக்கு கொண்­டு­செல்ல வேண்டும் என்றும் கூறி­வ­ரு­கின்­றனர். அதே­போன்று கால நீடிப்பு வழங்­கப்­ப­டு­வதன் ஊடா­கவே சர்­வ­தேச மேற்­பார்­வையை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முடியும் என்றும் எனவே அது முக்­கி­ய­மா­னது என்றும் மற்­று­மொரு தரப்­பினர் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். உண்­மையில் இந்த சர்­வ­தேச மேற்­பார்வை என்­பது இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும். காரணம் பாதிக்­கப்­பட்ட மக்கள் இது­வரை நீதியைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. யுத்தம் முடி­வ­டைந்து 10 வரு­டங்கள் கடந்தும் இன்னும் இந்த மக்கள் நீதி கிடைக்­காமல் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். எனவே சர்­வ­தேச மேற்­பார்­வையை ஏற்­ப­டுத்தி மக்­க­ளுக்­கான நீதியைப் பெற்­றுக்­கொள்ள முயற்­சிப்­பதே தற்­போ­தைய நிலை­மையில் மிக முக்­கி­ய­மான விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. இலங்கை விவ­கா­ரத்தை ஐக்­கி­ய­நா­டுகள் பாது­காப்பு சபைக்கு கொண்­டு­செல்ல வேண்­டு­மென ஒரு­த­ரப்­பினர் கூறு­கின்­றனர். ஆனால் இந்த விவ­காரம் ஐக்­கி­ய­ நா­டுகள் பாது­காப்பு சபைக்கு கொண்டு செல்லும் பட்­சத்தில் அங்கு நிரந்­தர உறுப்­பு­ரி­மை­யையும் வீட்டோ அதி­கா­ரத்­தையும் கொண்­டுள்ள சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கை தொடர்­பான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வி­டாமல் தடுத்­து­விடும். எனவே சர்­வ­தேச மேற்­பார்­வையின் ஊடாக முடி­யு­மா­ன­வரை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியைப் பெற்­றுக்­கொள்­வதே தற்­போ­தைய சூழலில் பொருத்­த­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது. பாதிக்­கப்­பட்ட மக்கள் உண்­மையை அறிந்­து­கொள்­வ­தற்­கான உரி­மையைக் கொண்­டுள்­ளனர். அதனை யாரும் மறுக்க முடி­யாது. ஆனால் அதற்­கான சந்­தர்ப்­பங்கள் யதார்த்த ரீதியில் எவ்­வாறு காணப்­ப­டு­கின்­றது என்­பது குறித்து சிந்­திக்­க­வேண்டும். இந்த கால நீடிப்பு குறித்து கருத்து வெளி­யிட்­டுள்ள தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் ஜெனி­வாவில் தற்­போது பிரித்தானியா உள்­ளிட்ட நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள பிரே­ர­ணையை திருத்­து­வ­தற்கு முற்­பட்டால் அது இலங்­கைக்கு சாத­க­மாக போய்­விடும். அதனை பயன்­ப­டுத்தி இலங்­கையும் திருத்­தங்­களை செய்­து­விடும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். அதே­போன்று 34/1 தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கா­விட்டால் இலங்கை தொடர்­பாக கேள்வி கேட்­ப­தற்­கான அதி­காரம் மனி­த­ உரிமை பேர­வைக்கு கிடைத்­தி­ருக்­காது. அத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­மை­யா­லேயே தற்­போது இலங்கை தொடர்­பாக கேள்வி கேட்­ப­தற்கும் அது குறித்து அறிக்­கைகள் சமர்ப்­பிப்­ப­தற்­கு­மான தேவை ஏற்­ப­டு­கின்­றது. ஏற்­க­னவே மூன்­றரை வரு­டங்­க­ளுக்குள் சில­வற்­றை­யா­வது செய்­வ­தற்கு காரணம் இந்த மேற்­பார்­வை­யே­யாகும். இந்த மேற்­பார்வை நீடித்தால் தான் இன்­னமும் செய்­யாமல் இருக்க கூடிய பல விட­யங்­களில் சில விட­யங்­க­ளை­யா­வது செய்ய வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­படும் என்றும் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். இவ்­வாறு பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­ப­டு­வதன் ஊடாக நிச்­ச­ய­மாக முன்­னேற்­றங்கள் நிக­ழத்தான் வேண்டும். காணா­மல் போ­னோரின் அலு­வ­லகம் சம்­பந்­த­மான செயற்­பா­டு­களில் முன்­னேற்றம் இருக்கும் என்று நம்­பு­கின்றோம். உண்­மையை வெளிப்­ப­டுத்­து­கின்ற ஆணைக்­குழு நிய­மிப்­ப­தற்­கான சட்­ட­வ­ரைபு ஒன்றை தயா­ரித்­தி­ருப்­ப­தாக சொல்­கி­றார்கள். அது நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும். பத்து வரு­டங்­க­ளாக நாம் சொல்­லி­வ­ரு­கின்ற ஒரு கூற்று உண்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும் என்­ப­தாகும். . அந்த உண்­மையின் அ­டிப்­ப­டை­யி­லேயே நீதி செய்­யப்­ப­ட­வேண்டும் எனவும் சுமந்­திரன் எம்.பி. குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். அந்த வகையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமக்­கான நீதியைப் பெற்­றுக்­கொள்ளும் செயற்­பாட்டில் சர்­வ­தேச மேற்­பார்வை என்­பது எந்­த­ள­வு­தூரம் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது என்­பதை சுமந்­திரன் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். இந்த விட­யத்தில் அர­சாங்­கமும் தமது பிர­ஜை­க­ளுக்­கான நீதியை நிலை­நாட்டும் செயற்­பாட்டில் அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்­டு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். சர்­வ­தேசம் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­து­கின்­றது. அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட தனது பிரஜைகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். தற்போது இரண்டாவது தடவையாக 2015 ஆம் ஆண்டு பிரேரணை நீடிக்கப்படுகின்றது. எனவே இந்த இரண்டு வருடகாலப்பகுதியிலாவது இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்படவேண்டும். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படவேண்டும். காணிகள் விடுவிக்கப்படவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படவேண்டும். இழப்பீடுகள் வழங்கப்படுவது அவசியம். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் அரசாங்கம் பாரிய பொறுப்புக்களை கொண்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது. http://www.virakesari.lk/article/52369

புதிய ஜெனிவா பிரே­ரணை ஊடாக மக்­க­ளுக்கு விமோ­சனம் கிடைக்­குமா?

1 day 11 hours ago
புதிய ஜெனிவா பிரே­ரணை ஊடாக மக்­க­ளுக்கு விமோ­சனம் கிடைக்­குமா?

ஜெனி­வாவில் அமைந்­துள்ள  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இன்­றைய தினம் இலங்கை தொடர்­பாக பிரித்தானியா, கனடா, ஜேர்மன் உள்­ளிட்ட  ஐந்து நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வி­ருக்­கி­றது. ஏற்­க­னவே இலங்கை  அர­சாங்கம்   தீர்­மானம் எடுத்­துள்­ளதன் பிர­காரம் பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்கும் பட்­சத்தில் இலங்கை தொடர்­பான 40/1 என்ற இந்தப் புதிய பிரே­ரணை வாக்­கெ­டுப்­பின்றி நிறை­வேற்­றப்­படும்.  

ஒரு­வேளை ஏதா­வது  ஒரு உறுப்­பு­நாடு  எதிர்ப்பு தெரி­வித்தால்  பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்­டிய தேவை மனித உரிமை  பேர­வைக்கு ஏற்­படும். அவ்­வாறு எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­டா­விடின்  ஐ.நா. மனி­த உ­ரிமை பேர­வையின் 47 உறுப்பு நாடு­க­ளி­னதும் ஏகோ­பித்த ஆத­ர­வுடன்  இலங்கை தொடர்­பான பிரே­ரணை நிறை­வேற்­றப்­படும். இந்­த­நி­லையில்  இந்தப் புதிய பிரே­ரணை எதனை வலி­யு­றுத்­து­கி­றது. அத­னூ­டாக மக்­க­ளுக்கு கிடைக்­கப்­போகும் நன்மை என்ன? பாதிக்­கப்­பட்ட மக்கள் நம்­பிக்கை வைக்கும் அள­வுக்கு  இந்த பிரே­ர­ணையின் உள்­ள­டக்­கங்கள் காணப்­ப­டு­கின்­ற­னவா  என்­பது தொடர்பில் தற்­போது அனைத்துத் தரப்­பி­னரும் ஆர்­வ­மாக இருக்­கின்­றனர். உண்­மையில்  2015 ஆம் ஆண்டு  இலங்கை அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட  30/1 பிரே­ர­ணையே  இம்­முறை மீண்டும் இரண்டு வரு­ட­கால  நீடிப்­புக்கு உட்­ப­டு­கின்­றது.  

இந்தப் பிரே­ரணை ஏற்­க­னவே 2017ஆம் ஆண்டு 34/1 என்ற   பெயரில்  2019 ஆம் ஆண்­டு­வ­ரை­யான காலப்­ப­கு­தி­வரை நீடிப்­புக்­குட்­பட்­டது. தற்­போது  மீண்டும்  இரண்­டு வ­ரு­ட­கால நீடிப்­புக்கு உட்­ப­டு­கின்­றது. இக்­கா­லப்­ப­கு­தியில் அர­சாங்கம்   எவ்­வாறு 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­தப்­போ­கின்­றது என்­பதை சர்­வ­தேசம் கண்­காணிப்பு செய்­வ­தற்­கான ஆணை  இந்தப் பிரே­ரணை நிறை­வே­று­வதன் மூலம் கிடைக்­கின்­றது. 

புதிய பிரே­ர­ணையில்  நான்கு செயற்­பாட்டுப் பந்­திகள்  உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.  அதா­வது   இலங்­கையும் ஐக்­கிய நாடுகள் மனித  உரிமை பேர­வையும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் ஒத்­து­ழைப்­புடன் இணைந்து செயற்­ப­ட­வேண்­டு­மென்று இந்த செயற்­பாட்டு பந்­திகள் வலி­யு­றுத்­து­கின்­றன. அதே­போன்று உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், இழப்­பீடு வழங்­குதல் உள்­ளிட்ட செயற்­பா­டு­களில்  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையும் இலங்கை அர­சாங்­கமும் இணைந்து செயற்­ப­ட­வேண்­டு­மென இந்த செயற்­பாட்டு பந்­திகள் மேலும் வலி­யு­றுத்­து­கின்­றன. 

அதே­போன்று  எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு பிரே­ரணை அமு­லாக்கம் தொடர்­பான இடைக்­கால அறிக்­கையை  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் வெளி­யிட வேண்­டு­மென்றும் 2021 ஆம் ஆண்டு அது தொடர்­பான முழு­மை­யான அறிக்­கையை வெளி­யி­ட­வேண்­டு­மென்றும்  இந்த 40/1 என்ற புதிய  பிரே­ர­ணையின் செயற்­பாட்டு பந்­திகள்  சுட்­டிக்­காட்­டு­கின்­றன. 

அது­மட்­டு­மன்றி  இலங்கை  இந்தப் பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது தொடர்பில்   ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் தொடர்ந்து கண்­கா­ணிக்­க­வேண்டும் என்றும்   இந்த புதிய பிரே­ரணை   நான்கு செயற்­பாட்டு  பந்­திகள் ஊடாக வலி­யு­றுத்­து­கின்­றது. அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட  30/1 என்ற பிரே­ரணை   முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டா­ததன் கார­ண­மா­கவே இந்த புதிய பிரே­ர­ணையை   கொண்­டு­வ­ர­வேண்­டிய தேவை சர்­வ­தேச நாடு­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இது தொடர்பில்  தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் முரண்­பா­டான கருத்­துக்கள் நில­வு­கின்­றன.  தமிழ் பேசும் மக்­களின் பிர­தி­நி­தி­களைப் பொறுத்­த­வ­ரையில் ஒரு­த­ரப்­பினர் இவ்­வாறு இரண்­டு­ வ­ரு­ட­காலம் நீடிக்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் இல்லை என்றும் நேர­டி­யா­கவே இந்த விவ­கா­ரத்தை   ஐக்­கி­ய நா­டுகள் பாது­காப்பு சபைக்கு கொண்­டு­செல்ல வேண்டும் என்றும் கூறி­வ­ரு­கின்­றனர். அதே­போன்று கால நீடிப்பு வழங்­கப்­ப­டு­வதன்  ஊடா­கவே சர்­வ­தேச மேற்­பார்­வையை  ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முடியும் என்றும்  எனவே  அது முக்­கி­ய­மா­னது என்றும் மற்­று­மொரு தரப்­பினர் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். 

உண்­மையில்  இந்த   சர்­வ­தேச மேற்­பார்வை என்­பது  இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும்.  காரணம் பாதிக்­கப்­பட்ட மக்கள் இது­வரை நீதியைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை.  யுத்தம் முடி­வ­டைந்து 10 வரு­டங்கள் கடந்தும் இன்னும் இந்த மக்கள்  நீதி கிடைக்­காமல் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.  எனவே  சர்­வ­தேச மேற்­பார்­வையை ஏற்­ப­டுத்தி மக்­க­ளுக்­கான நீதியைப் பெற்­றுக்­கொள்ள முயற்­சிப்­பதே தற்­போ­தைய நிலை­மையில் மிக முக்­கி­ய­மான விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. இலங்கை விவ­கா­ரத்தை  ஐக்­கி­ய­நா­டுகள் பாது­காப்பு சபைக்கு கொண்­டு­செல்ல வேண்­டு­மென ஒரு­த­ரப்­பினர் கூறு­கின்­றனர். ஆனால் இந்த விவ­காரம்  ஐக்­கி­ய­ நா­டுகள் பாது­காப்பு சபைக்கு கொண்டு செல்லும் பட்­சத்தில் அங்கு நிரந்­தர உறுப்­பு­ரி­மை­யையும் வீட்டோ அதி­கா­ரத்­தையும் கொண்­டுள்ள சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள்  இலங்கை தொடர்­பான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வி­டாமல்  தடுத்­து­விடும்.

எனவே  சர்­வ­தேச மேற்­பார்­வையின் ஊடாக  முடி­யு­மா­ன­வரை  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியைப் பெற்­றுக்­கொள்­வதே தற்­போ­தைய சூழலில் பொருத்­த­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.  பாதிக்­கப்­பட்ட மக்கள் உண்­மையை அறிந்­து­கொள்­வ­தற்­கான உரி­மையைக் கொண்­டுள்­ளனர். அதனை யாரும் மறுக்க முடி­யாது. ஆனால் அதற்­கான சந்­தர்ப்­பங்கள் யதார்த்த ரீதியில் எவ்­வாறு  காணப்­ப­டு­கின்­றது என்­பது குறித்து சிந்­திக்­க­வேண்டும்.  இந்த கால நீடிப்பு குறித்து கருத்து வெளி­யிட்­டுள்ள   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்    எம்.ஏ. சுமந்­திரன் ஜெனி­வாவில் தற்­போது பிரித்தானியா உள்­ளிட்ட நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள  பிரே­ர­ணையை திருத்­து­வ­தற்கு  முற்­பட்டால் அது இலங்­கைக்கு சாத­க­மாக போய்­விடும். அதனை பயன்­ப­டுத்தி இலங்­கையும் திருத்­தங்­களை செய்­து­விடும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

அதே­போன்று 34/1 தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கா­விட்டால் இலங்கை தொடர்­பாக கேள்வி கேட்­ப­தற்­கான அதி­காரம்  மனி­த­ உரிமை பேர­வைக்கு கிடைத்­தி­ருக்­காது. அத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­மை­யா­லேயே தற்­போது இலங்கை தொடர்­பாக கேள்வி கேட்­ப­தற்கும் அது குறித்து அறிக்­கைகள் சமர்ப்­பிப்­ப­தற்­கு­மான தேவை ஏற்­ப­டு­கின்­றது. ஏற்­க­னவே மூன்­றரை வரு­டங்­க­ளுக்குள் சில­வற்­றை­யா­வது செய்­வ­தற்கு   காரணம் இந்த மேற்­பார்­வை­யே­யாகும். இந்த மேற்­பார்வை நீடித்தால் தான் இன்­னமும் செய்­யாமல் இருக்க கூடிய பல விட­யங்­களில் சில விட­யங்­க­ளை­யா­வது செய்ய வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­படும் என்றும்   கூட்­ட­மைப்பின் பேச்­சாளர்  சுமந்­திரன் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 

இவ்­வாறு  பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­ப­டு­வதன் ஊடாக நிச்­ச­ய­மாக முன்­னேற்­றங்கள் நிக­ழத்தான் வேண்டும். காணா­மல் போ­னோரின் அலு­வ­லகம் சம்­பந்­த­மான செயற்­பா­டு­களில் முன்­னேற்றம் இருக்கும் என்று நம்­பு­கின்றோம்.  உண்­மையை வெளிப்­ப­டுத்­து­கின்ற ஆணைக்­குழு நிய­மிப்­ப­தற்­கான சட்­ட­வ­ரைபு ஒன்றை தயா­ரித்­தி­ருப்­ப­தாக சொல்­கி­றார்கள். அது நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும். பத்து வரு­டங்­க­ளாக நாம் சொல்­லி­வ­ரு­கின்ற ஒரு கூற்று உண்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும் என்­ப­தாகும். . அந்த உண்­மையின் அ­டிப்­ப­டை­யி­லேயே நீதி செய்­யப்­ப­ட­வேண்டும் எனவும் சுமந்­திரன் எம்.பி. குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 

அந்த வகையில் பாதிக்­கப்­பட்ட மக்கள்   தமக்­கான நீதியைப் பெற்­றுக்­கொள்ளும் செயற்­பாட்டில் சர்­வ­தேச மேற்­பார்வை என்­பது எந்­த­ள­வு­தூரம் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது என்­பதை  சுமந்­திரன் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.  இந்த விட­யத்தில் அர­சாங்­கமும்   தமது பிர­ஜை­க­ளுக்­கான நீதியை  நிலை­நாட்டும் செயற்­பாட்டில் அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்­டு­வ­தற்கு  முன்­வ­ர­வேண்டும். சர்­வ­தேசம் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­து­கின்­றது. அதேபோன்று  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட தனது பிரஜைகளுக்கான  நீதியை  பெற்றுக்கொடுக்கவேண்டியது  இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

தற்போது இரண்டாவது  தடவையாக 2015 ஆம் ஆண்டு பிரேரணை  நீடிக்கப்படுகின்றது. எனவே இந்த இரண்டு வருடகாலப்பகுதியிலாவது இந்த மக்களின் பிரச்சினைக்கு  தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்படவேண்டும்.  காணாமல் போனவர்களுக்கு  என்ன நடந்தது என்ற  உண்மை கண்டறியப்படவேண்டும்.  காணிகள் விடுவிக்கப்படவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படவேண்டும். இழப்பீடுகள் வழங்கப்படுவது அவசியம். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில்   அரசாங்கம்  பாரிய பொறுப்புக்களை  கொண்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.  

 

http://www.virakesari.lk/article/52369

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும்

1 day 11 hours ago
இணைத்தவற்றை வாசித்தார்களா என்று சந்தேகம் இருந்தது! இல்லையென்று நிரூபித்தமைக்கு நன்றி பகலவன். Machine translation இல் தமிழில் செய்ய நிறைய இருக்கின்றபோதிலும் பல திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன என்பது நம்பிக்கையை தருகின்றது. நிரலாக்கம் ( ப்ரோக்கிராமிங்) இல் ஆர்வம் உள்ளவர்கள் உதவலாம்.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 130 ஆவது இடம்!

1 day 12 hours ago
இல்லை, நான் அப்படியான அர்த்தத்தில் சொல்லவில்லை. சிறிலங்கா அப்படித்தான் மக்களை வைத்திருக்கிறது என்று சொல்கிறேன். அவர்கள கவலைப்படவேண்டும் என்று நான் ஏன் ஆசைப்படுகிறேன்?

லண்டன் கோவில்களில் நகை திருட்டு

1 day 13 hours ago
அவர் அந்த நகையை ஆளை வைச்சு எடுத்து என்ன செய்வார்?...உங்களை பற்றி தெரியாமல் நீங்கள் ஒரு கள்ளி என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்

20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி

1 day 13 hours ago
New York City imposes fines for violations of various City laws and regulations, including regulations related to parking, building codes, consumer affairs, and public health and safety. In FY 2016, the City collected $993 million in fines, an increase of 3.7 percent over FY 2015. Revenue from fines increased 35 percent in the last decade and 16 percent over the last four years. As Figure 1 shows, from FY 2012 to FY 2016, fines revenue increased $138 million from $855 million in FY 2012 to $993 million in FY 2016.[1] By far the largest category of fines continues to be parking violations, raising $565 million in FY 2015 and $545 million in FY 2016, or 59 percent and 55 percent of total revenues from fines in FYs 2015 and 2016 respectively. “Quality of Life” violations such as littering and noise pollution, sidewalk violations and public health and safety violations generated another $184 million. The next largest source of fine revenue is camera fines. Cameras are placed throughout the City to photograph vehicles running through red lights, speeding through school zones or driving, parking or standing in bus lanes. Red light, bus lane and speed camera fines combined, generated $96 million in FY 2016. Building permit penalties and restaurant violations generated $60 million and $27 million respectively. https://comptroller.nyc.gov/reports/new-york-city-fine-revenues-update/