Aggregator

உறவு தொடரும் !...மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் மைத்திரி

2 months 4 weeks ago

இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு  ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி  இடம்பெற்று வருகின்றது. இதில் பா.ஜ.க. 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில் தேர்தலில் தற்போது முன்னிலையில் உள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  

இது தொடார்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவுடனான சுமூக உறவை மேலும் தொடர விரும்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

f.jpg

http://www.virakesari.lk/article/56583

கொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்

2 months 4 weeks ago
அப்ப அமெரிக்கா, சீனா, மற்றும் பல நாடுகள் பயங்கரவாதிகள் இல்லையோ? அவர்களும் சேர்ந்து தான் புலிகள் உட்பட தமிழர்களை அழித்தார்கள்.

தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்

2 months 4 weeks ago
எல்லோரும் வாள் எடுக்க வெளிக்கிட்டால் ... உங்கள் சமூகம் மட்டுமல்ல.... மசூதிகளும் கூட மிஞ்சாது என்பது தான் இப்போதுள்ள நிலைமை..,!

யாழ்ப்பாண-பேச்சு-வழக்கு

2 months 4 weeks ago
அலவாங்கு - போர்த்துகீசு அலுமாரி -போர்த்துகீசு கக்கூசு -போர்த்துகீசு அப்புக்காக்து - ஆங்கிலம் Advocate பிரக்கராசி - ஆங்கிலம் Proctor வீறு கம்மார்ஸு - commerce - கையோட கம்மார்சு - உடனடிப் பலன் -ஆங்கிலம் ஆடித்தன் விறுசு விசுக்கோத்து - biscuit - ஆங்கிலம். தமிழ இலக்கணம் இவற்றை திசை சொற்கள் என வகுக்கிறது.

மே 18 நினைவுகூர்தல்: அரசியல்படுத்தலிலிருந்து மக்கள் மயப்படுத்தல்

2 months 4 weeks ago
மே 18 நினைவுகூர்தல்: அரசியல்படுத்தலிலிருந்து மக்கள் மயப்படுத்தல் North East Coordinating Commitee on May 22, 2019 இறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள். சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள். ஷெல் தாக்குதல்களிலிருந்தும் விமானக் குண்டு வீச்சுக்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தினமும் ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அவர்கள் அனைவரும் வெட்டைவெளிப் பிரதேசங்களுக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கு இரவின் இருள் மாத்திரமே அவர்களுக்குக் கூரையாக அமைந்தது. அவர்கள் இருளை அதிகம் நேசிக்க வேண்டியவர்களானார்கள். அது அவர்களை சுட்டெரித்த சூரியனிலிருந்து பாதுகாத்தது. தாய்மார்கள் பிள்ளைகளை மர நிழலிலும் பழுதடைந்து நகரமுடியாமல் கைவிடப்பட்ட வாகனங்களின் நிழலிலும் கிடத்தி வெயிலிலிருந்து பாதுகாத்தார்கள். யுத்தம் முனைப்படைய முனைப்படைய துன்பங்களும் அதிகரித்தன. அவர்கள் கஞ்சியை மட்டுமே பருகி உயிரைப் பிடித்துக்கொண்டார்கள். படிப்படியாக கஞ்சியின் கட்டித்தன்மை குறைந்து நீர்த்தாக உப்பில்லாக் கஞ்சியாக வழங்கப்பட்டது. கஞ்சி வழங்கும் அறிவித்தல் கிடைத்தவுடன் சிறுவர்கள் தங்களது குடும்பங்களுக்காக அதைப் பெறுவதற்குப் பாத்திரங்களுடன் ஓடுவார்கள். இவ்வாறு கஞ்சியைச் சேகரிக்கச் சென்றிருந்த பல சிறுவர்கள் விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் ஷெல் தாக்குதல்களுக்கும் அகப்பட்டார்கள். போரின் இறுதிப்பகுதியில் இறந்த தம் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை புதைக்கக்கூட முடியாத நிலையில் இறந்த உடலங்களை வீதியிலேயே விட்டுவிட்டு கனத்த மனதுடன் நகர்ந்து போனார்கள். தாய்மார்களின் கைகளிலிருந்து பிள்ளைகள் விடுபட்டுப்போனார்கள். தங்களுடைய உயிரைக் காக்க இறந்த உடலங்களின் மேலாகவே அவர்கள் ஓடவேண்டியிருந்தது. இவ்வாறு மே 18 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்தது. போரில் கொல்லப்பட்ட மக்களையும் அவர்கள் பட்ட துன்பங்களையும் நினைவு கூர்தல் என்பது மக்களினுடைய உரிமை. ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது அரசியல் ஆதிக்கம் உடையவர்களால் வடிவமைக்கப்பட்டு அவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் ஒழுங்குபடுத்தப்படுவதாகவே இருந்தது. யுத்தத்தின் வடுக்களை சுமந்தவர்களுக்கும் தமிழ் சமூகத்தின் சாதாரண மக்களுக்கும் நினைவு கூர்தலில் சம அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறு அரசியல் ஆதிக்கத்தின் பிடியிலிருந்து நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்தும் பொருட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது யுத்த வடுக்களை சுமந்த மக்களையும் மற்றும் பொதுமக்களையும் 10ஆம் ஆண்டு நினைவு கூர்தலை கூட்டாக மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுடைய சொந்த இடங்களில் நினைவு கூர்தலை ஏற்பாடும் செய்திருந்தது. நிலையான அடையாளங்களை உருவாக்கும் வகையில் “மரங்களை நட்டு எங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூர்வோம்” என்றும் மக்களுடைய இழப்புக்களையும் துயரங்களையும் வலிகளையும் கூட்டாக பகிர்ந்துகொள்ளும் வகையில் “உப்பில்லா கஞ்சி சமைத்து உண்போம்” எனவும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வடக்கு கிழக்கு முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு மக்களிடம் கேட்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக, பாடசாலைகள், வைத்தியசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், பொது இடங்கள் உள்ளடங்கலாக வடக்கு கிழக்கின் பின் தங்கிய கிராமங்கள் பலவற்றில் 5000 தென்னங்கன்றுகள், 125 நிழல் தரு மரங்கள், பனை விதைகள் என்பன இறந்த அன்புக்குரியவர்களின் நினைவாக நாட்டப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினரான போரில் தம் அன்பிற்குரியவர்களை இழந்த குடும்பங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், போரினால் அங்கவீனமுற்றோர், யுத்தம் காரணமாக விதவைகளாக்கப்பட்டவர்கள், பெற்றாரை இழந்த குழந்தைகள் அடங்கலாக சமூகமட்ட அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள், மீன்பிடி மற்றும் விவசாய அமைப்புக்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் முனைப்புடன் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர். விசேட நினைவு கூர்தல் மற்றும் பூசை வழிபாடுகள் என்பன தேவாலயங்களிலும் இந்து ஆலயங்களிலும் போர்ப் பாதிப்புக்குள்ளான மக்களால் ஒழுங்குபடுத்தப்பட்டது. கிராமத்தவர்களும் அயலவர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். மன்னார் மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பகுதியில் ஈச்சலவக்கை எனும் கிராமத்தில் போரில் தனது நான்கு பிள்ளைகளை இழந்த ஒரு தாய் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் அவருடைய பிரதேசத்தில் யுத்தத்தில் இறந்து போன 26 பேர் சார்பாகவும் தென்னங்கன்றை தன்னுடைய பிள்ளையாகவே கருதி நாட்டினார். அவர் நடப்பட்ட மரத்தை மரியாதை உணர்வோடு பூக்களால் பூசித்தார். இக் கூட்டு நினைவு கூர்தலில் பல்வேறுபட்ட தலைமுறையினரின் பங்குபற்றல் அவதானிக்கப்பட்டது. வயதான தாய்மார்கள் கஞ்சியை தமது வீடுகளில் காய்ச்சி தமது அயலவர்களுடன் அருந்தினர். இளைஞர்களோ லொறிகளிலும் லாண்மாஸ்டர்களிலும் எடுத்துச் சென்று வீதிகளிலும் பொது இடங்களிலும் பரிமாறினார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு போர் நடந்த நேரம் 9 வயதாக இருந்த ஒருவர் தன்னுடைய அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார், “நான் கஞ்சி குடுபடுற நேரம் வரிசையில் நிண்டு போறனான். பல நேரங்களில் நான் கஞ்சி கொடுப்பவரை அண்மிக்கிற பொழுது கஞ்சி முடிஞ்சு போடும். வெறும் யொக்கோடை நான் திரும்பிப் போறனான்.” யாழ்ப்பாணத்தில் நடுத்தர வயதுடைய ஒருவர், “கஞ்சியை என்னாலை மறக்கவே முடியாது. கடைசி நேரம் கஞ்சி குடிச்சிட்டு வந்திருக்கேக்கை தான் என்னுடைய அக்காவும் அப்பாவும் ஷெல் விழுந்து செத்துப்போனவை” என்று கூறியிருந்தார். கஞ்சியைக் குடிக்கும் பொழுது மக்கள் தங்கள் அனுபவங்களை வீதியில் நின்ற ஏனையவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். சிலர் சொப்பின் பைகளில் தங்களுடைய குடும்பத்தவர்கள் அயலவர்களுக்காக எடுத்துச் சென்றார்கள். இத்தகைய மக்கள் சார்ந்த நினைவு கூர்தல்கள் மக்களை நினைவு கூர்தல்களில் உரிமைகொள்ளச் செய்வதற்கும் அவர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதற்கும் மக்களைப் பரவலாக இந்நிகழ்வுகளில் ஈடுபடச் செய்வதற்கும் உதவியதை அவதானிக்க முடிந்தது. பருமட்டான கணிப்பீட்டின்படி, கிட்டத்தட்ட 25,000 மக்கள் வடக்கு கிழக்கில் மக்கள் மயப்படுத்தப்பட்ட இந்த நினைவு கூர்தலை மேற்கொண்டிருந்தார்கள். இரண்டு இடங்களில் நினைவுக் கஞ்சி என்று தெரிந்திருந்தும் வழங்கப்பட்ட கஞ்சியை இராணுவத்தினர் அருந்தியிருந்தனர். இராணுவத்தினரின் இம் மனநிலையை மக்கள் வரவேற்றிருந்தனர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு https://maatram.org/?p=7852

இறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள். சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள். ஷெல் தாக்குதல்களிலிருந்தும் விமானக் குண்டு வீச்சுக்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தினமும் ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அவர்கள் அனைவரும் வெட்டைவெளிப் பிரதேசங்களுக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கு இரவின் இருள் மாத்திரமே அவர்களுக்குக் கூரையாக அமைந்தது. அவர்கள் இருளை அதிகம் நேசிக்க வேண்டியவர்களானார்கள். அது அவர்களை சுட்டெரித்த சூரியனிலிருந்து பாதுகாத்தது. தாய்மார்கள் பிள்ளைகளை மர நிழலிலும் பழுதடைந்து நகரமுடியாமல் கைவிடப்பட்ட வாகனங்களின் நிழலிலும் கிடத்தி வெயிலிலிருந்து பாதுகாத்தார்கள். யுத்தம் முனைப்படைய முனைப்படைய துன்பங்களும் அதிகரித்தன. அவர்கள் கஞ்சியை மட்டுமே பருகி உயிரைப் பிடித்துக்கொண்டார்கள். படிப்படியாக கஞ்சியின் கட்டித்தன்மை குறைந்து நீர்த்தாக உப்பில்லாக் கஞ்சியாக வழங்கப்பட்டது. கஞ்சி வழங்கும் அறிவித்தல் கிடைத்தவுடன் சிறுவர்கள் தங்களது குடும்பங்களுக்காக அதைப் பெறுவதற்குப் பாத்திரங்களுடன் ஓடுவார்கள். இவ்வாறு கஞ்சியைச் சேகரிக்கச் சென்றிருந்த பல சிறுவர்கள் விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் ஷெல் தாக்குதல்களுக்கும் அகப்பட்டார்கள்.

போரின் இறுதிப்பகுதியில் இறந்த தம் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை புதைக்கக்கூட முடியாத நிலையில் இறந்த உடலங்களை வீதியிலேயே விட்டுவிட்டு கனத்த மனதுடன் நகர்ந்து போனார்கள். தாய்மார்களின் கைகளிலிருந்து பிள்ளைகள் விடுபட்டுப்போனார்கள். தங்களுடைய உயிரைக் காக்க இறந்த உடலங்களின் மேலாகவே அவர்கள் ஓடவேண்டியிருந்தது. இவ்வாறு மே 18 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்தது.

போரில் கொல்லப்பட்ட மக்களையும் அவர்கள் பட்ட துன்பங்களையும் நினைவு கூர்தல் என்பது மக்களினுடைய உரிமை. ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது அரசியல் ஆதிக்கம் உடையவர்களால் வடிவமைக்கப்பட்டு அவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் ஒழுங்குபடுத்தப்படுவதாகவே இருந்தது. யுத்தத்தின் வடுக்களை சுமந்தவர்களுக்கும் தமிழ் சமூகத்தின் சாதாரண மக்களுக்கும் நினைவு கூர்தலில் சம அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறு அரசியல் ஆதிக்கத்தின் பிடியிலிருந்து நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்தும் பொருட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது யுத்த வடுக்களை சுமந்த மக்களையும் மற்றும் பொதுமக்களையும் 10ஆம் ஆண்டு நினைவு கூர்தலை கூட்டாக மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுடைய சொந்த இடங்களில் நினைவு கூர்தலை ஏற்பாடும் செய்திருந்தது. நிலையான அடையாளங்களை உருவாக்கும் வகையில் “மரங்களை நட்டு எங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூர்வோம்” என்றும் மக்களுடைய இழப்புக்களையும் துயரங்களையும் வலிகளையும் கூட்டாக பகிர்ந்துகொள்ளும் வகையில் “உப்பில்லா கஞ்சி சமைத்து உண்போம்” எனவும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வடக்கு கிழக்கு முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு மக்களிடம் கேட்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, பாடசாலைகள், வைத்தியசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், பொது இடங்கள் உள்ளடங்கலாக வடக்கு கிழக்கின் பின் தங்கிய கிராமங்கள் பலவற்றில் 5000 தென்னங்கன்றுகள், 125 நிழல் தரு மரங்கள், பனை விதைகள் என்பன  இறந்த அன்புக்குரியவர்களின் நினைவாக நாட்டப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினரான போரில் தம் அன்பிற்குரியவர்களை இழந்த குடும்பங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், போரினால் அங்கவீனமுற்றோர், யுத்தம் காரணமாக விதவைகளாக்கப்பட்டவர்கள், பெற்றாரை இழந்த குழந்தைகள் அடங்கலாக  சமூகமட்ட அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள், மீன்பிடி மற்றும் விவசாய அமைப்புக்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் முனைப்புடன் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

20190517_132351
??
children plant

விசேட நினைவு கூர்தல் மற்றும் பூசை வழிபாடுகள் என்பன தேவாலயங்களிலும் இந்து ஆலயங்களிலும் போர்ப் பாதிப்புக்குள்ளான மக்களால் ஒழுங்குபடுத்தப்பட்டது. கிராமத்தவர்களும் அயலவர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். மன்னார் மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பகுதியில் ஈச்சலவக்கை எனும் கிராமத்தில் போரில் தனது நான்கு பிள்ளைகளை இழந்த ஒரு தாய் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் அவருடைய பிரதேசத்தில் யுத்தத்தில் இறந்து போன 26 பேர் சார்பாகவும் தென்னங்கன்றை தன்னுடைய பிள்ளையாகவே கருதி நாட்டினார். அவர் நடப்பட்ட மரத்தை மரியாதை உணர்வோடு பூக்களால் பூசித்தார்.

இக் கூட்டு நினைவு கூர்தலில் பல்வேறுபட்ட தலைமுறையினரின் பங்குபற்றல் அவதானிக்கப்பட்டது. வயதான தாய்மார்கள் கஞ்சியை தமது வீடுகளில் காய்ச்சி தமது அயலவர்களுடன் அருந்தினர். இளைஞர்களோ லொறிகளிலும் லாண்மாஸ்டர்களிலும் எடுத்துச் சென்று வீதிகளிலும் பொது இடங்களிலும் பரிமாறினார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு போர் நடந்த நேரம் 9 வயதாக இருந்த ஒருவர் தன்னுடைய  அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார், “நான் கஞ்சி குடுபடுற நேரம் வரிசையில் நிண்டு போறனான். பல நேரங்களில் நான் கஞ்சி கொடுப்பவரை அண்மிக்கிற பொழுது கஞ்சி முடிஞ்சு போடும். வெறும் யொக்கோடை நான் திரும்பிப் போறனான்.” யாழ்ப்பாணத்தில் நடுத்தர வயதுடைய ஒருவர், “கஞ்சியை என்னாலை மறக்கவே முடியாது. கடைசி நேரம் கஞ்சி குடிச்சிட்டு வந்திருக்கேக்கை தான் என்னுடைய அக்காவும் அப்பாவும் ஷெல் விழுந்து செத்துப்போனவை” என்று கூறியிருந்தார். கஞ்சியைக் குடிக்கும் பொழுது மக்கள் தங்கள் அனுபவங்களை வீதியில் நின்ற ஏனையவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். சிலர் சொப்பின் பைகளில் தங்களுடைய குடும்பத்தவர்கள் அயலவர்களுக்காக எடுத்துச் சென்றார்கள்.

20190518_105822
20190518_112731
20190518_112821
IMG_6483
kanchi University

இத்தகைய மக்கள் சார்ந்த நினைவு கூர்தல்கள் மக்களை நினைவு கூர்தல்களில் உரிமைகொள்ளச் செய்வதற்கும் அவர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதற்கும் மக்களைப் பரவலாக இந்நிகழ்வுகளில் ஈடுபடச் செய்வதற்கும் உதவியதை அவதானிக்க முடிந்தது. பருமட்டான கணிப்பீட்டின்படி, கிட்டத்தட்ட 25,000 மக்கள் வடக்கு கிழக்கில் மக்கள் மயப்படுத்தப்பட்ட இந்த நினைவு கூர்தலை மேற்கொண்டிருந்தார்கள்.

இரண்டு இடங்களில் நினைவுக் கஞ்சி என்று தெரிந்திருந்தும் வழங்கப்பட்ட கஞ்சியை இராணுவத்தினர் அருந்தியிருந்தனர். இராணுவத்தினரின் இம் மனநிலையை மக்கள் வரவேற்றிருந்தனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு

https://maatram.org/?p=7852

வஞ்சம் - முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்க வாய்ப்பான ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள்

2 months 4 weeks ago
வஞ்சம் - முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்க வாய்ப்பான ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:53 Comments - 0 முஸ்லிம் சமூகம் மீது, வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கு, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள், நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டன. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாகச் சில கூட்டம் சித்திரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதல்களைச் சாட்டாக வைத்து, முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில், காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்கள், மிகவும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடன் இருக்கத்தக்கதாகவே, இவ்வளவு கூத்துகளும் அரங்கேறியுள்ளன. ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் நடைபெற்று, இரண்டு வாரங்கள் கடந்த பிறகு, சிங்கள மக்கள் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் மீது, மிகவும் திட்டமிட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நீர்கொழும்பு, மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களிலும் குருணாகல், புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில், உயிர், உடைமை இழப்புகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளன. அரசியல்வாதிகள், பாதுகாப்புத் தரப்பினர் இந்தத் தாக்குதல்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாகக் குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் கும்பல் நடத்திய ஈஸ்டர் தினத் தாக்குதலுக்கு, முஸ்லிம் சமூகத்தில் எந்த வகையான ஆதரவும் இல்லை என்பதை, முஸ்லிம்களின் எதிராளிகள் கூட அறிவார்கள். சஹ்ரானின் சகோதரர்கள், தந்தை, தாய் உள்ளிட்ட 15 பேர், இடுப்பில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு, சாய்ந்தமருதில் மறைந்திருந்த போது, அவர்களைப் பற்றிய தகவல்களைப் பாதுகாப்புத் தரப்பினருக்கு, அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம் மக்கள்தான் வழங்கினார்கள். படையினரிடம் தங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் எனக் கோரி, சாய்ந்தமருது முஸ்லிம் மக்கள் முன்பாக, அந்தப் பயங்கரவாதிகள் கட்டுக் கட்டாகப் பணத்தை அள்ளி வீசிய போதும், அதனை மக்கள் கணக்கில் எடுக்கவேயில்லை. இவ்வாறு, சஹ்ரான் கும்பலை முஸ்லிம் மக்கள் புறக்கணித்தமை காரணமாகத்தான், இத்தனை சீக்கிரத்தில் அந்தக் கும்பலுடன் தொடர்புபட்ட துரும்புகளைக் கூட, படையினரால் பிடிக்க முடிந்தது என்பதுதான் யதார்த்தமாகும். பாதுகாப்புத் தரப்பினரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்படி இருக்கத்தக்கதாக, சஹ்ரான் கும்பலின் கொடூரமான செயலுக்கான ஒட்டு மொத்தப் பழியையும் முஸ்லிம் சமூகத்தின் மீது இறக்கி வைக்கும் செயலானது நியாயமற்றதாகும். ஈஸ்டர் தினத் தாக்குதலைச் சாட்டாக வைத்து, முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் சொத்துகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள், அயோக்கியத்தனமானவை. இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில் அநேகமானோர், கொள்ளையர்கள் என்பதைக் களத்திலிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஈஸ்டர் தின பயங்கரவாதச் செயல்களால், கோபமடைந்து, உணர்ச்சிவசப்பட்ட எவரும், இந்தத் தாக்குதல்களில் ஈடுபடவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையொன்றைக் கட்டவிழ்த்து விடுவதற்கு, நாள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்தான், இந்தக் காடையர்களைக் களத்தில் இறக்கி விட்டுள்ளனர். கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகத் திகன, அம்பாறைத் தாக்குதல்களை நடத்துவதற்கு, இவ்வாறானவர்கள் அப்போது வேறு காரணங்களைத் தேடிப்பிடித்திருந்தார்கள். அம்பாறை நகரில், முஸ்லிம் ஒருவரின் கடையில், விற்கப்பட்ட கொத்து ரொட்டியில், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலந்திருந்ததாகக் கூறித்தான், அங்கு முஸ்லிம்களின் கடைகளையும் பள்ளிவாசலையும் பேரினக் காடையர்கள் அடித்து நொறுக்கினார்கள் என்பது நினைவுகொள்ளத்தக்கது. இதேவேளை, முஸ்லிம்கள் மீது இறுதியாக நடத்தப்பட்ட தாக்குதல்களின் போதும், அவற்றுக்கு முன்னரும் பின்னரும், முக்கிய அரசியல்வாதிகள் பலர், களத்திலும் களத்துக்கு வெளியிலும் நின்றிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. அவ்வாறான அரசியல்வாதிகளிடம், “ஏன் அங்கு சென்றீர்கள்” என்று கேட்டால், காதில் பூச்சுற்றும் கதைகளை, அவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். குருணாகல் மாவட்டத்தில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள், ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான தயாசிறி ஜயசேகர, அங்கு சென்று அவர்களைத் தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றதையும் அவர்களைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தார் என்பதையும் ஊடகங்கள் பகிரங்கப்படுத்தி இருந்தன. இந்த நிலையில், தான், அவ்வாறு நடந்திருக்காது விட்டால், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவானவர்கள் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என்றும், அதைத் தவிர்ப்பதற்காகவே, தான் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். அதாவது, வன்முறையாளர்களுக்கு எதிராக உச்சப் பலத்தைப் பிரயோகிக்குமாறு பாதுகாப்புத் தரப்புக்கு அரசாங்கம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரு பொலிஸ் நிலையத்தையே தனியாளாகச் சென்று காப்பாற்றியதாக தயாசிறி கூறியிருக்கின்றார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாசிறியை அழைத்து வாக்கு மூலம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையில்தான், நடந்து முடிந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. முஸ்லிம் மக்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சொத்துகளுக்கு அழிவை ஏற்படுத்திய காடையர்கள், அங்கு கொள்ளைகளிலும் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாரும் படையினரும் பார்த்திருக்கத் தக்கதாகவே, இந்த அடாவடிகள் நடந்திருக்கின்றன என்பதை, அங்கு பதிவான ‘சிசிரிவி’ வீடியோ காட்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன. அதுமட்டுமன்றி, வன்முறைகளைப் புரிந்த காடையர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். தாக்குதல் நடந்த பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களின் வீடியோக்கள் பதிவாகும் ‘ஹார்ட் டிஸ்க்’ இனை, சீருடையில் வந்த படையினர், எடுத்துச் சென்றதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குருணாகல் மாவட்டத்துக்குச் சென்றிருந்த மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம், இவற்றை மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படி, வேலியே பயிரை மேய்ந்ததாகக் கூறப்படும் முறைப்பாடுகள் ஏராளமுள்ளன. இந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, கொட்டாரமுல்ல பகுதியில் பௌசுல் அமீர்தீன் என்பவர் காடையர்களால் கொல்லப்பட்டார். தச்சுத் தொழிலாளியான அமீர்தீன் நான்கு பிள்ளைகளின் தந்தை. அவரின் வீட்டையும் வாகனங்களையும் காடையர்கள் நாசம் செய்துவிட்டுப் போயிருந்தனர். வாளால் வெட்டப்பட்டு அமீர்தீன் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இரண்டு நாள்கள் நடந்த இந்த வன்முறைகளில், 30 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. அநேகமான பள்ளிவாசல்களுக்குள் இருந்த குர்ஆன் பிரதிகள் தீயிடப்பட்டிருந்தன. யுத்தம் நிறைவடைந்த பின்னர், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்கள் நாட்டில் வெகுவாக இடம்பெற்று வந்தமையை நாம் அறிவோம். ஞானசார தேரர் போன்ற பௌத்த மதகுருமார்களே இந்த வெறுப்புப் பிரசாரங்களைத் தலைமையேற்று நடத்தி வந்தனர். அந்தப் பிரசாரங்களினூடாக ஏற்றப்பட்ட ‘வெறி’ எத்தகையது என்பதை, பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களை வைத்துப் புரிந்து கொள்ள முடிந்தது. இத்தனைக்கு மத்தியில், நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த விவகாரம் தொடர்பில் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானதாகும். குறிப்பாக, நாடு பற்றியெரிந்த சமயத்தில் சீனா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடந்த வன்முறை தொடர்பில் ஒரு கண்டனத்தைக் கூட அங்கிருந்து வெளியிடவில்லை என்பது, முஸ்லிம்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. தன்னிடமிருந்த பாதுகாப்பு அமைச்சை, ஐக்கிய தேசியக் கட்சி சார்பான ருவன் விஜேவர்த்தனவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றதால், நாட்டில் நடந்த வன்முறைகள் தொடர்பில், தான் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று, ஜனாதிபதி நினைத்திருந்தாரோ தெரியவில்லை. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெறும் அதிகாரச் சண்டைதான், நாட்டின் தற்போதைய நிலைக்குப் பெரிதும் காரணம் என்கிற குற்றச்சாட்டு முக்கியமானது. சஹ்ரான் கும்பல், நாட்டில் தாக்குதலொன்றை நடத்தப் போகிறது என்று புலனாய்வுப் பிரிவினர் மிகத் துல்லியமாகத் தகவல்களை வழங்கியிருந்த போதும், ஆட்சியாளர்கள் அது தொடர்பில் கணக்கில் எடுக்கவில்லை என்பது பாரதூரமானதாகும். அந்தவகையில், சஹ்ரான் கும்பலின் பயங்கரவாதச் செயல்களுக்கும், அதனைச் சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது ஏவி விடப்பட்ட பயங்கரவாதச் செயல்களுக்குமான முழுப் பொறுப்புகளையும் ஆட்சியாளர்களே ஏற்க வேண்டும் என்பதே, பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. இன்னொருபுறம், முஸ்லிம்கள் மீது, ஒவ்வொரு தடவையும் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறும் போது, ஆட்சியிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் மீது கோபப்படுவது போல் காட்டிக் கொள்வதும், பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடுவதுமான ‘காட்சி’கள் முஸ்லிம் மக்களுக்கு அலுத்துப் போய் விட்டன. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பக்கமாக இருக்கத்தக்க நிலையிலேயே, முஸ்லிம் சமூகத்தின் மீது இத்தனை வன்முறைகள் ஏவி விடப்படுகின்றமையானது, முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் வெட்கக் கேடானதாகும். மறுபுறமாக, கடந்த ஒக்டோபரில் இடம்பெற்ற அரசியல் பிரளயத்தின் போது, ரணில் விக்கிரமசிங்கவின் பதவியைக் காப்பாற்றுவதற்காக, நீதிமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு, ஏன் நீதிமன்றம் செல்லவில்லை என்று, சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் இளைஞர்கள் கேட்கின்றார்கள் என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தைச் சரியாக வழிநடத்தும் தலைமைகளாக இருந்திருந்தால், பயங்கரவாதி சஹ்ரானையும் அவன் கூட்டத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க முடியும். ஆனால், இஸ்லாத்துக்குள் ஏற்படுகின்ற இயக்கப் பிளவுகளை வைத்துக் கொண்டு, அதன் மூலம் எப்படித் தமது கல்லாக்களை, வாக்குகளால் நிரப்பிக் கொள்ளலாம் என்று கணக்குப் பார்க்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை, சஹ்ரான் போன்ற நச்சு விதைகளை ஒழிப்பதென்பது கடினமாகும். எனவே, தற்போதைய சூழ்நிலையில் அரசியல் ரீதியாகவும் முஸ்லிம் சமூகம் சுய பரிசோதனையொன்றைச் செய்து கொள்ளுதல் அவசியமாகும். நடந்து முடிந்த அத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னாலும் அரசியல் உள்ளது. அரசியலை முன்னிறுத்தியே அத்தனை விடயங்களும் நடந்து முடிந்திருக்கின்றன என்பதே, ஒளிக்கவும் மறுக்கவும் முடியாத உண்மை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வஞ்சம்/91-233435

முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:53 Comments - 0

image_38fd9f43cf.jpg

முஸ்லிம் சமூகம் மீது, வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கு, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள், நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டன.   

ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாகச் சில கூட்டம் சித்திரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதல்களைச் சாட்டாக வைத்து, முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில், காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன.  

இத்தனைக்கும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்கள், மிகவும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடன் இருக்கத்தக்கதாகவே, இவ்வளவு கூத்துகளும் அரங்கேறியுள்ளன.  

ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் நடைபெற்று, இரண்டு வாரங்கள் கடந்த பிறகு, சிங்கள மக்கள் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் மீது, மிகவும் திட்டமிட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நீர்கொழும்பு, மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களிலும் குருணாகல், புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில், உயிர், உடைமை இழப்புகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளன.   

அரசியல்வாதிகள், பாதுகாப்புத் தரப்பினர் இந்தத் தாக்குதல்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாகக் குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் கும்பல் நடத்திய ஈஸ்டர் தினத் தாக்குதலுக்கு, முஸ்லிம் சமூகத்தில் எந்த வகையான ஆதரவும் இல்லை என்பதை, முஸ்லிம்களின் எதிராளிகள் கூட அறிவார்கள். சஹ்ரானின் சகோதரர்கள், தந்தை, தாய் உள்ளிட்ட 15 பேர், இடுப்பில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு, சாய்ந்தமருதில் மறைந்திருந்த போது, அவர்களைப் பற்றிய தகவல்களைப் பாதுகாப்புத் தரப்பினருக்கு, அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம் மக்கள்தான் வழங்கினார்கள்.   

படையினரிடம் தங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் எனக் கோரி, சாய்ந்தமருது முஸ்லிம் மக்கள் முன்பாக, அந்தப் பயங்கரவாதிகள் கட்டுக் கட்டாகப் பணத்தை அள்ளி வீசிய போதும், அதனை மக்கள் கணக்கில் எடுக்கவேயில்லை.   

இவ்வாறு, சஹ்ரான் கும்பலை முஸ்லிம் மக்கள் புறக்கணித்தமை காரணமாகத்தான், இத்தனை சீக்கிரத்தில் அந்தக் கும்பலுடன் தொடர்புபட்ட துரும்புகளைக் கூட, படையினரால் பிடிக்க முடிந்தது என்பதுதான் யதார்த்தமாகும். பாதுகாப்புத் தரப்பினரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.  

இப்படி இருக்கத்தக்கதாக, சஹ்ரான் கும்பலின் கொடூரமான செயலுக்கான ஒட்டு மொத்தப் பழியையும் முஸ்லிம் சமூகத்தின் மீது இறக்கி வைக்கும் செயலானது நியாயமற்றதாகும்.  

ஈஸ்டர் தினத் தாக்குதலைச் சாட்டாக வைத்து, முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் சொத்துகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள், அயோக்கியத்தனமானவை. இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில் அநேகமானோர், கொள்ளையர்கள் என்பதைக் களத்திலிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.  

 ஈஸ்டர் தின பயங்கரவாதச் செயல்களால், கோபமடைந்து, உணர்ச்சிவசப்பட்ட எவரும், இந்தத் தாக்குதல்களில் ஈடுபடவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையொன்றைக் கட்டவிழ்த்து விடுவதற்கு, நாள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்தான், இந்தக் காடையர்களைக் களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.  

கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகத் திகன, அம்பாறைத் தாக்குதல்களை நடத்துவதற்கு, இவ்வாறானவர்கள் அப்போது வேறு காரணங்களைத் தேடிப்பிடித்திருந்தார்கள். அம்பாறை நகரில், முஸ்லிம் ஒருவரின் கடையில், விற்கப்பட்ட கொத்து ரொட்டியில், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலந்திருந்ததாகக் கூறித்தான், அங்கு முஸ்லிம்களின் கடைகளையும் பள்ளிவாசலையும் பேரினக் காடையர்கள் அடித்து நொறுக்கினார்கள் என்பது நினைவுகொள்ளத்தக்கது.  

இதேவேளை, முஸ்லிம்கள் மீது இறுதியாக நடத்தப்பட்ட தாக்குதல்களின் போதும், அவற்றுக்கு முன்னரும் பின்னரும், முக்கிய அரசியல்வாதிகள் பலர், களத்திலும் களத்துக்கு வெளியிலும் நின்றிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. அவ்வாறான அரசியல்வாதிகளிடம், “ஏன் அங்கு சென்றீர்கள்” என்று கேட்டால், காதில் பூச்சுற்றும் கதைகளை, அவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.  

குருணாகல் மாவட்டத்தில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள், ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான தயாசிறி ஜயசேகர, அங்கு சென்று அவர்களைத் தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றதையும் அவர்களைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தார் என்பதையும் ஊடகங்கள் பகிரங்கப்படுத்தி இருந்தன.  

இந்த நிலையில், தான், அவ்வாறு நடந்திருக்காது விட்டால், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவானவர்கள் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என்றும், அதைத் தவிர்ப்பதற்காகவே, தான் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.   

அதாவது, வன்முறையாளர்களுக்கு எதிராக உச்சப் பலத்தைப் பிரயோகிக்குமாறு பாதுகாப்புத் தரப்புக்கு அரசாங்கம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரு பொலிஸ் நிலையத்தையே தனியாளாகச் சென்று காப்பாற்றியதாக தயாசிறி கூறியிருக்கின்றார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாசிறியை அழைத்து வாக்கு மூலம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையில்தான், நடந்து முடிந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. முஸ்லிம் மக்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சொத்துகளுக்கு அழிவை ஏற்படுத்திய காடையர்கள், அங்கு கொள்ளைகளிலும் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாரும் படையினரும் பார்த்திருக்கத் தக்கதாகவே, இந்த அடாவடிகள் நடந்திருக்கின்றன என்பதை, அங்கு பதிவான ‘சிசிரிவி’ வீடியோ காட்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன.  

அதுமட்டுமன்றி, வன்முறைகளைப் புரிந்த காடையர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.  

தாக்குதல் நடந்த பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களின் வீடியோக்கள் பதிவாகும் ‘ஹார்ட் டிஸ்க்’ இனை, சீருடையில் வந்த படையினர், எடுத்துச் சென்றதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.  

வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குருணாகல் மாவட்டத்துக்குச் சென்றிருந்த மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம், இவற்றை மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  
இப்படி, வேலியே பயிரை மேய்ந்ததாகக் கூறப்படும் முறைப்பாடுகள் ஏராளமுள்ளன.  

இந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, கொட்டாரமுல்ல பகுதியில் பௌசுல் அமீர்தீன் என்பவர் காடையர்களால் கொல்லப்பட்டார். தச்சுத் தொழிலாளியான அமீர்தீன் நான்கு பிள்ளைகளின் தந்தை. அவரின் வீட்டையும் வாகனங்களையும் காடையர்கள் நாசம் செய்துவிட்டுப் போயிருந்தனர். வாளால் வெட்டப்பட்டு அமீர்தீன் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.  

இரண்டு நாள்கள் நடந்த இந்த வன்முறைகளில், 30 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. அநேகமான பள்ளிவாசல்களுக்குள் இருந்த குர்ஆன் பிரதிகள் தீயிடப்பட்டிருந்தன.  

யுத்தம் நிறைவடைந்த பின்னர், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்கள் நாட்டில் வெகுவாக இடம்பெற்று வந்தமையை நாம் அறிவோம். ஞானசார தேரர் போன்ற பௌத்த மதகுருமார்களே இந்த வெறுப்புப் பிரசாரங்களைத் தலைமையேற்று நடத்தி வந்தனர். அந்தப் பிரசாரங்களினூடாக ஏற்றப்பட்ட ‘வெறி’ எத்தகையது என்பதை, பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களை வைத்துப் புரிந்து கொள்ள முடிந்தது.   

இத்தனைக்கு மத்தியில், நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த விவகாரம் தொடர்பில் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானதாகும். குறிப்பாக, நாடு பற்றியெரிந்த சமயத்தில் சீனா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடந்த வன்முறை தொடர்பில் ஒரு கண்டனத்தைக் கூட அங்கிருந்து வெளியிடவில்லை என்பது, முஸ்லிம்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.  

தன்னிடமிருந்த பாதுகாப்பு அமைச்சை, ஐக்கிய தேசியக் கட்சி சார்பான ருவன் விஜேவர்த்தனவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றதால், நாட்டில் நடந்த வன்முறைகள் தொடர்பில், தான் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று, ஜனாதிபதி நினைத்திருந்தாரோ தெரியவில்லை.  

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெறும் அதிகாரச் சண்டைதான், நாட்டின் தற்போதைய நிலைக்குப் பெரிதும் காரணம் என்கிற குற்றச்சாட்டு முக்கியமானது. சஹ்ரான் கும்பல், நாட்டில் தாக்குதலொன்றை நடத்தப் போகிறது என்று புலனாய்வுப் பிரிவினர் மிகத் துல்லியமாகத் தகவல்களை வழங்கியிருந்த போதும், ஆட்சியாளர்கள் அது தொடர்பில் கணக்கில் எடுக்கவில்லை என்பது பாரதூரமானதாகும்.  

அந்தவகையில், சஹ்ரான் கும்பலின் பயங்கரவாதச் செயல்களுக்கும், அதனைச் சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது ஏவி விடப்பட்ட பயங்கரவாதச் செயல்களுக்குமான முழுப் பொறுப்புகளையும் ஆட்சியாளர்களே ஏற்க வேண்டும் என்பதே, பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.   

இன்னொருபுறம், முஸ்லிம்கள் மீது, ஒவ்வொரு தடவையும் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறும் போது, ஆட்சியிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் மீது கோபப்படுவது போல் காட்டிக் கொள்வதும், பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடுவதுமான ‘காட்சி’கள் முஸ்லிம் மக்களுக்கு அலுத்துப் போய் விட்டன.   

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பக்கமாக இருக்கத்தக்க நிலையிலேயே, முஸ்லிம் சமூகத்தின் மீது இத்தனை வன்முறைகள் ஏவி விடப்படுகின்றமையானது, முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் வெட்கக் கேடானதாகும்.  

மறுபுறமாக, கடந்த ஒக்டோபரில் இடம்பெற்ற அரசியல் பிரளயத்தின் போது, ரணில் விக்கிரமசிங்கவின் பதவியைக் காப்பாற்றுவதற்காக, நீதிமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு, ஏன் நீதிமன்றம் செல்லவில்லை என்று, சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் இளைஞர்கள் கேட்கின்றார்கள் என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.  

முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தைச் சரியாக வழிநடத்தும் தலைமைகளாக இருந்திருந்தால், பயங்கரவாதி சஹ்ரானையும் அவன் கூட்டத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க முடியும்.   

ஆனால், இஸ்லாத்துக்குள் ஏற்படுகின்ற இயக்கப் பிளவுகளை வைத்துக் கொண்டு, அதன் மூலம் எப்படித் தமது கல்லாக்களை, வாக்குகளால் நிரப்பிக் கொள்ளலாம் என்று கணக்குப் பார்க்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை, சஹ்ரான் போன்ற நச்சு விதைகளை ஒழிப்பதென்பது கடினமாகும்.  

எனவே, தற்போதைய சூழ்நிலையில் அரசியல் ரீதியாகவும் முஸ்லிம் சமூகம் சுய பரிசோதனையொன்றைச் செய்து கொள்ளுதல் அவசியமாகும்.  

நடந்து முடிந்த அத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னாலும் அரசியல் உள்ளது. அரசியலை முன்னிறுத்தியே அத்தனை விடயங்களும் நடந்து முடிந்திருக்கின்றன என்பதே, ஒளிக்கவும் மறுக்கவும் முடியாத உண்மை.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வஞ்சம்/91-233435

முடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும்

2 months 4 weeks ago
முடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும் காரை துர்க்கா / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:46 Comments - 0 கடந்த சனிக்கிழமை (மே 18), வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு, தமிழர் தாயகத்தில் இதயம் கனத்த கவலையுடனும் எழுச்சி பொங்கிய உணர்வுடனும் நடைபெற்றது. ‘தமிழர்கள் மத்தியில் பயத்தைத் தக்க வைத்து, உளவியல் போர் செய்கின்றது ஸ்ரீ லங்கா அரசாங்கம்’ என, அங்கு வெளியிடப்பட்ட நினைவேந்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், ஆயுதப் போர் அற்றுப் போன நிலையில், உளவியல் போர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை, அனைத்துத் தமிழ் மக்களும், அன்றாடம் அனுபவித்தும் உணர்ந்தும் வருகின்றனர். அதன் நீட்சியாக, எமது சமூகத்தில் நாளாந்தம் சந்தித்து வருகின்ற நபர்களது உரையாடல்களை மய்யமாகக் கொண்டு, இந்த ஆக்கம் வெளி வருகின்றது. இவை மக்களது ஆழ்மனங்களில் புதைந்திருக்கும் எண்ணங்களையும் வலிகளையும் வெளி உலகத்துக்குக் கொண்டு செல்லச் சிறப்பாக உதவுகின்றன. அவ்வகையில், கடந்த நாள்களில் சுகாதாரத் திணைக்களத்தில் பொதுச் சுகாதார பரிசோதகராகப் பணி புரிந்து வருகின்ற ஒருவருடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. “முன்னர் ஆயுதப் போர், ஈவிரக்கமின்றி உயிர்களைப் பலி கொண்டது. தற்போது எம்மண்ணில், தற்கொலைகளுக்கு உயிர்கள் வீணே பலி கொடுக்கப்படுகின்றதே” எனக் கவலையுடன், தனது மனப்பாரத்தைப் பகிர்ந்து கொண்டார். தமிழ்ச் சமூகத்தில், அன்றாடம் நடைபெற்று வருகின்ற தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் தொடர்பில், அவர் தனது ஆதங்கங்களையும் அதற்காக மிகநுட்பமாக உருவாக்கப்பட்ட காரணங்களையும் கையாலாகாத்தனத்துடன் கொட்டித் தீர்த்தார். இது இவ்வாறு நிற்க, அண்மையில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில், முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்து, இறையருள் வேண்டினோம். பின்னர், அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்ட பின்னர், கச்சான் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆச்சியுடன் கதைத்தோம். “எப்படி அம்மா வியாபாரம், சனங்கள் வருகுதே” எனக் கேட்டோம். “அதை என்னன்டு மேனை சொல்லுறது. முந்த நாள் இரவு முழுக்கக் கண் விழித்து, வெறும் 300 ரூபாய்தான் வியாபாரம். நாளாந்த சீவியத்துக்கே பெரும்பாடு. நான் கிழவி. இன்டைக்கோ நாளைக்கோ என இருக்கின்றேன். ஆனால், என்னை நம்பி மூன்று சீவன்கள் இருக்குது” எனத் தொடர்ந்தார். “யார் அம்மா, அந்த மூன்று பேர்” எனக் கேட்டோம். “அந்தக் கதையை ஏன் பிள்ளை கேட்கின்றாய். செல்லடியில என்ர மேள் போய்ச் சேர்ந்திட்டாள். மருமேனும் காணாமல் போய் விட்டார். இப்ப பேரப் பிள்ளையளை நான்தான் பார்த்துப் பராமரித்து வாறேன்” என்றார். “இதில கிடைக்கிற ஐந்து பத்தைக் கொண்டுதான், எங்கள் வாழ்க்கை ஏதோ ஓடுது” என்றார். “இதுவும் இல்லாது போனால், கடவுளே ........ ”எனத் தொடர்ந்தார். இறுதி யுத்தம், அம்மாவின் மகளை பலி எடுத்துக் கொண்டது; மருமகனைக் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியல் சேர்த்துக் கொண்டது; பேரப்பிள்ளைகளை அம்மாவின் கையில் கொடுத்தது. உண்மையில் இன்று அம்மா, யுத்தம் போன்ற ஒருவிதமான முற்றுகைக்குள் உள்ளார். ‘நானும் செத்து விட்டால், என் பேரப்பிள்ளைகள் நிலை என்னாகும், அவர்களுக்கு யார் சாப்பாடு கொடுப்பது, அவர்களது பாதுகாப்பு, அவர்களது படிப்பு, அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலம், ஐயோ கடவுளே...’ என தினசரி அவருக்குள் ஓர் உளவியல் போர் நடந்து கொண்டிருக்கிறது. இது, இலங்கை அரசாங்கத்தால் நேரடியாகத் தோற்றுவிக்காத இன்னொரு விதமான உளவியல் போர். ஆனால், அன்று நேரடியாகச் செய்ய ஆயுதப் போரின் இன்றைய உளவியல் போரே இதுவாகும். இன்று, அந்த அம்மாவின் பிரச்சினை போதிய வருமானமின்மை ஆகும். இவ்வாறாகத் தங்களது வருமானக் குறைவுக்கு பயணிகள் வருகை குறைந்தமையே பிரதான காரணம் எனக் கூறினார் அம்மா. “பயணிகள் வருகையை அதிகரிக்க, ஏதேனும் வழிவகைகள் உண்டோ” எனக் கேட்க, அவர் அதற்கான யோசனையையும் முன்வைத்தார். முறிகண்டிப் பிள்ளையாரை அண்டி, கச்சான் கடைகள், தேநீர்க் கடைகள், அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடைகள் எனப் பல கடைகள் உள்ளன. முறிகண்டியில் கடவுளை வணங்குவது மட்டுமல்லாது, யாழ் - வவுனியா வீதியில் பயணிக்கையில், முறிகண்டியில் தமது கடைகளுக்கு வந்து, பொருட்கள் வாங்குவது தமது வியாபாரத்துக்குத் துணை நிற்கும். “நீங்கள் வருவீங்கள் என நம்பித்தானே, நாங்கள் நாள் முழுக்க இங்கு காத்திருக்கின்றோம்” எனக் கூறிப் பெருமூச்சு விட்டார். எங்களுக்காக அவர்கள் காத்திருக்கின்றார்கள். ஆகவே, தனியே இந்து மதக் கடவுள் என்பதற்கு அப்பால், பிள்ளையாரைச் சுற்றி போரினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், ஆவலுடன் எம் வருகைக்காகக் காத்திருக்கின்றார்கள். செல்லும் வழியில், செய்யும் உதவியாக இந்தக் கைங்கரியத்தை ஆற்றுவோம். ஆகவே, தயவு கூர்ந்து அவ்வழியால் பயணிக்கும் தனியார் பஸ்கள், அரச வாகனச் சாரதிகள் அவர்களது பொருளாதாரம் பெருக அவர்களுக்கு ஆதாரமாக மாறுவோம். ஏனெனில், தற்கொலைக்கான பல்வேறு காரணங்களில் வறுமையே பிரதான பங்கு வகிக்கின்றது. வேலைவாய்ப்புகள் இல்லாமை, அதனால் போதிய வருமானங்கள் இன்மை. இதனால் கடன் சுமை அதிகரிப்பு. அதுவே முடிவில் தற்கொலையில் முடிகின்றது. பொதுவாகத் தற்கொலை செய்வோரில் ஆண்களின் விகிதாசாரமே அதிகமாகக் காணப்படுகின்றது. இதில் அதிகரித்த கடன் சுமையால் தற்கொலை செய்வோரை அன்றாடம் கண்டு வருகின்றோம். இதற்கு முறையற்ற நிதி முகாமைத்துவம், மிதமிஞ்சிப் பெற்ற கடன் எனப் பல காரணங்களைக் கூறலாம். கடந்த பத்து ஆண்டுகளில், யுத்தத்தால் சிதைவுற்ற வீதிகள் அமைக்கப்படுகின்றன. வீடுகள் கட்டப்படுகின்றன. தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. ஆனால், அதே யுத்தத்தால் துண்டு துண்டாக உடைந்து நொருங்கிப் போயுள்ள மனங்களைச் சீர்படுத்த முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆயுதப் போருக்கு முன்னர், குனிந்து உள்ளே போகின்ற குடிசை வீட்டில் வாழ்ந்த இனிமையான வாழ்வு, தற்போது நம்மிடம் உள்ள ஆடம்பரக் கல் வீட்டில் இல்லையே என்ற ஆதங்கங்களே எங்கும் உள்ளன. பொதுவாகச் சாதாரன மரணங்களே மனிதர்களுக்கு மனஅழுத்தம் மற்றும் நெருக்கீடு என்பவற்றை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில் கண் முன்னே குண்டுத் தாக்குதலால் சிதறிய உடல்களையும் சிந்திய குருதியையும் முப்பது ஆண்டுகளாகக் கண்டு, அனுபுவித்தவர்களுக்கு அதன் தாக்கங்கள் எவ்வாறு இலகுவில் ம(கு)றையும்? போரால் மக்களின் மனங்களும் உடைந்து இருப்பதால், தமது அன்றாட செயற்பாடுகளின்போதும் இலகுவில் உடைந்து போய்விடுகின்றார்கள். தமிழ்ச் சமூகத்தில் வெளிக்காயங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமைகள் போன்று உட்காயங்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவதில்லை. ஆனால், மனிதனின் நிம்மதியைக் குழப்புவதில், இவை இரண்டுமே சம பங்குகள் வகிக்கின்றன. ஆகவே, பெரும் சமூகவடுவுக்கு உட்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்குள் தற்கொலை முயற்சிகள் தவிர்க்க முடியாததே. வெளிப்படையாகத் தற்கொலை முயற்சிக்கு பல்வேறு காரணங்களைக் கண்டு பிடித்தாலும் இனப்போரும் அதன் கொடிய விளைவுகளுமே பிரதான மூலவேராக அமைகின்றன. தமிழ்ச் சமூகத்துக்குள் தற்போது ஆழ ஊடுருவி அழிவை ஏற்படுத்தி வருகின்ற தற்கொலைகளுக்கும் இலங்கை இனப் பிணக்குக்கும் பிணைப்பு உள்ளது. தவிர, முள்ளிவாய்க்கால் அவலத்தைக் கட்சி அரசியல் மறந்து, தனிநபர் அரசியல் மறந்து, நினைவேந்தியமை ஆழ்ந்த துயரத்திலும் அங்கே சிறு நம்பிக்கை ஒளியைக் காட்டியது. இந்த வாய்ப்பை நழுவ விடாமல், இறுகப் பற்றிக் கொள்வோம். இது எமக்கான, தீர்வு நோக்கிய பயனத்துக்கான சிறப்பான முகவுரையாகக் கொள்வோம். ஆகவே, நமது அரசியல் தலைவர்கள் இனியும் அடுத்தவர் தவறுகளைக் கண்டு பிடிப்பதை நிறுத்தி ந(த)மது மக்களுக்கான தீர்வுகளைக் கண்டு பிடிக்க முயல வேண்டும். போர் இல்லாத பத்து ஆண்டுகளாகத் தெற்கு, வெற்று வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் தமிழர்களிடம் பேசி வருகின்றது. எந்த மாற்றமும், உள்ளிருந்து வெளிக் கிளம்பவில்லை. பேரினவாதச் சிந்தனையில், செயற்பாட்டில் தமிழ் மக்களால் எந்த மாற்றத்தையும் இதுவரை காண முடியவில்லை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முடிவுற்ற-ஆயுதப்-போரும்-முடிவுறாத-உளவியல்-போரும்/91-233433

காரை துர்க்கா / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:46 Comments - 0

கடந்த சனிக்கிழமை (மே 18), வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு, தமிழர் தாயகத்தில் இதயம் கனத்த கவலையுடனும் எழுச்சி பொங்கிய உணர்வுடனும் நடைபெற்றது. ‘தமிழர்கள் மத்தியில் பயத்தைத் தக்க வைத்து, உளவியல் போர் செய்கின்றது ஸ்ரீ லங்கா அரசாங்கம்’ என, அங்கு வெளியிடப்பட்ட நினைவேந்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

கடந்த 10 ஆண்டுகளில், ஆயுதப் போர் அற்றுப் போன நிலையில், உளவியல் போர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை, அனைத்துத் தமிழ் மக்களும், அன்றாடம் அனுபவித்தும் உணர்ந்தும் வருகின்றனர்.  

அதன் நீட்சியாக, எமது சமூகத்தில் நாளாந்தம் சந்தித்து வருகின்ற நபர்களது உரையாடல்களை மய்யமாகக் கொண்டு, இந்த ஆக்கம் வெளி வருகின்றது. இவை மக்களது ஆழ்மனங்களில் புதைந்திருக்கும் எண்ணங்களையும் வலிகளையும் வெளி உலகத்துக்குக் கொண்டு செல்லச் சிறப்பாக உதவுகின்றன.  

அவ்வகையில், கடந்த நாள்களில் சுகாதாரத் திணைக்களத்தில் பொதுச் சுகாதார பரிசோதகராகப் பணி புரிந்து வருகின்ற ஒருவருடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. “முன்னர் ஆயுதப் போர், ஈவிரக்கமின்றி உயிர்களைப் பலி கொண்டது. தற்போது எம்மண்ணில், தற்கொலைகளுக்கு உயிர்கள் வீணே பலி கொடுக்கப்படுகின்றதே” எனக் கவலையுடன், தனது மனப்பாரத்தைப் பகிர்ந்து கொண்டார். 

தமிழ்ச் சமூகத்தில், அன்றாடம் நடைபெற்று வருகின்ற தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் தொடர்பில், அவர் தனது ஆதங்கங்களையும் அதற்காக மிகநுட்பமாக உருவாக்கப்பட்ட காரணங்களையும் கையாலாகாத்தனத்துடன் கொட்டித் தீர்த்தார்.  

இது இவ்வாறு நிற்க, அண்மையில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில், முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்து, இறையருள் வேண்டினோம். பின்னர், அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்ட பின்னர், கச்சான் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆச்சியுடன் கதைத்தோம்.  

“எப்படி அம்மா வியாபாரம், சனங்கள் வருகுதே” எனக் கேட்டோம். 

“அதை என்னன்டு மேனை சொல்லுறது. முந்த நாள் இரவு முழுக்கக் கண் விழித்து, வெறும் 300 ரூபாய்தான் வியாபாரம். நாளாந்த சீவியத்துக்கே பெரும்பாடு. நான் கிழவி. இன்டைக்கோ நாளைக்கோ என இருக்கின்றேன். ஆனால், என்னை நம்பி மூன்று சீவன்கள் இருக்குது” எனத் தொடர்ந்தார். 

“யார் அம்மா, அந்த மூன்று பேர்” எனக் கேட்டோம்.  

“அந்தக் கதையை ஏன் பிள்ளை கேட்கின்றாய். செல்லடியில என்ர மேள் போய்ச் சேர்ந்திட்டாள். மருமேனும் காணாமல் போய் விட்டார். இப்ப பேரப் பிள்ளையளை நான்தான் பார்த்துப் பராமரித்து வாறேன்” என்றார். 

“இதில கிடைக்கிற ஐந்து பத்தைக் கொண்டுதான், எங்கள் வாழ்க்கை ஏதோ ஓடுது” என்றார். “இதுவும் இல்லாது போனால், கடவுளே ........ ”எனத் தொடர்ந்தார்.  

இறுதி யுத்தம், அம்மாவின் மகளை பலி எடுத்துக் கொண்டது; மருமகனைக் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியல் சேர்த்துக் கொண்டது; பேரப்பிள்ளைகளை அம்மாவின் கையில் கொடுத்தது. உண்மையில் இன்று அம்மா, யுத்தம் போன்ற ஒருவிதமான முற்றுகைக்குள் உள்ளார்.  

‘நானும் செத்து விட்டால், என் பேரப்பிள்ளைகள் நிலை என்னாகும், அவர்களுக்கு யார் சாப்பாடு கொடுப்பது, அவர்களது பாதுகாப்பு, அவர்களது படிப்பு, அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலம், ஐயோ கடவுளே...’ என தினசரி அவருக்குள் ஓர் உளவியல் போர் நடந்து கொண்டிருக்கிறது.

இது, இலங்கை அரசாங்கத்தால் நேரடியாகத் தோற்றுவிக்காத இன்னொரு விதமான உளவியல் போர். ஆனால், அன்று நேரடியாகச் செய்ய ஆயுதப் போரின் இன்றைய உளவியல் போரே இதுவாகும்.  

இன்று, அந்த அம்மாவின் பிரச்சினை போதிய வருமானமின்மை ஆகும். இவ்வாறாகத் தங்களது வருமானக் குறைவுக்கு பயணிகள் வருகை குறைந்தமையே பிரதான காரணம் எனக் கூறினார் அம்மா. 

“பயணிகள் வருகையை அதிகரிக்க, ஏதேனும் வழிவகைகள் உண்டோ” எனக் கேட்க, அவர் அதற்கான யோசனையையும் முன்வைத்தார். 

முறிகண்டிப் பிள்ளையாரை அண்டி, கச்சான் கடைகள், தேநீர்க் கடைகள், அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடைகள் எனப் பல கடைகள் உள்ளன.  

முறிகண்டியில் கடவுளை வணங்குவது மட்டுமல்லாது, யாழ் - வவுனியா வீதியில் பயணிக்கையில், முறிகண்டியில் தமது கடைகளுக்கு வந்து, பொருட்கள் வாங்குவது தமது வியாபாரத்துக்குத் துணை நிற்கும். “நீங்கள் வருவீங்கள் என நம்பித்தானே, நாங்கள் நாள் முழுக்க இங்கு காத்திருக்கின்றோம்” எனக் கூறிப் பெருமூச்சு விட்டார்.  

எங்களுக்காக அவர்கள் காத்திருக்கின்றார்கள். ஆகவே, தனியே இந்து மதக் கடவுள் என்பதற்கு அப்பால், பிள்ளையாரைச் சுற்றி போரினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், ஆவலுடன் எம் வருகைக்காகக் காத்திருக்கின்றார்கள். செல்லும் வழியில், செய்யும் உதவியாக இந்தக் கைங்கரியத்தை ஆற்றுவோம்.  

ஆகவே, தயவு கூர்ந்து அவ்வழியால் பயணிக்கும் தனியார் பஸ்கள், அரச வாகனச் சாரதிகள் அவர்களது பொருளாதாரம் பெருக அவர்களுக்கு ஆதாரமாக மாறுவோம். ஏனெனில், தற்கொலைக்கான பல்வேறு காரணங்களில் வறுமையே பிரதான பங்கு வகிக்கின்றது. 

வேலைவாய்ப்புகள் இல்லாமை, அதனால் போதிய வருமானங்கள் இன்மை. இதனால் கடன் சுமை அதிகரிப்பு. அதுவே முடிவில் தற்கொலையில் முடிகின்றது.  

பொதுவாகத் தற்கொலை செய்வோரில் ஆண்களின் விகிதாசாரமே அதிகமாகக் காணப்படுகின்றது. இதில் அதிகரித்த கடன் சுமையால் தற்கொலை செய்வோரை அன்றாடம் கண்டு வருகின்றோம். இதற்கு முறையற்ற நிதி முகாமைத்துவம், மிதமிஞ்சிப் பெற்ற கடன் எனப் பல காரணங்களைக் கூறலாம்.  

கடந்த பத்து ஆண்டுகளில், யுத்தத்தால் சிதைவுற்ற வீதிகள் அமைக்கப்படுகின்றன. வீடுகள் கட்டப்படுகின்றன. தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. ஆனால், அதே யுத்தத்தால் துண்டு துண்டாக உடைந்து நொருங்கிப் போயுள்ள மனங்களைச் சீர்படுத்த முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. 
பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆயுதப் போருக்கு முன்னர், குனிந்து உள்ளே போகின்ற குடிசை வீட்டில் வாழ்ந்த இனிமையான வாழ்வு, தற்போது நம்மிடம் உள்ள ஆடம்பரக் கல் வீட்டில் இல்லையே என்ற ஆதங்கங்களே எங்கும் உள்ளன.   

பொதுவாகச் சாதாரன மரணங்களே மனிதர்களுக்கு மனஅழுத்தம் மற்றும் நெருக்கீடு என்பவற்றை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில் கண் முன்னே குண்டுத் தாக்குதலால் சிதறிய உடல்களையும் சிந்திய குருதியையும் முப்பது ஆண்டுகளாகக் கண்டு, அனுபுவித்தவர்களுக்கு அதன் தாக்கங்கள் எவ்வாறு இலகுவில் ம(கு)றையும்?  

போரால் மக்களின் மனங்களும் உடைந்து இருப்பதால், தமது அன்றாட செயற்பாடுகளின்போதும் இலகுவில் உடைந்து போய்விடுகின்றார்கள். தமிழ்ச் சமூகத்தில் வெளிக்காயங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமைகள் போன்று உட்காயங்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவதில்லை. ஆனால், மனிதனின் நிம்மதியைக் குழப்புவதில், இவை இரண்டுமே சம பங்குகள் வகிக்கின்றன.   

ஆகவே, பெரும் சமூகவடுவுக்கு  உட்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்குள் தற்கொலை முயற்சிகள் தவிர்க்க முடியாததே. வெளிப்படையாகத் தற்கொலை முயற்சிக்கு பல்வேறு காரணங்களைக் கண்டு பிடித்தாலும் இனப்போரும் அதன் கொடிய விளைவுகளுமே பிரதான மூலவேராக அமைகின்றன. 

தமிழ்ச் சமூகத்துக்குள் தற்போது ஆழ ஊடுருவி அழிவை ஏற்படுத்தி வருகின்ற தற்கொலைகளுக்கும் இலங்கை இனப் பிணக்குக்கும் பிணைப்பு உள்ளது.  

தவிர, முள்ளிவாய்க்கால் அவலத்தைக் கட்சி அரசியல் மறந்து, தனிநபர் அரசியல் மறந்து, நினைவேந்தியமை ஆழ்ந்த துயரத்திலும் அங்கே சிறு நம்பிக்கை ஒளியைக் காட்டியது. இந்த வாய்ப்பை நழுவ விடாமல், இறுகப் பற்றிக் கொள்வோம். 

இது எமக்கான, தீர்வு நோக்கிய பயனத்துக்கான சிறப்பான முகவுரையாகக் கொள்வோம். ஆகவே, நமது அரசியல் தலைவர்கள் இனியும் அடுத்தவர் தவறுகளைக் கண்டு பிடிப்பதை நிறுத்தி ந(த)மது மக்களுக்கான தீர்வுகளைக் கண்டு பிடிக்க முயல வேண்டும்.  

போர் இல்லாத பத்து ஆண்டுகளாகத் தெற்கு, வெற்று வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் தமிழர்களிடம் பேசி வருகின்றது. எந்த மாற்றமும், உள்ளிருந்து வெளிக் கிளம்பவில்லை. பேரினவாதச் சிந்தனையில், செயற்பாட்டில் தமிழ் மக்களால் எந்த மாற்றத்தையும் இதுவரை காண முடியவில்லை.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முடிவுற்ற-ஆயுதப்-போரும்-முடிவுறாத-உளவியல்-போரும்/91-233433

1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....

2 months 4 weeks ago
1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்.... கடந்த 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியனானது. * அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் 1992 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரை 5 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. * கிண்ணத்தின் பெயர் - பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் (Benson & Hedges cup) * 18 மைதானங்களில் மொத்தமாக 39 போட்டிகள் இடம்பெற்றன. * 9 அணிகள் கலந்து கொண்டன (நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா, இலங்கை மற்றும் சிம்பாப்வே) இனவெறி கொள்கையால் தென்னாபிரிக்கா மீது விதிக்கப்பட்டிருந்த 21 ஆண்டு கால தடை நீக்கப்பட்டதால் அந்த அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தில் சேர்க்கப்பட்டது. * அணி வீரர்கள் வழக்கமான வெள்ளை நிற சீருடையில் இருந்து பெயர் பொறிக்கப்பட்ட வர்ணமயமான உடைக்கு மாறினர். * முதல்முறையாக வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்பட்டது. * பகல்-இரவு ஆட்டங்கள் முதல்முறையாக அரங்கேறின. * முதல் 15 ஓவர்களில் குறிப்பிட்ட வட்டத்திற்கு வெளியே 2 களத்தடுப்பாளர்கள் மாத்திரம் நிற்கும் விதியும் அறிமுகம். * 9 அணிகள் கலந்துகொண்டமையினால் போட்டி அட்டவணை மாற்றப்பட்டு ரவுண்ட் ரொபின் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதின ரவுண்ட் ரொபின் சுற்று முடிவு : நியூஸிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 7 இல் வெற்றியையும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் முதல் இடம். இங்கிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியையும், 2 தோல்வியையும் சந்தித்து 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடம். தென்னாபிரிக்கா அணி மொத்தமாக 8 போடிகளில் விளையாடி 5 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 10 புள்ளிகளுடன் முன்றாவது இடம். பாகிஸ்தான் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 9 புள்ளிகளுடன் நான்காவது இடம். அவுஸ்திரேலியா அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம். மேற்கிந்தியத் தீவுகள் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஆறாவது இடம். இந்திய அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றியையும், 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் ஏழாவது இடம். இலங்கை அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றி, 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் எட்டாவது இடம். சிம்பாப்வே அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி, 7 இல் தோல்வியையும் சந்தித்து 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடம். ரவுண்ட் ரொபின் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்த நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி எடன் பார்க்கில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டி நியூஸிலாந்து - பாகிஸ்தான் நியூஸிலாந்து 262/7 (50 overs) பாகிஸ்தான் 264/6 (49 overs) 4 விக்கெட்டுக்களினால் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான். 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி சிட்டினியில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து 252/6 (45 overs) தென்னாபிரிக்கா 232/6 (43 overs) 20 ஓட்டத்தினால் தென்னாபிரிக்க அணியை சாய்த்து மூன்றாவது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கான அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் 87 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான், கிரேஹம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே இறுதிப் போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை குவித்தது. இம்ரான் கான் 110 பந்துகளை எதிர்கொண்டு 72 ஓட்டங்களையும், ஜாவிட் மியாண்டட் 98 பந்துகளில் 58 ஓட்டத்தையும், இன்சமாம்-உல்-ஹக் 46 பந்துகளில் 42 ஓட்டத்தையும் பாகிஸ்தான் அணி சார்பில் அதிகப்படியாக பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் டி.ஆர். ப்ரிங்கன் 3 விக்கெட்டுக்களையும், பொத்தம் மற்றும் ஆர்.கே.இல்லிங்வொர்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 250 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 227 ஓட்டத்துக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் பெயர்பிரதர் 70 பந்துகளில் 62 ஓட்டத்தையும், ஏ.ஜே. லாம்ப் 31 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ‘ஸ்விங்’ பந்து வீச்சால் அசத்திய வாசிம் அக்ரம், முஸ்தாக் அகமட் தலா 3 விக்கெட்டுக்களையும், ஆகிப் ஜாவேத் 2 விக்கெட்டுக்களையும், இம்ரான் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார். இதன் மூலம் 22 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தை கையில் ஏந்தியதுடன் இம்ரான் கானும் ( தற்போதைய பாகிஸ்தான் பிரதமர்) சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். * போட்டியின் ஆட்டநயகனாக பாகிஸ்தான் அணியின் வசிம் அக்ரம் * அதிக ஓட்டம் - நியூஸிலாந்து அணியின் மார்ட்டின் குரோவ் ( 9 போட்டிகளில் 456 ஓட்டம்) * அதிக விக்கெட்டுகள் - பாகிஸ்தானின் வசிம் அக்ரம் (10 போட்டிகளில் 18 விக்கெட்) (தொகுப்பு : ஜெ.அனோஜன்) http://www.virakesari.lk/article/56474