Aggregator

தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ - விரிவான தகவல்கள்

3 months ago
முரளிதரன் காசிவிஸ்வநாதன், மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டுவிட்ட நிலையில், புதிய நீர் ஆதாரங்களைத் தேடுகிறது சென்னைக் குடிநீர் வாரியம். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தக் குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக, புதிதாக ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதும் ஏற்கனவே இருக்கும் கிணறுகளை ஆழப்படுத்துவதும் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. பொதுவாக ஒரு மாதத்தில் 20-30 வரை ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் ஒரு நிறுவனம், கடந்த இரு மாதங்களாக 40 ஆழ்துளை கிணறுகள் வரை அமைப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை நகரைப் பொறுத்தவரை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளுமே முற்றிலுமாக வறண்டுவிட்டன. மே மாதத் துவக்கத்தில் சோழவரம் ஏரியிலிருந்தும் செங்குன்றம் ஏரியிலிருந்தும், மே மாத மத்தியில் பூண்டி ஏரியிலிருந்தும், தண்ணீர் எடுப்பதை சென்னைக் குடிநீர் வாரியம் முழுமையாக நிறுத்திவிட்டது. இதற்குப் பிறகு சென்னைக்கு அருகில் உள்ள குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. தற்போது சிக்கராயபுரம், எருமையூர் குவாரிகளில் இருந்து சிறிதளவு தண்ணீர் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டுவருகிறது. தற்போது வீராணம் ஏரியிலிருந்து சுமார் 150 மில்லியன் லிட்டர் அளவுக்கு நீர் பெறப்பட்டுவருகிறது. மேலும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படும் நீரின் அளவை அதிகரிக்கவும் சென்னைக் குடிநீர் வாரியம் முடிவுசெய்திருக்கிறது. மழை எனும் மீட்பன் "தற்போது மேலும் சில குவாரிகளை அடையாளம் காணும் பணிகள் நடந்துவருகின்றன. மழை மட்டுமே இந்தச் சிக்கலில் சென்னை நகரை மீட்க முடியும்" என்கிறார் சென்னைக் குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். படத்தின் காப்புரிமை Getty Images சென்னை நகரைப் பொறுத்தவரை 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த 15 மண்டலங்களிலிலும் சேர்த்து, ஒரு நாளைக்கு 880 மில்லியன் லிட்டர் தண்ணீரை சப்ளை செய்வதாக சொல்லப்பட்டாலும் பொதுவாக 650 மில்லியன் லிட்டர் தண்ணீரே வழங்கப்பட்டுவந்தது. தற்போது கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக சென்னைக் குடிநீர் வாரியம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறது. ஆனால், விநியோகத்தின் போது ஏற்படும் இழப்பீடு ஆகியவற்றை கணக்கிட்டால், விநியோகிக்கப்படும் நீரின் அளவு சுமார் 425 - 450 மில்லியன் லிட்டர் அளவே இருக்கும். இதன் காரணமாக சென்னை நகரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் இருந்து தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் பல இடங்களில் பொதுமக்களுக்குள் சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படுவது வழக்கமாகியிருக்கிறது. ஐ.டி நிறுவனங்கள், உணவகங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், நிலைமை இன்னும் மோசமாகக்கூடும். புகைப்பட காப்புரிமை @Muthan_ @Muthan_ <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @Muthan_: #தவிக்கும்தமிழ்நாடு #தாகத்தில்தமிழகம் #TNCriesforWater Save Water. Plant More Trees. Stop Sand Mining. Now there is no water for agriculture. Very Soon it's gonna be no enough water to Drink. Wake up #TamilNadu " src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/Muthan_/status/1139529614068350982~/tamil/india-48667964" width="465" height="503"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @Muthan_</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@Muthan_</span> </span> </figure> "வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், வாய்ப்பிருப்பவர்களை வீட்டில் இருந்தப்படி பணி செய்ய சொல்லி இருக்கிறது மென் பொருள் நிறுவனங்கள். ஆனால், வீட்டிலும் நீர் இல்லாத போது எங்கிருந்து பணி செய்ய?" என்கிறார் தகவல் தொழிநுட்ப பணியாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் விநோத் களிகை. தாகமும், வன்முறையும் தண்ணீர் பிரச்சனை தனி மனித உறவுகளிலும் தாக்கம் செலுத்தி இருக்கிறது. தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் சண்டைகளும் நடந்துள்ளன. படத்தின் காப்புரிமை Getty Images தமிழக சட்டசபை சபாநாயகர் ப. தனபாலின் வாகன ஓட்டுநர் ஆதிமூலம் ராமகிருஷ்ணன் தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண்மணியை கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கி உள்ளார். இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். மாநில தலைநகரில் மட்டும் அல்ல தண்ணீர் பிரச்சனை. காவிரி நதி பாயும் டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நிலையும் இதுதான். அங்கு தண்ணீர் பிரச்சனையில் ஆனந்த் பாபு எனும் நபர் கொல்லப்பட்டிருக்கிறார். "தஞ்சாவூர் மாவட்டம் விளார் பகுதியில், தண்ணீர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, அந்தப் பகுதியை சேர்ந்த குமார் எனும் நபர் அதிக குடங்கள் பிடிக்க, இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் ஆனந்த் பாபு. இதனால் கோபமடைந்த குமார் மற்றும் அவரது இரு மகன்கள் ஆனந்த் பாபுவை தாக்கி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார்கள்" என்கின்றனர் போலீஸார். நிலத்தடி நீர்மட்டம் 'மழைக்காலத்திற்குப் பிறகு, ஏரிகள் எல்லாம் நிறைந்திருக்கும்போது குடிநீர் வாரியம் ஒரு நாளைக்கு சராசரியாக 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குகிறது என்றால், அந்த நேரத்தில் நிலத்தடி நீர்மட்டமும் நன்றாக இருக்கும். அதனால், குடிநீர் வாரியத்தின் பணிகள் எளிதாக இருக்கும். ஆனால், தற்போது நகரின் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டமும் வற்றிவிட்ட நிலையில், முழுக்க முழுக்க மக்கள் குடிநீர் வாரியத்தையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இது நிலைமையை மேலும் கடுமையாக்கியிருக்கிறது' என்கிறார் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர். படத்தின் காப்புரிமை Getty Images சென்னையில் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் குறையவில்லை, ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாத காலக்கட்டத்தில் மட்டும் தூத்துக்குடி திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மட்டும் கணிசமான அளவில் குறைந்திருக்கிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 0.87 மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர் அளவு குறைந்திருக்கிறது என்று தரவுகள் கூறுகின்றன. குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதுபோக, லாரிகள் மூலமும் தண்ணீர் விநியோகம் செய்கிறது குடிநீர் வாரியம். ஒரு நாளைக்கு 9,000 லாரிகள் நீர் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்குப் பணம் செலுத்தி லாரி நீரைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும், பதிவுசெய்தால் குறைந்தது 20 நாட்களாவது காத்திருக்க வேண்டியிருக்கிறது. வரும் நாட்களில் இந்தக் காத்திருப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். "இப்போதுதான் பேரழிவு துவங்கியிருக்கிறது. இந்த ஆண்டும் மழை பெய்யாவிட்டால் முழுமையான பேரழிவை சந்திப்போம்" என்கிறார்கள் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள். மாற்றம் வேண்டும் இப்போது நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு நிலத்தடி நீரை மேம்படுத்துவதே ஆகும் என்கிறார் நீர் செயற்பாட்டாளர் நக்கீரன். படத்தின் காப்புரிமை Getty Images "இதற்கு முன்பும் இவ்வாறு மழை இல்லாமல் இருந்திருக்கிறது. இது போன்ற வறட்சியை சென்னை சந்தித்து இருக்கிறது. அப்போதெல்லாம், நிலத்தடி நீர் கை கொடுத்தது. இப்போது நிலத்தடி நீரும் கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது. பெய்கின்ற மழையில் 16 சதவீதமாவது நிலத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் 5 சதவீதம் கூட நிலத்திற்குள் செல்வதில்லை. அதற்கு காரணம், முழுக்க முழுக்க கான்கிரீட்மயமான கட்டுமானம். இதில் மாற்றம் கொண்டுவராமல் நிலத்தடி நீரை மேம்படுத்துவதும் சாத்தியமில்லை" என்கிறார் நக்கீரன். கழிவு நீர் ஏரிகளை முழுமையாகத் தூர்வாருவது, கடல் நீரைச் சுத்திகரிக்கும் மையங்களை அமைப்பது போன்றவை நிரந்தரமான தீர்வாக இருக்காது என்கிறார்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள். ஏற்கனவே பயன்படுத்திய நீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதே சரியான, நீடித்த தீர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் அவர்கள். சென்னை நகரின் கழிவு நீரைச் சுத்திகரித்து வழங்கும் திட்டத்திற்கான முதற்கட்ட தொழில்நுட்ப அங்கீகாரத்தை சென்னை ஐஐடி மே 30ஆம் தேதி வழங்கியிருக்கிறது. இதையடுத்து இதற்கான இயந்திரங்களை வடிவமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வர ஜனவரி மாதம் ஆகிவிடும். இந்த கழிவு நீரைச் சுத்திகரிக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படும்பட்சத்தில் சென்னை நகரின் கழிவுநீரில் 70 சதவீதத்தை மீண்டும் குடிநீராக்கி விநியோகிக்க முடியும். https://www.bbc.com/tamil/india-48667964

முரளிதரன் காசிவிஸ்வநாதன், மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ்
 
  •  
'கழிவுநீரே இனி குடிநீர்': தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்படத்தின் காப்புரிமை Getty Images

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டுவிட்ட நிலையில், புதிய நீர் ஆதாரங்களைத் தேடுகிறது சென்னைக் குடிநீர் வாரியம். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்தக் குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக, புதிதாக ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதும் ஏற்கனவே இருக்கும் கிணறுகளை ஆழப்படுத்துவதும் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. பொதுவாக ஒரு மாதத்தில் 20-30 வரை ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் ஒரு நிறுவனம், கடந்த இரு மாதங்களாக 40 ஆழ்துளை கிணறுகள் வரை அமைப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை நகரைப் பொறுத்தவரை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளுமே முற்றிலுமாக வறண்டுவிட்டன. மே மாதத் துவக்கத்தில் சோழவரம் ஏரியிலிருந்தும் செங்குன்றம் ஏரியிலிருந்தும், மே மாத மத்தியில் பூண்டி ஏரியிலிருந்தும், தண்ணீர் எடுப்பதை சென்னைக் குடிநீர் வாரியம் முழுமையாக நிறுத்திவிட்டது.

இதற்குப் பிறகு சென்னைக்கு அருகில் உள்ள குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. தற்போது சிக்கராயபுரம், எருமையூர் குவாரிகளில் இருந்து சிறிதளவு தண்ணீர் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டுவருகிறது.

தற்போது வீராணம் ஏரியிலிருந்து சுமார் 150 மில்லியன் லிட்டர் அளவுக்கு நீர் பெறப்பட்டுவருகிறது. மேலும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படும் நீரின் அளவை அதிகரிக்கவும் சென்னைக் குடிநீர் வாரியம் முடிவுசெய்திருக்கிறது.

மழை எனும் மீட்பன்

"தற்போது மேலும் சில குவாரிகளை அடையாளம் காணும் பணிகள் நடந்துவருகின்றன. மழை மட்டுமே இந்தச் சிக்கலில் சென்னை நகரை மீட்க முடியும்"   என்கிறார் சென்னைக் குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

'கழிவுநீரே இனி குடிநீர்': தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை நகரைப் பொறுத்தவரை 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த 15 மண்டலங்களிலிலும் சேர்த்து, ஒரு நாளைக்கு 880 மில்லியன் லிட்டர் தண்ணீரை சப்ளை செய்வதாக சொல்லப்பட்டாலும் பொதுவாக 650 மில்லியன் லிட்டர் தண்ணீரே வழங்கப்பட்டுவந்தது. தற்போது கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக சென்னைக் குடிநீர் வாரியம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறது. ஆனால், விநியோகத்தின் போது ஏற்படும் இழப்பீடு ஆகியவற்றை கணக்கிட்டால், விநியோகிக்கப்படும் நீரின் அளவு சுமார் 425 - 450 மில்லியன் லிட்டர் அளவே இருக்கும்.

இதன் காரணமாக சென்னை நகரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் இருந்து தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் பல இடங்களில் பொதுமக்களுக்குள் சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படுவது வழக்கமாகியிருக்கிறது.

ஐ.டி நிறுவனங்கள், உணவகங்கள்

தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன.  மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றன.  ஆனால், நிலைமை இன்னும் மோசமாகக்கூடும்.

டுவிட்டர் இவரது பதிவு @Muthan_: #தவிக்கும்தமிழ்நாடு #தாகத்தில்தமிழகம் #TNCriesforWater Save Water. Plant More Trees. Stop Sand Mining.  Now there is no water for agriculture. Very Soon it's gonna be no enough water to Drink. Wake up #TamilNaduபுகைப்பட காப்புரிமை @Muthan_ @Muthan_ <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @Muthan_: #தவிக்கும்தமிழ்நாடு #தாகத்தில்தமிழகம் #TNCriesforWater Save Water. Plant More Trees. Stop Sand Mining. Now there is no water for agriculture. Very Soon it's gonna be no enough water to Drink. Wake up #TamilNadu " src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/Muthan_/status/1139529614068350982~/tamil/india-48667964" width="465" height="503"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @Muthan_</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@Muthan_</span> </span> </figure>

"வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், வாய்ப்பிருப்பவர்களை வீட்டில் இருந்தப்படி பணி செய்ய சொல்லி இருக்கிறது மென் பொருள் நிறுவனங்கள். ஆனால், வீட்டிலும் நீர் இல்லாத போது எங்கிருந்து பணி செய்ய?" என்கிறார் தகவல் தொழிநுட்ப பணியாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் விநோத் களிகை.

தாகமும், வன்முறையும்

தண்ணீர் பிரச்சனை தனி மனித உறவுகளிலும் தாக்கம் செலுத்தி இருக்கிறது.

தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் சண்டைகளும் நடந்துள்ளன.

தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: 'கழிவுநீரே இனி குடிநீர்' - விரிவான தகவல்கள்படத்தின் காப்புரிமை Getty Images

தமிழக சட்டசபை சபாநாயகர் ப. தனபாலின் வாகன ஓட்டுநர் ஆதிமூலம் ராமகிருஷ்ணன் தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண்மணியை கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கி உள்ளார். இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மாநில தலைநகரில் மட்டும் அல்ல தண்ணீர் பிரச்சனை. காவிரி நதி பாயும் டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நிலையும் இதுதான்.

அங்கு தண்ணீர் பிரச்சனையில் ஆனந்த் பாபு எனும் நபர் கொல்லப்பட்டிருக்கிறார்.

"தஞ்சாவூர் மாவட்டம் விளார் பகுதியில், தண்ணீர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, அந்தப் பகுதியை சேர்ந்த குமார் எனும் நபர் அதிக குடங்கள் பிடிக்க, இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் ஆனந்த் பாபு. இதனால் கோபமடைந்த குமார் மற்றும் அவரது இரு மகன்கள் ஆனந்த் பாபுவை தாக்கி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார்கள்" என்கின்றனர் போலீஸார்.

நிலத்தடி நீர்மட்டம்

'மழைக்காலத்திற்குப் பிறகு, ஏரிகள் எல்லாம் நிறைந்திருக்கும்போது குடிநீர் வாரியம் ஒரு நாளைக்கு சராசரியாக 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குகிறது என்றால், அந்த நேரத்தில் நிலத்தடி நீர்மட்டமும் நன்றாக இருக்கும். அதனால், குடிநீர் வாரியத்தின் பணிகள் எளிதாக இருக்கும். ஆனால், தற்போது நகரின் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டமும் வற்றிவிட்ட நிலையில், முழுக்க முழுக்க மக்கள் குடிநீர் வாரியத்தையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இது நிலைமையை மேலும் கடுமையாக்கியிருக்கிறது' என்கிறார் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர்.

'கழிவுநீரே இனி குடிநீர்': தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையில் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் குறையவில்லை, ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாத காலக்கட்டத்தில் மட்டும் தூத்துக்குடி திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மட்டும் கணிசமான அளவில் குறைந்திருக்கிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 0.87 மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர் அளவு குறைந்திருக்கிறது என்று தரவுகள் கூறுகின்றன.

குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதுபோக, லாரிகள் மூலமும் தண்ணீர் விநியோகம் செய்கிறது குடிநீர் வாரியம். ஒரு நாளைக்கு 9,000 லாரிகள் நீர் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்குப் பணம் செலுத்தி லாரி நீரைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும், பதிவுசெய்தால் குறைந்தது 20 நாட்களாவது காத்திருக்க வேண்டியிருக்கிறது.  வரும் நாட்களில் இந்தக் காத்திருப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.

"இப்போதுதான் பேரழிவு துவங்கியிருக்கிறது. இந்த ஆண்டும் மழை பெய்யாவிட்டால் முழுமையான பேரழிவை சந்திப்போம்" என்கிறார்கள் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள்.

மாற்றம் வேண்டும்

இப்போது நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு நிலத்தடி நீரை மேம்படுத்துவதே ஆகும் என்கிறார் நீர் செயற்பாட்டாளர் நக்கீரன்.

தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: 'கழிவுநீரே இனி குடிநீர்' - விரிவான தகவல்கள்படத்தின் காப்புரிமை Getty Images

"இதற்கு முன்பும் இவ்வாறு மழை இல்லாமல் இருந்திருக்கிறது. இது போன்ற வறட்சியை சென்னை சந்தித்து இருக்கிறது. அப்போதெல்லாம், நிலத்தடி நீர் கை கொடுத்தது. இப்போது நிலத்தடி நீரும் கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது. பெய்கின்ற மழையில் 16 சதவீதமாவது நிலத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் 5 சதவீதம் கூட நிலத்திற்குள் செல்வதில்லை. அதற்கு காரணம், முழுக்க முழுக்க கான்கிரீட்மயமான கட்டுமானம். இதில் மாற்றம் கொண்டுவராமல் நிலத்தடி நீரை மேம்படுத்துவதும் சாத்தியமில்லை" என்கிறார் நக்கீரன்.

கழிவு நீர்

ஏரிகளை முழுமையாகத் தூர்வாருவது, கடல் நீரைச் சுத்திகரிக்கும் மையங்களை அமைப்பது போன்றவை நிரந்தரமான தீர்வாக இருக்காது என்கிறார்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள். ஏற்கனவே பயன்படுத்திய நீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதே சரியான, நீடித்த தீர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் அவர்கள்.

சென்னை நகரின் கழிவு நீரைச் சுத்திகரித்து வழங்கும் திட்டத்திற்கான முதற்கட்ட தொழில்நுட்ப அங்கீகாரத்தை சென்னை ஐஐடி மே 30ஆம் தேதி வழங்கியிருக்கிறது.  இதையடுத்து இதற்கான இயந்திரங்களை வடிவமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வர ஜனவரி மாதம் ஆகிவிடும்.

இந்த கழிவு நீரைச் சுத்திகரிக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படும்பட்சத்தில் சென்னை நகரின் கழிவுநீரில் 70 சதவீதத்தை மீண்டும் குடிநீராக்கி விநியோகிக்க முடியும்.

https://www.bbc.com/tamil/india-48667964

தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ - விரிவான தகவல்கள்

3 months ago
முரளிதரன் காசிவிஸ்வநாதன், மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டுவிட்ட நிலையில், புதிய நீர் ஆதாரங்களைத் தேடுகிறது சென்னைக் குடிநீர் வாரியம். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தக் குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக, புதிதாக ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதும் ஏற்கனவே இருக்கும் கிணறுகளை ஆழப்படுத்துவதும் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. பொதுவாக ஒரு மாதத்தில் 20-30 வரை ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் ஒரு நிறுவனம், கடந்த இரு மாதங்களாக 40 ஆழ்துளை கிணறுகள் வரை அமைப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை நகரைப் பொறுத்தவரை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளுமே முற்றிலுமாக வறண்டுவிட்டன. மே மாதத் துவக்கத்தில் சோழவரம் ஏரியிலிருந்தும் செங்குன்றம் ஏரியிலிருந்தும், மே மாத மத்தியில் பூண்டி ஏரியிலிருந்தும், தண்ணீர் எடுப்பதை சென்னைக் குடிநீர் வாரியம் முழுமையாக நிறுத்திவிட்டது. இதற்குப் பிறகு சென்னைக்கு அருகில் உள்ள குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. தற்போது சிக்கராயபுரம், எருமையூர் குவாரிகளில் இருந்து சிறிதளவு தண்ணீர் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டுவருகிறது. தற்போது வீராணம் ஏரியிலிருந்து சுமார் 150 மில்லியன் லிட்டர் அளவுக்கு நீர் பெறப்பட்டுவருகிறது. மேலும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படும் நீரின் அளவை அதிகரிக்கவும் சென்னைக் குடிநீர் வாரியம் முடிவுசெய்திருக்கிறது. மழை எனும் மீட்பன் "தற்போது மேலும் சில குவாரிகளை அடையாளம் காணும் பணிகள் நடந்துவருகின்றன. மழை மட்டுமே இந்தச் சிக்கலில் சென்னை நகரை மீட்க முடியும்" என்கிறார் சென்னைக் குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். படத்தின் காப்புரிமை Getty Images சென்னை நகரைப் பொறுத்தவரை 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த 15 மண்டலங்களிலிலும் சேர்த்து, ஒரு நாளைக்கு 880 மில்லியன் லிட்டர் தண்ணீரை சப்ளை செய்வதாக சொல்லப்பட்டாலும் பொதுவாக 650 மில்லியன் லிட்டர் தண்ணீரே வழங்கப்பட்டுவந்தது. தற்போது கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக சென்னைக் குடிநீர் வாரியம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறது. ஆனால், விநியோகத்தின் போது ஏற்படும் இழப்பீடு ஆகியவற்றை கணக்கிட்டால், விநியோகிக்கப்படும் நீரின் அளவு சுமார் 425 - 450 மில்லியன் லிட்டர் அளவே இருக்கும். இதன் காரணமாக சென்னை நகரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் இருந்து தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் பல இடங்களில் பொதுமக்களுக்குள் சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படுவது வழக்கமாகியிருக்கிறது. ஐ.டி நிறுவனங்கள், உணவகங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், நிலைமை இன்னும் மோசமாகக்கூடும். புகைப்பட காப்புரிமை @Muthan_ @Muthan_ <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @Muthan_: #தவிக்கும்தமிழ்நாடு #தாகத்தில்தமிழகம் #TNCriesforWater Save Water. Plant More Trees. Stop Sand Mining. Now there is no water for agriculture. Very Soon it's gonna be no enough water to Drink. Wake up #TamilNadu " src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/Muthan_/status/1139529614068350982~/tamil/india-48667964" width="465" height="503"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @Muthan_</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@Muthan_</span> </span> </figure> "வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், வாய்ப்பிருப்பவர்களை வீட்டில் இருந்தப்படி பணி செய்ய சொல்லி இருக்கிறது மென் பொருள் நிறுவனங்கள். ஆனால், வீட்டிலும் நீர் இல்லாத போது எங்கிருந்து பணி செய்ய?" என்கிறார் தகவல் தொழிநுட்ப பணியாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் விநோத் களிகை. தாகமும், வன்முறையும் தண்ணீர் பிரச்சனை தனி மனித உறவுகளிலும் தாக்கம் செலுத்தி இருக்கிறது. தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் சண்டைகளும் நடந்துள்ளன. படத்தின் காப்புரிமை Getty Images தமிழக சட்டசபை சபாநாயகர் ப. தனபாலின் வாகன ஓட்டுநர் ஆதிமூலம் ராமகிருஷ்ணன் தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண்மணியை கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கி உள்ளார். இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். மாநில தலைநகரில் மட்டும் அல்ல தண்ணீர் பிரச்சனை. காவிரி நதி பாயும் டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நிலையும் இதுதான். அங்கு தண்ணீர் பிரச்சனையில் ஆனந்த் பாபு எனும் நபர் கொல்லப்பட்டிருக்கிறார். "தஞ்சாவூர் மாவட்டம் விளார் பகுதியில், தண்ணீர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, அந்தப் பகுதியை சேர்ந்த குமார் எனும் நபர் அதிக குடங்கள் பிடிக்க, இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் ஆனந்த் பாபு. இதனால் கோபமடைந்த குமார் மற்றும் அவரது இரு மகன்கள் ஆனந்த் பாபுவை தாக்கி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார்கள்" என்கின்றனர் போலீஸார். நிலத்தடி நீர்மட்டம் 'மழைக்காலத்திற்குப் பிறகு, ஏரிகள் எல்லாம் நிறைந்திருக்கும்போது குடிநீர் வாரியம் ஒரு நாளைக்கு சராசரியாக 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குகிறது என்றால், அந்த நேரத்தில் நிலத்தடி நீர்மட்டமும் நன்றாக இருக்கும். அதனால், குடிநீர் வாரியத்தின் பணிகள் எளிதாக இருக்கும். ஆனால், தற்போது நகரின் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டமும் வற்றிவிட்ட நிலையில், முழுக்க முழுக்க மக்கள் குடிநீர் வாரியத்தையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இது நிலைமையை மேலும் கடுமையாக்கியிருக்கிறது' என்கிறார் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர். படத்தின் காப்புரிமை Getty Images சென்னையில் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் குறையவில்லை, ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாத காலக்கட்டத்தில் மட்டும் தூத்துக்குடி திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மட்டும் கணிசமான அளவில் குறைந்திருக்கிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 0.87 மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர் அளவு குறைந்திருக்கிறது என்று தரவுகள் கூறுகின்றன. குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதுபோக, லாரிகள் மூலமும் தண்ணீர் விநியோகம் செய்கிறது குடிநீர் வாரியம். ஒரு நாளைக்கு 9,000 லாரிகள் நீர் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்குப் பணம் செலுத்தி லாரி நீரைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும், பதிவுசெய்தால் குறைந்தது 20 நாட்களாவது காத்திருக்க வேண்டியிருக்கிறது. வரும் நாட்களில் இந்தக் காத்திருப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். "இப்போதுதான் பேரழிவு துவங்கியிருக்கிறது. இந்த ஆண்டும் மழை பெய்யாவிட்டால் முழுமையான பேரழிவை சந்திப்போம்" என்கிறார்கள் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள். மாற்றம் வேண்டும் இப்போது நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு நிலத்தடி நீரை மேம்படுத்துவதே ஆகும் என்கிறார் நீர் செயற்பாட்டாளர் நக்கீரன். படத்தின் காப்புரிமை Getty Images "இதற்கு முன்பும் இவ்வாறு மழை இல்லாமல் இருந்திருக்கிறது. இது போன்ற வறட்சியை சென்னை சந்தித்து இருக்கிறது. அப்போதெல்லாம், நிலத்தடி நீர் கை கொடுத்தது. இப்போது நிலத்தடி நீரும் கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது. பெய்கின்ற மழையில் 16 சதவீதமாவது நிலத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் 5 சதவீதம் கூட நிலத்திற்குள் செல்வதில்லை. அதற்கு காரணம், முழுக்க முழுக்க கான்கிரீட்மயமான கட்டுமானம். இதில் மாற்றம் கொண்டுவராமல் நிலத்தடி நீரை மேம்படுத்துவதும் சாத்தியமில்லை" என்கிறார் நக்கீரன். கழிவு நீர் ஏரிகளை முழுமையாகத் தூர்வாருவது, கடல் நீரைச் சுத்திகரிக்கும் மையங்களை அமைப்பது போன்றவை நிரந்தரமான தீர்வாக இருக்காது என்கிறார்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள். ஏற்கனவே பயன்படுத்திய நீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதே சரியான, நீடித்த தீர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் அவர்கள். சென்னை நகரின் கழிவு நீரைச் சுத்திகரித்து வழங்கும் திட்டத்திற்கான முதற்கட்ட தொழில்நுட்ப அங்கீகாரத்தை சென்னை ஐஐடி மே 30ஆம் தேதி வழங்கியிருக்கிறது. இதையடுத்து இதற்கான இயந்திரங்களை வடிவமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வர ஜனவரி மாதம் ஆகிவிடும். இந்த கழிவு நீரைச் சுத்திகரிக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படும்பட்சத்தில் சென்னை நகரின் கழிவுநீரில் 70 சதவீதத்தை மீண்டும் குடிநீராக்கி விநியோகிக்க முடியும். https://www.bbc.com/tamil/india-48667964

மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்!

3 months ago
மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்! In இலங்கை June 18, 2019 9:33 am GMT 0 Comments 1247 by : Dhackshala மனங்களை வெல்லாது மதத்தை முன்னுரிமைப்படுத்தி வருவதால் தோல்வி அடைந்த நாடாக இலங்கை மாறி வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டில் அதிகாரபூர்வமற்ற அதிகாரிகளாக பேரின மதவாதிகள் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். நாட்டின் சமகால நிலைமைகள் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில மேலும் தெரிவிக்கையில், “கடந்த 30 வருட காலமாக இடம்பெற்று வந்த ஆயுத மோதலை ஆட்சியாளர்கள் வெற்றிகொண்டிருந்தாலும் நாட்டிலுள்ள பல இனத்தவர்களினதும் மனங்களை வெல்லத் தவறிவிட்டனர். இதனாலேயே இப்பொழுது மதவாத நெருக்கடி அதிகரித்து நாளுக்கு நாள் புதுப்புது வடிவத்தில் விஸ்வரூபமெடுத்து வருகிறது. பேரினவாத மதவாதம் இந்த நாட்டைப் பிளவுபடுத்தியுள்ளது. அதிகாரமளிக்கப்படாத ஆனால், அதிகாரத்தை செயற்படுத்தும் அதிகாரிகள் என மதவாதிகள் அறைகூவல் விடுத்து ஒரு சில இனவாதிகளை தவறாக வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த நிலைமையை ஆட்சியாளர்கள் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதை உற்றுக் கவனிக்கின்றபோது அதன் இனவாத ஆபத்து ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டும் என்றே எண்ணத்தோன்றுகிறது. இதற்கும் மேலதிகமாக ஒருபடி மேலே சென்று ‘இனிமேல் நாட்டில் தீர்க்கப்படாமல் இருக்கும் சகல பிரச்சினைகளுக்கும் சமயவாதிகளே தீர்வைப் பெற்றுத் தருவார்கள்’ என கடுங்கோட்பாட்டு பேரினவாத மதவாதிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். இது எங்கு சென்று முடியுமென அச்சம் ஏற்படுகிறது. பேரினவாதமும் அயோக்கிய அரசியலும் ஒன்றிணைந்துள்ளதன் விளைவு இதுவரை நடந்த அழிவுகளைவிட இன்னமும் இந்த நாட்டை பேரழிவுக்கு இட்டுச் செல்லும். அவ்வாறு இல்லாமல் இருக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இன ஐக்கிய செயற்பாட்டாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/மதத்தை-முன்னுரிமைப்படுத/

In இலங்கை     June 18, 2019 9:33 am GMT     0 Comments     1247     by : Dhackshala

மனங்களை வெல்லாது மதத்தை முன்னுரிமைப்படுத்தி வருவதால் தோல்வி அடைந்த நாடாக இலங்கை மாறி வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டில் அதிகாரபூர்வமற்ற அதிகாரிகளாக பேரின மதவாதிகள் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.

நாட்டின் சமகால நிலைமைகள் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில மேலும் தெரிவிக்கையில், “கடந்த 30 வருட காலமாக இடம்பெற்று வந்த ஆயுத மோதலை ஆட்சியாளர்கள் வெற்றிகொண்டிருந்தாலும் நாட்டிலுள்ள பல இனத்தவர்களினதும் மனங்களை வெல்லத் தவறிவிட்டனர்.

இதனாலேயே இப்பொழுது மதவாத நெருக்கடி அதிகரித்து நாளுக்கு நாள் புதுப்புது வடிவத்தில் விஸ்வரூபமெடுத்து வருகிறது. பேரினவாத மதவாதம் இந்த நாட்டைப் பிளவுபடுத்தியுள்ளது.

அதிகாரமளிக்கப்படாத ஆனால், அதிகாரத்தை செயற்படுத்தும் அதிகாரிகள் என மதவாதிகள் அறைகூவல் விடுத்து ஒரு சில இனவாதிகளை தவறாக வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலைமையை ஆட்சியாளர்கள் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதை உற்றுக் கவனிக்கின்றபோது அதன் இனவாத ஆபத்து ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டும் என்றே எண்ணத்தோன்றுகிறது.

இதற்கும் மேலதிகமாக ஒருபடி மேலே சென்று ‘இனிமேல் நாட்டில் தீர்க்கப்படாமல் இருக்கும் சகல பிரச்சினைகளுக்கும் சமயவாதிகளே தீர்வைப் பெற்றுத் தருவார்கள்’ என கடுங்கோட்பாட்டு பேரினவாத மதவாதிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். இது எங்கு சென்று முடியுமென அச்சம் ஏற்படுகிறது.

பேரினவாதமும் அயோக்கிய அரசியலும் ஒன்றிணைந்துள்ளதன் விளைவு இதுவரை நடந்த அழிவுகளைவிட இன்னமும் இந்த நாட்டை பேரழிவுக்கு இட்டுச் செல்லும். அவ்வாறு இல்லாமல் இருக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இன ஐக்கிய செயற்பாட்டாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/மதத்தை-முன்னுரிமைப்படுத/

மக்களவையின் 2ஆம் கூட்டத்தொடர்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவிப்பிரமாணம்

3 months ago
மக்களவையின் 2ஆம் கூட்டத்தொடர்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவிப்பிரமாணம் In இந்தியா June 18, 2019 9:07 am GMT 0 Comments 1140 by : Yuganthini மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றனர் 17ஆவது மக்களவையின் இரண்டாம் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பதில் சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். குறித்த பதவியேற்பு நிகழ்வில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்கான் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாண்டே, தனது பதவியை முதலில் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து சிவசேனா உறுப்பினர் கிருபாள் பாலாஜி மராட்டிய மொழியில் பதவியேற்றார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சன்னிதியோல் ஆங்கிலத்திலும் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தமிழிலும் பதவியேற்றனர். இவர்களைத் தொடர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி வீராசாமி (வடசென்னை), தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), தயாநிதிமாறன் (மத்திய சென்னை), டி.ஆர்.பாலு, (ஸ்ரீபெரும்புதூர்), செல்வம் (காஞ்சிபுரம்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டொக்டர் செல்லக்குமார் (கிருஷ்ணகிரி), செந்தில்குமார் (தர்மபுரி), விஷ்ணுபிரசாத் (ஆரணி), ரவிக்குமார் (விழுப்புரம்), ஆ.ராசா (நீலகிரி), திருமாவளவன் (சிதம்பரம்), திருநாவுக்கரசர் (திருச்சி), கனிமொழி (தூத்துக்குடி), பாரிவேந்தர் (பெரம்பலூர்), பழனி மாணிக்கம் (தஞ்சாவூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), நவாஸ்கனி (இராமநாதபுரம்) ஆகியோர் தமிழில் பதவியேற்றனர். இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்காரி, ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட 313 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். அந்தவகையில் புதிய சபாநாயகர் தேர்வு நாளை நடைபெறுவதுடன் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று பொருளாதார ஆய்வு அறிக்கை ஜூலை 4ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பின்னர் எதிர்வரும் 5ஆம் திகதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவு – செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மக்களவையின்-2ஆம்-கூட்டத்/

In இந்தியா     June 18, 2019 9:07 am GMT     0 Comments     1140     by : Yuganthini

kanimoli-1-720x450.jpg

மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றனர்

17ஆவது மக்களவையின் இரண்டாம் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது பதில் சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

குறித்த பதவியேற்பு நிகழ்வில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்கான் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாண்டே, தனது பதவியை முதலில் பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து சிவசேனா உறுப்பினர் கிருபாள் பாலாஜி மராட்டிய மொழியில் பதவியேற்றார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சன்னிதியோல் ஆங்கிலத்திலும் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தமிழிலும் பதவியேற்றனர்.

இவர்களைத் தொடர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி வீராசாமி (வடசென்னை), தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), தயாநிதிமாறன் (மத்திய சென்னை), டி.ஆர்.பாலு, (ஸ்ரீபெரும்புதூர்), செல்வம் (காஞ்சிபுரம்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டொக்டர் செல்லக்குமார் (கிருஷ்ணகிரி), செந்தில்குமார் (தர்மபுரி), விஷ்ணுபிரசாத் (ஆரணி), ரவிக்குமார் (விழுப்புரம்), ஆ.ராசா (நீலகிரி), திருமாவளவன் (சிதம்பரம்), திருநாவுக்கரசர் (திருச்சி), கனிமொழி (தூத்துக்குடி), பாரிவேந்தர் (பெரம்பலூர்), பழனி மாணிக்கம் (தஞ்சாவூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), நவாஸ்கனி (இராமநாதபுரம்) ஆகியோர் தமிழில் பதவியேற்றனர்.

இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்காரி, ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட 313 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  நேற்று பதவியேற்றனர்.

அந்தவகையில் புதிய சபாநாயகர் தேர்வு நாளை நடைபெறுவதுடன் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று பொருளாதார ஆய்வு அறிக்கை ஜூலை 4ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

பின்னர் எதிர்வரும் 5ஆம் திகதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவு – செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மக்களவையின்-2ஆம்-கூட்டத்/

மக்களவையின் 2ஆம் கூட்டத்தொடர்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவிப்பிரமாணம்

3 months ago
மக்களவையின் 2ஆம் கூட்டத்தொடர்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவிப்பிரமாணம் In இந்தியா June 18, 2019 9:07 am GMT 0 Comments 1140 by : Yuganthini மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றனர் 17ஆவது மக்களவையின் இரண்டாம் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பதில் சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். குறித்த பதவியேற்பு நிகழ்வில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்கான் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாண்டே, தனது பதவியை முதலில் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து சிவசேனா உறுப்பினர் கிருபாள் பாலாஜி மராட்டிய மொழியில் பதவியேற்றார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சன்னிதியோல் ஆங்கிலத்திலும் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தமிழிலும் பதவியேற்றனர். இவர்களைத் தொடர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி வீராசாமி (வடசென்னை), தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), தயாநிதிமாறன் (மத்திய சென்னை), டி.ஆர்.பாலு, (ஸ்ரீபெரும்புதூர்), செல்வம் (காஞ்சிபுரம்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டொக்டர் செல்லக்குமார் (கிருஷ்ணகிரி), செந்தில்குமார் (தர்மபுரி), விஷ்ணுபிரசாத் (ஆரணி), ரவிக்குமார் (விழுப்புரம்), ஆ.ராசா (நீலகிரி), திருமாவளவன் (சிதம்பரம்), திருநாவுக்கரசர் (திருச்சி), கனிமொழி (தூத்துக்குடி), பாரிவேந்தர் (பெரம்பலூர்), பழனி மாணிக்கம் (தஞ்சாவூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), நவாஸ்கனி (இராமநாதபுரம்) ஆகியோர் தமிழில் பதவியேற்றனர். இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்காரி, ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட 313 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். அந்தவகையில் புதிய சபாநாயகர் தேர்வு நாளை நடைபெறுவதுடன் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று பொருளாதார ஆய்வு அறிக்கை ஜூலை 4ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பின்னர் எதிர்வரும் 5ஆம் திகதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவு – செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மக்களவையின்-2ஆம்-கூட்டத்/

நளினியின் விருப்பத்தை அறிந்து சொல்லுங்கள்: சட்டதரணிக்கு நீதிபதிகள் உத்தரவு!

3 months ago
நளினியின் விருப்பத்தை அறிந்து சொல்லுங்கள்: சட்டதரணிக்கு நீதிபதிகள் உத்தரவு! In இந்தியா June 18, 2019 10:10 am GMT 0 Comments 1117 by : Yuganthini காணொளி ஊடாக வழக்கு விசாரணைகளில் கலந்துகொள்வது தொடர்பான நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு நளினியின் சட்டத்தரணிகளிடம் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகவுள்ள நளினி, இங்கிலாந்தில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணை அனுமதி கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று (செவ்வாய் கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை கைதிகள் வருடத்துக்கு இரு முறை பிணையில் வெளிவருவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது. ஆனால் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக சிறையிலேயே உள்ள தனக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு நளினியினால் சட்டத்தரணி ஊடாக மனுவொன்றை உச்ச நீதிமன்றத்தில் அவர் கையளித்திருந்தார். குறித்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நளினியை உச்ச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகுமென அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையிலேயே நளினி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம் நீதிபதிகள், நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றுக்கு அறியத்தருமாறு உத்தரவிட்டதுடன் விசாரணைகளை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நளினிக்கு-உச்ச-நீதிமன்றம/

In இந்தியா     June 18, 2019 10:10 am GMT     0 Comments     1117     by : Yuganthini

nallini-44-720x450.jpg

காணொளி ஊடாக வழக்கு விசாரணைகளில் கலந்துகொள்வது தொடர்பான நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு நளினியின் சட்டத்தரணிகளிடம் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகவுள்ள நளினி, இங்கிலாந்தில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணை அனுமதி கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று (செவ்வாய் கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை கைதிகள் வருடத்துக்கு இரு முறை பிணையில் வெளிவருவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது. ஆனால் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக சிறையிலேயே உள்ள தனக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு நளினியினால் சட்டத்தரணி ஊடாக மனுவொன்றை உச்ச நீதிமன்றத்தில் அவர் கையளித்திருந்தார்.

குறித்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நளினியை உச்ச நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தினால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகுமென அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையிலேயே நளினி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம் நீதிபதிகள், நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றுக்கு அறியத்தருமாறு உத்தரவிட்டதுடன் விசாரணைகளை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நளினிக்கு-உச்ச-நீதிமன்றம/

நளினியின் விருப்பத்தை அறிந்து சொல்லுங்கள்: சட்டதரணிக்கு நீதிபதிகள் உத்தரவு!

3 months ago
நளினியின் விருப்பத்தை அறிந்து சொல்லுங்கள்: சட்டதரணிக்கு நீதிபதிகள் உத்தரவு! In இந்தியா June 18, 2019 10:10 am GMT 0 Comments 1117 by : Yuganthini காணொளி ஊடாக வழக்கு விசாரணைகளில் கலந்துகொள்வது தொடர்பான நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு நளினியின் சட்டத்தரணிகளிடம் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகவுள்ள நளினி, இங்கிலாந்தில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணை அனுமதி கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று (செவ்வாய் கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை கைதிகள் வருடத்துக்கு இரு முறை பிணையில் வெளிவருவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது. ஆனால் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக சிறையிலேயே உள்ள தனக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு நளினியினால் சட்டத்தரணி ஊடாக மனுவொன்றை உச்ச நீதிமன்றத்தில் அவர் கையளித்திருந்தார். குறித்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நளினியை உச்ச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகுமென அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையிலேயே நளினி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம் நீதிபதிகள், நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றுக்கு அறியத்தருமாறு உத்தரவிட்டதுடன் விசாரணைகளை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நளினிக்கு-உச்ச-நீதிமன்றம/

19 ஆவது திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி அதிகாரமற்றவர் – மனுஷ நாணயக்கார

3 months ago
19 ஆவது திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி அதிகாரமற்றவர் – மனுஷ நாணயக்கார In இலங்கை June 18, 2019 11:12 am GMT 0 Comments 1033 by : vithushan 19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் அற்றவர் என பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கட்டுபடுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமற்றவர். அரசியலமைப்பினூடாக நாட்டினதும் அரசாங்கத்தினதும் தலைவராக, பாதுகாப்பு அமைச்சராக, முப்படை தலைவராக ஜனாதிபதி செயற்படுகிறார். அதற்கமைவாக முப்படைகளின் தலைவராக யுத்தத்துக்கு அறிவித்தல், யுத்ததுக்கு அமைத்தல் போன்ற கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. எனினும் பாதுகாப்பு துறையின் அமைச்சர் என்ற வகையில் முப்படையினருடன் ஜனாதிபதி நெருங்கிய தொடர்பை வைத்துள்ளார். இது அரசியலமைப்பினூடாகவே பரிசீலிக்க வேண்டும். பாதுகாப்புத்துறை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களாகும்” என அவர் குறிப்பிட்டார். http://athavannews.com/19-ஆவது-திருத்த-சட்டம்-இருக/

In இலங்கை     June 18, 2019 11:12 am GMT     0 Comments     1033     by : vithushan

Manusha-Nanayakkara-1.jpg

19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் அற்றவர் என பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கட்டுபடுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமற்றவர். அரசியலமைப்பினூடாக நாட்டினதும் அரசாங்கத்தினதும் தலைவராக, பாதுகாப்பு அமைச்சராக, முப்படை தலைவராக ஜனாதிபதி செயற்படுகிறார்.

அதற்கமைவாக முப்படைகளின் தலைவராக யுத்தத்துக்கு அறிவித்தல், யுத்ததுக்கு அமைத்தல் போன்ற கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது.

எனினும் பாதுகாப்பு துறையின் அமைச்சர் என்ற வகையில் முப்படையினருடன் ஜனாதிபதி நெருங்கிய தொடர்பை வைத்துள்ளார்.

இது அரசியலமைப்பினூடாகவே பரிசீலிக்க வேண்டும். பாதுகாப்புத்துறை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இந்த அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களாகும்” என அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/19-ஆவது-திருத்த-சட்டம்-இருக/

வாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த

3 months ago
வாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த In இலங்கை June 18, 2019 9:44 am GMT 0 Comments 1589 by : vithushan எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார் இதன் காரணமாகவே தான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். எதிர்க்கட்சி தலைவருக்கான வீடு, வாகனம் என்பவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் கையளிக்கவில்லை. இந்நிலையிலேயே தான் குறித்த கோரிக்கையை விடுத்ததாக தெரிவித்தார். http://athavannews.com/வாகனத்தையும்-வீட்டையும்/

In இலங்கை     June 18, 2019 9:44 am GMT     0 Comments     1589     by : vithushan

mahinda-sampanthan.jpg

எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்

இதன் காரணமாகவே தான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்க்கட்சி தலைவருக்கான வீடு, வாகனம் என்பவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் கையளிக்கவில்லை. இந்நிலையிலேயே தான் குறித்த கோரிக்கையை விடுத்ததாக தெரிவித்தார்.

http://athavannews.com/வாகனத்தையும்-வீட்டையும்/

சலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்!

3 months ago
சலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்! In இலங்கை June 18, 2019 10:54 am GMT 0 Comments 1076 by : Dhackshala அமைச்சரவைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கடந்த வாரம் ஜனாதிபதியினால் அமைச்சரவை ஒத்திவைக்கப்பட்டது என்ற பரவலான கருத்து நிலவிவருகின்ற நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடியது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டிருந்தார். இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டதோடு, இந்தக் கூட்டம் சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது. இதன்போது சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். வழமையாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதைப்போல, அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பாகவே ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். விசேடமாக எந்தவொரு விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவில்லை என்றும் அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பில் உரிய அமைச்சர்களினால் விளக்கங்கள் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சர்களான லகி ஜயவர்த்தன, அனோமா கமகே மற்றும் காமினி ஜயவிக்ரம ஆகியோரும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமாக எதுவும் கலந்துரையாடப்படவில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அமைச்சரவையில்-சர்ச்சைக்/