Aggregator

இந்த இடம் தெரியுமா..?

2 months 3 weeks ago
எலியட்ஸ் கடற்கரை சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்த கடற்கரை ஆகும். மெரீனா கடற்கரையின் தெற்கில் அமைந்த இக்கடற்கரை அருகில் அஷ்டலட்சுமி கோயிலும் வேளாங்கன்னி தேவாலயமும் அமைந்துள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்கடற்கரை வெள்ளையர்கள் மட்டுமே வரக்கூடியதாக இருந்தது. முந்தைய சென்னை ஆளுனர் எட்வர்ட் எலியட்டின் பெயரால் வழங்கப்பட்ட இந்தக் கடற்கரை பரவலாக 'பெசன்ட் நகர் கடற்கரை' என்றே அறியப்படுகிறது. சென்னையின் இளைய தலைமுறையினர் கூடும் இடமாக தற்போது இது உள்ளது. பல வகைப்பட்ட உணவகங்களும் மனமகிழ்மன்றங்களும் அவர்களுக்கான ஈர்ப்பை கூட்டுகின்றன. வார இறுதி நாட்களில் வண்டிகளை நிறுத்தக்கூட இடம் கிடைக்காத நிலை உள்ளது. கார்ல் ஸ்மித் நினைவுச் சின்னம் (karl schmidt memorial) பெசன்ட் நகர் கடற்கரையில் கோயிலின் நுழைவு வாயில்போல உள்ள கட்டிடத்தைப் பல சினிமாவில் பார்த்திருப்போம். இந்தக் கட்டிடம் டச்சு மாலுமி ஸ்மித் நினைவாகக் கட்டப்பட்டது. சென்னை இங்கிலாந்து அரசாட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில் பெசண்ட் நகர் கடற்கரையில் 1930-ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று விளையாடிக்கொண்டிருந்த ஒரு ஆங்கிலச் சிறுமி கடல் அலைகளுக்குள் சிக்கிக் கொண்டுவிட்டாள். இதைக் கண்ட டச்சு மலூமி, அந்தச் சிறுமியைப் போராடிக் காப்பாற்றியிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மாலுமி கடல் அலைகளுக்குள் சிக்கி இறந்துபோய்விட்டார். அவரது வீரத்தைப் போற்றும் வகையில் சென்னை ஆளுநர் அவருக்கு நினைவகம் எழுப்ப உத்தரவிட்டார். அதுதான் இந்தக் கட்டிடம். சுதந்திரம் அடைந்த பிறகு கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்தக் கட்டிடத்தை இப்போதுதான் 2014-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி புதுப்பித்துள்ளது. - தமிழ் இந்து குறிப்பு.

மெக் டொனால்ட் தலைமை செயல் அதிகாரி பணி நீக்கம், பெண் ஊழியருடனான உறவு காரணமா?

2 months 3 weeks ago
ஊழியருடன் உறவு, பணியிலிருந்து நீக்கப்பட்ட மெக் டொனால்ட் அதிகாரி மெக் டொனால்ட் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கை பணி நீக்கம் செய்துள்ளது. அவர் ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES நிறுவன கட்டுபாடுகளை ஸ்டீவ் மீறிவிட்டதாக மெக் டொனால்ட் நிறுவனம் கூறி உள்ளது. ஸ்டீவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். குழுமம் எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறேன் எனக் கூறி உள்ளார். 52 வயதான ஸ்டீவ் விவகாரத்தானவர். 1993 முதல் மெக் டொனால்ட் குழுமத்தில் பணியாற்றுகிறார். https://www.bbc.com/tamil/global-50284904

நயாகரா நீர்வீழ்ச்சி அருகே 100 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய படகு வெளிவந்தது

2 months 3 weeks ago
கனடாவில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய படகு ஒன்று நீருக்கு மேலே வந்துள்ளது. கடந்த 1918 ஆம் ஆண்டு அந்தப் படகு ஹார்ஸ் ஷூ அருவிக்கு அருகே தரைதட்டிய பின் நீருக்குள் மூழ்கியது. சுமார் 164 அடி நீளம் கொண்ட அந்தப் படகு கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக நீருக்கு வெளியே வந்தது. பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட அந்தப் படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் நீரால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. தற்போது அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு மேலும் இழுத்துச் செல்லப்பட்டு அருவியிலிருந்து கீழே தள்ளப்படும் என நயாகரா நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தப் படகினைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். https://www.polimernews.com/dnews/87356/நயாகரா-நீர்வீழ்ச்சி-அருகே-100ஆண்டுகளுக்கு-முன்-நீரில்மூழ்கிய-படகு-வெளிவந்தது

சஜித்திற்கு ஆதரவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சந்திரிகா கைச்சாத்து

2 months 3 weeks ago
சந்திரிகா உட்பட சு.கவினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மத்திய குழுவில் நாளை தீர்க்கமான முடிவு கட்சியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டுவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அணியினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். 5ஆம் திகதி கூட்டத்தில் கலந்துகொள்பவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவிகளும் பறிபோகும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். என்றாலும், 'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கான மாநாடு 5ஆம் திகதி (நாளை) நடைபெறும் என்பதுடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் பீதியை ஏற்படுத்துவதாகவும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து எம்மை நீக்க முடியாதென்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க சு.கவின் மத்திய செயற்குழு முடிவுசெய்திருந்தமையால் கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஓர் அணியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் ஓர் அணியென சு.க இரு துருவங்களாக பிரிவடைந்துள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையில் உருவாக்கப்பட்ட ஜனநாயக தேசிய முன்னணியில் சந்திரிகா இணைந்துகொண்டதுடன், கூட்டணி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தார். நாளை 5ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள மாநாட்டில் சஜித் பிரேமதாசவுக்கான உத்தியோகப்பூர்வமாக ஆதரவை சந்திரிக்கா குமாரதுங்க அறிவிக்க உள்ளார். இந்நிலையில், சந்திரிகாவின் தரப்பின் செயற்பாடுகளுக்கு சு.கவின் பொதுச் செயலாளர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதென சு.கவின் மத்திய செயற்குழு முடிவெடுத்துள்ளது. அதற்கு மாறாக நடந்துகொள்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும். நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளும் சந்திரிகா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிபோகும் வகையில் எமது மத்திய குழுவின் தீர்மானம் அமையக்கூடும். அத்துடன், கலந்துகொள்ளும் அனைத்து தொகுதி அமைப்பாளர்களின் பதவியும் பறிபோகும் என்றார். சுப்பிரமணியம் நிஷாந்தன் https://www.thinakaran.lk/2019/11/04/அரசியல்/43248/சந்திரிகா-உட்பட-சுகவினர்-மீது-ஒழுக்காற்று-நடவடிக்கை

சுமந்திரனே பாராளுமன்றத்தில் யாரை கேட்டு பௌத்தத்துக்கு முதலிடம் கொடுத்தீர் - காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள்

2 months 3 weeks ago
இந்த அறுந்த ரீலையே இவ்வளவுகாலமும் உங்கடை தலைகள் சொல்லியது புதிதாக ஒன்றுமில்லை உங்களிடமும் நாங்கள் பலவீனமான நிலைதான் ஓகே குறைந்த பட்சம் முஸ்லீம் அரசியல் தலைவர்களை போல் தன்னும் தமிழ்மக்களுக்கு விசுவாசமாய் இருங்கள் என்றமே அப்படி கூட இருக்கமுடியவில்லை உங்கள் ஆட்களுக்கு அதுசரி வாலன்றியாக தலையை குடுக்கிறிங்கள் நீங்கள் பெரிய டான் போல் உள்ளது .

முதலீடுகள் செய்வதற்கும், எளிதாக தொழில் புரிவதற்கும் இந்தியாவுக்கு வாருங்கள்...பிரதமர் மோடி அழைப்பு..!

2 months 3 weeks ago
இவர் ஒரு பக்கம்.....எரிச்சலைக் கிளப்பிறார்..... மை லோர்ட்..! முழு இந்தியாக்காரரும்....இப்ப இந்தப் பக்கம் தான் ! பொருட்கள் ஏற்றி இறக்குதல்....பார ஊர்தி செலுத்துதல், பல் பொருள் அங்காடி பொருட்கள் வினியோகம் போன்ற துறைகள் இப்போது இவர்கள் கையில் தான் உள்ளது! சில ஏரியாக்களில்....வீட்டு விலைகள் இவர்களால்....விரைவாக அதிகரிக்கின்றன! !

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்த பங்களாதேஷ்

2 months 3 weeks ago
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் முஷ்பிகுர் ரஹிமின் அசத்தலான ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது. டெல்லியில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. 149 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. லிட்டன் தாஸ் 7 ஓட்டத்துடனும், மொஹமட் நைம் 26 ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 39 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க அணியின் வெற்றிக்காக பெரிதும் போராட்டிய முஷ்பிகுர் ரஹிம் 43 பந்துகளில் 60 ஓட்டத்துடனும், மாமதுல்லா 15 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி 2005 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. இன்றைய இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையிலான மோதல், ஆண்களுக்கான 1000 ஆவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியாகும். இப் போட்டியில் இந்திய அணியினை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்திய பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. அது மாத்திரமன்றி பங்களாதேஷ் அணி இந்த வெற்றியானது சர்வதேச இருபதுக்கு - 20 அரங்கில் இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/68117

இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் முஷ்பிகுர் ரஹிமின் அசத்தலான ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது.

INDM1_1515.jpg

டெல்லியில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது.

149 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

லிட்டன் தாஸ் 7 ஓட்டத்துடனும், மொஹமட் நைம் 26 ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 39 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க அணியின் வெற்றிக்காக பெரிதும் போராட்டிய முஷ்பிகுர் ரஹிம் 43 பந்துகளில் 60 ஓட்டத்துடனும், மாமதுல்லா 15 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

A70I1760.jpg

சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி 2005 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. இன்றைய இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையிலான மோதல், ஆண்களுக்கான 1000 ஆவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியாகும்.

இப் போட்டியில் இந்திய அணியினை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்திய பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. அது மாத்திரமன்றி பங்களாதேஷ் அணி இந்த வெற்றியானது சர்வதேச இருபதுக்கு - 20 அரங்கில் இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/68117

சௌதி அரம்கோ: பொதுச்சந்தையில் இறங்கும் அரசின் எண்ணெய் நிறுவனம்

2 months 3 weeks ago
சௌதி அரசின் அரம்கோ நிறுவனம், ரியாத் பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடப்போவதை உறுதி செய்துள்ளது. தனது நிறுவனத்தின் 1% அல்லது 2% பங்குகளை சௌதி வெளியில் விடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சௌதி அரம்கோவின் மதிப்பு 1.2 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. `வரலாற்று சிறப்பு மிக்க நகர்வு` வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடுவது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல காலங்களாக பங்குச்சந்தையில் நுழைவது குறித்து நடந்த பேச்சுவார்த்தைகளில், வெளிநாட்டு பங்குச்சந்தைகள் குறித்து பேசப்பட்டபோதிலும், தற்போது இந்த திட்டம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது அரம்கோ. "சர்வதேச பங்குச்சந்தையில் பட்டியலிடுவது குறித்து தகுந்த நேரத்தில் உங்களுக்கு அறிவிக்கப்படும். தற்போது நாங்கள், சௌதி பங்குச்சந்தை வரை மட்டுமே செல்கிறோம்" என்று அரம்கோவின் நிறுவனர் யசிர் அல்-ருமய்யன் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஐ.ஜீ குழுமத்தின் மூத்த பங்குச்சந்தை ஆய்வாளரான கிரிஸ் பௌகேம்ப், "அரம்கோவில் முதலீடு செய்வது என்பதில், அதற்கே உரிய சிக்கல்களும் உள்ளன. அதுமட்டுமின்றி, எண்ணெயின் விலை ஏறுவதும் மிகவும் கடினமாகவே இருக்கும்" என்றார். இதனால் அரசியல் ரீதியாகவும், திட்டமிடுதலிலும் அந்தப் பகுதியில் இயங்கும் எந்த ஒரு நிறுவனத்திற்குமே ஆபத்து அதிகம், இதில் இந்நிறுவனம், சௌதி அரசின் ஒரு அங்கமாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த செப்டம்பர் மாதம் அப்குவை எண்ணேய் கிணறு மற்றும் குரைஸ் எண்ணெய் வயல்களில் நடந்த ட்ரோன் தாக்குதல்களின்போதே, இத்தகைய ஆபத்துகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகளவில், மிகவும் நம்பகத்தன்மை கொண்ட எண்ணெய் நிறுவனமாக அரம்கோ இருக்கிறது என்றும், இந்த நகர்வு `வரலாற்று சிறப்பு மிக்கது` என்றும் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் அரம்கோவின் தலைவர் அமின் நசீர் தெரிவித்துள்ளார். "இத்தகைய தாக்குதல்களால், நிறுவனத்தின் வணிகம், நிதி நிலை மற்றும் செயல்பாடுகளில் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கவில்லை" என்று அந்நிறுவனம் கூறுகிறது. சௌதி அரம்கோ என்பது என்ன? கடந்த 1933ஆம் ஆண்டு, சௌதி அரேபியாவும், கலிஃபோர்னியாவின் ஸ்டாண்டர்ட் எண்ணெய் நிறுவனமும், ஆய்வு செய்து எண்ணெயை தேடுவதற்காக குழிகளை தோண்டும் ஒரு ஒப்பந்தத்தை செய்தன. இதற்காக ஒரு புதிய நிறுவனமும் தொடங்கப்பட்டது. 1973 மற்றும் 1980க்கு இடைப்பட்ட காலத்தில் அந்த நிறுவனத்தை முழுவதுமாக சௌதி அரேபியா வாங்கியது. வெனிசுவேலாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணெய் சுரங்கங்கள் உள்ள நாடு சௌதி அரேபியா. தயாரிப்பில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது. அந்த நாட்டில் எண்ணெய் வளம் அனைத்தின் மீதும் இருக்கும் ஏகாபத்திய உரிமை, அவற்றை எடுப்பது எவ்வளவு மலிவாக உள்ளது என்பது போன்ற காரணங்களினாலேயே, சௌதி முக்கியத்துவம் பெறுகிறது. உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனம் இதுதான் என்கிறார், ஷெனிடிர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் சந்தை ஆய்வு இயக்குநர் டேவிட் ஹண்டர். ஏன் இந்நிறுவனம் இவ்வளவு மதிப்பு மிக்கது? சௌதி அரம்கோவின் மதிப்பு 1.2 ட்ரில்லியன் டாலர்கள் என்கிறது வணிக செய்தி நிறுவனமாக ப்ளூம்பர்க். ஆனால், சௌதி இதற்கான மதிப்பை 2 ட்ரில்லியன் என்று குறிப்பிட விரும்புகிறது. இவ்வளவு அதிக மதிப்பும், இந்நிறுவனத்தின் பங்குகள் சந்தைக்கு வர பலமுறை தாமதம் ஆகியதன் ஒரு முக்கிய காரணம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES "சமீப காலமாக ஏற்ற இறக்கம் காணும், பல தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து நகர்ந்து நிற்கிறது அரம்கோ. ஆனாலும், சிலிக்கான் வேலியில் உள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, அரம்கோவின் மதிப்பு என்ன என்பதை கணக்கிடுவதில் பிரச்னைகள் உள்ளன. 2 ட்ரில்லியன் டாலர்கள் என்பது நிறுவனத்தின் மதிப்பை மிகைப்படுத்தி கூறுவதுபோல இருந்தாலும், 1.2டிரில்லியன் என்பது, சௌதியின் முக்கிய அங்கமாக இருக்கும் இந்த அமைப்பை சற்று குறைத்து மதிப்பிடுவதாகவே உள்ளது" என்கிறார் ஐஜி நிறுவனத்தின் பௌசேம்ப். எப்படிப்பார்த்தாலும், இது மிகப்பெரிய லாபமான நகர்வே ஆகும். 2019ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 46.9 பில்லியன் டாலர்கள் ஆகும். இதன் பெருந்தொகை, ஈவுத்தொகையாக சௌதி அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு லாபம் ஈட்டும் எந்த ஒரு நிறுவனமும் அதிக விலை போகும். அதே அரையாண்டில், உலகில் மிகப்பெரிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த லாபம், 21.6 பில்லியன் டாலர்கள் ஆகும், அதேபோல அதிகமாக பட்டியலிடப்பட்ட எக்ஸான் மோபில் எண்ணெய் நிறுவனத்தின் லாபம் 5.5 பில்லியன் டாலர்கள் ஆகும். தயாரிப்பிற்கான விலையும் இதில் முக்கியமான ஒரு அம்சமாகும். வடக்குக்கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான அடி நீருக்குக்கீழே எண்ணெய் இருப்பதால், அதனை எடுப்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சௌதியில் எண்ணெய், நிலப்பரப்பிற்கு சற்று அருகிலேயே உள்ளது. சௌதியில் பல எண்ணெய் வயல்களில் எண்ணெய் எடுக்க மிகவும் குறைந்த விலையே ஆகிறது. சில வயல்களில் ஒரு பீப்பாய் எண்ணெய்யை எடுப்பதற்கான விலை 10 டாலர்களுக்கும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 60 டாலர்களாக உள்ளது. இந்த விலைகளில் உள்ள வித்தியாசமும் லாபமே. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஏன் சௌதி இந்நிறுவனத்தின் பங்குகளை விற்கிறது? எண்ணெய் மீதான சார்பை குறைத்துக்கொள்வதற்காக தனது நிறுவனத்தின் பங்குகளை சௌதி விற்கப் பார்க்கிறது. விஷன் 2030 என்ற பெயரில், இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு தரப்பை சேர்ந்த வணிகம் இடம்பெறவேண்டும் என விரும்புகிறார். இதில், நாட்டில் பரந்து விரிந்துள்ள பாலைவனத்தின் மூலமாக, சூரிய சக்தியை பெற, சோலார் திட்டமும் உள்ளது என்கிறார் ஹண்டர். கடந்த செப்டம்பர் மாதம், சர்வதேச சுற்றுலாவிற்காக தனது நாட்டின் கதவுகளை 49 நாடுகளுக்கு திறப்போம் என்றும், பெண் சுற்றுலாப்பயணிகளுக்கு ஆடை அணிவதில் உள்ள விதிகளில் சற்று விலக்கு அளிக்கப்படும் என்றும் சௌதி அரசாங்கம் கூறியிருந்தது. இதை ஒரு வரலாற்று நகர்வு என்று அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது அல்-கத்தீப் தெரிவித்தார். 2030இல் நாட்டின் ஜி.டி.பியில் 3% உள்ள சுற்றுலாத்துறையை 10%ஆக மாற்ற அந்நாடு விரும்புகிறது. கடந்த ஆண்டு, ஊடகவியலாளரான ஜமால் கஷோக்ஜியின் கொலை மற்றும் சமீபத்தில் நடந்த பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான நடவடிக்கையை தொடர்ந்து, சர்வதேச நிலையில் சௌதி எவ்வாறு பார்க்கப்படுகிறது, எந்த மாதிரியான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன ஆகியவற்றை தொடர்ந்தே இந்த நகர்வு ஏற்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜமால் கஷோக்ஜி ஏன் இவ்வளவு சர்ச்சைகள்? கஷோக்ஜியின் கொலையை தொடர்ந்து அரசியல் ரீதியாக சௌதியின் அரம்கோ, தற்போது சிக்கலில் உள்ளதாக கூறுகிறார் ஹண்டர். "சௌதி அரேபியாவின் மனித உரிமைகள் குறித்த கடந்த கால நிலையை பார்க்கையில், அந்நாடு எந்த விஷயத்திற்காக பேசப்பட்டாலும், அவர்களின் மனித உரிமைகளின் நிலையிலிருந்தே பார்க்கப்படுகிறது" என்கிறார் அவர். உலகளவில், எரிபொருட்கள் எடுப்பதற்கு எதிராக வலுத்துவரும் குரல்களும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எண்ணெயின் விலை கனிசமாக குறைந்திருப்பதும் ஒரு காரணம். கடந்த ஆண்டின் இறுதியில் எண்ணெயின் விலை 80 டாலர்களுக்கு அதிகமாக இருந்தது. "பல நிறுவனங்களும், எரிபொருட்களை எடுப்பதிலிருந்து விலகுவதற்காக பார்த்து வரும் நிலையில், இவ்வளவு பெரிய நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது என்பது சற்று சிக்கலான ஒன்றே. காரணம், பங்குகளை வாங்க முயல்பவர்கள் நெறிமுறைகளை நோக்கி செல்வது சமீப காலமாக அதிகரித்துள்ளது." மே மாதம், இதேபோன்று, நார்வேவின் 1 ட்ரில்லியன் மதிப்பிலான எண்ணெய் தயாரிப்பு நிறுவனமும், தனது நிறுவனத்தில் சில எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கான பங்குகளை விற்கும் என எதிர்பார்க்கலாம் என்ற பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆய்வு: கேட்டி பிரஸ்காட், பிபிசி வணிக செய்தியாளர் முன்பு, யாருக்குமே தெரியாமல் இருந்த அரம்கோ நிறுவனம், இந்த நகர்வை செய்வதற்காகவே கடந்த சில ஆண்டுகளாக ஆயத்தமாகி வந்ததுபோல தெரிகிறது. தங்களின் நிதி நிலைகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுவது, நிறுவனம் குறித்த கேள்வி-பதில் நிகழ்ச்சிகளை நடத்துவது, சமீபத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, சில ஊடகவியலாளர்களை களத்திற்கு அழைத்து சென்றதையும் நாம் பார்த்தோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES மேற்கத்திய நாடுகளை சேர்ந்த சில பெண் அதிகாரிகளை முக்கிய மேல்பொறுப்புகளில் இந்நிறுவனம் நியமித்துள்ளது. உள்ளூர் மக்கள், குறிப்பாக விவாகரத்தான பெண்கள் கூட பங்குகளை வாங்கலாம் என்றும், 10 பங்குகள் வாங்குவோருக்கு, ஒரு பங்கு கூடுதலாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-50282455