Aggregator

தமிழர் தந்த க்ளூ.. மீண்டும் தேடிய நாசா.. கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்.. என்ன நடந்தது?

2 months 3 weeks ago
" சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் விக்ரம் லேண்டர் எங்கு இருக்கலாம் என்ற க்ளூவை நாசாவிற்கு அனுப்பி இருக்கிறார். இதற்காக நாசா அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளது." பாராட்டுக்கள் !

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த ஈரோஸ் அருளர் காலமானார்!

2 months 3 weeks ago

eros-696x365.jpg

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த அருளர் எனப்படும் இ.அருள்பிரகாசம் இன்று காலமானார். ஈரோஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் அருளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அருள்பிரகாசம் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளியான அருளர், 77ம் ஆண்டு இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை கொழும்பில் தங்க வைத்து, லங்கா ராணி என்ற கப்பலில் வடக்கிற்கு தமிழ் இளைஞர்கள் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த பின்னணியில் லங்கா ராணி என்ற நாவலை எழுதியிருந்தார்.

அருளரின் குடும்பத்திற்கு சொந்தமான கன்னாட்டி பண்ணையில் தமிழீழ போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்கள் அனைவரும் தங்கியிருந்ததுடன், பயிற்சியும் பெற்றிருந்தனர். பிரபாகரனும் அந்த பண்ணையில் நீண்டகாலம் தங்கியிருந்தார்.

1980களில் புலம்பெயர்ந்து சென்ற அருளர், யுத்தத்தின் பின்னர் நாடு திரும்பி, யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தார்.

அருளரின் புதல்விகளில் ஒருவரான மியா உலகப்புகழ்பெற்ற பாடகியென்பது குறிப்பிடத்தக்கது.

http://www.pagetamil.com/91435/

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமா?

2 months 3 weeks ago
ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் செல்போனில் இருந்த தகவல் உண்மை - தடயவியல் ஆய்வறிக்கை 3 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா லத்தீஃபின் மொபைல் போனில் செய்யப்பட்ட தடயவியல் ஆய்வின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டியில் படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் நவம்பர் 9ஆம் தேதி தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பிறகு அந்த மாணவியின் செல்போனில், தன்னுடைய தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து எழுதப்பட்டது போன்ற குறிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. ஃபாத்திமாவின் செல்போனில் இரண்டு குறிப்புகள் இருந்தன. அவற்றில் ஒன்றில் ஐஐடி பேராசிரியர்கள் சிலரும் காரணம் எனச் சுட்டிக்காட்டும் ஸ்க்ரீன் ஷாட்டுகளும் ஊடகங்களுக்குக் கிடைத்தன. ஃபாத்திமா லத்தீஃப் இறந்த பிறகு அந்த வழக்கை விசாரித்துவந்த கோட்டூர்புரம் காவல் நிலையத்தில்தான் இந்த செல்போன் இருந்தது. செல்போன் கைப்பற்றப்பட்டபோது, அந்த போன் 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது. ஃபாத்திமாவின் உடலைப் பெறுவதற்காக வந்த உறவினர்களிடம் இருந்து சார்ஜர் பெறப்பட்டு, அந்த ஃபோன் சார்ஜ் செய்யப்பட்டது. இந்த நிலையில், காவல் நிலையத்திலிருந்து அந்த செல்போனை உறவினர்கள் எடுத்துச் சென்றுவிட்டனார். ஃபாத்திமா மரண வழக்கில் இந்த செல்போன் முக்கிய ஆதாரம் என்பதால், அந்த செல்போனை திருப்பி அளிக்கும்படி காவல்துறை பெற்றோரிடம் கூறியது. இதற்கிடையில், அந்த செல்போனில் இருந்த குறிப்புகளை குடும்பத்தினர் வெளியிட்டனர். செல்போன் குடும்பத்தினரிடம் சென்ற பிறகுதான் இதுபோல வெளியானது என்பதால், இது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டா அல்லது உண்மையான தகவலா என ஆராய வேண்டியிருந்தது. கடந்த வாரம் சென்னை வந்த ஃபாத்திமாவின் பெற்றோர் அந்த போனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அந்த ஃபோன் சென்னை மையலாப்பூரில் இருந்த தடயவியல் ஆய்வகத்தில் ஆய்வுசெய்யப்பட்டது. அந்த ஆய்வறிக்கை தற்போது நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட்டிருக்கிறது. பாத்திமா லத்தீப் மரணம்: தொடரும் ஐஐடி தற்கொலைகள் - சாதி மதப் பாகுபாடுதான் காரணமா? ''என் மகள் தற்கொலை செய்திருக்க மாட்டாள்'' - தந்தை லத்தீப் இதற்கிடையில், சென்னை ஐ.ஐ.டியில் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்பான வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 2006ஆம் ஆண்டில் இருந்து சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கும் நிலையில், இந்த மரணங்கள் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. கேரளாவின் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் இளைஞர் அணியின் தலைவரான சலீம் மடவூர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதுதான் ஃபாத்திமாவின் செல்போன் ஆய்வுசெய்யப்பட்டு வருவதாகக் கூறினார். ஃபாத்திமாவின் வழக்கை தற்போது சென்னை குற்றப் பிரிவு (சிசிபி) விசாரித்துவருகிறது. இந்நிலையில், "இந்த வழக்கை ஏன் மத்திய குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிடக்கூடாது?" என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பின் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. https://www.bbc.com/tamil/india-50642720

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்..

2 months 3 weeks ago
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால், தென் மாவட்ட மக்களுக்கு இனிப்பான செய்தி குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளால் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் விண்வெளி ஆய்விலும், ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்துவதிலும் அமெரிக்கா, ரஷியாவுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. உலக அளவில் மிக மிக குறைந்த செலவில் விண்ணுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவதில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. இதனால்தான் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து உள்பட வளர்ந்து விட்ட அனைத்து நாடுகளும் தங்களது செயற்கைகோள்களை மிக சுலபமாக விண்ணுக்கு அனுப்ப இந்தியாவின் உதவியை நாடி வருகின்றன. இஸ்ரோவின் இந்த வளர்ச்சி நமது எதிரி நாடான சீனாவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு போட்டியாக சீனா சில புதுமையான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இஸ்ரோவுக்கு போட்டியாக புதிய ஏவுதளங்களை உருவாக்கி வருகிறது. இதையடுத்து இந்தியாவும் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆந்திராவில் சென்னைக்கு அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்துதான் ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்தி வருகிறார்கள். அங்கு இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. எதிர்காலத்தில் மேலும் 2 ராக்கெட் ஏவுதளங்கள் தேவை என்ற நிலையில் நாடு முழுவதும் பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சில மாநிலங்கள் அந்த வாய்ப்பை தட்டி பறிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கின. ஆனால் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டின் தென் பகுதியில் ராக்கெட் ஏவு தளம் அமைந்தால் அது எதிர்கால தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்ற கருத்து அதிகரித்தது. தென் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட கடலோர பகுதிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு மிக அருகில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கலாம் என்று முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர். உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் அமைப்பு, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் ராக்கெட் ஏவுதளங்கள் வெவ்வேறு 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப அடிப்படையில் 2 இடங்களில் ராக்கெட் ஏவு தளம் இருப்பதுதான் சிறப்பானது, பாதுகாப்பானது என்ற அடிப்படையில் வளர்ந்த நாடுகள் அதை செய்துள்ளன. எனவே குலசேகரப்பட்டினத்தில் 3-வது, 4-வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வார இறுதியில் பாராளுமன்றத்தில் மத்திய அணுசக்தி துறை மந்திரி ஜிதேந்திரசிங் இதை உறுதிப்படுத்தினார். குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார். குலசேகரப்பட்டினம் இயற்கையாகவே விண்ணுக்கு ராக்கெட்டை அனுப்பும் சூழலில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒவ்வொரு தடவையும் ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தும்போது தெற்கு நோக்கி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டை ஏவும் போது அப்படி ஏவு முடிவது இல்லை. அதற்கு காரணம் இலங்கை குறுக்கிடுவது தான். சர்வதேச அளவில் ஒரு நாடு தனது விண்கலத்தை விண்ணுக்கும் செலுத்தும் போது மற்ற நாட்டின் மீது பறக்க விடக்கூடாது என்று விதி உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படும்போது அதன் நிலைகள் இலங்கை மீது விழுந்து விடாதபடி கவனமாக செலுத்த வேண்டியது உள்ளது. இலங்கை மீது பறப்பதற்கு முன்பாகவே ராக்கெட்டின் முதலாம், இரண்டாம் நிலைகள் எரிந்து கடலில் விழும் வகையில் செலுத்தப்பட வேண்டியது உள்ளது. அதுமட்டுமின்றி ராக்கெட்டை அதிகப்படியாக திசை திருப்பி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பறக்க விடப்படும் ராக்கெட்டுகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது இருப்பதோடு செலவும் அதிகமாகிறது. குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தினால் மிக சீக்கிரத்தில் அது தெற்கு திசை சென்று விடும். அதை திசை திருப்ப வேண்டிய வேலையும் இல்லை. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளி பாதை 13 டிகிரி கோணத்தில் உள்ளது. ஆனால் குலசேகரப்பட்டினத்தில் இருந்து தெற்கு நோக்கிய விண்வெளி பாதை 8 டிகிரி கோணத்தில் அமைந்து இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 13 டிகிரிக்கு ராக்கெட் செலுத்தப்படும்போது அது இலங்கையை சுற்றி 4 கட்டங்களாக பிரிந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டால் 3 கட்டங்களில் ராக்கெட்டை செலுத்தி விடலாம். இதனால் செலவும் மிக மிக குறைவு. அதாவது ஒவ்வொரு தடவையும் ராக்கெட்டை செலுத்தும்போதும் 120 கோடி ரூபாய் மிச்சமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான எரிபொருளும் மிக மிக குறைவாகவே தேவைப்படும். மேலும் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் மையம் குலசேகரப்பட்டினத்திற்கு மிக மிக அருகில் உள்ளது. எனவே ராக்கெட்டுக்கு தேவையான திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களை மகேந்திரகிரியில் இருந்து உடனடியாக கொண்டு வந்து விட முடியும். இவை மட்டுமின்றி ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. தட்பவெட்ப சூழ்நிலையும் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்தில் அதிக சாதகமாக உள்ளது. இதனால்தான் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இது தவிர ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்தில் அதிக எடையுள்ள விண்கலத்தை விண்ணுக்கு செலுத்த முடியும். மங்கள்யான் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 1,350 கிலோ எடையுடன் ஏவப்பட்டது. அது குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்பட்டு இருந்தால் 1,800 கிலோ எடை வரை சுமந்து சென்று இருக்கும். எனவே எதிர்காலத்தில் அதிக எடையுள்ள செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்துவதற்கு குலசேகரப்பட்டினம்தான் மிக மிக ஏற்றது என்ற முடிவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளும், மத்திய அரசும் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது முதல் கட்டமாக ராக்கெட் ஏவுதளத்துக்கு தேவயான 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. குலசேகரப்பட்டினத்தில் 3 கிராமங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள மாதவன் குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய 3 ஊர்களில் குறிப்பிட்ட பகுதிகள் ராக்கெட் ஏவுதளத்துக்கு தேவைப்படுவதாக கருதப்படுகிறது. இந்த ஊர்களில் நிலம் கையக்கப்படுத்துவதற்காக தற்காலிகமாக திருச்செந்தூரில் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. 8 பிரிவுகளை கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் பொறுப்பு ஏற்று செயல்பட தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 13 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவும் தாசில்தார் தலைமையில் இயங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் செயல்படுவதை கண்காணிக்க டி.ஆர்.ஓ. பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களது முதல் கட்ட பணிகளை தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அடிக்கடி பார்வையிட்டு வருகிறார். கலெக்டர் சந்தீப் நந்தூரி இது தொடர்பாக கூறுகையில், “ராக்கெட் ஏவு தளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தனியார் நிலங்கள் கையகப்படுத்தும்போது அதற்குரிய இழப்பீடுகள் சட்டப்படி வழங்கப்படும். ராக்கெட் ஏவு தளத்துக்கான 2,300 ஏக்கரில் 80 சதவீதம் இடம் பட்டா நிலங்களாக உள்ளது. 20 சதவீதம் நிலம் அரசின் புறம்போக்கு நிலங்கள் ஆகும். மாதவன்குறிச்சி அருகில் உள்ள கூடல்நகர் என்ற கிராமத்தில் 27 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும். அவர்களுக்கு தேவையான அளவுக்கு இழப்பீடு கொடுக்கப்படும். அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். ராக்கெட் ஏவுதளத்துக்காக கையகப்படுத்தும் 2,300 ஏக்கரில் 1,781 ஏக்கர் இடம் மாதவன்குறிச்சி கிராம சுற்று வட்டாரத்தை கொண்டு இருக்கும். அங்கு 131 ஏக்கர் இடம் அரசின் புறம்போக்கு நிலங்களாக உள்ளது. படுக்கபத்து மற்றும் பள்ளக்குறிச்சியில் 491 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். திருச்செந்தூர், கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 22 ஏக்கர் நிலம் ராக்கெட் ஏவு தளம் பகுதிக்காக கையகப்படுத்தப்படும். குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள அமரபுரம், அழகப்பப்புரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த பணியில் கிராம நிர்வாக அலுவலர்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் புராதான சின்னங்கள், கோவில்கள், மரங்களை கணக்கெடுத்து வருகிறார்கள். இன்னும் சில மாதங்களில் இந்த பணிகள் அனைத்தும் முடிவு பெற்று விடும். அதன் பிறகு ராக்கெட் தளம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். 2 ஆண்டுகளில் ராக்கெட் தளத்தை அமைத்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சில ஆயிரம் கோடி ரூபாய்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து விண்ணுக்கு ராக்கெட்டை ஏவி விடவேண்டும் என்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகளும் தீவிரமாக உள்ளனர். குலசேகரப்பட்டினத்தை விரைவாக தயார் படுத்தினால்தான் சீனாவுக்கு பதிலடி கொடுத்து சர்வதேச அளவில் விண்வெளி வர்த்தகத்தில் வெற்றி பெற முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்த திட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இது தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு தென் மாவட்ட மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டம் பற்றி பேசப்பட்டபோது தென் மாவட்ட மக்களிடம் எதிர்பார்ப்பு உருவானது. 2013-ம் ஆண்டு முதல் இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் கனிமொழி எம்.பி. தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதோடு தென் மாவட்ட மக்கள் சார்பிலும் மனுக்கள் வழங்கப்பட்டன. அவை அனைத்துக்கும் வெற்றி கிடைக்கும் வகையில் தற்போது குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளத்துக்கான தொடக்க பணிகள் நடந்து வருகின்றன. இது தென் மாவட்ட மக்களுக்கு இனிப்பான செய்தியாக மாறி உள்ளது. ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி கடலோர பகுதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருகின்றன. தூத்துக்குடி துறைமுகம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. அவற்றுக்கு இடையே குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளமும் சேர்ந்து கொள்ளும்போது தென் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி பிடிக்கும். இது தென் தமிழக மக்களின் வாழ்வையே நிச்சயமாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. மாலை மலர்

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 3 weeks ago
வணக்கம் வாத்தியார்......! வேல்விழி போடும் தூண்டிலே நான் விழலானேன் தோளிலே நூலிடை தோயும் நோயிலே நான் வரம் கேட்கும் கோயிலே அன்னமே எந்தன் சொர்ணமே -- உந்தன் எண்ணமே வானவில் வர்ணமே கண்ணமே மது கிண்ணமே - அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே என்னையே தொல்லை பண்ணுமே பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே.......! ---இந்த மான் உந்தன் சொந்த மான்----

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தகவல்களை மறைக்க ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக சந்தேகம்

2 months 3 weeks ago
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தகவல்களை மறைக்க ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக சந்தேகம் 13 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைப்பதற்கான முயற்சிகளை சில அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை முதற்தடவையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி போதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர். ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜானக்க டி சில்வா தலைமையிலான குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு செல்கிறதா இலங்கை சுற்றுலாத் துறை? இலங்கை ஈஸ்டர் குண்டு தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், உரிய அதிகாரிகள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில், கடமை தவறிய அதிகாரிகள் அதனை மறைப்பதற்காக பொய்யான ஆவணங்களை தயாரித்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர். தாக்குதலுக்கான காரணங்களை உரிய முறையில் இனங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தான் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு சபை நாளாந்தம் ஒன்று கூடியதாக கூறிய ஜனாதிபதி, அந்த கலந்துரையாடல்களில் தினமும் நாட்டின் பாதுகாப்பு குறித்து புனலாய்வுத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் நினைவூட்டியிருந்தார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தான் தாமதமின்றி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகவும், அடிப்படைவாத கருத்துக்களை பிரசாரம் செய்த 160 வெளிநாட்டு விரிவுரையாளர்களை நாடு கடத்தியதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டிருந்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் கடந்த ஆட்சியாளர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான வகையில் சிந்திக்காது செயற்படாமையினாலேயே புலனாய்வுத்துறை வீழ்ச்சி அடைந்திருந்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். இதன்காரணமாகவே இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய முடியாதுள்ளதென ஜனாதிபதி கூறியுள்ளார். இவ்வாறான தாக்குதல்கள் மீண்டுமொரு முறை நடத்தப்படாதிருப்பதற்காக செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இலங்கையின் பாதுகாப்பு பொறிமுறை வீழ்ச்சியடைந்துள்ளமைக்காக பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஆணைக்குழுவிற்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 260ற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/sri-lanka-50644335

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைப்பதற்கான முயற்சிகளை சில அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை முதற்தடவையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி போதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜானக்க டி சில்வா தலைமையிலான குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், உரிய அதிகாரிகள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ ( கோப்புப்படம்)

இந்நிலையில், கடமை தவறிய அதிகாரிகள் அதனை மறைப்பதற்காக பொய்யான ஆவணங்களை தயாரித்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணங்களை உரிய முறையில் இனங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தான் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு சபை நாளாந்தம் ஒன்று கூடியதாக கூறிய ஜனாதிபதி, அந்த கலந்துரையாடல்களில் தினமும் நாட்டின் பாதுகாப்பு குறித்து புனலாய்வுத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் நினைவூட்டியிருந்தார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தான் தாமதமின்றி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகவும், அடிப்படைவாத கருத்துக்களை பிரசாரம் செய்த 160 வெளிநாட்டு விரிவுரையாளர்களை நாடு கடத்தியதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

கடந்த ஆட்சியாளர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான வகையில் சிந்திக்காது செயற்படாமையினாலேயே புலனாய்வுத்துறை வீழ்ச்சி அடைந்திருந்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதன்காரணமாகவே இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய முடியாதுள்ளதென ஜனாதிபதி கூறியுள்ளார்.

இவ்வாறான தாக்குதல்கள் மீண்டுமொரு முறை நடத்தப்படாதிருப்பதற்காக செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கையின் பாதுகாப்பு பொறிமுறை வீழ்ச்சியடைந்துள்ளமைக்காக பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஆணைக்குழுவிற்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 260ற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-50644335