Aggregator

FB பயனர்களின் தனிப்பட்ட தரவு திரட்டல் அதிகாரப்பூர்வமாகிறது

2 years 4 months ago
திறன்பேசி பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதற்காக முகப்புத்தக நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஸ்டடி எனும் செயலியை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது அன்ட்ரய்ட், ஐஓஎஸ்ம் விண்டோஸ் என எவ்வித பாரபட்சமுமின்றி, அனைத்து இயங்குதளங்களின் தயாரிப்பு நிறுவனங்களின் வாயிலாகவும், செயலிகள் வாயிலாகவும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலேயே பெறப்பட்டு வருவதாக நீண்டகாலமாக குற்றம்சுமத்தப்பட்டு வருகின்றது இந்தநிலையில் முகப்புத்தக நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் ஸ்டடி எனும் இந்த செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுக்க உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவின் மேலாளர் தெரிவித்துள்ளார் இந்தநிலையில் இதுவரைகாலமும் சட்டப்பூர்வமற்ற வழிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயனர்களின் தனிப்பட்ட தரவு திரட்டலை தற்போது முகப்புத்தக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/124374/

பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே, இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது….

2 years 4 months ago
June 15, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. இந்தநிலையில், பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று. இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய கும்பலுக்கென்று எதுவுமே கிடையாது. இவர்களுக்கு முஸ்லிம் சமூகத்திடடமிருந்து எந்த ஆதரவும் கிடையாது. அப்படியான கும்பல் பிரபாகரன் என்கிற தகுதிக்கு வந்து விடுவார்கள் என்று அச்சப்படுகின்ற அதீதமான அச்சப்போக்கு அபத்தமானது. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை இலங்கை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரின் இயக்கத்தினருக்கும் எனப் பெரும் ஆதரவுத் தளமிருந்தது. இப்போதும் இருக்கின்றது. அவர்களுக்கென்று கட்டமைப்பு இருந்தது. அரசியல் கொள்கை இருந்தது. அவர்களுக்கென்று ஒரு விடுதலைப் போராட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது என ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார். நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக் காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கிளிநொச்சியில் தாம் நேரில் சந்தித்ததாக தெரிவித்த அவர், தனக்கும் தனது கட்சியினருக்கும் பலத்த வரவேற்பு வழங்கியிருந்தார். சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தங்களுடன் அவர் மனம் விட்டுப் பேசினார் எனக் குறிப்பிட்ட ரவூப் ஹக்கீம், துரதிஷ்டவசமாக அந்தச் சமாதானக் காலம் நீடிக்கவில்லை. மீண்டும் போர் ஆரம்பமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை உரிமைகளைக் கேட்டு நிற்கும் தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர்களின் தாக்குதல்கள் இருந்தன எனக் கூறியுள்ள ரவூப் ஹக்கீம் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் குறுகிய நோக்கத்தில் இருந்ததில்லை எனவும் வலியுறுத்தி உள்ளார். http://globaltamilnews.net/2019/124380/

prabhakaran-rauff-hakeem.png?zoom=1.1024
பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. இந்தநிலையில், பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய கும்பலுக்கென்று எதுவுமே கிடையாது. இவர்களுக்கு முஸ்லிம் சமூகத்திடடமிருந்து எந்த ஆதரவும் கிடையாது. அப்படியான கும்பல் பிரபாகரன் என்கிற தகுதிக்கு வந்து விடுவார்கள் என்று அச்சப்படுகின்ற அதீதமான அச்சப்போக்கு அபத்தமானது. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை இலங்கை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரின் இயக்கத்தினருக்கும் எனப் பெரும் ஆதரவுத் தளமிருந்தது. இப்போதும் இருக்கின்றது. அவர்களுக்கென்று கட்டமைப்பு இருந்தது. அரசியல் கொள்கை இருந்தது. அவர்களுக்கென்று ஒரு விடுதலைப் போராட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது என ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக் காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கிளிநொச்சியில் தாம் நேரில் சந்தித்ததாக தெரிவித்த அவர், தனக்கும் தனது கட்சியினருக்கும் பலத்த வரவேற்பு வழங்கியிருந்தார். சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தங்களுடன் அவர் மனம் விட்டுப் பேசினார் எனக் குறிப்பிட்ட ரவூப் ஹக்கீம், துரதிஷ்டவசமாக அந்தச் சமாதானக் காலம் நீடிக்கவில்லை. மீண்டும் போர் ஆரம்பமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உரிமைகளைக் கேட்டு நிற்கும் தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர்களின் தாக்குதல்கள் இருந்தன எனக் கூறியுள்ள ரவூப் ஹக்கீம் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் குறுகிய நோக்கத்தில் இருந்ததில்லை எனவும் வலியுறுத்தி உள்ளார். 

http://globaltamilnews.net/2019/124380/

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

2 years 4 months ago
தமிழ்சிறியும் பையனும் தலைவர் மீதுள்ள அதீத பக்தியால் இப்படி சில குறைகள் பற்றி யாராவது எழுதினால் அது பொய்யாக இருக்கும், எழுதுபவருக்கு உள்நோக்கம் என்று தான் விளங்கிக் கொள்கிறார்கள்! யார் மீதுமான உங்கள் பக்திக்கு மரியாதை உண்டு, அதற்காக தலைமையில் இருந்தோரை மனிதர்களாகச் சித்திரிக்கும் எழுத்தாளர்களை வசை பாடுவது சிறு பிள்ளைத் தனமானது! இதனாலேயே பையன் இன்னும் வளரவில்லை என்று சிலர் சுட்டிக் காட்ட வேண்டி வந்தது என நினைக்கிறேன். தமிழ் சமூகத்தை வடகொரிய சமூகம் மாதிரி துதிபாடலில் முங்கி வைத்திருக்காதீர்கள். எல்லாரும் எழுதுங்கள், வாசகர் உண்மை பொய்யை பிரித்தறியும் புத்தியுடையோராக இருக்கிறார்கள் என்று நம்புங்கள். நன்றி!

தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது ? திருப்பி கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..!

2 years 4 months ago
எது சின்ன விஷயம், ஜெமோ எனும் காவாலி தோசை மா விற்கும் பெண்ணின் கணவனிடம் அடி வாங்கியதா , நோ யுவர் ஆனர் !!

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

2 years 4 months ago
சொறில‌ங்கா வெல்லும் என்று க‌ணித்த‌ உற‌வுக‌ளுக்கு மீண்டும் ஒரு முட்டை த‌யாரா இருக்கு / அந்த‌ முட்டையை கோப்பிக்க‌ க‌ல‌ந்து போட்டு குடியுங்கோ 😉😁

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

2 years 4 months ago
சொறில‌ங்கா வெல்லும் என்று க‌ணித்த‌ உற‌வுக‌ளுக்கு மீண்டும் ஒரு முட்டை த‌யாரா இருக்கு / அந்த‌ முட்டையை கோப்பிக்க‌ க‌ல‌ந்து போட்டு குடியுங்கோ 😉😁

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

2 years 4 months ago
உங்க‌ளின் கோவ‌ம் புரிகிற‌து த‌மிழ் சிறி அண்ணா / அதே கோவ‌ம் என‌க்குள்ளும் இருக்கு அத‌ நான் இந்த‌ திரியில் எழுதியும் போட்டேன் வெளிப்ப‌டையாய் / 2009ம் ஆண்டுக்கு முத‌ல் இப்ப‌டியான‌ போலி ப‌திவுக‌ள் வ‌ந்த‌து இல்லை , கார‌ண‌ம் வ‌ன்னியில் த‌லைவ‌ரின் க‌ட்டு பாட்டில் பெரிய‌ த‌லைமையே இருந்த‌து / புதின‌ம் ச‌ங்க‌தி த‌மிழ்நெட் , இந்த‌ மூன்று இணைய‌ த‌ள‌த்தில் வார‌ செய்தி தான் உறுதி ப‌டுத்த‌ ப‌ட்ட‌ செய்திக‌ள் / பால்ராஜ் அண்ணா மார‌டைப்பால் இற‌ந்த‌ போது கூட‌ , பால்ராஜ் அண்ணாவை ப‌ற்றியான‌ இப்ப‌டி வ‌த‌ந்திக‌ள் வ‌ர‌ வில்லை , இதை ஆதார‌த்தோடு சொன்னா , நான் சின்ன‌ பெடிய‌ன் என்று என்ன‌ கேலி கிண்ட‌லும் செய்யின‌ம் உண்மை வ‌ர‌லாறு தெரியாது என்று 😉/ இந்த‌ கேலியும் கிண்டலையும் பார்த்து நான் அஞ்ச‌ போர‌தும் இல்லை , ஒரு போதும் பின் வாங்க‌ போர‌தும் இல்லை / என் ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ எழுதுவேன் 👌 இந்த‌ ப‌திவுக‌ளை எழுதின‌வ‌ரின் நோக்க‌ம் , த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் ஏதோ த‌லைக்க‌ன‌ம் பிடிச்ச‌வ‌ர் போலையும் , எடுத்த‌துக்கு எல்லாம் பெரிய‌ த‌ள‌ப‌திக‌ள‌ த‌ள்ளி வைச்சு விட்டு நான் சொன்னா நீ கேக்க‌னும் என்ர‌ போக்கில் ந‌ட‌ந்த‌து மாதிரி இருக்கு 😠😠/ அந்த‌ மாபெரும் த‌லைவ‌ர் சொன்ன‌து ( நான் பெரிசு நீ பெரிசு என்று வாழாம‌ நாடு பெரிசு என்று வாழ‌னும் 💪👌) பால்ராஜ் அண்ணாவின் உட‌ம்பில் காய‌ம் இல்லாத‌ இட‌மே இல்லை , இந்திய‌ன் ஆமி ஈழ‌த்துக்கு வ‌ந்த‌ போது , வைக்கோ அவ‌ர்க‌ளும் ஈழ‌த்துக்கு வ‌ந்த‌து இது ஒட்டு மொத்த‌ த‌மிழ் இன‌மும் அறிந்த‌ ஒன்று , வைக்கோவை ப‌ல‌ இன்ன‌ல்க‌ளுக்கு ம‌த்தியில் ப‌த்திர‌மா த‌மிழ் நாட்டுக்கு அனுப்பி வைச்ச‌தே பால்ராஜ் அண்ணா தான் , மேல் உடுப்பு இல்லாம‌ ஒரு க‌ட்ட‌த்தில் வைக்கோ பால்ராஜ் அண்ணாவை பார்த்து ஏங்கி போட்டார் , பால்ராஜ் அண்ணாவுக்கு போர்க‌ள‌த்தில் ஏற்ப‌ட்ட‌ காய‌ங்க‌ளை பார்த்து 😓 /

சிக்கிய மவ்லவிக்கு நான்கு மனைவிகள் 28 பிள்ளைகள்... கதி கலங்கி நிற்கும் போலீசார்

2 years 4 months ago
ஒரு மனைவி மூன்று பிள்ளைகளுடன், ஒரே ஒரு கருத்தைக் கணணியில் எழுத, யோசிக்க முக்கி முனகவேண்டி உள்ளது. எப்படித்தான் 4 மனைவிகள் 28 பிள்ளைகளுடன் தன் கருத்துக்களை இந்த மெளலவியால் எழுத முடிகிறதோ,??

ஈஸ்ட்டர் 2019 தாக்குதலின் பின்னர் மாறிவரும் முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன் கவிஞன். .

2 years 4 months ago
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் பிறகும், ஹிஸ்புல்லா, இலங்கையராக இல்லாமல், உலகளாவிய இஸ்லாமியராகவே இன்னும் இருக்கிறார். தமிழகத்தில் 8 கோடி தமிழர்கள், இந்தியாவில் 80 கோடி இந்துக்கள் என்று நாம் அழிந்தது கண் கூடாக கண்டும் இன்னும் கனவுலகில் இருக்கும் இவர்களை வைத்துக் கொண்டு என்ன முடிவினை எதிர்பார்க்குறீர்கள் என்று சொல்ல முடியுமா?