Aggregator

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 6 hours ago
உடுப்பில்லாமல் நாடு திரும்ப வெட்கப்பட்டு பல ரஸ்யர்களும் உக்ரேனியர்களும் அங்கேயே நீண்ட விசாவில் அல்லது ஓவர் ஸ்டேயில் தங்கி - சொந்தமாக ஓட்டல், உணவகங்கள் கூட நடத்துகிறார்கள் 🤣. *அண்மையில் ஒரு பீச்சில் whites only பார்ட்டி ஏற்பாடு செய்து சர்ச்சையாகியது.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 6 hours ago
எல்லாவற்றையும் இலங்கையில் பறிகொடுத்ததினால் தானே அலைகின்றார்கள் அதையும் தெளிவாக குறிபப்பிட வேண்டும்

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 6 hours ago
சரி விடுங்கோ…இலங்கையில் போய் இறங்கின உடன என்னை எல்லாத்தையும் உருவி போட்டு அம்மணாய் ஓட விட்டார்கள்… யாரும் போக வேணாம் ….போகவே வேணாம்…. ஆயிரகணக்கில் போகும் வெள்ளைகள் எல்லாம் அங்க அம்மணமா அலையுதுகள்… போதும்தானே🤣

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

1 day 6 hours ago
முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பாதிக்கபட்ட அடக்கி ஒடுக்கபட்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்த நல்ல உள்ளம் கொண்டோரும் இருக்கின்றனர். இஸ்ரேலின் மீதான முல்லாக்களின் தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர் அவர்களை விடுவோம் ஈரானிலும் எல்லோ இந்த தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் இருக்கின்றனர் .ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இலங்கை தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு முல்லாக்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலின் அழிவு ஆரம்பம் முஸ்லிம்களின் வெற்றி என்று கற்பனை செய்து வெற்றி கொண்டாட்டம் தானே

பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

1 day 6 hours ago
தாய்வானில் கூட நான் சீனாவை குறை சொல்ல மாட்டேன். நாடு முழுவதும் மாவோவின் கீழ் வீழ - எஞ்சிய முதாளிதுவ தீவு அது. அதை கேட்பது ஒரு வகையில் நியாயமே. திபெத், உகிர் அட்டூழியங்கள் மிக மோசமனாவை. ஆனால் உலக அளவில் ? ஆதிக்க விரிப்பு, வர்த்த ஆளுமை - எல்லாரும் செய்ய முனைவதுதானே? அது பொருட்டே இல்லை. விலை ஒன்றே கருதுபொருள்.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 6 hours ago
அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

1 day 6 hours ago
நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம்.

பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

1 day 6 hours ago
இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான். ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.

ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி

1 day 6 hours ago
ஒரு குட்டி ஸ்டோரி 50 வயதான எல்லாளன் பெரும் படையுடன். எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

1 day 7 hours ago
காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌ வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪.............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................ ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................

ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி

1 day 7 hours ago
இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.

பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

1 day 7 hours ago
இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம். இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு?

ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி

1 day 7 hours ago
தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 

1 day 7 hours ago
எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.

பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

1 day 8 hours ago
நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣.