Aggregator

ரணிலும் மறதியும் மன்னிப்பும்

2 days 13 hours ago
ரணிலும் மறதியும் மன்னிப்பும்
புருஜோத்தமன் தங்கமயில் / 2019 பெப்ரவரி 20 புதன்கிழமை, மு.ப. 12:10 Comments - 0

மறதியும் மன்னிப்பும் மானிட உன்னதங்களில் பிரதானமானவை.   

வேட்டை விலங்குகளைக் காட்டிலும் வன்மமும் வக்கிரமும் ஆதிக்க வேட்கையும் கொண்ட மானிட ஒழுங்கில், மறதியும் மன்னிப்பும் இருந்திருக்காவிட்டால், டைனோஸர் காலத்துக்கு முன்னரேயே, மனித இனம் அழிந்து போயிருக்கும்.   

மானிட வளர்ச்சி என்பது, அதன் நற்குணவியல்புகள், ஒழுக்கத்தின் விருத்திகள் சார்ந்தது. அது தொடர்பிலான உரையாடல்கள், திறந்த மனதோடு நிகழ்த்தப்பட வேண்டியவை. ஆனால், அந்த உரையாடல்களின் போது, அறம் என்கிற இன்னொரு மானிட உன்னதம், பேணப்பட வேண்டும்.  

கடந்த வாரம் கிளிநொச்சியில் வைத்து, போர்க் குற்றங்கள் தொடர்பில் மறைமுகமாகக் குறிப்பிட்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, “மறப்போம் மன்னிப்போம்” என்றார்.   

மறந்தும் மன்னித்தும் முன்னோக்கிப் பயணிக்கவும் விரும்பும் சமூகமாக இருப்பதற்கு, எவரும் பின்நிற்கப்போவதில்லை. ஆனால், இழைத்த கொடூரங்களைத் தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற தரப்பு, கோரும் ‘மன்னிப்பு’ எது சார்ந்தது? மன்னிப்பு என்பது, இழைத்த தவறுகள் குறித்து உணர்ந்து, கேட்கப்பட வேண்டிய ஒன்று.   

இன்றைக்கு ரணில் கூறியிருப்பதற்கும், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாள்களில்,நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்‌ஷ, “நாட்டில் பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற வேறுபாடுகள் கிடையாது. எல்லோரும் இந்த நாட்டின் பிரஜைகளே” என்று கூறியதற்குமான இடைவெளி எவ்வளவு?  

 பெரும்பான்மையின ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை, ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளுவதற்கு, அன்றைக்கு மஹிந்த கையாண்ட வார்த்தை விளையாட்டை, ‘மறப்போம் மன்னிப்போம்’ என்கிற வார்த்தைகளினூடடாக, ரணிலும் செய்ய நினைக்கின்றார். இது, அறம் என்கிற மானிட மேன்மையைப் புறந்தள்ளி நின்று, உரையாடும் உத்தி; இங்கு நீதிக்கான எந்தவொரு புள்ளியும் இல்லை.  

இலங்கையில் இனமுரண்பாடுகள் தோற்றம் பெற்ற காலம் முதல், மானிடத்துக்கு எதிரான பெரும் குற்றங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தப்பட்டிருக்கின்றன. அதை, ஒருவித இறுமாப்போடும் பெருமையோடும் கொண்டாடிய தரப்புகளும் உண்டு.   

இனவாத அரசியல் புரையோடிப்போன பின்னர், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தியே, தேர்தல் வெற்றிகளைச் சுகிக்க முடியும் என்கிற நிலை, மேல்நோக்கி வந்த காலங்களும் உண்டு. அதன்போக்கில்தான், மஹிந்த இன்றைக்கும் போர் வெற்றி வாதத்தைத் தாங்கி இருக்கிறார்.   

இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில், தம்முடைய இயலுமைக்கு அப்பாலும் சென்று, தமிழ் மக்கள் கூக்குரல் எழுப்பி நீதி கோரிவிட்டனர். அன்றைக்கு, முள்ளிவாய்க்காலுக்குள் அலைக்கழிந்த தமிழ் மக்களின் குரல், எப்படி உலகத்தால் புறக்கணிப்பட்டதோ, அதேமாதிரியாக, இன்றைக்கும் புறக்கணிக்கப்படுகின்றது.   

இறுதி மோதல்களின் போது, இராணுவத்திடம் கையளித்த தங்களது பிள்ளைகளுக்கு, என்ன நடந்தது என்று கேட்டு, ஆயிரக்கணக்கான தாய்மார் இன்னமும் வீதியோரங்களில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

இவ்வாறான தருணமொன்றில் நின்று, மறதி பற்றியும் மன்னிப்புப் பற்றியும் உரையாடுவதற்கான துணிவை ரணில் எங்கிருந்து பெறுகிறார்? அல்லது, ரணிலின் அந்தப் பதிலில் மானிட விழுமியங்கள் இருக்கின்றன. அதனை எடுத்துக்கொண்டு முன்னோக்கி பயணிக்க முடியும் என்று அடையாளப்படுத்தும் தரப்புகள், உண்மையில் வெளிப்படுத்த நினைப்பது எதை?  

ஜெனீவா அரங்குக்கான காலம் இது. 2015ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் (இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நான்கு வயதாகின்றது.   

வெளிநாட்டுப் பங்களிப்புடனான, கலப்பு விசாரணைப் பொறிமுறையொன்றை ஏற்றுக்கொள்வது தொடர்பில், ஜெனீவாவில் இலங்கை வாக்குறுதி அளித்திருக்கின்றது. தீர்மானத்தோடு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகால எல்லைக்கு அப்பால், மேலதிகமாக இரண்டு ஆண்டுகால எல்லையும் வழங்கப்பட்டுவிட்டது.   

ஆனால், ஜெனீவாத் தீர்மானத்தோடு இலங்கை இசைந்து பயணித்திருக்கிறதா, அதன் ஒரு சில கட்டங்களையாவது அர்த்தபூர்வமாகச் செய்திருக்கின்றதா என்கிற கேள்விக்கான பதில், கவலையளிக்கக் கூடியது.   

காணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகம் நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்தோடு அமைக்கப்பட்டதற்கு அப்பால், எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை. அதன் மீது, குறிப்பிட்டளவான மக்கள் எந்தவித நம்பிக்கையையும் வெளிப்படுத்தவும் இல்லை. ஏனெனில், இலங்கையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் வரலாறு என்பது, அபத்தமான காட்சிகளையே பதிவு செய்திருக்கின்றன.   

இனமுரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட தரப்பாகத் தமிழ் மக்கள், இலங்கை நீதிமன்றங்களினூடாக நீதியைப் பெற்ற சந்தர்ப்பங்களைக் காட்டிலும், தொடர்ச்சியாக அலைக்கழிக்கப்பட்ட காட்சிகளே அதிகம். ஏனெனில், அதிக நேரங்களில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் தரப்புகளுக்கு இணக்கமானவர்களே, விசாரணையாளர்களாகவும் இருக்கின்றார்கள். இவ்வாறான நிலை, அந்த விசாரணைகள் மீதோ, நீதித்துறை மீதோ பாதிக்கப்பட்டவர்களிடம் எவ்வாறு நம்பிக்கையை ஏற்படுத்தும்?   

கடந்த காலத்தை விட்டுவிட்டு, சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக, கடந்த நான்கு ஆண்டுகளிலாவது, உள்நாட்டு நீதித்துறை இனமுரண்பாடுகள் சார்ந்த வழக்கு விசாரணைகளில், பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. இறுதி மோதல்களின் இறுதி நாள்களில், நேரடியாக இராணுவத்திடமே தங்களது பிள்ளைகளைக் கையளித்த தாய்மார், நீதி கோரி நீதிமன்றத்தை நாடி, ஐந்தாறு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அவர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகம் கண்டு வருகின்றது.  

சர்வதேச நெருக்கடிகளை அடுத்து, ஒரு கட்டம் வரையில், “உள்நாட்டு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பில் நீதியான விசாரணைகளை நடத்துவோம்” என்று சொல்லிக் கொண்டிருந்த தென்இலங்கை, இன்றைக்கு ‘மன்னிப்பு மறதி’ பற்றிப் பேசுகின்றது.   

நல்லிணக்கச் செயலணி, ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், சர்வதேச தூதுக்குழுக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிடமும், பெருவாரியான மக்கள் சென்று, தங்களது பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தொடர்சியாகக் கேட்டு வருகின்றார்கள். என்றைக்காவது ஒருநாள், உறுதியானதும் இறுதியானதுமான பதில் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடத்தில் சென்று, “மன்னித்துவிடுங்கள்” என்று எப்படிக்கூற முடியும். 

மன்னிப்பதற்கு முன்னர், ‘யாரை மன்னிப்பது’ என்று தெரிய வேண்டும் இல்லையா? தன்னுடைய பிள்ளை மரணித்துவிட்டது என்பதைக் காட்டிலும் அதிக வலியையும் மனரீதியான பிரச்சினைகளையும் தன்னுடைய பிள்ளைக்கு என்ன நடந்தது என்று, தெரியாமல் இருக்கும் தாயிடம், ‘மன்னித்தல், மறத்தல்’ என்கிற மேன்குணங்கள் வெளிப்படுவதற்கு, அவர்களின் மனது ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு முதலில், அவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்க வேண்டும்.  

இன்றைக்கு போராடிக்கொண்டிருக்கும் எந்தவொரு தாய்மாரும், இன்னொரு தாய் பெற்றெடுத்த பிள்ளையைப் பழிவாங்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. நாளை தன்னுடைய நிலை, எந்தவொரு தாய்க்கும் வந்துவிடக்கூடாது என்கிற உணர்வோடும்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  அந்தத் தாய்மாரைத் திருப்திப்படுத்தும் பதிலை வழங்காமல், அவர்களை ஆற்றுப்படுத்த முடியாது. ஆற்றுப்படுத்தலுக்கு உள்ளாகாத எந்தவொருவரிடமும் குற்றமிழைத்த தரப்புகள், மன்னிப்பு என்கிற விடயத்தைக் கொண்டு செல்லவே முடியாது. அது, அறமும் அல்ல.   

ஏனெனில், பாதிக்கப்பட்டவர்களை நோக்கி, “நாங்கள் குற்றங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; ஆனால், நீங்கள் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்” என்று, குற்றமிழைத்த தரப்புகள் முன்மொழிவதும் கூட, வன்முறையின் உச்சமே.  ரணிலின் கூற்றைக் கொண்டு சுமக்கும் தரப்புகளும், அந்த வன்முறையில் பங்காளிகளே.  

 ஜெனீவாவில் இம்முறையும் இலங்கைக்கான கால நீடிப்புக்கான (சுமந்திரன் மொழியில் கண்காணிப்புக்கான கால நீடிப்பு) தீர்மானம் ஒன்று வருவதற்கான சாத்தியங்களே காணப்படுகின்றன.   

அதற்கும் அப்பாலான கட்டங்கள் தொடர்பில், என்ன நடவடிக்கைகளை எடுப்பது என்பது தொடர்பில், தமிழ்த் தரப்புகளுக்கு மாத்திரமல்ல, சர்வதேச நாடுகளுக்கும் அவ்வளவாகத் தெளிவு கிடையாது. இலங்கையில் அண்மைய ஆட்சிக் குழப்பங்களுக்குப் பின்னராக, மேற்கு நாடுகள் ரணில் அரசாங்கத்தைத் தக்க வைப்பதற்கான தேவையைக் கொண்டிருக்கின்றன.   

அவ்வாறான நிலையில், அதைக் குழப்பும் எந்தவோர் அழுத்தத்தை வெளிப்படுத்தவும் விரும்பமாட்டாது. அவ்வாறான கட்டத்தில் நின்றுகொண்டுதான், ஒய்யாரமாக ரணில் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று பேசியிருக்கிறார். அவ்வாறுதான், அதை நோக்க வேண்டும்.    

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணிலும்-மறதியும்-மன்னிப்பும்/91-229814

அதிகாரப் பரவலாக்கலும் பிரதமரும்

2 days 13 hours ago
அதிகாரப் பரவலாக்கலும் பிரதமரும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 பெப்ரவரி 20 புதன்கிழமை, மு.ப. 12:05 Comments - 0 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வட மாகாணத்துக்கான தமது நான்கு நாள் விஜயத்தின் போது, வடக்கில் மேற்கொள்ளப்படவிருக்கும் பல அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றிக் கூறினார். இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், பலாலி விமான நிலையத்தை, இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்தல், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல், மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய நகரங்களை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையொன்றை நிர்மாணித்தல் போன்ற பலவற்றைப் பற்றி, அவர் அந்த விஜயத்தின் போது குறிப்பிட்டார். இவை அனைத்தும், மத்திய அரசாங்கத்தின் கீழ் நடைபெறவிருக்கும் அபிவிருத்திப் பணிகளாகும். எனவே, சில தமிழ் அரசியல்வாதிகள் இவற்றை எதிர்க்கவும் கூடும். ஏனெனில், மகாவலி நீரை, இரணைமடுக் குளத்துக்கு வழங்கி, அதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாக, இரணைமடுக் குளத்திலிருந்து நீர் வழங்கும் யோசனையை, அண்மையில் ஓர் அரசியல்வாதி எதிர்த்திருந்தார். அதன் மூலம், வடமாகாணம் இரணைமடுக் குளத்தை இழந்துவிடும் என்பதே அவரது வாதமாகும். தற்போது மகாவலியிலிருந்தோ, வேறு எங்கிருந்தோ நீரைப் பெறாத நிலையில், இரணைமடுக் குளத்தில் இருந்து, யாழ்ப்பாணத்துக்கு நீர் வழங்குவதைச் சிலர் எதிர்க்கின்றனர். வன்னிப் பகுதியில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்பதே அவர்களின் வாதமாகும். அதற்காக மகாவலி நீரைப் பெற்று, யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் வழங்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டால், அதனால் இரணைமடுக் குளம், மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த அடிப்படையில் அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சர்வதேச விமான நிலையங்கள் போன்றவற்றாலும் மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கம் வட மாகாணத்துக்குள் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது; அதற்காக அவ்வாறான திட்டங்களை எதிர்க்கவும் முடியாது. ஒரு புறம், இவ்வாறு மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கம் வட மாகாணத்தில் அதிகரிக்கும் வகையிலான திட்டங்களை அறிவித்த பிரதமர், இதே விஜயத்தின் போது, அதிகாரப் பரவலாக்கலைப் பற்றியும் முக்கிய கருத்தொன்றை வெளியிட்டு இருந்தார். “பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் பயன்படுத்தப்படாத நிலையில், மேலும் அதிகாரங்களைப் பரவலாக்குவது அர்த்தமற்றது” என, அவர் கூறியதாக, ‘டெய்லி மிரர்’ பத்திரிகை, செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த அரசியல் கருத்தோடு, அவர் மற்றொரு முக்கிய அரசியல் கருத்தையும் இந்த விஜயத்தின் போது வெளியிட்டு இருந்தார். அதாவது, “கடந்த காலத்தை மறப்போம், மன்னிப்போம்” என்று அவர் கூறியிருந்தார். இந்த இரண்டாவது அரசியல் கருத்து, இப்போது சர்ச்சையாகி உள்ளது. தெற்கில் எவரும் அதை விமர்சிக்காவிட்டாலும், சில தமிழ் அரசியல் தலைவர்கள், ஏற்கெனவே அதைப் பற்றிப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்தக் கூற்றின் மூலம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போர்க் குற்றங்கள் இடம்பெற்றதை ஏற்றுக் கொள்கிறார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார். ஆனால், அதிகாரப் பரவலாக்கலைப் பற்றி பிரதமர் தெரிவித்த கருத்து, அதாவது “கூடுதல் அதிகாரங்களைப் பெறுவதற்குமுன், இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும்; இல்லாவிட்டால், மேலும் அதிகாரங்களை வழங்குவதில் அர்த்தம் இல்லை” என்ற கருத்துத் தொடர்பாக, எந்தவோர் ஆட்சேபனையும் தெரிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உண்மையிலேயே, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக, பிரதமர் வெளியிட்ட கருத்து, வடமாகாணத்துக்கு மட்டுமல்லாது, நாட்டில் ஏனைய மாகாண சபைகளுக்கும் பொருந்தும். அந்த மாகாண சபைகளும் மாதத்துக்கு இரண்டு நாள் கூடிக் கலைவதைத் தவிர, வேறு எதையும் செய்வதாகத் தெரியவில்லை. அந்த இரண்டு நாள்களிலும் அரசியல் காரணங்களை மய்யமாக வைத்து, ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதைத் தவிர, மாகாணத்தின் அபிவிருத்திக்காகத் திட்டங்களை முன்வைத்து, அவற்றை விவாதித்து நிறைவேற்றும் நோக்கம் எவருக்காவது இருப்பதாகத் தெரியவில்லை. மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் போதாது எனத் தமிழ்க் கட்சிகள், அமைப்புகள் கூறி வந்த போதிலும், மாகாண சபைகளுக்கு, இந்த அளவிலாவது அதிகாரம் பரவலாக்கப்பட்டமை மிக இலகுவாக இடம்பெற்றதொன்றல்ல; அது, நீண்ட காலப் போராட்டம் ஒன்றின் விளைவாகும். இலங்கை சுதந்திரம் அடைந்த உடனேயே அந்தப் போராட்டமும் ஆரம்பமானது எனலாம். அதற்கு முன்னரும் அதற்கான கருத்துகள் ஆங்காங்கே வெளியிடப்பட்டு வந்துள்ளது. 1957ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவோடு, அப்போதைய தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் கைச்சாத்திட்ட ‘பண்டா-செல்வா ஒப்பந்தம்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் ஒப்பந்தம், அந்தப் போராட்டத்தின் முக்கிய சந்தர்ப்பம் ஒன்றாகும். அந்த ஒப்பந்தம் மூலம், பிராந்திய சபைகள் என்ற எண்ணக்கரு முன்வைக்கப்பட்டது. அதுவே, முதல் முதலில் இலங்கையில் முன்வைக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் திட்டமாகும். அதையடுத்து, 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றதை அடுத்து, தமிழ்க் கட்சிகளின் பேரம் பேசும் பலம், இல்லாமல் போய்விட்டது. இந்தநிலையில், மேலும் பலமான கோரிக்கையொன்று அவசியமாகவே அதன் விளைவாக, தமிழீழக் கோரிக்கை உருவாகியது. தமிழீழத்துக்கான போராட்டம், இந்தியாவையும் பாதிக்கவே, இந்தியாவும் இலங்கை விடயத்தில் தலையிட்டு, தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. அத்தோடு, இந்தியா, தமிழீழத்துக்காகப் போராடிய குழுக்களுக்கு ஆயுதங்கள், ஆயுதப்பயிற்சி, பணம் ஆகியவற்றை வழங்கிய போதும் இந்தியா, இலங்கையில் தனித் தமிழ் நாட்டை ஆதரிக்கவில்லை. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசாங்கத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவே, இந்திய அரசாங்கம் அவ்வாறான உதவிகளை அந்தக் குழுக்களுக்கு வழங்கியது. எனினும், மாகாண சபை முறை என்பது, இந்தியத் தலையீட்டின் நேரடி விளைவாகும். ஏனெனில், அது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலமே சாத்தியமாகியது. மாகாண சபை முறையை ஆரம்பத்தில், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பைத் தவிர்ந்த சகல தமிழ் அரசியல் கடசிகளும் ஆயுதக் குழுக்களும் ஏற்றுக் கொண்டன. ஆனால், புலிகள் அதை நிராகரிக்கவே அந்தக் கட்சிகளும் குழுக்களும் புதிய தீர்வுத் திட்டங்களைத் தேட ஆரம்பித்தன; அது நிறைவேறவில்லை. இனியும் எந்தளவுக்கு அது நிறைவேறும் என்பதும் கேள்விக்குறியே. அதிகாரப் பரவலாக்கல் பற்றிய பிரதமரின் கூற்றும் அந்தச் சந்தேகத்தையே வலுப்பெறச் செய்கிறது. வழங்கப்பட்ட அதிகாரங்கள் பாவிக்கப்படாவிட்டால், மேலும் அதிகாரங்கள் வழங்குவது அர்த்தமற்றது என்னும் போது, மேலும் அதிகாரங்களை எதிர்ப்பார்க்கக் கூடாது என்ற செய்தியே வழங்கப்படுகிறது. உண்மையிலேயே, தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தயாரித்து வரும் புதிய அரசமைப்பில், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகப் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், மாகாண சபைகளின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியங்கள் தென்படவில்லை. எல்லோரும் தற்போது செயற்படும் அதிகாரப் பரவலாக்கல் முறையை, எவ்வாறு அழைக்கலாம் என்ற விடயத்தில் தான் கவனம் செலுத்தி வருகின்றனர். சிலர், அது ஒற்றையாட்சியாக இருக்க வேண்டும் என்றும், வேறு சிலர் அது ஒருமித்த நாடு என்று அழைக்கப்பட வேண்டும் என்றும், மற்றும் சிலர் அது சமஷ்டி என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நடைமுறையில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படப் போவதில்லை. மாகாண சபைகள் அதிகாரங்களை பயன்படுத்துகின்றனவா? மாகாண சபைகளைப் பலர் ‘வெள்ளை யானைகள்’ என்றே அழைக்கின்றனர். அவற்றுக்காகச் செலவளிக்கப்படும் பணத்தால், எவ்வித பயனும் இல்லை என்பதே அதன் அர்த்தமாகும். மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்த்தால், அது, ஏறத்தாழப் பொருத்தமான கருத்தாகவே தெரிகிறது. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளைத் தவிர்ந்த ஏனைய மாகாண சபைகளுக்காக, சுமார் எட்டு முறை தேர்தல்கள் நடத்தப்பட்டு, அச்சபைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 30 ஆண்டு காலத்தில் அவை நிறைவேற்றிய சட்டமூலங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், அவை இவ்வளவு காலமும் என்ன செய்தன என்று கேட்கவே தோன்றுகிறது. அவற்றில் அநேகமாகப் பல பிரேரணைகள், நிறைவேற்றப்பட்ட போதிலும் அவை மாகாணத்தின் அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு முன்வைக்கப்படுபவை அல்ல. அவை பெரும்பாலும், அந்த மாகாண சபைகளின் அன்றாடப் பணிகளைத் தொடர்வதற்கான பிரேரணைகள், ஏனைய கட்சிகளைத் தாக்கும் நோக்கில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் முன்வைக்கும் பிரேரணைகளாகவே இருக்கின்றன. தென்பகுதியில் பெரும்பாலான மாகாண சபைகளில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்கள் பலர் இருக்கின்றனர். எனவே, அரசியல்வாதிகள் தமது பிள்ளைகளுக்குப் பயிற்சி வழங்கும் பாசறையாகவே மாகாண சபைகளைப் பாவிக்கிறார்கள் என்றே கூற வேண்டும். பயிற்சி என்றாலும், அது அறிவுபூர்வமான பயிற்சியல்ல என்பதை மாகாண சபை உறுப்பினர்களின் நடத்தை காட்டுகிறது. அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே தான் நடந்து கொள்கிறார்கள். தென்பகுதிக்கு அதிகாரப் பரவலாக்கலின் பெறுமதி விளங்காமல் இருக்கலாம்; ஆனால், அதிகாரப் பரவலாக்கலுக்காகக் கடுமையாகப் போராடிய வடக்கு, கிழக்கு மக்களும் அரசியல்வாதிகளும் அதன் பெறுமதியை உணரவில்லை என்றால், அது மிகவும் மோசமான நிலைமையாகும். அப்பகுதி அரசியல்வாதிகளும், மாகாண சபைகளைத் தமது மக்களின் நலன்களுக்காகப் பாவித்தார்களா என்ற கேள்வி எழுகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம், ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை, வடமாகாண சபையின் நடவடிக்கைகளைப் பற்றி, மிகவும் பாரதூரமானதொரு செய்தியை வெளியிட்டு இருந்தது. அதன்படி, வடமாகாண சபை, கடந்த ஐந்தாண்டு காலத்தில், 415 பிரேரணைகளை நிறைவேற்றியிருக்கிறது. அதாவது, அச்சபை கூடிய ஒவ்வொரு நாளிலும் தலா ஏழு பிரேரணைகளை நிறைவேற்றியிருக்கிறது. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை, மாகாண சபையின் அதிகாரத்துக்கு உட்பட்டவையல்ல என்றும், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. நிறைவேற்றப்பட்ட சில பிரேரணைகள் அரசியல் காரணங்கள் தொடர்பானவை ஆகும். அதன் காரணமாகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பின் தள்ளப்பட்டுள்ளன. அரசியல் பிரச்சினைகளை, அவர்கள் அரசியல் கட்சிகள் மட்டத்தில் கையாண்டு இருக்கலாம். மாகாண சபையை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பாவித்திருக்கலாம். அதற்காக, மாகாண சபைகளுக்கு அதிகாரம் இல்லை எனக் கூற முடியாது. அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம், மாகாண சபைகளுக்கு ஓரளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரங்கள், அந்தத் திருத்தத்தில் ஒரு பட்டியலாகவே (மாகாண சபைப் பட்டியல்) வழங்கப்பட்டுள்ளன. கல்வி, உள்ளூராட்சி, வீடமைப்பு, சமூக சேவைகள், சிறுவர் பராமரிப்பு, நன்னடத்தை, அகதிகள், மறுவாழ்வு, விவசாயம், கிராம அபிவிருத்தி, சுகாதாரம், சந்தைகள், கூட்டுறவுத்துறை, நீர்ப்பாசனம், கால் நடை அபிவிருத்தி போன்றவை தொடர்பான ஓரளவு அதிகாரங்கள் மாகாண சபை பட்டியலின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பொலிஸ், காணி அதிகாரங்களும் அந்தப் பட்டியலில் இருந்த போதிலும் அவற்றை முறையாக வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலில், கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு ஜனாதிபதியும் கையெழுத்திடாததால் அந்த அதிகாரங்கள் மாகாண சபைகளால் பாவிக்க முடியாதுள்ளன. ஆனால், அதற்காகப் பயன்படுத்த முடிந்த அதிகாரங்களையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமா? எனவே, பிரதமர் கூறுவதைப் போல், இருக்கும் அதிகாரங்களையாவது பயன்படுத்தாமல் இருப்பது, மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியதல்ல. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அதிகாரப்-பரவலாக்கலும்-பிரதமரும்/91-229822

அதிகாரப் பரவலாக்கலும் பிரதமரும்

2 days 13 hours ago
அதிகாரப் பரவலாக்கலும் பிரதமரும்
எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 பெப்ரவரி 20 புதன்கிழமை, மு.ப. 12:05 Comments - 0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வட மாகாணத்துக்கான தமது நான்கு நாள் விஜயத்தின் போது, வடக்கில் மேற்கொள்ளப்படவிருக்கும் பல அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றிக் கூறினார்.   

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், பலாலி விமான நிலையத்தை, இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்தல், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல், மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய நகரங்களை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையொன்றை நிர்மாணித்தல் போன்ற பலவற்றைப் பற்றி, அவர் அந்த விஜயத்தின் போது குறிப்பிட்டார்.   

இவை அனைத்தும், மத்திய அரசாங்கத்தின் கீழ் நடைபெறவிருக்கும் அபிவிருத்திப் பணிகளாகும். எனவே, சில தமிழ் அரசியல்வாதிகள் இவற்றை எதிர்க்கவும் கூடும். ஏனெனில், மகாவலி நீரை, இரணைமடுக் குளத்துக்கு வழங்கி, அதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாக, இரணைமடுக் குளத்திலிருந்து நீர் வழங்கும் யோசனையை, அண்மையில் ஓர் அரசியல்வாதி எதிர்த்திருந்தார். அதன் மூலம், வடமாகாணம் இரணைமடுக் குளத்தை இழந்துவிடும் என்பதே அவரது வாதமாகும்.  

image_1f6993a2ef.jpg

தற்போது மகாவலியிலிருந்தோ, வேறு எங்கிருந்தோ நீரைப் பெறாத நிலையில், இரணைமடுக் குளத்தில் இருந்து, யாழ்ப்பாணத்துக்கு நீர் வழங்குவதைச் சிலர் எதிர்க்கின்றனர்.   

வன்னிப் பகுதியில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்பதே அவர்களின் வாதமாகும். அதற்காக மகாவலி நீரைப் பெற்று, யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் வழங்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டால், அதனால் இரணைமடுக் குளம், மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.   

எனவே, இந்த அடிப்படையில் அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சர்வதேச விமான நிலையங்கள் போன்றவற்றாலும் மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கம் வட மாகாணத்துக்குள் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது; அதற்காக அவ்வாறான திட்டங்களை எதிர்க்கவும் முடியாது.  

ஒரு புறம், இவ்வாறு மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கம் வட மாகாணத்தில் அதிகரிக்கும் வகையிலான திட்டங்களை அறிவித்த பிரதமர், இதே விஜயத்தின் போது, அதிகாரப் பரவலாக்கலைப் பற்றியும் முக்கிய கருத்தொன்றை வெளியிட்டு இருந்தார்.   

“பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் பயன்படுத்தப்படாத நிலையில், மேலும் அதிகாரங்களைப் பரவலாக்குவது அர்த்தமற்றது” என, அவர் கூறியதாக, ‘டெய்லி மிரர்’ பத்திரிகை, செய்தி வெளியிட்டு இருந்தது.   

இந்த அரசியல் கருத்தோடு, அவர் மற்றொரு முக்கிய அரசியல் கருத்தையும் இந்த விஜயத்தின் போது வெளியிட்டு இருந்தார். அதாவது, “கடந்த காலத்தை மறப்போம், மன்னிப்போம்” என்று அவர் கூறியிருந்தார். 

இந்த இரண்டாவது அரசியல் கருத்து, இப்போது சர்ச்சையாகி உள்ளது. தெற்கில் எவரும் அதை விமர்சிக்காவிட்டாலும், சில தமிழ் அரசியல் தலைவர்கள், ஏற்கெனவே அதைப் பற்றிப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.  

இந்தக் கூற்றின் மூலம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போர்க் குற்றங்கள் இடம்பெற்றதை ஏற்றுக் கொள்கிறார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார்.  

ஆனால், அதிகாரப் பரவலாக்கலைப் பற்றி பிரதமர் தெரிவித்த கருத்து, அதாவது “கூடுதல் அதிகாரங்களைப் பெறுவதற்குமுன், இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்த  வேண்டும்; இல்லாவிட்டால், மேலும் அதிகாரங்களை வழங்குவதில் அர்த்தம் இல்லை” என்ற கருத்துத் தொடர்பாக, எந்தவோர் ஆட்சேபனையும் தெரிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  

உண்மையிலேயே, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக, பிரதமர் வெளியிட்ட கருத்து, வடமாகாணத்துக்கு மட்டுமல்லாது, நாட்டில் ஏனைய மாகாண சபைகளுக்கும் பொருந்தும். அந்த மாகாண சபைகளும் மாதத்துக்கு இரண்டு நாள் கூடிக் கலைவதைத் தவிர, வேறு எதையும் செய்வதாகத் தெரியவில்லை.   

அந்த இரண்டு நாள்களிலும் அரசியல் காரணங்களை மய்யமாக வைத்து, ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதைத் தவிர, மாகாணத்தின் அபிவிருத்திக்காகத் திட்டங்களை முன்வைத்து, அவற்றை விவாதித்து நிறைவேற்றும் நோக்கம் எவருக்காவது இருப்பதாகத் தெரியவில்லை.  

image_fc0f151439.jpg

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் போதாது எனத் தமிழ்க் கட்சிகள், அமைப்புகள் கூறி வந்த போதிலும், மாகாண சபைகளுக்கு, இந்த அளவிலாவது அதிகாரம் பரவலாக்கப்பட்டமை மிக இலகுவாக இடம்பெற்றதொன்றல்ல; அது, நீண்ட காலப் போராட்டம் ஒன்றின் விளைவாகும்.   

இலங்கை சுதந்திரம் அடைந்த உடனேயே அந்தப் போராட்டமும் ஆரம்பமானது எனலாம். அதற்கு முன்னரும் அதற்கான கருத்துகள் ஆங்காங்கே வெளியிடப்பட்டு வந்துள்ளது.  

1957ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவோடு, அப்போதைய தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் கைச்சாத்திட்ட ‘பண்டா-செல்வா ஒப்பந்தம்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் ஒப்பந்தம், அந்தப் போராட்டத்தின் முக்கிய சந்தர்ப்பம் ஒன்றாகும்.   

அந்த ஒப்பந்தம் மூலம், பிராந்திய சபைகள் என்ற எண்ணக்கரு முன்வைக்கப்பட்டது. அதுவே, முதல் முதலில் இலங்கையில் முன்வைக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் திட்டமாகும்.   

அதையடுத்து, 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றதை அடுத்து, தமிழ்க் கட்சிகளின் பேரம் பேசும் பலம், இல்லாமல் போய்விட்டது.   

 இந்தநிலையில், மேலும் பலமான கோரிக்கையொன்று அவசியமாகவே அதன் விளைவாக, தமிழீழக் கோரிக்கை உருவாகியது. தமிழீழத்துக்கான போராட்டம், இந்தியாவையும் பாதிக்கவே, இந்தியாவும் இலங்கை விடயத்தில் தலையிட்டு, தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது.   

அத்தோடு, இந்தியா, தமிழீழத்துக்காகப் போராடிய குழுக்களுக்கு ஆயுதங்கள், ஆயுதப்பயிற்சி, பணம் ஆகியவற்றை வழங்கிய போதும் இந்தியா, இலங்கையில் தனித் தமிழ் நாட்டை ஆதரிக்கவில்லை.   

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசாங்கத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவே, இந்திய அரசாங்கம் அவ்வாறான உதவிகளை அந்தக் குழுக்களுக்கு வழங்கியது.  எனினும், மாகாண சபை முறை என்பது, இந்தியத் தலையீட்டின் நேரடி விளைவாகும். ஏனெனில், அது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலமே சாத்தியமாகியது.   

மாகாண சபை முறையை ஆரம்பத்தில், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பைத் தவிர்ந்த சகல தமிழ் அரசியல் கடசிகளும் ஆயுதக் குழுக்களும் ஏற்றுக் கொண்டன. ஆனால், புலிகள் அதை நிராகரிக்கவே அந்தக் கட்சிகளும் குழுக்களும் புதிய தீர்வுத் திட்டங்களைத் தேட ஆரம்பித்தன; அது நிறைவேறவில்லை. இனியும் எந்தளவுக்கு அது நிறைவேறும் என்பதும் கேள்விக்குறியே.  

அதிகாரப் பரவலாக்கல் பற்றிய பிரதமரின் கூற்றும் அந்தச் சந்தேகத்தையே வலுப்பெறச் செய்கிறது. வழங்கப்பட்ட அதிகாரங்கள் பாவிக்கப்படாவிட்டால், மேலும் அதிகாரங்கள் வழங்குவது அர்த்தமற்றது என்னும் போது, மேலும் அதிகாரங்களை எதிர்ப்பார்க்கக் கூடாது என்ற செய்தியே வழங்கப்படுகிறது.   

உண்மையிலேயே, தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தயாரித்து வரும் புதிய அரசமைப்பில், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகப் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், மாகாண சபைகளின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியங்கள் தென்படவில்லை.   

எல்லோரும் தற்போது செயற்படும் அதிகாரப் பரவலாக்கல் முறையை, எவ்வாறு அழைக்கலாம் என்ற விடயத்தில் தான் கவனம் செலுத்தி வருகின்றனர். சிலர், அது ஒற்றையாட்சியாக இருக்க வேண்டும் என்றும், வேறு சிலர் அது ஒருமித்த நாடு என்று அழைக்கப்பட வேண்டும் என்றும், மற்றும் சிலர் அது சமஷ்டி என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.   

ஆனால், நடைமுறையில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படப் போவதில்லை.    

மாகாண சபைகள் அதிகாரங்களை பயன்படுத்துகின்றனவா?

மாகாண சபைகளைப் பலர் ‘வெள்ளை யானைகள்’ என்றே அழைக்கின்றனர்.   

அவற்றுக்காகச் செலவளிக்கப்படும் பணத்தால், எவ்வித பயனும் இல்லை என்பதே அதன் அர்த்தமாகும். மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்த்தால், அது, ஏறத்தாழப் பொருத்தமான கருத்தாகவே தெரிகிறது.   

வடக்கு, கிழக்கு மாகாண சபைகளைத் தவிர்ந்த ஏனைய மாகாண சபைகளுக்காக, சுமார் எட்டு முறை தேர்தல்கள் நடத்தப்பட்டு, அச்சபைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 30 ஆண்டு காலத்தில் அவை நிறைவேற்றிய சட்டமூலங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், அவை இவ்வளவு காலமும் என்ன செய்தன என்று கேட்கவே தோன்றுகிறது.   

அவற்றில் அநேகமாகப் பல பிரேரணைகள், நிறைவேற்றப்பட்ட போதிலும் அவை மாகாணத்தின் அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு முன்வைக்கப்படுபவை அல்ல. அவை பெரும்பாலும், அந்த மாகாண சபைகளின் அன்றாடப் பணிகளைத் தொடர்வதற்கான பிரேரணைகள், ஏனைய கட்சிகளைத் தாக்கும் நோக்கில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் முன்வைக்கும் பிரேரணைகளாகவே இருக்கின்றன.  
தென்பகுதியில் பெரும்பாலான மாகாண சபைகளில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்கள் பலர் இருக்கின்றனர். 

எனவே, அரசியல்வாதிகள் தமது பிள்ளைகளுக்குப் பயிற்சி வழங்கும் பாசறையாகவே மாகாண சபைகளைப் பாவிக்கிறார்கள் என்றே கூற வேண்டும். பயிற்சி என்றாலும், அது அறிவுபூர்வமான பயிற்சியல்ல என்பதை மாகாண சபை உறுப்பினர்களின் நடத்தை காட்டுகிறது. அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே தான் நடந்து கொள்கிறார்கள்.  

தென்பகுதிக்கு அதிகாரப் பரவலாக்கலின் பெறுமதி விளங்காமல் இருக்கலாம்; ஆனால், அதிகாரப் பரவலாக்கலுக்காகக் கடுமையாகப் போராடிய வடக்கு, கிழக்கு மக்களும் அரசியல்வாதிகளும் அதன் பெறுமதியை உணரவில்லை என்றால், அது மிகவும் மோசமான நிலைமையாகும்.  

அப்பகுதி அரசியல்வாதிகளும், மாகாண சபைகளைத் தமது மக்களின் நலன்களுக்காகப் பாவித்தார்களா என்ற கேள்வி எழுகிறது. 

கடந்த வருடம் ஜூலை மாதம், ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை, வடமாகாண சபையின் நடவடிக்கைகளைப் பற்றி, மிகவும் பாரதூரமானதொரு செய்தியை வெளியிட்டு இருந்தது.  

அதன்படி, வடமாகாண சபை, கடந்த ஐந்தாண்டு காலத்தில், 415 பிரேரணைகளை நிறைவேற்றியிருக்கிறது. அதாவது, அச்சபை கூடிய ஒவ்வொரு நாளிலும் தலா ஏழு பிரேரணைகளை நிறைவேற்றியிருக்கிறது. 

ஆனால், அவற்றில் பெரும்பாலானவை, மாகாண சபையின் அதிகாரத்துக்கு உட்பட்டவையல்ல என்றும், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  

நிறைவேற்றப்பட்ட சில பிரேரணைகள் அரசியல் காரணங்கள் தொடர்பானவை ஆகும். அதன் காரணமாகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பின் தள்ளப்பட்டுள்ளன. 

அரசியல் பிரச்சினைகளை, அவர்கள் அரசியல் கட்சிகள் மட்டத்தில் கையாண்டு இருக்கலாம். மாகாண சபையை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பாவித்திருக்கலாம்.   

அதற்காக, மாகாண சபைகளுக்கு அதிகாரம் இல்லை எனக் கூற முடியாது. அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம், மாகாண சபைகளுக்கு ஓரளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரங்கள், அந்தத் திருத்தத்தில் ஒரு பட்டியலாகவே (மாகாண சபைப் பட்டியல்) வழங்கப்பட்டுள்ளன.  

கல்வி, உள்ளூராட்சி, வீடமைப்பு, சமூக சேவைகள், சிறுவர் பராமரிப்பு, நன்னடத்தை, அகதிகள், மறுவாழ்வு, விவசாயம், கிராம அபிவிருத்தி, சுகாதாரம், சந்தைகள், கூட்டுறவுத்துறை, நீர்ப்பாசனம், கால் நடை அபிவிருத்தி போன்றவை தொடர்பான ஓரளவு அதிகாரங்கள் மாகாண சபை பட்டியலின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.   

பொலிஸ், காணி அதிகாரங்களும் அந்தப் பட்டியலில் இருந்த போதிலும் அவற்றை முறையாக வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலில், கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு ஜனாதிபதியும் கையெழுத்திடாததால் அந்த அதிகாரங்கள் மாகாண சபைகளால் பாவிக்க முடியாதுள்ளன.   

ஆனால், அதற்காகப் பயன்படுத்த  முடிந்த அதிகாரங்களையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமா? 
எனவே, பிரதமர் கூறுவதைப் போல், இருக்கும் அதிகாரங்களையாவது பயன்படுத்தாமல் இருப்பது, மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியதல்ல.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அதிகாரப்-பரவலாக்கலும்-பிரதமரும்/91-229822

 

மக்­கள் வழங்­கிய ஆணையை மீறு­வது நாட்­டுக்கு நல்­ல­தல்ல!!

2 days 13 hours ago
மக்­கள் வழங்­கிய ஆணையை மீறு­வது நாட்­டுக்கு நல்­ல­தல்ல!! பதிவேற்றிய காலம்: Feb 18, 2019 அரச தலை­வ­ருக்­கும் தலைமை அமைச்­ச­ருக்­கும் இடை­யி­லான முறு­கல் நிலை தீவி­ர­ம­டைந்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. ரணில் விக்­கி­ர­ ம­சிங்க யாழ்ப்­பா­ணத்­துக்கு வரு­வ­தற்கு முன்­னர் அவ­ரது பாது­காப்பை உறு­தி­செய்து கொள்­வ­தற்­காக அவ­ரது பாது­காப்­புப் பிரி­வி­னர் இங்­கு­வந்து நில­மையை ஆராய்ந்­துள்­ள­னர். இந்­தப் பாது­காப்­புக் குழு­வி­னர் காங்­கே­சன்­துறை கடற்­படை முகா­முக்­குள் செல்­வ­தற்கு முயற்­சி­செய்­த­போ­தி­லும் அதற்­கு­ரிய அனு­மதி அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. பாது­காப்பு அமைச்­சுப் பொறுப்பை அரச தலை­வர் வகிப்­ப­தால் இந்த விட­யம் அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அரச தலை­வ­ரால் குழப்­பங்­கள் சமீப கால­மாவே அரச தலை­வர் திட­மான முடிவு எதை­யும் எடுக்­க­மு­டி­யாத நிலை­யில் குழம்பி வரு­கின்­றார். இத­னால் அர­சி­ய­லி­லும் குழப்­ப­நிலை தோன்­றி­யுள்­ளது. அவர் மகிந்­த­வு­டன் இணைந்து விடு­வா­ரெ­னக் கூறப்­பட்ட போதி­லும் அதில்­கூட நிரந்­த­ர­மாக எந்­த­வி­த­மான முடி­வும் இது­வரை எட்­டப்­ப­ட­வில்லை. அரச தலை­வர் வேட்­பா­ளர் தெரி­வி­லும் குழப்­பங்­கள் நீடிப்­ப­தைக் காண முடி­கின்­றது. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே அரச தலை­வர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டு­வா­ரென அவர் தலைமை தாங்­கும் கட்­சி­யின் கூறு­கின்­ற­னர். ஆனால் மறு­பு­றத்­தில் பார்த்­த­தால் தாமரை மொட்­டுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­களே மகிந்த அணி சார்­பில் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யு­மெ­னத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தற்­போ­தைய நிலை­யில் அர­சி­யல் சூழ்­நி­லையை மதிப்­பீடு செய்து பார்க்­கும்­போது தேர்­த­லில் போட்­டி­யிட்­டா­லும் மைத்­தி­பால சிறி­சே­ன­வின் வெற்றி வாய்ப்பு பிர­கா­ச­மா­கத் தென்­ப­ட­வில்லை. சிறு­பான்­மை­ யின மக்­கள் அவர் மீதான நம்­பிக்­கைய முற்­றாக இழந்­து­விட்­ட­னர் என்றே கூற­ வேண்­டும். அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ ளுக்­குத் தீர்­வைக் காண்­ப­தில் அவர் முற்­றா­கத் தவ­றி­யுள்­ள­மையே இதற்­கான கார­ண­மா­கும். அது­மட்­டு­மல்­லாது சிறு­ பான்­மை­யின மக்­க­ளின் வாக்­கு­க­ளால் தாம் பத­விக்கு வந்­ததை மறந்து விட்­ட­வர் போன்­றும் அவர் செயற்­ப­டு­கின்­றார். மகிந்த சொல்­லும் பொய்ப் பரப்­புரை அதே­வேளை மகிந்த ராஜ­பக்­ச­வின் சமீ­ப­கால நட­வ­டிக்­கை­கள் ஏற்­றுக்­கொள்­ளத் தக்­க­ன­வாக அமை­ய­வில்லை என்­ப­தைக் கூறத்­தான் வேண்­டும். தமி­ழர்­க­ளுக்­குத் தம்­மால் அர­சி­யல் தீர்­வைத் வழங்­க­மு­டி­யு­மென அவர் கூறி­யது நம்­பத் தகுந்­த­தா­கத் தெரி­ய­வில்லை. தாம் பத­வி­யில் இருந்­த­போது வழங்­க­மு­டி­யாத ஒன்­றைப் பத­வி­யில் இல்­லா­த­போது எவ்­வாறு வழங்­கப்­போ­கி­றார்? எனப் பல­ரும் கேள்வி எழுப்­பு­கின்­ற­னர். அது மட்­டு­மல்­லாது இறு­திப்­போர் தொடர்­பாக அவர் தெரி­வித்த சில கருத்­துக்­க­ளும் முரண்­பாட்­டைத் தோற்­று­வித்­துள்­ளன. அவர் பொய்­யு­ரைக்­கி­றார் என்றே போரின் வடுக்­க­ளைத் தாங்கி நிற்­கும் மக்­கள் கரு­து­கின்­ற­னர். இந்த நிலை­யில் இவர்­க­ளி­ரு­வ­ரும் இணைந்து செயற்­ப­டும்­போது இந்­த­மக்­கள் இவர்­களை ஆத­ரிப்­பா­ளர்­க­ளென எதிர்­பார்க்­க­மு­டி­யாது. தற்­போது தலைமை அமைச்­ச­ரு­டன் அவர் முரண்­பட்டு நிற்­பது ஏற்­க­னவே மோச­மான நிலை­யில் காணப்­ப­டும் நாட்­டின் அபி­வி­ருத்­திக்­குக் குந்­த­க­மா கவே அமைந்­து­வி­டும். அடுத்த ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லும் இடம்­பெ­ற­வுள்ள நிலை­யில் அரச தலை­வர் அவ­ச­ரப்­ப­டு­வ­தன் கார­ணத்­தைப் புரிந்­து­ கொள்ள முடி­ய­ வில்லை. அவர் எதற்­கா­கவோ பதற்­றப்­ப­டு­வ­தும் தெளி­வா­கத் தெரி­கின்­றது. சந்­தி­ரி­கா­வின் மறு வருகை அதே­வேளை சந்­தி­ரி­கா­வின் அர­சி­யல் மீள்­வ­ருகை மைத்­தி­ரிக்­கும் மகிந்­த­வுக்­கும் சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தவே செய்­யும். சில­வேளை சந்­தி­ரிகா தமது ஆத­ரவை ரணி­லுக்­குத் தமது ஆத­ரவை வழங்­க­மாட்­டா­ரென்­ப­தற்கு எவ்­வித உத்­த­ர­வா­த­மும் கிடை­யாது. இத­னால் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­கவே நன்­மை­ய­டை­வார். ஆனால் அரச தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரும் முரண்­பட்டு நிற்­பது நாட்­டுக்­குத் தீமை­யா­கவே முடி­யும். இந்த நாட்­டின் அர­சி­யல் தலை­வர்­கள் தமது சொந்­தப் பிரச்­சி­னை­க­ ளுக்கு வழங்­கு­கின்ற முக்­கி­யத்­து­ வத்தை நாட்­டின் நல­னுக்கு வழங்­கு­வ­தில்லை. இதன் கார­ண­மா­கவே நாடு சகல துறை­க­ளி­லும் பின்­ன­டைவை எதிர்­கொண்டு வரு­கின்­றது. நாட்­டுக்கு வழி­காட்ட வேண்­டிய இவர்­கள் தாமே தவ­றான வழி­க­ளில் செல்­வதை எவ்­வாறு அனு­ம­திக்­க­மு­டி­யும்? அதி­லும் முழு­நாட்­டுக்­கும் பொறுப்­பா­க­வுள்ள தலைமை அமைச்­ச­ரும் அரச தலை­வ­ரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பகையை வளர்த்­துக்­கொள்­வ­தும் பகி­ரங்­க­மா­கவே முரண்­பா­டு­களை வெளிக்­காட்­டு­வ­தும் முழு நாட்­டை­யுமே பாதித்­து­வி­டும். இவர்­க­ளின் முரண்­பா­டு­கள் நாட்­டில் குழப்ப நிலை­யொன்­றைத் தோற்­று­வித்­து­வி­டும். நாட்­டின் அபி­வி­ருத்­தி­யை­யும் பறித்­து­வி­டும். இத­னால் பொரு­ளா­தார ரீதி­யான பாதிப்­பும் அதி­க­மா­கி­வி­டும். இப்­போதே மக்­கள் பொரு­ளா­தா­ரச் சுமை­க­ளைச் சுமைக்க முடி­யாத நிலை­யில் துன்­பங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். அண்­மை­யில் எரி­பொ­ருள்­க­ளின் விலை­க­ளும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளமை பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தப்­போ­கின்­றது. இதை­யும் மக்­கள்­தான் தாங்­கிக்­கொள்­ள­வேண்­டும். ஆகவே நாட்­டின் நல­னை­யும் மக்­க­ளின் நல­னை­யும் கருத்­தில்­கொண்டு அரச தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரும் தமக்­கி­டை­யி­லான முரண்­பா­டு களை மறந்து ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­டு­தல் அவ­சி­ய­மா­ன­தா­கும். கடந்த 2015ஆம் ஆண்டு இதற்­கான ஆணை­யைத்­தான் மக்­கள் இவர்­க­ளுக்கு வழங்­கி­னார்­கள். இதை மறந்து இவர்­க­ளி­ரு­வ­ரும் தமது எண்­ணம்­போன்று செயற்­ப­டு­வதை மக்­கள் ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள். https://newuthayan.com/story/10/மக்­கள்-வழங்­கிய-ஆணையை-மீறு­வது-நாட்­டுக்கு-நல்­ல­தல்ல.html

மக்­கள் வழங்­கிய ஆணையை மீறு­வது நாட்­டுக்கு நல்­ல­தல்ல!!

2 days 13 hours ago
மக்­கள் வழங்­கிய ஆணையை மீறு­வது நாட்­டுக்கு நல்­ல­தல்ல!!
பதிவேற்றிய காலம்: Feb 18, 2019

அரச தலை­வ­ருக்­கும் தலைமை அமைச்­ச­ருக்­கும் இடை­யி­லான முறு­கல் நிலை தீவி­ர­ம­டைந்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. ரணில் விக்­கி­ர­ ம­சிங்க யாழ்ப்­பா­ணத்­துக்கு வரு­வ­தற்கு முன்­னர் அவ­ரது பாது­காப்பை உறு­தி­செய்து கொள்­வ­தற்­காக அவ­ரது பாது­காப்­புப் பிரி­வி­னர் இங்­கு­வந்து நில­மையை ஆராய்ந்­துள்­ள­னர். இந்­தப் பாது­காப்­புக் குழு­வி­னர் காங்­கே­சன்­துறை கடற்­படை முகா­முக்­குள் செல்­வ­தற்கு முயற்­சி­செய்­த­போ­தி­லும் அதற்­கு­ரிய அனு­மதி அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. பாது­காப்பு அமைச்­சுப் பொறுப்பை அரச தலை­வர் வகிப்­ப­தால் இந்த விட­யம் அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அரச தலை­வ­ரால் குழப்­பங்­கள்
சமீப கால­மாவே அரச தலை­வர் திட­மான முடிவு எதை­யும் எடுக்­க­மு­டி­யாத நிலை­யில் குழம்பி வரு­கின்­றார். இத­னால் அர­சி­ய­லி­லும் குழப்­ப­நிலை தோன்­றி­யுள்­ளது. அவர் மகிந்­த­வு­டன் இணைந்து விடு­வா­ரெ­னக் கூறப்­பட்ட போதி­லும் அதில்­கூட நிரந்­த­ர­மாக எந்­த­வி­த­மான முடி­வும் இது­வரை எட்­டப்­ப­ட­வில்லை. அரச தலை­வர் வேட்­பா­ளர் தெரி­வி­லும் குழப்­பங்­கள் நீடிப்­ப­தைக் காண முடி­கின்­றது. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே அரச தலை­வர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டு­வா­ரென அவர் தலைமை தாங்­கும் கட்­சி­யின் கூறு­கின்­ற­னர். ஆனால் மறு­பு­றத்­தில் பார்த்­த­தால் தாமரை மொட்­டுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­களே மகிந்த அணி சார்­பில் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யு­மெ­னத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தற்­போ­தைய நிலை­யில் அர­சி­யல் சூழ்­நி­லையை மதிப்­பீடு செய்து பார்க்­கும்­போது தேர்­த­லில் போட்­டி­யிட்­டா­லும் மைத்­தி­பால சிறி­சே­ன­வின் வெற்றி வாய்ப்பு பிர­கா­ச­மா­கத் தென்­ப­ட­வில்லை. சிறு­பான்­மை­ யின மக்­கள் அவர் மீதான நம்­பிக்­கைய முற்­றாக இழந்­து­விட்­ட­னர் என்றே கூற­ வேண்­டும்.

 

அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ ளுக்­குத் தீர்­வைக் காண்­ப­தில் அவர் முற்­றா­கத் தவ­றி­யுள்­ள­மையே இதற்­கான கார­ண­மா­கும். அது­மட்­டு­மல்­லாது சிறு­ பான்­மை­யின மக்­க­ளின் வாக்­கு­க­ளால் தாம் பத­விக்கு வந்­ததை மறந்து விட்­ட­வர் போன்­றும் அவர் செயற்­ப­டு­கின்­றார்.

மகிந்த சொல்­லும்
பொய்ப் பரப்­புரை
அதே­வேளை மகிந்த ராஜ­பக்­ச­வின் சமீ­ப­கால நட­வ­டிக்­கை­கள் ஏற்­றுக்­கொள்­ளத் தக்­க­ன­வாக அமை­ய­வில்லை என்­ப­தைக் கூறத்­தான் வேண்­டும். தமி­ழர்­க­ளுக்­குத் தம்­மால் அர­சி­யல் தீர்­வைத் வழங்­க­மு­டி­யு­மென அவர் கூறி­யது நம்­பத் தகுந்­த­தா­கத் தெரி­ய­வில்லை. தாம் பத­வி­யில் இருந்­த­போது வழங்­க­மு­டி­யாத ஒன்­றைப் பத­வி­யில் இல்­லா­த­போது எவ்­வாறு வழங்­கப்­போ­கி­றார்? எனப் பல­ரும் கேள்வி எழுப்­பு­கின்­ற­னர். அது மட்­டு­மல்­லாது இறு­திப்­போர் தொடர்­பாக அவர் தெரி­வித்த சில கருத்­துக்­க­ளும் முரண்­பாட்­டைத் தோற்­று­வித்­துள்­ளன. அவர் பொய்­யு­ரைக்­கி­றார் என்றே போரின் வடுக்­க­ளைத் தாங்கி நிற்­கும் மக்­கள் கரு­து­கின்­ற­னர். இந்த நிலை­யில் இவர்­க­ளி­ரு­வ­ரும் இணைந்து செயற்­ப­டும்­போது இந்­த­மக்­கள் இவர்­களை ஆத­ரிப்­பா­ளர்­க­ளென எதிர்­பார்க்­க­மு­டி­யாது.

தற்­போது தலைமை அமைச்­ச­ரு­டன் அவர் முரண்­பட்டு நிற்­பது ஏற்­க­னவே மோச­மான நிலை­யில் காணப்­ப­டும் நாட்­டின் அபி­வி­ருத்­திக்­குக் குந்­த­க­மா கவே அமைந்­து­வி­டும். அடுத்த ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லும் இடம்­பெ­ற­வுள்ள நிலை­யில் அரச தலை­வர் அவ­ச­ரப்­ப­டு­வ­தன் கார­ணத்­தைப் புரிந்­து­ கொள்ள முடி­ய­ வில்லை. அவர் எதற்­கா­கவோ பதற்­றப்­ப­டு­வ­தும் தெளி­வா­கத் தெரி­கின்­றது.

சந்­தி­ரி­கா­வின்
மறு வருகை
அதே­வேளை சந்­தி­ரி­கா­வின் அர­சி­யல் மீள்­வ­ருகை மைத்­தி­ரிக்­கும் மகிந்­த­வுக்­கும் சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தவே செய்­யும். சில­வேளை சந்­தி­ரிகா தமது ஆத­ரவை ரணி­லுக்­குத் தமது ஆத­ரவை வழங்­க­மாட்­டா­ரென்­ப­தற்கு எவ்­வித உத்­த­ர­வா­த­மும் கிடை­யாது. இத­னால் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­கவே நன்­மை­ய­டை­வார். ஆனால் அரச தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரும் முரண்­பட்டு நிற்­பது நாட்­டுக்­குத் தீமை­யா­கவே முடி­யும். இந்த நாட்­டின் அர­சி­யல் தலை­வர்­கள் தமது சொந்­தப் பிரச்­சி­னை­க­ ளுக்கு வழங்­கு­கின்ற முக்­கி­யத்­து­ வத்தை நாட்­டின் நல­னுக்கு வழங்­கு­வ­தில்லை. இதன் கார­ண­மா­கவே நாடு சகல துறை­க­ளி­லும் பின்­ன­டைவை எதிர்­கொண்டு வரு­கின்­றது. நாட்­டுக்கு வழி­காட்ட வேண்­டிய இவர்­கள் தாமே தவ­றான வழி­க­ளில் செல்­வதை எவ்­வாறு அனு­ம­திக்­க­மு­டி­யும்?

அதி­லும் முழு­நாட்­டுக்­கும் பொறுப்­பா­க­வுள்ள தலைமை அமைச்­ச­ரும் அரச தலை­வ­ரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பகையை வளர்த்­துக்­கொள்­வ­தும் பகி­ரங்­க­மா­கவே முரண்­பா­டு­களை வெளிக்­காட்­டு­வ­தும் முழு நாட்­டை­யுமே பாதித்­து­வி­டும். இவர்­க­ளின் முரண்­பா­டு­கள் நாட்­டில் குழப்ப நிலை­யொன்­றைத் தோற்­று­வித்­து­வி­டும். நாட்­டின் அபி­வி­ருத்­தி­யை­யும் பறித்­து­வி­டும். இத­னால் பொரு­ளா­தார ரீதி­யான பாதிப்­பும் அதி­க­மா­கி­வி­டும். இப்­போதே மக்­கள் பொரு­ளா­தா­ரச் சுமை­க­ளைச் சுமைக்க முடி­யாத நிலை­யில் துன்­பங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். அண்­மை­யில் எரி­பொ­ருள்­க­ளின் விலை­க­ளும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளமை பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தப்­போ­கின்­றது. இதை­யும் மக்­கள்­தான் தாங்­கிக்­கொள்­ள­வேண்­டும்.

ஆகவே நாட்­டின் நல­னை­யும் மக்­க­ளின் நல­னை­யும் கருத்­தில்­கொண்டு அரச தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரும் தமக்­கி­டை­யி­லான முரண்­பா­டு களை மறந்து ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­டு­தல் அவ­சி­ய­மா­ன­தா­கும். கடந்த 2015ஆம் ஆண்டு இதற்­கான ஆணை­யைத்­தான் மக்­கள் இவர்­க­ளுக்கு வழங்­கி­னார்­கள். இதை மறந்து இவர்­க­ளி­ரு­வ­ரும் தமது எண்­ணம்­போன்று செயற்­ப­டு­வதை மக்­கள் ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள்.

 

 

https://newuthayan.com/story/10/மக்­கள்-வழங்­கிய-ஆணையை-மீறு­வது-நாட்­டுக்கு-நல்­ல­தல்ல.html

புதிய அர­ச­மைப்பு - ஏமாற்­றமே எஞ்­சி­யது!!

2 days 13 hours ago
ஏமாற்­றமே எஞ்­சி­யது!! பதிவேற்றிய காலம்: Feb 18, 2019 தற்­போ­தைய அர­சின் ஆட்­சிக் காலத்­தில் புதிய அர­சமைப்பு நிறை வேற்­றப்­ப­ட­மாட்­டா­தென்­பது அநே­க­மாக உறு­தி­யா­கி­விட்­டது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­சிங்க இதை வெளிப்­ப­டுத்­தி­விட்­டார். அர­சி­யல் குழப்­பம் மற்­றும் சூழ்ச்சி கார­ண­மா­கத் தமது தலை­மை­யி­லான கூட்டு அரசு உடைக்­கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் இதன் கார­ண­மாக மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை இழக்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்த அவர், இதன் கார­ண­மாக புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­று­ வ­தில் தாத­மம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார். அர­சி­யல் சூழ்ச்சி கார­ண­மா­கத் தடைப்­பட்டு நிற்­கும் நாட்­டின் அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்­துச் செல்­வதே இனி­மேல் தமது இலக்கு என­வும் அவர் தெரி­வித்­துள்­ளார். ஆத­ரவு இல்­லா­மல் தமி­ழர்­கள் அவ­லம் தமி­ழர்­க­ளுக்­குத் தீர்வை வழங்­கும் இன்­னு­மொரு முயற்­சி­யை­யும் இன­வா­தி­கள் வெற்­றி­க­ர­மாக முறி­ய­டித்து விட்­டார்­கள். இது இந்த நாட்­டுக்­குப் புதி­ய­தொரு விட­ய­மு­மல்ல. இந்த நாட்­டைப் பொறுத்த வரை­யில் தமி­ழர்­கள் சபிக்­கப்­பட்­ட­தொரு இன­மா­கவே கணிக்­கப்­ப­டு­கின்­ற­னர். அவர்­க­ளைத் தலை­யெ­டுக்க விடா­மல் செய்­வ­தில் இன­வா­தி­கள் மிகக் கவ­ன­மாக இருக்­கி­றார்­கள். தமி­ழர்­க­ளுக்கு ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டு­வ­தற்கு எவ­ரு­மில்லை என்­பது வேத­னைக்­கு­ரி­யது. இலங்­கைத் தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் அவர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் பெரும் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. போர் கார­ண­மா­கப் பலர் இறந்­தும் ஏரா­ள­மா­ன­வர்­கள் புலம்­பெ­ய­ரர்ந்து வாழ்­வ­தும் இதற்­கான முதன்­மைக் கார­ணங்­க­ளா­கும். இதை­விட ஏனைய இனங்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது தமி­ழர்­க­ளின் பிறப்பு வீத­மும் வெகு­வா­கக் குறைந்­த­தும் இதற்­கான பிறி­தொரு கார­ண­மா­கும். அண்­மை­யில் யாழ்ப்­பா­ணத்­துக்கு வரு­கை­தந்த அமைச்­சர் மனோ­க­ணே­சன் ஒரு விட­யத்­தைக் குறிப்­பிட்­டி­ருந்­தார். போர் கார­ண­மா­கப் பல்­வேறு கார­ணங்­க­ளா­லும் இலங்­கைத் தமி­ழர்­க­ளின் எண்­ணிக்கை வீழ்ச்­சி­ய­டைத்­துள்­ளது. தற்­போது இவர்­க­ளுக்­குச் சம­மான எண்­ணிக்­கை­யில் இந்­திய வம்­சா­வ­ளித் தமிழ்­மக்­கள் வாழ்­கின்­ற­னர். இந்த இரண்டு இனத்­த­வர்­க­ளும் இணைந்து செயற்­பட்­டால் தமி­ழர்­கள் என்ற வகை­யில் பல­மான சக்­தி­யா­கச் செயற்­ப­ட­மு­டி­யும். இந்த உறவு தேர்­தல்­களை மைய­மா­கக் கொண்டு இருக்­க­வேண்­டிய அவ­சி­யம் கிடை­யாது. இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார். ஆனால் பூகோள ரீதி­யி­லும் அர­சி­யல் மற்­றும் பொரு­ளா­தார அடிப்­ப­டை­யி­லும் மிகப்­பெ­ரிய இடை­வெ­ளி­யைக்­கொண்­டுள்ள இந்த இரண்டு இனத்­த­வ­ரும் ஒன்­றாக இணைந்து பய­ணிப்­ப­தற்­கான வாய்ப்பு இல்­லை­யென்­று­தான் கூற­வேண்­டும். பண்­டா­ர­நா­யக்க காலம் தொட்டு ரணி­லின் காலம்­வரை ஏமாற்­றம் தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் காலம் கால­மா­கப் பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­தி­க­ளால் ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். பண்­டா­ர­நா­யக்க காலம்­தொ­டக்­கம் ரணில் காலம்­வரை இது­தான் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. அன்று தமி­ழர்­க­ளுக்­குச் சுயாட்சி வழங்­கு­வ­தற்­காக ஒப்­பந்­த­மொன்­றைத் தந்தை செல்­வா­வு­டன் செய்­து­கொண்ட பண்­டா­ர­நா­யக்க இன­வா­தி­க­ளின் எதிர்ப்­புக்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க முடி­யாத நிலை­யில் அந்த ஒப்­பந்­த­தைத்­தையே கிழித்து எறிந்­தார். டட்லி சேனா­நா­யக்­க­வும் செல்­வா­வும் செய்­து­கொண்ட ஒப்­பந்­தத்­துக்­கும் இதே கதி­தான் ஏற்­பட்­டது. தற்­போது புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் தொடர்­பாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யும் பாதி­யில் நின்­று­போ­யுள்­ளது. பெரும்­பான்­மை­யின ஆட்­சி­யா­ளர்­க­ளும் அர­சி­யல்­வா­தி­க­ளும் தமக்­குள் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் சாட்­டிக்­கொண்டு தமி­ழர்­களை ஏமாற்­று­வ­தையே தமது வாடிக்­கை­யா­கக் கொண்­டுள்­ள­னர். விடு­த­லைப்­பு­லி­க­ளால் தமக்கு ஒரு விடிவு கிடைக்­கு­மெ­னத் தமி­ழர்­கள் நம்­பி­யி­ருந்த கால­மும் இருக்­கி­றது. புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ரனை எவ­ரா­லுமே ஏமாற்ற முடி­ய­வில்லை. அன்­றைய இந்­தி­யத் தலைமை அமைச்­ச­ரான ராஜிவ்­காந்­தி­யி­னால்­கூட அது முடி­ய­வில்லை. தமது கொள்­கை­யில் இருந்து எவ­ருக்­கா­க­வும் விட்­டுக்­கொ­டுக்­காத துணி­வும் கொள்­கைப்­பி­டிப்­பும் கொண்­ட­வ­ரா­கப் பிர­பா­க­ரன் விளக்­கி­னார். இந்­தி­யப் படை­கள் இந்த நாட்­டில் கால் பதிப்­ப­தற்­கும் இதுவே கார­ண­மா­கும். தமி­ழர்­க­ளின் தற்­போ­தைய தலை­வ­ரான சம்­பந்­தன் நேர்­மை­யும் அர­சி­யல் சாணக்­கி­ய­மும் மதி­நுட்­ப­மும்­மிக்க ஒரு­வ­ரெ­னக் கணிக்­கப்­பட்­டுள்­ளார். தமி­ழர்­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­க­ வேண்­டும் என்­ப­தற்­காக அவர் மிகக் கடு­மை­யாக உழைத்­தி­ருக்­கி­றார். புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் தொடர்­பா­கத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் எழு­தாத வாய்­மொழி மூல­மான ஒப்­ப­தந்­த­மொன்­றைச் செய்து கொண்­டி­ருப்­பா­ரெ­னத் தெரி­கின்­றது. இத­னால் நாட்­டில் அர­சி­யல் குழப்­ப­மொன்று ஏற்­பட்­ட­போது சம்­பந்­தன் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரித்து நின்­றார். மகிந்த தரப்­பின் எதிர்ப்­பை­யும் சம்­பா­தித்­துக் கொண்­டார். ரணில் அரசு நீடிக்­கும்­போ­தூன் புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றி­வைக்­கப்­ப­டும் என்ற நம்­பிக்கை அவ­ரது மன­தில் மேலோங்­கிக் காணப்­பட்­டது. ஆனால் எல்­லாமே ஏமாற்­றத்­தில் முடிந்­து­விட்­டது. தமி­ழர்­கள் மீண்­டு­மொரு தடவை ஏமாற்­றப்­பட்டு விட்­டார்­கள். புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றி­வைக்­கப்­ப­டு மென இனி­யும் நம்­பிக்­கொண்­டி­ருப்­ப­தால் பய­னொன்­றும் கிடைத்­து­விட மாட்­டாது. இன­வா­தி­கள் இந்த நாட்­டில் இருந்து ஒழிந்­து­போ­கும் வரை­யில் தமி­ழர்­கள் தொடர்ந்து ஏமாற்­றப்­ப­டவே செய்­வார்­கள். அவர்­க­ளுக்­கெ­ன­வும் ஒரு­கா­லம் வரா­மல் போகாது. அது­வ­ரை­யில் நம்­பிக்­கை­யு­டன் காத்­தி­ருப்­ப­தைத்­த­விர வேறு­வ­ழியே கிடை­யாது. https://newuthayan.com/story/10/ஏமாற்­றமே-எஞ்­சி­யது.html

புதிய அர­ச­மைப்பு - ஏமாற்­றமே எஞ்­சி­யது!!

2 days 13 hours ago
ஏமாற்­றமே எஞ்­சி­யது!!
பதிவேற்றிய காலம்: Feb 18, 2019

தற்­போ­தைய அர­சின் ஆட்­சிக் காலத்­தில் புதிய அர­சமைப்பு நிறை வேற்­றப்­ப­ட­மாட்­டா­தென்­பது அநே­க­மாக உறு­தி­யா­கி­விட்­டது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­சிங்க இதை வெளிப்­ப­டுத்­தி­விட்­டார். அர­சி­யல் குழப்­பம் மற்­றும் சூழ்ச்சி கார­ண­மா­கத் தமது தலை­மை­யி­லான கூட்டு அரசு உடைக்­கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் இதன் கார­ண­மாக மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை இழக்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்த அவர், இதன் கார­ண­மாக புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­று­ வ­தில் தாத­மம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார். அர­சி­யல் சூழ்ச்சி கார­ண­மா­கத் தடைப்­பட்டு நிற்­கும் நாட்­டின் அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்­துச் செல்­வதே இனி­மேல் தமது இலக்கு என­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

ஆத­ரவு இல்­லா­மல்
தமி­ழர்­கள் அவ­லம்
தமி­ழர்­க­ளுக்­குத் தீர்வை வழங்­கும் இன்­னு­மொரு முயற்­சி­யை­யும் இன­வா­தி­கள் வெற்­றி­க­ர­மாக முறி­ய­டித்து விட்­டார்­கள். இது இந்த நாட்­டுக்­குப் புதி­ய­தொரு விட­ய­மு­மல்ல. இந்த நாட்­டைப் பொறுத்த வரை­யில் தமி­ழர்­கள் சபிக்­கப்­பட்­ட­தொரு இன­மா­கவே கணிக்­கப்­ப­டு­கின்­ற­னர். அவர்­க­ளைத் தலை­யெ­டுக்க விடா­மல் செய்­வ­தில் இன­வா­தி­கள் மிகக் கவ­ன­மாக இருக்­கி­றார்­கள். தமி­ழர்­க­ளுக்கு ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டு­வ­தற்கு எவ­ரு­மில்லை என்­பது வேத­னைக்­கு­ரி­யது.

 

இலங்­கைத் தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் அவர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் பெரும் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. போர் கார­ண­மா­கப் பலர் இறந்­தும் ஏரா­ள­மா­ன­வர்­கள் புலம்­பெ­ய­ரர்ந்து வாழ்­வ­தும் இதற்­கான முதன்­மைக் கார­ணங்­க­ளா­கும். இதை­விட ஏனைய இனங்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது தமி­ழர்­க­ளின் பிறப்பு வீத­மும் வெகு­வா­கக் குறைந்­த­தும் இதற்­கான பிறி­தொரு கார­ண­மா­கும்.

அண்­மை­யில் யாழ்ப்­பா­ணத்­துக்கு வரு­கை­தந்த அமைச்­சர் மனோ­க­ணே­சன் ஒரு விட­யத்­தைக் குறிப்­பிட்­டி­ருந்­தார். போர் கார­ண­மா­கப் பல்­வேறு கார­ணங்­க­ளா­லும் இலங்­கைத் தமி­ழர்­க­ளின் எண்­ணிக்கை வீழ்ச்­சி­ய­டைத்­துள்­ளது. தற்­போது இவர்­க­ளுக்­குச் சம­மான எண்­ணிக்­கை­யில் இந்­திய வம்­சா­வ­ளித் தமிழ்­மக்­கள் வாழ்­கின்­ற­னர். இந்த இரண்டு இனத்­த­வர்­க­ளும் இணைந்து செயற்­பட்­டால் தமி­ழர்­கள் என்ற வகை­யில் பல­மான சக்­தி­யா­கச் செயற்­ப­ட­மு­டி­யும். இந்த உறவு தேர்­தல்­களை மைய­மா­கக் கொண்டு இருக்­க­வேண்­டிய அவ­சி­யம் கிடை­யாது. இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.
ஆனால் பூகோள ரீதி­யி­லும் அர­சி­யல் மற்­றும் பொரு­ளா­தார அடிப்­ப­டை­யி­லும் மிகப்­பெ­ரிய இடை­வெ­ளி­யைக்­கொண்­டுள்ள இந்த இரண்டு இனத்­த­வ­ரும் ஒன்­றாக இணைந்து பய­ணிப்­ப­தற்­கான வாய்ப்பு இல்­லை­யென்­று­தான் கூற­வேண்­டும்.

பண்­டா­ர­நா­யக்க காலம் தொட்டு
ரணி­லின் காலம்­வரை ஏமாற்­றம்
தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் காலம் கால­மா­கப் பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­தி­க­ளால் ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். பண்­டா­ர­நா­யக்க காலம்­தொ­டக்­கம் ரணில் காலம்­வரை இது­தான் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. அன்று தமி­ழர்­க­ளுக்­குச் சுயாட்சி வழங்­கு­வ­தற்­காக ஒப்­பந்­த­மொன்­றைத் தந்தை செல்­வா­வு­டன் செய்­து­கொண்ட பண்­டா­ர­நா­யக்க இன­வா­தி­க­ளின் எதிர்ப்­புக்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க முடி­யாத நிலை­யில் அந்த ஒப்­பந்­த­தைத்­தையே கிழித்து எறிந்­தார். டட்லி சேனா­நா­யக்­க­வும் செல்­வா­வும் செய்­து­கொண்ட ஒப்­பந்­தத்­துக்­கும் இதே கதி­தான் ஏற்­பட்­டது. தற்­போது புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் தொடர்­பாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யும் பாதி­யில் நின்­று­போ­யுள்­ளது. பெரும்­பான்­மை­யின ஆட்­சி­யா­ளர்­க­ளும் அர­சி­யல்­வா­தி­க­ளும் தமக்­குள் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் சாட்­டிக்­கொண்டு தமி­ழர்­களை ஏமாற்­று­வ­தையே தமது வாடிக்­கை­யா­கக் கொண்­டுள்­ள­னர்.

விடு­த­லைப்­பு­லி­க­ளால் தமக்கு ஒரு விடிவு கிடைக்­கு­மெ­னத் தமி­ழர்­கள் நம்­பி­யி­ருந்த கால­மும் இருக்­கி­றது. புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ரனை எவ­ரா­லுமே ஏமாற்ற முடி­ய­வில்லை. அன்­றைய இந்­தி­யத் தலைமை அமைச்­ச­ரான ராஜிவ்­காந்­தி­யி­னால்­கூட அது முடி­ய­வில்லை. தமது கொள்­கை­யில் இருந்து எவ­ருக்­கா­க­வும் விட்­டுக்­கொ­டுக்­காத துணி­வும் கொள்­கைப்­பி­டிப்­பும் கொண்­ட­வ­ரா­கப் பிர­பா­க­ரன் விளக்­கி­னார். இந்­தி­யப் படை­கள் இந்த நாட்­டில் கால் பதிப்­ப­தற்­கும் இதுவே கார­ண­மா­கும்.

தமி­ழர்­க­ளின் தற்­போ­தைய தலை­வ­ரான சம்­பந்­தன் நேர்­மை­யும் அர­சி­யல் சாணக்­கி­ய­மும் மதி­நுட்­ப­மும்­மிக்க ஒரு­வ­ரெ­னக் கணிக்­கப்­பட்­டுள்­ளார். தமி­ழர்­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­க­ வேண்­டும் என்­ப­தற்­காக அவர் மிகக் கடு­மை­யாக உழைத்­தி­ருக்­கி­றார். புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் தொடர்­பா­கத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் எழு­தாத வாய்­மொழி மூல­மான ஒப்­ப­தந்­த­மொன்­றைச் செய்து கொண்­டி­ருப்­பா­ரெ­னத் தெரி­கின்­றது. இத­னால் நாட்­டில் அர­சி­யல் குழப்­ப­மொன்று ஏற்­பட்­ட­போது சம்­பந்­தன் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரித்து நின்­றார்.

மகிந்த தரப்­பின் எதிர்ப்­பை­யும் சம்­பா­தித்­துக் கொண்­டார். ரணில் அரசு நீடிக்­கும்­போ­தூன் புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றி­வைக்­கப்­ப­டும் என்ற நம்­பிக்கை அவ­ரது மன­தில் மேலோங்­கிக் காணப்­பட்­டது. ஆனால் எல்­லாமே ஏமாற்­றத்­தில் முடிந்­து­விட்­டது. தமி­ழர்­கள் மீண்­டு­மொரு தடவை ஏமாற்­றப்­பட்டு விட்­டார்­கள்.

புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றி­வைக்­கப்­ப­டு மென இனி­யும் நம்­பிக்­கொண்­டி­ருப்­ப­தால் பய­னொன்­றும் கிடைத்­து­விட மாட்­டாது. இன­வா­தி­கள் இந்த நாட்­டில் இருந்து ஒழிந்­து­போ­கும் வரை­யில் தமி­ழர்­கள் தொடர்ந்து ஏமாற்­றப்­ப­டவே செய்­வார்­கள். அவர்­க­ளுக்­கெ­ன­வும் ஒரு­கா­லம் வரா­மல் போகாது. அது­வ­ரை­யில் நம்­பிக்­கை­யு­டன் காத்­தி­ருப்­ப­தைத்­த­விர வேறு­வ­ழியே கிடை­யாது.

 

https://newuthayan.com/story/10/ஏமாற்­றமே-எஞ்­சி­யது.html

மாணவன் மீது அதிபர் தாக்குதல் – மிரட்டும் அதிகாரிகள்!!

2 days 13 hours ago
மாணவன் மீது அதிபர் தாக்குதல் – மிரட்டும் அதிகாரிகள்!! பதிவேற்றிய காலம்: Feb 20, 2019 பாடசாலை அதிபர் தன்னைத் தாக்கினார் எனத் தெரிவித்து, அதிபருக்கு எதிராக பாடசாலை மாணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாட்டை மீளப்பெறுமாறு மாணவனுக்கு வலய கல்வி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் , இல்லையேல் உயர்தர பரீட்சைக்கு அனுமதி தரப்படா மாட்டாத என மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்ர். தீவக வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் மாணவன், கடந்த திங்கட்கிழமை பாடசாலைக்குச் சென்ற போது , ஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யவில்லை எனக் கூறி பாடசாலை அதிபரால் தாக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த மாணவன் ஊர்காவற்துறை வைத்திய சாலையில் கடந்த இரண்டு நாள்களாக தங்கி சிகிச்சை பெற்றுள்ளார். தன் மீது தாக்குதல் மேற்கொண்ட அதிபருக்கு எதிராக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மாணவன் இன்று முறைப்பாடு தெரிவித்துள்ளார். அதனை அறிந்த வலய கல்வி திணைக்கள அதிகாரிகள், குறித்த மாணவனை தொடர்பு கொண்டு அதிபருக்கு எதிரான முறைப்பாட்டை மீளப் பெறுமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். அத்துடன் முறைப்பாட்டை மீளப் பெற்றாலே உயர்தர பரீட்சை அனுமதிக்கு விண்ணப்பிக்க அனுமதிப்போம் என மிரட்டியும் உள்ளனர். சம்பவத்தினால் மாணவன் மிகுந்த மன அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/story/13/மாணவன்-மீது-அதிபர்-தாக்குதல்-மிரட்டும்-அதிகாரிகள்.html

மாணவன் மீது அதிபர் தாக்குதல் – மிரட்டும் அதிகாரிகள்!!

2 days 13 hours ago
மாணவன் மீது அதிபர் தாக்குதல் – மிரட்டும் அதிகாரிகள்!!
பதிவேற்றிய காலம்: Feb 20, 2019

பாடசாலை அதிபர் தன்னைத் தாக்கினார் எனத் தெரிவித்து, அதிபருக்கு எதிராக பாடசாலை மாணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை மீளப்பெறுமாறு மாணவனுக்கு வலய கல்வி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் , இல்லையேல் உயர்தர பரீட்சைக்கு அனுமதி தரப்படா மாட்டாத என மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்ர்.

தீவக வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் மாணவன், கடந்த திங்கட்கிழமை பாடசாலைக்குச் சென்ற போது , ஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யவில்லை எனக் கூறி பாடசாலை அதிபரால் தாக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த மாணவன் ஊர்காவற்துறை வைத்திய சாலையில் கடந்த இரண்டு நாள்களாக தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.

தன் மீது தாக்குதல் மேற்கொண்ட அதிபருக்கு எதிராக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மாணவன் இன்று முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

அதனை அறிந்த வலய கல்வி திணைக்கள அதிகாரிகள், குறித்த மாணவனை தொடர்பு கொண்டு அதிபருக்கு எதிரான முறைப்பாட்டை மீளப் பெறுமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

அத்துடன் முறைப்பாட்டை மீளப் பெற்றாலே உயர்தர பரீட்சை அனுமதிக்கு விண்ணப்பிக்க அனுமதிப்போம் என மிரட்டியும் உள்ளனர்.

சம்பவத்தினால் மாணவன் மிகுந்த மன அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

https://newuthayan.com/story/13/மாணவன்-மீது-அதிபர்-தாக்குதல்-மிரட்டும்-அதிகாரிகள்.html

தமிழ்ப் படம் பார்ப்பது எப்படி?! ​​​​​​​​​​​​​​🎬🎥🎞️📺📀

2 days 13 hours ago
ரதி, நீங்கள் சொன்னது போல் காதல், குடும்பப் படங்கள் மீண்டும் மீண்டும் பழைய கதைகளையே சொல்வதால் த்ரில்லர் படங்களையே நானும் விரும்பிப் பார்த்துள்ளேன், கூடவே குறைந்த பட்ஜெட்டில் புதுமையான படங்களும். அண்மைக் காலமாக இவ்வாறான படங்கள் நிறையவே வெளியாகி உள்ளன. 😊

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!

2 days 13 hours ago
உங்கள் வீட்டில் பூக்கண்டுகள் இருந்தால் அவற்றில் விடலாம்......!சிறிய போத்தில் என்றால் அது பூசை அறையில் ஒருபக்கத்தில் இருந்திட்டு போகட்டுமே.......! 🌺

உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’ (நூல் நயப்பு - கானா பிரபா)

2 days 13 hours ago
உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’ – அனோஜன் பாலகிருஷ்ணன் February 17, 2019 அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான நினைவுகள் சுற்றிப்பிடித்து விழுங்க ஆரம்பிக்கும். இதனைச் சமநிலை குலையாமல் எழுதும் போதே சுயபுனைவுக்கான வடிவம் கூடிவருகிறது. இவற்றை சுயசரிதையாக வெறுமே கருத முடிவதில்லை. ஊகங்களாகக் கடந்து செல்ல வேண்டியவற்றைக் கூட சம்பவங்களாக எழுதி ஆசிரியரால் இட்டு நிரப்படப்படுகிறது. புனைவுக்கான முடிச்சுகளுடன் கச்சிதமாக முடிக்கப்படுகின்றன. இதே போல் ‘காலம்’ செல்வம் அவர்கள் எழுதிய “எழுதித் தீராப் பக்கங்கள்” புத்தகமும் சுய எள்ளல் கலந்த நகைச்சுவை நடையுடன் அகதி வாழ்க்கையின் கசப்பான பக்கங்களை எழுதிச் சென்றிருக்கும். கடந்து வந்த துயரை தள்ளி நின்று பார்க்கும் போது ஒருவித கிண்டல் கூடவே கைவந்து விடுகிறது. கசப்பின் மேல் பூசப்பட்ட தேன்சாற்றை விலக்கிவிட்டு சுவைக்க நுனிநாக்கு கசப்பது போல் அவற்றுக்குள் மடிந்திருக்கும் துயர் உயிர் வாழ்தலின் அவலத்தை சொல்வதை புரிந்து கொள்ள இயலுகிறது. ஈழத் தமிழர்களின் வாழ்க்கை, ஆர்மினியர்களின் வாழ்க்கை போல் இனப்படுகொலையாலும், அகதி வாழ்க்கையாலும் நிறைந்த துயரால் நுரையாகத் ததும்புவது. இந்த நுரையை விலக்கி விட்டுப் பார்க்க அந்தந்த காலப்பகுதியில் வாழ்ந்த எழுத்தாளர்களின் சுய புனைவுப் புத்தகங்களே உதவக்கூடியன. அங்கிருக்கும் ஆசிரியனின் கோணம் கருத்தியல் நிலைபாடுகளைத் தாண்டி, தன் வாழ்க்கைக்குள் நுழைந்து தன் அலைக்கழிப்பை அந்த மண்ணுக்குள் தேடும். இதனாலே உணர்வுக்கு நெருக்கமாக அவை சென்று விடுகின்றன. ஜேகே எழுதிய “கொல்லைப்புறத்துக் காதலிகள்” புத்தகமும் யாழ்ப்பாணத் தமிழர்களின் 95ம் ஆண்டு இடப்பெயர்வுக்கு முன்னரும் பின்னரும் உள்ள பதின் பருவத்திலுள்ள இளைஞர்களின் உள்ளத்தை பாசாங்கில்லாமல் பேசுவது. மின்வெட்டு, ஊரடங்கு, எறிகணை வீச்சு என்று புறவய உலகம் இருக்கும் போது, சைக்கிள் மிதித்து டைனமோவில் இளையராஜா பாடல் கேட்டு ரசிக்கும் இளைஞர்களின் இன்னுமோர் பக்கத்தை அசலாக பதிவு செய்திருக்கும் புத்தகம் அது. காலவரிசையில் உண்மை கலந்த நாட்குறிப்புகள், எழுதித் தீராப் பக்கங்கள், கொல்லைப்புறத்துக் காதலிகள் என்று பார்க்கும் போது யுத்தம் அற்ற சூழல், யுத்தம் பிளக்க அகதிச் சூழல், புலிகள் வெளியேற்ற இராணுவத்திடம் சிக்காமல் யாழ்ப்பாணத்தை விட்டு அகலும் மக்களின் சூழல் என்று மாறும் ஓர் உலகத்தின் நுட்பமான மாறுதலை நோக்கலாம். அடிப்படையாக உயிர் வாழ்தலின் தேவையும் அதன் ஆதாரன விருப்பங்களும் இந்த அலைக்கழிப்பிலும் ஈழத் தமிழர்களிடம் எவ்வாறு இருந்தன என்பதை அடிநாதமாக ஒலிக்கக்கூடியவை. உமாஜி எழுதிய ‘காக்கா கொத்திய காயம்’ ஓர் வாலிபனின் நிலம் மீதான நினைவுகளின் தொடர்ச்சி என்று கொள்ளலாம். ஈழப் போரின் இறுதிப் போர் ஆரம்பித்த பின்னர் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நிகழ்ந்த மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது. உமாஜி என்ற இளைஞனின் கண்ணோட்டத்தில் சம்பவங்களாக விரிபவை. ஒரு வகையில் ஆசிரியர் தன் வாழ்க்கையை வேடிக்கையாகப் பார்ப்பது போலத் தோன்றினாலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆழமாகக் கீறப்பட்டிருக்கும் மனக் காயங்கள்தான் அவ்வாறு எழுத வைக்கின்றன என்பதை ஊகித்துக் கொள்ள இயலுகிறது. பால்யத்தை நினைத்தவுடன் பிறந்து வளர்ந்த மண்ணும் அச்சூழலும் அயலில் வசித்தவர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். அந்த மண்ணுடனே மனதின் ஆழத்துள்ளே தொன்மங்களும் படிமங்களும் சென்று சேர்கின்றன. தனக்கும் அயலிலுள்ளவர்களுக்கும் இடையிலான பரஸ்பர சம்பவங்களே முதலில் கதைகளாக விரிகின்றன. சிறுவயதில் சந்தித்த மனிதர்கள், சந்தியில் ஒன்றாக நின்ற நண்பர்கள் என்று ஒவ்வொரு வயதிலும் நண்பர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். நிலையாக எவரும் இல்லை. இடப்பெயர்வுகள் முளைக்க முளைக்க வெவ்வேறு பிரதேசங்களுக்கு மாறிக்கொண்டே இருக்க நேர்கிறது. சுற்றி வாழும் மக்களும் மாறுகிறார்கள். ஒரு பதினைந்து வருடம் கடந்து இவர்களை பார்க்கும் போது பலர் இல்லை, பலர் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்கள். ஆனால் கண்டவுடன் உள்ளார்ந்து அடையாளம் கண்டு கொள்கிறார்கள். சிநேகமாக புன்னகைத்துக் கொள்கிறார்கள்; உடனே விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பிக்கிறார்கள். இடையில் காணாமல் போன பல வருடங்களை வெறுமே இரண்டு வரியில் பேசிக் கடந்து செல்கிறார்கள். யானை விழுங்கிய வாழைப்பழம் போல் சட்டென்று ஒரு பத்து வருடத்தை தாண்டிச் செல்கிறார்கள். இரண்டு தலைமுறையின் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. எண்ணற்ற பள்ளிக்கூடங்களில் மாறி மாறிப் படித்து நினைவுச் சுழற்சிகளும் பால்யத்தின் ஈர வாசமும் மாறியவாறே இருந்தன. உங்கள் பால்யகால சிநேகிதர்கள் யார் என்று கேட்டால், யார் என்று உடனே சொல்ல முடிவதில்லை. சில சமயம் யாருமே இல்லை போல என்று கூட தோன்றக்கூடியது. ஆனால் , இருந்தார்கள், இருந்து அடையாளம் அற்றுப் போனவர்கள். ஓர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ரயில் என்றாலே வடபகுதி மக்களுக்கு கனவுதான், அதுவும் சிறார்களுக்கு. ஏறக்குறைய இரண்டு தலைமுறை ரயில் என்றாலே என்னவென்று தெரியாமலே வளர்ந்திருக்கின்றது. வெறுமே சினிமாவில் மட்டுமே அந்தப் பாரிய வாகனத்தை பார்த்திருப்பார்கள். அநேகமாக தொண்ணூறுகளில் பிறந்த பலருக்கு ரயில் பயணம் என்பதே ஓர் ரகசியக் கனவாக இருந்தது என்பது உண்மைதான். பல நண்பர்களுக்கு அதெப்படி இத்தனை பெரியதாக ஓர் வானகம் இருக்கும் என்ற வியப்பு இறுதிவரை இருந்தது. எண்பதுகளின் பின்னர் புலிகளால் தண்டவாளங்கள் வடபகுதியில் அகற்றப்பட்ட பின்னர் வவுனியாவுடன் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் வந்த தலைமுறைக்கு ரயில் என்பதே கனவுதான். உமாஜிக்கும் இந்த ரகசிய ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், எண்பதுகளில் பிறந்தவர்களின் நினைவுகள் ஊடாக அதனை நினைவு கொள்கிறார். முதன் முதலில் காங்கேசன் துறை வரை தண்டவாளங்கள் இடப்பட்டு ரயில் ஓடத் தொடங்கியபோது ரயில் எப்படி இருக்கும் என்ற விம்பம் அவர்களை ஆட்டுவிக்கிறது. மெல்ல மெல்ல அதன் மீதான ஆச்சர்யம் கரைகிறது. ஆனால், பயணம் செய்த அனுபவம் மட்டும் களையவில்லை. காரணம் பயணத்தில் சந்திக்கும் பயணிகள் மட்டுமல்ல, ஒவ்வொரு பிரதேசமும் மாறும் போது ரயிலில் விற்கப்படும் உணவுகள் தான். அதன் ருசியும் நினைவுகளும் இப்போதும் கிளர்ந்து வருகிறது. சிறாராக இருக்கும் போது அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிதரச் சொல்லிக் கேட்பவற்றை இப்போது நிதானமாக இறைமீட்க முடிகிறது. தமிழர்களின் கிராமங்கள் முடிவடைந்து சிங்கள மக்களின் கிராமங்கள் ஆரம்பிக்கும் வவுனியாவின் எல்லைப்புறத்திலிருந்து உணவின் தன்மைகள் மாற ஆரம்பிக்கும். மாலுபானும் மதவாச்சி இறால்வடையும் இன்று அப்பிரயாணங்களில் பிராபல்யமானது. சீவிய அன்னாசிப் பழங்களும் பெரிய ஆணைக் கொய்யா பழங்களும் உப்புத் தூள் தடவிக் கிடைக்கும். சிலசமயம் ரம்புட்டான் பழங்களும் கிடைக்கும். அதோடு கட்ட சம்பல் எனப்படும் உறைப்பான சம்பலுடன் ரொட்டியைத் தின்ன மிக ருசியாக இருக்கும். இதோடு தடினமான பால் கலக்கப்பட்ட கிரிக் கோப்பியும் குடித்தால் அந்தப் பயணம் பூரணம் அடைந்துவிடும். இரண்டாயிரத்தியாறில் இறுதியுத்தம் ஆரம்பித்த பின்னர் யாழ்ப்பாணமும் தெற்கும் மறுபடியும் துண்டிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது, இரண்டாயிரத்தி இரண்டில் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட் பின்னர் ஏற்படுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தைத் தான். பேருந்துப் பயணம் ஆரம்பிக்க சிறிய பயணச் செலவில் யாழிலிருந்து கொழும்புக்குச் செல்ல முடிந்தது. அங்கு வேலை பார்த்தவர்கள் சனி ஞாயிறுகளில் யாழிலுள்ள வீடுகளுக்கு வருகிறார்கள். ஏறக்குறைய, எஸ்.பொ சடங்கில் காட்டிய யாழ்ப்பாண வாழ்கை. பிறகு மீண்டும் திடீரென்று தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு யாழ்ப்பாணம் வந்து மீள கொழும்பு செல்ல முடியாதவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் ஒருவராக உமாஜியும் இருக்கிறார். கொழும்பிலுள்ள அலுவலகத்துக்குச் செல்ல இயலாத நிலை. வழமை போல வீட்டிலே யாழில் முடங்க நேர்கிறது. இதில் இன்னும் சுவாரஸ்யமானது பாதை மூடிய சமயம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் உமாஜியும் பயணித்து இருக்கிறார். அந்த நேரத்தில் எல்லைகளுக்கு இடையிலான பதற்றம் எப்படி இருந்தது என்பதை சாமானியனின் பார்வையில் கடந்து செல்கிறார். முகமாலைக்கு அருகே சூனியப் பிரதேசம்; புலிகளும் சரி, இராணுவமும் சரி அங்கே நிலைகொள்ள முடியாது; சர்வதேச செஞ்சிலுவை சங்கம்தான் அதற்குப் பொறுப்பாக இருந்தது. அந்தப் பிரதேசத்தில் பல மணிநேரம் காத்து நிற்க நேர்கிறது. ஏதோ சிக்கல் என்று புரிய ஆரம்பிகிறது. கேற்றைத் திறந்துவிடும் புலி உறுப்பினர் கேற்றைத் திறக்க மறுக்கிறார். அதைக் கடந்து சென்றால் இராணுவத்தின் கட்டுப்பாடு பிரதேசத்துக்குச் சென்றுவிடலாம். பின்னர் போக்குவரத்துக்கு கிடைக்கும். எப்படி அதற்குள் செல்வது என்று பொறுமையை இழக்கிறார்கள். வந்திருந்த பயணிகள் கூட்டு மனநிலையில் கொஞ்சம் இளகி தங்களுக்குள் அரசியல் நாட்டு நடப்புகளை பேசிக்கொள்கிறார்கள். ‘இப்ப ஷெல் அடிச்சால் இங்கதான் விழும்’ – யாரோ ஒருவர் பயத்தை சூழ்நிலைக்கு ஏற்ப கச்சிதமாகக் கிளப்புகிறார். இன்னுமொரு பெண்மணி இனிமேல் சண்டை வந்தால் கொழும்பில் தான் அடிவிழும் என்கிறார். உண்மையில் கொழும்பிலுள்ளவர்கள் அடிவாங்க வேண்டும் என்பது ரகசிய ஆசையாக வடக்குப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இருக்கிறது. எவ்வளவு நாட்கள்தான் நாம் மட்டும் இடப்பெயர்வுக்குள் அல்லல்படுவது; அவர்களும் வாங்கிப் பார்க்கட்டுமே என்ற ஆசைதான் அது. யாழ்ப்பாண சனத்துக்கு அடிச்சால் தான் அவர்களுக்கு புத்தி வரும் என்று கொழும்புத் தமிழர்கள் பேசுவதையும், கொழும்பு சனத்துக்கு அடி விழுந்தால்தான் அவர்களுக்கு தெரியும் என்று யாழ்ப்பாணத் தமிழர்கள் பேசுவதின் பின்னே இருக்கும் ஓர் அந்தரங்க மனக்கிளர்ச்சியை உமாஜி தொட்டு எடுத்து வேடிக்கையாகச் சம்பவங்கள் ஊடக சித்தரிக்கிறார். இறுதியில் புலி உறுப்பினர் கேற்றைத் திறந்துவிட, சூனியப்பிரதேசத்தை நடந்தே கடந்து செல்கிறார்கள். இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வேகமாக செக்கின் நடக்கும். இன்று இன்னும் விரைவாக நடக்கிறது. மறுபடியும் வேறொரு பேருந்தில் தொத்திக் கிளம்ப, அன்று மாலையே ஒரு பெரும் போர் வெடிக்கப் போகிறது என்பது தெரியாமல் ஏன் இத்தனை இராணுவம் வீதியின் இருபுறமும் குமிகிறது ஏதும் பயிற்சியோ என தனக்குள் எண்ணியபடி கடந்து செல்கிறார். வீடு வந்து துயில்கொண்ட பின்னர் நண்பர்களைப் பார்க்கச் செல்லும்போது, அவர்கள் இவரை ஆச்சரியமாகப் பார்த்து எப்படி வந்தாய் என்று கேட்கிறார்கள். அப்போது தான் யாழையும் தெற்கையும் இணைக்கும் ஏ-9 பாதை மூடப்பட்டது தெரிய வருகிறது. அது பிரச்சினை இல்லை, இரண்டு நாளில் திறந்து விடுவார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால், மாலை ஆறு மணி போல யாழ் கோட்டை பகுதியிலிருந்து பூத்திரி போல தீப்பிளம்புகள் கிளம்பிச் செல்கின்றன. மல்லரி பரல்கள் பூநகரியை நோக்கிப் பாய்க்கிறன. அன்று தான் நான்காவது ஈழப் போர் ஆரம்பித்த ஆவணி11 இரண்டாயிரத்தியாறு. அன்று பூட்டிய பாதை பிரபாகரன் இறந்த பின்ரே மீண்டும் திறந்தது. மண் வாசம் என்று நினைத்தாலே அதன் வாசம் பலருக்கு மழை பெய்த பின்னர் எழும் நுகர்விலிருந்து வரலாம். ஆனால், ஈழத் தமிழர்கள் பலருக்கு பங்கர் நினைவுகளே உடனே வரும். விமானக் குண்டு வீச்சுக்கு பயந்து பங்கருக்குள் நெருக்கியடித்து பதுங்கியிருக்கும் போது அந்த வாசத்தை நுகர்ந்து இருப்பார்கள். உமாஜியின் மண் வாசம் அவ்வாறே ஆரம்பிக்கிறது. வெவ்வேறு வகையான விமானங்கள் குண்டு வீச ஆரம்பித்த காலம். சில விமானங்கள் மிகத் தாழ்வாகப் பறந்து வந்து பாரிய இரைச்சலுடன் குண்டு வீசிவிட்டு தப்பிச் செல்கின்றன. புலிகளின் ராடர்களில் இருந்து தப்பிக்கவே அந்த உத்தி என்று அறிகிறார்கள். ஆரம்பத்தில் சகடை என்ற பழைய சரக்கு விமானத்திலிருந்து மலத்தை பரலுக்கு டன் கணக்காக அடைத்து வெடிபொருட்களுடன் மக்களின் மீது வீசுகிறார்கள். யாழ்ப்பாணமே கொடிய நாற்றத்தில் பல நாட்கள் மிதந்தது. பலருக்கு தொற்று வியாதிகள் உட்பட பல தோல் வியாதிகளும் வந்தன. ஜேகேயும் தன் ‘கொல்லைப்புறத்து காதலிகள்’ புத்தகத்தில் இதனை ஆவணப்படுத்தி அதன் வடுக்களை குறிப்பிட்டு இருப்பார். இவையெல்லாம் இன்று ஓர் வேடிக்கையாக மாறி விட்டிருந்தாலும் கொடுத்த இழப்புகள் துயருக்குள் புதைக்கத்தக்கவை. யுத்தம் என்ற பெயரில் நகரம் முழுவதும் விமானத்தில் மலம் வீசிய அவமானத்தை அந்தத் தலைமுறை ஒருபோதும் மறக்காது. மறக்கவும் முடியாது. பங்கர் வெட்டுவது கூட பெரிய சடங்காகவே இருக்கிறது. பங்கர் வெட்ட வேண்டுமா இல்லையா, இப்போது எங்கே சண்டை, விமானம் இங்கே வருமா என்று கலந்து ஆலோசித்து இறுதியில் தீர்வு எட்டப்படுகிறது. அதற்காக சில சிறப்பு திறனாய்வாளர்கள் இருக்கிறார்கள். அவர்களே எந்த வடிவத்தில் பங்கர் வெட்ட வேண்டும் எத்தகைய வாசல் வைக்க வேண்டும் என்றெல்லாம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ற வகையில் முடிவு எடுக்கிறார்கள். பின்னர் பங்கர் வெட்டப்படுவது திருவிழாவாகவே நிகழ்கிறது. சில தன்னார்வ இளைஞர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு தேநீர் பலகாரம் வழங்குதல், கிண்டல், சிரிப்பு என்று அந்தச் சடங்கு இனிதே நிறைவேறுகிறது. ஜாம் போர்தலில் விளக்குச் செய்து பாதுகாப்புக்கு உள்ளே வைக்கிறார்கள். பெரியவர்களுக்கு எப்படியோ, இப்படியெல்லாம் அளவெடுத்து கட்டப்பட்ட பங்கரில் எப்போது சென்று தங்க நேரும் என்ற கவலை உமாஜி வயதிலுள்ள சிறுவர்களுக்கு வருகிறது. அதற்கு ரகசியமாக ஏங்கவும் செய்கிறார்கள். இறுதியில் அந்தத் ‘திரில்’ அனுபவம் கிடைக்கிறது. இவையெல்லாம் எளிமையான நகைச்சுவை நடையால் சொல்லப்பட்டு இருந்தாலும் இதற்குப் பின் இருக்கும் நுட்பமான அவதானங்களும் சொல்முறையும் சிறந்த புனைவு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஆற்றலை ஒப்புவிக்கிறது. எத்தனை தாக்குதல்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அவையெல்லாம் சாதரண பொதுசனங்களுக்கு ஏற்பட்ட இழப்பாகவே இருகின்றன. அரசாங்க வானொலிகள் தாக்குதல்களில் இறந்தவர்களை பொத்தம் பொதுவாக புலிப் பயங்கரவாதிகள் என்று தங்கள் தரப்பில் சொல்கின்றன. ஆனால், அதற்குள்ளிருந்தவன் என்கிற முறையில் உமாஜி சொல்கிறார், விமானக் குண்டு வீச்சில்லிருந்து சேதாரம் துளியுமில்லாமல் தப்ப ஒரேயொரு முறைதான் உள்ளது, ‘அருகிலுள்ள புலிகளின் காவலரண்களுக்கு சென்று விடுவதுதான். அதைத் தவிர மிச்ச எல்லா இடங்களிலும் இராணுவம் குண்டு போடுவார்கள்.’ குறிபார்த்து அடிப்பதில் இராணுவத்தினர் அவ்வளவு கெட்டிக்காரர்கள் என்பது தான் அது. வேடிக்கையாக இருந்தாலும் கசப்பான உண்மை தான். விமானத் தாக்குதலில் உயிரிழந்த புலிகள் என்று சொல்வதற்கு அநேகமாக பலர் இருப்பதில்லை. குத்துமதிப்பான தாக்குதல்களால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுசனம் தான். இன்று அவயங்கள் இன்றி இருப்பவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் சொல்லும் பதில் விமானத் தாக்குதல் என்பது. தொலைக்காட்சி என்றாலே வடபகுதி யுவன் யுவதிகளுக்கு உடனே நினைவுக்கு வருவது தூர்தர்ஷன். தூர்தஷன் பார்த்து வளர்ந்த தலைமுறை நாம். தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு எது எப்படியோ, நமக்கு தூர்தர்ஷன் பெரிய வரமாக இருந்தது. காரணம் அதுவொன்றே தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சியாக இருந்தது. அடிக்கடி ஹிந்தி மொழிக்கு மாறி இம்சையும் கொடுக்கும். இருந்த போதிலும் சக்திமான் போன்ற தொடர்கள் மிகப் பிரபலமாக இருந்தன. கிடைக்கும் சொற்ப கால மின்சார நேரத்தில் இவற்றைப் பார்ப்பதே பெரிய இலட்சியம். உமாஜிக்கு மகாபாரதம் பார்ப்பதிலிருந்து இந்த நினைவுகள் ஆரம்பிக்கின்றன. அப்போதிருந்த இந்திய இராணுவமும் இவர்களுடன் சேர்ந்து மகாபாரதம் பார்த்துவிட்டு சப்பாத்தியும் சமைத்து சாப்பிட்டு விட்டுச் சென்ற அனுபவத்திலிருந்து நீள்கிறது ஞாபக அடுக்கு. யுத்த காலத்தில் ஜெனரேட்டர் வைத்து மின்சாரம் பெற்று தொலைக்காட்சியை இயக்கி திரைப்படங்கள் பார்ப்பது அலாதியான அனுபவம். ஜெனரேட்டர் சத்தம் வெளியே கேட்டு விடக்கூடாது என்று கிடங்குவெட்டி அதற்குள் புதைத்து இயக்கி, படம் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். சைக்கிளை தலைகீழாகக் கிடத்திவிட்டு படலைச் சுற்றி சைக்கிள் டைனமோவை இயக்கி வானொலிப் பெட்டியில் பாடல்கள் கேட்பது மிகப்பெரிய உத்தியாக இருந்தது. ஜேகே தன் புத்தகத்தில் இவற்றையும் எழுதியிருப்பார். கொடிகாமத்தில் இடம் பெயர்ந்திருந்த போது, கூட இருந்த அண்ணாமார்கள் இவ்வாறான அதிரடிக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி, தங்கள் பதின்ம வயதைக் கொண்டாடிக் கொண்டிருந்ததை இன்று மீட்டிப் பார்க்க முடிகிறது. யுத்த அவலத்துக்குள் இருந்த சின்னச் சின்ன மீட்புகள் இவ்வாறே இருந்திருக்கின்றன. இன்று தொலைக்காட்சி பார்ப்பதின் மீதான ஆர்வம் குன்றி இணையத்தில் தேவையானதை தேவையான பொழுது பார்த்துவிட முடிகிறது. இருந்தும், அன்றைய நாட்கள் கசப்பின் மீதான கரும்புச்சாற்றாக இனிக்கிறது உமாஜிக்கு. ஓர் தலைமுறையின் ஞாபகச் சித்திரங்கள் அவை. ஊரடங்குக்குள் சிக்கி அவதிப்படாதவர்கள் வடக்குப் பகுதி மக்கள் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. எப்படியும் ஊரடங்குக்குள் சிக்குண்டே இருக்க வேண்டும் என்பது விதிக்கபட்ட வரம். ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு வகையான ஊரடங்கு அனுபவங்கள் வாய்க்கும். ஆனால், இரண்டாயிரத்தியாறாமாண்டு ஒக்டோபர் மாதத்தின் பின்னர் ஏற்பட்ட ஊரடங்கு என்பது மிக வித்தியாசமானது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் பலர் தேடித் தேடி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மாவீரர் தினத்துக்கு கொடி கட்டியவர்கள், நோடீஸ் ஒட்டியவர்கள், வாகனம் ஓட்டியவர்கள் என்று பலர் கொல்லப்பட்டார்கள். புதிதாக பிஸ்டல் கலாச்சாரம் முளைத்திருந்தது. மோட்டார் சைக்கிளில் நிதானமாக வந்து மண்டை அருகிலேயே துப்பாக்கியை வைத்து நிதானமாகச் சுட்டார்கள். சுட்டவர்களும் அருகில் நிற்பவர்களிடம் “தம்பி இங்கால நிக்காத பேசாமல் போ”என்று தமிழிலே பேசினார்கள். தினமும் உடல்கள் வீதியெங்கும் நிறைந்திருந்தன. வெள்ளை வேன்கள் நடு இரவில் ஊரடங்கு நேரம் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்களைக் கடத்தியது. மறு நாள் கழுத்துடன் துண்டிக்கப்பட்டு வளவுகளுக்குள் சடலமாக துண்டு துண்டாக வீசப்பட்டார்கள். அவற்றை உமாஜி இவ்வாறு எழுதுகிறார். “மயான அமைதியில் ஊரே உறைந்திருக்க, தூரத்தில் கேட்கும் நாய்க்குரைப்பும், மிக மெல்லிய லாம்பு வெளிச்சத்தில் அச்சத்தோடு கடந்து போகும் கலவர ராத்திரிகளைக் கொண்ட இந்திய இராணுவ கால ஊரடங்கு உங்களுக்கு இன்னும் ஞாபகமிருக்கலாம். கொக்குவில், பிரம்படியில் வீதியில் வரிசையாகப் பலரைப் படுக்கவைத்து யுத்த டாங்கியினால் ஏற்றிக் கொல்லப்பட்ட அன்றைய ஊரடங்கை நீங்கள் கடந்திருக்கலாம். வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்த மகனை ஒரு இராணுவ வீரன் நெஞ்சில் கத்தி சொருகி அடிவயிறு வரை இழுக்க, சகோதரர்கள் கதற கண்முன்னால் துடித்து அடங்கிய அவன் உடலை வீட்டு முற்றத்திலேயே எரித்துவிட்டுக் கோவிலில் சென்று கழித்த ஊரடங்கு இரவைப் பற்றி எங்களுக்கு யாரேனும் விவரித்திருக்கலாம். கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் வடக்கு பக்கமாக இருக்கும் வேப்ப மரத்திற்கு கீழ் ஐம்பதிற்கு மேற்பட்ட உடல்களை புதைத்த அந்த ஊரடங்கு இரவை நீங்கள் இன்னும் மறக்காதிருக்கலாம். அந்த மாதிரியான ஊரடங்கு போலிருக்கவில்லை அது.” இந்த ஊரடங்கும் இறப்புகளும் கொலைகளும் நிகழ்ந்த காலப்பகுதியைச் சுற்றியே என்னுடைய படைப்புலகமும் இயங்குகிறதாக நினைக்கிறேன். அன்று பார்த்த கொலைகள் இன்றும் தூக்கத்தை கெடுக்கத்தான் செய்கின்றன. உமாஜி இந்த ஊரடங்கு காலத்தில் நிகழந்த துன்பத்தை மெலிதான நகைச்சுவை ஊர்ந்து பரவிச் செல்வதன் மொழியில் சொல்கிறார். ஊரடங்கு நேரத்தில் வீட்டுக்குள்ளே முடங்கியிருக்க வேண்டும். எவ்வளவு நேரம் தான் இதனைச் செய்ய இயலும்? அதனால் இளைஞர்கள் மெல்ல மெல்ல வெளியே வருகிறார்கள். இராணுவம் இல்லை என்று ஊர்ஜினப்படுத்திவிட்டு கதைக்க ஆரம்பிக்கிறார்கள். பின் தயக்கம் பயம் கலைய பரஸ்பரம் தினமும் சந்தித்து அரட்டையடிக்க ஆரம்பிக்கிறார்கள். சந்தியில் நிக்கும் இராணுவத்திற்கு இதெல்லாம் தெரியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் சிப்பாயொருவர் “நேற்று இரவு பத்துமணிக்கு இதே டி ஷேர்ட்டோட ரோட் க்ரொஸ் பண்ணிப் போறே என்ன? நான் அங்கயிருந்து பாத்துக் கொண்டிருந்தனான்” என்கிறார். எல்லாம் இராணுவத்துக்குத் தெரிந்து தான் இருக்கிறது. இராணுவம் நினைத்தால் எந்தக் கேள்வியும் இன்றிச் சுடவே முடியும். ஆனாலும், தெரிந்த பொடியன்கள் பிரச்சினை இல்லை என்று கனிவும் காட்டுகிறார்கள். இந்தக் கனிவை பயன்படுத்தி ஊரங்கு நேரத்தில் குமிந்த யுவன்கள் பேணிப்பந்தும் விளையாடுகிறார்கள். இராணுவம் ஒன்றும் செய்யவில்லை என்று அறிய மேலும் மேலும் கூட்டம் கூடுகிறது. வெவ்வேறு ஏரியா யுவன்களும் குதூகலத்துடன் வந்து விடுகிறார்கள். திடீரென்று இராணுவம் வருகிறது. எல்லோரும் உறைந்து நிக்கிறார்கள். அவர்கள் பேசாமல் கடந்து செல்கிறார்கள். பின்னர் இராணுவ லீடர் சொல்கிறார் “நாங்க ஒண்ணும் செய்ய மாட்டம்… கேஃபியூ டைம்ல வேற ஆமி வந்தா.. ஃபீல்ட் பைக் ஆளுங்க வந்தா சுடும். நாங்க ஒண்டும் செய்ய ஏலாது”. ‘ஃபீல்ட் பைக்’ இராணுவ குழுமம் மிகவும் பெயர் பெற்றது. பச்சை யமகா மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக கும்பலாக ரோந்து வருவார்கள். ஊரடங்கு நேரத்தில் எவராவது வெளியே நின்றால் அடி பின்னி எடுத்துவிட்டுச் செல்வார்கள். அவர்களிடம் மிச்ச இராணுவத்தினர் பயன்படுத்தும் ஏகே–47 துப்பாக்கி இருப்பதில்லை. பைக் ஓடுவதற்கு வசதியான எம்-16 துப்பாக்கியை வைத்திருப்பார்கள். அது இன்னும் கவர்ச்சிகரமாக இருக்கும். மடிந்திருக்கும் அதன் கைப்பிடியை விரிக்கும்போது பிரத்தியேகமான ‘கிளிக்’ என்ற ஒலி கேட்கும். அந்த ஒலியே எல்லாவற்றையும் நிறுத்தி விடக்கூடியது. உமாஜியும் நண்பர்களும் வீட்டு முற்றத்தில் நின்று ஊரடங்கு நேரதில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது ‘ஃபீல்ட் பைக்’ குரூப் வந்துவிடுகிறது அரண்டு வீட்டுக்குள் பாய அதற்குள் துப்பாக்கியுடன் சுற்றி வளைத்து எல்லோரையும் பிடித்துவிடுகிறார்கள். பயத்தில் உறைந்து ‘சுடப் போகிறார்களா? அடிக்கப் போகிறார்களா?’ என்ற வினா கொல்கிறது. இந்த இரண்டு தெரிவையும் விட வேறு தெரிவுகள் இல்லை என்பது சர்வ நிச்சயம். ஆனால் மிக மெதுவாக ஃபீல்ட் பைக் டீம் லீடர், ‘ஊரடங்கு நேரத்தில் இனி வெளியே உங்களைக் காணக்கூடாது’ என ஆங்கிலத்தில் சொல்கிறார். பின்பு எல்லோரும் போய்விட்டார்கள். தமக்கு எந்த சேதாரமும் நடக்கவில்லை என்பதை நம்ம முடியாமல் பார்க்கிறார்கள். உமாஜி இந்த ரணகளத்தை எழுதியிருக்கும் சித்தரிப்புகள் காட்சி பூர்வம் என்பதைத் தாண்டி உணர்வுகளை தட்டி எழுப்பக் கூடியது. ஒவ்வொரு சம்பவத்தையும் நண்பர்களின் அசைவையும் வேடிக்கையாகச் சொல்கிறார். புன்னகை முகிழாமல் வாசிக்க முடியவில்லை. அது எப்படி நம்மை அடிக்காமல் விட்டார்கள் என்று கேள்விக்கான விடையை இறுதியில் கண்டு பிடிக்கிறார்கள். சற்று முன்னர் தான் இன்னுமொரு இளைஞர்கள் குழாமை நொறுக்கி எடுத்துவிட்டு களைத்துப் போய் ஃபீல்ட் பைக் குரூப் வந்திருக்கிறது. உமாஜி இப்புத்தகத்தில் சித்தரிக்கும் வாழ்க்கை என்பது நடுத்தர வர்க்கத்துக்கு உரிய ஆண்களின் அகவுலகத்தை பாங்கு இல்லாமல் சொல்வது. “தம்பி அந்தப்பக்கம் அடி விழுதோ?” சைக்கிளில் செல்லும்போது எதிரே வருபவரை இப்படி நலம் விசாரிப்பது போல் கேட்கும் புதியதொரு பழக்கம் அன்றைய நாட்களில் பரவியிருந்தது. ஆரம்ப நாட்களில் வீதியில் சென்று கொண்டிருப்போம். எங்கேயாவது வெடிகுண்டுச் சத்தம் கேட்கும். சத்தம் வந்த திசையில் ஆமிப் பொயிண்ட் இருந்தால் தவிர்த்துச் செல்ல வேண்டும் அல்லது வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிடும். பின்பு அதுவே பழகிப் போய் எந்தச் சத்தமும் கேட்கவில்லை என்பதே அமைதியே அசாதரணமான ஒரு பயத்தைக் கொடுத்தது” என்று குறிப்பிடும் உமாஜி உலகத்தில் நானும் இருந்திருக்கிறேன். இன்று நினைத்துப் பார்த்தால் ஒரு நீள் மூச்சுதான் வெளியேறுகிறது. இப்போதுதான் யுத்தம் முடிவடைந்தது போல் உள்ளது. ஆனால் ஏறக்குறைய ஒரு தசாப்தம் ஆகப்போகிறது. இப்போதும் தெருவையும் மதவடிகளையும் பார்க்கும் போது பழைய நினைவுகள் சுட்டெரிக்கின்றன. உமாஜியின் எழுத்து முறை என்பது கூர்மையான சுய எள்ளலுடன் எல்லாவற்றையும் அணுகிச் செல்வது. தன்னையும் தாழ்த்தி எல்லா தர்க்கங்களையும் உடைத்து நையாண்டி செய்யும் எழுத்து முறை. இந்தப் பாணியை வாசிக்கும்போது நம்மையும் ஒருவராக அதற்குள் இனங்காணச் செய்கிறது. அதிகம் அலங்காரம் இன்றி எழுதப்பட்ட நடை. வர்ணனைகள் குறைவாகவே வருகின்றன. வீட்டில் அம்மாவுடன் சண்டை வரும் போது ஓவென்று ஒப்பாரி வைத்து பக்கத்து வீட்டு அக்காமார்களை துணைக்கு அழைப்பது உமாஜிக்கு வழமையான செயலாக இருக்கிறது. அதை இப்படி வர்ணிக்கிறார் ‘ஒப்பிரேஷன் லிபரேஷன் நடவடிக்கையில் திடீரென ஒரு நாள் ‘மிராஜ்’ வந்ததே அதுபோலப் பறந்து வருவார்கள்’; அக்காமார்களை மிராஜ் விமானத்துடன் ஒப்பிட்ட உவமையை வாசித்த போது அசந்துவிட்டேன். அதற்குப் பின்னே இருக்கும் கூர்மையான அரசியல் கிண்டல். இப்படி ரசிக்கத்தக்க வரிகள் ஏராளம். பொதுவாக ஈழத்து எழுத்தாளர்களுக்கும் சரி ஈழத்து வாசகர்களுக்கும் சரி நகைச்சுவை அவ்வளவாக கைகூடி வருவதில்லை. கூர்மையான கிண்டல்கள் புரிவதில்லை. உமாஜியின் இப்புத்தகத்தை விளங்கிக்கொள்ள கொஞ்சம் நகைச்சுவை உணர்வு வேண்டும் தான். ‘காக்கா கொத்திய காயம்’ புத்தகத்தை வாசித்து முடித்த பின்னர் ஒரு இளைஞனின் டயரியை திருட்டுத்தனமாகப் படித்ததுபோல அந்தரங்கமாக உணர முடிகிறது. “சிறுவயதில் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் மட்டும் அப்படியே தழும்புகளாக நிரந்தர அடையாளங்களாக மாறிவிடுவது ஆச்சரியம் தான். ஒருவேளை வளர வளர அவதானமாக இருக்கப் பழகிவிடுவதால் காயங்கள் மனதில் மட்டுமே அதிகமாக ஏற்படுகின்றன. யாருக்கும் தெரியாத, யாருமே கவனிக்காத, எந்தக் கேள்வியும் கேட்காத மனதின் காயங்களை நாமே கேள்வி கேட்டு, அறவிடாது அப்படியே புதிதாகப் பேணிக் கொள்கிறோம். ஏதோவொரு சமயத்தில் அந்த வலியையும், அதன் வீரியத்தையும் முதன்முறையாக ஏற்படுவது போன்றே உணர்ந்து கொள்கிறோம்” என்று எழுதிச்செல்லும் உமாஜி, இது காக்கா கொத்திய காயம் என்று சிறுபிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு தழும்பைக் காட்டி கதைவிட்டாலும் அதன் பின்னே இருக்கும் உண்மையும் வலியும் பாரியது என்பதை குறிப்புணர்த்துகிறார். எல்லாவற்றையும் சொல்ல முடிவதில்லை, சிலவற்றை மட்டுமே சொல்ல முடிகிறது. வெளியீடு : 4தமிழ்மீடியா விலை : 500 ரூபாய் (இலங்கை), 300 ரூபாய் (இந்தியா), யூரோ 10.00 (ஐரோப்பா) http://tamizhini.co.in/2019/02/17/உமாஜியின்-காக்கா-கொத்தி/

பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

2 days 13 hours ago
பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை என அரசு அறிவித்த போது ஏன் இன்னும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாத்திரம் நடைமுறையில் வைத்திருக்கிறது எனத் தெரிவித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி யாழ்,முல்லைத்தீவு வவுனியா மாவட்ட மக்கள் சிலர் இணைந்து இன்று கிளிநொச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. நாட்டில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையும் கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, கிளிநொச்சி மக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநாச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஏ9 வீதியால் டிப்போ சந்திவரை சென்றடைந்தது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசே சி.டி.ஏ யின் ஊடாக பெண்களின் உரிமைகளை பறிக்காதே, நாட்டு மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்காதே, பெண்களின் விடுதலையே நாட்டின் விடுதலை. சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் பொறியே பயங்கரவாத தடைச்சட்டம், மக்களின் பிரதிநிதிகளே பி.டி.ஏ,சி.டி.ஏ பற்றி மக்களிடம் கேளுங்கள் என கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். http://www.virakesari.lk/article/50340

பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

2 days 13 hours ago
பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்  

இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை என அரசு அறிவித்த போது  ஏன் இன்னும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாத்திரம் நடைமுறையில் வைத்திருக்கிறது எனத் தெரிவித்து கிளிநொச்சியில் இன்று  ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

00__4_.png

கிளிநொச்சி யாழ்,முல்லைத்தீவு வவுனியா  மாவட்ட மக்கள்  சிலர் இணைந்து இன்று கிளிநொச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை   எதிர்த்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. நாட்டில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையும்  கண்டித்து குறித்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது,

00__2_.png

கிளிநொச்சி மக்களின்   ஏற்பாட்டில் குறித்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. கிளிநாச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்  ஏ9 வீதியால் டிப்போ சந்திவரை சென்றடைந்தது.

00__1_.png

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசே சி.டி.ஏ யின் ஊடாக பெண்களின் உரிமைகளை பறிக்காதே, நாட்டு மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்காதே, பெண்களின் விடுதலையே நாட்டின் விடுதலை. சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் பொறியே பயங்கரவாத தடைச்சட்டம், மக்களின் பிரதிநிதிகளே பி.டி.ஏ,சி.டி.ஏ பற்றி மக்களிடம் கேளுங்கள் என கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

 

 

http://www.virakesari.lk/article/50340

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வும்

2 days 13 hours ago
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர் கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும், தனவந்தர் ஒருவரும் இணைந்து இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பத்தாம் ஆண்டு நினைவு ஆண்டு ஆ\ரம்பித்திருக்கின்ற நிலையில் முதன்முதலாக இவ்வருடம் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது. சாந்தி பிரார்த்தனையைத் தொடர்ந்து பிதிர்க்கடன் தீர்ப்பதற்காக மக்கள் மற்றும் குருமார்கள் அனைவரும் இணைந்து முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர் கடன்களை தீர்த்து தீர்த்துக்கொண்டனர். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் அன்னதானமும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. http://www.virakesari.lk/article/50336

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வும்

2 days 13 hours ago
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர் கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

IMG_1765_1575x1050.JPG

மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும்,  தனவந்தர்  ஒருவரும் இணைந்து  இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்

IMG_1730_1575x1050.JPG

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பத்தாம் ஆண்டு நினைவு ஆண்டு ஆ\ரம்பித்திருக்கின்ற நிலையில்  முதன்முதலாக இவ்வருடம் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.

IMG_1704_1575x1050.JPG

 சாந்தி பிரார்த்தனையைத் தொடர்ந்து பிதிர்க்கடன் தீர்ப்பதற்காக மக்கள் மற்றும் குருமார்கள் அனைவரும் இணைந்து முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர் கடன்களை தீர்த்து தீர்த்துக்கொண்டனர்.

IMG_1683_1575x1050.JPG

 தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் அன்னதானமும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

 

http://www.virakesari.lk/article/50336

 

உணவு செய்முறையை ரசிப்போம் !

2 days 13 hours ago
இந்த சூட்சுமம் நம்ம சதிகளுக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அவர்கள் பதிகளை பழிவாங்க இதுபோல் சின்ன சின்ன கன்னி வெடிகளை தாப்பதுண்டு.பதிகள்தான் பாத்து நடக்க வேண்டும் சிறியர்......! 😁

ஒட்டுசுட்டானில் பக்கசார்பாக செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

2 days 13 hours ago
ஒட்டுசுட்டானில் பக்கசார்பாக செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பிரதேசத்தில் பக்கசார்பாக செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வீதியை மறித்து டயர்களை தீயை மூட்டி போக்குவரத்தை தடை செய்து மக்கள் பொரிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். முதையன்கட்டில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பக்கசார்பாக நடந்துகொண்டதாகவும் விபத்தை ஏற்படுத்தியவர்களை கைதுசெய்யவில்லை எனவும் தெரிவித்து இந்த ஆர்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். நேற்று மாலை முத்தையன்கட்டு வலது கரை பகுதியில் பெண்ணொருவரை உந்துருளியில் சென்ற இளைஞர்கள் சிலர் மோதித் தள்ளியதில் குறித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் குறித்த விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தலைக்கவசம் அணியாது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில் சென்று இந்த விபத்தை ஏற்படுத்தி இருந்த போதிலும் பொலிஸார் அவர்களை கைது செய்யவில்லை எனவும் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து மக்கள் இந்த சாலை மறியலை மேற்கொண்டதோடு பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுடன் கலந்துரையாடி விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு உரிய தண்டனைகளை பெற்று கொடுப்பதாகவும் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்ததோடு பக்கசார்பாக நடந்துகொண்ட பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் ஆர்பாட்டத்தை கைவிட்டு சென்றனர் . http://www.virakesari.lk/article/50331

ஒட்டுசுட்டானில் பக்கசார்பாக செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

2 days 13 hours ago
ஒட்டுசுட்டானில் பக்கசார்பாக செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக  வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பிரதேசத்தில் பக்கசார்பாக செயற்பட்ட பொலிஸாருக்கு  எதிராக மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

IMG_1672_1575x1050.JPG

வீதியை மறித்து டயர்களை  தீயை மூட்டி போக்குவரத்தை தடை செய்து மக்கள் பொரிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதையன்கட்டில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பக்கசார்பாக நடந்துகொண்டதாகவும் விபத்தை ஏற்படுத்தியவர்களை கைதுசெய்யவில்லை எனவும் தெரிவித்து இந்த ஆர்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

IMG_1664_1575x1050.JPG

நேற்று மாலை முத்தையன்கட்டு வலது கரை பகுதியில் பெண்ணொருவரை உந்துருளியில் சென்ற இளைஞர்கள் சிலர் மோதித் தள்ளியதில் குறித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில்  சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் குறித்த விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தலைக்கவசம் அணியாது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில் சென்று இந்த விபத்தை ஏற்படுத்தி இருந்த போதிலும் பொலிஸார் அவர்களை கைது செய்யவில்லை எனவும் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து  மக்கள் இந்த சாலை மறியலை மேற்கொண்டதோடு பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG_1666_1575x1050.JPG

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுடன் கலந்துரையாடி விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு உரிய தண்டனைகளை பெற்று கொடுப்பதாகவும் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்ததோடு பக்கசார்பாக நடந்துகொண்ட பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் ஆர்பாட்டத்தை கைவிட்டு சென்றனர் .

 

http://www.virakesari.lk/article/50331