Aggregator

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

1 day 4 hours ago
திரும‌ண‌ம் ஆன‌ த‌ம்ப‌திகள் க‌ட்சி சின்ன‌த்துட‌ன் நிக்கும் அழகிய‌ ப‌ட‌ம்.................க‌ட்சியில் இருக்கும் பெசிய‌ங்க‌ள் உட‌ன‌ மூளைய‌ க‌ச‌க்கி உட‌ன‌ ந‌ல்ல‌த‌ செய்து விடுவின‌ம்.................நாம் த‌மிர் ஜ‌ரிம் மிக‌வும் ப‌லம்.............வாழ்க‌ த‌மிழ் வெல்க‌ நாம் த‌மிழ‌ர்🙏🙏🙏🥰...................................

இலங்கையில் 30,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுகின்றனர்!

1 day 5 hours ago
நாட்டின் இனவாத அரசியல் தலைவர்களே பறந்து பறந்து மற்றைய நாடுகளிடம் யாசகம் பெற்று கொள்ள திரிகையில் யாசகம் பெரும் சிறுவர்களின் எதிர்காலம் பற்றி ஓநாய் அழுகை அழுவது வியப்பாக உள்ளது . புத்தனே யாசகம் பெற்றுத்தானே வாழ்ந்தார் என்று சண்டைக்கு வரகூடாது அதுவேறை.

சீனாவிற்கு விஜயம் செய்தார் பிரதமர்

1 day 5 hours ago
வேறை வழியே கிடையாது போய் காலில் விழுந்து பிச்சை எடுப்பதை நாகரிகமாக ஒப்பந்தங்கள் கைசாத்திடபட்டன என்று வழமை போல் அடித்து விடுவார்கள் .

தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை நாளை மக்களிடம் கையளிக்கப்படும்!

1 day 5 hours ago
சிங்களம் பிச்சை எடுத்து அந்தந்த நாடுகளிடம் மறைமுக அடிமையாகுவது ஒன்றும் புதிதான விடயம் அல்லவே அந்த அடிமைத்தனத்தை சிங்களவர்களிடம் மறைக்க பார்லிமெண்டில் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்கள் மேல் இனவாதத்தை கக்கி மடைமாற்றுவது வழமையான ஒன்று இந்த வைத்தியசாலைக்கு மறைமுகமாய் எண்ணத்தை கொடுந்தான்களோ யார் அறிவினம் .

அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்

1 day 5 hours ago
தமிழ் bbc க்குள் நிறைய மெண்டல்கள் உள்ளே புகுந்து விட்டன போல் உள்ளது ஒரே விடயத்தை எத்தனை தரம் எழுதுகிறார்கள் ?

காசாவை நோக்கி பரசூட்கள் மூலம் உணவுப்பொதிக‍ளை வீசியது அமெரிக்கா

1 day 5 hours ago
கடலுக்குள் விழுந்த உதவிப் பொருட்களை மீட்க முயன்ற 12 பேர் பலி - காசாவில் தொடரும் துயரம் Published By: RAJEEBAN 27 MAR, 2024 | 12:18 PM காசாமீது வான்வெளி ஊடாக வீசப்பட்ட உதவிப் பொருட்கள் கடலில் விழுந்தவேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் ஆறுமாத இராணுவ நடவடிக்கை காரணமாக காசவில் பெரும் பட்டினிநிலை உருவாகியுள்ளது என்ற அச்சத்தின் மத்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடகாசாவில் உள்ள பென்லகியா கடற்கரையோரத்தை நோக்கி பொதுமக்கள் ஒடுவதையும் அதன் பின்னர் ஆழமான நீரில் பொதுமக்கள் காணப்படுவதையும் பின்னர் அவர்களின் உடல்கள் மீட்கப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. தாடியுடன் காணப்படும் இளம்வயது நபர் ஒருவரின் உடல் கடலில் இருந்து மீட்கப்படுவதையும் ஆனால் அவரின் கண்களில் அசைவில்லாததையும் நபர் ஒருவர் அவரை காப்பாற்ற முயல்வதையும் அவர் இறந்துவிட்டார் என யாரோ தெரிவிப்பதையும் வீடியோ காண்பித்துள்ளது. அவர் தனது பிள்ளைகளிற்கு உணவை பெற்றுக்கொள்வதற்காக கடலுக்குள் நீந்தி சென்றார் அவர் தியாகியாக மாறிவிட்டார் என கடற்கரையில் காணப்படும் ஒருவர் தெரிவிப்பதை வீடியோ காண்பித்துள்ளது. அவர்கள் தரைவழி ஊடாக மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும் ஏன் இப்படி செய்கின்றார்கள் என அவர் கேள்விஎழுப்பியுள்ளார். 18பொதிகளில் மனிதாபிமான உதவிகளை பரசூட் மூலம் வீசியதாக தெரிவித்துள்ள பென்டகன் பரசூட் இயங்காததால் அவை கடலிற்குள் விழுந்தன என தெரிவித்துள்ளது. காசாவில் சிலர் களைகளை உண்பதற்கும் விலங்குகளின் உணவிலிருந்து தயாரிக்கப்படும் ரொட்டியை உண்பதற்குமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பரிதாபமான நிலையில் அங்கு மனிதாபிமான பொருட்கள் விநியோகத்தின் போது உயிரிழப்புகள் ஏற்படுவது வழமையாகியுள்ளது. https://www.virakesari.lk/article/179813

தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை நாளை மக்களிடம் கையளிக்கப்படும்!

1 day 6 hours ago
கராப்பிட்டியவில் புதிய மகப்பேறு வைத்தியசாலை திறப்பு Published By: DIGITAL DESK 3 27 MAR, 2024 | 12:22 PM காலி, கராப்பிட்டியவில் ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய மகப்பேறு வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை (27) காலை திறந்து வைத்தார். வைத்தியசாலையில் 640 படுக்கைகள், 06 சத்திர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை, குழந்தைகள் பிரிவு மற்றும் நவீன வசதிகள் உள்ளன. இந்த வைத்தியசாலை இலங்கையில் மாத்திரமன்றி தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையாகவும் விளங்குகிறது. https://www.virakesari.lk/article/179812

ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்

1 day 6 hours ago
இல்லை இல்லாவேயில்லை இருந்தாலும் உங்களுக்கு பதில் கருத்துகள் எழுத ஆற்றல் இல்லை என்று நீங்கள் சொல்வதாக எடுத்து கொள்கிறேன்

டி20 உலகக் கோப்பைச் செய்திகள்

1 day 6 hours ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ரோகித், கோலி இடம் பெறுவதில் என்ன பிரச்னை? கோலியால் பிசிசிஐ-க்கு என்ன சவால்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விமல் குமார் பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி 26 மார்ச் 2024 “டி20 கிரிக்கெட் என்று வரும்போது, அதனை பிரபலப்படுத்த என் பெயர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். என்னுள் இன்னும் கிரிக்கெட் (டி20) இருப்பதாக உணர்கிறேன்.” விராட் கோலியின் இந்த கருத்து எதிர்பார்த்தது போலவே, சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக கோலி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கூட அவர் விளையாடவில்லை. இதற்கிடையில், ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கோலி தேர்வு செய்யப்படுவது கடினம் என்பது போன்ற ஊகங்கள் தொடர்ந்து எழுந்தன. மனம் திறந்து பேசிய விராட் கோலி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா இருப்பார் என்பதை சில வாரங்களுக்கு முன்பு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார். அதே நேரம், உலகக் கோப்பை தொடரில் கோலி விளையாடுவது குறித்த கேள்வியை அவர் தவிர்த்துவிட்டார். இதைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள், உலகக் கோப்பை தொடருக்கான அணியில் கோலி இடம்பெற மாட்டார் என்று தங்களுக்கு தகவல் கிடைத்ததாக செய்திகளை வெளியிட்டன. இதற்கெல்லாம் மேலாக, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கோலிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுபவருமான ரவி சாஸ்திரியும், குஜராத் டைட்டன்ஸ் மும்பை இந்தியன்ஸ் இடையேனான ஐபிஎல் போட்டியின் வர்ணனையின்போது, வரவிருக்கும் உலகக் கோப்பையில், இளம் வீரர்கள் மற்றும் ஃபார்முக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். கோலியின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், கோலி குறித்துதான் அவர் கூறினார் என்பது தெளிவானது. காரணம், இதே போட்டியில் சக வர்ணனையாளராக இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், "சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டின் பரவலை விரிவுபடுத்துவதற்காக கிரிக்கெட்டின் உச்ச அமைப்பான ஐசிசி, கோலி போன்ற ஜாம்பவான்களையும் அவரது பிராண்டையும் பயன்படுத்துகிறது. அப்படியிருக்கும் போது, உலகக் கோப்பையில் கோலி இல்லாத இந்திய அணியை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்" என்று பேசியிருந்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கோலி மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்துகளில் 77 ரன்கள் குவித்த கோலி அணியின் வெற்றிக்கு உதவியதோடு ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். போட்டிக்கு பின்னர், ஹர்ஷா போக்லேவுக்கு விராட் கோலி அளித்த பேட்டியில் மனம் திறந்துபேசினார். அவரது இந்த பேச்சு ரசிகர்களுக்கு சென்றடைய பேசப்பட்டவை அல்ல, மாறாக பிசிசிஐ தேர்வாளர்களை சென்றடைவதற்காக பேசப்பட்டவை. இந்த பேட்டிக்கு பின்னர், இந்திய அணியின் தேர்வாளரான அஜித் அகர்கர் மற்றும் அவரது குழுவினர் பக்கம் பந்தை கோலி திருப்பிவிட்டுள்ளார். உலகக் கோப்பை தொடர்பான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் திட்டங்களுடன் தான் தற்போதும் பொருந்தி போவதை கோலி நன்கு அறிந்துள்ளார். ஆனால், இதில் தேர்வாளர்களுக்கு சில தயக்கங்கள் உள்ளன. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, டிராவிட்- அஜித் அகத்கர் ரோகித், கோலி இருவரும் ஒருசேர இடம் பெறுவதில் என்ன பிரச்னை? 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தோல்விக்கு இந்தியாவின் டாப் ஆர்டர் மூவரும்தான் (ரோகித்-கே.எல். ராகுல்-கோலி) காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆங்கர் ரோலில் மூவரும் ஒரே மாதிரி பேட் செய்கிறார்கள். ஒருநாள் உலகக் கோப்பையின் போது, கேப்டன் ரோஹித் முற்றிலும் ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். 50 ஓவர் கிரிக்கெட்டில் டி20 போட்டி போன்ற அதிரடியை வெளிப்படுத்தினார். கே.எல். ராகுலை விட இடது கை ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறந்த தேர்வாகத் தெரிகிறார். இப்போது தேர்வாளர்கள் முன் இருக்கும் கேள்வி மூன்றாவது இடத்துக்கு கோலியை தேர்வு செய்வதா அல்லது சுப்மன் கில்லை தேர்வு செய்வதா என்பதுதான். ஏனெனில் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் இடம் உறுதியாகி இருக்கிறது. கோலி அல்லது கில் விளையாடினால், ரிங்கு சிங்கை ஆறாவது இடத்தில் பினிஷராக பயன்படுத்த முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி - ரோகித் சர்மா அத்தகைய சூழ்நிலையில், தேவைப்பட்டால், விளையாடும் 11 பேர் பேர் கொண்ட அணியில் கில்லை தேர்வு செய்யாமல் இருக்கலாம். ஆனால், விராட் கோலியை அப்படி செய்ய முடியாது. கோலி அணியில் நீடிக்கலாமா என்ற விவாதம் இங்கிருந்து தொடங்கியது. அனுபவம் மிக்க தற்போதைய கேப்டனை மேட்ச் வின்னராக கருதும்போது, முன்னாள் கேப்டனிடம் ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை என்று கோலியின் ஆதரவாளர்களும் ரோகித் சர்மாவின் விமர்சகர்களும் கேள்வி எழுப்புகின்றனர். சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் இரண்டிலும் ரோகித்தை விட கோலி சிறப்பான நிலையில் இருக்கிறார். ஆனால், ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்டியா காயமடையாமல் இருந்திருந்தால் ரோகித் இந்த அணியில் இருந்திருக்க மாட்டார் என்றும், ரோகித் தனது ஆட்டத்தில் திடீரென்று இவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்க மாட்டார் என்றும் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் கருதுகின்றனர். ரோகித், கோலி ஆகிய இரண்டு ஜாம்பவான்களையும் ஆடும் லெவனில் ஒருசேர வைத்திருப்பது அணியின் சமநிலையை பாதிக்கக் கூடும் என்ற சிக்கலும் உள்ளது. கோலியால் பிசிசிஐ-க்கு புதிய சவால் ரோகித் உலகக் கோப்பையின் ஒரு அங்கமாக இருந்தால், அவரை யாரும் அணியில் இருந்து நீக்க முடியாது என்பது கோலிக்கு தெரியும். காரணம், ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் மற்ற எந்த வீரரையும் விட மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை அவர் அதிகம் விளையாடியுள்ளார் என்பதற்கு வரலாறு சாட்சி. எல்லாவற்றிற்கும் மேலாக, மெல்போர்னில் 2022 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தானுக்கு எதிரான அவரது வரலாற்று இன்னிங்ஸை ஒருவரால் எப்படி மறக்க முடியும்? ஒட்டுமொத்தமாக, தற்போது சிறப்பான இன்னிங்ஸை விளையாடியதன் மூலம் அணி தேர்வாளர்களுக்கு கோலி சவால் விடுத்துள்ளார். பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக கோலி விளையாடி வருவதால், ரோகித்துடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என்பதும் அவரது வாதமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டு வீரர்களும் தொடக்க ஜோடியாக இணைந்து சில போட்டிகளில் மட்டுமே விளையாடியிருப்பது தேர்வாளர்களுக்குப் பிரச்னையாக இருக்கும். வரும் வாரங்களில் கோலி மீண்டும் சிறப்பான ஸ்கோர்களை குவித்தால், தேர்வாளர்களின் வாதம் முறியடிக்கப்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோகித் சர்மா - டிராவிட் ஐபிஎல்லில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதால்தான் கோலி ரன்களை குவிக்கிறார், ஃபார்மில் இருக்கிறார். மாறாக, இந்திய அணியில் அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்குகிறார் என்றும் தேர்வாளர்கள் கூறக் கூடும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், கோலியின் தேர்வு தொடர்பான விசயத்தில் பிரச்னை தீர்க்கப்படுவதற்கு பதிலாக தற்போது தேர்வாளர்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. கோலியின் சமீபத்திய கருத்துகளால் தேர்வாளர்களின் பிரச்னை மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், டி-20 போட்டிகளுக்கு கோலிக்கு பதிலாக இளம் வீரரை தேர்வு செய்யுமாறு பிசிசிஐ, அணி தேர்வாளர்களுக்கு (மறைமுகமாக) செய்தி கொடுத்திருந்தால், இந்த கடினமான முடிவை எடுப்பதில் அகர்கர் சற்று ஆறுதல் அடையக் கூடும். ஆனால், பதினோரு பேர் கொண்ட அணியில் கோலிக்கு இடம் இல்லை என்பதை பயிற்சியாளர் டிராவிட்டும் கேப்டன் ரோகித் சர்மாவும் ரசிகர்கள் முன் எப்படி நியாயப்படுத்த முடியும்? ஒட்டுமொத்தமாக, இந்த விஷயம் தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரின் சில வாரங்கள் கோலியின் பேட்டிங்கிற்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கக் கூடும். https://www.bbc.com/tamil/articles/cz4z8wl831no

சீனாவிற்கு விஜயம் செய்தார் பிரதமர்

1 day 6 hours ago
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு சீனா ஆதரவு - இலங்கை பிரதமரிடம் சீன பிரதமர் Published By: RAJEEBAN 27 MAR, 2024 | 11:37 AM இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு சீனா வலுவான ஆதரவை வெளியிட்டுள்ளது. சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுடனான சந்திப்பின்போது சீன பிரதமர் லிகியாங் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு சீனா தொடர்ந்தும் உதவும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவும் என தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஸ்குணவர்த்தனவும் அவரது குடும்பத்தினரும் சீனா இலங்கைஉறவுகளை வலுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக பாடுபட்டுள்ளதாக சீன பிரதமர் பாராட்டியுள்ளார். இலங்கை தொடர்ச்சியாக ஒருசீன கொள்கையை பின்பற்றிவருகின்றது சர்வதேச அரங்கில் ஆதரவளித்துவருகின்றது என சீன பிரதமர் தெரிவித்துள்ளார். கொழும்பு விமானநிலையம் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்புதுறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்திசெய்வதற்கு சீனா தொடர்ந்தும் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179808

இலங்கையில் 30,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுகின்றனர்!

1 day 6 hours ago
27 MAR, 2024 | 01:24 PM இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இந்நிலைமை எதிர்காலத்தையும் பாதிக்கலாம். இது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் வீதியில் யாசகம் பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து போதைப்பொருள் விற்பனை, திருட்டு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த சிறுவர்களில் சிலர் தங்களது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களினால் யாசகம் பெறுவதற்கும் பணம் சம்பாதிக்கும் பிற நடவடிக்கைகளுக்கும் தள்ளப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. 4 முதல் 15 வயதுக்கு உட்பபட்ட பெரும்பாலான சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாமல் வீதிகளிலும் புனிதத் தலங்களிலும் சன நெரிசல் மிக்க இடங்களிலும் யாசகம் பெறுகின்றனர். சில பெற்றோர்கள் இந்த சிறுவர்களை கூலி வேலைகளுக்காகவும் வீதியோர வியாபாரங்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர். இந்த சிறுவர்களில் சிலர் போதைப்பொருள் பாவனைக்கும் பல்வேறு குற்றச்செயல்களுக்கும் அடிமையாகி இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/179819

இலங்கையில் 30,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுகின்றனர்!

1 day 6 hours ago
27 MAR, 2024 | 01:24 PM
image

இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இந்நிலைமை எதிர்காலத்தையும் பாதிக்கலாம். 

இது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் வீதியில் யாசகம் பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து போதைப்பொருள் விற்பனை, திருட்டு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்த சிறுவர்களில் சிலர் தங்களது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களினால் யாசகம் பெறுவதற்கும் பணம் சம்பாதிக்கும் பிற நடவடிக்கைகளுக்கும் தள்ளப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.

4 முதல் 15 வயதுக்கு உட்பபட்ட பெரும்பாலான சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாமல் வீதிகளிலும் புனிதத் தலங்களிலும் சன நெரிசல் மிக்க இடங்களிலும் யாசகம் பெறுகின்றனர்.

சில பெற்றோர்கள் இந்த சிறுவர்களை கூலி வேலைகளுக்காகவும் வீதியோர வியாபாரங்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர். இந்த சிறுவர்களில் சிலர் போதைப்பொருள் பாவனைக்கும் பல்வேறு குற்றச்செயல்களுக்கும்  அடிமையாகி இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

https://www.virakesari.lk/article/179819