Aggregator

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

3 weeks ago
“அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

3 weeks ago
இந்தியா மத்திய அரசாங்கம் விரும்பியது பெற்று கொடுத்தது,.......எங்களை பெறுத்த மட்டில். இந்தியா மத்திய அரசாங்கம் விருபவில்லை

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

3 weeks ago
அவர் குதித்து உங்களுக்கு காட்டினாலும் தனது மகனுக்கு ஆங்கில வழி கல்விதானே கற்ப்பிக்கின்றார். அவரது குதிப்புக்கு வெளிநாட்டு ஈழதமிழர்கள் இரசிகர்கள்

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

3 weeks ago
உறவே, இப்படியே போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

3 weeks ago
@goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்?

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

3 weeks ago
நல்லது உற‌வே அப்படிபட்ட நீங்கள் தமிழ்நாட்டில் சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭 இலங்கையில் தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது. சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால் தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣

யாழ்.போதனா வைத்தியசாலையின் எரியூட்டி, கோம்பயன்மணல் இந்து மயானத்தில் திறந்து வைப்பு.

3 weeks ago
யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554

யாழ்.போதனா வைத்தியசாலையின் எரியூட்டி, கோம்பயன்மணல் இந்து மயானத்தில் திறந்து வைப்பு.

3 weeks ago
spacer.png யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு!
யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

01-3-2-1-600x338.jpg

https://athavannews.com/2024/1375554

ஓயாத நிழல் யுத்தங்கள் – 1

3 weeks ago
எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........! தொடருங்கள் ஜஸ்டின் .......! 👍

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

3 weeks ago
வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................

என் இந்தியப் பயணம்

3 weeks ago
எனக்கும் போக ஆசை இருந்தாலும் பயத்தில் போகவில்லை. 😃 உண்மைதான் இந்தியாவில் ஒவ்வொரு இடமும் ஒவ்வொருமாதிரி. ஒரு ஆண்டுகள் போதாது இந்தியா பார்க்க. என கணவருக்கு பெரிதாக ஆர்வம் இல்லாததால் என்னால் போக முடியவில்லை. வரவுக்கு நன்றி அண்ணா.

தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன

3 weeks ago
ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன 15-22.jpg

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது.

குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

30 வருட காலமாக

அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிர்வாக அடக்குமுறை

இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

https://akkinikkunchu.com/?p=272438

சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்

3 weeks ago
சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்
March 29, 2024
 
WhatsApp Image 2024 03 22 at 8.26.51 AM சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் - வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்
 

இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.
 
கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?
 

பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது.

கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்?

பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

sea சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் - வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்கேள்வி

 – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது.

கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது.

கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன?

பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது.

கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும்.

தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு.

பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது.

ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை.

மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு.

https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/

இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா்

3 weeks ago
இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா்
March 29, 2024
 

9 2 இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை - புனரமைப்பையும் ஆரம்பித்தனா்
 

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
“நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
 

https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/

பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன

3 weeks ago
பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன

ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர்.

கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை.

இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341