Aggregator

கலியாணம் பேசட்டோ

3 months ago
இல்லை ...சும்மா கேட்டு பார்த்தேன் ...எதுக்கெடுத்தாலும் ஆணை குறை கூறும் போக்கு தான் தொடர்கிறதா இல்லை பெண்கள் பக்கம் பிழைகள் இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறீர்ர்களா என்று அறியத்தான் ... நமது மனிசிக்கு சமைக்கவே தெரியாது ,அந்த வகையில் தப்பிச்சுட்டேன் ஒரு வகையில் அதனால் முதிர்ச்சியும் வந்திட்டு ஒருவேளை மனிசிக்கு சமைக்கத்தெரிஞ்சிருந்தால் சமையலில் அவர்மீது தங்கியிருப்பதால் முதிர்ச்சி குறைந்திருக்கும், என்ன இப்போதைக்கு புருஷனை அளவுக்கதிமாக பிடிச்சுப்போய் அத்தான் ..இண்டைக்கு உங்களுக்கு பிடித்ததை சமைத்திருக்கிறேன் என்று நம்மளை ஆய்வு கூட எலியாக்காமல் இருந்தாலே போதும்

பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிடம்!

3 months ago
பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிடம்! பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பொலிஸ் கொஸ்தாபல், பெண் பொலிஸ் கொஸ்தாபல் ஆகிய பதவி நிலைகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவி நிலைக்காக விண்ணப்பிப்போர் சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் தோற்றி கணிதம், தாய்மொழி உட்பட 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும். ஆண்கள் 5அடி 4 அங்குலத்திற்கு குறையாத உயரத்தினையும், மூச்சு விட்ட நிலையில் 30அங்குலம் மார்பு சுற்றினையும் கொண்டிருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரிகள் 5அடி 2அங்குலத்திற்கு குறையாதவர்களாக இருக்க வேண்டும். குறைந்த உயரம் தொடர்பாக விண்ணப்பங்களைப் பொறுத்து பொலிஸ்மா அதிபரினால் முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அவசர ஆட்சேர்ப்பு நியமனம் அந்தந்த மாகாணங்களிலேயே இடம்பெறும் எனவும், நேர்முகத் தேர்வுவும் அந்தந்த மாகாணங்களிலேயே இடம்பெறும் எனவும் ஆட்சேர்ப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 1800 தமிழ் மொழி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் பயிற்சிக் காலத்தில் வேதனம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்பட்டுள்ளதாகவும், வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் 18 முதல் 28 வரை வயதெல்லை கொண்ட திருமணமாகாத இளைஞர், யுவதிகள் விண்ணப்பங்களைப் பெற்று தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜெகத் குமார தெரிவித்துள்ளார். இந்நிலையில் வடக்கில் காணப்படும் தமிழ் மொழி உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும், பொலிஸ் சேவையை விரிவுபடுத்துவதற்குமான அவசர ஆட் சேர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும், அரச வேலை வாய்ப்பிற்காகக் காத்திருப்போரும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவங்களை கிளிநொச்சி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். http://athavannews.com/பொலிஸ்-உத்தியோகத்திற்கா/

Police-Vacancy.jpg பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிடம்!

பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொலிஸ் கொஸ்தாபல், பெண் பொலிஸ் கொஸ்தாபல் ஆகிய பதவி நிலைகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவி நிலைக்காக விண்ணப்பிப்போர் சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் தோற்றி கணிதம், தாய்மொழி உட்பட 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.

ஆண்கள் 5அடி 4 அங்குலத்திற்கு குறையாத உயரத்தினையும், மூச்சு விட்ட நிலையில் 30அங்குலம் மார்பு சுற்றினையும் கொண்டிருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரிகள் 5அடி 2அங்குலத்திற்கு குறையாதவர்களாக இருக்க வேண்டும். குறைந்த உயரம் தொடர்பாக விண்ணப்பங்களைப் பொறுத்து பொலிஸ்மா அதிபரினால் முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அவசர ஆட்சேர்ப்பு நியமனம் அந்தந்த மாகாணங்களிலேயே இடம்பெறும் எனவும், நேர்முகத் தேர்வுவும் அந்தந்த மாகாணங்களிலேயே இடம்பெறும் எனவும் ஆட்சேர்ப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 1800 தமிழ் மொழி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் பயிற்சிக் காலத்தில் வேதனம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்பட்டுள்ளதாகவும், வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் 18 முதல் 28 வரை வயதெல்லை கொண்ட திருமணமாகாத இளைஞர், யுவதிகள் விண்ணப்பங்களைப் பெற்று தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜெகத் குமார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடக்கில் காணப்படும் தமிழ் மொழி உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும், பொலிஸ் சேவையை விரிவுபடுத்துவதற்குமான அவசர ஆட் சேர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும், அரச வேலை வாய்ப்பிற்காகக் காத்திருப்போரும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பப் படிவங்களை கிளிநொச்சி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

IMG20200301123018-01-scaled.jpeg

http://athavannews.com/பொலிஸ்-உத்தியோகத்திற்கா/

கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருள், ஜி.பி.எஸ். கருவியுடன் ஒருவர் கைது!

3 months ago
கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருள், ஜி.பி.எஸ். கருவியுடன் ஒருவர் கைது! கிளிநொச்சி, இரணைமடுப் பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஜி.பி.எஸ். கருவி என்பவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மகேந்திரா ரக வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் சோதனை செய்தனர். இதன்போது, ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய ஐம்பது கிராம் ஜஸ் போதைப் பொருளும் ஜி.பி.எஸ். கருவியும் கைப்பற்றப்பட்டதோடு சந்தேகநபரான வாகன சாரதி கைதுசெய்யப்பட்டார். அத்துடன், குறித்த வாகனத்துடன் சாரதி கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். http://athavannews.com/கிளிநொச்சியில்-ஐஸ்-போதைப/

Kilinochchi-Iranaimadu-One-Man-Arrested.jpg கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருள், ஜி.பி.எஸ். கருவியுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி, இரணைமடுப் பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஜி.பி.எஸ். கருவி என்பவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மகேந்திரா ரக வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் சோதனை செய்தனர்.

இதன்போது, ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய ஐம்பது கிராம் ஜஸ் போதைப் பொருளும் ஜி.பி.எஸ். கருவியும் கைப்பற்றப்பட்டதோடு சந்தேகநபரான வாகன சாரதி கைதுசெய்யப்பட்டார்.

அத்துடன், குறித்த வாகனத்துடன் சாரதி கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Kilinochchi-Iranaimadu-One-Man-Arrested-1.jpg

Kilinochchi-Iranaimadu-One-Man-Arrested-2.jpg

http://athavannews.com/கிளிநொச்சியில்-ஐஸ்-போதைப/

ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி பொய் சாட்சியம் வழங்கினார் – ஆசு மாரசிங்க

3 months ago
ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி பொய் சாட்சியம் வழங்கினார் – ஆசு மாரசிங்க ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடுதிரும்ப சந்தர்ப்பம் இருந்தும் வராமல் இருந்ததன் மூலம் இதுதொடர்பாக அவர் முன்கூட்டியே அறிந்திருந்தாரா என்ற சந்தேகம் எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “ஏப்ரல் குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு பிரசாரம் செய்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அரசாங்கம் இதுதொடர்பாக எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் ஏப்ரல் தாக்குதல் தொடர்பாக மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையின்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொண்டோம். அவரது வாசஸ்தலத்துக்கு சென்று இதுதொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும்போது, குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்தில் சிங்கப்பூரில் இருந்த உங்களுக்கு உடனடியாக நாடு திரும்ப முடியாமல்போனதற்கு காரணம் என்ன என கேட்டபோது, ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானத்தில் அன்றையதினம் ஆசனம் இருக்கவில்லை. அதனால்தான் வரமுடியாமல்போனது என அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இதுதொடர்பாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் சிலரை பாராளுமன்ற விசாரணைக்குழுவுக்கு அழைத்து கேட்போதுஇ குறிப்பிட்ட தினத்தில் 20 க்கும் அதிகமான ஆசனங்கள் மீதமிருந்ததாக சாட்சியமளித்திருந்தார்கள். இந்த விடயங்கள் அறிக்கையில் எழுதப்பட்டிருக்கின்றன. அப்படியாயின் முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பொய் சாட்சியம் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அறிந்துகொண்டுதான் அவர் இவ்வாறு செயற்பட்டாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. அதனால் அரசாங்கம் இதுதொடர்பாக மைத்திரிபால சிறிசேனவை விசாரிக்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார். http://athavannews.com/ஈஸ்டர்-தாக்குதல்-குறித்-11/

maithiri-1-720x450.jpg ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி பொய் சாட்சியம் வழங்கினார் – ஆசு மாரசிங்க

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடுதிரும்ப சந்தர்ப்பம் இருந்தும் வராமல் இருந்ததன் மூலம் இதுதொடர்பாக அவர் முன்கூட்டியே அறிந்திருந்தாரா என்ற சந்தேகம் எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “ஏப்ரல் குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு பிரசாரம் செய்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆனால் அரசாங்கம் இதுதொடர்பாக எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் ஏப்ரல் தாக்குதல் தொடர்பாக மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையின்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொண்டோம்.

அவரது வாசஸ்தலத்துக்கு சென்று இதுதொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும்போது, குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்தில் சிங்கப்பூரில் இருந்த உங்களுக்கு உடனடியாக நாடு திரும்ப முடியாமல்போனதற்கு காரணம் என்ன என கேட்டபோது, ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானத்தில் அன்றையதினம் ஆசனம் இருக்கவில்லை. அதனால்தான் வரமுடியாமல்போனது என அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதுதொடர்பாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் சிலரை பாராளுமன்ற விசாரணைக்குழுவுக்கு அழைத்து கேட்போதுஇ குறிப்பிட்ட தினத்தில் 20 க்கும் அதிகமான ஆசனங்கள் மீதமிருந்ததாக சாட்சியமளித்திருந்தார்கள். இந்த விடயங்கள் அறிக்கையில் எழுதப்பட்டிருக்கின்றன.

அப்படியாயின் முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பொய் சாட்சியம் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அறிந்துகொண்டுதான் அவர் இவ்வாறு செயற்பட்டாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. அதனால் அரசாங்கம் இதுதொடர்பாக மைத்திரிபால சிறிசேனவை விசாரிக்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/ஈஸ்டர்-தாக்குதல்-குறித்-11/

இரசாயன குடோனில் தொடர்ந்தும் தீ பரவல் – தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

3 months ago
இரசாயன குடோனில் தொடர்ந்தும் தீ பரவல் – தீயணைப்பு வீரர்கள் போராட்டம் மாதவரத்தில் உள்ள இரசாயன குடோனில் தொடர்ந்தும் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை முழுமையாக அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மாதவரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இரசாயன கிடங்கில் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென தீ பிடித்தது எரிந்தது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த இரசாயன பேரல்கள் வெடித்து சிதறியது. அதில் இருந்து சிதறிய தீயால் அருகில் இருந்த மேலும் 2 கிடங்குகள் எரியத் தொடங்கின. இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம், மணலி, மாதவரம், ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர், கொருக்குப்பேட்டை, சென்னை விமான நிலைய மற்றும் சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவன தீயணைப்பு வாகனம் ஆகியவற்றில் இருந்து 40க்கு மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுபடுத்த முயன்றனர். இரசாயன பேரல்களில் தீப்பற்றியதால் அதனை உடனடியாக அணைக்க முடியவில்லை. 300 அடி நீள ஏணி பொருத்தப்பட்ட பிராண்டோ ஸ்கைலிப்ட் ராட்சத அதிநவீன தீயணைப்பு வாகனங்கள் 5 வரவழைக்கப்பட்டு அதன் மீது ஏறி வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடினர். எனினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. மீட்பு பணியை தமிழக தீயணைப்பு துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, பொலிஸ் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாவட்ட ஆட்சியாளர் சீதா லட்சுமி, மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் ஆகியோர் பார்வையிட்டனர். நள்ளிரவு குடோனில் பற்றி எரிந்த தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் முழுமையாக அணைக்க முடியவில்லை. தொடர்ந்து தீ எரிந்து வந்தது. இந்நிலையில், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 2ஆவது நாளாக இரசாயன குடோன் எரிந்து வருகிறது. தீயை முழுமையாக அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் இருந்த பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் வினியோகமும் நிறுத்தப்பட்டது. போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி, பொதுமக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகிறது. மேலும் பொதுமக்கள் யாரும் தீ விபத்தில் சிக்கிக்கொள்ளாத வகையில் பொலிஸார் அப்பகுதியைச் சுற்றி யாரும் வராத வகையில் தடை விதித்துள்ளனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பொலிஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அருகில் உள்ள குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல், புகை பட்டவுடன் கை – காலில் எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. தீ விபத்தில் குடோன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட லொரிகள், கார் மற்றும் பணியாளர்களின் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது திட்டமிட்டு இரசாயன கிடங்கிற்கு தீ வைத்தனரா? என்ற கோணத்தில் மாதவரம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். http://athavannews.com/இரசாயன-குடோனில்-தொடர்ந்த/

இரசாயன குடோனில் தொடர்ந்தும் தீ பரவல் – தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

3 months ago
Fire-breaks-out-at-an-Chemical-warehouse-in-Madhavaram.jpg இரசாயன குடோனில் தொடர்ந்தும் தீ பரவல் – தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

மாதவரத்தில் உள்ள இரசாயன குடோனில் தொடர்ந்தும் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை முழுமையாக அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இரசாயன கிடங்கில் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென தீ பிடித்தது எரிந்தது.

இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த இரசாயன பேரல்கள் வெடித்து சிதறியது. அதில் இருந்து சிதறிய தீயால் அருகில் இருந்த மேலும் 2 கிடங்குகள் எரியத் தொடங்கின.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம், மணலி, மாதவரம், ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர், கொருக்குப்பேட்டை, சென்னை விமான நிலைய மற்றும் சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவன தீயணைப்பு வாகனம் ஆகியவற்றில் இருந்து 40க்கு மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

சுமார் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுபடுத்த முயன்றனர். இரசாயன பேரல்களில் தீப்பற்றியதால் அதனை உடனடியாக அணைக்க முடியவில்லை.

300 அடி நீள ஏணி பொருத்தப்பட்ட பிராண்டோ ஸ்கைலிப்ட் ராட்சத அதிநவீன தீயணைப்பு வாகனங்கள் 5 வரவழைக்கப்பட்டு அதன் மீது ஏறி வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடினர். எனினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

மீட்பு பணியை தமிழக தீயணைப்பு துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, பொலிஸ் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாவட்ட ஆட்சியாளர் சீதா லட்சுமி, மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் ஆகியோர் பார்வையிட்டனர்.

நள்ளிரவு குடோனில் பற்றி எரிந்த தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் முழுமையாக அணைக்க முடியவில்லை. தொடர்ந்து தீ எரிந்து வந்தது.

இந்நிலையில், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 2ஆவது நாளாக இரசாயன குடோன் எரிந்து வருகிறது. தீயை முழுமையாக அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் இருந்த பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் வினியோகமும் நிறுத்தப்பட்டது. போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி, பொதுமக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகிறது. மேலும் பொதுமக்கள் யாரும் தீ விபத்தில் சிக்கிக்கொள்ளாத வகையில் பொலிஸார் அப்பகுதியைச் சுற்றி யாரும் வராத வகையில் தடை விதித்துள்ளனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பொலிஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அருகில் உள்ள குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல், புகை பட்டவுடன் கை – காலில் எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. தீ விபத்தில் குடோன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட லொரிகள், கார் மற்றும் பணியாளர்களின் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது திட்டமிட்டு இரசாயன கிடங்கிற்கு தீ வைத்தனரா? என்ற கோணத்தில் மாதவரம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://athavannews.com/இரசாயன-குடோனில்-தொடர்ந்த/