Aggregator

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை - வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்

3 months ago
இந்த who கதையை கிழக்கு ஆசியா பக்கம் யார்கேட்க்கிறார்கள் அவங்க பாட்டுக்கு uv கூண்டுகளை அமைத்து விளையாட்டு காட்டுகிறார்கள் . காலையில் கதைப்பம் இனிய இரவு உங்களுக்கும் இப்பவே லண்டன் நேரம் 2.30 ஆகிட்டுது .

பனங்கிழங்கு புட்டு மற்றும் கூல் செய்முறை

3 months ago
ஒடியல் மாவிலை மரக்கறி புட்டு அவிச்சால் நல்லாயிருக்கும். ஊரிலை எங்கடை குடும்பங்களிலை கூடுதலாய் இரவுச்சாப்பாடாய் இருக்கும்.கயர்ப்பு ஒண்டும் இருக்காது.பயித்தங்காய் பயித்தம் கொட்டை கீரை கத்தரிக்காய் பச்சை மிளகாய் எல்லாத்தையும் குறுணியாய் நறிக்கிப்போட்டு அவிப்பினம். அதோடை முட்டுக்காய் தேங்காய் திருவலையும் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம் தெரியும். அதுசரி ஆரும் பனங்கிழங்கு துவையல் சாப்பிட்டு இருக்கிறியளோ? அவிச்ச கிழங்கை உள்ளி மிளகு கல்லு உப்பும் சேர்த்து உரல்லை போட்டு இடிக்கேக்கையே ஒரு வாசம் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை.துவையலை அப்பிடியே உருட்டி பிரட்டி.....ஐயோ வேண்டாம் இப்பவே வாயூறுது அதெல்லாம் ஒரு காலமப்பா!!! இனி திரும்பி வராது.😟

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

3 months ago
பொலிஸார் உட்பட 7 பேர் யாழ்.போதனாவில் அனுமதி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் உட்பட 7 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள கொரோனா பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் நேற்று திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தாவடிப் பகுதியினைச் சேர்ந்தவரின் வீட்டிற்கு 300 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டார். நெடுந்தீவிற்கு வெளிநாட்டவர் ஒருவருடன் சென்று வந்த ஆனைக்கோட்டைப் பகுதி யினைச் சேர்ந்த நபர் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சந்தேகத்துடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் உரும்பிராய் பகுதியினைச் சேர்ந்த பழ வியாபாரி ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் இருந்து இருவரும் நேற்று முன்தினம் மாலை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர். மேலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தி யோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளமையால் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறப்புப் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று திங்கட்கிழமை நண்பகல் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். https://valampurii.lk/news/local-news/2020/பொலிஸார்-உட்பட-7-பேர்-யாழ்/

காற்றில் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. எனினும், ஒருவர் தும்மும், இருமும் போது வேகமாக வெளியேறும் திரவத்துகள்களுடன் அடுத்தவர் மூக்கினுள் புகுந்து கொள்ளும். இது காற்றில் பரவினாலும் திரவத்துகள்கள் சிதறுண்டு போவதால் குறித்த நேரத்தினுள் அடுத்தவர் மூக்கினுள் போக முன்னர் அழிந்துவிடும்.

கலையாத கனவு

3 months ago

                                                                             கலையாத கனவு
                                                                             ----------------------------  
என்றுமில்லாத ஒரு பரவசத்தில் தமிழீழமெங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம். பார்க்கும் முதன்மை வாய்ந்த இடங்களில் எல்லாம் தமிழீழ தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறந்து கொண்டிருந்தது. மாவீரர்துயிலும் இல்லங்கள் மஞ்சள் சிவப்பு வண்ணக்கொடிகளால் அழகூட்டப்பட்டு, வித்துடல்கள் உறங்கும் கருவறைகள் எங்கும் மலர்கள் தூவித் தீபங்கள் ஏற்றப்பட்டு உற்றார் உறவுகளின் விசும்பலும் மக்களின் வாழ்த்தொலியுமாக ஒருபுறமென்றால், குடாரப்பு, திருகோணமலை, மன்னார், காங்கேசன்துறை எனக் கடலிலே காவியமான மாவீரர்களுக்கும் வானிலே மேலெளுந்து காவியமானோருக்கு இரணைமடுவிலுமென மக்கள் தமது நன்றிக் கடனைச் செலுத்த, ஆலயங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் தோறும் சிறப்பு வழிபாடுகள் முதல் அன்னதானம் வரை எங்கும் மறுபுறமாக ஒரே அமர்க்களம்.  அதேவேளை ஆங்காங்கே இருந்த பௌத்த ஆலயங்களிலும் பிரித்தோதும் ஓசையுமாக இலங்கைத்தீவில் சிறீலங்கா -  தமிழீழம் என்ற தேசங்களாகியதான அறிவிப்பு நள்ளிரவில் வெளியாகியதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவுக்குப்பின் தொடங்கிய இந்த ஆரவாரம் மெதுவாகப் பரவித் தமிழீழ தேசத்தில் மட்டுமல்ல மலையகம் உட்பட இலங்கையில் தமிழ்மொழிபேசுவோர் வாழும் கிராமங்கள்தோறும் கொண்டாட்டமாகவே இருந்தது. 
 
கொறோனாவால் திடீரென மாற்றம் கண்ட உலகஒழுங்கும் சிறீலங்காவின் அரச ஆட்சியாளர் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தோரென பல்வேறு தரப்பினர் மீதான உறுதிப்படுத்தப்பட்ட இனப்படுகொலைத் தரவுகளின் அடிப்படையில் தமிழ்ப் புலமையாளர்கள் சட்டவல்லுனர்கள் பல்கலைக் கழக குமுகாயம் சிங்கள முற்போக்குச் சக்திகள் தமிழகத்தின் பல்வேறுகட்சிகள் மனித உரிமை அமைப்புகள் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் என ஒன்றிணைந்து உலக குமுகாயத்துக்குக் கொடுத்த அழுத்தம் கரணியமாக சிங்கள அரசதரப்பு இரண்டு திட்டங்களை முன்வைத்தது. அதில் உள்ளக சுயநிர்ணயமும் போர்க்குற்ற விசாரணையும் அல்லது வெளியக சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு என்று முன்வைத்த திட்டங்களை ஏலவே பெற்ற பட்டறிவின்பாற்பட்டு ஆய்வுசெய்த புலமையாளர்கள் முதலில் வெளியசுயநிர்ணய உரிமையை அடைந்து, அதன் மூலம்; அனைத்துலக குமுகாயத்தில் ஒரு அதிகாரமுள்ள தரப்பாகி இனப்படுகொலையாளர்களுக்கு தண்டனை வேண்டிக்கொடுக்கலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் ஏற்பட்ட முடிவின் வெளிப்பாடாய் ஏற்பட்டுள்ள மாற்றமே  எங்கள் சனத்தின் இந்த அமர்க்களத்துக்குக் கரணியமா என்ற வினாவோடு, அமைதியாகப் பல களமுனைகளைக் கண்ட தமிழ்மாறன் தனது மனைவியையும் பிள்ளைகளையும் இதேநாளில் புதுக்குடியிருப்பிலே பறிகொடுத்ததை எண்ணியவாறு, தன்னோடு களத்திலே நின்று ஒரு காலையும் கண்ணையும் இழந்தும் புலம்பெயர் தமிழர்கள் சிலரது ஆதரவோடு சுயதொழில் முயற்சியாக மீன் பண்ணையமைத்து தன்போன்ற பலரையும் இணைத்துச் செயற்படும் கதிராளனின் பண்ணையை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை, ஏய் டமில்மாற, ஏய் டமில்மாற என்ற குரலொலி கேட்டு நித்திரையிலிருந்து திடுக்குற்று எழுந்தவன் சட்டையை அணிந்துகொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் கோத்தாவின் கட்சி சிங்களவர்களது வாக்குகளால் வென்று ஆட்சியமைத்து ஒரு வாரம்தானேயாகிறது என்று சிந்தித்தவாறு குடிசையின் வாசலுக்குச் செல்லவும் படைப்புலனாய்வுக்குழு வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது.  வந்தவன் கதவைத் திறந்து „என்ன?' என்று கேட்கின்றான்.  „எங்களுக்குக் கோத்தா மாத்தயாட்டையிருந்து உத்தரவு வந்திருக்கு! உங்களைப் போன்றவர்களை மீண்டும் கைது செய்யச் சொல்லி' என்று அழைத்துச் செல்கின்றனர். அவன் சிந்தனை தான் காலையிற் கண்ட கனவைச் சுற்றிச் சுழல்கிறது. கனவுமெய்ப்படும் என்று அவன் ஆழ்மனது சொல்கிறது. 

யாவும் கற்பனை

நட்புடன்
நொச்சி  

கலையாத கனவு

3 months ago
கலையாத கனவு ---------------------------- என்றுமில்லாத ஒரு பரவசத்தில் தமிழீழமெங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம். பார்க்கும் முதன்மை வாய்ந்த இடங்களில் எல்லாம் தமிழீழ தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறந்து கொண்டிருந்தது. மாவீரர்துயிலும் இல்லங்கள் மஞ்சள் சிவப்பு வண்ணக்கொடிகளால் அழகூட்டப்பட்டு, வித்துடல்கள் உறங்கும் கருவறைகள் எங்கும் மலர்கள் தூவித் தீபங்கள் ஏற்றப்பட்டு உற்றார் உறவுகளின் விசும்பலும் மக்களின் வாழ்த்தொலியுமாக ஒருபுறமென்றால், குடாரப்பு, திருகோணமலை, மன்னார், காங்கேசன்துறை எனக் கடலிலே காவியமான மாவீரர்களுக்கும் வானிலே மேலெளுந்து காவியமானோருக்கு இரணைமடுவிலுமென மக்கள் தமது நன்றிக் கடனைச் செலுத்த, ஆலயங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் தோறும் சிறப்பு வழிபாடுகள் முதல் அன்னதானம் வரை எங்கும் மறுபுறமாக ஒரே அமர்க்களம். அதேவேளை ஆங்காங்கே இருந்த பௌத்த ஆலயங்களிலும் பிரித்தோதும் ஓசையுமாக இலங்கைத்தீவில் சிறீலங்கா - தமிழீழம் என்ற தேசங்களாகியதான அறிவிப்பு நள்ளிரவில் வெளியாகியதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவுக்குப்பின் தொடங்கிய இந்த ஆரவாரம் மெதுவாகப் பரவித் தமிழீழ தேசத்தில் மட்டுமல்ல மலையகம் உட்பட இலங்கையில் தமிழ்மொழிபேசுவோர் வாழும் கிராமங்கள்தோறும் கொண்டாட்டமாகவே இருந்தது. கொறோனாவால் திடீரென மாற்றம் கண்ட உலகஒழுங்கும் சிறீலங்காவின் அரச ஆட்சியாளர் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தோரென பல்வேறு தரப்பினர் மீதான உறுதிப்படுத்தப்பட்ட இனப்படுகொலைத் தரவுகளின் அடிப்படையில் தமிழ்ப் புலமையாளர்கள் சட்டவல்லுனர்கள் பல்கலைக் கழக குமுகாயம் சிங்கள முற்போக்குச் சக்திகள் தமிழகத்தின் பல்வேறுகட்சிகள் மனித உரிமை அமைப்புகள் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் என ஒன்றிணைந்து உலக குமுகாயத்துக்குக் கொடுத்த அழுத்தம் கரணியமாக சிங்கள அரசதரப்பு இரண்டு திட்டங்களை முன்வைத்தது. அதில் உள்ளக சுயநிர்ணயமும் போர்க்குற்ற விசாரணையும் அல்லது வெளியக சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு என்று முன்வைத்த திட்டங்களை ஏலவே பெற்ற பட்டறிவின்பாற்பட்டு ஆய்வுசெய்த புலமையாளர்கள் முதலில் வெளியசுயநிர்ணய உரிமையை அடைந்து, அதன் மூலம்; அனைத்துலக குமுகாயத்தில் ஒரு அதிகாரமுள்ள தரப்பாகி இனப்படுகொலையாளர்களுக்கு தண்டனை வேண்டிக்கொடுக்கலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் ஏற்பட்ட முடிவின் வெளிப்பாடாய் ஏற்பட்டுள்ள மாற்றமே எங்கள் சனத்தின் இந்த அமர்க்களத்துக்குக் கரணியமா என்ற வினாவோடு, அமைதியாகப் பல களமுனைகளைக் கண்ட தமிழ்மாறன் தனது மனைவியையும் பிள்ளைகளையும் இதேநாளில் புதுக்குடியிருப்பிலே பறிகொடுத்ததை எண்ணியவாறு, தன்னோடு களத்திலே நின்று ஒரு காலையும் கண்ணையும் இழந்தும் புலம்பெயர் தமிழர்கள் சிலரது ஆதரவோடு சுயதொழில் முயற்சியாக மீன் பண்ணையமைத்து தன்போன்ற பலரையும் இணைத்துச் செயற்படும் கதிராளனின் பண்ணையை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை, ஏய் டமில்மாற, ஏய் டமில்மாற என்ற குரலொலி கேட்டு நித்திரையிலிருந்து திடுக்குற்று எழுந்தவன் சட்டையை அணிந்துகொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் கோத்தாவின் கட்சி சிங்களவர்களது வாக்குகளால் வென்று ஆட்சியமைத்து ஒரு வாரம்தானேயாகிறது என்று சிந்தித்தவாறு குடிசையின் வாசலுக்குச் செல்லவும் படைப்புலனாய்வுக்குழு வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது. வந்தவன் கதவைத் திறந்து „என்ன?' என்று கேட்கின்றான். „எங்களுக்குக் கோத்தா மாத்தயாட்டையிருந்து உத்தரவு வந்திருக்கு! உங்களைப் போன்றவர்களை மீண்டும் கைது செய்யச் சொல்லி' என்று அழைத்துச் செல்கின்றனர். அவன் சிந்தனை தான் காலையிற் கண்ட கனவைச் சுற்றிச் சுழல்கிறது. கனவுமெய்ப்படும் என்று அவன் ஆழ்மனது சொல்கிறது. யாவும் கற்பனை நட்புடன் நொச்சி