Aggregator

சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று

3 weeks 3 days ago
சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம்! 04 MAR, 2024 | 09:19 PM சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் சாந்தன் திடீரென உயிரிழந்திருந்தார். சாந்தன் உயிரோடு இலங்கைக்கு வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. மக்கள் பல்வேறு இடங்களிலும் அலைகடலெனத் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் புடைசூழ நல்லடக்கத்திற்காக உடல் தூயிலுமில்லத்திற்கு எடுத்துவரப்பட்ட போது வீதிகளில் திரண்டு மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். இறுதியாக எள்ளங்குளம் மாவீர்ர் துயிலுமில்லத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் போராளிகள் எனப் பெருமளவிலானோரின் கண்ணீர் கதறலுடன் விபூதி போடப்பட்டு சாந்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. https://www.virakesari.lk/article/177911

மின் கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ!

3 weeks 3 days ago
வீட்டு மின்பாவனையின் ஆரம்ப கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ! 04 MAR, 2024 | 07:53 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணத்தை இன்று திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனை மற்றும் செலவுகளுக்கு அமைய 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சாரத்துறை சட்டத்தின் 30 ஆவது பிரிவு மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மானியங்களுக்கு அமைவாக கண்காணிப்பு மற்றும் மீள்பரிசீலனைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி மாதம் நூற்றுக்கு 3.34 சதவீதத்தாலும் பின்னர் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பித்த மின்கட்டண திருத்த யோசனையின் பிரகாரம் நூற்றுக்கு 14 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட செலவினங்கள் தொடர்பான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு மற்றும் பொதுமக்களின் கருத்துக்கோரலின் போது கிடைக்கப்பெற்ற யோசனைகளை கருத்திற் கொண்டு மொத்த மின்கட்டணத்தை 21.9 சதவீதத்தினால் குறைப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இத்திருத்தம் சகல மின்நுகர்வு கட்டங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வீட்டு பாவனையில் 30 அலகுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் மின்பாவனையாளர்களின் மின்னலகுக்கான கட்டணம் நூற்றுக்கு 33 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 அலகுகளுக்கான மின்கட்டணம் 28 சதவீதத்தால் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது.61-90 வரையான அலகுக்கான கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 90 அலகுக்கு மேற்பட்டதும் 180 இற்கும் குறைந்ததுமான மின்னலகுக்கான கட்டணம் 24 சதவீதத்தாலும் 180 அலகுகளுக்கு மேற்பட்ட பாவனைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது. மத தலங்களுக்கான மின்கட்டணம் 33 சதவீதத்தாலும் பொது பாவனைகளுக்கான மின்கட்டணம் 23 சதவீதத்தாலும், அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹோட்டல் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும், வீதி மின்விளக்குகளுக்கான கட்டணம் 20 சதவீததத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண திருத்தத்துக்கு அமைய 30 அலகுகளுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் நுகர்வோருக்கான மாதாந்த மின்கட்டணம் 180 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு அலகுக்கு அவர்கள் செலுத்தும் கட்டணம் 12 ரூபாவில் இருந்து 08 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 31 - 60 அலகுகளுக்காக அறவிடப்பட்ட 360 ரூபா மின்கட்டணம் 300 ரூபாவாகவும் ஒரு அலகுக்கான கட்டணம் 30 ரூபாவில் இருந்து 20 ரூபாவாகவும் குறைக்கப்பட்டதுள்ளது. https://www.virakesari.lk/article/177909

மின் கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ!

3 weeks 3 days ago
வீட்டு மின்பாவனையின் ஆரம்ப கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ!
04 MAR, 2024 | 07:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்கட்டணத்தை இன்று திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை  முன்வைத்த யோசனை மற்றும் செலவுகளுக்கு அமைய 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சாரத்துறை சட்டத்தின் 30 ஆவது பிரிவு மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மானியங்களுக்கு அமைவாக கண்காணிப்பு மற்றும் மீள்பரிசீலனைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி மாதம் நூற்றுக்கு 3.34 சதவீதத்தாலும் பின்னர் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பித்த மின்கட்டண திருத்த யோசனையின் பிரகாரம் நூற்றுக்கு 14 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட செலவினங்கள் தொடர்பான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு மற்றும் பொதுமக்களின் கருத்துக்கோரலின் போது கிடைக்கப்பெற்ற யோசனைகளை கருத்திற் கொண்டு மொத்த மின்கட்டணத்தை 21.9 சதவீதத்தினால் குறைப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இத்திருத்தம் சகல மின்நுகர்வு கட்டங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

வீட்டு பாவனையில் 30 அலகுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் மின்பாவனையாளர்களின் மின்னலகுக்கான கட்டணம் நூற்றுக்கு 33 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 அலகுகளுக்கான மின்கட்டணம் 28 சதவீதத்தால் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது.61-90 வரையான அலகுக்கான கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 90 அலகுக்கு மேற்பட்டதும் 180 இற்கும் குறைந்ததுமான மின்னலகுக்கான கட்டணம் 24 சதவீதத்தாலும் 180 அலகுகளுக்கு மேற்பட்ட பாவனைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது.

மத தலங்களுக்கான மின்கட்டணம் 33 சதவீதத்தாலும் பொது பாவனைகளுக்கான மின்கட்டணம் 23 சதவீதத்தாலும், அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஹோட்டல் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும், வீதி மின்விளக்குகளுக்கான கட்டணம் 20 சதவீததத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தத்துக்கு அமைய 30 அலகுகளுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் நுகர்வோருக்கான மாதாந்த மின்கட்டணம் 180 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு அலகுக்கு அவர்கள் செலுத்தும் கட்டணம் 12 ரூபாவில் இருந்து 08 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

31 - 60 அலகுகளுக்காக அறவிடப்பட்ட 360 ரூபா மின்கட்டணம் 300 ரூபாவாகவும் ஒரு அலகுக்கான கட்டணம் 30 ரூபாவில் இருந்து 20 ரூபாவாகவும் குறைக்கப்பட்டதுள்ளது.

https://www.virakesari.lk/article/177909

வல்வை மண்ணில் பிரித்

3 weeks 3 days ago
புலி வாழ்ந்த மண்.. யாழ்ப்பாணத்தின் மண்டைகாய்கள்.. இப்படி எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்ட பூமி தான் வல்வை. அண்மையில் அந்தப் பூமிக்குப் போன போது.. வல்வை வளைவை வளைஞ்சு எடுத்தது இந்தளவு தான். அதிலும் வடமராட்சி மக்களின் அன்புடனான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் பின்னர் ஆஞ்சநேயர் தான் வரவேற்றார் வல்வை சந்தியில்.. தலைவர் வாழ்ந்த வீட்டுப் பக்கம் காப்பெட் எட்டியும் பார்க்கல்ல.. அவர் வாழ்ந்த வீடு காடுபத்திப் போய் கிடக்கு. முன்னால் எம் ஜி ஆர் பாவம் சிலை கூட இல்லை திருவுருவப்படமாகவே நிற்கிறார். வல்வை முதல்.. காங்கேசந்துறை செல்லும் கடற்கரை வீதியும்.. கொஞ்சம் கார்பெட்.. மிகுதி இல்லை. என்னடா கார்பெட் என்று பார்த்தால்.. இருமருங்கும் சொறீலங்கா.. இராணுவ பயிற்சிக்கூடங்களும்.. தலைமையகங்களும்... ஏக்கர் கணக்கில் காணிகள் இன்னும் இராணுவம் வசம். கடற்படை வேறு கடல் பக்கமா அபகரிச்சு நிற்குது. எல்லா இடமும் புத்தர் ஒவ்வொரு அரசமரமா குந்தி இருக்கிறார். உவங்கட விசுவாசத்தை பார்த்தால்.. புத்தரே தலை சுத்தி விழுந்துடுவார். ஆனால்.. செல்லடிச் சுவடுகளும்.... கன்போர்ட் எறிகணை சிதறல்களும் இல்லாத மதில்கள் இல்லை இப்பவும். புதிய அடிக்குமாடி மனைகளை மக்கள் எழுப்பி வருகினம். நல்லது தான். மக்கள் இப்போ பிடிக்க வந்த பிசாசோடு வாழப் பழகிவிட்டார்கள். மதியம் பசிக்கும் தானே. அப்போ.. சாப்பிட ஒரு இடம் போனம். விளம்பரத்துக்காக இல்லை. உண்மையாகவே இடமும் உணவும் இயற்கை காட்சிகளும் மனதுக்கு குளிர்ச்சியாக இருந்திச்சு. உள்ளூர் தகவலின் படி (உண்மை பொய் உறுதிப்படுத்தப்படவில்லை) புலம்பெயர் நபரின் முதலீட்டில் உருவான.. ஒரு விடுதியுடன் கூடிய உணவகம் கிடைத்தது. வெள்ளையள் அங்கும் சைக்கிளில் ஓடி ஓடி பேரம் பேசிக்கிட்டு இருப்பதைக் காண முடிக்கிறது. வெள்ளைக்காரனாவது காசை விடுறதாவது. உணவகத்தின் உள்.. எல்லாம் நல்லாத் தான் இருக்குது. உணவும். விலையும் பறுவாயில்லை. ஆனால் உணவகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிங்களப் படைமுகாமில் இருந்து ரபான் ப்ரித்.. நாள் முழுவதும். செவிக்கும் மனதுக்கும் எரிச்சலூட்டுவதாகவே இருந்தது. சிங்கள பெளத்தர்களே இல்லாத இடத்தில் எதுக்கு இந்த வேலை. மிக வரைவில்.. அந்த இடத்தில் புத்தர் நிரந்தரமாக குடியிருக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம். சரி.. என்று சற்றே நடந்து சுவர்களை நோக்கினால்.. வட ஹிந்திய நடிகைகளுக்கும் ஹிந்திய தலைவர்களுக்கும் முன்னிடம். மோடி ஜீ வேற இருக்கிறார். ஈழத்தமிழர்கள் கப்பல் வரலாறும் ஒரு பக்கம் போட்டிருக்கு. தமிழன் சுழியன்.. என்றது அப்பவே தெரியும். ஆனால் வல்வை மாதிரி சுழியனாக இருப்பது கடினம் தான். அழகான வல்வைக்கடல். ஏனே ஆர்ப்பரிப்பதை நிறுத்திவிட்டது. அதற்கும் வீரம் வீழ்ந்துவிட்டதோ என்னவோ..??! (காட்சிக்கு ஏற்ற வசனம்.. அப்புறம் வல்வை மக்கள் தங்கள் வீரத்தைப் பற்றி கதைப்பதாக சண்டைக்கு வரக்கூடாது. உங்கள் வீரத்தை உலகறியும்.) இந்த விடுதியின் கண்ணாடிக் கூட்டில் இருந்தான பார்வை. இங்கு சிங்களவர்களும்.. குறிப்பாக இராணுவ முகாம்களுக்கு வரும் இராணுவத்தின் உறவினர்கள் பெருமளவில் வந்து போகினம். உண்மையில்.. யாழ்ப்பாணம் காண ஆசையில் வரும் சிங்களவர்களும் உண்டு. அவர்களை வரவேற்பதில் தவறில்லை. நாம் தென்னிலங்கையை ரசிக்கவில்லையா..??! இந்தப் பக்கம் இருந்து தான் அந்த எரிச்சலூட்டும் ரபான் பிரித் வந்தது. ஒரு கடற்கரையை சோலையாக்கி வாழும் வல்வை மக்களுக்கு சலூட். இஸ்ரேலாம் இஸ்ரேல். வல்வையோடு நிற்காமல்.. தீவகமும் போனது.. நயினை.. அம்மாளாச்சி நல்ல பெயிட் கியின்ட் எல்லாம் அடிச்சு நல்ல களையா இருக்கா. என்ன அவாவின் பக்தர்களை காவிக் கொண்டு போற படகுகளுக்கு தான் யாரும் பெயின்ட் அடிக்கிறாங்கள் இல்லை. நயினாதீவு இறங்கு துறையும் இப்ப நல்லா இருக்கு. ஆனால்.. சில அடிப்படை பழவழக்கங்களை மாத்திறது கஸ்டம். எங்கும் கச்சான் கோதும் கஞ்சலும். சிங்களவர்களும் அதே. தீவகத்தின் அழகிய சன் - செட் உடன் முடிச்சுக் கொள்ளுறம். ஆக அலட்டினால்.. வாசிக்கவும் நேரமில்லை.. மிணக்கடவும் நேரமில்லை. இறுதியா.. ஒன்று சொல்ல மறந்தது.. தீவகத்தில் இருந்து அராலிப்பக்கமா தனிச்சிங்களத்தில் எதையோ எழுதி வைச்சு கொப்பேகடுவ.. போய் சேர்ந்த இடத்தை சிங்களவருக்கு மட்டும் திறந்து விட்டிடுருக்கிறாங்கள். ஐயாவுக்கு சிலை வைச்சு புகழஞ்சலியோ இல்லை.. குடியேற்றமோ தெரியாது. எங்கட டமிழ் டேசியக் கட்சிகளுக்கு தமது தேசத்தில் நடப்பத்தைக் கவனிக்க நேரமில்லை. கட்சி பிரிக்கவும் கன்னை பிரிக்கவும் தான் நேரம் போதும். இதனையே சிங்களவர்கள்.. ஹிந்தியா.. சீனா.. சர்வதேசம்.. மட்டுமல்ல.. தமிழர்களில் சிலரும் விரும்பினம். தமிழன் பலமாகக் கூடாது. அதை களத்தில் நல்லாச் செய்யுறாங்கள்.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 weeks 3 days ago
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் மறுப்பு - பின்னணி என்ன? தேர்தல் ஆணைய நடைமுறை என்ன? பட மூலாதாரம்,X/நாம் தமிழர் கட்சி 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக அக்கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். கடந்த தேர்தல்களைப் போலவே கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி மன்மோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்து இன்று(திங்கள்கிழமை) வழக்கை முடித்து வைத்தனர். வழக்கின் இன்றைய நிலையில், நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட முடியாது. கடந்த ஆண்டு இறுதியில், கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதே காரணம். அதனால்தான், இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னம் கிடைக்கவில்லை. என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் தமிழர் கட்சி 2010-இல் தொடங்கப்பட்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலில் போட்டியிடத் தொடங்கியது. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஆண், பெண் இரு பாலருக்கும் சரிபாதி தொகுதிகளை ஒதுக்கியது. அதாவது, அக்கட்சி சார்பில் 20 தொகுதிகளில், ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் களமிறங்கினர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பதிவுபெற்ற கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கும் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆணடு அக்டோர் மாதம் தொடங்கியது. இந்த நிலையில், டிசம்பர் 17 ஆம் தேதி, கர்நாடகாவைத் சேர்ந்த ஒரு பதிவுபெற்ற கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டதால், அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை ஒதுக்கியது. அந்தச் சின்னத்திற்காக நாம் தமிழர் கட்சியினர் தாமதமாகவே அணுகியிருக்கிறார்கள். இது பாஜகவின் சதி எனச் சாடினார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஊடகங்களிடம் பேசிய அவர்,”நாங்கள் முதன் முதலில் தேர்தலில் போட்டியிடுவதற்காக சின்னத்தை கோரிய போது, நாங்கள் மயில் சின்னத்தைக் கேட்டோம். அது தேசியப் பறவை என்பதால், அந்தச் சின்னத்தை ஒதுக்க மறுத்தனர். ஆனால், தேசிய மலரான தாமரையை பாஜக,விற்கு ஒதுக்கியுள்ளார். இருவருக்கும் ஒரே நியாயம் என்றால், அவர்களுக்கும் தாமரையை ஒதுக்கியிருக்கக் கூடாது,” என்றார். இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கக் கோரி, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிற்கு கடிதம் எழுதினார். அதற்கு எந்த பதிலும் வராத நிலையில், அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். என்ன சொன்னது உயர் நீதிமன்றம்? பட மூலாதாரம்,TWITTER நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மார்ச் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பல தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதை கருத்தில் கொண்டு இந்த முறையும் அந்தச் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அக்கட்சி சார்பில் வாதிடப்பட்டது. வாதத்தின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி மோகன், “பொது சின்னம் பட்டியலில் உள்ள அந்த சின்னத்தை முதலில் கோருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதன்படி, அந்த சின்னம் தற்போது வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது,”எனக் கேட்டார். தொடர்ந்து பேசிய நீதிபதி, “எந்த ஒரு குறுப்பிட்ட கட்சிக்காகவும் ஆணையத்தின் நடைமுறையை மாற்ற முடியாது. நாம் தமிழர் கட்சி இன்னும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. அப்படியிருக்கும் போது எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை உரிமை கோர முடியும்,”எனக் கேட்டார். வழக்கு விசாரணை முடிந்த பிறகு வழக்கு மீதான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என வழக்கை ஒத்தி வைத்தார். இந்நிலையில், வழக்கு தொடர்பாக தீர்ப்பு இன்று வெளிவந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்திற்கு எந்த உத்தரவும் இடாமல், நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். நாம் தமிழர் கட்சி கூறுவது என்ன? அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கே சின்னங்கள் ஒதுக்கப்படும் என்பது உண்மைதான் என்று கூறும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி,“பதிவு செய்யப்பட்ட கட்சி தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு, அதே சின்னத்தில் ஒரு விழுக்காடு வாக்குகளுக்கு மேல் பெற்றால், அவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். நாங்கள் எட்டு விழுக்காடு வரை வாக்குகள் பெற்றுள்ளோம். இந்த முறை எங்களுக்கு இந்தச் சின்னத்தைக் கொடுத்தால், நிச்சயம் அதை விட அதிக சதவீத வாக்குகள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பட்டியலில் இடம்பெறுவோம். அதைத் தடுக்கவே, இப்படி சதி செய்துள்ளார்கள்,”என்று கார்த்தி சாடினார். உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாகவும் கார்த்தி கூறினார். கட்சிகள் அங்கீகாரம் - தேர்தல் ஆணைய நடைமுறை என்ன? தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கன்றது. அதன்படி, தேர்தல் ஆணையம், இரண்டு வகையாக கட்சிகளை அங்கீகரிக்கிறது. ஒன்று- அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி; இரண்டு- அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி. அரசியல் கட்சிகள் இந்த அங்கீகாரத்தை பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேன்டும். ஒரு கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். மாநில சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும். மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதேபோல அம்மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் 25 இடங்களுக்கு ஒன்று வீதம் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும். ஒரு கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்கவேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள தொகுதிகளில் 2 சதவீத இடங்களை(11 இடங்கள்) 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெற்றி பெற வேண்டும். ஒரு அரசியல் கட்சி 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c51ex253z28o

தூய அடையாளம்

3 weeks 3 days ago
அப்படித்தான் செய்கின்றார்கள்.......👍 அத்துடன் சில அமெரிக்கர்களின் பூகோள அறிவு கொஞ்சம் விசித்திரமானது. ஒரு நீண்ட நேர இலங்கை, இந்தியா பற்றிய விளக்கத்தின் பின்னும், நீங்கள் கடைசியாக இந்தியாவில் உள்ள உங்கள் வீட்டிற்கு எப்போது போனீர்கள் என்று என்னைக் கேட்டவர்களும் உண்டு. சில வருடங்களின் முன், வட கொரியா மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை நடத்தலாம் என்ற ஐயம் இருந்தது. இங்கு ஒரு தொலைக்காட்சியில் உலக வரைபடத்தை போட்டு, வட கொரியா எங்கிருக்கின்றது என்று பலரை நேரலையில் கேட்டனர். ஒருவர் சிறிது நேரம் நன்றாக யோசித்து விட்டு, அமெரிக்காவிற்கு மேலே (கனடாவை) தொட்டுக் காட்டினார்...........😀

தூய அடையாளம்

3 weeks 3 days ago
சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.....👍 இங்கு (அமெரிக்காவில்) அவர்கள் தமிழில் கதைப்பதை விட, நாங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதே பரவாயில்லாமல் இருக்கிறதே என்று தான் நிலைமை போய்க் கொண்டிருக்கின்றது....😀