Aggregator

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!

6 hours 55 minutes ago
யாத்திரை......(17). முள்ளியவளை நோக்கி கிளாலி பாலத்தால் சென்று பின் பரந்தன் சந்தியால் வாகனம் செல்கின்றது. நான் வற்றாப்பளை கண்ணகை அம்மனையும் தரிசித்து விட்டு போவோம் என்று சொல்ல புதுக்குடியிருப்பு சந்தியால் திரும்பி நந்திக் கடல் ஓரமாக வான் செல்கின்றது. இந்தியன் ஆர்மி யாழ்பாணத்துக்குள் வந்து எமது வாழ்வை அழித்த அந்த நாளில் நான் மனிசி எல்லோரும் யாழ்ப்பாணத்தில் ஆதீனத்தில் தங்கி விட்டோம். அம்மா,மாமி, மச்சாள்மார் எல்லோரும் குடி பெயர்ந்து வந்து கண்ணகை அம்மன் கோவிலில்தான் தங்கி இருந்தனர். நந்திக் கடலைப் பார்க்கும்போது முள்ளிவாய்க்காலும் நினைவில் நிழலாடி கண்கள் பணிகின்றன. அந்தப் பெரிய காட்டைக் கடந்து கோவில் வாசலில் வான் வந்து நிக்கின்றது. அங்கிருந்த குழாயில் கைகால் கழுவி விட்டு கோபுரத்தின் முன்னால் கற்பூரம் ஏற்றி சிதறுதேங்காய் போட்டுவிட்டு உள்ளே போகின்றோம்.ஓரளவு சனம் இருந்தது.மத்தியானம் பூசை நடந்து கொண்டிருக்கு. கண்ணகை அம்மனுக்கு முன்னால் தினுசு தினுசான எண்ணெய் தீபங்கள் சுடர்விட்டு எரிகின்றன. மூலவர் பூசை முடிந்து தெற்கு வாசலில் பூசை நடக்குது.அர்ச்சகர் அம்பாளுக்கு தீபம் காட்டிவிட்டு யாராவது தேவாரமும் புராணமும் பாடும்படி அழைக்கின்றார்.அவர் மீண்டும் அழைக்க ஒவ்வொருவரும் மற்றவர் முகம்பார்க்க அடியேன் முன்னே வந்து மனமுருகிப் பாடுகின்றேன்.மெய் சிலிர்க்கின்றது.அப்படியே உள்வீதி சுற்றிவந்து வசந்த மண்டபத்தில் பூசை ஒலிபெருக்கியில் சத்தமாய் நடக்கின்றது. பஞ்சபுராணம் பாடும்படி அர்ச்சகர் அழைக்கின்றார்.மற்றவர்கள் பின்னால் நிற்கும் எனக்கு வழி விடுகின்றனர். அவர் ஒலிபெருக்கியில் நின்று பாடும்படி சொல்கின்றார்.என்ன ஒரு பெரும்பேறு. என்னை மறந்து நான் பாடுகின்றேன்.பின்பு மூலவர் சந்நிதியில் அம்பாளின் முன்னால் எம்மை அழைத்து காளாஞ்சி தந்து கௌரவிக்கின்றார்கள். மீண்டும் கிளம்பி முள்ளியவளையில் அத்தான் அக்கா வீட்டுக்கு வருகின்றேன்.அக்காவும் இரு வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டார். அங்கு அத்தானுடன் இருந்து கதைத்து சிரமபரிகாரம் செய்துவிட்டு கிளம்பி தண்ணீரூற்று பிள்ளையார் கோவிலுக்கு வருகிறோம். நான் சுமார் ஆறுமாதம் வரை தண்ணீரூற்றில் வேலை செய்திருக்கின்றேன்.அக்காலங்களில் தினமும் மாலை அந்தக் கேணியில் இருக்கும் தொட்டிகளில்தான் தோய்ந்து குளிப்பது. அப்போது அங்கு கிண்ணியாவைப் போல் ஆறேழு தொட்டிகள் இருக்கும்.அவற்றில் நீர் ஊற்றேடுத்து பெருகி வரும். இயற்கையை ரசித்து கொண்டே நீராடலாம். ஆனால் சுடுதண்ணீர் இல்லை.சுற்றிவர முப்போகமும் விளைந்து கொண்டிருக்கும் வயல்கள். நிலத்தை நிகத்தால் சுரண்டினால் நீர் வரும் பூமி. இப்பொழுது அந்தத் தொட்டிகளைக் காணவில்லை. ஒரே கேணியாக்கி பெரிய மதிலால் மூடிக் கட்டியிருக்கிறார்கள்.அது எனக்கு ரசிக்கவில்லை. யாத்திரை தொடரும்........! சம்பவம் : தெய்வம் எங்காவது பொய் சொல்லுமா, சொன்னதே எனக்காக சொன்னது.... மாலை ஆறு மணியானால் வீட்டில் பித்தளை விளக்கு,ஒரு மேசை லாம்பு, ஒரு அரிக்கன் லாம்பு பளிங்கு போல் துடைத்து மண்ணெண்ணெய் விட்டு திரியெல்லாம் கத்தரித்து விளக்கேற்றுவார்கள்.அந்த நேரம் எனக்கு ராகுகாலம். நான் வீட்டை விட்டு வளவுகளுக்குள் ஓடி விடுவேன்.பெரும்பாலும் பின்னாலே நாலுவீடு தள்ளி இருக்கும் பெரியம்மா(அம்மா,மாமா,குஞ்சம்மா,சின்னம்மா எல்லோருக்கும் அக்கா) அங்கு போய் விடுவேன்.அங்கு எனக்கு அண்ணாவும் அக்காவும் இருக்கினம்.என்ர தெய்வம் அக்கா என்னை அறைக்குள் தள்ளி விடும்.வாசலில் தான் இருந்து கொண்டு தன்னை சுற்றி சீலை சட்டைகள் தைப்பது போன்ற பாவனையில் பரப்பி வைத்திருப்பா.அல்லது கடகத்தில் புளியம்பழம் கொட்டி பரப்பி உடைத்து கொண்டிருப்பா.பிசாசுகள் என்னை எல்லா இடமும் தேடிக்கொண்டிருக்கும். இங்கேயும் வரும். உவன் தம்பி உங்க நிக்கிறானோ. யார் சுவியோ அவன் இஞ்ச வந்து எத்தனை நாள். இஞ்ச வரேல்ல. குரங்கு படிக்கிற கள்ளத்தில் எங்கேயோ போய் ஒளிச்சுட்டுது.வரட்டும் காலை முறித்து அடுப்புக்கை வைக்கிறன் என்று விட்டு போய் விடுவினம். பின்பு அக்கா தன்பாட்டில் அங்கிருந்து பாடும்.இந்து லேடிஸ் ஸ்டூடன்ற்.நல்லா படிப்பா.ஒருநாளும் பெரியம்மாவும் அக்காவும் எனக்கு அடித்ததே இல்லை.ஆங்கில பாட்டுக்கள் பாபா பிளாக் சீப், டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார், ரெய்ன் ரெய்ன் கோ எவேஎல்லாம் முற்றத்தில் நின்று நடித்து நடித்து பாடுவா.நானும் கூட சேர்ந்து பாடுவேன். ஜாக் & ஜில் பாடினால் இருவரும் தண்ணியோடு விழுந்து உருளுவார்கள்.நாங்களும்தான், பின்பு ஹா ஹா என்று சிரிப்பு வேற. உச்சிமீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று பாரதியாரை விட ஆவேசத்தில் 45 டிகிரியில் கையை உயர்த்தி பாடினால் விழுந்த வானம் மீண்டும் போய் ஒட்டி கொள்ளும். மற்றும் பாடப்புத்தகங்களில் வரும் கதைகள் பாடல்கள் எல்லாம் நீ படி என்று சொல்லாமலே என் தலைக்குள் ஏற்றி விடும். சிலேட்டு இல்லை கொப்பி பென்சில் இல்லை இதுதான் படிப்பு என்று தெரியாமலே படித்திருக்கிறேன். சில காரணங்களால் மனிசி பிள்ளைகளையும் பார்க்காமல் நான் பிரான்சிக்கு வருகிறேன்.என் எண்ணம் இரண்டு சாவியுடன் இங்கு வேலை செய்யலாம் என்று.ஆனால் இங்கு சட்டதிட்டங்கள் கடுமை. பாஷை தெரியாது.ஆங்கில எழுத்துக்கள் ஆனால் ஆங்கிலமாய் உச்சரிப்பு இல்லை. ஒரு போர்த்துகீஸ்காரனிடம் வேலை செய்கிறேன்.ஒருத்தர் வந்து நின்று நெடுநேரம் எனது வேலையை பார்த்து கொண்டு நிக்கறார்.கொஞ்ச நேரத்தில் எனக்கு பாஷை தெரியாது என்பதை புரிந்து கொண்டு நீ நல்லா வேலை செய்கிறாய் என்று சைகையாலும் சிறிது ஆங்கிலத்திலும் பாராட்டுகிறார். நானும் ஆங்கிலத்தில் எனது வீரப்பிரதாபங்களை அள்ளி விடுகிறன். சற்று நேரத்தி அவர் தனது கார்டை காட்டி நான் போலீஸ் நாளை காலை ஸ்டேசனுக்க வா என்று எனது கார்டை வாங்கி கொண்டு விலாசம் தந்து விட்டு போய் விட்டார்.அடுத்த நாள் நான் அங்கு சென்றபோது ஒரு மொழிபெயர்பாளருடன் விசாரணை நடந்து இனிமேல் இப்படி செய்யக்கூடாது இந்நாட்டில் இது குற்றம் என்று சொல்லி விடுகிறார்கள்.வெளியே வந்தால் எனக்கு வேலை தந்தவரும் உள்ளே இருந்து வாரார். பின்பு நான் இங்கு "அடாப் "(addap)பில் மூன்றுமாதம் படித்தேன். அங்கு ஒரு வியட்னாம் ஆசிரியர். அவர் படிப்பிக்கும் போது கொப்பியில் எழுத சொல்வதில்லை."எக்ரி தான் லு தெத்" தலையில் எழுது என்று சொல்லுவார். மிகத் தேவையான வாக்கியங்களை வகுப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் மீன்டும் மீன்டும் கேள்வி கேட்டு பதில் சொல்ல வேண்டும். உதாரணமாக இந்த இடத்துக்கு எப்படி போவது. வழி சொல்லுவது. கடையில் சாமான்கள் வாங்குவது என்று அன்றாடம் புழக்கத்தில் உள்ள வாக்கியங்கள்.பிற்காலத்தில் இந்த படிப்பு எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. வங்கிகளில் கடன் வாங்கவும், எலக்ரிக் கடைகளில் கடனுக்கு சாமான்கள் வாங்குவதற்கும். யாழ் இந்துவில் படிக்கும்போது ஏ .எஸ் கனகரட்னம் மாஸ்டர். ஆங்கில வகுப்பு எடுப்பவர்.வேட்டி சட்டையுடன் வருவார்.prefact கார் வைத்திருந்தார்.அவர் அதிகமாக எங்களுக்கு ஆங்கில வகுப்பை விடுதியில் உள்ள சாப்பாட்டு அறையில்தான் நடத்துவார்.அது ஒதுக்கு புறமாக இருப்பதால் யாருடைய இடையூறும் இருக்காது. அங்கு பாடப்புத்தகத்தில் வரும் கதைகளை நாங்கள் புத்தகத்தை பார்த்தே அந்தந்த பாத்திரங்களாக இருந்து நடிக்க வேண்டும்.சிங்கம் முயல் கதையை எல்லோரும் மாறி மாறி பேசி நடிக்க வேண்டும்.ஒருத்தரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.அப்போது ஒரு டேப்ரெக்காடர் இரண்டு பெரிய வீல் மேலே நாடாவுடன் சுற்றி கொண்டிருக்கும்.அதில் ஆங்கிலத்தை எப்படி உச்சரிப்பது, இருவர் எப்படி உரையாடுவது என்று எல்லாம் இருக்கும்.அதை முதல் பத்து நிமிடம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.பின்பு அதே போல் உரையாட வேண்டும். எல்லாம் ஞாபகத்தில் வந்து போகின்றது.....! ஒருநாள் எனக்கும் அத்தானுக்கும் (மாமாவின் மகன்) மாமா சம்பல் அடி அடித்து போட்டு (எங்கட குழப்படியும் அப்படியானதுதான், அதை விட குறைவான தண்டனைக்கு சட்டத்தில் இடமில்லை). வெய்யிலில் முழங்காலில் இருத்தி விட்டு நெற்றியில் கல்லும் வைத்து விட்டு அங்கால வேலை செய்து கொண்டு இருக்கிறார்.சூரியனும் கொளுத்துது.வியர்வை ஆறாய் ஓடுது.ஒரு கட்டத்தில் அவர் எழுந்து சந்தியில் இருக்கும் கடைக்கு போகிறார். குஞ்சு குருமன் எல்லாம் படலையில் நிலையெடுத்து நின்று தகவல் குடுக்குதுகள்.அத்தை ஓடி வந்து கல்லை எடுத்து போட்டு தேசிக்காய் தண்ணியை கெதியாய் குடிக்கத் தருகிறா.நியூஸ் வருகுது "ஆள் வருது, ஆள் வருது "என்று உடனே நாங்கள் அந்த பொசிசனில் நிலையெடுத்து நிக்கிறம். எல்லோரும் ஆங்காங்கே போய் விட்டனர்.(அப்போது எங்களுக்கு 22/23 வயதிருக்கும்.இப்ப பிள்ளைகளைத் தொட முடியுமா). மாமா வந்து விட்டார். பெரியம்மாவுக்கு தகவல் போய் அவ தம்பியாரை பேசிக் கொண்டு வருகிறா. அவவுக்கு மட்டும்தான் மாமா கப்சிப். மாநாடு நடக்கிறது. இவங்கள் சேர்ந்திருந்தால்தான் பிரச்சினை இவர்களை பிரித்து விடுவது என்ற முடிவு ஏகமனதாக எடுக்கப் படுகிறது.தம்பியை நான் முள்ளியவளைக்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என்று அக்கா சொல்கிறா. அதன் நிமித்தம் அத்தான் அக்காவுடன் முள்ளியவளைக்கு வருகிறேன்....!

இராணுவத்தினருடன் போரிட்ட புலிகளை மன்னித்துவிட்டோம், தமிழர்கள்தான் இனி இறங்கிவரவேண்டும்

9 hours 25 minutes ago
ஓமய்யா 6 மாதம், 1 வருடம் புனர்வாழ்வு கொடுத்து விட்டனிங்கள். அது போல குற்றமிழைத்த படையினரை கைது செய்து புனர்வாழ்வளித்து விடுங்கோ! இதுக்குமேல குனிஞ்சால் முள்ளந்தண்டு உடைஞ்சுபோம், அதோட கூட்டமைப்புக்கும் வாக்கு விழாது!

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!

11 hours ago
நானும் இந்ததடவை சென்று வந்தேன் .எமது பிள்ளைகள் இங்கு தேவாரம் பாடினார்கள்.....வைத்திய கலாநிதி மனமோகன் தான் இந்த கோவிலுக்கு காணி வழங்கினார்...

ஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி

11 hours 33 minutes ago
அரசியல் .....நானும் நீயும் பத்திரிகைகளுக்கு ஒருத்தரை ஒருத்தர் தாக்கி அறிக்கை விடுவது,மேடைகளில் பேசுவது யாவும் நாம் சார்ந்த மக்களின் மீது மிளகாய் அரைக்கவே..... மற்றும் படி நீ என்ட‌ நண்பேன்டா

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.

11 hours 43 minutes ago
எங்கே எலி என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடிவா......அங்கே வரும் என் கால்களை கண்டதும் எலிகளே ஆடிவா ......! 🐱🦔 🐱எங்கே எலி என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடிவா.....!

அடையாளம்

11 hours 47 minutes ago
இந்தப் பதிவை பல தடவைகள் வாசித்திருந்தேன். ஆனாலும் அடையாளம் என்பது மிகவும் சிக்கலான சொல். திரியை வேறு திசையில் நகர்த்த முனையவில்லை. எனக்கு அடையாளம் மேல் உள்ள பல குழப்பங்களை மாத்திரமே பதிந்தேன். அதில் அடையாள அரசியல் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை! தனித்துவமாக இருக்கும் ஒவ்வொருவரும் அடையாளங்களைப் பூணுவது ஏதோ ஒரு வகையில் பிற அடையாளங்களில் இருந்து வேறுபடுத்தவும், அடையாளங்களின் அடைப்படையில் ஒன்றிணையவும்தான். அடையாளங்களை மதித்து ஒன்றிணைந்து சமூகங்கள் வாழுகின்றன. ஆனால் அதே சமூகங்கள் பிரச்சினைகள் என்று வரும்போது இலகுவாக அடையாளங்களின் அடைப்படையில் பிரிந்து முரண்படுகின்றன. இப்படியான அடையாளச் சிக்கலில்தான் இருக்கின்றோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்?

11 hours 48 minutes ago
இந்த மூவருக்குமே தற்போது மக்களின் ஆதரவில் ஐயப்பாடு உள்ளது. ஆகவேதான் இந்த ஆதரவுநிலையை வெளிப்படுத்தி வாக்குகளைச் சேகரிக்க முனைகிறார்கள். இவர்களில் யார் சனாதிபதியாக வந்தாலும் நிறைவேற்று அதிகார சனாதிபதி ஆட்சிமுறையைக் கைவிடமாட்டார்கள், அதனை ஒழிக்கவும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கேட்டால் அதனை ராசதந்திரம் என்பார்கள், எங்கள் தமிழ் தலைவர்கள் சிலரும் பாராட்டுவார்கள். முன்பு தமிழர்களை ஒடுக்க யெயவர்த்தனா எடுத்த முயற்சியை, ஒரு தமிழ்த் தலைவர் சிறந்த ராசதந்திரம் என்று பாராட்டியதாக வந்த செய்தியைப் படித்த ஞாபகம் உண்டு.

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன்

12 hours ago
வாழ்த்துக்கள் சகோதரி, நீங்கள் மென்மேலும் புகழ் பெற வேண்டும்.......! 🌺

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!

12 hours 8 minutes ago
அவசரப்படாமல் நிதானமாக வாசிக்க வேண்டிய கதை. ஒரு குடும்பத்தின் நான்கு பிள்ளைகள் நான்குவிதமான துறவைக் கைக் கொள்கின்றனர். உலகில் எவ்வளவோ போலிகள் உலவுகிறார்கள், அவர்களை சரி பிழை என்று நாம் சண்டை பிடிப்பது அறிவீனம். இந்த உலகில் அதையும் தாண்டிய ஒரு பக்கம் உண்டு. அது மிக சூட்ச்சுமமாகவும் பரிசுத்தமாகவும் இயங்கிக் கொண்டிருக்கு என்பதை புரிந்து கொண்டால் போதும்.....! 🌺