Aggregator

ஊர் போய் வந்தவனின் படம் காட்டல்கள் (யாழுக்கு)

8 hours 31 minutes ago
நல்ல விடயம். எங்கள் ஒளிப்படமும் விளக்கமும்.. இவ்வளவு தூரத்துக்கு இந்த விடயத்தில் உங்களிடம் அக்கறை வரவைத்தமைக்கு நன்றி. தெளிவான அண்மை படத்துக்கு நன்றி. மேலும் கேள்விக்குறி.. சேய்மை படத்தில் கடைக்கருத்துக்கள்.. முழுவதுக்குமே..! அதை எழுதியது நாம்.. அந்த வகையில் எமக்கு தான் அதுக்கு விளக்கம் அளிக்க முடியும். 😊

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா

9 hours 4 minutes ago
ஓகோ அப்படியானால் இவ்வளவு அழிவுக்கும் அந்த பயல் தான் காரணமா? அந்த விதியை எழுதிய கடவுளைத் திட்டாமல் ஆளாளுக்கு அவன் எழுதிய விதிப்படி செயற்பட்ட மனிதர்களை இங்கு எல்லோரும் திட்டித்தீர்கிறீர்களே!! ஏன்?

காங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை

9 hours 17 minutes ago
இலங்கையில் ரணில் வெறும் பிரதமர் மட்டுந்தான் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார். இந்தத்திட்டங்களால் பயன்படப்போவது உள்ளுர் மக்களா அல்லது இந்தியாவா சிறிலங்காவா? முதலில் தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு அமைய அவர்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும். தமிழ் பிரதேசங்களிலிருந்து இராணுவம் திரும்பப் பெறப்பட்டு காடையர் வாள்வெட்டுக்குழு என்பன அடக்கப்படவே ண்டும். இவை நடைமுறைப்படுத்தப்படாவிடின் எந்தத்திட்டங்களும் தமிழருக்கு உதவாத திட்டங்கள்தான். எமது மக்கள் பாதுகாப்பான வாழ்க்கை வாழ ஆவன செய்துகொடுக்கப்படவேண்டும். ரணில் சொல்வது வெறும் திட்டங்கள் மட்டுந்தானா அல்லது திரைமறைவில் போடப்படும் சதிவலையா? மகிந்த ரணிலின் அரசைக் கவிழ்க்க சதிப்புரட்சி செய்தபோது பரிதாபகரமாக அலரிமாளிகையில் ஒழிந்திருந்த ரணில் தமிழ் பிரதேசங்களில் புதிய திட்டங்கள் பற்றி பேச புறப்பட்டிருக்கிறார். இவை நாடாளுமன்ற தேர்தல் ஒன்று வரப்போவதை கட்டியங்கூறுகிறது. இந்தியா இதுவரை சிறிய படகில் தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்த போதைப்பொருட்கள் இனிமேல் பொதுமக்களின் பாவனைக்கென்று விடப்படும் பெரியகப்பல்களில் கொள்கலன்களில் ஏற்றப்பட்டு இலங்கை இந்திய அரசுகளின் முழு ஆசீர்வாதத்துடன் அனுப்பிவைக்கப்படும். அவற்றை முஸ்லிம் அரசியல்வாதிகளும் இராணுவ காடையர்ககளும் தமிழ் பிரதேசங்களில் விற்று எமது இளைய சமுதாயத்தைச் சீரழிப்பார்கள். ஆமாம் வடக்கில் எல்லா இடத்திலும் தென்னையை பயிரிடுங்கள் அதைவைத்து தமிழ் சமுதாயம் தலைமுறை தலைமுறையாக தேங்காயில் நார் புடுங்கி வாழ்ந்துகொண்டிருப்பார்கள். தமிழர் பிரதேசங்களில் நடாத்தப்படும் திட்டமிட்ட நில அபகரிப்புக்கு ரணில் புதிய வழியொன்றைச்சொல்கிறார். பாரிய தோட்ட நிறுவனங்களில் வகைதொகையின்றி சிங்களைவர்கள் வேலைக்கமர்த்தப்படுவார்கள். எமது தமிழ் அரசியல் வாதிகளுக்கோ சிங்கள அரசின் கபடத்தனமான நிகழ்ச்சிநிரலுக்கெதிராக ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போட திராணியில்லை.

அறிவித்தல்: யாழ் இணையம் 21 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

9 hours 40 minutes ago
வணக்கம், யாழ் கள உறுப்பினர்கள் பலரும் சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிப்பதற்கு மிக்க நன்றிகள். இதுவரை " யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. கடவுள் படைக்காத மனிதர்கள்! திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......! அடையாளம் "கிளப் 72" மலேரியா போய் கஞ்சா வந்தது! உன் தோள் சாய ஆசைதான்.... ஊர் போய் வந்தவனின் படம் காட்டல்கள் (யாழுக்கு) தமிழ்ப் படம் பார்ப்பது எப்படி?! 🎬🎥🎞️📺📀 இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்! 89 இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். மேலும் பல சுய ஆக்கங்களை இணைத்து அகவை 21 ஐ சிறப்பிக்குமாறு கள உறுப்பினர்களை வேண்டுகின்றோம். நன்றி

ராஜஸ்தானிலிருந்து, பாகிஸ்தானியர்கள்... வெளியேற 48 மணி நேர காலக்கெடு

9 hours 52 minutes ago
ராஜஸ்தானிலிருந்து, பாகிஸ்தானியர்கள்... வெளியேற 48 மணி நேர காலக்கெடு ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என குறித்த மாவட்ட ஆட்சியர் குமார் பால் கௌதம் உத்தரவு பிறப்பித்துள்ளார். புல்வாமாவில் கடந்த வாரம் பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலைத் தாக்குதலையடுத்தே இந்த அதிரடியான உத்தரவை அவர் பிறப்பித்தார். அந்தவகையில், பிகானர் மாவட்டத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் என அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2 மாதங்கள் வரை செல்லுபடியாகும். மேலும் பாகிஸ்தான் சிம் அட்டைகளைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ராஜஸ்தானிலிருந்து-பாகிஸ/

நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை

9 hours 56 minutes ago
நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை இலங்கையின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை நிள அளவீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான புதிய வரைபடத்தை அறிமுகப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் ஜீ.எம்.ஜீ.உதயகாந்த தெரிவித்துள்ளார். கரையோரப் பகுதியிலுள்ள மாற்றங்கள் மற்றும் கொழும்பு நகரின் நகர நிர்மாணத்தினால், நிலப்பரப்பு அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/நாட்டின்-நிலப்பரப்பை-மீண/

நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை

9 hours 56 minutes ago
12-599x275-720x450.jpg நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை

இலங்கையின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை நிள அளவீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான புதிய வரைபடத்தை அறிமுகப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் ஜீ.எம்.ஜீ.உதயகாந்த தெரிவித்துள்ளார்.

கரையோரப் பகுதியிலுள்ள மாற்றங்கள் மற்றும் கொழும்பு நகரின் நகர நிர்மாணத்தினால், நிலப்பரப்பு அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/நாட்டின்-நிலப்பரப்பை-மீண/

இயந்திர வாள்களை, பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு

9 hours 58 minutes ago
இயந்திர வாள்களை, பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு நாட்டில் பாவனையில் உள்ள சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை நாளை (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளதோடு, இந்த பணிகள் இம்மாதம் 28ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைவாக, பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்க அரசு சார்பு தனியார்துறை நிறுவனங்கள் அல்லது தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தப்படும் சகல இயந்திரவாள்களும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, அதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://athavannews.com/இயந்திர-வாள்களை-பதிவு-செ/

இயந்திர வாள்களை, பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு

9 hours 58 minutes ago
CS-402L.1-720x450.jpg இயந்திர வாள்களை, பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு

நாட்டில் பாவனையில் உள்ள சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கை நாளை (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளதோடு, இந்த பணிகள் இம்மாதம் 28ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளன.

பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைவாக, பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக  அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்க அரசு சார்பு தனியார்துறை நிறுவனங்கள் அல்லது தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தப்படும் சகல இயந்திரவாள்களும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, அதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://athavannews.com/இயந்திர-வாள்களை-பதிவு-செ/

பலாலியில் இருந்து அவுஸ்ரேலியா, ஐரோப்பா வரை விமான சேவை

10 hours 3 minutes ago
தியாகி ,துரோகி எல்லாம் இதுக்குள் எதற்கு ஜீவா.....காவல் காக்க வேண்டிய பொலிஸார் அதை அந்த மார்க்கட்டை எரித்து நாசமாக்கியதை தான் சொன்னேன் ....அன்றே மத்திய அரசு தகுந்த நட‌வடிக்கை எடுத்திருந்தால் இன்று இவ்வளவு தூரம் இது போய் இருக்காது.. .அது சரி சிறந்த நூலகத்தை எரித்தவர்களுக்கு மார்க்கட் எரிப்பது பெரிய வேலையா என்ன? தேர்தல் காலத்தில் எவ்வளவு வாக்குறுதிகளையும் வழங்கலாம் ,ரணில் அடுத்த ஜனாதிபதியாக வந்தாலும் இது நடக்குமா என்பது சந்தேகம்.....ம‌கிந்தா வந்தால் நிச்சயம் இது நடக்காது(விமான நிலையம் ,காகேசந்துறை திட்டங்கள்)

உணவு செய்முறையை ரசிப்போம் !

11 hours 5 minutes ago
இது புட்டுக்கும் இடியாப்பத்துக்குமான செய்முறை..... இதில் கூறியுள்ளபடி வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாக விட்டு பொறுமையாய் பதத்துக்கு குழைத்தெடுக்க வேண்டும். சில மனைவிகள் பச்சை தண்ணியில் அல்லது சுடுதண்ணியில் குழைத்து விட்டு புருசனிடம் குடுப்பார்கள் புழியடா என்று, அதை அவன் எந்தத் தண்ணியில் நிண்டாலும் புழிய ஏலாது.அது ரெம்ப கொடுமை. புட்டு அவிக்கும்போது மறக்காமல் புட்டுக்குழலுக்குள் சில்லை போடவும். மறந்தால் பிறகு களிதான் சாப்பிட வேண்டும். 😁

இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்!

11 hours 44 minutes ago
கணிணியில் மட்டும் அல்ல, chart இல் எழுதி வைத்ததும் மறைந்து போனது, இடம் மாறியது... இதற்கு விஞ்ஞானம் ஏதேனும் விளக்கம் அளித்திருக்கிறதா, கூறுபவன் சற்று மன நல பாதிப்படைந்தவன் என்பதை தவிர்த்து...