Aggregator

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா

2 days 21 hours ago
தான் ஒன்றை நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது, நாம் அறிந்தது. இதுதான் நடக்கும், இப்படித்தான் நடக்கும், இப்படித்தான் நடக்கவும் வேண்டும் என்று மனிதன் ஒருபோதும், தீர்மானிக்க முடியாது. அப்படிக் கற்பனை செய்தாலும், நடைமுறைச் சாத்தியம் அற்றது. நமது கற்பனையிலும் வராததுதான், நம் வாழ்வில் எல்லாரும் சந்திக்கிறோம். எமது விதி - கடவுளின் விதி என்று பின்னாளில் உணர்ந்து, நாம் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகிறோம். 'மன்னிப்போம், மறப்போம்' என்பதை கடவுளின் விதியாக ஏற்று, தமிழினம் இயல்பான வாழ்க்கைக்கு பயணிப்பதுதான் சிறந்தது.

இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்!

2 days 21 hours ago
நின்ற இடத்தில் பறவை பறந்ததையும், கணணியில் போட்ட என்ட்ரிகள் அழிந்ததையும் தான் நினைத்தேன் நண்பா! அவை உங்கள் அனுபவங்கள், உங்களுக்கு உண்மையாகத் தெரிபவை ஆனால் மற்றவர்களுக்கு இடம் மாற்ற இயலாதவை! உங்கள் perception வித்தியாசமாக இருப்பதால் என் நேரடியான எழுத்தே சுத்தலாகத் தெரிகிறதோ என நினைத்தேன்!

யாழ் சாவகச்சேரியில் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு கிடைத்த தர்ம அடி

2 days 21 hours ago
ஆனால் இப்பவும் எனக்கு ரெக்கி என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியவேயில்லை., ஆமா எனக்கு 89 இல் என்ன நடந்தது.

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா

2 days 22 hours ago
இரு வருடங்களின் முன்னர் ஒருவர் எனது வீட்டு வாசல் கதவை தட்டினார். நான் உழைப்பவர்கள் 1000 ரூபாய் கூலி கேட்டால் அதற்குமேலேயும் கொடுப்பவன், ஆனால் ஒரு நாளும் பிச்சை போடுவதில்லை. ஆனாலும் அன்று கதவைத் திறந்து போனபோது 30 வயது மதிக்கக்கூடிய ஒருவர் பொய்க்காலுடன் + ஒரு கையுடன் நின்றார். தான் ஒரு முன்னைய போராளி என்று சொல்லி, தடைமுகாமில் இருந்து வந்தது முதல் சகல ஆதாரத்தையும் காட்டினார். நம்பிக்கை வரவில்லை - வெறும் 500 ரூபாய் கொடுத்து அனுப்பி விட்டேன். ஆனால் பின்னர் இதுவரை அவர் என் வீட்டு பக்கம் வரவேயில்லை. அவர் பொய்யாக வந்திருந்தால். மறுபடியும் வந்திருப்பார். இன்றும் மனதை வருடுகிறது. இவருக்கு ஒரு வேலை போட்டுக்கொடுத்திருக்கலாம் அல்லது வேறு ஏதாவது செய்திருக்கலாம் என்று. எமக்காக உயிரை மதிக்காது போராடப் போனவர்கள் பலரின் நிலை இதுதான் வெறுமனே விசைப்பலகையில் போராடாமல் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின், யுத்தக்குற்றங்கள் பற்றியும் விசாரணை அவசியம்

2 days 22 hours ago
புலிகளின் அட்டூழியங்களை, மேற்படி சகோதர இயக்கங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதைவிட, ஐ.நாவிடமே கேட்டுத் தெளிவு பெறலாம். அதனால்தான் என்னவோ, சர்வதேசமே போர்க்குற்றங்களை நீர்த்துப் போகச் செய்து, 'மன்னிப்போம் மறப்போம்' என்ற நிலைக்கு எல்லாத் தரப்பினரையும் பயணிக்கச் சொல்கிறது.

கூட்­ட­மைப்­புக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் ஆலோ­சனை!!

2 days 22 hours ago
தமிழ் மக்­க­ளின் இனப்­ப­டு­கொலை மற்­றும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­கள் சார்­பில் தீர்க்­க­மான முடி­வெ­டுத்து, அதனை இரா­ஜ­தந்­தி­ரி­க­ளு­டன் பேசி அடுத்த கட்ட நகர்­வு­களை முன்­னெ­டுக்க முடி­யும். தற்­போ­து­கூட காலம்­க­டந்து போக­வில்லை. தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் இந்த செயற்­பாட்டை முன்­னெ­டுக்க முடி­யும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் கட்­சி­யின் தலை­வர் சுரேஸ் பிரே­மச்­சந்­தி ­ரன் தெரி­வித்­தார். தமிழ் மக்­கள் மீதான இனப்­ப­டு­கொலை மற்­றும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பில் அரசு தெரி­விக்­கும் கருத்­துக்­கள் தொடர்­பில் அவ­ரது வீட்­டில் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் அவர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்­ட­தென்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மாத்­தி­ரமே உள்­ளது. ஆகவே, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன்­தான் பல்­வேறு இரா­ஜ­தந்­தி­ரி­க­ளும் பேச்சு நடத்­து­கின்­ற­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கருத்­துக்­க­ளையே இரா­ஜ­தந்­தி­ரி­க­ளும் கவ­னத்­தில் எடுக்­கின்­றார்­கள். புலம்­பெ­யர் அமைப்­புக்­கள், இலங்­கை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு அப்­பால் இருக்­கக்­கூ­டிய கட்­சி­களோ, முன்­னாள் முத­ல­மைச்­சர் தலை­மை­யி­லான கட்­சியோ, எங்­க­ளு­டைய கட்­சியோ, வேறு எந்­தக் கட்­சி­யா­க­வும் இருக்­க­லாம், இன்­னும் இரண்டு வரு­டங்­கள் அவ­கா­சத்­தைக் கொடுக்­கக்­கூ­டாது என்று தான் சொல்­கின்­றார்­கள். ஆனால், 2 வரு­டங்­கள் கால அவ­கா­சம் கொடுக்­கும் நிலை­தான் காணப்­ப­டு­கி­றது. இந்த அர­சைப் பாது­காக்க வேண்­டு­மென்றே பன்­னா­டு­க­ளும் இருக்­கின்­றன. மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­கள் ஏனை­யோ­ரை­யும் ஒன்­றி­ணைத்து, தெளி­வான முடி­வெ­டுத்து, அந்த முடிவை இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்கு அறி­வித்­தால், அந்த இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்கு மாற்று வழி இல்­லா­மல் போகும். ஆனால், அதனை இவர்­கள் செய்­ய­வில்லை. தற்­போது, இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்கு இரண்டு மாற்று வழி­கள் உள்­ளன. ஒன்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்பு சொல்­கின்ற விட­யம் மற்­றை­யது ஏனை­யோர் சொல்­கின்ற விட­யம். ஆகவே, மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏனை­யோ­ரை­யும் இணைத்து ஒரு கலந்­து­ரை­யா­டலை ஏற்­பாடு செய்து, அந்த கலந்­து­ரை­யா­ட­லில் ஒரு தீர்­மா­னத்தை எடுத்து, இத­னைத்­தான் தமிழ் மக்­கள் எதிர்­பார்க்­கின்­றார்­கள் என்று கன­டா­வுக்­கும் பிரிட்­ட­னுக்­கும் ஏனைய நாடு­க­ளுக்­கும் தெரி­வித்து, இதனை எவ்­வாறு கொண்டு செல்­வ­தென்ற விட­யங்­க­ளைச் செய்­தி­ருந்­தால், இரா­ஜ­தந்­தி­ரி­கள் மட்­டத்­தில் வேறு சிந்­த­னை­கள் வந்­தி­ருக்­கும். தற்­போ­து­கூட காலம்­க­டந்து போக­வில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அத­னைச் செய்ய முடி­யும். இரா.சம்­பந்­தன் அத­னைச் செய்ய முடி­யும். அவ்­வாறு செய்­தால், ஒரு படி முன்­னோக்­கிச் செல்­வ­தற்­கான வழி பிறக்­கும் என்று நம்­பு­கின்­றேன் – – என்­றார். https://newuthayan.com/story/16/கூட்­ட­மைப்­புக்கு-ஈ-பி-ஆர்-எல்-எப்-ஆலோ­சனை.html

கூட்­ட­மைப்­புக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் ஆலோ­சனை!!

2 days 22 hours ago

தமிழ் மக்­க­ளின் இனப்­ப­டு­கொலை மற்­றும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­கள் சார்­பில் தீர்க்­க­மான முடி­வெ­டுத்து, அதனை இரா­ஜ­தந்­தி­ரி­க­ளு­டன் பேசி அடுத்த கட்ட நகர்­வு­களை முன்­னெ­டுக்க முடி­யும். தற்­போ­து­கூட காலம்­க­டந்து போக­வில்லை. தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் இந்த செயற்­பாட்டை முன்­னெ­டுக்க முடி­யும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் கட்­சி­யின் தலை­வர் சுரேஸ் பிரே­மச்­சந்­தி ­ரன் தெரி­வித்­தார்.

தமிழ் மக்­கள் மீதான இனப்­ப­டு­கொலை மற்­றும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பில் அரசு தெரி­விக்­கும் கருத்­துக்­கள் தொடர்­பில் அவ­ரது வீட்­டில் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் அவர் இத­னைத் தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்­ட­தென்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மாத்­தி­ரமே உள்­ளது. ஆகவே, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன்­தான் பல்­வேறு இரா­ஜ­தந்­தி­ரி­க­ளும் பேச்சு நடத்­து­கின்­ற­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கருத்­துக்­க­ளையே இரா­ஜ­தந்­தி­ரி­க­ளும் கவ­னத்­தில் எடுக்­கின்­றார்­கள்.
புலம்­பெ­யர் அமைப்­புக்­கள், இலங்­கை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு அப்­பால் இருக்­கக்­கூ­டிய கட்­சி­களோ, முன்­னாள் முத­ல­மைச்­சர் தலை­மை­யி­லான கட்­சியோ, எங்­க­ளு­டைய கட்­சியோ, வேறு எந்­தக் கட்­சி­யா­க­வும் இருக்­க­லாம், இன்­னும் இரண்டு வரு­டங்­கள் அவ­கா­சத்­தைக் கொடுக்­கக்­கூ­டாது என்று தான் சொல்­கின்­றார்­கள். ஆனால், 2 வரு­டங்­கள் கால அவ­கா­சம் கொடுக்­கும் நிலை­தான் காணப்­ப­டு­கி­றது.

இந்த அர­சைப் பாது­காக்க வேண்­டு­மென்றே பன்­னா­டு­க­ளும் இருக்­கின்­றன. மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­கள் ஏனை­யோ­ரை­யும் ஒன்­றி­ணைத்து, தெளி­வான முடி­வெ­டுத்து, அந்த முடிவை இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்கு அறி­வித்­தால், அந்த இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்கு மாற்று வழி இல்­லா­மல் போகும்.

ஆனால், அதனை இவர்­கள் செய்­ய­வில்லை. தற்­போது, இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்கு இரண்டு மாற்று வழி­கள் உள்­ளன. ஒன்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்பு சொல்­கின்ற விட­யம் மற்­றை­யது ஏனை­யோர் சொல்­கின்ற விட­யம்.
ஆகவே, மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏனை­யோ­ரை­யும் இணைத்து ஒரு கலந்­து­ரை­யா­டலை ஏற்­பாடு செய்து, அந்த கலந்­து­ரை­யா­ட­லில் ஒரு தீர்­மா­னத்தை எடுத்து, இத­னைத்­தான் தமிழ் மக்­கள் எதிர்­பார்க்­கின்­றார்­கள் என்று கன­டா­வுக்­கும் பிரிட்­ட­னுக்­கும் ஏனைய நாடு­க­ளுக்­கும் தெரி­வித்து, இதனை எவ்­வாறு கொண்டு செல்­வ­தென்ற விட­யங்­க­ளைச் செய்­தி­ருந்­தால், இரா­ஜ­தந்­தி­ரி­கள் மட்­டத்­தில் வேறு சிந்­த­னை­கள் வந்­தி­ருக்­கும்.

தற்­போ­து­கூட காலம்­க­டந்து போக­வில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அத­னைச் செய்ய முடி­யும். இரா.சம்­பந்­தன் அத­னைச் செய்ய முடி­யும். அவ்­வாறு செய்­தால், ஒரு படி முன்­னோக்­கிச் செல்­வ­தற்­கான வழி பிறக்­கும் என்று நம்­பு­கின்­றேன் – – என்­றார்.

https://newuthayan.com/story/16/கூட்­ட­மைப்­புக்கு-ஈ-பி-ஆர்-எல்-எப்-ஆலோ­சனை.html

இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்க ரணில் பணிப்பு- சி.சிவமோகன் எம்.பி.!!

2 days 22 hours ago
தொடர்ந்­தும் படை­யி­னர் நிலை­கொண்­டுள்ள புதுக்­கு­டி­யி­ருப்பு பொன்­னம்­ ப­லம் மருத்­துவ மனைக் காணி தொடர்­பில் ஆராய்ந்து அதனை விடுவிக்­கு­மாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது செய­ல­ரைப் பணித்­துள்­ளார் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மருத்­து­வர் சி.சிவ­மோ­கன் தெரி­வித்­தார். புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச செய­ல­கத்­துக்கு அண்­மித்த மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி காணி­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் 2017ஆம் ஆண்டு மாசி மாதம் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அந்­தக் காணி­கள் விடு­விக்­கப்­ப­டா­த­தால் மக்­கள் தொடர்ந்­தும் போரா­டும் நிலை ஏற்­பட்­டது. உணவு ஒறுப்பு, பிர­தேச செய­ல­கம் முற்­றுகை என்று பல வழி­க­ளி­லும் மக்­கள் போரா­டி­யி­ருந்­த­னர். காணி­களை விடு­விப்­ப­தற்கு கால அவ­கா­சம் கோரப்­பட்­டது. நீண்ட காலத்­தின் பின்­னர் அந்­தக் காணி­க­ளில் ஒரு தொகு­திக் காணி­களை படை­யி­னர் விடு­வித்­த­னர். மிகு­திக் காணி­க­ளை­யும் விடு­விக்­கு­மாறு மக்­கள் கோரி ­னர். போராட்­டம் தொடர்ந்­தது. அந்­தக் காணி­க­ளை­யும் விடு­விப்­ப­தாக காணி­க­ளில் நிலை கொண்­டி­ருந்த 62 ஆவது படைப்­பி­ரி­வின் இரண்­டா­வது படை அதி­காரி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­க­னுக்கு கடி­தம் ஒன்றை வழங்­கி­ருந்­தார். ஆனால் இரண்டு ஆண்­டு­கள் ஆகி­யும் வழக்­கம்­போல் காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­ வில்லை. படை­யி­னர் தொடர்ந்­தும் அங்கு நிலை­கொண்­டுள்­ளார்­கள். அந்­தக் காணி­களை விடு­விக்­குமாறு கோரி மக்­கள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரி­டம் பல­முறை கேட்­டி­ருந்­த­னர். அதன் படி கடந்த சனிக்­கி­ழமை முல்­லைத்­தீ­வுக்கு சென்­றி­ருந்த தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ரம­சிங்­க­வி­டம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் குறித்த விட­யம் தொடர்­பில் தெரி­வித்­தார். காணி­களை விடு­விப்­ப­தாக படை அதி­காரி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு வழங்­கிய கடி­தத்­தை­யும் அவர் ரணி­லி­டம் வழங்­கி­யி­ருந்­தார். இது தொடர்­ட­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரி­டம் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது காணி­களை விடு­விப்­ப­தாக படைத் தரப்­பின் அதி­கா­ரி­யால் வழங்­கப்­பட்ட கடி­தத்தை தலைமை அமைச் ச­ரி­டம் கொடுத்­தேன். காணி விடு­விப்­புத் தொடர்­பில் பேசி­னேன். அவர் கடி­தத்­தைப் பெற்­றுக் கொண்டு தனது செய­ல­ரி­டம் கொடுத்­தார். அந்­தப் பிரச்­சினை தொடர்­பில் ஆராய்ந்து காணி ­களை விடு­விக்­கு­மாறு அவர் பணித்­தி­ருந்­தார் என்று அவர் உத­ய­னுக்­குத் தெரி­வித்­தார். https://newuthayan.com/story/16/இராணுவம்-வசமுள்ள-காணிகளை-விடுவிக்க-ரணில்-பணிப்பு-சி-சிவமோகன்-எம்-பி.html

இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்க ரணில் பணிப்பு- சி.சிவமோகன் எம்.பி.!!

2 days 22 hours ago
தொடர்ந்­தும் படை­யி­னர் நிலை­கொண்­டுள்ள புதுக்­கு­டி­யி­ருப்பு  பொன்­னம்­ ப­லம் மருத்­துவ மனைக் காணி தொடர்­பில் ஆராய்ந்து அதனை விடுவிக்­கு­மாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது செய­ல­ரைப் பணித்­துள்­ளார் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மருத்­து­வர் சி.சிவ­மோ­கன் தெரி­வித்­தார்.

 

புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச செய­ல­கத்­துக்கு அண்­மித்த மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி காணி­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் 2017ஆம் ஆண்டு மாசி மாதம் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.
அந்­தக் காணி­கள் விடு­விக்­கப்­ப­டா­த­தால் மக்­கள் தொடர்ந்­தும் போரா­டும் நிலை ஏற்­பட்­டது. உணவு ஒறுப்பு, பிர­தேச செய­ல­கம் முற்­றுகை என்று பல வழி­க­ளி­லும் மக்­கள் போரா­டி­யி­ருந்­த­னர். காணி­களை விடு­விப்­ப­தற்கு கால அவ­கா­சம் கோரப்­பட்­டது.

நீண்ட காலத்­தின் பின்­னர் அந்­தக் காணி­க­ளில் ஒரு தொகு­திக் காணி­களை படை­யி­னர் விடு­வித்­த­னர். மிகு­திக் காணி­க­ளை­யும் விடு­விக்­கு­மாறு மக்­கள் கோரி ­னர்.

போராட்­டம் தொடர்ந்­தது. அந்­தக் காணி­க­ளை­யும் விடு­விப்­ப­தாக காணி­க­ளில் நிலை கொண்­டி­ருந்த 62 ஆவது படைப்­பி­ரி­வின் இரண்­டா­வது படை அதி­காரி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­க­னுக்கு கடி­தம் ஒன்றை வழங்­கி­ருந்­தார்.

ஆனால் இரண்டு ஆண்­டு­கள் ஆகி­யும் வழக்­கம்­போல் காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­ வில்லை. படை­யி­னர் தொடர்ந்­தும் அங்கு நிலை­கொண்­டுள்­ளார்­கள். அந்­தக் காணி­களை விடு­விக்­குமாறு கோரி மக்­கள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரி­டம் பல­முறை கேட்­டி­ருந்­த­னர்.

அதன் படி கடந்த சனிக்­கி­ழமை முல்­லைத்­தீ­வுக்கு சென்­றி­ருந்த தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ரம­சிங்­க­வி­டம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் குறித்த விட­யம் தொடர்­பில் தெரி­வித்­தார். காணி­களை விடு­விப்­ப­தாக படை அதி­காரி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு வழங்­கிய கடி­தத்­தை­யும் அவர் ரணி­லி­டம் வழங்­கி­யி­ருந்­தார்.

இது தொடர்­ட­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரி­டம் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது காணி­களை விடு­விப்­ப­தாக படைத் தரப்­பின் அதி­கா­ரி­யால் வழங்­கப்­பட்ட கடி­தத்தை தலைமை அமைச் ச­ரி­டம் கொடுத்­தேன்.

காணி விடு­விப்­புத் தொடர்­பில் பேசி­னேன். அவர் கடி­தத்­தைப் பெற்­றுக் கொண்டு தனது செய­ல­ரி­டம் கொடுத்­தார். அந்­தப் பிரச்­சினை தொடர்­பில் ஆராய்ந்து காணி ­களை விடு­விக்­கு­மாறு அவர் பணித்­தி­ருந்­தார் என்று அவர் உத­ய­னுக்­குத் தெரி­வித்­தார்.

https://newuthayan.com/story/16/இராணுவம்-வசமுள்ள-காணிகளை-விடுவிக்க-ரணில்-பணிப்பு-சி-சிவமோகன்-எம்-பி.html

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!

2 days 22 hours ago
யாத்திரை ......(13). இன்று நல்லூர் கொடியேற்றம்.எனது மனைவியும் இந்தப் பயணத்தில் முருகனின் சில திருவிழாக்கள் என்றாலும் பார்த்தே தீருவது என்று பிடிவாதமாய் இருந்தாள்.ஏராளமான பக்தர்கள்,எப்படியோ கோவிலின் உள்ளே மிக அருகே சென்று அமர்ந்து கொண்டோம்.சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின் இந்த சந்தர்ப்பம் கூடி வருது. கண்கள் குணமாகி பார்வை மறைக்கிறது."முருகனுக்கு அரோகரா" எனும் சொல்லைத் தவிர்த்து வேறு எதுவும் என்னிடத்தில் இல்லை. பறவைகள் எவ்வளவு தூரம் பறந்தாலும் இளைப்பாற தான் பிறந்த மரத்துக்குத்தான் வந்து சேரும். வசந்த மண்டப பூசை முடித்து என் அருகாக அழகிய மயில் வாகனத்தில் முருகப் பெருமானும் பின்னால் வள்ளி தெய்வானையும் வந்து கொடிமரத்துக்கு பக்கத்தில் நிக்கிறார்கள். அர்ச்சகர்களின் வேத மந்திர ஒலியுடன் மேளதாளங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா என்னும் கோஷத்துடன் கொடி ஏறுகின்றது. கண்கள் குளிரத் தரிசித்து விட்டோம். இனி திருவிழா முடிந்து கொடி இறக்கும்போது ஊரில் நிக்க மாட்டோம் என நினைக்கையில் மனதில் சிறு சலனம். முருகா என்று நெஞ்சம் விம்ம உள்வீதி வலம் வந்து வெளியே வருகின்றோம். அடுத்தநாள் மனைவியும் மகனும் பாசையூர் அந்தோனியார் சர்ச்சுக்கு போய் விட்டு வருகிறார்கள். எனக்கு வேறு வேலைகள் இருந்ததால் போக முடியவில்லை. மகன் இரண்டு கிழமை விடுமுறையில் வந்ததால் அவரை வழியனுப்ப மீண்டும் கொழும்புக்கு வானில் வருகின்றோம். வரும் வழியில் வவுனியாவில் எனது மச்சாள் வீட்டிற்கு செல்கின்றோம்.(அவர் அங்கு ஒரு பாடசாலை அதிபராக கடமையாற்றுகின்றார்).அங்கு அக்கா தங்கை என்று பல உறவினர்கள் இருக்கின்றனர்.நான் அங்கு இருக்கும்போது எல்லோரும் ஒரே அயலுக்குள்தான் இருந்தோம். அப்போது எல்லோரும் சிறு பிள்ளைகள்.இப்ப அவர்களில் அநேகமானோர் வவுனியாவில் அங்கங்கே இருக்கின்றார்கள். நேரம் இரவாகி விட்டது.நானும் மோட்டுத்தனமாக அறிவிக்காமல் போய் இறங்கி விட்டேன். அவளுக்கு எதிர்பாராமல் என்னையும் தமக்கை மற்றும் மகனையும் பார்த்ததும் அளவற்ற சந்தோசம்.என் பிள்ளைகளை தூக்கி வளர்த்தவர்கள். அவள் கணவர் உடனே போன் எடுத்து எல்லோருக்கும் சொல்லுகின்றார்.அத்தான் அக்கா வந்திருக்கினம்.இரவாயிட்டுது எல்லா இடமும் வர ஏலாது நீங்கள் வாங்கோ என்று. அடுத்த ஒரு மணித்தியாலத்துக்குள் அவர்கள் அவர்களின் மருமக்கள் பேரன் பேத்திகள் என்று நாற்பது ஐம்பது பேர் வந்து இறங்குகின்றார்கள். ஒவ்வொருவர் கையிலும் அவர்கள் இரவு சாப்பாட்டுக்கு தயாராக வைத்திருந்த அத்தனை உணவுப்பதார்த்தங்களும் இருக்கின்றன. நான் என்ன புண்ணியம் செய்தேன் இவர்களை உறவாய் பெறுவதற்கு. இரவு ஒரு மணியளவில் விடை பெற்று புறப்பட்டோம் மேலும் கொழும்பிலும் பல உறவினர் வீடுகளுக்கு செல்ல வேண்டும். நாளை மறுநாள் அவருக்கு விமானம்.அதனால் இன்று காலை கொழும்பில் கொட்டகேனா அந்தோனியார் சர்ச்சுக்கு சென்றோம்.அங்கு உப்பும்,மிளகும் காணிக்கை வைத்து வணங்கினோம். பின்பு முன்னால் இருக்கும் வீரமாகாளி அம்மன்கோவிலுக்கும்,பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலுக்கும் சென்று அர்ச்சனைகள் செய்து வணங்கி விட்டு வந்தோம். பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலின் வெளியே சனீஸ்வரப் ப்ரிதிக்காகவும் தோஷ நிவர்த்திக்காகவும் ஒரு பெரிய காகத்தின் சிலை வைத்து அதைச்சுற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குகின்றனர்.நாங்களும் தீபமேற்றி வணங்கி விட்டு வருகின்றோம். வெளியே கடையில் தேனீர் வடைகள் சாப்பிட்டு விட்டு அருகில் இருக்கும் மணிக்கடைகளில் இவர்கள் ஞாபகார்த்தமாக சில பொருட்களை வாங்குகின்றனர். நான் கொஞ்சம் பெரிய மடுமாதா சுருவம் ஒன்று வாங்குகின்றேன். யாத்திரை தொடரும்.....! சம்பவம் : (1) 1988/89 ம் ஆண்டு என நினைக்கின்றேன்.அன்றும் நல்லூர் கொடியேற்றம். நான் எனது மகளுடன் தனியாக வந்து கொடிக்கம்பத்துக்கு அருகில் நிக்கிறேன்.அவளோ சிறுமி.எனது தோளில் இருக்கின்றாள்.கொடியேற்றம் முடிந்ததும் சனம் தள்ளு முள்ளுப்பட்டு நெருக்குகின்றது.ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் தாள முடியவில்லை.அவளை அந்த கம்பிக்கு உள்ளே இறக்கி விட்டு விட்டேன்.அது சிரித்துக் கொண்டு நிக்குது.அபாயம் புரியாமல், நான் தாக்குப்பிடித்து சனம் குறைத்ததும் தூக்கிக் கொண்டுவந்து விட்டேன். இன்று நினைக்கையிலும் வேர்க்கிறது.....! சம்பவம் : (2) பிரான்சில் நான் இருக்கும் இடத்துக்கு அருகே ஒரு மலையில் ஒரு மாதா கோவில் உண்டு.கதிரை மாதா என்று சொல்லுவோம்.பாலகன் ஜேசுவை மடியில் வைத்துக் கொண்டு கதிரையில் அமர்ந்திருப்பார். அங்கு ஒரு கண்ணாடி அறையில் பல இடங்களில் இருக்கும் பிரசித்தமான மாதா,அந்தோனியார்,ஜோசெப்,மைக்கல் சம்மனசு மற்றும் புனிதர்களின் சுருவங்கள் இருக்கின்றன.அவற்றை பார்க்கும் போது நினைப்பதுண்டு நான் நாட்டுக்கு போனால் மடுமாதாவின் சுருவம் ஒன்று வாங்கி வந்து அவர்களின் அனுமதி பெற்று அங்கே வைக்க வேண்டும் என்று. நாங்கள் ஒவ்வொரு செவ்வாயும் தவறாமல் அங்கு போய் வருவது வழக்கம். இப்போதும் அங்கு சென்று வந்துதான் எழுதுகின்றேன். அங்கே அந்த மடுமாதா ஜம் என்று விற்றிருக்கின்றா. நான் மடு பக்கத்தில் சுமார் ஒரு வருடம் காட்டிலாகா வேலைகள் செய்திருக்கின்றேன்.தினமும் மடுக்கோவிலில்தான் குளிக்கிறதும் குடிப்பதற்கு தண்ணீரும் ட்ராக்ட்டரில் எடுத்து கொண்டு வாடிக்கு போவது வழக்கம்.அதனால் அவவின் மீது மிகுந்த அன்பு உண்டு.

யாழ் சாவகச்சேரியில் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு கிடைத்த தர்ம அடி

2 days 22 hours ago
திருட்டில் ஈடுபட்டவரை பேஸ்புக்கின் உதவியுடன் மடக்கி பிடிப்பு முகநூலின் உதவியுடன், உணவகத்தில் திருடியவர் தொடர்பான விபரங்களைப் பதிவு செய்யப்பட்டு, மக்களின் உதவியுடன் திருடனைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் உணவக உரிமையாளர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அருகில் உள்ள உணவகமொன்றில் கடந்த ஜனவரி எட்டாம் திகதி இரவு ஓடு பிரித்து உள்நுழைந்த திருடன் முதலில் கடையில் பொருத்தப்பட்டிருந்த கமராக்கள் செய்றபாடுகளை நிறுத்தி விட்டு உணவகத்தினுள் இறங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த 7 இலட்சம் ரூபா பணத்தையும் 3 இலட்சம் ரூபா பெறுமதியான அலைபேசி,மீள்நிரப்பு அட்டைகளையும் திருடிச் சென்றுள்ளார். சாவகச்சேரி பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கடையின் உரிமையாளர் கடைக்குள் செயலிழக்காமல் இருந்த கமராவின் உதவியுடன் அதற்கு முதல்நாள்களில் கடைக்கு வந்திருந்தவர்கள் தொடர்பாக பார்வையிட்டார். முதல் நாளில் அங்கு உணவருந்த வந்தவரும் திருட்டின் போது செயற்பட்ட கமராவில் பதிவில் காணப்பட்ட நபரும் ஒரே மாதிரியாக இருந்ததால் முகநூலில் பதிவு செய்து அங்கு காணப்படுபவர் தொடர்பான விபரங்களை தமக்குத் தெரியப்படுத்துமாறும் இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தப் பதிவினைப் பார்வையிட்ட உடையார்கட்டைச் சேர்ந்த ஒருவர் கடை உரிமையாளருக்கு அறிவித்துள்ளார். உரிமையாளர் சிலருடன் அங்கு சென்றார். இவர்களைக் கண்டதும் குறித்த நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சிக்கவே பொதுமக்களின் உதவியுடன் பிடித்தனர். வாகனத்தில் கொண்டு வந்த நபரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். http://www.virakesari.lk/article/50292

யாழ்ப்பாணம் - சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

2 days 22 hours ago
பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இடத்தில் சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் தடுத்துவைத்திருந்தார் என்று அவரது தாயாரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தினர். அத்துடன் இளைஞனைக் கைது செய்தனர். 13 வயது நிரம்பிய சிறுமியை சட்டபூர்வ பாதுகாவலரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி முன்னிலையாகி சந்தேக நபரை பிணையில் விடுவிக்கவேண்டும்" என்று சந்தேகநபரின் சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார். இருதரப்பு இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான் , சிறுமியை இளைஞன் வன்புணர்வுக்குட்படுத்தினார் என்றே பொலிஸார் குற்றச்சாட்டுப் பதிவிட்டுள்ளனர். எனவே அவரை பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை வழங்க முடியாது.என்று கட்டளையிட்டதுடன், சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். http://www.virakesari.lk/article/50293

யாழ்ப்பாணம் - சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

2 days 22 hours ago

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.rape_arrest.jpg

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இடத்தில் சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் தடுத்துவைத்திருந்தார் என்று அவரது தாயாரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தினர். அத்துடன் இளைஞனைக் கைது செய்தனர்.

13 வயது நிரம்பிய சிறுமியை சட்டபூர்வ பாதுகாவலரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி முன்னிலையாகி சந்தேக நபரை பிணையில் விடுவிக்கவேண்டும்" என்று சந்தேகநபரின் சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

இருதரப்பு இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான் , சிறுமியை இளைஞன் வன்புணர்வுக்குட்படுத்தினார் என்றே பொலிஸார் குற்றச்சாட்டுப் பதிவிட்டுள்ளனர். எனவே அவரை பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை வழங்க முடியாது.என்று கட்டளையிட்டதுடன், சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

http://www.virakesari.lk/article/50293

பாரதிய ஜனதாவுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும் ரஜினிகாந்தின் தீர்மானம்

2 days 22 hours ago

"நான் எப்போது வருவேன், எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது.ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடுவேன்.1995 ஆம் ஆண்டு மாபெரும் வசூல் சாதனை படைத்த முத்து திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரம் பேசிய பிரபல்யமான வசனம் இது.

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அவரின் அரசியல் வருகைக்காக  மேலும் காத்திருக்கவேண்டியிருக்கிறது போலத்தெரிகிறது.இன்னும் இரு மாதங்களில் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருக்க ரஜினிகாந்த் இப்போது தீர்மானித்திருக்கிறார்.சரியான நேரம் இன்னமும் வரவில்லை எனாறு அவர் நம்புதகிறார் போலும்.லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் அவர் பிரகடனம் செய்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டாரை  நீண்டகாலமாக அவதானித்துவருபவர்களுக்கு அவரது அறிவிப்பு ஒன்றும் ஆச்சரியத்தை தரவில்லை. கொலிவூட்டில் தனது சகநடிகரான கமல்ஹாசனைப் போலன்றி ரஜினிகாந்த் எப்போதுமே  மதில்மேல் இருந்தவந்திருக்கிறார்.அரசியலுக்கு வருகை குறித்து திட்டவட்டமான -தெளிவான அறிவிப்பை ஒருபோதும் செய்வதில்லை. எதிர்வரும் லோக்சபா தேர்தல்களில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலுமாக 40 தொகுதிகளிலும் தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களைக் களமிறக்கப்போவதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் இதுவரை காலத்தில் தனது அரசியல் அபிப்பிராயத்தை வெளிப்படையாகக் கூறினார் என்றால் அது  1996 ஆம் ஆண்டில்தான். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவாரேயானால், தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று அவர் அப்போது கூறினார்.அடுத்து வந்த தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்ட படுதோல்விகளுக்கெல்லாம் ரஜினிகாந்தின் அந்தக் கூற்றும் முக்கியமான ஒரு காரணம் என்றும் பெருமை பேசப்பட்டது.

அதற்குப் பிறகு, தேர்தல்களுக்கு முன்னதாக அவர் எப்போதும் மறைபுதிரான அறிக்கைகளை மாத்திரம் விடுத்துவந்தார்.தற்போது அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு திராவிட மண்ணில் தன்னை நிலைநிறுத்துவதற்குப் பெரும்பாடுபடும் பாரதிய ஜனதாவுக்கு பலத்த ஏமாற்றமாகப் போய்விட்டது.  

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் செல்வாக்குமிக்க தலைவர் ஒருவர் இல்லாதிருக்கும் அண்ணா தி.மு.க. ஜனரஞ்சகமான தலைவர் ஒருவரை அரவணைப்பதைச் சாத்தியமாக்குவதற்கு பாரதிய ஜனதா திரைக்குப் பான்னால் இருந்து முயற்சிகளை மேற்கொண்டுவந்தது என்பது ஒன்றும் இரகசியமல்ல.பாரதிய ஜனதா இன்னமும் முறைப்படியாக அண்ணா தி.ம.க.வுடன் கூட்டணியொன்றை அமைத்துக்கொள்ளவில்லை என்கிற அதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகம் -- காங்கிரஸ் கட்சி -- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இடதுசாரிக்கட்சிகளுடன் சேர்ந்து பாரதிய ஜனதாவுக்கு பெரும் சவாலைத் தோற்றுவிக்கும் சாத்தியம் இருக்கிறது.

இந்திமொழி பேசும் மாநிலங்களில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட தேர்தல் இழப்புக்களை தென்மாநிலங்களில் செல்வாக்கை அதிகரிப்பதன் மூலம் ஈடுசெய்வதற்கு பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்கிறது.2014 லோக்சபா தேர்தல்களில் தென்மாநிலங்களில் உள்ள 132 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மாத்திரமே பாரதிய ஜனதா வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. இப்போது ரஜினிகாந்தின் அறிவிப்பு எற்படுத்தியிருக்கும் தடுமாற்றத்தையடுத்து காப்டன் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தையும்  வலுவான வன்னியர் ஆதரவுத்தளத்தைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியையும் சேர்த்துக்கொண்டு கூட்டணியொன்றை அமைப்பதில் பாரதிய ஜனதா இறங்கியிருக்கிறது. விஜயகாந்தின் கட்சி கூட்டணியை அமைக்க அக்கறையாக இருக்கின்ற அதேவேளை, டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான பேரம் பேசலில் ஈடுபட்டிருக்கிறது.

தனக்கேயுரித்தான பாணியில் ரஜினிகாந்த் லோக்சபா தேர்தல்களில் இருந்து விலகியிருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.ஆனால், தமிழ்நாடு மாநிலத்தின் ஆற்றுநீர்ப் பிரச்சினையை தீர்த்துவைக்கக்கூடிய ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களை அவர் கேட்டிருக்கிறார். பாரதிய ஜனதாவின் அனுதாபிகளுக்கு அது போதுமானதாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம்தான் கோதாவரி ஆற்றையும் காவிரி ஆற்றையும் இணைப்பது குறித்த யோசனையை முன்வைத்தது என்று சுட்டிக்காட்டுகின்ற அளவுக்கு அவர்கள் கீழிறங்கியிருக்கிறார்கள்.

 ரஜனிகாந்தின் இன்னொரு திரைப்படமான கோச்சடையானில் அவரின் பாத்திரம் பேசுகின்ற இன்னொரு பிரபல்யமான வசனத்தை பாரதிய ஜனதாவுக்கு நினைவூட்டலாம் ; " வாய்ப்புகள் அமையாது, நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்."

http://www.virakesari.lk/article/50300

பாரதிய ஜனதாவுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும் ரஜினிகாந்தின் தீர்மானம்

2 days 22 hours ago
"நான் எப்போது வருவேன், எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது.ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடுவேன்.1995 ஆம் ஆண்டு மாபெரும் வசூல் சாதனை படைத்த முத்து திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரம் பேசிய பிரபல்யமான வசனம் இது. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அவரின் அரசியல் வருகைக்காக மேலும் காத்திருக்கவேண்டியிருக்கிறது போலத்தெரிகிறது.இன்னும் இரு மாதங்களில் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருக்க ரஜினிகாந்த் இப்போது தீர்மானித்திருக்கிறார்.சரியான நேரம் இன்னமும் வரவில்லை எனாறு அவர் நம்புதகிறார் போலும்.லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் அவர் பிரகடனம் செய்திருக்கிறார். சூப்பர் ஸ்டாரை நீண்டகாலமாக அவதானித்துவருபவர்களுக்கு அவரது அறிவிப்பு ஒன்றும் ஆச்சரியத்தை தரவில்லை. கொலிவூட்டில் தனது சகநடிகரான கமல்ஹாசனைப் போலன்றி ரஜினிகாந்த் எப்போதுமே மதில்மேல் இருந்தவந்திருக்கிறார்.அரசியலுக்கு வருகை குறித்து திட்டவட்டமான -தெளிவான அறிவிப்பை ஒருபோதும் செய்வதில்லை. எதிர்வரும் லோக்சபா தேர்தல்களில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலுமாக 40 தொகுதிகளிலும் தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களைக் களமிறக்கப்போவதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். ரஜினிகாந்த் இதுவரை காலத்தில் தனது அரசியல் அபிப்பிராயத்தை வெளிப்படையாகக் கூறினார் என்றால் அது 1996 ஆம் ஆண்டில்தான். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவாரேயானால், தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று அவர் அப்போது கூறினார்.அடுத்து வந்த தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்ட படுதோல்விகளுக்கெல்லாம் ரஜினிகாந்தின் அந்தக் கூற்றும் முக்கியமான ஒரு காரணம் என்றும் பெருமை பேசப்பட்டது. அதற்குப் பிறகு, தேர்தல்களுக்கு முன்னதாக அவர் எப்போதும் மறைபுதிரான அறிக்கைகளை மாத்திரம் விடுத்துவந்தார்.தற்போது அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு திராவிட மண்ணில் தன்னை நிலைநிறுத்துவதற்குப் பெரும்பாடுபடும் பாரதிய ஜனதாவுக்கு பலத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் செல்வாக்குமிக்க தலைவர் ஒருவர் இல்லாதிருக்கும் அண்ணா தி.மு.க. ஜனரஞ்சகமான தலைவர் ஒருவரை அரவணைப்பதைச் சாத்தியமாக்குவதற்கு பாரதிய ஜனதா திரைக்குப் பான்னால் இருந்து முயற்சிகளை மேற்கொண்டுவந்தது என்பது ஒன்றும் இரகசியமல்ல.பாரதிய ஜனதா இன்னமும் முறைப்படியாக அண்ணா தி.ம.க.வுடன் கூட்டணியொன்றை அமைத்துக்கொள்ளவில்லை என்கிற அதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகம் -- காங்கிரஸ் கட்சி -- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இடதுசாரிக்கட்சிகளுடன் சேர்ந்து பாரதிய ஜனதாவுக்கு பெரும் சவாலைத் தோற்றுவிக்கும் சாத்தியம் இருக்கிறது. இந்திமொழி பேசும் மாநிலங்களில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட தேர்தல் இழப்புக்களை தென்மாநிலங்களில் செல்வாக்கை அதிகரிப்பதன் மூலம் ஈடுசெய்வதற்கு பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்கிறது.2014 லோக்சபா தேர்தல்களில் தென்மாநிலங்களில் உள்ள 132 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மாத்திரமே பாரதிய ஜனதா வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. இப்போது ரஜினிகாந்தின் அறிவிப்பு எற்படுத்தியிருக்கும் தடுமாற்றத்தையடுத்து காப்டன் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தையும் வலுவான வன்னியர் ஆதரவுத்தளத்தைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியையும் சேர்த்துக்கொண்டு கூட்டணியொன்றை அமைப்பதில் பாரதிய ஜனதா இறங்கியிருக்கிறது. விஜயகாந்தின் கட்சி கூட்டணியை அமைக்க அக்கறையாக இருக்கின்ற அதேவேளை, டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான பேரம் பேசலில் ஈடுபட்டிருக்கிறது. தனக்கேயுரித்தான பாணியில் ரஜினிகாந்த் லோக்சபா தேர்தல்களில் இருந்து விலகியிருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.ஆனால், தமிழ்நாடு மாநிலத்தின் ஆற்றுநீர்ப் பிரச்சினையை தீர்த்துவைக்கக்கூடிய ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களை அவர் கேட்டிருக்கிறார். பாரதிய ஜனதாவின் அனுதாபிகளுக்கு அது போதுமானதாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம்தான் கோதாவரி ஆற்றையும் காவிரி ஆற்றையும் இணைப்பது குறித்த யோசனையை முன்வைத்தது என்று சுட்டிக்காட்டுகின்ற அளவுக்கு அவர்கள் கீழிறங்கியிருக்கிறார்கள். ரஜனிகாந்தின் இன்னொரு திரைப்படமான கோச்சடையானில் அவரின் பாத்திரம் பேசுகின்ற இன்னொரு பிரபல்யமான வசனத்தை பாரதிய ஜனதாவுக்கு நினைவூட்டலாம் ; " வாய்ப்புகள் அமையாது, நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்." http://www.virakesari.lk/article/50300

‘’இந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம்’’ - இம்ரான் கான்

2 days 22 hours ago
படத்தின் காப்புரிமை Getty Images புல்வாமா தாக்குதல் நடந்தபிறகு முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பிடிவியில் அந்நாட்டின் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த வியாழனன்று இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் (துணை காவல் படை) வீரர்கள் மீது நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்புதான் ஜெய்ஷ்-இ-முகம்மது. இந்த அமைப்புதான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக குற்றம்சாட்டிய இந்தியா, தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக மறுக்கமுடியாத ஆதாரம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக கூறியது. இதனால் அண்டை நாடான பாகிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்த தேவையான ராஜீய ரீதியான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என குறிப்பிட்டது. இந்நிலையில் இன்று இது குறித்து பேசிய இம்ரான் கான், ''பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது சாகசத்தை இந்தியா செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் நிச்சயமான பதிலடியை கொடுக்கும்'' என்று தெரிவித்தார். படத்தின் காப்புரிமை Getty Images ''காஷ்மீர் பிரச்சனைக்கு ராணுவ தீர்வு எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக அமையும்'' என்று இம்ரான்கான் தெரிவித்தார். ''தனது சொந்த முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கையில் பாகிஸ்தான் ஏன் ஈடுபட போகிறது? என்றும் அவர் வினவினார். ''பாகிஸ்தான் கடந்த 15 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது. இதில் நாங்கள் 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். நாங்கள் அமைதியை நோக்கி நகரும் வேளையில் நாங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது? இந்தியா இன்னமும் கடந்த காலத்திலேயே தேங்கியிருக்க விரும்புகிதா என நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் காஷ்மீரில் ஏதாவதொரு சம்பவம் நடக்கும்போதும் இந்தியா பாகிஸ்தான் மீது பழி போடுகிறது. காஷ்மீர் சர்ச்சையை பொருத்தவரையில் தீர்வை நோக்கி நகர, ஒரு உரையாடலை துவங்குவதற்கு பதிலாக இந்தியா தேவையின்றி எங்கள் மீது பழி சுமத்துகிறது. நான் ஒரு விஷயத்தை இந்தியாவுக்கு தெளிவாக கூறுகிறேன். இது புதிய பாகிஸ்தான். புது சிந்தனையோடும் புது மனநிலையுடனும் நாங்கள் உள்ளோம். மற்ற நாடுகளில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களில் எங்கள் தரப்பில் இருந்து யாராவது ஈடுபட வேண்டும் என்பது எங்கள் விருப்பம் இல்லை. நாங்கள் என்ன எங்கள் மண்ணில் பயங்கரவாதம் வேண்டும் என்ன விரும்புகிறோமா? '' என்றும் கேட்டுள்ளார். கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil <div class="embed-image-wrap" style="max-width: 500px"> <a href="https://www.youtube.com/watch?v=BG0I336zs2s"> <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img class="js-image-replace" alt="யூடியூப் இவரது பதிவு BBC News Tamil: யார் இந்த ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு? Jaish-e-Mohammed" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.youtube.com/watch?v=BG0I336zs2s~/tamil/global-47287734" width="500" height="269"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை BBC News Tamil</span> <span class="story-image-copyright" aria-hidden="true">BBC News Tamil</span> </span> </figure> </a> </div> ''இந்திய அரசு எந்தவித விசாரணையை மேற்கொள்ள விரும்பினாலும் அல்லது எதாவது பாகிஸ்தானியர் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்களா என ஆராய்ந்தறிய விரும்பினால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் புலனாய்வில் பாகிஸ்தானியர் யாராவது ஈடுபட்டிருப்பது தெரிந்தால் எங்களிடம் பகிருங்கள். நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளிக்கிறேன். நாங்கள் இன்னொருவரின் அழுத்தத்திற்கு உள்ளாகி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். பயங்கரவாததுக்கு பாகிஸ்தான் மண்ணை யாராவது பயன்படுத்தினால் அவர்கள் எங்கள் நாட்டுக்கு எதிரி என உணர்கிறோம். அவர்கள் எங்களது விருப்பங்களுக்கு எதிரானவர்கள். எப்போதெல்லாம் நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை துவங்க விரும்புகிறோமோ அப்போதெல்லாம் முதலில் பயங்கரவாதத்தை பற்றி பேச வேண்டும் என முன் நிபந்தனை விதிக்கிறது இந்தியா. பயங்கரவாதம் குறித்து பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என உறுதியளிக்கிறேன். அது ஒரு பிராந்திய விவகாரம். அந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம் இருக்கக்கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம். படத்தின் காப்புரிமை AFP பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது நாங்கள்தான். கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். பயங்கரவாதத்துக்கு சுமார் 100 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான செல்வத்தை இழந்திருக்கிறோம். ஆகவே நாங்கள் பயங்கரவாதம் குறித்து பேச தயாராகவே இருக்கிறோம்.'' என்கிறார் இம்ரான்கான். ''இந்தியா சற்று சுயபரிசோதனை செய்ய வேண்டும் . இந்தியாவில் புதிய சிந்தனை இருக்க வேண்டும். காஷ்மீரி இளைஞர்கள் ஏன் தீவிரவாதிகளாகுகிறார்கள் ஏன் அவர்கள் மரணத்தை பற்றி கவலைப்படுவதில்லை ? என்பது குறித்து இந்தியா ஆன்ம பரிசோதனை செய்ய வேண்டும். காஷ்மீரி இளைஞர்களின் முடிவுகளுக்கு பின் சில காரணங்கள் இருக்கும். வலுவாக இருப்பது எப்படி?'' படத்தின் காப்புரிமை AAMIR QURESHI/AFP/GETTY IMAGES ராணுவத்தின் மூலம் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியும் என இந்தியா நம்புகிறதா? ஆப்கானிஸ்தானில் 17 வருடங்களுக்கு பிறகு தற்போது ஒட்டுமொத்தக உலகமும் ராணுவ நடவடிக்கை தீர்வை தராது என்பதை உணர்ந்திருக்கின்றன. பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்னைகளை தீர்க்க உதவும். இந்திய ஊடகங்கள் மூலமாக அங்குள்ள அரசியல் தலைவர்கள், பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும், மறுதாக்குதல் நடத்தி வழிவாங்க வேண்டும் போன்ற குரல்களை எழுப்புவதைப் பார்க்கிறோம். உலகில் எந்த சட்டம், ஒரு தனி நபருக்கோ, நாட்டுக்கோ, தாங்களாகவே நீதிபதியாகவோ, தண்டனை விதிப்பாளராகவோ செயல்படும் அதிகாரத்தை அளித்துள்ளது... என்ன நீதி முறை இது. இது உங்கள் நாட்டில் தேர்தல் ஆண்டு என்பதால் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதாக கூறுவதன் மூலம் ஒருவித எழுச்சியை ஏற்படுத்த நீங்கள் முயல்வதை புரிந்து கொள்ள முடிகிறது. பாகிஸ்தான் மீது எந்தவொரு தாக்கலையும் நடத்தலாம் என்று நீங்கள் கருதினால், அதற்கு பதிலடி கொடுப்பது பற்றி நாங்கள் சிந்திக்க மாட்டோம். பதிலடி கொடுப்போம். உரிய பதிலைத் தர எங்களுக்கு வேறு தேர்வு இல்லை. போரை தொடங்குவது எளிது. மனிதர்கள்தான் அதை உருவாக்குகிறார்கள். எனினும், முடிவு நமது கைகளில் இல்லை. அது எந்த திசையில் செல்லும் என்பதை அல்லாவே அறிவார்.'' எனப் பேசியுள்ளார். https://www.bbc.com/tamil/global-47287734